தமிழ் அரங்கம்

Saturday, June 6, 2009

அரசுக்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான, ஒரு பொதுக்கொள்கையிலான வேலைத்திட்டம் மட்டும்தான் மக்களுக்கானது


இனி புலிகளிடம் எந்த தியாகமும் கிடையாது. இதைச் சார்ந்த எந்த வீரமும் கிடையாது. இனியும் கூட புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு, கொடிபிடிக்க மட்டும்தான் முடியும். இதைத்தான் தமிழ் மக்களின் விடிவிற்கான, ஒரு பொதுவேலைத்திட்டமாக புலிகள் காட்ட முனைகின்றனர்.

கடந்த காலத்தில் புலிகள் மாற்றுக்களை எல்லாம் அழித்தபடி, தாமே தொடர்ச்சியாக போராடுவதாக கூறினர். இதன் மூலம் தமக்கு பின்னால் ஒரு தியாகத்தைக் காட்டினர். இதன் மூலம் ஒரு படுபிற்போக்கான இன அழிவினை, சமூகநடைமுறையாக்கினர். அதையே அவர்கள் அறுவடை செய்தனர்.

இவர்கள் தான் இன்று பொதுவேலைத்திட்டத்தைக் கோருகின்றனர். இவை எதற்காக? ஏன்? இவை தமிழ்மக்கள் நலன் சார்ந்ததா? இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் காரணங்கள், இவர்கள் சார்ந்து அவை அனைத்தும் உண்மையானவையல்.........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ராக்கிங்க்கு எதிராக, இரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

100க்கு உட்பட்ட மக்கள் தான் யுத்தத்தில் இறந்தனர்! ஜனாதிபதி கூறுகின்றார்


இப்படி ஒரு பொய்யான, ஒரு புரட்டு பேர்வழி, ஒரு நாட்டின் ஜனாதிபதி. இவர்கள் எல்லாம் நேர்மையாக நாட்டை ஆள்வார்கள்!, இனப்பிரச்சனையை தீர்ப்பார்கள்!? தமிழ்மக்களை குத்தகைக்கெடுத்த அடாவடித்தனத்துடன் 'தமிழ் மக்களை பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்பும்" என்று தமிழ் வர்த்தகர்கள் முன் பேசுகின்றான். தமிழ் மக்களைக் கொன்று குவித்த இரத்தக்கறை மறைய முன், வெளிப்படும் திமிர். கொல்வது, பாதுகாப்பது எல்லாம், பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் அடங்கி ஓடுங்கி விடுகின்றது.

புலிப் 'பயங்கரவாதத்தில்" இருந்து நாட்டை மீட்ட கதையிது. இப்படி மக்களுக்கு விடுதலை தந்தவர்கள் என்று சொல்லியே, நம்பவைத்து தாலியை அறுக்கின்ற 'ஜனநாயக" அரை லூசுகள்தான், இந்த பாசிட்டுகளின் இன்றைய அடியாட் கும்பல்கள்.

100க்கு உட்பட.........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, June 5, 2009

1986 இல் புலிக்கு எதிராக போராடிய யாழ்பல்கலைகழகம் (உரை) பாகம் : 1

புலியை விமர்சிப்பது பேரினவாதத்துக்கு ஆதரவானதா!?


அரசுக்கு எதிராக தமிழ்மக்கள் தமக்காக போராடத் தடையாக இருந்தது, இருப்பது புலி. இந்தப் புலியை விமர்சிப்பதை, அரசுக்கு ஆதரவானது என்பது எப்படி? இவை புலிக்கண்ணாடிக்கு ஊடாக எவற்றையும் பார்ப்பதுதான். பகுத்தறிவற்ற தமிழினவெறிக்கு ஊடாக, அறிவிழந்து பார்ப்பதுதான். புலிகள் முதல் தமிழ்நாட்டு பிழைப்புவாத தமிழினக் கும்பல்களை விமர்சிக்காமல், தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட நேர்மையாக முன்வைக்க முடியாது.

போராட்டத்தின் பெயரில் கடந்தகாலத்தில் நடந்த அரசியல் சீரழிவுகள் மேலான விமர்சனங்களின்றி, மக்களால் சுயமாக முன்னேற முடியாது. கடந்த 30 வருடமாக வலதுசாரிய புலிகள் பேரினவாதத்தை ஒழிப்பதாகக் கூறி, தவறான தம் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழினத்தையே அழித்தவர்கள். கடந்த அறுபது வருடமாக இந்த வலதுசாரியம் தமிழினத்தின் பெயரில், வெறும் இனவாதம் மூலம் தமிழினத்தை சுடுகாடாக்கி பிழைத்தவர்கள்.

