தமிழ் அரங்கம்

Saturday, April 18, 2009

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.

சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து இருப்பதில்லை.

இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு...........
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்", 'இடதுசாரிகளும்" ஒரு அரசியல் புள்ளியில் சந்திக்கின்றனர்

அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை இன்று எதை புலிகளிடம் கோருகின்றனரோ, அதே அரசியல் கோரிக்கையுடன் கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்", 'இடதுசாரிகளும்" அனைவரும் இணைகின்றனர். புலியிடம் சரணடை, ஆயுதத்தை கீழே வைக்கி என்கின்றனர். இதற்கு மாற்றாக, இவர்கள் ஏதாவது கோரிக்கையை வைக்கின்றார்களா!?

இல்லை, இங்கு நாங்கள் மட்டும் இதற்கு மாற்றாக வைக்கின்றோம். கடந்தகாலத்தைப் போல் இன்றும், இதில் தனித்து ஒரு போராட்டத்தை தனித்துவமாக நடத்துகின்றோம்.

புலிகளின் இன்றைய சுதந்திரமான இருப்புக்கான நாட்கள் எண்ணப்படுகின்றது. அவர்கள் முற்றாக போராடி அழிவதா, துரோகம் செய்து பிழைப்பதா என்பதோடு, ஏகாதிபத்திய தலையீடுகளுடன் முடிவுக்கு வரவுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடியில் புலியை விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும், இன்று ஓரே அரசியல் முடிவுக்கு வருகின்றனர். சரணடை என்கின்றனர், ஆயுதத்தைக் கீழே போடு என்கின்றனர்.

இதை அன்று கூ
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வருண் காந்தியை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் கும்பலையே தடை செய்

"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.....'' என்றொரு பழமொழி சொல்வார்களே, அதற்கு முற்றிலும் பொருத்தமானது பாரதீய ஜனதா கட்சி. அந்தக் கட்சி எவ்வளவுதான் தன்னை நவீனமாகக் காட்டிக் கொண்டாலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மக்களாக இருந்தாலும், அக்கட்சியாலும் அதன் தலைவர்களாலும் முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்காமல் அரசியல் வாழ்வில் ஒரு நொடிப்பொழுதைக்கூடக் கழிக்க முடியாது.

உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலிபிட் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வருண் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் அத்தொகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ""இது (காங்கிரசின் சின்னமான) கையல்ல இது (பா.ஜ.க.வின் சின்னமான) தாமரையின் சக்தி; இது தேர்தலுக்குப் பிறகு முஸ்லீம்களின் தொண்டையை அறுத்து விடும்'' (ஆதாரம்: தி ஹிந்து, 24.03.2009, பக்.10) எனப் பேசியதோடு, ""சுன்னத்'' செய்வது போன்ற செய்கையையும் காட்டி முஸ்லீம்களை இழிவுபடுத்தியிருக்கிறான். மேலும், ""யாராவது ஒருவர் இந்துக்களை நோக்கி ஒரு விரலை நீட்டினாலும், அந்தக் கையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்'' என்றும் (ஆதாரம்: தி ஹிந்து, 18.03.2009, பக்.1) வருண் காந்தி ஊளையிட்டுள்ளான்.

நேரு குடும்பத்தின் வாரிசா...............
........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 17, 2009

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது


புலிகள் எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுமிராண்டிகளாக, பண்பாடற்றவர்களாக உறுமுகின்றார்களோ, அந்தளவுக்கு தமிழ் இனத்தில் எலும்பு சிதிலங்கள் மட்டும் எஞ்சுவதை யாரும் தடுக்கமுடியாது. பேரினவாதம் மிகவும் பலமான நிலையில், தமிழ் இனத்தை புலிகளைக் கொண்டே அழிக்கின்ற எதார்த்தத்தை, ஒரு காலமும் தமிழ் இனம் தானாக எண்ணியிருக்கமாட்டது. பேரினவாதத்தின் சூழச்சிமிக்க அரசியல் நரித்தனத்துக்கு எதிராக, நியாயமான ஒரு போராட்டம் (அரசியல் மற்றும் இராணுவம்) அவசியமாக இருந்த போது கூட, அதை நியாயமான மக்களின் கோரிக்கைளால் தனிமைப்படுத்தி வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் ஆளுமை காட்டுமிராண்டிகளுக்கு எப்போதும் கிடையாது என்பதை தமிழினத்தின் சார்பாக மீண்டும் புலிகள் நிறுவிவருகின்றனர்.

