தமிழ் அரங்கம்

Saturday, July 1, 2006

ஓடிக் கடிக்கும் வெள்ளாட்டுத்தனம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடிக் கடிக்கும் வெள்ளாட்டுத்தனம் மக்களின் விடுதலையை மறுக்கின்றது

பி.இராயகரன்
01.07.2006


காதிபத்தியம் சார்ந்து செயற்படும் புலியெதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மீண்டும் அசுரா அரசியலற்ற நிலையில் புலம்புகின்றார். மாற்று அரசியல் எதுவுமற்ற புலியெதிர்ப்பு தேனீயில் 'வெட்ட முளைக்கும் அசுராவின் தலை" என்று புலம்பி ஊளையிட்டபடி, தான் எதை சொல்ல முனைகின்றேன் என்று தெரியாது வெள்ளாடு போல் அங்குமிங்கும் ஓடி மேய முனைந்துள்ளார். ஒரு தத்துவம், ஒரு விவாதம் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் மக்களுக்கானதே. இதை மறுப்பது இந்தப் புலம்பலின் மையமான சாரமாகும். அதாவது


1. புலியெதிர்ப்பை மட்டும் அடிப்படையாக கொண்டதும், மக்களுக்கு எதிரான வகையில் செயல்படுவது.


2. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மறுப்பதும், அதை ஆதாரிப்பதும் மக்களுக்கு எதிராக செயல்படுவது.


3. மக்கள் மேலான சகல ஒடுக்குமுறையையும் எதிர்த்து தத்துவரீதியிலும், நடைமுறையிலும் போராட மறுப்பது, மக்களை சார்ந்து நிற்பவர்களை எதிர்ப்பது.


4. புலியை எதிர்க்கின்ற யாருடனும் கூடி நின்று மக்களை எட்டியுதைப்பது.


இதுவே புலியெதிர்ப்பின் சாரம். இதற்கு வெளியில் அவர்களிடம் எந்த அரசியலும் கிடையாது. புலியை ஒழிப்பதே ஜனநாயகம். இவர்கள் ஜனநாயகத்துக்கு வழங்கியுள்ள அதியுயர் அரசியல் விளக்கம் அதுவேயாகும். மக்கள் ஜனநாயகம் என்ற பேச்சுக்கு, புலியெதிர்ப்பு அரசியலில் இடம் கிடையாது. புலியெதிர்ப்பு அரசியலை நுணுகிப் பார்த்தால் இதைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது.


இந்த நிலையில் மக்கள் நலன் சார்ந்த கருத்தை இவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. புலம்பத் தொடங்குகின்றது. ரீ.பீ.சீ முதிர் முட்டாள்களுடன் பகிரங்கமான விவாதத்துக்கு அழைக்கின்றனர். நல்ல நகைச் சுவை தான். முதலில் உங்கள் கருத்தின் மேலான எமது கருத்தை போட்டு கருத்துச் சுதந்திரத்தை பேசச் சொல்லுங்கள். அது அரசியல் நேர்மை. மாற்றுக் கருத்தைப் போட்டு விவாதியுங்கள். அதை முதலில் செய்யுங்கள். ரீ.பீ.சீ என்பது புலியெதிர்ப்புக் கருத்துக்கு மட்டும் சுதந்திரம் வழங்குவது தான். தட்டுத்தடுமாறி ஒழுங்காக கதைக்கத் தெரிந்த புலிகள் வந்தால், நீங்கள் ரீ.பீ.சீ படுகின்ற பாடு எம்மால் சகிக்க முடிவதில்லை. ஏறி மிதித்து அது இது பிழை என்று நிறுத்துவது எமக்குத் தெரியும். அதாவது புலிகள் பாணியில் உங்கள் கருத்துச் சுதந்திரம் உள்ளது. புலியெதிர்ப்பு கருத்தை விவாதிப்பதை மாற்றுக் கருத்து என்றால், புதிய அகராதி எழுதவேண்டியது தான். புலியெதிர்ப்பு அல்லாத அரசியல் ரீதியான கருத்தை உங்கள் 'மாற்றுக் கருத்து" தளத்தில் காட்டுங்கள். முதலில் நேர்மையாக உங்கள் பதிலை எமது கருத்தின் மேல் போட வேண்டும். அதை முதலில் செய்யுங்கள். அதை செய்ய மறுப்பவர்களுடன் என்ன விவாதம் வேண்டிக் கிடக்கின்றது. நாங்கள் அதைச் செய்கின்றோம். வாசகனை முட்டாளாக்க கூடாது.


இந்த நிலையில் மக்களுக்கு எதிரான தமது குதர்க்கங்களையும், அங்குமிங்கும் ஓடிக் கடிக்கும் அரசியல் வறுமைக்கு எதிராக நாம் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. அண்ணளவாக 6000க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட எனது எழுத்தில் கற்பழிப்பு, ஓரினச்சேர்கை, கருவழிப்பு, ஸ்ராலின் போன்ற சொற்களைத் தேடி எடுத்து அங்காங்கே விதைத்து அவதூறு செய்வதற்கு அப்பால், குறித்த விடையங்கள் மீது பதில் அளிக்கமுடியாத அரசியல் வறுமை மீண்டும் அம்மணமாகிக் கிடக்கின்றது. அண்மையில் டி.சே.தமிழன் எனக்கு எதிராக 'இணையத்துப் பிசாசு எனக்கும் இரண்டு சாத்துப் போட்ட கதை அல்லது நானும் பாசிஸ்டான கதை" என்று எழுதினர். பின் அதை அழித்துவிட்ட கட்டுரையிலும் இதே மாதிரித் தான் மேய்ந்தார். புலி ஆதரவும், புலியெதிர்ப்பும் தமது அரசியல் வறுமையில், நக்குத் தண்ணியில் தத்தளிக்கின்ற நிலையில், இந்த எதார்த்தத்தை தாண்டி எதையும் இவர்களால் மேயமுடியாது.


ஸ்ராலின், கற்பு, ஒரினச்சேர்க்கை, கருவழிப்பு போன்ற சொற்களின் பின் தெளிவானதும் துல்லியமானதுமான கருத்துண்டு. அதை வெள்ளாடு போல் ஓடிக் கடிக்காது, அதை எடுத்து எப்படி தவறு என்று விளக்கும் அரசியல் ஆளுமையிருந்தால் அதைச் செய்யுங்கள். சும்மா சும்மா பில்லி சூனியம் செய்வார் போல் புலம்பாதீர்கள். இது தொடர்பான எனது ஒரு சில கட்டுரைகள் பார்வைக்கு


1. இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (ஸ்ராலின் பற்றிய கட்டுரைகள்)


2. பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க "கற்பு" என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?


3. ஓரினச் சேர்க்கை, பெண் விடுதலைத் தத்துவமா?


4. கருஅழிப்பு


இது ஒருபுறம் உங்களின் அரசியல் வறுமையையும், பிற்போக்குத் தனத்தையும் தோலுரிக்கின்றது. இதைப்பற்றி சொற்களுக்கு வெளியில் விவாதிக்க வக்கற்றுப் போகின்ற அரசியல் வறுமை அம்மணமாகின்றது. பாசிச புலிகள் கருத்துக்கு பதிலளிக்க முடியாது சுடுகின்றனர். நீங்கள் கருத்துக்கு பதிலளிக்க முடியாது வெள்ளாடு போல் ஒடிக்கடித்து குதறுகின்றீர்கள். உள்ளடக்கத்தில் வேறுபாடில்லை, அதாவது பதிலளிக்க முடிவதில்லை.


இன்றைய சமகாலத்தில் எதை மக்களுக்காக நீங்கள் கூறுகின்றீர்கள். அதை முதல் தெளிவுபடுத்துங்கள். அதைவிடுத்து வாயில் வந்த மாதிரி சன்னி கண்ட மாதிரி உளறாதீர்கள். மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் மொழியில், அவர்களை வழிகாட்டுங்கள். புலிகள் மக்களின் முரண்பாட்டுக்கு பதிலளிக்காதது போல் நீங்களும் தேனீ என்ற புலியெதிர்ப்புக் கும்பலுடன் சேர்ந்து வம்பளந்து வக்கரிக்காதீர்கள்.


1.மக்களின் விடுதலை என்பது என்ன? அது எப்படி சாத்தியம்?


2. சமூக ஒடுக்குமுறைகளை எப்படி ஒழித்துக் கட்டுவது? சமூக முரண்பாடுகளின் பரம எதிரிகள் நாங்கள் என்று உளறுவதில்லை.


3.புலியெதிர்ப்பு அரசியல் என்ன? எதிர்ப்பது மட்டும் தான் எமது கடமை என்று சன்னிபிடித்த மாதிரி உளாறதீர்கள்.


4.புலியின் அரசியல் என்ன? அதன் வர்க்க அரசியல் மற்றும் அதை முழுமையில் நேர்மையாக முன்வையுங்கள் இதில் இருந்த புலியெதிர்ப்புக் கும்பல் எப்படி வேறுபடுகின்றது. அதையும் சொல்லுங்கள்.


