தமிழ் அரங்கம்

Saturday, April 1, 2006

மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையும்..

மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையும், அதன் மீதான எதிர்வினைகள் மீதும்

பி.இரயாகரன்
01.04.2006


னித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு (Human rights watch) கனடா மற்றும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மீதான புலிகளின் நிதி அறிவீடு பற்றிய ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஒரு 'இறுதி யுத்தத்திற்கு" நிதியைக் கோரி புலிகள் நடத்தும் நிதி வேட்டையை குறிப்பாக்கி, அது எப்படி மனிதவிரோத தன்மையுடன் சூறையாடப்படுகின்றது என்பதை அறிக்கை அம்பலப்படுத்த முனைகின்றது. இயல்பாகவே இந்த அறிக்கை புலியெதிர்ப்பு அணியின் ஆதரவையும், புலிகளின் எதிர்ப்பையும் அடிப்படையாக கொண்ட அவதூறும் போற்றுதலுமாக, இதன் மீது ஒரு அரசியல் நாடகமே நிகழ்த்தப்படுகின்றது.

இந்த அறிக்கையின் உள்ளடக்கம் புலிகளின் அன்றாட அரசியல் வன்முறை நடத்தையை அடிப்படையாக கொண்டு, ஒரு தலைப்பட்சமாக புலியெதிர்ப்பு அணியின் கருத்துக்களால் விடையம் திரிக்கப்பட்டுள்ளது. புலியெதிர்ப்பு கருத்தையும்;, புலியின் வன்முறையையும் ஒருங்கிணைத்து வெளிவந்த இந்த அறிக்கை, தமிழ் மக்களின் இயல்பான கருத்தை பிரதிபலிக்கவில்லை. மனித உரிமைக்கான கண்காணிப்புக் குழுவின் அறிக்கை மக்களின் உணர்வுக்கு எதிரானதாக இருப்பதுடன், மக்களின் கண்ணோட்டமே சிலரின் நலன் சார்ந்து குறுகிய எல்லைக்குள் திரிக்கப்படுகின்றது.

மனித உரிமையும் சரி, அதை கண்காணிக்கும் உள்ளடக்கத்தையும் சரி, இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. இந்த அறிக்கை ஆரம்பம் முதல் இறுதிவரை புலியெதிர்ப்பு அணியின் கருத்துகளால் புணரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு தமிழ்செல்வன் உட்பட நிதர்சனம் டொட் கொம் வரை, அவதூறுடன் கூடிய கடுமையான எதிhப்பை வெளியிட்டுள்ளனர். தாங்கள் மக்களிடம் இது போன்ற நடவடிக்கை எதிலும் ஈடுபடுவதில்லை என்று கூறிவிடவும் முனைகின்றனர். ஏன் புலிகள் நிதி சேகரிப்பில் கூட ஈடுபடுவதில்லை என்றும் கூற முனைகின்றனர்.

இதை யாருக்கு, ஏன் சொல்லுகின்றார் என்பதில் கூட அவர்கள் அக்கறையற்றுள்ளனர். தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரிந்த புலியின் அடாத்தான நிதி சேகரிக்கும் முறையை, அவர்களின் சொந்த மாபியா அணுகுமுறையை, ஏன் எதற்காக யாருக்கு மறைக்க முனைகின்றனர். புலிகள் எதை எப்படி அணுகினாலும், அங்கு அதில் விரும்பிய இயல்பான எந்தத் தன்மையும் கிடையாது. அச்சுறுத்தலுக்குள்ளான ஒரு நிலையில் வைத்துத் தான், மக்களை பயமுறுத்தி காரியம் சாதிக்கின்றனர். பொதுவான அணுகுமுறையே மாபியாத்தனமான உள்ளடகத்தில், தொடரும் படுகொலைகளை முன்னிலைப்படுத்தி, அது உனக்கும் பொருந்தும் என்று காட்டியே சகலவற்றையும் ஒரு மிரட்டும் தொனியில் முன்னிறுத்தி மக்களை அணுகுகின்றனர்.

மக்கள் நிதியை வழங்கினாலும் சரி, கருத்துரைத்தாலும் சரி இது தான் நிலைமை. மக்கள் 1983 க்கு முன் ஏன் 1985க்கு முன் கருத்துரைத்தது போல், எதன் மீதும் கருத்துக் கூறுவதில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்களாகவே நிதியை வழங்கியது போல் (இதையும் நயவஞ்சகமாக புலிகள் சூறையாடிவிட்டனர் என்பது வேறு.), புலிகளின் பணசேகரிப்பு இருப்பதில்லை. புலிகள் தாம் விரும்பும் ஒரு தொகையைக் கறப்பதே, அவர்களின் வாடிக்கையான மாபியாத்தனமாகும். புலிகளின் நிதி திரட்டல் பற்றி ஆதாரங்களை சமர்பிக்கக் கூடிய வகையில், புலிகளின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் கோரிக்கை உள்ளடங்கிய ஆதாரங்கள் இருந்தும், அதை மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு முன்வைக்கவில்லை. ஆனாலும் அனைத்தும் தமிழ்மக்களும் நன்கு தெரிந்ததும், வாழ்வுடன் தொடர்பு கொண்டு அன்றாடம் போராட வேண்டிய அளவில் பரிச்சயமான ஒன்றாகவே புலி மாபியாத்தனம் உள்ளது.

மேற்கில் பணம் கொடுப்பவன் எப்படி வாழ்கின்றான் என்பதையிட்டு, வாங்குபவனுக்கு எந்த சமூக அக்கறையும் கிடையாது. பணம் சேகரிக்கும் பெரும்பாலானோர் தாம் பணம் கொடுப்பதில்லை. இதில் சிலர் உழைப்பில் ஈடுபடாது, ஆடம்பரமாக காரும் வீடும் கொண்டு வாழ்பவர்கள். அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு எப்படி எங்கிருந்து பணம் வருகின்றது என்பதை கேள்வி கேட்பதையே துரோகமாக காட்டி, தமது சொந்த வாழ்க்கை முறையையே நியாயம் கற்பிப்பவர்கள். இதைவிட புலிக்காக பணம் திரட்டுபவர்களில் பெரும்பாலானானோர் மக்களுக்கு அறவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள். அதை எப்படி வாங்குவது என்று நன்கு தெரிந்து கொண்ட, மனிதத்துவத்தை நன்கு உதைக்கத் தெரிந்த சமூகவிரோதிகளாகவே சமூகத்தில் பாத்திரம் ஏற்று உள்ளவர்கள். சமூகத்தை சிதைப்தே இவர்களின் வாழ்க்கை முறையாகும். சமூகத்தின் உழைப்பைப் புடுங்குவதில், அவர்கள் ஈவிரக்கம் எதுவும் பார்ப்பதில்லை. புடுங்கிவிட்டால் சரி. இதுவே இவர்களின் இலட்சியம். பணங்கொடுத்தவனின் உளவியல், அவனின் வாழ்க்கை நிலைமை என எதிலும் அக்கறை அற்ற, அராஜகவாத மாபியாத்தனத்தால் புலம்பெயர் சமூகம் சூறையாடப்படுகின்றது. இது உண்மை. எல்லாத் தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்த, நன்கு அறிமுகமான ஒன்று. இதை யாரும் மறுக்க முடியாது. இது மக்களுக்கு தெரிந்த ஒன்றேயாகும். ஏன் பணம் சேகரிப்பவனே இதை மறுக்க முடியாது. எந்த புலியும் கூட இந்த உண்மையை இல்லை என்று நிறுவவும் முடியாது. எல்லாத் தமிழ் மக்களுக்கும் தெரிந்த ஒன்றை, சொந்த வீட்டு கதவுகளின் பின்னால் அனுபவித்து தெரிந்து கதைக்கப்படும் இந்த மாபியாத்தனத்தை, எப்படி பொய்யாலும் புரட்டாலும் மூழ்கடித்துவிட முடியும்.

மறுபக்கம் இதற்கு எதிராக மனித உரிமைக்காண கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ள சமூக அடிப்படையே தவறானது. இது தமது சொந்த நோக்கத்துக்கு ஏற்ப திரிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் புலிக்கு எதிராக, ஏன் இயல்பாக விரும்பிப் பணம் கொடுக்க மறுக்கின்றனர். இந்த காரணத்தைத் தான், மனித உரிமைக்கான கண்காணிப்பு குழு தனது குறுகிய சர்வதேச நோக்கத்துக்கு இசைவாக திரிக்கின்றனர். இவர்கள் எப்படித் தான் மக்களுக்கு மனித உரிமை ஒன்றை நேர்மையாக எடுத்துக் கூறமுடியும், எடுத்துக் காட்டமுடியும்.

தமிழ் மக்களுக்கும் புலிக்கும் என்னதான் பிரச்சனை. புலியெதிர்ப்பு அணியின் பூதக்கண்ணாடியைக் கொண்டு இதை தேடவே முடியாது. ஆனால் மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு அந்த பூதக்கண்ணாடியைக் கொண்டே அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மக்கள், மக்களின் மனநிலையை திரித்துவிடுவதையே, இந்த அறிக்கை மனித உரிமை என்கின்றது. ஒரு அப்பட்டமான மக்கள் விரோத உள்ளடக்கமாகும்.

இது புலி தமிழ் மக்கள் தாம் விரும்பி தமக்கு பணம் தருவதாக கூறுவது போல், இந்த அறிக்கை பணம் கொடுக்க விரும்பாத மக்களின் கருத்தை குறுகிய உள் நோக்கில் திரித்து விடுகின்றனர். மக்களின் பெயரில் மனித உரிமை என்பதும், தேசியம் என்பது இங்கு அரங்கேறுகின்றது.

இப்படித் தான் உலகில் மனித உரிமைகள் அங்குமிங்குமாக பந்தாடப்படுகின்றது. தமிழ் மக்கள் புலிக்கு நிதியை வழங்க மறுப்பது ஏன்? இவர்கள் கண்டுபிடித்த காரணம் சிறுவர்களை படையில் சேர்ப்பதும், கொலைகள் செய்வதும் தான் என்று கூறுகின்றனர். விதிவிலக்காக மட்டும் பக்கம் 37 இல் "ஏனையவர்கள் கொள்கை அடிப்படையில் அவர்களுக்கு நிதி வழங்க மறுக்கின்றனர்" என்கின்றனர். அப்படி அந்த கொள்கைதான் என்ன என்பதில் மட்டும் மௌனம் சாதிக்கின்றனர். கொள்கை காரணமானது என்ற மனித உரிமைக்கான இந்த அமைப்பின் கண்டுபிடிப்பும் கூட ஆச்சரியமானது தான்.

சிறுவர்களை படைக்குச் சேர்த்தல், கொலைகளை செய்தல் போன்றவற்றையே மனிதவுரிமை மீறலாக காட்டி அறிக்கை செய்வது என்பது மிகவும் தேர்ந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்த சிறுவர்படையை புலிகள் உருவாக்க முன்பே, மனிதவுரிமை மீறல் இருக்கவில்லையா! இதேபோல் கொலைகளை செய்யமுன்னம் மனிதவுரிமை மீறல் இருக்கவில்லையா! இந்த இந்த இரண்டு எடுகோளுமே தவறானது. மனிதவுரிமை மீறல் இதைக் கடந்து காணப்படுகின்றது. அது சமூக அமைப்பிலேயே காணப்படுகின்றது. புலியின் நிதி சேகரிப்பின் போது, மக்கள் புலிக்கு பணம் கொடுக்க மறுப்பது என்பது, இந்த இரண்டு எடுகோளுக்கு வெளியில் இருந்து எழுகின்றது. இந்த இரண்டையும் புலிகள் செய்கின்றார்கள் என்றால் ஏன்? அதுவல்லவா மனித உரிமை மீறலாகும். இதைச் செய்வது அவர்களின் விருப்ப விளையாட்டல்ல. அவர்கள் ஏதோவொன்றை செய்கின்றார்கள் என்பதும், அதை மக்கள் இயல்பாக விரும்பாமையால் தான் இவைகள் புலிக்கு அவசியமாகின்றது. புலிகளுடன் இணங்கி போக முடியாத மக்களின் சுயவிருப்பற்ற தன்மைதான், புலிகளின் இந்த மக்கள் விரோத போக்குக்கு அடிப்படைக் காரணமாகும்.

மக்கள் விரும்புவது என்ன? புலிகள் விரும்புவது என்ன? இந்த முணை;பாடுதான் மனிதவுரிமை மீறலுக்கான சமூக அடிப்படையாகும்;. மக்கள் விரும்பும் சமூக பொருளாதார அரசியல் என்ன? புலிகள் விரும்பும் சமுக பொருளாதார அரசியல் என்ன? இதில் உள்ள முரண்பாடு தான், மக்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறலை தூண்டுகின்றது. இது மனிதவுரிமைக்கான அமைப்புக்கு தெரியவில்லை என்பது இங்கு ஆச்சரியமானது அல்ல, மாறாக இதன் பின்னால் அரசியல் நோக்கம் உள்ளது. மக்களின் சமூக விருப்புக்கு எதிரானவற்றை மனிதவுரிமை மீறலாக, இந்த மனிதவுரிமைக்கான கண்காணிப்புக் குழு அங்கீகரிப்பதில்லை. இதனால் தான் இந்த உள்ளடகத்தை திரித்துக் காட்டுகின்றனர்.

ஒரு சமூகம் தனக்கு எதிரான சமூக விரோதிகளுக்கு எதிராக போராடும் போது, அங்கு சமூகமே ஆயுதம் ஏந்துகின்றது. அதில் குழந்தைகள் உட்பட மொத்த சமூகமே ஆயுதபாணியாகின்றது. இங்கு சமூகத்துக்கு எதிரான சமூகவிரோத தனிமனித நலன்களை உயர்த்தும் சமூக விரோதிகள் ஒழிக்கப்படுவர். இங்கு யாரும் இதை மனித உரிமை மீறலாக கூறமுடியாது. மனித வாழ்வு சமூக விரோத தனிமனித நலனுக்கு எதிரான போராட்டமின்றி வாழ்ந்ததில்லை. சமூகத்துக்கு எதிராக, சமூக விரோத தனிமனிதர்கள் சமூகத்தை ஒடுக்கி வாழ்வதை, மனித உரிமையாக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த சமூக பொருளாதார அரசியல் உள்ளடக்கத்தை, மனித உரிமைக்கான கண்காணிப்புக் குழு ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் விரோத சமூக அமைப்பு சார்ந்த, தனிமனித நலனை உள்ளடக்கிய அரசியல் மூலம் மக்களின் சமூகவுரிமையை, மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு மறுதலிக்கின்றது.

புலிகள் போன்ற தனிமனித நலன் சார்ந்த சமூக விரோத அரசியல் கட்சிகள் குழுக்கள், மக்களின் சமூக பொருளாதார வாழ்வை அழிப்பதை மனிதவுரிமை மீறலாக மனித உரிமைக்கான கண்காணிப்பு குழு அங்கீகரிப்பதில்லை. மாறாக மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு எதைக் கண்டிக்கின்றது என்றால், இதை அமுல்படுத்த கையாளும் சில வழிமுறைகளை மட்டுமே தான். இதை அடிப்படையாக கொண்டு, அதை புலிகளின் மனிதவுரிமை மீறலாக காட்டுவதே இந்த அறிக்கையாகும். இது திட்டமிட்ட வகையில் உலகமயமாதலுக்கு ஏற்புடைய அரசியலாகும். இதனால் தான் புலியெதிர்ப்பு அணியின் மனிதவுரிமை மீறல் மக்கள் விரோதக் கோட்பாடுகளை பாதுகாத்தபடி, மேல் மட்டத்தில் உள்ள புலியின் மனிதவுரிமை மீறல்களை பயன்படுத்தி மற்றொரு மனித உரிமைக்கு விரோதமான அறிக்கையை தொகுக்கின்றனர். உண்மையில் இதைச் செய்வதன் மூலம், ஏகாதிபத்திய உலக நோக்கத்தை திருப்தி செய்யக் கூடிய ஒரு கும்பலின் தேவைக்கு ஏற்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

புலிக்கு பணம் கொடுக்க மறுப்பவனும், கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு கொடுப்பவனும் கூட, புலிக்கு எதிராக தான் கொண்டுள்ள நிலைப்பாடு மனிதவுரிமைக்கான கண்காணிப்புக் குழு கூறும் காரணங்களினால் அல்ல. இந்த உண்மையை மனிதவுரிமைக்கான கண்காணிப்புக் குழுவின் அறிக்கை நிராகரிப்பதன் மூலம் அல்லது திரிப்பதன் மூலம், இந்த அறிக்கை அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய நோக்கத்துக்கு சார்பானதாகவே அமைந்து விடுகின்றது.

பணம் கொடுப்பவர்களில் 90 சதவீதமானவர்கள் பணம் கொடுக்கவிரும்பியதில்லை. நிர்ப்பந்தம் காரணமாக, வேண்டா வெறுப்பாகவே கொடுக்கின்றனர் என்றால், ஏன் கொடுக்கவிரும்பவில்லை. இதை போல் விரும்பிக் கொடுக்கும் பத்து சதவீதம் பேர் கூட, தாம் விரும்பும் ஒரு தொகையை கொடுப்பதில்லை. மாறாக விரும்பாத ஒரு தொகையை விரும்பமின்றியே நிர்ப்பந்தமாகவே கொடுக்கின்றனர். விரும்பிக் கொடுக்க முன்பும், பின்பும் என இரு தளத்திலும், விரும்பிக் கொடுப்பவர்கள் முரண்பாடு இன்றி பணத்தைக் கொடுக்கவில்லை.

இதுவே அடிப்படையான உள்ளடக்கம். புலிகள் வேறு, மக்கள் வேறு என்ற இரு வௌ;வேறு துருவங்களில் சமூகம் இருப்பதால் இது இயல்பாக நிகழ்கின்றது. தமிழ்மக்களின் நலன்களை புலிகள் பிரதிபலிப்பதில்லை. இதிலும் குறிப்பாக புலம்பெயர் சமூகத்தின் அரசியல் பொருளாதார நலன்களில், புலிகள் அன்னியமாகவே நிற்கின்றனர். இதுவே புலம்பெயர் நாட்டின் நிலையென்றால், நாட்டிலும் மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன் புலிகள் அன்னியமாகி ஒரு மாபியாக் கும்பலாகவே உள்ளனர். பணம் திரட்டுதலையே அரசியல் இலக்காகக் கொண்டு, மக்களை உருட்டியும் மிரட்டியும், ஏமாற்றியும், கவிட்டும் பணம் வாங்குதையே தேசியம் என்கின்றனர்.

புலிகள் மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன் இணங்கி நிற்காத போக்குத்தான், மக்கள் இயல்பாக இணங்கி பணம் கொடுக்க மறுக்கும் அடிப்படையான உள்ளடக்கமாகும்;. இதை மக்கள் புரிந்து கொண்டு செயலாற்றுவதில்லை. ஆனால் பணம் கொடுக்க விரும்பாத எதிர்வினையின் பின், இதுவே காரணமாகவுள்ளது. இதனால் தான் பணம் கொடுக்க மறுக்கும் காரணம், இயல்பாக சூக்குமமாக எதிர்வினையாற்றுகின்றது. இந்த சூக்குமமான தமது சொந்த எதிர்வினை எதனால் ஏற்படுகின்றது என்பது, மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதில் தான் மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு கவனமாகவே கவனத்தில் எடுத்து தனது அறிக்கையை திரித்து வெளியிடுகின்றது. மக்களின் நிலைப்பாட்டின் பின் ஒரு ஸ்தாபனப்படுத்தப்படாத ஒரு அரசியல் இருப்பதையும், அதை மக்கள் தெரிந்து கொள்வதன் மூலம் ஸ்தாபனப்படுவதை தடுப்பது அவசியமாக இருப்பதால் இதை மூடிமறைகின்றனர். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக தாமே போராடுவதைத் தடுக்கவே, மனிதவுரிமைக்காக ஏகாதிபத்திய தயவை நாடுவதும் மனிதவுரிமைக்காக கண்காணிப்பு குழு அறிக்கை விடுவது நிகழ்கின்றது.

இந்த உண்மையை சூக்குமமாக்கி நிற்பதால், பணம் கொடுக்க மறுப்பவன் சமூகத்தில் ஆதிக்கம் வகிக்கும் எதிர்நிலைப் போக்குகளில் இருந்து சமூக அடிப்படையற்ற எழுந்தமானமாகவே காரணங்களை கண்டுபிடிக்கின்றான். அதைக் கொண்டு மறுக்கின்றான். ஆனால் பெரும்பான்மை மக்கள் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமையால், பணத்தைக் கொடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.

மனிதவுரிமை என்பதை மேலேழுந்தவாரியான காரணங்களை வைத்து விளக்குவது, மக்களின் அடிப்படையான மனிதவுரிமை மீறலையே மறுக்கின்றது. அதை அங்கீகரித்துச் செல்வதையே கோருகின்றது. இதையே மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு செய்ய முனைகின்றது.

Friday, March 31, 2006

ஸ்டாலின் மீதான அவதூறு

ஸ்டாலின் மீதான அவதூறு:
ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை


ன்னுடைய ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஏகாதிபத்தியங்கள் எத்தகைய அபாண்டமான பொய்களையும், அவதூறுகளையும் "ஆதாரபூர்வமாக'ப் பரப்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய வரலாற்றறிவு தேவையில்லை. கண்முன்னே ஈராக்கில் நடந்துவரும் ஆக்கிரமிப்பின் கதையை பாமரனும் புரிந்து கொண்டிருக்கிறான். சோசலிச முகாம் என ஒன்று இல்லாத இன்றைய சூழலில் கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகத் தானே உருவாக்கிய ஒரு சர்வாதிகாரியை (சதாம் உசேன்) வீழ்த்தவும், எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும் இத்தனைப் பச்சையான பித்தலாட்டங்களில் ஈடுபடுகின்றன அமெரிக்காவும், பிரிட்டனும். எனில், ஏகாதிபத்தியத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய சோசலிசத்தை வீழ்த்த, இவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கக்கூடும் என்பதை அறிவு நாணயமுள்ள எவரும் ஊகிக்க முடியும். ஊகம் வேண்டாம். ஆதாரங்களைத் தருகிறோம். ""என்ன இருந்தாலும் ஸ்டாலின் செய்த கொலைகள்....'' என்று ஐ விட்னஸ் போலப் பேசும் அறிவாளிகள் தாங்கள் சோரம்போனது குறித்து வெட்கப்படுவார்களா?

""புதிய கலாச்சாரம் பத்திரிக்கை மீண்டும் ஸ்டாலினிசத்துக்குத் திரும்புவதைப் போலத் தெரிகிறது. ஸ்டாலின் துதி பாடுவது அதிக மாகி வருகிறது'' என்று சில நண்பர்கள் சமீபத்தில் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் ""மீண்டும்'' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பது நாம் ஏற்கக் கூடியதல்ல. தோழர் ஸ்டாலின் உயர்த்திப் பிடித்த சித்தாந்த அரசியல் அடிப்படையில் இருந்து புதிய கலாச்சாரம் விலகிப் போயிருந்தால் தானே மீண்டும் அதற்குத் திரும்புவது என்ற நிலை வரும். புதிய கலாச்சாரம் எப்போதும் அங்கேதான் இருக்கிறது.

