தமிழ் அரங்கம்
Saturday, February 16, 2008
Friday, February 15, 2008
தலித்துக்களின் எதிரிகளும், தலித்துகளும்
பி.இரயாகரன்
15.02.2008
தலித்துகளின் எதிரி யார்? என்பதை அடையாளப்படுத்தாது, தலித்தியம் பற்றி பேசும் நுட்பம் தான் இவர்கள் அரசியல். கடந்தகால இயக்கங்கள் முதல் இன்றுவரை அரசியல் பேசுவோர் வரலாறு இது.
எல்லா இயக்கமும், சாதிய விடுதலை, வர்க்கவிடுதலை பற்றிப் பேசினர். இன்று தலித் முன்னணியின் பெயரிலும் பேசுகின்றனர். இது எப்படி என்பதை மட்டும், அவர்கள் சொல்வது கிடையாது. தலித்துக்கு யார் எதிரி, யார் நண்பன் என்று கூறுவது கிடையாது. தலித்துகளின் எதிரிகள் தான், தலித்துகளின் பெயரில் அதை தமது குறுகிய நோக்கத்துக்கு பயன்படுத்த முனைகின்றனர்.
உண்மையில் புலியெதிர்ப்பு அரசியல் செய்ய இது உதவும் என்ற அடிப்படையில் தான், பலர் இதற்குள் தவளைகள் போல சலசலத்தனர், சலசலக்கின்றனர். இதை மேலும் ஒருபடி உயர்த்தி புலிகளும் இதற்குள் வம்பளக்க முடியும் என்கின்றார் கதையாசிரியர் சோபாசக்தி.
இதைப் பாதுகாக்க இவர்கள் என்ன தான் வரட்டுமார்க்சியம் என்று அழுது புலம்பினாலும், இவர்கள் கூடி நடத்தும் அரசியல் பின்புலத்தில் வரட்டல்லாத மார்க்சியத்ததையும் அதன் இயங்கியலையும் நாம் காணமுடிவதில்லை. வரட்டுமார்க்சியம் என்று சொல்கின்றவர்கள், ஒருபுறம் வலதுசாரிகள் மறுபக்கத்தில் மார்க்சியத்தை தமது லேபலுக்கு பயன்படுத்துபவர்கள். வரட்டு மார்க்சியம் அல்லாத நபர்களாக தேடிக்கண்டு பிடித்தவர்கள் தான், தலித் மாநாட்டுக்கு வருகின்றார்கள். இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் செய்யும் அரசியலோ, தலித்துகளுக்கு எதிரானது. இந்த நபர்கள் உள்ள கட்சிகளினதும் இவர்களினது அரசியல் நடத்தைகளையும், இங்கு விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அது ஊர் உலகம் அறிந்ததே. இங்குள்ளவர்களின் தலித்விரோத அரசியல் நடத்தைக்கு, ஏற்றவர்கள் தான் அவர்கள்.
சோபாசக்தி கண்டு பிடித்த பின்நவீனத்துவ அறிதல்முறையோ, அம்மணமாக ஏகாதிபத்திய வாலில் தொங்குகிது. வெறும் அறிதல் முறைதான் என்று எடுத்தால், அதற்கு ஒரு அரசியல் இல்லையோ? அதற்கு ஒரு தத்துவப் பார்வையே கிடையாதோ? இப்படிச் சொல்வது தான், வரட்டு அல்லாத மார்க்சியமோ?
யாருக்கு காதில் பூ வைக்கின்றீர்கள். இது என்ன, அரசியலற்ற அறிதல் முறையோ? எதை அறிய? ஏன் அறிய? எப்படி அறிய? எதற்காக அறிய? யார் தான் படைத்தான். என்ன பார்ப்பனின் பிரமனா படைத்தான்?
இவர்கள் அறிந்து அறிய வைத்த தலித்தியம், இந்தியாவில் மூக்கைத் துளைக்க நாற்றமடிக்கின்றது. ஏன்? இதில் இருந்து எந்த புரட்சிகர கோட்பாடுகளையும் வடிகட்டி எடுக்க, எதுவும் மிஞ்சுவதில்லை. ஏன்? அவனவன் தனது பிழைப்புக்காக தலித்தை பயன்படுத்தி பிழைப்பது தான் நடக்குது. எப்படி தன்னைப் போலும், மற்றவர்களும் தலித்தைச் சொல்லி பிழைக்கின்றனர் என்று சொல்ல, அதையே தொழிலாக கொண்ட அ.மார்க்ஸ் வருகின்றார்.
இவர் 80 களில் தேசியத்தை ஆதரித்ததால் வெளியேற்றப்பட்டவராம். நல்ல வேடிக்கையான கண்டு பிடிப்பு. இந்தளவுக்கு அக்காலத்துக்கு முந்தைய மகிமையை எண்ணுகின்றராம். இப்படி வித்தை காட்டுகின்றார் சோபாசக்தி.
வெளியேறியவர், தொடர்ந்து மக்களுக்காக என்ன செய்தார்? தேசிய ஆதரவு மார்க்சிய இயக்கத்தை கட்டினாரா? இல்லை. சரி இவர் தேசியத்ததை ஆதரித்ததால் வெறியேறியவர் என்றால், அவர் அன்று அரசியல் பிழைப்புக்காக ஆதரித்த தேசிய விடுதலை இயக்கங்களோ பாசிசமாக அங்குமிங்குமாக ப+த்துக் குலுங்குகின்றது. இவரின் தலித்தியமும் இப்படிப்பட்டது தான்.
இவர் தேசியத்தையே கற்பிதம் என்றவர். ஏகாதிபத்திய நோக்கில் தேசியம் கற்பிதம் என்று அவர்கள் எழுதியதை, மூன்றாம் உலக நாடுகளின் எதிர் அணியில் நின்று அதை எதிர்க்கவில்லை. ஏகாதிபத்தியம் தேசியத்தை அழிப்பதற்கு ஆதரவாக, தேசத்தை கற்பிதம் என்று கூறி, தேசியத்துக்கு எதிரான கோட்பாட்டை முன்வைத்தவர். தன்னார்வக் குழுக்களின் அரசியல் நோக்கிலேயே, இவரின் அரசியல் நோக்கமும் செயற்பாடும் அமைந்திருந்தது.
ஏகாதிபத்தியத்துக்கு ஏற்ற கருத்துக்களையும், கோட்பாடுகளையும் எடுத்துவந்து பிரச்சாரம் செய்து, அதை சந்தைப்படுத்தியவர். இப்படி மார்க்சிய இயக்கத்துக்கு எதிராகவே இயங்கிய, ஒரு அற்ப பதர் தான் இந்த அ.மார்க்ஸ். அரசியல் சாக்கடையில் மீன்பிடிக்க நினைக்கும் ஒடுகாலிகளின் தங்கிடமாக, போக்கிடமாக, குட்டையாக அ.மார்க்ஸ் அன் கோவின் அரசியல் களம் அமைந்தது. தண்ணி அடிக்கவும், கூடிப் படுக்கவும், கதா உபதேசம் செய்வதற்கும் ஏற்ற, ஒரு வடிகட்டிய தரகன் தான் அ.மார்க்ஸ்.
இவர்கள் கூவிவித்த தலித், பார்ப்பனியத்தை ஒழிக்கவில்லை. மாறாக அதனுடன் சமரசம் கண்டும், பேரம் பேசியும் நக்கிப் பிழைக்கின்றது. தலித்துக்குள்ளான சாதியத்தை ஒழித்ததா என்றால், அதுவும் இல்லை. தலித்தியம் சாதியத்தை பலப்படுத்தி, தனக்குள் சாதிய ஒடுக்குமுறையையே புதிய வன்முறையாக மாற்றியுள்ளது. உண்மை இப்படி தான் இருக்கின்றது.
இதை எல்லாம் ஆராயவும், களைவதற்காகவுமா கூடுகின்றனர். செத்த மாட்டில் உள்ள உண்ணி போல், இரத்தம் குடிக்க இடம் தேடி அலைகின்றனர். இப்படி தலித் மக்களின் பெயரில் நாய் வேஷங்கள்.
இதற்கு சோபாசக்தி கூவி அழைக்கும் போது, அவரின் நாவல்கள் போல் வளுவளுகின்றது. புலி உள்ளவர்களும் வாருங்கள், புலியெதிர்ப்பில் உள்ளவர்களும் வருங்கள், நாங்கள் கூடி விவாதிப்போம் என்கின்றார். இப்படி 30 வருடமாக தமிழ் மக்களை வெட்டியும், கொத்தியும் துண்டுபோட்டும் தின்றவர்கள் எல்லாம் கூடி, குய்யா முய்யா என்று ஒப்பாரிவைத்து அழப் போகின்றீர்களோ! இதனால்தான் இலங்கை அரசின் ஏஜண்டுகள் வாழ்த்தி, ஆதரித்தும் தமது ஆசீர்வாதத்தைச் செலுத்துகின்றனர். செத்துப் போன தலித்தியத்தை வாழ்த்துவது, அரசியல் மரபல்லவோ!
20, 30 வருடமாக ஏன் செய்கின்றோம் என்று தெரியாது உழுகின்றவர்கள் இவர்கள். இலக்கியம், பினநவீனத்துவம், தலித்தியம் என்ற சொற்களின் பின், எதைத் தான் சொல்லியுள்ளீர்கள். அ.மார்க்ஸ் என்ற அற்ப பிழைப்புவாதி முக்கினால், அன் கோக்கள் தாமாகவே பேலுமளவுக்கு தத்துவங்கள் விளக்கங்கள். இதற்கு பெயர் தலித்தியம்.
தேசியம் கற்பிதம் பற்றி, சோபாசக்தி அ.மார்க்ஸ்சுக்காக முக்கி முனகுகின்றார். இந்த தலித் மாநாட்டை நடத்துகின்ற நால்வர் கொண்ட நிழல் அணியில், இதன் தலைமைக் குருவான புலியெதிர்ப்பு அணி ராகவன், தேசியம் கற்பிதம் என்று முதல் மாநாட்டில் சொன்னவர். இதை வசதிகருதி ஏன் சோபாசக்தி மறந்துபோனார். அவரின் கற்பிதம் சரி என்று கருதிய சோபாசக்தி, அதை தனது இணையத்தில் போட்டவர், இதன் மேல் கருத்துச் சொன்னாரா? இல்லை. இன்று ஏன் அ.மார்க்ஸ்சுக்காக முக்கி முனகுகின்றார்.
தலித்துக்கு எதிர் தேசியம் என்று சொல்ல, புலியெதிர்ப்பு ராகவன் தேசியத்தை கற்பிதம் என்று மார்பு தட்டியபோது, சோபாசக்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாரா அல்லது நிறை வெறியில் இருந்தாரா?
அ.மார்க்ஸ்சை நாம் அம்பலப்படுத்த, திடீரென கற்பிதத்துக்கு எதிர் விளக்கம். அதுவும் ராகவனுக்கு எதிராக அல்ல, எமக்கு எதிராக. என்ன அரசியல்.
தலித்தியத்தை கேடுகெட்டதனமாக தமது குறுகிய அற்ப நோக்கத்துக்காக பயன்படுத்துவது, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப கருத்துரைப்பது தான் சிலருக்கு அரசியலாகின்றது. மனிதத்தை மிதித்து பிழைக்கின்ற கூட்டத்தின் பெயரில், தலித்திய அழைப்பு விடப்படுகின்றது. மனிதவிரோதிகளே! நாம் எல்லாம் கூடி விவாதிப்போம் வாருங்கள் என்கின்றது. இதற்கு பெயர் தலித் மாநாடு. இது தேவை தானா?
Thursday, February 14, 2008
தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி யார்?
பி.இரயாகரன்
14.02.2008
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தான் நாம் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்கு எதிராக அரசியலில் சித்துவிளையாட்டு காட்டுகின்றவர்கள் முதன்மையான உடனடியான எதிரிகள்.
கடந்தகால, நிகழ்கால வரலாற்றைப் பாருங்கள் புலிகள் தலித் மக்களின் விடுதலைக்காக தாம் உண்மையாக உழைப்பதாகக் கூறவில்லையா? பெண்விடுதலைக்காகவும், வர்க்க விடுதலைக்காகத் தான், தாம் போராடுவதாக புலிகள் கூறவில்லையா? ஏன் இந்திய இலங்கை அரசுடன் நிற்கின்ற கூலிக் குழுக்கள், அன்றும் இன்றும் இதைக் கூறவில்லையா?
நீங்கள் இதிலிருந்து இவர்கள் எல்லாரிடமிருந்தும் எப்படி ஏன் எவ்வழியில் வேறுபடுகின்றீர்கள். ஏன் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து இதைச் செய்ய முனையவில்லை. இப்படி நாங்கள் கேட்பதால், புலியெதிர்ப்பு ராகவன் முதல் சோபாசக்தி வரை வரட்டு மார்க்சியம் என்று சொல்லி, அரசியலில் வித்தை காட்டி பிழைக்க முனைகின்றனர்.
தமது அரசியல் சோரத்தை சோபாசக்தி இப்படிக் கூறுகின்றார் 'சென்ற தலித் மாநாட்டுக்கு வீ. ஆனந்தசங்கரியும், EPRLF (ப.நா) செயலாளர் சிறீதரனும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார்கள். மாநாட்டில் ஒருசில ENDLF, PLOTE, EPRLF உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். எனவே தலித் அரசியல் துரோக அரசியல் என்றொரு குற்றச்சாட்டுமுண்டு. என்னைப் பொறுத்தவரை நான் புலிகளைக் கண்டிப்பதைப் போலவே எப்போதும் கூட்டணியையும் மற்ற இயக்கங்களையும் கண்டித்து வந்துள்ளேன். அதே வேளையில் புலிகள் இயக்கத்திலும் சரி பிற அமைப்புகளிலும் சரி சாதிய விடுதலையில் அக்கறைகொண்ட தலித்துகளும் சொற்ப அளவில் தலித் அல்லாதவர்களுமிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. ஒரு தலித் புலியாயிருக்கலாம், புளட்டாய் இருக்கலாம் கொம்யூனிஸ்டாக இருக்கலாம். ஆனால் அவர் தன்னளவில் சாதியத் தளையிலிருந்து விடுபடவே விரும்புவார். ஆதிக்கசாதியினருக்கு எதிரான தார்மீகக் கோபம் அவரது உள்ளத்தில் கனன்றுகொண்டுதானிருக்கும். எனவே இந்த இயக்க அரசியல்களுக்குப் புறத்தே சாதியொழிப்பு என்ற தளத்தில் சாதியத்திற்கு எதிரான சக்திகளைச் சாத்தியமான வழிகளிலெல்லாம் அய்க்கியப்படுத்த வேண்டும்." என்கின்றார். ஏன் ஜயா நீங்கள் அங்கே போகவில்லை. இப்படி அரசியல் வித்தை.
சரி இது எங்கிருந்து, எப்படி, எந்த அரசியல் ஊடாக வருகின்றது. வரலாற்றை பின்நோக்கிப் பாருங்கள். கருணா கிழக்கு பிரதேசவாதத்தை எழுப்பிய போது, பாலசிங்கம் எதைச்சொன்னாரோ அதுதான் இது. புலிகளின் 'மதியுரையர்" பாலசிங்கம் அன்று "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காக" என்றார். அனைத்தையும் கடந்த தேசியம் என்றார். இன்று சோபாசக்தி அனைத்தையும் கடந்த தலித்தியம் என்கிறார். என்ன அரசியல் ஒற்றுமை.
புலி 'மதியுரைஞர்" பாலசிங்கம் மேலும் '.. தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்றப்படுபவர் பிரபாகரன். --- பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று அபாண்டமானது."என்கின்றார். இதையே சோபாசக்தி 'என்னைப் பொறுத்தவரை" என்று கூறிக்கொண்டு, தலித்துக்கு எதிராக இதை அரங்கேற்றுகின்றார். என்ன ஒற்றுமை. நான் அப்படியல்ல! உன் அரசியல் என்ன? அதுவல்லவா அனைத்தையும் தீர்மானிக்கின்றது.
பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய பல்வேறு தரப்பட்டவர்களை உள்ளடக்கும் வகையில், கோட்பாட்டை வளைத்து நெளித்து அள்ளிக்கட்டும் தலித்தியம் பற்றி (தேசியம் பற்றி புலிகள்) சோபாசக்தி பேச முனைகின்றார்.
புலிகளின் அதே அற்புதமான அரசியல். மறுபக்கத்தில் அ.மார்க்ஸ்சின் மகிமையும் இதுதான். பாரிஸ் தலித் மாநாட்டில் தலித்துகள் மட்டும் பேசவேண்டும், கூட வேண்டும் என்றவர் சோபாசக்தி. இன்று புலி முதல் இலங்கை இந்திய கூலிக் குழுக்களில் உள்ள தலித்துகள் தான், இதை ஆதரிப்பதாக, பங்குபற்றுவதாக கூட கற்பனையில் பேசுகின்றார். அந்தக் கட்சிகள், அமைப்புகள் சாதியறியாதவர்கள் என்கின்றார். அதை அவர்கள் பயன்படுத்த முனையவில்லை என்கின்றார். நீண்ட நித்திரையாலே எழும்பி, இதை தமதாக்கும் சதியில் அலம்புகின்றார். சாதியவான்கள் தலித்துகளைக் கொண்டே தலித்துகளை ஒடுக்குகின்ற அதே தந்திரம், அதே ரவுடித்தனம் இது.
அரசியல் சமரசம், பிழைப்புவாதம், நட்புவாதம், மூடிமறைப்பு என்று, இவை எல்லாமாகி விடுகின்றது. இந்த அரசியல் என்ன செய்கின்றது. விடுதலைப்புலிகளும், இலங்கை இந்தியாவுடன் இயங்குகின்ற கூலிக் குழுக்களும், தலித்துக்கு எதிரானவர்களா இல்லையா என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றது. அதை தெளிவுபடுத்த மறுக்கின்றது. அங்கே அவர்களின் தலித்துக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பார்கள். இங்கு தலித்துக்கு ஆதரவாக, குழிபறிக்கும் அரசியல் செய்வார்கள். இதுதான் தலித் மாநாடு.
தலித் உணர்வு இல்லாத அரசியல், அங்குமிங்குமாக இயங்க முடியும் என்பது வேடிக்கை. புலிக்குள், புலியெதிர்ப்புக்குள் தலித்தியத்தை உணர்வு பூர்வமாக வைக்க முடியுமா? இப்படி வைத்து உயிர் வாழத்தான் முடியுமா? சோபாசக்தியோ அனைவர் காதிலும் பூவைக்கின்றார்.
பார்ப்பனியம் இராமன் பாலத்தின் மகிமையைப்பற்றி பேசுவது போன்றது இது. இதற்கு தத்துவ மேதையாக வழிகாட்டும் அ.மார்க்ஸ் அன் கொம்பனிகள்.
சென்ற மாநாட்டில் புலியை மட்டும் தலித்தின் எதிரியாக புலியெதிர்ப்புவாதிகள் சித்தரித்தனர். இப்படி புலியெதிர்ப்புக் கும்பல் தலித்தியத்தின் பெயரில் குளிர் காய்ந்தது. இம்முறை சோபாசக்தி தலைமையில் தலித்தின் பெயரில், தலித்தின் எதிரி புலியுமல்ல, புலியெதிர்ப்புமல்ல எனகின்றார். இதனால் அங்கு வாருங்கள் என்கின்றார். நாம் அனைவரும் ஒன்றாக தலித்தின் பெயரில் குளிர்காய முடியும் என்கின்றார். இதைத்தான் மாநாட்டுக்கான அழைப்பில் சோபாசக்தி கூறுகின்றார். இப்படி அரசியலில் வித்தை காட்ட முனைகின்றார்.
நீங்கள் தலித்துக்கு எதிரான அரசியலுடன் கூட இருக்கலாம், ஆனால் இங்கு வரலாம் என்கின்றார். கூடிக் கும்மாளமடிக்காலம் வாருங்கள் என்கின்றார். உள்ளடக்கத்தில் நானும் ஒன்று நீயும் ஒன்று தான் என்கின்றார். இப்படி தலித்தின் எதிரியுடன், அதன் அரசியலுடன், ஐக்கியமுன்னணி கட்டுகின்றார். அதற்கு அவர் ஒரு உதாரணம் தருகின்றார். 'வரலாற்றில் நமக்கொரு முன்னுதாரணமும் இருக்கிறது. ஈழத்தில் சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடக்கிக் கணிசமான வெற்றிகளைச் சாதித்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் கொம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். தமிழரசுக் கட்சியினரும் இருந்தார்கள். எதிரும் புதிருமான அரசியல் நிலைகளுக்கு அப்பாலும் தலித் விடுதலை என்ற உணர்வு அவர்களை அய்க்கியப்படுத்தியது." வரலாற்றின் போக்கில் ஒருபகுதியை மட்டும் தமக்கு சார்பாக காட்டும் திரிபு.
இது தவறானது, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு இது எதிரானது என்பதால், இது நீடிக்கவில்லை. இது நீடித்திருந்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் வீரம் செறிந்த போராட்டமே அன்று கிடையாது. சோபாசக்தி வரலாற்றுப் போக்கை, அதன் அனுபவத்தை நிராகரித்து நிற்பதால், அந்த போராட்டத்துக்கு எதிராகவே வெளிப்படையாக கையுயர்த்துகின்றார். நடந்த வரலாற்று அனுபவத்தை, உண்மையை நிராகரிப்பது தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எதிரான வகையில் கட்டமைக்கும் திரிபாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் உண்iமான விடுதலைக்கு, அந்த ஐக்கியம் அந்த வழிமுறை சாத்தியமல்ல என்பதை, வரலாறு நிறுவிக் காட்டியது.
இந்த இடத்தில், இதைச் செய்யத்தான் தலித் மாநாடு என்றால், அது அவசியமற்றது.
தொடரும்
அறிவிப்பு
'ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்?" என்ற எனது முந்தைய கட்டுரை ஒன்று, பலரின் வேண்டுகோளுக்கிணங்க சில திருத்தங்களுடன் சிறு வெளியீடாக வெளிவர உள்ளது.
உலகக் கலாச்சாரம், தமிழ் சினிமா, தமிழ் நாடகம் என, இந்த சமூக அமைப்பில் அது எவற்றை விளைவிக்கின்றது என்பதையும், அதன் பாதிப்புகளையும் குறிப்பாக்கி இது ஆராய்கின்றது.
இதனைப் பரவலாக எடுத்துச்செல்லும் வகையில், அண்ணளவாக 40 பக்கம் கொண்ட இந்த நூலை ஒரு ஈரோ அல்லது 1.5 ஈரோ விலையில் பெறமுடியும். சமூக அக்கறையுள்ளவர்கள், இதன் தேவையை உணர்ந்தவர்கள், இந்த நூலை அதிக எண்ணிக்கையில் பெற்று விநியோகிக்குமாறு வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : tamilcircle@tamilcircle.net
ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்?
ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறிமால் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம் நாம் இழந்து வருகின்றோம். சமூகத் தன்மை கொண்ட, மனித நலன் கொண்ட, இயற்கையாகவே எம்முடன் இருந்த மனித கலாச்சாரம் அனைத்தும், எம்மிடமிருந்து படிப்படியாகவே அகற்றப்படுகின்றது. இவையெல்லாம் ஏன் ஏதற்கு என்று நாம் அறியாத வகையில், நாம் ஒரு மந்தைகளாக வாழ வைக்கப்படுகின்றோம். மனித கலாச்சாரம் பற்றி பொது அறிவுத்தளமோ மிகக் குறுகியதாகவும், ஆணாதிக்க நோக்கில் பெண்ணை மையப்படுத்தியும், அறியாமையை அடிப்படையாக கொண்டதாகவும் காணப்படுகின்றது.
கலாச்சாரங்கள் எங்கிருந்து எப்படி உருவாகின்றது? இவை மனிதக் கற்பனைகளில் இருந்தல்ல. மாறாக மனித வாழ்வியல் முறைகளில் இருந்து உருவாகின்றது. இந்த மனித வாழ்வியல் முறைகள், பொதுவாக பிளவுபட்ட இரு பிரதான சமூகப் போக்கில் இருந்து உருவாகின்றது. அதாவது சமூகம் இரண்டாக உள்ளது. உழைப்பில் ஈடுபடும் மக்கள் ஒருபுறம், உழைப்பில் ஈடுபடாது உழைப்பவனின் உழைப்பைத் திருடி வாழும் கூட்டம் மறுபுறமாக உள்ளது. இதுவே இரண்டு பிரதான கலாச்சாரத்தின் ஊற்று மூலமாகவுள்ளது. உழைப்பைத் திருடி வாழ்பவன், தனது திருட்டை நியாயப்படுத்தும் ஒரு கலாச்சாரமே ஆதிக்கம் பெற்றது. இந்த சமூக ஓழுங்கு தான் ஜனநாயகம் என்னும் கலாச்சாரமாக உள்ளது. மற்றவன் உழைப்பைத் திருடுவது மனித சுதந்திரமாகவும், அதை அங்கீகரிப்பதுவே ஜனநாயகமாகின்றது. இதையொட்டியே சமூகக் கலாச்சாரங்கள் உருவாகின்றது.
இப்படி சக மனிதனின் உழைப்பை அவனின் கண்ணுக்கே புலப்படாத வகையில் சூக்குமமாக திருடுவது, கலச்சாரத்தினூடாக மூடிமறைக்கப்படுகின்றது. இந்தச் சுதந்திரத்தை, ஜனநாயகப் படுத்துகின்ற சமூக அமைப்பு ஒழுங்குகள், சமூக சட்டங்களாகின்றன. அவையே இணக்கமான கலாச்சாரமாகின்றது. இது மனித உழைப்பை மட்டுமல்ல, மனித வாழ்வியலையே சுரண்டும் கட்டமைப்பையே, நுகர்வு கலாச்சாரமாக்குகின்றது. இவை(களைத்) தான் உலகமயமாதல் த(h)ங்கி நிற்கின்றது. இப்படிப்பட்ட நுகர்வுக் கலாச்சாரத்தின் சொந்த அசிங்கம் என்னவென்றால், அது தனது கவர்ச்சியான ஆபாசமான கிறுக்குத்தனத்தையே, மொத்த மக்களினது கலாச்சாரமாக்குகின்றது.
இப்படிப்பட்ட நுகர்வுக் கலாச்சாரத்துடன், அதாவது அதன் கவர்ச்சி ஆபாசத்துடன் மனிதன் இணங்கிப் போவதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம். ஆனால் எம்மை அறியாமல் இந்த அசிங்கமான சாக்கடைக்குள் மூழ்கி வாழ்வது மறுபுறம். இதற்குள்ளான வாழ்வியல் முரண்பாடுகள், சமூகத் தீர்வுகளற்ற, தனிமனித உளவியல் நெருக்கடிகளாகிவிடுகின்றது.
உண்மையில் இந்த நுகர்வுக் கலாச்சாரம் தனிமனித மன உளைச்சல்களை உற்பத்தி செய்து, அதை அந்தரத்தில் அனாதையாகவே தவிக்கவிடுகின்றது. பதற்றமும், பீதியும், வாழ்வு பற்றி நிலையற்ற கோட்பாடுகளுமூடாக, அராஜகவாத உணர்ச்சியில் மனிதமே மரணித்துப் போகின்றது.
இந்த நுகர்வுக் கலாச்சாரத்தின் நெருக்கடி சார்ந்த விவாதமோ, பழமைக்கும் புதுமைக்குமானதாக, மாற்றத்துக்கும் மாற்றத்தை மறுப்பதற்கும் இடையிலானதாக சுருக்கிக் பார்க்கின்ற, சமூக அறியாமைக்குள் புகைந்து புதைந்து போகின்றது. இது அல்லது அது என்று, மனித சிந்தனை ஓடுகாலித்தனமாகி விடுகின்றது. சமூகத்தில் நிலவும், எதிரெதிரான பொருளாதார முரண்பாடுகள் மீது சார்ந்து நிற்கின்ற சுயநலம், மனித அற்பத்தனமாக அரங்கேறுகின்றது. சமூகத்தையே தாம் புரிந்து கொண்டதாக நம்புகின்ற தனிமனித முட்டாள்தனங்களே, மனித உணர்வாகின்றது. இதுவே சிந்தனைத் தளத்தில் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றது.
இந்த வகையில் இயற்கையில் மனிதனின் வாழ்வு உருவாக்கிய வாழ்வதற்கான மனிதத் தன்மைகளை, நாம் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துகின்றோம். சமூக வாழ்வு என்பதை, தனிமனித நுகர்வுக்கு எதிரானதாக கட்டமைக்கும் உலகமயமாதல் கலாச்சாரமே, இன்று எங்கும் எதிலும் கோலோச்சுகின்றது. சமூகத்தை இழிவாக்குகின்றதும், இழிவுபடுத்துகின்றதுமான, தனிமனித வக்கிரங்கள் சமூக ஒழுக்கங்களாகின்றது. இந்த வகையில் முடிவுகள், நடைமுறைகள், தொழில் நுட்பங்கள், விஞ்ஞான நடைமுறைகள் என அனைத்தும் சுருங்கிப் போகின்றது. இப்படி உலகமயமாதல் முடிவுகள் முதல் தனிமனித முடிவுகள் வரை, இதற்குள் தான் சுற்றிச்சுற்றி, குட்டி போடுகின்றது.
மனிதன் வாழ்வு சார்ந்து இயற்கை ஏற்படுத்திய முரண்பாட்டை, மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடாக முதன்மைப்படுத்தி மோத வைக்கப்படுகின்றோம். சுய மனிதத்தன்மையை இழத்தலே, இவற்றுக்கான அடிப்படையாகும். மனித உழைப்பும், உழைப்பு பிரிவினையும் ஏற்படுத்தயி இடைவெளியை எல்லாம், மனித பிளவாக்குகின்றோம். இந்த வகையில் நாம், எமது சொந்த மனிதத்தன்மையை, எல்லாத் தளத்திலும் மிகக் கேவலமாகவே இழக்கின்றோம். இனம், நிறம், மொழி, சாதி, மதம், பால், கலாச்சாரம், பண்பாடு, உழைப்பின் வகை என எங்கும், இன்னும் ஏதேதோ வகையில் இதற்குள் பிளவைத் தேடி ஒடும் எமது குறுகிய மனப்பாங்கு, எமது மனிதத் தன்மைக்கே எதிரானது.
சரி இவை எல்லாம் ஏன்? எதற்காக? மற்றவனை விட என்னை மேம்படுத்த, என்னைச் சுற்றியும் மேம்படுத்திக் காட்ட நினைப்பது ஏன்? சக மனிதர்களையே, எமது எதிரியாக எம்முன் நிறுத்துவது ஏன்? நிறுத்தப்படுவது ஏன்?
இப்படி மனிதர்களையே இழிவுபடுத்தி, அவர்கள் உழைப்பைத் திருடி வாழும் வாழ்வையே சுதந்திரமாக, ஜனநாயகமாக காட்டுவது தான் உண்மை. பொதுவாகவே சமூகத்தின் பரிதாபகரமான நிலை இதுவென்றால், அதன் எல்லைக்குள் தான் மனித உறவுகள் கூட நலமடிக்கப்படுகின்து.
மனித உறவுகளும், அதன் சிதைவுகளும்
மனிதன் தனக்குள் கொண்டுள்ள சமூக உறவுகளின் சிதைவுகள் தான், உலகமயமாதலின் ஊக்க மருந்துகளாகும். மறுபக்கத்திலோ சமூகமாக வாழத் துடிக்கின்ற இயற்கை சார்ந்த சூழல். இது உலகம் தழுவிய ஒரு சூழல். இயற்கை, செயற்கை எங்கும் இந்த முரணிலை உண்மை, தனிமனித குதர்க்கவாதத்தால் மறுதலிக்கப்படுகின்றது. இயற்கைக்கு வெளியில் மனித வாழ்வு கிடையாது என்பதால், மனிதனை பிளக்கும் தனிமனித வாழ்வு சார்ந்த குதர்க்கங்கள் இயற்கையாவே மறுதலிக்கப்படுகின்றது. செயற்கையான தனிமனித நலனை சுங்கானாக கொண்ட உலகமயமாதல், தனது சொந்த தனிமனித வக்கிரம் கொண்ட நுகர்வுக் கலாச்சாரத்தினால், மொத்த சமூகம் சார்ந்த, சமூக நுகர்வு சார்ந்த கலாச்சாரத்தையே அழிக்கின்றது. மனித தேவையை மறுத்து, பணம் கொடுத்து வாங்கும் கும்பலின் தனிமனித தேவையை முதன்மைப்படுத்துகின்றது. இதையொட்டிய சந்தைக் கலாச்சாரமே, மனித கலாச்சாரமாகின்றது. தனது சுயநலம் கொண்ட சொந்த வாழ்வியல் நடைமுறையை, மொத்த சமூகம் மீதும் திணிக்கின்றது.
இது குடும்ப அலகுகளைக் கூட பிய்த்து, அதைப் பிசைந்து போடுகின்றது. இதற்குள் கசங்கி வாழும் குழந்தைகளின் மனித மனப்பாங்கு ஒருபுறம். இதை எதிர்த்து அதை எதிர்கொள்ளும் பெற்றோர்கள் மறுபுறம். கடந்துவந்த மனித வரலாற்றை விட, புதிய அதிரடியான உலகமயமாதல் முரண்பாடுகள், அதாவது இது தலைமுறை முரண்பாடுகளை கூட கடந்து உருவாகின்றது.
இது நடைமுறை வாழ்வியல் எதார்த்தத்தில் பலவிதமாக பிரதிபலிக்கின்றது. ஆழம் காணமுடியாத, கலாச்சார முரண்பாட்டின் வடிவில் இது பிரதிபலிக்கின்றது. எது சரி எது பிழை என்று தீர்மானிக்க முடியாத நிலை. குறுகிய எதிரெதிரான பிரதிவாதங்களுக்குள், தானாகவே சொந்த சுழற்சியில் சிக்கிவிடுகின்றது. சமூகத்தில் என்ன மாற்றம் நடக்கின்றது என்பதையும், அது எப்படி எந்த வழியில் நடக்கின்றது என்பதையும் கருத்தில் எடுப்பதில்லை. இது குடும்பத்தில் பாரிய முரண்பாட்டை, பிளவை உருவாக்குகின்றது.
1. பெற்றோர்கள் தாம் விரும்பியதை ஒற்றைப் பரிணாமத்தில் குழந்தைகள் மீது திணிக்க முனைகின்றனர்.
2. பெற்றோர்கள் தாம் விரும்பியதை, குழந்தைகள் அப்படியே பின்பற்றுவதாக மனப்பிரமை கொள்ளுகின்றனர். அதாவது தமது சொந்த இயலாமையை வெளிக்காட்டாத வகையில் முரண்பாடாகவே வாழ்தல்.
3. குழந்தைகளின் செயல்களை தாம் விரும்பிய வழிகளில் செல்வதாக கற்பித்து, அது தமது கோட்பாட்டுக்கு இசைவாக இருப்பதாக எண்ணி அதை விளக்குதல், பின் அதற்கு தத்துவ விளக்கம் வழங்குதல்.
4. குழந்தைகள் தாம் விரும்பியதை ஒற்றைப் பரிணாமத்தில் பெற்றோர் மீது திணித்தல்
இந்த வகையிலான நடைமுறைகள், கருத்துகள் அன்றாடம் நாம் சந்திக்கும் வாழ்வில் விடையமாகின்றது. உலகமயமாதல் உருவாக்கும் பொதுவான தோல்வி மனப்பாங்கை திருத்திசெய்யும் உளவியல் மனப்பாங்கில், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக காட்சியளிக்கின்றது. போலித்தனமான இணக்கப்பாடு அல்லது வால் பிடித்துச் செல்லுதல் என்ற நிலைக்கு, தானாகவே தரம் தாழ்ந்து விடுவது என்பது இதன் பண்பாகும். இப்படி சமூக ஒட்டத்தின் பிரதான விடையம் கண்டுகொள்ளாது தவிர்க்கப்படுகின்றது. அறிவியல் பூர்வமான விவாதம் தவிர்க்கப்பட்டு, தனிமனித குதர்க்கத்தினால் சமூக இழிவின் எல்லையில் சமூகம் சரிந்து வீழ்கின்றது. இது இயல்பில் தன்னை தக்கவைக்கின்ற சுயநலம் கொண்ட, குத்தலான குதர்க்கவாதமாகின்றது.
1. இந்த உலகத்தில் அவரவர் நம்புகின்ற வாழ்வியல் முறையை, முரண்பாடின்றி சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனப்போக்காக வெளிப்படுகின்றது. தத்தம் செயலை குதர்க்கமாக நியாயப்படுத்தவும் முனைகின்றது.
2. சமூக உறுப்புகளின் செயல் சார்ந்த கோட்பாடுகளும் நடைமுறைகளும், அவை எவ்வளவு தான் சமூக உறவுகளில் முரணாக முரண்பாடாக இருந்தாலும் சரி, முரணற்றதாக இருந்தாலும் சரி, அதை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காத மாறாத்தன்மை கொண்டதாக காட்டி நடிக்கின்ற போலித்தனமே, மனித உணர்வாக அரங்கேறுகின்றது. அதாவது மாற்றம் எதுவுமின்றி வாழ்வதாக காட்டி நடிக்க முனைகின்றனர்.
3. சமூக உறுப்புகளின் முரண்பட்ட அல்லது முரண்படாத பொது உலகம் சார்ந்த உலக கண்ணோட்டம் (நோக்கு) தவறாக இருப்பதை காணமறுப்பதன் மூலம், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவி நியாயப்படுத்துவது காணப்படுகின்றது.
4. உலகின் மனித வாழ்வு சார்ந்து அனைத்தும் மாறிக் கொண்டிருக்கின்றது என்பதையும், இவற்றில் சரி பிழைகள் உலகம் தழுவியதாக எங்கும் எதிலும் இருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது, மனித உறவுகளில் பிரதானமானதும் அடிப்படையானதுமான முரண்பாடாகின்றது.
5. உலகம் தழுவியதாக, பொதுமைப்படுத்தி மனித உறவுகளை பார்க்க மறுக்கின்ற குறுகிய உளவியல் மனப்பாங்கு, தனக்கே எதிராகவே அதை நிறுத்துகின்றது.
மனித உள்ளடக்கத்தில் உலகைப் புரிதல், பரஸ்பரம் மனித்தன்மை என்னும் ஜனநாயக மனப்பாங்கை வளர்த்தல் ஊடாக, சமுதாய நடைமுறைகளின் சரி பிழைகளை கற்றல், கற்றுக்கொடுத்தல் என்பதை மறுப்பதே, சமூகத்தின் பொதுப்புத்தியாகும். இதன் விளைவை சமூகம் தனது சொந்த சீரழிவின் ஊடாக அதை அனுபவிக்கின்றது. வெறும் மந்தைக் கூட்டமாக, நுகர்வுச் சந்தையில் மேய்வதே, அதன் சொந்த சமூக அறிவாக சுருங்கிவிடுகின்றது.
இப்படி உலகின் பண்பாடுகளை கலாச்சாரத்தை தீவிரமாக மாற்றுவதில், நுகர்வைத் தூண்டும் சந்தை சார்ந்த நலன்கள் முக்கிய பங்கை இன்று வகிக்கின்றது. அதேநேரம் சந்தைக்கு வெளியில் உழைத்து வாழ்பவனின் உழைப்பு பண்பாட்டுக்கும், சந்தை உருவாக்கும் நுகர்வுப் பண்பாட்டுக்கும் இடையில் பாரிய முரண்பாடு உருவாகி சமுதாயத்தை முடமாக்குகின்றது. நுகர்வுப் பண்பாடு வீங்கி வெம்பி உள்ள சமுதாய உள்ளடக்கத்தில், தனிமனிதன் சார்ந்த குறுகிய நலன்கள் உந்தித் தள்ளுகின்றது. கவர்ச்சியும் ஆபாசமும் நிறைந்த நுகர்வு வக்கிரம், கலாச்சாரமாக பண்பாடாக திட்டமிட்டு உற்பத்தியாகின்றது. ஒரு விளம்பரம் எப்படி எந்த நோக்கில் (உத்தியில்) உருவாக்கப்படுகின்றதோ, அந்த நோக்கில் அதே வகையில் மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சந்தை உற்பத்தி செய்கின்றது. உலகமயமாதல் என்ற சமூகப் போக்கில், இது உலகம் தளுவிய சந்தையாகின்றது.
இந்த நுகர்வுக் கலாச்சாரத்தின் காவியாக பெண் மாற்றப்பட்டுள்ளாள். சமூக அளவில் இதை பெண் எப்படி உணரவில்லையோ, அப்படி ஆணும் உணரவில்லை. சமூகம் மலடாகிப் போக, அதனிடத்தில் இவையே கோலோச்சுகின்றது.
நுகர்வுச் சந்தையின் ஆன்மாவாகிவிட்ட, பெண்ணின் சதை
பெண்ணின் உடுப்பின் ஊடாக பெண்ணின் சதையைக்காட்டி, மனித உழைப்பை திருடுவது தான் உலகமயமாதல் என்னும் சந்தைக் கலாச்சாரம்.
பெண் எப்படிப்பட்ட உடுப்பை, எந்தக் கலாச்சார உள்ளடகத்தில், எப்படி ஏன் அணிய வேண்டும் என்று, யார் தீர்மானிக்கின்றார்கள்? நிச்சயமாக பெண் அல்ல. ஆணுமல்ல. அது போல் சமூகமும் அல்ல. மாறாக ஆணாதிக்க நுகர்வுச் சந்தையே தீர்மானிக்கின்றது. பெண்ணின் சதை, நுகர்வுக்குரிய அடையாளச் சின்னமாகி விடுகின்றது.
இப்படிப்பட்ட நுகர்வுச் சந்தையான உலகமயமாதல், சமூகத்தில் நிலவும் சமூக ஒடுக்குமுறைகளை எல்லாம் உள்வாங்கி, அதற்கு ஏற்றால் போல் தான் அது செயல்படுகின்றது. சமூக ஒடுக்குமுறைகளையே, சந்தைக்குரிய விற்பனைக் கருவியாக பயன்படுத்துகின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தை, நுகர்வுப் பண்பாட்டை நோக்கி, அதாவது சந்தைக்கேயுரிய உத்தியை உருவாக்குகின்றது.
ஆணாதிக்க நுகர்வு வக்கிரத்தை, உலகமயமாதல் சந்தைக்குரிய வகையில் பெண்ணின் உறுப்பை (சதையை) கவர்ச்சிக்குரியதாகவும் ஆபாசத்துக்குரியதாகவுமாக்கியது. உலகமயமாதலுக்கு முன்னமோ, இது அடக்கமும் அழகும் கொண்ட மூடிமறைக்கப்பட்டு, ஒரு ஆணின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. இப்படி எதையும் பெண் அல்லது ஆண் தீர்மானிப்பதில்லை, சந்தை தான் தீர்மானிக்கின்றது.
இன்றோ கவர்ச்சியையும், ஆபாசத்தையும் அடிப்படையாக கொண்டதே, ஆணாதிக்க நுகர்வு வக்கிரம். இதுவே மனித கலாச்சாரமாகிவிட்டது. இவைகளை ஒருங்கே கொண்ட ஆணாதிக்க சமூகப் போக்கின் சமூக மேலாண்மை சார்ந்தே, பெண்களின் சதைக்குரிய உடுப்புகளை சந்தை உற்பத்தி செய்கின்றது. இதுவே உலகமயமாதலின் பண்பாடாக கலாச்சாரமாக மாறிவிடுகின்றது.
கவர்ச்சியை, ஆபாசத்தை அடிப்படையாக கொண்ட ஆணாதிக்கத்தை வக்கிரமாக கொண்ட உலகமயமாதல் என்ற சந்தைக் கலாச்சாரத்துக்கு முன்பாக, பெண்களின் உடுப்புகள் இதற்கு எதிரானதாகவே இருந்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க நோக்கும், முதலாளித்துவ நோக்கும் சார்ந்து காணப்பட்ட பெண்ணின் உடுப்புகள், பெண், பெண் சார்ந்த உறுப்புகளை விளம்பரத்துக்குரிய ஒரு சந்தைப் பொருளாக்கவில்லை. அதாவது ஒரு ஆணின் சொத்து என்ற எல்லைக்குள் காணப்பட்ட பெண்ணும், பெண்ணின் உறுப்புகளும், அவளின் உடுப்புகளும், உலகமயமாதலில் நேரெதிராக மாற்றப்பட்டுள்ளது. பெண், பெண்ணின் உடுப்புகள் வெளிப்படுத்தும் பாலியல் வக்கிரம், சதைக் கவர்ச்சியும், உலகச் சந்தையில் சந்தைக்குரிய பொருளாக்கப்பட்டது. ஆணாதிக்கம் கற்பிக்கும் பெண்ணின் கவர்ச்சியும் ஆபாசமும், அது வெளிப்படுத்தும் வக்கிரத்தின் ஊடாகவே, பெண் சமூகத்தின் முன் பொது விளம்பர மாடலாக்கப்பட்டுள்ளாள். இதற்கு ஏற்ற ஆபாசமான சதைக்கேற்ற கவர்ச்சியான உடுப்பு மூலம், பெண் சதையின் ஊடாக வக்கிரப்படுத்தப்படுகின்றாள். இதுவே பெண்ணுக்குரிய பண்பாக, நடத்தையாக, சுதந்திரமாக ஏற்கவைக்கப்பட்டு இதுவே கலாச்சாரமாகின்றது.
