தமிழ் அரங்கம்

Saturday, November 15, 2008

புலியின் தோல்வி தவிர்க்க முடியாதது

புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.


புலிகளின் தோல்வி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதவர்கள் கூட, இது நடந்துவிடும் என்று இன்று நம்பத் தொடங்கியுள்ளனர். புலிப் பினாமிகளான கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட, புலிகளை தோற்கடித்தாலும் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்று பேசுமளவுக்கு நிலைமை வேகமாக மாறிச்செல்கின்றது.

தொடர்ந்தும் தொடரும் போராட்டம் பற்றி வேடிக்கை காட்டுகின்றனர். புலிகளின் இந்த பொம்;மைகள், வாய்வீச்சைத் தவிர வேறு எதுவும் செய்ய லாயக்கற்ற பினாமிகளின் உளறல்கள் இவை. சுயநிர்ணயம் என்றால் என்ன என்ற தெரியாத மலட்டுச்சமூகத்தை உருவாக்கியுள்ள புலிகள், அனைத்தையும் அழித்து விட்டு கதை சொல்கின்றனர். புலிகள் அழிந்தவுடன், பேரினவாதத்தின் கோமணத்தை எடுத்துக் கட்டும் முதல்தரமான பொறுக்கிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

புலிகளை தோற்கடிக்கும் புறநிலையான நெருக்கடிகள் எவை

அனைத்தையும் இராணுவ வடிவில் கட்டமைத்த புலிகள், சமூகத்தை தம் பாசிச கட்டமைக்குள் அடக்கியொடுக்கினர். இதன்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மின்வெட்டு : பற்றாக்குறையா? மோசடியா?


ஏற்கெனவே நிலவி வரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழகத்தின் தொழிலும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. கோவை, சேலம், ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜவுளித் தொழிலும், ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலும் ஏறத்தாழ முடங்கி விட்டன. தீப்பெட்டி, உப்பு, மீன் பதப்படுத்தல், அச்சகம் முதலான சிறு தொழில்கள் அனைத்தும் நசிந்து விட்டது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றன. பல கிராமங்கள் மின்வெட்டால் வாரக்கணக்கில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பல நாட்களுக்குத் தடைப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

Friday, November 14, 2008

மாத்தையாவும் பிரபாகரனும் - பிள்ளையானும் கருணாவும்

செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர். மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.


இதேபோல் இன்று பிள்ளையான் கருணா மோதல். இலங்கை அரசின் கைக்கூலிகளுக்குள் நடக்கும் எலும்புச் (பதவிச்) சண்டை. ஆளையாள் கொல்வதில் தொடங்கிய இந்தச் சண்டை, ஒருவர் கொல்லப்படும் வரை தொடரும். அதுவரை நாடகங்களும் தொடரும். இவை அனைத்தும், தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறுகின்றது.

கருணா புலியை விட்டு விலகிய பின், இலங்கை அரசின் கைக்கூலியாக மாறினான். இருந்தபோதும் மக்கள் விரோதியாக புலிகளில் இருந்தாலும், புலிகளின் கொலைக் கும்பலுக்கு முன்னால் சுதந்திரமாக நடமாட முடியவி;ல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு பிள்ளையான், கருணாவின் முதுகில் குத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினான். கருணாவின் விசுவாசிகளைக் கொன்றான்.

பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏற்ற........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

உத்தப்புரம் : இதுதான் சூத்திர ஆட்சி!

மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை. அவர்கள் மட்டுமல்ல, பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.

உத்தப்புரத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர், கொடிக்கால் பிள்ளைமார் குடியிருப்பிற்குள் வரக்கூடாதென்பதற்காக, 300 அடி நீளச் சுவர் ஒன்றை எழுப்பி 18 ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர், அச்சாதியினர். இந்த ஆண்டு ஏப்ரல்மே மாதங்களில் "மார்க்சிஸ்ட்' கட்சி இச்சுவரை இடிக்கக் கோரிப் போராடியது. "மார்க்சிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் அங்கு வரப்போவதாய் அறிவித்தார். உடனே, வெறும் 15 அடி நீளச்சுவரை மட்டும் அவசரமாய் தமிழக அரசே இடித்துப் பொதுப்பாதை ஒன்றை உருவாக்கியது.