ஸ்டாலினது காலத்தில் தனிமனிதத் துதிபாடிகளாகவும், தனிமனித வழிபாடு செய்தவர்களும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கேடாகப் பயன்படுத்தி சதிகள் செய்து, இரகசியக் கொலைகள் புரிந்தவர்களும் தான் ஸ்டாலினுக்குப் பிறகு அவருக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி குணக் கொலைகள் புரிந்தனர். ஸ்டாலினைப் போல மீசை, புருவம், தலைமுடி, நடையும் உடையும் அணிந்து கொள்வதில் இருந்து ஸ்டாலின் என்ற பெயரைத் தம்பிள்ளைகளுக்கு வைத்துக் கொள்வது வரை பெருமைப்பட்டவர்களில்தாம் பலர் இன்று ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறு அலையால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அத்தகைய அவதூறு அலைக்கு எதிராக எதிர்நீச்சல் போடுவதுதான் புதிய கலாச்சாரத்தின் வரலாறு அன்றும், இன்றும்.

நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.

ஆனால் இந்த நண்பர்கள், ""ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.

ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.

""சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.

1933 ஜனவரி இறுதியில், கொல்லைப்புற வழியே ஜெர்மனியின் பிரதமர் பதவியைக் கைப்பற்றினான் பாசிச இன கொலைவெறியனும், யுத்த வெறியனுமான நாஜி இட்லர். அடுத்த ஐந்தாவது வாரம் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்தான். வாக்குப் பதிவுக்கு முதல்வாரம் ஜெர்மானிய நாடாளுமன்றம் ரைஸ்டாக் கட்டிடத்துக்கு சதிகார நாஜிக்கள் தீ வைத்துக் கொளுத்திவிட்டு, கம்யூனிஸ்டுகள் மீது பழிபோட்டு பச்சைப் புளுகுணிப் பிரச்சாரம் செய்தனர். பின்னாளில் கம்யூனிஸ்டுகள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக நடந்த தேர்தல்களில் நாஜிக்கள் வெற்றிபெற்று அதிகாரத்தின் மீது தமது இரும்புப் பிடியை நிறுவினர். பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டது. உடனே கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் நாஜிக்களால் வேட்டையாடப் பட்டனர். முதல் சித்திரவதை முகாம்கள் இடதுசாரி ஆண்களாலும் பெண்களாலும் நிரப்பப்பட்டன.

வலதுசாரிப் பிற்போக்காளர்கள் அனைவரும் இட்லரின் பின்னே அணி சேர்ந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவன் பலம் பெருகியது. நான்காண்டுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் சட்டம் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து யூதர்களை வேட்டையாடி வதை முகாம்களில் அடைப்பது துவங்கியது. இட்லரின் நாஜிசக் கோரமுகம் அப்பட்டமாகத் தலைவிரித்தாடியது. ஜெர்மனி ஆயுதமயமாவ தையும், இராணுவமயமாவதையும் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தங்களை இட்லர் கிழித்துப் போட்டான். ஜெர்மனி அதி வேகமாக ஆயுதமயமாகி, இராணுவ வல்லரசானது. இந்தச் சமயத்தில்தான் ""சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் சர்வாதிகாரத்தின் கீழ் படுகொலைகள்'' என்கிற கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இட்லரின் அமைச்சரவையில் பிரச்சார மந்திரியாக இருந்த பச்சைப் புளுகன் கோயபல்ஸ் ஜெர்மானிய மக்களிடையே நாஜிக் கனவை விதைக்கும் பொறுப்பேற்றிருந்தான். இன ரீதியில் தூய மக்கள் வாழும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மாபெரும் ஜெர்மனியை நிர்மாணிப்பதுதான் அந்த நாஜிக் கனவு. அன்றைய ஜெர்மனியைவிட மிகமிகப் பெரும் அளவிலான பூமிப்பரப்பு ஜெர்மனிக்குக் கிழக்கே இருந்தது; அது இன்னமும் வென்றெடுத்து, கைப்பற்றி ஜெர்மானிய தேசத்துடன் இணைக்கப்படவேண்டும். ஜெர்மானியர்கள் வாழ்வதற் கான புவிப்பரப்பில் மிகவும் இன்றியமையாத ஓர் பகுதி உக்ரைன் என்பதை 1925இல் எழுதிய தனது ""மெயின் கேம்ப்'' என்ற நூலில் ஏற்கனவே இட்லர் குறிப்பிட்டிருந்தான். தகுந்த முறையில் பயன்படுத் துவதற்காக உக்ரைனும் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளும் ஜெர்மானிய தேசத்துக்குச் சொந்தமாக வேண்டியிருந்தது. ஜெர்மானிய (ஆரிய) இனத்துக்கான வாழுமிடத்தை உருவாக்குவதற்காக இந்தப் பிராந்தியத்தை நாஜிக்களின் போர்வாள் வென்றெடுக்கும் என்பது தான் நாஜிப் பிரச்சாரம்.

அப்பகுதிகள் ஜெர்மானியத் தொழில் நுட்பம், ஜெர்மானியத் தொழில் திறனைக் கொண்டு ஜெர்மனிக்கான தானிய விளைநிலமாக மாற்றப்படும். நாஜிப் பிரச்சாரத்தின்படி, உக்ரைனில் வாழும் மக்கள் தாழ்ந்த மிலேச்சர்கள்; முதலில் அவர்களை சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்து விடுதலை செய்து ஜெர்மனியர்களின் வீடுகளில், ஆலைகளில், வயல்களில், ஜெர்மானியப் பொருளாதாரத்துக்குத் தேவையான வேறெங்கும் வேலை செய்யும் கூலி அடிமைகளாக மாற்ற வேண்டும்.

உக்ரைனையும் சோவியத் ஒன்றியத்தின் இதரப் பகுதிகளையும் வென்றெடுக்க வேண்டுமானால் அதற்கெதிராகப் போர் தொடுக்க வேண்டும்; அதற்கு முன்கூட்டிய தயாரிப்பு செய்தாக வேண்டும். இந்த நோக்கத்தோடு கோயபல்ஸ் தலைமையிலான நாஜி பிரச்சார அமைச்சரவை ஒரு இயக்கத்தைத் துவக்கியது. ""சோசலிசக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி விவசாயிகளை நிர்ப்பந்திக்கும் பொருட்டு ஸ்டாலின் திட்டமிட்டு பேரழிவுப் பஞ்சத்தை உருவாக்கினார்; அந்தப் பயங்கரமான காலகட்டத்தில் உக்ரைனில் பெருந்திரள் படுகொலைகளை போல்ஷ்விக்குகள் நடத்தினார்கள்''என்ற அவதூறை மையமாகக் கொண்டிருந்தது, அந்த நாஜிப் பிரச்சார இயக்கம்.

உக்ரைனை ஜெர்மானிய இராணுவம் "விடுதலை' செய்ய வேண்டும் என்பதாக உலக மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதுதான் நாஜிப் பிரச்சாரத்தின் நோக்கம். பெருமுயற்சி எடுத்தும், ஜெர்மானியப் பிரச்சார நூல்களில் சில ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் ""உக்ரைனில் பெருந்திரள் படுகொலை'' என்கிற நாஜி அவதூறு உலக அரங்கில் பெரிய வெற்றிபெற முடியவில்லை. சோவியத் ஒன்றியம் குறித்த தங்கள் அவதூறு வதந்தியைப் பரப்புவதற்கு இட்லருக்கும் கோயபல்சுக்கும் உதவி தேவையாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் அமெரிக்காவில் அத்தகைய உதவியைக் கண்டார்கள்.

ரடால்ஃப் ஹெர்ஸ்ட் இட்லரின் நண்பர்

வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட் — அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒரு பத்திரிக்கை முதலாளி. அந்நாட்டு மஞ்சள் பத்திரிக்கை உலகின் தந்தையாக விளங்கியவன். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான உளவியல் பிரச்சாரப் போரில் நாஜிக்களுக்கு உதவுவதற்கு இந்தக் கோடீசுவரன்தான் முன்வந்தான். அமெரிக்க செனட் சபை உறுப்பினரும், சுரங்க முதலாளியும், பத்திரிக்கை முதலாளியும் பெரும் பணமுதலையுமான ஜார்ஜ் ஹெர்ஸ்டின் மகன் வில்லியம் ஹெர்ஸ்ட். ""சான்பிரான்சிஸ்கோ டெய்லி எக்சாமினர்'' என்கிற அக்குடும்ப நாளேட்டின் ஆசிரியராக வில்லியம் ஹெர்ஸ்ட் 1885ஆம் ஆண்டு பொறுப்பேற்றான்.

ஹெர்ஸ்ட் பத்திரிக்கைப் பேரரசின் தொடக்கமாகவும் இது அமைந்தது. வட அமெரிக்க மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வலுவான செல்வாக்கு செலுத்துவதாக இந்தப் பத்திரிக்கை இருந்தது. அவன் தந்தை இறந்ததும், வில்லியம் ஹெர்ஸ்ட் தனது சுரங்கத் தொழில் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டு, அந்த மூலதனத்தை இதழியல் துறையில் முதலீடு செய்யத் துவங்கினான். பாரம்பரியமிக்க ""நியூயார்க் காலை இதழ்'' என்னும் நாளேட்டை அவன் முதலில் வாங்கினான். அதை ஒரு பரபரப்பூட்டும் கிசுகிசு குப்பைப் பத்திரிக்கையாக மாற்றினான். அவன் செய்திக் கதைகளை என்ன விலை கொடுத்தும் வாங்கினான். குரூரமான அல்லது கிரிமினல் குற்றச் செய்திக் கதைகள் கிடைக்காத போது செய்திகளை உருவாக்கித் தரும்படி தன் நிருபர்களையும் புகைப்படக்காரர்களையும் நிர்பந்தத்துக் குள்ளாக்கினான். பொய்களும் புனைச்சுருட்டுகளுமான குரூர, அக்கிரம, அட்டூழியங்களை உண்மைகளைப் போலத் தருவதுதான் உண்மையில் மஞ்சள் பத்திரிக்கைகளின் தன்மைகள்.

ஹெர்ஸ்டின் இத்தகைய பொய்கள் தாம் அவனைக் கோடீசுவர னாக்கின, பத்திரிக்கை உலகில் அவனை மிக முக்கியப்புள்ளியாக்கின. 1935லேயே உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவனாக விளங்கினான். அவனுக்கு 20 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்கள் இருந்தன. ""நியூயார்க் காலை இதழை'' வாங்கிய பிறகு பல நாளேடு களையும் வார இதழ்களையும் வாங்கினான், துவங்கினான். 24 வாரச் செய்தி ஏடுகள், 12 வானொலி நிலையங்கள், 2 உலகச் செய்தி சேவை கள், சினிமாவுக்கான செய்திகளைத் தரும் ஒரு தொழில் நிறுவனம், காஸ்மாபாலிடன் சினிமாக் கம்பெனி இன்னும் பலவற்றை நிறுவினான். 1948லேயே பால்டிமோ நகரில் அமெரிக்காவின் முதல் தொலைக்காட்சி நிலையத்தை நிறுவினான். ஹெர்ஸ்டின் செய்தி ஏடுகள் நாளொன்றுக்கு 1.3 கோடிப் பிரதிகள் விற்றன. சுமார் 4 கோடி வாசகர்கள் படித்தனர். அமெரிக்க மக்கட் தொகையில் சுமார் மூன்றிலொரு பகுதியினர் நாள்தோறும் ஹெர்ஸ்டின் செய்தியேடு களைப் படித்தனர். ஹெர்ஸ்டின் செய்திச் சேவைகள், திரைப்படங்கள் மற்றும் சங்கிலித் தொடர் செய்தியேடுகள் பெரும் எண்ணிக்கையில் மொழி பெயர்த்துப் பிரசுரிக்கப்பட்டதன் மூலம் அவனுடைய செய்திகள் உலக முழுவதும் உள்ள மேலும் பலகோடி மக்களை அடைந்தன.

பலப்பல ஆண்டுகளாக ஹெர்ஸ்டின் செய்திப் பேரரசு எவ்வாறு அமெரிக்க மற்றும் உலக அரசியலில் செல்வாக்குச் செலுத்தின என்பதை இந்தப் புள்ளி விவரங்களே தெளிவுபடுத்துகின்றன. அது பிரச்சாரம் செய்தவைகளில் சோவியத் ஒன்றியத்தின் அணி வரிசை யில் இரண்டாம் உலகப் போரில் அöமரிக்கõ குதிப்பதை எதிர்த்ததும், 1950களில் நடந்த கம்யூனிச எதிர்ப்பு புதிய மெக்கார்த்திய வேட்டைக்கு ஆதரவு கொடுத்ததும் அடங்கும். படுபிற்போக்குவாதம், தேசியவாதம் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு வெறி ஆகியன வில்லியம் ஹெர்ஸ்ட்டின் கண்ணோட்டம். அவனது அரசியல் கடைக்கோடித் தனமான வலதுசாரி அரசியல். 1934இல் அவன் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டபோது தனது விருந்தாளியாகவும் நண்பனாகவும் நாஜி இட்லர் அவனை வரவேற்றான். இந்தப் பயணத்துக்குப் பிறகு ஹெர்ஸ்டின் செய்தி ஏடுகள் மேலும் தீவிரமான பிற்போக்கானவையாக மாறின. சோசலிசம், சோவியத் ஒன்றியம், குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரக் கட்டுரைகளை ஹெர்ஸ்டின் செய்தியேடுகள் தினந்தோறும் தாங்கி வந்தன. வெளிப்படையான நாஜி பிரச்சார நோக்கத்துக்காக தன்னுடைய பத்திரிக்கைகளைப் பயன்படுத்தவும் கூட ஹெர்ஸ்ட் முயன்றான். இட்லரின் வலது கையான கோயரிங்கின் கட்டுரைத் தொடர்களைப் பிரசுரித்தான். பல வாசகர்களின் எதிர்ப்புக்கள் அம்மாதிரியானவைகளைப் பிரசுரிப்பதை நிறுத்தவும், விநியோகத்தில் இருந்து திரும்பப் பெறவும் நிர்ப்பந்தித்தன.

இட்லரைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பிறகு, ஹெர்ஸ்டின் பரபரப்பூட்டும் செய்தியேடுகள் ""சோவியத் ஒன்றியத்தில் நடக்கும் அட்டூழியங்கள்'' பற்றிய கட்டுக் கதைகளால் நிரப்பப்பட்டன. படுகொலைகள், பெருந்திரள் படுகொலைகள், அடிமைத்தனம், ஆட்சியாளர்களின் சுகபோகம், பரந்துபட்ட மக்களின் பட்டினி ஆகியவை சோவியத் ஒன்றியத்தில் நடப்பதாக நாள்தோறும் மிகப்பெரிய செய்திகள் இடம்பெற்றன. இவையெல்லாம் நாஜி ஜெர்மனியின் அரசியில் உளவுப்படையான கெஸ்டபோவால் ஹெர்ஸ்டுக்குத் தரப்பட்டவை. கையில் கத்தியுடன் இருக்கும் கொலைகாரனாக ஸ்டாலினைச் சித்தரிக்கும் சோவியத் ஒன்றியம் பற்றிய கேலிச் சித்திரங்களையும் அண்டப் புளுகுச் சித்திரங்களையும் தனது முதல் பக்கத்திலேயே ஹெர்ஸ்டின் நாளேடுகள் அடிக்கடி தாங்கி வந்தன. இந்தக் கட்டுரைகளை அமெரிக்காவின் 4 கோடி மக்களும், உலகம் முழுவதும் மேலும் பல பத்து இலட்சம் பேரும் நாள்தோறும் படித்தார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஹெர்ஸ்ட் ஏடுகளின் முதல் பிரச்சாரங்களில் ஒன்றாக, உக்ரைன் பஞ்சத்தின் விளைவாக லட்சக் கணக்கானோர் மடிந்து விட்டார்கள் என்கிற புளுகு இருந்தது. ""சோவியத் ஒன்றியத்தில் 60 இலட்சம் பேர் பட்டினியால் மாண்டார் கள்'' என்கிற முதல் பக்க தலைப்புச் செய்தி ""சிக்காகோ அமெரிக்கன்'' என்கிற நாளேட்டில் வந்ததோடு 1935 பிப்ரவரி, 18ந் தேதி இந்தப் பொய் பிரச்சாரம் துவங்கியது. ""குலாக்குகள் எனப்படும் பணக்கார விவசாயிகளுக்கு எதிராக சோசலிச நடவடிக்கை என்கிற பெயரில் ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மேற்கொண்ட கட்டாய நிலவெளியேற்றம் மற்றும் திட்டமிட்ட பெருந்திரள் படுகொலைகளின் விளைவாக உக்ரைனில் பஞ்சம் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு பல பத்து இலட்சம் பேர் மாண்டனர்'' என்ற புனை கதைகளை நாஜி ஜெர்மனியிடமிருந்து நாஜி ஆதரவாளரான ஹெர்ஸ்ட் பிரசுரிக்கத் துவங்கினான்.

ஜெர்மானிய நாஜிப்பேரரசை கிழக்கே விரிவுபடுத்தும் நோக்கத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் ஸ்டாலினுக்கும் எதிரான அவதூறுப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் இட்லருடைய திட்டத்தின் அங்கம்தான் இது. இந்த விடயம் பற்றிய உண்மையே முற்றிலும் வேறானது. 1930களின் ஆரம்பத்தில், சோவியத் ஒன்றியத்தில் உண்மையில் நடந்தது ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டம். அதில் பணக்கார நிலப்பிரபுக்களுக்கு எதிராக எழுச்சியுற்ற நிலமற்ற, ஏழை விவசாயிகள் கூட்டுடமைக்கானதொரு போராட்டத்தைத் துவங்கினர்; அது ""கோல்கோசஸ்'' எனப்படும் கம்யூன்களை நிறுவுவதற்கான போராட்டம். இம்மாபெரும் வர்க்கப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 12 கோடி விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அது விவசாய உற்பத்தியில் சற்றே உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியது; சில பகுதிகளில் ஓரளவு உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியது. அதன் விளைவாகத் தொற்று நோய்களுக்குப் பலியாவோர் எண்ணிக்கையைப் பெருக்கியது. அந்த நேரத்தில் உலகம் முழுவதும் இம் மாதிரியான நோய்கள் பொதுவில் எங்கும் இருந்தன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

1918க்கும் 1920க்கும் இடையில் பரவிய ""ஸ்பெயின் ஃப்ளூ'' என்ற தொற்று நோய் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 2 கோடி மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தது. ஆனால் தமது சொந்தக் குடிமக்களின் சாவுக்காக அந்நாடுகளின் அரசுகள் மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை. இந்த வகையான தொற்று நோய்களைச் சந்தித்தபோது அந்த அரசாங்கங்கள் உண்மையில் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது ""பென்சிலின்'' மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; அப்போது மட்டுமே இம்மாதிரியான தொற்று நோய்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. 1940களின் இறுதிவரை அதுவும்கூட பொதுவில் தாராளமாகக் கிடைக்கக் கூடியதாக இல்லை.

கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டு, வேண்டுமென்றே உருவாக்கிய ஒரு பஞ்சத்தால் உக்ரைனில் பலபத்து இலட்சம் பேர் மாண்டதாக எழுதிய ஹெர்ஸ்டின் பத்திரிகைக் கட்டுரைகள் கற்பனையான அந்தக் கோரத்தைப் பற்றி பரபரப்பூட்டும் அதிர்ச்சியூட்டும் விவரங்களை விலாவாரியாக எழுதின. தமது கட்டுக் கதைகளை உண்மையானவை என்று காட்டுவதற்கான எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி எழுதின. அதன் மூலம் முதலாளித்துவ உலகின் பொதுக் கருத்தை சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றியும் பெற்றன. இதுதான் சோவியத் ஒன்றியத்தில் பலபத்து இலட்சம் பேர் மாண்டு போனதாக முதற்பெரும் புனைச்சுருட்டு தயாரிக்கப்பட்டதன் தோற்றுவாய். மேற்குலகின் பத்திரிக்கைகள் கட்டவிழ்த்துவிட்ட இந்த புனைச் சுருட்டுகள் காரணமாக எழுந்த எதிர்ப்பு அலையில் சோவியத் ஒன்றியம் தெரிவித்த மறுப்புரைகளையும் ஹெர்ஸ்டின் பத்திரிக்கைகளுடைய பொய்கள் பற்றிய முழுமையான அம்பலப் படுத்தல்களையும் யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை. இந்த நிலைமை 1934 முதல் 1987 வரை நீடித்து நிலவியது.

சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்டாலின் பற்றிய மேற்குலகின் இந்தப் புனைச் சுருட்டுக்கள் எல்லாம் வெறும் அவதூறுகள்தாம் என்பதை கனடா நாட்டுப் பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் எழுதி 1987இல் டோராண்டோ நகரில் பதிப்பித்த ""மோசடி, பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரை உக்ரைன் பெருந்திரள் படுகொலை என்ற புனைவு'' என்ற நூல் அம்பலப்படுத்தியது. அதுவரை 50 ஆண்டுகளுக்கு மேலாக சோவியத் ஒன்றியத்தின் சோசலிசம் பற்றிய ஒரு எதிர்மறையான கருத்தைக் கொண்டிருக்கும் படி தலைமுறை தலைமுறையாக உலக மக்களுக்கு அவதூறுகள் மட்டுமே தீனியாகப் போடப்பட்டன.
கலிஃபோர்னியா, பிவெர்லி குன்றுகளில் உள்ள தனது மாளிகையில் 1951இல் வில்லியம் ஹெர்ஸ்ட் இறந்தான். அவன் தனக்குப் பின் ஒரு பெரிய மக்கள் தொடர்புப் பேரரசை விட்டுச் சென்றான். அது இந்நாள் வரை உலகம் முழுவதும் பிற்போக்குச் செய்திகளைப் பரப்புவதைத் தொடர்கிறது. ஹெர்ஸ்டின் தொழிற் கழகம் உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது; அது 15,000 பேர் பணிபுரியும் 100 கம்பெனிகளைக் கொண்டிருக்கிறது. இன்று செய்தி யேடுகள், வாரமாத இதழ்கள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, தொலைக்காட்சி பிணைப்பு, செய்திச் சேவைகள் மற்றும் பன்முக ஊடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஹெர்ஸ்டின் பேரரசு. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோல்வி அடைந்ததோடு உக்ரைன் பற்றிய நாஜி கட்டுக் கதைப் பிரச்சாரம் நின்று போய்விடவில்லை. அந்த நாஜிப் புனைச் சுருட்டுகள் எல்லாம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் பிரித்தானிய எம்15 ஆகிய உளவு அமைப்புக்களால் கையேந்திக் கொள்ளப்பட்டன. அவைதான் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான பிரச்சாரப் போரில் ஒரு முதன்மையான இடத்தை எப்போதும் உறுதிப்படுத்தின. உக்ரைனில் பலபத்து இலட்சம் பேர் பட்டினியால் மாண்டார்கள் என்கிற கதை மீதுதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு தலை விரித்தாடிய கம்யூனிச எதிர்ப்பு மெக்கார்த்தியம் கூட காலூன்றி நின்றது.

1933இல் இந்தப் பொருள் மீது அமெரிக்காவில் ஒரு புத்தகம் பதிப்பிக்கப்பட்டது. ""கிரம்ளின் மாளிகையின் கருப்பு நடவடிக்கை கள்'' என்பது அந்நூலின் தலைப்பு. அமெரிக்காவில் வாழ்ந்த உக்ரைன் அகதிகள்தான் இந்நூலைப் பதிப்பிக்க நிதியளித்தார்கள்; இவர்கள் அனைவரும் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் பங்காளிகளாகச் செயல்பட்டவர்கள்; இவர்களைத்தான் "ஜனநாயகவாதிகள்' என்று உலகின் முன் அடையாளங் காட்டிய அமெரிக்க அரசாங்கம் அரசியல் தஞ்சமளித்தது. அமெரிக்க அதிபராக ரீகன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதாவது 1980களில், உக்ரைனில் பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பித்தார்; 1984இல் ஒரு ஹார்வார்டு பேராசிரியர் ""ரஷ்யாவில் மனித வாழ்வு'' என்கிற ஒரு நூலைப் பதிப்பித்தார்; இதுவும் 1934இல் ஹெர்ஸ்ட் பத்திரிக்கைக் குடும்பத்தால் உற்பத்தி செய்யப்பட்ட எல்லாக் கட்டுகதைகளையும் திரும்பச் சொன்னது. 1930இல் நடந்ததாகக் கூறப்பட்ட நாஜிப் புளுகு 1984இல் மீண்டும் உயர்ப்பிக்கப் பட்டதை நாம் கண்டோம்; ஆனால் இந்த முறை ""மதிப்புக்குரிய'' ஒரு அமெரிக்க பல்கலைக் கழகம் என்கிற மூடு திரையின் பின்னே வந்தன. ஆனால் இதோடு நிற்கவில்லை.