இப்படி இன்றைய சந்தைக் கலாச்சாரத்துக்கு (கவர்ச்சி, ஆபாசம், வக்கிரம்) நேர்மாறாகவே, இதற்கு முந்தைய பெண் வாழ்ந்தாள். இதுவே இன்று சமூகத்தின் உள்ளான முரண்பாடாக மாறுகின்றது. கடந்த கால பெண்ணின் வாழ்வை அதன் அனுபவத்தையும் வரலாற்று ரீதியாக சந்தை உதறியெறிகின்றது. பெண் கவர்ச்சியாக, ஆபாசமாக, வக்கிரமாக வாழ்வதும், காட்சிப் பொருளாகுவதுமே அவளின் சுதந்திரம் என்று, சந்தை தான் மனிதனுக்கு விளக்கம் தருகின்றது. பெண் விடுதலை இதுவேயென்று பெண் விடுதலையின் பெயரில் மயங்குவதுடன், அதை அவர்கள் கூறவும் தயங்குவதில்லை. இப்படி உலகமயமாதலை பெண்ணின் உடுப்பினூடாகக் கூட, நாம் தெரிந்து கொள்ள முடியும்.
பெண் இதை தானாக தெரிவு செய்யவில்லை. ஆணாதிக்க சந்தையை அடிப்படையாக கொண்டே, பெண்ணுக்குரிய உடுப்பை சந்தை பெண் மீது திணிக்கின்றது. இங்கு பெண்ணின் தெரிவு என்பது, எந்தளவுக்கு தான் உடல் தெரிய கவர்ச்சியாக, ஆபாசமாக, வக்கிரமாக இருத்தல் என்ற எல்லைக்குள்ளான ஒரு தெரிவாகின்றது. இதை சந்தை பெண்ணுக்குரிய ஒரு தெரிவாக திணிக்கின்றது. இதை நாம் மேலும் நுட்பமாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்வது அவசியம்.
மனித இனம் தனது இயற்கைச் சூழலைச் சார்ந்து, தனது உடுப்பை தானே உற்பத்தி செய்தது. இதற்குள் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக பொருளாதார கூறு புகுந்து கொண்டது. குடும்பம், கிராமம், நாடு சார்ந்து, உடுப்பை எப்படி அணிவது, எதை அணிவது என்று தீர்மானித்த சமூகம், பெண்ணைப் பொதுவில் சந்தைக்குரிய பொருளாக நிறுத்துவதை மறுத்தது. ஆபாசம், வக்கிரம், கவர்ச்சி என்ற எல்லையில், பெண்ணை பொதுவாக நிறுத்துவதை அது மறுதலித்தது. பெண்ணை தனது சமூக பொருளாதார நோக்குக்கு ஏற்ப, ஒரு ஆணுக்கு ஏற்ப அடிமைப்படுத்தி வைத்திருந்தது.
அன்று சமூகத்தில் உறுப்பு சார்ந்து, ஒவ்வொருவரும் தனக்கு தானே தெரிவை உள்ளடக்கிய வகையில் உடுப்பைத் தயாரித்தனர். அங்கு தெரிவு செய்வதில் இருந்த சுதந்திரம், அதை எப்படி எந்தவகையில் தயாரிப்பது, அணிவது என்று இருந்த சுதந்திரம் கூட, இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் அறவே கிடையாது. சந்தை எதை எப்படி உற்பத்தி செய்கின்றதோ, அதை அப்படியே கேள்விகளின்றி அணிவதும், தெரிவதும் தான் பெண்ணின் சுதந்திரம் என்ற வக்கிரமே இன்று அரங்கேறியுள்ளது. பெண் உடல் அங்கம் வெளித் தெரிய அரைகுறையாக அணிவது தான் பெண்ணின் அழகு என்றும், இதுவே பெண்ணின் பெண் விடுதலை என்றும் கூட சித்தரிக்கப்படுகின்றது. இந்த வகையில் பெண்ணின் உடல் (சதைகள்) உறுப்புகளை, வெறும் பாலியல் உறுப்புகளாக பார்க்கப்படுகின்ற பண்பாடும் கலாச்சாரமும், சமூகத்தின் கலாச்சாரமாக, சந்தைக் கலாச்சாரம் உருவாக்கியுள்ளது.
பெண்ணைக் கொண்டு உருவாக்கும் கவர்ச்சி, ஆபாசம், வக்கிரம், இதையே உலகமயமாதல் பெண் சார்ந்து ஆணாதிக்க உலகுக்காக உற்பத்தி செய்கின்றது. இந்த வகையில் பெண் அல்லது சமூகம் தனக்குரிய உடுப்பை, தனக்காக உற்பத்தி செய்யவில்லை, ஆணாதிக்க சந்தைக் கலாச்சாரமே, தனக்கு ஏற்ப அதை உற்பத்தி செய்கின்றது. சமூகத்துக்கு வெளியில் இயங்கும் தனிமனித நலன் சார்ந்த சந்தை, பெண்ணின் கலாச்சார பண்பாட்டுச் சந்தைக்கு ஏற்ப எதுவென்று அதுவே தீர்மானித்து, பெண்ணின் உடுப்பை தனது ஆணாதிக்க சந்தை வக்கிரத்துக்கு ஏற்ப உற்பத்தி செய்கின்றது. இதை அவர்கள் நவீன உடுப்புக் கலை என்று, கவர்ச்சியாக ஆபாசமாக விளம்பரம் செய்கின்றனர். மக்களை ஏமாற்றி விற்கும் ஆபாச கலைக்கு, இப்படி இவர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்.
மாறுபட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து, சமூக அமைப்பு உருவாக்கிய பாரம்பரிய பண்பாடு சார்ந்த உடுப்புகளில், சந்தையின் ஆபாசமும் கவர்ச்சியும் அதன் வக்கிரமும் பெண்ணின் ஊடாக புகுத்தப்பட்டது. ஆணின் உடுப்பு சார்ந்த உலகில், இந்த ஆபாசம், வக்கிரம், கவர்ச்சி பெருமளவில் இது ஏற்படவில்லை. பெண்ணின் உடுப்பு சார்ந்த பண்பாட்டில் சீரழிவையும், கவர்ச்சியையும் அடிப்படையாக கொண்ட, அதை சதை ஆபாசம் ஊடாக புகுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பெண்ணின் பண்பாடு சார்ந்த சேலை (சாறி) யில் கூட இது புகுத்தப்பட்ட விதமோ, தனித்துவமானது நுட்பமானது சதித்தனமானது. சாறிக்கு அணியும் மேல்சட்டை (பிளவுஸ்) ஊடாகவே, அது நவீனமாக இழிவாக புகுத்தப்பட்டது. பெண்ணின் மார்புக் கச்சை மேற்சட்டை ஊடாக வெளித்தெரியும் வண்ணம், ஆபாச கலாச்சாரம் திணிக்கப்பட்டது. சந்தை கோரும் சந்தைக் கவர்ச்சியும் ஆபாசமும் என்ற எல்லைக்குள், பெண்ணின் மேல்சட்டைக்கான துணி உள்ளாடை வெளித் தெரியும் வண்ணம் உற்பத்தி செய்யப்படுகின்றது. பெண்ணின் தசை (உறுப்புகள்) கவர்ச்சிக்குரிய ஒரு பொருள் என்ற சந்தை விதிக்கமைய, பெண்ணின் உறுப்புக்களை ரசிக்கும் ஆணாதிக்க நுகர்வு நோக்கில் பெண்ணின் உடுப்பு தீவிரமாக மாற்றப்பட்டது. இங்கு இதை பெண் தானாக தேர்ந்தெடுக்கவில்லை. ஆணாதிக்க சந்தை இதை பெண்ணுக்கு தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தி திணித்தது. இதனூடாக சந்தையின் கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய பொதுவிதியே மாற்றப்பட்டது. இந்த போக்கில் அனைத்தும் தீவிரமான மாற்றத்துக்குள்ளாகியது. பெண்ணின் உடல் அங்கங்கள், ஆபாசமாக தெரியும் வண்ணம், உடுப்பின் அளவு எங்கும் எதிலும் குறைக்கப்படுகின்றது.
இந்த வகையில் ஆணாதிக்க கதாநாயக தன்மை கொண்ட சினிமா மூலம், இவை முதலில் வெளிப்படுகின்றது. விளம்பரத்துக்கு நிகரான சினிமா ரசனைக்குள் இது புளுக்கின்றது. இப்படி வீங்கி வெம்பிய கலாச்சாரமும், பண்பாடும், சமூகத்தில் இயல்பான ஒன்றாக மாறுகின்றது.
ஆணாதிக்க சந்தை சார்ந்த தனிமனித நுகர்ச்சிச் சுதந்திரம் தான், தனிமனிதனின் தெரிவுக்கான எல்லை. உலகமயமாதலில் நுகர்ச்சி சுதந்திரம் என்பது, ஆணாதிக்கம் நுகருகின்ற தசைச் சுதந்திரம் தான். இந்த சந்தை விதிக்கமைய, பெண்ணின் பாலியல் உறுப்புக்கு ஏற்ற ஆணாதிக்க உடுப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. உண்மையில் இந்த சந்தை விதிகள் என்பது பெண்ணின் சதை (உறுப்பு) சார்ந்த கவர்ச்சி, ஆபாசம், அது வெளிப்படுத்தும் வக்கிரம் என்ற அடிப்படையில் இயங்குகின்றது. பெண்ணின் உறுப்புகள் அதீதமாக வீங்கி வெம்பி வெளியில் தெரியும் வண்ணமே, ஆணாதிக்க உடுப்பு கட்டமைக்கப்படுகின்றது. தேவை, சூழல், காலம், வசதிக்கு (உழைப்புக்கு) ஏற்ற உடுப்புகள் மறுக்கப்பட்டு, பெண்ணின் உறுப்பின் (சதை) கவர்ச்சிக்காக, பெண்ணுக்கு உடுப்பு அணிவிக்கப்படுவதே சந்தை விதியாகின்றது. பெண் உடுப்பு அணிதல் என்பது, பெண் தனது கவர்ச்சி காட்டுவதற்காக என்றாகிவிட்டது. இதுதான் சந்தைக்கான எடுகோள். இதுவே மனித கலாச்சாரமாகின்றது.
பெண்ணின் தசைக் (பாலியல்) கவர்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம், பெண்ணின் உடல் பாகங்களைக் கூட சந்தை விரும்பியவாறு தானாக தேர்ந்தெடுக்கின்றது. சந்தையின் புத்துணர்ச்சி என்பது, வித்தை காட்டி ஏமாற்றுவது தான். ஆகவே பெண்ணை விதவிதமாக ஆபாசமாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. பெண்ணின் சதையை விதவிதமாக, முக்கியத்துவம் கொடுத்து, ஆபாசமாக்குகின்றது. எது கவர்ச்சி, எது அழகு என்று பெண்ணே தடுமாறும் வண்ணம், இதை அடிக்கடி மாற்றுகின்றது.
எப்படி எதை வெளிப்படுத்துவது என்ற ஆணாதிக்க ரசனையைத் தூண்டி, அதற்கு ஏற்ப அதை சந்தை உற்பத்தி செய்கின்றது. இதற்கேற்ற ஆணாதிக்க ரசனையும் கூட, ஒரு கலாச்சாரமாக உற்பத்தி செய்கின்றது. பெண் இதற்கு ஏற்ற வண்ணம் உடுப்பை அணிவது தான், பெண்ணின் சுதந்திரம் என்று சந்தை விதந்துரைக்கின்றது. இந்த வகையான ஆபாச உடுப்புகள் உலக நாடுகளின் பொதுச் சந்தைக்குள்ளும், சமூகத்தின் தீர்மானகரமான மேல்மட்ட பண்பாட்டிலும் முதலில் நுழைகின்றது. மேற்கில் இதுவே சந்தைக் கலாச்சாரமாகவும், மூன்றாம் உலக நாடுகளில் அடி ஆழ கிராமங்கள் தவிர்த்து மேட்டுக்குடிகளின் சந்தைக்குரிய கலாச்சாரமுமாகிவிட்டது.
இப்படி பெண்ணின் உடல் பாகங்களை தேர்ந்தெடுத்தும், அடிக்கடி மாற்றியும் நுகர்வுச் சந்தை கவர்ச்சிப்படுத்துவதன் மூலமே சந்தை உயிர்வாழ்கின்றது. இது நுகர்வு சார்ந்த குறுகிய அற்பமான கலாச்சாரத்தை, அடிக்கடி மாற்றுகின்றது. இதுவே விற்பனையில் தீர்க்கமாக பங்களிக்கின்றது. புதிய பொருளை விற்க, பழைய பொருளைத் துறக்க, கலாச்சாரம் மிகத் தீவிரமாக மாற்றப்படுகின்றது. உலகமயமாதல் சந்தை அடிக்கடி தனது சந்தைக் கலாச்சாரத்தை மாற்றாது, சந்தையை இயங்கவைக்க முடிவதில்லை.
உலகமயமாதல் என்ற சந்தைக் கலாச்சாரம், வேகமாகவும் துல்லியமாகவும் மனித கலாச்சாரத்தை புரட்டிப்போடுகின்றது. பெண்ணின் உடல்சார்ந்த பாலியல் உறுப்புகள், ஆணாதிக்க கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம், சந்தை பெண்ணின் உறுப்புக்கு ஏற்ற மாறுபட்ட விதவிதமான உடுப்பை திணிக்கின்றது. அதை நுகரும் வண்ணம், ரசிக்கும் வண்ணம், பண்பாட்டு மற்றும் கலாச்சாரத்தில் அதை நெழிவு சுழிவாகப் புகுத்துகின்றது. இதனால் பெண் அணியும் உடுப்பின் அளவு, படிப்படியாக வெட்டிக் குறைக்கப்படுகின்றது.
இந்த எல்லையில் பெண் அல்லது சமூகம் தமது தேவை கருதி உடுப்பு தயாரிக்கும் சொந்த தெரிவையும், சுதந்திரத்தையும் தானாகவே இழந்து நிற்கின்றனர். சந்தை எதை எப்படி ஏன், எதற்காக அணியவேண்டும் என்று தீர்மானிக்கின்றதோ, அதற்கு ஏற்ப எதை எப்படி ஏன் உற்பத்தி செய்கின்றதோ, அதை அப்படியே அணியும் வழக்கமே ஒரு பண்பாடாக கலாச்சாரமாக மாறிச் செல்லுகின்றது. இதுவே புதிய சீரழிவுப் பண்பாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குகின்றது. இது பாலியல் பற்றியும், பெண் பற்றியும், அனைத்து சமூக மதிப்பீட்டையும் வக்கிரப்படுத்தி, மிகத் தீவிரமாக மாற்றுகின்றது. கவர்ச்சி ஆபாசம் ஊடாக பெண்ணை பார்க்கும் வக்கிரமான சமூக மனப்பாங்கை உருவாக்கி, சமூகத்தை அதற்குள் அனுபவிப்பதாக கூறி சமூகமே சீரழிகின்றது.
அனுபவிப்பாக நம்பும் சுய கவர்ச்சி, சுய ஆபாசம் ஊடான வக்கிரத்தை பிரதிபலிக்கும் சமூக அமைப்பில், ஒரு ஆண் தனது உடல் உறுப்பு தெரிய உடுப்பை அணிவதில்லை. ஆண் பெண்ணுக்கு எதிர்மாறாக, இங்கு முரண்நிலையாகவே இருக்கின்றான். ஆனால் பெண்ணின் முந்தைய தனது நிலைக்கு எதிர்நிலையில், பெண்ணின் உடுப்பு தீவிரமாக மாற்றப்பட்ட போதும், ஆணின் பண்பாட்டில் இந்த மாற்றம் நிகழவில்லை. ஆணாதிக்க அமைப்பில் உடுப்பு சார்ந்த பண்பாட்டில், ஆணின் நிலை மாற்றமின்றி தொடர்ந்தும் தக்க வைக்கப்படுகின்றது.
அதாவது ஆணின் கவர்ச்சி ஆபாசம் என்ற விடையம், ஆணாதிக்க சந்தையை தீர்மானிக்காமையால், பெண்ணின் தசை சார்ந்த கவர்ச்சி மட்டும் முதன்மைப் பொருளாக்கி ஆபாசமாக்கப்படுகின்றது. இங்கு பெண்ணே மறுபடியும், இந்த புதிய கலாச்சாரத்தின் காவியாகின்றாள். முன்பு பெண் கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்ற நிலை இன்று தீவிரமாக மாறிவிட்டது. அதாவது சந்தை தனது தேவைக்காக அதைத் தகர்க்கின்றது. பெண் ஊடாக மனித வரலாற்றை தெரிந்து கொள்ள உதவிய பாரம்பரிய மனிதக் கலாச்சாரம் அழிக்கப்படுகின்றது. அதனிடத்தில் வக்கிரமான ஆணாதிக்க சந்தைக் கலாச்சாரம் புகுத்தப்படுகின்றது. உண்மையில் இந்த மாற்றம் என்பது பெண்ணை ஆணாதிக்க சந்தை விளம்பர மாடலாக்கியது. அவளை ஆணாதிக்க ரசனைக்குள் சீரழிவுக்குள்ளாக்கி, அவளே இதன் காவியாக இருக்க தூண்டப்படுகின்றாள். இவை தனிப்பட்ட பெண் அல்லது பெண்களின் நடத்தைகளல்ல. சந்தையின் நடத்தை விதி தான், பெண்ணை இப்படி இருக்க கோருகின்றது.
இந்த எதார்த்தத்தை புரிந்து எதிர்வினையாற்றும் சமூக மதிப்பீடுகள் தான், மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கும் வாழ்வுக்கும் அவசியமானது. உலகமயமாதல் கட்டமைக்கும் ஆணாதிக்க சந்தை அமைப்பில், பெண்ணின் உடல்சார் சதைக் கவர்ச்சி தான், சந்தையின் கவர்ச்சியாகின்றது என்பதை முதலில் உணர்வது முதல் படியாகும்.
ஒரு ஆண் தனது உடல் தெரிய உடுப்பு அணிவதில்லை. ஆனால் ஒரு பெண் உடல் தெரிய உடுப்பு அணியவைக்கப்படுகின்றாள். இந்த முரணைப் புரிந்து கொள்வது, எதார்த்தத்தில் மிக இலகுவானது. சந்தையை நியாயப்படுத்தும் இந்த ஆபாசக் சதைக் கூத்தையும், அந்த கலாச்சாரத்தையும் தகர்ப்பதற்கு, ஆணின் இந்த நிலை உதவுகின்றது. மனித தேவைகளை மறுத்து, வர்த்தகத்துக்காகவே இயங்கும் உலகமயமாதல் சந்தை, பெண் ஊடாக ஆபாசமாகவே இயங்குகின்றது. எப்படி பெண் அதற்குள் திணிக்கப்படுகின்றாள் என்பதை, நாம் புரிந்து கொள்ளமுடியும். இதற்கு எதிரான சமூக கண்ணோட்டம் நம்மிடம் இல்லாதவரை, சந்தையில் பாலியல் சார்ந்த சதை ஆபாசமே, மானிட ஒழுக்கவியலாகின்றது. பெண், பெண் உறுப்பு என்ற பாலியல் சதையூடாக மட்டும் தான் பார்க்கப்படுவாள், பார்க்கப்படுகின்றாள். இதனால் கலாச்சாரக் கூறு முழுமையும் சிதிலமடைந்து வக்கிரமடைகின்றது. கலாச்சாரம் என்பது பாலியல் வக்கிரம் கொண்ட லும்பன்தனமாகி விடுகின்றது. ஆண் பெண் இடையிலான உறவு, சதை ஊடாக அணுகுவதாக மாறிவிடுகின்றது. கவர்ச்சி, ஆபாசம், போலித்தனம், வக்கிரமான பாலியல் நாட்டம் தான், ஆண் பெண் உறவினை தீர்மானிக்கும் காரணியாகி விடுகின்றது.
இந்த வகையில் கீழைய நாடுகளில் இருந்து, மேற்கு நாடுகள் வரை, சந்தை பெண்ணின் சதையை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் சதை சார் பாலியல் கவர்ச்சியே, பண்பாட்டுக் கலாச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அவள் அணியும் உடையூடாகவும், இது மிக நுட்பமாக வெளிப்படுகின்றது.
உலகமயமாதலில் தீவிரமாக புகுத்திய இந்த மாற்றத்தை நாம் எந்தளவில் உணர்ந்துள்ளோம்? இதை நாம் எந்த வகையில் புரிந்துள்ளோம்? எந்த வகையில் இதை எதிர்த்து, எதிர் வினையாற்றுகின்றோம்? எந்த வகையில் மாற்றுக் கண்ணோட்டத்தைக் இதன் மீது கொண்டுள்ளோம்? இதை எந்த வகையில், சமூகத்தின் முன் எடுத்துச் செல்லுகின்றோம்?
இவை எம் முன் தெளிவுபடாத சூக்குமமான ஒரு நிலையில் நாம் வாழ்வோமாயின், அந்த கவர்ச்சியை ஆபாசத்தை ரசிக்கும் வக்கிரம் எமது மனப்பாங்காக எம்மையறியாமல் மாறிவிடுகின்றது.
இது எமக்குள்ளான சுயமுரண்பாடு சார்ந்தாக மாறுகின்றது. ஒரு பொருளின் முரண்பட்ட இரண்டு கூறு சார்ந்து, தனக்கு நெருங்கிய பெண்ணுக்கு இதை மறுக்கின்ற கலாச்சார முரண்பாடாக, லும்பன் தனம் கொண்ட ஒரு வன்முறையாக உருவாகின்றது. பொதுத் தளத்தில் இந்த ஆபாசத்தை ரசிக்கும் தீவிர ரசிகர்களாக, அந்த பண்பாட்டில் ஊறியவர்களாக மாறிவிடுவதும், நெருங்கிய உறவில் அதை சகித்துக்கொள்ள முடியாத வக்கிரம் கொண்டவராக நாம் மாறிவிடுவதும் நிகழ்கின்றது. இதன் பொதுத்தன்மையை விமர்சிக்கவும் எதிர்க்கவும் முடியாத மனநிலையில், இது குறிப்பாக மட்டும் புரிந்து குடும்ப வன்முறையாக மாறுகின்றது.
சீரழிவுக் கலாச்சாரத்தின் ஒரு ஊடகமாக சினிமா இருக்கின்றது.
பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு, சினிமாவில் நிகழும் மாற்றமாகின்றது. இன்றைய உலகமயமாதலின் நுகர்வுச் சந்தை விளம்பரம் செய்யும், கலாச்சாரத் தரகுகளாகவே சினிமா இருக்கின்றது. குடும்பத்தை சேர்ப்பதா அல்லது பிரிப்பதா என எதுவாக இருந்தாலும், சந்தை விதிக்கமைய இயங்கும் ஒரு ஊடகவியல் தான் சினிமா.
