தமிழ் அரங்கம்

Showing posts with label பொறுக்கிகளும். Show all posts
Showing posts with label பொறுக்கிகளும். Show all posts

Friday, May 29, 2009

வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

1. புலிகள் இதை ம..........

Sunday, April 26, 2009

அரச கைக்கூலிகள் கூறுகின்றனர், தமிழ்மக்கள் இனி தம் உரிமைக்காக போராட மாட்டார்களாம்!?

இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,

மக்களுக்காக போராடாதே அடிமையாக மக்களை இருக்க விடு என்கின்றான். இதை அவன் தன் அறிவு மூலம் நிலைநாட்ட முனைகின்றான். பொய், பித்தலாட்டம், மோசடி, மூலம், மக்களின் வாழ்வு சார்ந்த எதார்த்தத்தை திரித்துக்காட்டி இதை நிறுவ முனைகின்றான்.

இதற்கு புலிகள் தான் உதவினர். தமிழ்மக்கள் அரசியல் அனாதைகளாகி நிற்கின்றனர். பொறுக்கிகளும், துரோகிகளும், சமூக விரோதிகளும், கைக்கூலிகளும் தமிழ்மக்கள் சார்பாக கொக்கரிக்கும் அவலநிலை.

தமிழரின் உரிமையின் பெயரால் புலிகள் ஆடிய பாசிசக் கூத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேரின
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்