skip to main |
skip to sidebar
இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?
'ஜனநாயகத்துக்கு" திரும்பியதாக கூறுகின்றனரே, இவர்களால் மக்களுக்கு என்ன ஜனநாயகம் கிடைத்துவிட்டது. இவர்கள் 'ஜனநாயகத்துக்கு" திரும்ப முன், அப்படி 'ஜனநாயக" விரோதமாக என்னதான் செய்தனர்? அதையாவது சொல்லுங்கள். ஆயுதம் ஓப்படைக்க முன், ஆயுதத்தை ஓப்படைத்த பின், கருணா சுதந்திரக் கட்சியில் சேர முன், சேர்ந்த பின், இந்த 'ஜனநாயகத்தின்" அருமை பெருமைகளை எல்லாம் மக்களுக்கு சொல்லவேண்டியது தானே.
எந்த கொள்கையும் கோட்பாடுமற்ற இரண்டு சுயநல பொறுக்கிகளின் 'ஜனநாயக"க் கதையிது. கைக் கூலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு, படுகொலைகளை ஏணியாகக் கொண்டு, அதிகாரத்தை தக்கவைத்த கதையிது. இந்த தனிமனித அதிகார வெறி, படுகொலைகளாகி தொடர்ந்தன, தொடர்கின்றது. இதன் இன்றைய அத்தியாயம் தான் ஆயுத ஓப்படைப்பு முதல் பேரினவாத சுதந்திர............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
தமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்" உச்சரிக்கப்படுகின்றது.
சிங்களப் பேரினவாதமும், இதைச் சார்ந்த புலியெதிர்ப்புவாதிகளும், எப்போதும் புலிகளை முன்னிறுத்தி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த 'ஜனநாயகத்தை" வழங்கப்போவதாக கூறினர், கூறுகின்றனர். சரி அந்த 'ஜனநாயகம்" தான் என்ன? என்று கேட்டால், ஆளைக் காணோம் பதிலையும் காணோம் என்று ஓடுகின்றனர்.
சரி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த ஜனநாயகம் என்ன? தமிழ்மக்கள் தமக்காக தாம் போராடக் கூடாது என்பதைத்தான் புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்தனர். சிங்களப் பேரினவாதத்தை கூட, யாரும் எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான், புலியின் அடிப்படையான ஜனநாயக...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.
ஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.
இதன் பின்னணியில் தான் அன்று இந்திய அரசு முதல் இன்று போலிக் கம்யூனிஸ்டுகள் வரை இயங்குகின்றது. இப்படி ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியதன் மூலம், இந்த மனிதவிரோத செயலை செய்தனர். அதையே அரசியலாக ஊக்குவித்தனர். இவர்கள் கொடுத்த ஆதரவு, எதிர்ப்பு என்று அவை எந்த நிலையில் இடம்மாறினாலும், இது ஈழ மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. அதாவது இவர்கள் எதைச் செய்தாலும், அது ஈழத்தமிழ் மக்களுக்க எதிராகவே இருந்துள்ளது.
ஈழ ஆதரவு பிழைப்புவாதிகளின் விருப்பம் மற்றும் துணையுடன் அத்துமீறி ஆக்கிரமித்த இந்தியா, இதன் மூலம் புலிகளை அவமானப்படுத்தியு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
தமிழ்மக்களின் பெயரில், தமிழ் மக்களிள் உரிமைப்போரை கொச்சைப்படுத்தி நடத்திய சுயவிளம்பரப் போராட்டம். ஏதோ வன்முறையாம்! அதுவும் இலங்கையில்! சரி உங்களில் யாருக்காவது தெரியுமா! இப்படி தெரியாத சிலதுகள், சுயவிளம்பரத்துக்காக நடத்திய போராட்டம்; தான் பாரிஸ் போராட்டம். தடிக்கும் நோகாது, பாம்பை அடிக்கும் சுயவிளம்பரக் கோசங்கள்.
தமிழ்மக்கள் சாவா, வாழ்வா என்ற எல்லைக்குள் நாதியற்று கிடக்க, புளட்டின் 'சதி" அரசியலை, மீண்டும் புளட் அல்லாத தளத்தில் அசோக் என்பவர் மேடையேற்ற முனைந்தார்.
இதற்கு சுழியோடிப் பிடித்த நபர் தான் றமணன். றமணன் இங்கு உள்ள அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகளுடன் கொண்டிருந்த செயல்பாட்டை பயன்படுத்தி, தன் சொந்த சதிக்கூத்தை அதற்குள் அசோக் அரங்கேற்ற முனைந்தார்.