நுகர்வுச் சந்தை, நுகர்வுக் கலாச்சாரம் என்ன செய்கின்றது. மனிதன் சேர்ந்திருப்பதை, சேர்ந்து இயங்குவதை, சேர்ந்து வாழ்வதை மறுக்கின்றது. மனித உறவுகள் அனைத்தையும் அற்ப நுகர்வாக, விற்கும் பொருளாக பார்க்கின்றது. இது கலாச்சாரம் முதல் அனைத்தையும் இதற்குள்ளாகவே பார்க்கின்றது, திணிக்கின்றது. மனித உறவுகளை, சந்தைக்குரிய வக்கிரமான போலி உறவாக்குகின்றது. இதற்குள்ளாக அனைத்தும் இருக்க வேண்டும் என்பதால், இதற்கு மாறான சமூகக் கூறுகளை அழிக்கின்றது. இதைச் செய்வதில் தான், சினிமாவின் பங்கு முக்கியமானது. தேசிய உற்பத்திகள் தரமற்றது என்று சொல்லுமளவுக்கு, நுகர்வுச் சந்தைக் கதைகள் உருவாக்கப்படுகின்றது. கதையின் வில்லன் தேசியக் கூறாகவும், கதாநாயகன் உலகமயமாதல் கூறாகவும், இன்றைய சினிமாவில் காட்டப்படுகின்றது.
இதன் பின்னணியில் பெண்ணின் சதை சார்ந்த கவர்ச்சியும், ஆபாசமுமே, சினிமா உலகை ஆளும் விதியாகின்றது. சினிமாவில் பெண்ணின் சதை என்னும் ஆபாச கலை இல்லை என்றால், சினிமா குப்புறப்படுத்துவிடும். இங்கு பெண்ணின் சதை கலையாக்கப்படுகின்றது.
இந்த சினிமாவுக்கு ஒரு ஆன்மா இருக்கிறது என்றால், அது சந்தை வெளிப்படுத்தும் ஆபாச உணர்ச்சிதான். சினிமாவுக்கு ஒரு சந்தை இருக்கின்றது என்றால், பெண்ணின் சதை வெளிப்படுத்தும் கவர்ச்சி சார்ந்த ஆபாசமும் ஆணாதிக்க உலகும் அவசியமாகின்றது. சினிமா நுகர்வு சந்தைக்கேற்ற விபச்சாரி என்பதால், விபச்சாரத்தை விளம்பரம் செய்வது அதன் கலையாகின்றது. என்னதான் நோண்டினாலும், இதன் ஊடாகவே சினிமாவின் ஆன்மா வெளிப்படுகின்றது.
சினிமா ஒரு ஊடகம் என்ற வகையில், அது சந்தைக்குரிய பண்பாட்டை கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த வகையில் அது தனது சந்தைச் சீரழிவூடாக, தானே முக்கிமுனங்கி கட்டிப் பாதுகாத்து வந்த பழைய கலாச்சார பண்பாட்டை அழிப்பதில் முன்னணிப் பங்கை வகித்து முன்னோடியாகின்றது.
சினிமா வெளிப்படுத்தும் ஆபாசமும் கவர்ச்சியும் கலையாக, இது உலகம் தழுவிய வகையில் மாற்றத்தை விரைவில் மக்களின் உட்புகுத்தக் கூடியதாக உள்ளது. இதை வைத்து சிலர் பிழைப்புக்காக பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் சினிமா மக்களுக்கு சிறுகச்சிறுக நஞ்சிடுகிறது என்பதே எதார்த்தம். பாலியல் கவர்ச்சியையும் ஆபாசத்தையும் ஒருங்கே புகுத்தி, தனிமனித அற்ப நுகர்வு வெறியை தூண்டி மனித உணர்வுகளை வக்கரிக்க வைக்கின்றது.
பெண் உள்ளடக்க ரீதியாக, வாழ்வு முறையூடாக, உடல் ரீதியாக முழுமையில் ஆபாசமாக இருக்க வேண்டியவள் என்று, சினிமாக் கலை கூறுகின்றது. இதைத்தான் உலகமயமாதல் கோருகின்றது. பெண் அணியும் துணியை குறைத்தலில் உள்ள நவீன நுட்பமும், வித்தையும் தான், சினிமாக் கலையாகின்றது.
பெண்ணின் சதையை வெளியில் தெரிய வைப்பதில் உள்ள நுட்பமும், அதை வக்கிரமாக இயங்க வைப்பதிலும் உள்ள ஆற்றலும், சினிமாக் கலையையே புல்லரிக்க வைக்கின்றது. இதை செய்வதில் உள்ள மனவிகாரம் கொண்ட வக்கிரமே, கலைத்திறமையாகின்றது. இதுவோ பணமாக புரளுகின்றது. நுகர்வு சந்தைக்குரிய ஒழுக்கம் (ஆன்மா), பணம் திரட்டுவதில் தான் இறுதியாக பூரிக்கின்றது என்றால், சினிமா அதற்கு ஏற்ப பாய் விரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. இப்படி கட்டியமைக்கும் சமூக அவலத்தின் போக்கிடம் தான், இன்றைய (பின்)நவீன நாகரீகமாக புகுத்தப்படுகின்றது.
இதை மேலும் இலகுவாக புரிந்துகொள்ள முனைவோம். முன்பு சினிமாவில் கவர்ச்சியை ஆபாசத்தை வெளிப்படுத்த, இதற்கென சினிமாவால் உருவாக்கப்பட்ட துணை நடிகைகள் பயன்படுத்தப்பட்டனர். சமுதாயத்தில் பாலியல் கவர்ச்சியையும், ஆபாசத்தையும் வெளிப்படுத்தும் இடங்களாக மதுபானக் கிளப்புகளே என்று சினிமா முன்பு காட்டியது. சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளிகளே இவைகள் என்று, சினிமாவில் முன்பு கொண்டு வரப்பட்டது. இவைகளை சமூகத்தில் ஒழிவு மறைவான சந்து பொந்துகளில் நிறுத்தியே, அவைகள் சினிமாவில் காட்டப்பட்டது.
உலகமயமாதல் ஆபாசமே சினிமாக் கலாச்சாரமாகிவிட்ட இன்றைய நிலையில், இவை ஒளிவு மறைவற்ற ஒன்றாக, இதுவே நவீன சமூகத்தின் போக்காகவே காட்டப்படுகின்றது. ஆபாசத்தை தூண்டும் துணை நடிகைகள் பாத்திரம் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தின் கதாநாயகிகளே ஆபாசமாக கவர்ச்சியாக இருக்கின்ற நிலைக்கு பெண் மாற்றப்பட்டுவிட்டாள். கதாநாயகி எப்படியோ அப்படித்தான் சமூகத்தில் பெண் இருக்கவேண்டும் என்பதையே, சினிமா உலகம் தனது ஆபாச வழிகளில் அற்புதமாக தனது கலையாக எடுத்துக்காட்டுகின்றது. சினிமா வெளிப்படுத்தும் ஆபாசமான வக்கிரம், இன்றைய உலகமயமாதல் சமூகத்தின் பொதுப் பண்பாடு என்று காட்டப்படுகின்றது. முன்னைய ஆபாச பாத்திரங்கள், இன்று பொதுப் பாத்திரமாகி, அதுவே பண்பாடாக கலாச்சாரமாக மாறுகின்றது. இதுவே மாற்றத்தின் உட்சாரமாகும். முன்பு துணை நடிகை ஊடாகவே சமூக ஒழுக்கவியலைக் கேள்விக்குள்ளாக்கும் சமூகப் பாத்திரம், இன்று ஒழிக்கப்பட்டு, அதுவாகவே சமூகம் மாற்றப்படுகின்றது. அதாவது சமூகத்தின் கதாநாயகிகளாகவும், ஒழுக்கவாதிகளாகவும் காட்டப்படுவோர், ஆபாசமாக கவர்ச்சியாக சதை பிதுங்க உடுப்புகளால் அலங்கரிக்கப்பட்டவர்கள் தான். சமூகத்தில் இதை ஒட்டி உருவாகும் கலாச்சாரங்கள் பண்பாடுகள். இப்படி பெண்ணின் சதை தெரிய ஆடை குறைக்கப்பட்டு, வக்கிரமாக நிறுத்தப்படும் உலகம் தான், இன்றைய உலகமயமாதல்.
இப்படி சமுதாயத்தில் நடந்த மாற்றம் தான் என்ன? வெளிப்படையாக இலகுவாக புரிந்து கொள்ள முடியாத சூக்குமம், இங்கு ஆளும் சமூக விதியாகின்றது. தன்னை மறுத்தல், தனக்கு முந்தியதை தெரிந்து கொள்ள மறுத்தல், மனித வரலாற்றை எட்டி உதைத்தலே இதன் மூலதனமாகும். அனைத்தையும் நுகர்வுக் கலாச்சாரம் என்ற பண்பாட்டின் ஊடாக புணர்ந்து பார்த்தல் தான், இதன் ஒழுக்கவிதியாகின்றது.
பொதுவான மனித வாழ்வியல் எல்லைக்குள் கதாநாயகி என்பவளின், அதாவது பெண்ணின் தகுதி என்பது என்ன? அரைகுறையான சதைக் கவர்ச்சியூடாக, ஆபாசத்தை தானாக முன்வந்து வெளிப்படுத்தலாகும். இதைத்தான் உலகமயமாதல் தனது சமூக உணர்வாக்கியுள்ளது. சினிமா இதை பெண்ணுக்குரிய பண்பாடாக, கலாச்சாரமாக எடுத்துக் காட்டுகின்றது.
இந்த எல்லையில் இன்று பெண் உடுப்பு அணிவதும், சந்தை இதற்கான உடுப்பை உற்பத்தி செய்வதுமாக உள்ளது. ஆணாதிக்க சந்தை, பெண்ணின் உடல் சதையூடாக திமிரித் தான் வெளிப்படுகின்றது. சினிமா இதைத்தான் தனது சொந்த சுதந்திரமான கலை என்கின்றது. இன்றைய உலகில் சுதந்திரம் என்பது, மற்றவனிடம் இருந்து அபகரிக்கும் அற்பத்தனம் தானே. சினிமாவின் கலைச் சுதந்திரம் என்பது, பெண்ணின் சதையை திமிற வைப்பது தான்.
இந்த நிலையில் தான் கதாநாயகி சதையூடாக திமிற வைக்கப்படுகின்றாள். இது அவளின் சொந்த தேர்வுமல்ல, சுதந்திரமுமல்ல. மிகக் குறைந்த உடையில் சதை திமிர நடத்தும் பாலியல் ஆபாசத்தையும், கவர்ச்சியையும், அது வெளிப்படுத்தும் வக்கிரத்தையும், கேள்விகளின்றி ரசிக்கும் சமூக மனப்பாங்கு, வாழ்க்கையை அனுபவிப்பதாக பீற்றிக்கொண்டு அவை மேலோங்கி நிற்கின்றது. இதே மனிதன், (இங்கு ஆண், பெண்) தனது மனைவி சகோதரி குழந்தை விடையங்களில், இதற்கு இணங்க இந்தத் தன்மையை அனுசரிக்க மறுக்கின்றான். இங்கு குடும்பம் என்ற தனிச்சொத்துரிமை அலகு, இதை கோரவைக்கின்றது. இதை உலகமயமாதல் என்ற தனிச்சொத்துரிமை அலகு வீங்கி வெம்பும் எல்லையில் தான், குறுகிய குடும்ப தனித்சொத்துரிமையை மறுதலிக்கின்றது. இதனால் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலும் தீவிர மாற்றத்தை திணிக்கின்றது.
மொத்தத்தில் பெண் ஆணின் சொத்து என்ற ஆணாதிக்க தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டமும், பெண் நுகர்வுக்குரிய சந்தைப் பொருள் என்ற நுகர்வுக் கண்ணோட்டமும், இந்த அமைப்புக்குள்ளான முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாகின்றது. ஒரே நேரத்தில் வௌவேறு பாத்திரங்களில் வெளிப்படும் அற்ப குறுகிய வக்கிரமான உணர்வு தான், இவை.
இதன் சாரம் என்பது, இந்த எல்லைக்குள் பெண்ணை நோக்கும் சிந்தனை தளத்தில் உள்ள முரண்பாடு இதற்கு காரணமாகின்றது. குடும்ப உறுப்பினரையும் இதே எல்லைக்குள் நோக்க கோருகின்ற, ஒரு சுய முரண்பாடாக வெடிக்கின்றது. குடும்பத்திலான பாலியல் உறவு, இந்த எல்லைக்குள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகின்றது. மனைவி ஆபாசமாக பொது உலகில் இருப்பதை மறுப்பதும், சொந்த உறவில் பாலியல் உறவில் இருக்க கோரும் முரண்பாடும் ஏற்படுகின்றது. அத்துடன் அது முடிவதில்லை, குறித்த ஆணின் முன் ஆபாசமாக இருந்து விட்டால், பொது உலகு சார்ந்த ஆபாச கண்ணோட்டம் எதிர்நிலையில் பெண் மேலான சந்தேகமாகி விடுகின்றது.
மறுபக்கத்தில் சகோதரி, அல்லது குழந்தை சதை திமிரும் நுகர்வுப் பண்பாட்டில் வாழ முற்படும் போது, இந்தக் கலாச்சாரத்தை ரசிக்கும் ஆண் (பெண்ணும் கூட) அதை எந்தக் கண் கொண்டு எப்படிப் பார்ப்பார்கள்? இந்த எல்லையில் தான் தீவிர குடும்ப முரண்பாடும், குடும்பத்தினிடையே பாலியல் வன்முறையும் கூட ஏற்படுகின்றது. இன்று குடும்பத்தினுள் அதிகரித்துச் செல்லும் பாலியல் வன்முறைக்குரிய அடிப்படையம், பொதுவான வன்முறைக்குரிய கூறுகளும் கூட, அதிகளவில் இதனால் உருவாகின்றது.
ஒரு மனிதனின் உள்ளான இரட்டை போலி வாழ்க்கை முறை என்பது சாத்தியமற்றது. சந்தை வெளிப்படுத்தும் திமிரிய சதை நுகர்வை, அனுபவிப்பதற்கு இயற்கையாகவே தடை உள்ளது. பெண்ணின் சதையை பார்க்கலாம், ரசிக்கலாம், அதை தொட்டு உணர்ந்து பாலியலாக நுகர முடியாது. சந்தையில் எல்லோராலும் அனைத்தையும் நுகர முடியாத பொருட்களைப் போல். பெண்ணின் சதையும். சந்தையில் நுகர பணம் தேவை எப்படியோ, அப்படி பெண்ணின் தனித்துவமான இணக்கம் அவசியம். நுகர்வு என்பது சுதந்திரமானதல்ல, அவை நிபந்தனைக்கு உட்பட்டது.
இப்படி ஆபாசமாக நுகரக் கோரும் சந்தை, சதையையும் பொருளையும் நுகர்வதை மறுதலிக்கின்றது. பார்க்கும் விளம்பரத்தைப் போல், சதை ஆபாசத்தை கற்பனையில் தனிமையில் ரசிக்கலாமே ஒழிய, சமுதாயம் முழுக்க பாலியலாக தொட்டு உணர்ந்து நுகர முடியாது. நுகர்வதற்கு அதற்கே உரிய நிபந்தனைகள் உண்டு. மனிதன் நுகர முடியாததால் தான், அவை பலருக்கான விளம்பரமாகின்றது, காட்சிப் பொருளாகின்றது. சிலருக்கான அற்ப நுகர்வாகின்றது.
இதனால் பொருளை நுகர அராஜக வழிகள் அதிகரிக்கின்றது. இது எப்படி சமூகத்தில் அதிகரிக்கின்றதோ, அப்படியே தான் திமிரும் சதையை நுகர முனைகின்றது. நிலவுகின்ற வன்முறை கொண்ட ஆணாதிக்க குடும்பத்தினுள், இலகுவாகவே சதை சார்ந்த நுகர்வை அடையும் வெறி, வன்முறைக்குள்ளாக்கி அனுபவிக்க துணையாகின்றது.
இப்படி ஒருபுறம் வன்முறை சார்ந்த நுகர்வாகவும், மறுபக்கத்தில் தனது ரசனைக்கும் ரசிப்புக்கும் நேர் எதிரான மனப்பாங்கில் முரண்படுகின்ற போக்கும் காணப்படுகின்றது. இதை ஆண் மட்டுமல்ல, பெண்ணும் கூட கடைப்பிடிக்கின்ற முரண்நிலைதான், கலாச்சாரத்தின் முரண்பாடாகின்றது. இப்படி இரட்டை உலகில் வாழ்கின்ற சமூக எதார்த்தம், இங்கு இயல்பாக அதை பிரித்தறிய முடியாத சூழலில் இருந்து பிரதிபலிக்கின்றது.
இந்த சதை சார்ந்த அற்ப உணர்வை புரிந்துகொள்ள, பொருள் உலகு பற்றி நுகர்வுப் பார்வையே போதுமானது. பொருளை நுகர்வது எப்படியோ, அப்படித் தான் சதையை நுகர்வதும். இங்கு நுகர்வுக் கண்ணோட்டம் பொதுவானது.
சந்தை நுகர்வைத் தூண்டித்தள்ளுகின்றது. வாழ்க்கைக்கும், தேவைக்கும் பொருள் என்பதை சந்தை மறுத்து, பொருள் நுகர்வுக்கு என்ற உணர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த நுகர்ச்சிக்கு ஏற்ப, பொருளை அடிக்கடி மாற்றுகின்றது. மனிதனின் நுகர்வு உணர்ச்சியோ தொழில் நுட்பத்துக்கு, கவர்ச்சிக்கு, போலியான நடிப்புக்கு, அற்ப அழகுணர்ச்சிக்கு ஏற்ப, பொருளை அடிக்கடி மாற்றக் கோருகின்றது. இயல்பின் மிதமிஞ்சி அற்பமாக நுகரக் கோருகின்றது. இப்படி நுகரும் கண்ணோட்டம், ஆண் பெண் உணர்வாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நுகர்வுக்கண்ணோட்டம் தனது கணவனை அல்லது தனது மனைவியுடன் பாலியல் என்பதுடன் இயல்பாக முரண்படுகின்றது. மாறாக பல ஆண்களுடன் அல்லது பல பெண்ணுடன் சதை நுகர்வை, நுகர்வுசார் உணர்ச்சி கோருகின்றது. பொருள் உலகு சார்ந்த நுகர்ச்சி சார் உணர்ச்சி தான் இதிலும் உள்ளது. இந்த உலகமயமாதலில் ஆண் பெண் கொண்டுள்ள சமுதாய பார்வையும், குடும்ப ஒழுக்கப் பார்வை இயல்பாகவே போலியாகிவிடுகின்றது. சமுதாயத்தின் முன் முரண்பாட்டுடன் அவர்கள் உள்ளும் புறமுமாக நடிக்க தொடங்கிவிடுகின்றனர். ஆண் பெண் இயல்புணர்ச்சியைக் கூட, கூட்டு மனப் பான்மையைக் கூட நுகர்வு கண்ணோட்டம் தகர்த்து விடுகின்றது. இதனால் குடும்பத்தின் சிக்கல்கள், முரன்பாடுகள் ஏன் எதற்கு என்ற உருத்தெரியாத வகையில் உருவாகின்றது.
இதற்கு பின்னால் ஒளிந்திருப்பது சந்தை என்ற கவர்ச்சி உலகமும், அதை மறுக்கும் உழைப்பு என்ற உலகமும். மிக நுட்பமான உலகளாவிய இந்த முரண்பாடு தான், சமுகத்தினுள்ளான கலாச்சார முரண்பாட்டிற்கான சமூக சாரமாகும். உண்மையில் இதை வெளிப்படையாக உணராத செயல்பாடுகள் தான், அன்றாட வாழ்வியல் கலாச்சார முரண்பாடுகள்.
மக்கள் கலாச்சாரத்துக்கு (சினிமா) வழிகாட்டும் ஒரு ஊடகமா?
பொதுப்புத்தி இப்படித்தான் கருதுகின்றது. சினிமாவின் பின்னால், நாடகத்தின் பின்னால் மயங்கி, அதன் உறுப்புகளாகவும் மாடல்களாகவும் வாழ்க்கையை அதற்கூடாக அணுகி வாழ முனைகின்றனர்.
இந்தச் சினிமா என்பது சந்தைக் கலாச்சாரத்தின் விளம்பர ஊடகம் தான். சந்தைக்கு பாய்விரித்து தொழில் நடாத்தும் விபச்சாரத் தரகுத் தொழில் தான், இந்தக் கலை. பாலியல் விபச்சாரத்தை தொழிலாகவே நடத்தும் அதே கலை நேர்த்தி, இந்தச் சினிமா என்ற கலைக்கும் உண்டு.
இந்தச் சினிமா பற்றிய விவாதம் மிகப்பெரியது. நாம் குறிப்பாக மட்டும் ஆராய்வோம். பிரதேசத்துக்கு பிரதேசமும், சூழலுக்கும் ஏற்ப சினிமா பற்றிய மதிப்பீடுகள் மாறுபடுகின்றது. மேற்கு சினிமா கீழைத்தேய நாடுகளின் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், கருத்துரைப்பதும் உண்டு. இதே போல் தான் கீழைத்தேய சினிமா பார்க்கப்படுகின்றது.
சினிமா உள்ளடக்கமும், அதன் ஆன்மாவும் எப்படி எந்த வழியில், கலைத்துவம் என்ற பெயரில் விபச்சாரமாகவே இருக்கின்றது என்பதை நாம் மேலே பார்த்தோம். கலை பற்றி சமூகத்தின் விபச்சார நிலை தான், அதையே சமூக ரசனையாக்குகின்றது. மறுபக்கத்தில் சமூகத்தை வழிநடத்த முடியாத நிலைக்குள், சமூகம் தாழ்ந்து சீரழிந்துவிடுகின்றது. மேலிருந்து திணிக்கப்படும் உலகமயமாதல் நிகழ்ச்சிகளை, கீழ் இருந்து எதிர்கொள்ள முடியாது சமூகம் திணறுகின்றது.
சமூகம் தான் கொண்டிருந்த கடந்த கால அறிவு, நம்பிக்கைகள், வழிகாட்டல்கள் எதுவும் இதன் முன்னால் செயலற்றதாக்கப்படுகின்றது அல்லது இழிவாக்கப்படுகின்றது. சமூகம் மீதான தனது சுய நம்பிக்கையைக் கூட, சமூகம் தன்னளவில் இழந்து விடுகின்றது. தனது சொந்த வழிகாட்டல் மீதே நம்பிக்கையை இழக்கின்றது. மேலிருந்து இடியாக சமூகம் மீது இறங்கும் சமூகச் சிதைவை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற, சமூகத்தின் கீழ் இருந்து அதை ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டும். மேலிருந்து சமூகத்துக்குள் வருவது வெளிப்படையானது. குவிந்த பணமும் அது வக்கரிக்கும் அதன் பண்பாடும் தான், அதாவது அதன் சொந்த வக்கிரம் தான் மேலிருந்து கீழ் வருகின்றது. கீழிருப்பதோ வறுமையும் மனித அவலமும், கையாலாகாத்தனமுமே.
