தமிழ் அரங்கம்

Saturday, July 7, 2007

புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

கணவன் மணைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

பி.இரயாகரன்
07.07.2007

இருவர் இணக்கத்தை அடைவதற்கான ஜனநாயக மனப்பாங்கின்றிய இணக்கமற்ற முரண்பாடுகள் என்பது, இன்று பல குடும்பங்களில் அடிப்படையான பிரச்சனையாகி உள்ளது. இணக்கதையொட்டி வாழ்வியல் மொழியைக் கூட சமூக இழந்து நிற்கின்றது. பல குடும்பங்களில் வேறு விதமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழ்க்கை முறைகள், குடும்பத்தினுள்ளேயே நடைமுறைக்கு வந்துவிடுகின்றது. மனைவி ஒருபுறம் கணவன் மறுபுறம் என்றால் குழந்தைகள் வேறுபுறம்.

இந்த முரணிலையில் பொதுவாகவே (புலம்பெயர்) ஆண்கள் குடிப்பவர்களாக இருக்கின்ற பொதுவானநிலை காணப்பட்டது, காணப்படுகின்றது. இதைக் கையாளும்விதம் ஆண் பெண் முரண்பாட்டில் பாரிய எதிர்நிலைத் தன்மைகொண்ட ஒன்றாகவே மாறிநிற்கின்றது. இப்படித்தான் அநேக பிரச்சனைகள்.

(புலம்பெயர்) சமூகத்தில் குடிக்கும் கணவனை, மணைவி கையாண்ட விதம் எப்படிப்பட்டது? உண்மையில் இதைக் கையாண்ட விதமே, அநேகமான வீடுகளில் நடக்கும் சண்டைக்கான முதல் காரணமாக அமைந்துவிடுகின்றது. இதன் விளைவு பலர் மிக மோசமான குடிகாராக சீராழிந்தனர். பலர் வீதி வாழ்க்கைக்கு வந்துவிடுகின்றனர். (புலம்பெயர்) சமூகத்தில் இது ஒரு பாரிய சமூக பிரச்சனையும் கூட. ஆனால் இதை பற்றி சமூகம் அக்கறை கொள்வதில்லை. சமூகமே அக்கறைப்படதா இந்த நிலையில், ஒவ்வொரு மனைவியும் தனக்கு தெரிந்த குறுகிய வளிகளில் அதை எதிர் கொள்கின்றாள். பெரும்பாலன மனைவிக்கு தெரிந்த ஒரே வழி, இதற்கு எதிரான மொழி வன்முறையே. அதாவது நச்சரிப்பும், திட்டுதலும், சண்டை பிடித்தலுமாகும்;. இதன் விளைவு மேலும் எதுக்கும் உதவாத குடிகாரனாக அல்லது எதுக்கும் லயகற்று மனைவிக்கு பயந்த நடுங்கும் ஒரு கோழையாக மாறிவிடுவது நிகழ்கின்றது.

இதுவே பல குடும்பங்களில் நடந்தது, நடக்கின்றது. கணவன் குடிக்கின்ற சூழல், அது உருவாக்கி சந்தாப்பம் பற்றி, அப் பெண் தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவளுக்கு சமூக அறிவு கிடையாது. ஏன் அவளுக்கு, சமூகத்துக்கே அந்த அறிவு கிடையாது என்பதே உண்மை. மறுபக்கம் இதையே தனது வாழ்வாக எற்றுக்கொண்டு எதிர்கொள்ளும் பெண்ணின் வாழ்கையையே குட்டிச்சுவராகிவிடுகின்றது. பெண் இதைக் கையாண்ட விதம், இதை தீர்ப்பதற்கு பதில் எதிர்மனப்பான்மையில் இதை ஊக்குவித்தது. ஆண் மேலும் மோசமான குடிகாரனாக விரட்டுகின்ற வழியில், ஒரு மொழி வன்முறையைத் தான் பெண் கையாண்டாள், கையாளுகின்றாள்.

சமூகத்தின் எந்த அரசியல் சமூக உறுப்பும் இதை மற்றியமைக்கவும், வழிகாட்டும் முன்முயற்சியை எடுக்கவில்லை. உண்மையில் அதற்கு அதனிடம் அதைபற்றி தெளிவு கிடையாது. இதை மாற்றும் சிறுபான்மையினரின் சிறிய முயற்சிக்கான சமூகக் கூறுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு கிடந்தது.

பெரும்பாலன கணவன்கள் திருமணத்துக்கு முன்பாகவே குடிக்கின்ற இந்த வியாதி என்பது, அவன் வாழ்கை சார்ந்த சூழலால் எற்பட்டது. குறுகிய வாழ்விவும் மேலும் தனிமைப்பட்டு அன்னியமானதும், வாழ்வில் சுமக்க முடியாத சுமையை சுமந்தும், வாழ்கையை சுற்றிய சோகங்களுமே ஆணின் வாழ்கையாக அமைந்தது. ஆண் இதில் இருந்து தப்ப, தனக்குத் தெரிந்த குறுக்கு வழி என்பது, சமூகத்தை மறந்து வாழ்தல் என்பதே. இந்தத் தேர்வு என்பது நிஜ வாழ்வைக் கண்டு அஞ்சும் ஆணின் கோழைத்தனம் (பொதுவாக உலகளவில் பெண்ணைவிட ஆணின் அச்சம் அதிகமானது. இதனால் தான் தற்கொலை செய்வது பெணைiவிட ஆண் அதிகம்.) தான், ஆண்களை குடிக்குள் வாழ்வதை உந்தித்தள்ளுகின்றது. நிஜமான உலகில், நிஜ வாழ்வில் வாழ அஞ்சுகின்ற ஆணின் (கணவனின்) மனநிலை தான், அவன் விரும்பி நாடும் போதைக்கு காரணமாக அமைகின்றது. இதற்கு நண்பர்கள் வட்டம், மற்றும் கேளிகைகள், சந்தர்ப்ப சூழல்கள் தற்செயலான துண்டுதலாகவே அமைகின்றது.

கணவன் குடித்துவிட்டு ஒரு குடிகாரனாக வீட்டுக்கு வருகின்றான் என்றால், அவனின் சுயயறிவற்ற நிலைக்கு பெண் (மனைவி) பரிதாப்பட வேண்டும்;. வாழ்வை எதிர்கொள்வதில் உள்ள அவனின் கோழைத்தனத்தை இனம் காணவேண்டும்;. தன்னை மறந்து வாழ பழக்கமாகிவிட்ட ஒரு நிகழ்ச்சியை, எப்படி அகற்றுவது என்பதை தேர்ந்த ஒரு விடையமாக சவலாக எடுத்துக் காணவேண்டும். உண்மையில் பெண் செய்ய வேண்டியது யாதெனின், அவனின் நிஜவுலகில் அவனின் மகழ்ச்சிக்குரிய சூழலை தன்னுடன் இணைத்து உருவாக்குவது தான். இது பெண்களுக்கு தெரியாது இருப்பதே மற்றொரு விடையம். தனது மகிழ்ச்சி என்பது, தான் மகிழ்ச்சியாக நடந்து கொள்வதில் இருந்து உருவாகின்றது.

இதைப் பெண்கள் உணருவதில்லை. மாறாக தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியை எதிர்நிலையில் அனுகி இழக்கின்றாள். பின் தனது வாழ்;கையை சொந்த தலைவிதி என்கின்றாள்;. இது பற்பல குடும்ப மற்றும் பாலியல் பிரச்னைகளையும் உருவாக்கின்றது.

பிரச்சனைகளை தீர்ப்பது என்பது, சண்டை பிடிப்பதோ, நச்சரிப்பதினலோ, மொழி வன்முறை மூலமோ தீர்க்க முடியாது. ஆனால் எமது பெண்கள் அப்படித்தான் செய்கின்றனர். கணவனுடன் மட்டுமன்றி குழந்தைகளுடன் கூட அப்படித்தான் பெண்கள் கையாளுகின்றனர். இதன் விளைவு, பரஸ்பரம் மேலும் மேலும் அன்னியமாகி விடுவது நிகழ்கின்றது. குடிப்பவர்கள் மேலும் அதிகமாகவே குடிப்பதை நோக்கி இது தள்ளிச் செல்லுகின்றது. வீட்டில் அமைதியான, மகிழ்சியான, அன்பான சூழல் என்பது அருகிப்போகின்றது. பொதுவாக எந்த விடையத்திலும் இது பொருந்தும். நெருங்கியவர்களை விட, மற்றவர்களே தம் மீது அன்பு செலுத்துவதாக காண்பது அதிகரிக்கின்றது. பல தவறுகளுக்கு இது அடிப்படை காரணமாகிவிடுகின்றது. இவை அன்றாட வாழ்வில் பழக்கப்பட்டு, ஏன் அவை செரிக்கப்பட்ட விடையங்களாகி விடுகின்றது. மேலும் பரஸ்பரம் அலட்சியப்படுதலுக்கு புறக்கணிப்புக்கும் உள்ளாகிவிடுகின்றது.

சாத நச்சரிப்பதும், சண்டைபிடிப்பதும், பிழைபிடிப்பதும் என்பதே குடும்பமாகி, குடும்பமே வன்முறையாகி விடுகின்றது. இதன் எதிர்வினையோ வன்முறை வழியில் அல்லது கோழையைப் போல் சுருண்டுவிழ துண்டுவதாகும்;. வன்முறை அல்லது எதற்கு லயக்கற்ற கோழையாக அல்லது இரகசிய போவழியாக தனது இயல்பை இழந்து மாறிவிடுகின்றனா. கண் பார்வைக்குள் பரஸ்பரம் அடங்கிப் போகின்ற கோழைத்தனமான குடும்ப இணக்கங்களும், அதன் மேலான அதிகாரங்களுமே வாழ்கையாகிவிடுன்றது.

இணக்கமாக இணங்கிய வழிக்கு பதில், எதிர்வினை அம்சத்தை உள்ளடக்கிய வழியில் வாழ்கையே நீடிக்கின்றது. இந்த வன்முறை சார்ந்த வழிமட்டுமே, எப்போதும் எங்கும் பெண்களின் பொது அணுகுமுறையாக உள்ளது. குடும்ப வன்முறையில் பெரும்பாலனவை, அதாவது ஆணின் உடல் சார்ந்த வன்முறை இப்படி துண்டப்படுவதன் மூலம் நிகழ்கின்றது. பெரும்பாலன வன்முறையின் பின்னணி, விடையங்களை கையாளும் மொழி வன்முறையில் இருந்து தோன்றுகின்றது. இந்த மொழி என்பது அறிவியல் பூர்வமாக இருபதில்லை. எதிரியாக, வாயில் வருவதை கொட்டித் தீர்க்கின்ற வன்முறையாக இருக்கின்றது.

ஆணின் குடியை மனைவி கையாளுதல் என்பது எதிர்தளத்தில் இருந்தல்ல. இணக்கத்தில் இருந்துதான் சாத்தியமானது. இரண்டு எதிரிகளாக மாறி, இதை ஒழிக்கமுடியாது. அறிவியல் பூர்வமாக புரிந்து இணங்கி இதை ஒழிக்க முடியும். வாழ்கை பற்றிய கலையே அது தான்;. கலை என்பது வாழ்தல் பற்றியதும் கூடத் தான்.

இந்த நிலையில் ஆணின் குடி, மற்றும் போதைப் பொருள் (புகைத்தல் உட்பட) என்பது தன்னை மறக்கும் ஒரு போதைவஸ்து தான். சுயத்தை இழந்து, தனிமையில் வாழத் துண்டுகின்ற ஒரு சமூக நஞ்சு. சுயத்தில் தான் மட்டும் இன்பம் காண்கின்ற, தான் மட்டும் நிம்மதியை அடைகின்ற, ஒரு குறுக்கிய குறுக்கு வழி. வாழ்வு சார்ந்த குடும்;ப நெருக்கடிக்குள், சமூக நெருகடிக்குள் இருந்துவிடுபட்டு, தான் சுதந்திரமாக வாழ்வதாக கனவு காண்கின்ற கோழைத்தனமான குறுகிய வழி. இது தனிப்பட்ட மனிதனுக்குரிய பலவீனத்தின் மேல் வெற்றி கொள்கின்;றது. இதை அந்த மனிதனைச் சுற்றியுள்ள சமூக சூழலே காரணமாகின்றது.

ஒரு தனிமனிதனின் உழைப்புக்கு அப்பால் வாழ்வையொட்டிய பிரதானமான சூழல் குடும்பமே. இந்த சூழலுக்குரிய குடும்பம் மகிழ்சியானதாக இருக்காத போது, அதன் விளைவை பலவிதத்தில் பலராலும் எப்படியும் பயன்படுத்தமுடியும்.

நுகர்வுச் சந்தை, உழைப்பை சுரண்டுவோர், அற்பத்தனமாக எமாற்றி செல்வத்தை அபகரிபவர்கள், பாலியலை நுகர்வோர்; என்று பலதளத்தில், ஒரு மனித உணர்வுகளை தமக்கு இசைவாக பயன்படுத்தப்படுகின்றது. வெளிப்படையாக தெரியாத, ஆனால் நுட்பமாக ஒருவனை பயன்படுத்துவது காணப்படுகின்றது. இங்குள்ள இணக்கம் என்பது, பாதிக்கப்பபட்டவனுக்கு எதரானதும் ஒரு தலைப்பட்டசமானது. ஒரு பகுதியால் மட்டும் பயன்படுத்தப்படுவதாகும். உதாரணமாக குடும்ப பிரச்சனைகள் மலிந்த குடும்பத்தில், மற்றொரு ஆண் தலையிட்டு அந்த பெண்ணை அடையும் பாலியல் அக்கறையான சமூக அற்பத்தனங்கள் இப்படித்தான் மலிந்து காணப்படுகின்றது. நண்பர்கள் முதல் முதலாளி வரை இதை வௌவேறு வகையில் பயன்படுத்துகின்றனர். நண்பன் ஒசியில் குடிக்கின்றான் என்றால், ஒரு முதலாளி வேலையை வாங்கிய பின் உற்றிக்கொடுத்து ஊக்குவிக்கும் எல்லைவரை கையாளப்படுகின்றது.

இந்த குடி தற்செயலான சந்தர்ப்பங்களில், தற்செயலாக இணங்கி நிகழ்கின்றது. ஆணின் பலவீனங்கள் மீது சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோல்தான், இணங்கி நடக்கும் முறை தவறிய, பாலியல் அத்துமீறல் கூட. உண்மையில் இணக்கமற்ற குடும்ப நெருகடிகள், பல தவறான செயல்களுக்கு இணங்கிப்போகும் குறித்த தற்செயலான சூழலை உருவாக்கின்றது.

சமூக ரீதியாக விழப்புணர்ச்சி அற்ற சூழலில், தனிமனித சுழற்சிக்குள்; தான் இவை நிகழ்கின்றது. என்னவென்று தெரிந்த கொள்ளகின்ற தன்முனைப்பான ஆர்வத்தில் கூட இது துண்டப்படுகின்றது. சமூகம் வன்முறை கொண்டு அனுகின்ற போக்கினால் எற்படும் அச்சம், வெளிபடையற்ற இரகசியமான ஒரு உலகை உருவாக்கிக் கொள்ளவே உதவுகின்றது. வாழ்வுக்கு உதவாத ஒவ்வொரு அத்துமீறலும், இப்படித்தான் உருவாகப்படுகின்றது. வெளிப்படையான அச்சம், இரகசியமான வழிகளில் ஊக்குவிக்கப்படுகின்றது.
(புலம்பெயர்) சமூகம் இதற்குள் பல புதிய நெருக்கடிகளை காண்கின்றது. (புலம்பெயர்) சமூத்தில் உழைப்பனின் பணத்தில் குறிவைத்து அதைக் கையாள முனைபவர்கள், (புலம்பெயர்) சமூகம் சமூகமாக வாழத் துண்டக் கூடிய நிலைமை இல்லாமை போன்ற பல காரணங்கள், அவனின் வாழ்க்கை சீராழிக்கின்றது. வாழ்வில் இழிந்து வாழ்கின்ற, பழக்கப்பட்ட அடிமைத்தனத்தை உருவாக்கின்றது. அது குடி முதல் அது சமூகத்தில் எதுவாகவும் இருக்கலாம்.

