தமிழ் அரங்கம்

Saturday, June 16, 2007

அறிவு, நேர்மை என எதுவுமற்றது எது?

அறிவு, நேர்மை என எதுவுமற்றது எது?

பி.இரயாகரன்
16.06.2007தில் ஒன்று தான் புலியிசம். அது தன்னைத் தவிர அனைத்தையும் அவதூறாய் வைகின்றது., கொன்று போடுகின்றது. இதை நியாயப்படுத்தும் அறிவோ, நேர்மையோ கிடையாது. மாறாக சிந்தித்தால், மாற்றாக செயல்பட்டால், ஏன் கேள்வி கேட்டால், நியாயம் கேட்டால், அதை அவதூறு செய்து கொன்று போடுவதே புலியிசம்.இந்த வகையில் புலியிசத்தின் பெயரால் கொண்டுள்ள புலித்தேசியத்தை, அதாவது பாசிசத்தை அறிவியல் பூர்வமாக அவர்களால் நிறுவமுடிவதில்லை. ஆகவே அவதூறு முதல் படுகொலைகளே அவர்களுக்கு தெரிந்த மொழியாகின்றது. இந்த வகையில் அண்மையில் எனக்கு எதிராக வெளிவந்த, புலியிச அவதூறுகளில் சிலவற்றை எடுத்துக்கொள்வோம். இவை உண்மையில் அர்த்தமற்றதும், அரசியல் அடிப்படைற்றதும், அநாகரிமானதும் கூட. ஒருவிதத்தில் இந்த அரசியல் அவதூறுகளை எடுத்து வைத்து விவாதிப்பது அவசியமற்றதுதான்.உண்மையில் புலிகள் அரசு என்ற எல்லைக்குள் விவாதத்தை நடத்துவதை, இதற்குள் காலத்தை செலவு செய்வதை விரும்புவதில்லை. இதற்கு வெளியில் சாதியம் உலகமயமாதல் பற்றிய 10 நூற்களை கொண்ட எனது ஆய்வை முடிக்க முடியாமால், இதனால் முழுமையாக தடைப்படுகின்றது. இதற்கு வெளியிலான குறித்த இந்த விவாதங்கள் காலத்தின் தேவையுடன் எம்மீது வலிந்து திணிக்கப்படுகின்றது.இந்த நிலையில் என் மீதான அவதூறை எடுத்துக் காட்டுவதன் மூலம், 10000 மேற்பட்டவர்களை புலிகள் எப்படிக் கடந்தகாலத்தில் கொன்றார்கள் என்பதை புரிந்துகொள்ள அது உதவலாம். இன்னமும் கொலைப்படப்போகிறவர்களின் பலரின் கதைகள், இப்படித் தான் சோடிக்கப்படும் என்பதற்கு இது போதுமான வகை விளக்கம். அத்துடன் வரலாற்றின் பல சம்பவங்களை அம்பலப்படுத்தவும் உதவுகின்றது. அந்த வகையில் இதை அம்பலப்படுத்துவது அவசியமாகின்றது.ஒரு புலி லூசு ஒன்று எனது கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாது, அது வெளியிட்ட கருத்தைப் இத் தொடுப்பில் பாருங்கள்.http://sathirir.blogspot.com/2007/05/blog-post_31.html (புலிக்காச்சல் ) என்கின்றது.இந்த கட்டுரைக்கான எனது பதிலை நீங்கள் இங்கேயுள்ள இணையத் தொடுப்பில் சென்று பார்க்க முடியும்.http://www.tamilcircle.net/unicode/general_unicode/206_general_unicode.html (ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக்காச்சலை உருவாக்குகின்றது) என்பதை புலி அரசியலிருந்து அம்பலப்படுத்தியிருந்தேன். எனது கருத்துக்கு மீண்டும் பதிலளிக்க முடியாத லூசும், அதற்கு ஏற்ற சில பன்னாடைகளும், வழமையான புலிப்பாணியில் சம்மந்தம் சம்பந்தமில்லாத வகையில் அவதூறுகளை பொழிந்து வம்பளக்கின்றது. கொலைகாரக் கும்பலைச் சேர்ந்த அந்த பாசிட்டுகளின் வம்பை http://sathirir.blogspot.com/2007/06/blog-post_04.html (ரா...ரா...ரயாகரா) இல் பார்க்க முடியும்.எனது கருத்துக்கு ஒரு வரியில் தன்னும் பதிலளிக்க முடியவில்லை என்பதை நீங்கள் பார்க்கமுடியும். இது ஒருபுறமாக, மற்றொரு புலி தனது பகுத்தறிவற்ற சொந்த நம்பிக்கையைக் கொண்டு, பகுத்தறிவு பற்றி புலம்புவதை http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_3547.html (பகுத்தறிவுக்கு விற்காத ரயாகரனின் புலித்துவேசம் ) என்கின்றது.புலிகள் தம்மைத்தாம் தனிமைப்படுத்தி, மற்றவர்கள் எல்லோரையும் கொன்று குவித்தபடி பகுத்தறிவு பற்றி பேசுகின்றனர். தாம் அல்லாத மற்றவர்கள் எலலோரையும் எதிரியாக முத்திரை குத்தி, நடத்துகின்ற சொந்த பாசிச நாடகத்தையே பகுத்தறிவு என்கின்றது இந்தப் புலி.சரி புலிகள் பகுத்தறிவுள்ளவர்களா? சரி அறிவு நேர்மை ஏதாவது உள்ளவர்களா? பகுத்தறிவு என்றால் என்ன? தமிழ் மக்களின் தேசிய போராட்டத்துக்கும், புலிப் பாசிசத்துக்கும் இடையில் உள்ள, அந்த புலிப் பகுத்தறிவு தான் என்ன? கொலையே அவர்களின் பகுத்தறிவாகும். புலிகளின் நடத்தைகளை விவாதிக்க, விமர்சிக்க அனுமதியாத பகுத்தறிவு. இதையே இந்த புலி பகுத்தறிவு என்கின்றது. உண்மையில் எதையும் விவாதிக்க, தமது சரியான சொந்த நிலையை முன்வைக்க, அதனிடம் சொந்த பகுத்தறிவே கிடையாது. பகுத்தறிவுக்கு உட்படாத நடைமுறை அம்பலமாகும் போது, அதைப் பகுத்தறிவுடன் கேள்வி கேட்கும் அனைவரையும், கொல்வதே அதன் பகுத்தறிவாகின்றது. இப்படித்தான் 10000 மேற்பட்டவர்களை கொன்றனர். புலியின் பகுத்தறிவுக்கு உடன்படாதவர்கள் என்பதால் பகுத்தறிவுள்ளவர்களை கொன்று போட்டனர். இதையே பகுத்தறிவு என்று, இந்தப் புலி குலைக்கின்றது.ஒரு விவாதம் செய்பவர்கள் அறிவியல் பூர்வமாக, எமது வாதங்களை மறுத்து, தர்க்க ரீதியாக விவாதிக்கவேண்டும். எந்த பாசிட்டுக்கும், ஏன் பகுத்தறிவற்ற எவருக்கும் அந்த துப்புக் கிடையாது. திரித்தல், புரட்டுதல், அடிப்படையும் ஆதாரமுமற்ற அவதூறு, இதுவே அதன் எழுதும் பகுத்தறிவு மொழியாகின்றது. எழுதும் மொழி அவதூறு என்றால், அதன் நடைமுறை என்பது படுகொலை. இதுவே புலியிசத்தின் சாரம்.என்னை நோக்கி அவதூறு செய்யும் அறிவற்ற லூசு, முதலில் எனது கட்டுரையையே திரிக்கின்றது. நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி அவதூறு செய்கின்றது. அத்துடன் அதைப் புரிந்து கொள்ளும் கல்வி அறிவற்று உளறுகின்றது. அதைச்சொல்லி பன்னாடையாய், தமது வடிகட்டிய முட்டாள்தனத்தை பினாற்றுகின்றது.இந்த லூசு நான் சொல்லாததை, நான் சொன்னதாக கூறுவதைப் பார்ப்போம் 'இவரது வீர பிரதாபத்தை வெளிக்காட்ட இவர் விடும் இன்னொரு கதை யாழ் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவும் சங்கரும் தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாகவும் தனது தாயாரை திட்டியதாகவும் சொல்லியிருப்பதுமட்டுமல்ல" என்கின்றது.இப்படி நான் எங்கே எப்போது கூறியுள்ளேன். (எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக" அவர்கள் என் பெயரில் கற்பனை செய்து கதை சொல்லுகின்றனர். நான் கூறியது என்ன? 'யாழ்மாவட்ட தளபதியாக இருந்த ராதா தான். என்னை தேடிச் சென்ற எனது அம்மா, அவனின் காலில் வீழ்ந்து அவனின் காலை கட்டிப்பிடித்து கதறிய போது, அந்த நாய் எனது அம்மாவின் மூஞ்சையில் உதைந்து விட்டுச்சென்றவன் தான். அன்று காலால் மூஞ்சையில் உதைத்து விட்டுச் சென்ற இடத்தில் தான் கொல்லப்பட்டான். அண்மைக் காலத்தில் எனது வீட்டுக்கு அம்மா வந்த போது, பத்திரிகையில் புலிகளின் முக்கிய தளபதியான சங்கரின் படத்தை பார்த்த பின், அந்த நாசமறுப்பான் பற்றிய தனது நினைவுகளை எனது அம்மா கூறினார். புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட சங்கர், எனனைத் தேடிச் சென்ற அம்மாவை நாயே பேயே சனியனே என்று தூசித்து அங்கிருந்து விரட்டியவன் தான் அவன். மக்களுடனான புலியிசத்தின் உறவுகள், இப்படி மயிர்கூச்செறிபவை தான். இப்படி எத்தனை தாய்மார்களின் சொந்தக் கதைகள், அவர்களின் கண்ணீர்க் கதைகள் உள்ளது. இதை வரலாறு பதிவு செய்யும். இப்படி சமூகத்தையே அவலப்படுத்திய ஆட்கொல்லி வைரஸ்சுகளால் நடத்திய அவலமான கதைகள் பல உண்டு."இதுவே நான் எழுதியது. அதாவது 'என்னை தேடிச் சென்ற எனது அம்மா", 'என்னைத் தேடிச் சென்ற அம்மாவை" அவர்கள் நடத்திய விதம் பற்றி கூறுகின்றது. ஆனால் இந்த புலி லூசு, இதை மாற்றி (எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக" எழுதி என் கதை தான் எழுதி, பாசிச வழிகளில் திரித்துக் கதை கூற முனைகின்றது.அவர்கள் என்னைத் தேடி எனது வீடு சென்றதாக நான் குறிப்பிடவேயில்லை. இதைச் சொல்லும் புலி லூசுகளுக்கு அறிவில்லை என்பதா! எனது அம்மா நாள் தோறும் என்னைத் தேடி புலிகளிடம் சென்றவர். அங்கு நடந்த கதைகளில் சில இவை. தாம் பிடிக்கவில்லை என்று கூறி நடத்திய, நடத்துகின்ற அட்டகாசங்களோ இப்படி பற்பலவாறானவை. அவர்களின் முகாமேறி தாய்மையை பிச்சையாக கேட்ட அனைத்து (தமிழ்) தாய்மாருக்கும், இது போன்ற அழியாத பாசிச வரலாறுகள் பல தெரியும். தம்மால் வதைக்கப்படும் மக்களையும், அவர்கள் குடும்பங்களையும், புலிகள் கையாளும் மொழியும் வன்பேச்சும் அதன் வன்முறையும் உலகம் அறிந்தது. இது பகுத்தறிவுள்ள எல்லா மனிதனுக்கும் நன்கு தெரிந்ததே.(எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக" அவரே கதை சொல்லி பிறகு, அதற்கு ஒரு பன்னாடை விளக்கம். 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை கைது செய்ய ராதாவோ சங்கரோ போக வேண்டியதில்லை. மன்னார் மாவட்ட மற்றும் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவும் புலிகளின் தலைமைக்கு நெருக்கமாகவும் புலிகளின் வான் தொழில் நுட்ப மற்றும் புலிகளின் சர்வதேச விவகாரங்களில் நீண்ட காலம் செயற்பட்டு வந்தவருமாகிய சங்கரும் தேடி வந்ததாக சொல்வதின் மூலம் ரயாகரன் தன்னை புலிகளின் தளபதிகளிற்கே தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வதே இவரின் நோக்கமாகும்." என்கின்றார்.சரி அண்ணை 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை கைது செய்ய ராதாவோ சங்கரோ போக வேண்டியதில்லை. 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை" என்கின்றாரே. சாதாரணமல்லாத அந்த நபர்களாக, யாரை குறிப்பிடுகின்றீர்கள். உங்களால் கொல்லப்பட்ட 10000 பேரைப் பற்றியா சொல்லுகின்றீர்களா? யாரை? . 'கைது செய்ய" என்கின்றீர்களே. என்னை கைது செய்ய, எனது வீட்டுக்கு வரவில்லை. இப்படி எல்லாம் உங்களால் எப்படித்தான் கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருந்து கற்பனை செய்யமுடிகின்றது. அவர்கள் திருடனைப் போல் ஊர் உலகத்துக்கு ஒளித்தபடி, இனம் தெரியாத ரவுடிகளைப் போல் வீதியில் வைத்துக் கடத்தியவர்கள். பின் எப்படி கைது செய்யமுடியும். பின் தாம் பிடிக்கவில்லை என்று அறிவித்தவர்கள். அப்படிப்பட்ட அரசியல் கோழைகள். வீரமாவது, மண்ணாங்கட்டியாவது. ஒரு துரோகியாக முதுகுக்கு பின்னால் நின்று கொல்வதோ வீரம்.அன்று எனக்காக அந்த சமூகம் போராடும் என்பதால், அதை தவிர்ப்பதற்காய் அச்சத்தில் இரகசியமாக கடத்தியவர்கள். கடத்தலும் கைதும் வேறானதென தெரியாது. கைதாவது மண்ணங்கட்டியாவது. நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன் என்பதால், தமிழ் இயக்கங்களின் பாசிசத்தை எதிர்த்த பல போராட்டங்களை சமூகத்தினுள் நடத்தியவன் என்பதால், இரகசியமாக கோழைகளைப் போல் கடத்திச்சென்றவர்கள். புலிகளைப் பொறுத்த வரையில் 'சாதாரணமான ஒருவ"னா கருதப்பட்டல்ல கொல்லப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவனாய் கதையை முடித்துக்கட்டிய பின் கையை விரிக்கும் நோக்கில் கடத்தப்பட்டவன்.'தன்னை புலிகளின் தளபதிகளிற்கே தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வதே" என்கின்றார். கைது செய்ய அவர்கள் வராத போது, இது எப்படி 'ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வது" சாத்தியம். அண்ணே எப்படி அண்ணே? இப்படி எப்படி 'தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக" இருக்க முடியும். அண்ணைமாரே, அந்த அதிசயத்தைச் சொல்லுங்கள். இதற்கு உங்களால் படுகொலையைத் தவிர, வேறு வார்த்தையில் பதில் சொல்லமுடியாது.இப்படிப்பட்ட கொலைகாரக் கும்பல் தான் புலிகள். சுத்துமாத்து, முடிச்சுமாற்றித்தனம், இதற்கு இவை எல்லாம் சான்றுகள். அடுத்து புலித்தலைவர்கள் இது போன்ற கைதுகள் செய்ய செல்வதில்லையாம். அடிமாட்டு நிலைக்கு, ரவடிக்கும்பலாக சீரழிந்து வாழ்பவர்கள் யார்? புலிகள் தான். அறிவு நேர்மை எதுவுமற்று மாபியாக்களாகவும் கொலைகளைச் செய்தே தளபதியானவர்கள் யார்? உங்கள் தலைவர் பிரபாகரன் குரும்பசிட்டி நகைக்கடைக் கொள்ளை அடிக்கச் சென்றதும், அதை எதிர்த்த ஊர் மக்களை கொன்ற காட்சிகளையும் நாம் நேரடியாக கண்டவர்கள். உங்கள் தலைவர் கிட்டு வீதிவீதியாக பேசாதா தூசணமா ! , செய்யாத கோமாளித்தனமா! செய்யாத ரவடித்தனமா! யாழ் மக்கள் இதை நன்கு அறிவர். புலித்தலைவர்கள் எப்படி எந்த வழியில் வரலாற்றுக்குள் வந்தனர் என்பதற்கு, நீங்கள் பதில்சொல்ல முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு மனித விரோதிகளாக, ஈவிரக்கமற்ற கொடூரமானவர்களாக யார் எல்லாம் செயல்பட்டார்களோ, அவர்கள் தான் புலித் தலைவர்கள். இப்படியாக இவர்கள் எந்த எடுபிடிகளுமின்றி திரிந்த காலங்கள் உண்டு.இப்படிப்பட்ட புலிகளுக்கு ஏற்ற புலி லூசு திரித்து புலம்பியதையே, இன்னொரு பன்னாடை தூக்கி வைத்து புலம்புவதைப் பாருங்கள். 'லெப்.கேணல்.ராதா கேணல்.சங்கர் போன்ற மூத்த தளபதிகள் வரை தன்னை தேடி தொல்லை தந்ததாக புது கிரைம் எழுதிப்புழுகித் தள்ளி ப.வி.வின் பைத்தியம் இவருக்கும் பிடிச்சிட்டுதெண்டு சொல்லியிருக்கிறார்." இப்படி நான் எழுதியதையே புரிந்து கொள்ள முடியாத எடுபிடிகள். இவர்கள் தான் கோசம் போடும் புலி ஆதரவாளர்கள். இதில் சில லூசுகள் விவாதம் செய்யும் அறிவாளிகள் போல், கொலைகாரரின் தேவைக்கு ஏற்ற அவதூறை புணருகின்றனர். இந்த பைத்தியங்கள் இந்திய தோழர்களுக்கு சிறப்பு வேண்டுகோள்கள் விடுகின்றனர். மாற்றுக் கருத்துடன் புலிக்கு தோழனா? அந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத மண்டுகள்.இப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்ட அவதூறுகளையும் சம்பவங்களையும் திரித்து விடுகின்றனர். சொன்ன விடையத்தை விளங்க முடியாத புலி அலுகோசுகள் தான், 10000 மேற்பட்டவர்களை கடந்தகாலத்தில் கொன்று போட்டவர்கள்.கொலைகார பாசிச புல்லரிப்பில் புலம்பும் மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம். 'நெல்லியடியை சேர்ந்த விஸ்வானந்ததேவன் என்பவரும் இந்த ரயாகரன் மற்றும் வேறு சிலரையும் இணைத்து மார்க்சிய கொள்கைகளுடன் ஒரு இயக்கத்தை தொடங்கினார். இவரது இயக்கத்தின் பெயர் தமிழ் தேசிய விடுதலை முன்னணி (N.L.F.T). இந்த இயக்கத்தை தொடங்கிய சில காலத்திலேயே விஸ்வானந்ததேவன் காணாமல் போய்விட்டார். பின்னர் இவர் இந்தியா செல்கின்றபோது கடலில் இலங்கை கடற்படை சுட்டு இறந்ததாகவும் இவர்களது இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது." கொலைகாரப் கற்பனை புலனாய்வு கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள். இப்படித்தான் கொலைகளை செய்ய புலனாய்வு செய்கின்றனர் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. தமிழ் தேசிய விடுதலை முன்னணி சண்முகதாசன் கட்சியியில் இருந்து வந்த ஒரு கட்சியின் நீட்சி. அது திடீரென்று தமிழ் தேசிய அலையில் தோன்றியதல்ல. நானும் சிலரும் தொடங்கியதல்ல.நல்லது கொலைகார அண்ணை அவர்களே 'காணாமல் போய்விட்டார்" எப்படி பின்னால் 'இலங்கை கடற்படை சுட்டு இறந்தா"ர். எப்படி காணமல் போனவரை கடற்படையால் சுட முடிந்தது. இப்படி இவர்களால் மட்டும் தான் அறிவாக எழுத முடியும். காணமல் போனவரை எப்படி 'இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாக" கூறமுடியும். அதுவும் கடற்படைக்கு அல்ல இராணுவத்துக்கு. இப்படி புலிகள் 'அறிவியல் பூர்வமாக" சிந்தித்து கூறித்தான், கொலைகளையும் தம்மையும் நியாயப்படுத்துகின்றனர். இந்த நியாயத்தை பின்பற்றி எழுதும் பன்னாடை ஒன்று, "அறிவு பூர்வமாக" கூறுவதைப் பாருங்கள்.'அதில் ஒரு 10 இலட்சம் ரூபாவை இந்த றா சாரு சுறுட்டிப்புட்டாருங்க. அதைக் கேட்கப் போன விஸ்வானந்தா தேவா சாரை இந்த றா சாரு பிளாட் இயக்கத்தின மென்டிஸ் சாரை வைச்சு அடிச்சுப்பிட்டாருங்க. பிளாட் இயக்கம் தன்னுடைய உட்கட்சிப் பிரச்சனையில் எப்பிடித் தலையிடலாம் என்று உமாமகேஸ்வரன் சாருகிட்ட நியாயம் கேட்க விசுவா சாரு தமிழ்நாட்டக்கு போட் ஏறினவர் தானுங்க. அதோட அவரோட கதை முடிஞ்சுதுங்க. இந்த றா சாருதாங்க முதல் முதலா விசு சாரை சிறீலங்கன் நேவி சுட்டுப் போட்டதா சொன்னவருங்க. ஆனா உண்மையில் அவரை நேவி சுடல்லைங்க. தங்கச்சி மடத்தில கரையேறின விசு சாரை பிளாட் சங்கிலிசாரின் ஆக்கள் கைது செய்து ஒரத்து நாட்டிலை இருந்த அவங்க பி முகாமிலை அடைச்சு வைச்சவையுங்க. அந்த நேரத்தில அவற்றை கதையை முடிக்கச் சொல்லி இந்த றா சார் தான் மெண்டிஸ் சார் மூலமா பின் தளத்துக்கு தகவல் அனுப்பினவருங்க. விசு சாரை சுட்டுக் கொண்டது சங்கிலி சாரோட தோஸ்து அலவாங்கு மோகன் என்பவருங்க.. இன்னொரு சமாச்சாரம்.. இந்த றா சாருக்கு அந்தக் காலத்திலேயே ரோ சாருங்கு கூட உறவிருந்ததுங்க. தமிழ் நாட்டு தோழர்மாருங்களே உசார இருங்க.ரோ சாரங்களோட ஆளுகள் தோழர் என்று செல்லிக் கொண்டும் வருவாங்க"தங்கள் சொந்த பாசிச வழியில் சிந்தித்து எழுதும் லூசுக் கூட்டம் என்பது இது தான். அறிவு, நேர்மை எதுவுமற்ற பன்னாடைகள். வாயில் வந்ததை மாறி மாறி நக்கியெழுதுவது. பிறகு தமிழ்நாட்டு தோழர்மாருக்கு வேண்டுகோள். உங்கடை பணத்துக்கு கோமாளிகளான கோபாலசாமி, நெடுமாறன் வகையறாக்களுக்கு வேண்டுகோள் விட வேண்டியதுதானே. 'தோழர் என்ற செல்லிக் கொண்டும் வருவாங்க" என்று புல்லரிக்கும் ஆலோசனைகள்.அந்த 'காணாமல் போய்விட்டார்" விசு பற்றி கதைகள் இவை. அவர் இந்தியா செல்லும் வள்ளம் ஏறும் வரை, இந்த புலி லூசுகள் கூறுவது போல் என்றும் காணாமல் போய்விடவில்லை. வள்ளம் ஏறிய பின்தான் காணாமல் போனவர். அதன் பின்னரான ஊகங்களைத் தவிர, வேறு எந்த ஆதாரபூர்மான தரவுகளும் இதுவரை கிடையாது. இவர்கள் கதை சொல்வதைப் பார்த்தால், அவர் வள்ளத்தில் ஏறிய பின் காணாமல் போன விடையத்தில், புலிகள் பற்றி உள்ள சந்தேகத்தை உடைத்துப் போடுவதாக உள்ளது. இதன் பின் விசு பற்றி கட்டும் கதை, மேலும் இதில் புலிகளின் சம்மந்தம் பற்றிய ஊகத்தை மேலும் எழுப்புகின்றது.விசுவுக்கு என்ன நடநத்து என்பதை வைத்து, தெருநாய்கள் போல் ஒன்றையொன்று பார்த்து குலைக்கின்றது.இந்த குலைப்பில் பொருத்தமற்ற முரண்பாடுகள் என்ன?1. விசுவானந்ததேவன் அக்காலத்தில் என்.எல்.எவ்.ரி. இயக்கத்தில் இருக்கவேயில்லை. அவர் மற்றொரு அமைப்பில் இருந்தவர். இது கூடத் தெரியாத புலம்பல். அவர் என்.எல்.எவ்.ரி. யில் இருந்து பிரிந்த போது, ஒரு அரசியல் விவாதம், ஒரு விமர்சனம், அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடு கண்டு சமாதானமாகவே பிரிந்தவர். அவருக்கு பணமும் ஆயுதமும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் என்.எல்.எவ்.ரி. யால் வழங்கப்பட்டது. இணங்கி வேலை செய்யவும், தொடர்ந்து மீள இணையவும் கூடிய அரசியல் இணக்கப்பாடு இனம் காணப்பட்டது. அவரவர் வழிகளில் செயற்பட பூரண ஒத்துழைப்பு கூட பரஸ்பரம் இருந்தது. அமைப்பு ரீதியாக இரண்டு அமைப்புகள், ஆனால் நண்பர்களாக தோழர்களாகவே இவ் இரண்டு இயக்க உறுப்பினர்களும் செயற்பட்டனர். இது இலங்கை இயக்கங்களின் வரலாற்றில் இல்லாத ஒன்று. பலரும் அறியாத ஒன்று. இந்த புலி லூசுகள் தம்மைப் போல், தம் புத்தி போல், தம் பாசிச வழி போல் கருதியே கண்ணை மூடிக்கொண்டு கதை புனைகின்றனர்.விசுவுக்கு வள்ளத்தில் சென்ற பின் என்ன நடந்தது என்று தெரியாத போதும், அவர் கொல்லப்பட்டார் என்பதே உண்மை. அந்த வகையில் யார் இதைச்செய்தனர்?1. புலிகள் என்ற சந்தேகமே பெரும்பாலும் உண்டு. அவர் கடற்பயணம் செய்ய தங்கியிருந்து கரையோர இடம் பகிரங்கமானது. அவர் சென்ற வள்ளமோ பொதுமக்களை அகதியாக ஏற்றிச் சென்ற வள்ளம். 28 பேர் அளவில் வள்ளத்தில் சென்றனர். வள்ளம் புறப்பட்ட இடத்தில் பொது மக்கள் உட்பட புலிகள் இருந்தனர். புலிகள் இப்படிப்படட படுகொலைகளை அக்காலத்தில் செய்து வந்தவர்கள். இயக்க தலைவர்களை ஒவ்வொருவராய் சுட்டுக்கொன்றவர்கள். ஒபரேதேவன் முதல் பலர் கொல்லப்பட்டனர். ரெலொ அழிக்கப்பட்டு, அவ்வியக்கத்தில் பலர் கொல்லப்பட்டு இருந்தனர். புளாட் மென்டிஸ் அக்காலத்தில் புலிகளின் சிறையில் இருந்தவர் அல்லது கொல்லப்பட்டு விட்டார்.2. இந்த விடையத்தில் இரண்டாவது சந்தேகம் ஈரோஸ் மீது உள்ளது. அந்த வள்ளத்தில் விசுவுடன் சென்ற இரண்டாவது நபரான கண்ணன், கரையில் நின்றிருந்த ஈரோசுடன் வாக்கு வாதப்பட்டிருந்தனர். அதாவது கடுமையான ஒரு மோதல் நிகழ்ந்துள்ளது. அவர்கள் கூட இதை செய்திருக்கும் வாய்ப்பு உள்ளது. இதே ஈரோஸ் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் நெப்போலியனை, மலையகத்தில் வைத்து ஒன்றாக படுத்த பாயில் வைத்துக் கொன்றவர்கள். அப்படி கொல்வதில் புகழ்பெற்றவர்கள்.3. மூன்றாவது சந்தேகம் ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் மீது உள்ளது. அன்று மற்றொரு வள்ளத்தில் சென்ற ராஜன், விசு இந்தியா வருவதை அறிவான். அவன் தன்னுடன் தனது வள்ளத்தில் விசுவை வரும்படி, கரையில் வைத்துக் கோரியவன். விசு நிராகரித்ததாய் அறிவித்தவன். விசு கொல்லப்பட்டதாக ராஜன் தான் இந்தியாவில் முதலில் அறிவித்தவன். முன்னராக புறப்பட்டு சென்ற வள்ளத்தில் இருந்த ராஜனுக்கு, எப்படி பின்னால் வந்த வள்ளத்திலிருந்த விசு கொல்லப்பட்டார் என்று கூற முடிந்தது என்பது மர்மம் தான். அப்போது றோவின் மிக நெருங்கிய சகவாக ராஜன் செயற்பட்ட காலம்.4. நாலாவது சந்தேகம் கடற்படை மீது உள்ளது. கடற்படை மீதான சந்தேகம் பொதுவானது. ஆனால் 28 சடலங்கள் முதல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கடற்படை செய்திருந்தால், அக்காலத்தில் சடலங்களை அப்படியே விடுவதே வழக்கம். அதுவும் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று இலகுவாக அறிவித்து விடமுடியும். இச்சம்பவத்தை பொதுமக்கள் எவரும் காணவுமில்லை, அது பற்றிய பதிவுகள் எவையுமில்லை.சந்தேகம் இயக்கங்கள் மீதே அதிகமாக உன்ளது. இந்த இயக்கங்கள் கொலைகார இயக்கங்களே. விசு காணாமல் போன காலத்தில் தான் பல்கலைக்கழக மாணவன் தலைவன் விஜிதரன் காணாமல் போனான். அதைத் தொடர்ந்தே புலிக்கு எதிரான புகழ்மிக்க போராட்டமும் நடந்தது.2. அடுத்து இந்த சம்பவத்தில் மெண்டிஸ் இணைத்து சோடித்த புலிக் கூற்று நகைச்சுவையானது. விசு காணாமல் போன காலத்தில் மென்டிஸ் நீண்ட காலமாக கைது செய்யப்பட்ட நிலையில் புலிகளின் வதை முகாமில் இருந்த காலம். இக்காலத்தில் தான் மென்டிஸ் கொல்லப்பட்டார். விசுவுடன் மென்டிசை சம்பந்தப்படுத்தும் தகவல்கள் எல்லாம் முரணானதும் நகைப்புக்குரியதும்.அத்துடன் சங்கிலி கடத்திச் சென்று கொன்ற தகவலோ நகைச்சுவையிலும் நகைச்சுவை. இக்காலத்தில் புளாட் பல துண்டுகளாக உடைந்தது மட்டுமின்றி, சங்கிலி போன்ற கொலைகாரர்கள் செயலற்றுப் போன காலம். புளாட் வதைமுகாங்கள் எல்லாம் வீங்கிவெம்பி சிதைந்து, சுக்குநூறாகின காலம். இப்படி கற்பனையில் எழுதுகின்ற போக்கிலித்தனம், புலியிசத்தின் உள்ளார்ந்த பாசிசமாகும். இது தன்னைப் போல், மற்றவனுக்கு அதை பொருத்தி வைப்பதே அதன் குள்ளநரித்தனம். வரலாற்றுச் சம்பவங்களைக் கூட தெரியாது, அதை திரித்து கயிறு விடுவதும். அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி அதை இணைத்து கதைசொல்லி நம்பவைக்கும் முடிச்சுமாற்றிகள் இவர்கள்.3. விசு உமாமகேஸ்வரனை சந்திக்க சென்றாராம். வரலாறு தெரியாத, அரசியல் தெரியாத கற்றுக் குட்டித்தனம். தீப்பொறி உடைவு, அவர்களின் வெளியேற்றம் உட்பட அவர்களைப் பாதுகாத்தது வரை, விசு தலைமையில் இருந்த என்.எல்.எவ்.ரி. தான் முக்கிய பங்கு வகித்தது. முன் கூட்டியே நாம் அவர்களுடனான தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். தீப்பொறி குழு , புதியதோர் உலகம் நூல் வெளியிட பண உதவி, அந் நூற்பிரதிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தது உட்பட, தீப்பொறி நபர்களை நாட்டுக்குள் அழைத்து வந்ததைக் கூட நாமே செய்திருந்தோம். அதன் பின்பாக சந்ததியாருடன் தொடர்சியான தொடர்பும், அவரை புளாட் கொன்ற போது அந்தக் கொலையை முதலில் அம்பலப்படுத்தியவர்களும் நாங்கள் தான். மண்ணில் அதை போஸ்ரர்கள் மூலம் அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். இவையெல்லாம் விசு என்.எல்.எவ்.ரி. யை விட்டு வெளியேற முன் நடந்தவை. விசு உமாமகேஸ்வரன் உறவு என்பது நினைத்து பாhக்க முடியாத ஒன்று. அந்தளவுக்கு புளாட் உட்படுகொலைகளை அக்காலத்தில் நாம் அம்பலப்படுத்தி வந்தவர்கள். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் முன்னைய தலைவன் உமாமகேஸ்வரனை சந்திக்கச் சென்றதாக கூறுங்கள் நாங்கள் நம்புவோம்.பாவம் அரை முட்டாள்களே 1983 பிந்தைய அவரின் வாழ்க்கை இந்தியாவில் தான் இருந்ததுடன், அவரின் மனைவி குழந்தை கூட இந்தியாவில் தான் இருந்தனர். அவர் சென்ற காரணத்தையே திரிப்பது, அவதூறு பொழிவது புலிப் பாசிசத்தின் இழிவுத்தனமாகும்.இப்படி பொருத்தமற்ற வகையில், தமது அலுக்கோசுத் தனத்தை மெய்ப்பிக்க முனைவதே இவை. கொல்வதும், அதற்கு ஏற்ப எடுபிடிகள் காவடியாடுவதைத் தவிர, வேறு எதையும் செய்ய வக்கில்லாதவர்களின் அலம்பல் இது. இக்காலத்தில் தான் புலிக்கு எதிராக வீறு கொண்ட விஜிதரன் போராட்டம் நடந்த காலகட்டம். இப் போராட்டத்தின் போது மாணவர்கள் கோரிய அடிப்படை மனிதவுரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று துண்டுபிரசுரம் அடித்து வெளியிட்ட காலமுமாகும். மக்களின் எதிரிகளான புலிகள், மக்களின் தலைவர்களை வேட்டையாடி கொன்று குவித்த காலம் இது.

விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)

விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)

விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 03)

இக் காலத்திலே தான் நான் கடத்தப்பட்டேன். அதை இந்த லூசு 'இவர் தனது பதிவுகளில் தன்னை புலிகள் கைது செய்து சித்திரவதை செய்ததாகவும் பின்னர் தான் சிறையுடைத்து தப்பி வந்ததாகவும் பல காலமாகவே கதை சொல்லி திரிந்தார்" இப்படி எழுதி இதை இல்லை என்கிறதா இந்த லூசு? அல்லது புலித் தலைவர்களின் இது குறித்த அறிக்கையை இல்லை என்கின்றதா?யாருக்கு கதை சொல்ல வெளிக்கிடுகின்றீர்கள். உங்கடை விரல் சூப்பும் விசுவாசிகளுக்கு சொல்லுங்கோ. உண்மையை அறிந்தவர்களுக்கு, உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு சொல்ல முடியாது. புலிகளின் உரை அடங்கிய ஒலி நாடா சொல்வதைக் கேளுங்கள். அது என்ன சொல்லுகின்து என்பதை கேளுங்கள். அதைக் கேட்க முடிவதில்லையோ அல்லது வேறு ஆதாரம் வேண்டுமோ?புலிகளில் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரைஇந்த லூசுகளின் அறிவுக்கு புறம்பாக, புலித்தலைவர்கள் (மாத்தையா, தீலிபன், முரளி (புலி மாணவ அமைப்புத் தலைவன்) உள்ளிட்ட பலர்) உயிருக்கு உத்தரவாதத்தை, பல்கலைக்கழக மேடையில் பல ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் தருகின்றனர். அதை மேல் உள்ள உரை தெளிவுபடுத்துகின்றது.இப்படி இருக்க இந்த புலி லூசு 'இவர் சொன்னது போல புலிகளால் இவரிற்கு ஆபத்து என்றால் அந்த இடத்தை விட்டு வெளியேறியதுமே புலிகள் இவரை கைது செய்திருக்கலாம். காரணம் பல்கலைக்கழகத்திற்கு மிக அருகிலேயே புலிகளின் இரண்டு முகாமும் இவரது வீட்டிற்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது. பின்னர் இவர் பிரான்சிற்கு வந்த பின்னரும் அங்கு பிடித்த காச்சல் மாறவில்லை 85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது. ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான். ஆனால் இவரது கதைக்கு ஏற்றால் போல் நல்லதொரு பின்னணி இசையும் குடுத்து ஒரு பாட்டும் போட்டு கடைசியில் ஒரு நூறு புலிகளை தாக்கி சுட்டு தள்ளிவிட்டு சிறை மதிலை தாண்டி அகழியில் நீந்தி தப்பி வந்ததாக படமாக தயாரித்தால் இன்னொரு சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ படம் பாத்தமாதிரி இருக்கும்." என்கின்றார். சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ கதையை, முன்னைய புலித் தலைவர்களுக்கு மாறாக கூறுவது தான், இன்றைய புலியிசம்.'ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான்." என்கின்றார். ஏதோ அவைகளை தானே செய்துணர்ந்தவர் போல் இவ்வளவு துல்லியமாக கூறுகின்றார். நான் 85 நாட்கள் சிறையில் இருந்தது உண்மை என்பதை, மாத்தையா உரை தெளிவாக கூறுகின்றது. அதை இல்லையென்று கூறுகின்ற நயவஞ்சகமே, புலிப்பாசிசத்தின் அரசியல் மூலமாகும். '85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது." என்கின்றார். அப்படியாயின்1. இந்த நாட்களில் புலிகள் என்ன செய்திருப்பார்கள்?