இங்கு வெளிப்படுவது நேரெதிரான இரண்டு கலாச்சாரங்கள். மேலே பணத் திமிர் கலாச்சாரமாக, கீழ் இருப்பதுபோ தாழ்வு மனப்பான்மையும், அடிமை மனப்பாங்கும், கையாலாகாத்தனமுமாகும். இதற்கு ஏற்ப மேலுள்ளதை உள்வாங்குவது அல்லது ஏதோ ஒரு வகையில் திருத்திப்படுத்தும் சுய கோட்பாட்டை கூறியபடி, மேல் இருந்து வரும் கலாச்சாரத்தில் சீரழிவதுமாகும். உண்மையில் சுய திருப்தி காணும் கோட்பாடுகளும், சமூகத்தின் மேல் நஞ்சிடுவதுமாகும்.
இதை எதிர்த்து இதை எதிர்கொள்ளல் என்பது, இருக்கின்ற சமூகத்தின் இன்றைய பொது அறிவால் முடியாது என்பதே உண்மை. மாறாக சமூகத்தில் இருந்து சமூகத்தை துருவிக் கற்றல், அதை மீளக் கற்றுக் கொடுத்தல் என்ற கடந்தகால சமூக வாழ்வியல் வழியை கண்டறிதல் அவசியம்.
தொலைக்காட்சிகள், சினிமாவின் வருகைக்கு முந்தைய காலத்தில் கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற அடிப்படையில் தான் சமூகங்கள் இயங்கின. ஆனால் இன்று பணம் உள்ளவன் மேலிருந்து திணிக்கும் தொலைக் காட்சியிடமும், சினிமாவிடமும் மனித விரோத சீரழிவை கற்றுக் கொடுத்தல் என்ற பணியை தாரை வார்ப்பதை, நாம் எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் அதைத்தான் நாம் வெட்கமின்றி செய்கின்றோம். வழிகாட்டும் சமூகப் பாத்திரத்தை இழந்து, வெறும் நுகர்வு பண்பாட்டுக்குள் மனித உறவுகளை சிதைக்கின்றோம். சமூகம் கொண்டுள்ள மனித உறவுகள், பொருளைச் சார்ந்த ஒன்றாகவே மாறிவிட்டது. பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அன்பளிப்பு செய்வது, அதை நேசிப்பது என்று, அதைச் சுற்றியே மனித உறவுடனான உலகம் இயங்குகின்றது. இப்படி இழிவான மலட்டு மனிதப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் உருவாகிவிட்டன. இதைத்தான் சமூகத்தின் மனித செயல்பாடாக மாற்றிவிட்டு, ஒரு பொருளுலகத்தின் அடிமைகளாக நாம் வாழ்கின்றோம். பொருளைக் கொடுத்தல், வாங்குதலுக்குள் மனித உறவுகளை தீர்மானிக்கின்ற மனித அவலம். மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சி, ரசிப்பு, ஈர்ப்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம், அழுகை, உரையாடல், நடைமுறை முதல் காதல் வரை, பொருள் சார்ந்த நுகர்வின் எல்லைக்குள் மலினப்பட்டு, அதற்குள் சடங்குத் தன்மையில் அசட்டுத்தனமாக உயிர்வாழ்கின்றது.
பொருள் சார்ந்த நுகர்வுக் கலாச்சாரத்தை, பண்பாட்டை மறுத்து வாழமுற்படுதல், அந்த நடைமுறையை பின்பற்ற மறுப்பதை எல்லாம், இழிவான செயலாக எண்ணுகின்ற, கற்பிக்கின்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது. குடும்பங்களில் இந்த உறவின் எல்லைக்குள், பிளவுகள் கற்பிக்கப்படுகின்றது. இப்படி பொருள் சார்ந்த உலகை நடைமுறையில் பின்பற்ற மறுப்பதை விநோதமாக நோக்குகின்ற அற்பத்தனங்கள், சமூக அரங்கில் பல்லிளித்து மிரட்டுகின்றது. இந்த பொருள் சார்ந்த உலகம் உருவாக்குவது, கவர்ச்சியும் ஆபாசமும் தான்.
மனித உறவுகளைச் சுற்றி இந்த நுகர்வு நிகழ்ச்சி நிரலை இனம் காண்பது என்பது கடினமானது. சமூக உண்மைகளையும் விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக கற்பதும், நடைமுறை வாழ்விலான போராட்டத்தில் அதை தெரிந்து கொள்வதன் மூலமுமே இதை எதிர்கொள்ள முடியும். பகட்டான, ஆடம்பரமான, வீம்பான, எடுப்பான திமிர்தனங்களால், எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளவே முடியாது. சமூகத்தின் பொதுப் புத்தி மட்டம் இதற்குள் தான், தன்னை விளம்பரப்படுத்தும் அற்பத்தனத்தில் உளறுகின்ற துயரம் நிகழ்கின்றது.
பொதுப்புத்தி மட்டம் நாணம் கட்டிய மாடுகள் போன்று பழக்கப்படுத்தப்படுகின்றது. புதிய தலைமுறைகளை கருவிலேயே இருந்து, இதற்குள் உற்பத்தி செய்கின்றனர். கருவிலேயே புகுத்தப்படுகின்ற நுகர்ச்சி வெறி சார்ந்த கவர்ச்சியும் ஆபாசமும் திமிராகவே வெளிப்படுகின்றது. வெளிப்படுத்தும் இந்த நுகர்வு வெறி சார்ந்த திமிருக்கு முன்னால், உழைக்கும் சமூகம் கூனிக்குறுகி விடுகின்றது. பணக்காரனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் உழைக்கும் வர்க்கம் அது போல், நுகர்வு வெறிக்கு முன்னாலும் உழைக்கும் மக்கள் கூனிக்குறுகின்றனர். இதுவே சொந்த குடும்பங்களில், பழைய புதிய தலைமுறைக்குள்ளும் நடக்கின்றது. உலகமயமாதலின் அற்பத்தனத்தை முன்னெடுக்கும் தர்க்கம் மற்றும் நடைமுறை வாதத்தின் முன்னால், அதை மறுக்கும் உழைக்கும் வர்க்கம் கைகட்டி நிற்கின்ற மனித அவலம். இதற்குள் சீரழிந்து விடுவதும், சினிமாவூடாக தொலைக்காட்சி ஊடாக அதை கற்பனையில் நுகர்ந்து வாழ முனைவதும், இதை நியாயப்படுத்துகின்ற எல்லைக்குள் அங்கீகரித்து விடுவதும் நிகழ்கின்றது. தமக்கு தாமே, தமது மனத்திரையில் இந்த மாயையை உற்பத்தி செய்கின்றனர்.
இதன் எதிர்நிலை தம்மைத்தாமே திருத்தி செய்கின்ற கோட்பாட்டையும், இதே உலகமயமாதலில் கண்டுபிடிக்கின்றது. சினிமாவை கலாச்சாரத்தின் ஊடகமாகவும், மொழியின் ஊடகமாகவும், காணவும் சிந்திக்கவும் தொடங்கி, அதுவாக அது இருப்பதாக, நம்பவும் காட்டவும் தொடங்குகின்றது. சொந்த சமூகத்தில் இருந்து அன்னியமாகின்ற போது ஏற்படும் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளின் அதிர்வு, அதை சினிமா ஊடான கலாச்சாரமாக மொழியாக காண்கின்ற அவலமும், அதை விளக்குகின்ற தர்க்க வாதமும் உருவாகின்றது.
சமூகத்தின் போலியான மனப்பாங்கு சார்ந்த பிரமை சார்ந்த சமூக அறியாமையே, இதன் மூலதனமாகின்றது. ஆங்கிலப் படம் பார்த்தால் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற சமூக மனப்பிரமையும் அதை நோக்கிய அறியாமையும் தான், தமிழ் படத்தைப் பார்த்தால் தமிழைக் கற்க முடியும் என்று நம்புகின்றது. இதுபோல் தான் கலாச்சாரத்தையும் பற்றிய, மனப்பிரமையும் உருவாகின்றது. சமூகம் என்ற தொப்பிள் கொடியில் இருந்து சமூக உறுப்புகள் அன்னியமாகின்ற போது, முரண்பட்ட இரண்டு கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று இப்படி மோதுகின்றது.
இந்தத் தளத்தில் பலமான இழிவான நுகர்வுக் கலாச்சாரம் ஆதிக்கம் வகிக்கின்ற நிலையில், பலமற்ற கலாச்சாரம் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை இழக்கும் போது, சாக்கடைக்குள் வடிகாலை கண்டுபிடிப்பதில் தான், தன்னைத்தானே திருப்தி செய்து கொள்கின்றது. இந்த சாக்கடையான சினிமாக் கலாச்சாரத்தையும், அது பேசும் மொழியைப் பற்றியும் சுய திருப்தி கொள்கின்றது. உண்மையில் இந்த விடையத்தைப் சமூக முழுமையில் புரிந்து கொள்ளாமல், அதற்குள் தாம் ஒரு தீர்வைக் கண்டுள்ளதாக மனப்பிரமை கொள்கின்றனது.
இது பலதளத்தில் பலவிதமாக இருந்த போதும், மேற்கத்தைய கலாச்சாரத்தை இழிவானதாக குறுக்கிப் பார்க்கின்ற, இந்தியக் கலாச்சார சுயதிருப்தி வெளிப்படுகின்றது. இந்தப் பொதுப்புத்தியில் இந்தியக் கலாச்சாரத்தை அணுகுகின்றது. இந்தியக் கலாச்சாரம் உயர்ந்ததாகவும், மேற்கத்தைய கலாச்சாரம் தாழ்ந்ததாகவும் கற்பிக்கின்ற பொதுப்புத்தி மட்டம், தனது அறிவு சூனியத்துக்கு ஏற்ப அதற்கு விளக்கம் கொடுத்து அதை அணுகுகின்றது. குறிப்பாக பெண்களின் ஓழுக்கவியல், நடையுடை பாவனைகள், முதல் அவளின் திருமணங்கள் அனைத்தையும் இதற்குள் ஓப்பிட்டு காண்பதே, இந்த இந்தியக் கலாச்சாரத்தின் பொது எல்லையாகும். இது மறுக்கப்படும் போது, இவை அத்துமீறப்படும் போது, நிலப்பிரபுத்துவ சமூக உறவு சார்ந்து பெண்ணின் எதிர்கால பாலியல் பற்றிய அச்சம் ஏற்படும் போது எல்லாம், சினிமா கலாச்சாரம் பற்றியும், அது பேசும் மொழி பற்றிய பிரமைகள், எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்படுகின்றது.
மேற்கத்தைய கலாச்சாரம், கீழைத்தேய கலாச்சாரம் என்ற பிளவுக்கு இடையிலான பொது அடிப்படை என்பது, பொருளாதார உள்ளடகத்தில் இருந்தும் சீரழிந்துவிட்டது. முன்பு முதலாளித்துவக் கலாச்சாரம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் என்று ஒரு பொதுக்கோடு பிரித்த போதும், அவை படிப்படியாக ஒன்றுக்குள் ஓன்றாகவே சீரழிந்தது. நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் கொண்டிருந்த இணக்கமானதும், ஒன்றையொன்று சார்ந்த தமக்குள் புனிதமான விபச்சாரத்தை செய்து கொண்டது. இந்த ஏகாதிபத்திய கலாச்சாரம் இன்று, முழுமையான உலகமயமாதல் என்ற நுகர்வுக் கலாச்சாரமாகிவிட்டது. இது வாழ்வியல் கூறுகளில் ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை, அதன் விளைவையும் சமூகத்தால் உட்கிரகிக்க முடிவதில்லை. அதனால் அது அதனிடத்தில் தன்னை அறியாமல் விலகிய முரண்பாட்டுடன் அம்மணமாகவே சரணடைகின்றது.
1. உலகமயமாதல் ஏற்படுத்தும் சமூக விலகல். தனிமனித வாதம், நுகர்வு வாதத்தின் மையப்புள்ளியாக ஒன்றிணைத்து, சுய அனுபவிப்பு பற்றிய பிரமையில் சமுகத்தை எதிராக நிறுத்துகின்றது. இது கலாச்சாரம் பற்றிய எதிர்நிலை முரண்பாடுகளை உருவாக்குகின்றது.
2. சமூக அமைப்பில் நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் சீரழிவு. உலகமயமாதலில் நுகரக் கூடியவனுக்கும், நுகர முடியாதவனுக்கும் இடையிலான இரட்டைக் கலாச்சாரம். இதற்கு இடையில் அங்குமிங்குமாக ஓடிப்பிடிக்கும் வக்கிரம். இது தனிமையில் வக்கிரமடையும் போது, வன்முறை கொண்ட அராஜக கலாச்சாரத்தை கொண்டு, சமூக விரோத கலாச்சாரத்தை கட்டமைக்கின்றது.
3. உலகமயமாதலால் ஏற்படும் சமூக கொந்தளிப்புகளால் ஏற்படும் பாரிய புலம்பெயர்வுகள், கலாச்சார ஏற்றுமதிகளும், கலாச்சாரத்தில் ஒரு சமூக அதிர்வை உருவாக்குகின்றது. குறிப்பாக இரட்டைக் கலாச்சாரம், இரட்டை மொழி சூழல், இதனால் பெற்றோருக்கும் குழந்தைக்குமான கலாச்சார இடைவெளிகள் பாரிய அளவில் அதிகரிக்கின்றது.
உலகமயமாதல் கலாச்சாரத்தில் முழுமையாக வாழத் தொடங்கும் புதிய தலைமுறைக்கும், அதற்கு முந்தைய தலைமுறைக்கும் இடையில் அடிப்படையான முரண்பாடாக இருப்பது, சமூகத்தன்மையை மறுத்தலாகும். உலகமயமாதலுக்குள் பிறந்த புதிய தலைமுறை, மனிதன் என்ற சமூக கலாச்சாரமற்ற தனிமனித நுகர்வு கலாச்சார நிலையில் வாழத் தூண்டுகின்றது. முந்தைய தலைமுறை மனித கலாச்சாரத்தில் சேர்ந்து வாழ்தல் என்ற முரண்பாடு, சரியாக உணரப்படாத ஒன்றாக உள்ளது.
புலம்பெயர்வு முதல் உலகமயமாதல் தரிப்பிடங்கள் எங்கும், இந்தக் கலாச்சார முரண்பாடுகள் விசுவரூபம் எடுக்கின்றது. இடையில் நிற்கும் மத்தியதர வர்க்கத்திடையே பாரிய ஒரு சமூக நெருக்கடியை இது உருவாக்குகின்றது. இளம் பருவ சமூக உறுப்புகள் மீதான சமூகக் கட்டுப்பாட்டை இழக்கின்ற ஒரு முரண்பாடாக இது மாறுகின்றது. இதுவே தலைமுறைக்கு இடையிலான முரண்பாடாகவும் உருவாகின்றது. அவசரம் அவசரமாக தமக்குத் தெரிந்த குறுக்கு வழியை நாடுகின்றனர். இதன் ஒரு அங்கமாக சினிமா ஊடாக கலாச்சாரம், சினிமா ஊடாக மொழி என்று, குறுக்குவழியில சமூக உறவுக்கு பாலம் அமைக்க முனைகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால், குழந்தைகளைப் பராமரிக்க தொலைக்காட்சியை பயன்படுத்தும் அதே தவறான உத்திதான். இங்கும் பருவ வயதினருக்கும் உரிய பெற்றோரின் பிரச்சனைகளுக்கும், சினிமாவை தீர்வாக காண்பது சமூக அறியாமையாகும்.
இதையும் மத்தியதர பெற்றோர்கள் என்ற சமூகம் கண்டுபிடித்து வழிகாட்டவில்லை. மாறாக உலகமயமாதல் சந்தை இளைய தலைமுறையை அதற்குள் உள்ளிழுக்க, பெற்றோர் அதற்கு கொள்கை ரீதியில் சுயவிளக்கம் வழங்கி ஊக்குவிக்கின்றனர். பெற்றோர் இதற்கு கலாச்சாரம் மொழி என்று சுய விளக்கம் வழங்க, குழந்தை விரும்பும் ஆபாசத்தில் கவர்ச்சியிலும் அதற்குள் மூழ்கி விடுகின்றனர். இந்த ஒருமைப்பாடு மூலம் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றிணைந்த சமூகமாக இருப்பதாக நம்புகின்றனர். உலகமயமாதல் என்ற நுகர்ச்சிக் கலாச்சாரத்தில், பெற்றோர் சுயமாக குழந்தைகளுக்கு (சமூகத்துக்கு) வழிகாட்டியாக இருக்க முடிவதில்லை என்பதே உண்மை. சுயமாக சிந்திக்கும் பெற்றோர் முன் உள்ள கேள்வி மிக சிக்கலானதே.
1. பருவமடைந்த ஆண்கள் பெண்கள் (சிறுவயதில் அக்கறைப்படாத) சினிமாவை ஏன் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்?
2. சினிமா பார்ப்பதை தமிழ்க் கலாச்சாரம் என்ற எல்லைக்குள் பெற்றோர் பார்க்க முனையும் போக்கும், பிள்ளையின் கண்ணோட்டத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ன?
சினிமா விரும்பிப் பார்ப்பதை, குழந்தையின் சீரழிவாகப் பெற்றோரால் பார்க்கப்படுவதில்லை. மாறாக நல்ல அம்சமாக பெற்றோரால் பார்க்கப்படுகின்றது. இந்த வகையில், இது ஏதோ ஒருவகையில் ஊக்குவிக்கப்படுகின்றது.
பொத்தாம் பொதுவிலும், இயல்பான சமூக ஓட்டத்திலும், எதையும் சுயவிமர்சனம் விமர்சனத்துக்குள்ளாக்காத எமது சமூக மனப்பான்மையின் மொத்த விளைவு இது. வெறும் மந்தைகளாக, மந்தை மனப்பாங்கில் வாழமுனையும் அடிமை மனப்பாங்காகும். இதை பாதுகாக்க முனையும் குட்டிபூர்சுவா மனப்பாங்கு. குழந்தைக்கு பின்னால் ஓடி, வால் பிடித்துச் செல்லும் சமூக அறியாமையாகின்றது. குழந்தைக்கு வழிகாட்டிச் செல்லவேண்டிய பெற்றோர்கள், அதை செய்ய முடியாது சிதைகின்றனர். உலகமயமாதல் விதைக்கும் நஞ்சுகளை நுகர்வுச் சந்தையில் இருந்து வேகமாக உள்வாங்கும் குழந்தையும், இந்த குழந்தைக்கு பின்னால் ஒடுகின்ற பெற்றோரின் பரிதாபகரமான நிலைமையையும் உலகமயமாதல் உருவாக்குகின்றது. உண்மையில் பெற்றோரின் பின்தங்கிய அறிவுசார் வளர்ச்சியின்மையை, உலகமயமாதல உருவாக்குகின்றது. சமூகம் சார்ந்த கூட்டு செயல் சார்ந்த இயலாமையும், குழந்தையின் நிலைக்கு தத்துவ விளக்கம் காண முயலுகின்ற சுயபெருமை வாதங்களில் மூழ்குகின்றது. இந்த வகையில் கலாச்சார சினிமா பற்றிய பெருமை, சினிமா மொழி பற்றிய பிரமையில், குழந்தையின் நடத்தையை, அதற்கூடாகவே தம்மை குழந்தையுடன் இணைக்க முனைகின்றனர். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான இணைப்பை, சினிமாவாக கருதுகின்ற எளிமையான இலகுவான எடுகோளாகின்றது.
இந்த தமிழ் சினிமா எதை, எப்படி, எந்த வழியில் சொல்ல முனைகின்றது. இதன் மொழி என்ன? இதன் கலாச்சாரம் என்ன? தமிழ் சினிமா மேற்கு சினிமாவில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இப்படி பல கேள்விகளை சுய அறிவுள்ள எவரும் சுயமாக எழுப்பு முடியும். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தில் அப்படி எழுப்பப்படுவது கிடையாது. மாறாக இதன் பின் வால்பிடித்து ஒடும் குறுகிய ஓட்டமும், இதற்கு சுயவிளக்கம் கண்டுபிடிக்கும் பொது அறிவுமாக, அரைத்த மாவையே அரைக்கின்ற செக்குமாடுகள் நிலையில் மனித குலம் அடிமைப்படுத்தப்படுகின்றது.
தமிழ் சினிமா தமிழ் கலாச்சாரத்தின் ஊடகமா? தமிழ் மொழியின் ஊடகமா? அப்படி நம்புவது, நம்ப வைப்பது அபத்தமாகும். தமிழ் சினிமாவின் பின்னால் உள்ள கட்டமைப்புகள் என்ன? அதன் சாரமே தனிமனித நுகர்வு வெறியும், தனிமனித வன்முறையும், பாலியல் நுகர்ச்சி வக்கிரமும் தான். இவை அனைத்தும், இயற்கையின் பாலியல் சார்ந்த தூண்டுதல் உருவாக்கும் காதலை, கவர்ச்சி கொண்டு ஆபாசமாக்கி புகுத்தப்படுகின்றது. இந்த சினிமாக் கலை, பாலியல் கவர்ச்சியை ஆபாசத்தை தனிமனித நுகர்வாகத் தூண்டும் ஒரு ஊடகவியல். இதுதான் தமிழ் சினிமாவின் ஆன்மா. இதுவின்றி அது உயிர் வாழமுடியாத ஆபாசத்தில் இது மூழ்கி மிதக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் உள்ளும் இருக்கின்ற பாலியல் உணர்வைத் தூண்டி, அதை தரம்கெட்ட வகையில் வக்கிரப்படுத்தி வியாபாரம் செய்யும் ஊடகம் தான் சினிமா என்ற வியாபாரக் கலை. இதன் கலாச்சாரம், மொழி என அனைத்தும் இந்த வியாபாரம் என்ற ஆபாசத்துக்கு உட்பட்டதே.
கிட்லர் மக்களின் போராட்டம் மற்றும் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவது பற்றி கூறிய போது 'மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும், சர்க்கஸ் மட்டுமே" என்றான். இதற்கு மேல் யாரையும் சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஆள்பவர்களும், அடக்குமுறையை மக்கள் மேல் ஏவுபவர்களும், விதிவிலக்கின்றி இந்த அடிப்படையில் தான் மக்களை மந்தைகளாக வைத்திருகின்றனர். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டம் இதற்குள் தான் இயங்குகின்றது. தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கா? இல்லை. மக்களின் உணர்வுகளை அற்ப இழி உணர்வுகளாக மாற்றுவது, இதன் சாரம். இங்கு எழுவது இழிவான அற்பமான பாலியல் ஆபாச உணர்வு என்பதை, சமூகம் காண மறுக்கின்ற அறியாமை என்னும் அவலமும், இதன் கழிசடைத்தனமுமே சினிமாக் கலையாகின்றது.
நாடகங்கள் சமூகத்துக்கு கூறுவது எதை?
தனிமனித நுகர்ச்சி வெறிசார்ந்த கழிசடைத்தனம் எப்படியோ, அப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள். அது சமூக உறுப்பை ஒன்றுக்கு ஒன்று எதிரியாக்குகின்றது. குடும்பம் என்ற சமூக அலகை தகர்க்கின்ற அற்ப உணர்வையே, நாடகம் தன்னூடாக விதைக்கின்றது. குடும்பத்தில் நிலவும் தியாகம், விட்டுக் கொடுப்பு, சேர்ந்து வாழ்தல் போன்ற சமூக உணர்வை தகர்த்து, தனிமனித நலன் சார்ந்த நுகர்வை நாடகங்கள் சமூகத்தில் திணிக்கின்றது.
