தமிழ் அரங்கம்

Saturday, June 13, 2009

பன்றிக் காய்ச்சல்: பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!


கடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Friday, June 12, 2009

குற்றங்களை மூடிமறைக்கும் அறிவியலும், அரசியல் பித்தலாட்டங்களும்

மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள்.

இன்று புலிப் பாசிசத்தை அழித்துவிட்ட அரச பாசிசம் தானே அனைத்துமாகி, பிசாசாக மாறி நிற்கின்றது. இந்தப் பாசிச அரசைப் பாதுகாக்;கின்ற, அறிவுசார் தில்லுமுல்லு அரசியல் வேலைகள். புனைபெயரில் உலாவும், புலுடாப் பேர்வழிகள்.

இவர்கள் மனிதனுக்கு எதிராக இழைத்த குற்றங்களையும், அதன் அரசியல் அடித்தளத்தையும் பாதுகாக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கு விபச்சாரம் செய்யும் ஊடகத்துறை. இழிவான நடத்தைக்கு ஏற்ப, கள்ள மௌனங்கள். வேறு சிலர் நடத்தவற்றை, ......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈழம், புலி, புலம்


பாராளுமன்ற சொகுசுகளுக்காக தமிழ்மக்களை விற்ற தமிழர்விடுதலைக்கூட்டணி, இந்தியாவுக்குச் சோரம் போன ரெலோ தலைமை, தொடர்ந்த ஈ.பி.ஆர்.எல் எவ் தலைமை, ஈ.என்.டி.எல்.எவ் தலைமை, இலங்கை அரசுக்கு சோரம் போன புளொட் தலைமை, ஈ.பி.டி.பி தலைமை, ரி.எம்.வி.பி தலைமை, புலிகளைச் சரணடைந்த ஈரோஸ் தலைமை, யாரோ ஒரு தரப்பினரிடம் சரணடைய முயற்சித்த/ சரணடைந்த புலித் தலைமை….. என்று தமிழ்மக்களின் இன்றைய அவலத்துக்கு அனைத்துத் தலைமைகளும் காரணமாயின. இதில் புலிகள் மீது மட்டும் குற்றத்தைச் சுமத்திவிட்டு மற்றையவர்கள் தப்பிவிட முடியாது.

பெரும் இருபது நாடுகள் (G 20) மாநாடு: அமெரிக்காவின் நயவஞ்சகம், இந்தியாவின் துரோகம்!


‘‘இப்பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்குச் சலுகை அடிப்படையில் கடன்; மேற்குலக நாடுகளின் சந்தையை எவ்விதத் தடையுமின்றி ஏழை நாடுகளுக்குத் திறந்து விடுவது; சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வேட்டையாடிக் கொண்டு வருவது; தேவைப்படும் நிதி ஆதாரங்களைச் சந்தையில் கொட்டுவது” என இம்மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இம்மாநாடு நடந்து............
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, June 11, 2009

காலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்

களமாடி மடிந்தவர்கள்..எம் இனத்தின்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது

புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை - உபாலி கூரே

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப்படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள்பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்கவேண்டும்.

முதலாவதாக உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. “இலங்கை இராணுவம்தான் உலகின் மிக உயர்ந்த இராணுவம்” என்பது போன்ற உரிமைகோரல்கள் ஐயத்துக்கிடமின்றித் தவறானவை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இறுதிச் சில மாதங்களாக நடந்த இராணுவ நடவடிக்கைகளில் 6000க்கும் அதிகமான இராணுவச் சிப்பாய்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் அதிகமானவர்கள் மோசமாகக் காயம்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இதனை, இந்திய அமைதிப்படை இரண்டு வருடங்கள் தரித்திருந்தபோது கொண்டு வந்த இழப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமானது. அந்த நேரத்தில், ஜேவிபியினாலும் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலராலும் தூண்டப்பட்டு, அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவினால் இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமையைச் சுற்றி வளைத்தார்கள். விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ளும் இறுதிப்பேரத்தினை அண்மித்திருந்தார்கள். அந்த நேரத்தில்கூட இந்திய அமைதிப்படை ஆயிரத்துக்கும் சிறிதளவு...............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மகிந்தாவுக்கு குடைபிடிக்கும், திரோஸ்கிய அழகலிங்கத்தின் ஓட்டுண்ணித்தனம் - நன்றி - தேசம் வாசகர்கள்


அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்......... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 10, 2009

பிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம் -3

புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.

பேரினவாத பாசிசம், இதில் எப்படிப்பட்ட குற்றத்தை இழைத்துள்ளது.