குடிக்கு அடிமையாகி கிடப்பவனை அதில் இருந்து மீட்டல் அவசியம் என்பதை, பெண்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. அதை தனக்கு எதிரானதாக பெண்களால் பாhக்கப்படுகின்றது. இப்படி எதிர்மனப்பாங்கில் தான் பெண்களின் அனுகுமுறை அமைந்தது. இதனால் பல ஆண்கள் வீட்டை விட்டே துரத்தப்பட்டனர் அல்லது தாமாக வெளியேறி வாழவைத்தனர். பல ஆண்கள் வீதிகளில் வசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிச் செல்லுகின்றது. புலம்பெயர் நாடுகளில் வீதிகளின் குடித்து, அங்கே உறங்கி எழும் ஆண்கள் தொகை மெதுவாக பருகிச்செல்லுகின்றது. பெண்களின் வன்முறையால் இந்த சமூக அவலம் நிகழ்கின்றது.

ஒரு சமூகத்தின் அலலம், அதன் விரக்தி, மகிழ்ச்சியற்ற போலியான வாழ்க்கை, போலிப் பெருமையில் தீர்த்துக்கொள்ளும் அற்ப மனப்பாங்கு என பல ஒருங்கே சேர்ந்து, சிதிலமைடைந்து கிடக்கும் (புலம்பெயர்) சமூகத்தையே நாம் காண்கின்றோம்.

ஒருபுறம் ஆண்களின் ஆணாதிக்க உலகம். மறுபக்கம் மொழி வன்மறையை அடிப்படையாகக் கொண்ட பெண்களின் உலகம். இப்படி இரு வேறுபட்ட போக்கு காணப்படுகின்றது. (புலம்பெயர்ந்த) பெண்களின் வாழ்வியல் பிரச்னைகள் மீதான தீர்வுகளை ஒட்டி, சமூக வழிகாட்டல்களற்ற நிலையே காணப்படுகின்றது. இந்த நிலையில் பெண் தன்னிச்சையானதும், எழுந்தமானதுமான குறுகிய வழிகளினால், தனது குடும்பத்தை ஒழுங்குபடுத்த முடிவதில்லை. மாறாக அதுவே குடும்பத்தை பிளந்து, நிழ்வுகின்ற மகிழ்ச்சியை இழப்பதற்குரிய அடிப்படையான காரணமாகிவிடுகின்றது. உதாரணத்துக்கு மீண்டும் குடியை எடுப்போம்.

1.ஒரு ஆண்ணின் குடியை நிறுத்த, பெண்ணின் அன்பு அவசியமானது. அதை விளக்கி அதன் தீமைகளை புரிய வைக்கின்ற வகையில், அன்புடன் கூடிய ஆதாரவுடன் இணங்கியே பெண் அனுகவேண்டும்;. ஆண் குடிக்க தொடங்கிய சந்தர்ப்பத்தை, இன்றும் குடியை தொடர்வதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதை போக்கும் வகையில் நுனுக்கமாக அனுக வேண்டும். காரணத்தை நன்கு தெரிந்து, நிவாரணத்தை இருவரும் சேர்ந்து காணமுனையவேண்டும். இதை எத்தனை பெண்கள் செய்துள்ளனர்.

2.குடிக்கும் ஆணை வீட்டில் வைத்து குடிக்கும் அளவுக்கு ஆணின் மனநிலையை மாற்றவேண்டும். இது அதிரடியாக நடந்துவிடாது. ஆண் வெளியில் குடிப்பதற்குரிய காரணத்தை நிவர்த்திசெய்வதன் மூலம் தான், வீட்டில் குடிக்கவைக்கமுடியும்.

3.குடிப்பதற்குரிய உரிய பொருட்களை மனைவியே வீட்டில் வாங்கி (ஆண் வாங்கக் கூடாது) கொடுக்கவும், குடிப்பதற்கு தேவையான பொருளை மற்றைய பொருட்களை தானாக செய்து கொடுக்கும் முன்னேறிய சொந்த முயற்சியை எத்தனை பெண்கள் செய்துள்ளனர்?

4.வீட்டில் வாங்கி வைத்து குடிக்கும் முறைக்கு மாறிச்சென்ற வீடுகளில் கூட, அதை பலவகையில் வேண்ட வெறுப்பாகவே திட்டித் தீர்த்தபடிதான் பெண்கள் செய்கின்றனர். இதனால் ஆணின் குடியை ஒழிக்க முடிவதில்லை. ஆண் குடிப்பதற்கு எற்ப நண்பனை (பட்டனர்) நாடுகின்ற ஒரு பழக்கம் உள்ளது. இந்த விடையத்தில் பெண் எந்த வகையில் உண்மையான நண்பனாக இருந்து உதவுகின்றாள். தேவைபட்டால் குடியை நிறுத்த, பெண் குடிக்க முனைவதன் மூலம் கூட, ஆணைச் சரிப்படுத்த முனையவேண்டும்.

5.அளவாக குடிக்கக் கோரி, படிப்படியாக குறைத்துச்செல்லும் நண்பனாக வழிகாட்டியாக, அறிவுபூர்வமாக சிந்திக்கும் மனைவியால் மட்டும் தான் முடியும். ஆனால் எமது சமூகத்தில் அப்படி இருப்பதில்லை. பொதுவாக வன்முறையான அனுகுமுறை, எதிர்மனப்பாங்கு கொண்ட உணர்வுகளும், வேண்டவெறுப்பான செயல்பாடுகள் மூலம் பரிமாறப்படுறுகின்ற வார்த்தைகளே, அவர்களுக்கு இடையிலான உறவின் மொழியாகின்றது. மொத்தத்தில் தான் நினைத்ததை சாதிக்க முடியாத எதிர்நிலையான விளைவைத்தான் பெண் அடைகின்றாள்;. உண்மையில் குடும்பத்தின் மகழ்ச்சியை அக்குடும்பமே மொத்ததில் இழக்கின்றது. படிப்படியாக மனநிலை ரீதியாக பாதிப்பை அடைகின்ற அனவுக்கு, பெண்கள் மத்தியில் அசமந்தப் போக்கு காணப்படுகின்றது.

குழந்தைகளை கையாளும் விதம் கூட இப்படித்தான். மொழி வன்மறையையும், அதன் தொடர்ச்சியாக உடல் வன்முறையையுமே கொண்ட அதிகாரத்தையே மற்றவாகள் மீது திணிக்கின்றனர். ஆண் பெண் உறவுகளிலும், குடும்ப உறுப்புகளிலும் இது பாரிய எதிர்வினையை ஆற்றுகின்றது.

உண்மையில் எத்தனை பெண்கள் சமூக புரிந்துணர்வுடன் விடையங்களை அனுகி மாற்ற முனைகின்றனர். சமூகத்தில் திருமணம் ஆணை நல்வழிப்படுத்தும் என்ற, மரபான சமூக மதிப்பிட்டு சார்ந்த பெண்ணின் சமூக வழிகாட்டலை, இன்றைய (புலம்பெயர்) பெண் இழந்து அதை மேலும் சிதைக்கின்ற நிலைக்கு சென்றுவிடுகின்றாள். மிகவும் துரதிஸ்ட்டவசமான நிலையில் தான், பெண் ஒரு குடும்ப சூழலில் வாழ்கின்றாள் என்பது ஒருபுறம்;. மறுபுறம் தனது மகிழ்ச்சியை துலைத்துவிட்டு நிற்கின்றாள் என்பதும் உண்மை. இதுவே பெண்ணின் மன நோயாகிவிடுகின்றது. எப்போதும் தனது கணவன் தனக்கு பொருத்தமற்றவனாக கருதுகின்ற நிலைக்கு, இப்படியாக உணர்வு மட்டம் தாழ்ந்துவிடுகின்றது. சாத கணவனைக் குறை காண்கின்ற, தனக்கு எதிரானவனாக கற்பிக்கின்ற நிலைக்கு தன் மனநிலையை கற்பித்துவிடுகின்றாள்.

சமூகங்களுடன் பினைப்பு அதிகமாக காணப்பட்ட காலத்தில், சமூகப்பொறுப்பு கொண்ட ஒரு பெண்ணாக பெண் வாழ்ந்தாள். இன்று இதற்கு மாறாகவே பெண்கள் நடத்து கொள்கின்றாள் ஆண் குடித்துவிட்டு நல்ல வெறியில் வரும் போது திட்டித் தீர்ப்பது. வெறி முடிந்த பின் நச்சரிப்பும் திட்டுதலுமாகவே, அவர்களின் மொத்த குடும்ப வாழ்வு அமைந்து விடுகின்றது. இதுவே பல விடையங்களிலம் காணப்படுகின்றது. வீட்டில் அசாதாரமான சூழல் உருவாகப்படுகின்றது. ஆண் தனது சூழலை மறந்து வாழவே குடிக்கின்ற ஒரு நிலையில், அதை தனது வீட்டில் இழக்கின்ற சொந்த பரிதபமும் உருவாகின்றது. இதனால் பல ஆண்கள் வீதிகளின் குடித்துவிட்டு அங்கேயே தனது காலத்தைக் கடத்துவதும், கண் மண் தெரியாது குடித்துவிட்டு வீதிகளில் புரள்வதுமாகிவிடுகின்ற சூழல் அதிகரிக்கின்றது. பலர் நிரந்தரமாகவே வீதிக்கு வருகின்றனர். இவை பல வன்முறைகளாக அரங்கேற்றுகின்றது. பல விவகரத்துகள் வரை இது இட்டுச்செல்லுகின்றது.

இப்படி முத்தி முதிர்ந்த நிலையில் பல சமூக அவலங்கள். தனிமனித வக்கிரங்கள் விகரமாகி வெளிப்படுகின்றது. ஆரம்ப முதலே சமூக ரீதியான அனுகுமுறையூடாக சமூக ஒழுங்குக்குள் கொண்டுவரும் முன்முயற்சி எடுக்க முடியாத நிலை உருவாகின்றது. பெண் சமூகம் பற்றி கொண்டுள்ள சிதைந்த கண்ணோட்டம், சமூக ஆளுமையற்ற நிலைக்கு தரங்குறைந்து விடுகின்றது. தான் விரும்பியதைச் சாதிக்க, வன்முறை ரீதியான அனுகுமுறையே பெண்ணின் பொது அனுகுமுறையாகிவிடுகின்றது. பொதுவாகவே எமது சமூகம் மீது நிகழும் நிலவும் அரசியல் வன்முறை, ஆணாதிக்க வன்முறை என அனைத்தும், உள்ளடக்கிய வகையில் பெண்ணும் தனது வழியில் இப்படிச் சீராழிந்தது என்பது, குடும்பத்தையே வன்முறைக்குள்ளாகியது. இணக்கமான இணங்கிய சமூகத்தன்மை குடும்பத்தில் சிதைக்கப்பட்டு, கரடுமுரடான வன்முறைகொண்ட சூழலை குடும்பத்தில் எற்படுத்தியது என்பது, தமிழ் சமூகத்தின் மற்றொரு பாரிய சமூகச் சிதைவுதான்.

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு

1.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்
2.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்
3.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

தொடரும்)

Friday, July 6, 2007

இது தண்டனை அல்ல!

பிரேம்குமார் பதவி நீக்கம் :
இது தண்டனை அல்ல!

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் திரு. நல்லகாமன் அவர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும் மேலும் 3 போலீசு அதிகாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து 3.4.07 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது குறித்த செய்தி சென்ற பு.ஜ. இதழில் வெளியாகியிருந்தது. மே 21ஆம் தேதியன்று பிரேம்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு அவரது வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியர் யாராக இருந்தாலும், எவ்வித விளக்கமும் கோராமல், மறுகணமே அவரை அரசியல் சட்டப்பிரிவு 311(அ) வின் கீழ், அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி அரசு நிரந்தர வேலை நீக்கம் செய்யும். மற்றெல்லா அரசு ஊழியர்களின் விசயத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை இதுதான். ஆனால், குற்றவாளி பிரேம்குமாரைப் பணிநீக்கம் செய்வதற்கு மட்டும் அரசுக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

இதனை வெற்றி என்று அழைக்கலாமெனில், இது திரு.நல்லகாமனின் தளராத உறுதிக்கும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியே அன்றி, நிச்சயமாக இது நீதிக்குக் கிடைத்த வெற்றி அல்ல. இந்தப் பணிநீக்கம் என்பதும்கூட வேறு வழியில்லாத நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைதான்.

3.4.07 அன்று தீர்ப்பு வெளியானவுடனே, பிரேம்குமாரும் அவருடன் தண்டிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கும் வேலையை தமிழக காவல்துறை செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. பிறகு மதுரை அமர்வு நீதிமன்றத்தின் மூலம் ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் பிரேம்குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கச் செய்தனர். அதன் பிறகும் போலீசு அசையவில்லை. பிரேம்குமாரும் மற்ற மூவரும் தலைமறைவானார்கள்.இன்று பணிநீக்க உத்தரவை பிரேம்குமார் வீட்டுக் கதவில் ஒட்டும் காவல்துறை, அன்றே பிரேம்குமாரின் படத்தைப் போட்டு "தலைமறைவுக் குற்றவாளி' என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். காசைக் கொடுத்து, கம்ப்ளெயிண்டையும் கொடுத்தால், உடனே ஆட்டோவில் வந்து இறங்கும் காக்கி உடை யோக்கியர்கள், பிரேம்குமாரின் பெண்டாட்டி, பிள்ளை, மாமன், மச்சான் அனைவரையும் அடித்து இழுத்து வந்து அண்டிராயரோடு ஸ்டேசனில் உட்கார வைத்து, "அய்யா எங்கே?' என்று விசாரித்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பிரேம்குமார் தப்பிப்பதற்குப் போதுமான அவகாசத்தைத்தான் தமிழக அரசு வழங்கியது.

அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்குமார், தான் தஞ்சை மாவட்ட போலீசு கண்காணிப்பாளராகப் பதவி வகிப்பதால் "போலீசிடம் சரணடைவதிலிருந்து விலக்கு தரவேண்டும்' என்று கோரி, உச்சநீதி மன்றத்தில் உத்தரவும் வாங்கி விட்டார். இப்படியொரு சலுகை எல்லா கிரிமினல்களுக்கும் வழங்கப்படுகிறதா அல்லது "போலீசு கிரிமினல்களுக்கு' மட்டுமே உச்சநீதி மன்றம் வழங்கும் சிறப்புச் சலுகையா என்று தெரியவில்லை. ஆனால், பொய் வாக்குமூலம் கொடுத்து உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிய பிரேம்குமாரின் இந்த மனுவைக் கூட தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் எதிர்க்கவில்லை.

தமிழக அரசின் இந்தக் கள்ள மவுனத்தை அம்பலப்படுத்தி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தின் வாயிலாக, இது எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்குமாரையும் மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்று நல்லகாமன் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மனுக் கொடுத்தார். அதன் பிறகும் தமிழக அரசு அசையவில்லை.

பிறகு 4.5.07 அன்று ""தண்டனை பெற்ற குற்றவாளி பிரேம்குமாரைக் கைது செய்!'' என்று கோரும் போராட்டத்தை வீதிக்குக் கொண்டு வந்தனர் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை வழக்குரைஞர்கள். ""அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வது சட்டவிரோதம்'' என்று வழக்குரைஞர்களை மிரட்டிப் பார்த்தது போலீசு. ""முதலில் பிரேம்குமாரைக் கைது செய்துவிட்டு அப்புறம் இங்கே வந்து சட்டத்தை நிலைநாட்டு'' என்று பதிலடி கொடுத்த வழக்குரைஞர்கள், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தச் செய்தியும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது.
அதன் பிறகும் தமிழக அரசு பிரேம்குமாரை கைது செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து ""தண்டனை பெற்ற குற்றவாளியான பிரேம்குமாரையும் மற்ற 3 அதிகாரிகளையும் கைது செய்யவும், பணி நீக்கம் செய்யவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் வழக்குரைஞர் ராஜு. பதிலில்லை.

பிறகு 7.5.07 அன்று மக்கள் தொலைக்காட்சியின் "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களான ராஜு, சகாதேவன் ஆகியோர், ""தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒரு போலீசு அதிகாரி என்பதால் தமிழக அரசு அவரைச் சட்ட விரோதமாகப் பாதுகாக்கிறது'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். ""தன்னுடைய சாதியைச் சேர்ந்த அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு சட்டத்தை வளைக்கிறான் பிரேம்குமார்'' என்று அம்பலப்படுத்தினார் நல்லகாமன். இதற்கு அப்புறமும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இதற்கிடையில் உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பிரேம்குமார், சிறை செல்வதைத் தவிர்க்க பிணை மனுவையும் தாக்கல் செய்தார். ""பிரேம்குமாரின் பிணை மனுவையும், மேல் முறையீட்டு மனுவையும் நிராகரிக்க வேண்டுமென்றும், பொய்யான தகவல் கொடுத்து உச்சநீதி மன்றத்தை பிரேம்குமார் மோசடி செய்திருக்கிறார்'' என்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், பிரேம்குமாருக்கு பிணை வழங்கியது உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக பிரேம்குமார் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இப்போது உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

பிரேம்குமாருடன் ஒரு மாத தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கூட, அரசு இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை. உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத அரசுக்கு எதிராக மறுபடியும் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். மீண்டும் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம், வக்கீல், வாய்தா, அலைச்சல், பணம்...!