இப்படி உங்கள் தனித்துவமான கருத்தை முதலில் புலியெர்ப்புக் கும்பலுக்கு வெளியில் முடிந்தால் வையுங்கள். அதற்கு பின் உங்கள் கருத்தும் புலியெதிர்ப்புக் கருத்தும் ஒன்று என்றால், புலியெதிர்ப்பு கும்பலுக்கு அரோகரா போட்டுக் கொண்டு பின்னால் கைதட்டிக் கொண்டு ஒடுங்கள். புலம்புவதை விடுத்து, ஒடி மேய்வதை விடுத்து உருப்படியான மக்களுக்கு ஏதாவது சொல்ல முடியுமென்றால் அதைச் சொல்லுங்கள். ஏகாதிபத்திய கால்களை நக்கும் ஏகாதிபத்திய கயவாளிப் பயல்களின் பின்னால், மக்கள் விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்து இழிந்து கிடப்போர் பின்னால், அன்னக்காவடியெடுத்து ஆடுவது, பினாற்றுது, புலம்புவது, சொற்களை வைத்து அரசியலைத் திரிப்பது, முன்னைய காலத்தைய மற்றொரு அரசியல் வழியை நிகழ்கால அரசியல் முரணாக காட்டுவதை நிறுத்துங்கள். மக்களுக்கு ஏதாவது சொல்ல முடிந்தால் அதைச் சொல்லுங்கள். அதில் நாங்கள் தவறு இழைத்தால் அதை சுட்டுங்கள். அது மட்டும் தான் அரசியல் நேர்மை.


குறிப்பாக சோபாசக்தியை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளமுடியாது, அவரின் கடந்தகால நிகழ்கால எழுத்தின் மீது பொறுக்கியெடுத்து தாக்கியுள்ளனர். நேர்மையற்ற வழியல் அதை எங்களுக்கு எதிராக நிறுத்த முனைகின்றீர்கள். போகிறபோக்கில் சோபாசக்தியின் புலிக்காலம், பாங்கொங்கில் வாழ்ந்த காலம், பின் நான்காம் அகிலத்தின் காலம், தொடர்ந்த அவரின் காலங்களின் அவரின் வேறுபட்ட அரசியல் காலத்தை மேற்கோள்காட்டி அவரின் கருத்தை மறுதலித்தாலும் ஆச்சரியம் அல்ல. இதையே புலியெதிர்ப்பு அசுரா மற்றவர்கள் போல் செய்ய முனைகின்றார். சோபாசக்தியை புலியென்றும், புலி உளவாளி என்றும் கூட சொல்வதை நாம் கேட்கின்றோம். அப்படியே இருக்கட்டும், ஆனால் அவரின் கருத்துக்கு பதிலளிக்க மறுப்பது ஏன்! அவரின் கருத்துக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாமல் போவது ஏன்? ஏன் புலியைப் போல் வெட்கமானமின்றி நடக்கின்றீர்கள்.


சோபாசக்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடிவதில்லை. இதற்கு முன்னம் எனக்கு எதிராக கல்வெட்டு எழுதிய சோபாசக்தியை சரி, எம்முடன் முரண்பட்டு கதைக்காமல் திரிந்த சுகனுடனும், நாம் எப்படி இணங்கி போக முடியும் என்று புலி ஆதரவு புலியெதிர்ப்பு அணி இரண்டும், சமகாலத்தில் கேட்கின்றனர்.


சோபாசக்தியை போற்றும் டி.சே.தமிழன் எனக்கு எதிராக எழுதி பின் அவசரமாக அழித்த கட்டுரையில் 'இணையத்துப் பிசாசு எனக்கும் இரண்டு சாத்துப் போட்ட கதை அல்லது நானும் பாசிஸ்டான கதை" யில் இதை பற்றி எழுதுகின்றார்.


'சமரோடு சமர் புரிந்த காலத்தில் இந்த அன்பரோடு எக்ஸில் நண்பர்கள் கல்வெட்டு என்று பெயரிட்டு இவருக்கு விமர்சனம் வைத்துத் துண்டுப்பிரசுரம் எழுதியது மறந்து இப்ப என்னை புலியை நக்கி அரசியல் செய்வதாய் ஓலமிடும் இவர் - எந்த விமர்சனமும் இன்றி எக்ஸில் நண்பர்கள் சற்று பிளவுபட்டுவிட்டார்கள் என்றறிந்த பின் சோபாசக்தியின் சுகனின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடித்திரிவதன் மர்மந்தான் என்னவோ? சோபாசக்தி சுகனுக்கு கேட்கப்படும் ஓடிவந்து கேள்விகளுக்கு எல்லாம் தானே ஓடி ஓடிவந்து பதிலளிப்பதன் அவசரத்தைப் பார்த்து சிரிப்புத்தான் வருகின்றது? இதைவிட நக்கிப்பிழைக்கும் கேவலமான நிலை உண்டா? இவரது கருத்துக்களை எல்லாம் அன்று நம்பி இவர் பக்கம் இருந்தவர்கள் இப்போது சோபாசக்தியையும் சுகனையும் எந்த வெளிப்படையான விமர்சனமும் தனது மாற்றத்துக்கு வைக்காது வால் பிடிப்பது அறிந்தால். ? யாரை யார் நக்குவதாம்?" இது புலி ஆதரவு டி.சே.தமிழன், மக்கள் சார்பு கருத்து நிலைக்கு பதிலளிக்க முடியாத நிலையில் வைத்த கருத்து.


அசுரா மற்றொரு கோணத்தில் சோபாசக்தியிடம் 'றயாகரனையும், ஜமுனா ராஜேந்திரனையும் சோபாசக்தி தனது எழுத்தின் மூலமாக செய்த கிண்டலும் கேலியும் சொல்லிமாளாது. அப்படிப்பட்டவர் தற்போது அவர்களின் நிலைப்பாட்டில் மண்டியிடுவதற்கு முன்பு அவர்களிடம் தான் கடந்த காலத்தில் எழுதியவைகளுக்காக எழுத்துமூலமாக மன்னிப்புக் கோருவதுதானே நியாயமானது. ஆனால் கதைவிடுகிற சோபாசக்தி அவர்களையும் முட்டாளாக்குவதோடு. வாசகர்களையும் முதிர் முட்டாளாக்குவதை எப்படி நாம் பொறுக்க முடியும்?" ... 'இப்ப றயாகரனுக்கும், சோபாசக்திக்கும் ஏதோ தொகுதி உடன்பாட்டு இணக்கம் (வை.கோ.ஜெயலலிதா லெவலில்) ஏற்பட்டு விட்டது" என்கின்றார்.


புலிகளும், புலியெதிர்ப்பாளர்களும் வந்தடைந்த முடிவுகள், இப்படி முரணாக ஒன்றையே ஒருமித்த குரலில் வைக்கின்றனர். என்ன அரசியல் ஓற்றுமை. மக்களை நேசிக்க என எதுவுமற்ற இவர்கள், இப்படித்தான் எமது நிலையைப் புரிந்து கொள்கின்றனர். அவர்களின் நோக்கம் சோபாசக்தியின் மக்கள் நலன் சார்ந்த அரசியலைக் கைவிட்டு, மறுபடியும் பழைய மாதிரி எழுதவைப்பதைத் தாண்டி எந்த அரசியலையும் இதனுடாக அவர்கள் செய்யவில்லை. நாங்கள் என்னதான், அதிகமாக சொல்லுகின்றோம்.


மக்களைச் சார்ந்து நில்லுங்கள். அதையே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம். அனைத்து கருத்தையும், போராட்டத்தையும் மக்களை சார்ந்து நின்று போராடுங்கள் என்பதே இதன் சாரம். இதைத்தான் புலியிடமும் கோருகின்றோம், புலியெதிர்ப்பிடமும் கோருகின்றோம். இதற்கு ஆளுக்காள் எத்தனையோ விதமான மறுப்புகள் திணிப்புகள்.


மக்கள் நலன் பேசுகின்ற கருத்தைப் பிளவுபடுத்தி, அதை மறுக்கின்ற வகையில் எப்படியாவது இதை உடைத்தெறிய வேண்டும் என்ற வக்கிரம் இங்கு கொட்டிக் கிடக்கின்றது. சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் மக்கள் என்ற புள்ளியில் சந்திக்க விரும்புவதை இவர்களால் சகிக்க முடிவதில்லை.


இந்த மனக் குமைச்சலைத் தான் புலியும் புலியெதிர்ப்பும் ஒரே விதமாக ஊளையிட வைக்கின்றது. கருத்துத்தளத்தில் சோபாசக்தியோ அல்லது வேறு யாரும் மக்களைப் பற்றி சிந்திப்பதை எந்த வகையிலும் இவர்கள் விரும்புவதில்லை. நான் எப்படி சோபாசக்தியானேன் அல்லது சோபாசக்தி எப்படி றயாகரன் ஆனார் என்று, தனிநபரைச் சுற்றிக் கிண்டி கிளறி புழுத்தேடுகின்றனர். வைக்கின்ற கருத்துக்கு பதிலளிக்க வக்கில்லாமல் போகின்றது. புலி ஆதரவு மற்றும் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் வங்குரோத்து இதைத் தவிர வேறு எதையும் வழிகாட்டுவதில்லை. சோபாசக்தி கடந்து வந்த அரசியல் பாதை பலகட்டங்களின் ஊடாகவே பயணித்தது. அதற்காக முதற் கட்டத்தை முக்கி முனங்கி தூக்கி நிறுத்தமுடியுமா. அதுவும் மக்களை நேசிக்கின்ற போது, கடநத்காலத்தை சுயவிமர்சனத்தின் அடிப்படையில் தான் அதைச் செய்கின்றான். ஒருவன் மக்களை நேசிக்க முனைவது தவறா? அவர்கள் மக்கள் எப்படி எந்தவகையில் நேசிக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். அது தவறு என்றால் அதை விமர்சிக்க வேண்டுமே ஒழிய வம்பளக்க கூடாது. நாங்கள் மக்களை நேசிப்பது தவறு என்றால், எப்படி நேசிக்க வேண்டும் என்று அதைச் சொல்லுங்கள். நக்கல் நளினம் அரசியல் ரீதியானவை என்று நான் எழுதிய போது, அதை முன்பு சோபாசக்தி கல்வெட்டில் செய்ததைக் சுட்டிக்காட்டி அது என்ன என்கின்றனர். ஆம் அதுவும் அரசியல் ரீதியானதே. அதற்கு நான் அன்றே பதிலளித்தோம்.


