தமிழ் அரங்கம்

Saturday, May 6, 2006

ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!

ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!

ரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.


சினிமா ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பொழுதைப் போக்குவது என்றால் என்பதன் பொருளே அது சினிமாதான் என்று மாறியிருக்கும்போது ஒரு திரைப்படத்தைக் கருத்தியல் தளத்தில் நின்று பார்ப்பது, சிந்திப்பது, விவாதிப்பதினூடாகத்தான் காட்சிக் கலையின் உணர்ச்சிக் கவர்ச்சியிலிருந்து நம் சொந்த விழிப்புணர்வு வழியாக விடுதலை பெற முடியும். இல்லையென்றால் அந்த அபினின் போதையில் நம்மிடம் கருக்கொண்டிருக்கும் முற்போக்கான அரசியல் பாதை நம்மையறியாமலே குழப்பமடையக் கூடும். அப்படித்தான் சாதாரண மக்களிடம் பல்வேறு ஆளும் வர்க்க அரசியல் கருத்துக்கள் குடியேறுகின்றன. இந்தக் குடியேற்றத்துக்கு இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரங் தே பஸந்தி இந்தித் திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.


தற்போதைய சினிமா ஃபார்முலாவின் படி விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்க இயலாத வாசகர்களுக்காக கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.


லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும் என்.ஆர்.ஐ. இந்தியர்களை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.


புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம் செய்கிறாள்.


ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும் இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.


இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர் வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.


ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத் சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில் கொள்ளை, லாலாலஜபதிராய் மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.


இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில் அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.


ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல் செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.


அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே (குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும் மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார். பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப் போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.


ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.


ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில் பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல் உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.


இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள், வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.


நகர்ப்புற அதிலும் மாநகரப் பார்வையாளர்களைக் குறிவைத்து சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் 600 பிரதிகள் எடுக்கப்பட்டு உலகெங்கும் வெளியிடப்பட்டு முதல் வாரத்திலேயே தயாரிப்புச் செலவை வசூலித்து விட்டதாம். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன? மாறுபட்ட திரைக்கதை என்பதாலும் இருக்கலாம். அந்த மாறுபாடு என்ன, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள், இப்படத்தின் உணர்ச்சி தோற்றுவிக்கும் அரசியல் என்ன என்பதைப் பரிசீலிப்பதற்கு முன் சில கொசுறு விசயங்களைப் பார்த்து விடலாம்.


அந்த வெள்ளைக்காரப் பெண் தன் சமகால அரசியல் உணர்வுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆவணப்படம் எடுக்க அமெரிக்காவும், பிரிட்டனும் ஆக்கிரமித்திருக்கும் இராக்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும். சரி போகட்டும், இந்தியாவிற்கு வந்தவள் அந்த நண்பர் வட்டத்துடன் ஆடிப் பாடிப் பழகுபவள் மறந்தும் கூட இராக் மீதான ஆக்கிரமிப்பு குறித்துப் பேசவில்லை.


இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இருக்கிறது. படத்திற்கு ஸ்பான்சரே கொக்கோ கோலாதான். படத்தில் நண்பர்கள் சாப்பிட்டவாறே அரட்டையடிக்கும் பஞ்சாப் தாபா காட்சிகள் முழுக்க கோக் விளம்பரங்கள்தான். நடிகர் ஆமிர்கானும் கோக்கின் முக்கியமான விளம்பர நட்சத்திரமாவார். படம் வெளிவந்த தினங்களில் கோக் தனது பாட்டில்களில் ரங் தே பஸந்தி ஸ்டிக்கர் ஒட்டியே விநியோகித்திருக்கிறது. பிளாச்சிமடாவிலும், கங்கைகொண்டானிலும் போராடும் மக்களை ஒடுக்க தனி சாம்ராச்சியமே நடத்திவரும் கோக் இங்கே ஹீரோக்களின் மனம் கவர்ந்த பானமாக இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் இந்திய தேசபக்தியில் கோக்கும் ஒரு அங்கம் என்பது உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் ஒரு கள்ள உறவு போலும்.