1982ஆம் பிப்ரவரி முதல் தேதியன்று, தன்னுடைய கட்டப் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட மறுத்த குற்றத்துக்காக நல்லகாமனையும், அவரது குடும்பத்தினரையும் கொலைவெறி கொண்டு தாக்கி, சங்கிலியால் பிணைத்து வாடிப்பட்டியின் தெருக்களில் இழுத்துச் சென்ற பிரேம்குமார் என்ற மிருகத்தின் வெறியாட்டம் அந்த ஒருநாளுடன் முடிந்து விட்டது. அந்தக் காக்கி உடைக் கிரிமினலைத் தண்டிக்கக் கோரி, சட்டபூர்வமாக முயற்சித்து வரும் அந்த முதியவரை 25 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வருகின்றது இந்த அரசமைப்பு. பிரேம்குமாரின் சித்திரவதை வாடிப்பட்டி வீதியுடன் முடிந்து விட்டது. தமிழக அரசும், நீதித்துறையும் அவரை வாடிப்பட்டியிலிருந்து டெல்லிக்கும் சென்னைக்கும் மதுரைக்கும் ஆயிரம் முறை இழுத்து அலைக்கழித்து வருகின்றன.

இந்தத் தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டிருந்த அதே 25 ஆண்டுகளில்தான் வெறும் துணை ஆய்வாளராக இருந்த பிரேம்குமாரைப் படிப்படியாக உயர்த்தி, எஸ்.பி.யாகப் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. 1982இல் நடைபெற்ற ஆர்.டி.ஓ. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, வலது கையால் பிரேம்குமார் மீது கிரிமினல் வழக்கு தொடுத்துவிட்டு, இடது கையால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கலைஞர் அரசு, ஜெயலலிதா அரசு, ஜானகி அரசு என எந்த அரசிலும் இந்தக் கிரிமினலின் கொடி மட்டும் இறங்கவேயில்லை.

ஏழு கடல், ஏழு மலை தாண்டி இலட்சக்கணக்கில் செலவு செய்து, ""ஒரு மாதச் சிறை'' என்ற இந்த "பயங்கரமான தண்டனையை' உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து வரவழைத்த பின்னர், அந்தத் தீர்ப்பை அமல்படுத்த வைப்பதற்கு, அதாவது ஒரு காக்கி உடைக் குற்றவாளியைக் கைது செய்ய வைப்பதற்கு, ஒரு குடிமகன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்த விவரங்களைத் தந்திருக்கிறோம். இவையெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள். இப்படி 300 மாதங்கள் 25 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, இந்த "நீதி'யை வாங்குவதற்கு!

""25 ஆண்டு காலம் போராடி இந்தத் தீர்ப்பை வாங்கியிருக்கிறீர்களே, நீங்கள் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் மக்கள் தொலைக்காட்சியின் நிருபர் நல்லகாமனிடம் கேட்டார். ""கோர்ட்டு கேசெல்லாம் வேலைக்கு உதவாது மாமா; நான் அவனை உலக்கையைக் கொண்டு அடிச்சிடறேன்னு என் மருமவன் அன்னைக்கே சொன்னான். வேண்டாம்பா; நாம முறையாத்தான் போகணும்''னு அன்னக்கி அவன்கிட்ட சொன்னேன். இப்ப யோசிச்சுப் பார்க்கும்போது அன்னைக்கே உலக்கையைக் கொண்டு அடிச்சிருக்கலாமேன்னு தோணுது'' என்று பதிலளித்தார் நல்லகாமன்.

25 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் மீதெல்லாம் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து "இந்திய ஜனநாயகம்' வரவழைத்திருக்கும் சொற்கள் இவை ""உலக்கையைக் கொண்டு அடிக்கணும்!''.

இந்த "உலக்கை அடி' பிரேம்குமாருக்கு அல்ல; சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் மேலாண்மை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இந்த அரசமைப்புக்கு. இந்த மக்கள் விரோத அரசமைப்பு நீடிக்கும் வரை நல்லகாமனைப் போன்ற சாதாரணக் குடிமக்களுக்கு நீதி கிடைக்காது என்பதுதான் நல்லகாமனின் நீண்ட நெடிய போராட்டம் கூறும் நீதி.

பு.ஜ. செய்தியாளர்கள்.

Thursday, July 5, 2007

மானம் கெட்ட அரசியல் பிழைப்பு

மானம் கெட்ட அரசியல் பிழைப்பு

பி;இரயாகரன்
05.07.2007

கருத்தை கருத்தாக எதிர்கொள்ளும் புலியிசமும் கிடையாது. புலியெதிர்ப்பிசமும் கிடையாது. கருத்தைச் சொல்பவனைக் கொல்வது, விலைக்கு வாங்குவது, செயலற்ற வகையில் முடக்குவது, முடிந்தவரை மிரட்டுவது, இல்லாதுபோனால் பல குறுக்கு வழிகளில் அச்செயல்பாட்டை இல்லாதாக்குவது. இது மட்டும் தான் புலிப் பாசிசமாகட்டும், புலியெதிர்ப்பு ஜனநாயகமாகட்டும், அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் வழியாகும். விவாதிக்கும், விமர்சிக்கும் தகுதி இந்த மானம் கெட்ட கும்பலுக்கு கிடையாது.

சுவிஸ்சில் இருந்து வெளிவரும் ஈரஅனல் இணைய ஆசிரியரின் வீடு புகுந்து நடத்திய சூறையாடல் இதை மறுபடியும் நிறுவியுள்ளது. தமிழ் மக்களுக்காக செயல்படுவதாகவும், அவர்களுக்காக உழைப்பதாக கூறிக்கொண்டு திரிகின்ற, மக்கள் விரோதிகளின் துரோக நடத்தைகள் தான் இவைகள்.

கொல்லுதல், திருடுதல், சூறையாடுதல், வீட்டுக்கு நெருப்பு வைத்தல், நஞ்சிடுதல், விபத்துகளை நடத்துதல், தூசங்களால் தூற்றுதல், ஆதாரமற்ற அவதூறுகளை கற்பித்தல் என்று, பற்பலவிதமான இழிந்த வடிவங்களில் தான், தமிழ் மக்களுக்காக இவர்கள் போராடுகின்றனர். அறிவியல் பூர்வமாக, தமிழ் மக்களின் நலனைச் சார்ந்து இருத்தல் என்பது அருகி விடும் போது, மேலும் மேலும் கேவலமான இழிவான குறுக்கு வழிகளை அரசியலாக்கின்றனர்.

புலிகள் முதல் புலியெதிர்ப்பு கும்பல் வரையிலான அனைவரினதும் அரசியல் வழியாக இருப்பது இதுதான்;. அரசியல் ரீதியாக இவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடு இருப்பதில்லை. அதாவது தமிழ் மக்களின் சமூக nhhருளாதார நலன்கள் பற்றி, இரண்டு தரப்புக்கும் ஒரேவிதமான கண்ணோட்டமே கொண்டுள்ளது. இந்த வலதுசாரிய இழிந்த அரசியல், எந்தக் குழுவையும் அதன் செயல்பாட்டைiயும் ஒரேவிதமாகவே வழிநடத்துகின்றது.

இப்படிப்பட்ட கேடுகெட்ட மலிந்த சமூக அரசியல் தளத்தில் தான், தமிழ் இனம் தூக்கில் தொங்குகின்றது. புலி, புலியெதிர்ப்பு என இரண்டு கும்பலும், மக்களுக்கு எதிரான வலதுசாரிய அரசியலைக் கொண்டவர்கள். மாற்று வழி தெரியாதவர்கள். மக்களின் சமூக பொருளாதார கூறுகளைச் சார்ந்து, சொந்தமாக எந்த ஒரு கருத்தையும் முன்வைக்க வக்கற்றவர்கள்
அண்மைக் காலமாக அரசு தரப்பு, வெளிநாடுகளில் புலி அல்லாத தரப்புக்குள் வேகமாக ஊடுருவி வருகின்றது. மக்களைச் சார்ந்து இருக்க முடியாதவர்கள், அரசுடன் இயல்பாக இணக்கமாக கூடிவிடுகின்றனர். புலிகள் எப்படி புலித்தலைவர் பெயாரல் புலம்புகிறதோ, அப்படி புலியல்லாத புலியெதிரிப்பு கும்பல் அரசுடன் கூடி குலைக்க தொடங்குகின்றது.

அரசியல் ரீதியாக எதற்கு லயக்கற இந்த புலியெதிர்ப்புக் கும்பல், அரச பிரதிநிதிகளுடன் கூடி கைலாக்க கொடுக்கும் படங்களைக் கூட பெருமையாக படம் பிடித்து வெளியிடுகின்றனர். அந்தளவுக்கு அரசியல் தரம், தாழ்ந்து நாயிலும் கீழாகவே உண்ணிச் செல்லுகின்றது. உண்மையில் இந்த அரச பிரதிநிதிகளோ, பாரிய மனித உரிமை மீறலைச் செய்த பாரிய குற்றவாளிகள். அது மகிந்த முதல் டக்கிளஸ் வரை பொருந்தும். கொலைகளின்றி இவர்கள் அதிகாரத்தில் அமர்ந்து இருக்கவில்லை. புலிகள் போல், கொலைகளை நம்பித்தான் அரசியலையே நடத்துகின்றனர். கூடி நின்று செயல்பாடுகள் முதல் கூடி நிற்கும் படங்கள் வரை, மனித உரிமை மீறலுக்கு துணை போவதைத்தான் எடுப்பாகவே எடுத்துக்காட்டுகின்றது. பிரபாகரனுடன் நின்று படம் எடுத்து போடவும் கூட தயங்காத, அதற்கு ஆசைப்படக் கூடிய அற்ப மனிதர்கள் தான், இந்த அரசியல் தரகு விபச்சாரர்கள்.

இதில் ஈரஅனல் விதிவிலக்கல்ல. அண்மையில் இலங்கை ஜனதிபதியுடன் கூடி நின்று படங்கனைக் கூட வெளியிட்டவர்கள். அந்தக் ஜனாதிபதியை ஈரஅனல் சந்திப்பதை தடுக்க நடந்த "ஜனசாயக" அரசியல் சாதிகள் ஒருபுறம். வலதுசாரிய பிரிவுகள் ஓரே குட்டையில் நடத்துகின்ற அரசியல் இழுபறிகள் இவை. இதைத்தான் இவர்கள் ஜனநாயகம் என்கின்றனார்.

இந்த வலதுசாரிய வக்கிரகங்களோ புழுக்கின்றது. புழுத்துப்போன தரம் கெட்ட செய்திகளை சொல்வதே, தமிழ் மக்களின் நலன்கள் என்று கூறகின்ற அளவுக்கு 'ஜனசாயக' புலம்பல்கள். இந்த வலதுசாரிய தரம்கெட்ட செயல்பாடுகளை, எதிர் கொள்ளும்விதம் தான் இந்த சூறையாடல்கள்.

மக்களைச் சார்ந்து அவர்களின் சமூகப் பொருளாதார அரசியலை முன்னிறுத்தி நிற்க, எந்தத் தரப்புக்கு வக்கு கிடையாது. புலியெதிர்புக்கு எல்லாம் குடைபிடித்து நிற்கும் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கமோ, உப்புச்சப்பற்ற பேரினவாதத் தீர்வை தூக்கிகொண்டு ஊர் ஊராக கவடியெடுப்பதும், அதை வைத்துக் கொண்டு அழுவதுமாக தரிகின்றார். மக்களைச் சார்ந்து நிற்க, சொந்த அரசியல் எதுவும் சுயமாக இவர்களிடம் கிடையாது. மற்றவனுக்குத் தரகுத் தொழில் பார்ப்பதே இவர்களின் அரசியல். இப்படிப்பட்ட இந்தக் கும்பலில் உள்ள சிலர், மந்திரியுடனும் ஜனதிபதியுடன் கூடிநின்று அழுவதை 'ஜனநாயக' அரசியல் என்கின்றனார்.

பாவம் தமிழ் மக்கள்;. அந்த மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. அதைப்பற்றி பேச யாருக்கும் துப்பு கிடையாது. மானம் கெட்ட பிழைப்புத்தான் ஒரே அரசியல் வழி என்று கூறி, விதம்விதமாக நக்குகின்றனர்.

வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்

வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்

விவசாயத்தில் ஏற்பட்ட கடனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தடுக்க முன் வராத அரசு, வங்கிக் கடனைக் கட்டத் தவறியதற்காக விவசாயிகளைக் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.

கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் மட்டும், கடந்த நான்கே மாதங்களில் 25 கரும்பு விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர். தனியார்மயம்தாராளமயம் நடைமுறைக்கு வந்த பிறகு, கடந்த 15 ஆண்டுகளில், நாடெங்கிலும் ஏறத்தாழ 1 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்ட கசப்பான உண்மையை, அரசாங்கமே இப்பொழுது வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது.

எனினும், விவசாயிகளின் இந்தத் தற்கொலைச் சாவுகள் இந்திய சமூகத்தின் பொது புத்தியில் எவ்விதமான கலக்கத்தையோ, பதற்றத்தையோ ஏற்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்குத் தரப்படும் அரசியல் முக்கியத்துவம், சந்தை பயங்கரவாதத் தாக்குதலால் நடந்து வரும் இத்தற்கொலைச் சாவுகளுக்குத் தரப்படுவதில்லை. ""அவன் விதி, செத்தான்'' என இலகுவாக, வெறும் புள்ளிவிவரமாக ஒதுக்கித் தள்ளப்படுகிறது.
""இந்தத் தற்கொலைச் சாவுகள் இறந்து போனவர்களைப் பற்றி அல்ல; அந்த இழப்பைச் சகித்துக் கொண்டு வாழ்க்கையோடு போராடும் உயிருள்ள விவசாயிகளைப் பற்றித்தான் பேசுகிறது'' என்கிறார் ஏழை விவசாயியான கமலாபாய் குதே. இவர் வசித்து வரும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் 6,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுள், கமலா பாயின் கணவர் பலசுராமும் ஒருவர்.
பலசுராமின் தற்கொலைக்கு நட்டஈடாக அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்ச ரூபாயை, கந்துவட்டிக்காரர்கள் பறித்துக் கொண்ட பிறகும், கமலாபாய்க்கு ரூ. 50,000/ கடன் பாக்கி இருந்தது. கடந்த ஆண்டு, அவர் தனது ஆறு ஏக்கர் நிலத்தில், மகாராஷ்டிர மாநில அரசு விளம்பரப்படுத்திய பி.டி. பருத்தியினைப் பயிர் செய்தார். ஆனால், விளைந்ததோ வெறும் 2 குவிண்டால்தான். இப்பொழுது கடன் ஒன்றுக்கு இரண்டாகி விட்டது. ஆறு ஏக்கர் நிலம் இருந்த போதிலும், கமலாபாய் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். பணப் புழக்கம் அதிகம் இருக்கும் நாட்டில், 12 மணி நேரம் வேலை செய்யும் கமலாபாய்க்குக் கிடைக்கும் கூலி, 25 ரூபாய் பெறுமான சோளம்தான்.

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் வாழும் பந்தி இலட்சுமம்மாவின் கணவர் பந்தி நரசிம்மலு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பொழுது, இலட்சுமம்மாவிற்கு ஆறுதல் சொல்ல ஓட்டுக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓடிவந்தனர். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ""இலட்சுமம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்க வேலை அளிக்கப்படும்'' என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் இலட்சுமம்மாவிற்கு, கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் கூட வேலை கிடைக்கவில்லை.

இலட்சுமம்மா, தனது கிராமத்தில் இருந்து 18 கி.மீ. அப்பால் உள்ள நகரத்தில் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இதற்கு அவருக்கு கிடைக்கும் கூலி 60 ரூபாய்தான். இதில் 10 ரூபாய் போக்குவரத்து செலவுக்குப் போய்விடும். அவரது மகன் கோபால், உள்ளூரில் உள்ள வங்கியில் 1,500 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குநராக வேலை பார்க்கிறார். மூன்று பேர் கொண்ட இலட்சுமம்மாவின் குடும்பம், மாதந்தோறும் கிடைக்கும் 3,000 ரூபாய் கூலியில், குடும்பச் செலவுகளை மட்டும் ஈடு கட்டாமல், விவசாயத்தையும் நடத்த முயன்று வருகிறது. ""விளைச்சல் ஓரளவுக்கு நன்றாக இருந்தால் போதும், நாங்கள் பிழைத்துக் கொள்வோம்'' என நம்பிக்கையோடு சொல்கிறார், இலட்சுமம்மா.