இதே பொருள் குறித்து ""சோகத்தின் அறுவடை'' என்ற தலைப்பில் 1986இல் இன்னொரு நூல் வெளிவந்தது. இந்நூலின் ஆசிரியர் கலிஃபோர்னியாவின் ஸ்டாம்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ள ராபர்ட் கான்குவஸ்ட். இவர் பிரித்தானிய உளவுத் துறையின் முன்னாள் உறுப்பினர்! இந்த வேலைக்காக உக்ரைன் தேசிய அமைப்பிடம் இருந்து 80,000 அமெரிக்க டாலர் பணத்தை கான்குவஸ்ட் பெற்றார்; அதோடு இந்நூலின் புளுகுகளை அடிப்படையாகக் கொண்டு 1986இல் தயாரிக்கப்பட்ட ""அவலத்தின் அறுவடை'' என்னும் திரைப்படத்துக்காகவும் அவர் ஏராளமாகப் பணம் பெற்றார். 1930களில் நாஜிக்கள் கட்டுக்கதை பரப்பத் துவங்கியதில் இருந்து 1986இல் இந்த நூல் வெளியானதற்குள் உக்ரைன் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கையை 150 இலட்சமாக ஏற்றி விட்டார்கள்!

எவ்வாறாயினும் சரி, அமெரிக்காவின் ஹெர்ஸ்ட் பத்திரிக்கைக் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, புத்தகங்கள், திரைப் படங்களில் கிளிப் பிள்ளைகளைப்போல திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பலபத்து இலட்சம் பேர் உக்ரைன் பட்டினிச் சாவுக்கு பலியானார்கள் என்பதே முழுக்க முழுக்கக் கட்டுக் கதையாகும். ""பித்தலாட்டம், பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரையிலான உக்ரைன் படுகொலைகள் என்கிற புனை கதை'' என்கிற நூலில் இவையெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தாம் என்பதை கனடிய பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் தனது நூலில் மிகவும் கவனமாகவும் சிரத்தையோடும் அம்பலப்படுத்தியுள்ளார்.

பத்திரிக்கையாளர் டோட்டில் நிரூபித்துள்ள வேறு பலவற்றுள் முக்கியமானவை சோவியத் ஒன்றியத்தில் நடந்ததாகச் செய்யப்பட்ட பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் பற்றியவை. உண்மையில் அவையெல்லாம் 1922இல் பிரசுரிக்கப்பட்ட புகைப் படங்கள். 191821 உள்நாட்டுப்போரின் போது சோவியத் ஒன்றியத்தின் மீது எட்டு அந்நிய நாடுகளின் இராணுவங்கள் படையெடுத்தபோது நிகழ்ந்த போர் மற்றும் பட்டினி நிலைமைகளில் இலட்சக்கணக்கான மக்கள் மடிந்து போயினர்; அந்தச் சமயத்தில் அடுக்கப்பட்ட குழந்தைகள் பசி பட்டினியில் வாடிக் கிடக்கும் கோரமான புகைப்படங்கள்; அவற்றைத் தான் 1930களில் நடந்த பட்டினிச் சாவுகள் என்பதாக நாஜிக்களும் மற்ற கம்யூனிச எதிரிகளும் பிரசுரித்திருந்தனர். 1934 பஞ்சம் பற்றிய பல உண்மை விவரங்களை டக்ளஸ் டோட்டில் வெளிக் கொண்டு வந்து, ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கைகள் பிரசுரித்த கலப்படப் பொய்களை அம்பலப்படுத்தினார். உக்ரைன் பஞ்சப் பூமியிலிருந்து நெடுநாட்களாகச் செய்திகளும் புகைப் படங்களும் அனுப்பிய ஒரு பத்திரிக்கையாளர் தாமஸ் வாக்கர் எனப்படுபவர்; இந்த மனிதர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஒரு ஐந்தே நாட்கள்தான் தங்கி இருந்தார்.

இந்த உண்மையை ""தி நேசன்'' என்ற ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் தெளிவுபடுத்தினார். எம். பரோட் என்ற நிருபர்தான் ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கையின் உண்மையான மாஸ்கோ நிருபர்; இவர், 1933இல் சோவியத் ஒன்றியம் மிகச் சிறந்த அறுவடையைச் சாதித்துள்ளது என்றும் உக்ரைன் மிகவும் முன்னேறியுள்ளது என்றும் ஹெர்ஸ்டுக்கு அனுப்பிய செய்திகள் பிரசுரிக்கப்படாமலேயே இருட்டடிப்புச் செய்யப்பட்டன என்பதைக் கூட பிஷர் தெளிவுபடுத்தினார்.

டோட்டில் மேலும் ஒன்றை நிரூபிக்கிறார். உக்ரைன் பஞ்சம் எனச் சொல்லப்பட்டதின் மீதான செய்திகளை எழுதிய ""தாமஸ் வாக்கர்'' என்ற நிருபரின் உண்மைப் பெயர் ராபர்ட் கிரீன்; இவன் அமெரிக்காவின் கொலராடோ மாநிலச் சிறையில் இருந்து தப்பிய ஒரு கிரிமினல் கைதி. இந்த வாக்கர் எனப்படும் கிரீன் அமெரிக்கா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு வழக்கு மன்றத்தில் நிறுத்தப் பட்டபோது, தான் உக்ரைனுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட ஒரு பஞ்சத்தில், 1930களில் உக்ரைனில் ஏற்பட்ட பட்டினியினால் பல பத்து இலட்சம் பேர் மடிந்து போனார்கள் என்கிற இந்தப் பொய்களெல்லாம் கடைசியாக, 1987இல் பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் மூலம் அம்பலப்பட்டுப் போனது.

ஹெர்ஸ்ட், நாஜிக்கள், போலீசு உளவாளி கான்குவஸ்ட் மற்றும் பலரும் பலபத்து இலட்சம் மக்களின் உயிரைப் பற்றி பித்தலாட்டம் செய்து, கட்டுக்கதைச் செய்திகளைப் பரப்பியிருக்கிறார்கள். இன்றும் கூட, வலதுசாரிச் சக்திகளின் சம்பளப் பட்டியிலில் உள்ள ஆசிரியர்கள் எழுதிப் புதிதாகப் பிரசுரிக்கப்படும் நூல்களில் நாஜி ஹெர்ஸ்டின் கட்டுக் கதைகள் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன. அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஒரு ஏகபோக நிலைவகிக்கும், உலகம் முழுவதும் செய்தி முகாமைகளைக் கொண்ட ஹெர்ஸ்டின் குடும்பப் பத்திரிக் கைகள் நாஜி கெஸ்டபோ என்ற இட்லரின் அரசியல் உளவுப் படையின் பெரும் பிரச்சார பீரங்கியாக விளங்கின. ஏகபோக மூலதனம் ஆதிக்கம் வகிக்கும் இந்த உலகில், ஹெர்ஸ்டின் செய்தி ஊடகம் உலகம் முழுவதுமுள்ள பல பத்திரிக்கைகள், வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் கெஸ்டபோவின் புளுகுகளை உண்மையெனப் பரப்பிட முடிந்தது.

கெஸ்டபோ ஒழிந்து போனபின், அமெரிக்க சி.ஐ.ஏ. வைப் புதிய புரவலனாகக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போர் தடையின்றி நடந்தது. அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கொஞ்சமும் குறைவின்றி நடந்தது. வழக்கம் போல தொடர்ந்த இந்த வேலை, முதலில் நாஜி உளவுப்படை கெஸ்டபோவின் ஆணையாலும், பின்னர் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆணையிலும் நீடித்தது; நீடிக்கிறது.

ராபர்ட் கான்குவஸ்ட்

முதலாளியச் செய்தி ஊடகம் மிகவும் பரவலாக மேற்கோள் காட்டும் ராபர்ட் கான்குவஸ்ட் எனப்படும் இந்த மனிதர், முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான உண்மையான பூசாரியான இந்த மனிதர் இந்தச் சமயத்தில் நமது குறிப்பான கவனத்துக்குரியவராக உள்ளார். சோவியத் ஒன்றியத்தில் இலட்சக்கணக்கானோர் மடிந்ததைப் பற்றி மிகமிக அதிகமாக எழுதிய இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் ராபர்ட் கான்குவஸ்ட். இரண்டாம் உலகப் போரில் இருந்து சோவியத் ஒன்றியம் குறித்த எல்லாப் புனைக் கதைகளையும் பொய்களையும் உண்மையில் உருவாக்கியவர் இவர்தான். ""மாபெரும் பயங்கரம்'' (1969) ""சோகத்தின் அறுவடை'' (1986) ஆகிய இரண்டு நூல்கள் மூலம் முக்கியமாக அறியப்பட்டவர்தான் கான்குவஸ்ட்.
குலாக்குகள் எனப்படும் நிலப்பிரபுகளுக்கான உழைப்பு முகாம் களிலும், 193638 விசாரணையின்போதும், உக்ரைன் பஞ்சத்தாலும் லட்சக்கணக்கானோர் மாண்டுபோனதாக கான்குவஸ்ட் எழுதுகிறார். இவர் தமது தகவல் மூலாதாரங்களாக அமெரிக்காவில் அகதிகளாக வாழும் வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உக்ரைனியரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்; இவர்கள் எல்லாம் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் கூட்டுறவாடியவர்கள். கான்குவஸ்டின் நாயகர்கள் எல்லாம் உக்ரைனில் வாழ்ந்த யூதச் சமுதாயத்துக்கு எதிராக 1942இல் நடந்த படுகொலைகளில் தலைமையேற்றுப் பங்காற்றிய போர்க் குற்றவாளிகள். இவர்களில் ஒருவரான மைக்கேலா எலபிட் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு போர்க் குற்றவாளியெனத் தண்டிக்கப் பட்டவர். இந்த எலபிட், நாஜி ஆக்கிரமிப்பின்போது எல்வோவ் நகரத்தின் போலீசுத் தலைவனாக இருந்தான்; 1942இல் நடந்த யூதப் படுகொலை பயங்கரத்துக்குத் தலைமையேற்றவன். 1949இல் (சி.ஐ.ஏ.வால்) அவதூறு பரப்பும் ஊற்றுமூலமாகப் பணியாற்றினான்.

கான்குவஸ்டினுடைய நூல்களின் கரு கம்யூனிசத்துக்கு எதிரான வன்முறையும் வெறியும் நிறைந்தது. ""1932க்கும் 1933க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை 50 முதல் 60 இலட்சம் வரையிலானவை, அவற்றில் பாதி அளவு உக்ரைனில் ஏற்பட்டவை'', என்று கான்குவஸ்ட் தனது 1969 நூலில் சொல்கிறார். ஆனால், ரீகன் கால கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது அதாவது 1983இல் அதே பஞ்சம் 1937 வரையிலானது என்று நீட்டிக்கிறார்; பஞ்சத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையை 140 இலட்சமாக ஊதிப் பெருக்குகிறார்! இம்மாதிரியான புளுகுக்காக அவருக்கு நல்ல வெகுமதி கொடுக்கப் பட்டது; சோவியத் படையெடுப்புக்குத் தயாராகும்படி அமெரிக்க மக்களை அறைகூவி அழைக்கும் தனது அதிபர் தேர்தல் பிரச்சார சரக்குகளை எழுதித் தரும்படி, கான்குவஸ்ட்டுக்கு ரீகன் (1988இல்) பொறுப்பு ஒப்படைத்தார் ""ரஷ்யர்கள் படையெடுக்கும்போது என்ன செய்வது உயிர் பிழைத்திருப்பவர்களுக்கான ஒரு கையேடு'' என்பது கான்குவஸ்ட் எழுதிய உரையின் தலைப்பு! ஒரு வரலாற்றுப் பேராசிரி யரிடமிருந்து என்ன வித்தியாசமான சொற்கள் பாருங்கள்!

உண்மையில் வித்தியாசமானவை ஒன்றும் இல்லை. ஏனென்றால் முதலில் ஒரு உளவுப் படையின் முகவர், பின்னர் கலிஃபோர்னியாவின் ஸ்டாம் ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர், எழுத்தாளர் என்கிற முறையில் சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான பொய்யுரைகளாலும், புனை கதைகளாலும் தனது பிழைப்பை நடத்திய மனிதனிடமிருந்துதான் இந்தச் சொற்கள் வருகின்றன. அவன் பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் பொய்ப் பிரச்சாரத் துறை, அதாவது தகவல் ஆய்வுத் துறை (ஐ.ஆர்.டி.)யின் ஒரு முன்னாள் முகவர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் அடையாளங் காட்டியது. ""ஐ.ஆர்.டி.'' என்பது பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் ஒரு பிரிவாக 1947இல் நிறுவப்பட்டது. (கம்யூனிசத் தகவல் குழு என்பது அதன் மூலப்பெயர்.) அதன் பிரதானப் பணி அரசியல்வாதி, பத்திரிக்கை யாளர்கள், பதவியிலுள்ள மற்றும் பிறர் மத்தியில் கட்டுக் கதைகளைப் பரப்பி, பொது மக்கள் கருத்தை உருவாக்கி உலகம் முழுவதும் கம்யூனிசச் செல்வாக்கை முறியடிப்பதுதான்.

பிரிட்டனைப் போலவே வெளிநாடுகளிலும் ஐ.ஆர்.டி.யின் நடவடிக்கைகள் மிகமிகப் பரவலானவை. வலதுசாரித் தீவிர வாதத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாக ஐ.ஆர்.டி. கலைக்கப்பட்ட போது, பிரிட்டனில் மட்டும் நூற்றுக்கும் மேலான பிரபலமான பத்திரிக்கையாளர்கள் ஐ.ஆர்.டி. தொடர்பில் இருந்து கட்டுரை களுக்கான விடயங்களைக் கிரமமாக வழங்கி வந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டது. ஃபினான்சியல் டைம்ஸ், தி டைம்ஸ், எகானமிஸ்ட், டெய்லி மெயில், டெய்லி மிர்ரர், தி எக்ஸ்பிரஸ், தி கார்டியன் மற்றும் பிற பெரிய பிரித்தானியப் பத்திரிக்கைகள் இதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன. எனவே கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்திய விவரங்களில் இருந்து எவ்வாறு இரகசிய உளவுப் படையினர் மக்களைச் சென்றடையும் செய்திகளைத் திரித்துப் புரட்ட முடியும் என்பதை நாம் அறிய முடியும்.

இந்த ஐ.ஆர்.டி. நிறுவப்பட்டதில் இருந்து 1956 வரை ஐ.ஆர்.டி.க்காக ராபர்ட் கான்குவஸ்ட் வேலை செய்தான். அங்கே கான்குவஸ்டின் வேலை சோவியத் ஒன்றியத்தின் "கருப்பு வரலாறு' என்று சொல்லப்பட்டதைப் புனைந்தளிப்பது தான்; இந்தக் கட்டுக் கதைகள்தாம் உண்மையானவை என்பதைப் போல வெளியிடப் பட்டு, பொது மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக பத்திரிக்கையாளர்களிடம் பரப்பப்பட்டன. ஐ.ஆர்.டியை விட்டு அதிகாரபூர்வமாக விலகிய பிறகும் கூட அதன் யோசனை ஆதரவோடு, கான்குவஸ்டு நூல்கள் எழுதுவதைத் தொடர்ந்தான்.

""மாபெரும் பயங்கரம்'' என்னும் கான்குவஸ்டின் நூல் 1937இல் சோவியத் ஒன்றியத்தில் நடந்த அதிகாரப் போட்டி என்பதை ஆய்வுப் பொருளாகக் கொண்ட அது, அடிப்படையில் ஒரு வலதுசாரி நூலாகும். உண்மையில் அது, அவன் இரகசிய உளவுப் படையில் இருந்தபோது எழுதியதின் மறுவார்ப்பு ஆகும். அந்த நூலே ஐ.ஆர்.டி.யின் உதவியோடு முடிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டது. சி.ஐ.ஏ. மூலங்களில் இருந்து வரும் நூல்களைப் பதிப்பிப்பதோடு அதன் மூன்றில் ஒரு பகுதிப் பிரதிகள், பிரேஜர் நிறுவனத்தால் வாங்கிக் கொள்ளப்பட்டன. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிக்கை; வானொலி தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் போன்ற ""பயன்பாடுடைய முட்டாள்களுக்கு'' பரிசளிப்பதற்காக கான்குவஸ்டின் நூல்கள் வாங்கப்பட்டன. இதன்மூலம் கான்குவஸ்ட் மற்றும் வலதுசாரித் தீவிரவாதிகளின் பொய்கள் மக்கள் திரளின் பெரும் பகுதி முழுவதும் பரப்புவதைத் தொடர்வதற்கான உறுதி செய்யப்பட்டது. வலதுசாரி வரலாற்றாசிரியர்களுக்கு சோவியத் ஒன்றியம் பற்றிய செய்தி களுக்கான மிக முக்கியமான மூலாதாரங்களில் ஒன்றாக இன்றுவரை கான்குவஸ்ட் நூல்கள்தான் விளங்குகின்றன.

சோவியத் ஒன்றியத்தில் உயிரையோ, சுதந்திரத்தையோ இழந்ததாகப் புளுகும் புத்தகங்கள் கட்டுரைகளோடு எப்போதும் தொடர்புபடுத்தப்படும் இன்னொரு நபர் ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். ""தி குலாக் ஆர்சிபிலாகோ'' என்ற அவரது நூல் மூலமாக 1960களின் இறுதியில் முதலாளித்துவ உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் இந்த சோல்ஜெனித்சின். சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பரப்பிய எதிர்ப்புரட்சி நடவடிக்கைக்காக இவர் 1946ஆம் ஆண்டிலிருந்து எட்டு வருடங்கள் உழைப்பு முகாமில் வாழும்படி தண்டிக்கப்பட்டவர். இட்லருடன் சோவியத் ஒன்றிய அரசு ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான மோதலை அது தவிர்த்திருக்கலாம் என்பது சோல்ஜெனித்சின்னின் கருத்தாகும். சோவியத் ஒன்றியத்தின் மக்கள் மீது போர் ஏற்படுத்திய பேரழிவுப் பாதிப்பின் நோக்கில் பார்த்தால் சோவியத் அரசாங்கமும் ஸ்டாலினும் இட்லரை விட மோசமானவர்கள் என்று சோல்ஜெனித் சின் கூறினார். தனது நாஜி ஆதரவு அனுதாபங்களை அவர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஆகவேதான் அவர் ஒரு துரோகி எனக் கண்டிக்கப்பட்டார்.

ஸ்டாலினுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்த நிகிடா குருசேவின் ஒப்புதலோடும் உதவியோடும் சோல்ஜெனித்சின் 1962 முதல் தனது நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். ஒரு கைதியின் வாழ்க்கையைப் பற்றி, ""ஐவான் டெனிசோவிச் வாழ்வில் ஒரு நாள்'' என்பது அவர் பதிப்பித்த முதல் நூல். ஸ்டாலினுடைய சோசலிசப் பாரம்பரியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு சோல் ஜெனித்சினுடைய எழுத்தை குருச்சேவ் பயன்படுத்திக் கொண்டார். ""தி குலாக் ஆர்ச்சிபிலாகோ'' என்ற அவரது நூலுக்காக 1970இல் சோல்ஜெனித்சின் நோபல் பரிசு பெற்றார். அதன்பிறகு அவரது நூல்கள் பெரும் எண்ணிக்கையில் முதலாளித்துவ நாடுகளில் பிரசுரிப்பது துவங்கியது; அவற்றின் ஆசிரியர் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான மிகவும் மதிப்புமிக்க கருவிகளில் ஒருவரானார்.

சோவியத் ஒன்றியத்தில் பலபத்து லட்சம்பேர் மாண்டு போனார்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தோடு உழைப்பு முகாம்கள் பற்றிய இவரது எழுத்துக்களையும் சேர்த்து இவையும் உண்மையானவை என்பது போல் முதலாளித்துவச் செய்தி ஊடகங்கள் பரப்பின. 1974இல் சோல்ஜெனித்சின் சோவியத் குடியுரிமையைத் துறந்து சுவிட்சர்லாந்திலும் பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அக்காலங்களில் அவர் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான ஒரு மாபெரும் போராளியாக முதலாளியச் செய்தி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அவர் ஒரு நாஜி ஆதரவாளர் அனுதாபி என்பது சோசலிசத்துக்கு எதிரான பிரச்சாரப் போரில் குறுக்கிடாதவாறு மூடி மறைக்கப்பட்டது. அமெரிக்காவில், பல முக்கியக் கூட்டங்களில் உரையாற்றும்படி சோல்ஜெனித்சின் அடிக்கடி அழைக்கப்பட்டார். அவரது உரைகள் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டக் கூடியவையாகவும் அதீத பிற்போக்கு நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவையாகவும் இருந்தன. அவற்றில் ஒன்று அமெரிக்காவின் மீது வியத்நாம் வெற்றி பெற்ற பிறகும் மீண்டும் வியத்நாமைத் தாக்க வேண்டும் என்ற கருத்து.

அது மட்டுமல்ல் 40 ஆண்டு கால பாசிச ஆட்சிக்குப் பிறகு போர்ச்சுக்கலில் இடதுசாரி இராணுவ அதிகாரிகள் மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தபோது, போர்ச்சுகலில் அமெரிக்கா இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கான பிரச்சாரத்தில் சோல் ஜெனித்சின் இறங்கினார். அமெரிக்கா தலையிடவில்லையெனில் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகள் தலையிடும் என்று சொன்னார். அவரது உரைகளின் மூலம் போர்ச்சுக்கலின் பிடியில் இருந்து ஆப்பிரிக்கக் காலனிகள் விடுதலை அடைவதைக் கண்டு எப்போதும் வேதனை தெரிவித்தார்.

ஆனால், சோல்ஜெனித்சின்னுடைய உரைகளில் எப்போதுமே சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போருக்கு முக்கிய அழுத்தம் தரப்பட்டது தெளிவாக உள்ளது. அது சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு முதல் வட வியத்நாமில் பல பத்தாயிரம் அமெரிக்கர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்கப்பட்டு விட்டதாகப் புளுகுவது வரை சோல்ஜெனித்சின் புளுகுப் பிரச்சாரம் நீடித்தது. வடக்கு வியத்நாமில் அமெரிக்கர்கள் அடிமை உழைப்பாளர்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்கிற சோல்ஜெனித்சினுடைய இந்தக் கருத்துதான் வியத்நாம் போர் பற்றிய ""ராம்போ'' சினிமாக்கள் உருவாகக் காரணமாக இருந்தது.