அடுத்து மிக்21 விமானம் எனும் ரசியவிமானம் வாங்கியதில் ஊழல் என்று வருகிறது. இதுவே எப்16 எனும் தரங்குறைந்த அமெரிக்க விமானம் வாங்கியதில் ஊழல் என்று எடுத்திருக்க முடியுமா? அல்லது உண்மையான இராணுவ ஊழல்களான போஃபர்ஸ் பீரங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் போன்றவற்றை வைத்து எடுத்திருக்க முடியுமா?


அப்படி எடுத்திருந்தால் அமெரிக்க அடிமைத்தனத்திலும், இந்த ஊழல்களிலும் ஊறித்திளைத்திருக்கும் தற்போதைய காங்கிரசு அரசு, ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகையை நல்லடக்கம் செய்தது போல இந்தப்படத்தைப் புதைத்திருக்கும். எனவே, ஊழல் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் ஆளுபவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்ற விதியை படம் செவ்வனே பின்பற்றியிருக்கிறது.


மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள் அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பகத்சிங்கிற்கு பொட்டு வைத்தும், ஆசாத்துக்குப் பூணூல் போட்டும் இந்து மதவெறியர்கள் செய்யும் அநீதி ஒருபுறம். மறுபுறம் பாராளுமன்றப் பூசை செய்யும் போலி கம்யூனிஸ்ட்டுகள் தங்களால் கனவிலும் செய்யமுடியாத சாகசங்களைச் செய்திருக்கும் பகத்சிங்கை ஆக்ஷன் ஹீரோவாக அணிகளுக்குச் சித்தரிக்கும் அயோக்கியத்தனம். இப்போது இந்தப் படமும் தனது பங்குக்கு பகத்சிங்கை இம்சை செய்கிறது.


ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய மக்களின் வீரமிக்க போராட்டங்களை பலமுறை காட்டிக் கொடுத்தும் கருவறுத்தும் வந்தது காந்தி காங்கிரசு துரோகக் கும்பல். இந்தத் துரோக வரலாற்றுக்கெதிரான குறியீடுதான் பகத்சிங். தனது சிறைக்குறிப்புக்களில் இந்தியாவில் மலர வேண்டிய சோசலிச ஆட்சி குறித்தும், அதற்கு மக்களை அணிதிரட்டிச் செய்யவேண்டிய புரட்சிப் பணி குறித்தும், பரிசீலனை செய்து கனவு காணும் இந்த வரலாற்று நாயகனை பொய்யான சித்தரிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. இந்தப் படத்தில் கேளிக்கைகள் செய்வதிலும், மந்திரியைக் கொல்வதிலும் ஈடுபடும் மேட்டுக்குடி இளைஞர்களின் சாகச உணர்வை ஒளிவட்டம் போட்டுக் காண்பிப்பதற்காக பகத்சிங்கும் ஏனைய போராளிகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.


ஆவணப்படம் எடுக்க வந்த அந்தப் பெண் நல்ல நடிகர்கள் வேண்டுமென்றால் புதுதில்லி தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றிருந்தால் விசயம் முடிந்திருக்கும். ஆனால் அதில் கதை இருந்திருக்காது. ரசிகர்களும் படத்தில் ஒன்றியிருக்க முடியாது.


பீர் கோக்கைக் குடித்துக் கொண்டு அந்தரத்தில் சாகசம் செய்யும் இந்த இளைஞர்கள், கும்மிருட்டிலும் ஜீப்பையும் பைக்கையும் அதிவேகமாய் ஓட்டும் இந்த இளைஞர்கள், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் அரட்டையுமாய் இருக்கும் இந்த இளைஞர்கள், ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசிக்கும் இந்த இளைஞர்களின் கூட்டத்தை படம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்; அங்கீகரிக்கின்றனர்; அந்தக் குழுவில் சேர விரும்புகின்றனர்; அல்லது சேர்ந்து விட்டனர். இத்தகைய துடிப்பான இளைஞர் குழாமில்தான் பார்வையாளர்கள் தங்களைக் காண்கின்றனரே ஒழிய பகத்சிங் முதலான போராளிகளில் அல்ல. இந்த நண்பர் வட்டத்திற்குள் ஆவணப்படத்தின் மூலம் வந்து போவதால்தான் அந்தப் புரட்சி வீரர்களுக்குரிய சிறப்பை ரசிகர்கள் அளிக்கின்றனர்.