நாங்கள் மக்களை நேசிக்க முற்படுபவர்களுடன் எப்போதும் இணங்கிப் போக முனைகின்றோம். மக்களுக்கு வெளியில் நாங்கள் யாரையும் நேசித்ததில்லை. மக்கள் தான் அனைத்தும். அது தவறு என்றால், அதை சொல்லுங்கள். உங்களுக்கு முடிந்தால் அதைச் செய்யுங்கள். அதைவிடுத்து புலம்பக் கூடாது, ஊளையிடக் கூடாது.


மக்களை நேசிக்க முற்படும் ஒரு சிறிய முளையைக் கூட யாரும் மிதிப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒரவஞ்சகம் கொண்ட தனிமனித விருப்பு அரசியலைச் செய்பவர்கள் அல்ல நாங்கள். யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்போம். நாளை அவர்கள் மக்களுக்கு துரோகம் இழைத்தால் அதை அம்பலம் செய்வோம். மக்களை நேசிக்கின்றவர்கள் எம்மை அனுசரித்து செல்லுகின்றனரோ இல்லையோ, ஆனால் நாம் நிச்சயமாக அவர்களுக்காக குரல் கொடுப்போம். இது யாராக இருந்தாலும் பொருந்தும். நாளை புலிகள் மக்களை நேசித்தாலும் கூட, ஏன் புலியெதிர்ப்பு அணி மக்களை நேசித்தாலும் கூட அவர்களுக்காகவும் போராடுவோம். இந்த வகையில் மக்கள் சார்பான கருத்துத் தள இணையங்களை இனம் கண்டு படிப்படியாக இணைப்பை வழங்கி வருகின்றோம். மக்களுக்காக எதையும் நாங்கள் செய்வோம். மக்களை நேசிப்பவர்களை பாதுகாப்பது தவறு அல்லது நக்குத்தனம் என்றாலும், அதை நாங்கள் மனதார செய்வோம். நாங்கள் உங்களைப் போல் ஆயுதங்களையே, ஏகாதிபத்தியங்களையே நேசித்து குலைப்பவர்கள் அல்ல. மக்கள் தான் அனைத்தும். இதற்கு வெளியில் விடுதலை, ஜனநாயகம் என்று பினாற்றி புலம்புவர்கள் படுமோசமான போக்கிரிகளாவர்.


Friday, June 30, 2006

தேசப் பாதுகாப்பின் பெயரால் காமவெறி பயங்கரவாதம்

தேசப் பாதுகாப்பின் பெயரால் காமவெறி பயங்கரவாதம்ந்தியாவின் அறிவிக்கப்படாத காலனியாக உள்ள காசுமீரில் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ள விபச்சார பூகம்பம், "தேசபக்தி'யின் பெயரால் நடக்கும் காமவெறி பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டிவிட்டது.கடந்த மார்ச் மாத மத்தியில் சிறீநகரின் கர்ஃபாலி மொஹல்லா பகுதியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மீனாவின் நீலப்பட சி.டி. இப்பகுதியில் புழங்குவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த சில பெரியவர்கள் போலீசு நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரினர். போலீசார் அந்த இளம் பெண்ணையும் அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்து போது, சபீனாபேகம் என்ற பெண் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போதை மருந்து கொடுத்து நிர்வாணப் படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி நீலப்படம் எடுத்ததாகவும், உயர் போலீசு இராணுவ அதிகாரிகளுக்கு தான் இரையாக்கப்பட்டதையும், வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிட்டு தீவிரவாதிகள் கொன்றதாகக் கதை கட்டி விடுவோம் என்று அச்சுறுத்தியதாகவும், தன்னைப் போல் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இப்பயங்கரவாத கும்பலிடம் சிக்கித் தவிப்பதாகவும் யாஸ்மீனா வேதனையுடன் கூறியுள்ளார். இந்த விபச்சார கும்பலின் வாடிக்கையாளர்களாக உள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், போலீசு இராணுவ உயரதிகாரிகளின் பட்டியலையும் அவர் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியில் உறைந்து போன போலீசார், முதலமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்குத் தகவல்களைத் தெரியப்படுத்திவிட்டு உளவுத்துறை போலீசாரைக் கொண்டு விசாரணையில் இறங்கினர். சபீனாபேகம் ஒரு விபச்சார தாதா என்பது ஏற்கெனவே போலீசாருக்குத் தெரியும். இப்போது மீண்டும் சபீனா விவகாரம் வெடித்ததும், வேறு வழியின்றி இதில் சம்பந்தப்பட்ட இரு போலீசு கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து விட்டு, உளவுத்துறை போலீசார் சபீனாவின் விபச்சார மாளிகையில் ரெய்டு நடத்தி பல இளம்பெண்களை மீட்டனர். அதைத் தொடர்ந்து ஏப்ரல் இறுதியில் சபீனாவும் அவரது தொழில் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். வழக்கம் போலவே இந்த விவகாரத்தை மூடிமறைத்துவிட உயர் போலீசு அதிகாரிகள் எத்தனித்த சூழலில், சிறீநகர மக்கள் ஆவேசமாகப் போராட்டத்தில் குதித்தனர். மே 5ஆம் தேதியன்று சிறீநகர் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை நடத்திய மக்கள், ஹப்பா கடால் பகுதியிலுள்ள சபீனாவின் நான்குமாடி வீட்டை அடித்து நொறுக்கி அங்கிருந்த பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். வீதிகளில் திரண்டு போராடிய மக்கள் மீது தண்ணீரைப் பீச்சியடித்தும் தடியடி நடத்தியும் போலீசார் விரட்டத் தொடங்கியதும், ஆத்திரமடைந்த மக்கள் போலீசார் மீது கல்லெறிந்து தொடர்ந்து போராடினர். சிறீநகரில் தொடங்கிய போராட்டம் காசுமீர் முழுவதும் பற்றிப் பரவத் தொடங்கியதம், மாநில உயர்நீதி மன்றம் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டு, மையப் புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைத்துள்ளது.இது ஏதோ காசுமீரில் மட்டும் நடந்த விவகாரமல்ல; தமிகத்தில் "ஆட்டோ' சங்கர், அதன் பின்னர் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் என்று நாடு தழுவிய அளவில் விபச்சார கிரிமினல் குற்றக் கும்பல்களின் அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிவந்து நாறிப் போயுள்ளது. இவை எல்லாவற்றிலுமே அரசுயர் அதிகாரிகள், போலீசு அதிகாரிகள், சர்வ கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இருப்பினும் காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் இதுபோன்ற அட்டூழியங்கள் தேசபக்தி, தேசிய பாதுகாப்பு, தேச நலன், தேச ஒற்றுமை என்ற பெயரால் திட்டமிட்டே மூடிமறைக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதத்தை முறியடிப்பது, பயங்கரவாதத்தை முறியடிப்பது, எல்லைப் பாதுகாப்பு என்ற போர்வையில் இம்மாநிலங்களில் இந்திய இராணுவமும், போலீசும் நடத்திவரும் காமவெறி கொலைவெறியாட்டங்கள் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றன. மெதுவாகக் கசிந்து அம்பலமானாலும், "தேசநலன்' கருதி "தேசிய' பத்திரிகைகள் இவற்றை இருட்டடிப்பு செய்து விடுகின்றன.வீரப்பனைப் பிடிப்பது என்ற பெயரில் அதிரடிப்படையின் காமவெறி கொலை வெறியாட்டங்கள் மூடிமறைக்கப்பட்டது போலவே நாடெங்கும் நடக்கும் போலீசு இராணுவத்தின் அட்டூழியங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் காமவெறி பயங்கரவாதம் மூடி மறைக்கப்பட்ட நிலையில் மணிப்பூர் தாய்மார்கள் இராணுவத் தலைமையகம் எதிரே நிர்வாணமாகப் போராடியபோதுதான், உண்மைகள் மெதுவாக வெளிவரத் தொடங்கின. ஆனாலும் இன்றுவரை அக்காமவெறி பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்திய இராணுவமும் போலீசும் தமது காமவெறி அட்டூழியங்களை மறைக்கப் பயன்படுத்தும் ஆணுறைதான் தேசபக்தி. போர்த்திக் கொள்ளும் போர்வைதான் தீவிரவாத பயங்கரவாத எதிர்ப்பு. எங்கெல்லாம் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற பெயரில் இராணுவமும் போலீசும் நுழைகிறதோ, அங்கெல்லாம் காமவெறி பயங்கரவாத அட்டூழியங்களும் விபச்சார கிரிமினல் கும்பல்களின் அட்டகாசங்களும் தலைவிரித்தாடுகின்றன. நேற்று மணிப்பூர், இன்று காசுமீர் என்று தேசபக்தியின் பெயரால் அரசு பயங்கரவாத வெறியாட்டங்கள் தொடர்கின்றன.மு குமார்

Wednesday, June 28, 2006

ஒடுக்கப்பட்ட சாதிய மூச்சுகளையே ஒடுக்க

புலியெதிர்ப்பினூடாக ஒடுக்கப்பட்ட சாதிய மூச்சுகளையே ஒடுக்க அழைக்கின்றனர்.