இதற்கு அமைய பயன்படுத்தப்பட்ட அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகள் கூட, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதில்லை. இப்படி பேரினவாத தேசியத்துக்கு உதவும் அவர்களின் சொந்த அரசியல் மனப்பாங்கை, தம் சொந்த சதி மனப்பாங்குடன் இணைத்து, அரங்கேற்றிய நாடகம் தான் இந்த அர்த்தமற்ற பாரிஸ் போராட்டம்.
தமிழ் மக்களை இன்று சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்கின்றது. ஒரு இன அழிப்பாக, இனச் சுத்திகரிப்பாக, இனக்களையெடுப்பாக, அதைச்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
அரசுசார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், தமிழ் மக்களை அரசு கொல்வதன் மூலம் தான், தாம் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கமுடியும் என்கின்றனர். இதை நாம் தேனீ இணையம் முதல் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி அரசியலின் பின்னும் காணமுடியும்;. இதற்கு மாற்றாக இவர்கள் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கவும், புலியை ஒழிக்கவும், வேறு எந்த மாற்று அரசியல் வடிவமும் இவர்களிடம் கிடையாது.
தமிழ்மக்களை கொல்வதன் மூலம், 'ஜனநாயகத்தை" தமிழ்மக்களுக்கு அல்ல தமக்கு பெற்றுக் கொள்ளல் தான், அரசு சார்பான புலியெதிர்ப்பு அரிசியலாகும். இதைத்தான் இவர்கள் எப்படி எழுதினாலும். எப்படி நியாயப்படுத்தினாலும், நடைமுறையில் புலிக்கு மாறாக வைக்கும் மாற்று அரசியல் வழியாகும்;. அரசின் இன அழிப்பு, இனக் களையெடுப்புத் திட்டத்துக்கு வெளியில், இவர்களுக்கு என்று எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது. அரசு செய்வதை ஆதரிப்பது தான், இவர்களின் ஆய்வுகள், அறிக்கைகள் முதல் வெள்ளை வேட்டி அரசியல் வரை அரங்கேறுகின்றது.
இவர்களுக்கு இடையில் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது. அரசை மையப்படுத்தி இயங்கும் இவர்கள், அரசுக்கு பின்னால் இயங்குகின்றனர். கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவையும், அதை புலியின் குற்றமாக காட்ட வேண்டிய தேவையும் தான்,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
தமிழ்மக்களைக் கொன்று குவிப்பதை ஊக்குவிக்கும் கொலைகாரர்களின் நடிப்புத்தான், புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்". தமிழ் மக்களை கொன்று குவிக்கும் அரசுக்கு எதிராக போராடாது, புலிகள் தமிழ் மக்களை பணயமாக வைத்திருப்பதை கண்டிக்கவும் தூற்றவும் முடியாது. ஆனால் இதைத்தான் அரசு சார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" செய்கின்றது.
இலங்கையில் அரசுடன் கூடி நிற்கும் கூலிக்குழுக்கள் முதல் புலம்பெயர் புலியெதிர்ப்பு பேசும் 'ஜனநாயகம்", தமிழ் மக்களை அரசு கொல்வதைக் கண்டு கொள்ளக் கூடாது என்கின்றது. இதற்கு அவர்கள் பெறுவது பதவிகள், பட்டங்கள், நாலு சில்லறைகள். இவர்கள் மூடி மறைக்கும் தமிழ்மக்களின் மரணங்களே, இவர்களின் பிழைப்புக்கான அரசியல் அடித்தளம். அரசுக்கு எதிராக இதை கண்டித்தால், இவர்கள் அனுபவிக்கும் 'ஜனநாயகம்" என்ன என்பதை அவர்களே தெரிந்து கொள்வார்கள்.
இங்கு புலிகள் பலி அரசிலை நடத்தி தாம் தப்பிப்பிழைக்க முனைகின்றனர் என்றால், அரசு சார்பு புலியெதிர்ப்புக் கும்பல் பலியை எடுக்கும் அரசை ஆதரித்து, எலும்புகளை நக்குகின்றனர்.
இப்படி கொலைகார ஈ.பி.டி.பி, உட்படுகொலைக்கு புகழ்பெற்ற புளாட், இந்தியக் கைக்கூலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ், கூலிக் கும்பலான ரெலொ, அரச எடுபிடிகளா..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.