தகவல் புரட்சி நடைபெறும் மாநகரங்களில் ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும் மேட்டுக்குடி நடுத்தரவர்க்கம் சனி, ஞாயிறு வார விடுமுறைகளில் இப்படித்தான் வாழ்கிறது அல்லது வாழ விரும்புகிறது. சுற்றிலும் சுயநலம் சூழ வாழ்ந்து கொண்டே இன்னும் மேலே செல்வதையே இலட்சியமாகக் கொண்டு நகரும் நிஜ வாழ்க்கையானது திரையில் தன்னை இவ்வாறு அறிந்துணர்வதில் வியப்பில்லை. இந்த வாழ்க்கையைத்தான் சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக அந்த வர்க்கம் கருதிக் கொள்கிறது.


சுதந்திரப் போராட்ட வீரர்களின் உரைகளைப் பேசி நடிக்கும் அந்த இளைஞர்கள் ஊரைச் சுற்றியவாறு கேலி பேசித் திரியும் தங்களது அற்பவாழ்க்கை குறித்து எள்ளளவேனும் குற்ற உணர்வு அடைவதில்லை. மாறாக, தாங்கள் ஏற்கெனவே நல்லவர்கள் எனவும் தங்களைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது மட்டும் நல்லதல்ல என்று அதையும் மேலோட்டமாக பாரில் அமர்ந்து கொண்டு மது அருந்தியவாறு பேசிக் கொள்கிறார்கள். கோப்பையில் இருக்கும் மது தீர்வதற்குள் மாதவன் இறந்துவிட உடனே மந்திரியைக் கொன்று தியாகியாகிறார்கள்.


அந்த மந்திரிகூட மக்களிடம் செல்வாக்குப் பெற்று அரசியலில் பல படிகளைத் தாண்டி மந்திரியாகி அப்புறம்தான் ஊழல் செய்ய முடியும். ஆனால் இந்த மேட்டுக்குடி இளைஞர்களுக்கு இந்தப் படிநிலைகள் ஏதும் இல்லை. ஒரே அடியில் தலைவர்களாகி விடுகிறார்கள். இந்தப் படத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் இதுதான். எள்ளளவும் சமூகப் பொறுப்பற்று வாழும் மேட்டுக்குடி வர்க்கம் சமூகத்துக்குப் பொறுப்பான அரியணையில் தன்னை அமரவைத்து முடிசூட்டாததினால்தான் சமூகம் சீரழிவதாகக் கருதிக் கொள்கிறது.


இந்தக் கருத்துக்களை முதல்வன், அந்நியன் படங்கள் முதல் ஹிந்துப் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதும் ஓய்வு பெற்ற பார்ப்பன மேல்சாதி அரசு அதிகாரிகள் வரை எங்கும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். படங்களில் கூட நாயகன் வில்லனை அழிப்பதற்கு பல்வேறு காரணங்கள், நியாயங்கள், சம்பவங்கள் சொல்லப்பட்டு கடைசியில்தான் அநீதி ஒழிந்து நீதி வெற்றி பெறும். மேட்டுக்குடி வர்க்கத்திற்கு அந்தப் பொறுமை இருப்பதில்லை. அதனால்தான் அதற்கு ஜனநாயகம் பிடிப்பதில்லை. பாசிசமும், சர்வாதிகாரமும் மேட்டுக்குடி வர்க்கத்திற்குப் பொருந்திவருகிற அரசியல் கோட்பாடுகள். எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் அருண்ஷோரி முதல் துக்ளக் சோ வரை பல அறிவாளிகளைக் கூறலாம். படத்தில் தங்கள் வட்டத்தின் மகிழ்ச்சி குலைந்துபோன ஒரே காரணத்திற்காக மட்டும் உடனே துப்பாக்கி தூக்குகிறார்கள். இல்லையேல் அந்தக் கைகளில் பீர் பாட்டில் மட்டும் இருந்திருக்கும்.


