தமிழ் அரங்கம்

Friday, January 23, 2009

விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?

குமுதம் சஞ்சிகைக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய பேட்டி, தமிழ் மக்களையே கேனப்பயலாக்குகின்றது. விடுதலைப்புலிகள் தவறுகளை எல்லாம் உணர்ந்து திருந்தி விட்டதாக கூறுகின்ற, பிழைப்புத்தனத்தை அம்மணமாக்கிவிட்டது. பலர் புலிகள் திருந்திவிட்டதாக கூறி, தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும், முஸ்லீம் மக்கள் உள்ளிட புலியின் பின் அணிதிரள்வதுதான் பாக்கி என்கின்றனர்.

தமிழ் மக்களே! முஸ்லீம் மக்களே! வாருங்கள் புலிகளுடன் சேர்ந்து போராட! என்றனர். எம் ஓற்றுமைக்கு தடையாக இருந்தவர்கள் எம்முடன் இல்லை என்றனர். நாங்கள் எந்த தவறும் இழைக்காதவர்கள், இருந்தும் தவறுகளை திருத்திவிட்டோம் என்றனர். இப்படி பிழைப்புவாத பொறுக்கிகளின் வில்லுப்பாட்டு ஒருபுறம்.

புலிகளோ நாங்கள் கடைந்தெடுத்த பாசிட்டுகள் தான் என்பதையும், எந்த உண்மையையும் பொய்யாக பிரச்சாரம் செய்யும் கோய்பல்ஸ்சுகள் தான் என்பதையும், நடேசன் தன் பொலிஸ் மொழியில் அறிவித்துள்ளார். மனிதவிரோதமே எம் சொந்த மொழி. தமிழினம் அழிந்தால் என்ன, செத்தால் என்ன, நாங்கள் மனித விரோதிகளாகவே தொடர்ந்தும் இருப்போம் என்பது புலிகளின் இலட்சிய தாகம்.

ஐயோ தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர், ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம், புலிகளை விட்டால் வேறு என்ன செய்ய முடியும், புலிகள் திருந்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இருள் மனிதர்கள்

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.

அக்னி நட்சத்திரம் முன்னேழு பின்னேழு முடிந்து ஒரு ஏழுநாள் ஆனபின்னாலும் வெயிலின் உக்கிரம் தீயாய் உடம்பில் விழுந்து எரிந்தது. அறுபதைத் தாண்டிய வயதாகிப் போன பங்கஜத்தம்மாளுக்கு ஈழை நோய் கண்டிருந்தது. முந்திச் சேலையால் தலையை முக்காடிட்டு கூன் விழுந்த உடம்பைத் தாங்கிப் பிடிக்கிற மாதிரி கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அடியை எண்ணி எண்ணி வைத்து நடந்தாள். போய்ச் சேர வேண்டுமே என்ற அந்த நடைதான் அவளுக்கு விரசல்.

நெஞ்செலும்புகளின் இடையில் தோல்படிந்து எண்ணி விடும்படியாக அவை வெளித்தெரிந்தன. இடுப்பில் இருந்த கைகளை இறக்கி இரண்டு தொடைகளிலும் ஊன்றி கரைப்பாதையில் ஏறி பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

தூரத்தில் வந்து கொண்டிருந்த வயித்துப் பிள்ளைச் சூலி முனிச்சிக்கு ரொம்பவும் முடியவில்லை. வாயிலிருந்து நாக்கு லேசாக வெளித்தள்ள கிந்தி கிந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். வெயிலும் தூரமும் வயிறு பருமனும் அவளைக் கிறங்கடித்து விட்டது. முழு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 22, 2009

வன்னியில் என்ன நடக்கின்றது!?

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு.

1980-1983 இல் போராட்டம் தொடங்கிய போது, 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்ற பழமொழியை எமது தந்தைமாரும் ஊரில் வயதானவர்களும் கூறினர். ஆனால் ஆயுதத்தை வழிபட்ட எம் தலைமுறை, அதை எள்ளி நகையாடியாது, இழிவாடியது. அதுவோ இன்று எம் இனத்தையே அழித்துவிட்டது. ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம் என்று, என்னதான் தொப்பியை புரட்டிப் போட்டாலும், சொந்த மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியவர்களின் அழிவு அரங்கேறுகின்றது. அவர்கள் தம் அழிவின் போது, மக்களை யுத்தமுனையில் திணித்து கொன்றுவிடுகின்ற அதே அரசியல் வக்கிரமும் அரங்கேறுகின்றது.