பி.இரயாகரன்
28.06.2006


தேனீ என்ற புலியெதிர்ப்பு இணையத்தில் 'தேசியம் என்றால் அது நான் தான்!" என்ற பெயரில், பிரபாகரனின் கற்பனைப் பேட்டி ஒன்றை தனது அரசியல் உள்ளடகத்தில் உளறியபடி இக்கும்பல் வெளியிட்டுள்ளது. இந்த பேட்டி யாழ் மேலாதிக்க சாதிய சன்னதங்களுடன், ஜனநாயக கட்டவுட்டுடன் கொப்பளித்தது. இதை சுகன் சரியாகவே 'வெள்ளாள ஜனநாயகம்;" என்று குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். ஆதிக்க சாதித்தடிப்புக் கொண்ட அந்த புனைபெயர் ஜனநாயகப் பேர்வழி, மீண்டும் தேனீயில் புலம்பியுள்ளது. சாதிய திமிரெடுத்த அந்த அலுக்கோசு 'என்னை எவரும் மன்னிக்க வேண்டாம்!" என்று தனது உயர்சாதிய உருட்டிப் பிரட்டும் திமிர் புத்தியை மறுபடியும் காட்டியுள்ளது.


புலியெதிர்ப்பை பிரித்துப் போட்டால், அதில் ஒன்று உயர் சாதிய மேலாதிக்கம் தான். இதை அதற்கு பின்னால் காவடியெடுப்போர் அரோகரா போட்டே பாதுகாக்கின்றனர். புலியெதிர்ப்பு அடிப்படையில் யாழ் மேலாதிக்கம் தான். சொந்த தனிப்பட்ட பாதிப்பு சார்ந்து பிரதேசவாதம் பேசிய கருணாவுக்கு, புலியெதிர்ப்பு கும்பல் சாமரை வீசினாலும் சரி வழிபட்டாலும் சரி, யாழ் மேலாதிக்க சாதிய உணர்வை அவர்களின் அரசியல் இழப்பதில்லை. இது போல் யாழ் மேலாதிக்க சமூகத்தின் அனைத்துக் கூறையும் உள்ளடங்கியதே புலியெதிர்ப்பு அரசியல். இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது. புலிகளை அழிப்பதன் மூலம் புலியெதிhப்புக் கும்பலின் அரசியல், சாதிய ஒழிப்பையோ மற்றய சமூக ஒடுக்குமுறையையோ களைந்து விடாது. அவர்கள் புலிகளிடம் அப்படி இந்த யாழ் மேலாதிக்கத்தை கையேந்தி, பாதுகாக்கவே விரும்புகின்றனர். இதுவே உண்மை.ரீ.பீ.சீ கும்பலோ, தேனீயோ சாதி ஒழிப்பு பற்றி எந்த அக்கறையுமற்றது. அதை பாதுகாக்கின்ற கும்பல் தான்; அது. இந்தக் கும்பலின் கூப்பாடு என்பது புலியை எப்படியாவது எந்த வழியிலாவது இழிவுபடுத்துவது தான். அதற்காக சாதிய மேலாதிக்கத்தையும் கூட எடுத்துக் கொண்டு வக்கரிப்பது தான்;. புலியை ஒழிக்க ஏகாதிபத்தியத்தின் காலை படுத்துக் கிடந்து நக்குவது போல், இலங்கை அரசின் மடியில் ஏறி உட்கார்ந்து உபதேசம் செய்வது போல், சாதியின் படிநிலையின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற முனைகின்றனர். தமது சொந்த சமூக இழிவுகளைக் கொண்டு, புலியை இழிவுபடுத்த முனைப்புக் கொள்கின்றனர். தாம் வாழும் சமூகத்தின் சமூக இழிவுகளை எதிர்த்து போராட முடியாது அதை பாதுகாக்கும் நாய்கள், புலிகளின் இழிவைப் பற்றிக் குலைக்கின்றனர். நாங்கள் மீண்டும் தெளிவாகவே கேட்கின்றோம், புலிக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? சமூகத்தில் காணப்படும் ஒடுக்குமுறைகள் பற்றி புலிகளின் நிலைக்கும், உங்கள் நிலைக்கும் இடையில் என்ன வேறுபாடு? அரசியல் ஆய்வுக் குஞ்சுகளே, பட்டத்தை மட்டும் சூட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி நக்க வேண்டாம். ஊரையும் உலகத்தையும் உங்கள் கண்ணை மூடி ஏமாற்ற வேண்டாம். இதற்குள் புலியை இழிவுபடுத்த ஒரு கற்பனைப் பேட்டி வேறு.புலிகள் அரசியல் ரீதியாகவே இழிந்து கிடக்கின்ற நிலையில், அந்த அரசியலை விமர்சிக்க அரசியல் துப்பில்லை. அதே அரசியலைத் தான் இந்தக் கும்பல் கொண்டுள்ளதால், கற்பனையாக தனிநபர் இழிவுகள் முதன்மை பெறுகின்றது. தேனீ ஆசிரியரின் மாற்றுக் கருத்து பற்றி கற்பனை பேட்டி போட்டால் எப்படி இருக்கும். அவர் வார்த்தையில் கூறினால் ' வேறு இணையத்தளங்களில் பிரசுரமாகியிருக்கிறது. இதன் காரணமாக தேனீ அக்கட்டுரையை பிரசுரம் செய்யமாட்டாது என்பதை அறியத்தருகிறோம்." என்று கருத்துச் சுதந்திரத்துக்கே புலிஎதிhப்பு வரைவிலக்கணம் வழங்கி புலுடாவிட முடிகின்றது. தேனீ இந்தக் கொள்கையை தனது இணையத்தின் கட்டுரை முழுமைக்கும் கொண்டுள்ளதா எனின், கிடையவே கிடையாது. புலிகள் என்ன இதற்கு விதிவிலக்கா! பிறகு ஏன் புலியைப்பற்றி அலட்டுகிறீர்;கள். கற்பனையான பேட்டி வேறு. உங்கள் வண்டவாளங்களையே நீங்கள் பேட்டியெடுத்துப் போட்டுப் பாருங்கள். உங்கள் குருவும், வழிகாட்டியுமான ரீ.பீ.சீ ராம்ராஜ் ஒரு சமூக கிரிமினலாக, புலிகளின் தலையீடு இன்றி கம்பி எண்ணுகின்றானே, அந்த பொறுக்கி பேர் வழிபற்றி ஒரு பேட்டி, ஒரு செய்தி நேர்மையாக போடுங்களேன்;. ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை என்ற கயவாளித்தனமே, புலியெதிர்ப்பு நக்குத்தனமாக இங்கு கொப்பளிக்கின்றது.இந்தக் கும்பல் தான் சாதியத்தை புலியெதிர்ப்புக்கு பயன்படுத்துகின்றது. அதாவது அரசியல் அற்றுப் போன புலியெதிர்ப்பு, இயல்பாகவே சாதிய மேலாண்மையை அடிப்படையாக கொண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளிளை இழிவுபடுத்தி, ஜனநாயகத்தை இழிவாடி ஜனநாயகப்படுத்துகின்றனராம். இந்தக் கும்பல் அரசியலற்ற சாதிய வக்கிரம் கொப்பளிக்க, பன்றியைப் போல் எப்படி சாக்கடையில் புரண்டெழுகின்றது எனப் பார்ப்போம்;.'புலிகளின் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டபோது நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வந்து அவரை ஆத்திரமூட்டுகின்றன.அவர் காலையில் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டபோது குழந்தையன் எதிரே வந்திருந்தான். புலிக்குறவனின் தந்தையின் காலத்திலிருந்து அவர்களுக்கு தலைமுடிவெட்டி வந்தவன் குழந்தையன். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவனது பிள்ளைகள் இருவர் புலிகளில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையன் தனது பரம்பரைத் தொழிலைக் கைவிட்டுவிட்டான். புலிக்குறவனும் ~சவக்குரல் பத்திரிகையில் நிருபராக நுழைந்து கொழும்புக்குச் சென்றதனால் குழந்தையனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அவருக்கு ஏற்படவில்லை. குழந்தையனின் பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையனுக்கு ஊரில் மரியாதை கூடியிருந்தது புலிக்குறவனுக்கு நீண்ட காலமாகவே எரிச்சலாக இருந்தது. புலிக்குறவன் பெரும்பாலும் கொழும்பிலேயே இருந்திருந்தாலும் அவரது மனைவியும் ஆறு பிள்ளைகளும் ஊரிலேயே இருந்தார்கள். மனைவி அவரிற்குக் கடிதங்கள் எழுதும்போது இடைக்கிடையே குழந்தையனைப் பற்றி கோள்சொல்லி அவரது எரிச்சலை அதிகரித்திருந்தாள். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான். பிக்அப்பிலை எல்லாம் போறான். பெடியள் பெரிய நடப்பிலை துவக்குகளோடை திரியிறாங்கள்" என அவரது மனைவி எழுதியிருந்த குற்றச்சாட்டுகளும் ஒவ்வொன்றாக அவரது நினைவுக்கு வந்தன." என்ன நினைவுகள். சாதிய நினைவுகள். எப்படி நாம் நமது காலுக்கு கீழ் அடக்கியாண்ட இந்த இழிந்த சாதிகள், நாசமறுத்த புலிகளால் இப்படி திரியுதுகள் என்ற சாதித் திமிரே கெக்கலிக்கின்றது.