இதனால் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்குகின்றது. இதன் ஒழுக்கம் என்பது, தனிமனித நுகர்வுக்கு உட்பட்ட நீதியாகின்றது. அது தனக்கு என்று ஒரு சமூக வரையறையைக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நுகர்வு எப்படி அராஜகத்தன்மை கொண்டதோ, அதன் போக்கில் தான் இதன் நீதியுள்ளது. இது நுகர்வு வெறிக்குள்ளான சொத்துரிமையில் தகவமைக்கப்படுகின்றது. அற்பத்திலும் அற்பத்தனம்.
இந்த நாடகங்கள் சமூகத்தில் (உதாரணமாக குழந்தைகளில்) இருந்து அன்னியமாகும் உறுப்புகளின் (பெற்றோரின்) கலாச்சாரத்தை வக்கிரப்படுத்துகின்றது. சமூகத்தை (குழந்தைகள்) ஆபாச உலகத்தில் தள்ளிவிடுகின்றது சினிமா. நாடகம் தனிமனிதன் சதா புலம்பும் உலகத்தில், மனிதனைத் (பெற்றோரை) தள்ளி விடுகின்றது. வாழ்க்கையை பறி கொடுத்துவிட்டதாக சதா நம்புகின்ற ஒரு மனப்பிரமையே, தனிமனித புலம்பலாகின்றது. முடிவின்றி சதா எதையோ திட்டித் தீர்க்கின்றது. எதிரிகளை தேடுவதே, குடும்பத்தின் அடிப்படைப் பண்பாகின்றது. அது குடும்பத்தின் உள்ளேயே, அதை இனம் காண்கின்றது.
இப்படி நாடகங்கள் முரண்பட்ட மோதலை குடும்பத்தில், தனிமனித வடிவில் திணிக்கின்றது. சினிமா முரண்பட்ட மோதலை சமூகத்தில் தனிமனிதர்களுக்குள் திணிக்கின்றது.
இந்த தொலைக்காட்சி நாடகங்கள் என்னும் அற்பத்தனமான அற்பபுத்தியுள்ள கலை மனிதனுக்கு கூறுவது என்ன? மனிதர்களுக்குள் இணங்கிச் செல்லும் நட்பு முரண்பாட்டை, பகை முரண்பாடாக மாற்று என்பதைத் தான். உலகமயமாதலின் சந்தைக்குரிய வகையில், ஒருவனை ஒருவன் எதிரியாக காண்கின்ற, தனது உயர்வுக்கு மற்றவனை தடையாக காண்கின்ற தனிமனித அற்பர்களை சமூகமாக்கவே நாடகங்கள் முனைகின்றது. தனிமனித வெறி பிடித்த நுகர்வாளர்களை உருவாக்குவது தான், இதன் மைய நோக்கம். இப்படி இதன் நோக்கில் இணங்கி வாழ்வதை சிதைக்க, முரண்பாடுகளை பெருப்பிப்பதற்கான அற்பத்தனமான விடையங்களை, அதை ஒட்டிய நுட்பத்தை தூண்டுவது தான் நாடகங்கள். இணங்கி வாழும் மனித உணர்ச்சியை செல்லரிக்க வைத்து, இணங்கி வாழ மறுக்கும் உணர்ச்சியை உருவாக்குவதே இதன் உத்தி. தனிமனித குதர்க்க வாதத்தை, சமூக வாதத்துக்கு எதிராக நிறுத்துவதே நாடகத்தின் ஒழுக்கவிதியாகும். மனிதர்கள் விட்டு கொடுத்துச்செல்லும் முரண்பாட்டை, பகை முரண்பாடாக கிண்டி எடுப்பதே நாடகமாகின்றது. கதை சுற்றிச் சுழன்று என்ன சொன்னாலும், நாடகத்தின் அரசியல் நோக்கம் இதுதான்.
தனிமனித உறவுகளை முடிந்த வரை ஒன்றுக்கொன்று எதிராக வக்கிரப்படுத்தி, எதிரியை குடும்பத்தில் தேடத் தூண்டி மோத விடுவதன் மூலம், இந்த சமூக அமைப்பு நுட்பமாக பாதுகாக்கப்படுகின்றது. எதிரி குடும்பத்தினுள், உறவினுள் உருவாக்கி, அதுவே ஒவ்வொரு உறுப்பினரினதும் தலையாய மண்டையை வெடிக்க வைக்கும் பிரச்சனையாக்கப்படுகின்றது. முரண்பட்ட குடும்ப அலகுகள் வன்முறைக்குள்ளும் அல்லது கண்டும் காணமல் இருக்கும் தனிமை வாதத்தில் மூழ்கடிக்கப்படுகின்றது. நாடகம் உணர்ச்சி சார்ந்த மோதல் வக்கிரத்தைத் தூண்டுகின்றது. இதுவே மனிதரைப் பிளக்கும் கலையாகின்றது. மறுபக்கம் எல்லையற்ற ஆபாசம் கலையாகின்து.
மனித விழுமியங்களையா கலை உற்பத்தி செய்கின்றது?
சினிமா சொல்லும் பாலியல் கவர்ச்சியும், ஆபாசமும், உடல்சார் வக்கிரத்தை முதன்மைப்படுத்தி தூண்டுவதன் மூலம், மனித உணர்வை அதற்குள் வக்கிரப்படுத்துகின்றது. தனிமனித வன்முறை மீதான நவீனத்துவம், வன்முறை மீதான சட்டம் என்று எல்லைக்குள் கதை சொல்கின்ற ஒரு சினிமா, மக்களின் வாழ்வியல் உணர்வை நலமடிக்கின்றது.
இந்த உண்மையை புறக்கணித்து, இந்தியக் கலாச்சாரம் அல்லது தமிழ் கலாச்சாரம் என்று சினிமாவை நம்புவது அறியாமையின் மொத்த விளைவாகும். எமது வாழ்வியல் சார்ந்த சமூக கூறுகளில், சினிமா எந்த இடத்திலும் பிரதிபலிப்பதில்லை. தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் என்ற சமூகக் கூறுகளை விட்டு விலகி, நுகர்வுச் சந்தைக்கான தனது சொந்தச் சந்தைக்குள் தான் ஆபாசத்தை சினிமாவாக உற்பத்தி செய்கின்றது. காட்சிகள், படிமங்கள் என அனைத்தும், உலகமயமாதலின் விறுவிறுப்பான சீரழிவை உள்வாங்கித் தான் பிரதிபலிக்கின்றது. உலகமயமாதலின் சந்தைக்கு ஏற்ற சதைக் கவர்ச்சி, நுகர்வுக்கு ஏற்ற அற்ப கிளர்ச்சியை உருவாக்குகின்றது.
கலை என்ற பெயரில் உலகமயமாதல் நுகர்வுப் பண்பாட்டை பரப்பும் சமூக விரோத புல்லுருவிகள், இதை மக்களின் இரசனை என்கின்றனர். மக்கள் கோருவதைத் தான் தாம் படைப்பதாகவும், இதனால் தான் மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர் என்கின்றனர். வேடிக்கையான வியாபாரிகளுக்கே உரிய கிழட்டு வாதம். இது எப்படி இருக்கின்றது என்றால், விபச்சாரம் செய்பவனின் ரசனைக்கும், ஆபாசத்துக்கும் ஏற்ற, பெண்ணைக் கொண்டு வருவதே தரகனின் கடமை என்ற தர்க்கத்துக்கு ஒத்தது.
இது உள்ளடகத்தில் கடவுள் தான் ஏழை பணக்காரனை உருவாக்கியதாக கூறுவதற்கு ஒத்தது. இல்லாத கடவுளை மனிதன் தனது அறியாமையால் கற்பித்தான் என்றால், அவனே ஏழை பணக்காரனை படைத்ததாக கூறுவது எப்படிப்பட்ட மோசடித்தனமோ அப்படிப்பட்டது. மனிதன் தான் கற்பித்த கடவுள் எப்படிப்பட்டவர் என்பது அவனுக்கே தெரியாத அறியாமை. உண்மையில் அவன் கற்பித்த கடவுள் ஏழையையோ பணக்காரனையோ உருவாக்கியதில்லை. ஆனால் அந்த கடவுள் தான் ஏழை பணக்காரனை உருவாக்கியதாக சொல்லி, கடவுளை தனக்கு பக்கபலமாக பணக்காரன் வைத்துக் கொள்ளவில்லையா! இந்த அசிங்கமான தனிமனித சொத்துரிமை சமூக அமைப்பு போல் தான், இந்த சினிமா ஆபாச கலை வியாபாரிகளின் தர்க்கங்களும் அமைகின்றது.
இப்படி இவர்கள் அள்ளிக் கொட்டும் வக்கிரத்தையே, பருவ வயதினர் திடீரென சினிமாவினூடு அதிகளவில் ரசிக்கத் தொடங்குகின்றார்கள். அதற்குள் மூழ்குகின்றார்கள். இந்த ரசனை தமிழ் பண்பாடு கலாச்சாரத்துக்கு புறம்பாகவே நிகழ்கின்றது என்பதே, இதில் உள்ள சூக்குமமாகும். எமது கலாச்சாரத்தை தேடியே, சினிமாவை நாடுவதாக நம்புவது பொய்மையாகும். உண்மையில் சினிமா மீதான அதிதமான நாட்டம், சினிமா வெளிப்படுத்தும் ஆபாசம் கவர்ச்சி மீதான பாலியல் உந்துதல் என்பதே, அதிர்ச்சிகரமான உண்மையாகும்.
அவர்களின் பருவ வயது என்பது, இயல்பாகவே பாலியல் நாட்டம் கொண்டது. இதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளவும், அதனடிப்படையில் வாழ்வை வழிகாட்ட வேண்டிய பெற்றோர் சினிமாவுக்குள் அதை வடியவிடுகின்றனர். பருவ வயதில் ஏற்படும் பாலியல் உந்துதல், சினிமாவின் வக்கிரமான அற்ப உணர்வுக்குள், அற்பத்தனமாக வாழவைக்கின்றது. பாலியல் பற்றிய பிறழ்ச்சி பெற்ற ஒரு உணர்வில், இயல்பான பாலியல் வாழ்க்கை முறையையே இழந்து விடுகின்ற, அற்பமான பாலியல் நடத்தைக்கே சினிமா வழிகாட்டுகின்றது. இந்தியக் கலாச்சாரத்தில் அதீதமான பாலியல் மனநோயாளிகளை உற்பத்தி செய்வதில், சினிமா வக்கிரப்படுத்தும் பாலியல் முக்கிய காரணம். சிறுவயதில் இருந்து வரும் சினிமா மீதான நாட்டத்தை விட, இடையில் வரும் தீவிர நாட்டம் தான், இளமையை சீரழிக்கும் அளவுக்கு மிகவும் ஆபத்தானது.
பருவ வயதில் பால் ரீதியான அதீதமான கவர்ச்சி, அதீதமான வக்கிரம், அதீதமான வன்முறை மீதான நாட்டம், இதையொட்டி அதிகரிக்கின்ற மனக்கிளர்ச்சி தான், இயல்பாக தமிழ் சினிமா மீதான தீவிர நாட்டத்தைத் தூண்டுகின்றது. மேற்கத்தைய சினிமாவில் இந்தளவுக்கு, பாலியல் கவர்ச்சியும் வன்முறையும் தூண்டுவதில்லை. மேற்கு சினிமாவில் நிர்வாணமான ஒரு படுக்கையறைக் காட்சி, பருவ வயது குழந்தைக்கு வக்கிரமான உணர்வை தூண்டுவது ஒப்பீட்டளவில் குறைவு. தமிழ் சினிமா தூண்டுதலுக்காக கையாளும் கவர்ச்சியும் ஆபாசமான வக்கிரமும், குழந்தையின் பாலியல் பற்றிய அறிவையே இழிவாக்கி மலடாக்குகின்றது.
இயற்கையான பாலியல் மனப்பாங்கை கடந்த வக்கிரமான பாலியல் தேர்வு, கல்வி முதல் முழு வாழ்க்கையையுமே சிதைக்கின்றது. இந்த ரசனைக்குள் அவர்கள் அடிமையாகிவிடும் போது, குழந்தைகள் அதீதமான வக்கிரமான காட்சிகளை காண்பதில் நாட்டம் மேலும் மேலும் அதிகரிக்கின்றது.
தமிழ் கலாச்சாரத்தை தேடுதல், எமது சமூகத்தை நோக்கிச் செல்லுதலே குழந்தையில் தேர்வாக இருந்தால், தமிழ் சினிமாவை அது நாடாது. மாறாக அது நோக்கிய ஒரு கல்வி முறையிலான தேடுதலாக இருக்கும். கலாச்சாரம் தொடர்பான நூல்களை தேடிப் படித்தல், புலம்பெயர் நாட்டில் பெற்றோரின் மொழியைக் கற்றுக்கொள்ளல், அதன் ஊடாக கற்றுக் கொள்வதாக இருக்கும். இதற்குள் பொதுவாக நடக்காமல், சினிமாவில் நாட்டம் என்பது ஒரு சமூக விலகலாகும். பருவ வயதின் தேவையை, அது ஏதோ ஒரு வகையில் அற்ப உணர்ச்சியில் பூர்த்திசெய்கின்றது.
சந்தைக் கலாச்சாரமும், உழைப்புக் கலாச்சாரமும்
இது எங்கும் நிலவுகின்றது. எதிலும் பிரதிபலிக்கின்றது. மனித முரண்கள், இதற்குள் மிகத் தீவிரமான பங்காற்றுகின்றது. சமூக ரீதியாக இதை எதிர்கொள்ளும் மனித அறிவும் ஆற்றலும் அருகும் போது, இதன் விளைவு மிகக் கடுமையானது. முரண்பாடுகள் அற்பத்தனமானதாக, மேலெழுந்தவாரியாக, சின்னசின்ன விடையங்களில் பிரதிபலிக்கின்றது. இதன் ஆழம் தெரியாத இந்த சமூக முரண்பாடு, மனிதனுக்குள்ளான பாரிய தனிமனித முரண்பாடாக மாறுகின்றது.
இதில் ஒன்றுதான் பெண் சார்ந்த கலாச்சார முரண்பாடுகள். இது தீவிரமான பிரதிபலிப்பை உருவாக்குகின்றது. நெருங்கிய சமூக உறவுக்குள், இது மையமான முரண்பாடாகின்றது. தீவிரமான பிளவுகளையும், எதிர்நிலைக் கண்ணோட்டத்தையும் உற்பத்தி செய்கின்றது. தலைமுறை கடந்த இடைவெளிக்கு அப்பால், இது ஆற்றும் பங்கு வெளிப்படையாக வெளிப்படுவதில்லை. உண்மையில் இதன் சமூகத்தன்மையை தெரிந்து கொள்ளாததன் விளைவு, தனி மனிதர்களின் சின்னத்தனங்கள் கிறுக்குத்தனமாக பிரதிபலிக்கின்றது. சமூகப் பொதுப் புத்திக்கு இவை தனிமனித குற்றங்களாகின்றது.
இந்த முரண்பாடுகள் அன்றாடம், பெண் சார்ந்து கூனிக் குறுகிப்போகின்றது. சில சமூகங்களில் இது, இதற்குள் மட்டும் ஆதிக்கம் வகிக்கின்றது. சமூகம் இப்படித் தான் உள்ளது. கலாச்சாரத்தை பெண்ணின் ஊடாக, சொந்த உறவுக்குள்ளாக சுருக்கிப் பார்க்கின்றது. பெண்ணின் பாலியல் நடத்தையில், இதை ஒன்று குவித்து பார்க்கின்ற மனப்பாங்கே, கலாச்சாரமாக புரியப்படுகின்றது.
தன்னைச்சுற்றி உள்ள பெண்ணுக்கு கலாச்சார வேலியை போடும் சமூகம், சமுதாய அளவில் இதன் மீறல்களை ரசிக்கின்ற மனப்பாங்கு, ஒரு முரண்நிலையாக காணப்படுகின்றது. குறிப்பாக பெண்ணின் உடை முதல் அந்த பெண்ணின் திருமணம் வரையிலான தீர்மானத்தை யார் எப்படி எடுப்பது என்ற எல்லைக்குள்ளாக, நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிரான மனப்பாங்கு சுருங்கி வெளிப்படுகின்றது. இது முற்போக்கான திசையில் அல்ல, படுபிற்போக்கான ஆணாதிக்க மனப்பாங்கில் வெளிப்படுகின்றது. இந்த எல்லைக்குள் தான் மொழி குறித்தும், கலாச்சாரம் குறித்ததுமான அக்கறை காட்டப்படுகின்றது.
இந்த அக்கறை தவறாகவே குறுகிய எல்லையில் எழுகின்றது. முதலில் உலகமயமாதல் உருவாக்கும் சந்தைக் கலாச்சாரம் பற்றிய தெளிவு இன்றி, எதையும் சரியாக காணமுடியாது. குறுகிய சிந்தனைகள், தனிப்பட்ட மனப்பிரமைகள், இந்த சந்தைக் கலாச்சாரத்தின் போக்கில் முன்வைக்கும் புலம்பலாகிவிடுகின்றது.
உலகமயமாதல் உற்பத்தி செய்யும் நுகர்வு சந்தைக்குரிய கலாச்சாரம், தனக்கு தடையானதையும், தேவையற்றதையும், தனது சொந்த இழிவின் ஊடாக அழிக்கின்றது. இங்கு உலகமயமாதலை தடுக்கின்ற, சமூக இருப்பு சார்ந்த கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை அழிப்பதை அடிப்படையாக கொண்டே, நுகர்வுச் சந்தையை நாளொரு பொழுதாக உலகமயமாதல் கைப்பற்றுகின்றது. பொருளை அற்ப நுகர்வு வெறிக்குள்ளாக்கி விற்பனை செய்ய, ஆபாசமாக கவர்ச்சியாக பெண்ணை வக்கிரப்படுத்தி சந்தை முன் நிறுத்துகின்றது. இதன் மூலம் ஆணாதிக்க சமூக அமைப்பில் நுகர்வை, பெண்ணூடாக சந்தை அணுகுகின்றது. பெண் பற்றிய பார்வையை, சந்தையின் நுகர்வுக்குரியதாக, தீவிரமாக தனக்கு இசைவாக புதிய பண்பாடு கலாச்சாரம் ஊடாக மாற்றுகின்றது. கவர்ச்சி, ஆபாசம், அது உருவாக்கும் பாலியல் வக்கிரம் பற்றிய சமூகத்தின் எதிர்மனப்பாங்கு, நுகருவதற்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் அனுமதிப்பதில்லை. இதற்கு பண்பாடு, கலாச்சாரம், அதை ஒட்டி வாழும் மொழி தடையாக இருக்குமெனின், அதையும் அழிக்கின்றது.
இந்த வகையில் மொழி முதல் சமூகங்களின் பண்பாடுகள் கலாச்சாரங்கள் என அனைத்தையும் உலகம் தழுவியதாக அழிக்கின்றது. உதாரணத்துக்கு உணவை எடுத்தால், உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே உணவை உண்ண வேண்டும் என்பதையே சந்தை கோருகின்றது. இதபோல் ஒரு குடிபானம், பொருட்களை விற்கும் ஒரு கடை என்று அனைத்தும், இந்த குறுகிய ஒன்றாகவே கோருகின்றது. இப்படி உருவாக்கப்படும் கலாச்சாரம், பண்பாடுகளை அடிப்படையாக கொண்டு தான் சந்தையும் அது உருவாக்கும் கலாச்சாரமும் இயங்குகின்றது. சிறு குழந்தையில் இருந்தே, இந்த நுகர்வு பண்பாடு என்னும் நஞ்சு, திட்டமிட்டு இடப்படுகின்றது. சமூகத்தை மந்தைக்குரிய ஒரு பொருள் சைக்கோக்களை, நுகர்வு உருவாக்குகின்றது. இதை நோக்கிய உலகத்தை, நுகர்வு சந்தை மாற்றிச் செல்லுகின்றது. இதற்கு எதிரான அனைத்தும் அழிக்கப்படுகின்றது.
நுகர்வு சந்தைக்கு தடையான பண்பாடு, கலாச்சாரம் முதல், அதன் வேராகவுள்ள மொழியையும் அழிக்கின்றது. இந்த சந்தைக் கலாச்சாரத்தில் மூழ்கியெழும் ஒரு சமூகம் அல்லது சமூகத்தின் தீர்மானகரமான சக்திகள், தத்தம் குறுகிய எல்லையில் மொழி கலாச்சாரம் குறித்து ஒப்புக்கு முண்டு கொடுக்கின்றனர். இதைப் பெண்ணின் எல்லையில் மட்டும் காண்பது தான், இதன் முரண்நிலையாகும். கலாச்சாரத்தின் முரண்பாடுகள் இதற்குள் இருப்பதாக காட்டி பாசாங்கு செய்வது அபத்தமாகின்றது. அதுவே வன்முறையாகின்றது.
மனிதத் தன்மைகள் ஒன்றுக்கொன்று எதிரானதா?
இப்படி சுற்றிச் சுற்றி கலாச்சாரம் என்ற பெயரால், மொழி என்ன பெயரால், நாம் பாதுகாக்க முனைவது எதை? உண்மையில் எமது மனிதத்தன்மையற்ற பண்பைத்தான். மனிதத் தன்மை என்பது என்ன? மனித தன்மையற்ற அனைத்தையும் எதிர்ப்பது தான், மனிதத் தன்மை. மனிதாபிமானம் என்பது, மனிதன்மையற்ற சமூகத்தின் இருப்பினால் உருவாகின்றது. இதை நாம் புரிந்து உள்வாங்குவது கிடையாது. மேலெழுந்தவாரியான, மனஉணர்வுகளாகவே, அவை எமக்குள் குறுகி குறுகிய உணர்வாக பிரதிபலிக்கின்றது.
இந்த வகையில் இன்று பெண்ணின் எல்லையில் காணப்படும் பண்பாட்டு, கலாச்சாரக் கூறு சார்ந்த சமூக முரண்பாடுகள், எமது மனிதத் தன்மையற்ற போக்கின் மொத்த விளைவாகும். இது இரண்டு தளத்தில் பிரதிபலிக்கின்றது.
1. ஒருபுறம் பெண் பற்றி நுகர்வு சந்தை உருவாக்கும் ஆபாசம் கவர்ச்சி சார்ந்த பண்பாடு கலாச்சாரம் ஊடாக உருவாகின்றது.
2. மறுபுறம் பெண்பற்றி குறுகிய எதிர்நிலை மனப்பாங்கு ஊடாக உருவாகின்றது.