Thursday, November 13, 2008

அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புப் போர் : ஒட்டகம் மூக்கை நுழைத்த கதை


கடந்த செப்டம்பர் 3ஆம் நாளன்று பாகிஸ்தானின் மேற்கே, ஆப்கானின் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் எனும் பழங்குடியின மாகாணத்திலுள்ள ஜலால்கேல் கிராமத்தில் அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டரில் வந்திறங்கின. ஹெலிகாப்டர்களின் பேரிரைச்சலால் அச்சத்தோடு கிராம மக்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தனர். நிராயுதபாணிகளான அக்கிராம மக்கள் மீது அமெரிக்கப் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தின. அதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம். அக்கிராம மக்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருக்க, அமெரிக்கப் படைகள் எவ்விதச் சலனமுமின்றி பறந்து சென்றன.

ஜலால்கேல் கிராமத்தில் நடந்ததைப் போலவே கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் எல்லைப்புற பகுதியில் அமெரிக்கப் படைகள் நான்குமுறை அத்துமீறி நுழைந்து, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்


இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, November 11, 2008

 (வன்னி) மக்களின் உண்மை அவலத்தை யாரும் பேசுவது கிடையாது!

(வன்னி) மக்கள் பற்றி புலிகள் என்ன நினைக்கின்றனரோ, அதுபோல் அரசு என்ன நினைகின்றனரோ, அதைபற்றி மட்டும்தான் பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் சொல்வதற்கு எதிராகவும் அல்லது ஆதாரவாகவும் குலைக்கின்றனர். இப்படி மனித வாழ்க்கை திரிக்கப்பட்டு, குறுகிய பிரச்சார நோக்கின் அடிப்படையில் தான் உலகில் முன் கொண்டு வரப்படுகின்றது.

ஈழத்துப் புலிப்பினாமிகள் முதல் தமிழ்நாட்டில் கடைகெட்டுப் போன பிழைப்புவாதிகள் வரை, இதைத் தாண்டி மக்களை மக்களாக யாரும் பார்க்கவில்லை. அந்த (வன்னி) மக்களின் பிரச்சனைகள் என்ன? அவர்கள் என்ன நினைக்கின்றனர்? என்பது பற்றியெல்லாம், யாருக்கும் எந்த அக்கறையும் கவலையும் கிடையாது. இதுதான் உண்மை.

இந்த மக்களிள் அவலமோ மிகப்பெரியது. அது மக்களுகே உரிய அவலம். எந்த நாதியுமற்ற நிலையில், கேட்பாரற்று நசிந்து நலிந்து கிடக்கின்ற சமூக அவலம்.

இவைகள் அனைத்தும் வன்னி மக்களின் உற்றார் உறவினர் நண்பர்களிடையே மட்டும், பகிர்ந்து கொள்ளப்படும் துயரங்களாக உள்ளது. எந்த ஊடாகமும் இதைப் பேசுவது கிடையாது. அவையோ புலி - அரசு என்ற வட்டத்தைச் சுற்றி, அதை திரித்தும் புரட்டியும், கதைகள் எழுதுகின்றன, கதைகள் சொல்கின்றன. துயரம்பற்றி தம் குறுகிய நோக்கத்துக்காக, திரித்தும் பரட்டியும் ஒரு பக்கமாக மட்டும் பிரச்சாரம் செய்கின்றனர்.

வன்னி மக்களுடன் தொடர்பில் உள்ள ஒவ்வொருவருவரிடமும், அந்த மக்கள் பற்றிய வெளிவராத கண்ணீர் கதைகள் பற்றிய உண்மைகளும் அனுபவங்கங்களும் உண்டு. இன்று ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, November 10, 2008

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1(பகுதி - 02) - மருதையன்

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1(பகுதி - 02) - மருதையன்

சோமாலியா : ஏகாதிபத்தியங்களின் அட்டூழியம்! யுத்தபிரபுகளின் சூரத்தனம்!

அரபிக் கடலின் மேற்கே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உச்சியிலுள்ள ஏடன் வளைகுடாவின் செங்கடலில் இதமாக அலைவீசிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் நாளன்று ஏடன் வளைகுடா வழியாக உக்ரேனிய நாட்டின் ""எம்.வி.ஃபைனா'' என்ற ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் செங்கடலில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென அதிநவீன ஆயுதங்களுடன் விசைப்படகுகளில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கப்பலை வழிமறித்து,

மாலுமிகளைச் சிறைபிடித்து அச்சரக்குக் கப்பலைக் கடத்திச் சென்றனர். கப்பலையும் மாலுமிகளையும் விடுவிக்க வேண்டுமானால், அக்கப்பல் நிறுவனம் 80 லட்சம் டாலர் (ஏறத்தாழ 36 கோடி ரூபாய்) தரவேண்டும் என்றும், இல்லையேல் மாலுமிகளையும் கப்பல் ஊழியர்களையும் சுட்டுக் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

""ஐயோ! கடற்கொள்ளையர்கள்!'' என்று அலறியது அக்கப்பல் நிறுவனம். உக்ரைன் நாட்டு சரக்குக் கப்பல் மட்டுமல்ல; கடந்த ஜனவரியிலிருந்து ஏடன் வளைகுடா பகுதியில் 69 சரக்குக் கப்பல்கள் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளன. 27 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டு கடற் கொள்ளையர்களின் பிடியில் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மாலுமிகளும் கப்பல் ஊழியர்களும் பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.