விவசாயம் சூதாட்டமாக மாறிப் போன பிறகும், அத்தொழில் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கும் இலட்சுமம்மா போன்ற விவசாயிகளுக்கு அரசு பெரிதாக உதவி எதுவும் செய்வதில்லை. மாறாக, ""வங்கிக் கடனைத் திருப்பித் தருகிறாயா, இல்லை கம்பி எண்ணப் போகிறாயா?'' என மிரட்டத் தொடங்கியிருக்கிறது.ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தைச் சேர்ந்த திராட்சை விவசாயி நல்லப்ப ரெட்டி, சமீபத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். வங்கிக் கடனை உரிய காலக் கெடுவுக்குள் அடைக்கத் தவறியதுதான் இவர் செய்த குற்றம்.

நல்லப்ப ரெட்டி விவசாயத்திற்காக வங்கியில் வாங்கிய கடன் 24,000/ ரூபாய் தான். கந்துவட்டிக்காரர்களிடம் 34,000/ ரூபாய் கடன் வாங்கி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முயன்றார், அவர். ஆனால், வங்கியோ, வட்டியோடு சேர்த்து ஒரு இலட்ச ரூபாய் கட்டத் தவறியதற்காக அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டது.

கதிரி மண்டலைச் சேர்ந்த கெங்கி ரெட்டி, ""கடனுக்கு ஈடாக தனது ஆறு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு'' வங்கி அதிகாரிகளிடம் மன்றாடினார். ஆனால், அதிகாரிகளோ, ""பணம் இல்லையென்றால், ஜெயில்'' எனக் கறாராகச் சொல்லி, அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை வாங்கித் தந்துவிட்டனர். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, பாசன வசதிமிக்க தனது ஆறு ஏக்கர் நிலத்தை விற்று வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தினார், கெங்கி ரெட்டி.

மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் (ஒருவர் தாழ்த்தப்பட்டவர்; மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர்) இந்திய அரசு வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக, சாதி வேறுபாடு பார்க்காமல், அதிகாரிகளால் சிறைக்குள் தள்ளப்பட்டனர். உலக வங்கிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை, காங்கிரசு ஆட்சியில் தீவிரம் அடைந்திருப்பதாகக் குமுறுகிறார்கள், ஆந்திர விவசாயிகள்.

விவசாயத்தில் இருந்து போதிய வருமானம் கிடைப்பதில்லை என்பது உண்மை என்றாலும், சட்டமும், நீதிமன்றமும் தங்களின் கடமையைச் செய்வதைத் தடுக்க முடியாது என அதிகாரிகள் நியாயவான்களைப் போலப் பேசுகிறார்கள். ஆனால், இந்தச் சட்டமும், நீதிமன்றமும் வங்கிக் கடனை வாங்கி ஏப்பம் விட்ட எத்தனை தொழில் அதிபர்கள் மீது பாய்ந்திருக்கிறது? ஆந்திராவைச் சேர்ந்த 200 முக்கிய புள்ளிகள் வங்கிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் கடனை வாங்கி ஏப்பம் விட்டிருப்பதை ஆந்திர அரசே அம்பலப்படுத்திய பிறகும், அவர்களுள் ஒருவர்கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை.

""அரசாங்கம், விவசாயத்தை முதலாளிகளிடம் ஒப்படைக்க விரும்புகிறது'' என்கிறார், சாய்நாத் ரெட்டி என்கிற விவசாயி. இதற்காகத்தான், ஒப்பந்த விவசாயம், விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்; ஏற்றுமதிக்காக பழச் சாகுபடி செய்தால் 70 சதவீத மானியம்; மல்பெரி சாகுபடிக்கு மானியம்; ரிலையன்ஸ், வால் மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் குத்தகைதாரர்களாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.

ஏழை நடுத்தர விவசாயிகளை தரகு முதலாளிகளின் பிடியில் சிக்க வைக்கும் இக்கவர்ச்சித் திட்டங்களுக்கு மயங்காமல், தன் சொந்தக் காலில் நின்று விவசாயம் செய்யத் துணிந்தால், அவர்களை அச்சுறுத்துவதற்காகவே, ""கடன் வசூல், கைது, சிறைத் தண்டனை'' என்ற குண்டாந்தடிகளைத் தூக்கிக் கொண்டு திரிகிறது, ஆளும் வர்க்கம்.

இரணியன்

Wednesday, July 4, 2007

நிலவில் இந்தியன்

நிலவில் இந்தியன் :வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு!

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள். அறிவாளிகளின் கூடாரமான இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும் ஆண்டுக்கொரு முறை வாணவேடிக்கையை நடத்துகிறது. இஸ்ரோவின் ஓராண்டுச் செலவு ரூபாய் 4000 கோடி.

இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் 2 வெளிநாட்டு சோதனை விண்கோள்களையும், இரண்டு உள்நாட்டு விண்கோள்களையும் ஏவியது. அதில் எஸ்.ஆர்.வி.1 என்ற விண்கோள் விண்வெளியில் 12 நாட்கள் சுற்றிய பிறகு வங்காள விரிகுடாவில் இறக்கப்பட்டது. ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி அதையே மீட்டுக் கொண்டு வருவது என்பது ஒரு இமாலய வெற்றியாம். பல தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி இச்சாதனையை நிறைவேற்றியதாக இஸ்ரோவின் அறிவியலாளர்கள் பெருமைப்படுகிறார்கள்.

அமெரிக்கா இந்தச் சோதனையில் 12 முறை தோல்வியடைந்து 13ஆவது முயற்சியில் வெற்றியடைந்ததாம். இந்தியாவோ முதல் சோதனையிலே வென்றுவிட்டதாம். ஆனால் அமெரிக்காவின் சோதனைகள் தோல்வியடைந்தது 1960ஆம் ஆண்டு. இந்தியா அடைந்த வெற்றியின் பின்னே 47 ஆண்டுகள் இடைவெளி இருப் பது போகட்டும். இஸ்ரோவின் அறிவியலாளர்கள் ஒரு அறிவியாளன் என்ற முறையில் அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி — மிகுந்த செலவு பிடிக்கும் சோதனை என்றாலும் — சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதை நாமும் பாராட்டுவோம். ஆயினும் இந்த வெற்றியினால் என்ன பயன்?விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்புவதற்கு இந்த வெற்றி ஒரு மைல் கல்லாம். அடுத்த ஆண்டு இஸ்ரோ 400 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் எனும் விண்கோளை நிலவுக்கு அனுப்பப் போகிறதாம். இன்னும் பத்தாண்டுகளில் நிலவுக்கு ஒரு இந்தியனை அனுப்ப முடியுமாம். இதற்கான உத்தேச செலவு மதிப்பீடு 10000 கோடி ரூபாய். இதற்கான மறைமுக நிறுவனச் செலவு இன்னும் சில ஆயிரம் கோடிகளைக் குடிக்கும்.

மூன்று டன் எடை கொண்ட விண்கோள், அதில் விண்வெளி வீரர்களுக்கான அறை, சேவை அறை, அவசரநிலை அறை போன்றவற்றை இந்தியா முழுவதும் உள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி நிலையங்களில் கட்டவேண்டும். மேலும் உயர் அழுத்த அதிர்வைச் சமாளிப்பதற்கான பயிற்சி, வீரர்களின் உடைகள், பாதுகாப்பு முறைகள், உடல் நலக் கண்காணிப்பு, உயிர்காக்கும் கருவிகள் முதலியனவற்றில் வீரர்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி பத்திரமாக உயிரோடு மீட்டுக் கொண்டு வர இத்தனை "பகீரதப் பிரயத்தனங்கள்' செய்தாக வேண்டும்.

பூமியில் இருக்கும் பல கோடி இந்தியர்களை மரணக் குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம். முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் இந்தியா டுடே போன்ற பிரச்சார பீரங்கிகள், இந்த வல்லரசு ஜம்பத்தை மட்டும் ஊதிவிடத் தவறுவதில்லை. போதாக்குறைக்கு நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், ""குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்'' என்று சாமியாடி வருகிறார்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன? விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. நான் காசிக்குப் போயிருக்கிறேன், மெக்காவுக்குப் போயிருக்கிறேன் என்பது போல இந்தியனை நிலவுக்கு அனுப்பி விட்டோம் என்று வெட்டியாகப் பீற்றித் திரியலாம், அவ்வளவுதான்.

இப்படித்தான் 1960களில் அமெரிக்காவும், ரசியாவும் கெடுபிடிப் போருக்காக விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கின. யார் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்ற போட்டியில் பல மனித உயிர்களும் விரயமாக்கப்பட்டன. இது அறிவியலின் பால் உள்ள காதலால் நடக்கவில்லை என்பதுதான் முக்கியம். ஏகாதிபத்திய உலகில் தூய அறிவியல் காதல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா!
சோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். ஆயினும் இதற்கு முன்னும் பின்னும் அரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாக திரும்பி வருவோம் என்ற உத்தரவாதமில்லாமல் இருநாட்டு வீரர்களும் உற்சாகமின்றி மரணபயத்துடன் சென்றதை பி.பி.சி. ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது. சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்த சோவியத் யூனியன் இந்தப் போட்டியில் சிக்கித் தனது பொருளாதார வல்லமையை இழந்து திவால் ஆனது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. உலகைக் கொள்ளையடித்து உலையில் போட்ட இந்த ஆராய்ச்சியினால் என்ன பயன்? உலக மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நாசகார ஆயுதங்களை விண்ணில் சுற்றவிட்டதுதான் மிச்சம்.

70களில் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா, சோவியத் யூனியனை ஆயுதப் போட்டியில் வெல்வதற்காக தனது கவனத்தை நட்சத்திரப்போர் திட்டத்தின் மீது குவித்தது. இதன் செலவு மதிப்பீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். பின்பு ரசியா வீழ்ந்த பிறகு அந்தத் திட்டத்திற்கு அவசியமில்லாததால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் விண்வெளி ஆராய்ச்சி ஈராக்கிலும், ஆப்கானிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்குத்தான் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

அதிலும் அமெரிக்க விண்கோள்களின் உதவியுடன் ஈராக்கின் இராணுவ இலக்குகளை மட்டும் தாக்குவதாகக் கூறி மக்கள் குடியிருப்பில் குண்டு போட்டதுதான் அதன் தொழில்நுட்ப வெற்றி! இது போக இந்த விண்வெளி ஆராய்ச்சி வித்தைகள் ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை உற்பத்தி செய்ய மட்டும்தான் பயன்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் மேதைகள்தான் புளோரிடா மாநிலத்தை காத்ரினா சூறாவளி பிய்த்தெறிந்தபோது, மக்களைக் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்றார்கள்.

ரசியாவும் தற்போது பேருக்கு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பணம் சேர்ப்பதற்காக தலைக்கு 90 கோடி ரூபாய் என்று கட்டணம் வைத்து கோடீசுவர முதலாளிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. ரசிய விண்வெளிச் சாதனையின் இலட்சணம் இதுதான். சுரண்டலுக்கும், நாசகார ஆயுதங்களுக்காகவும் மட்டுமின்றி முதலாளிகளின் கேளிக்கைக்கும் விண்வெளி அறிவியல் பயன்படும் என்பது இதில் உள்ள செய்தி.ஏகாதிபத்தியங்களின் இலாபவேட்டைக்காக மலிவான உழைப்பை விற்று கொத்தடிமைகளின் நாடாக மாறிவரும் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 65 சதவீதத்தை தனியார் முதலாளிகளிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடான சீனாவில் ஓராண்டில் நடக்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு வக்கற்ற சீன அரசு 2003இல் விண்வெளிக்கு ஒரு சீனவீரரை அனுப்பி இந்தச் சாதனையில் மூன்றாம் நாடாக மாறியிருக்கிறது. சீனாவும் நிலவுக்கு ஒரு வீரரை அனுப்பப் போகிறதாம். சீன கடற்கரைப் பெருநகரங்களில் நடக்கும் பேஷன் ஷோக்களில் அழகிகள் வாத்து நடை நடக்க, சீன வீரர் நிலவில் அன்ன நடை நடக்கப் போகிறார். கிராமப்புறங்களில் இருந்து துரத்தப்படும் சீன விவசாயிகள் நகரங்களை நோக்கி நாடோடிகளாய் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். நல்ல வளர்ச்சிதான்!

உலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது? நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் நிலவுக்கு இந்தியனை அனுப்புவது என்பது ஆபாசமன்றி வேறென்ன?·

அஜித்

குரு திரைப்பட விமரிசனம்:

குரு திரைப்பட விமரிசனம்:
அம்பானி முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு

90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.
எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?

இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.
ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.···குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.

வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.

நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். ""என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்'' என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.

""எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா'' என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.

அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.
குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். ""நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்'' என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.

1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: ""அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.'' அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.

அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், ""அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்'' என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?

···தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.

அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.

பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.

அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.

அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. ""நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்'' என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.

வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.

எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.
இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.

நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.

தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.

90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.

திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.

இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.

பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.

இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.

பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் ""ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்'' என்று அம்பானியிடம் உருகுவார்கள்.

70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.

இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: ""ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்'' என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.
ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.

மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.

எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.
""நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா'' என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன.
நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.

வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.

""ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம் — திருபாய் அம்பானி கனவுத் திட்டம்'' என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?

"அம்பானி ஒரு வெற்றிக் கதை' என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி ""இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.'' கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.

அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.

இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், ""ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்'' என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.

குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.

ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.

சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.

குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு ""நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்'' என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி இயக்கலாமே!
ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

· வேல்ராசன்

Tuesday, July 3, 2007

சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

பி.இரயாகரன்
03.07.2007

வாழ்வில் இருந்த அன்னியமாகி நுகர்வு உலகில் சிக்கிவிடும் குடும்பப் பெண்ணால், நடைமறை வாழ்வில் திருத்தியை காணமுடிவதில்லை. அழகு, கவர்ச்சி, ஆடம்பரமுமே அனைத்துமாகி விட, பொருட்களுடனான வாழ்வில் வாழ்வை திருத்திபடுத்த அவளாளேயே முடியாது. இதன் விளைவு என்ன? தன்னை சுற்றி வாழ்வபவர்களின் குறைபாடாகவே அதைக் காண்பதுடன், அதற்குள்ளாகவே அவள் தன்னை ஒழுங்குபடுத்திய ஒரு மனநோயாளியாகி விடுகின்றாள்.

சமூகத்தின் தொடர்ச்சியின்மை எற்படும் போது, அது மிக மோசமான பாதிப்பை பெண்ணுக்கு எற்படுத்துகின்றது. தொடர்ந்து அந்த குடும்ப முழுக்க இந்த பாதிப்பு உருவகின்றது. இந்த வகையில் புலம்பெயர் சமூகங்கள், தனது சமூகத்துடனான சமூகத் தெடர்ச்சியற்று காணப்படுகின்றது. சந்தர்ப்பமும் சூழலும் இனைந்து, சமூகமாக, சமூகத்துடன் இனைந்து வாழ்கின்றதும், வழிகாட்டுகின்ற தொடர்பை இழந்துவிடுகின்றது. அதே நேரத்தில் சமூகத்தின் கூட்டுமனப்பாங்கையும், சமூக மனப்பாங்கையும், புலம்பெயா நாட்டில் உருவாக்கக் கூடிய எந்த ஆக்கப+ர்வமான முயற்சி உருவாகவில்லை. பொதுவான புலம்பெயர் தமிழரின் அரசியல் போக்கு, இதை மறுத்து நிற்பதும், புலம்பெயர் குடும்பத்தின் சிதைவுக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்;.
உண்மையில் முந்தைய தலைமுறை சார்ந்த, சமூகத்தின் வழிகாட்டலை சமூகம் இழந்து போனது. இந்த நிலையில் இலகுவாகவே, உலகமயமாதல் மந்தைக் கலச்சாரம் வெற்றிடங்களை ஆக்கிரமிக்கின்றது. இப்படியாக வீங்கி வெம்பி தள்ளும் உலகமயமாதல் நுகர்வுக்கலச்சாரம், வெற்றிடமான வீட்டினுள் அத்துமீறி புகுந்துவிடுகின்றது. உண்மையில் புதிய நிலைமை, புதிய சூழல், இதற்குள் குடும்பங்கள் சந்திக்கின்ற நெருகடிகள், அவை சரியான வழிகாட்டல் இன்றி அதுவும் தானகவே வீங்கி வெம்பத்தொடங்குகின்றது. இப்படியாக குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது தொலைக்கப்படுகின்றது.