2. என்ன விசாரித்திருப்பார்கள்?

3. ஏன் அவர்கள் என்னைக் கடத்தவில்லை என்று மறுத்தனர். தமக்குத் தெரியாது என்றனர்?

4. அப்படியாயின் என்ன செய்திருப்பர்?

5. உயிருடன் விட்டிருப்பார்களா? எப்படி?

6. என்னைக் கடத்தாதவர்கள் எப்படி உயிருடன் விடமுடியும்.இப்படி பல கேள்விகளை நாம் கேட்கமுடியும். இந்த லூசு புலம்பல்களின் பல வரலாற்று திரிப்புகளை அம்பலப்படுத்த முடியும். இதுவே போதும்.இரட்டை வேடத்தையும் இனவெறியையும் முறியடிப்போம்

காவிரி: தேசியக் கட்சிகளின் இரட்டை வேடத்தையும்

கன்னட இனவெறியையும் முறியடிப்போம்!""காவிரி கர்நாடகத்துக்கு மட்டுமே சொந்தமானது; தமிழகத்துக்கு அதன்மீது எவ்வித உரிமையும் இல்லை'' என்ற குதர்க்க வாதம்தான் இதுநாள் வரை கர்நாடக அரசு செய்த வந்த எல்லாவிதமான சட்டவிரோத அடாவடித்தனங்களுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. இந்தப் பின்புலத்தில் 1990இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தற்போது வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 1924 ஒப்பந்தத்தைப் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீளாய்வு செய்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதிலிருந்து, மேற்கூறிய ஒப்பந்தத்தையே மறுத்து வந்த கர்நாடக அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. "காவிரி நீர் என்பது தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கும் தருமம் அல்ல' என்பதுடன் காவிரி நீரில் தமிழகத்துக்குள்ள பாரம்பரிய உரிமையும் இத்தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையில் கேரளாவின் மார்க்சிஸ்டு அரசு முன்வைத்து வரும் இதே விதமான வாதத்திற்கும் இத்தீர்ப்பு பதிலாக அமைந்திருக்கிறது.தண்ணீர் ஆண்டென்பது ஜூன் 1ஆம் தேதி தொடங்கி, மே 31இல் முடிவடைகிறதென்றும், இந்தக் காலகட்டத்தில் மாதந்தோறும் கர்நாடகம் எவ்வளவு தண்ணீரைத் திறந்து விட வேண்டுமென்பதையும் நடுவர் மன்றம் வரையறுத்துக் கூறியுள்ளது. இரண்டு சாகுபடிகளுக்கான ஒப்பீட்டளவிலான உத்திரவாதம் இதன்மூலம் கிடைத்துள்ளதுடன், தமக்கு வசதிப்பட்ட நேரத்தில் தண்ணீரை வழங்குவது, பிறகு ஆண்டுக்கு இத்தனை டி.எம்.சி. தண்ணீர் வழங்கிவிட்டதாகக் கணக்குக் காட்டுவது என்ற கர்நாடகத்தின் மோசடி இதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களில், அப்போதுள்ள நீர் கையிருப்பு அளவுக்கு ஏற்ப, இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளதன் வாயிலாக, "எங்களுடைய தேவைக்குப் போக உபரி இருந்தால்தான் தமிழகத்துக்குக் கொடுக்க முடியும்' என்ற கர்நாடக அரசினுடைய அடாவடித்தனமான வாதத்தின் அடிப்படையையும் நடுவர் மன்றத் தீர்ப்பு தகர்த்துள்ளது.ஏற்கெனவே நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில், மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரே, தமிழகத்துக்கு வழங்கப்படும் நீராக அளவிடப்பட்டிருந்தது. தவறான புள்ளிவிவரங்களை அளிப்பதற்கும், முரண்பாடுகள் தோன்றுவதற்கும் அடிப்படையாக இருந்த இந்த நீர் அளவிடும் முறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. மைய அரசின் நீர்வளத் துறையால் பராமரிக்கப்படும் கர்நாடக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு நீர் அளவை மையத்திலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவே கணக்கில் கொள்ளப்பட வேண்டுமென தற்போதைய தீர்ப்பு கூறியுள்ளது.பிலிகுண்டுலு அளவை மையத்திலிருந்து ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகம் தரவேண்டுமென தற்போதைய இறுதித் தீர்ப்பு கூறுகிறது. பிலிகுண்டுலுவுக்கும் மேட்டூருக்கும் இடையிலுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் காவிரிக்கு வந்து சேரும் நீர் 25 டி.எம்.சி. என்பதால் ஆண்டுதோறும் மேட்டூருக்குக் கிடைக்கும் நீரின் அளவு 217 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது. இதிலிருந்து தமிழகம் புதுவைக்கு வழங்கவேண்டிய 7 டி.எம்.சி. தண்ணீர் போக மீதம் கிடைக்கும் நீரின் அளவு ஏற்கெனவே இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்பட்ட நீரின் அளவைக் காட்டிலும் அதிகமே என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளத்துக்குரிய 30 டி.எம்.சி. தண்ணீரை அவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு தற்போது இல்லையென்பதால், அந்த நீரையும் தமிழகமே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படுவதைக் கண்காணிக்க ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீரை கால அட்டவணைப்படி வழங்க வேண்டுமென்றும், அதனைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் கர்நாடகம் ஈடுபடக்கூடாது என்றும், ஒரு மாதத்தில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்தால் அடுத்த மாதமே அது பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய நீர்மின் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாசனத்துக்கான தண்ணீரின் அளவில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதையும் தீர்ப்பு குறிப்பிடுகிறது.தீர்ப்பில் குறைகள் இல்லாமலும் இல்லை. தஞ்சையின் குறுவைப் பாசனப்பரப்பு குறைக்கப்பட்டுள்ளது, அமராவதி பாசனப்பகுதியின் கரும்புப் பாசனம் கணக்கில் கொள்ளப்படாதது, பற்றாக்குறைப் பகிர்வு குறித்த வழிகாட்டுதல்களில் குறைபாடு, உபரிநீர் பகிர்வு குறித்து எதுவும் குறிப்பிடப்படாமை போன்ற குறைபாடுகள் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. தீர்ப்பின் பாதகமான அம்சங்கள் குறித்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மாறாக, கர்நாடக அரசோ, தீர்ப்பையே நிராகரிப்பதாகவும் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கூறியிருக்கிறது. பாசனப்பரப்பு அதிகமாகவும், தண்ணீர் பற்றாக்குறையாகவும் உள்ள சூழலில், எல்லாத் தரப்பினரும் முழுமையாகத் திருப்தியடையத்தக்க தீர்ப்பொன்றை வழங்குவது கடினம்.

ஆயினும், தீர்ப்பின் விவரங்களுக்குள் செல்லாமலேயே தீர்ப்புக்கு எதிரான வெறித்தனமான போராட்டங்கள் கன்னட இனவெறியர்களாலும், பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட தேசியக் கட்சியினராலும் கர்நாடக விவசாயிகள் மத்தியில் தூண்டிவிடப்படுகின்றன. கர்நாடகத் தமிழர்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டுவதற்கான சூழல்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. அதேநேரத்தில், தீர்ப்புக்கு எதிராக கர்நாடக ஓட்டுக் கட்சிகள் நடத்தவிருந்த கடையடைப்பு, "பன்னாட்டு நிறுவனங்களின் போர்விமான வர்த்தகக் கண்காட்சி' பெங்களூரில் நடந்ததையொட்டி அம்மாநில முதல்வரின் கோரிக்கையை ஏற்று தள்ளி வைத்து நடத்தப்பட்டது. கர்நாடக ஓட்டுப் பொறுக்கிகளின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கும், இந்தப் போராட்டங்களின் போலித்தனத்திற்கும் இதுவே சான்று.கர்நாடக விவசாயிகளின் தற்கொலையும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகள் அங்கே துரத்தப்படுவதம், காவிரிச் சிக்கல் தோற்றுவித்த பிரச்சினைகள் அல்ல. அவை மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவுகள். பாசனப்பராமரிப்பு திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவது, ஆறுகள் மாசுபடுத்தப்படுவது, அரசு கொள்முதல் ரத்து, பன்னாட்டு நிறுவனங்களின் தானியக் கொள்முதல், தானிய விற்பனையில் ஊகவணிகம் போன்ற விவசாயிகளைக் கொல்லும் பல்வேறு பிரச்சினைகளுக்காக இவர்கள் போராடுவதில்லை. இரு மாநிலங்களுக்கு இடையில் முரண்பாடாக உருவெடுக்கும் பிரச்சினைகளை மட்டுமே விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்சினையாகச் சித்தரிக்கும் இத்தகைய இனவாதம் அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டும். அதேபோல, கர்நாடகத்தில் ஒன்றும் தமிழகத்தில் ஒன்றும் பேசும் சந்தர்ப்பவாதத்தையே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டிருக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை வேடமும் தோலுரிக்கப்பட வேண்டும். காவிரி தொடர்ந்து பிரச்சினையாகவே நீடிப்பதற்கு இந்த அயோக்கியர்களின் இரட்டைவேடமே முதன்மையான காரணம்.ந்தத் தீர்ப்பை முடக்குவதற்குத் தன்னாலான அனைத்தையும் கர்நாடக அரசு செய்யும் என்பது தெளிவு. எனவே, தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது, தீர்ப்பின் பாதக அம்சங்களுக்கு எதிரான மேல்முறையீடு போன்ற சட்டபூர்வ முறைகளைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அரசியல் சட்டத்துக்கோ, நியாயத்திற்கோ, கர்நாடக அரசு கட்டுப்பட மறுத்தால், "நிபந்தனையற்ற தேசிய ஒருமைப்பாடு ஏதும் இல்லை' என்பதை நிலைநாட்டும் வகையில் அரசியல் ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

·

Thursday, June 14, 2007

தேர்தல் புழுதியில் மறைக்கப்படும் பட்டினிச் சாவுகள்

உத்திரப்பிரதேசம்:

தேர்தல் புழுதியில் மறைக்கப்படும்
பட்டினிச் சாவுகள்உ.பி. மாநிலம் வாரணாசி மாவட்டத்திலுள்ள பேல்வா கிராமத்தைச் சேர்ந்த இலட்சுமிணாவிடம் அடமானம் வைப்பதற்குத் தனது திருமணப் புடவையைத் தவிர, மதிப்புமிக்க பொருட்கள் வேறெதுவும் இல்லை. அந்தச் சேலையை யாராவது அடமானம் எடுத்துக் கொண்டு நூறு ரூபாய் கொடுத்தால், சாகக் கிடக்கும் தனது மகள் சீமாவைக் காப்பாற்றி விடலாம் என நம்பினார், அவர். ஆனால், சேலையை அடகு வைப்பதற்கு முன்பே, சாவு முந்திக் கொண்டு விட்டது. ஒன்பது வயதான சீமா என்ற அந்தச் சிறுமியின் உயிரைக் குடித்த நோயின் பெயர் ""பட்டினி''!இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோனேபத்ரா மாவட்டத்திலுள்ள ராப் கிராமத்தைச் சேர்ந்த 18 காசியா பழங்குடி இனக் குழந்தைகள் பட்டினியால் நோய்வாய்ப்பட்டு இறந்து போயின. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் பேல்வா கிராமத்தில் மட்டும் ஐந்து குழந்தைகள் பட்டினிக்குப் பலியாகியுள்ளன. கிழக்கு உ.பி. பகுதியில் கடந்த இரண்டே ஆண்டுகளில் 174 பேர் பட்டினிக்குப் பலியாகியிருப்பதாக மனித உரிமைகளுக்கான மக்கள் கண்காணிப்புக் குழு குறிப்பிடுகிறது.

கிழக்கு உ.பி. பகுதியில் அடிக்கடி ஏற்படும் வறட்சியால் விவசாயம் நசிந்து விட்டது. சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல், பாரம்பரியமிக்க நெசவுத் தொழில் நொடித்துப் போய் விட்டது. நிரந்தரமான மாற்று வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால், இப்பகுதி மக்கள் பட்டினியோடு போராடி வருகின்றனர்.பல நாட்கள் பட்டினி; சில வேளைகளில் அரிசிச் சோறும், வேகவைத்த உருளைக்கிழங்கு மட்டுமே உணவு. இதன் காரணமாக புரோட்டீன் சத்துக் குறைவு ஏற்பட்டு, என்ன ஏதுவென்று கண்டுபிடிப்பதற்கு முன்பே குழந்தைகள் இறந்து விடுவதாக குழந்தை நல மருத்துவர் ராஜேந்திர பதக் குறிப்பிடுகிறார். விவசாயக் கூலி வேலையை நம்பி வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்டோரும், நெசவுத் தொழிலை நம்பியுள்ள முசுலீம்களும் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.உ.பி. மாநில சட்டசபையைக் கைப்பற்றுவதற்காக சாதிக் கூட்டணிக் கணக்கில் மூழ்கிப் போய்விட்ட ஓட்டுக் கட்சிகளுக்கு, இந்தப் பட்டினிக் கணக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ""உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறை இல்லாதபொழுது பட்டினிச் சாவு எப்படி நடக்க முடியும்?'' எனத் திமிராகக் கேட்கிறது அதிகார வர்க்கம். மேலும், பட்டினியோடு போராடும் இம்மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வதாகப் பிரித்து, ரேசன் பொருட்கள் கிடைக்காமலும் வயிற்றில் அடித்துவிட்டது. காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் பீற்றிக் கொள்ளும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், இந்தப் பகுதியில் நடைபெற்றதற்கான அறிகுறியே தென்படவில்லை.எத்தியோப்பியா, சூடான், சோமாலியா போன்ற ஏழை ஆப் பிரிக்க நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு, இந்தியாவின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நடந்து வருகின்றன. தாராளமயத்தை மேலும் தீவிரமாக அமல்படுத்துவதுதான் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், பட்டினியையும் ஒழிப்பதற்கான ஒரே வழி என்கிறார், ப.சிதம்பரம்.தாராளமயத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாராளமயம் நத்தை வேகத்தில்தான் நகர்ந்து வருகிறதா? தாராளமயம் "நத்தை' வேகத்தில் நகரும்பொழுதே, இத்துணை பட்டினிச் சாவுகளையும், தற்கொலைச் சாவுகளையும் ஏற்பத்தியிருக்கிறது என்றால், தீவிரமான தாராளமயம் நாட்டையே சுடுகாடாக்கி விடாதா?

Wednesday, June 13, 2007

புலியிசம் என்பது என்ன?