தற்போது தேசியப் பத்திரிக்கைகளில் அடிபடும் ஜெசிகாலால் விவகாரத்தைப் பாருங்கள். மனுசர்மா ஹரியானா காங்கிரசு மந்திரியின் மகன், விகாஷ் யாதவ் உ.பி. தாதா டி.பி. யாதவின் மகன், அமர்தீப் சிங், அலோக் கன்னா இருவரும் கோகோ கோலாவில் மானேஜர்கள்; இந்த நண்பர் வட்டம் 1999இல் ஒரு நள்ளிரவில் மதுவருந்த டாமரின்ட் கோர்ட் எனும் பாருக்கு செல்கிறார்கள். மது பரிமாறும் ஜெசிகா லால் நேரமாகிவிட்டது என்று மறுக்கிறாள். வார்த்தைகள் தடிக்கின்றன. உடனே மனுசர்மா தனது ரிவால்வரால் ஜெசிகாவைச் சுட்டுக் கொல்கிறான்.


சுமார் 100 பேர் முன்னிலையில் நடந்த இந்தப் படுகொலைக்கான வழக்கு ஆறு ஆண்டுகளாய் நடந்து தற்போது குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நண்பர் வட்டத்திற்கும் படத்தில் வரும் அமீர்கானின் நண்பர் வட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் அந்த பாருக்குச் சென்று மது மறுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? துப்பாக்கி இல்லாமல் போயிருந்தால் வெறும் கைகலப்பில் முடிந்திருக்கும். மனுசர்மாவைக் காப்பாற்ற பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் மட்டுமின்றி சம்பவத்தின் போது உடன் சென்ற நண்பர்களும் பெரும் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். இங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத்தானே செய்கிறார்கள். இந்த நட்புவட்டங்களின் மகிழ்ச்சிகளில் ஒன்றில் மந்திரி குறுக்கிடுகிறான், மற்றொன்றில் மது பரிமாறும் பெண் குறுக்கிடுகிறாள், அவ்வளவுதான் வேறுபாடு.


படத்தில் புரட்சிகரமான டி.வி.யாக வரும் பிரணாய் ராயின் என்.டி.டி.வி. நிஜத்திலும் அப்படிக் காட்டிக் கொள்ள முயலுகிறது. ஜெசிகாவுக்கு ஆதரவாக பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தியா கேட்டில் அமைதியாக எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். 2 இலட்சம் பேர் என்.டி.டி.விக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்களாம். அதை எடுத்துக் கொண்டு பிரணாய் ராய் அப்துல் கலாமைப் பார்த்து நீதி வேண்டுமென கோரிக்கை வைத்தாராம். இதை அந்த டி.வி. ஏதோ மாபெரும் புரட்சி நடவடிக்கையாக சித்தரித்து நேரடியாக ஒளிபரப்புகிறது.


இதே பிரணாய் ராய் லாவோசில் நடந்த பொருளாதார மாநாட்டில் அனில் அம்பானி உள்ளிட்ட முதலாளிகளோடு ""உலக முதலாளிகளே இந்தியாவிற்குள் முதலீடு செய்ய வாருங்கள்'' என்று டான்ஸ் ஆடியவர். பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வந்த போது பரம்பொருளைக் கண்ட பரவசத்துடன் பேட்டி எடுத்தவர். புஷ்ஷûக்கு மன்மோகன் சிங் விருந்து அளித்தபோது கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர். இப்படிப் பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஜந்து தன்னை ஒரு போராளியாகக் காட்டிக் கொள்வதை என்னவென்று அழைப்பது?


ஜெசிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பேசுவதிலும் ஒரு நடுத்தர வர்க்க அரசியல் இருக்கிறது. ஜெசிகா லால் ஒரு பெண், அதிலும் ஒரு விளம்பர மாடல். இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட சோகத்தை மாநகரத்து நடுத்தர வர்க்கத்தின் சோகமாக மாற்றுவதில் ஊடக முதலாளிகளுக்குப் பெரிய பலன் இருக்கிறது. ஜெசிகாவிற்குப் பதில் மதுக்கோப்பை கழுவும் ஒரு பையன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது இந்த அளவுக்குப் பேசப்பட்டிருக்காது.


