தமிழ் அரங்கம்

Saturday, December 20, 2008

சங்கரமடத்தை விட்டு வாப்பா

சங்கரமடத்தை விட்டு வாப்பா

பேரினவாதத்தின் வெற்றி, தமிழ் சமூகத்தை வெற்றுடலாக்குகின்றது.

எல்லாம் புலிமயமாகி அழிகின்றது. ஒருபுறம் எல்லாவற்றையும் புலிமயமாக்கி பேரினவாதம் அழிக்கிறது. மறுபுறத்தில் எல்லாம் புலியாகி அழிகின்றது. இந்த சமூக பாசிச விதிக்குள், தமிழினம் தன் மீட்சிக்கான எந்த சொந்த சமூகமாற்று வழியுமின்றி அழிகின்றது. மாற்றுக் கருத்தற்ற பாசிச அழிவுக் கருத்துத் தளத்தில், எல்லாம் பாசிச சிந்தனையாகி ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுகின்றது.
சமூகத்தை வழிகாட்ட வேண்டிய அறிவுத்தளத்தில், அழிவுக்கான சிந்தனை முறையே சமூக மீட்சிக்கான பாதையாகி அது சமூகத்தின் மேல் திணிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கத்தான் தாம் அரசை ஆதரிப்பதாகவும் அல்லது புலியை ஆதரிப்பதாகவும் கூறி, அங்குமிங்குமாக தமிழ் மக்கள் மேல் பீச்சியடிக்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரினவாத அரசு மற்றும் புலிகளால் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். அவர்கள் அனுபவிக்கின்ற துயரத்தையும், துன்பத்தையும், யார் தான் இன்று நேர்மையாக குறைந்தபட்சம் சொல்லுகின்றனர்.

இந்த மனித சோகத்தை பேசாத நேர்மை, உண்மை, மனித நேயம் என அனைத்தும் பொய்யானது. பித்தலாட்டம் கொண்ட அறிவு மூலம், முற்போக்கு இடதுசாரியம் மார்க்சியம் என்று வேஷம் கட்டி, தமிழ் இனத்தை தம் அழிவுக் கருத்துக்களால் நலமடிக்கின்றனர்.

இவையெல்லாம் இன்று புலிகளை வெல்லுதல் என்ற சிங்கள பேரினவாத போர்வெறி ஊடாக அரங்கேறுகின்றது. தமிழ் இனத்தின் அனைத்து சமூக வாழ்வாதாரங்களையும், சமூ................
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல! - எழுத்தாளர் அருந்ததி ராய்

எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரைஅவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல!

நமது சோதனைகளுக்கு எதிர்வினையாற்றும் உரிமையை நாம் ஏமாந்துள்ளோம். மும்பை கோரம் உச்சமடைந்த சமயத்தில், அந்த கொடிய நாளுக்கு மறுதினம், நாம் இந்தியாவின் 9/11 -ஐத்தான் பார்க்கிறோம் என நமது 24 -மணிநேர செய்தி ஊடகங்கள் நமக்கு அறிவிக்கை செய்தன. பழைய ஹாலிவுட் அச்சில் வரும் பாலிவுட் பட நாயகர்கள் போல் நாமும் நம் பங்கையும் நமக்குரிய வசனத்தையும் உச்சரிக்க எதிர்பார்க்கப்பட்டோம். எனினும் அவை நமக்கு முன்பே இப்படியாக உரைக்கப்பட்டுவிட்டதை நாம் அறிவோம்.

இப்பிராந்தியத்தில் பதற்றம் கூடிப்போன தருவாயில் அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'கெட்டவர்களை' கைது செய்ய பாகிஸ்தான் நடவடிக்கையேதும் எடுக்காவிட்டால் அங்கு உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதலை இந்தியா தொடரலாம்; இதில் வாசிங்டன் ஒன்றும் செய்வதற்கில்லை என தன் கருத்தாக ஒரு செய்தியை வெளியிட்டார்.


ஆனால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008 2001 அல்ல; பாகிஸ்தான் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, December 19, 2008

இந்து பயங்கரவாதமும் 'இந்து"க்களின் மௌனமும்

செப்டம்பர் 29, 2008 அன்று நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாக்கூர், புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரமேஷ் உபாத்யாய், இராணுவப் பணியிலிருக்கும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித் மற்றும் தீவிர இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

மராட்டியப் போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவின் கையிலிருக்கும் பதிவு செய்யப்பட்ட உரையாடலின்படி அந்தப் பெண் சாமியாரும் இந்த வழக்கில் இன்னமும் தலைமறைவாக இருக்கும் ராம்ஜி கல்சங்க்ராவும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்: "என்னுடைய வண்டி குண்டுவெடிப்புக்குப் பயன்பட்டிருக்குமேயானால், ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் இறந்திருக்கிறார்கள்?'', என்று பிரக்ஞா கேட்டதற்கு கல்சங்க்ரா, "அந்தக் கூட்டத்தின் நடுவில் வண்டியை நிறுத்த என்னால் முடியவில்லை'' என்று பதிலளிக்கிறார்.