புலியிசம் என்பது என்ன?பி.இரயாகரன்
13.06.2007
டுகொலை, கொள்கை கோட்பாடற்ற மாபியாத்தனம். தாம் ஏன், எதற்காக, எந்த இலட்சியத்துக்காக, எப்படி போராடுகின்றோம் என்பதை சொல்ல முடியாத கும்பல். இவர்களுக்கும் மனித குலத்துக்குமான உறவு என்பது, கடைந்தெடுத்த பாசிசம்.
இவர்களின் மொழி படுகொலை தான். இதுவல்லாத வேறு எந்த ஒரு அரசியலும் கிடையாது. அதனிடம் அரசியல் தர்க்கம் கிடையாது. விவாதிக்கும் அரசியல் நேர்மை கிடையாது. இலட்சியம் என்பது வெறும் கோசமாக மாறிவிட்ட நிலையில், மக்களை வெறும் மந்தைகளாக மாற்றிவிட்ட நிலையில், அடக்குமுறையைத் தவிர அதனிடம் ஒரு அரசியல் மொழி இருப்பதில்லை.
இப்படிப்பட்ட அரசியல் அனாதைகளின் இருப்பு என்பது, அரசியல் படுகொலைகள் மூலம் தம்மை தக்கவைப்பது தான். இப்படி 10000 க்கு மேற்பட்ட தமிழர்களை இனம் கண்டு கொன்றதன் மூலம் தான், புலியிசம் இன்று வரை நீடிக்கின்றது. அதுமட்டுமல்ல ஊர் உலகத்தில் உள்ள இலங்கைத் தமிழரை எல்லாம் புலிகளின் அதிகாரத்தின் முன் நிறுத்தினால், மற்றொரு 10000 பேரை உடனடியாகவே கொல்லும் ஒரு பட்டியலையும் வைத்துள்ளனர். அந்தளவுக்கு மக்களுக்கு எதிரான செயல்பாடுகள், வீங்கி வெம்பி காணப்படுகின்றது. உண்மையில் இதற்குள் அதன் தர்க்கம், அதன் அரசியல் எல்லாம். இதுவே சாரமாகி புலியிசம் உயிர்வாழ்கின்றது.
இதை செய்வதற்கும், நியாயப்படுத்துவதற்கும் அது கையாளும் தர்க்கம் என்பது, இழிவானதும் கேடுகெட்ட துரோக வழிகளுமே. எடுத்த எடுப்பில் துரோகி, எட்டப்பன், பொம்பளைப் பொறுக்கி, நிதி மோசடிக்காரன், கைக் கூலி என்று முத்திரை குத்தி கட்டமைப்பதே புலியிச அரசியல். புலியின் அரசியலே இதுதான். இதற்கு வெளியல் அ, ஆ எதுவும். தெரியாது. அவர்கள் கட்டமைக்கின்ற அவதூறுகளுக்கு அரசியல் அடிப்படைகள், ஆதாரங்கள் எதையும் முன்வைப்பதில்லை. மாறாக பொய்யும் புரட்டும், கற்பனையும் புளுகும், அதர்மமான வழிகளில் வரலாற்று மோசடி செய்து விதம் விதமாக கட்டமைப்பதே அவர்களின் பாசிச மொழி.
உண்மையில் இதை கேட்பவன் மந்தையாகவும், கேள்வி கேட்கும் ஆற்றலற்ற மலட்டுக் கூட்டமாகவும், விசுவாசமே அறிவாகவும் கொண்ட சைக்கோக்களாக வைக்கப்படுகின்றனர். உள்ளடக்கத்தில் அரை லூசுகள். எந்த சொந்த உணர்வு அற்றவர்கள். வெறியேற்றப்பட்டு முறுக்கிவிடப்பட்டால் சுழலும் பொம்மை இயந்திரங்கள். சுய ஆற்றலற்றது. சுய அறிவற்றது. சுய புத்தியற்றது.
கற்றல், கற்பித்தல், கேட்டல், கேட்டவற்றை விவாதித்தல் என அனைத்தும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அப்படி இருந்தால் மட்டும் தான், தேசியம் என்று ஊட்டப்படுகின்றது. இதை கடைப்பிடிக்கின்ற அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக, அதையே பெருமையாக மாற்றிவிடுவதே புலியிசம்.
ஒன்றையே கேட்கவும், அதையே மீள ஓதவும் தூண்டப்படுகின்றது. மற்றையவற்றை பார்க்காமல் கேட்காமல் இருக்கவும் கூடிய, பண்ணை மந்தைகளாக வேலியிட்டு அடைக்கப்படுகின்றனர். இவர்கள் தான் புலி விசுவாசிகள்.
இவர்கள் தம் விசுவாசத்தை சந்தேகிக்க முடியாது. இதன் மேல் அறிவியல் பூர்வமாக, எதையும் உணர்ந்து செயல்படுவது கிடையாது. உண்மையில் மனித அறிவுக்கும், புலி விசுவாசத்துக்கும் இடையில் எந்த உறவும் இருப்பதில்லை. எதிர்நிலை மனப்பாங்கே உண்டு. அறிவு என்பது புலிக்கு எதிரான துரோகம் என்பதே, இவர்களின் அகராதி கூறுகின்றது. சமூதாயத்தின் கருத்தை கேட்காத வண்ணம், இவர்களின் சொந்தக் காது இறுக அடைக்கப்பட்டு, கண் கட்டப்பட்டு, வாய் பொத்தப்பட்ட நிலையில் தான், புலி விசுவாசிகள் கூட்டம் உருவாக்கப்படுகின்றது. கத்து என்றால் அது கத்தும், அழு என்றால் அழும். சிரி என்றால் சிரிக்கும். இதற்கு வெளியில் அதனிடம் எந்த உணாச்சியும் கிடையாது.
இந்தக் கூட்டத்துக்கு சில வான வேடிக்கைகள் போதும். இதன் மூலம் விசுவாசத்தின் பலனை அடைந்ததாக அவர்களை நம்ப வைக்க முடியும். இப்படிபட்ட அற்புதமான புலியிசம் தான், எமது சமுதாயத்தில் இன்றுவரை ஆதிக்கம் வகிக்கின்றது.
உண்மையில் தமிழ் தேசிய போராட்டத்தின் சரியான தேசியக் கூறுகள், எந்த எதிரியையும் அரசியல் இராணுவ கூறுகளில் வெல்லப் போதுமானது. படுகொலைகளுக்கு பதில், அவதூறுகளுக்கு பதில், பாசித்துக்கும் மாபியாத்தனத்துக்கும் பதில், உயர்வான மனித விழுமியங்களைக் கொண்டது. அந்தளவுக்கு தமிழ் தேசியம் மக்களின் வாழ்வை அடிப்படையாகவும், அவர்களின் சமூக பொருளாதார கூறுகளைக் கொண்டது. அது கொண்டுள்ள அரசியல் சாரம், அதன் அரசியல் தர்க்கம், மனித குலம் சார்ந்தது. மனிதக் கூட்டுறவை உருவாக்கும் அடிபடையில் மிகப்பலமானது. அதன் உண்மையான தர்க்கமும் சாரமும், படுகொலையையோ, பாசிசத்தையோ மாபியாத்தனத்தையோ அடிப்படையாக கொண்டதல்ல. மாறாக அது தன்னளவில், அதன் உண்மை மிகப்பலமானது. எந்த எதிரியையும் வெற்றிகொள்ளக் கூடியது.
புலிகள் இதை மறுக்கின்றமையால் தான், பாசிசமும், மாபியாத் தனமும் அவசியமாகின்றது. தமிழ் தேசிய அரசியலைக் கைவிட்டு, படுகொலையை தனது மொழியாக்குகின்றது. தன்னைச் சுற்றி அறிவற்ற கூட்டத்தை, பினாமிகளை, பிழைப்புவாதிகளை உருவாக்கிக் கொள்கின்றது. அறிவுக்கு பதில் அரை லூசுகளைக் கொண்ட லும்பன்களை, சமூக அறிவியல் மேதைகளாக புழுக்கவைக்கின்றது.
இப்படி இதை வழிநடத்தும் பாசிட்டுகள். அதற்கேற்ற பினாமிக் கூட்டங்கள். இதற்கு பின்னால் சில லுர்சுகள். அதற்கு ஏற்ற பன்னாடைகள். இதுவே எங்கும் நிரம்பிய புலியிசம். இதுவே புலியிசத்தின் தாற்பரியம். வேடிக்கை என்னவென்றால், பாசிட்டுகளைத் தவிர, மற்றவர்கள் தம்மை தாம் மறைத்துக்கொண்டு, ஊர் பெயர் தெரியாத பெயர்களில் சந்தர்ப்பவாதிகளாக இருந்தபடி பிழைப்பதும், ஊளையிடுவதும்.
அரை லூசுகளாக, அதற்கேற்ற பன்னாடைகளாக, அவதூறுகளை புனைவதும் புணர்வதுமாக இவர்கள் அரசியல் வாழ்கின்றது. அறவியல் பூர்வமாக, அரசியல் ரீதியாக விவாதிக்க வக்கற்று விடுகின்றனர். சொந்த இலட்சியத்தைக் கூட, கருத்தியல் ரீதியாக வைக்க முடியாதளவுக்கு லூசுக் கூட்டமாகிவிடுகின்றது. குறைந்த பட்சம் ஒரு விடையத்தை விளங்கிக்கொள்ளும் மனித ஆற்றல், மனித அறிவு, மனித நேர்மை எதுவுமற்றவர்களாகி விடுகின்றனர். மாறாக மோசடிகள், அறிவின்மையும், அயோகியத்தனமும், ஒழுக்கக்கேடும் கொண்டு புலித் தேசியத்தையே விபச்சாரம் செய்பவர்களாகிவிடுகின்றனர்.
தமிழ் தேசியம் என்றால் என்னவென்று அறிவியல் பூர்வமாக, விளக்க முடியாதவர்கள் இவர்கள். அதை காட்டுமிராண்டித்தனமான வழிகளில், முடிவாக படுகொலை மூலம் பதிலளிப்பவர்கள். இதுதான் இவர்களின் தேசியம். இதனால் இது தமிழ் தேசியமல்ல, புலியிசமாகின்றது. புலித் தேசியத்தை புலியிச பாசிச வழிகளில், மற்றவன் மீது கொத்திக் கிளறுவது, நலமடிப்பதுமே இவர்களின் உயர்ந்தபட்ச ஊடக வரையறை.
தமிழ் மக்கள் என்று இவர்கள் கூறும் அந்த மக்களின் சமூக பொருளாதா அரசியல் வாழ்க்கையையே நலமடித்து, அதை அறுப்பவர்கள் இவர்கள். இவர்கள் கூறும் அந்த தமிழ் மக்களுக்கு அடிப்படையான ஜனநாயக உரிமையை வழங்க முடியாது என்பவர்கள் தான், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்கின்றனர். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்றவர்கள் தான் இந்தப் புலிகள். இவர்கள் தான் தமிழ் மக்களுகாக போராடுகின்றனர். தமிழ் மக்கள் இவர்களைத் தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
தமிழ் மக்கள் அடிப்படை மனித உரிமைகளையும், அவர்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வையும் மறுப்பவர்கள். அதை குழிதோண்டிப் புதைக்கும் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும், எந்த அரசியல் பொருளாதார ஒட்டுறவும் கிடையாது. மக்களுடனான உறவின் மொழி காட்டுமிராண்டித்தனமான பாசிச உறவே.
இந்த தமிழ் மக்கள், தமக்கான அடிப்படை உரிமையைக் கோரினால் கிடைப்பதோ அவதூறுகளும், பட்டங்களும், மரணங்களும். விதவிதமான பட்டங்கள். விதவிதமான படுகொலைகள். இதுதான் புலியிசம். இது தான் பிரபானிசம்.
துரோகி, பொம்பளைப் பொறுக்கி, எட்டப்பன் என்று நீண்ட பட்டியல். இதையும் தாண்டினால் பச்சைத் தூசணம். முடிவாக படுகொலை. இதுதான் எமது தேசத்தின் புலியிசத்தின் அரசியல் வரலாறு. பேரினவாதத்தின் நுகத்தடியின் பின்னால் கட்டமைக்கப்பட்ட, தமிழ் மக்களின் வரலாறு இப்படித்தான் உள்ளது.
குறிப்பு : அண்மையில் எனக்கு எதிராக சில லூசுகள் இப்படித்தான் பொங்கினர். அதன் அறிவியல், அதன் நேர்மை, அதன் சாரம் அனைத்தையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
Tuesday, June 12, 2007

பாம்பும் சாகாமல்… தடியும் நோகாமல்..

தீர்ப்பு:

பாம்பும் சாகாமல்…
தடியும் நோகாமல்..