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்கு ஆதரவாக எழுதத் துணிந்த பத்திரிக்கையாளர்கள் துரோகிகளாக மாறக் கூடியவர்கள் என்று தனது உரைகளில் இந்த சோல்ஜெனித்சின் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக பீரங்கி வண்டிகள் மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் பெற்றிருக்கிறது; அதேபோல அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கிறது அதாவது அமெரிக்காவில் இருப்பதைவிட மூன்று அல்லது ஐந்து மடங்கு கூட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் ஒன்றியம் பெற்றுள்ளது; ஆகவே அதற்கு எதிராக அமெரிக்க இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இதே சோல்ஜெனித்சின் பிரச்சாரம் செய்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான சோல்ஜெனித்சின்னுடைய உரைகள் வலதுசாரித் தீவிரவாதத்தைத்தான் பிரதிபலித்தது. ஆனால் அவரோ மேலும் ஒருபடி நகர்ந்து பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்தார்.

எனவே, சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம்பேர் மாண்டனர், சிறையிலடைக்கப்பட்டனர் என்கிற கட்டுக் கதைகளை ""சப்ளை'' செய்த மதிப்புமிக்க புளுகு வியாபாரிகள் இவர்கள்தான்; நாஜி வில்லியம் ஹெர்ஸ்ட், இரகசிய உளவாளி ராபர்ட் கான்குவஸ்ட், மற்றும் பாசிஸ்ட் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின், இவர்களில் கான்குவஸ்ட்தான் தலைமைப் பாத்திரமாற்றியவன். ஏனென்றால், இவன் கொடுத்த செய்தியைத்தான் உலகெங்கும் உள்ள முதலாளித்துவப் பெருந்திரள் செய்தி ஊடகம் பயன்படுத்திக் கொண்டது. மேலும் அதுதான் சில பல்கலைக் கழகங்களில் நிறுவப்பட்ட திணைப் புலன்களுக்கு அடிப்படையாக அமைந்தது. கான்குவஸ்ட்டின் வேலை முதல்தரமான போலீசுப் புளுகுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை.

1970களில் சோல்ஜெனித்சின் மற்றும் இரண்டாம்தர ஆசாமிகளான ஆண்ட்ரேய் சக்கராவோ, ராய் மேட்வேடேவ் போன்றவர்களோடு, சோவியத் ஒன்றியத்தில் மாண்டவர்கள், சிறையிலடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றிய ஊகங்கள் வதந்திகள் பரப்பும் பல நபர்கள், உலகமெங்கும் ஆங்காங்கே தோன்றினர். அப்படிப்பட்டவர்கள் முதலாளித்துவச் செய்தி ஊடகங்களால் பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்றனர். ஆனால், இறுதியில் இந்த விவகாரங்கள் பற்றிய முழு உண்மையும் வெளியானது; வரலாற்றுப் பொய்யர்களின் உண்மை முகங்கள் தெரிந்தன. வரலாற்று ஆய்வாளர்களுக்காக கட்சியின் இரகசிய ஆவணப் பாதுகாப்பகங்களைத் திறக்கும்படி கோர்பச்சேவ் உத்தரவு போட்டார்; அது யாரும் எதிர்பார்க்காத விளைவுகளை ஏற்படுத்தியது.

பிரச்சாரப் பொய்கள்

சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற வதந்திகள் எல்லாம் அந்நாட்டிற்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போரின் ஒரு பகுதிதான்; இதன் காரணமாகத்தான் சோவியத் ஒன்றியம் அந்த வதந்திகளுக்குக் கொடுத்த மறுப்புகளும் விளக்கங்களும் பாரதூரமாக எடுத்துக் கொள்ளப்படவுமில்லை, முதலாளித்துவச் செய்தி ஊடகங்களில் இடம் பெறவுமில்லை. அதற்கு மாறாக, அவற்றைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிய அதேசமயம், முதலாளியத்தால் விலைக்கு வாங்கப்பட்ட தனிச்சிறப்பானவர்கள் தாராளமாக இடம் பிடித்துக் கொண்டார்கள்; ஏனென்றால் இவர்கள்தான் முதலாளியம் விரும்பிய கட்டுக் கதைகளை வழங்கினர். அதென்ன கட்டுக் கதைகள்? கான்குவஸ்ட்டின் பொய் மற்றும் பிற விமரிசனங்களும் உரிமை கொண்டாடியபடி பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள் என்கிற கதைகள் எல்லாம் ஒரு விடயத்தைப் பொதுவாகக் கொண்டிருந்தன் அந்தக் கதைகள் எல்லாமும் பொய்யான தோராயப் புள்ளி விவரங்களின் தொகுப்புத் தானே தவிர எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளாலும் தொகுக்கப்பட்டவையல்ல.

கான்குவஸ்ட், சோல்ஜெனித்சின், மேட்வேடேவ் மற்றும் பிறர் சோவியத் ஒன்றியம் பிரசுரித்த புள்ளி விவரங்களைத்தான் பயன்படுத்தியுள்ளனர்; உதாரணமாக, தேசிய மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள்; இவற்றோடு அந்த நாட்டின் குறிப்பான நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் எந்த விகிதத்தில் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும் என்று யூகித்தார்களோ அதைச் சேர்த்தார்கள்; தமது சொந்த யூகத்தின்படி குறிப்பிட்ட ஆண்டின் இறுதியில் இவ்வளவுபேர் இருக்க வேண்டுமே என்று கணக்குப் போட்டார்கள். அவ்வாறின்றி மக்கள் தொகை குறைவாக இருந்ததால், இந்தக் குறைக்குக் காரணம், அவ்வளவு பேர்கள் மாண்டு போனார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள், ஸ்டாலினும் சோசலிசமும் மேற்கொண்ட கொடூரத்தின் விளைவுதான் இதுவென்று முடிவு செய்தார்கள். எளிமையான முறை. ஆனால் முற்றிலும் மோசடியானது. மேலை உலகைப் பற்றிய அம்பலப்படுத்துதல் என்றால் இவ்வளவு முக்கியமான அரசியல் நிகழ்வுகள் பற்றி இந்த மாதிரியான அம்பலப்படுத்தும் முறையை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அங்கேயென்றால் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் இம்மாதிரியான கட்டுக் கதைகளைக் கட்டாயம் எதிர்த்து ஆர்ப்பரித்திருப்பார்கள். ஆனால் இது சோவியத் ஒன்றியம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இந்தக் கட்டுக் கதைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. காரணம் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் தங்கள் தொழில் நேர்மைக்கு மேலாகத் தொழில் ரீதியிலான பிழைப்பு முன்னேற்றத்தை வைக்கிறார்கள்.

எண்ணிக்கையைப் பொருத்தவரை, இந்த விமர்சகர்களின் இறுதி முடிவுகள்தான் என்ன? ராபர்ட் கான்குவஸ்ட்டைப் பொறுத்தவரை, அவர் 1961இல் செய்த கணிப்புப்படி சோவியத் ஒன்றியத்தில் 1930களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவின் எண்ணிக்கை 60 இலட்சமாக இருந்தது. 1986ல் அதே கான்குவஸ்ட் சாவின் எண்ணிக்கையை 140 இலட்சமாக உயர்த்திக் கொண்டார். இந்த கான்குவஸ்ட்டின் கணக்குப்படி, கட்சி, படை மற்றும் அரசு இயந்திரத்தில் 1937 களையெடுப்பு துவங்குமுன்பு சிறையிலடைக்கப்பட்ட குலாக்குகள் எனப்படும் புதிய நிலப்பிரபுக்களின் எண்ணிக்கை 50 இலட்சம். 193738இல் களையெடுப்புகள் துவங்கிய பிறகு மேலும் 70 இலட்சம் கைதிகள் கூடியிருக்க வேண்டும்; அதாவது 1939இல் 120 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள் என்று தானாகவே கான்குவஸ்ட் கூட்டிக் கொண்டார். கான்குவஸ்டினுடைய கணக்குப்படி இந்த 120 இலட்சம் பேரும் அரசியல் கைதிகளாகத்தான் இருக்க முடியும்! அவரது கணக்குப்படி இந்த அரசியல் கைதிகளைவிட மிகவும் மிதமிஞ்சியவர்களாக பொதுவான கிரிமினல் குற்றவாளிகள் இருப்பார்கள்; எனவே, இவர்களையும் சேர்த்து சோவியத் யூனியனின் உழைப்பு முகாம்களில் 250300 இலட்சம் பேர் அடைபட்டிருந்தார்கள் என்கிறார்.

கான்குவஸ்டின் இன்னொரு கணக்குப்படி, 193739 கால கட்டத்தில் ஒரு 10 இலட்சம் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள்; இதோடு மேலும் 20 இலட்சம் பேர் பட்டினியால் மாண்டு போனார்கள்; 193739 களையெடுப்புக்குப் பிறகு இறுதித் தொகுப்பாக 90 இலட்சம் பேர் சிறையில் இறந்திருக்க வேண்டும் என்கிறார். பின்னர் இந்தப் புள்ளி விவரங்களைச் சரிக்கட்டி 1939க்கும் 1953க்கும் இடையே 120 இலட்சம் அரசியல் கைதிகளை போல்ஷ்விக்குகள் கொன்று விட்டார்கள் என்கிற முடிவைக் கான்குவஸ்ட் வந்தடைந்தார். இந்தத் தொகையை 1930களில் ஏற்பட்ட பஞ்சத்தால் இறந்தவர்கள் என்று கொல்லப்பட்ட தொகையோடு சேர்த்து ஆக மொத்தம் 260 இலட்சம் பேரை போல்ஷ்விக்குகள் கொன்றார்கள் என்ற முடிவுக்கு வந்தார். 1950இல் 120 இலட்சம் அரசியல் கைதிகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்தனர் என்று வேறு கான்குவஸ்ட் சாதித்தார்.

அலெக்சாண்டர் சோல்ஜெனித்சினும் இதே புள்ளி விவர முறைகளைத்தான் ஏறக்குறைய பயன்படுத்தினார். ஆனால் பல்வேறு கருதுகோள்களின் அடிப்படையிலான இந்த அறிவியல்பூர்வமற்ற முறைகளைப் பயன்படுத்திய சோல்ஜெனித்சின் இன்னும் கடைக் கோடித்தனமான முடிவுகளைச் சென்றடைந்தார். 193233 பஞ்சத்தால் 60 இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற கான்குவஸ்டின் கணக்கை சோல்ஜெனித்சின் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி 193639களில் ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் பேர் என்று கணக்கிட்டார். விவசாயத்தைக் கூட்டுமயமாக்கியதில் இருந்து 1953இல் ஸ்டாலின் இறந்தது வரை அங்கே 660 இலட்சம் மக்களைக் கம்யூனிஸ்டுகள் கொன்று விட்டார்கள் என்று தொகுத்துச் சொல்கிறார் சோல்ஜெனித்சின். இவர்கள் தவிர இரண்டாம் உலகப் போரில் 440 இலட்சம் பேர் பலியானதற்கும் சோவியத் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதையெல்லாம் வைத்து, பதினோரு கோடி ரஷ்யர்கள் சோசலிசத்துக்குப் பலியாகிப் போனார்கள் என்கிற முடிவுக்கு சோல்ஜெனித்சின் போனார். 1953இல் அங்கே 250 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்ததாகப் புளுகுகிறார்.

கான்குவஸ்ட் மற்றும் சோல் ஜெனித்சின்னுடைய புளுகுகளை கோர்பச்சேவின் புதிய சுதந்திரச் செய்தி ஊடகம் என்கிற ஒப்பாரிக் கூச்சல் முன்னுக்குக் கொண்டு வந்தது. இந்தச் செய்தி ஊடகத்தின் கோரிக்கையை ஏற்று சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியினுடைய மத்தியக் கமிட்டி ஆவணக் காப்பகத்தை வரலாற்று ஆய்வுக்காக கோர்பச்சேவ் திறந்து விட்டார். இந்த ஆவணக் காப்பகத்தைத் திறந்ததானது மிகவும் குழப்பப்பட்ட இந்த கட்டுக் கதைகளைப் பொறுத்தவரை உண்மையில் இரண்டு வகையில் பிரச்சினையாக அமைந்தது. அதாவது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் விவரங்கள் இந்த ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும். அதைவிட முக்கியமான உண்மை என்னவென்றால், சோவியத் ஒன்றியத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு பரப்பியவர்கள் எல்லாம், ஆவணக் காப்பகம் திறக்கப்படும் நாளில் தாங்கள் சொல்லி வந்தவையெல்லாம் சரி தானென்று உறுதி செய்யப்படும் என்று சாதித்தார்கள். கான்குவஸ்ட், சாக்காரோவ், மெட்வேடேவ் மற்றும் எஞ்சிய அனைவரும் இப்படித்தான் கூச்சல் போட்டார்கள். ஆனால் ஆவணக் காப்பகம் திறக்கப்பட்டு அசலான ஆவணங்களின் அடிப்படையிலான ஆய்வு அறிக்கைகள் பிரசுரிக்க ஆரம்பித்தவுடன் வினோதமானவை நிகழ்ந்தன. கோர்பச்சேவின் சுதந்திரச் செய்தி ஊடகமும் சரி, சாவையும் சிறையிலடைப்பையும் பற்றிய ஊகக்காரர்கள் புளுகுணிகளும் சரி திடீரென்று அந்த ஆவணக் காப்பகம் மீது ஆர்வம் காட்டாமல் போய் விட்டார்கள். அதாவது வாயும் மெய்யும் பொத்திக் கொண்டார்கள்.

ஜெம்ஸ்கோவ், டௌஜின், ழெவன் ஜுக் ஆகிய ருசிய வரலாற்றாசிரியர்கள் மத்தியக் கமிட்டியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆய்வு செய்து, தமது முடிவுகளை 1990லிருந்து வரலாற்று அறிவியில் ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளில் வெளியிடத் துவங்கினர்; ஆனால் அவற்றை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க கண்டு கொள்ளவே இல்லை. இந்த வரலாற்று ஆய்வு முடிவுகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் ஒரு விடயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. அதாவது ஸ்டாலின் காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட பொய்யுரைக்கப்பட்ட சாவுகள், சிறையிலடைப்புகள் பற்றிய சுதந்திரச் செய்தி ஊடகங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் வெறுமே ஊதிப் பெருக்கப்பட்ட புளுகுகள்தாம் என்பதை நிரூபித்தன. இதன் காரணமாகவே ஆய்வு முடிவுகளின் உள்ளடக்கத்தை அவை பிரசுரிக்கவே இல்லை; இருட்டடிப்புச் செய்தன. ஆனால், அந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் பெருந்திரள் மக்கள் கண்டறியாத, சிறிய எண்ணிக்கையிலான அறிவியல் ஆய்வுப் பத்திரிக்கைகளில் மட்டும் வெளிவந்தன.

முதலாளியச் செய்தி ஊடகங்கள் போடும் வெறியாட்டத்தோடு அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் போட்டி போடுவது மிகமிகக் கடினமானது; எனவே, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மக்கள் திரளின் பல பிரிவினரிடையே கான்குவஸ்டும் சோல்ஜெனித்சினும் தொடர்ந்து ஆதரவு பெற முடிகிறது. மேற்குலகில் கூட, ஸ்டாலினுடைய தண்டனை அமைப்பு முறைகள் என்று சொல்லப்படுவதின் மீதான ருசிய ஆராய்ச்சியாளர்களுடைய அறிக்கைகள் பத்திரிக்கைகளின் முன் பக்கங்களாலும் தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்புகளாலும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன இருட்டடிப்புச் செய்யப்பட்டன. ஏன்? ஏன் என்பதற்கான பதிலை கம்யூனிச எதிரிகளும் அறிவர்; கம்யூனிஸ்டுகளும் அறிவர். இனி, அறிய வேண்டியவர்கள் மக்கள் தான்!

ங்கட்டுரையின் மூலம்: சுவீடன் நாட்டின் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புரட்சியாளர்கள்) உறுப்பினர் மரியோ சூசா, "நார்த்ஸ்டார் காம்பஸ்' என்ற வட அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை. கல்கத்தாவில் இருந்து வெளிவரும் ஃபிராண்டியர் என்ற ஆங்கில வார இதழ் (ஜனவரி 915, 2000) அக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ததில் இருந்து சில விளக்கங்கள் சேர்க்கைகளுடன் இத்தொடர் மொழி பெயர்க்கப்பட்டது.சி

மாணிக்கவாசகம்
மார்ச்மேஜூன் 2000

ஸ்டாலின் எதிர்ப்பில்
ஒரு தமிழ்நாட்டு வானவில் கூட்டணி!

ஸ்டாலினுக்கு எதிரான அந்த மேலைநாட்டு அவதூறுகளை அப்படியே இறக்குமதி செய்து இங்கே பரப்புவதற்கென்று, ஒரு பெருங்கூட்டம் அல்லும் பகலும் அலைகிறது. தமது சித்தாந்தச் சாய்வுகள் காரணமாக எதிரெதிர் முகாம்களில் நின்று கடுமையாக மோதிக் கொள்பவர்களைப் போலத் தோன்றும் இந்தக் கூட்டத்தினர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பில் மட்டும் ஒரு வானவில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளனர். ""உன்னதமான கலைஇலக்கியம்சினிமா அரசியல்'', ""மனித நேயமிகு தரமான படைப்புகள்'' என்கிற பெயரில் இவர்கள் பதிப்பிக்கும் எல்லா நூல்களிலும் இழையோடுவது ஸ்டாலின் எதிர்ப்புதான்!
இந்த வானவில் கூட்டணியில் ஒரு கோடியில் நிற்பவர்கள், இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் அவற்றின் குலக்கொழுந்துகளான மொகித்சென், ஓம்கார், மணியரசன் போன்றவர்கள் தலைமையிலான குழுக்கள். இவர்கள் எல்லாம் தமது போலி கம்யூனிச திரிபுவாதச் சித்தாந்தத்தை நியாயப்படுத்தும் நோக்கத்தோடு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுகளைப் பரப்புகின்றனர்.

இவர்கள் அனைவரும் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் மார்க்சிய லெனினிய உட்கிடக்கையை நீக்கிவிட்டு, பெயரில் மட்டுமே கம்யூனிசத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்வது, சோசலிசத்தை நிர்மாணிப்பது ஆகியவற்றை நிராகரித்துவிட்டார்கள். பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் சந்தை சோசலிச சமுதாயம் காண்பதுதான் அவர்களின் இலட்சியம். அதற்கேற்ப கம்யூனிசச் சித்தாந்தத்தையும் திரித்துக் கொண்டுள்ளனர். இதையே அவர்கள் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்கிறார்கள். இதன் சாரம் குருச்சேவ், பிரஷ்நேவ், கோர்பச்சேவ் மற்றும் யூரோ கம்யூனிசம் போதித்தவைதான். இந்தப் போதனைகள் எல்லாம் ஸ்டாலின் மீதான அவதூறுகளை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்டவை. எனவே, ஸ்டாலின் மீதான அவதூறுகளைக் கேள்வி முறையின்றி ஏற்பதோடு, கம்யூனிசப் புரட்சியாளர்களை எதிர்ப்பதற்காக தாமே அவற்றைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.

இந்த வானவில் கூட்டணியின் இன்னொரு கடைக்கோடியில் நிற்பவர்கள் சுந்தர ராமசாமி, ஜெயமோகன், காலச்சுவடு கணையாழி கும்பல். ஆர்.எஸ்.எஸ். சார்பு பார்ப்பன சனாதன சித்தாந்தத்தை வரித்துக் கொண்டுள்ள இக்கும்பல் கலை இலக்கிய முகத்திரை போட்டுக் கொண்டு, மனிதநேயம், ஜனநாயகத்தின் பெயரால் ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அவதூறுகளைப் பரப்புகிறார்கள். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளின் அடியொற்றி பின் தொடரும் நிழலின் குரலாக ஜெயமோகன் அத்தகு அவதூறு பரப்பும் வேலையைத் தொடர்ந்துள்ளார். தனது நாவலின் ஓரிடத்தில் ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொன்று, உக்ரைனில் பல பத்து இலட்சம் பேர் சாவுக்குக் காரணமான பஞ்சத்தை, ஸ்டாலினது சோவியத் ரசியா ஏற்படுத்தியதாக ஜெயமோகன் எழுதுகிறார். மேலும் ஸ்டாலினது அரசாங்கத்தினால் தேசத்து மக்களில் பாதிப்பேர் எந்தவித விசாரணையும் இல்லாமல் புழுப்பூச்சிகள் மாதிரி அழிக்கப்பட்டதாகவும் மீதிப் பேர் சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்டதாகவும் எழுதுகிறார்.

அடுக்கடுக்கான இந்த அவதூறுகளுக்கு என்ன ஆதாரம்? பிரிட்டிஷ் உளவுப் படையின் சம்பளப்பட்டியலில் இருந்த ஆர்தர் கீஸ்லர் எழுதிய "நடுப்பகலில் இருட்டு' என்ற நூல். அப்புறம் 50களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மார்த்தாண்டம் சந்தையில் அனாதையாக பிச்சைக்காரனாக இறந்த இளம் கவிஞனின் கதையை ஜெயமோகனின் அம்மா சொன்னாராம். அதை வைத்து ஜெயமோகன் பின்னியவை தாம் ஆதாரங்கள்! அந்த இளங்கவிஞனுக்கு ரசிய மக்கள் தொடர்பு அமைச்சகத் தகவல்களோடு ஒரு இரகசியக் கடிதம் வந்ததாம்; இலக்கியவாதிக்குரிய மனம் இருந்ததால் ஒரு ஆதாரமும் இல்லாமலேயே அது உண்மை என்று உறுதியாகத் தெரிந்ததாம்; மேற்கொண்டு தகவல்களை மேற்கத்திய மீடியா வழியே திரட்டி எழுதிவிட்டாராம்; அதைத் தெரிந்து கொண்ட கட்சி அவரை வெளியேற்றி விட்டதாம்; இவைதாம் ஜெயமோகனும் அவர் மூலமாக சுந்தர ராமசாமியும் தரும் தகவல்கள்.

ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகளை மேற்கத்திய செய்தி (மீடியா) ஊடகம் எப்படித் திட்டமிட்டு உருவாக்கிப் பரப்பியது என்பதை முன்பக்கங்களில் உள்ள கட்டுரை நிரூபிக்கிறது; அதே மேற்கத்திய செய்தி ஊடகம்தான் ஜெயமோகன் போன்ற கம்யூனிச ஸ்டாலின் எதிரிகளுக்கான ஆதாரமாகவும் இருக்கிறது. ஆனால் ஜெயமோகன், சுந்தர ராமசாமிகளின் நோக்கம் ஸ்டாலின் எதிர்ப்பு மட்டுமல்ல. அதே அவதூறுகளைக் கொண்டு மாவோ, கமால் பாஷா, கரிபால்டி போன்ற புரட்சிகர, ஜனநாயகத் தலைவர்களைக் கூட இடிஅமீன், இட்லர் போன்ற பாசிச சர்வாதிகாரிகளோடு இணைத்து ஏசுகின்றனர். இட்லரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர்; இட்லரின் ஆட்சிக்கு ஆசி வழங்கியவர் 12வது போப் பயஸ்; இருவரும் தத்தமது இந்துத்துவத்தையும், கிறித்துவத்தையும் காப்பதற்கு, நாஜிக்களின் யூதப்படுகொலைகளை மூடிமறைக்கவும், ஸ்டாலின் மீது அவதூறுகளைப் பரப்பினர்.