ஒருவேளை அப்படி நிறுத்தியிருந்தால் ஐந்து பேருக்குப் பதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இந்தப் பெண்சாமியாருக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிய இந்து மதவெறியர்கள் இப்போது இவருக்கு ஆதரவு கொடுப்பதில் போட்டி போடுகிறார்கள். காரணம் வர இருக்கும் தேர்தலில் இந்து அலையைக் கிளப்பி வாக்குகளைப் பெறவேண்டும் என்பதுதான். பிரக்ஞா தீவிரமான மதவெறியைக் கக்கும் பிரபலமான பேச்சாளர். சென்ற முறை குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியுடன் ஓரே மேடையில் பேசியிருக்கிறார். இது போக பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், ம.பி பா.ஜக............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 18, 2008

போராடும் வீரரே வாருங்கள் தோழரே

போராடும் வீரரே வாருங்கள் தோழரே

மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், ஆபத்தான மக்கள் விரோதம்

எங்கும் பாசிசம், எதிலும் பாசிசம் உள்ள நிலையில், மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதமாக தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. மக்களுக்காக போராடுதலை கைவிட்டு, அது சரிப்பட்டு வராத, உருப்படாத ஒரு விடையமாக, அதை வெறும் குறுங்குழுவாதமாக சித்தரிக்கின்றது. அத்துடன் களத்தில் பாசிசத்துடன் சேர்ந்து இயங்குவதையே, எதார்த்தமான மார்க்சியம் என்று வேறு கதையளக்கின்றனர்.  

 

இலக்கியவாதிகள், ஜனநாயகவாதிகள், 'சுதந்திர" ஊடகவியலாளர்கள் என அறியப்பட்டவர்கள், இன்று மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத நிலையெடுத்தபடி புலிக்கு பின்னால் நாயாக அலைகின்றனர். அது உங்கள் உரிமை. அதை வெளிப்படையாக நேர்மையாக  செய்ய வேண்டியது தானே.

 

இதை விட்டுவிட்டு, ஏன் எதற்கு வேஷம்!?; யாரை ஏமாற்றி, யாரின் தாலியை அறுக்க இந்த வேஷம். இந்த வேஷதாரிகள் எழுதாத எழுத்தா? மக்களின் ஆறாத் துயரை எழுதுவது கிடையாது. அப்படி ஏதாவது சொன்னால், அதை அரசு மட்டும் செய்வதாக சொல்லும் நிலைக்கு தரம் தாழ்ந்து, நாய்களின் உண்ணிகளாகிவிட்டனர்.  

 

அந்தளவுக்கு புலியை நக்கும் இந்தக் கும்பல், தன் புறம்போக்கை மூடிமறைக்க மௌனமாகவும் இரகசியமாகவும் அரசியல் செய்கின்றனர். 

 

பேரினவாத அரசுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி அம்பலப்படுத்தும் இவர்கள், புலியின் குரலாக............................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.


அமெரிக்க பயங்கரவாதம் : அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள்

ஈவிரக்கமற்ற படுகொலைகளால் ஈராக் நாட்டையும் ஆப்கனையும் குதறிக்கொண்டிருக்கும் அமெரிக்க நாசகார அரசுப் படையினரின் மத்தியில் இருந்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் தோன்ற ஆரம்பத்துள்ளன. சென்ற தலைமுறையில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த முன்னாள் படைவீரர்களின் உந்துதலால் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்'' எனும் நிகழ்வு அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஈராக், ஆப்கன் போர்களில் பங்கெடுத்த அமெரிக்க வீரர்களில் 200 பேருக்கும் மேலானோர், அமெரிக்க ராணுவம் அந்நாடுகளில் செய்துள்ள படுகொலைகளையும், மனிதவிரோதச் செயல்களையும் அம்பலப்படுத்தினார்கள். நான்கு நாட்கள் நடந்த அச்சந்திப்பில் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' எனும் பேரால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர்களுக்கு எதிராக அமெரிக்கப் படை நடத்திய மனித உரிமை மீறல்கள் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட்டன. அமெரிக்காவின் பேரால் தாங்கள் செய்த கொடூரச் செயல்கள் மனசாட்சியை உறுத்தியதால் அவற்றை அம்பலப்படுத்துவதென்று முடிவு செய்த அப்போர்வீரர்களின் சாட்சியங்கள் தொகுக்கப்பட்டு ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்: ஆக்கிரமிப்பின் சாட்சியங்கள்'' என்ற நூலாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.