புலிகள் இயக்கமே பதவி வெறியர்களாலும், கொள்ளையடிப்போராலும், சுத்துமாத்துகாரர்களும், ஒட்டுண்ணிகளாலும், பிழைப்புவாதிகளாலும் சூழப்பட்டுவிட்டது. அது இன்று ஒரு போராட்ட இயக்கமே அல்ல என்ற நிலைக்கு, படிப்படியாக தனக்குத் தானே நஞ்சிட்டு சீரழிந்து சிதைந்து வருகின்றது. இந்த சிதைவுகள் சமூகத்துக்கே நஞ்சாகின்றது. தியாகங்கள் எல்லாம் சிலரின் நலனுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகளை பயன்படுத்தி தாம் நன்றாக வாழமுடியும் என்று நம்புகின்ற பொறுக்கிகளின் கூட்டமே, புலியைச் சுற்றி இன்று கும்மாளமடிக்கின்றது. புலிகளின் பின் இருந்த சில அரசியல் இலட்சியங்கள் எல்லாம் கண்காணாது தொலைந்து போகின்றது. புலித் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள், ஏன் புலித்...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?


ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் .........
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா?

துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.

ஏன்? புலியின் அழிவை நாம் அரசியல் ரீதியாக புரிந்துகொண்ட விதம் தான், இதை எம்மால் உறுதியாகவும் தீர்மானகரமாகவும் கூறமுடிகின்றது. புலியின் அழிவை முன் கூட்டியே நாம் சொல்ல முடிந்தது என்பது, புலியின் அழிவை புரிந்து கொண்ட அரசியல் அடித்தளத்தின் மூலம் தான். அதன் வர்க்க அடித்தளத்தை மட்டுமல்ல, அந்த வர்க்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாட்டையும் அடிப்படையாக கொண்டு, இந்த அழிவை பற்றி நாம் முன் கூட்டியே எம் கருத்தை முன்வைக்க முடிந்தது.

புலி எப்படி அழிந்தனர் என்று பார்த்தால், மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு தா
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 16, 2009

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும் ஒன்று எப்போதும் முன்னிலை பெற்ற போதும், மக்கள் இயக்கம் என்பது அந்த ஒன்றுக்குள் மட்டும் குறுகிவிடுவதில்லை.

ஒரு முரண்பாடு சார்ந்து ஒரு குறுகிய எல்லையில் போராட்டம் குறுகும் போது, அது இயல்பாகவே வறட்டுத்தனமாக மாறிவிடுகின்றது. இதனால் மக்களிடையே நிலவும் அனைத்தும் தழுவிய பன்முக முரண்பாடுகளை எதிராக பார்க்கின்ற அதேநேரம், அதை ஒடுக்குகின்ற போக்கும் வளர்ச்சியுறுகின்றது. உண்மையில் இந்த குறுகிய வரட்டுத்தனமான தன்மை என்பது, பிரதான முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய வகையில் பார்ப்பதை படிப்படியாக மறுத்துவிடுகின்றது.

பிரதான முரண்பாட்டை சுரண்............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

துரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும் : நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -4)

புலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம்! தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் புலிகள் சேர்வதையிட்டு, எமக்கு (பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கூறுகின்றனர்) அக்கறையில்லை என்கின்றனர்.

