தமிழ் அரங்கம்

Saturday, August 15, 2009

இங்கு இணைத்துள்ள இந்த படங்களுக்கு, இலங்கையின் "ஜனநாயகம்" மரணத்தை தண்டனையாக தரும்

தமிழ்மக்களை எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் "ஜனநாயகம்". அப்பாவி மக்களை எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்;கின்றனர் என்பதை, வெளியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள் இலங்கையில் உயிர் வாழவே முடியாது.

அப்படிப்பட்ட படங்கள் தான் இவை. இந்த பேரினவாத பாசிச அரசு எதை புலியிடம் இருந்து மீட்பாக அந்த மக்களுக்கு காட்டியதோ, எதை அந்த மக்களுக்கு ஜனநாயகம் என்கின்றதோ, அதை அவர்களை மீறி படம் எடுத்தால் அங்கு மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு இலங்கையில் "ஜனநாயகம்" உள்ளது "ஜனநாயகத்தின்" பெயரில், புலி "மீட்பின்" பெயரில் மக்களை எப்படி அடைத்து வைத்துள்ளதோ, அந்த உண்மையை வெளிப்படுத்தும் படங்கள் இவை.

தங்கள் உயிர் ஆபத்தையும் மீ...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

8.கஞ்சி ஊத்த வக்கில்லே

கஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம்)

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

1.காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை

3.கருவாகி உருவான கதை

4.விசுவாச நாய்கள்

5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

6.சாத்வீகச் சதிச் செயல்

7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி

8.நிலப்பிரபுக்களின் தாசன்

9.மூக்கில் நாறிய சுயராச்சியம்!

10.அகிம்சையின் நோக்கம்

11.மகான் அல்ல; மக்கள் விரோதி!

12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை

14.மக்கள் முதுகில் குத்திய காந்தி

15."சுதந்திரம்' ஒரு கபட நாடகமே!

16.குழப்பவாதிகள்

17.படுபிற்போக்காளர்கள்

18.இந்து சநாதனி

19.சர்வாதிகாரிகள்

20.ரௌடிக் கும்பல்

21."வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

22.மேலும் சில ஆதாரங்கள்

புலிகள் சாதி மறுப்பு இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 3

புலி தனக்குள் சாதியைக் கடைபிடிக்கவில்லை என்றால், அது "முற்போக்கு" இயக்கமாம். பொது விடுதிகளில் அல்லது பொது இடங்களில் சாதி பார்க்காமல் பழகினால், அவர்கள் முற்போக்கானவர்கள். பிரதமராக இருந்த வாஜ்பேயும், ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனும்; ஒன்றாக கூடி இந்துத்துவ சாதிய ஆட்சியை தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஏவிய போது கூட, அவர்கள் தமக்குள் என்றும் சாதி பார்க்கவில்லை.

ஊர் சொத்தை கொள்ளையடித்து ஒன்றாக விருந்துண்டு கூட மகிழ்ந்தனர். தமக்குள் அவர்கள் சாதி பார்க்காமல் ஆட்சியை கடைப்பிடித்தால், அவர்கள் முற்போக்கானவர்கள். இதைத்தான் யமுனாவின் புலி "மார்க்சியம்" புதிதாக இன்று கண்டுபிடித்துள்ளது.

இப்படித்தான் யமுனா, வரலாற்றுக் கதை சொல்ல முனைகின்றார். புலிகள் தேசியத்துக்காக போராடியதாக யமுனா ராஜேந்திரன் திரிப்பதன் மூலம், தேசியமல்லாத புலி பாசிச மாபியாவின் வரலாற்றை தனக்கேற்ப திரிக்கின்றார். இதற்கமைய புலிகள் கட்டமைப்பு மற்றும் அதன் சட்டங்கள் திட்டங்களை துணைக்கு அழைக்கின்றார்.

புலிகள் தேசியத்தை.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, August 14, 2009

கோயாபல்சை விஞ்சிய இந்து என்.ராம்.

இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது. அவ்வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், ஈழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் ராஜபக்சேவின் இனவெறி அரசு, தமிழர்களை முகாம்களில் அடைத்து வதைத்துக் கொன்று கொண்டிருக்கிறது.

ஈழ இன அழிப்புப் போரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வவுனியாக் காட்டுப் பகுதியில் முட்கம்பி வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களில் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம்களுக்கு பொன்னம்பலம், ஆனந்த குமாரசாமி, தமிழ்த்துரோகி கதிர்காமர் போன்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இம்முகாம்களைப் பார்வையிட ஐ.நா. ....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகள் முற்போக்கான சட்டங்களையம், திட்டங்களையும் கொண்ட இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 2

புலிகள் தமக்குள் சாதி பார்க்கவில்லை, ஆணாதிக்கத்தை கையாள்வதில்லை, முதலாளித்துவ உறவைப் பேணுவதில்லை, பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிப்பதில்லை, எனவே அதை அவர்கள் மேல் குற்றம்சாட்ட முடியாது. "யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது." இதுதான் யமுனாவின் "மார்க்சிய" ஆய்வு.

இதை நியாயப்படுத்த, இவரைப்போல் அரசியல் ஒழுக்கக்கேட்டையே அரசியலாகக் கொண்ட பச்சோந்தியான "ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி' யை துணைக்கு அழைக்கின்றார். சமூக எதார்த்தம் மீதான விமர்சன நடைமுறையில், மார்க்சியமல்லாத புலிப் பாசிச தேசியத்தை தொழுத ஒரு மார்க்சிய விரோதியான சிவத்தம்பியின் துணையுடன், தன் முற்போக்கு கட்டுரையைத் தொடங்குகின்றார். இப்படி அண்ணன் தம்பியாக சேர்ந்து புலியை முற்போக்காகக் காட்டி பாதுகாக்க, கா.சிவத்தம்பியை கூட்டுக்கு அழைக்கின்றார். பாவம் கா.சிவத்தம்பி, "மாமனிதன்" பட்டத்தை எதிர்பார்த்து, கடைசிகாலத்தை புலி உச்சாடணம் செய்துகொண்டு கிடந்தவர். இதற்கு மேல் அவரின் "மார்க்சிய", எதார்த்தம், இயங்கிய சமூகம் மீது எந்த சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியது கிடையாது. இவர்களுடன் காலச்சுவடும், சேரனும் கூட்டுச் சேர்ந்தால், புலியின் மனிதவிரோத வரலாற்றை முற்போக்காக காட்டிவிடலாம். இந்தியாவின் முதுகு சொறிந்து கிடக்கும் இலக்கிய பிழைப்புவாதிகள் மூலம்,
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, August 13, 2009

புலிகள் முற்போக்கான கொள்கைகளை தனக்குள் கடைப்பிடித்த ஒரு இயக்கமாம்! : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல்

யமுனா ராஜேந்திரன் என்ன கூறுகின்றார். புலி தனக்குள் சாதி பார்க்கவில்லை என்றால், அது சாதிய சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலி தனக்குள் பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றால், அது பிரதேசவாதத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலிகள் தனக்குள் ஆணாதிக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், ஆணாதிக்க சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.

புலிகள் தமக்குள் முதலாளித்துவமல்லாத உறவை பேணினார்கள் என்றால், அவர்கள் முதலாளித்துவ சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். இப்படி யமுனா வலதுசாரிய பாசிசப் புலியை "மார்;க்சியம்" மூலம் ஆய்வு செய்கின்றார். இப்படி யமுனா கூட்டிக்கழித்து, புலிகள் முற்போக்கு இயக்கமாக தற்போதைக்கு காட்டுகின்றார். விரைவில் புலியை மார்க்சிய...
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, August 12, 2009

"காலச்சுவடு' டிசம்பர்'04 இதழில் ஜெயேந்திரர் கைது குறித்து ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அதில் இறுதியாக,

