தமிழ் அரங்கம்

Friday, November 6, 2009

உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய் ஓடிற்று. இந்தத் தத்தளிக்கும் தீக்கடலிலிருந்து இரக்கமற்ற அப்பட்டமான வர்க்கப் போராட்டமும், புதிய கிரகங்களது மெல்லக் குளிர்ந்து கெட்டியாகும் மொறுமொறுப்பான மேலோடும் உருவாகி வெளிப்பட்டன.

ரசியப் புரட்சி இரண்டு அங்கங்களைக் கொண்டது. முதலாவது, பழைய ஆட்சியினை ஒழித்திடுதல், இரண்டாவது புதிய ஆட்சியினை உருவாக்குதல்.

ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 5, 2009

முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!

வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.


அவர் குடும்பத்தினர்þ சலீமை உடனே பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அம்மருத்துவமனை, ஆரம்ப பரிசோதனை செய்துவிட்டு சலீமை உள்நேõயாளியாகச் சேர்த்தது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு முன் "முன்னெச்சரிக்கை'' நடவடிக்கை என்ற பெயரில் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே நோய் பரவாமலிருக்க கிருமி நாசினிகள்þ முகமூடிகள், சோப்புகள், துப்புரவுக் கைக்குட்டைகள் மற்றும் வைட்டமின் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவமனை பரிந்துரைத்தது.

இறுதியாகþ நான்காவது நாளில்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 4, 2009

“ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்

இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.

-ஆசிரியர் குழு

பு.ஜ: கல்வியறிவு பெற்றவர்கள் எனக் கூறப்படும் யாழ்ப்பாணத் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எந்த அடிப்படையில் சகித்துக் கொண்டார்கள்? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்ற அபாயம் காரணமாகவா? இல்லை, தமிழ்ச் சமூகமே ஜனநாயக மறுப்புத் தன்மையுடைதாய் இருந்து வருகிறதா?

சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித்தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும்போது, மஹாராஜா போன்ற ஒரிருவரைத்தான்... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

போர்க் குற்றம் : அமெரிக்க ஏகாதிபத்திய சதிராட்டமும், பேரினவாதத்தின் சூழ்ச்சியும்

தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களும் துயரங்களும், இன்று குறுகிய நலன்களுடன் அரசியல் ரீதியாக விலை பேசப்படுகின்றது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முதல் மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சியைத் தக்க வைக்கும் எல்லைகள் வரை, தமிழ் மக்களின் அவலம் அரசியலாக்கப்படுகின்றது.

ஆளும்வர்க்க வலதுசாரிய பாசிட்டுகளுக்குள்ளான முரண்பாடுகள், ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் வெளிப்படையாகவே தாளம் போடத் தொடங்கிவிட்டது. போர்க் குற்றத்தில் ஈடுபட்ட குற்றக் கும்பல், தமக்குள் எதிரணியாக மாறி நிற்கின்றது. முரண்பட்ட எகாதிபத்திய நலன்கள், இதை தனது நலனுக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இலங்கையின் எதிரணி அரசியல் கூட, இந்தப் போக்கில் பிளவுபட்டு வருகின்றது. பரஸ்பரம் போர்க்குற்றத்தை காட்டிக்கொடுப்பதில்லை என்று கூறிக்கொண்டு, ஒன்றையொன்று குழிபறிக்கின்றது. இதையே சரத் பொன்சேகா "யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்கின்றார். இதன் மூலம் காட்டிக்கொடுக்க போர்க் குற்றங்கள் உண்டு என்பதும், வெளிப்படையாக..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 3, 2009

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…

கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………

தமிழ் மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவக்குழியைத்தான் வெட்ட முடியும். கடந்த காலத்தில் அதை செய்து முடித்த பெருமை எங்களைச் சாரும். மனித உணர்வுகளை மறுத்து, அவற்றை சவக்குழிகளில் தோண்டிப் புதைத்தவர்கள் நாங்கள். இதுவே எம் கடந்தகால வரலாறாகிவிட்டது.

நாங்களோ மந்தைகளாக இருந்தோம். இதனால் எம்மினம் இன்று அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னமும் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை.

ஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது!....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, November 2, 2009

கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும்.

இலங்கையில் தேர்தலுக்கான பரபரப்புக்கள் தொடங்கி விட்டன. அங்கைமாறி இங்கமாறிக் கதைப்பதும், விலைக்கு வாங்குவதும், வழமைபோல் இந்தத் தரகுகளை வளைத்துப் போடுவதுமாக களைகட்டத் தொடங்குகிறது தேர்தல் வியாபாரம்.

அரசில் இருக்கும் மகிந்தா பக்கம் சுளையாக யுத்த வெற்றியை கையில் வைத்திருக்கிறது. இதைத் தமது பக்கம் இலேசாகச் சாய்பதற்கு சரத்பொன்சேகாவை நாடுகிறது ரணிலின் பக்கம். இப்படி படு உசாரான தேர்தலாக இது களைகட்டுமாப்போல் தெரிகிறது.

இதன் பிறிதொரு அங்கமாக வன்னிமக்களின் முகாம் பிரச்சனை நிலுவையாக இருக்கிறது. பிரிட்டனில் இருந்து வன்னிக்கு வந்துபோன பிரதிநிதிகள்: பருவ மழைக்குள்ளும் இம் முகாம்கள் இப்படியே இருந்தால், பாரதூரமான தொற்று நோய்களும் மனித அவலங்களும் நிகழுமென அது எச்சரித்தது. மழைகாலம் வரும் முன்னே வடிகால்களை அமைத்து
... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, November 1, 2009

கொல்வதோ அரசின் உரிமை! அதை ரசிப்பதே சமூகத்தின் கடமை!

இலங்கையின் ஜனநாயகம் இதுதான். இதற்குள் தான் சட்டம் நீதி, சமூக ஒழுங்கு என அனைத்தும் இயங்குகின்றது. நாட்டின் அதிகார வர்க்கம், தான் விரும்பியவர்களை எதுவும் செய்ய முடியும். மக்கள் முன் ஈவிரக்கமின்றியே அடித்துக் கொல்லுகின்றது. சூடு சுரணையற்ற சமூகம், அதை வேடிக்கையாகவே பார்த்து ரசிக்கின்றது.


இலங்கை பாசிச சமூகம் எப்படி இருக்கின்றது என்பதற்கு, இந்தக் வீடியோ காட்சி ஒரு நல்ல உதாரணம். கொல்வதில் எந்த ஓளிவு மறைவும் கிடையாது. இப்படி நடப்பதே அதிகார வர்க்கத்தின், கேள்விக்கிடமற்ற கொலைத் தொழிலாக உள்ளது. இதைச் செய்வதை நியாயப்படுத்தும் அரசியல் தான் பூத்துக் குலுங்குகின்றது. இதற்கு இனம், நிறம், சாதி, பால், பிரதேசம், அதிகாரம் என, எது வேண்டுமென்றாலும் ஒரு காரணியாக இருக்;கலாம்.

இந்த நிகழ்வு தற்செயலாகவே..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்னமுமேன் தெருவிறங்கு.......

குமுறும் அலைதிரண்டு
தூக்கி கரைபோவென எறிகிறது
எகிறியே அசையாகொலை வெறியொடு
கோலெடுத்தோங்கி அறையும் அரக்கத்தனம்
பாசிசம் வளர்த்தெடுத்த காவற்படை
மனிதமிளந்து மிருகமாய்...

ஆற்றில் தத்தளித்த உயிரை
காத்தசிறுவனை பெற்ர நாடு
கையேந்தி நின்ற பேதலித்த இளைஞனை....

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்