இந்தப் பத்தாண்டுகளில் பம்பாய்க் கலவரம், குஜராத் கலவரம், மேலவளவுப் படுகொலை, ரன்பீர்சேனா அட்டூழியங்கள் என்று நீதி கிடைக்காத சம்பவங்கள் எத்தனை இருக்கின்றன? அதற்கெல்லாம் என்.டி.டி.வி இயக்கம் எடுக்கவில்லை. குடியரசுத் தலைவரைப் பார்க்கவில்லை. படத்திற்கு கோக் போல ஸ்பான்சர் செய்திருக்கும் அந்த டிவி., திரையில் வரும் காட்சிகளைப் போல நிஜத்தில் காட்டிக் கொள்வதற்கு ஜெசிகாவின் வழக்கு அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. கூடவே இரண்டு இலட்சம் எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பிய அந்த நடுத்தர வர்க்கமும் தன்னை மாபெரும் சமூகப் போராளியாகக் கருதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தக் கோழைகள் எவரும் குறைந்தபட்சம் மனுசர்மாவைத் தூக்கில் போடவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.


ஜெசிகா லாலுக்கு நீதி வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கோரிக்கை. பொல்லாத நீதி! ஆக இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள் என்பதை ஜெசிகாவின் வழக்கு என்ற உண்மை எடுப்பாக விளக்கி விடுவதால், நாம் தனியாக விளக்குவதற்கு ஒன்றுமில்லை.


மு இளநம்பி

Friday, May 5, 2006

அடி முதல் நுனி வரை அழுகி நாறும் சி.பி.எம்

அடி முதல் நுனி வரை அழுகி நாறும் சி.பி.எம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் அமைந்துள்ள "லேணா திருமண மண்டபம்' நகரில் மிகப்பெரும் ஆடம்பரமான வசதி படைத்தவர்கள் நாடும் திருமண மண்டபமாகும். அந்த மண்டபம் அமைந்துள்ள மதுரை சாலையில் 16.3.06 அன்று காலை 11 மணியளவில் சென்று கொண்டிருக்கையில் ""வைகை மணி இல்லத் திருமண விழா'' என்று பல வண்ணங்களில் ராட்சத வரவேற்பு போர்டுகள் திருமண மண்டபத்தின் முகப்பு வாயிலில் நிறுவப்பட்டிருந்தன. அனைத்து வரவேற்பு போர்டுகளை விட நல்ல சிவப்பு நிறத்தில் அரிவாள் சுத்தியலை வெள்ளை நிறத்தில் கம்பீரமாய் போட்டு ""திருமண விழாவிற்கு வருகை தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கீ. உமாநாத் அவர்களே! மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் மோகன் அவர்களே! சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் தோழர் குமார் அவர்களே! "தீக்கதிர்' மேலாளர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களே!''.... இன்னும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை எல்லாம் பொறித்து அனைவரையும் வருக! வருக! என "கம்பீரமாக' வரவேற்றது சி.பி.எம். கட்சியின் விளம்பர போர்டு!


ஆகா! கம்யூனிச இயக்கத் தோழர் இல்லத் திருமண விழா போலிருக்கிறது. அந்தப் "புரட்சிகர திருமணத்தை' எப்படியும் பார்த்துவிட வேண்டுமே என்ற துடிப்பில் அழையா விருந்தாளியாக மண்டபத்தினுள் நுழைந்து விட்டேன்.


சாதிமத அடிப்படையில் இரண்டு பார்ப்பனர்கள் "அக்கினி' வளர்த்து, வேதம் ஓதி, மணமக்களைத் தத்தம் பெற்றோர்களுக்கு "பாதபூசை' செய்விக்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்தபின் வரவேற்பு நிகழ்வு தொடங்கியது.


"மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர முன்னணித் "தோழர்' வைகை மணியின் அருந்தவப் புதல்வர் திருமண நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர், இந்தியன் வங்கி ஊழல் "புகழ்' எம்.கோபாலகிருஷ்ணன்; திருமணத்தை நடத்தி வைத்தவர் சென்னை உயர்நீதி மன்ற "நீதியரசர்' எஸ்.அசோக்குமார்; ஆக, வாழ்த்திப் பேசியவர்கள் பலரும் யாதவா சாதி பண மூட்டைகள், சர்வகட்சியிலுமுள்ள யாதவா சாதித் தலைவர்களே ஆவர். அத்துடன் "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கண்ட முக்கியப் புள்ளிகள், பகுதித் தொண்டர்கள், தி.மு.க., ம.தி.மு.க.வி னர் பங்கேற்றனர். யாதவ சாதி "உறவுக்கார' பாமர மக்கள் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்தனர்.


வாழ்த்திப் பேசியவர்களில் சிலர் வைகை மணி என்ற விளந்தூர் மணி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதி தீவிர உறுப்பினர் என்றும் அவர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாகவும் புகழ்ந்துரைத்தனர். கட்சி நிதியாக ரூபாய் இருபதாயிரத்தை "தீவிர உறுப்பினர்' வைகை மணி, "தோழர்' உமாநாத்திடம் "பலத்த கரவொலி'க்கிடையில் வழங்கினார்.


அனைத்து "தலைவர்'களுக்கும் பகட்டான பட்டாடைகள் சால்வைகள் அணிவிக்கப்பட்டன. அதன்பின் தலைவாழை இலையில் "முக்கனி', இனிப்பு வகைகள், வறுவல், பொறியல், வடை, பாயாசம், கூட்டு, பச்சடி வகையறா, அப்பளம், ரசம்; இதுபோக குடிப்பதற்கென்று தனித்தட்டில் சூப், ஐஸ்கிரீம் வகையறா, பிரியாணி, வெள்ளை "சாதம்', சாம்பார், குழம்பு, பருப்புக் குழம்பு, வெண்ணெய், தயிர், மோர் என அமர்க்களப்படுத்தி விட்டார்கள். என் மதிப்பீடு, இலை ஒன்றுக்கு ரூ. 100 முதல் ரூ. 125 வரை இருக்கும். ஆடம்பர திருமண அழைப்பிதழ் ஒன்றின் மதிப்பு மட்டுமே


ரூ. 25க்கு மேல் இருக்கும்.


பரமக்குடி அருகிலுள்ள மேற்கு கொட்டகுடி கிராமத்தை சேர்ந்த மணி, பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்துள்ளார். அதனையொட்டி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க உறவு; பிறகு "கம்யூனிஸ்ட்' உறவு! என்னதான் உழைத்தாலும் ஓட்டுனராக இருந்து கொண்டு பொருளாதார ரீதியாக உயர முடியுமா? எனவே, வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் புரோக்கர் தொழிலில் ஈடுபட்டார். மிகக் குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரனாகி விட்டார். பல்வேறு கிராமங்களில் நிலத்தை விற்று, நகையை விற்று, ஆடுமாடுகளை விற்று ரூ. 50,000/ முதல் ஐந்து லட்சம் வரை மணியிடம் பணம் செலுத்திவிட்டு, மாதக் கணக்கில்ஆண்டுகணக்கில் காத்திருந்து காத்திருந்து, வெளிநாடும் செல்ல முடியாமல், கொடுத்த பணத்தையும் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளம். பிறகு ஏன் மணி கோடீஸ்வரன் ஆக முடியாது? கோடீஸ்வரன் ஆகி விட்டாலே "அந்தஸ்து'மிக்கவர்களின் சர்வ கட்சியினரின் உறவு தன்னாலேயே வந்து விடுகிறது அல்லவா? அந்த உச்சகட்ட காட்சிதான் இந்த திருமணம்!