".... சங்கர மடத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு வார்த்தை. மடம் இன்று சந்தி சிரிக்கிறதென்றால் அதற்குக் காரணம் மடம் நடந்து வரும் விதம்தான்.... ஜெயேந்திரரை ஓரங்கட்டிவிட்டு விஜயேந்திரரின் தலைமையில் மடம் தனது வழக்கமான போக்கில் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தனிநபரை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகி விடாது. மடத்தை உண்மையான சமய ஆன்மீக அமைப்பாக மாற்றுவதற்கான போராட்டத்தை அவர்கள் மேற்கொள்வதே மடத்தின்பால் அக்கறை கொண்டவர்களின் முயற்சியாக இருக்க முடியும்.

அப்புக்களும் ரகசிய செல்பேசிகளும் தேவைப்படாத அமைப்பாக இயங்குவதற்கான சாத்தியங்களைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு, ஜெயேந்திரரையும் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் தாண்டிச் செல்லும் மனவலிமையை மடமும் அதன்...
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அமெரிக்கா: மாயை கலைந்தது உண்மை சுடுகிறது

பசி, பட்டினி ஏதுமில்லாத செல்வச் செழிப்பு மிக்க நாடு என்றும், குடிசைகளே இல்லாத நாடு என்றும் அமெரிக்காவைச் சொல்வார்கள். இங்கிருக்கும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர் களைக் கேளுங்கள்; ""அந்த சொர்க்க பூமிக்கு வேலைக்குச் செல்வதுதான் தங்கள் வாழ்வின் லட்சியம்'' என்பார்கள்.

இந்தக் கனவு தேசத்தின் மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா. எண்ணிலடங்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கும் இம்மாகாணந்தான் தமிழ்நாட்டுக் கணிப்பொறியாளர்கள் பலருக்கும் புனிதத்தலம். அமெரிக்காவின் செல்வச் செழிப்புக்கு இம்மாகாணத்தையே சான்றாகக் கூறுவர். ஆனால் இன்று அமெரிக்காவை மட்டுமல்ல; உலக முதலாளித்துவத்தையே பிடித்தாட்டும் பொருளாதார நெருக்கடி, சொகுசான அமெரிக்கக் கனவைக் கலைத்துப் போட்ட பிறகு; அமெரிக்க மக்களின் அவல நிலைக்குச் சாட்சியமாக இருப்பதும் இதே கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரான சாக்ரமண்டோதான்.

சென்ற ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்த, பொருளாதார வீழ்ச்சியால் வேலை இழந்த அமெரிக்கர்கள் பலரால் வீட்டுக் கடன்களைக் கட்ட முடியவில்லை. வாங்கிய கடனுக்கு, வங்கியிடம் வீட்டைப் பறிகொடுத்த இவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர்......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, August 11, 2009

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

2006ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றியதால் மக்கள் விடுதலைப்படையிலிருந்து விலகினார். எனினும் 2007ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 23ம்....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாட்டாளி சிந்தனையே பாசிசம் அழிய படைநகர்த்தும்

புலியழியக் காத்திருந்து.
ராஜபக்ச புத்திரரை அடியொற்றி
களமிறங்கி நிற்கின்ற காலமிது
பொறிகொண்ட வாழ்வுணரா
போக்கிரியாய் புத்திஜீவிகள்
நெறிகெட்டு கொழும்பு சென்று
நின்றுரைக்கும் கதைகேளேன்

விழிவழியே வழிகின்ற கண்ணீரோ
ஆனந்தக் கழிப்பினிலே வந்ததுவாம்
வழிநெடுக வீழ்ந்தவரோ.. புலி
அத்தனையும் சுட்டவராம்
களிகொண்டு மக்கள் முகாமில்
கால்நடை பயில்கினமாம்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 10, 2009

சி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்

கேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.