கடந்த 30 வருடமாக மணலால் கட்டிய கோட்டையில், ஆயுதத்தைச் செருகி அதையே தமது வழிபாட்டுப் பொருளாக்கினர். எல்லாம் அவன் செயலே என்று நம்புமளவும் வீங்கியவர்கள், செயல்கள் செய்கைகள் மூலம் கற்பனையில் ஒரு விம்பத்தையே உருவாக்கினர். புலித்தேசியம் பாசிசமாக, மக்களின் சுயநிர்ணய உரிமையோ உரிமை மறுப்பாக்கியது. எதுவும் தம்மை மீறியில்லை என்ற அளவுக்கு, முழுச் சமூகத்தையும் அச்சமூட்டி பீதியடைய வைத்தவர்கள், மக்களை செயலற்றவர்களாக்கினர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சி.பி.எம்.அணிகளே, உங்கள் மனசாட்சியையும் பேச விடங்கள்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் "இடது முன்னணி' யின் முதல் அமைச்சரவையில் (1977–80) நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மித்ரா. மைய அரசில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், "எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி'' போன்ற ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதி வருபவர். சி.பி.எம். கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் அசோக்மித்ரா, நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சியின் குண்டர்படையும் போலீசும் நடத்திய கொடூரத் தாக்குதலையடுத்து "ஆனந்தபசார்' பத்திரிக்கையில் (கடந்த 2008 ஏப்ரலில்) எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தைக் கீழே தருகிறோம். நந்திகிராமம் பற்றி காழ்ப்புணர்வோடு நாம் எழுதுவதாக சி.பி.எம். அணியினர் கருதி வரும் வேளையில், அவர்களின் முகாமில் இருந்தே மனசாட்சி உள்ள ஒருவரின் உள்ளக் குமுறல் இது!

கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் நடந்தவை பற்றி நான் ஏதும் சொல்லாமல் இருந்தேன் என்றால், அது நான் சாகும் வரை எனது மனதைப் பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கும்; வேதனையால் துடித்துக் கொண்டு இருந்திருப்பேன். ஒரு காலத்தில் எனது தோழர்களாக இருந்தவர்களுக்கு எதிராக இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கட்சியும் அதன் தலைமையும்தான் கடந்த 60 ஆண்டுகளாக எனது ஆதர்சமாகவும் இலட்சியக் கனவின் மையமாகவும் இருந்தன.

Wednesday, January 21, 2009

தமிழீழம் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாகவே மரணித்துவிட்டது

தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலேயே, தமிழீழம் என்ற கோரிக்கை மரணித்துப் போனது. உண்மையில் இந்தக் கோரிக்கை இன்று மண்ணில் வாழ்கின்ற மக்கள் மனங்களில், வெறுப்புக்குரிய ஒன்றாக, மனித அவலத்தை தந்த ஒன்றாக மாறிவிட்டது. இது மக்களை அரவணைத்துச் செல்லவில்லை. நன்மைக்குப் பதில் தீமையையே விதைத்தது.

இது தன்னகத்தே சமூக விரோதத்தை தன் உணர்வுகளாக்கி, அதை ஆதிக்கம் பெற்ற ஒன்றாக்கியதன் மூலம் மக்களின் உரிமைகளையே பறித்தது. மக்கள் தம் உரிமைக்காக ஆதரித்த போராட்டம், அவர்களுக்கு எதிராக மாறியது. இது மக்களின் உரிமைகளையே பறித்தது.

தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்டவர்கள் உள் இயக்கப் படுகொலை, இயக்க அழிப்பு என்று தொடங்கி மொத்த இனத்தையும் தனக்கு எதிராக மாற்றினர். இதன் மூலம், தமிழீழக் கோரிக்கையை அர்த்தமற்றதாக்கினர்.