புலியெதிர்ப்பின் சாதித் தடிப்பு. வரக் கூடாத இடத்தில், புலியெதிர்ப்பாக வக்கரித்து வருகின்றது. இதில் 'குழந்தையன்" என்பதே யாழ் மேலாதிக்கம் வலிந்து இழிந்த சாதி பிரிவுகளுக்கு வைக்கும் சாதியப் பெயர் தான். 'பரம்பரைத் தொழிலைக் கைவிட்டுவிட்ட" சாதிய அங்கலாய்ப்பு. ' குழந்தையனுக்கு ஊரில மரியாதை கூடியிருந்த" என்ற சாதிய எரிச்சல். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான்" என்ற அடக்குமுறை வெறிகொண்ட சாதியம் கொப்பளிக்கின்றது. கைகட்டி சேவகம் செய்த 'இழிந்த நாய்கள"; இப்படி திமிரெடுத்து திரிவது கண்ட சாதியச் சினம், எரிச்சலாக வெட்காரமாக கொப்பளிக்கின்றது. யாழ் மேலாண்மை பயன்படுத்தும் உயர்தர வாழ்வை பறைசாற்றும் 'பிக்அப்பிலை எல்லாம் போறான்"கள் என்ற சாதிய திமிரெடுத்த தினவெடுப்பு புலம்பலாக வருகின்றது.பாட்டாளி வர்க்க புரட்சி நடக்கும் போது அங்கு சாதி ஒழிப்பு நடக்கும். அப்போது இந்த மேல்தட்டு உயர்சாதிய வர்க்கம், இப்படித் தான் அதை கேவலப்படுத்தி பழைய தங்கள் சாதிய சொர்க்கத்தைக் கோரும். சாதியை பாதுகாக்கும் புலிக்கு எதிராகவே, புலியெதிர்ப்பு வக்கிரம் சாதியத்யையும் புலிக்கு எதிராக மாற்றி அதன் மேலாண்மையை தனது கையில் எடுக்கின்றது. இதை அழகாகவே குறித்த சாதியமான் எடுத்துள்ளாh.இந்து மதம் ஒழுகிய, சாதியம் விதித்த குடிமைத் தொழில் செய்யும் குழந்தையன் பற்றிய பார்வை, புலியெதிர்ப்பின் வெட்டுமுகம் தான்;. ரீ.பீ.சீ திடீர் தயாரிப்பாக வந்து, ரீ.பீ.சீ யையே கைப்பற்றிய ஜெயதேவனின் வாழ்வு, சாதிய இந்துமதத்தின் புரோகிதக் கும்பலாக ஒரு சாதிய கோயிலைக் கட்டி, அங்கும் ஜனநாயக அரசியல் விபச்சாரம் செய்கின்றார். இந்துக் கோயில் ஆச்சாரங்கள் அனைத்தும் சாதிய அடிப்படையிலானதே. பிறப்பால் சாதியாக பிறந்த பார்ப்பான் தாழ்ந்த சாதிகளுக்கு வழிகாட்டுகின்றான்;. சாதியில் பார்ப்பானாக பிறந்தவன் எமக்கு சாதிக் கடவுளைக் காட்டிப் ப+சை செய்கின்றான். அந்த கடவுளின் சாதிய ஒழுங்கை பாதுகாக்கும் ஜெயதேவன் அன்ட் விவேகானந்தன் கும்பல் தான் புலியெதிர்ப்பின் தலைமைக் குருமாராக உள்ளனர்.இந்துமதத்தின் ஜனநாயகம் எப்படிப்பட்டது. எனது ஒரு சில கட்டுரையில் இருந்து.1.மனுவுக்கும், கௌடில்யர் காலத்துக்கும் இடையிலான ஆணாதிக்க வளர்ச்சியை ஒப்பிடல்2.இந்து ஆணாதிக்க பார்ப்பனியத்தில், சாதி வடிவில் இறுகிய குடும்பத் தன்மைகள்3.ஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும்4.இந்து மதத்தில் ஆண் பெண்ணின் வக்கரித்த உறவுகள்இவர்கள் தான் பாசிச புலியை ஒழித்து, சாதிய ஜனநாயகத்தை நிலைநாட்ட முனைகின்றனர். இந்தியா முதல் இலங்கை வரை சென்று மக்களின் எதிரிகளை தொட்டுக் கும்பிட்டு, பிரசாதம் வாங்கி உண்ணும் இந்த மக்கள் விரோத ஒட்டூண்ணிகளின் ஜனநாயகமோ புல்லரிக்க வைக்கின்றது. இந்த புல்லுரூவி வர்க்கம் பேசும் ஜனநாயகத்தை, தமிழ் மக்களின் முதுகில் சுமத்திதிவிடவே ஐயர்மார் முனைகின்றனர். ஐயா நீங்கள் போற்றும் இந்து மதமே ஜனநாயக விரோதமானது. அதை பாதுகாத்தபடி, ஜனநாயகத்தை மீட்பதாக தம்பட்டம் அடிப்பது எதற்காக? பிரிட்டிஸ் அரசின் துதிபாடிகளாக இருந்தபடி, அவர்களின் கால் தூசை நக்கிக் கொண்டு தமிழ் மக்களை மொட்டையடிக்கவே விரும்புகின்றனர்.உங்கள் கும்பலே இப்படி ஊரறிய இருக்க, நீங்கள் சொல்லுகின்றீர்கள் நாங்கள் அப்படி வக்கரிப்பதில்லை என்கின்றீர்கள். 'குழந்தையன் ~பிக்அப்பில் போவதை புலிக்குறவனின் மனைவி பார்த்து பொருமுவதாக கற்பிதம் செய்யப்பட்டதும், தேசிய தலைவரின் ஆயுத அரசியலால் சாதிய பிரச்சினை காலாவதியாகிப் போய்விடவில்லை என்று காட்டுவதற்கே. பேட்டி காணச் சென்றவரன்றி, பேட்டியளித்தவரும் பெரும்பாலான கேள்விகள் கேட்பவராக காட்டப்பட்டதும் ~புலிகுறவனை (புலிகளின் உறவுகளை) அம்பலப்படுத்துவதற்கே." ஆகாகா என்ன அருமையான வாதம். நிதர்சனம் டொட் கொம் உங்களிடம் கையேந்தி பிச்சை எடுக்க வேண்டும். சுத்துமாத்துக்கே பெயர் போனவர்களின் அரசியல் இருமை இங்கு வெளிப்படுகின்றது. கருத்துச் சுதந்திரம் பற்றி தேனீ ஆசிரியரின் நவீன கண்டுபிடிப்பு போல், இது உலகப் புகழ் பெற்றது.மனைவியின் பெயரில் கற்பிக்கின்றாராம். என்ன உளறல். அப்படியாயின் இது நீங்கள் பாதுகாக்கும், உங்கள் யாழ் மேலாதிக்க சமூகத்தின் ஒரு உண்மையில்லையா? முரண்பாடாக எதற்கு உளறுகின்றீர்கள்? புலிகள் அமைப்பில் இது நீடிக்கின்றது என்றால், உங்கள் புலியெதிர்ப்பில் நீடிக்காதோ? எப்படி?உண்மையில் புலிகளையும், புலித் தலைமையையும் அம்பலப்படுத்த முனைபவர் எதனுடாக பயணிக்கின்றார் என்றால், ஆதிக்க சாதிய மேலாண்மைக் கூடாகவே. புலித்தலைமையை அம்பலப்படுத்த இன்னுமொரு சமூக ஒடுக்குமுறை உதவுகின்றது என்ற அரசியல் உள்ளடக்கம் இங்கு மறுபடியும் வெட்டவெளிச்சமாகின்றது. இதேபோன்று தான் ஏகாதிபத்தியத்தின் கால்களின் கீழ் மண்டியிட்டு தவழுகின்றார்கள்;. இந்த புலியெதிர்ப்பு அரசியல் தான், ஜனநாயகம் என்ற பெயரில் சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுத்து எதிர்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது. இதுவே புலியெதிர்ப்பு கும்பலுக்கும் எமக்குமான அடிப்படை அரசியல் முரண்பாடாகும். எமது விமர்சனம் இதற்குள் தான் அமைகின்றது. இதுவே புலியுடனான எமது முரண்பாடும் கூட. புலிகள் ஜனநாயகத்தை ஏன் மறுக்கின்றார்கள்? புலிகளுக்கும் மக்களுக்குமான முரண்பாடு என்ன? இதை அறிவுப+ர்வமாக கேட்டுத் தெளிவுறும் போது, எமது விமர்சனத்தின் உள்ளடக்கமே தெளிவாக சரியாக இருப்பதை உறுதி செய்யும். புலிகள் என் ஜனநாயகத்தை மறுக்கின்றனரோ அந்தக் காரணத்தை புலியெதிர்ப்பு கும்பல் மறுப்பதால் தான், ஜனநாயகத்தை திரித்து எதிர்புரட்சிகரமாக மாற்றி சாதியமாகவும் கொப்பளிக்கின்றது.ஜனநாயகம் என்பது சமூக ஒடுக்குமுறை அனைத்தையும் களைவதை அடிப்படையாக கொண்டது. இதைக் களையாத ஜனநாயகம் என்பதில் உண்மைகள் எதுவும் இல்லை. இதைக் களையாத தேசியம் என்பதும் போலியானது. இவைகளை புலிகள் களைய மறுப்பதால் ஏற்படும் முரண்பாட்டை பாசிச நடத்தைகள் மூலம் கட்டுப்படுத்த முனைகின்றனர். இதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது. இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல் வங்குரோத்தால், அரசியல் ரீதியாக தலைவரிடம் பேட்டி காணமுடியாது போகின்றது. புலியெதிர்ப்பு தான், இவர்களின் உச்சபட்ச அரசியல். இவர்கள் தலைவரிடம் சாதியை எப்படி ஒழிப்பீர்கள் என்று கேட்ட முடியாது. அதுவே உங்களிடமும் கிடையாது. ஆணாதிக்கத்தை எப்படி ஒழிப்பீர்கள் என்று கேட்க முடியாது. அதுவும் உங்களிடம் கிடையாது.தேசியம் என்றால் என்ன என்று உங்களால் கேட்ட முடிந்த போதும், பதில் சொன்ன நீங்கள் அதற்கு மாற்று என்ன என்று கேட்டால் பதில் சொல்லமுடியாது. புலியெதிர்ப்பு அணி தேசியத்தை ஒழிக்க வேண்டும் என்கின்றது. நீங்கள் தேசியத்தை புரிந்த விதமே, அங்கு பதிலாக வருகின்றது. தேசியத்தை புலியாக, புலித்தலைவராக புரிந்து அதை ஒழிக்கவே கோருகின்றீர்கள். புலிகள் தேசியத்தை எப்படி புரிந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் எப்படி புரிந்துள்ளீர்களோ, அப்படியே அதை பதிலாகச் சொல்லி அதை ஒழிக்க கோருகின்றீhகள். நல்ல வேடிக்கைதான். 