ஸ்டாலின் எதிர்ப்பு வானவில் கூட்டணியின் மேற்கண்ட இரு கோடிகளுக்கு இடையே நிற்பவர்கள் கோவை ஞானி எஸ்.என். நாகராசன் தலைமையிலான நிகழ் பரிமாணம் சிற்றேடுகளின் குழு, மற்றும் அ.மார்க்ஸ், ரவிக்குமார் தலைமையிலான நிறப்பிரிகை தலித் சிற்றேடுகளின் குழு. மற்ற ஸ்டாலின் எதிர்ப்பு உதிரிகள் எஸ்.வி. ராஜதுரை போன்ற தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். ஞானிநாகராசனின் ஆன்மீகத் தேடல்களுக்கும், அ.மார்க்ஸ் ரவிக்குமாரின் பின்நவீனத்துவக் கழிசடைத் தத்துவத்துக்கும், தன்னார்வக் குழுக்களின் சீர்குலைவுப் பணிகளுக்கும் தேவையானது கம்யூனிச சித்தாந்தத்தை நிர்மூலமாக்குவது. அதற்கான கருவியாக ஸ்டாலின் மீதான அவதூறுகளை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
மாணிக்கவாசகம்
மார்ச் மே ஜூன் 2000

Thursday, March 30, 2006

தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்

சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்

பி.இரயாகரன்
29.03
.2006

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.

வாய்பேசவே முடியாத அசாதாரணமான ஒரு நிலையில், மக்கள் தேசியத்தின் பெயரில் வாழவைக்கப்படுகின்றனர். மக்கள் தமது சொந்தக் கருத்தை ஊமையாக வெளிப்படுத்தும் விதத்தின் மூலம், இதன் மீதான தமது ஆழ்ந்த வெறுப்பைப் பிரதிபலிக்கின்றனர். தேசியத்தின் பெயரிலான யுத்தம் இப்படி என்றால், தேசியத்தின் பெயரிலான அமைதியும் கூட மக்களுக்கு எதிராகவே உள்ளது. மக்கள் புலித் தேசியத்தின் பெயரில் வாழவழியின்றி, தேசியத்தின் பெயரில் வாழ்வை இழந்து நிற்கின்றனர். சொந்தக் குழந்தையை, குடும்ப உறுப்பினரை, உறவினரை, ஏன் சமூகத்தின் கூட்டைக் கூட இழந்து விட்டனர். இதன் மேல் எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாத நிலையில் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். சொல்பவன் மேலும் இழப்பை தாங்கி கொள்ள வேண்டிய துயரமே, எமது புலித் தேசியமாகிவிட்டது.

இது மட்டுமா இல்லையே, உழைப்பை, சொத்துக்களை, சுற்றுச் சூழலை, சிந்தனை ஆற்றலை, ஏன் சமூகத்தின் ஆற்றல்மிக்க பரஸ்பர இயங்கியல் உறவை எல்லாம் தமிழன் இழந்துவிட்டான். இதையே தேசியம் என்கின்றனர். இதையே தமிழ் தேசிய வெற்றி என்கின்றனர். பிரபாகரனும், அவனைச் சுற்றி வாழ்பவர்களின் வாழ்க்கையையும் தான் தேசியம் என்றும், தேசிய வெற்றியும் என்கின்றனர். இந்த சிறு கும்பல் இதன் பெயரில் வாழ்வதால், அவர்களின் உலகளாவிய நுகர்வு கூட தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றது. தமிழ் மக்களின் பெயரில், தமிழ் தேசியத்தின் பெயரில் இவை அனைத்தும் கடைவிரித்து நியாயப்படுத்தப்படுகின்றது.

மக்களை வாய்களை மூடி ஒட்டிவிட்டு நடத்தும் மூகமுடிக் கொள்ளை போன்ற, இந்த புலித் தேசிய கொள்ளைக்காரர்கள் ஒரு கைதேர்ந்த மூகமூடி கொள்ளைக்காரராகவே மாறிவிட்டனர். மூகமுடி கிழிகின்ற போது, அவர்களை காப்பாற்றவே யாருமில்லாது போய்விடும் தவிர்க்க முடியாத பாதையில், வேகமாகவே இந்த மூகமுடிக் கொள்ளைக்காரர்கள் தப்பியோட முனைகின்றனர்.

இதைத் தான் பேச்சுவார்த்தை என்ற பெயரில், அன்னிய நாடுகளில் ஆடம்பரமான மாளிகைகளில் கூடியிருந்து பேசமுனைகின்றனர். அங்கு மக்களுக்காக என்ன பேசுகின்றார்கள் என்றால் எதுவுமேயில்லை. மக்கள் பற்றி, அந்த சமூகத்தின் எதிர்காலம் பற்றி இவர்கள் எதிரியுடனும் பேசுவதில்லை, ஏன் தமக்குள்ளும் கூட பேசுவதில்லை. தமக்குள் பேசிக் கொள்வதே, தமது சொந்த குழு நலன்பற்றி மட்டும் தான். இப்படிப்பட்டவர்கள் எதிரியுடன் மக்கள் பற்றி பேச முடியாது. ஏன் அதைப்பற்றி எந்த அறிவும் கூட இவர்களிடம் கிடையவே கிடையாது.

மாறாக தமிழ் குறுந்தேசியத்தின் கடைக்கோடியில் நின்று, குறுகிய குழுநலனை முதன்மைப்படுத்தி இழிந்துபோன விபச்சார தரகர்களாகி பேரங்களில் ஈடுபடுகின்றனர். இதை பேரினவாதம் தனது நலனுக்கு இசைவாக பயன்படுத்தி, சிங்களப் பேரினவாதத்தையே தக்கவைக்கின்றது. உண்மையில் பேரினவாதம் முதிர்ச்சியடைந்த ஒரு அரசியல் சதுரங்கத்தில், புலிகளின் குறுகிய நலன்களின் பின்னால் வெற்றிகரமான அரசியலையே செய்கின்றனர்.

இதனடிப்படையில் இன்று புலிகளின் மையப் பிரச்சனையாக கருணா விவகாரம் உள்ளது. இதற்குள் புலிகள் சுற்றிச்சுற்றி நிற்க, பேரினவாதம் அதற்குள் சுற்றிச்சுற்றி ஒடுகின்றது. கிட்டத்தட்ட கிழக்கின் ஒரு பகுதியை புலிகள் கருணாவிடம் இழந்து நிற்கின்றனர் அல்லது கருணா அதை எடுத்துள்ளார். இந்த விடையம் தொடங்கிய போது புலிகள் ஆர்ப்பரித்து அதை தமது சொந்த வக்கிரத்தின் மூலம், அதை வெறும் தனிநபர் விவகாரமாகவே காட்ட முனைந்தனர். அதன் விளைவு இன்று பூதாகரமாகி, அவர்களின் அதிகாரத்தைக் கூட நடுச்சந்தியில் நிறுத்துகின்றது.

அன்று இந்த விடையத்தை தாமே தீர்த்துக் கொள்வதாக கூறியதுடன், அரசு இதில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கையையும் கூட விடுத்தனர். தமிழ் மக்களுக்கு இது ஒரு சிறிய பிரிவின் பிரச்சனை என்று கூடக் கூறினர். எல்லாவற்றையும் வெற்றிகரமாக அரசியல் கொலைகள் மூலம் நடந்தி முடித்துவிடலாம் என்று கூட நம்பினார்கள். அப்படித்தான் செய்தார்கள். இராணுவ ரீதியில் தீர்க்கப்படமாட்டாது என்று கூறியபடியே, படுகொலைகளை தொடங்கினார்கள். இந்த அரசியல் படுகொலைக்கு இலங்கை அரசு பலவகையில் உதவியது. கண்காணிப்புக் குழு மறைமுகமாக உதவியது. ஏன் இராணுவ ஆயுதப் பயன்பாடு, ஒரு யுத்தநிறுத்த மீறலாக இருந்த போதும் கூட, கண்காணிப்புக் குழு இதை யுத்தநிறுத்த மீறலாக கூட பதிவு செய்யவில்லை. இதன்போது கொலைகள், ஆட்கடத்தல், ஆயுத பயன்பாடுகள் எவையும் யுத்த நிறுத்த மீறலாகக் கூட பதிவு செய்யப்படவில்லை. ஏன் கருணா அங்கிருந்து முற்றாக துரத்தியடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூட, புலிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இருந்தபோதும் புலிகள் எதிர்பார்த்த மாதிரி நிகழ்ச்சிகள் நிகழவில்லை.

மாறாக மட்டு அம்பாறையில் படிப்படியாகவே புலிகளின் பலம் சிதறி கட்டுப்பாட்டை இழந்து வருகின்றனர். இது திருகோணமலையை நோக்கியும் நகருகின்றது. புலிகள் என்ற குழுவின் இராணுவ எதிர்காலத்தைக் கூட, இது கடுமையாகவே கேள்விக்குள்ளாக்கி வருகின்றது. பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகி வருகின்றது.

கருணா விவகாரத்தை இராணுவ ரீதியாக கையாண்டதனால் ஏற்பட்ட தோல்விதான், புலிகளை மீண்டும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு செல்லவைத்தது. இதன் மூலம் அரசுடன் சேர்ந்து கருணா விவகாரத்தை மீண்டும் இராணுவ ரீதியாக கையாள விரும்புகின்றனர். இதற்குள் தான் சுற்றிச்சுற்றி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இது வெற்றியளிக்காத ஒரு நிலையில், புலிகள் இராணுவ ரீதியாக இராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தினாலும் கூட கருணா விவகாரம் தீர்க்கமுடியாது. மாறாக கிழக்கின் பெரும் பகுதியை அல்லது முற்றாகவே புலிகள் இழக்கவேண்டிய நிலை உருவாகும்;. இதனால் புலிகள் மீண்டும் யுத்தத்துக்கு செல்வதை இந்த விவகாரம் கூட தடுக்கின்றது. ஒரு சிலந்திவலையில் சிக்கிவிட்ட புலிகள், அதில் இருந்து தப்ப அங்குமிங்குமாக அலைபாய்கின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே "அரசியல"; வேலைசெய்யவெனக் கூறி, இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல அனுமதி கோருகின்றனர். குறிப்பாக கிழக்கில் இராணுவ பாதுகாப்புடன் உட்புகுவதன் மூலம், தம்மீதான இராணுவ கைதுகளை தவிர்த்து இராணுவத்தின் பாதுகாப்புடன் தேடியழித்தலை செய்ய விரும்புகின்றனர். இதையே அவர்கள் "அரசியல்" வேலை செய்தல் என்கின்றனர். இதன் மூலம் நிதி திரட்டல், ஆட்திரட்டல் உட்பட பலவற்றை மீண்டும் செய்ய விரும்புகின்றனர்.

தம்மீதான கருணா தரப்பு தாக்குதலைக் காட்டி, "அரசியல்" வேலை செய்வதில்லை என்று அறிவித்த அன்றைய நிலைமை எதுவும் இன்று மாறிவிடவில்லை. ஆனால் "அரசியல" வேலை செய்வதாக கூறி மீண்டும் செல்வதன் மூலம் தான், குறைந்தபட்சம் அழித்தொழிப்பை செய்ய முடியும் என்ற நிலைமை கிழக்கில் ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாமல் அரசின் எந்த நிபந்தனையையும் ஏற்று, மீண்டும் "அரசியல்" செய்ய செல்வதன் மூலம் கருணா விவாகாரத்தை இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவரவே புலிகள் விரும்புகின்றனர். இங்கு பேச்சுவார்த்தையே புலிகளின் இராணுவ வழியாக இருக்கின்றது. இதைப் பேரினவாதம் தெளிவாக புரிந்து, இதற்கு ஏற்ப முரண்டுபிடித்து காய்நகர்த்தலை செய்கின்றது. புலிகள் தாங்களாகவே உருவாக்கிய சிக்கலில் இருந்து இராணுவ ரீதியாக மீண்டும் மீளநினைப்பது நிகழ்கின்றது. அரசு குண்டுசட்டிக்குள் குதிரையை (புலியை) ஒட்ட முனைகின்றது.

இந்த நிலையில் புலிகள் புதிதாக சந்திக்கும் மிக முக்கிய நெருக்கடியாக இருப்பது

1.கிழக்கில் கருணா விவகாரம்
2.மேற்கில் ஜெயதேவன் விவகாரம்

இவர்கள் இருவருமே புலிகளின் முக்கியமான நபர்களாக இருந்தவர்கள். புலிக்கு எதிராக இன்று பலம்பெற்று பலம்பொருந்தி நிற்கின்றனர். புலிகள் இந்தளவுக்கு நெருக்கடியை வரலாற்றில் என்றும் சந்தித்து கிடையாது. இது போன்று நாளை புலிக்குள் இருந்தே பலர் வருவார்கள்;. இதை இந்தச் சம்பவங்கள் வரலாறாகவே மீண்டும் உறுதி செய்கின்றது. இந்த நிலைமை புலிகளின் சொந்த பாசிச அணுகுமுறையினால் தான் ஏற்படுகின்றது. புலிக்குள்ளும் வெளியிலும் புலியின் பொதுவான பாசிச அணுகுமுறை இதைத்தான் உருவாக்குகின்றது. இதில் பலர் கொல்லப்பட்டாலும் சிலர் மிக மூர்க்கமாகவே தப்பிப்பிழைத்து விடுகின்றனர். அவர்கள் புலிக்கு சவால் விடுபவராகவே மாறிவிடுகின்றனர்.

புலிக்கு சவால்விடும் முன்னாள் புலிகளின் அரசியல் என்ன? நாய்க்கு எலும்பு போட்டால் எப்படி வாலாட்டுமோ, அப்படியான ஒரு நிலையில் இருந்தவர்கள் தான் இவர்கள். இதற்கு அவர்கள் தயாராக இருந்தவர்கள் தான். இன்றும் அதைத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த நாய்களை வளர்க்கத் தெரியாத பிரபாகரனின் அணுகுமுறை தான், புலிக்கு எதிராகவே அவர்களை வெறிபிடித்து அலைய வைத்துள்ளது. இவர்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இருக்கவில்லை. கருத்தின் அடிப்படையில் புலியில் இருந்து வெளியேறவில்லை. புலிகளால் எட்டி உதைக்கப்பட்ட நிலையிலேயே காவடி எடுக்கின்றனர். தனிப்பட்ட முரண்பாடுகளை மூடிமறைக்கவே திடீர் அரசியல் கோசங்களை கவ்விக் கொண்டு, பழைய எலும்மைப் பார்த்து வொவ் வொவ் என்று குலைக்கின்றனர்.

1. கருணா விவகாரம் தனிப்பட்ட அதிகாரம் சார்ந்த முரண்பாடுகளால் எழுந்தவைதான். ஆனால் இதை பேசித் தீர்க்க முடியாத வகையில், ஒரு அமைப்பின் ஜனநாயகமின்மை இதன் அடிப்படையாக இருந்தது. ஒரு பாசிச அமைப்பில் காணப்படும் சர்வாதிகார முறைமை, முரண்பாட்டுகளுடன் இணங்கிப் போதல், ஏன் பேசித்தீர்த்தல் என்பதை நிராகரிக்கின்றது. இது எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றது. இதை தீர்க்க உயிரையே காவுகொள்ள முனையும் போது, அது கோரமான வடிவத்தில் எதிர்வினையாற்றி தன்னைத் தக்கவைக்கின்றது.

கருணா இதில் இருந்து தப்பிப்பிழைக்க புலிகளின் யாழ் மேலாதிக்க பிரதேச வாதத்தையே பயன்படுத்தி, பிரதேசவாதத்தை முன்னே தள்ளி தன்னை அரசியல் ரீதியாகவே தற்காத்துக் கொள்ள முனைந்தான். இதை புலிகள் வழமைபோல் அதே சர்வாதிகார பாசிச அணுகுமுறையுடன் எட்டி உதைத்தனர். இந்த நெருக்கடியைக் கூட கையாளத் தெரியாத அரசியல் மூடர்களாகவே அவர்கள் இருந்தனர். இந்த அரசியல் மூடர்களின் அணுகுமுறை இயல்பாகவே, கருணாவின் பலத்தை அதிகரிக்கவைத்தது. உண்மையில் கருணாவை இராணுவ ரீதியாகவே பலப்படுத்தியது. புலிகளின் அணுகுமுறைதான் அதற்கு நெம்புகோலாக இருந்தது.

இது சகலருக்கும் பொருந்தும்;. புலிகளுடன் முரண்பட்டவர்களுக்கு மரணதண்டனை என்ற தீர்ப்பு முன்னால் வைக்கப்பட்ட பின்பு, சம்பந்தப்பட்டவர்கள் உயர்ந்தபட்ச துணிச்சலுடன் புலிக்கு எதிராக செயல்படத் தொடங்குகின்றனர். இதன் மூலமே, தம்மை புலிக்கு மாற்றான தலைவர்களாக மாற்றிவிடுகின்றனர். புலிக்கு எதிரான அணியை புலிகள் தான், தமது சொந்த நடைமுறைகளில் இருந்து உருவாக்கிவிடுகின்றனர்.

கருணா தானும் சேர்ந்து உருவாக்கிய யாழ் மேலாதிக்க பிரதேசவாதத்துக்கு எதிராக, அதே பாணியில் தனது குறுகிய பிரதேசவாதத்தை வைத்ததன் மூலம், மற்றொரு புலியாக உருவாகினான்;. பிரபாகரனுக்கு நிகராகவே மற்றொரு பிரபாகரன்;. அதே சர்வாதிகார பாசிச அமைப்பு. அன்றாடம் நடக்கும் கொலைகள், கடத்தல்கள் அனைத்தும் யார் ஏன் செய்தனர் என்று இனம் காணமுடியாத வகையில், ஒரே தன்மையானதாகவே காணப்படுகின்றது. கொலைகள் தான் தமக்கான அரசியல் வழி. அப்படித் தான் கிழக்கில் கருணா பாசிசம் உதயமாகின்றது. புலிக்கு மாற்றாக கருணாவிடம் மாற்று என்று எதுவும் கிடையாது. கொலை, கொலைகள் இதன் மூலம் சமூகத்தில் அச்சத்தை ஊட்டி, மற்றைய கொலைகாரர்களை ஒடவைத்து பிரதேசத்தைக் கைப்பற்றுவது தான் இவர்களின் அரசியல்.

இப்படி வளர்ந்துவரும் கருணா விவகாரத்தையே புலிகள் தான் தாமே வலிந்து உருவாக்கினர். அன்று கருணா அறிவித்த பிரதேசவாதம் தொடர்பாக பேசத்தயார் என்று புலிகள் அறிவித்து, பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும். கருணாவின் தனிப்பட்ட முரண்பாடும், அவர் வைத்த பிரதேசவாத அரசியலும் கேள்விக்குள்ளாகியிருக்கும்;. அவர்களின் நேர்மை சந்திக்கு வந்திருக்கும்;. பிரச்சனைகளை பேசித் தீர்க்கும் அணுகுமுறை, கருணாவின் குறுகிய பிரதேசவாத அரசியல் முன்முயற்சியை இல்லாததாக்கியிருக்கும்;. மறுபக்கத்தில் பேச முனைவதன் மூலம், காலகாலமாக இருந்துவரும் யாழ்; மேலாதிக்கத்தை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கியிருக்கும்.

ஆனால் புலிகள் செய்தது என்ன? பேச மறுத்து, இராணுவ ரீதியாக அழித்தொழித்தல் என்ற பாசிச வழியில் அணுகியது. இது இயல்பாகவே நிலவிய பிரதேசவாத உணர்வுக்கு தீனி போட்டு, பிரதேச வெறுப்பாகவே வளர்ச்சியுற்றது. இதன் மூலம் கருணா தனித்துவமிக்க ஒரு இராணுவக் குழுவாக உருவாக வழியமைத்தது. இதன் வளர்ச்சியே, கிழக்கில் புலிகளின் பல பகுதிகளை அவர்கள் படிப்படியாக இழப்பதை துரிதமாக்குகின்றது. இரகசியமான ஒரு படுகொலை யுத்தம் நடக்கின்றது. இராணுவ வழியில் ஈவிரக்கமற்ற படுகொலைகள், சித்திரவதைகள் ஊடாகவே கருணா என்ற மற்றொரு புலியின் பலம் கிழக்கில் படிப்படியாக அதிகரிக்கின்றது.

அண்ணையையே கருணாத் தம்பி மிஞ்சும் அளவுக்கு, கொலைக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. கிழக்கில் அண்மையில் தொடரும் படுகொலைகள், புலிகள் அங்கு பலவீனமாக இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இங்கு பலம் பலவீனம் என்பதை கொலைகளைக் கொண்டே, தமிழ் தேசியம் தன்னை இனம் காட்டி வருகின்றது. யார் அதிக கொலை செய்கின்றார்களோ, அவர்கள் அப்பிரதேசத்தை கைப்பற்றுகின்ற பாசிச அரசியல் நடக்கின்றது. இதைத்தான் தமிழ் தேசியம் என்றும், ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு மக்களின் அடிமைத்தனத்தின் மேல் தமது சிம்மாசனங்களை நிறுவுகின்றனர்.

2. இது போன்றே ஜெயதேவன் விவகாரம்;. வசதியான வாழ்வும், ஊரையே கூட்டி மேய்க்கவல்லவர் இவர். உலகளாவில் மக்கள் விரோதிகளுடன் கொண்டுள்ள உறவு மூலம், எல்லாவிதமான மக்கள் விரோதத்தின் இழிந்த தகமையும் கொண்டு செயல்படுபவர் தான் இந்த ஜெயதேவன். இவர் முரணற்றவகையில் பொருத்தமாகவே மாமனித இயல்புகளுடன் புலிகளின் அணியில் இருந்தது தற்செயலானதல்ல. யாரெல்லாம் மக்கள் விரோதிகளாக இருக்கின்றார்களோ, யாரெல்லாம் தேசியத்தைப் பயன்படுத்தி பிழைக்க கூடியவர்களோ, அவர்கள் புலிகளில் மட்டும் தான், சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப ஒட்டிக்கொண்டு இருக்க முடியும். மக்கள் விரோதிகளாகவே உருவான எல்லாக் குழுக்களையும் விட, மிகவும் பலம் வாய்ந்தவர்களாக மட்டுமல்ல, அதை நாட்டாமை முறையில் அமுல் செய்தவர்கள புலிகள் தான். இந்த வகையில் ஜெயதேவன் புலிகளில் ஒட்டிக்கொண்டு நக்கித் திரிந்தது ஆச்சரியமானதோ, அதிர்ச்சிகரமானதோ அல்ல. புலியில் அவர் செய்தது, ஏகாதிபத்திய துணையுடன் புலியின் மனிதவிரோத செயலுக்கு பட்டுக்கம்பளம் விரித்து துதிபாடியது தான். ஏகாதிபத்திய அங்கீகாரத்தை புலிக்கு பெற்றுக் கொடுக்கவே, வேர்வை சிந்தி நாயாக உழைத்தவர்.

அவர் சொல்வது போல் முன்னமே புலிகளின் மனித விரோத செயலுக்கு எதிராக உள்ளே குரல்; கொடுக்கவில்லை. எந்த நேர்மையான மனிதனும் இப்படி சொல்ல மாட்டான். பொறுக்கிகள் மட்டும் தான் இப்படி சொல்ல முடியும். உண்மையானவன், நேர்மையானவன் எப்போதுமே புலியில் இருந்து விலகிவிடுவார்கள். உண்மையில் கடந்த காலத்தில் பலர் புலியில் இருந்து விலகியிருந்தனர். அவர் கூறியது போல் அவருக்கு தெரிந்த முதல் கொலை மாத்தையா கொலைதான் என்றால், இந்த ஜனநாயக கயவாளிப் பயல் பக்காத் திருடனாவான். பிரிட்டிஸ் ஏகாதிபத்திய கால்களை நக்கிக் கொண்டு, இவர் இன்று ஜனநாயகத்துக்கு தலைமை தாங்குகின்றார்.