கேரளத்தின் கடற்கரையோர மீனவ கிராமமான மராத்தில், கடந்த 2002இன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு முஸ்லீம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இந்து இளைஞருக்கும், அதனை தட்டிக்கேட்ட முஸ்லீம் இளைஞருக்கும் மோதல் உருவானது. இம்மோதல் பின்னர் மதக்கலவரமாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது.

ஜனவரி 2002இ...........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்று புலிகளைக் கொண்டே பேரினவாதம் நடத்தும் இனக்களையெடுப்பு

புலிகள் தம் உயிரைக் பாதுகாக்க, வன்னியில் மக்களைப் பணயமாக்கி அவர்களைப் பலியிட்டனர். வெளிப்படையாக புலிகள் மக்கள் மேல் துப்பாக்கியை நீட்டினர். தம் பலியிட்டுக்கு அடங்க மறுத்தவர்களையும், தப்பியோடியவர்களை அடித்தார்கள் சுட்டார்கள் கொன்றார்கள். இதற்கென்று ஒரு லும்பன் கும்பலை, புலித்தலைமை பயன்படுத்தியது.

இன்று சிங்களப் பேரினவாதம் அதே வன்னி மக்களுக்குள் ஒரு பரந்த இனக் களையெடுப்பை நடத்துகின்றது. இதை புலிகளைக் கொண்டே செய்கின்றது என்பது, இங்கு மிக முக்கியமானது. புலிகள் மக்களை பணயம் வைத்து பேரினவாதம் மூலம் படுகொலை செய்த போது, மக்கள் தப்பியோட வண்ணம் புலிகள் யாரை முன்நிறுத்தியதோ, அவர்களைக் கொண்டு இந்த இனக்களையெடுப்பை பேரினவாதம் இன்று நடத்துகின்றது.

வன்னி வதை முகாமில் உள்ளவர்கள் புலிகளா என்பதை கண்டறியும் பொறுப்பு, அண்மையில் கைதான கொலைகாரப் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அதே புலி முகங்களை சந்திக்கின்றனர். அதே அவலத்தையும், அதே வேதனைகளையும் சந்திக்கின்றனர்.

அவர்கள் தம் பார்வையில்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 9, 2009

புதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்


பேரினவாதம் தன் பாசிசம் மூலமான கொடூரமான ஒடுக்குமுறையை, தமிழினத்தின் மேல் மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை. இலங்கை மக்கள் மேலான சர்வாதிகார பாசிச ஒடுக்குமுறையாகவே, புலியழிப்பை தன் வெற்றியாக்கி அதை எவி வருகின்றது. இந்த வகையில் கே.பி கைது, அதற்கு மேலும் உதவுகின்றது. இந்த வகையில் இந்த பாசிச அரசின் கொடுமையான கொடூரமான மக்கள் விரோத ஆட்சியை, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. மாபிய கே.பியின் கைதையும், நாடு கடத்தலையும், இதன் பின்னான சித்திரவதையையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அதை அம்பலப்பபடுத்தி போராட வேண்டியுள்ளது.

மறுதளத்தில் கே.பி என்ற புலி மாபிய தலைவர் அரசியல் ரீதியாக இருத்தல், தமிழினத்தின் எதிர்கால வாழ்வுக்கே எதிரானது. தமிழ்மக்க...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

வடக்கு தேர்தல் முடிவு, "வசந்தத்தின்" விடிவல்ல


சிங்கள இனவாதம் தான், தமிழ் மக்களை பெரும்பான்மை மக்களுடன் இணைய இன்று தடையாக இருப்பதை தமிழ் மக்கள் மீளவும் உணர்த்தியுள்ளனர். புலிகள் தங்கள் பாசிச வழியில் இதைச் சொன்னார்கள். தமிழ் மக்களோ தமக்கு கிடைத்த இந்த வழியில், இதை கூறியுள்ளனர். இதை சுதந்திரமாக, மக்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று சொல்ல நாட்டில் ஜனநாயகமில்லை. அரச பாசிசமே நாடு முழுவதும் ஆட்சியாக நிலவுகின்றது. தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை, இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.

1.இந்த தேர்தலால் தமிழ்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்