தமிழ் அரங்கம்

Saturday, September 13, 2008

தேசம்நெற் சூத்தையைக் கிண்டும், பேரினவாதக் குச்சிகள் : தனிமனித அவதூறு அரசியலை விட, மக்கள்விரோத அரசு சார்பு அரசியல் ஆபத்தானது.

புலிகளின் தோல்விகள் பேரினவாதத்தின் வெற்றியாக மாறுகின்றது. புதிய இந்த நிலைமை தான், புலம்பெயர் நாட்டிலும் பேரினவாத நிகழ்ச்சியாக அனைத்தும் மாறத் தொடங்கிவிட்டது. ஜனநாயகம், சுதந்திரம் என்பது புலியை அழித்தல், அதனிடத்தில் அரசை நிறுவுதல் என்பதாகத் தான், புலியல்லாத புலம் பெயர் அரசியல் புழுத்துவிட்டது. இதற்கு புலியெதிர்ப்பு என்பது, இனிமேல் ஒரு அடைமொழி தான். புலிக்கு எதிரான ஒவ்வொரு நிகழ்ச்சியும், அரசை எதிர்ப்பதில்லை அதை ஆதரிக்கின்றது. அரசை ஆதரிக்கின்ற கும்பல் இன்றி, புலம்பெயர் மாற்று என எதுவும் இன்று கிடையாது. எல்லாம் அதுவேயாகிவிட்டது.
இந்த அடிப்படையில் தான் 'அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல" என்ற அறிக்கையும் வெளிவந்துள்ளது. அரச எடுபிடிகளின், அதன் கைக் கூலித்தனத்தின் இழிவான இழிந்த பண்பு கெட்ட நடத்தைகளை பாதுகாக்க, இந்த அறிக்கை உதவும் என்று மனப்பால் குடிக்கின்றனர். தேசம்நெற் என்ற அவதூறு இணையத் தளத்தை கண்டிப்பதன் மூலம், தமது சொந்த மனித விரோத இழிசெயலை ஜனநாயகமானதாக காட்ட முனைகின்றனர்.

பேரினவாத அரச எடுபிடிகளாக, அரச கைக்கூலித்தனத்தையே அரசியலாக கொண்ட கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து நடத்துகின்ற மக்கள் விரோத அரசியல் விபச்சாரத்தை, தேசம்நெற்றைக் கண்டிப்பதன் மூலம் நிமிர்த்த முனைகின்றனர்.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தெற்கு ஒசெட்டியா : அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்

ஆகஸ்ட் 7ஆம் நாள் பின்னிரவு. ரஷ்யாவை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு பிராந்தியமான தெற்கு ஒசெட்டியாவின் மீது ஜார்ஜியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. பீரங்கித் தாக்குதலில் அச்சிறு மாநிலத்தின் தலைநகரான ஷின்வெலி தரைமட்டமாக நொறுங்கியது. காகசஸ் மலைப் பிராந்தியமெங்கும் குண்டுகளின் வெடியோசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்த இப்போர்த் தாக்குதலில் தெற்கு ஒசெட்டியாவின் நாடாளுமன்றக் கட்டடம், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், தேவாலயங்கள் என அனைத்தும் நொறுங்கிக் கிடக்கின்றன. இக்கொடிய போர்த் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி ஒசெட்டிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உற்றார் உறவினர், வீடுவாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளனர்.

சோவியத் ஒன்றியம் 1991இல் சிதைந்த போது, அதுவரை ரஷ்யாவுடன் ஐக்கியப்பட்டிருந்த ஜார்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. ஜார்ஜியாவின் வடபகுதியில் ஒசெட்டியர்கள் எனும் தேசிய இனச் சிறுபான்மையினர் உள்ளனர். காகசஸ் மலையின் தெற்கேயுள்ள இப்பகுதி தெற்கு ஒசெட்டியா என்றழைக்கப்படுகிறது. வடக்கு ஒசெட்டியா, ரஷ்யாவுடன் இணைந்துள்ளது.

ஜார்ஜியா தனிநாடாகியபோது, தெற்கு ஒசெட்டியர்கள் சுயாட்சி உரிமை கோரிப் போராடினர். அதேபோல ஜார்ஜியாவின் மேற்குப் பகுதியிலுள்ள அப்காசியர்கள் எனும் சிறுபான்மை தேசிய இனத்தினரும் சுயாட்சி உரிமை கோரி போராட்டங்களைத் ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, September 12, 2008

கேரளா : சனாதனிகள் - பாதிரிகள் - முசுலீம் மதவெறியாகளின் புனிதக் கூட்டு!

கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதிலிருந்து கேரள மாநிலமெங்கும் கிறித்தவர்களும் முஸ்லீம்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவர்களது போராட்டத்தை ஆதரித்தும், இடதுசாரி கூட்டணி ஆட்சியை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. காங்கிரசின் மாணவர் சங்கங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை தெருவிலே போட்டுக் கொளுத்தி வருவதோடு, பொதுச் சொத்துக்களையும் நாசப்படுத்துகின்றன.

"இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கும் 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலை ரத்து செய்!'' என்பதே அவர்களது போராட்டத்தின் மைய முழக்கம். வகுப்புகள் புறக்கணிப்பு, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் கட்டுகட்டாக பறிக்கப்பட்டு தீயிட்டு எரிப்பு, சாலை மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு, கண்டனப் பேரணி என கேரளத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன. காங்கிரசு ஆதரவு ஆசிரியர் சங்கங்கள் இப்பாடப்புத்தகப்படி நாங்கள் பாடம் நடத்த மாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. ஜூலை மாதத்திற்குள் இப்பாடபுத்தகத்தை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய கிளர்ச்சி செய்யப் போவதாக முஸ்லிம் லீகும் 12 முஸ்லிம் அமைப்புகளும் அரசுக்குக் கெடு விதித்தன. கேரள அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ள 7ஆம் வகுப்பு.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, September 11, 2008

பிணக்காடாகிறது ஈராக் : அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லபட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பன்னாட்டு விமானநிலையத்தில், கடந்த ஜூன் 25 அன்று பரபரப்பான காலை நேரத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் கார் ஒன்று அனைத்துவிதமான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் முடித்து விட்டுச் செல்கிறது. அலுவலக வேலைகள் தொடங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில், 8.40 மணிக்கு அமெரிக்க இராணுவ வண்டி ஒன்றில் இருந்து 9 வீரர்கள் அக்காரை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அக்கார் தீப்பற்றி எரிந்து போகிறது.

அதே விமான நிலையத்தில் இருக்கும் ரஷீத் வங்கியின் மேலாளர் ஹபீத் அபோத் மஹ்திதான் அக்காரை ஓட்டி வந்தவர். பெண் ஊழியர்கள் இருவரையும் வங்கிக்குத் தனது காரிலேயே அவர் அழைத்து வந்து கொண்டிருந்தபோதுதான் இவ்வாறு கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நூறு முறைக்கும் மேலே சுடப்பட்டு சல்லடையாக்கப்பட்ட காரின் எஞ்சின் தீப்பற்றி மூவருமே சாம்பலாகிவிட்டனர்.

உடனே அமெரிக்க இராணுவம் "மூன்று குற்றவாளிகள் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றனர்; திருப்பச் சுட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி வெடித்ததில் மூன்று குற்றவாளிகளும் மாண்டனர்'' என அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இராணுவ வண்டியில் இரண்டு இடங்களில் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருப்பதாகவும் மேலும் அது கதையளந்துள்ளது.

மஹ்தியின் கார் குண்டுகளால் துளைக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரது ஆறாவது மகன் முகம்மது ஹபீத் அங்கு விரைந்திருக்கிறார். தன் கண் முன்னாலேயே தீப்பிழம்புகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த தனது தந்தையை நெருங்க விடாமல் அமெரிக்கப் படைவீரர்கள் அவரைத் தடுத்து விட்டனர். மஹ்தியின் ஆறு குழந்தைகளையும் அநாதைகளாக்கிவிட்ட அமெரிக்க இராணுவமோ பத்தாயிரம் டாலரை இழப்பீடாக அக்குடும்பத்துக்கு வழங்க முன்வந்தது. அதை வாங்க மறுத்த அக்குடும்பத்தினர், "இப்படுகொலையில் ஈடுபட்ட அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் ஈராக் அமெரிக்க நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, September 10, 2008

அரச கைக்கூலி பிள்ளையானும், பிள்ளையானின் அரசியல் மதியுரைஞர் ஞானமும்

இவர்களின் கைக்கூலி அரசியல் பணி என்ன?

1. பேரினவாத அரசுடன் சேர்ந்து அபிவிருத்தியின் பெயரில் கிழக்கை ஏகாதிபத்தியத்துக்கும், பேரினவாதத்துக்கும் விற்றல்.

2. வடக்கு மக்களையும், கிழக்கு (தாம்) அல்லாத தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்கில் இருந்து முற்றாக ஒழித்தல்.

3. இன்னமும் புலியுடன் இருக்கின்ற கிழக்கு உறுப்பினர்களின் புலிக் குடும்பங்களை படுகொலை செய்து, அவர்களை ஒழித்தல்.

இதுதான் கிழக்கில் கருணா - பிள்ளையான் கும்பலின் அரசியலாக அரங்கேறுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு கூலிக் கும்பலாக இருந்து செய்வது, இதைத்தான்.

ரவுடியும், கைக்கூலியுமான பிள்ளையானுக்கு ரை கட்டி, கோட்டுப்போட்டு, நாசனலும் வேட்டியும் கட்டி, வேஷம் போட்டுக் காட்டுவது வெளிப்படையான கவர்ச்சி அரசியலாகிவிட்டது. இதை வழகாட்டும் கும்பல், ஊர் உலகத்தை ஏமாற்றவும், பதவிகள், பட்டங்கள். அமைதி சமாதானம் பெயரில் கோசங்கள், அறிக்கைகள் என்று, தடபுடலாக ஜோக் அடிக்கின்றனர். இதுவோ இப்படி ஒரு மோசடிக் கும்பலாக, இந்தா அபிவிருத்தி அந்தா விடிவு என்று அறிக்கைகள் ஊடாக, வித்தை காட்டுகின்றனர்.