சமூகம் ஆதாரமும், பரஸ்பரம் இணங்கிய வழிகாட்டலைக் கொண்ட சமூக அனுதபமுமற்ற விட்டில் ப+ச்சிகள் தான் இன்றைய குடும்பங்கள். சமூகமாக இணங்கி வாழமுடியாத நிலையே, எமது குடும்ப சூழல்கள். எங்கும் தனக்குள் தானே வீங்கி வெம்பிய தனிமனித சுயநலம் கொண்ட வாழ்வியல் கோலங்கள்.

புலம்பெயர்ந்த ஆண்களை எடுத்தால், பெரும்பாலனவர்கள் இங்கு அவாகள் வரமுன்பு முன்பு எந்த மனித உழைப்பில் ஈடுபடாதவர்களாக இருந்தனர். புலம்பெயர் நாட்டு சூழல், அவாகள் உடனடியாக உழைப்பில் ஈடுபடவைத்தது. இப்படி அதிரடியாக தொடங்கிய வாழ்கையில் கிடைக்கும் பணத்தை, எப்படி எந்த வழியில் பயன்படுத்துவது என்பதில் எற்படும் தடுமற்றங்கள், ஆண்களைச் சுற்றிய பல சமூகச் சீராழிவுகளை உருவாக்கியது. இளமைக்கே உரிய பாலியல் கவாச்சி, ஆபாசம் போன்றவற்றில் எற்பட்ட நாட்டம் முதல், தன்னை மறந்து குடிபோதையில் கிடக்கும் எல்லைவரையில், அவர்களின் வாழ்க்கை சீராழிநத்து கிடந்தது. இந்த சீராழிவுகளில் இருந்து தப்பிபிழைத்தவர்கள் அரிதிலும் அரிது. சமூகத்தை வழிநடத்தக் கூடிய அறிவியல் அரசியல் அறநெறிகள் எமது சமூகத்திடம் காணமல் போனது. அனைத்தும் வன்முறை ஊடாக நோக்கப்பட்டது. அதற்குள் தீர்வுகள் தேடப்பட்டது. ஆண் பெண் உறவுகளில் எற்படும் இணக்கமற்ற நிலையை, வன்முறை மூலம் தீர்வுகாணும் அறநெறி தான் தெரிந்த ஒரு வழியாக இருந்தது. சாதாரணமாக கதைக்க பேசக் கூடத் தெரியாத சமூகமாக, மொழியை வன்முறை கொண்ட ஒன்றாக கரடுமுரடாக மாற்றிவைத்துள்ளது. சரியாக வழிகாட்டல் இன்றி, பிரச்சனைகள் வீங்கின.

இந்த நிலையில் தொழிலை பெறுவதில் இருக்கும் நெருக்கடிகள், புலம்பெயர்வால் எற்பட்ட குடும்ப பிரிவுகள், புலம்பெயர்வு எற்படுத்தி கடன் தொல்லைகள், தங்கி வாழ இடமின்மை, குடும்பத்தை முன்னேற்றுகின்றேன் என்று ஒரு தலைப்பட்சமாக கருதி வாழ்வையே அடமானம் வைத்த வாழ்கை முறைகள், குடும்ப உறுப்பினர்கள் சாத பணம் கேட்டு கொடுக்கும் தொலைகள் என்று பல, ஒருங்கே இனைந்து புலம்பெயர்ந்த ஆண்களின் இயல்பான வாழ்வியல் சார்ந்த உளவியலை அழித்தது. உண்மையில் ஆண்களில் விடலைப் பருவத்தில், வாழ்வுபற்றி அன்னியமாக்கலை உருவாக்கியது. பெரும் சுமையை, சுமக்க முடியாமல் நின்றவர்களையே அனைத்தையும் சுமக்கக் கோரியது. கொஞ்ச நஞ்ச சென்ரிமென்றும் சேர்ந்துவிட்டால், அவர்களாகவே மாடாகி மலடாகி விடுகின்றனர். இதை குடும்பக் கடமையாக கூறிக்கொண்டு, தனது வாழ்கையையே தனக்குள்ளாகவே தாமே அழித்தனர். இது பெரும்பலான ஆண்களின் கதை. எப்போதும் அங்கிருப்பவர் பணம் புடுங்கிகளாக இருக்க, இங்குள்ளவர்கள் கொடுப்பதும் அல்லது தப்பித்து செல்வதுமாக மாறினார். ஒரு கயிறு இழுப்பு அங்கமிங்குமாக நடந்தது. இதற்குள் பந்தம் பாசம், கடமை எல்லாம், பணத்தை வைத்து விலை பேசப்பட்டது.

மறுபக்கத்தில் பணம் புடுங்கிகளாகிவிட்ட குடும்ப உறுப்புகள், இளையவர்களின் பாலியல் பிரச்சனையை தீர்ப்பதில் ஒரு சமூகமாகவே அக்கறை கொள்ளவில்லை. அவர்களாக அதை தேடிக்கொண்டால் தான் உண்டு என்ற பொதுவான நிலை. இளம் வயதுக்கேயுரிய குறுக்கு வழியில் பாலியல் பிரச்னைக்கு வடிகாலைத் தேடினர். புலம்பெயர்ந்தவன் திருமணம் செய்தால் பணம் அனுப்பமாட்டார்கள் என்ற கருதிய எமது சுயநலம் சார்ந்த சமூக மனப்பாங்கு, அiயொட்டிய நடைமுறையும், புலம்பெயா ஆண்களின் திருமணத்தை திட்டமிட்டு தவிர்த்தனர். மருமகளை எதிரியாகவே கற்பனையில் உருவாக்கிக் கொண்டனர். இப்படி ஆணின் இயல்பான இயற்கையான வாழ்வில் பிரசனைகளை நலமடித்தன் மூலம், புலம்பெயர் ஆண்கள் சீராழிவுக்குள்ளனார்கள். இப்படி சமூகம் சார்ந்த பல நெருக்கடிகள். பெரும்பாலனவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியது. பலர் தம்மை மறந்து கிடப்பதையே விரும்பினர். பலர் முழுக் குடிகாராகினர்.

இதைவிட புலம்பெயர் நாட்டில் வாழ்வதற்கு எற்ற விசா இன்மையும், வாழ்வை திட்டமிட்டு வாழ முடியாமையும், அரஜாகத்தனமாக போக்கில் சீராழிதலே வாழ்க்கையாகியது. இப்படி தொடர்ச்சியான பற்பல விடையங்கள்.
இதில் இருந்து விடுபடவும், சூழல் சார்ந்த சந்தர்ப்பங்களும்,, குறுக்குவழியை நாடுவதை தீர்வாக்கியது. பலர் குடிகாரானர்கள். பலர் மீள முடியாத கடளாளியானர்கள். சிலர் மற்றவனை எமாற்றி தட்டி சுட்டித் தின்னம் பேர்வழியானர்கள். சிலர் குறுக்கு வழியில் சம்பதிக்க, குறுக்கே ஓடினார். இப்படிப் பற்பல வகையினராக, பல சீராழிவுகள் உருவானது. ஒரு சமூக அமைபினுள் இயங்க முடியாத வகையில் உள்ளுராகச் சிதைந்தனர். பணம் உள்ளவன் தனது நலம் கருதி அதற்குள் சமூகமாக கூட்டுதைத் தவிர, வேறு எதுவும் இந்த சமூகத்திடம் சொந்தமாக கிடையாது. இவர்களுக்கு தலைமை தாங்கிய அரசியலோ, சாடிக்கேற்ற முடியாகவே இருந்தது. சமூகத்தை ஒழுங்குபடுத்த, வழிகாட்ட, அதனிடம் சமூக சார்ந்த எந்த கண்ணோட்டமும் இருக்கவில்லை.

இப்படிப்பட்ட ஆண்களின் வாழ்வில் ஒரு குறுக்கிடகவே பெண்களின் இறக்குமதி அமைந்தது. அதையொட்டிய திருமணம் என்ற பந்தம், மெதுவாக ஆறயமர புகுந்து கொண்டது. ஆண்களின் அரஜாகமான வாழ்கை முறையில் ஒரு இனைப்பை, ஒரு ஒழுங்குபடுத்தலை எற்படுத்தும் கண்ணியாகவே பெண்ணின் வருகை அமைந்தது. ஆனால் அதை ஒருபோதும் பெண்ணால் உணரப்படவேயில்லை. அந்தளவுக்கு பெண்ணின் சமூக ஆற்றலும், அறிவு முதுர்சியும் இருக்கவில்லை. ஆனால் பெண்ணின் முதல் கடமை அதுவாகவே இருந்தது. பெண்ணின் தன் வருகையின் பின் கட்டியிருந்த விம்பமோ, மிதமிஞ்சி பணம் சார்ந்த போலியான கற்பனை உலகம். இது தகரும் வண்ணம் தான் திருமணங்களும், அதையொட்டிய அதிரடியான வாழ்வும் தொடங்கியது. ஒரு அதிர்த்தியுடன் தான் பெண்ணின் வாழ்க்கையே தொடங்கியது. இந்தப் பெண் எதிர்கொண்ட பிரச்சனைகளோ பற்பல.

1.ஆணின் உழைப்பை ஒழுங்குபடுத்த வேண்டியிருநத்து. கிடைக்கும் வருமானத்தை குறைந்தபட்சம் குடும்பத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து ஒழுங்குபடுத்தவேண்டிருந்தது.

2.ஆணின் தொடர்ச்சியான குடியை, புகைத்தலை, வீதி அரட்டையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

3.ஆணின் அராஜகமான வாழ்ககையை ஒழுங்குபடுத்தி, வீட்டுக்கு கணவன் ஒழுங்காக வருவதையும், நேரத்துக்கு வருவதையும், வீட்டில் குடித்தனம் நடத்தவதையும் உறுதிசெய்ய வேண்டிருந்தது.

4.வீட்டிற்கு வரும் கணவனுடன் பலவழிகளில் ஒரு தோமைமையை பெண் பேன வேண்டியிருந்தது.

5.ஆணின் வீங்கிவெம்பிய பாலியல் பிரச்சனைகள் சீராக்க வேண்டியிருந்தது.
6.ஆணின் ஊதாரித்தனமான கட்டுப்பாடற்ற செலவு முறைகளை கட்டுபடுத்தவும் அல்லது கஞ்சத்தனத்தை ஒழிக்கவும் வேண்டியிருந்தது.
இப்படிப் பற்பல. உண்மையில் ஆணின் வாழ்வை தன்னுடனான வாழ்வில் ஒழுங்குபடுத்துவதே, அவளின் முன் இருந்த பாரிய பிரச்னையாகும்;. இதை அவள் எந்த முன் உணர்வுமின்றியே, இதற்குள் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை காணப்பட்டது. உண்மையில் தன்னுடன் வாழ்தல் என்ற எல்லைக்குள், தவிர்க்க முடியாத நிலையில் பெண் இதைக் கோரினாள்.

போலியாக கோட்டும் சூட்டும் போட்டும், பட்டும் பகட்டுமாக நடக்கும் திருமண வாழ்கையோ ஒரு நாளுடன் முடிவடைகின்றது. கற்பiனான உலகத்தில் நடக்கும் திருமணங்கள், தனது சொந்த போலித்தனத்துடன் மினுக்கித் தான் அரங்கேறுகின்றது. இளமை, பாலியல் நாட்டம், பாலியல் ஆர்வம் போன்றவற்றுடன், இதையொட்டி அவர்களிடையே நிலவிய பரஸ்பர உணர்வுகள் இணங்கிப் போவது போல் தான் அனைத்தும் தோன்றியது.
இப்படித்தான் பெண்ணால் முதலில் உணரப்பட்டது. ஆனால் படிப்படியாக பாலியல் ஆர்வம் குறைய, இளமையின் மோகம் தனியா, இணங்கிப் போகும் பரஸ்பர போக்கில் வெடிப்பு எற்பட, இவை தமக்கு எதிரானதாக பார்க்கப்படுகின்ற உணர்வை உருவாக்கி விடுகின்றது. இப்படியாக போலியாக கட்டி வைத்திருந்த கற்பனை உலகம் கண்முன்னலேயே தகர்கின்றது. இந்த பிரச்னையை அறிவியல் பூர்வமாக அனுகப்படுவதில்லை. அழகு, கவர்ச்சி ஆடம்பரம், போலியான பகட்டுத்தனம் எல்லாம் மெதுவாக தமக்குள்ளேயே தானாக அம்பலமாகத் தொடங்குகின்றது. அத்துடன் பாலியல் வேட்கை ஊடாக இணக்கமாக இணங்கி அனுகப்பட்டவை, பின்னால் அது தணியும் போது அவை எதிரானதாக மாறுகின்றது.

உண்மையில் இந்த விடையங்களை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளும் அளவுக்கு வாழ்வுபற்றிய அறிவு இருவருக்குமே இருப்பதில்லை. அவர் அவர் நிலையை தக்கவைக்கவும், முரண்பாட்டை தனக்கு எதிரானதாக பாhக்கின்ற நிலையும் உருவாகின்றது. திருமணம் செய்ய வந்த பெண்களின் சமூக பாத்திரம் என்பது, ஆண்களை விடவும் வாழ்கை புரிவதில் முன் அனுபவமற்றது. ஆண்கள் உழைத்த வாழும் வாழ்வில், சமூகத்தின் பல்வேறு கோணங்களில், போக்குகளை முகம்கொடுத்த அனுபவம் பெற்றவராகவே காணப்பாடுகின்றனர். ஆனால் ஆண் சமூக ஒழுங்குள்ளாகாத அராஜகத்தன்மை கொண்ட லும்பன் தன்மை பொதுவில்; காணப்பட்டது. திருமணத்துக்காக வரும் பெண்கள் பேசியோ அல்லது காதலித்தோ வந்த சேரத் தொடங்கிய போது, இந்த சமூக அமைப்பை புரிந்து எதிர் கொள்ளக் கூடிய வாழ்வியல் அனுபவத்தை அவர்கள் கொண்டிருப்பதில்லை. அத்துடன் சூழலால் வழிகாட்டும் சமூகத் தொடர்பை துண்டித்தபடி வாழ்வுக்குள் வருகின்றனர்.

சினமா தனத்துக்குள் வாழ்கையை புரிந்து வருபவர்கள். இதன் விளைவு அவளின் நடத்தை, அவனின் நடத்தைக்கு பதிலடியாகவே அமைந்துவிடுகின்றது. இணக்கம் காணமுடியாத முரண்பாடுகளின் தொகுதிகளாகவே வாழத் தொங்குகின்றார்கள்;. சரியையும் பிழையையும் அறிவியல் ப+ர்வமாக அனுகவோ, தீர்க்கவோ, மற்றொரு தரப்புடன் இணைத்து தீர்வு காண்பது கூட, சாத்திமற்றவொன்றாகி, எலியும் பூனையுமாகிவிடுகின்றனர். சமூகத்தில் இருந்தும் தம்மை வெட்டிக்கொண்டு, குடும்பதிலும் தனிவுலகை கட்டிக்கொண்டு, தனி உலகில் தமக்குள் தாமே வாழத்தொடங்குகின்றனர்.

ஆணாதிக்க சமூகத்தில் அறிவியல் ரீதியாக மிக பின்தங்கிய நிலையில் வாழ்ந்த பெண்கள், புலம்பெயர் ஆண்களின் பிரச்னைகளை கையாளவும், வழிகாட்டவும் முடியாதவர்கள் என்பதை ஒவ்வொரு விடையத்திலும் நிறுவினர். எம் பெண்கள் உண்மையில் அடக்க ஒடுக்கமாக, எமது ஆணாதிக்க சமூக அமைப்பின் கண் அசைவுக்குள் வாழப்பழக்கப்பட்டவர்கள்.

