தமிழ் அரங்கம்

Saturday, October 31, 2009

ஒரு நல்ல மனிதனும் கட்சி அரசியலும் – ரிபிசி கலந்துரையாடல்

கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.

ஜயலத் அவர்கள் தமிழ் மக்களிடம் நல்ல அபிப்பிராயங்களை தக்கவைத்துள்ளவர். அவர் ஒரு நல்ல மனிதர் என எடுத்துக்கொள்வோம். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வந்திருந்தார். இலங்கை மக்கள் நலன் சார்பில் அல்ல என்பதாலோ என்னவோ அவரது கலந்துரையாடல் ஒரு கட்சியின் வெளிப் பரப்புக்குள் சென்று எதையும் சொல்லிவிடவில்லை. நல்ல மனிதர்கள் என்பது அரசியல் பார்வையை நல்லதாக்கிவிடுவதில்லை. காலமெலாம் தமிழ் மக்களிற்காக நியாயத்துடன் அரசியல் குரலெழுப்பிய வாசுதேவ நாணயக்கார அவர்கள் ராஜபக்ச அரசின் ஆலோசகராக மாறித்தான் போனார். போரைக் கண்டடைந்தார். நிலையான தீர்வு என்பது எப்பொழுதும் அதிகார மையத்திலிருந்து அதாவது மேலிருந்து கீழாக........ ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 30, 2009

இளையோரின் ஜனநாயகப் பண்பும் கிழப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்


மக்களின் உற்சாகமற்ற வருகையில் ஏற்பட்ட தாமதத்தினால் வழமைக்கு மாறாக சுமார் ஒரு மணிநேரம் தாமதித்தே நிகழ்வும் ஆரம்பமானது. வெவ்வேறு மாநிலங்களிலும் இருந்தும் வருகை தந்திருந்த இளையோர்கள் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மொழிகளில் நாட்டின் இன்றைய அவலநிலைகளை வெளிப்படுத்தினர். அறியப்பட்ட சுவிஸ் நபர்கள்....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, October 29, 2009

அந்த கறுத்தப் பெட்டி…

"'……."
' தர்மலிங்கம் அண்ணை இல்லையா...? "
'…….."'வாங்க தம்பி..."
'நீங்க எனக்கு பெட்டி ஒன்று செய்து தரோணும்."
'பெட்டியா… என்ன பெட்டி தம்பி...?"
'இதுதான் அண்ணை அளவு. சூட்கேஸ் மாதிரி, கொண்டு திரியக் கூடியதாய் இருக்கோணும்..."
'……….."
'டேய்… என்னடா செய்யுறியள்...? சின்னப்பொடியள் மாதிரி கத்திக் கொண்டிருக்கிறியள்.... கரியன் வாறான், சத்தம் போடாமல் இருங்கோ…!"
சண்முகசுந்தரம் மாஸ்ரர் வராததாலை கெமிஸ்ரிப் பாடம் பிறீ. பிறீ கிடைச்சால் கௌரி பாடுறதும்..., ரவி மேசேலை மோளம் அடிக்கிறதும் வழமையா......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 28, 2009

இளையோர் அமைப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து…


புலம்பெயர் சூழலில் பரந்து விரிந்து கிடக்கின்ற இளமைக்குரிய வசதிகள், வாய்ப்புக்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, தாய்த்தேசத்தின் உணர்வுகளுடன் உலாவரும் இளமை உள்ளங்களே! உங்கள் உணர்வுகளுக்கு தலை சாய்க்கின்றோம். தாய்த் தேசம் சார்ந்த உங்கள் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அப்பழுக்கற்றவை என்பதையும் நம்புகிறோம். உங்கள் செயற்பாடுகள் தொடர்வதை உளச்சுத்தியுடன் வரவேற்கின்றோம்.

Tuesday, October 27, 2009

மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்

போரென்று எழுந்தநிலம் புதைகுழியாய்படைகளிடம்
பதையுண்டுபோனதென்ன---விதியாஇது
சாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை--
பாரின்றுசந்ததியை அழிக்கின்ற பகைமுகாமில்
சோறின்றி வாழ்தலல்ல உறுத்துதலாய்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 26, 2009

பாரிஸ் கூட்ட முடிவுகள் : மாற்றத்தை நோக்கிய ஒரு பகிரங்க அறைகூவல்

செப் 26-27ம் திகதியில் பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் தமிழரங்கத்தின் முயற்சியில் கூட்டு விவாதம் ஒன்று நடை பெற்றது. கடந்தகால அரசியல் சூழலை மாற்றியமைக்க, முதலில் தன்னைத் தான் அது கோரியது. எதிர்காலத்தில் நடைமுறையில் நாம் செய்யவேண்டிய அரசியல் பணிகளை, ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் வரையறுத்;து. அத்துடன் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த, கூட்டு உழைப்பைக் கோரியது. தனித்துவமான செயல்களை, கூட்டான அரசியல் திட்ட செயல்முறைக்கூடாக முன்னெடுக்கவும் கோரியது.

கூட்டு விவாதம் இன்றைய அரசியல் சூழலை மதிப்பீடு செய்தது. இனவொடுக்குமுறையால் கடந்த 30 வருடமாக இலங்கையில்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புதிய இணையம் அறிமுகம் : புகலிடச் சிந்தனை மையம்

புகலிடச் சிந்தனை மையத்தின் இணையம், www.psminaiyam.com கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க முன்முனைப்புடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. சிங்களம் முதல் பல மொழிகளில் தன்னை ஒருங்கிணைத்து, மக்கள் மத்தியில் செயல்பட அது உறுதி பூண்டுள்ளது. சமகால நிகழ்வுகளை ஓட்டி, ஒரு பொது விவாத அரங்கையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் அங்கத்தவராக பதிவு செய்து கொள்ளும், யாரும் இங்கு சுதந்திரமாக விவாதிக்க முடியும்.

புரட்சிகர மாற்றத்தை நோக்கி....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்