'தேசியம் என்றால் அது நான் தான்!" என்ற பிரபாகரன் கூறுவதாக கூறுவது தேசியம் பற்றி உங்கள் நிலைப்பாடாகும். தலைவரைத் தாண்டி உங்களாலும் சிந்திக்க முடியாது என்ற உங்கள் இழிவை இந்த பேட்டி எடுத்துக் காட்டுகின்றது. புலிகளுக்கு மாற்றாக மக்கள் நலன் கொண்ட தேசியத்தை, புலியெதிர்ப்புக் கும்பலால் முன்வைக்க முடியாது. உண்மையில் புலித் தலைவர் நினைப்பதாக நீங்கள் கூறும் தேசியத்தைத் தாண்டி, உங்களால் மாற்றுத் தேசியத்தை வைக்கமுடியுமா? அதை முன்னிறுத்தி புலியெதிர்ப்பு அரசியல் செய்ய முடியுமா? முடியாது.?பேரினவாதத்தை எதிர்த்து நீங்கள் அசையமறுப்பதன் உள்ளடக்கம் இது தான்;. வெள்ளாடு போல் ஒடியோடிக் கடிக்க மட்டுமே செய்வீர்கள். 25.06.2006 அன்று புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ யில் தேனீ ஆசிரியர், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வைக்க வேண்டும் என்று ஓடியோடிக் கடிக்கின்றார். எம்மிடம் இருந்து அக்கருத்தை பொறுக்கி மேயும் இவர்கள், அதை அரசிடம் முன்னிலைப்படுத்தி பிரதானப்படுத்தி போராட மறுக்கும் இவர்கள், தமிழ் மக்களுக்கு எப்படி வழிகாட்ட முனைகின்றனர். இலங்கை அரசே தமிழ் மக்களின் பிரதான முதன்மை எதிரி என்பதை மறுத்து, அன்றே ரீ.பீ.சீயில் முன்னைய கருத்துக்கு முரண்பாடாகவே புலம்ப முடிகின்றது. பெயர் குறிப்பிடாது எம்மைத் தாக்கும் அவர், இலங்கை அரசே பிரதான எதிரி என்றால் புலியின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சென்று வேலை செய்யாமல் இங்கு ஐரோப்பாவில் ஏன் இருக்கின்றனர் என்று பொருமுகின்றார். ஐயா புண்ணியவானே அரசு பிரதான எதிரியில்லை என்றால், நீங்கள் புலிக் கட்டுப்பாடு அல்லாத அரசு கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தேனீயை நடத்தலாமே. ஊருக்கு உபதேசம் எனக்கில்லை என்ற பழமொழி தான் இங்கு பொருந்துகின்றது.இதே நாளில் டி.சே.தமிழனால் தமிழ்மணத்தில் 'இணையத்துப் பிசாசு எனக்கு இரண்டு சாத்துப் போட்ட கதை" என்ற தலைப்பில் (இக்கட்டுரை பின்னால் அகற்றப்பட்டுவிட்டது.) எழுதிய போது, அந்தப் பிசாசு (பிசாசு என்று என்னைக் கூறுகின்றார்) இலங்கையில் சென்று இதைச் செய்யலாமே என்று கூறுகின்றது. புலி, புலியெதிர்ப்பு என அனைவரும் ஒற்றுமையாக ஒன்றையே செய்ய முனைகின்றனர். விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ள வக்கற்று, அதை இலங்கையில் செய்யக் கோருகின்றனர். இதன் மூலம் விமர்சனம் செய்யக் கூடிய சூழலை மறுதலிக்கவே இவர்கள் மனதார விரும்புகின்றனர். இதன் மூலம் தமது பொய்மையையும், இருமையையும் விமர்சனமின்றி பாதுகாக்க விரும்புகின்றனர்.இதேபோல் 25.06.2006 அன்று ரீ.பீ.சீயில் ஜெகநாதன் என்ற புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய தூசு துடைக்கும் கற்றுக்குட்டி அன்று புலம்பத்தவறவில்லை. தேடகம் பற்றி தமது அரசியல் வம்புத்தனத்தில், அன்றே தேடகம் புலிக்கு ஆதரவாக செயற்பட்டது என்று புலியெதிர்ப்பு கனடா குஞ்சு ஒன்று உளறியது. உடனே ஜெகநாதன் இங்கு தூண்டில் மனிதம் போன்றவையும் புலிக்கு ஆதரவாக செயற்பட்டது என்றார். தம் போன்ற புலியெதிர்ப்புக் கும்பலின் நடத்தைகளை முடக்கியவர்கள் என்றார். உண்மைதான். அன்று கொலைகார இயக்கங்களின் மக்கள் விரோதத்தை எதிர்த்து போராடியபோது பலர் கொல்லப்பட்ட நிலையில், அதில் தப்பியவர்களே தூண்டில் மற்றும் மனிதம் போன்றவற்றை ஆரம்பித்தவர்கள். அவர்களின் போராட்டத்தை கண்டு தான் ஜெகநாதன் இப்படிக் குமுறி வெடிக்கின்றார்.இந்த சஞ்சிகைள் மீதான எமது அரசியல் விமர்சனங்கள் பல நாம் முன்பே எழுதியுள்ளோம். ஆனால் அவர்கள் மனிதத்தை நேசித்தவர்கள். மனிதத்தை முன்னிலைப்படுத்தி பின்னால் படிப்படியாக சீரழிந்தவர்கள்;. மனிதம் பற்றி அவர்களின் நிலையையோ, தேடகத்தை கொச்சைப் படுத்துவதையும் விபச்சாரம் செய்வதையோ நாம் அனுமதிக்க முடியாது. கடந்தகால தேடகம் பற்றிய தேனீயின் அவதூற்றில், நிதர்சனத்துக்கு நிகராக வக்கரித்து புலியெதிர்ப்புக் கும்பல் காவடியெடுப்பது அம்பலமாகின்றது. அதை சுகன் தெளிவாகவே தனது பதிவொன்றில் அம்பலம் செய்கின்றார். 'கனடா தேடகத்தில் நடந்ததென்ன? என்றொரு கட்டுரை தேனீயில் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு வரி வருகிறது... 'தண்ணி ப்புளு பிலிம் சரக்கு ...மற்றவன் பெண்டாட்டி இவையெல்லாம் தேடகத்திற்கு" என்று வரும். இவை கனடாவில் மாற்றுக் கருத்துக்காகப் போராடிய உழைத்த தோழர்களின் முயற்சிகளை கொச்சைப்படுத்தல் இல்லையா? அவர்களின் ஆரம்பகால நடவடிக்கைகளின் மேல் மலத்தை அள்ளி வீசவில்லையா? நிதர்சனம் சேதுவிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? தேடகம் இயங்கி வந்த மண்டபத்துக்கு வாடகை செலுத்துவதற்காகவே வேலைக்குப் போய் வந்து சம்பளப் பணத்தில் வாடகையை நீண்ட காலமாகவே செலுத்தி வந்த தோழர் குமரனை தேனீ கட்டுரையாளர் அறியமாட்டாரா? இப்படியான நேரங்களில் யாரைக் கொண்டு போய் யாரிடம் விற்கிறோம் என்ற புரிதல் தேவை. பக்குவம் தேவை. நமது தோழர்கள் அவர்கள்."சுகன் சுட்டிக் காட்டியது போல் நீங்கள் செய்யும் அரசியல் அவதூறுகள் எதுவும், மக்களின் உண்மைக்காக அவர்களின் வாழ்வுக்காக போராடிய வரலாற்றுக்கு முன்னால் ஒருநாளும் எடுபடாது. இன்று தேடகத்தின் நிலை பற்றி, இன்னமும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடந்தகாலத்தை கொச்சைப்படுத்தும் இவர்கள் யார்? முன்பு உண்மையாக மக்களின் ஜனநாயகத்துக்காக போரடியவர்களை கொன்ற போது, அதற்கு பக்க துணையாக நின்றவர்களும் அதை ஆதரித்தவர்களும் தான்;, இன்று கணிசமான புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளாக உள்ளனர். புலியெதிர்ப்பின் பின்னுள்ள பலர் அப்பாவிகள். அவர்களை அமர்த்தி வைத்து புலியெதிர்ப்புக் கும்பல் தீத்த முனைகின்றது. மாற்றுக் கருத்துகளை அவர்கள் படிக்காத வண்ணம் தீவிரமான அக்கறையுடன் அதை ஓடுக்குகின்றனர். மக்கள் கருத்தை அவர்கள் தெரிந்து கொள்ளும் போது, இந்த அப்பாவிகள் உங்களைவிட்டே விலகிவிடுவர்.இந்த நிலையில் நீங்கள் உளறுவதும், புலம்பவதும் நடுச் சந்தியில் நிர்வாணமாகின்றது. இப்படி நீங்கள் இருக்கக் கூடியதாகவே, புலிகளின் தலைவர் உளறுவதாக காட்டுவதன் அர்த்தம் என்ன? உண்மையில் நீங்கள் அரசியலற்ற வெற்றிடத்தில் உளறுவதைக் காட்டுகின்றது. நீங்கள் போற்றும் பிரிட்டிஸ் பிரதமர்; பிளையரும், அமெரிக்கா ஜனாதிபதி புஸ்சும் கூடத்தான் உளறுகின்றனர். அல்லது நீங்கள் போற்றும் ஜே.வி.