இந்த தமிழீழக் கோரிக்கை, வெறும் லேபலாக மாறியது. இதன் பின்னணியில் புலிப் பாசிசக் கும்பலாகவும், அதற்கு எதிரான அரச கூலிக் கும்பலாகவும், தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்ட குழுக்களை சிதைவடைய வைத்தது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர், உரிமைகள் எதுவுமற்ற வெறும் கோசமாகியது. 'தேசியம்" புலியின் துப்பாக்கி முனையில், அவர்களின் இருப்பு சார்ந்தாக எஞ்சியது. இது மக்களை அவர்களின் அரசியல் சுயவுரிமைக்காக அணிதிரட்டவில்லை. மாறாக..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஜார்ஜ் புஷ்ஷீக்குச் செருப்படி! அமெரிக்க ஆதிக்கத்தின் மேல் விழுந்த இடி!

டிசம்பர் 14, 2008 நள்ளிரவு நேரத்தை ஈராக்கும், உலகமும் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. அன்றுதான், ஈராக் மக்களுக்கு "ஜனநாயகத்தை'' வழங்கியிருப்பதாகச் சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் ஜுனியருக்கு ஈராக் மக்களின் சார்பாக, அந்நாட்டைச் சேர்ந்த முந்தாஸர் அல்ஜெய்தி என்ற பத்திரிகையாளர் செருப்படி கொடுத்தார்.


அல் ஜெய்தி வீசிய செருப்பு புஷ்ஷைத் தாக்காமல் குறித் தவறிச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்காக யாரும் வருத்தப்படவில்லை. புஷ்ஷை நோக்கி அடிப்பது போல ஒருவரது கை நீண்டிருந்தால்கூட உலகம் மகிழ்ந்திருக்கும். அந்தளவிற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக் மக்களாலும், பெரும்பாலான உலக மக்களாலும், ஏன் அமெரிக்க மக்களாலும் வெறுக்கப்படுபவர் என்பது ஊரறிந்த உண்மை.


ஈராக் மக்கள் அல் ஜெய்தியைக் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்கள். அவரை விடுதலை செய்யக் கோரி ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பல நாடுகளில் அல் ஜெய்தியின் வீரத்தைப் பாராட்டிக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இன்று இணையதளத்தில் பிரபலமான விளையாட்டு எது தெரியுமா? ஜார்ஜ் புஷ்ஷின் உருவத்தைச் செருப்பால் அடிக்க வேண்டும். விளையாடுபவர் குறி தவறாமல் அடிக்க அடிக்க அவர் பக்கம் புள்ளிகள் ஏறிக்கொண்டே போகும். இவ்விளையாட்டில் வென்றால் "ஆம், உங்களால் முடியும்!'' என்ற பாராட்டு உங்களுக்குக் கிடைக்கும். இந்த செருப்படியை உலகமே கொண்டாடுகிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சியங்கள்.


அல் ஜெய்தியின் செயலை நாம் .......................................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, January 19, 2009

கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார்.


2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன் பார்த்தனர். கென்யாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, தனது தாய்வழிப் பாட்டியிடம்தான் வளர்ந்தார். அவ்வகையில் அவர் கருப்பின மக்களின் போராட்டம் நிறைந்த அவல வாழ்க்கையை பெரிய அளவுக்கு உணர்ந்தவர் அல்ல. நல்ல கல்விப் புலமும், பேச்சுத் திறனும் கொண்ட ஒபாமாவுக்கு 90 சதவீதக் கருப்பின மக்களும், வெள்ளையர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் வாக்களித்துள்ளனர்.

ஓபாமா ஒரு கானல் நீர்

கொடூரமான வெள்ளை அமெரிக்கா எகாதிபத்தியத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உலகம் உள்ளது என்பதை, ஓபாமா வெற்றி பற்றிய குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாட்டு மக்கள் முதல் ஏகாதிபத்திய நாட்டு மக்களும் கூட நம்பிகையுடன் ஓபாமாவை பார்க்கின்றனர்!

சிலர் உலகையே ஆளும் கறுப்பு இனத்தவரின் ஆட்சி என்கின்றனர். வேறு சிலர் சிறுபான்மையினத்தவரின் ஆட்சி என்கின்றனர். மற்றும் பலர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்கின்றனர்.