இப்படி துரோக அரசியல் மோசடி ஒருபுறம். மறுதளத்தில் புலிகள் பற்றி விவாதிக்க தேவையில்லை என்;று கூறிக்கொண்டு, அவர்களை சரணடையக் கோருகின்றனர். துரோகத்தை செய்யும்படி கோருவோம், ஆனால் துரோகத்தை செய்யாதே என்று கூறுவது பற்றி விவாதிப்பது எமது வர்க்கத்தின் அரசியலில்லை என்கின்றனர்.

சொந்த துரோக அரசியல் விவாதத்தில் இருந்து தப்பவும், விவாதம் செய்ய முடியாத நிலையிலும், சந்தர்ப்பவாதமாக தொடர்ந்து இருக்கவும், சமகாலத்திய விடையத்தில் மௌனத்தை அரசியல் ஆக்குவது தான் பலரின் அரசியல் மோசடித்தனமாகும். இதற்காக அவர்கள் இது எம் வர்க்கத்தின் பிரச்சனையில்லை என்று கூறிக்கொண்டு மெதுவாக நழுவுகின்றனர். இந்த சமூக அமைப்பில் அனைத்து இயக்கமும், வர்க்க எல்லைக்குள் இருக்கின்ற போது, அது எமது வர்க்க பிரச்சனையில்லை என்று கூறி நழுவுவது சந்தர்ப்பவாத அரசியல்.

தேசிய இனப்பிரச்சனை எம்......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அயோத்தி ராமனா? அய்யோ பாவ ராமனா?

பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?

அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.

ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது?

பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் .........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 15, 2009

புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!

முகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.

1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும்? புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன?

2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று? இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க?

3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்?

இவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இழப்பைக் காட்டி தப்பிப்பிழைக்கும் அரசியலும், துரோகத்ததை செய்யக் கோரும் அரசியலும் : நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -3)

புலிகள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடி என்பது, இன்று இரண்டு வழிகளில் மட்டும்தான் தீர்க்கப்பட முடியும்.

1. துரோகத்தை செய்யும் ஒரு சரணடைவு
2. இறுதிவரை போராடி மடிவது.

இதற்கு வெளியில் புலிகள் தம் சொந்த வழியில் மீள்வது என்பது, இன்றைய இராணுவ சுற்றிவளைப்பில் சாத்தியமற்ற ஓன்றாக மாறிவிட்டது. இதை அவர்களே கைவிட்டுவிட்டனர்.

இந்த நிலையில் புலிகள் இறுதிவரை போராடி மடி என்று, நாம் மட்டுமே கோரியிருக்கின்றோம். ஏன் புலி கூட இதை முன்வைக்கவில்லை. மாறாக அவர்கள் துரோகத்துக்கே தொடர்ச்சியாக முனைகின்றனர். இந்த நிலையில் நாம் மட்டும்தான், இப்படி மடிந்தவர்களுக்கு தலை சாய்த்திருக்கின்றோம். புலிகள் கூட இதுவரை அஞ்சலி செலுத்தவில்லை. துரோகத்துக்கு பதில், அவர்கள் தம் தியாகத்தையே அரசியல் ரீதியாக இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டை

பு.ஜ. வின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாத பெரியாரிய தமிழினவாதக் குழுக்கள் அவதூறுகனை அள்ளி வீசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சித்து புதிய ஜனநாயகம் இதழ், ""காக்கை குயிலாகாது'' என்ற கட்டுரையைக் கடந்த ஜனவரி இதழில் வெளியிட்டிருந்தது.

இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் இயக்கம் நடத்தும் குழுக்கள் எவையும் இதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில், பெரியார் தி.க.வின் பத்திரிக்கையான பெரியார் முழக்கம் "வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்' எனும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது.

