தமிழ் அரங்கம்

Showing posts with label தேர்தல் வாக்கு. Show all posts
Showing posts with label தேர்தல் வாக்கு. Show all posts

Wednesday, January 27, 2010

மகிந்தாவை மீண்டும் ஜனாதிபதியாக்கியது எது?

இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுபிட்சமான வாழ்வா!? இல்லை. வேறு தெரிவு எதுவும் இல்லை என்பதாலா!? இல்லை. அப்படியாயின் எது? இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட சிங்கள இனவாதம்தான், மீண்டும் மகிந்தாவை வெல்ல வைத்துள்ளது. சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிங்கள இனவாதம் தோற்கடிக்கப்பட, சிறுபான்மை இனங்கள் அதிகமாக வாழும் சிங்களப் பகுதிகளில் விளிம்பில் வெற்றி பெற்று, முழு சிங்களப் பகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் மகிந்தா.

குடும்ப சர்வாதிகாரம் பாசிசம் கொப்பளிக்கவே, இனவாதியாக மாறி தமிழ் பகுதிகளில் வாக்களிப்பை பல வழிகளில் தடுத்து நிறுத்திய மகிந்தா, வெற்றியை தக்க வைக்க முனைந்தார். யாழ்குடாவில் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தி வாக்களிப்பை தடுத்தது முதல், வன்னியில் போக்குவரத்தை முடக்கியதுடன், முழுத் தமிழ் மக்களையும் தங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து தமிழ்மக்கள் வாக்களிப்பதைத் தடுத்தனர்.

இலங்கை முழுக்க இராணுவத்தை கொண்டும், அரச அதிகாரத்தைக் கொண்டும் தேர்தலை முறைகேடாக்கி, தனது வெற்றிக்குரியதாக மாற்றினார். அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் கையாண்டு, தன் வெற்றியை உறுதி செய்து கொண்டார்.

புலிகள் எ.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, January 26, 2010

சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.

இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


குடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்

தேசப்பற்றோடு கீதம் பாடெனெச் சொல்கிறது…...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, January 25, 2010

ஜலதோஸ்ஷம் பிடித்த போனாக்கள்..

போனாக்களுக்கு ஜலதோஸ்ஷம்
'டிகிரியில்'
எகிறிக் காய்கிறது
நூற்றி எட்டில் (108 இல்).
கசாயமோ,
குடிணீரோ குடித்தும்
குலையாத குலைப்பன்.

தேர்தல் 'வைரஸ்'
பரப்பிய நோயாம்.

இன்றும் தான் பார்த்தேனே,
அடுக்கடுக்காய் கட்டில் .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார். ஹோமாகமவில் இவரின் வீட்டுக்கு அருகில் இலக்க தகடு அற்ற வெள்ளை வான் நிறுத்தப்பட்டிருந்ததை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

ஹெக்நேலியகொட ராஜகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகத்தில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் வீட்டுக்கு சென்றுக்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்



2005ம் ஆண்டு வடக்கில் தேர்தலைப் பகி~;கரிக்க மகிந்த ராஜபக்~, விடுதலைப் புலிகளுக்கு 180 மில்லியன் ரூபாவை வழங்கிய தகவல்களை டிரான் அலஸ் வெளியிட்டார்

2005ம் ஆண்டு தேர்தலைப் பகி~;கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்~ தனது அலுவலகத்தில் வைத்தே எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாவலயில் உள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்~ கேட்டுக்கொண்டதற்கமையே இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.

2002ம் ஆண்டில் தாம் முதலில் எமில் காந்தனைச் சந்தித்ததாகவும், ஜயலத் ஜயவர்தனவினால் அவர் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் எமில்காந்தன் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றி வந்ததாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்~, விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள ஒருவரை தேடித்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன் அவரிடம் தனது சகோதரர் பசில் ராஜபக்~வை அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டதாக அலஸ் தெரிவித்துள்ளார்.

எமில் – பசில் முதல் சந்திப்பு

இதன்பின்னர், தாம் எமில்காந்தனை பசில் ராஜபக்~விற்கு அறிமுகப்படுத்தியதுடன் அவர்கள் இருவரும் தமது அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்




தேர்தலை நிராகரி! புரட்சி செய்!

புரட்சி என்பது "ஆயுதப் போராட்டமல்ல". ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று. மக்கள் தம்மைத்தாம் புரட்சிகர கருத்துகள் மூலம் திரட்டிக் கொள்வதுதான், புரட்சியின் உள்ளடக்கம்.

மக்களை அச்சுறுத்துவதற்கு மக்கள் விரோதிகள், புரட்சி என்றால் அது "ஆயுதப் போராட்டம்" என்கின்றனர். இப்படி மக்களை அச்சுறுத்தி, மக்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர்.

தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்றால், தேர்தல் பற்றிய அறிவை விருத்தி செய் என்று அர்த்தம். இங்கு புரட்சி என்பது மனிதன் தன் வாழ்வையும், தன்னைச் சுற்றிய நிகழ்வையும் புரிந்து கொள்ளும் பகுத்தறிவு சார்ந்தது. இந்த பகுத்தறிவு புரட்சிகரமான சிந்தனை முறையாக, அதுவே வாழ்வியல் நடைமுறையாக, சமூகம் சார்ந்த செயல்முறையாக மாறுவது தான், புரட்சியின் உள்ளடக்கம்.

இந்த வகையில் சிந்திப்பது, செயல்படுவது தான் சரியான ஒரு அரசியல் நடைமுறை. இன்று இலங்கையில் இதை செய்யும் வகையில்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்