சரி இந்த ஜெயதேவன் வன்னிநோக்கி ஏன் சென்றார். புலிகளின் மனித விரோதச் செயலைக் கண்டித்து பாதயாத்திரையாக வன்னி செல்லவில்லை. மாறாக தனது தனிப்பட்ட நலனை உறுதி செய்யவும், லண்டனில் இதற்கு தடையாக இருந்த புலிப்பிரமுகர்களை பற்றி குற்றம்சாட்டச் சென்றவர் தான் இவர். ஊரையே மேய்ந்து வாழ்பவர்களுக்கு இடையிலான சண்டையில், பஞ்சாயத்து செய்து வைக்கக் கோரியே "ஜனநாயகத்தின் தலைவர்" வன்னி சென்றவர். இதற்கு வெளியில் மக்களுக்காக கசிந்து கண்ணீர் மல்கி, புலித்தலைவர்களிடம் மண்டியிடவில்லை. மண்டியிட்டது மக்கள் விரோத புலியை நியாயப்படுத்த, புலியில் தனக்குரிய ஒரு அந்தஸ்த்தை தரும்படி கோரித்தான்.

இப்படி நாயாக வாலாட்டிச் சென்றவரை புலிகள் எப்படி அணுகினார்கள். வழமைபோல் எதைச் செய்கின்றனரோ அதைச் செய்தனர். பிரிட்டனில் புலியை நம்பி அதில் சொகுசாக வாழும் சிலரின் குறிக்கோளை ப+ர்த்திசெய்யும் வகையில், அவரிடம் இருந்த சொத்தை அபகரிப்பதே அவர்களின் குறிக்கோளாக கொண்டு அவரை சிறைவைத்தனர். இதன் மூலம் சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அங்கும் இந்த ஜனநாயக விரோத செயலை எதிர்த்து நின்று கையெழுத்திட மறுக்கவில்லை. அங்கும் ஜனநாயகத்தைக் காட்டிக் கொடுத்து சரணடைகின்றனர். யாருக்கு எதிராக பணத்தைக் கொடுத்து முறையிடச் சென்றாரோ, அவர்களிடமே இவரின் சொத்தை பறித்து கொடுத்த விவகாரமே இவரை புலிக்கு எதிராக "ஜனநாயகவாதி"யாக்கியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று ஜெயதேவனுக்கு எதிராக புலிகள் கூறும் குற்றங்களின் அடிப்படையில், அன்று புலிகள் விசாரணை செய்யவில்லை. சொத்து கைமாற்றம்தான் அனைத்துக்குமான விசாரணையாக இருந்தது. புலிகள் அப்படியென்றால் ஜெயதேவன் இன்று பேசும் ஜனநாயகத்துக்காக போராட அங்கு செல்லவில்லை. மாறாக புலியிடம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் தனக்குரிய கௌரவத்தையும், அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் கோரியே சென்றார். ஆனால் நடந்தது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் பிரிட்டிஸ் அரசின் தலையீடே, அவரை மீண்டும் இலண்டன் கொண்டு வந்தது. அவரின் சொத்தை மீளவும் அவரிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. இதைத் தொடர்ந்து புலிக்கு சவால் விடுமளவுக்கு செயல்பட்டு வந்த ரி.பி.சி வானொலியின் மூலமே, புலிக்கு எதிராக இன்றைய வளர்ச்சி பெற்றுள்ளார். அதேநேரம் முன்பு புலிக்காக ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவி எதைச் செய்தாரோ, அதை அப்படியே புலிக்கு எதிராக மாற்றிவிட்டார். ஒரு குத்துக்கரணம் அடித்ததன் மூலம் எல்லாம் அப்படியே தொடருகின்றது. புலியுடன் இருந்த போதும் சரி, புலியைவிட்டு அதற்கு நேர் எதிராக மற்றைய அணியுடன் சென்ற போதும் சரி, மக்கள் விரோத "ஜனநாயகம்" பற்றிய நிலைப்பாட்டில் அவரின் உள்ளடக்கம் ஒன்றாகவேயுள்ளது. இதன் மூலம் இன்று புலிக்கு எதிராக சர்வதேச ரீதியான கடுமையான தலையீட்டுக்கு துணையாகி புலிக்கு சவால்விடுகின்றார்.

இந்த விடையத்திலும் புலிகளின் அணுகுமுறை தான் மீண்டும் இங்கு அம்பலமாகின்றது. ஒரு எலும்பை வீசினால் வாலாட்டி குலைக்க தயாராக இருந்த ஒருவரை, தனக்கு எதிராக மாற்றிய பெருமை புலிப்பாசிசத்தையே மீண்டும் சேரும். தனக்கு ஒரு எலும்பைக் கோரித்தான் வன்னி சென்ற ஜெயதேவனுக்கு, புலிகள் செய்தது கல்லால் அடித்தது தான். கல்லெறி தாங்காது, அதை விசர் நாயாக்கியதே நிகழ்ந்தது. இன்று கல்லெறியவே முடியாத நிலைக்கு வந்துள்ளது. எதிரிகளை புலிக்கு எதிராக உருவாக்கும் வடிவமே இப்படித்தான்; தொடருகின்றது.

வாலாட்டுவதற்கு ஒரு எலும்பு போதுமானதாகவே இருந்தது. ஆனால் அதற்கு பதில் புலிகளின் நடத்தைகள், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக புதிய சவால்களை தரக் கூடிய ஒருவரை உருவாக்கியுள்ளது. இப்படி பலரை அன்றாடம் உருவாக்கினர். இதில் பலர் எலும்புக்காக அலைபவர்கள் தான்;. ரி.பி;சி ராம்ராஜ்; கூட அப்படி அன்று புலிகளிடம் அலைந்தவர்தான்.

புலிகளின் பாசிசம் கடுமையான எதிர்தரப்பு பாசிசத்தையே உருவாக்குகின்றது. புலிகள் தாம் எதிரியாக கருதுபவர்களுக்கு மரணதண்டனை என்ற பொதுவான அணுகுமுறையே, மரணதண்டனையை எதிர்கொள்ளும் நபர்களை அடுத்த கடைக்கோடியில் மிகத் தீவிரமான புலியெதிர்ப்பு செயல்வீரராக்கி விடுகின்றது. படுபிற்போக்கான மக்கள் விரோதிகள் அனைவருடனும், எந்த நிபந்தனையுமின்றி கூடிக் குலைப்பதையே புலிகளின் அணுகுமுறையே ஒருங்கமைக்கின்றது.

புலியெதிர்ப்பு எதிரிகளை தொடர்ச்சியாகவே அன்றாடம் புலிகள் தான் உற்பத்தி செய்கின்றனர். பின் அந்த எதிரிகளை அழித்தல் என்ற அடிப்படையில், குறுந்தேசிய அரசியல் செய்கின்றனர். இந்த அரசியல் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைகளை இல்லாதொழித்து குறுகிய வட்டத்தில் புளுக்கத் தொடங்குகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை, தமது சொந்த தனிப்பட்ட எதிரியை அழித்தல் என்ற எல்லைக்குள் குறுக்கி அதற்குள் காய் நகர்த்த முனைகின்றனர். புலியின் கடந்தகால பேச்சுவார்த்தையும், அதன் நோக்கமும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையைப் பற்றி ஒருநாளும் பேசவில்லை. மாறாக தமது எதிரிகளை அழித்தொழித்தல் என்ற எல்லைக்குள் அரசியலை குறுக்கி, கொலைகளை பேச்சுவார்த்தை மூலம் இலகுவாக்க முனைகின்றனர். இப்படி பல ஆயிரம் கொலைகளை செய்தனர்.

இந்த நிலையை புலியின் எதிரி உட்பட, தமிழ் மக்களின் எதிரியான போனவாதியும் புலிகளிடம் கற்றுக்கொண்டு, அதற்குள் பேச்சுவார்த்தையை சிதிலமடையச் செய்கின்றனர். நிலைமை இதற்குள் தொடர்ச்சியாகவே மோசமாகி வருகின்றது. ஒப்பந்தச் சாரத்தை மாற்ற முடியாது என்ற கூறும் அதேநேரம், அதை அமுல்படுத்தவும் மறுக்கின்ற சூழ்ச்சிமிக்க அணுகுமுறையே புலி மற்றும் அரசின் நிலைப்பாடாகிவிட்டது.

புதிய கடுமையான எதிரிகள் அன்றாடம் புது அவதாரம் பெறுகின்றனர். கருணா, ஜெயதேவன் போன்றவர்களின் அண்மைய செயல்பாடுகள் புலியின் அணுகுமுறைக்கே சவால் விடுகின்றது. இது ஒரு பிரதேசத்தையே புலி இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. கிழக்கில் கருணா அணியின் செயல்பாடுகள் புலிகளை அங்கிருத்து துடைத்தொழிக்கின்றது. அதேநேரம் அங்கு மற்றொரு பாசிச புலி உருவாகின்றது. மேற்கில் ஜெயதேவன் விவகாரம், ஒரு தரப்பான புலியின் புகழ்பாடும் கருத்துத்தளத்தை இழிவுபடுத்தி மற்றொரு இழிவு புகுத்தப்படுகின்றது.

புலியின் பேச்சுவார்த்தைகள் எதிரிகளை கொல்லுதலுக்கு இசைவான ஒரு சூழலை உருவாக்குவதாக இருந்தது. ஆனால் பல புதிய சவால்மிக்க எதிரிகளை உருவாக்குவதையே இப் பேச்சுவார்த்தைகள் எதார்த்தமாக்குகின்றன. உண்மையில் புலியின் பேச்சுவார்த்தைகள், மேலும் பல தளங்களில் புதிய பல எதிரிகளை உருவாக்கிவிட்டுள்ளது. எதிர்காலத்தில் புலிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் கடும் சவால்களை எதிர்பார்க்க கூடிய ஒரு சூழலை, துப்பாக்கி குண்டுகளால் தீர்த்துவிட முடியாது. கருணா விவகாரமும், ஜெயதேவன் விவகாரமும் சந்தேகத்துக்கு இடமின்றி இதை நிறுவியுள்ளது.

புலிகள் அரசியல் ரீதியாகவே தப்பிபிழைப்பது என்பது கேள்விக்குள்ளாகி வருகின்றது. இதில் இருந்து மீள்வதற்கு இரு வழிப்பாதை உண்டு.

1. மக்களுக்கான அரசியலை முன்னிலைப்படுத்தி தம்மை சுயவிமர்சனம் செய்வது.

2. உடனடியாக நிரந்தரமான அரசியல் தீர்வை கோரி பேச்சுவார்த்தையை நகர்த்துவது. இதன் மூலம் ஒரு இதயசுத்தியான ஒரு தீர்வை வந்தடைய முயல்வது.

இதன் மூலம் மட்டும்தான் அரசியல் ரீதியாகவும், ஏன் இராணுவ ரீதியாக கூட புலிகள் தப்பபிழைக்க முடியும்;. பேரினவாதம் பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகத்தை ஆடிய போது கூட அம்பலமாகிவிடவில்லை. புலிகள் தான் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். உண்மையில் பேரினவாதம் எந்தவகையிலும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை. ஏன் அதில் அக்கறையற்று கூட இருக்கின்றது. புலியின் அணுகுமுறை இதற்கு இசைவானதாகவேயுள்ளது.

புலிகளின் சிதைவை துரிதப்படுத்தும் வகையில், புலிகளின் சொந்த குறுந்தேசிய குழுநல அரசியலையே தனக்கு சார்பாக பயன்படுத்துகின்றது. சர்வதேச ரீதியாக புலிக்கு எதிராக உள்ள கருத்து மாற்றப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. பேரினவாதத்தின் பாசிச பயங்கரவாதம் கூட சர்வதேச கருத்துக்கு உட்பட்டதாக கருதும் அளவுக்கு, அமைதிகாலத்தில் கூட புலிகளின் நடைமுறை துணையாகியுள்ளது. பேரினவாதம் சர்வதேச ரீதியாக பலம் பெறுவது என்பது, புலிகளின் நடவடிக்கையாலே தான்; ஏற்படுகின்றது.

பேரினவாத அரசும் சரி, அவர்களை சுற்றி இயங்கும் எதிர்கட்சி உட்பட ஏன் ஜே.வி.பி வரை, மிக மோசமான இனவாதிகளாகவே உள்ளனர். தமிழ்மக்களுக்கு எந்த ஒரு அரசியல் தீர்வையும் அவர்கள் வழங்கப்போவதில்லை. ஏன் அவர்களின் கட்சித் திட்டங்களில் இதற்கான ஒரு தீர்வை முன்வைக்காது, ஒரு இனவாத அரசியலையே நடத்துகின்றனர் என்றால் அது அப்பட்டமான பேரினவாதம் தான். தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்கும் குறிக்கோள் எதுவுமின்றியே, பேச்சுவார்த்தை மேசையில் நெருக்கமாகவே அமர்ந்து வம்பளக்கின்றனர். இவர்கள் இப்படி என்றால் புலிகள் தனது குழுவுக்கு எதிரானவர்களை கொல்லுதல் என்ற அடிப்படையான குறிக்கோளுடன், தமிழ் மக்களின் பிரச்சனைகளை குழிதோண்டி புதைக்கின்றனர்.

இதுவும் பேரினவாதத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான விடையம் தான். கொல்பவனும் தமிழன், கொல்லப்படுவனும் தமிழன். இதனால் நாட்டை விட்டு ஒடுபவனும் தமிழன். தேசம் சிங்கள தேசமாகின்றது. தான் செய்யவேண்டியதை, குறுந்தேசிய புலிகளைக் கொண்டே பேரினவாதம் செய்து முடிக்கின்றது. இன்று கிழக்கிலும் இதே கதி. தமிழன் அன்றாடம் உயிர் இழக்கின்றான் அல்லது சொந்த பிரதேசத்தை விட்டே தப்பி ஒடுகின்றான். தமிழ் மக்கள் சொந்த வாழ்விடத்தை விட்டு செல்வதன் மூலம், ஒரு இனத்தின் அழிவை பேரினவாதம் உறுதிசெய்கின்றது. காலாகாலமாக பேரினவாதம் எதைச் செய்யவிரும்பியதோ, அதை தேசியத்தின் பெயரில் புலிகள் செய்து முடிகின்றனர்.

ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் கையாளப்படும் விதமே, தமிழ் மக்களிடையேயான ஆழமான பிளவாகி அவர்களையே தமக்குள் எதிரியாக்கி மோதவைக்கின்றது. தமிழருக்கிடையான முரண்பாட்டை, புலியின் அரசியலைக் கொண்டே அகலமாக்குதல் என்பது பேரினவாதத்தின் அரசியல் உத்தியாகின்றது. தேசியம் என்பது இதற்குள் சிதைந்து சின்னாபின்னப்படும் போது, பேரினவாதம் இதையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றது. இதற்கு ஆக்கமும் ஊக்கமும் ஏன் உதவியும் கூட செய்கின்றது. இதில் புலிகளின் எதிரிக்கு மட்டுமல்ல, புலிக்கும் கூட உதவுகின்றது.

இன்று தேசியம் என்றால் என்னவென்று கேட்டால், யாருக்கும் அதுபற்றி எதுவும் தெரியாது. தேசியம் என்று அடிக்கடி உச்சரிக்கும் புலிக்கு, அது பற்றிய அறிவே கிடையாது. இராணுவ நடவடிக்கை, கொலை செய்தல், பிரபாவை புகழ்தல், புலிக்கு எதிரானவற்றை தூற்றுதல், சிங்களவன் என்று இழிவாடுதல் இவற்றைத் தான் தமிழ் தேசியம் என்று புலிகள் கூறுகின்றனர். இதை மறுத்து தமிழ்தேசியத்தை உயர்த்துவதைக் கூட, இவர்கள் தேசியத்துக்கு எதிரானதாக தூற்றுவதும் கொல்வதும் தொடருகின்றது.

தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது இலங்கையில் முற்றாக துடைதொழிக்கப்படுகின்றது. தமிழ் இனம் அங்கு ப+ண்டோடு அழிக்கப்படுகின்றது. தமிழ் இனத்தின் தொடர்ச்சியான அன்றாடம் நடக்கும் புலம்பெயர்வு, தொடர்சியான கொலைகார அரசியலால் தூண்டப்படுகின்றது. சொந்த வாழ்க்கையையே வாழமுடியாத வகையில், உழைப்பை சூறையாடுவதன் மூலம் தமிழ் இனம் தப்பியோட வைக்கப்படுகின்றது. வாழவழியற்ற நிலையை சொந்த மண்ணில் உருவாக்குகின்றது. தமிழ் இனத்தின ஆழமான அழிவையும் சிதைவையும் பேரினவாதம் செய்துவிடவில்லை, தமிழ் தேசியம் என்ற பெயரில் புலிகளே செய்து முடிக்கின்றனர். இதையே பேரினவாதத்துடனான பேச்சுவார்த்தைகளில் புலிகள் கோருகின்றனர் என்றால் அதையே வெற்றிகரமாக அமுல்; செய்ய முனைகின்றனர்.

தமிழ் மக்களின் சொந்த விடுதலையை, அவர்களின் சொந்த அதிகாரத்தின்; மூலம் மட்டும்தான் பெறமுடியும்;. தமிழ் மக்களின் சொந்த அதிகாரம் அல்லாத எதுவும், அவர்களுக்கு எதிரானது தான். ஏன் தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற எதுவும், அந்த மக்களின் போராட்டமே அல்ல. அது அவர்களுக்கு எதிரானது. இது பேச்சுவார்த்தையாக இருந்தாலும் சரி, ஜனநாயகமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் இது பொருந்தும்.

Tuesday, March 28, 2006

பாக்கியசாலிகளின் வீர மரணம்,வாழ்வின் முடிவல்ல

பாக்கியசாலிகளின் வீர மரணம்,வாழ்வின் முடிவல்ல

சுதேகு
28.03.06

ருவர் பிறக்கும் தேதியைத் தெரிந்து கொள்வதோ அல்லது இறக்கும் நாளை முன்கூட்டியே அறிந்து கொள்வதோ இன்றைய விஞ்ஞான உலகில் ஒன்றும் புதுமையான விசயமல்ல. மரணத்துக்கு அஞ்சும் வலிமையை இழக்கும் மக்கள், இந்த கொடிய சுரண்டும் உலகில் தமது வாழ்வுக்காக நித்தம் நித்தம் செத்துப்பிழைக்கும் மக்கள் இந்தச் சுரண்டலை எதிர்த்து வாழ்நாள் பூராகவே வாழ்ந்துவிடுகிற இந்த உழைக்கும் மக்கள் இவர்கள் தான் புரட்சியின் பாக்கியசாலிகள்!

உலகின் பத்திலொரு பகுதியை தம் இராட்சியமாகக் கொண்டிருந்த ரோம் சாம்ராச்சியத்தில் ’’மண்ணுலகப் பேரரசு’’ இயேசுவின் பெயரால் கோரிக்கையாக இருந்தது. உலகின் நான்கில் ஒரு பகுதியை தம் இராட்சியமாகக் கொண்டிருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்திய சாம்ராச்சியத்தில் ’’சுயராச்சியம்’’ காந்தியின் கோரிக்கையாக இருந்தது. இரண்டும் அகிம்சை வழிப்பட்டதால் இன்று ஏகாதிபத்தியங்கள் உட்பட பலராலும் போற்றி பேசப்படுகின்றன. இயேசுவின் காலத்தில் ரோம் சாம்ராச்சியத்துக்கு எதிராக செலத்தேனியா ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் பற்றியோ, காந்தி காலத்தில் உழவர் இயக்கங்கள் பற்றியோ இந்த சுரண்டும் வர்க்கங்கள் வாய்திறப்பதுமில்லை, வாழ விட்டதுமில்லை.

காந்தியின் சுயராச்சியக் கோரிக்கையானது அவர் பாசையிலேயே சொல்வதென்றால் அது ’’இராமர் இராச்சியம்’’. காந்தியின் அகிம்சைப் போரில் சிறைவாசம் செல்லுகின்ற அறப்போராட்ட வீரர்களின் துன்பங்களை தர்ம வீரர்களின் துன்பமாக, இராமர் வனவாசம் போகின்ற நோவோடு ஒப்பிட்டு இலக்கியப் புலம்பலாக அதை எடுத்தியம்பினார்கள். இராமர் வனவாசம் போகும் போது, கோசலதேசவாசிகள் வாடி வதங்கியதாகவும், வீழ்ந்து புலம்பியதாகவும், இரத்தக்கண்ணீர் வடித்ததாகவும், பேசும் கிளிகளும் பாடும் பறவைகளும் கதறியதாகவும், கன்றும் பசுவும் கதறி அழுததாகவும், கருவின் சிசுக்கள் கத்தியதாகவும், பூவும் அழுததாகவும், புழுவும் துடித்ததாகவும்… இந்த அறப்போர் வீரர்களுக்கு ஒப்புவமையாக்கினார்கள்.

ஆனால் இந்த கற்பனை வாதிகளுக்கு எட்டாத நிசம் கையளவு தூரத்திலே தான் இருந்தது. பாக்கியசாலிகளின் வாழ்வால் எழுதப்பட்ட அற்புதமான அந்த ஒர் அழகிய இலக்கியம்!

இற்றைக்கு 75ந்து வருடங்களுக்கு முன்பு இவ் அழகிய இலக்கியம் படைப்பாகியது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிப்பட்டபோது அது பிறந்தது. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்டவுடன் பிரிட்டிஸ் அரசு இவர்கள் பற்றிய நூல்கள் அனைத்தையும் தடைசெய்தது. தமிழ் நாட்டில் மட்டும் 11 தமிழ் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆனாலும், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட ஐந்து மாத இடைவெளிக்குள் அவர்கள் பற்றிய புத்தகமொன்று 6 தடவை பதிப்பைப் பெற்றிருந்தது. ஆறாவது பதிப்பு மட்டும் 5000 பதிப்பை பெற்றிருந்தது.

1931.03.23 மாலை 3.00 மணி…..

லாகூர் சிறையின் போக்குவரத்துக்கள் நின்றுவிட்டன. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் வழக்கம் போலவே முகமகிழ்ச்சியுடன் இருந்தனர். மறுநாட் காலையில் தங்களைத் தூக்கிலிடப் போவதாகவே நினைத்துக் கொண்டிருந்தனர். வழக்கத்துக்கு மாறாக கைதிகள் அனைவரும் இன்று முன்னதாகவே அவரவர் அறையில் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தின் வலிமைமிகு சட்டத்தின் காவலாளிகளான ’மாஜிஸ்ரேட்’ மற்றும் சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர்கள் ’ஜெனரல்’ முதலியோர் வழமைபோல பெரிய வாயில் வழியாக உள்நுழையாமல் மறைவாக விசேட விசாரணை கோட்டுக்குப் போகும் வாயில் வழியாகப் புகுந்து வந்தனர். ’மாஜிஸ்ரேட்’ வந்து பகத்சிங்கை அழைத்தபோது ’’’மாஜிஸ்ரேட்’ அவர்களே! தாங்கள் அதிஸ்டசாலி! சுதந்திரப் போராட்டத்தில் இறக்கும் வீரர் எவ்விதம் தூக்கு மேடையைத் தழுவுவர் என்பதை நாங்கள் தங்களுக்கு இதோ நேரில் காட்டுகிறோம்’’ எனப் பகத்சிங் பதிலளித்தார்.

இதைக்கேட்ட ’மாஜிஸ்ரேட்’ கிறுகிறுத்துப்போனார். அவர்கள் மூவரையும் அறைகளை விட்டு வெளியே கொண்டு வந்ததும், சிறையின் மூலைமுடுக்குக்களில் இருந்து கைதிகள் ’’புரட்சி நீடூழி வாழ்க’’,’’ஏகாதிபத்தியம் ஒழிக’’,’’ஏழைகள் வாழ்க’’ என ஆரவாரித்து கூச்சலாக எழுப்பினர். பிறகு, அவர்கள் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

’’உயிர் பிரிந்திடினும் தாய்திருநாடே!
பிரியாதே உந்தன் இனிய நினைவுகள்:
கலந்திடும் இந்த மண் உந்தன் மண்ணிலே
கலந்ததால் இந்த மண்ணும்
மணங்கமழும் உனதன்பாலே!’’