வி.பி.சிங் பற்றிய பல்வேறு கேள்விகள் எழுவதால் பெ.தி.க. தொண்டர்களைத் திருப்திப்படுத்திடப் பல்வேறு முரண்களோடும் திரிபுகளோடும் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

எந்தப் பிரச்சினையிலும் மாற்றுக்கருத்தை வைத்திருப்பவர்களை எல்லாம் பார்ப்பனர் என லென்ஸ் வைத்துத் தேடும் மலினமான மரபு தமிழகத்தில் நிலவுகிறது. நம்மை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதபோது ""மறைமுகப் பார்ப்பனியம்'' என அவதூ................
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 14, 2009

அரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது


முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.

ஆனால் அது வர்க்க முரண்பாடல்ல. சொந்த வர்க்கத்தின் அதிருப்திகள் தான், புலியை தோற்கடிக்கும் முரண்பாடாகியது. இதனால் தான், உள்ளிருந்து புலி தோற்கடிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக புலிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகவில்லை. உள் (தனிமனித) முரண்பாடுகள் தான், புலிக்கு எதிரானதாக வெளிப்படுகின்றது. ஆனால் அது இன்று புலியின் அழிவாக மாறி நிற்கின்றது. தமிழ் மக்களின் எதிரி மூலம் அழிகின்றது.

இன்றைய இந்த நெருக்கடியில் பிரதான எதிரிக்கு எதிராக புலிகள் துரோகம் செய்யாது போராடினால், புலிகளின் இறுதி முடிவு என்பது அறுதியானதுதானதும், முடிவானதுமா...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

உண்மையை எழுதினால் உயிர் இருக்காது

இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கும், கொலைவெறித் தாக்குதலுக்கும் பத்திரிகையாளர்கள் கூடத் தப்பவில்லை. அரசின் இனவெறியையும், பாசிச நடவடிக்கைகளையும் எதிர்த்து எழுதும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், கடத்திக் கொல்லப்படுவதும் அங்கு தொடர்கதையாகியுள்ளது.

கிளிநொச்சியைப் பிடிப்பதற்கான போர் தொடங்கியதிலிருந்து இதுவரை முக்கியமான பத்திரிகையாளர்கள் பதினாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. பலர் எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ""சண்டே லீடர்'' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசாந்தா விக்கிரமதுங்கா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது எழுத்துக்கள், உலக அரங்கில் இலங்கை அரசைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தன. லசாந்தா கொல்லப்படுவதற்கு முன்பு எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையில், தான் இலங்கை அரசால் கொல்லப்படப் போவது நிச்சயம் என்றும், ஏற்கெனவே தான் இருமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவர...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 13, 2009

நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -1)

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

அரசியலற்ற எம் சமூகத்தில், தனிமனித முனைப்புகள் அகவயமான முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. அகவயமான, மானசீகமான விருப்பத்தை, சமூகத்தின் பொதுக்கருத்தாக கருதி முடிவுகளை எடுக்கின்றனர். இவை குறுகிய தன் அரசியல் எல்லைக்குள் முடங்கி, வெம்பி வெளிப்படுகின்றது. இதையொட்டிய பல்வேறு விடையங்கள் மீதான அரசியல் கேள்விகள், விவாதங்கள், அவதூறுகள் மேலான தத்துவார்த்த விவாதம் இது.

நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -1)

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

அரசியலற்ற எம் சமூகத்தில், தனிமனித முனைப்புகள் அகவயமான முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. அகவயமான, மானசீகமான விருப்பத்தை, சமூகத்தின் பொதுக்கருத்தாக கருதி முடிவுகளை எடுக்கின்றனர். இவை குறுகிய தன் அரசியல் எல்லைக்குள் முடங்கி, வெம்பி வெளிப்படுகின்றது. இதையொட்டிய பல்வேறு விடையங்கள் மீதான அரசியல் கேள்விகள், விவாதங்கள், அவதூறுகள் மேலான தத்துவார்த்த விவாதம் இது.