எப்படிப்பட்ட தொழிலிலும் ஈடுபடலாம்; சாதிவெறி உணர்வில் திளைக்கலாம்; ஏமாற்றி மோசடி செய்தும் பணம் சம்பாதிக்கலாம்; கோடீஸ்வரன் ஆகலாம் என்ற கோட்பாடு ஓட்டுக்கட்சி அரசியலில் சாதிவெறி அரசியலில் சாதாரணமாகி விட்டது. மேற்கண்ட சீரழிவுகளில் பிழைப்புவாதத்தில் ஆடம்பர மோகத்தில் எள்ளளவும் குறையாதவர்களே "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியினர்! பார்ப்பனப் பண்பாட்டில் மூழ்கி திளைப்பவர்களே "மார்க்சிஸ்ட்' கட்சியினர்! என்பதற்கு இத்திருமண நிகழ்ச்சி மற்றுமோர் எடுத்துக்காட்டு.


சரி, "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் "தீவிர' உறுப்பினர் மணி தம் புதல்வனுக்கு எப்படிப்பட்ட இடத்தில் பெண் எடுத்துள்ளார் தெரியுமா? மணமகள் உஷாவின் தந்தையான சண்முகம், 199196களில் கொள்ளைக் கூட்டத் தலைவி ஜெயா அமைச்சரவையில் சக்கை போடு போட்ட அமைச்சர் கண்ணப்பனின் பினாமியாக இருந்தவர். கண்ணப்பனின் பினாமிச் சொத்துக்களை சண்முகம் "ஏப்பம்' விட்டு விட்டதாகவும், இதனால் கண்ணப்பன் தமது அடியாட்களைக் கொண்டு சண்முகத்தை வெளுத்து வாங்கி விட்டதாகவும், எனினும் சண்முகத்திடமிருந்து கோடிக்கணக்கான பணத்தையும், சொத்துக்களையும் மீட்க முடியவில்லை என்றும் பரவிய செய்திகள் மறுக்க முடியாத உண்மை என்பதை சிவகங்கைகாளையார்கோவில் பகுதி மக்கள் பெரும்பாலோர் நன்கறிவர். அந்த வகையில் காளையார் கோவிலில் மிகப் பெரிய ஒரே கோடீசுவரர் "தோழர்' மணியின் சம்பந்தி அ.தி.மு.க. சண்முகம்தான்! எனவே இது பொருத்தமான சம்பந்தமாக அமைந்து விட்டது.


எப்படியோ, கட்சிக்கு ஆதரவாளராக கோடீஸ்வரர்கள் இருந்தால் தானே அப்போதைக்கப்போது நிதி பெறலாம்; தோழருக்கு தோழராச்சு! பணத்திற்கு பணமாச்சு! என்ற கொள்கையில் ஊறித் திளைக்கும் "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் முதல் தொண்டர்கள் வரை என பெருந்திரளாக வந்து லேணா திருமண மண்டபத்தையே "மார்க்சிஸ்டு'களின் மாநாடு போல ஆக்கிவிட்டார்கள்.


கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சி.பி.எம் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினராகவும் இருந்த ஈ.கே. நாயனார் தனது மகன் திருமணத்தை பாசிச ஜெயா நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தையே விஞ்சும் வகையில் சாதிமத சடங்குகளோடு மிக ஆடம்பரமாக நடத்தினார். நாடாளுமன்ற சபாநாயகரான "மார்க்சிஸ்ட்' சோம்நாத் சாட்டர்ஜி தனது பேரனுக்கு பார்ப்பன சனாதன முறைப்படி பூணூல் அணிவிக்கும் விழா நடத்தி அசத்தினார்.


"மார்க்சிஸ்டு' தலைவர்களே இப்படி ஆடம்பர மோகத்திலும், பார்ப்பனியத்திலும் மூழ்கி கிடக்கும்போது, திடீர் பணக்கார "தோழர்' வைகை மணி தனது மகனுக்கு எளிய முறையில் சாதிமத அடையாளமின்றி திருமணம் நடத்துவார் என்று எதிர்பார்க்க முடியுமா?


மு வி. இரவி,


பரமக்குடி.

Thursday, May 4, 2006

நேபாள மாவோயிஸ்டுகளும் புலிகளும் நோர்வேயும்

நேபாள மாவோயிஸ்டுகளுக்கும் புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? இதற்குள் நோர்வே என்ன தான் செய்கின்றது?