அந்நூலில் பதிவாகியிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் வான்வெளி உளவமைப்புப் பிரிவின் கீழ் ஈராக்கிற்கு சென்ற மைக்கேல் பிரிஸ்னர் எனும் முன்னாள் படைவீரரின் வாக்குமூலம் கீழே தரப்பட்டுள்ளது.
Wednesday, December 17, 2008

இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்!


— இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியபொழுது, ஒரு காஷ்மீர் முசுலீம் முதியவர் தன்னிடம் இப்படிக் கூறியதாக எழுத்தாளர் அருந்ததிராய், ''காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை'' என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழ விடுதலையை ஆதரித்துக் கருத்துச் சொல்லியிருக்கும் தமிழக மக்களில் கூட பெரும்பாலானவர்கள் அந்த காஷ்மீர் முசுலீம் முதியவரின் கருத்தை ஆதரிப்பாளர்களா என உறுதியாகச் சொல்ல முடியாது. காஷ்மீருக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பது ஒருபுறமிருக்கட்டும்; ஈழத்தில் உடனடியாக சிங்கள அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கூறும் தமிழகம்; அதற்காகச் சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் போராட்டங்களை நடத்தி வரும் தமிழக மக்கள், இந்திய அரசு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரச் சொன்னால், அதிர்ந்துதான் போவார்கள்.
வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, December 16, 2008

புலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள்


இப்படி தாளம் போடும் இடதுசாரிய புல்லுருவிகள், தமது இடதுசாரிய வேஷத்தை பாதுகாக்கும் ஆசையும் வேறு. இதனால் புலியை ஆதரிக்கவும், அதேநேரம் இடதுசாரியத்தை பாதுகாக்கவும் தாம் 'சுயநிர்ணயவுரிமை"காக போராடுவதாக திடீரென இன்று பாசாங்கு செய்கின்றனர்.

இப்படி வலது பாசிசத்தை ஆதரிக்க, அதன் பிற்போக்கை மூடிமறைக்கவும் முனையும் இடதுசாரிய போக்கிலிகள், இன்று அரசியல் வேஷம் போடுகின்றனர். தம்மை மூடிமறைத்துக்கொள்ள 'சுயநிர்ணயவுரிமைக்" காகத்தான், தாம் போராடுவதாகவும் பீற்றிக்கொள்கின்றனர்.

தற்போது இதை திடீரென்ற ஒரு புதுக்கோசமாக முன்வைக்கும் இவர்கள், இதுவரை காலமும் எங்கேயிருந்தனர். இன்று இதை புலிக்காகவே முன்னெடுக்கும் இவர்கள், உண்மையில் சுயநிர்ணயவுரிமைக்காகவா போராடுகின்றனர்? ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, December 15, 2008

லுங்கி –நாடகம்

லுங்கி –நாடகம் வி.வி.மு நாடகக்குழு கம்பம்

யாழ் சமூக கட்டமைப்பின் சமூகவிளைவா, விடுதலைப் புலிகள்?

யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

இதை நாங்கள் தெளிவாகவே மறுக்கின்றோம். இந்த முடிவை கூறுபவர்கள் அனைவரும், புலி பாசி;ச சூழலை எதிர்கொள்ள திராணியற்றவர்கள். ஒரு மாற்று அரசியல் வழியை மக்களுக்கு முன் வைக்கத் தவறியவர்கள் அல்லது அதில் தோற்றவர்கள். ஒரு அரசியல் வழியின்றி, தம் சொந்த அடையாளத்தையே இழந்தவர்கள்;. தமது இன்றைய இந்த நிலையை நியாயப்படுத்திக் கொள்ள, இந்த தர்க்கத்தை முன்வைக்கின்றனர். இதன் மூலம் தமது செயலற்ற தன்மையையும், கருத்தற்ற ஓடுகாலித்தனத்தையும் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் சாரம், யாழ் சமூகக் கட்டமைப்பின் தன்மையைத் தாண்டி, புலிக்கு மாற்றாக எதுவும் உருவாகியிருக்கவே முடியாது என்கின்றனர். இதனால் தான், தாம் சமூகத்தை மாற்ற எதுவும் செய்யமுடியாது இருக்கின்றோம் என்று கூறி, சமூகக் கடமையை நிராகரிக்கின்றனர். இதன் மூலம் கருத்துத்தளத்தில் தம் கருத்தையே கை விடுகின்றனர்.

இந்த தர்க்கம், இதன் சாரம், இதன் நடைமுறை, மூன்று ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, December 14, 2008

சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.

புலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ் காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.

தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையும் எப்படி நாங்கள் ஏமாற்றி மோசடி செய்தோம் என்பதை, பாலசிங்கம் தனது மனைவி மூலமான நூலில் ஒரு சாட்சியமாக முன்வைத்து அதை அம்பலமாக்கியுள்ளர். "ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்சிய லெனினிச தத்துவங்களை பயன்படுத்தினர்கள்.",1 ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈழத்து கோயபல்ஸ்சின் மரணம்!

'பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது" என்பது, பாசிசத்தின் பிறப்புக்கும் இறப்புக்கும் கூட சமகாலத்தில் பொருந்திப் போகின்றது. பாலசிங்கம் சமகாலத்தில் தனது நோயால் செத்துக் கொண்டிருந்தது போல், பாசிசம் என்னும் புற்றுநோயால் புலிகள் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். வரலாறு இப்படி கோயபல்ஸ்சின் மரணத்துடன் பின்னிப்பிணைந்து செல்வது எம் முன்னால் அனுதினம் நிகழ்கின்றது. மனித தியாகங்கள் எல்லாம் வருத்தத்துக்குரிய ஒன்றாக எம் மண்ணில் இழிந்து போகின்றது.

இந்த நிலையில் தான் பாசிசத்தின் குரலை, பாசிசம் இழந்து நிற்கின்றது. தமிழ் மக்கள் இதனால் எதையும் இழக்கவில்லை. இந்த ஈழத்து பாசிசக் குரலை 'தேசத்தின் குரல்" என்று பாசிட்டுக்கள் அழைப்பது, சாலப் பொருத்தமானதே. ஏனென்றால் அது அவர்களின் சொந்த இழப்பே ஒழிய, மக்களின் இழப்பல்ல. பாசிசத்தின் சகல இலக்கணத்துக்குமுரிய வகையில் ஒரு கோயபல்ஸ்சாகவே வாழ்ந்தும், இழிவுக்குரிய ஒரு மக்கள் விரோத பாசிட்டாக வாழ்ந்து மடிந்தவர். இவரை 'மதியுரை"யர் என்பது, மக்களுக்கு எதிராகவே சதா சதி செய்வதைத் தான். வேறு எதைத்தான் அவர் செய்தார்? சூனியக்காரியாக, சூழச்சிக்காரனாகவே வாழ்ந்து மடிந்து போனார்.

இவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? இந்த சூனியக்காரனின் மரணம் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதற்கு, இதுவே அடிப்படையான கேள்வி? மக்களின் நன்மைக்காக எதையும் இவர்கள் தமது வாழ்வில் செய்யவில்லை. அவர்களால் எதையும் பட்டியலிடவே முடியாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் புலிகளால் என்ன நன்மை கிடைத்தது என்ற கேள்வியை எழுப்பி, யாராலும் பதில் சொல்ல முடியுமா எனின், முடியாது.

தமிழ் மக்களுக்கு பாசிசப் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது


மூலதனத்துக்கு எதிராக கிறிஸ்சில் எழுந்துள்ள போராட்டம், ஐரோப்பா எங்கும் அதை கற்றுக்கொடுக்கின்றது. மூலதனத்தின் அமைதியான உலகம் தளுவிய சூறையாடல், இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பா எங்கும் ஓன்றன் பின் ஒன்றாக, வர்க்க எழுச்சிகளை உருவாக்கி வருகின்றது.

ஆம் மீண்டும் கம்யூனிசம். மூலதனம் யாரை எல்லாம் தன் மண்ணில் இருந்து ஓழித்துக்கட்டி விட்டதாக கொக்கரித்தோ, அவர்களின் மடியில் இருந்தே, அந்த மண்ணில் புரட்சிக்கான விதைகள் ஊன்றப்படுகின்றது.

கிறிஸ்சில் மீளவும் எழுந்துள்ள வர்க்கப்போராட்டத்தை 'சுதந்திரமான ஊடகங்கள்" இருட்டடிப்பு செய்ய, அதையும் மீறி ஐரோப்பாவின் ஓவ்வொரு தலைநகரங்களிலும் அதற்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்து வருகின்றது.

பெரும் பன்னாட்டு நிறுவனங்கள்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார்.

2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன் பார்த்தனர். கென்யாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, தனது தாய்வழிப் பாட்டியிடம்தான் வளர்ந்தார். அவ்வகையில் அவர் கருப்பின மக்களின் போராட்டம் நிறைந்த அவல வாழ்க்கையை பெரிய அளவுக்கு உணர்ந்தவர் அல்ல. நல்ல கல்விப் புலமும், பேச்சுத் திறனும் கொண்ட ஒபாமாவுக்கு 90 சதவீதக் கருப்பின மக்களும், வெள்ளையர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் வாக்களித்துள்ளனர்.