இப் பெண் புலம்பெயர்ந்த போது, கிடைத்த திடீர் சுதந்திரமும், அதேநேரம் குடும்பம் என்றால் என்ன என்ற தெரியாத விட்டில் ப+ச்சிகாகவே வந்து வழத் தொடங்கினர். அவளுக்கும் கணவனுக்கும் இடையிலான பிளவுகள், சுதந்திரத்தின் எல்லையை முன்னெச்சரிக்கையுடன் சரியாக கையாள்வது என்பதற்கு பதிலாக, அதை தவாறாகவே புரிந்து கொண்டு தாறுமறாகவே பயன்படுத்தினர். குடும்பத்தின் அதிகாரம் பெண்ணின் கையில் சென்ற போது, கணவனை குடும்பத்துக்கு அன்னிமான ஒரு உறுப்பாகவே கருதுகின்ற நடைமுறைகள் முதல் குழந்தைகளையும் அதற்குள் திணித்துவிடுகின்றனர். குடும்ப அதிகாரம் என்பது குடும்ப நிர்வாகம் மூலமும், மொழி வன்முறை மூலம் பெண் பெற்றுவிடுகின்றாள்.

இதன் விளைவு கணவனை மட்டுமல்ல, குழந்தைகளையும் சாத திட்டித் தீர்க்கின்ற, அல்லது சாத குறை காண்கின்றதுமாகின்றது. பெண்ணின் வாழ்வே திருத்தியற்ற சாத புறுபுறுப்பாக மாறுகின்றது. இப்படிப்பட்ட குடும்பங்கள் தான் புலம்பெயர் மண்ணில் அதிகம்.

இந்த பெண்ணுக்கு இந்த வாழ்வியலைக் கற்றுக்கொள்ளவும், கற்றுக் கொடுத்தலும் என்பது, சினிமாவுலகமும் நாடாகவுலகமும் ஆகிவிடுகின்றதுது. பெண்ணின் வாழ்க்கையே சினிமாவாகி நாடகமாகிவிடுகின்றது. எல்லாமே பகட்டான போலித்தனமாகிவிடுகின்றது. பல கும்பத்தில் நடிப்பே வாழ்கையாகின்றது. குடும்பத்தில் இருப்பதே நடிப்பாகிவிடுகின்றது.
உண்மையில் இதன் பின்னனி என்ன? எமது சமூகம் கற்றுக்கொடுக்கும், கற்றுக்கொள்ளும் சமூகமாக மூன்று பத்து (30 வருடங்கள்) வருடங்காளாக இருக்கவில்லை. தமிழ் அரசியல் சூழல் அதற்கு எதிராகவே இருந்தது. இந்த அரசியல் வாழ்வின் எந்த அம்சத்தை கற்றுக்கொள்வதை, கற்றுக்கொடுப்பதை மறுத்தே வருகின்றது. அனைத்துக்கும் தீர்வாக வன்முறையை வைக்கின்றது. ஆண் பெண் உறவில் எற்படும் முரண்பாடுகளை தீர்க்க, இந்த அரசியல் வன்முறையின் வழிகளில் வன்முறையையே கையாளப்படுகின்றது. பிரச்சனையை புரிதல், அதைப் புரிந்து தீர்வு காணுதல், இணக்கத்தை காண முனைதல், பேசித் தீர்த்தல் என எதுவும், எம்மைச் சுற்றியுள்ள குடும்ப வாழ்வில் கூட அருகிப்போய்விடுகின்றது. மொழி வன்முறையில் தொடங்கி உடல் வன்முறையையே தீர்வாக கையாளப்படுகின்றது. முரண்பாட்டை தீர்ப்பதில் வன்முறையைத் தவிர வேறு மொழியே இருப்பதில்லை. இது எங்கள் அரசியல் வாழ்வில் மட்டுமல்ல, சதாரணமான குடும்ப வாழ்வில் கூட காணப்படுகின்றது.

எமது மண்ணில் பெண் வாழ்ந்த போது கூட, சமூகத்தின் பிரச்னைகளை வீட்டில் கூட பெற்றோர் குழந்தைகளுடன் கதைக்க முடியாத பாசிச அரசியல் சூழலில் சிக்கிய ஒரு சமுகமே தத்தளி;க்கின்றது. வெம்பி விடுகின்ற வரட்டு முதிர்வு உருவாகின்றது. உண்மையில் குழந்தைகள் சமூக அறிவற்ற, பாசிச எல்லைக்குள் தான் தாலாட்டி வளர்க்கப்படுகின்றனர். வாழ்கை என்றால் என்னவென்று தெரியாத ஒரு சூனியத்தில் வளந்தவர்கள் தான், இன்றைய தலைமுறையினர். சாதாரண பெற்றோரின் வாழ்க்கை சார்ந்த அறிவு கூட, பிள்ளைகளுக்கு கற்பிப்பதை தமிழ் பாசிச அரசியல் அனுமதிக்கவில்லை.
இப்படி வளர்க்கப்பட்ட பெண்களின் சமூக அறிவு என்பதே அறவே இல்லாது போனது. சினிமா, அதன் எல்லைக்குள் வாழ்வுபற்றி கற்பனையான பிரமிப்பான மதிபீடுகளையே பெற்று கொண்டனர். தன்னைத்தான் கவர்ச்சியான அழகான பாலியல் பண்டமாகவும், மனித உறவை ;இதற்கு உட்பட்ட ஒன்றாகவும் கருதுகின்ற வாழ்கையையே; கற்றுக்கொண்டனர். வாழ்வை அப்படித்தான் புரிந்து கொண்டனர். நிஜவாழ்விலோ அவர்கள் தோல்வி பெறுகின்றனர். நாடகம் மற்றும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பதை புரிந்து கொள்வதில்லை. சினிமாவை வாழ்கையாக கருதிய கற்பனையில் தான் வாழ்கின்றனர். சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி, அதற்கு எதிராகவே கற்பனையில் செயல்படுகின்றது. சினிமா அரசியல் என்பது, வாழ்க்கையை சினிமாவாக்குவதில்லை.

ஆகவே வாழ்வியல் பிரச்னைகளை இனம்காணுதல், அதை எப்படி தீர்த்தல் என்பதை இணக்கமான அறிவியல் பூர்வமான வகையில் இனம் காணும் வாழ்வியல் சூழலை அவளுக்கு எமது சமூகம் அனுமதிக்கவில்லை. ஏன் சினிமாவும் கூடவும் அதைச் செய்வதில்லை. வாழ்கையை விகாரமாகின்றது. வாழ்க்கையை நரகமாகின்றது. வாழவே தெரியாது சமூக அறிவற்ற விட்டில் பூச்சிகாளவே பெண்கள் பலியிடப்படுகின்றனர்.

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு தொடரும்)

இதை ஒட்டி எழுதி முதல்கட்டுரை
1.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

2.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

Monday, July 2, 2007

ஜனநாயகம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் என்ன?

பி.இரயாகரன்

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடைப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம்;. இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.

இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது. இந்த ஜனநாயகம்; பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. தெரிவு செய்யப்படும் இந்த அமைப்பு மூலமே இது நிகழ்கின்றது. தெரிவு செய்யப்படும் உறுப்பு, ஏற்கனவேயுள்ள ஆளும் அதிகார வர்க்கத்துடன் இணங்கி செயற்படும் ஒரு உறுப்பு மட்டும் தான். தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் நாட்டை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மீறி, சுயாதீனமாக செயல்பட முடியாது. மாறாக இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கும், அதேநேரம் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக அதற்குள் தான் சுயமாக செயல்படமுடியும். மக்களின் தேர்வு என்பது போலியானது. மக்கள் தங்களைத் தாங்கள் ஆள்வதற்கு தேர்ந்தெடுகின்றனர் என்பது சூக்குமமான ஒரு ஏமாற்ற மோசடியாகும்.

உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்கு மிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.

ஆனால் மக்கள் எந்த ஒரு சக மனிதனையும் அடக்கியொடுக்கி தான் வாழ விரும்புவதில்லை. தான் உழைத்து வாழவிரும்பும் சமுதாயத்தின், ஒரு உயிரியாகவே இருகின்றான், இருக்க விரும்புகின்றான்;. மற்றைய மனிதனை இழிவுபடுத்தி, அவனைத் தாழ்த்தி, இதன் மூலம் அவனின் உழைப்பைப் பிடுங்கி தான் வாழவேண்டும் என்று மக்கள் விரும்புவதில்லை. ஆனால் இதுவே பொதுவான ஆதிக்கம் பெற்ற ஒரு சமுதாய நடைமுறையாக உள்ளது. மக்களின் விரும்பங்களுக்கு அப்பால், இது ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே உள்ளது.

இந்த ஜனநாயகம் என்ற சமூக அமைப்பு, தனது இருப்பு சார்ந்து இதை உருவாக்குகின்றது. ஜனநாயகம் என்பது சக மனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக தன்னை விட மற்றவனை அடக்கவே விரும்புகின்றது. மனிதனை அடக்கி அடிமைப்படுத்தி இழிவாடுகின்றது. ஏன் இப்படிச் செய்கின்றது. மற்றைய மனிதனைச் சார்ந்து, தான் வாழ்தல் இதன் மையமான அடிப்படையாகும். மற்றைய மனிதனின் வாழ்வை பறித்து, அதில் தான் வாழ்தல் இதன் மையக் கூறாகும். இதற்கு பெயர் ஜனநாயகம். பறிக்கும் உரிமை தான் ஜனநாயகம். இதுவே மனித சுதந்திரமாகும். இதற்கு வெளியில் வேறு விளக்கம் எதுவும் கிடையாது. இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.

கடந்த 100, 150 வருடங்களுக்கு முன்னம், மனித அமைப்பில் மனிதர்களையே அடிமையாக வைத்திருத்தல் பொதுவாக சில ஜனநாயக நாடுகளின் சட்டங்களில் காணப்பட்டது. இதையே சமூக நாகரிகமாக அன்றைய மேட்டுக்குடி ஜனநாயகவாதிகள் கருதினர். ஆனால் இன்று அதை அநாகரிகமாகவும், மனிதவிரோதமாக கருதும் நாம், எமது இன்றைய நிலையை அன்றைய வாழ்வுடன் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. ஆனால் இன்று எம்மைப் போல், அன்று அதை அவர்கள் இயல்பான ஒன்றாக கருதினர். அன்று அடிமைகளை வாங்கவும் விற்கவும், குடும்பங்களை பிரித்து சிதைத்து விலங்கிட்டு சந்தையில் நிறுத்தவும், பெண்களை புணரவும், ஏன் கொல்லவும் கூட உரிமையிருந்தது. இதை அன்று சமூதாயத்தின் ஒழுக்கமாக சட்டம் அங்கீகரித்து இருந்தது. இதை அனுபவித்தவர்கள் தான், அன்றைய நாகரிகத்தின் உன்னதமான ஜனநாயக மனிதர்களாக சமுதாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இன்று அவர்களின் வாரிசுகள் உலகை கொள்ளையிடுகின்றனர். அன்று இதைக் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், தமது சிறந்த பண்பின் பெயரால் நியாயப்படுத்தினர். இதை பாதுகாப்பதும், அதை ஒட்டிய சட்டங்களுமே அன்று ஜனநாயகமாக கருதப்பட்டது. இன்று இதை சுதந்திரத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் இதைச் செய்கின்றனர்.

இன்று நாம் அன்றைய நிகழ்ச்சிகளை இழிவானதாக எமது பொதுப்புத்தி மட்டத்தில் கருதிய போதும் கூட, நாம் இன்று உண்மையில் நவீன அடிமைகளாக இந்த ஜனநாயக அமைப்பில் உள்ளோம்;. உண்மையில் எம்மையே நாம் புரிந்து கொள்ளவில்லை. கொஞ்சம் உள்ளே சென்றாலே நாற்றமெடுகின்றது. உலக அமைப்பு எப்படி உள்ளது. மூலதனத்துக்கு அடிமையாக உள்ளது. இயந்திரத்தின் ஒரு உறுப்பாக மனிதன் மாற்றப்பட்டுவிட்டான்;. தனது உழைப்பை சந்தையில் விற்க கூட முடியாத புதிய நிலையை அடைகின்றான். இது நவீன அடிமைகளின் நிலை. ஒரு வட்டம் கீறப்பட்டுள்ளது, அதற்குள் நின்று உலகை பார்க்கவும், சிந்திக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றது. இது ஒரு முகம் என்றால், முகத்தின் உள்ளே கொத்தடிமைகள், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அடிமைப்படுத்தப்படும் தாழ்ந்த சாதிகள், இழிவாக கருதப்படும் கறுப்பின மக்கள், இன அடிமைத்தனங்கள், ஆணிண் ஆதிக்கம், மனித உழைப்பைச் சுரண்டும் மூலதனம் என மனித அடிமைத்தனம் பல வடிவில் பலவாக காணப்படுகின்றது. இதையே எமது பொதுப்புத்தி, ஜனநாயகமாக கருதுகின்றது. ஆச்சரியம் தான், ஆனால் இதுவே உண்மை. நாம் இதையே ஜனநாயகம் என்கின்றோம்;. இதற்கே வாக்களிக்கின்றோம். இதற்கே ஜனநாயக கோசத்தை போடுகின்றோம். நாம் மிகச் சிறந்த ஜனநாயக விரோதிகளாக, நாமாகவே எம்மை அறியாது இருக்கின்றோம். இதை எதிர்த்துப் போராடாத ஒவ்வொருவரும் ஜனநாயக விரோதிதான்.

சற்று விரிவாக போனால், மற்றைய மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை நாம் எப்படி புரிந்து கொள்கின்றோம்;. ஒரு மனிதனி;ன் உழைப்பைச் சுரண்டுவது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்! சுரண்டுவது எப்படி சுதந்திர உரிமையாக இருக்க முடியம்! இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதிலளித்தேயாக வேண்டியுள்ளது. நாம் சுரண்ட முடியாத நிலையிலும்; கூட, மற்றவன் சுரண்டப்படுவதை எப்படி நாம் அங்கீகரிக்க முடியும். சரி நாம் அங்கீகரிக்கவில்லை என்று வைப்போம்;, அந்தக் கொடுமைக்கு எதிராக நாம் போராடவில்லை என்றால், எப்படி நாம் ஜனநாயகத்தின் பிரதிநிதிகளாக எம்மைச் சொல்லிக் கொள்ளமுடியும்.
முடியாது, உண்மையில் நாம் ஜனநாயக விரோதியாக, ஜனநாயகத்தை சக மனிதனுக்கு மறுக்கும் ஜனநாயக வாதியாக இருகின்றோம். இதுவே உண்மை. ஜனநாயகத்தை பாதுகாப்பவன் தான், ஜனநாயகத்தை மறுப்பவனாகவும் உள்ளான். இதில் இருந்து வேறுபட்டு நாம் எதைக் கோருகின்றோம் என்றால், ஜனநாயகத்தை ஒழிப்பதைக் கோருகின்றோம். அனைவருக்கும் ஜனநாயகத்தை உறுதி செய்வதன் மூலம், அதை இல்லாதொழிக்கும் சமூக அமைப்பைக் கோருகின்றோம். நான் ஒரு தனிமனிதன் என்ற வகையில், எனது உழைப்பை சுரண்டலுக்குள்ளாக்க விட்டுவிட்டுகின்றேன் என்று எடுப்போம். இந்த இடத்தில் இதை நாம், ஜனநாயகமாக அங்கீகரித்தால் இது எப்படி ஜனநாயகமாகும். அந்த ஜனநாயக விரோத செயலுக்கு உடந்தையாளனாகிவிடுகின்றேன். இதை எதிர்த்து நிற்காத எவனும் ஜனநாயகவாதியல்ல. ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் ஜனநாயக உரிமையை கோருவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். அதைப் பாதுகாத்தல் அல்ல. அனைவருக்கும் ஜனநாயகம் என்ற உரிமை பெறுவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும்;. சக மனிதன் மீதான சமூக ஒடுக்குமுறையை இல்லாது ஒழித்தலாகும். இதை நோக்கிய போராட்டம் தான், ஜனநாயகப் போராட்டமாகும்.

இதை மறுத்து, குறித்த காலத்துக்கு காலம் வாக்குப் போடுவதையே ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை மனிதன் சுரண்டுவதையும், சுரண்டும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர். அதேபோல் அறிஜீவிகள் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தையே ஜனநாயகம் என்கின்றனர். இது ஜனநாயகம் என்றால், பரந்துபட்ட மக்களுக்கு இந்த ஜனநாயகத்தால் என்னதான் கிடைக்கின்றது.