புலி-புலியெதிர்ப்பு அரசியல் அடித்தளத்தில் மக்களை கொல்லுவதன் மூலம், புலியை பாதுகாத்தல் - புலியை அழித்தல் என்ற நிகழ்ச்சி நிரல் அரசியல் நெருக்கடியாகவில்லை. புலி-புலியெதிர்ப்பு வெளிப்படையாக இல்லாத பொதுத்தளத்தில், அரசியல் நெருக்கடிகளை இது உருவாக்குகின்றது. பொதுவாக இது

1. புலிகளின் இறுதி முடிவு எப்படி அமையும்
2. புலியல்லாத சூழல் மீதா......
.முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

போலீசின் நீதிமன்றத் தாக்குதல் பஞ்சு மிட்டாய் தீர்ப்பு

பிப்ரவரி 19 உயர்நீதி மன்றத் தாக்குலுக்கு எதிராக தமிழக வழக்குரைஞர்கள் ஒரு மாத காலமாக நடத்தி வந்த நீதிமன்றப் புறக்கணிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத் தாக்குதலுக்குப் பொறுப்பான இரு போலீசு அதிகாரிகளை (ராமசுப்பிரமணியம், விசுவநாதன்) தற்காலிகப் பணிநீக்கம் செய்வதாக, 18.3.09 அன்று முகோபாத்யாயா தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடுவதாக வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு 20.3.09 அன்று மாலை அறிவித்திருக்கிறது. புறக்கணிப்பு கைவிடப்பட்ட போதிலும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரையில் பிற வடிவங்களிலான போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டக்குழு கூறியிருக்கிறதே தவிர, என்ன விதமான போராட்டங்கள் நடத்தப்படும் என்பது குறித்து விளக்கவில்லை.

போராட்டங்களில் வெற்றிதோல்வி சகஜம்தான்; பிழைப்புவாத சங்கத் தலைமைகள் போராட்டத்துக்குத் துரோகமிழைப்பதும் சகஜம்தான். எனினும், இந்தத் தலைமையால் ஒரு தோல்வியை வெற்றியாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் இதனை ஒரு வெற்றி என்று நம்பவில்லை; எனினும், இந்த முடிவை எதிர்க்கவும் இல்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 12, 2009

ஆயிரம் ஆயிரமாக மக்களை பலியெடுக்கவும் - பலிகொடுக்கவும் தயாராகின்றனர் பாசிட்டுக்கள்

எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் மக்களை கொல்லும் திட்டம் என்னவோ தயாராகவே உள்ளது.

தாம் விரும்பும் இந்த படுகொலைகளை உலகறிய வைக்கவேண்டும் என்பதே, இன்று புலியின் இலட்சியம். இதை மூடிமறைக்க வேண்டும் என்பது, பேரினவாதத்தின் இலட்சியம். இந்த எல்லைக்குள் தான் இவர்களின் தர்மம், தார்மீகம், மனிதவுரிமை என்று எல்லாம். இதை மூடிமறைக்கவே, இவர்கள் மக்கள் என்கின்றனர்.
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகிற்கும் வெட்கமில்லை: ஏன் யாருக்கும் வெட்கமில்லை..

இன்று தமிழ் மக்களின் தலைவிதி, தன் தொங்கல் சீலையை நீட்டி மடிப்பிச்சை கேட்கிறது. மக்கள் சக்தி என்னும் கோட்டையில் நம்பிக்கை இழந்த ஒரு போராட்டம், மக்கள் மட்டுமே வரலாற்றை உந்தித் தள்ளுபவர்கள் என்ற உண்மையை உதாசீனம் செய்தவர்கள் இன்று அவ் வரலாற்றாலேயே பரிதாபமாகத் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பரிதாப நிலைக்கு புலிகளை மட்டும் பொறுப்பாளி ஆக்கி விடுவது, சரியாகாது. இன்று புலி எதிர்ப்புப் பேசிக்கொண்டு, இன்றைய தமிழ் மக்களின் அவலநிலையில் இருந்து தமது வரலாற்றுக் கறைபடிந்த கைகளை புலியின் இரத்தத்தில் கழுவ நினைக்கின்ற இவர்கள் ஒரு முறை தமது வரலாற்றை நேர்மையாகத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்