1. சரணடைந்தவர்களை படுகொலை செய்து, பாரிய யுத்த கிரிமினல் குற்றத்தைச் செய்துள்ளது

2. குழந்தைகளை.........
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகளின் போராட்டத் தோல்வியும்… வால் பிடிகளின் கொண்டாட்டமும்…


எங்கள் தலைவன், தேசியத்தலைவன் என்று வாய் ஓயாமல் கத்தியவர்கள்… தலைவன் காலத்திலே தமிழீழம் கிடைத்து விடும் என்ற ஆழமான எதிர்பார்ப்பினை தங்களோடு வளர்த்துக் கொண்டவர்கள் இன்று மனதாலே பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் உள்ளார்கள். இவர்கள் விசுவாசிகள். அமைப்பு மீதும், தலைவர் மேலும் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள். இப்படியொரு சந்தர்ப்பத்தில் இந்த உண்மை விசுவாசிகள் உடைந்து போவது தவிர்க்க முடியாதது. வேறு சிலரோ இன்று எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக உள்ளார்கள். தலைவர் சாகமாட்டார் அவரை யாராலும் சாவடிக்க முடியாதென்ற மிதமிஞ்சிய கற்பனையிலும், எதிர்பார்ப்பிலும் காலத்தை கழிக்கிறார்கள்.

இன்னும் சிலர் கிடை
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

குஜராத் இனப்படுகொலை: பாதிக்கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்!

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி எரிந்து போனதை, பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஊதிப் பெருக்கி, அவ்வழக்கை காலாவதியாகிப்போன பொடா சட்டத்தின் கீழ் நடத்தி வந்தது, குஜராத் அரசு. “இச்சம்பவத்தைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது; எனவே, இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கோத்ரா சம்பவம் தொடர்பான தனது பித்தலாட்டங்களை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மோடி அரசு, தனது கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது.

ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்

அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.

இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் ஈராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச்சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.

"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 8, 2009

பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்

இராணுவத்தின் வெற்றிகரமான இனவழிப்பின் போது, பெண்களுக்கு நடந்த அவமானத்தை உறுதிசெய்யும் வண்ணம் இராணுவம் எடுத்த நிர்வாணப்படத்தை அதிரடி இணையம் வெளியிட்டு இருந்தது. அதிரடியில் தொடர்ச்சியாக எழுதும், கிழக்கான் ஆதம் என்ற நபர், 'இராணுவத்தினரை விட புலிகளே செய்திருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளது." என்று எழுதுகின்றார்.

அதிரடி ஆசிரியர்கள் இதை வெளியிட்டு, தம் மறுப்பை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அதிரடியின் நிலை என்பது, பொறுப்புமிக்கதும் ஆரோக்கியமானதுமாகும். அத்துடன் இன்னும் பல படங்கள் தமக்கு கிடைத்ததாகவும் கூட அறிவித்துள்ளனர்.

கிழக்கான் ஆதம் எழுதுகின்றார் 'அப்பெண் போராளிகள் இராணுவத்தினரால் தான் நிர்வாணமாக்கப்பட்டனரா? என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அதில் காண முடியவில்லை மாறாக பல சந்தேகங்களே தொக்கி நிற்கின்றன. அவைகளை நோக்கும் போது தங்கள் சக போராளிகளால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவைகள் புகைப்படங்களாக்கப்பட்டு இறுதியில் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் போலத்தான் அவை தெரிகின்றன." இங்கு பேரினவாத ஆணாதிக்க இராணுவத்தைக் காப்பாற்றும்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்

தர்மச்சக்கரத்தில் உலகைச் சுழற்ற..புதிதாய்
தலைவர் வருகிறார்
புலத்து தமிழா தெருவில் இறங்கு
கொடியைத் தூக்கு
விடியலைத்தரும் சூரியதேவன்

படத்தைத் தாங்கு
உலகை வெல்ல கருத்தே கேட்கிறார்
அடங்கிப்போன ஆய்வாளர்களே
எழுதுகோல்களை எடுங்கள்
புதிய உலக ஒழுங்கின் இராஜதந்திரமாம்
வென்று காட்டுங்கள் ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, June 7, 2009

பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)

பேரினவாதம் தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்க எடுக்கும் பாரிய முயற்;சிகள் ஒருபுறம். இதற்கு மறுபுறம் இந்தியா முதல் பல நாடுகள் இன்று துணை நிற்கின்றது.

மறுபக்கத்தில் இவை ஒவ்வொன்றாக அம்பலமாகின்றது. பெண்கள் மேல் இராணுவம் நடத்திய பாலியல் யுத்தம் மூலம், யுத்தம் வெல்லப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆணாதிக்க பண்பின் ஊடாக, யுத்தம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் தான், சிங்கள மேலாதிக்க பாசிச திமிருடன் இன்று நாட்டை ஆளுகின்றனர். பெண்களை நிர்வாணப்படுத்தி ரசித்த ஆணாதிக்க படைக்கு, நன்றி தெரிவித்து கொண்டாட்டங்கள் வேறு. கம்யூனிசத்தின் பெயரில் இனவாதம் பேசும் ஜே.வி.பியும் அதன் தலைவரும், இந்தக் குற்றத்தை விசாரித்தால் தங்கள் பிணத்தின் மேலாகத்தான் இது நடக்கும் என்று கொக்கரிக்கின்றனர். ........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்