இந்த ஜனநாயகத்தால் மக்களின் வறுமையை ஒழிக்க முடிகின்றதா? மனித சமூகம் வாழ்வதற்;கு தேவையான சமூக அடிப்படைகளை இது பூர்த்தி செய்கின்றதா. எனின் இல்லை. இந்த ஜனநாயகம் மக்களுக்கு உதவவில்லை. மக்களை அடிமைப்படுத்தி இதை இல்லாதாக்கின்றது என்பதே உண்மை.
மனித தேவையை இது பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த ஜனநாயகம் யாருக்கானது? இந்தக் கேள்வி தெளிவாகவே அதற்கு பதிளிக்கின்றது. பணம் உள்ளவனுக்கே இந்த ஜனநாயகம்;. பணம் உள்ளவன் பட்டினியுடன் வாழவேண்டிய அவசிமில்லை. நோய்க்கு மருந்தின்றி மரணிக்க வேண்டியதில்லை. வாழ வீடின்றி வீதியில் படுத்துறங்குவதில்லை. எது அவனுக்குத் தேவையோ, அதை இந்த உலகில் இருந்து அவன் பெறுகின்றான். அவனின் வாழ்க்கையைப் பாதுகாப்பது தான், இந்த ஜனநாயகம்;. மிக விசித்திரமான எதார்த்தமான உண்மை இது.

இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கென்று வேறு உண்மைகள் எதுவும் கிடையாது. பணமுள்ளவனின் வாழ்க்கையைத் தான், இந்த ஜனநாயகம் பாதுகாக்கின்றது. அவனின் சொந்தத் தேர்வு தான் இந்த ஜனநாயகம்;. எப்படி சாதி; பார்ப்பானின் தேர்வோ, அப்படித்தான் இந்த ஜனநாயகம்;. இது எதை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. பணமுள்ளவன் எப்படி இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றான் என்பதைத் தான். பணம் உள்ளவன் அதை எப்படி ஜனநாயக அமைப்பில பெறுகின்றான் என்பதைத் தான்.

இந்த ஜனநாயக சமூக அமைப்பில் மக்கள் நாள் பூராவும், ஏன் வாழ்க்கை பூராவும் உழைக்கின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இருப்பதில்லை. ஏன்? இந்த ஜனநாயக அமைப்பில் வாழவழியற்றுப் போகின்றனரே ஏன்? ஆனால் சிலர் மட்டும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றனர் என்றால் எப்படி? இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்கள், எப்படி ஜனநாயகத்தை தமது தேர்வு என்று சொல்லமுடியும்! இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்களுக்கும், இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்பவர்களுக்கு இடையில் என்ன வேறுபாடு? எந்த நெருக்கடியுமின்றி வாழ்பவர்களுக்கு, வாழ்வதற்கான பணம் எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைக்கின்றது. வாழ்க்கை ப+ராவும் உழைப்பவன் வாழமுடியாத வகையில் பணத்தைப் பெறமுடிவதில்லையே என்?. பணம் மரத்தில் காய்ப்பதில்லை. மனித உழைப்பில் தான் காய்க்கின்றது. ஆனால் உழைப்பவன் அதைப் பெறமுடிவதில்லையே. ஏன்?

மனித உழைப்பு பணத்தை உருவாக்குகின்றது என்பது உண்மையாக இருப்பதால் தான், உழைப்பவன் அதை கொண்டு வாழமுடியாத நிலை உருவாகுகின்றது. உழைப்பவன் தனது உழைப்புக்கு சொந்தக்காரனாக இருப்பதில்லை. இதனால் தான் அதை அவன் இழந்து விடுகின்றான். யாரிடம் இழக்கின்றான் என்றால் பணமுள்ளவனிடம். இதனால் பணமுள்ளவன் வாழ்கின்றான்;. இந்த இழப்பு எப்படி சாத்தியமாகின்றது என்பதே, அனைத்துக்குமான சூக்குமமாகவுள்ளது. மனித உழைப்பு சுரண்டப்படுபவதன் மூலம் தான், மற்றவனால் வாழமுடிகினறது. உழைப்பவன் வாழமுடியாது போகின்றது. இதை பாதுகாக்கும் இந்த அமைப்புத்தான் ஜனநாயக அமைப்பாகவுள்ளது. இவர்கள் ஜனநாயகத்தின் காவலராக உள்ளனர். இந்த ஜனநாயகத்தின் தீவிர காவலர் யார் என்றால் பணமுள்ளவராக உள்ளனர். அவர்களே முதலாளிகளாக, நிலப்பிரபுகளாக உள்ளனர்.

ஜனநாயகம் என்பது, மற்றவனின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், தான் வாழ்வது தான்;. இதை மூடிமறைக்கவே வாக்களிக்கும் உரிமைப் பிரகடனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீ உனது வாக்கு மூலம், யார் உன்னை ஆள்வது என்பதை தெரிவு செய்யமுடியும் என்று கூறமுனைகின்றனர். விரும்பின் நீயும் ஆள முடியும் என்ற பிரமையும் ஊட்டப்படுகின்றது. இது அதிஸ்ட லாபச் சீட்டுப் போல், கபடமும் சூழ்ச்சியும் நிறைந்த அப்பட்டமான மனித உழைப்பைச் சுரண்டும் அரசியல் சூதாட்டமாகும்.

உனது வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்யும் உனது உரிமை, நீயே ஆளமுடியும் என்ற உரிமை, இதுவே ஜனநாயகம் என்றால் இது எப்படி சக மனிதனை அடிமைப்படுத்துவதை அனுமதிக்கின்றது. சரி இந்த அடிமைத்தனத்தை இது எப்படி ஒழிக்கும்? சக மனிதனையே கேவலப்படுத்தும் சமுதாயத்தை, இது எப்படி மாற்றி அமைக்கும். மனிதர்களை சிறுமைப்படுத்தி கீழ்மைப்படுத்தும் சமூக முரண்பாடுகளை, எப்படி இது இல்லாதாக்கும்;? விடை தெரியாத ஜனநாயகப் புதிர்தான்; இது. ஜனநாயகத்தின் கடமை இதுவல்ல என்பதே, எதார்த்தம் கூறுகின்ற ஒரு ஜடமான வாழ்வாக உள்ளது.

வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்கின்ற உரிமை, நீ ஆளுகின்ற உரிமை எப்படி எதார்த்தத்தில் உள்ளது. இன்று உலகை ஆளுகின்ற எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக தலைவர்களாக இருந்தாலும் சரி, எந்த சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரமாக இருந்தாலும் சரி, இழிந்துபோன இந்த அமைப்பின் மனித துயரங்களை தீர்ப்பதி;ல்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த ஜனநாயகம் மனிதர்களுக்கு எந்தவித்திலும் பயன்படவில்லை என்பது உண்மையாகின்றது. அனைத்து ஜனநாயகவாதிகளும், மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தருவதாகத்தான் கூறுகின்றனர். ஆனால் எதார்த்தத்தில் அதை மறுதலிப்பவராகவே உள்ளனர். வாக்கு போட்டு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சிகள், அதன் உறுப்பினர்கள் எங்கேயாவது மக்களுக்காக அவர்களின் வாழ்வு பிரச்சனைகளுக்காக உண்மையாக நேர்மையாக வாழ்கின்றார்களா? இன்று ஆளும் வர்க்கமாக உள்ள ஆட்சியாளர்கள், மக்களுக்கு தாம் என்ன தான் செய்ய போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? மக்களுக்கு எதிராக எதைக் கொண்டு வரப் போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? இல்லை. வெளிப்படையாக மக்களுக்கு எதையும் சொல்வதில்லை. சூக்குமமாக தமது திட்டங்களை, மக்கள் புரிந்து கொள்ளாத மொழிகளில் அரூபமாகவே முன்வைக்கின்றனர். அதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. முழு மக்களையும் பாதிக்கின்ற, சொல்லாத பல விடையங்களையே மூலதனத்துக்கு சார்பாக அமுலுக்கு கொண்டு வருகின்றன. பொதுவாக பார்த்தால் மாற்றமுடியாத ஒரு அமைப்பின் விதிகளுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கட்டுப்பட்டு செயற்படுகின்றது.

மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என எதுவும் சொல்வதில்லை. ஒப்பந்தங்கள் முதல் சட்டங்கள் வரை பல இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஒரு மூடுமந்திரமே ஆட்சியின் இயல்பாகின்றது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இவற்றை புரிந்துகொள்ள சில உதாரணங்களை எடுப்போம்.

1.உலகமயமாதல் என்ற உலக ஒழுங்கு இன்று உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. அது உலகில் உள்ள மக்களின் வாழ்வின் ஆதாரங்களை இல்லாததாக்குகின்றது. மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக, அடிமைகளாக மாற்றுகின்றது. நாடுகளையே இல்லாது ஒழிக்கின்றது. உலக நாடுகளையும் அதன் தலைவிதியையும் அழிக்கின்ற இந்த உலகமயமாதல் ஒப்பந்தங்கள் என்ன? யாருக்காவது தெரியுமா? உலகில் உள்ள மக்களுக்கு இது என்னவென தெரியாது. மக்களை விடுவோம், தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக பிரதிநிதிகளுக்குத் தெரியுமா? தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாடும் இந்த தற்கொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கூட இந்த ஒப்பந்தம் என்னவெனத் தெரியாது. ஆனால் கையெழுத்திட்டுள்ளர். உலகின் சகல மனிதர்களின் வாழ்வும், இதற்குள் தான் இயக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அநீதியை நியாயப்படுத்துவதே ஜனநாயகமாகிவிட்டது.

இதைக் கொண்டு வந்த விதமே ஜனநாயகவிரோதமானது. கையெழுத்திட்ட வடிவமே ஜனநாயக விரோதமானது. ஆனால் இதை அமுல்படுத்தும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர். கைநாட்டிட்ட இந்த ஒப்பந்தத்தை, வாக்குபோட்டு தெரிவு செய்த பிரதிநிதிகள் யாரும் விவாதித்து அங்கீகரிக்கவில்லை. மக்களின் வாக்களிக்கும் உரிமையே இங்கு செல்லுபடியற்றது. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை கேள்வி கேட்க முடியாது. அந்த ஒப்பந்தச் சரத்துகள் என்ன என்பதை அறியும் உரிமையும் கூட அவர்களுக்கு கிடையாது. வாக்கு அளிக்கும் உரிமை, தேர்வின் உரிமை, தேர்ந்தெடுத்த உறுப்பினரின் உரிமையென எதுவும் இந்த அமைப்பில் அர்த்தமற்ற ஒன்றாகவே உள்ளது. சரி உயர் நீதிமன்றங்கள் கூட இதை கேள்வி கேட்கவோ, தடை செய்யவோ முடியாது. ஜனநாயகம் என்பது இங்கு போலியான வெற்றுச் சொற்களாக இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. யார் இதை உருவாக்கினார்கள்? மக்களுக்கு மேலாக உள்ள அவர்கள் யார்? இதுவே இதைப் புரிந்து கொள்வதில் மிக முக்கியமான கேள்வியாக எம்முன் உள்ளது.

2.இது போன்று ஓய்வூதிய வயதெல்லையை (5 வருடமாக) அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலங்கள் பல நாடுகளில் வருகின்றன. இந்தச் சட்டமூலம் பற்றி விவாதத்தை யார் தீர்மானிக்கின்றார்கள். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுபினர்கள் என்றால், அதன் பின்னால் முதலாளிகள் உள்ளனர். சரி இந்த தெரிவு செய்யபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த சட்டமூலத்தை கொண்டு வரப்போவதாக கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்களா எனின் இல்லை. மக்களிடம் இப்படி கூறி வாக்கு கேட்பதில்லை. உண்மையில் மக்கள் தீர்மானிப்பதில்லை. தனது ஓய்வூதிய கால அளவை கூட்டவுள்ளதாக கூறி வாக்கு கேட்டு இருந்தால், மக்கள் அவர்களை நிராகரித்து இருப்பார்கள். மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற பின்பு, அதை ஜனநாயகபூர்வமான தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஜனநாயகத் தெரிவு என்பது மொத்த மக்களுக்கும் எதிரான மோசடியாகும். இப்படித்தான் பலவற்றை ஜனநாயக விரோத பாராளுமன்றங்கள் ஜனநாயகத்தின் பெயரில் செய்கின்றன. சில சட்டமூலங்கள் பெரும்பான்மை மக்கள் எதிர்கின்ற நிலையிலும், வீதியில் இறங்கிப் போராடுகின்ற நிலையிலும் கூட, அதை மாற்ற முடியாது என்று மக்களுக்கு எதிராக கொக்கரிப்பதே ஜனநாயகமாக உள்ளது.

3.உலகில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை எடுப்போம். வேலை நேர அதிகரிப்பு, குறைந் கூலிகள், வேலைவிட்டு நீக்கும் உரிமைகள் என்று அன்றாடம் பல சட்டங்கள் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்றது. யார் அவர்களை தெரிவு செய்தனரோ, அவர்களுக்கு எதிராக அவர்களின் விரும்பங்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த மக்கள் விரோத முதலாளி சார்புச் சட்டங்களை கொண்டு வரப்போவதாக மக்களுக்கு கூறி வாக்கு கேட்டனரா எனின் இல்லை? தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புக்கு வெளியில் கொண்டுவரும் சட்டங்கள், அந்த மக்களை உயிருடன் கொல்லுகின்றது. இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். இதையே மக்களின் தேர்வின் உரிமை என்கின்றனர். இது அப்பட்டமான மோசடியாகும்

4.உலகில் பொதுவாக போடப்படும் சட்டங்கள் இயற்கை மீதான மனித உரிமையையே இல்லாததாக்குகின்றது. குடிக்கும் தண்ணீரையே ஜனநாயகம் காசாக்குகின்றது. உயிர்வாழ்வதற்கு தேவையான மருத்துவத்தை மறுத்து, உயிர்வாழும் உரிமையை ஜனநாயகம் காசாக்குகின்றது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை கல்வியின் உரிமையை மறுக்கும் ஜனநாயகம், அதையும் காசாக்குகின்றது. வாழ்வதற்கு இந்த ப+மியில் ஒரு துண்டு நிலத்தைக் கூட பெற முடியாத மனித அவலம். இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். உன்னிடம் பணம் இல்லை என்றால் குடிக்கும் நீரை, நோய் தீர்க்கும் மருந்தை, ஒரு நேர உணவை, வாழ்வதற்கான ஒரு இடத்தைக் கூட, இந்த ப+மியில் நீ பெற முடியாது. இந்த உண்மையை பாதுகாப்பது தான் ஜனநாயகம்;. பணத்தை பெறும் உனது உழைப்பை நீ எவ்வளவுக்கு விற்பது என்பதை நீ தீர்மானிக்க முடியாது. இதைத்தான் பாராளுமன்ற ஜனநாயக சட்டங்கள் அன்றாடம் உனக்கு எதிராக உருவாக்குகின்றனர். இதைத் தான் உனது உரிமை என்றும், உனது ஜனநாயகம் என்றும் உனக்கு புகட்டுகின்றனர்.
மக்கள் இந்த பூமியில் வாழவழியற்ற நிலையை உறுதிசெய்யும் சட்டங்களை இயற்றுவதே ஜனநாயகத்தின் ஒரே கடமையாக உள்ளது. தெரிவு செய்யப்பட்ட எந்த உறுப்பினராவது அல்லது கட்சியாவது, இதைத் தமது கொள்கையாக கூறி வாக்குக் கேட்டார்களா? எனின் இல்லை. மக்கள் அவர்களை இதற்காகவா தெரிவு செய்தார்கள் எனின் அதுவும் இல்லையே!
இப்படி பற்பல உதாரணங்களை நாம் காட்டமுடியும்;. மக்கள் முன் முன்கூட்டியே திணிக்கப்பட்ட ஒரு அமைப்பில் தெரிவு செய்யப்படுபவர்கள், தாங்கள் செய்யப் போவதை கூடச் சொன்னதில்லை. அதேபோல் சொன்னதைச் செய்வதில்லை. உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்;படும் ஒரு மக்கள் விரோத கும்பலாகத்தான் உருவாகுகின்றனர். இந்தக் கும்பலின் மக்கள் விரோதச் செயலைத்தான் ஜனநாயகம் என்கின்றனர்? மக்களின் ஜனநாயக உரிமை, தேர்ந்த உரிமை என அனைத்தும், மிக மோசமான வழியில் ஒரு பணக்கார கும்பலுக்கு சார்பாக பயன்படுத்தப்படுகின்றது. மாறிமாறி ஆட்சிக்கு வரும் ஜனநாயகவாதிகள், மக்கள் விரோத சட்டங்களை மீளப் பெறுவதில்லை. அது அடுத்த ஆட்சியிலும் தொடருகின்றது. எப்போதாவது மீளப் பெறப்படுகின்றது எனின், மக்கள் வீதியில் இறங்கி இந்த ஜனநாயக ஆட்சிக்கு சவால்விடும் போது மட்டும் தான் நிகழ்கின்றது. மக்கள் இனியும் இந்த ஜனநாயகத்தை சகித்துக் கொண்டு வாழமுடியாத என்ற நிலையில், வீதியில் இறங்கி ஜனநாயகத்துக்கு சவால் விடுகின்றனர்.
மக்கள் விதியில் இறங்கி புனிதமான ஜனநாயக அமைப்பையே தகர்த்துவிடும் அச்சுறுத்தலைவிடும் போது மட்டும்தான், மக்கள் விரோத ஜனநாயகச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றது. அதாவது மக்கள் விரோத ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டம் மீளப்பெறப்படுகின்றது. உண்மையில் இந்த ஜனநாயக அமைப்பின் எதிர்மறையான அம்சமே இங்கும் செயலாற்றுகின்றது. மக்கள் இந்த ஜனநாயக அமைப்பை ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் அன்றாடம் நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவை, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் தான்;. இந்த ஜனநாயகம் மக்களுக்கு எதிராக இருப்பதால் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இப் போராட்டத்தில் மக்கள் ஜனநாயகத்தை முன்னிறுத்தினாலும் கூட, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான போராட்டமாகவே அவையுள்ளது. இது நிகழாத போது, மக்களின் அன்றாட வாழ்க்கையே கண்ணீர் ஆறாக, இந்த ஜனநாயகத்துக்கு எதிராக பெருக்கெடுகின்றது. இதுவும் அன்றாட மனித வாழ்க்கையில் நடந்தேறுகின்றது.