புதிய ஜனநாயகம் இதழின் வாசகர்களுக்கு மட்டுமல்ல, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் போன்ற முதலாளித்துவப் பத்திரிகைளின் வாசகர்களுக்கும் ""நல்லகாமனின் கதை'' நினைவிருக்கக் கூடும். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நல்லகாமன், தமிழக ஆயுதப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பைரவ் சிங்கின் வீட்டை, ரூ. 5,000 கொடுத்து ஒத்திக்கு எடுத்தார். ஒத்திப் பணத்தைத் திருப்பித் தராமலேயே தனது வீட்டில் இருந்து நல்லகாமனைத் துரத்தத் திட்டம் போட்டார் பைரவ் சிங். இதற்கு உடன்பட மறுத்தார் நல்லகாமன். அப்பொழுது வாடிப்பட்டியில் போலீசு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ""சங்கரராமன் கொலை வழக்கு புகழ்'' பிரேம்குமார், இப்பிரச்சினையில் தலையிட்டு கட்டைப் பஞ்சாயத்து செய்ததோடு, நல்லகாமன் குடும்பத்தினரை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தார்.இம்மனித உரிமை மீறலுக்காக பிரேம்குமார் உள்ளிட்டு 11 போலீசாரைத் தண்டிக்கக் கோரி கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் சட்டரீதியாகப் போராடி வருகிறார் நல்லகாமன். (மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள நல்லகாமன் கதை என்ற சிறு வெளியீட்டிலும்; புதிய கலாச்சாரம் அக்.2002; புதிய ஜனநாயகம் ஜூலை 2003 இதழ்களிலும் நல்லகாமனின் போராட்டம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.)இந்த வழக்கில், தற்பொழுது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும், மற்றும் செல்லையா, சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று போலீசாருக்கும் ஒரு மாத கால சாதாரண சிறை தண்டனை விதித்து, 3.4.07 அன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதி மன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி, அதற்காகத் தனது சொத்து சுகத்தையெல்லாம் இழந்துவிட்ட நல்லகாமன், 25 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் இத்தீர்ப்பை, ""அற்பத்தனமானது'' என விமர்சித்திருக்கிறார்.போலீசு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நல்லகாமன், தனது சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக மனம் வெதும்பிக் கூறிய விமர்சனமாக, இதை ஒதுக்கிவிட முடியாது. மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இவ்வழக்கு தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பை முழுமையாகப் படித்தால், மனசாட்சியுள்ள யாருமே இந்த முடிவுக்குத்தான் வர முடியும்.சிறு காயம் ஏற்படுத்துதல், கைவிலங்கு போட்டு இழுத்துச் செல்லுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பிரேம்குமாரையும்; மற்ற மூன்று போலீசாரையும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது, மதுரை உயர்நீதி மன்றக் கிளை. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி, இக்குற்றங்களுக்கு, இரண்டு ஆண்டு முதல் மூன்றாண்டு கால சிறைத் தண்டனையைக் கண்ணை மூடிக் கொண்டு வழங்க முடியும். ஆனால், உயர்நீதி மன்ற நீதிபதியோ, நீதியை நிலைநாட்ட இக்குற்றவாளிகளுக்கு ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையே போதும் எனத் தீர்ப்பு எழுதியிருக்கிறார். பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் என்ற பழமொழிக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ள இத்தீர்ப்பை, அற்பத்தனமானது என விமர்சிக்காமல், கைதட்டி வரவேற்கவா முடியும்?நல்லகாமனைச் சித்திரவதை செய்தது தொடர்பாக, தன் மீது தமிழக அரசு சார்பாக மாவட்ட வருவாய் அதிகாரி (ஆர்.டி.ஓ.) போட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி பிரேம்குமார் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கற்பகவிநாயகம், பிரேம்குமாரின் வழக்கைத் தள்ளுபடி செய்து ஐந்தாண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பில் ""சட்டத்தின் மீதோ உண்மையின் மீதோ பிரேம்குமாருக்குக் கடுகளவு கூட மரியாதை இல்லை'' எனப் பகிரங்கமாகவே கண்டனம் செய்திருந்தார். இப்படிபட்ட நடத்தை கொண்ட பிரேம்குமாரை, ஒருபுறம் இதே இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளி என அறிவித்த மதுரை விரைவு நீதிமன்றம், மறுபுறம் அவரது நன்னடத்தையின் காரணமாகத் தண்டனை எதுவும் வழங்காமல் விடுதலை செய்வதாக ஜூலை 2003இல் தீர்ப்பளித்தது. விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, பிரேம்குமாரின் விடுதலை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி நல்லகாமன் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார்.""குற்றவாளிகள் போலீசு அதிகாரிகள் என்பதால், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் விசாரணை நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) மெத்தனமாக நடந்து கொண்டுள்ளதாக'' அத்தீர்ப்பை விமர்சித்துள்ள உயர்நீதி மன்றக் கிளையோ, மூன்று ஆண்டு காலத் தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக ஒரு மாத சிறைத் தண்டனை போதும் எனத் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் நீதியைக் கேலிக் கூத்தாக்கி விட்டது. குற்றவாளி பிரேம்குமார் போலீசு கண்காணிப்பாளர்; போலீசு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நல்லகாமன், சாதாரண குடிமகன் என்பது தவிர, உயர்நீதி மன்றத்தின் கருணைக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?""குற்றவாளிகள், இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான, உயிர் வாழும் உரிமையை மீறியிருக்கிறார்கள்; அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற இலக்கணத்தைக் குற்றவாளிகள் கடைப்பிடிக்கவில்லை; இப்படிபட்ட மனித உரிமை மீறல்கள் நடப்பதைத் தடுக்கும் வண்ணம் தண்டனை வழங்க வேண்டும்'' என்றெல்லாம் தீர்ப்பில் ""கடுமை'' காட்டியிருக்கும் நீதிபதி, தண்டனை வழங்குவதில் வேண்டுமென்றே ""கோட்டை'' விட்டதன் மூலம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறார்.நல்லகாமன் போலீசாரால் சித்திரவதை செய்யபட்டது தொடர்பாக, பிரேம்குமார் உள்ளிட்டு நான்கு போலீசார் மீது கொலைமுயற்சி, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், துன்புறுத்தி வாக்குமூலம் வாங்குதல் உள்ளிட்டு ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் 1983ஆம் ஆண்டே தமிழக அரசு வழக்கு பதிவு செய்திருக்கிறது. நல்லகாமன், தன்னைச் சித்திரவதை செய்த பிரேம்குமார் உள்ளிட்ட 11 போலீசார் மீது கொலைமுயற்சி, சட்ட விரோதமாகக் கும்பல் சேர்த்துக் கொண்டு தாக்குதல் (க்ணடூச்தீஞூதடூ ச்ண்ண்ஞுட்ஞடூதூ) உள்ளிட்டு 13 குற்றச்சாட்டுகளின் கீழ் 1984ஆம் ஆண்டே தனிநபர் வழக்கு (ணீணூடிதிச்tஞு ஞிணிட்ணீடூச்டிணt) பதிவு செய்திருக்கிறார்.இக்குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் ஏனோதானோவென்று சுமத்தப்பட்டவையல்ல; இறந்துபோய்விட்ட நல்லகாமனின் மனைவி சீனியம்மாள், வாடிப்பட்டி போலீசு நிலையத்தில் பிரேம்குமாரால் மானபங்கப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, ஆசிரியர் சங்கங்கள் சம்பவம் நடந்த மறுநாளே (2.2.82) கண்டன ஊர்வலம் நடத்தின. நல்லகாமனையும், அவரது மகன் மதிவாணனையும் கைவிலங்கிட்டு, சங்கிலியால் பிணைத்து, வாடிப்பட்டி போலீசு நிலையம் தொடங்கி வாடிப்பட்டி பேருந்து நிலையம் முடிய, பிரேம்குமாராலும், மற்ற போலீசாராலும் அடித்து இழுத்துச் செல்லப்பட்டதை அந்த ஊரே பார்த்து திகைத்துப் போய் நின்றிருக்கிறது. பிரேம்குமாரின் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, வாடிப்பட்டியில் 3.2.82 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இம்மனித உரிமை மீறல் தொடர்பாக தமிழக அரசு நடத்திய விசாரணையில், 212 பேர் நேரடியாகவே மாவட்ட வருவாய் அதிகாரியிடம் சாட்சியம் அளித்துள்ளனர். இவ்விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடந்தபொழுது உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பிரேம்குமார் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.இந்த சாட்சியங்கள் அனைத்தும் ஆவணங்களாகவே பதிவாகி இருப்பதால், 25 ஆண்டு காலம் கழிந்த பிறகும், இச்சாட்சியங்களுள் ஒன்றுகூட பிறழ் சாட்சியமாக மாறவில்லை. நல்லகாமன் சார்பாக வாதாடிய மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரானும், மனிதஉரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் பிரேம்குமாரையும், மற்ற போலீசாரையும் ஆர்.டி.ஓ.வும், நல்லகாமனும் குறிப்பிட்டுள்ள அவரது குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதை, பல்வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகளில் இருந்தும் எடுத்துக் காட்டியுள்ளனர்.இத்துணை ஆதாரங்களையும், சாட்சியங்களையும் கீழமை நீதிமன்றம் மட்டுமல்ல, உயர்நீதி மன்றமும் கூட குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது. ஒப்புக்குச் சப்பாணியாக இரண்டு சாதாரண பிரிவுகளின் கீழ் தண்டித்து, குறைவான தண்டனையளித்து தனது அதிகார வர்க்க பாசத்தைக் காட்டியிருக்கிறது, உயர்நீதி மன்றம்.""நல்லகாமனும், அவரது மகன் மதிவாணனும் போலீசாரால் தாக்கப்பட்டிருப்பது உண்மையென்றாலும், அவ்விருவரின் உயிர்நிலை உறுப்புகளின் மீது போலீசார் தாக்கவில்லை. எனவே, ""கொலை முயற்சி குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்வதாக'' உயர்நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ""போலீசு அடி'' என்ற ஒருவகை சித்திரவதை இருப்பதை, இந்த நீதிபதி அனுபவித்து இருந்தால், தீர்ப்பை வேறுமாதிரி எழுதியிருப்பார்.பிரேம்குமாரின் அட்டூழியங்களை நியாயப்படுத்துவதற்காகவே, ""நல்லகாமனும் அவரது குடும்பத்தாரும் போலீசாரைக் கடமையை செய்ய விடாமல் தடுத்துவிட்டதாக''க் குற்றம் சுமத்தி ஒரு மோசடி வழக்கை நல்லகாமன் மீது தமிழக போலீசு தொடுத்திருந்தது. இவ்வழக்கில், நல்லகாமனைக் குற்றவாளியாக அறிவித்த மதுரை விரைவு நீதிமன்றம், அவரது நன்னடத்தையைக் காரணம் காட்டி, அவருக்குத் தண்டனை விதிக்காமல் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நல்லகாமன் தொடுத்த வழக்கை, மதுரை உயர்நீதி மன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.இதன்மூலம், லீசுக்கு எடுத்த வீட்டைக் காலி செய்யக் கோரும், குடியுரிமை பிரச்சினையில், சக போலீசுக்காரன் பைரவ் சிங்குக்காக, பிரேம்குமார் தனது அதிகார வரம்பை மீறி போலீசு நிலையத்தில் கட்டைப் பஞ்சாயத்து செய்ததையும்; இதற்காக நல்லகாமன், அவரது மனைவி சீனியம்மாள், மகன் மதிவாணன் மூவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு சித்திரவதை செய்ததையும்; நல்லகாமன் மனைவியைக் கேவலமாகத் திட்டி மானபங்கப்படுத்தியதையும் போலீசாரின் ""கடமையாகவும்'', இந்த அநியாயத்தைத் தடுக்க முயன்ற நல்லகாமனின் தற்காப்பு உரிமையைக் ""குற்றமாகவும்'' காட்டியிருக்கிறது, உயர்(அ) நீதி மன்றம்.நியாயப்படி மட்டுமல்ல, சட்டப்படி பார்த்தாலும் கூட தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஓ போட்ட வழக்கில், மதுரை விரைவு நீதிமன்றம் பிரேம்குமார், செல்லையா, சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகிய நால்வரையும் குற்றவாளியாக அறிவித்தவுடனேயே, தமிழக அரசு இந்த நான்கு குற்றவாளிகளையும் பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். பிரேம்குமாரோ, சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. தி.மு.க. இடையே நிலவும் அரசியல் ஆதாய போட்டாபோட்டி காரணமாகவே தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட பிரேம்குமாரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கத் தயங்குகிறது, தமிழக அரசு.செல்லையா, ராமகிருஷ்ணன் என்ற இரண்டு குற்றவாளிகளும் ஏற்கெனவே எவ்வித வில்லங்கமும் இன்றிப் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். சுப்பிரமணி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்த பிறகே, பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நான்கு குற்றவாளிகளுள் ஒருவர்கூட உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படவில்லை.தி.மு.க. அரசின் இந்த மெத்தனத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்குமார், ""தான் தஞ்சாவூர் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராகப் பணிபுரிவதாக'' ஒரு பொய்யைச் சொல்லி, போலீசாரிடம் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை உச்சநீதி மன்றத்திடம் இருந்து பெற்றுவிட்டார். இப்படியாக, ஒப்புக்காக அளிக்கப்பட்ட அற்பத்தனமான தீர்ப்பும், ஒருமாதகாலச் சிறை தண்டனையும் நடைமுறையில் ஒன்றுமில்லாத காகிதக் குப்பையாக ஆக்கப்பட்டு விட்டது.போலீசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துச் சட்டரீதியாகப் போராடும் பொழுது, அப்போராட்டம் இந்திய ஜனநாயகம், அதைத் தாங்கி நிற்கும் நீதிமன்றம் ஆகியவற்றின் போலித்தனத்தையும், கயமைத்தனத்தையும் அம்மணமாக்கிவிடுகிறது என்பதற்கு நல்லகாமனின் கதை இன்னுமொரு உதாரணம். மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலீசாரைச் சட்டப்படி தண்டிக்கக் குதிரைக்குக் கொம்பு முளைக்க வேண்டும் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அமைப்பு ரீதியாகப் போராடுவதும், மக்கள் நீதி மன்றங்களை அமைத்து போலீசு மிருகங்களைத் தண்டிப்பதும்தான் ஒரே மாற்று வழி!

· ரஹீம்

Monday, June 11, 2007

புலியை இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.

தமிழ் மக்களா புலியை பாதுகாக்கின்றனர் எனின் இல்லை, இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.

பி.இரயாகரன்

12.06.2007ரசியலில் உள்ள பலருக்கு இது புரிவதில்லை. உண்மையில் இனச்சுத்திகரிப்பு என்பது பேரினவாதத்தின் கொள்கையாகும். கொழும்பில் புலிகளின் இருப்புக்கு காரணம் இந்த அரசு. இனப்பிரச்சனையை தீர்த்தால், புலிகளின் இருப்பு என்பது சாத்தியமில்லை. இதற்கு தடையான இந்த அரசை அல்லவா, நாம் விரட்டி அடிக்க வேண்டும்.மாறாக இனச் சுத்திகரிப்பு என்பது, தமிழ் மக்களை கொலைக்களத்துக்கு அனுப்புவது தான்.1. புலியல்லாத பிரதேசத்து மக்களை வலுக்கட்டாயமாக புலியின் இராணுவத்தில் திணிப்பதாகும்.2. இதில் இருந்து தப்ப, அரசுடன் இயங்கம் துரோக கூலிக் குழுக்களில் நிர்ப்பந்தித்து இணைப்பதாகும்.இதற்கு வெளியில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் அனைத்தையும், புலிகளும் அரசும் மறுக்கின்றது. உண்மையில் இந்த இரு கொள்கையும் தான் அமுலில் உள்ளது. தமிழ் மக்களின் பரிதாபகரமான வாழ்க்கை இதற்குள்ளாகவே அமைகின்றது. இதை தீவிரமாக்க விரும்பிய அரசு, இனச் சுத்திகரிப்பை முன்னெடுக்கின்றது.இந்த நிலையில் கொழும்புச் சம்பவத்துக்கு பேரினவாத அரசு மன்னிப்பு கோரியுள்ளதாம். நல்ல அரசியல் வேடிக்கை. போலித்தனமானதும், ஊரையும் உலகத்தையும் ஏமாற்றுகின்ற அரசியல் நாடகம். கொழும்புச் சம்பவத்தின் பின்னால் இருந்த அரசியல் என்ன? காலாகாலமாக தமிழ் மக்கள் மேலான, பேரினவாத அரசியல் நடைமுறையின் ஒரு அங்கம் தான் கொழும்புச் சம்பவம். இன்று இதற்கு தலைமை தாங்கும் சிறிய பாசிச குழுவே, இதை வழிநடத்தியது. இது இன்று அம்பலமாகியுள்ள நிலையில், மன்னிப்பு என்பது வெறும் நாடகம். பேரினவாத நிலையே தான் இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்க, வெறும் சம்பவத்துக்கு மட்டும் மன்னிப்பு கோருவது என்பது பேரினவாத சூழ்ச்சி தான்.இன்று இலங்கையில் என்றுமில்லாத அளவுக்கு, இரு பாசிச குழுக்களின் உச்சக்கட்ட அதிகாரத்துக்குள் மக்கள் பிய்த்து எடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மக்களும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் சிறிய பாசிச குழுக்களின் பிடியில், மக்களின் தலைகள் போட்டுடைக்கப்படுகின்றது. ஒருபுறம் ராஜபக்ச தலைமையிலான பாசிச குழு, மறுபக்கம் பிரபாகரன் தலைமையில் உள்ள சிறிய பாசிசக் குழு. பாசிசத்துக்கு புதிய வரலாறு அவரவர் மொழியில் எழுதுகின்றனர். மக்களின் அவலத்துக்கு வடிகால் கிடையாது.புலிகள் வலிந்து சண்டையை தொடங்கிய போது இருந்த நிலை ஒருபுறம். மகிந்த ஆட்சிக்கு வந்த பின் சண்டை தான் வழி என்று கூறிக்கொண்டு நடத்துகின்ற வெறியாட்டம் மறுபுறம். ஒட்டுமொத்தத்தில் எங்கும் வெறி கொண்ட இராணுவ தயாரிப்புகள். இதற்கு ஏற்ப கடத்தலும் படுகொலைகளும். மக்களை இதற்குள் பலியாகின்றனர். மக்களின் சொந்த அபிப்பிராயங்கள் மிதிக்கப்பட்டு, அங்குமிங்குமாக சீரழிக்கப்படுகின்றது. மக்கள் விரும்புவதோ அமைதியையும் சமாதானத்தையுமே. இதை மறுப்பவர்கள் யார்?1. புலிகள்

2. பேரினவாத அரசுமக்களின் விருப்பத்தை மறுப்பதில் உள்ள வக்கிரம் தான், இவர்களின் பாசிச அரசியல். மக்களின் ஒற்றுமைக்கும், ஜக்கியத்துக்கும் வேட்டு வைக்கின்றது இவர்களின் சுயநல இராணுவ வெறியாட்டங்கள்.இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் கொழும்புச் சம்பவம். இது ஒரு இன சுத்திகரிப்பு. இனக்கலவரம் முதல் அனைத்தும் மக்களுடன் மக்களாக வாழ முடியாதவர்களின் ஈனத்தனம் தான்.இதில் தமிழருடன் ஒரு நாட்டில் ஒன்றாக வாழமுடியாது என்பதை, மறுபடியும் கூறுவது என்பதற்கு பேரினவாதத்தின் இருப்புத்தான் காரணம். அன்று புலிகள் முஸ்லீம் மக்களை தமிழ் மக்கள் என்று கூறியபடி வெளியேற்றவில்லையா! மக்களுடள் மக்களாக வாழ அஞ்சும் கோழைகளின் வெறியாட்டங்கள் தான் இவைகள்.இன்று கொழும்பில் இருந்து வெளியேற்றிய நிகழ்வு, தமிழர்கள் தனித்து பிரிந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே கூறுவதாகும். புலிகள் மறுபக்கத்தில் இருக்கின்றார்கள் என்பதால், இது பொய்யாகிவிடுவதில்லை. தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறை என்பது, சாதாரண அடிப்படை மனித உரிமையை மறுப்பதில் இருந்தே தோன்றுகின்றது.பேரினவாத தர்க்கத்தையும், நடைமுறையையும் புலிகளின் பெயரால் செய்கின்றனர். இன்று அனைத்தையும் புலிகளைச் சொல்லி செய்வதும், அதை சொல்லி நியாயப்படுத்துவதும், பேரினவாதத்தின் வால்களாக இருப்பதும், அரசியல் போக்கிடமற்றவர்களின் சூழ்ச்சியாகின்றது.புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்றார்கள் என்பதால், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பேரினவாதிகளால் மறுக்கப்படுவதை நியாயப்படுத்தி விடமுடியுமா!கொழும்பு வெளியேற்றம், புலிகளின் கொழும்புத் தாக்குதல் தான் இதை உருவாக்கியது என்ற காரணங்கள் மூலம் புலியை சிலர் விமர்சிக்க முடியாது. அரசியல் ரீதியாக புலி அரசியலைக் கொண்டவர்களின் எதிர் நிலைவாதம், இப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது. அரசியல் ரீதியாக புலிகளை விமர்சிக்க முடியாது போனவர்களின் நிலை இது. ஒரு போராட்டம், அதன் தாக்குதல் வடிவங்கள் என்ற எல்லைக்குள், எங்கும் தாக்குதல்கள் நடந்தேயாகும். இதைக்கொண்டு அரசை நியாயப்படுத்துவது, தமிழ் மக்களை பற்றி அக்கறைப்படுவதாக நடிப்பது எல்லாம் அரசியல் அற்பத்தனமாகும்புலிகளின் தாக்குதல் பற்றிய மதிப்பீடுகள் என்பது, புலிகள் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல் நிலை சார்ந்தது. இதில் இருந்து தான் விமர்சிக்க முடியும். அதற்கு அரசியல் வக்கு கிடையாது.1. இன்று தமிழ் மக்கள் யுத்தத்துக்கு பதில் அமைதியை, சமாதானத்தை வேண்டி நிற்கின்றனர். அதை மறுக்கின்ற புலி அரசியலை விமர்சிக்க வேண்டும். இந்த வகையில் தாக்குதல் விளைவுகளை அரசியல் ரீதியாக, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி விமர்சிக்க வேண்டும்.2. இது போன்ற தாக்குதல்களின் பின்னணியில் மக்கள் நலன்கள், அரசியல் நலன்கள் எதுவும் தமிழ் மக்கள் சார்ந்து இருப்பதில்லை. இதை தெளிவுபட அரசியல் பொருளாதார ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும்.3. புலிகள் தமது குறுகிய குழுவின் சொந்த அரசியல் நலனுக்காவே இதை செய்கின்றனர் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.4. புலிகள் இதுபோன்ற தாக்குதலின் போது, மக்களின் அவலங்களையிட்டு அக்கறைப்படுவதில்லை. இதை அம்பலப்படுத்த வேண்டும். மக்களின் அவலங்கள் எப்படி ஏன் அதிகரிக்க்pன்றது என்பதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும்.இதைவிடுத்து புலியின் தாக்குதல் தான் காரணம் என்பது அரசியல் கோமாளிகளின் கூத்தாகும். சரி புலிகள் ஏன் தாக்குதல் நடத்துகின்றனர் என்றல்லவா ஆராய வேண்டும். இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமையல்லவா காரணமாகும்.தமிழ் மக்களின் பிரச்சனைகளை அரசியல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்காத புலியின் பாசிச நடத்தைகளை அம்பலப்படுத்தவேண்டும். இதுதான் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல் கருசனை. இன்று சிங்கள பேரினவாதம், இனப்பிரச்சனையை தீர்க்க மறுப்பது அல்லவா அனைத்துக்குமான காரணம். அதை புலிகள் கோர மறுப்பதும் மற்றொரு காரணமல்லவா.இன்று புலிப் பாசிசத்தின் இருப்பு, தமிழ் மக்களின் உரிமையை மறுப்பதில் தான் உள்ளடங்கியுள்ளது. இதை சிங்கள பேரினவாதமாகட்டும், புலி பாசிட்டுகள் ஆகட்டும், இதுவே இரண்டுக்கும் பொருந்தும். தமிழ் மக்களின் உரிமையை மறுப்பது தான் புலிப் பாசிசத்தின் இருப்பாகும்.யுத்தத்தின் மூலம், இராணுவ வழிகளில், பிரச்சனையை தீர்க்க முனைகின்ற நிலை தான், கொழும்புச் சம்பவம். புலிகள் பேரினவாதத்தின் செல்லக் குழந்தை. பேரினவாதம் என்ற தாய் இல்லை என்றால், புலிகள் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த, அரசியல் ரீதியான உண்மை.இந்த நிலையில் எல்லாத் தமிழர்களும் புலிகள் என்ற அடிப்படையில் தான், கொழும்புச் சம்பவம் அரங்கேறியது என்பது வெட்கக்கேடானது. அவர்கள் கூறிய காரணமோ நகைச்சுவையானது.1. தமிழர்கள் காரணம் எதுவும் இன்றி கொழும்பில் இருக்கின்றனராம்.2. அவர்களின் சுயவிருப்பின் அடிப்படையில் வெறியேற்றப்பட்டனராம்.புலிகள் அன்று முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போது, அவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் உழைப்பைத் திருடிய பின் வெளியேற்றியதாக கூறியவர்கள். இதுபோல, இந்த பாசிசமும் தலைவிரிகோலமாகவே தன்னை விளக்கியது. பேரினவாதத்தில் பொதிந்து காணப்படும் பாசிசத்தின் நகைச்சுவையே இதுதான். அண்ணளவாக 10 முதல் 15 இலட்சம் தமிழ் மக்கள் கொழும்பில் வந்து வாழ்வதற்குரிய காரணங்கள் கட்டாயம் வைக்க வேண்டும் என்று கோருதென்பது கேடுகெட்ட தனமாகும். பேரினவாதத்தை ஏன் எதற்கு ஒரு கோமணமாக கட்டி வைத்துள்ளீர்கள் என்று, முதலில் நாட்டு மக்களுக்கு கூறுங்கள். இதை விடுத்து தமிழ் மக்களிடம் கோருவது என்பது கோமாளித்தனமாகும். பேரினவாத அரசின் கொள்கை தான், தமிழ் மக்கள் இவ்வளவு தொகையாக கொழும்பில் வந்து வாழக் காரணமாகும். காரணமே நீங்களாக இருக்க, அதை தமிழ் மக்களிடம் கோருவது, பின் சம்பவத்தை வீழ்ந்தடித்துக் கொண்டு ஆளுக்காள் கண்டிப்பதும் அயோக்கியத்தனம்.1. அதிக அளவில் தமிழர்கள் கொழும்பில் வந்து வாழ்வதற்குரிய முதல் காரணமே யுத்தம் தான். யுத்த நெருக்கடிகளில் இருந்து தப்பவே இதுவே போதுமான காரணமாகும்.2. புலிப் பாசிசத்தின் எல்லைக்குள் வாழ முடியாத தமிழ் மக்கள், பெருமளவில் அங்கிருந்து தப்பி வருகின்றனர். புலியல்லாத பிரதேசத்தில் வாழவே, புலிப் பிரதேசத்து மக்கள் விரும்புகின்றனர்.3. உலகமயமாதல் ஒருபுறமும், மறுபுறம் கிராமப்புர பொருளாதாரம் அழிக்கப்பட்ட நிலையில், வாழ்வுக்காக தொழிலைத் தேடி கொழும்பு நோக்கி மக்கள் வருகின்றனர்.4. இலங்கையில் தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைக்கே அரசு வழிகாட்டுகின்றது. இப்படி இன்று மத்திய கிழக்கில் அண்ணளவாக 25 00 000 (25 லட்சம்) பேர் வேலை செய்கின்றனர். அரசின் கையாலாகாத இன்றைய நிலைக்கு ஏற்ப, வெளிநாட்டு வேலைதேடி மக்கள் வந்து குவிகின்றனர்.5. கொழும்புக்கு யுத்த பிரதேசத்தில் இருந்து வருவது இலகுவானதுமல்ல. அதிக செலவு பிடிக்க கூடியதுமான இந்த நிலையில், பலரை நிரந்தரமாகவே தங்கவைத்து விடுகின்றது.இப்படி பற்பல காரணங்கள் கொழும்பை நோக்கி மக்கள் வரக் காரணமாகும். இதை ஆதாரபூர்வமாக விளக்கிவிட முடியாது. இப்படியான நிலையை உருவாக்கியவர்கள் புலிகள் அல்ல. இந்த அரசு தான். இந்த மக்களை அகற்ற முனைந்தது, அதற்கு வைத்த வாதங்கள், படுபிற்போக்கானவை. பேரினவாத இனச் சுத்திகரிப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது.இந்த மக்களுக்குள் மிக சிறிய எண்ணிக்கையான புலிகள் ஒழித்துக் கொள்வது என்பது சர்வசாதாரணமானது தான். இதைச் சொல்லிக் கொண்டு அந்த மக்களை அடித்து விரட்டுவது என்பது, இனச் சுத்திகரிப்பாகும். புலிகளின் இருப்புக்கான அரசியல் காரணங்களை தீர்க்க மறுக்கின்றவர்கள் அல்லவா முதல் குற்றவாளிகள். அவர்களை அல்லவா இந்த அரசில் இருந்து விரட்ட வேண்டும். அவர்களை அல்லவா சுத்திகரிக்கவேண்டும். இதைச் செய்ய நீங்கள் தயாரா?

பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

பெரியார் புரா :
தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை


ஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! இக்கிராமத்துக்கு கடந்த ஆண்டுசெப்டம்பர் 24ஆம் தேதியன்று வந்த அரசுத் தலைவர் அப்துல்கலாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அக்குடிநீரில் ஒரு குவளை பருகி கிராம மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதுபோன்ற திட்டங்களை மாநில முதல்வர் அல்லது அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர்தான் தொடங்கி வைப்பார்கள். ஆனால், அரசுத் தலைவரே முக்கியத்துவமளித்து இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதைக் கண்டு வியந்த மக்கள், விழா மேடையைப் பார்த்தார்கள். அங்கே அரசுத் தலைவருடன் தி.க.வின் வீரமணியும் அருகே அமர்ந்திருக்க, இக்குடிநீர் திட்டத்தை ""பெரியார் புரா'' நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.


அது என்ன ""பெரியார் புரா''? நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கும் அளித்தல் எனும் ஆங்கில பெயர்ச் சுருக்கம்தான் ""புரா''. . இதனை தி.க.வின் வீரமணி நடத்திவரும் வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பொயியற் கல்லூரி நிர்வாகம் செயல்படுத்தி வருவதால் ""பெரியார் புரா'' திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.


அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் வழங்கல் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு சில மாதங்கள் முன்பு, ""பெரியார் புரா'' திட்டத்துக்கு நிதியும் தொழில்நுட்ப உதவியும் அளித்துவரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பியூர்ஓடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் பூதலூர் அருகிலுள்ள ஆவாரம்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சுற்றிப் பார்த்தனர். இக்கிராமங்களில் நிலத்தடி நீரில் புளூரைடு எனும் வேதிப் பொருள் அதிகமாக உள்ளதால், குடிநீருக்காக மக்கள் பல மைல் தூரம் சென்று அவதிப்படுவதை அறிந்து, தாங்களே தண்ணீர் குடத்துடன் நடந்து பார்த்து வேதனையடைந்து, அதைப் புகைப்படம் எடுத்து நாளேடுகளில் வெளியிட்டு, உடனடியாக சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவி புளுரைடு இல்லாத குடிநீர் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இதைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.


குடிநீர் வழங்குவதோடு ""பெரியார் புரா'' திட்டம் முடிவடைந்து விடவில்லை. கிராம மக்களுக்கு சுயதொழில் பயிற்சி, மூலிகைச் செடி பயிரிட உதவி, சிறு தொழில் பட்டறை நிறுவ உதவி, இணையதள மையங்கள், காட்டாமணக்கு பயிரிட்டு பயோடீசல் தயாரிக்கப் பயிற்சி என அடுக்கடுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


கல்வி வியாபாரக் கம்பெனி நடத்தி வரும் தி.க.வும் வீரமணியும் திடீரென கிராமப்புற சமூக சேவை நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஏன்? அடிப்படைத் தேவைகளை அரசே செய்வதற்குப் பதிலாக, அரசும் வீரமணியின் கல்லூரி நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து ""புரா'' என்ற புதிய திட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஏன்? இத்திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனம் நிதியும் தொழில்நுட்ப உதவியும் செய்வது எதற்காக? என்ற கேள்விகளுடன் ""புரா'' திட்டத்தை ஆராயும்போது அதன் பின்னணியில் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதித்திட்டம் ஒளிந்திருப்பது தெரிய வந்துள்ளது.


எதற்காக இந்த ""புரா'' திட்டம்? அதன் பின்னணி என்ன?


ராஜீவ் காந்தி அரசால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 73வது திருத்தமாகக் கொண்டு வரப்பட்ட ""பஞ்சாயத்து ராஜ்'' சட்டம்தான், இன்றைய ""புரா'' திட்டத்தின் தாயும் தந்தையுமாவார். இப்பஞ்சாயத்துராஜ் சட்டமானது, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வ நிறுவனங்களை (அரசு சாரா நிறுவனங்களை) கிராம நிர்வாகத்துக்கு இழுத்து வந்தது. இச்சட்டத்திற்கு வலுவூட்ட பிறப்பிக்கப்பட்ட இதர அரசாணைகள், இத்தன்னார்வ நிறுவனங்களைச் சட்டரீதியாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் இணைத்து விட்டது.


இவ்வாறு சட்டபூர்வமாக தன்னார்வ நிறுவனங்களை கிராம நிர்வாகத்துக்குள் நுழைய விட்ட இந்திய அரசு, தனித்தனியாக இயங்கி வந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து, அந்த வட்டாரத்தில் ஏகாதிபத்திய வல்லரசுகளின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் விவசாய உற்பத்தியை மாற்றியமைத்து, இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதே ""புரா''.


கிராமப்புறங்களில் மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களைக் கட்டியமைப்பது, சமூக சேவையிலிருந்து தொடங்கி பின்னர் அக்குழுக்களின் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவது என்பதுதான் இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொண்டுள்ள புதிய உத்தி.


இப்புதிய உத்தியும் செயல்பாடுகளும் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் தனியார் பல்கலைக் கழகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றையும் அரசின் சில துறைகளையும் ஒருங்கிணைத்து ஏகாதிபத்திய வல்லரசுகளின் நிதியுதவியோடு கிராமப்புறங்களை ஒரு வட்டார அளவுக்கு சுயநிர்வாகப் பிரதேசங்களாக மாற்றுவது; அப்பிராந்தியத்தில் பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு ஏகாதிபத்திய தேவைக்கேற்ற ஏற்றுமதி சார்ந்த விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மண்டலமாக மாற்றுவது என்ற திட்டத்துடன் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் களமிறங்கியுள்ளனர். இத்திட்டத்திற்காக சமூக சேவை என்ற முகமூடியுடன் உருவாக்கப்பட்டிருப்பதுதான் ""புரா''.


நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிரண்டு ""புரா'' மண்டலங்கள் அமைய உள்ளன. இப்""புரா'' அமைப்பின் கீழ் அவ்வட்டாரத்தில் பல வகையான தன்னார்வக் குழுக்கள் செயல்படும். கிராமப்புற மக்களின் விவசாயம், கைவினைத் தொழில், சுகாதாரம், சுற்றுச்சூழல், அடிக்கட்டுமானம், கல்வி, மகளிர் நலம் முதலான அனைத்தையும் இத்தன்னார்வக் குழுக்கள் மேற்பார்வையிட்டு வழி காட்டி நெறிப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், கிராமப்புறங்களில் தன்னார்வக் குழுக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான துவக்கப் புள்ளிதான் ""புரா''.


கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், சமூக இயக்கங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியன தனியாகவோ கூட்டு சேர்ந்தோ ""புரா'' மண்டலங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம். இவை, இப்பகுதியிலுள்ள பஞ்சாயத்துராஜ் அமைப்பைக் கலந்தாலோசித்து திட்டத்தை முன்வைத்து அனுமதி பெறலாம். இத்திட்டத்திற்காக தனிச்சிறப்பான தொழில்நுட்பம் அல்லது உரிய உற்பத்தி முறையை முடிவு செய்து அரசே அதற்குத் தேவையான நிலம் அளிக்கும். பின்னர், ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளிடமிருந்து நிதியாதாரம் திரட்டப்பட்டு ""புரா'' செயல்படத் தொடங்கும். ""புரா''வுக்கு இசைவாக, அரசின் பிற திட்டங்களது நிதியும் அவசியம் கருதி ""புரா''வுக்குத் திருப்பப்படும். இவ்வாறாக, போலீசு, நீதித்துறை தவிர பிற அனைத்து அதிகாரங்களையும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான தன்னார்வக் குழுக்களின் கைகளில் ஒப்படைத்து தனி சுயாட்சி பிராந்தியங்களை நிறுவுவதுதான் ""புரா'' திட்டம்.


காலனிய ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பிரிட்டிஷ் இந்தியா என்றும், பெயரளவுக்கு அதிகாரம் கொண்ட 526 சரிகைக் குல்லா மன்னர்களின் குட்டி சமஸ்தானங்களுமாக அன்றைய இந்தியா இருந்தது. இன்று மறுகாலனியாக்கத்தின் கீழ், விக்டோரியா மகாராணிக்குப் பதிலாக, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வரம்பற்ற அதிகாரம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், குட்டி சமஸ்தானங்களுக்குப் பதிலாக ""புரா'' மண்டலங்களும் உருவாகியுள்ளன.


பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த தி.க.வின் வீரமணி, தான் நடத்தி வரும் வல்லம் பெரியார்மணியம்மை பொறியியற் கல்லூரி எனும் கம்பெனி மூலம் மூன்றாண்டுகளுக்கு முன்பு ""புரா'' திட்டத்தைத் தொடங்கி, அதற்குப் ""பெரியார் புரா'' என்று பெயரிட்டுள்ளார். பெரியாரின் பெயரால் ""புரா'' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், இது சமூக சேவையுடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப் போகிறது என்று நீங்கள் கருதினால், அதைவிட ஏமாளித்தனம் இருக்க முடியாது. பெயரில் மட்டும்தான் பெரியார் இருக்கிறாரே தவிர, ""பெரியார் புரா'' செய்து வருவது ஏகாதிபத்திய அடியாள் வேலைதான்!


தஞ்சை மாவட்டமும் அதை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டமும் ""பெரியார் புரா'' திட்டத்துக்கென இனங்காணப்பட்டு, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 65 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ""புரா'' கிராமங்களிலுள்ள பலநூறு சுய உதவிக் குழுக்களுக்கு பால் பண்ணை நடத்துவது, உயிர்ம வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, கக்கூசுக்கான பீங்கான் செய்வது, மண்புழு உரம் தயாரிப்பது, தரிசு நில மேலாண்மை, சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்துவது முதலானவற்றில் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் ""வேன்''கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வெண்டையம்பட்டி, ஆவாரம்பட்டி, திருமலை சமுத்திரம், குரும்பூண்டி, வளம்பக்குடி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் இணையதள மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வல்லம் கல்லூரி வாயிலாக அளிக்கப்பட்டுள்ள பயிற்சியைக் கொண்டு எரிபொருளுக்காக காட்டாமணக்கு செடியும், மருந்து மற்றும் சாய உற்பத்திக்காக அவுரியும், கத்தாழையும் பயிரிடப் போகின்றனர், ""பெரியார் புரா'' கிராமத்தினர். தேங்காய் நாரிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பதை அச்சம்பட்டி கிராமமும், மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பை குமாரபுரம் கிராமமும், மூலிகைச் செடி பயிரிடுவதை பழையபட்டி கிராமமும், பால் பொருட்கள் உற்பத்தியை ராயமுண்டன்பட்டி கிராமமும், சுடுமண் பொம்மைகள்பானைகள் தயாரிப்பதை மனையேறிப்பட்டி கிராமமும், பித்தளைப் பொருட்கள் உற்பத்தியை நாச்சியார்கோயில் கிராமமும் ஒருங்கிணைக்கும் மையங்களாக மாறப் போகின்றன.


""பெரியார் புரா''வின் துணை அமைப்பான (தி.க.வால் நடத்தப்படும்) ""பவர்'' நிறுவனம், ஒரத்தநாடு, பூதலூர், தஞ்சை, திருவாணம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் ஆடவர் சுயஉதவிக் குழுக்களைக் கட்டி நிதிக்கடன் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. ரூ. 1.3 கோடியை சுழற்சி மூலதனமாகக் கொண்ட இத்தன்னார்வ நிறுவனம் தெக்கூரிலும் மனையேறிப் பட்டியிலும் மட்பாண்டங்களைச் செய்ய பயிற்சி அளித்து வருகிறது. களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், சணல் பைகள், தரைவிரிப்புகள் தயாரிப்பு, உள்கூடான செங்கல் தயாரிப்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் மையமாக தெக்கூர் மண்டலம் செயல்படத் தொடங்கியுள்ளது. காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங் அட்டைகள், வற்றல், ஊறுகாய் தயாரிப்பு ஆகியவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து இப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக ஒரத்த நாடு மற்றும் வல்லம் மண்டலங்கள் செயல்படவுள்ளன.


சுருக்கமாகச் சொன்னால், தாராளமயத்தால் விவசாயம் திவாலாகி, விவசாயத்தை விட்டே விவசாயிகள் விரட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் அதிருப்தியும் கோபமும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகமாக மாறிவிடுவதைத் தடுத்து சாந்தப்படுத்தி, மாற்றுப் பயிர் மாற்றுத் தொழில் என்ற பெயரில் வடிகால் வெட்டி, அவற்றை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவதற்கான ஏற்பாடுகளே இவை. இதற்காகவே ""பெரியார் புரா'' கிராமப் பள்ளிக் குழந்தைகளை வைத்து நாட்டு நலத் திட்ட முகாம் என்ற பெயரில் மூளைச் சலவையையும், வல்லம் பொறியியற் கல்லூரி மாணவர்கள் மூலம் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிடச் சொல்லும் பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளார் வீரமணி. இதுவும் போதாதென்று, தன்னார்வக் குழுக்கள் பண்பலை ஒலிபரப்பைத் தொடங்க இந்திய அரசு அனுமதித்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, ""பெரியார் புரா'' மூலம் சமுதாய வானொலி எனும் பண்பலை ஒலிபரப்பையும் தொடங்கியுள்ளார்.


