தமிழ் அரங்கம்

Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Saturday, October 17, 2009

குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்

இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

பு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, May 7, 2009

இந்திய சீனா மேலாதிக்க முரண்பாடும், இலங்கையின் எதிர்காலமும்

இந்தியாவானது பேரினவாத இனவொடுக்குமுறையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது. இதுவே தமிழினத்துக்கு எதிரான, கடந்த 30 வருட வரலாறாகும். இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக உருவாக்கியது.

ஆனால் ஏகாதிபத்திய சார்பு புலிகள் இயக்கம் தம் பாசிச மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், இந்தியா சார்புக் குழுக்களை சேர்த்து அழித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கம் தான் நிறுவிய வழியில் சிதறிப்போனது.

இருந்தபோதும் சிங்களப் பேரினவாதிகள் புலிகள் மேல் நடத்திய தாக்குதலினால், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய இந்தியா, அதை தமிழின அழிப்பாகக் காட்டியது. இதன் மூலம் நேரடியான ஆக்கிரமிப்பை நடத்தி, தன் மேலாதிக்கத்தை நிறுவமுனைந்தது. ஆனால் புலிகள் மற்றும் சிங்கள அரசுடனான இந்தியாவின் மோதல் போக்கால், இதிலும் தோல்வியை தழுவியது. இப்படி இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலனை, இலங்கையில் தான் விரும்பியவாறு இந்தி..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்