உக்ரேனிய ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் கடத்திச் செல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாக, ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட ""எம்.வி. ஸ்டோல்ட்வலோர்'' என்ற இரசாயன சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலின் தலைமை மாலுமியான கேப்டர் பிரபாத்குமார் கோயல் இந்தியராவார். அவருடன். ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, November 9, 2008

யார் இந்த ஓபாமா?

மக்களை பிரச்சனைகளை தீர்க்கமுனையும் ஒரு அழகிய கறுப்பு முகம். இப்படித்தான் உருவகப்படுத்தப்படுகின்றர். இதன் பின்னால் இருப்பதோ, சூதும் நயவஞ்சகமும் கடத்தனமுமாகும்.

இந்த ஓபாமா எப்படி வழிபாட்டுக்குரியவரானர். மக்களின் அவலம்தான், இதற்கு எதிர்மறையில் பதிலளிக்கின்றது. சமூக அவலம் ஓபாமா மூலம் தீரும் என்ற எதிர்பார்ப்பு, இதில் மண்டிக்கிடக்கின்றது.

உண்மையில் வெள்ளை அமெரிக்காவில் ஒரு கறுப்பன் ஆட்சிக்கு வந்தது என்பது, கறுப்பர்களுக்கு விடிவு காலம் என்ற பிரமை உருவாக்கியுள்ளது. மேற்கு உலகமாகட்டும், அமெரிக்கவாகட்டும், இயல்பாகவே வெள்ளை நிறவெறியின் அடையாளமாகும். வெள்ளை மேலாதிக்கம்தான் உலகம் என்ற அடிப்படைக் கோட்பாடுக்கு எதிரான எதிர்வினைதான், ஓபாமா மீதான வழிபாடாகின்றது. மறுபக்கத்தில் வெள்ளையினவெறி அமெரிக்க எப்படி ஓபாமாவுக்கு வாக்களித்தது. கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா மக்களை ஆண்ட குடியரசுக் கட்சிக்கும், புஸ்சுக்கும் எதிரான கடுமையான சமூக எதிர்வினை தான், மாற்று எதுவுமின்றி கறுப்பு ஓபாமாவின் வெற்றியாகின்றது. இப்படி கறுப்பு வெற்றி தற்செயலானது.

உலகெங்கும் மக்கள் சந்திக்கின்ற மனித அவலத்தின் ஒரு வெட்டமுகம் தான், இந்த வெற்றி. அமெரிக்கா முதல் உலகம் வரை, இதன் பிரதிபலிப்பு எதார்த்தமானதாக உள்ளது. இது மாற்றம் பற்றி நம்பிக்கையையும், பிரமிப்பையும் அடிப்படையாக கொண்ட வெற்றியாக புரித்து கொள்னப்படுகின்றது.

இதை தான் செய்யப்போவதாக பீற்றிக்கொண்ட ஓபாமாவோ, மாபெரும் மோசடிக்காரனாக மாறியுள்ளார். 'அமெரிக்க மக்களிடம் ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஆர்.எஸ்.எஸ். இன் சைவப்புலி வேடம் கலைந்தது

மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.

மலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வெள்ளி நிற மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்து கிடந்தது. இரண்டு மர்ம நபர்கள் ஒரு பையை அந்த மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்றனர் என்றும் அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றும் போலீசார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்கள் முன்னதாக மசூதி அருகே இக்குண்டு வெடிப்பு நடந்ததால், முஸ்லீம்கள் ஆத்திரமடைந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, போலீசார் மீது கல்லெறிந்து தாக்கவும் செய்தனர்.

ஏற்கெனவே மலேகான் நகரில் 2006ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் மீது இந்துவெறியர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மீண்டும் அதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமலிருக்க சிறுபான்மை முஸ்லீம்கள் பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 29 அன்று, மசூதி அருகே வெற்றிலைபாக்கு கடையை நடத்தி வரும் அன்சாரி என்ற முதியவர், தனது கடை எதிரே அனாதையாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்