இதற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஞானம். ஸ்டாலின் என்ற புனைபெயரில்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 9, 2008

பெரியவர்களையே தேசியத்தின் பெயரில் அடித்து உதைப்பதை எம் சமூகம் எண்ணிப் பார்த்திருக்குமா!?

வயது முதிர்ந்தவர்களை, பெரியவர்களை அடித்து உதைப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? புலித் தேசியத்தின் பெயரிலும், புலியின் குறுகிய நலனுக்காகவும், சமூகத்தால் கவுரவமாக மதிக்கப்பட்டவர்கள் தாக்கப்படுகின்றனர்.

அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி என அனைவரும் பகிரங்கமாக வெளிப்படையாகத் தாக்கப்படுகின்றனர். முன்பு இதை இரகசியமாகச் செய்ய, அவர்களை தம் வதைமுகாமுக்கு எடுத்துச் செல்வார்கள் புலிகள். தற்போது அவர்களின் வதைமுகாம்கள் நிரம்பி அங்கு இடமின்மையால், கண்ட கண்ட இடத்தில் பகிரங்கமாகவே அடித்து நொருக்குகின்றனர்.

இப்படித் தாக்குதலின் போது கால், கை முறிந்தவர்கள், எலும்பு உடைந்தவர்கள், அங்கவீனமானவர்கள், மரணமானவர்கள், அவமானத்தாலும் இயலாமையினாலும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையோ, எண்ணில் அடங்காது.

இதனால் முற்றாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம், மறுபக்கம் மனநோய்க்குள் முழுச் சமூகம் சேடமிழுக்கின்றது.

இதை செய்பவர்கள் அவர்களின் குழந்தைகளின் ஒத்த வயதுடைய, புலி காடையர் கும்பல்கள் தான். எந்த இலட்சியமுமற்ற, நோக்கமுமற்ற, பொறுக்கித்தின்னும் லும்பன் கும்பலாக வளர்ந்த வேட்டை நாய்கள் தான். அந்த வேட்டைக் கும்பலின் வக்கிரத்தை, அதன் இழிந்த நடத்தைகளையும் அனுபவரீதியாக காணாத, அனுபவிக்காத எந்த மக்களும் இன்று வன்னியில் கிடையாது.

சமூகமே அங்கு புலியைத் தூற்றுகின்றது. அடி உதையைக் கடந்து, எந்தப் பெண் தான் புலிகளைத் தூற்றவில்லை? 'நாசாமாப்போவாங்கள்", 'மண்ணுக்குள் போவாங்கள்" என்று, சாபமிடாத எந்தப் பெண் தான் அங்கு உண்டு! தம் குழந்தைகளை புலியிடம் பறிகொடுத்த தாய்மையும், குழந்தைகளின் பிணத்தை மீளத் தரும் புலிக்கு எதிராக, தூற்றிப் போடும் சாபங்களால், புலித் தேசியம் ஒருபுறம் செத்துக் கொண்டிருக்கின்றது. புலியின் கண்காணிப்பு, அடக்குமுறையையும் மீறி, புலியைக் காறி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 8, 2008

நினைவின் குட்டை : கனவு நதி

காஷ்மீர் : இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி

நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த காசுமீர் மக்களின் சுதந்திர வேட்கை மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. காசுமீர் பள்ளத்தாக்கில், ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்றுவரும் போராட்டங்களில்"சுதந்திர காசுமீர்'' என மக்கள் முழங்குகிறார்கள். ஆகஸ்டு 15 அன்று, காசுமீர் தலைநகர் சிறீநகரில் உள்ள லால் சௌக்கில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கொண்டே கீழே இறக்கி விட்டு, பாக். நாட்டின் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.

இந்திய தேசியவாதிகள் அனைவரும் இதனைக் கண்டு ஆடிப் போய்க் கிடக்கிறார்கள். இந்திய இராணுவம், கடந்த பத்தாண்டுகளில் காசுமீரில் ஏற்படுத்தியிருந்த "அமைதி'யை, பிரிவினைவாதிகளும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் சீர்குலைத்துவிட்டதாக அதிகார வர்க்கம் குற்றஞ்சுமத்துகிறது. ஜாடியில் இருந்து வெளியே வந்துவிட்ட"சுதந்திர பூதத்தை'' மீண் டும் ஜாடிக்குள் எப்படி அடைப்பது என மைய அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு திரிகிறது.

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள காசுமீர் சட்டசபைத் தேர்தலில், ஜம்முவைச் சேர்ந்த இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொள்ளத் திட்டம் போட்ட காங்கிரசு மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை, அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது. இதற்கு எதிராக...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 7, 2008

சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஆவணப்படும்

தி.க.வீரமணியின் இலாபவெறி