இந்த விவகாரத்தை அடிப்படையில் புரிந்து கொள்வது மிகவும் சிக்கலுக்குரியது. இரண்டு கூறுகள் இதில் இருப்பதை தெரிந்து கொள்வதும், அதை மறுத்து சிந்திப்பதற்கும் எமக்கு விமர்சன மனப்பாங்கு இருக்கவேண்டும். மாறாக சரியானதை வைக்கும் சுய சமூக ஆற்றல் இருக்கவேண்டும். பொதுவாக மாறாவகைப்பட்ட கிளிப்பிள்ளைகளாக வாழுகின்ற சமூகப் போக்கில், ஆதிக்கம் வகிக்கும் நடைமுறையில் தொங்கியபடி இழுபடுவதே சமூகத்தின் பொதுபுத்தி மட்டமாக உள்ளது. இப்படி அங்குமிங்குமாக இடறியடித்தபடி வாழ்கின்ற வாழ்வை பெருமையாக கருதி, நியாயப்படுத்துகின்ற சமூக இயக்கத்தின் எடுபிடிகளாக இருப்பதில் பெருமைப்படும் மனித மனப்பாங்கே, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
நாம் என்றும் எமது மனப்பாங்கு சார்ந்த பிரமைகள் ஊடாக கற்பிக்கும் ஒரு முடிவுகளை வந்தடைந்த நிலையில், எதையும் தெளிந்து உள்வாங்குவதையும், விமர்சனம் செய்வதையும் மறுதலிக்கின்றது. நிலவுகின்ற சமூகத்தின் போலித்தனத்தை, திறந்த ஒரு வெளியில் போட்டு உடைப்பதை மறுக்கின்றது.
பெண்ணின் உடை பற்றி, இரண்டு தீவிரமான கலாச்சாரம் பண்பாடு சார்ந்த மனப்பாங்கில் சிக்கிக்கிடப்பதன் ஊடாக, இதன் மீதான பார்வைக் குறைபாடு சமூகக் குறைபாடாகின்றது. ஒருபுறம் கவர்ச்சி, ஆபாசம் என்ற வக்கிரப்படுத்தும் நுகர்வுப்பண்பாடு. மறுபுறம் அடக்க ஒடுக்கமான பெண் என்ற எல்லைக்குள், பெண்ணின் மீதான எதிர்நிலைப்பாடு. ஆணாதிக்க அமைப்பின் பெண் பற்றிய சமூக நோக்கின் எல்லைக்குள், இப்படி செயற்படுகின்றது. அறிவுபூர்வமாக இந்த விடையம் அணுகப்படுவதில்லை என்பதே, இதில் உள்ள முக்கியமான விடையமாகும். இங்கு மனிதப் பண்புகள் தீவிரமான மறுப்புக்குள்ளாகின்றது.
பெண்ணை உடல் கவர்ச்சி ஊடாக அணுகும் சமூக மனப்பாங்கு என்பது மனிதப்பண்பற்ற நுகர்வுச் சதைக் கலாச்சாரமாக உள்ளது. மறுபக்கத்தில் மனிதத் தன்மையற்ற வகையில், பெண்ணின் மீதான அடக்குமுறையூடாக, பெண் மீதான ஒழுக்கம் திணிக்கப்படுகின்றது. இது அறிவியல் பூர்வமான விவாதம் மட்டுமின்றி, விமர்சனம் கூட. ஆணாதிக்க சமூக அமைப்பு கொண்டுள்ள மனப்பாங்கில், ஆபாசமும் நேர் எதிர் மனப்பாங்கில் அடக்க ஒடுக்கமான பெண் என்ற சமூகப் பார்வைகள் ஆதிக்கம் வகிக்கின்றன. இந்த நோக்கில் இருந்து, இதை தீவிரமாக விமர்சனம் செய்து, சமூகத்தை சிந்திக்க தூண்டுவது மட்டும் தான் சரியான சிந்தனை முறையாகும்.
அறிவியல் பூர்வமாக ஆண் ஏன் உடல் தெரிய, ஆபாசமாக உடுப்பை அணிய மறுக்கின்றான். சமூகம் ஏன் அதை மாற்றத்துக்குள்ளாக்கவில்லை. ஆணாதிக்க அமைப்பு ஆண் சார்ந்து இதை அனுமதிக்கவில்லை. பெண் மீது இது தீவிரமாக மாற்றுகின்றது, திணிக்கின்றது. பெண் சுயமற்ற ஆணாதிக்க அமைப்பில், அதன் எடுபிடியாக காவியாக இருப்பதை ஆணாதிக்க அமைப்பு உறுதி செய்கின்றது. ஆணாதிக்க அமைப்பில், பெண் தீவிரமான மாறுகின்ற அமைப்பின் கலாச்சாரத்தின் ஊடகமாகின்றாள்.
இந்த போக்கில் இருந்து சமூகம் விடுபட்டேயாக வேண்டும். ஒரு முரண்நிலையாக, பெண்ணிணை அடக்கவொடுக்கமாக அடிமைப்படுத்தும் மூடிக்கட்டிய பெண்ணை கோரும் ஆணாதிக்க சமூகம், ஆணாதிக்க ஆபாச கலாச்சாரத்தின் ரசிகனாக இருப்பதையும், அது ஒரே நேர் கோட்டில் இருப்பதை பார்க்கின்றோம். எந்த எதிர்வினையும் அதை மாற்றுவதை கோருவதில்லை. ஒட்டுமொத்தமாக இந்த கலாச்சாரத்தின் சமூக கூறுகளை மாற்றப் போராட வேண்டும்.
இதேபோல் திருமணத்தை எடுத்தால், நுகர்வுச் சந்தை பெண்ணை விபச்சார நிலைக்கு தள்ளிவிட்டது. சமூகப் பொது தளத்தில் பாலியல் என்பது, வெறும் சதை நுகர்வாக, அதுவும் பாலியல் அனுபவிப்பாக மாற்றிவிட்டது. சமூகத்தின் கூட்டான சமூக மனப்பாங்கை, இது தீவிரமாக மறுக்கின்றது. மறுபக்கத்தில் பெண்ணை பாலியல் அடிமையாக மாற்றி, ஒரு ஆணின் சொத்தாக விபச்சாரியாக இருக்க கோருகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பாலியல், இப்படி இரண்டு தளத்தில் பந்தாடப்படுகின்து.
இதில் வேடிக்கை என்னவென்றால் பாலியல் கலாச்சாரம் என்பது நுகர்வதற்குரிய ஒன்றாக உலகமயமாதல் சந்தை மாறிவிட்டது. மறுபக்கத்தில் அது மொழி, இனம், நிறம், சாதி என்ற குறுகிய எல்லைக்குள் பெண் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றது. அதற்குள் பெண் திணிக்கப்படுகின்றாள். இப்படிக் கோருபவர்கள் உலகமயமாதலின் நுகர்வுப் பண்பாடு சார்ந்த கலாச்சாரத்தின் கூறுகளாக இருந்தபடி, பெண்ணை நுகர்வு பண்பாட்டுக்கு எதிராக வாழக்கோருவது இதன் முரண்நிலையாகும்.
ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறுகின்றது. மறுபுறம் இதற்கு எதிராக கட்டிப்போட்டு ஒழுக்கம் என்கின்றது. உண்மையில் இங்கு இதன் பின் பிரதிபலிப்பது, மனித தன்மையற்ற சமூகக் கூறுகள் தான். மனிதர்களுக்கு இடையிலான இயல்பான இணக்கமான அம்சங்கள், ஆபாச கலாச்சாரத்தாலோ, அடக்கியொடுக்கும் பண்பாட்டு கலாச்சாரத்தாலோ, எந்தவகையாலும் யாராலும் நியாயப்படுத்திவிட முடியாது.
இந்த சமூக முரண்நிலையை சதா வாழ்க்கையில் சந்திக்கும் போதும், இந்த உண்மை உறைப்பதில்லை. அது வெறும் சம்பவங்களாகின்றது. தனிப்பட்ட விடையங்களாக கூனிக் குறுகிவிடுகின்றது. அவை மற்றவன் விவகாரங்களாகவும் குசுகுசுப்பாகவும் மாறிவிடுகின்றது. ஆனால் அதைச் சுற்றி முழு சமூகமும் நீக்கலற்று இயங்குகின்றது. இதற்குள் சமூகத்தின் அனைத்துக் கூறுகளும் முரண்படுகின்றது. இது பற்றிய சமூகத் தெளிவு இன்மையால், இவை சமூக இயக்கமாக வெளிப்படுவதில்லை. இதை பற்றிய விவாதங்கள் கருத்துகள் கூட, இந்த எல்லையைத் தாண்டி பிரசவிப்பது என்பது இலகுவான ஒன்றாகவுமில்லை.
உண்மைக்கு நேர்மாறாக எமது கற்பனையான முரண்நிலை விருப்பங்கள், உண்மை சார்ந்த முரண்நிலைக்குரிய கூறை மறுதலிக்கின்றது. உலகமயமாதல் வரவும், அதன் சீரழிவு சார்ந்த கலாச்சார பண்பாடும், தலைமுறைக்கு இடையில் அதீதமான மோதலை அதிகப்படுத்தியுள்ளது. வாழ்க்கை அனுபவமற்ற, உழைப்பை அறியாத குழந்தை உணர்வுகளை நச்சுப்படுத்தி நுகர்வு வெறிக்குள் நகர்த்தும் உலகமயமாதல், சமூகத்தை தனி அலகுகளாக உடைத்து போடுகின்றது. ஒரு குடும்பம், ஒரு சமூக அலகு என்று நீடித்த பரஸ்பர சமூக இருப்பு இப்படியாக நலமடிக்கப்படுகின்றது. சுயநலம் கொண்ட, தனிமனித நலனை முன்னிறுத்துகின்ற நுகர்வுக் கலாச்சாரம், இயல்பில் குடும்ப அலகுகளை உள்ளீடாகவே சிதைக்கின்றது. இந்த தனிமனித வாதம் என்பது, தனிமனித நுகர்வு வெறி சார்ந்த கலாச்சாரமாக இருக்கின்றது. இது மற்றய மனிதனுடன் கூடி வாழ்தல் என்ற, சமூகத்தின் இயற்கை சார்ந்த உணர்வை, கடமையையும் மறுதலிக்கின்றது. சமூக அடிப்படையை மறுதலிக்கும் போக்கு, புதிய தலைமுறையில் அதீதமாக பிரதிபலிக்கின்றது. பெற்றோர் குழந்தைகளுக்கு செய்யும் இயற்கையான சமூகக் கடமைகள் பற்றிய கண்ணோட்டம், படிப்படியாக குழந்தைகளைNயு பெறாமை என்ற நுகர்வுக் கண்ணோட்டமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. குழந்தையை பெற்றோர் அல்லது குடும்ப அலகைச் சேர்ந்தோர், குழந்தையால் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை என்று சலித்துக்கொள்கின்றனர். தனிமையும், தனி மனித வாதங்களும் சமூக செயல்கள் மீது குதறுகின்றது. இதன் மறுபக்கத்தில் புதிய தலைமுறை முதிர்ந்த பெற்றோருக்கு செய்யவேண்டிய சமூகக் கடமையை மறுதலிக்கின்றது. உலகமயமாதல் விதிப்படி சமூகக் கடமையைச் செய்தல், நுகர்வுக்கு தடையாகவே இருக்கின்றது. சமூகப் பாதுகாப்புகளைப் பெற்றதாக நம்பப்படும் மேற்கில் கூட, உழைத்து வாழ முடியாத முதிர்ந்த தலைமுறையின் சமூக பாதுகாப்பு என்பது, வாழமுடியாத எல்லையில் அற்பத்தனமானதாக உள்ளது. இந்த நாடுகளில் குறைந்தபட்ச கூலியின் அரைவாசியே, சமூக பாதுகாப்பு நிதியாக (ஒய்வூதிய நிதியாக) வழங்கப்படுகின்றது. உழைப்பு ஆற்றலை இழந்த சமூகத்தை இப்படி மூலதனத்திடம் கையேந்தி வாழும் நிலைக்கு தரம் தாழ்த்தியுள்ளது. குழந்தைகள் இந்த பெற்றோரை இட்டு அலட்டிக் கொள்ளாத வகையில் நுகர்வு வெறிக்குள், அவர்களின் சமூக உணர்வுகள் மலடாக்கப்பட்டுள்ளது. ஒருவனை ஒருவன் பிடுங்கித் தின்னும் வாழ்க்கை முறை தான், உலகமயமாதல் கலாச்சாரம். இது கவர்ச்சியால், ஆபாசத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகின்றோம்?
மக்கள் சமூகமாக கூடிவாழும் சமூக உணர்வை, எப்படி எந்த வழியில் நாம் மீளப் பெறப் போகின்றோம்?
மக்கள் மக்களாக ஒன்றிணைவதைத் தவிர, வேறு மாற்று வழி கிடையாது. சக மனிதனை ஒடுக்காது இருக்க முதலில் நான் போராடுவது அவசியம். மனிதத்தன்மையுள்ள மனிதனாக நான் என்னை இனம் காண்பது, அதற்காக சக மனிதனையும் வென்று எடுப்பதும், கற்பிப்பதும் அவசியம். இந்த வகையில் மனிதத் தன்மையற்ற அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது அவசியம். இது மனிதனாக இருக்கும் ஒவ்வொருவனினதும் முன்னுள்ள சமூகக் கடமையாகும்.
Wednesday, February 13, 2008
Tuesday, February 12, 2008
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...19.
முக்கியச் சான்றுகள் அழிக்கப்பட்டன:
வன்முறைகள் நிகழ்த்தப்பட்டக் காட்சிகளும் நிகழ்விடங்களும், விசாரணை நடத்துபவர்களுக்கு மிக முக்கியமான சான்றுகளாகும். நரோடா பாட்டியாவிலும் இன்னும் நரோடா காவ்னிலும், காவல்துறையினர் மிக நேர்த்தியாக அனைத்துச் சான்றுகளையும் முற்றிலுமாக அழித்ததனால் ஒரு வழக்கிலிருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஒரு குழிக்குள் வைத்து அதிகமான பேர் எரிக்கப்பட்டச் சம்பவம் விசாரிக்க கூடப்படவில்லை - மனித திசுக்களின் தடயங்களோ அல்லது சிந்தப்பட்ட எரிபொருள்களின் தடயங்களையோ அம் மண்ணிலிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக, படுகொலைகள் பற்றிய காவல்துறையின் கூற்றில் இந்தக் குழியைப் பற்றியத் தகவல்களே இடம்பெறவில்லை. தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட 7 பேர்களின் மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. இவர்களில் இருவர் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை கொடுக்கபட்டப் பின்பும் மார்ச் 11ம் தேதியன்று இறந்து விட்டனர். இவர்களுடைய வாக்கு பிரமாணங்கள் ஏன் பதியப் படவில்லை என்பது பற்றி எந்தவொரு விளக்கமும் குற்றப் பத்திரிக்கையில் வரவில்லை.
பாஜக சட்டமன்ற மன்ற உறுப்பினர் (MLA) குற்றச்சாட்டுகளிலிருந்து நீக்கப்பட்டாள்:
நரோடா படுகொலை சம்பவங்களின் போது உயிர் தப்பியவர்கள், "உள்ளூர் MLA-வான மாயாபென் கோட்னானி தான் வன்முறை வெறியர்களைக் கொலைகள் செய்வதற்கு ஊக்குவித்தாள்" என்று பெயர் குறிப்பிட்டு கூறினார்கள். ஆனால் இம்மனிதப் பேரழிவு பற்றியக் குற்றப்பத்திரிக்கையில், இவளது பெயர் குற்றம் சாட்டப்பட்டக் குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து காவல்துறையினரால் நீக்கம் செய்யப்பட்டது. இதற்குக் காவல்துறையினரால், "இவருக்கு எதிராக எந்தச் சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை" என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் படுகொலைகள், வன்முறைகளில் இவளுடைய பங்குகள் மிகப்பெரிய அளவில் இருந்ததாக ரிச்சர்ட் கூறினான். மாயாபென் நாள் முழுவதும் நரோடா பாட்டியாவின் தெருக்களில் சுற்றி வந்தவளாய் வன்முறையாளர்கள் முஸ்லிம்களைக் கொன்றொழிக்குமாறு ஊக்குவித்தாள் என ரிச்சர்டும் இன்னும் அவனுடன் சேர்ந்து இப்படுகொலை சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரகாஷ் ரத்தோடும் கூறினார்கள்.
நூரானி மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படவில்லை:
குற்றம் நிகழ்ந்த நூரானி மசூதி இடத்தில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் அசோக் லேய்லண்ட் டாங்கர் லாரி, அதன் பின் பகுதி மசூதியின் சுவரில் ஒட்டியிருக்கும் நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த லாரியின் முன்பகுதியிலுள்ள எண் தகடு எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் இருந்துள்ளதோடு, அந்த லாரியின் எண் GT-1T 7384 தெளிவாகப் படிக்கும் விதத்திலும் இருந்துள்ளது. ஆனால் இந்த லாரி பறிமுதல் செய்யப்படவில்லை. இதனுடைய உரிமையாளரைக் கண்டுபிடிக்க வட்டார போக்குவரத்து அலுவகத்தைத் தொடர்பு கொள்ளவில்லை. தடயவியல் பரிசோதனை செய்வதற்காக அதிலுள்ள பொருளிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. 12க்கும் அதிகமான காவல்துறையினரால் தொடர் கண்காணிப்பில் உள்ள பகுதியான நூரானி மசூதிக்கு மிக அருகில் இவ்வளவு பெரிய டேங்கர் லாரி எப்படி ஊடுருவ முடிந்தது என்பது உண்மையில் இன்றும் மர்மமாகவே இருக்கிறது.
தலைமறைவான முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை:
குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்ட உடன் அநேக முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர். பாபு பஜ்ரங்கி, கிஷன் கோரனி, பிரகாஷ் ரத்தோட் இன்னும் சுரேஷ் ரிச்சர்ட் போன்றவர்கள் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு முன்று மாதங்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டனர். பிபின் பன்ச்சால் என்பவன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பே கைது செய்யப்பட்டான். குற்றவாளி தலைமறைவானால் பொதுவாக செய்யப்படும் நடவடிக்கைகளான, தலைமறைவான குற்றவாளி என்னும் எச்சரிக்கை அறிவிப்பை அவனது வீட்டுக்கு வெளியே ஒட்டுவது, அவனது சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் எதையும் காவல்துறையினர் செய்யவில்லை.
குற்றத்தை ஒப்புக் கொணடதாகப் பதிவு ஒன்று கூட இல்லை:
நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள், காவல்துறையால் விசாரிக்கப்படுவதற்காக ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு போலீஸ் காவலில் கொண்டுச் செல்ல நீதிமன்றத்தால்அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் காவலும், விசாரணைகளும் வெறும் கபட நாடகமாகவே அமைந்தது. இரண்டு நரோடாக்களிலும் நடத்தப்பட்டப் படுகொலைகள் சம்பந்தமாக, குற்றவாளிகள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொணடதாக ஒரு பதிவு கூட குற்றப்பத்திரிக்கைகளில் இணைக்கபடவில்லை.
ஒரே ஒரு ஆயுதம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது:
2004ல் பிபின் பன்ச்சாலிடம் இருந்து கைபற்றபட்ட ஒரே ஒரு வாளைத் தவிர, வேறு ஆயுதங்கள் ஏதும் வன்முறை சம்பவங்கள் நடந்த இடத்திலிருந்தோ அல்லது குற்றவாளிகளிடம் இருந்தோ காவல்துறையினரால் கைபற்றப்படவில்லை. ஆனால், "குற்றம் சாட்டப்பட்ட கொடியவர்கள் உட்பட தங்களைத் தாக்கியக் காட்டுமிராண்டி கயவர்கள் அனைவரும் பல்வேறு வகையான கொடிய ஆயுதங்களான கத்திகள், வாள்கள், சூலாயுதங்கள், எரிவாயு உருளைகள், கைத்துப்பாக்கிகள் போன்ற உயிருக்கு ஊறுவிளைவிக்கும் ஆயுதங்களைத் தாங்கியிருந்தனர்" என்று வன்முறை வெறியாட்டத்தின் போது உயிர்தப்பியவர்கள் சாட்சி கூறியுள்ளார்கள். 105 பேர் ஈவு இரக்கமின்றி கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கூட ஆயுதங்கள் ஒன்றும் கைபற்றப்படாததே, விசாரணைகளின் தரம்கெட்டத் தனத்தின் அளவை பறைசாற்றுவதாக உள்ளது.
இன்னும் சொல்லப் போனால், இனஅழிப்பு அக்கிரமங்கள் நிகழ்த்தப்பட்ட தினத்தன்று தனது கிடங்கிற்கு அறிமுகமில்லாத 20 பேர் மாருதி வேனோடு வந்திறங்கி எக்கச்சக்கமான வாயு உருளைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக வாயு உருளைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் வாக்குமூலம் எழுதிக் கொடுத்துள்ளார். இச்சம்பவம் நடைபெறும் போது தனது நிறுவனத்தின் காவலாளியும் இருந்ததாகக் கூறினார். ஆனால், காவலாளியின் வாக்குமூலம் பதியப்படவில்லை. மட்டுமல்லாது கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்கவோ அல்லது இக்குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
Monday, February 11, 2008
பெரியாரிஸ்ட்டுக்கள் எப்படிப் போராட வேண்டும்?
பி.இரயாகரன்
11.02.2008
இதற்கு சம்பூகன் ஒரு எடுத்துக்காட்டு. http://sampoogan.blogspot.com/எதிரி எதிரியாகவே அணுகுவதில், அதைத் துல்லியமாக அம்பலப்படுத்துவதில் உள்ள புரட்சிகரமான வீச்சு, பெரியாரியக் கட்சி என்று சொல்லுகிறவர்களிடம் கடுகளவு கூட கிடையாது. அந்தளவுக்கு அவரின் இணையம் எதிரியை எப்படி புரட்சிகரமாக எதிர்கொண்டு முறியடிப்பது என்பதை கற்க விரும்புகின்ற, போராட விரும்புகின்ற அனைவருக்கும், கற்றுக்கொள்ள நிறையவே விடயங்கள் தருகின்றது.
அவர் வெளிப்படுத்தும் புரட்சிகரமான நேர்மை தான், பெரியாரிஸ்ட்டுகளுக்கு மட்டுமல்ல அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரினதும் போராட்டத்துக்கான முன்மாதிரியாகும்.
இந்த சமூகத்தின் எதிரி யார்? நண்பன் யார் என்;பதை தெளிவுபடுத்தி விடுவதில் உள்ள தெளிவு, இங்கு மிக முக்கிமானது. சளைப்பின்றிப் போராட்டத்தை இதனூடாக அவரால் நடத்த முடிகின்றது. தெளிவாக எதிரியை நோக்கி நடத்துகின்ற இப்போராட்டம் தான், பெரியார் வழிப்பட்டது.
