தமிழ் அரங்கம்

Saturday, September 5, 2009

பட்ஜெட் : விவசாயிகளுக்குச் சலுகையா? சமாதியா?


முதலாளிகளுக்குச் சலுகைகள் அளித்து, அவர்கள் மூலம் அச்சலுகைகளில் சிறு பங்கு தொழிலாளர்களைச் சென்றடையச் செய்யும் உத்திக்குப் பதிலாக, இந்த பட்ஜெட் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திப் போடப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்படிச் சுற்றி வளைத்துப் பேசாமல், தனியார் முதலாளிகளின் ஊதுகுழலான இந்தியா டுடே ஏடு, இந்த பட்ஜெட்டை "சோசலிச பட்ஜெட்'' என வஞ்சகமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது.

முதலாளித்துவப் பத்திரிகைகளின் புகழாரங்களைக் கேட்கும்பொழுது "மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா மூக்கின் கீ....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 4, 2009

மகிந்தாவின் பேரினவாத பாசிசம், ஊடகவியலை குதறுகின்றது

இனவொடுக்குமுறையும் இனவழிப்பும் பேரினவாத பாசிசமாக, அதுவே குடும்ப ஆட்சியாக மாறி வருகின்றது. அது தன்னை விமர்சிக்கின்ற, தன்னை எதிர்க்கின்ற அனைத்தையும், ஈவிரக்கமின்றி அரச இயந்திரங்கள் மூலம் ஓடுக்குகின்றது அல்லது போட்டுத் தள்ளுகின்றது. ஒரு கூலிப்படையும், சலாம் போட்டு நக்கும் கூட்டமும் தான் அரசாக உள்ளது. இந்தக் கும்பல் போடும் பாசிசக் கூத்தைத்தான், சட்டத்தின் ஆட்சி என்றும், ஜனநாயகத்தின் சிம்மாசனம் என்று கூச்சல் போடுகின்றது.

தன் சொந்த பாசிச ஆட்சியை தக்கவைக்க, தமிழ் சிங்களம் என்று எந்த வேறுபாட்டையும் அது காட்டவில்லை. ஆனால் தமிழ்மக்களை ஓடுக்கும் அதிகாரத்தையும், இனவழிப்பு செய்யும் உரிமையையும், பயங்கரவாதமாக சித்தரித்துக் கொண்டு பாசிசத்தை இலங்கை முழுக்க நிறுவிவருகின்றது. தமிழர்களை ஓடுக்குவது சிங்களவர்களின் நியாயமான உரிமை என்று கூறி, சிங்கள மேலாதிக்கம் சார்ந்த ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு, பாசிச ஆட்டம் போடுகின்றது. புலிப்பாசிச.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, September 3, 2009

தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்.

கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் ஒரு டன் எடையுள்ள இரும்புத் தகடு சரிந்து விழுந்து, ரகுபதி என்ற உதிரித் தொழிலாளி கோரமாகக் கொல்லப்பட்டார். எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி உதிரித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்களைக் கட்டாயமாக வேலை செய்யுமாறு நிர்வாகம் நிர்பந்திப்பதால் ஏற்பட்ட கோரமான விபத்துகளில் ஒன்றுதான் இது. வழக்கம் போலவே, இப்படுகொலையை மூடி மறைக்க ஆலை நிர்வாகிகள் முயற்சித்தபோது, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடியதால், இழப்பீடு நிவாரணமும் மாண்டுபோன தொழிலாளி ரகுபதியின் மனைவிக்கு இந்நிறுவனத்தில் வேலைதரவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இக்கொடிய விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, கடந்த ஜூலை முதல் நாளன்று இதே நிறுவனத்தில் மீண்டும் இரும்புத் தகடு சரிந்து விழுந்து, லாசர் என்ற உதிரித் தொழிலாளி கொல்லப்பட்டார். விபத்து நடந்த போது, அருகில் தொழிலாளிகள் யாருமில்லாததால், படுகாயமடைந்த தொழிலாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும்,...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, September 2, 2009

வெடிவிபத்தல்ல, பச்சைப்படுகொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
ஒன்றரை வயது குழந்தையோடு பெண்களும் பள்ளிச் சிறுவர்களும் கோரமாகக் கொல்லப்பட்ட துயரம் தாளாமல் மரண ஓலத்தில் துவண்டு கிடக்கிறது வடக்குப்பட்டி.

இறந்தவர்களில் 4 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு வெந்து கரிக்கட்டையாகி கிடந்தனர். மாண்டவர் களைக் கட்டிப்பிடித்து அழுவதற்குக் கூட முடியாமல், உறவினர்கள் கதறியழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் செங்கற்சுவரும் வெடித்துச் சிதறி தப்பியோடிவர்களைத் தாக்கியதால் தலை, கைகால்கள் என பிய்த்தெறியப்பட்டு பலர் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

துரைப்பாண்டியன் என்பவருக்கு.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 1, 2009

தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்கு தாரை வாய்ப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்


அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு ஒவ்வாத நிலையில் உடல் மெலிந்து காணப்படுவதாகவும்; அவன் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் குடும்பத்தாரி டம் கூறிவிட்டனர். 6 மாதங்களுக்கு முன்பு சரவணகுமார் காலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு உள்ளூரில் உள்ள கிளை சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி (ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி) போடுவதற்கான மருந்து இல்லாமல் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. சரவணக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் அன்பு மகனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

இது ஏதோ சரவணகுமார் என்ற குழந்தைக்கு மட்டும் விதிவிலக்காக நடந்த சம்பவம் அல்ல. நாடு முழுவதும் ஆண்டு தோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் எதிர்காலம் இதை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை அரசே உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2008இல் 13 மாநிலங்களை ஆய்வு செய்த சுகாதார துறை அதிகாரிகள் பீகார், சட்டிஸ்கர், அஸ்ஸாம், கேரளா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் தொண்டை அழற்சி, ஜன்னி, காசநோய், கக்குவான் இருமல் மற்றும் அம்மை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் அரசு
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 31, 2009

வினவு அறிவித்த "வரட்டுத்தனம்" மீது புலம்பல்களும், ஓப்பாரிகளும்

"வரட்டுத்தனத்தை" வினவுகுழு அறிவிக்க, அதை நிறுவப் புறப்பட்ட பலர் புலம்பியுள்ளனர். ஜனநாயகம், மார்க்சியம் .. அது இது என்று, கன்னா பின்னாவென்று ஓப்பாரிவைத்துள்ளனர். பலர் விவாதத்தையே வாசிக்கக் கூடவில்லை. ஒரு நூலில் தொங்கி கொண்டே கொசிப்போ கொசிப்பு. இதற்கு வெளியில் வேறு சிலர் ஏதோ ஏதோ உளறிக் கொட்டியுள்ளனர். வேறு சிலர் முன்னுக்கு பின் வாசிக்காமல், எம்மீது இல்லாத பொல்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கக் கூடிய வகையில், அதில் எதுவும் கிடையாது. குப்பை மேடு.

இவற்றின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட சில புரட்டுகளைப் மட்டும் பார்ப்போம்.

1.அவர் (ரதி) எழுத முன்னமே, அவரை நாம் பாசிட் என்று அறிவித்து விட்டோம் என்கின்றனர்.

மிகத் தவறான, அப்பட்டமான ஒரு திரிபு. அவர் எழுதியிருந்த மூன்று கட்டுரைகளின் பின்புதான், அதுவும் இதன் பின் வினவுக்கு தனிப்பட எழுதிய கடிதத்தில் தான், அவரை பாசிட் என்று குறிப்பிடுகின்றோம். அக் கடிதத்தைத்தான், பின்பு வினவு பிரசுரித்தும் இருந்தது. வெளிவந்த மூன்று கட்டுரைகளுக்கு பின்தான், அவரை பாசிட் என்று ....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?

தமிழகத்தில் ஏறத்தாழ 3 லட்சத்து 90 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் இயங்கிவரும் நிலையில், 2011க்குள் மேலும் ஒரு லட்சம் சுயஉதவிக் குழுக்களைக் கட்டியமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, விவசாயிகளுக்கென 10,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார், நிதியமைச்சர் அன்பழகன்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் இலட்சக்கணக்கில் பல்கிப் பெருகி வருகின்றன. 1990களில் 500 சுயஉதவிக் குழுக்கள் மட்டுமே இருந்த நம் நாட்டில், நபார்டு வங்கியின் கணக்குப்படி 2006ஆம் ஆண்டின் இறுதிக்குள் 33.7 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாடு முழுவதுமுள்ள சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டிவிடும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெண்களின் தற்சார்பு.............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 30, 2009

"வரட்டுத்தனம்" குறித்து வினவும், "ஈழ நினைவு குறித்து" புலிப்பாசிசமும் (பகுதி : 6)


இந்த எளிய மார்க்சிய உண்மையை முன்னிறுத்தி, மனித குலத்துக்கு எதிராக புலிப்பாசிசம் செய்த கொடூரத்தைப் பற்றி, எதையும் கூறத்தேவையில்லை என்ற "மார்க்சிய" விளக்கத்தை, எம்மீது திணிக்க முனைந்தனர். பாசிசம் கட்டமைக்கும் வரலாற்றுத் திரிபு, அவரின் சார்புக்கு உட்பட்டது. எனவே "அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும். படிப்பவருக்கும் அப்படித்தானே? இதில் யார் எந்தப்பக்கம் சார்ந்தவரோ அதன்வழியில் தானே ஒரு எழுத்து பிடிக்க, பிடிக்காமல் போகும். நடுநிலை என்று ஒன்று உண்டா?" என்று கூறி, பாசிசப் பிரச்சாரத்தை நாசூக்காக முன்தள்ளுகின்றனர். "வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்." என்று கூறிய போது, எமக்கு கிடைத்த பதில் தான் இது.

இப்படி பாசிசத்தை பாதுகாத்து வாதிட்டவர்கள் "அவர் எழுதுவதில் விவரப்பிழை இருந்தால் சுட்டலாம், அவர் ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு இருந்தால் வாதிடலாம்." என்றனர். வாதிட முற்பட்ட போது, அதை வரட்டுவாதம் என்கின்றன
..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்