பி, இன்றைய ஜனாதிபதி ராஜபக்சாவும் கூடத்தான் மக்களை ஏமாற்றி உளறுகின்றார்கள். பயங்கரவாதம் பற்றி நீங்களும் அவர்களும் சேர்ந்து உளறவில்லையா? பயங்கரவாதத்தையே அடிப்படையாகக் கொண்ட இந்த ஜனநாயகம், அதைக் கொண்டு மக்களையே அடக்கியாளும் இந்த பயங்கரவாத அமைப்பை பூசி மெழுகி, பயங்கரவாதம் பற்றி கூட்டாக அரை மக்குகளாகவே உளறுகின்றீர்களே இது உங்களுக்கு தெரிவதில்லையா.உதாரணமாக 22.06.2006 புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ கும்பல் நடத்திய புலியெதிர்ப்பு அரசியல் விவாதத்தில் கார்த்திக் (அவரை நான் சொந்தப் பெயரிலும் அறிவேன்) வைத்த, யாழ் மேலாதிக்க சாதிய அமைப்பு பற்றிய கருத்தை, அடுத்து வந்த அருள்நேசன் (பெயர் சரி என்று நம்புகின்றேன்; தவறு என்றால் மன்னிக்கவும்) அதற்கு எதிராக கதைத்து புலியெதிர்ப்பை சரியாக வரையறுத்துக் காட்ட முனைந்தார். இடதுசாரி வேஷம் போட்டு அரசியல் ஆய்வு நடத்தும் சிவலிங்கம், அதைத் திருத்தி தமது சொந்த அரசியல் மோசடியை நியாயப்படுத்த முனைந்தார். அடுத்து வந்தவரும் அதையே செய்ய முனைந்தார். கோமாளித்தனமாக கூத்தாடியாக தம்மை நியாயப்படுத்தி உலகத்தையே ஏமாற்ற முனைகின்றனர். கோட்பாடும் கொள்கையுமற்ற புலியெதிர்ப்புக் கோட்பாடு, உண்மையில் அருள்நேசனால் வைக்கப்பட்ட உயர்சாதி யாழ் மேலாதிக்க கருத்துத் தளம் தான். அதாவது மேலாதிக்கம்; பெற்று இருக்கின்ற சமூக போக்குகு; தான் புலியெதிர்ப்பின் மாற்றீடு என்கின்றார். புலிகளின் தலைவர் உளறுகின்றாரோ இ;ல்லையோ, புலியெதிர்புக் கும்பல் ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற உளறுகின்றது. தமக்கு என்று எந்த கொள்கையுமற்ற கூலிக் கும்பல் தான், சாதி ஒழிப்பும் புலியெதிர்ப்பின் ஒரு அங்கம் என்று நிலைமைக்கு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப நடித்துக்காட்ட முனைகின்றனர்.புலிகள் என்ற இயக்கம் இயல்பான யாழ் மேலாதிக்க சாதிய இயக்கம் தான். இந்த புலியை ஒழிக்க விரும்பும் ஏகாதிபத்திய கைக்கூலிகள். ஏகாதிபத்தியத்துக்காக மாடாய் விசுவாசமாக வாலாட்டி உழைக்கும்; இவர்கள், இயல்பான ஆதிக்கம் பெற்ற யாழ் மேலாதிக்கத்தையே தாங்கி நிற்கின்றனர். இதை மறுத்து யாரும் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது. புலித் தலைவரை பேட்டி கண்டு கிண்டலடிக்க விரும்பிய புலியெதிர்ப்பு நபர், இந்த சாதிய மேலாதிக்கத்தை பயன்படுத்துவதில் கூட விதிவிலக்காக இருக்கவில்லை. இங்கு குழந்தையன் தமிழ்செல்வனின் தந்தையாக காட்டப்படுகின்றது. இந்தச் சாதிய வக்கிரம், புலி எதிர்ப்பு அரசியலை பலப்படுத்துகின்றது. சாதியத்தின் அடிப்படையாக கிராமப்புற நிலப்பிரத்துவ அடிமை ஒழுங்கு குலைவதைக் கண்டு, பேட்டி கண்டவரும் (கட்டுரையாளர் தான் அவர்) அவரின் மனைவியும் குமுறுவது படுபிற்போக்கானது. கிராமப்புற சாதிய ஒழுங்குகள் சிதைந்து போவது இங்கு முற்போக்கானது. அதை இந்த பேட்டி ஊடாகவும் மீண்டும் புலியெதிர்ப்பு மறுதலிக்கின்றது. ஒடுக்கபட்ட சாதி நபர்கள் ஆயுதம் ஏந்தியதால், அவர்களின் மதிப்பு ஊரில் ('குழந்தையனுக்கு ஊரில் மரியாதை") உயருகின்றது என்ற கருத்தும், அதற்கு எதிராக இதை எழுத்தியவர்pன் எரிச்சலும்; ('புலிக்குறவனுக்கு நீண்ட காலமாகவே எரிச்சலாக இருந்தது") அப்பட்டமாக மனைவியின் (இங்கு ஒரு பெண்ணின் பெயரால்) பெயரால் (' குழந்தையனைப்பற்றி கோள்சொல்லி அவரது எரிச்சலை அதிகரித்திருந்தாள்") கூறி, அதை சாதியத்தின் மொழியில் கூறுவது அம்பலமாகின்றது. சாதிய தடிப்பின் இறுமாப்பை, வளைந்து கொடுக்க மறுக்கும் சாதியத் திமிரை, புலியெதிர்ப்பு அடிப்படையாக கொண்டதை மீண்டும் இது உறுதி செய்து காட்டுகின்றது.பார்ப்பன இந்து சாதியக் கோயிலை வைத்துள்ள புலியெதிர்ப்பு தலைமைப் ப+சாரியான ஜெயதேவனின் அண்ணன் பயல் கூட, இப்படித் தான் புலியை ஆய்வு செய்து விமர்சித்தார். புலியின் இன்றைய நிலைக்கு இந்த ஆதிக்க சாதி வெறியன் இயக்கத்தில் உள்ள இழிந்த சாதிகளான பள்ளுப்பறைகளும், அம்பட்டன் போன்றோருமே காரணம் என்கின்றார். குறித்த தேனீ உயர்சாதிய நிருபர், பரம்பரைத் தொழிலை கைவிட்டமையை எரிச்சலுடன் நோக்குவதும், குமைவதன் மூலம், புலிகள் அம்பட்டரின் குடிமைத் தொழிலை வீடுதோறும் சென்று செய்வதை தடை செய்ததை எதிர்த்து இது வெளிவருகின்றது. இங்கு புலிகள் ஏன் செய்தார்கள் என்பதைவிடுத்து, அவர்கள் மீண்டும் வெள்ளாள வீடுகள் தோறும் சென்று பரம்பரைத் தொழிலை செய்ய வேண்டும் என்று புலிக்கு எதிராக புலியெதிர்ப்பு படுபிற்போக்காக தன்னை வெளிப்படுத்தி அரசியல் செய்கின்றது. புலியெதிர்ப்பு விரும்புவது என்ன. அதை அவர்கள் சொல்லிவிடுகின்றனர். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான். பிக்அப்பிலை எல்லாம் போறான்." இதை கண்டு புலியெதிர்ப்புக் குஞ்சு குமுறுகின்றது. இந்த புலிக்கு பதிலாக புலியெதிர்ப்பு எதைக் கோருகின்றது. ரோட்டில் கண்டால் அடிமை குடிமைகளாக கைகட்டி செல்ல வேண்டும்;. காலில் செருப்பு அணியாது அல்லது தம்மைக் கண்டால் அணிந்ததை கையில் தூக்கிச் செல்ல வேண்டும் என்ற புலியெதிர்ப்புக் கொக்கரிப்பு இதில் கொஞ்சிவிளையாடுகின்றது.இதைத்தான் 'இப்போது குழந்தையனை கண்டதும் அவருக்கு எரிச்சலே மூண்டது. ~அம்பட்டன் குறுக்கை வந்திட்டான். இனி போற விசயம் அவ்வளவுதான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், குழந்தையனின் பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருப்பதால் அவர் வாய் திறக்கவில்லை. ~இந்த மூதேவியின்ரை முகத்திலை முழிக்கப்படாது என நினைத்துக் கொண்டு குழந்தையனைக் கடந்து போக சையிக்கிளில் ஏறி பெடலில் காலை வைத்து அழுத்தினார்." சாதியம் இப்படி புலியெதிர்ப்பாக முகிழ்கின்றது. இவர்தான் புலியில் குழந்தைப் போராளி பற்றி ஏகாதிபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் நினைக்கின்றார். தலைவரின் தேசிய சிந்தனை பற்றியும் சிந்திக்க முடிகின்றது. இங்கு அவரின் சிந்தனை என்பது வாழ்வும் சாதியம். தேசியம் பற்றியது புலியெதிர்ப்புக் கும்பலின் கோட்பாடாகும்.இதனால் தான் '..வரும் வழி முழுவதும் குழந்தையனையும் அவனது சமூகத்தையும் மனதுக்குள் திட்டிக்கொண்டே வந்தார். 'அப்பாடி எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சிரோனும்" என நல்லூர் முருகனை மனதுக்குள் வேண்டிக் கொண்டார்." உயர்சாதிய கோயில் துணை நிற்க, இழிந்த சாதிகளை திட்டி தீர்த்தபடி கும்பிடுகிறார். ஏன் புலியெதிர்ப்பை அரங்கேற்ற தனக்கு துணையாக நல்லூர் சாதிக் கடவுள் உதவ வேண்டும் என்று இழிந்த சாதிகளைத் திட்டி போற வழியில் நல்வழிகாட்ட உயர்சாதிக் கடவுளை வேண்டிக் கொள்கின்றார். சாதி குறைந்த 'மூதேவியின்ரை முகத்திலை" முழித்திட்டனே கடவுளே, '~அம்பட்டன் குறுக்கை வந்திட்டான். இனி போற விசயம் அவ்வளவுதான்" என்று உயர் சாதி புலியெதிர்ப்பு பேய் தன்னனையும் தனது புலியெதிர்ப்புக் கும்பலையும் உலகுக்கு மறுபடியும் ஒருமுறை நிறுவிக்காட்டியுள்ளது.Monday, June 26, 2006