இங்கு பெரியாரின் பெயர்ப்பலகை தொங்கவில்லை. பெரியாரின் கோட்பாடுகள் தொங்கவில்லை. பெரியாரின் பெயரில் அரட்டை மடங்களுமல்ல. மாறாக பெரியாரின் புரட்சிகரமான அ,குமுறையில், எதிரி நொருக்கப்படுகின்றான். எல்லா கம்யூனிஸ்ட்டும், உண்மையான ஒவ்வொரு பெரியாரிஸ்ட்டும், ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சார்ந்தவர்களும், இதை ஆதரித்து பக்கபலமாக நிற்பது அவசியமானது.
ஏமாற்றப்படுகிறோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
குறிப்பு:1
தமிழ்த் தலைவர்களும்,அவர்களது அந்நிய எடுபிடி அரசியலும்:
நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் சிங்கள அரசால்-இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளது!இதன் அடுத்த கட்ட நகர்வில் இலங்கைத் தமிழ்ச் சுமூகமே பயங்கரவாதிகள் எனும் அவலப் பெயர் நமக்கு வந்துவிடும்.இத்தகைய குண்டுகளை நமக்குள் விதைப்பவனை பயங்கரவாதிகளென்றும்,அரசபயங்கரவாதமென்றும்கூறியே நமக்கு விடுதலை வேண்டுமென்று போராட்டத்தை ஆரம்பித்தோம்.
ஆனால்,விடுதலைக்கான போராட்டம் எங்ஙனம் அதே பயங்கரவாதத்துக்குள் மூழ்கியது?
இது புரட்சிகரமானதா?
எங்கள் எதிரிகள் யார்?
அவர்கள் எமக்குள் எத்தகைய வடிவில் உலா வருகிறார்கள்?
இலங்கையில் தமிழ் மக்களுக்கும் மற்றும் சிறுபான்மை இனங்களுக்குமான அரசியல் தீர்வானது எத்தகைய தீர்வாக இருக்கவேண்டுமென்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிக்க வேண்டும்.இத்தகைய இனங்களை வழிநடாத்துவதாகச் சொல்லிக்கொண்டு ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சி-குடும்பநலன்களுக்காக அந்தந்த மக்களின் குரலாக இருந்திடுவது மக்களனைவரையும் முட்டாளாக்கும் செயல்.ஆனால்,உலகத்திலுள்ள ஆளுமையுடைய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு வகையில் சுயாதிபத்தியமுடைய நாடுகள் அமைந்துவிட்டன!
அவை, தத்தமது நாடுகளுக்கிசைவான பொருளாதார-இராணுவ மற்றும் புவிகோள ஆர்வங்களுக்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் இனங்ளைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு முனையும்போது,குறிப்பிட்ட ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனங்களுக்குள்ளிருக்கும் ஓட்டுக்கட்சித் தலைவர்களைத் தமது நலன்களுக்கேற்றவர்களாக்கி அத்தலைவர்களின் மூலமாகக் குறிப்பிட்ட இனத்தை ஏமாற்றி அடிபணிய வைக்கின்றனர்.இது, கடந்தகால அனுபவமாக இருக்கிறது.இப்போது, இலங்கையிலுள்ள அரசியல் போராட்டச் சூழலில் இத்தகைய அதே பாணியிலான அரசியலை அவர்கள் செய்து முடிக்கவில்லை!
இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் ஒவ்வொரு தேசத்தின் ஆளுமையுடைய வர்க்கங்கள் கட்டுப்படுத்துகின்றன.இலங்கையின் சிறியபல கட்சிகளையும் மற்றும் ஆளும் கட்சிகளையும் அன்னியத் தேசங்களே நிதியளித்துத் தமது வலுவுக்குள் இணைத்து வைத்திருக்கின்றன.இங்கே, இலங்கையின் அண்மைய தேசம் புதிதாக எவரையும் கூட்டாளிகளாக்க முனையவில்லை! இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனங்களின் இனமுரண்பாட்டை ஊதிப் பெருக்கி வளர்த்து,அதை மிகப்பெரும் அழிவுயுத்தமாக மாற்றித் தான்தோன்றித்தனமான இயக்கங்களைத் தீனிபோட்டு வளர்த்தும்,இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் இயல்பபாக எழவேண்டிய முரண்பாடுகளைச் செயற்கைத்தனமாகக் கூர்மைப்படுத்தியும்,இலங்கை மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைச் சிதைத்தவர்கள் அண்மைய தேசமான இந்தியாவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமுமென்பது நாம் முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும்!
இப்போது உலக தேசிய இனப் போராட்டங்களின் நிலைமையும் பெரும் தொழிற்கழகங்களின் உற்பத்திசார்ந்த மூலவளத் தேவைக்களுக்கும் அவை கொள்ள விரும்பும் பாதுகாப்பு மற்றும் தங்குதடையற்ற மூலவளச் சுற்றோட்டமும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் இருகண்களாக இருப்பதால் புதியபாணியிலான அரசியல் நகர்வுகளைத் தொழிற்கழகங்கள் விரும்புகின்றன.இது அமெரிக்க,இந்திய அரசுகளின் பழையவகையிலான வியூகங்களுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கின்ற முரண்பாட்டை நாம் கவனித்தில் எடுப்பது அவசியமாகும்.முன்னைய சோஷலிசக் கூட்டான வார்ச்சோ அணிகளின் உடைவுக்குப்பின் நோட்டோவின் தேவை எதுவரையென்பதும் யாரை எதிர்த்பதென்பதும் கேள்வியாக இருக்கிறது?தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக நோட்டோத் தலைமையில் இரஷ்சியாக்கூட நாளை இணையலாம்!
இங்கே,தொழிற்கழகங்களின் மிகச் சுதந்திரமான வர்த்தகத்தை எந்தவொரு அரசும் கட்டுப்படுத்தும் நிலையை அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.இதன் எதிர்பார்ப்பிலிருந்து தொடர் யுத்த வியூகமானது அரசியல்-சுதந்திர தேச விடுதலைகளுடன் முட்டி மோதுவதைத் தொடர்ந்து தொழிற்கழகங்கள் விரும்பவில்லை.அவை ஏதோவொரு வகையில் தேசிய இன முரண்பாடுகளைக் களைந்து, மூலதனமுள்ள-கனிவளமுள்ள தேசங்களைப் பூரணமான தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரவே விரும்புகின்றன.இதன் தொடர்ச்சியின் விளைவுகள் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களுக்குப் பாதகமானதாகவே இருக்கிறது.இங்கே அமெரிக்காவின்-மேற்குலகத்தின் பாரிய தொழிற்கழகத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் நமது பிரச்சனைக்குள் அப்பட்டமாகப் பிரிதிபலிக்கிறது.இதை இனம்காணவதற்கு நாம் முனைந்தாகவேண்டும்.
அமெரிக்காவின் நீண்ட நாட்கனவானது இலங்கையில் இனப்பிரச்சனை நியாயமான முறையில் தீந்துவிடுவதைத் தடுத்தலாகவே இருக்கிறது.இதைச் செய்வதற்காக இப்போது பற்பல முட்டுக்கட்டையை அது செய்கிறது.அதிலொன்றுதான் வடக்குக் கிழக்குப் பிரிவினை.தமிழ் மாகாணங்கள் ஒருபோதும் இணைந்து ஐக்கியப்படுவது அமெரிக்கக்கனைவை(இராணுவக் கேந்திரத்தளம் அமைக்கும்) நாளடைவில் சிதைக்குமென்பதால் கிழக்கைத் தனி மாகாணமாக்குவது அதற்கு மிகவும் விருப்புடையதாகவே பண்டுதொட்டு இருக்கிறது.இது, இந்தியாவின் புதிய அரசியல் நகர்வில் ஒரு திட்டமாக இருப்பதற்கான வாய்ப்பு அன்றிருக்கவில்லை!இந்தியாவானது வடக்கையும்,கிழக்கையும் இணைத்தே ஒரு அரைகுறைத் தீர்வைத் தனது தேசத்தில் நிலவும் மாநில ஆட்சிகளின் போக்குக்குட்படச் சிந்தித்திருந்தது.எனினும்,இன்றைய இந்தியாவானது அமெரிக்க அடியாளாகத் தென்னாசியப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டபின் அமெரிக்க அரசியல் முன்நிபந்தனைகளை அது ஓரளவு ஏற்று அமெரிக்கக் கனவை நிலைப்படுத்த இலங்கையில் புலி இயக்கத்தைப் பிளந்து,வடக்குக் கிழக்குப் பிரிவினைக்கு வலுச் சேர்த்தது.
இதைப் புரிய நாம் குர்தீஸ் இனமக்களின் பிரச்சனைகளை மிகக் கவனமாக அணுகிப்பார்க்க வேண்டும்.அங்கே(துருக்கியப் பகுதியில்) நடைபெறும் போராட்டத்தில் பி.கே.கே.க்கும் ஈராக்கின் வடபுறத்தே அமைந்திருக்கும் குர்தீஸ் மக்களின் பூர்வீக நிலத்தில் நிலவும் அரசியல் வியூகத்துக்கும் மிகவும் முரண்பாடுகள் இருக்கின்றன.குர்தீஸ் இனவிடுதலைகுறித்த கேள்விகளுக்கு மிக வித்தியாசமான குரல்கள் அங்கே ஒலிக்கின்றன.பி.கே.கே.க்கும் கே.டி.பீ க்கும் பற்பல விஷயங்களில் மிக வித்தியாசமான பார்வைகள் இருக்கின்றன.இதை வைத்தே அமெரிக்கா வடக்கு ஈராக் குர்தீஸ் பகுதியை ஒரு சுயாதிபத்தியமுடைய குர்தீஸ் வலையமாக்க முனையாது ஏமாற்றி வருகிறது.அல்லது காலவோட்டத்தில் வடகுர்த்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களிடம் வடகுர்தீஸ்க்கான தொங்குநிலை சுயாதிபத்தியம் கையளிக்கப்படலாம்.இது இலங்கையில் தீர்வுப் பொதியாக வருகிறது-13வது திருத்தச் சட்டவரைவாக வருகிறது!
1988 ஆம் ஆண்டு, 90 வீதமான துர்தீஸ் இன மக்களின் வலையத்தை,வாழ்விடங்களை,கிராமங்களை ஈராக்கியப் பாசிசச் சர்வதிகாரி சதாமின் இராணுவம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபின் குர்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களின் தலைமையிலொரு தனிநாடமைவதைப் பெரும் பகுதியான வட ஈராக்கியக் குர்த்தீஸ் இனத்து மக்கள் விரும்பவில்லை.அவர்கள் அதற்குக் கூறுவது: "குர்த்தீஸ் முதலாளிகளின் நாடாக இருக்குமானால் அது பெரும் பகுதி குர்தியர்களைக் கூட்டுக்குள் அடைக்கும். ஏனெனில், அவர்கள் கம்யூனிஸ்டுக்களாக இருக்கிறார்கள்.அவ்வண்ணமே, பெரும் பகுதிக் குர்த்தீயப் பெண்கள் அவர்களது புருஷர்களால் கொல்லப்படுவார்கள்.ஏனெனில்,பாரிம்பரியச் சுமூக ஜந்திரம் பெண்ணையே அதன் பகுதியாக்கிவைத்திருக்கிறது.இதனால், அவளை மீளவும் ஐதீகங்களுக்கும்,பாரம்பரியத்துக்கும் பலியாக்குவது நிகழும்,இதை எவரும் தடுப்பதற்கில்லை.ஏனெனில்,நாம் குர்தீய இனமாக இருப்பதால்."-கொங்கிறேற்-பக்கம்:16,மாதம் டிசெம்பர்,வருடம்2007.
வட ஈராக் குர்தியக் கட்சியான கே.டி.பீ .யின் தலைவர் மாசூட்த் பார்சானி(Massoud Barzani)குர்தீசீயத் தேசிய வாதிகளின்-பூர்ச்சுவாக்களின் குரலுக்கு அண்மையிலேயே இருக்கிறார்.இது,குர்தீஸ் இனத்தின் விடுதலைக்கு வேறுவிதமான முட்டுக்கட்டையை இடக்கூடியபடி துருக்கிய ஒடுக்கு முறை ஆட்சியாளருடன் சில சுற்றுப் பேச்சை நடாத்தி புரட்சிகரமான நகர்வைச் சிதைக்கலாம்.இத்தகைய நடத்தையின் மீதான பீ.கே.கே.யின் எதிர்பார்ப்புகள்,செயற்பாடுகள் இவ்விரு கட்சிக்குமிடையிலானவொரு முரண்பாடாக உருவாகிறது.இதைப் பிடித்தபடி தொங்கும் அமெரிக்கா-ஐரோப்பாவின் குரலாக அமெரிக்க வெளித்துறை மந்திரி கொன்டிலீசா றைஸ் அம்மணி இப்படி உரைக்கிறார்:" en route to Jerusalem and another thorny problem"-Washington Post.என்றும்,அவரது கூட்டாளி துருக்கிய வெளிவிவாகர மந்திரியோ" we are clearly going to have to take actions to deal with the PKK threat."என்றும் மாறிமாறிக் காதல் மொழிகள் சொல்லவில்லை.மாறாக,குர்தீஸ் இனம் தமது கால்களுக்குக் கீழ் உதைபடும் காற்பந்தே என்று திட்டமிடப்பட்டு வார்த்தை ஜாலம் செய்து வருகிறார்கள்.
இதுதான் குர்த்தீஸ் மக்களின் தலை விதியாக இருக்கும்போது,நமது தேசத்தின் நிலையும் கிட்டமுட்ட இதையே பிரதிபலித்தாலும் நமக்குள் அதீத பெரும் குள்ள நரிகள் தமிழ்த் தலைமையாக முன்னெழுந்து நம்மைப் பூண்டோடு அழித்தாவது இந்திய-அமெரிக்க எஜமானர்களுக்கு அடிமையதக்குவதாகச் செயற்படுகிறார்கள்.இங்கே,புலிகள் குண்டுகள் வைக்க,ஆமியும் குண்டுகள் வைக்க வேறொரு அரசியல் வியூகம் இன்னொரு தளத்தில் இதே எஜமானர்களால் திட்டமிட்டபட்டு நடாத்தப்படும்போது,நமது ஆயுதங்களுக்கு ஒரு முகமும்,ஆயுதமற்ற ஓட்டுக்கட்சிகளிடமும் ஒரு முகம் இருக்கிறது.அவை இரண்டினதும் குறிக்கோள் ஒன்றுதான்.தோற்றத்தில் மட்டுமே வெவ்வேறு.
இங்கே, நாம்-தமிழர்கள்-இஸ்லாமியர்கள்-சிங்களவர்கள் ஒவ்வொருவரையும் நரவேட்டையாடும் அரசியலுக்குத் நமது சுதந்திரத்தைத் தாரவார்த்துக் கொடுத்து இலங்கையை நாசமாக்கும்போது அங்கே, சாவது உழைப்பாள வர்க்கமே-வறுமைப்பட்ட மக்களே! இதைக் கடந்த குண்டுவைப்புகள், இன்றைய குண்டுவைப்புகள் நிரூபிக்கின்றன. நமது ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்கள் செய்யும் அரசியலை வெறும் மாயைகளை உருவாக்கியபடி மனவிருப்புக்குட்பட்டுச் சிந்திக்க முடியாது!
இந்திய,அமெரிக்கா,ஜப்பான்,மேற்குலக ஐரோப்பியக்கூட்டமைப்பு மசிர்,மண்ணாங்கட்டியெல்லாம் நம்மைக் கேவலமாகக் கொன்று குவிப்பதற்குத் துணைபோகும் கபோதிகளை இனம்காணம் பாரிய கடப்பாடு இன்றைய இளைய தலைமுறைக்குண்டு.இதை மறுத்துவிட்டு நடந்தேறும் அரசியல்-யுத்தத் திருவிளையாடல்களுக்கு எந்த மனிதர் வக்காலத்துவேண்டுகிறாரோ அவர் இத்தகைய அரசியல் சூதாட்டத்தைப் புரியவில்லை என்பதல்லக் கதை.மாறாக,நாமே நம்மை அழிக்கும் ஆயுதத்தை நமது எதிரிகளிடம் விட்டுவைத்திருக்கிறாம்.அவர்கள் நமது தலையைக் கொய்வதற்கேற்றபடி நாம் நம்மைத் தயார்ப்படுத்துகிறோம் என்பதே உண்மை!
குறிப்பு:2
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும்.
"Der Berliner Soziologe Dr. Andrej Holm.wird aufgrundseiner wissenschaftlichen Forschung als Terrorist verdaechtigt;er wurde verhaftet."-Konkret vom 10.2007.அந்திரே என்ற பேர்ளின் கும்போல்ர்ட்(Dr.Andrej Holm ist Sozialwissenschaftler und arbeitet an der Humboldt-Universitaet zu Berlin) பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான ஆய்வாளர் தனது ஆய்விலீடுபட்டிருந்தபோது திடீரென ஜேர்மன் புலானாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.பயங்கரவாதத்தடைச்சட்டம் பராக்கிறாவ் 129 ஏ பிரிவின்கீழ் (§129 a ) ) அவ் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு ஜேர்மனியச் சிறையில் இன்றும் வாடுகிறார்.அந்திரே சர்வதேச மட்டத்தில் பல பல்கலைக்கழகங்களோடிணைந்து ஆய்வுகள் செய்வதால் பல நாட்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவருபவரும் கூடவே உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வீட்டு வாடகைகளின் அதீத ஏற்றம் குறித்தும் நீண்ட ஆய்வுகளைச் செய்தவர்.அத்தோடு சமூக இயக்கங்களில் நேரடியாகப் பங்குபற்றி ஜீ.8 க்கு எதிரான பிரச்சார மற்றும் ஆர்பாட்டத்திலும் தன்னை முழுமையாகவிணைத்து முற்றும் முழுதும் மக்கள் விஞ்ஞானியாகவே வாழ்ந்துவரும் ஒரு பெரும் கல்வியாளர்.ஜேர்மனியச் சட்டதிட்டங்களுக்குட்பட்ட போராட்ட வடிவத்தையே தேர்ந்தெடுத்திருந்தவர்.எனினும்,அவரை ஜேர்மனிய இராணுவக் குழுவெனும்;(militanten gruppe) மார்க்சிய அமைப்புடன் சம்பந்தமுடையவராகவே கைது செய்ததாக ஜேர்மன் புலனாய்வுத் துறை கூறிக் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறது.
அந்திரேயின் கைது குறித்து அவரின் உற்ற நண்பனும் 129 ஏ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் கூட்டணியின் பேச்சாளரும்;(Sprecher der Buendnisses fuer die Einstellung des §129 a )அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமாகிய பொல்கர் ஐக்;(Volker Eick) கூறும்போது"Ihm wird vor allem die verwendung des Begriffs>>Gentrification<<>>drakonisch<<, >>marxistisch-leninistisch<<, >>Reproduktion<<, und >>politische Praxis<<>>mg<<;(militanten gruppe) finden sollen.Man kann sie auch in einem Lexikon finden.ob demnaechst die Duden-Redaktion dran ist,muessen wir abwarten."-Konkret okt.2007 seite:3" "அந்திரே அனைத்துக்கும் முன்பாகச் சமூகமேன்மைகள்மீது சுமையேற்றியதாகவும்,அடுத்த குற்றத்துக்குரியதான எடுகோள் வார்த்தைகளான டறாக்கோனி(கி.மு.620இல் பழைய கிரேக்க சட்டவாக்க நிபுணன்: "டறாக்கோனி"க் குறியீடு)மற்றும் மார்க்சிய-லெனிய,மறு உற்பத்தி,அரசியல் வேலைத் திட்டம் போன்ற வார்த்தைகளைத் தனது ஆய்வுக்குள்ளும் மற்றும் மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தும்படி பாவித்ததும் கூடவே இத்தகைய வார்த்தைகளை மிலிரான் குறுப்பான ஜேர்மனிய மார்க்சிய குழுவின் எழுத்துக்களுக்குள் இனம் காணுவதாகவும் அவரது கைதுக்கு ஜேர்மன் புலனாய்வுத் துறை விளக்கிமளிக்கிறது.இத்தகைய வார்த்தைகளை "டுடன்"(Duden Woerter Buch) கலைக் களஞ்சியத்துக்குள்ளும் பார்க்க முடியும்.எனவே,டுடன் ஆசியர் குழுவினரையும் கைது செய்யும் நிலை அடுத்து உருவாகிறது.நாம் பொறுத்திருந்து பார்ப்போம்."என்கிறார், ஐக் பொல்கர்.
இத்தகைய கைதின் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை.ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும் தமது சொந்த முகவரியோடு போரிட்டுக் கம்பி எண்ணவும்,உயிர்விடவும் தம்மைத் தயார்படுத்திப் போராடுவதே மிக முக்கியமானது.இவர்களும் நமது பேராசியர்கள்,டாக்டர்கள் போல் தாமும் தமது ஆய்வும் என்று இருந்து இலங்கையில் அராஜகத்தையும்,அழிவையும் பார்த்து மெளனித்திருப்பதுபோன்று மெளனித்திருக்கலாம்.ஆனால்,அவர்கள் தமது வாழ்வை உரிமையை வென்றெடுக்கவும் அதை நிலைப்படுத்தவும் தொடர்ந்து போராடிய வரலாறுடையவர்கள்.
அவர்களின் இத்தகைய போராட்டம் தந்த குடிசார் உரிமைகளைத் துய்க்கும் நமோ பல்கலைக்கழகங்களுக்குள் தலையைப் புதைத்து உலக ஏகாதிபத்தியத்தின் நகர்வை வலுப்படுத்த ஆய்வுகள் செய்து புத்தி ஜீவிகளாக நடிக்கும்போது, நாம் தொடர்ந்தாற்றவேண்டிய பல பங்களிப்புகளுக்கு பேராசியர் அந்திரே மற்றும் பொல்கர் எரிக் போன்றோர் முன்னுதாரணமாகட்டும்.
இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.
குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி. மற்றும் சற்.டி.எப் ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.யையும் மற்றது சி.டி.யூ.வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.இதற்கு சமூகவிஞ்ஞானியும் ஆய்வாளருமான அந்திரேயின் கைதே இன்றைய மேற்குலகை அளக்கப் போதுமான அளவுகோல்.
இன்றைக்கு மேற்குலகக் கல்வியாளர்கள் தமது உயிரையே கொடுத்தாவது மேற்குல ஏகாதிபத்தியச் சட்டங்களை,அராஜகங்களை எதிர்த்துவரும்போது நமது பேராசிரியர்கள் டாக்டர்கள் வேலியல் ஓணானாக இருந்து செயல்படும் தரணங்கள் இன்னும் நமது மக்களை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பதே.மக்களை அணிதிரட்டும்,அரசியல் மயப்படுத்தும் பணி இந்தக் கல்வியாளர்களுக்கு இல்லையா?குறைந்தபட்சமாவது நாம் ஆற்றவேண்டிய பணி நமது மக்களை வேட்டையாடும் அரசியலை அம்பலப்படுத்துவதாகவாவது இருக்கவேண்டும்.
ப.வி.ஸ்ரீரங்கன்