இதன் மேல், இன்று எந்த சுயவிமர்சனமும் கிடையாது. விமர்சனம் கிடையாது. விமர்சித்தால், ஐயோ அரசு ஆதரவு என்று ஓப்பாரி. மக்
............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, June 4, 2009

தமிழில் இப்படி ஒரு இணையம் கிடையாது

6000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.

இந்த வகையில்

1.அறிவுக் களஞ்சியம் 40 உபதலைப்பைக் கொண்டது. அண்ணளவாக 800 கட்டுரைகள் உள்ளது.

2.அரசியல் - சமூகம் பி.இரயாகரன் அண்ணளவாக 803 கட்டுரைகள் உள்ளது.

3.புதிய ஜனநாயகம் அண்ணளவாக 754 கட்டுரைகள் உள்ளது.

4.புதிய கலாச்சாரம் அண்ணளவாக 337 கட்டுரைகள் உள்ளது.

5.அரசியல் - சமூகம் 46 மேற்பட்ட எழுத்தாளர்களுடைய கட்டுரைகள். அண்ணளவாக 1087 கட்டுரைகள் உள்ளது.

6.நூல்கள் அண்ணளவாக 23 நூல்கள் உள்ளது.

7.ஒலி – ஒளி அண்ணளவாக 9 உப தலையங்கத்தின் கீழ் 440 தலைப்புகளில் 350 மணித்தியாளங்கள் கொண்டவை. இவை பல்துறை சார்ந்தவை.

8.சமூகவியலாளர்கள் 11 பேருடைய 480 கட்டுரைகள் உள்ளது.

9.ஆவணக் களஞ்சியம் 12 உப தலைப்பில் 300 ஆவணங்கள் உள்ளது.

10.இணைப்புக்கள் 55 இணைப்புகள் உள்ளது.

11.நிழற்படங்கள் - பல நூறுபடங்கள்

இவ் இணையத்தை சமூகத்தில் அறிமுகம் செய்யவும். சமூகத்துக்கு தேவையானவை என்று கருதும் எல்லாவற்றையும், நாம் இணைக்கத் தயாராக உள்ளோம். அந்த வகையில் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்கப்படுகின்றது. இணைக்க கூடிய கட்டுரைகளை தந்து உதவவும்;. இதில் இணைகப்பட்டவை மூலம் (உரிமம்) தவறுதலாக பதியப்பட்டு இருப்பின், அதை சுட்டிக்காட்டின் திருத்தப்படும்.

மேலும் தொழில் நுட்ப ரீதியாக இதைச் செலுமைப்படுத்த முனைகின்றோம். இதற்கும் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்க்கப்படுகின்றது.

email : tamilcircle@tamilcircle.net

குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?


அதாவது குழந்தை பணம் சம்பாதிப்பதை வழிகாட்டுவதா, பெற்றோரின் கடமை? இப்படித்தான் பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆகவே ஆட்டுக் கிடாயை வளர்க்கும் மனநிலையில் தான், குழந்தையை வளர்க்கின்றனர். மொழி மற்றும் உடல் வன்முறை மூலம் இதைச் செய்யமுனைகின்றனர். இப்படி இணக்கமற்ற குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.

குழந்தையை இணக்கமான வகையில், அறிவியல் பூர்வமாக இணங்கி நிற்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும், என்று பெற்றோர் கற்பனை கூட செய்வதில்லை. ஆனால் அதையே, குழந்தை தம்முடனான சமூக உறவில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். முரணிலையான அணுகுமுறையுடன் கூடிய பெற்றோரின் செயல்பாடுகள். அதாவது சமூகமாக குழந்தை தம்முடன் வாழவேண்டும் என்று விரும்பும் சுயநலம், தாம் அல்லாத மற்றவருடன் சமூகத்துக்கு எதிராக சுயநலத்துடன் வாழத்தூண்டும் நடைமுறையைக் கையாளுகின்றனர்..............

பெற்றோர் குழந்தை வள............. முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 3, 2009

கொடுங்கோல் அழிய கொடிபிடிப்பர் பார்

...............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஓட்டுக்குழுக்களை விழுங்கி வரும் அரச பாசிசம்


இதுதான் இன்று இலங்கையின் நிலை. இதற்கு வெளியில் யாரும் சுதந்திரமாகவில்லை. ஜனநாயகமோ, இதை அனுசரித்துச் செல்லுகின்றது.
பாசிசப் பயங்கரவாதத்துக்கு அஞ்சி, தன்னைத்தான் அதற்கு இசைவாக மாற்றிக்கொள்வது தான், உயிருடன் இருப்பதற்கான அரசியல் உத்தரவாதமாகும். அரச பாசிசத்துக்கு ஏற்ப, சமூகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் நாட்டின் நடைமுறைகளும், சட்டங்களும்.

