தமிழ் அரங்கம்

Showing posts with label பேரினவாத. Show all posts
Showing posts with label பேரினவாத. Show all posts

Friday, April 3, 2009

மக்களை கொல்வதை ஆதரிப்பதன் மூலம், 'ஜனநாயகத்தை" மீட்கும் அரசியல்

புலியல்லாத அரசியல் தளம் இப்படித்தான் உள்ளது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசும் அனைவரும் பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தம் 'ஜனநாயகத்தை" நக்குகின்றனர்.

இப்படி தம் சொந்த மக்களை கொல்ல ஆதரவு தெரிவித்துக்கொண்டு, அவர்களுடன் கூடி நடத்துகின்ற எலும்புத்துண்டு அரசியல் இதுவே. இதற்கு வெளியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இவர்களிடம் கிடையாது. இதை மூடிமறைக்க, எத்தனையோ வேஷங்கள். எத்தனையோ அடையாளங்கள். பேரங்கள் பெயரில், பிழைப்புவாத அரசியல்;. மக்களின் உரிமையின் பெயரில், மக்களின் உரிமைகளையே மறுக்கும் மாமா அரசியல். தமிழ் மக்கள் முன் எதையும் வெளிப்படையாக வைக்கவும், அதை விவாதிக்கவும் வக்கற்ற பச்சோந்திக் கூட்டம்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, October 3, 2008

ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும்

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, புலியல்லாத பிரதேசத்தில் புலிக்கு நிகரான பாசிசம். எங்கும், எதற்கும் படுகொலை, கடத்தல், காணாமல் போதல், கைது, புலியென முத்திரை குத்தல், இழிவுபடுத்தல் என அனைத்தும், இந்த ஜனநாயகத்தில் அரங்கேறுகின்றது. இதுவே ஜனநாயகமாக, இந்த பாசிசம் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது.

முன்பு புலிகளின் பகுதியில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ முனைந்தவர்கள், புலியல்லாத பிரதேசத்தில் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் வாழமுனைந்தனர். ஆனால் இன்று, புலியல்லாத பிரதேசத்தில் சுதந்திரமாக வாழமுடியாது என்ற நிலை. அரசின் கூலிக் கும்பலாக எடுபிடிகளாக மட்டும் தான், யாரும் வாழமுடியும் என்ற நிலை. அரசுக்கு கைக்கூலியாக இருந்தல் தான், சுதந்திரம் என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதையும் சுதந்திரமாக பேசவும், சொல்லவும், செய்யவும் முடியாதளவுக்கு, பாசிசம் மனித சுதந்திரத்தை வேட்டையாடுகின்றது. இதையே தமிழ் மக்களின் ஜனநாயகம் என்கின்றனர். இதைத் தான் தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.

தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களையே விலங்கிட்டுள்ளது. கண்காணிப்பும், படுகொலை அரசியல் வெறியாட்டமும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, July 26, 2008

 பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.
2. தமிழ் மக்களின் கடந்தகால அவலங்களுக்கு காரணமானவர்களை தெளிவுபடுத்திய ஒரு கூட்ட அழைப்பைக் கோரினோம்.

3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்....
இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது.