தமிழ் அரங்கம்

Showing posts with label துப்பாக்கி. Show all posts
Showing posts with label துப்பாக்கி. Show all posts

Monday, April 6, 2009

புலிகளின் தளபதியான தீபன் மரணம் : என் நினைவுக் குறிப்பில் இருந்து

1987ம் ஆண்டு பங்குனி மாதம் 28ம் திகதி மலை 6.30 மணியளவில் தான் தீபன் எனக்கு அறிமுகமானான். என் காதுக்குள் திடீரென துப்பாக்கியை வைத்தவன், என்னை ஒரு காருக்குள் திணித்து கடத்த உதவினான்.

அவன் கேட்ட உதவியைச் செய்த போதுதான், எனக்கு இந்த நிகழ்வு நடத்தது. இது நடக்க முன், நான் நின்றிருந்த வீட்டின் முன், என்னை கடத்துவதற்காக அருகில் இருந்த ஓரு மோட்டார் சைக்கிள் திருத்தும் இடத்தில், பழுதடைந்த ஓரு மோட்டார் சைக்கிளை திருத்தும் வேஷம் போட்டுக்கொண்டு திரிந்தான். நான் அடிக்கடி அவனை நான் கண்ட போது, என்னைக் கடத்தத்தான் நிற்கின்றான் என்று சந்தேகிக்கவில்லை.

மாலையாகிவிட்ட நிலையில் தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால் மோதல் தொடங்கியிருந்த...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, April 4, 2009

பழைய தோசைக்காக புளித்துக் கிடக்கும் உழுத்தந் தலைகள்

இன்று தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் என்று ஒரு பகுதியினர் வாதிட்டு வருகின்றனர். இதற்கு இவர்கள் புலிகள் பலவீனப்பட்டு விட்டதையும் இதனால் அரசியல் தீர்வைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றும் - இவர்கள் வாதிட்டு வருகின்றனர்.

ஒர் ஆயுத ரீதியான போராட்டம் ஒர் இராணுவத் தீர்வுக்கானது என்றும் இதற்கு எந்த அரசியலும் கிடையாது என்றும் ஒரு துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் குண்டு ஒர் அரசியலின் அதிகார மொழி என்பதையும் மறுத்துரைக்கும் ஒரு தலைமறைவான பிரச்சாரம் என்பதை இவர்கள் வசதியாக மறைத்து விடப் பார்க்கிறார்கள்.

இன்று இனப்பிரச்சனை இலங்கை அரசியலில் புரையோடிய பிரச்சனையாக உள்ளதாவும் அரசியல் வாதிகளின் கடந்தகால தவறுகளாகவே இவைகள் உருவாகி விட்டதாகவும் இவர்கள் கருதுகின்றனர். அதாவது பாராளுமன்றத்தில் இவர்கள் சரிவர நடந்து கொள்ளாததே இதன் மூலகாரணம் என்பதே இவர்களின் முடிந்த முடிவாகும். அதாவது இவர்களின் கருத்துப்படி இப்பிரச்சனைக்கான தீர்வு ஒன்றில் நல்ல அரசியல் வாதிகள் இப்பிரச்சினையை பாராளுமன்றத்துக்குள் முன்னெ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்