இதற்கமைய மக்கள்விரோத ஓட்டுக் குழுக்களை, தன்னுடன் இணைந்து தமிழ்மக்களை ஒடுக்கக் கோருகின்றது. புலிகளின் பாசிப் பயங்கரவாதத்தின் போது உருவான தமிழ் ஓட்டுக் குழுக்கள், தம் மக்கள் விரோத அரசியலுடன் பேரினவாத பாசிசத்துக்கே எப்போதும் துணைபுரிந்து வந்தனர். இன்று புலிகள் இல்லையென்ற நிலையில், இந்த ஒட்டுக்குழுக்களை தன்னுட........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் ம..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, June 2, 2009

புலத்துப் புலிகள் பினாமிகளுக்கு லாடம் கட்டி ஓட்டும், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் கூத்து

உழைத்து வாழும் தமிழனை, உழைத்து வாழும் ஐரோப்பியனுக்கு எதிராக தேர்தலில் வாக்களிக்கக் கோரும் புலத்துப் புலியிசம், தமிழ் மக்களுக்கே எதிரானது. ஐரோப்பிய மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் ஏகாதிபத்திய நலனுக்கு சார்பானது. இதுதான் புலத்து வலதுசாரிய புலியிசமாகும்.
தமிழன் ஒருவன் வென்றால், தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பான். இந்த அடி முட்டாள் தனத்தை கொண்டு தமிழனை ஏமாற்றி தின்னும் கூட்டம் இருக்கும் வரை, இது போன்ற மக்கள்விரோதக் கூத்துகளும் தொடர்ந்து அரங்கேறும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குரல் ஒலித்தால், தமிழனுக்கு விடிவு வந்துவிடுமா!? ஐ.நாவில் குரல் கொடுத்த தமிழன் என்று, எத்தனை கதைகளை, எம் அவலமான இன வரலாறு கண்டிருக்கின்றது. இப்படி பலர் பிழைக்க, ஒரு இனம் ஏமாற்றப்பட்டது. மக்கள் தாமே தமக்கானதை தீர்மானிக்க முடியாத வண்ணம், ஏமாற்றுவது தான் இதில் உள்ள அரசியல் உள்ளடக்கம்.

இதற்கமைய புலிப் பினாமிகளை ஐரோப்பிய தேர்தலில் நிறுத்தி, அழகு பார்க்கும் புலத்துப் புலிகள். ஏதோ தமிழ் மக்களுக்காக அந்த தனிமனிதர்கள் உழைப்பார்கள் என்று கூறி, பிரிட்டன் மற்றும் பிரான்சின் தேர்தல் கூத்தில் களமிறங்கி கதைகள் பல சொல்லுகின்றனர்.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட ........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் ............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 1, 2009

சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர்.

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டும்தான், இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கள் எழ முனைகின்றது. அவையும் மக்களுக்காக அல்ல, புலத்து புலி தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைக்கும் அதே துரோக அரசியலுக்காக. தமது கடந்தகால தவறுகளை திரும்பிப் பார்க்காத, அதே மக்கள்விரோத அரசியல். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டு நடத்திய அதே பாசிச அரசியல்.

இன்று பேரினவாதத்தின் திறந்தவெளிச் சிறைகளில் சிக்கியுள்ள மக்களை, இந்த அவலமான நிலைக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளே. புலிகள் இந்த மக்களை வதைத்து, அவர்களை படுகேவலமாக கொல்ல உதவியும், கொன்றும், இறுதியாக இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் புலிகள்தான். இதைப்பற்றி எந்த சுயவிமர்சனமுமற்ற நிலையில், மீளவும் அந்த மக்களை காட்.........
.முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, May 31, 2009

புலிகளின் தோல்விக்கான காரணமும், அரசியல் எதார்த்தமும்

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

அரசு தாம் வென்றதுக்கு இந்தியா சீனா, பாக்கிஸ்தான்.. உதவிகள் தான் காரணம் எண்கின்றது. தமது உறுதியான தலைமை தான் காரணம் என்கின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் பேரினவாத மேலாதிக்கத்தை வாழ்த்தி, கொலைகாரர்(கலாநிதி) பட்டத்தைக் கூட வழங்க முன்வந்;துள்ளது. இப்படி வெற்றி தோல்வி பற்றிய காரணங்கள், நியாயப்படுத்தல்கள், அங்கீகாரங்கள், விளக்கங்கள்.

இந்தத் தோல்வி பற்றி, தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் சொல்லும் விதம், எந்த சுயவிமர்சனமுமற்றது. இதன் மூலம் சமூகத்தை மந்தைகளாகவே தொடர்ந்தும் வைத்திருக்க முனைகின்றனர்.

இதற்காக இவர்க...........
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்று பாசிட் மகிந்தா, அன்று மனிதவுரிமை மகிந்தா - வீடியோ ஆவணம்

என்ன செய்வது? இது இன்று பலரும் எழுப்பும் கேள்வி கூட

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.