என்று மூவரும் கைகோர்த்தபடி, துள்ளு நடைபோட்டு ஆனந்தமாகப் பாடிச் சென்றனர். தூக்கு மேடைக்கு அருகில் சென்றதும் மூவரும் அதன் மீது தாவி ஏற முயன்றனர். சம்பிரதாயப்படி சில காரியங்கள் செய்யப்பட்டபின் அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். பகத்சிங் நடுவிலும்,வலது பக்கமாக ராஜகுருவும், இடது பறமாக சுக்தேவ்வும் நிறுத்தப்பட்டனர். சுருக்குக் கயிறு அவர்களின் கழுத்தில் மாட்டப்பட்டது. தங்கள் கண்களை துணியால் மறைக்கவேண்டாம் என அவர்கள் சொல்லிவிட்டனர். தாம் இறக்கும் போது கூட தம் தாய்நாட்டை பார்த்தபடியே இறக்கவேண்டும் எனச் சொன்னனர். மூவரும் தூக்குக்கயிற்றை காதலோடு முத்தமிட்டனர். பின்னர் ஆனந்தம் பீறிட்டெழ ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது சுக்தேவ் ’’ ஒரு நிமிடம் சற்றே பிரிந்திருந்தாலும், மீண்டும் மூவரும் ஒன்று சேர்ந்து அஸாத், பகவதி சரணர், யதீந்திரதாஸ் ஆகியோர்களுடன் கூடி, நமது கட்சியின் மத்திய கமிட்டிக்கூட்டத்தை நடத்தச் சொல்லலாம்,’’ என்றார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தூக்குப் பலகை தட்டிவிடப்பட்டது. பகத்சிங் ஒரு கணத்துக்குள் உயிர் துறந்தார். மெலிந்திருந்த ஏனைய இருவரும் இரண்டொரு விநாடிகளில் உயிர் துறந்தனர். 40 நிமிடங்களின் பின்னர் அவர்களது உடல்கள் இறக்கப்பட்டன.

1931.03.23 மாலை 7.45மணி….

பகசிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்களின் உடல்கள் 8.30 மணிக்கு ஒரு மோட்டார் வண்டியில் ஏற்றப்பட்டதாகவும், 60 மைல்களுக்கு அப்பாலுள்ள ஸட்லிஜிக் நதிக்கரைக்குக் கொண்டு போகப்பட்டதாவும், பின்னர் 11.45 மணிக்கு தீயிடப்பட்டதாகவும், அப்போது சீக்கிய புரோகிதர்களும், இந்துப்புரோகிதர்களும் கூட இருந்து கிரிகை நடத்தியதாகவும், அதிகாலை 4 மணிக்குள் உடல்கள் நன்கு வெந்துவிட்டதாவும், உடனே சாம்பரையும், எலும்பையும் சாஸ்திரப்படி பொறுக்கி நதியிலே எறிந்ததாகவும் பிரிட்டிஸ் அதிகாரிகள் செய்தி வெளியிட்டனர்.

ஆனால், 24 வயது நிரம்பிய பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட செய்தி கிடைத்ததும் அவர்களது பெற்றார் உறவினர்களும்; மக்களும் உடலைப் பார்வையிடச் சென்றனர். பிரிட்டிஸ் அதிகாரிகள் மக்கள் பார்வை இடுவதை மறுத்ததால் உறவினர்களும் பெற்றோரும் உடல்களைப் பார்க்காமலே திரும்பினர். 23ம் திகதி இரவே லாகூரில் இச் செய்தி தீ போலப் பரவியது. இளைஞர்களும் பெண்களும் மக்கள் திரளும் கூட்டாகக் கிளம்பியது. ’’பகத்சிங் வாழ்க!’’’’ஏகாதிபத்தியம் ஒழிக!!’’ எனக் கூச்சலிட்டவாறு இரவெல்லாம் தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

1931.03.24

காலையிலே மாணவர்களும், இளைஞர்களும் கூடி, புரட்சி ஓங்குக! எனக் கோசமிட்டவாறு வீதிகளைச் சுற்றி வந்தனர். கடைகளெல்லாம் மூடப்பட்டன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. பகத்சிங்கினதும், ஏனைய தோழர்களினதும் உறவினர்கள் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து வீரர்களின் சாம்பரையும், ஏனைய கரிந்து கிடந்த பாகங்களையும் எடுத்து வந்தனர். உடனே அவை ஒரு பாடையில் வைக்கப்பட்டன. அவை சுமந்து செல்லப்பட்டது. இந்திய உடையிலிருந்த ஐரோப்பிய பெண்ணொருத்தி பகத்சிங்கின் தாயாரின் காலைத் தொட்டு முத்தமிட்டாள். வழி நெடுக மக்கள் பாடையின் மீது மாரியும் பன்னீரும் பொழிந்தனர். பின்னர் ரவி நதிக்கரையிலே தகனம் நடந்தது.

24ம் திகதி காலை முதல் வடக்கே இமயம் முதல் தெற்கெ கன்னியாகுமரி வரை நகரிலும் கிராமங்களிலும் துக்க ஊர்வலங்கள் நடந்தன. மக்களின் கொந்தளிப்பைக் கண்ட அரசு ’’உடலங்களைக் கொண்டு போன பொழுது, பிரிட்டிஸ் துருப்புக்களோ, இந்திய துருப்புக்களோ உடன் செல்லவில்லை: எரிக்கும் முன்பு உடல்களை துண்டாக்கவில்லை: பெற்றோல் எண்ணெய் ஊற்றிக் கொழுத்தவுமில்லை: உடல்களின் பாகங்கள் எதுவும் வெந்து சாம்பல் ஆகாமல் இல்லை: சாஸ்திரப்படியே ஈமைக்கிரிகைகள் நடந்தன’’ என அறிக்கை விட்டும் மக்களைத் திருப்திப்படுத்த முடியவில்லை.

1931.03.25 கராச்சி…

காங்கிரஸ் தலைவரை வரவேற்பதற்கான கூட்டம் சோகையிழந்து காணப்பட்டது. காந்தி வந்து இறங்கியதும்.. ’’தலைவர்களே! திரும்பிச் செல்லுங்கள்! என்று தொண்டர்களும் இளைஞர்களும் கூச்சல் போட்டனர். ஒரு இளைஞன் கறுப்பு மலரொன்றை காந்திக்கு பரிசாகக் கொடுத்தான். ’’பகத்சிங்கைக் கொன்ற பேர்வழி எங்கே?’’ என வாலிபர் கத்தினர். இளைஞர்களின் கொதிப்பை சாந்தப்படுத்த காங்கிரஸ் வழிகளைத் தேடியது.

மாலை ஒரு பெருங்கூட்டம் நடந்தது. வங்காளத் தலைவரான பாபு ஸென் குப்தா பேசமுயன்றார். இளைஞர்களோ அவரை பேசவிடாது ’’காந்தி எதற்காக? அவர் ஒழியட்டும்’’என பெரும் குரலெடுத்து கூச்சல் போட்டனர். அவர் பேசமுடியாமல் இறங்கினார். வங்க வாலிபரின் தலைவரான சுபாஸ் சந்திரபோசின் தலைமையில் வாலிபர் கூடினர். காந்தி - இர்வின் ஒப்பந்தம் தூக்கி எறியப்படவேண்டுமென முழங்கினர்….

ஏழை எளிய உழைக்கும் மக்களினது சுய அதிகாரத்தை கோரிய பகத்சிங்கும் அவரது தோழர்களும் தமது புரட்சிகர கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் மேடையாக, அதை அச்சேற்றும் செய்தி ஏடாக, ஏகாதிபத்திய பிரிட்டிஸ் அரசின் நிர்வாகத்தை எதிர்க்கும் பீரங்கியாக தமது சிறை வாழ்வை பயன்படுத்தினர். சிறைக்குள் இருந்து கொண்டே அரசுடனும், காந்தியுடனும் புரட்சியாளர்களின் விட்டுக்கொடுக்காத போராட்டத்தை தம் உயிரைப் பணயம் வைத்து நடத்தினர். பகத்சிங்கும் அவரது சகாக்களும், நீதிமன்றம் ஒரு கேலிக்கூத்து என அறிவித்து, அதன் நடவடிக்கைகளில் தாங்கள் பங்குகொள்ளப் போவதில்லை என்று மறுத்து எழுதிய கடிதம்…

கமிஷனர், சிறப்பு விசாரணை மன்றம் (டிரிப்யூனல்)
லாகூர் சதிவழக்கு, லாகூர்.

ஐயா,

விசாரணையின் தொடக்கத்தில், நான் உட்பட எனது ஆறு சகாக்களின் சார்பில், கீழ்க்கண்ட விளக்கங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். இது அதிகாரபூர்வமான பதிவேட்டில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

நீதிமன்ற நடவடிக்கைகளில், நாங்கள் எந்த முறையிலும் பங்குபெற விரும்பவில்லை. ஏனெனில், இந்த அரசாங்கம், சமத்துவ அடிப்படையில் அமைந்தது அல்ல என்றும், சட்டபூர்வமான அடிப்படையில் இது நிலைநாட்டப்படவில்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். மனிதன்தான், எல்லா சக்திக்கும் அடிப்படை என்று நாங்கள் திட நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். மக்களால் அளிக்கப்படாத எந்த ஒரு அதிகாரத்தையும் எந்த ஒரு தனிமனிதரோ அல்லது அரசோ உரிமை கொண்டாட முடியாது. இந்தக் கொள்கைகளுக்கு, இந்த அரசு எதிராக இருப்பதால் இது உயிருடன் இருப்பதே செல்லுபடியற்றதாகும். நாடுகளைக் கொள்ளையடித்திடுவதற்காக ஒன்று சேர்ந்திடும் அரசுகள் வாளின் சக்தியினாலன்றி வேறு எந்த வழியிலும், உயிருடன் இருப்பதற்கான ஆதாரமே இல்லை. அதனால்தான் அவை மிருகத்தனமான படைபலத்துடன், மக்களின் சட்டபூர்வமான ஆசைகளையும் அபிலாஷைகளையும், விடுதலை மற்றும் சுதந்திரம் போன்ற
கருத்துக்களையும் நசுக்கி நாசப்படுத்துகின்றன.

இத்தகைய அரசுகள், குறிப்பாக விதியற்ற மற்றும் விருப்பமற்ற இந்திய நாட்டின்மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ள பிரிட்டிஸ் அரசாங்கம் கொள்ளைக்காரர்கள், முரட்டுத் தடியர்கள் மற்றும் சூறையாடுவோர்களைக் கொண்ட ஒரு காலிக் கும்பலே ஆகும். இந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தும் அவர்களின் ஒற்றுமையை நிலைகுலையச் செய்வதற்கும் என, எல்லா வகையான அதிகாரங்களையும் அவர்கள் ஒன்று திரட்டியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கின் பெயரால், பிரிட்டிஸ் அரசு, தனது எதிரிகளை, தனது இரகசியங்களை வெட்ட வெளிச்சமாக்குவோர்களை நசுக்குகிறது.

ஏகாதிபத்தியம் என்பது, பெருமெடுப்பிலான கொள்ளைக்கான சதித்திட்டமே தவிர, வேறு எதுவுமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். மனிதனை மனிதனே சுரண்டுவதும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டுவதுமான, சுய ஆதாய நோக்குடைய சுரண்டலின் மட்டுமீறிய ஒரு நடவடிக்கைதான் ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியவாதிகள் நீதிமன்றங்களையும், சட்ட விதிகளையும் கொலை செய்வது மட்டுமல்ல மிகப்பயங்கரமான அட்டூழியங்களையும் இழைக்கிறார்கள். மக்களை முழுமையான அளவிற்குச் சுரண்டி, சுய ஆதாயம் தேடும் சுயநல நோக்குடன் அவர்கள், போர் போன்ற பயங்கரமான குற்றங்களை இழைக்கிறார்கள். அவர்களின் வெறுக்கத்தக்க நாசகரமான சதித் திட்டங்களுக்கு, மௌனமாக அடிபணிய மறுக்கும் அல்லது அவர்களின் கொடுமையான, சுரண்டும் தேவைகளுக்கு வளைந்துகொடுத்து, வழிவிடமால் போகும் அப்பாவி மக்களின் குருதியைப் பாயச்செய்வதற்கும், இந்த ஏகாதிபத்திய வாதிகள் தயங்குவதில்லை. சட்டம், ஒழுங்குப் பராமரிப்பு என்ற சாக்குப்போக்கின் அடிப்படையில், அவர்கள் அத்துமீறிச் செயல்படுகிறார்கள். எல்லாவகையான அடக்குமுறை அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அவித்ழ்துவிடுகிறார்கள்.

சுதந்திரம் என்பது, மனிதனிடம் இருந்து பிரிக்க முடியாத அவனுடைய ஒரு உரிமை என்றே நாங்கள் நம்புகிறோம். ஓவ்வொரு மனிதனுக்கும் தனது உழைப்பின் பலனை அனுபவிப்பது போன்ற, எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஓவ்வொரு நாட்டுக்கும் தனது இயற்கைவளங்கள் அனைத்தின் மீதும், ஆட்சி உரிமை இருக்கிறது. இந்த அடிப்படை உரிமைகளை ஒரு அரசாங்கம், தம் மக்களுக்கு மறுக்குமேயானால், இத்தகைய அரசு ஒன்றுக்கு முடிவுகட்டச் செய்வதான உரிமை, அந்த நாட்டு மக்களுக்கு உண்டு: அது, அவர்களின் கடமையாகும். நாங்கள் எந்த இலட்சியங்களுக்காக இன்று செத்து மடிந்து வருகிறோமோ, அந்தக் கொள்கைகளையெல்லாம், பிரிட்டீஸ் அரசாங்கம் முற்றிலுமாக எதிர்த்துவரும் காரணத்தினால், நாட்டின் புரட்சியைத் தோற்றுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லா வழிமுறைகளுமே அறநெறியின் அடிப்படையில் நியாயமானதுதான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போதைய கட்டமைப்பில், சமூக-பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில், புரட்சிகர மாற்றங்கள் செய்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். தற்போதுள்ள சமுதாயத்தை, புதிதாக, ஒழுங்காக, ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயமாகத்திருத்தி அமைக்க விரும்புகிறோம். மனிதனை மனிதனே சுரண்டுவதான போக்கை சாத்தியமற்றதாக ஆக்குவதன் மூலம், எல்லாத் துறைகளிலும் நம்பகமான சுதந்திரத்திற்கு வழிகோலவே, இந்த முயற்சி. சமுதாயக் கட்டமைப்பு முழுவதுமாகவே, அடியோடு மாற்றியமைக்கப்பட்டு, அதனிடத்தில், சோசலிஸ சமுதாயம் ஒன்று நிலைநாட்டப்படாத வரை, இந்த உலகம், நிலைதடுமாற்றம் கொண்டு பேரழிவு ஒன்றின் வேதனைகளில் வெந்து வாடிக்கொண்டேதான் இருந்துவரும் என்பது எங்கள் கருத்து.

அமைதியான முறையிலோ மற்றெந்த வழியிலோ புரட்சிகரமான குறிக்கோள்களை நிலைநாட்டுவதைப் பொறுத்தமட்டில், ஆட்சியாளர்களின் மனவிருப்பத்தில் தான் இது அடங்கியுள்ளது என்று, நாங்கள் கூறுகிறோம். புரட்சியாளர்கள் தங்கள் உள்ளத்தில் அன்பையும், மனிதாபிமானத்தையும் கொண்டிருப்பதால், அவர்கள் மனிதகுலத்தை வழிபடுபவர்கள். நாங்கள் நிலையான மற்றும் நீதியின் அடிப்படையில் அமைதியை விரும்புகிறோம். பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிமுனையின் துணையோடும், கோழைத்தனத்திலிருந்து உதித்த பொய்யான செயற்கை அமைதியை நாங்கள் விரும்புவதில்லை.

…..மக்களின் அபிலாசைகளின் அடிப்படையில், கூட்டான நலன்களுக்காக மட்டுமே வரையப்பட்டுள்ள செல்லுபடியாகத்தக்க சட்டங்களில் இருந்துதான், அரசு சட்டபூர்வமான அதிகாரத்தை அடைய முடியும். சட்டங்களை வகுப்பவர்கள் உட்பட யாருமே, இதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியாது. மக்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் வரைதான், சட்டத்தின் புனிதத்துவத்தை பராமரித்து வரமுடியும். சுய ஆதாயத்துக்காக பிறரைச் சுரண்டும் கும்பல் ஒன்றின் கரங்களில் ஒரு கருவியாகிவிடும்போது அது: தனது புனிதத்தன்மையை இழந்துவிடுகிறது……..சுய ஆதாயச் சுரண்டல்களின் கருவியாய் இருந்துவரும் பிரிட்டிஸ் நீதிமன்றங்கள், நீதியை அளித்திட முடியாது: குறிப்பாக அரசாங்க நலன்களுக்கும், பொதுமக்களின் நலன்களுக்கும் இடையே மோதல் இருந்துவரும் அரசியல் துறையில், அவை நீதியை வழங்கிட முடியாது. இந்த நீதிமன்றங்கள், நீதியை ஏளனம் செய்வதான அமைப்புக்களே அன்றி வேறெதுவுமில்லை என்பது நமக்குத் தெரியும்…

இவ்வாறு தங்கள் கருத்தை முழு உலகத்துக்குமே தெரியப்படுத்தினர்.

பகத்சிங் 1907ம் ஆண்டு செப்ரெம்பர் 28ம் திகதி குகைரா கிரந்த் என்னும் கிராமத்தில் பிறந்தார். உழவர் இயக்கத்தில் ஈடுபட்ட அவருடைய சிறிய தகப்பனாரை பிரிட்டிஸ் அரசாங்கம் லாலா லஜ்பத்ராயுடன் பர்மாவுக்கு நாடுகடத்தியபோது, உழவர்கள் பொதுமக்களின் கடும் எதிர்ப்புப் போருக்குப் பயந்து வெள்ளை அரசு நவம்பரில் அவரை விடுதலை செய்தது. இந்த மகிழ்சியான செய்திகளின் பூரிப்பால் பகத்சிங்கின் பாட்டி பாக்கியசாலி என்ற பொருள்கொண்ட ’பகத்சிங்’ என்ற பெயரை இவருக்குச் சூட்டினார்.

1919.04.13ம் திகதி ஜாலியான்வாலா பாக்கில், ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்களை ஆங்கில வெள்ளை அரசு ஈவிரக்கமின்றி கொன்று குவித்தபோது, பகத்சிங் அவ் இரத்தம் தோயந்த மண்ணை தன்னோடு எடுத்துவந்தார். பஞ்சாபில் அப்பொழுது தலைப்பாகை (பக்டி) கட்டுவது, பஞ்சாபி மொழி எல்லாக் கிராமங்களிலும் படிப்பது போன்ற விறுவிப்பான தீவிர பேரலை வீசிய காலம். 1923ல் லாகூர் நஷனல் காலேஜ் மாணவராக பகத்சிங் இருந்தபோது, நாடகக் குழுக்களுடன் இணைந்து கொண்டதுடன், புரட்சிக்கான விபரமான ஆய்வுகளையும், ஆலோசனைகளும் அவர்களால் தொடந்து நடத்தப்பட்டது. இக்காலத்தில் கான்பூரில் ’பிரதாப்’ செய்தி ஏட்டிலும் வேலைசெய்தார். கான்பூரில் பல புரட்சியாளர்களின் பல தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இதில் சந்திரசேகர் ஆசாத் முக்கியமானவர்.

1924.08.09 திகதி கங்கேரி அருகே இரயில் வண்டியை நிறுத்தி, பல புரட்சியாளர்கள் வெள்ளை அரசாங்கத்தின் கஜானாவைக் கொள்ளையடித்தனர். சந்திரசேகர் ஆசாத் தவிர இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்துப் புரட்சியாளர்களும் விரைவாகக் கைதுசெய்யப்பட்டனர். கோண்டா சிறையில் ராஜேந்திரநாத் தூக்கிலிடப்பட்டார். அஷ்ஃபாக் உல்லாகானும், ரோசன் சிங்கும் அடுத்தடுத்து தூக்கிலிடப்பட்டனர். இக்கொடுமை நாடு முழுவதையும் ஒர் உலுக்கு உலுக்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பகத்சிங் ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார்.

1929 மார்ச்சில், இந்திய உறுப்பினர்களால் சட்டசபையில் நிராகரிக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டபோது, 1929.04.08ம் திகதி பகத்சிங் இதை எதிர்த்து சட்டசபையில் குண்டொன்றை வெடிக்கச் செய்தார். மூன்று நாட்களில் சுக்தேவ் கைதுசெய்யப்பட்டார். இச் சட்டசபை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாடகம் முடிவடைந்து 1929.06.12ம் திகதி பகத்சிங்குக்கும், படுகோஸ்வர் தத்துக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. டில்லியில் இருந்து பகத்சிங்கை பஞ்சாப் சிறைக்கும், படுகோஸ்வர் தத்தை லாகூர் மத்திய சிறைக்கும் அழைத்துக் கொண்டுபோன இரயில் வண்டிப்பயணத்தில் இவர்கள் அடுத்த திட்டத்தைத் தயாரித்தார்கள். ’’நமது இனத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகள், சிறைகளில் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்’’ எனக்கூறி அதற்கெதிராக மறுநாள் யூன் 13ம் திகதி படுகோஸ்வர் தத்தும், யூன் 15ம் திகதி பகத்சிங்கும் உண்ணாவிரதப் போரைத் தொடங்குவதாக தனித்தனியாக அறிக்கையை அரசிடம் கொடுத்தனர். இவ்வறிக்கை சட்டசபையில் செப்ரெம்பர் 14ம் திகதி படிக்கப்பட்டது. நவம்பர் மாதத்துக்குள் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதாக அரசு ஒப்புக்கொண்டதால் இப்போராட்டம் கைவிடப்பட்டது. கண்துடைப்பாக சிறை விசாரணைக் கமிட்டி நிறுவப்பட்டதோடு, மேற்கொண்டு எதுவும் நடைபெறாததால் ஒரு வாரக் கெடுவின் பின்னர் 1030.02.04ம் திகதி மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். இதன் பின்னர் இது விசயத்தில் அரசு நடவடிக்கையை மேற்கொண்டது.