உலகில் ஒரு மாற்றம் வரும் என்று, குடுகுடுப்புக்காரன் மாதிரி பலரும் கருத்துரைக்கின்றனர். ஆளும் வர்க்கம் முதல் ஆளப்படும் வர்க்கம் வரை இந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏகாதிபத்திம் முதல் மூன்;றாம் உலக நாடுகள் வரை இந்த எதிர்பார்ப்பில் மயங்கி நிற்கின்றனர். அனைத்து வர்க்கங்களும் இலகற்ற எதிர்ப்பார்ப்பில், எதோ மாற்றம் வரும் என்று நம்புகின்றனர். உலக ஊடாகவியல் இதற்கு எண்ணை வார்த்து ஊற்றுகின்றது. ஆம் உலகம் மாறப்போகிறது. எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்கின்றனர்.

ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் ஓ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்களின் அறியாமையே ஓபாமாவின் மூலதனம் மட்டுமின்றி வெற்றியும் கூட

அமெரிக்க சமூக அமைப்பை பற்றி மக்களின் அறியாமைதான், ஓபாமா பற்றி பிரமைகளும், நம்பிகைகளும். இது ஏதோ ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்பார்புகளாகின்றது. மக்களின் செயலற்ற தன்மையும், விழிபற்ற மூடத்தனமும், ஓபாமா மீதான நம்பிக்கையாகின்றது.

இதை ஓபாமா மட்டும் தனது மூலதனமாக்கவில்லை. உலகின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் இதை மூலதனமாக்கி, மக்களின் முட்டாள் தனமான நம்பிக்கை மீது சவாரி செய்கின்றன. ஊடாகங்கள் ஆளும் வர்க்கங்களின் இருப்பு மீதான் நம்பிக்கையை ஊசுப்பேற்றி, மக்களை மேலும் மூடர்களாக்கின்றன. இந்த சமூக அமைப்பில் ஊடாகவியல் என்பது, மக்களின் மூடத்தனத்தையும் அறியாமையும் கட்டமைப்பதுதான்.

இப்படி இவர்களால் வழிபட்டுக்கு உட்படுத்தப்படும் ஓபாமா, இந்த சமூக அமைப்பில் எதைத்தான் மாற்றமுடியும்!?

அமெரிக்கா என்பது, உலகை அடக்கியாளும் ஓரு ஏகாதிபத்தியம். இதுதான் அதன் அடையாளம். இதை ஓபாமா மாற்றிவிடுவரா!? அமெரிக்கா..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்

நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள்.


சற்றே முன்னிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும் ஒபாமாவை வெள்ளை நிறவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஹவானாத் தீவைப் பின்புலமாகக் கொண்ட அவர் அமெரிக்கரே இல்லை என்றும், அவரது உறவினர்களில் சிலர் முசுலீம்களாக இருப்பதால் அவரும் முசுலீம் என்றும் பிரச்சாரங்கள் நடக்கின்றன.


மற்றொருபுறம் ஒபாமா நிறுத்தப்பட்டிருப்பதை வைத்து அமெரிக்கா நிறவெறியைக் கடந்து வந்துவிட்டதெனவும், கருப்பின மக்களின் விடுதலையில் மற்றுமொரு மைல்கல் இது எனவும் சிலர் பேசுகிறார்கள். இங்கேயும் முதல் தலித் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், முதல் தலித் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முதலானவர்கள் நியமிக்கப்பட்டபோது.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுரண்டிக் குவிக்கும் அமெரிக்காவின் வெம்பிய வடிவத்தை, பாதுகாப்பதுதான் ஓபாமாவின் கடமையாகும்

ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.

மிகக் குறைந்தபட்சமான சமூக சீர்திருத்தத்தைச் செய்வதாக இருந்தால் கூட, அதற்கு நிதி வேண்டும். இதற்கு செல்வத்தை குவித்து வைத்திருப்பவனிடமிருந்து, செல்வத்தின் ஒருபகுதியை மீளப் பெறவேண்டும்;. அத்துடன் அடிநிலையில் உள்ள எழை எளிய மக்களுக்கு இன்று கிடைப்பது பறிபோகாத வண்ணம் (சுரண்டாத வண்ணம்) முதலில் பாதுகாக்கவேண்டும். அதாவது பணக்காரன் மேலும் பணக்காரணாகாத வண்ணம் தடுத்து நிறுத்தி, அவனிடம் குவிந்துள்ள செல்வத்தின் ஒரு பகுதி எடுத்த மீள எழை எளிய மக்களிடம் கொடுக்கவேண்டும். இதுவே குறைந்தபட்டசமான சமூக சீர்திருத்துக்கான அடிப்படையாகும். சாரம்சத்தில் சுரண்டிக்குவிக்கும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக மக்களுக்காக இதையா ஓபாமா மாற்றப்போகின்றார். கேனத்தனமாக பதில் சொல்லாதீர்கள்.

