தமிழ் அரங்கம்

Saturday, October 10, 2009

புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் சிந்தனைக்கு

கடந்த காலங்களில் புலத்தில் முன்னணியில் நின்று தமிழ் தேசியம் ஐனநாயகம் பாட்டாளி வர்க்கத் தலைமை மற்றும் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு வேலை செய்த புத்திஜீவிகளில் பலர் இன்று இலங்கை பாசிச அரசை போற்றுவோராகவும் ஒட்டுக் குழுக்களின் பிரமுகர்களாகவும் மேடைகளில் பவனி வருகின்றனர்.

தமிழ் தேசிய விடுதலையின் பேரில் புலிகள் தமிழ் மக்களின் அனைத்து ஐனநாயக உரிமைகளையும் மறுத்து அச்சுறுத்தி தேசத்தை விட்டு வெளியேற்றி படுகொலைகள் செய்து மக்களின் மீது கொரத்தாண்டபம் ஆடினர்.

புலிகளின் அராஜகத்தினால் நாங்கள் நண்பர்கள் உறவினர் மற்றும் விடுதலைக்காய் அனைத்தையும் துறந்து போராட வந்த பல நூற்றுக்கணக்கான தோழர்களை இழந்துள்ளோம்

Friday, October 9, 2009

பாரிஸ் சந்திப்பு தொடர்பாய் எனது அவதானங்கள்

தமிழ் அரங்கத்தால் நடாத்தப்பட்ட இச் சந்திப்பு என்பது ஒரு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன். இன்றைய சூழலில் மக்களை புலிகளின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பை நடத்தும் பிழைப்புவாதக்கோஸ்டி ஒருபுறமிருக்க தம்மை புலி எதிர்பாளர்கள் என்றும் தற்போது புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டதனால் தாமே இன்றைய சமூக சிந்தனையாளர்கள் என்றும் தம்மை காட்டியபடி இலங்கை அரசுக்குப் பின்னால் நிற்கும் மாற்றுக்கருத்தைக் கொண்ட கோஸ்டி என்பவர்கள் மறுபுறமிருக்க மக்களை தனித்தனியாக ஏமாற்றி மக்களின் கருத்துக்களையும், மனங்களையும் மாற்றி அலையவிடும் ஒரு சில சாரார்களுக்கிடையே தொடர்ந்தும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தவறை தவறு என்று விமர்சித்து, ஒரு கருத்தை அடையக்கூடியவர்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரு மேடைக்கு அழைத்தது என்பது தமிழரங்கத்தின் வெற்றி என்றே கூறவேண்டும்.

ஒரு கட்டத்தில் றயா என்ற தனிமனிதன் தான் அக்கருத்தை.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 7, 2009

பாரிசில் நடந்த கூட்டம் : மக்கள் மேலான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்களைச் சார்ந்து போராட அது உறுதி பூண்டது.


கடந்தகாலத்தில் தேசியம் என்ற பெயரில் நீடித்த புலிப் பாசிசம், இன்று தன்னைத்தானே பிணமாக்கியுள்ளது. அதன் எச்சசொச்சம், தன் இறுதி மூச்சுடன் சேடம் இழுகின்றது. மறுபுறத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் இருந்த புலியெதிர்ப்பு, அரச பாசிசமாக மாறி நிற்கின்றது. "ஜனநாயக" வேஷம் இன்று அரச பாசிசமாகி நடுரோட்டில் அம்மணமாகிக் கிடக்கின்றது.

இப்படி மாறிய சூழலை தன் கருத்தில் எடுத்த கூட்டம், மக்களை நோக்கி செயல்பட வேண்டியது அனைவரினதும் மையக்கடமை என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதை மதிப்பிட்ட கூட்டம் அரசுடனும் புலியுடனும் இல்லாத அனைவரையும், கடந்தகால முரண்பாடுகளைக் கடந்து இந்தத் திட்டத்தில் இணைக்கும் வண்ணம் தான் செயலாற்றவும் உறுதிபூண்டது.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 6, 2009

நாளைய வாழ்வே பெருவலியாய்.....

பெண்ணின் பெரும்பேற்றில் பிறந்த உலகே
கண்முன்னே
கருவைத் தாங்கும் தாயை
தெருவில் இறக்கிவிடும் பேரினவாதம்.......
தன்மண்ணில் தவளவிடும் கனவுடன்

கருவறையின் உதைப்பில்
பொறு மகவே என்கிறது தாய்மை
பிரசவ வலியல்ல.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 5, 2009

கலந்துரையாடல் அறிவிப்பு

கலந்துரையாடப்படும் புள்ளிகள்

1. இலங்கை இனமுரண்பாடு:

அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்தமிழ்மக்களின் எதிர்காலமும் 2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின் நிலை
3. பங்குபற்றுவோர் கருத்துகளும் விவாதங்களும்
காலம் : 11.10.09 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணிக்கு
(குறித்த நேரம் ஆரம்பிக்கப்படும். நேரத்துடன் வந்து உதவுங்கள்)

இடம் :
:
Gemeindschaftszentrum, Rebenweg 6, 8041 Zürich

-----------------------
......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இருள் மனிதர்கள்

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.
அக்னி நட்சத்திரம் முன்னேழு பின்னேழு முடிந்து ஒரு ஏழுநாள் ஆனபின்னாலும் வெயிலின் உக்கிரம் தீயாய் உடம்பில் விழுந்து எரிந்தது. அறுபதைத் தாண்டிய வயதாகிப் போன பங்கஜத்தம்மாளுக்கு ஈழை நோய் கண்டிருந்தது. முந்திச் சேலையால் தலையை......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்