அப்படியானால் யார் நெல் பயிரிடுவது? ""உலகச் சந்தையில் நெல்லும் கோதுமையும் "மலிவான' விலைக்குக் கிடைக்கும் போது, நாம் ஏன் அவற்றைப் பயிரிட்டு நட்டப்பட வேண்டும்? நாம் கள்ளியும் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிட்டு ஏற்றுமதி செய்வோம்; அதற்கீடாக நெல்லையும் கோதுமையையும் இறக்குமதி செய்து கொள்வோம்'' என்கிறார்கள், ""புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் ""ஜெட்ரோ'' எனும் ஜப்பானிய நிறுவனத்தின் அதிகாரிகள்.


ஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய வல்லரசுகளின் உணவு வர்த்தக நிறுவனங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் ""உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து'' என்று உத்தர விடுகிறது உலக வங்கி. "மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொள்ளுமாறும், உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் ஏழை நாடுகளை நிர்பந்திக்கின்றன. எனவேதான் ""கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப்பண்ணை போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார் அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் இதனைச் செயல்படுத்தி, ஏகாதிபத்திய சேவையில் ஓட்டுக் கட்சிகளையெல்லாம் விஞ்சி முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி.


வீரமணியின் ""பெரியார் புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் தலைமைக் குருபீடமான ஜப்பானிய முதலாளிகளது ""ஜெட்ரோ'' நிறுவனத்தின் இயக்குநர் கவர்ச்சிகரமான முறையில் ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரித்துள்ளார். ""ஒரு கிராமம்; ஓர் உற்பத்திப் பொருள்'' என்பதுதான் அத்திட்டத்தின் பெயர். இதன்படி ""புரா'' மண்டலத்திலுள்ள ஒரு கிராமத்தில் கத்தாழை பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; மற்றொரு கிராமத்தில் காட்டாமணக்கு பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; இன்னொரு கிராமத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இக்கிராம மக்களுக்கு இதற்கான பயிற்சியளித்து, உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதை ""புரா'' அமைப்பினர் கண்காணித்து வழிகாட்டுவர்.


கடந்த பிப்ரவரி 2007இல் டெல்லியில் ""ஜெட்ரோ'' நிறுவனம் நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட ""பெரியார் புரா''வின் தயாரிப்புகளில், 40 பொருட்கள் இந்நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களின் மாதிரிகள் வரும் ஜூலையில் ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களைக் கேட்டு வந்து, அதன்படி ""பெரியார் புரா'' மண்டலத்திலுள்ள கைவினைஞர்களுக்கு வேலை கொடுத்து, அப்பொருட்களை ஏற்றுமதி செய்து, கிராமப்புற கைவினைஞர்களுக்கு வாழ்வளிக்கப் போவதாக ""பெரியார் புரா'' அறிவித்துள்ளது.


சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய விண்வெளித் துறை ஆகிய மைய அரசின் நிறுவனங்களோடு, கனடா நாட்டின் வட அட்லாண்டிக் கல்லூரி, அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைக் கழகம், இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்க ஜப்பானிய ஏகபோக கம்பெனிகள் ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ""பெரியார் புரா'' கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் ""புரா'' நிர்வாகிகள் திட்டப் பரிசீலனைக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக, தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களின் குக்கிராமங்கள் அன்னிய மூலதனத்துடன் பிணைக்கப்பட்டு அதன் அடியாளாகச் செயல்படும் ""பெரியார் புரா''விடம் கிராமப்புற உற்பத்தியும் நிர்வாகமும் மாற்றப்பட்டு வருகிறது.


தி.க.வின் வீரமணி இப்போதெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதில்லை. அதற்கு மாறாக, தன்னார்வக் குழுக்களுக்காகவும் ""புரா'' கிராமங்களுக்காகவும் ""வாழ்வியல் சிந்தனைகள்'' எனும் பெயரில் சுயமுன்னேற்றக் கட்டுரைகளை எழுதத் தொடங்கி விட்டார். பெருந்தொழில் நிறுவனங்களில் மேலாண்மை செய்யும் நிர்வாகிகளுக்குக் கற்றுத் தரப்படும் விதிமுறைகளையே தேனில் குழைத்துத் தரும் வேலையை வீரமணி செய்து வருகிறார். ""வேலை வெட்டியின்றி இருக்கும் இளைஞர்கள் சுய தொழில் செய்ய முனைய வேண்டும்,'' ""இருப்பதை வைத்து சிறப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்'', ""மேலை நாட்டினர் நம் அருகில் உள்ளபோது நாம் தாய்மொழியில் பேசிக் கொள்வது, அவர்களது மனதப் புண்படுத்தும்'' என்றெல்லாம் தனது அடிமைத்தனத்தையே "உரை நடைத் திருக்குறளாக' (வாழ்வியல் சிந்தனைகள் நூலுக்கான விளம்பர வாசகம்) எழுதித் தள்ளுகிறார்.


வீரமணி புதிய நூல் எழுதுவது சுய விளம்பரத்திற்கல்ல; அது ஏகாதிபத்திய சேவையின் புதிய அத்தியாயம். ""பெரியார் புரா'' திட்டம் என்பது வெறுமனே சமூக சேவைக்கும் கைவினைப் பொருள் ஏற்றுமதிக்குமானதல்ல; அது விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்து, நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியின் ஓர் அங்கம். உணவு தானிய உற்பத்தியை ஒழித்து, ஒற்றைப் பயிர்முறைக்கு விவசாயம் மாற்றப்பட்டால் பேரழிவுகளே விளையும். ""புரா'' திட்டப்படி, ஒரு ஊர் முழுக்க அவுரிச் செடியும் மற்றொரு ஊர் முழுக்க காட்டாமணக்கும் பயிரிடப்பட்டால் உயிர்மப் பன்மம் பாழாகி நிலம் மலடாகிப் போகும். சுற்றுச்சூழல் நாசமாகி இயற்கையின் முறைகுலைவுகள் ஏற்படும். அதன்பிறகு, இன்னுமொரு சோமாலியா, எத்தியாப்பியாவாக இந்தியா மாறிப் போகும்.


ஏகாதிபத்திய வல்லரசுகள் புதிய நுட்பமான வழிமுறைகளைக் கொண்டு மீண்டும் காலனியாதிக்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றன. இதர தன்னார்வக் குழுக்களையும் ஓட்சிக் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய அடியாள் வேலையில் முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி. ஏகாதிபத்தியங்களின் நூதன வடிவிலான காலனியாதிக்கத்துக்கும், பெரியார் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் நவீன எட்டப்பர்களுக்கும் எதிராக, உழைக்கும் மக்களை காலனியாதிக்க எதிர்ப்புப் போருக்கு அணிதிரட்டுவதே இன்று நம் முன் அவசர அவசியக் கடமையாக உள்ளது.


· இரணியன்


ஒரே புற்று இரண்டு பாம்புகள்!


கொள்கையில் கீரியும் பாம்பும் போலத் தோற்றமளிக்கும் திராவிடர் கழகமும் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.ம் ""புரா'' திட்டம் மூலம் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் புதிய பங்காளிகளாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள தீனதயாள் ஆய்வு மையம் எனும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனம் நடத்தி வரும் ""புரா'' திட்டம்தான் இந்தியாவின் முன்னோடித் திட்டம். இதனையடுத்துதான் வீரமணியின் ""பெரியார் புரா'' திட்டம் தொடங்கப்பட்டது. ""சித்ரகூடம் புரா'' எனப்படும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ""புரா'' திட்டம் பழத்தோட்டம், மூலிகைப் பண்ணை, பழங்குடியினர் மேம்பாடு, பசு பாதுகாப்பு என பல அரங்குகளிலும் நுழைந்து 100 மண்டலங்களில் காலூன்றியுள்ளது. பார்ப்பனியத்துடன் ஏகாதிபத்திய சேவையை விசுவாசமாகச் செய்துவரும் ""அம்பி''கள் இப்போது ""பெரியார் புரா''வின் சேவையைப் பாராட்டி ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.


நகர்ப்புறங்கள் சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் கிராமப்புற இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர் என்றும் இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை உணர்த்தி இந்த இடப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே ""புரா'' திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ்.இன் ""சித்ரகூடம் புரா'' கூறுகிறது. ஏகாதிபத்திய அடியாள் வேலையை மறைத்து இந்து வெறியர்கள் இப்படியொரு காரணத்தை அவிழ்த்து விட்டுள்ளபோது, "தளபதி' வீரமணியின் ""பெரியார் புரா'' வேறொரு காரணத்தைச் சொல்கிறது.


1944ஆம் ஆண்டு கிராம முன்சீப்கள் பயிற்சி மைய விழாவில் பேசிய பெரியார், ""நகரத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டாராம். எனவேதான், பெரியார் கொள்கை வழியில் ""புரா'' திட்டத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வீரமணி கும்பல் பாடுபடுகிறதாம்! இதே பாணியில், பெரியாரின் பேச்சுகள் எழுத்துக்களிலிருந்து இன்னும் பல புதிய காரணங்களை வீரமணி கும்பல் கண்டுபிடித்து, அவிழ்த்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


""புரா'' திட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, ஏகாதிபத்திய சேவையுடன் ""கோமாதா பாதுகாப்பு'' எனும் கொள்கையை செயல்திட்டமாக வைத்து ஆர்.எஸ்.எஸ்.இன் சித்ரகூடம் புரா இயங்கி வருகிறது. ஆனால், பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் வீரமணி கும்பலின் பெரியார் புரா திட்டத்தில், ஏகாதிபத்திய அடியாள் வேலையைத் தவிர, பெயரளவுக்குக்கூட பெரியாரின் கொள்கையோ வெங்காயமோ இல்லை.
Sunday, June 10, 2007

இனச் சுத்திகரிப்பு நடத்தும் பாசிட்டுகள்

இனச் சுத்திகரிப்பு நடத்தும் பாசிட்டுகள்


பி.இரயாகரன்
10.06.2007னத் தன்மை வாய்ந்த பாசிசம் என்பது, இனத்தூய்மையையும் இனவழிப்பையும் முன்வைக்கின்றது. இலங்கையில் இது பலதரம் நன்கு நிறுவப்பட்டுள்ளது. பலர் கொழும்புச் சம்பவத்தை நாசிக்கால வரலாற்றுடன் ஒப்பிட, அவசரமாக கொடுக்கைக் கட்டிக்கொண்டு ஓடுகின்றனர். சொந்த மண்ணில் இதுபோன்ற எந்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் ஈடுபட்டதால் பல பொறுக்கிகளுக்கும் அவை தெரிவதில்லை.இன்று கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு, காலகாலமாக தமிழர் பற்றி சிங்கள பேரினவாதிகளின் கொள்கையின் அடிப்படையில் அரங்கேறியது. அதுவும் சிங்கள பேரினவாதிகளுக்கே தலைமை தாங்கும் சிறிய சர்வாதிகார குழுவின் தலைமையில் நடந்துள்ளது. இந்த குழுவின் தலைமையிலான பாசிட்டுகள் தான் இன்று நாட்டை ஆளுகின்றனர்.இந்த இனச் சுத்திகரிப்பு இன்று நடத்தியவர்களை கண்டிக்கும் தகுதி, இன்று இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ள யாருக்கும் கிடையாது.1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்து நாடுகடத்திய போது, இதே இனசுத்திகரிப்பே காரணமாக இருந்தது. அன்று நாடு கடத்த வேண்டிய இடம் மற்றொரு நாடாக இருந்ததால், உடன் நாடு கடத்தப்படவில்லை. அந்த வெட்கக்கேடான செயலுக்கு பாய் விரித்தவர்கள், அதில் படுத்து அரசியல் விபச்சாரம் செய்தவர்கள் எல்லாம், ஏன் இன்னும் அவர்களின் அரசியல் வாரிசுகள் எல்லாம் இன்று கொழும்பு நடவடிக்கையைக் கண்டிக்கின்றனர். அரசியல் விபச்சாரம் இப்படி தான் காலத்துக்கு காலம் புழுக்கின்றது.பின்னால் ஜே.வி.பி இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தலைப்பில், மலையக மக்களை எதிரியாக்கியே அரசியல் செய்தவர்கள். அவர்களை நாடு கடத்திய போது, அதை ஆதரித்து நின்றவர்களின் அரசியல் விபச்சாரம், இனசுத்திகரிப்பு தான். இதே ஜே.வி.பி இன்றுவரை தமிழரின் அடிப்படை உரிமையை மறுக்கும், தீவிர இனவாதிகள். இன்று அவர்கள் கூட இதைக் கண்டிக்கின்றனர்.மிகக் கொடூரமான மற்றொரு வரலாறு உண்டு. புலிப்பாசிட்டுகள் வடக்கில் இருந்த முஸ்லீம் மக்களை, இதேபோல் தான் அன்று வெளியேற்றினர். அவர்களையும் தமிழ் மக்கள் என்று கூறிக்கொண்டே, இதைச் செய்தனர். இன்று வரை அவர்களுக்கு எத்தரப்பில் இருந்தும் நிவாரணம் கிடைக்கவில்லை. மந்திரி பதவிகள் முதல் பேச்சுவார்த்தைகள் வரை, மக்களுக்கு நிவாரணங்களைக் கூட வழங்குவதில்லை. அவர்களின் அவலங்களுக்கு முடிவை கட்டிவிடுவதில்லை.இனத்தூய்மை, இனநலன், அதை சுற்றிய சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற போர்வையில் நடத்துகின்ற இனவெறி பாசிசம் தான் இவை.இது மட்டுமல்ல. தமிழர்கள் என்ற காரணங்களுக்காக சிங்கள இராணுவம் தமிழ் கிராமங்களை மொத்தமாகவே கொன்று போட்ட பல பத்து சம்வங்களும், இந்த மண்ணில் தான் நடந்தது. இதே அடிப்படையில் சிங்களவர், முஸ்லீங்கள் என்ற காரணத்துகாக, தமிழ் புலிகள் சில பத்து கிராமங்களை மொத்தமாக கொன்றதும், இந்த மண்ணில் தான் நடந்தது. இதை விட எத்தனை இனக்கலவரங்கள் எத்தனை சம்பவங்கள்.வெட்கம் கெட்ட முறையில் இன்று கொழும்பு நிகழ்ச்சியைக் கண்டிப்பவர்கள், மனித உரிமைகள் பற்றி அழுபவர்களினால் தான், இவை கடந்தகாலத்தில் நடத்தப்பட்டது அல்லது இவர்களின் துணையால், நடந்தப்பட்டவை. இன்றும் ஒரு பக்க சார்பாகத்தான், மற்றொன்றை ஆதரித்தபடியே தான் இதைக் கண்டிக்கின்றனர். உண்மையில் தமிழ் மக்களின் உரிமையை மறுக்கின்றவர்கள் இவர்கள். அது தமிழர் தரப்பாக இருந்தாலும் சரி, சிங்களவர் தரப்பாக இருந்தாலும் சரி, இந்த உண்மையே அனைத்துக்குமான அடிப்படையாகும்.இவை அனைத்தும் தத்தம் இனத்தைக் காப்பாற்றவே என்று கூறியபடி நடத்துகின்றனர். சக மனிதனை இழிவாடுகின்ற, அவனை துன்பப்படுத்துகின்ற இவர்கள், உண்மையில் தனது சொந்த இன மக்களைக் கூட நேசிப்பது கிடையாது. அன்றாடம் தமது வாழ்வுக்காக போராடும் அப்பாவி மக்களை, நரைவேட்டையாடியவர்கள் இவர்கள். இவர்களின் நேர்மை, ஒழுக்கம், அவர்களின் இலட்சியம் அனைத்தும் பொய்யும் புரட்டும் நிறைந்தவையாகும்.சிங்கள பேரினவாதிகளுக்கு தலைமை தாங்கும் பாசிட்டுகள், கொழும்பில் இருந்து தமிழரை அகற்றல் என்ற இனச்சுத்திகரிப்பையும் முன்வைத்தனர். அதன் பின்னர் அதற்கு எதிரான எதிர்வினைகள் கூட ஒரு தலைப்பட்சமானவை தான். எத்தனை கண்டனங்கள். எத்தனை அறிக்கைகள். எத்தனை போராட்டங்கள்.உண்மையில் இப்படி எதிர்வினையாற்றி கண்டித்தவர்களில் பலர், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள். மக்களின் முதுகில் குத்தியே பிழைப்பவர்கள். அரசியல் நேர்மை, அரசியல் ஒழுக்கம் எதுவுமற்றவர்கள். மக்களுக்காக செயலாற்றுபவர்களல்ல. நாயில் வாழும் உண்ணிகள். அன்று முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வை, இதில் எத்தனை பேர் கண்டித்தனர். இன்று வரை அதைக் கண்டிக்கத் திராணியற்றவர்கள் தான் இவர்கள். இன்றுவரை அந்த மக்கள் வாழ்வை இட்டு ஒரு துளி அக்கறை கூட கிடையாது. இப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் தான், கொழும்பில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டிக்கின்றனர். எங்கு இருந்து இரத்தம் குடிக்க வசதியோ , அதற்கேற்பவாறான ஓட்டுண்ணிகள் தான் இந்த பாசிச ஜென்மங்கள்.கொழும்பில் இருந்து தமிழ் இன சுத்திகரிப்பை நடத்திய பாசிட்டுகள், 4 மணி நேரம் தான் அவகாசம் வழங்கியதாக சில உண்ணிகள் இரத்தம் வடிய புலம்புகின்றன. அன்று புலிகள் 24 மணி நேரம் வழங்கித் தான் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய மனிதாபிமானம் பற்றி பேச முனைகின்றனர்.இப்படி ஒப்பீட்டு பாசிசம் பற்றி, சில உண்ணிகள் நியாயவாதம் பேச முனைகின்றனர். ஐஜயோ பாவம், அன்று புலிகள் 24 மணி நேரம் வழங்கியது ஏன்? எதற்கு? அந்த மக்களின் சொத்தைக் கொள்ளை அடிக்கத்தான். அவர்களின் முழுச்சொத்தையும் கண்டுபிடித்து திருடவே அவ்வளவு நேரம் எடுத்தது. ஆண் பெண் குழந்தைகள் என வேறுபாடின்றி, ஒவ்வொருவராக நிர்வாணமாக்கி அவர்களின் உழைப்பைத் திருட 24 மணி நேரம் புலிக்கு தேவைப்பட்டது. ஒன்றா! இரண்டா! ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் சொத்தையும் திருடி அல்லவா, அவர்களை அனுப்பியவர்கள் புலிகள். கொழும்பில் அந்த திருட்டு நடக்காததால் 4 மணி நேரம் போதுமானது. ஒப்பீட்டில் பார்த்தால், புலிகள் நாசி காலத்தில் யூதர்களின் சொத்தை திருடிய வடிவில், திருடிய பின்பே நாடு கடத்தினர்.இப்படிப்பட்ட அயோக்கியர்கள், அயோக்கியர்கள் தான். மக்களின் வாழ்வை சிதைத்து அதைத் தின்பவர்கள். இதில் அவர் இவர் என்று, பக்கச்சார்பு என்ன வேண்டிக் கிடக்கின்றது. எல்லா மக்கள் விரோதிகளும் தமக்குள் தாம் புழுத்துக்கிடப்பதே, இன்றைய இலங்கை அரசியல். ஆயுதம் ஏந்தினால் என்ன! ஏந்தாவிட்டால் என்ன! இவர்கள் மக்களின் வாழ்வை திருடித் தின்னும் பக்காத் திருடர்கள் தான். இதற்கு ஏற்பவே இலட்சியம், அரசியல் என்பதெல்லாம்.இன்று இந்த கொழும்பு இனச் சுத்திகரிப்புக்கு பொறுப்பான ஜனாதிபதியோ கடைந்தெடுத்த நல்ல நடிகர். இந்த பாசிச சர்வாதிகார குழுவுக்கு ஏற்ற ஜனாதிபதி. அவர் நாட்டுக்கு ஜனாதிபதி அல்ல. இந்த இரகசிய சதிக்குழுவுக்குத் தான் ஜனாதிபதி. பிரபாகரன் போலவே தான். பிரபாகரன் எப்படி தமிழ் மக்களுக்கு தலைவராக இல்லாது, தனக்குத் தானே தலைவராக இருக்கின்றார். தன்னைச் சுற்றிய ஒட்டுண்ணிக் கும்பலுக்குத் தலைவராக இருக்கின்றார்.இப்படித்தான் இலங்கை ஜனாதிபதி மகிந்தா. நாட்டில் நடக்கின்ற விடையங்கள் தெரியாத, பச்சைக் குழந்தை தான் இலங்கை ஜனாதிபதி. அப்படி நடிக்கின்ற கடைந்தெடுத்த பாசிட். செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போது, கொன்றவர்களின் பாதுகாப்புடன் சென்று அஞ்சலி செலுத்தியவர். மட்டக்களப்பில் பலாத்காரமாகவே ஜயரைக் கொண்டு மாலை போட வைத்து மகிழ்ந்த ஜனாதிபதி. இப்படி மாலை போட வைத்த ஜயரை, மறைமுக வினையாக புலிகளைக் கொண்டு கொன்றவர் தான் இலங்கை ஜனாதிபதி.சமூக விரோத பொறுக்கிகள் ஜனாதிபதியாகும் போது, சிறு குழுவின் பாசிசம் சர்வாதிகாரமாகின்றது. கொழும்பு முதல் நாட்டின் எல்லைவரை சொந்த இரகசிய குழு கடத்தல்கள் கொலைகள் செய்வது பற்றி தெரியாது போல், நடிக்கின்றவர்கள் இவர்கள். பின் இது பற்றி கண்டனம், விசாரணைகள் என்பன எல்லாம் பொறுக்கித்தனத்தின் உச்சம். பாசிசத்தின் தலைமைப் பண்பு இதுதான். தனக்கு தெரியாது போல் நடிக்கின்ற, பாசிச கோமாளித்தனம்இப்படி நாட்டில் நடப்பது தெரியாது போல் பாசாங்கு செய்யும் ஜனாதிபதி, ஒரு நாட்டின் தலைவர், அன்றாட செய்தி பத்திரிகையைக் கூட படிக்காதவரா? அப்படி நினைத்துக் கொண்டு, சில உண்ணிகள் ஜனாதிபதியின் மனிதாபிமான மகிமை பற்றி புலம்புகின்றன. எதுவும் நாட்டின் தலைவருக்கு தெரியாது போல் காட்டுகின்ற அரசியல் வித்தைகள். இதைக் காவிக் கொண்டு குலைக்கும் புலியெதிர்ப்பு நாய்கள். ஏதோ ஜனாதிபதியின் கருணையால் ஜனநாயகம் வந்துவிட்டதாக பாசாங்கு செய்கின்ற அரசியல் பிழைப்பு. நீ ஜனாதிபதியானால் அல்லது பிரபாகரனானால் என்ன செய்வாய் என்று மடக்கும், புலியெதிர்ப்புக்கு அரசியல் வழிகாட்டுவோரின் (ரீ.பீ.சீ முதல் டக்கிளஸ்சின் இதையவீணை வரை புலம்பும்) அரசியல் பிழைப்பு. மக்களில் நம்பிக்கை இழந்து, பிரபாகரன் ஜனாதிபதி என்று அதற்குள் குலைக்கும் அரசியல் நக்குண்ணித் தனம்.மறுபக்கத்தில் ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது என்று நம்பிக் கொண்டு, அனைவரும் அறிந்த பிரச்சனைக்கு மகஜர்கள், தெளிவுபடுத்தல்கள். எல்லாம் தெரிந்ததாக கூறும் கடவுளிடம் முறையிடுவது போல், அதாவது குருட்டு கடவுளிடம் முறையிடுவது போல்தான் இதுவும். ஜனாதிபதிக்கு கண்ணைத் திறந்து காட்டும் அபிசேகங்கள். பாசிசத்தின் எடுபிடிகள் தான், இப்படி அங்குமிங்குமாக அரசியல் சாக்கடையில் நெளிகின்றனர். இதுவே இன்றைய இலங்கையில் அரசியல் எதார்த்தம்.புண் இருந்தால் சீழ் இருக்கும்