1930.10.17ம் திகதி பகத்சிங்குக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. கூடவே ராஜ்குருவுக்கும், சுக்தேவிற்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

சாண்டர்சின் கொலை, சட்டசபை குண்டுவெடிப்பு, பஞ்சாப் நசனல் வங்கிக் கொள்ளை மற்றும் யோகேஸ் சந்திர சட்டர்ஜியை சிறையிலிருந்து மீட்பதற்கான முயற்சி போன்ற முக்கிய நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்றிருந்தனர். லாலாவில் நடத்தப்பட்ட தடியடிப்பிரயோகத்துக்கு பதிலடியாக ஸ்காட்டை சுட்டுக்கொல்வதென முடிவுசெய்தனர். இந்த நோக்கத்துக்காக டீ.ஏ.வீ (னு.யு.ஏ) கல்லூரி உணவகக் கூரைமீது ஏறினார்கள். ஸ்காட்டை நன்குதெரிந்த பகத்சிங் முதலில் சுடவேண்டும். கொஞ்சத் தூரத்துக்கப்பால் ராஜகுரு இவருக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும். பகத்சிங்கை யாராவது தாக்கினால் ராஜகுரு உடனே எதிர்த்துத் தாக்கவேண்டும். இருவரும் சுட்டுவிட்டு தப்பியோடும்போது திரும்பி துரத்துபவர்களை குறிவைக்க முடியாததால் பண்டித்ஜி (சந்திரசேகர் ஆசாத்) அவர்கள் இருவருக்கும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தார். ஸ்காட் மருத்துவமனையில் இறந்து போவதை இவர்கள் விரும்பவில்லை. ராஜகுரு சுட்டபின்னரும் பகத்சிங் தொடர்ந்தும் துப்பாக்கியால் சுட்டார். அவர் இறந்துவிட்டார் என்று ஊர்ஜிதமாகும் வரை ராஜகுருவும் சுட்டார். இது ஓர் அரசியல் படுகொலை துண்டுப்பிரசுரம் மூலமாக வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் நடவடிக்கையை மக்களுக்கு மூடுமந்திரமாக வைத்திருக்கவில்லை. நலிந்த பெருந்தொகையான இந்திய வறிய பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் இரகசியமாக கொள்கைபரப்பு செய்யும் கடினத்தை விடவும் தம் உயிரை துச்சமாக மதித்து எல்லா வழிகளிலும் வெளிப்படையாகவே தமது வாழ்நாளில் இதைப் பிரச்சாரமாகப் பரப்பினர்.

முதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தின் முகிழ்வைக் கவனித்தால், 1757 முதல் 1850 வரையிலான இந்தியா முழுவதுமான பட்டினி மரணங்கள் 75லட்சத்தை தாண்டியிருந்தது. இத்தொடர் பட்டினி மரணங்கள் ஏழை எளிய விவசாய வறிய உழைக்கும் மக்களின் எதிர்ப்பை உலைக்கலனில் ஏறியது. பட்டினியுடன் நிலச்சுவாந்தர்களை எதிர்க்கமுடியாத ஏழை விவசாயிகள் கிராமங்களை விட்டு வெளியேற, போக்கிடமற்றவர்கள் நிலச்சுவாந்தர்கள் மீது தம்மால் முடிந்தளவு கலகத்தைத் தொடந்து நடத்தினர். உடனடியான ஆயுதப் பழக்கத்தில் இருந்த முஸ்லீம் தாழ்த்தப்பட்ட இராணுவ வீரர்களும், இராணுவத்துக்குள் கூலியாகச் சென்றிருந்த வறிய விவசாய கூலி இராணுவத்தினரும் பிரிட்டிஸ் இராணுவத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முதலில் கல்கத்தாவில் இராணுவ முகாம்களில் கலகங்களைத் தொடங்கினர். இக்கலகம் தொடங்கியதும் அதிருப்தியும் வெறுப்புணர்ச்சியும் கொண்டிருந்த உழவர்கள் பெருந் தொகையாகக் கலந்து கொண்டனர். மீரத்தையும், டெல்கியையும் கைப்பற்றினர். கலகத்தில் ஈடுபட்ட உழவர்கள் பிரிட்டன் அதிகாரிகளைக் கொன்றனர். கைதிகளை விடுவித்து தம்முடன் இணைத்துக் கொண்டனர். அரசுக் களஞ்சியங்களைக் கொள்ளையடித்தனர். அரச கட்டிடங்களை எரித்தனர். அவுரிச் சாய முதலாளிகளைக் கொன்று குவித்தனர். இந்தியாவின் வடகிழக்கே தோன்றிய இப் பேரியக்கம் இரண்டு ஆண்டுகளில் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டாலும், இக் கலகத்தின் ஊடாக ஏழை விவசாயிகள் தாம் கைப்பற்றிய பிரதேசத்தில் பிற்போக்கான பழைய நிலச்சுவாந்தர்களை தலைமைக்கு மீண்டும் கொண்டுவரத் துடித்திருப்பினும் ஏகாதியத்துக்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சி வடிவம் எதிர்காலத்தில் வெடித்துவிடக்கூடாது, இந்தியப்பகுதிகளில் இது பரவலாகப் பற்றி படரக்கூடாது என்பதிலும் பிரிட்டன் மிகக் கவனமாகவே இருந்தது.

தன் ஆட்சிமீது ஏற்படும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுகளை சட்டவரம்புக்கு உட்படுத்துவதும், பாராளுமன்ற வடிவத்திற்குள் உட்படுத்தி கையகப்படுத்தவேண்டிய அவசியமான அரசியல் மார்க்கம் பிரிட்டனுக்குத் தேவைப்பட்டது. இதன் விளைவாக 1867ல் ’பம்பாய் மாகாண மன்றம்’ உருவாக்கப்பட்டது. மேத்தா, வாச்சா, டாட்டா போன்ற ஆலை முதலாளிகளால் உருவாக்கப்பட்ட இம்மன்றமே 1885ல் காங்கிரசை நடத்தியது. 1885.12.28ம் திகதி நன்பகல் 12 மணிக்கு பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்வாய் வடமொழி கல்லூரி மன்றத்தில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடியது. இம்மாநாட்டுக்கு 73 பேர் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளாக வந்தனர். ஆங்கிலேய அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் பார்வையாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்துகொண்ட 73 பேரில் 80 சதவீதமானவர்கள் ஆங்கிலம் கற்றவர்கள். 40 பேர் வழக்கறிஞர்கள். இவ் 40 வழக்கறிஞர்களில் 23பேர் பிராமணர்கள். 5 பார்சிகள். 9 பத்திரிகையாளரில் 7பேர் பிராமணர்கள். ஆலைமுதலாளிகள் வணிகர்கள் என 7 பேரும், 6 ஜமீந்தார்களும் இதில் அடங்குவர். கல்கத்தாவில் இருந்து இருவரைத்தவிர எவரும் வரவில்லை. 1886ல் கல்கத்தாவில் நடந்த இரண்டாவது மாநாட்டில் 431 பேர் அதிகாரபூர்வமாகக் கலந்து கொண்டனர். கல்கத்தாவில் இருந்து 230 பேர் வந்திருந்தனர். 15 ஆண்டுகளின் பின்னர் இருந்த 13,892 அதிகாரபூர்வ பிரதிநிதிகளில் 1442 வழக்கறிஞர்களும், 2095 ஆலைமுதலாளிகளும், 1642 நிலச்சுவாந்தர்களும் இருந்தனர். இவர்களே நிர்வாகப் பொறுப்புக்களின் தலையாக இருந்தனர்.

சென்னை, பம்பாய், வங்காளம் போன்ற வட்டார சங்கங்களின் கூட்டுத்தொகுப்பாக உருவாகிய இக் காங்கிரஸ், வெள்ளை அரசின் பரிபூரண ஆசியுடன் தொடங்கியது. உதாரணமாக ’காங்கிரஸ் தோற்றத்தில் தனக்கு இருக்கும் பங்கு குறித்து தான் இந்தியாவில் இருக்கும் காலத்தில் வெளியிடக்கூடாது’ என்று டப்பின் கேட்டுக்கொண்டதை காங்கிரஸ் தன் வரலாற்றில் மறைத்து வைத்தது. காங்கிரஸ் தன்னலம் மிக்க கபடம் நிறைந்த நடுத்தர வர்க்க சுரண்டல் லாப தித்திப்புக்களில் மிதந்துவந்த அமைப்பாகும். பிறவியில் ஊனமான தேசியத்தின் பிரநிதிகளான முதலாளித்துவ ஜனநாயக விதேச பக்தியைக் கொண்ட இவர்கள் மக்களின் நீர்க்குமிழி பிரச்சனைகளோடு மட்டுமே விளையாடும், பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பிரச்சனையை உதாசீனம் செய்கிற ஏகாதிபத்திய நலன்களுடன் தம்மை இனைத்துக்கொள்ளும் தீராத விளையாட்டுப்பிள்ளைகளாகவே இருந்தனர்.

இந்தியாவில் 1905க்குப் பின் முழு விடுதலை கோரிய ஆயுதப்புரட்சியாளர்கள் மிருகங்களைப்போல வேட்டையாடப்பட்டனர். இவர்களுக்குத் துணையாக இருந்த திடமான தேசிய சக்திகள் கடும் சிறையில் தள்ளப்பட்டனர். இவ் மிருகத்தனமான வேட்டையாடலுக்கு துணை போன கோகலே, பானர்ஜி, மயிலாப்பூர் கிருஸ்ணசாமி போன்றோருக்கு பதவிகள் பரிசாகக் கொடுக்கப்பட்டன. புரட்சியாளர்களை கைது செய்யாததால் தூத்துக்குடி கலவரம் தோன்றியதென தூத்துக்குடி காங்கிரஸ் மிதவாதிகள் சென்னை கவனரிடம் முறையிட்டனர். கடைந்தெடுத்த காங்கிரசின் இந்த இரத்தத் துரோக நடவடிக்கையால், இந்தக் கயவர்கள் வைசிராய் கவுன்சில் பதவிகளை கூலியாகப் பெற்றனர்.

1928ல் காந்தி கலந்து கொள்ளாத சென்னை காங்கிரஸ் மாநாட்டில் முழு விடுதலையை காங்கிரசின் தீர்மானமாகக் கொண்டு வந்தனர். காந்தி கலந்து கொள்ளாத இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவை, காந்தி நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தந்திரோபாயமாக நேரு அறிக்கையை கொண்டுவந்தார். 1929 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டு பந்தலுக்கு எதிரே 50,000 மக்கள் முழுவிடுதலை கோரும் தீர்மானத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1929ல் தேஷ்பாண்டே நேருவின் அறிக்கையை நிராகரித்து முழுவிடுதலை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். பின்னர் அனைத்துக்கட்சியின் தீhமானமாக –லாகூர் தீர்மானமாக- எடுக்கப்பட்டிருந்தது.

காந்தியின் தரும இராட்சியத்துக்கான ஒத்துழையாமை இயக்கம் என்பது, தம் வர்க்க நலன்களுக்கு இசைவில்லாத அரசின் சில சட்டங்களை மறுப்பதாகும். ஆனால் இத்தகைய சட்டமறுப்புக்கள் கூட வெள்ளை அரசு பிறிதோர் சட்டத்தால் ’தவறென்று’ குறிப்பிடும்போது அச்சட்டத்தை ஒத்துக்கொள்கின்ற பரந்துபட்ட மக்கள் விரோத ஏகாதிபத்திய இயக்கம் தான் காங்கிரஸ். காங்கிரசின் சிறை நிரப்பும் அறவழிப் போராட்டம் கூட இவ்வகையானது தான். சட்டமீறலுக்காக சிறை சென்று மீண்டும் அதே சட்டத்துக்கு உட்பட்டு சிறைவாசம் அனுபவிப்பது தான். இவர்களின் அறவழிப் போராட்டம் சிறைக்குள் தொடராத, சிறைக்கு வெளியே நடத்தப்படும் மக்களைப் பம்மாத்தும் அரசியல் போராட்டம் தான். அகிம்சையை நிராகரித்த இம்சைப் போராட்ட ஆயுதக் கிளர்ச்சியாளர்களான பகத்சிங் போன்றவர்கள் ஆயுத நடவடிக்கைக்காக சிறை சென்ற பின்னர், நிராயுதபாணிகளாக காந்தியின் அதே அகிம்சை வழியிலான சட்டமறுப்பை போராட்டமாக சிறைக்குள் தொடர்ந்தபோது, காந்தி போன்ற அகிம்சைவாதிகள் அதை நிராகரித்த இந்த வர்க்கத்தினரின் சூட்சுமத்தை கண்டுகொள்ளலாம். புரியும் படியாக இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம்: திடமான தேசியம் எப்போதும் ஏகாதிபத்தியுத்துடன் கைகோர்த்து நடக்க இயலாது. திடமான தேசியத்தை அழிக்காமல் ஏகாதிபத்தியத்தால் வாழவும் முடியாது. விதேசியம் ஏகாதிபத்தியத்துடன் சேராமல் வாழவும் முடியாது. ஆகவே விதேசியத்தை தன் நலன்களுக்கு உட்படுத்தி அரவணைத்து வளர்க்காமல் ஏகாதிபத்தியம் இருக்கவே முடியாது. ஏகாதிபத்தியமும், விதேசியமும் தம் பொது எதிரியான திடமான தேசியத்தை அழித்தொழிக்காமல் இவற்றுக்கு வாழ்க்கையே இல்லை.

காங்கிரஸ் போன்ற விதேசிகளின் தேசபக்தியும், ஜனநாயகமும் இந்த நாட்டு மக்களுடன் பங்கிடும் விசயங்களாக இல்லாமல், பிரிட்டன் ஏகாதிபத்தியத்துடன் பங்கிடும் விசயங்களாக மட்டுமே இருந்தன. 1930 ஒட்டோபர் 7ம் திகதி பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோருக்கு தூக்குத் தண்டணையும், ஏனைய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் தீர்ப்பாகியது. அம்மாதம் 27ம் திகதி தூக்கிலிட வேண்டுமெனவும் தீhப்பாகியது. காங்கிரசின் மாநாட்டுக்கு முன் பகத்சிங்கைத் தூக்கிலிட வேண்டாமென காந்தி வெள்ளை அரசுக்குத் தந்தி கொடுத்தார்(இத் தந்தியை ஆதாரத்துடன் ’சுட்டி’ என்ற சிறு சஞ்சிகை பின்நாளில் பிரசுரித்திருந்தது). அரசுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உடன்பாடு எட்டும் காலமாக இருந்ததால் காந்தி இதில் பூந்து விளையாடினார். உடன்பாடு எட்டப்பட்ட பின் 1931 மார்ச் 29-30 களில் கராச்சியில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்துக்குப்பின் கூட இருந்த காங்கிரஸ் மகாசபைக்கு பின்னதாக தூக்குவதாக இர்வின் பிரபு பகிரங்கமாக அறிவித்தார். காந்தியோ தூக்கிலிடுவதாயின் அதற்கு முன் தூக்கிலிடும்படியும் நாடகங்கள் ஆடப்பட்டன. பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிட்ட 23ம் திகதி அதிகாலை காந்தி இர்வின் பிரபுவுக்கு ஓர் அந்தரங்கக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் இன்னும் வரலாற்றில் அந்தரங்கமாகவே இருக்கிறது. 24ம் திகதி அதாவது மறுநாளே தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோது காந்தியின் கடிதம் கையில் கிடைத்த அன்றே தண்டனை திடீரென நிறைவேற்றப்பட்டது.

1931 மார்ச் மாதத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் தொடர்பாக காந்திஜிக்கு சுக்தேவ் சிறையிலிருந்து பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

பெரும் தர்மசிந்தனை மிகுந்த மகாத்மாஜிக்கு…

சமரசம் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றதையடுத்து புரட்சியாளர்கள் தங்களுடைய இயக்கத்தை தற்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் உங்களுடைய அகிம்சை முறையைப் பயன்படுத்துவதற்கான கடைசி வாய்ப்பினை தங்களுக்கு அளித்திட வேண்டுமென்று கோரி, புரட்சிச் செயல் வீரர்களிடம் தாங்கள் அவசர வேண்டுகோள் விடுத்திருப்பதாக, இப்போது கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. உண்மையில், இலட்சிய நோக்கங்கள் மற்றும் மன உணர்ச்சிகள் மூலமாக மட்டுமே எந்த ஒரு இயக்கமும் நின்று போய்விடப் போவதில்லை. வேறுபட்ட பல சந்தர்ப்பங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே தலைவர்கள் தங்கள் உத்தியை மாற்றிக்கொள்ள வெண்டிய கட்டாயம் நேரிடுகிறது. இந்த சமரச ஒப்பந்தம், இறுதியான ஒப்பந்தமாக இருக்காது என்ற கருத்தை பேச்சுக்களின் போது நீங்கள் ஒரு நொடிக்குக்கூட, சிந்திக்கவோ அல்லது மூடிமறைத்திடவோ இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். தாங்கள் முன்வைத்த சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் நாம் நமது குறிக்கோளை எட்டிவிட்டோம் என்பதை புத்திசாலிகள் அனைவருமே எளிதில் புரிந்துகொண்டிருப்பார்கள். பூரண சுதந்திரம் கிடைக்காத வரை, விடாமுயற்சியுடன் போராட்டத்தை நடத்திவர வேண்டுமென்ற லாகூர் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்டுப்படிருக்கிறது. இந்தத் தீர்மானம் காரணமாக, தற்போதைய அமைதியும், சமரச சமாதானமும், வெறுமனே நடைமுறை ரீதியிலான ஒரு சண்டை நிறுத்தம்தான்: எந்த ஒரு தருணத்திலும் நிகழவிருக்கும் போராட்டத்திற்காக, பெரியதோர் அளவில் சிறப்பான படைப்பலத்தை திரட்டுவதற்கான ஒரு இடை ஓய்வுதான் இது என்றே பொருள்படுகிறது. இந்தக் கருத்தை மட்டுமே மனதில் இருத்திப் பார்க்கும்போது, சமரசம் மற்றும் சண்டை ஓய்வுக்கான வாய்ப்புப்பற்றி கற்பனை செய்ய முடிகிறது: அதன் உசித தன்மையும் ருசுவாகிறது.

சண்டை நிறுத்தத்திற்கான உரிய தருணத்தையும், அதன் நிபந்தனைகளையும் நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு, இயக்கத் தலைவர்களைச் சார்ந்ததாகும். லாகூர் தீர்மானம் இருந்தபோதிலும் கூட தற்போதைக்கு இந்த இயக்கத்தை நிறுத்தி வைப்பது சரியானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். அந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்படவில்லை. ’’கிந்துஸ்தானி சோசலிஸ்ட் குடியரசுக் கட்சி’’ என்ற பெயரே, பரட்சியாளர்களின் லட்சிய சமுதாயம், சோசலிச குடியரசு ஒன்றினை அமைத்து நிலைநாட்டப் போகிறது என்பதை தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்தக் குடியரசு, ஒரு இடையாச்சிக் காலமல்ல: அந்தப் புரட்சியாளர்கள், தங்கள் குறிக்கோளை அடையும் வரை, போராட்டத்தை கொண்டு செலுத்துவார்கள்………… முற்றிலும் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் ஒரு புரட்சிப் போராட்டத்திற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் எதையும் தருவதில்லை.

சமரசம் ஏற்பட்டதை அடுத்து, நீங்கள், உங்கள் இயக்கத்தை கைவிட்டு விட்டீர்கள். இதன் பலனாக, சிறைபிடிக்கப்பட்டுள்ள உங்கள் ஆட்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் புரட்சியாளர்களின் கதி என்ன ஆயிற்று? புரட்சி கட்சியைச் சேர்ந்த பலரும் 1915-ம் ஆண்டு முதற்கொண்டே சிறையில் வாடி வருகிறார்கள். தங்களின் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும் கூட, அவர்கள் சிறையிலேயே இன்னும் இழிவுபட்ட நிலையில் உள்ளனர். இராணுவச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருபது பேர் சிறை என்னும் கல்லறையில் இன்னும் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். பப்பர் அகாலி கைதிகளின் நிலையும் இதே மாதிரித்தான் இருந்துவருகிறது. தேவ்கர், காக்கோரி, மச்சுவா பஜார் மற்றும் லாகூர் சதிவழக்கில் சம்மந்தப்பட்ட கைதிகள் இன்னும் சிறையில் உள்ளனர். லூகூர் தில்லி, சிட்டகாங், பம்பாய், கல்கத்தா மற்றும் வேறு இடங்களில் சதித்திட்ட வழக்குகள் இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான புரட்சியாளர்களும், தப்பி ஓடி தலைமறைவாக திரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். உண்மையில் சுமார் 6 புரட்சியாளர்கள் தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கிறார்கள். இவர்களின் கதி என்ன? அதிருஸ்டவசமாக லாகூர் சதிவழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று குற்றவாளிக் கைதிகள் இப்பொழுது பிரபலமாகி விட்டதுடன், பொதுமக்களின் பெருமளவுக்கான அனுதாபத்தையும் பெற்றிருக்கிறார்கள். ……..

இவையெல்லாம் நடந்திருந்தும் கூட, அவர்களின் இயக்கத்தை நிறுத்திவிடுமாறு நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறீர்கள். அவர்கள் இயக்கத்தை ஏன் நிறுத்தவேண்டும்? இத்தகைய ஒரு நிலையில், இந்த இயக்கத்தை நசுக்கிச் சிதைப்பதற்காக நீங்கள் அதிகார வர்க்கத்தினருக்கு உதவி அளித்து வருகிறீர்கள் என்றே உங்கள் வேண்டுகோள் பொருள்படுகிறது. கிளர்ச்சி எழுந்து, ஆர்ப்பாட்டம் செய்யும்படியும், தப்பி ஓடிச் செல்லுமாறும், நம்பிக்கை துரோகம் செய்யுமாறும், உங்களுடைய வேண்டுகோள் அந்தக் கட்சியினருக்கு உபதேசம் செய்வதாகவே பொருள்படுகிறது…..

இவ்வாறு அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்தை முன் வத்தனர். இக்கடிதமானது சுக்தேவ் தூக்கிலிடப்பட்ட பின் ஏப்பிரல் மாதம் 30 திகதி காந்தியின் பதிலோடு பிரசுரிக்கப்பட்டது. பகத்சிங் போன்றவர்கள் சிறைச்சாலையில் போராட்டத்தைத் தொடங்கியபோது, அறவழிப் போராட்டத்தால் சிறை சென்றவர்களும் இப்போராட்டத்தால் ஈர்க்கப்படுவது யதார்த்தமானது. கடைசி ஒருவருட காலத்துக்குள் காந்திக்கு நிகராக பகத்சிங் பேசப்பட்டதும், அவரின் கொள்கைளை மக்கள் முழு மனதுடன் ஆதரிப்பதும் காந்திக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்தது. சட்டமறுப்புப் போராட்டத்தில் சிறை செல்பவர்கள், எந்த அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை எதிர்த்து சிறை செல்கின்றார்களோ, அதே சட்டத்திற்கு மௌனமாகிப் போவதையும், அல்லது அச்சட்டதிட்ட ஓட்டைகளின் ஊடாக தப்பித்து வெளியே வருவதும் அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகே முரணானது என்றும் பரந்துபட்ட மக்களுக்கு செய்யும் துரோகமென்றும் பகத்சிங் போன்றோர் தமது போராட்டத்தின் ஊடாக மக்களுக்குப் பரப்பினர். இவ்வாறான இவர்களின் புரட்சிபோர் பரந்துபட்ட மக்களை தவிர்க்க முடியாது முழு விடுதலையின் பால் ஈர்த்தது. அதனால் காந்திக்கு அரசுடன் உடன்படிக்கைக்குச் செல்வதும் அறவழிப்போராட்ட வீராகளை உடனடியாக விடுதலை செய்து, போராட்டத்தின் களமான சிறைச்சாலையில் இருந்து துண்டித்து வெளியே கொண்டுவருவதும் காந்தியினதும், காங்கிரசினதும் வர்க்க நோக்கமாக இருந்தது. பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்பது பரந்துபட்ட மக்களின் ’மகாஜன ஆணையாக’ இருந்தபோதிலும் இவ்வாணையை வெள்ளையரசும் ஏன் காங்கிரசும் கூட இதை மதிக்கவில்லை. இவர்கள் சாகடிக்கப்பட்ட பின்னர் கூட அவ் ஒப்பந்தத்தை பொதுமக்களின் ஆணையை மதித்து காங்கிரசால் தூக்கியெறிய முடியாத வர்க்கநலன் சார்ந்த லாபகலமான ஒப்பந்தாக அது இருந்ததைக் காணலாம்.


உதவிய நூல்கள்
1.எப்போதாவது எண்ணிப் பாருங்கள் -தியாகச் செம்மல்களின் கடிதங்கள்-
2. வீரத்தியாகி சர்தார் பகத்சிங்