இதை ஓபாமாவால் நிறைவேற்ற முடியுமா எனின், முடியாது. செல்வத்தைக் குவிக்கும் உலகமயமதாலை கைவிட்டுவிடுவரா எனின்,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

யார் இந்த ஓபாமா?

மக்களை பிரச்சனைகளை தீர்க்கமுனையும் ஒரு அழகிய கறுப்பு முகம். இப்படித்தான் உருவகப்படுத்தப்படுகின்றர். இதன் பின்னால் இருப்பதோ, சூதும் நயவஞ்சகமும் கடத்தனமுமாகும்.

இந்த ஓபாமா எப்படி வழிபாட்டுக்குரியவரானர். மக்களின் அவலம்தான், இதற்கு எதிர்மறையில் பதிலளிக்கின்றது. சமூக அவலம் ஓபாமா மூலம் தீரும் என்ற எதிர்பார்ப்பு, இதில் மண்டிக்கிடக்கின்றது.

உண்மையில் வெள்ளை அமெரிக்காவில் ஒரு கறுப்பன் ஆட்சிக்கு வந்தது என்பது, கறுப்பர்களுக்கு விடிவு காலம் என்ற பிரமை உருவாக்கியுள்ளது. மேற்கு உலகமாகட்டும், அமெரிக்கவாகட்டும், இயல்பாகவே வெள்ளை நிறவெறியின் அடையாளமாகும். வெள்ளை மேலாதிக்கம்தான் உலகம் என்ற அடிப்படைக் கோட்பாடுக்கு எதிரான எதிர்வினைதான், ஓபாமா மீதான வழிபாடாகின்றது. மறுபக்கத்தில் வெள்ளையினவெறி அமெரிக்க எப்படி ஓபாமாவுக்கு வாக்களித்தது. கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி! அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு

அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.


அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக், ஆப்கன் மீது நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரினாலும்; உள்நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள், ஒரு மாற்றத்தை விரும்புவதாகவும்; அம்மாற்றத்தைப் பிரதிபலிப்பவராக ஒபாமா இருப்பதாகவும் பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும், அமெரிக்காவில் வெள்ளை இனவெறி முன்னைப்போல கோலோச்சவில்லை என்பதற்கு பாரக் ஒபாமாவின் தேர்வு எடுப்பான சான்று என்றும் கூறப்படுகிறது.


ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள பாரக் ஒபாமாவை எதிர்த்து, ஜான் மெக்கெய்ன் என்ற வெள்ளை இன கிழட்டு நரியைக் குடியரசுக் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேல்தலில், ஒபாமா தோற்று, ஜான் மெக்கெய்ன் வெற்றி பெற்றால், அது ஜார்ஜ் புஷ் மூன்றாம் முறையாக பதவியேற்பதற்குச் சமமானதாகும்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.

இதனால் இதை சாதிப்பதில் பேதம் எதுவுமற்ற மனித விரோதிகள். இதனால் பேய்களுடனும் பிசாசுகளுடனும் கூடி இதை சாதிக்க முனைவதா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 18, 2009

எம்.எஸ்.சுவாமிநாதன் : வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?

"கார்ப்பரேட் கம்பெனிகள் கனிவுடனும் சமுதாய அக்கறையுடனும் அளிக்கும் தொகையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் பசியைப் போக்கத் திட்டங்கள் தீட்ட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி இலாபம் ஈட்டும் வகையில் அத்திட்டங்கள் அமைய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஒத்துழைப்போடு சத்துணவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிப் பசியைப் போக்க வேண்டும்'' என்று அண்மையில் உபதேசித்திருக்கிறார், ஒரு மாபெரும் விவசாய விஞ்ஞானி.

"எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி ஏழை விவசாயிகளுக்கு சத்துணவு படைக்க வேண்டும். அதை இலவசமாகக் கொடுக்காமல், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, கூலியாக சத்துணவளிக்க வேண்டும்'' என்றும், இதற்கு "காந்தி மாவட்டத் திட்டம்'' என்று பெயரும் சூட்டியுள்ளார், அந்த உலகம் போற்றும் விஞ்ஞானி.