உச்சநீதி மன்றத்தின் அழுகுனித் தீர்ப்பு

''வங்கிக் கடனைக் கட்டாத முதலாளிகள் சூழ்நிலைக் கைதிகள்!" -உச்சநீதி மன்றத்தின் அழுகுனித் தீர்ப்பு


மிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பதவியேற்றவுடனேயே, தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 6,866 கோடி ரூபாய் பெறுமான கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இக்கடன் தள்ளுபடியைத் தனது தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. குறிப்பிட்டவுடனேயே, பல பொருளாதார வல்லுநர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க ஆரம்பித்து விட்டது. ""இக்கடன் தள்ளுபடியால் தமிழக அரசுக்கு ஏற்படக்கூடிய நட்டத்தை எப்படி ஈடுகட்ட முடியும்? இது போன்ற கவர்ச்சித் திட்டங்களால் தமிழகம் முன்னேற முடியாது?'' என்றெல்லாம் புலம்பி, அவர்கள் தங்களின் எரிச்சலைக் கொட்டித் தீர்த்தனர்.அவர்களின் புலம்பல்களை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இது போன்ற சலுகை முதலாளிகளுக்கு அளிக்கப்படும்பொழுது, அவர்கள் அதனையும் எதிர்ப்பதுதானே நியாயமாக இருக்க முடியும்? ஆனால், உச்சநீதி மன்றமோ இதற்கு வேறு விளக்கம் சொல்கிறது.""வளர்ச்சி கடன் வங்கி'' என்ற நிதி நிறுவனம், தன்னிடம் தொழில் தொடங்க கடன் வாங்கிவிட்டு, அதற்கான வட்டியையோ, அசலையோ திரும்பவும் வசூலிக்க முடியாமல் நிலுவையில் இருக்கும் 120 கோடி ரூபாய் பெறுமானமுள்ள வாராக் கடன்களை சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இத்தள்ளுபடியை எதிர்த்து நடந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், ""இதனை வங்கி நிர்வாகத்தின் தவறான நடவடிக்கை எனப் பார்க்கக் கூடாது'' எனக் குறிப்பிட்டு, வாராக் கடன் தள்ளுபடிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.""கடன் கொடுத்த வங்கி மற்றும் கடன் வாங்கியவர்களின் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத / வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.''""இலாபத்துடன் இயங்கி வரும் வங்கிகள் இது போன்ற வாராக் கடன்களை தள்ளுபடி செய்யலாம். இந்தத் தள்ளுபடி, வங்கியின் ஆண்டு வரவுசெலவு அறிக்கையில் செய்யப்படும் கணக்கியல் நடவடிக்கைதானே தவிர, வங்கிக்குத் தான் கொடுத்த கடனைத் திரும்பப் வசூலிக்கும் உரிமை எப்பொழுதும் உண்டு'' என உச்சநீதி மன்றம் வாராக் கடன் தள்ளுபடிக்கு ஆதரவாகப் பல வாதங்களை எடுத்து வைத்துள்ளது.தொழில் தொடங்குகிறோம் என்ற பெயரில் தனியார் முதலாளிகள், பொதுத்துறை வங்கிகள் / பொதுத்துறை நிதி நிறுவனங்கள் / தனியார் வர்த்தக வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள கடன் 31.3.1997இல் 47,300 கோடியாக இருந்தது; இந்த வாராக் கடன் 31.3.2001இல் 81,000 கோடி ரூபாயாக வளர்ந்து, இன்று 1 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. வங்கிகளில் போடப்பட்டுள்ள பொதுமக்களின் சேமிப்பை தனியார் முதலாளிகள் கமுக்கமாக ஏப்பம் விட்டிருப்பது, வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் வெளியுலகுக்குத் தெரிந்தது.""வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டுவிட்ட முதலாளிகளின் பெயர்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்; அவர்களின் மீது கிரிமினல் வழக்கு தொடருவதற்கு ஏற்றவாறும்; கடனுக்கு ஈடாக அவர்களின் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு ஏற்றவாறும் பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்'' என்று வங்கி ஊழியர்கள் கோரி வருகிறார்கள். அக்கோரிக்கைகளை இன்றுவரை ஏற்க மறுத்து, தனியார் முதலாளிகளைக் காப்பாற்றி வரும் மைய அரசிற்கு இந்தத் தீர்ப்பு, எல்லா வாராக் கடன்களையும் ஒரேயடியாக ரத்து செய்துவிடும் வாய்ப்பினை வாரி வழங்கியிருக்கிறது.கடனைக் கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; அல்லது சிறுநீரகங்களை விற்றாவது கடனைக் கட்ட முயலுகிறார்கள். இப்படி எந்த தொழில் அதிபராவது கடனைக் கட்ட முடியாமல் நொடித்துப் போய் தெருவுக்கு வந்திருக்கிறாரா?ஜெயாசசி தோழிகள், பொள்ளாச்சி மகாலிங்கம், சாராய உடையார் குடும்பம் போன்ற வங்கிக் கடனைக் கட்ட மறுக்கும் "பெரிய' மனிதர்கள், புதிய புதிய தொழில்களைத் தொடங்கி நடத்தி வருவதை நம் கண்முன்னே பார்க்கிறோம். இப்படிப்பட்ட நிலையில், இவர்கள் வாங்கிய கடனை வங்கிக் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப் பரிந்துரைப்பது மோசடித்தனமாகாதா?தனியார்மயத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்கள், ""முதலாளிகளுக்கு சலுகை வழங்கினால், பொருளாதாரம் முன்னேறும்; விவசாயிகளுக்கோ, பிற உழைக்கும் மக்களுக்கோ சலுகையோ, மானியமோ வழங்கினால் பொருளாதாரம் நாசமாகப் போய்விடும்'' என்ற இரட்டை அளவுகோலை கையில் வைத்திருக்கிறார்கள்.இந்த மோசடித்தனமான அளவுகோலின் காரணமாகத்தான், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்தவர்கள், உச்சநீதி மன்றம் மூலமாக முத லாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகையைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்.பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்ற பெயரில் தொழிலாளர்களின் சேமநல நிதியையும்; வங்கிகளில் உள்ள பொதுமக்களின் சேமிப்பையும் தனியார் முதலாளிகள் சூறையாடுவதற்கு ஏற்றவாறு ஏற்கெனவே ""சீர்திருத்தங்கள்'' செய்து தரப்பட்டுள்ளன. உச்சநீதி மன்றமோ, கடன் என்ற பெயரிலும் பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பதற்கு இத்தீர்ப்பின் மூலம் சட்டபூர்வ தகுதியை வழங்கியிருக்கிறது.மு ரஹீம்