மக்களுக்கு எதிரான சட்டங்கள், ஒப்பந்தங்கள் ஏன், யாருக்காக உருவாக்கப்படுகின்றன? முழு மக்கள் கூட்டத்துக்கு எதிராக, ஏன் இந்த ஜனநாயகவாதிகள் இயங்குகின்றனர். மூலதனத்தின் நலன் என்பதே, இதன் மையமான அரசியல்;. ஜனநாயகம் என்பது மூலதனத்தை விரிவுபடுத்துவது தான்;. பணக்காரனை பணக்காரனாக்குவது தான்.ஏழையை மேலும் ஏழையாக்குவது தான். இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு என்று வேறு விளக்கம் கிடையாது. பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்து, மூலதனத்தை பெருக்குவது தான் ஜனநாயகம். இந்த உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர். மூலதனம் வாழவேண்டும் என்றால், மக்கள் சுரண்டப்பட வேண்டும். இந்த முரண்நிலையான கூறு எதார்த்தத்தில் ஜனநாயகமாக உள்ளவரை, இந்த ஜனநாயக அமைப்பு ஒரு சார்பு நிலையை எடுத்தேயாக வேண்டியுள்ளது. மனித உழைப்பை சுரண்டுவது அல்லது சுரண்டலை எதிர்ப்பது என்ற எதிர்நிலைப் போக்கு, தெளிவாக துல்லியமாக இதிலொன்றை தெரிவு செய்கின்றது.

இந்த ஜனநாயகம் என்பது மூலதனத்தைப் பாதுகாக்கும் அமைப்பாகவே உள்ளது. இது தவிர்க்க முடியாது மூலதனத்தை பெருக்க, மக்களின் உழைப்பை அதிகளவில் சுரண்டுவதை கோருகின்றது. மக்களிடம் உள்ளவற்றை புடுங்குவதை சட்டமாக்குவது தான் ஜனநாயகமாகி விடுகின்றது. ஆளும் வர்க்கத்தின் மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும், மக்கள் விரோத சட்டங்களை இந்த ஜனநாயக அமைப்பு உருவாக்குகின்றது. ஜனநாயகத்தின் பெயரில் தேர்வு செய்யும் உறுப்பு, அப்படித்தான் உள்ளது. இது தவிர்க்க முடியாது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது.

நிலவும் ஜனநாயகம் என்பது மக்களுக்கு அல்ல, மூலதனத்துக்குத் தான். மூலதனத்தின் வாழ்வுக்கு உட்பட்ட சட்டத் திட்டங்களைத் தான், இந்த அமைப்பின் சமூக ஒழுக்கமாக்குகின்றனர். இதற்கு வெளியில்; சுயாதீனமாக சுயேட்சையான சட்டதிட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. ஜனநாயகத்தின் எல்லைப்பாடு, இதற்கு வெளியில் எதுவும் கிடையாது.

இந்த ஜனநாயகத்தில் மக்களை மந்தைத் தனத்தில் வைத்திருப்பதன் மூலம் தான், தமது சொந்த இருப்பையே தக்கவைக்க முடிகின்றது. ஜனநாயகத்தின் உறுப்பாக காட்டப்படுகின்ற கருத்து தளங்கள் மிகப்பெரிய ஒரு மூலதன நிறுவனமாக மாறிவிட்டது. மக்களிடம் கருத்தை பெருமளவில் எடுத்துச் செல்லுகின்ற ஊடகவியலில், மக்கள் தமது கருத்தை விரும்பியவாறு சொல்லமுடியாது. ஏன் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற ஒரு கருத்தைக் கூட பிரதிபலிக்க முடியாது. இதில் மூலதனத்தின் நலனுக்கு எதிராக கருத்துரைக்கவே முடியாது. ஊடகமே ஒரு மூலதனத்தின் மேல் வீற்றிருக்கின்றது. ஊடகமே ஒரு மூலதனமாகிவிட்டதால், அதற்கு உட்பட்ட வகையில் செயலாற்றுவதையே அது அனுமதிக்கின்றது. இதற்குள் தான் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்க முடியும்.

ஊடகத்துறை மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைப் பற்றி பேசுவதில்லை. மக்களுக்கு எதிரான சட்டதிட்டங்களையும், ஒப்பந்தங்களையும் பற்றி பேசுவதில்லை. வாக்கு போட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் எப்படி ஏன் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதைப் பற்றியோ, அவர்களின் ஜனநாயக விரோத செயல்பாட்டைப் பற்றியோ பேசுவதில்லை. ஜனநாயகத்தின் பெயரில் ஜனநாயக விரோதமாகவே செயல்படும் அமைப்பைப் பாதுகாப்பதில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை பாதுகாக்கின்ற வகையில் கருத்தை எடுத்துச் செல்லுகின்றன. மக்களுக்கு கருத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்கள் தனிப்பட்ட முதலாளிகளுடையதாக அல்லது ஆளும் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக உள்ளது. இது பரந்துபட்ட மக்களின் வாழ்வுக்கு எதிராக திட்டவட்டமாக செயலாற்றுகின்றது.

இது இப்படி என்றால் ஆளும் கட்சிகளை எடுத்தால் அல்லது எதிர்க்கட்சியை எடுத்தால் இதே நிலைதான். கட்சிகளே பெரும் பண நிறுவனங்களாகவே மாறிவிட்டன. பண முதலைகளின் நிறுவனங்களாகவும், அதை பொறுக்கித் தின்னும் ஒரு அடிபாள்படைகளைக் கொண்ட ஒரு மக்கள் விரோத நிறுவனமாக கட்சிகள் மாறிவிட்டன. மக்களுக்கு முன்னால் தாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொல்லி, நேர்மையாக வாக்கு கேட்பதில்லை. மாறாக எதையும் சொல்வதில்லை. எதையும் மக்களுக்கு தருவதாக கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அதை மக்களுக்கு கொடுப்பதில்லை. மக்களிடம் இருப்பதை புடுங்கும் அரசியல் தான், கட்சிகளின் ஜனநாயகமாக உள்ளது. இது மக்களின் வாக்குத் தொடங்கி உழைப்புவரை விரிந்து அகன்று செல்லுகின்றது. உலகமெங்கும் வீதி தோறும் போராடும் மக்கள் இந்த உண்மையைத் தான், அன்றாடம் உலகுக்கு புகட்டுகின்றனர்.

அமெரி;க்கா முதல் இந்தியா வரை மிகப் பெரிய பணக்காரக் கட்சிகள் மட்டும் தான் ஆட்சிக்கு வரமுடியும். கட்சிகளே மிகப் பெரிய (பணம்) நிறுவனமாகிவிட்டது. அந்தளவுக்கு பணம் முதல் அடியாட்படைகள் வரை கொண்ட ஒரு ஆளும் நிறுவனமாகிவிட்டது. மக்கள் வாக்களித்தாலும் சரி, வாக்களிக்கவிட்டாலும் சரி, ஆளும் நிறுவனங்களில் ஒன்று ஆட்சிக்கு வந்தேயாகின்றது. மக்களுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் அன்றாடம் இயற்றுகின்றனர். இதில் இடது வலது வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஜனநாயக அமைப்புக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி கேள்விக்குள்ளாக்கும் போது, அதை பாதுகாக்க சீர்திருத்தம் செய்கின்றனர்.
இதற்கு மேல் இந்த ஜனநாயக அமைப்பில் மாற்றம் எதையும், இந்த சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் செய்வதில்லை. வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வாக்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.

இந்த ஜனநாயகம் இப்படித் தான் நிர்வாணமாகியுள்ளது. இந்த ஜனநாயகம் மனிதனின் வாழ்வை குழிபறிப்பதில் தான் உயிர்வாழ்கின்றது. இது இப்படி என்றால், கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரத்தையே ஜனநாயகமாக கொண்டாடும் சிலர் ஜனநாயகத்தை எப்படி விளக்கி வாழ முற்படுகின்றனர் எனப்பார்ப்போம்.

இவர்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கின்றது என்பது பற்றி அக்கறையில்லை. தனக்கு எப்படி இந்த உலகம் இசைவானதாக இருக்க வேண்டும் என்பது பற்றித்தான், அவனின் கவலை. தன்னையொத்த சகமனிதன் சிந்திக்கவே நேரமின்றி, உழைத்தபடி வாழ்கின்றானே என்ற கவலை இவர்களுக்கு கிடையாது. சகமனிதன் கருத்தைக் கூட சொல்ல முடியாத நிலையில், கல்வியறிவு இந்த ஜனநாயக அமைப்பால் மறுக்கப்பட்ட நிலையில் பட்டினியுடன் வாழ்வதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. சக மனிதனுக்கு அவை இல்லாது இருப்பது தான், தனது உரிமை என்கின்றான். இதை அவன் நேரடியாக சொல்வதில்லை. அதை நாகரிகமாக வெளிப்படுத்துகின்றான். அந்த மக்களின் வாழ்வைப்பற்றியும், அதற்கான காரணமாக உள்ள இந்த ஜனநாயகத்தை, தனது ஜனநாயகத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதையே அவன் ஜனநாயகம் என்கின்றான். இதன் மூலம் தன்னை சமூகத்தின் மேலே உயரத்தில் தக்கவைக்க முனைகின்றான்.

முரணற்ற ஜனநாயகத்தை ஒரு ஜனநாயகவாதி கோருவானாகின், நிச்சயமாக இந்த ஜனநாயகத்தை நுகர முடியாத மனித வாழ்வையும் அந்த ஜனநாயக விரோத அமைப்பையும் எதிர்த்து போராடுவான். ஜனநாயகம் மறுக்கப்பட்டு அதை நுகர முடியாத உலகம் மிகப் பெரியது. ஜனநாயகம் சிலருக்கானதாக (பணம் உள்ளவனுக்காக) உள்ள போது, ஜனநாயகம் என்னவென தெரியவே முடியாத நிலையில் கோடானுகோடி மக்களை மந்தைகளாக வாழவைப்பதே இந்த ஜனநாயக அமைப்புத்தான்;. இதை மூடிமறைப்பதும், இதை வேறொன்றாக காட்டுவதும் இந்த ஜனநாயகத்தின் கேடுகெட்ட செயலாகின்றது. அதாவது மனிதனை மனிதன் அடிமையாக்குகின்ற உழைப்புச் சுரண்டலை மூடிமறைக்கின்ற வகையில், சமூகங்களையே சுரண்டும் வடிவங்களாக மாற்றிவிடுகின்றனர். இயற்கையில் உடல் மற்றும் கால விசும்பலுக்கும் உட்பட்ட சமூக வேறுபாடுகளையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் மோதவிடுவது இதன் ஒரு அங்கமாகும். பெண்ணை ஆணைவிட கீழ்நிலைக்கு இட்டுச் சென்றதால், ஆண் மேலாண்மை பெண்ணை இழிவாக்குகின்றது. ஆணின் உழைப்பு சுரண்டப்படுவதை இது மூடிமறைகின்றது. அதேநேரம் பெண்ணை ஆண் சுரண்டவும் முடிகின்றது.
சாதியத்தின் படிநிலைப்பட்ட சமூக அமைப்பில், உயர்சாதி தாழ்ந்த சாதியை இழிவுபடுத்துவதன் மூலம் தாழ்ந்த சாதியை உயர்ந்த சாதி சுரண்டுகின்றது.
இங்கு சுரண்டல் என்பது பண்பாட்டுத் தளத்தில் தொடங்கி உழைப்பு வரை விரிந்த ஒரு தளத்தில் காணப்படுகின்றது. இதே போல் தான் நிற முரண்பாடுகள். வெள்ளையினத்தை உயர்ந்த இனமாக காட்டுகின்றது. இது மற்றைய நிறங்களை இழிவாக பார்ப்பதன் மூலம், மற்றயை நிறங்கள் மீதான் சுரண்டலை நடத்துகின்றது. இதுபோல் இனமுரண்பாடு ஒரு இனத்தை மேன்மை இனமாக காட்டுவதன் மூலம், மற்றயை இனம் சுரண்டப்படுகின்றது. இப்படி சமூக முரண்பாடுகளை முன்தள்ளி சுரண்டுவதன் மூலம், சுரண்டல் வடிவங்கள் இடம்மாறி சுரண்டப்படுபவர்களை மோதவிடுகின்றது. அதேநேரம் மேனிலையில் உள்ளவன், சுரண்டுவதன் மூலம் அதிக லாபங்களை அடைகின்றான்;. கீழ்நிலையில் உள்ளவன் நியாயமாக தனக்கு மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக போராட, மேனிலையில் உள்ளவன் அதை பயன்படுத்தி கொழுக்கின்றான். மூலதனம் தனக்கு இசைவாகவே இதைப் பயன்படுத்துகின்றது. இப்படி எங்கும் எதிலும் மூலதனத்தின் லாபங்களே குறிக்கோளாகிவிடுகின்றது.

இதன் மூலம் சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. சகமனிதனையும், சக சமூகங்களை இழிவாடி கொள்ளையிடுவதற்கு இந்த ஜனநாயகம் உரிமையளிக்கின்றது. கிட்லரும் கூட ஜனநாயகத்தின் ஊடாகவே யூதரை இழிவுபடுத்தியே, ஆரிய மேன்மை பேசி ஆட்சிக்கு வரமுடிந்தது. இன்று உலகை ஆக்கிரமிக்கும் அமெரி;க்கா ஆட்சி முதல், உலகை அடக்கியாள்வதற்கு கூட இந்த ஜனநாயகம் இடம்விட்டு கொடுக்கின்றது. மக்கள் விரோத அனைத்துச் செயலையும், ஜனநாயகம் வழிகாட்டுகின்றது.

இந்த நிலையில் ஜனநாயகத்தை நாம் எதிர்நிலையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது ஜனநாயகத்தில் உள்ள முரணற்ற கூறுகளை பயன்படுத்தி, ஜனநாயக விரோதத்தை ஒழிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமற்றதாக்க வேண்டும்;. அனைத்து மக்களின் ஜனநாயகம், ஜனநாயகத்தை இல்லாது ஒழித்துவிடுகின்றது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு நாம் போராட வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் சொல்லுகின்ற பொய்யையும் புரட்டையும், ஏன் அந்த வர்க்க சர்வாதிகாரத்தையும், அது உருவாக்கும் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தைப் பெறுவதே ஜனநாயகமாகும். மற்றவனுக்கு ஜனநாயகத்தை மறுப்பதை ஜனநாயகம் என்று சொல்வதன் மேல், மக்கள் தமது சர்வாதிகாரத்தை நிறுவவேண்டும். அதாவது பெண் என்றும், தாழ்ந்;த இனமென்றும், தாழ்ந்த நிறம் என்றும், தாழ்ந்த சாதி என்று பேசும் ஜனநாயக உரிமை மீதும், சகமனிதனின் உழைப்பைச் சுரண்டும் ஜனநாயக உரிமை மீதும் மக்கள் சர்வாதிகாரத்தை நிறுவி அதை மறுக்க வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம். மக்கள் சர்வாதிகாரம் தான், அனைவருக்கமான ஜனநாயகத்தை வழங்கும.; இது ஜனநாயகத்தின் பெயரில் உள்ள மனித இடைவெளியை அகற்றி, அதை இல்லாதாகும்.
23.03.2006