புண் இருந்தால் சீழ் இருக்கும்

பி.இரயாகரன்
10.06.2007னுபவ ரீதியான வாழ்வில், அனைவரும் அறிந்த சாதாரண உண்மை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளும் சரி, புலிகளும் சரி இந்த உண்மையை மறுக்கின்றனர். தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை இருவரும் மறுக்கின்றனர். ஒருவர் இதை பயங்கரவாதம் என்கின்றார் என்றால், மற்றவர்கள் துரோகி என்கின்றனர். இப்படி புண்ணை வைத்துக்கொண்டு, சீழை நக்குவதே இவர்களின் விபச்சார அரசியலாகும்.இன்றைய அரசியல் எதார்த்தம் இதுவே. சிங்கள பேரினவாதம் இருந்தால் அதற்கு விளைவு இருக்கும். அதைப் பயங்கரவாதம் என்று கூறவது அடிமுட்டாள் தனமாகும். மக்கள் நலனை முன்னிறுத்தாத இக்கூற்றுகள், தீவிரமான பயங்கரவாதியின் கூச்சலாகும். இந்தவகையில் பேரினவாதிகள், மனித உரிமையை மறுக்கும் பேரினவாதிகள் தான். தமிழருக்கு எதிரான திட்டமிட்ட சிங்கள பேரினவாத அரசியல் சூழ்ச்சிகள், இன்று சிறு குழுவின் இராணுவ சர்வாதிகார பாசிச நிலையை அடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் மொத்த தமிழ் மக்களையும் சிங்கள மக்களுக்கு எதிரானதாக நிறுத்த முனைகின்றது.புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே கூறிக்கொண்டு, இதை வெறும் வார்த்தையாக்கிக் கொண்டு, மக்கள் தான் புலிகள் என்ற சிங்கள பேரினவாதத்தின் பாசிச நடைமுறைகள். சிங்கள பேரினவாத பாசிச இராணுவ சர்வாதிகார வழிகளில், மொத்த தமிழ் மக்களும் குதறப்படுகின்றனர். ஓட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் சொல்லொணாத் துயரத்தையும், மனித அவலத்தையும் சந்திக்கின்றனர்.புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை மறுக்கும் புலிகள். மறுபக்கத்தில் பேரினவாதமோ இல்லையில்லை, புலிகளும் தமிழ் மக்களும் ஒன்று என்கின்றனர். புலிக்கோ இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகிவிடுகின்றது. பேரினவாதம் இதை உறுதிசெய்யக் கூடிய வகையில் தான், புலி நடவடிக்கைகள் இதற்குள்ளாகவே அமைகின்றது. புலியின் அரசியல் இருப்பு இதற்குள்ளாகவே அமைகின்றது. பாவம் தமிழ் மக்கள். சட்டிக்குள் மடிவதா அல்லது கீழே வீழ்ந்து நெருப்பில் மடிவதா என்று புரியாத பரிதாப நிலை.எப்படி மடிவது என்பதில் கூட, தமிழ் மக்களுக்கு இன்று சுதந்திரம் கிடையாது. ஒருபுறம் புலிகள் பாசிசமும் கட்டாய பயிற்சியும். மறுபக்கம் சர்வாதிகார பாசிச இராணுவம், தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்வதற்காக ஏற்ற இடத்துக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லுகின்றது. தமிழ் மக்களின் திரிசங்கடமான நிலை இது. தமிழ் மக்களுக்கு இலங்கையின் எப்பாகத்திலும், எந்த அரசியல் சுதந்திரம் முதல் வாழ்வதற்கான சுதந்திரமும் கூட கிடையாது. சரி இதில் இருந்து மீள்வதற்கான, மீட்சிக்குரிய வழி கிடையாது.தமிழ் மக்களை கட்டிவைத்துள்ள புலிப் பாசிசம் என்பது, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக கட்டமைக்கப்பட்டதல்ல. மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டதே. தமிழ் மக்களின் உரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று புலிகள் கூறுமளவுக்கு, அப்பாசிசம் காணப்படுகின்றது. மக்களின் உரிமைகளை புலிகளுக்கு எதிரானதாக கருதுகின்ற அளவுக்கு, புலிப் பாசிசம் முத்தி முதிர்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் தான், தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை பேரினவாதிகள் வழங்கமால் இருப்பதையே புலிகள் விரும்புகின்றனர். புலிகள் நடத்திய எந்த பேச்சு வார்த்தையிலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை புலிகள் முன்னிறுத்துவதில்லை. பேரினவாதம் அதை தமிழ் மக்களுக்கு வழங்கினால் புலிகளும் வழங்கவேண்டும் என்பதால், மக்களின் அடிப்படை உரிமையை மறுப்பதும், அதை வழங்க மறுப்பதும் இவர்களது சொந்த அரசியல் பாசிச நிலையாகும்.அதாவது புலிகள் தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையை வழங்கினால், பேரினவாதிகள் அதை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை உருவாகும். அதேபோல் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு அடிப்படை மனித உரிமையை வழங்கினால், புலிகள் அதை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். எனவே இருவரும் அதை மறுப்பதும் மட்டுமின்றி, பரஸ்பரம் கோருவதைக் கூட திட்டமிட்டு தவிர்க்கின்றனர்.இந்த நிலையில் புலிகள் தமிழ்மக்களின் உரிமைகளையும், அவர்களின் அடிப்படை மனித சுதந்திரத்தைக் கூட அனுமதிப்பதில்லை. இந்த உண்மை, சிங்கள பேரினவாதத்தை மிதமாக்கிவிடுவதில்லை. புலியல்லாத தரப்பு பேரினவாதத்தை மிதமானதாக வித்தைகாட்டுவது என்பது, விபச்சாரத் தரகுகளுக்கே உரிய பொறுக்கித்தனமாகும். சிங்கள பேரினவாதம் ஒன்றும் புலியை விட மிதமானதல்ல.புலியல்லாத தளத்தில் அப்படியொரு பிரமை, நம்பிக்கை விதைக்கப்படுகின்றது. புலிகள் தான் மிக மோசமான பாசிட்டுக்கள் என்றும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கும் கொலைகாரர்கள் என்றும் காட்டியபடி, பேரினவாத பாசிசத்தை தொடர்ச்சியாக பாதுகாக்கின்றனர். இதுவே புலியெதிர்ப்பு அரசியல் சாரமாகும். புலியை அழித்தல், இதற்கு ஏற்ப அனைத்து மக்கள் விரோதிகளையும் சார்ந்து நிற்றல் என்பதே இவர்களின் கொள்கையாகும்.தமிழ் மக்களினது மட்டுமல்ல, சிங்கள மக்களினதும் முதலாவது எதிரி சிங்கள பேரினவாதம் தான். அதை நண்பனாக காட்டி, மயக்கத்தை உருவாக்கி அதன் பின் அணிவகுப்பதே, புலியெதிர்ப்பின் அரசியல்சாரம். இதற்கு வெளியில் யாரும் மாற்று அரசியல் ஒன்றை முன்வைப்பதில்லை. புலியை அழித்தால் ஜனநாயகம் வரும் என்று சதா ஒப்பாரி வைக்கின்றனர்.புலிப் பாசிட்டுகளை அரசியல் ரீதியாக இன்று வைத்திருப்பது யார்?1. பேரினவாதமும், அதை பாதுகாக்கும் பாசிச சிங்கள அரசும்

2. புலியெதிர்ப்பு கொண்டுள்ள புலி அரசியல்இவ் இரண்டும் தான் புலியை வைத்திருக்கின்றது. அது அரசியல் ரீதியாக, இராணுவ ரீதியாக புலியை பாதுகாக்கின்றது. இந்த இரண்டு பிரிவினரதும் நிலைப்பாடும் புலியை பாதுகாக்குமே ஒழிய அதை அழிக்காது. இந்த உண்மை பலருக்கு வேப்பாங்காயாக இருக்கலாம். ஆனால் இதுவே எதார்த்தமும், உண்மையுமாகும்.இந்த நிலையில் பேரினவாதம் பற்றி புலியல்லாத தரப்பு கொண்டுள்ள நிலைப்பாடு தான், புலியை பாதுகாக்கின்றது. நாய் வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், ஆனால் பேரினவாதத்தை நிமிர்த்த முடியாது. பேரினவாதம் பாசிசத்தின் மற்றொரு வடிவம். பேரினவாதத்தின் துணையில் தான், புலிகள் தமிழ்மக்களை அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். இதேபோல் புலிப் பாசிசத்தின் வடிவில், அதனுள் புகுந்து நிற்கும் பேரினவாதம், தனது பாசிசத் தலைவிரித்து தமிழ் மக்களை தொடர்ச்சியாக வேட்டையாடுகின்றது.தமிழ் மக்களின் உரிமை பற்றி காலாகாலமாக பேசுகின்ற சிங்களத் தலைமைகள், அதை வழங்க மறுப்பதில் காட்டுகின்ற மனப்பாங்கோ வக்கிரமானது. உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வழங்க மறுக்கின்றது. அரை நூற்றாண்டாக காலத்துக்கு காலம், அதை மறுப்பது என்பதும், ஏமாற்றுவதும் தொடருகின்றது.இன்று அதை புலியைச் சொல்லி செய்கின்றனர். இதை பாதுகாக்கும் புலியெதிர்ப்பு நாய்கள் அதை பாதுகாத்து நின்று குலைகின்றது. சொந்தமாக மக்களை வழிநடத்த எந்த நாய்க்கும் வக்கு கிடையாது. இவர்கள் ஜனநாயகத்தை, அதுவும் புலியல்லாத பாசிட்டுகளின் தயவில் மீட்கப்போகின்றார்கள். நம்புங்கள். இது தான் இவர்கள் வைக்கும் மாற்று வழி.புலிகளின் பாசிசக் கூறுகளை தனக்கு சாதகமாக கொண்டு, தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையை மறுப்பது தான், இன்றைய பேரினவாத சதியாகும். சமகாலத்தில் பேச்சுவார்த்தை, ஒரு தலைப்பட்சமான அரசின் தீர்வு பற்றிய முன்மொழிவுகள், நிபுணர் குழுக்கள், தீர்வு பற்றிய திட்ட அறிக்கைகள், விவாதங்கள் என அனைத்தும், தமிழ்மக்களை மட்டுமல்ல ஊர் உலகத்தையும் ஏமாற்றுகின்ற சூழ்ச்சிகள் தான்.தமிழ் மக்களை அரசியல் ரீதியாக காட்டிக்கொடுக்கும் புலித் தலைமையின் பாசிச இராணுவ வக்கிரங்களை பயன்படுத்திக் கொண்டு, புலியை தனிமைப்படுத்தி தமிழ் மக்களின் முதுகில் குத்தும் பேரினவாதம், எதையும் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்போவதில்லை.உண்மையில் இன்று ஆட்சியில் அமர்ந்து இருக்கும் இராணுவ சர்வாதிகார சிறு குழு, பேரினவாதத்தின் ஏக பிரதிநிதிகள். புலிகள் என்றால் தமிழ்மக்கள் என்று கூறிக்கொண்டு, அவர்களை தமது பாசிச இராணுவம் மூலம் வேட்டையாடுகின்றனர்.தமிழ் மக்களின் எதிரியை, அதன் பலத்தை எதிர் கொள்ளுவதற்கு தேவையான ஜக்கியம் மற்றும் ஒற்றுமையின் எதிரிகள் யார் என்றால்1. புலிகள்

2. புலியெதிர்ப்புக் கும்பல்தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து, அவர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளில் தான், ஜக்கியம் ஒற்றுமை உருவாகமுடியும். இதை எதிர்த்து, அதை குழிதோண்டி புதைப்பதில் புலிகள் மட்டுமல்ல புலியெதிர்ப்பு அணியும் தான் காரணமாக உள்ளது. இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இந்த உண்மையை வரலாறு உறைக்கும் படி எம்முகத்தில் அறைந்து கூறுகின்றது. ஆனால் நாம் சுயமிழந்து, சுயமரியாதை இழந்து, அறிவிழந்து, ஏன் எதற்கு என்று கேள்விகளின்றி மறு கன்னத்தையும் காட்டுகிறோம். நாம் இந்த உண்மையை உணர்வோமா? சிந்திப்போமா? அல்லது தமிழ் மக்களின் அழிவுக்கு துணை நிற்போமா?