பி.இரயாகரன்
04.05.2006


னிதவினம் தன்னைத்தான் கற்றுக் கொள்ளவும், தனக்காக போராடவும், அதை எப்படி போராடுவது என்பதையும், நேபாள மாவோயிஸ்டடுகள் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்டுகள்) நடைமுறையில் உலகிற்கே நடைமுறைப்படுத்தி காட்டுகின்றனர். உலகமே அதிரும் வண்ணமும், ஏகாதிபத்தியங்களை பதைபதைக்க வைத்தும், இந்திய பிராந்திய விஸ்தரிப்புவாதிகள் பீதிகலந்து மிரள வைக்கின்றார்கள், அடுத்த நேரக் கஞ்சிக்கே வழியற்ற நேபாள ஏழைக் கிராமவாசிகள். ஒரு வரலாற்று புகழ்மிக்க ஒரு வர்க்கப் போராட்டத்தையே நடத்திக் காட்டுகின்றனர்.


பார்ப்பான இந்து பாசிட்டுகளின் இந்து இராச்சியமாக, இந்து வெறியர்களால் பாதுகாக்கப்பட்ட நேபாள மன்னனின் ஆட்சி உழைக்கும்மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது. நேபாள மக்களை சாதிகளாக பிளந்து, வர்க்கங்களாக அடக்கியாண்ட இந்து பார்ப்பான பாசிட்டுகளின் கோட்டைகள் கொத்தளங்கள் இந்திய துணைக்கண்டத்தினையே அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது. இது ஈழத்தில் நடக்கவில்லை தான். இராணுவமும் பொலிஸ்சும் இணைந்த அதிகார வர்க்க குண்டர் படையைக் கொண்டு, நேபாள மக்களையே ஒடுக்கியாள நினைக்கும் இந்து மன்னனின் அதிகாரம் இன்று மாவோயிஸ்ட்டுகளின் ஒவ்வொரு நகர்விலும் ஆட்டம் காண்கின்றது.


மிக குறுகிய காலத்தில் எதிரியை தனிமைப்படுத்தி, மாபெரும் மக்கள் சக்;தியை திரட்டுவதில் மாவோயிஸ்ட்டுகள் கையாண்ட யுத்ததந்திரம், எதிரியை துல்லியமாக தனிமைப்படுத்தியதில் வெற்றி கண்டது. எதிரிக்கு எதிராக எதிரியின் போக்கில் நெழிவு சுழிவான போக்கையே கையாண்டு, எதிரியின் உள்நாட்டு நண்பர்களையே எதிரிக்கு எதிராகவே நிறுத்தினர். எதிரியை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்துவதில், மிக நுட்பமான யுத்ததந்திரத்தை கையாண்டு, பொது எதிரிகளுக்கு இடையிலுள்ள முரண்பாட்டைக் கூட கையாள்வதில் முரணற்ற வகையில் மக்களைச் சார்ந்து இருந்தனர்.


மக்கள் சக்தி என்ற அடிப்படையில், மக்களின் நலன்களை கையாள்வதில், அவர்களுக்கு இடையிலான சமூக முரண்பாட்டைக் கையாள்வதில், மாவோயிஸ்ட்டுகளின் யுத்ததந்திரம் புரட்சிகர வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரணமாக மாறிவிட்டது. குறுகிய இராணுவ வாதங்கள் அற்ற, இராணுவம் அரசியல் அதிகாரத்துகான ஒரு கருவி என்ற வகையில் அதை நுட்பமாகவே கையாண்டனர். இந்த கல்வியை குறிப்பாக பீகார் மாவோயிஸ்ட்டுகளும், ஆந்திரா மக்கள் யுத்த குழுவும் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படையான அரசியல்பாடமாக அவர்கள் முன்னுள்ளது. வெற்றிகரமான மக்கள் திரளை மக்களின் சொந்த நடவடிக்கைக்கு ஊடாகவே, ஒரு சமூகப் புரட்சியாக உருவாக்கி, ஆயுதம் ஏந்திய ஒரு மக்கள் போராட்டமாக மாற்றுவது அவர்கள் முன்னுள்ள அரசியல் கடமையாகவுள்ளது.


அனைத்து அரசியல் அதிகாரத்தையும் கையில் குவித்து வைத்திருந்த இந்து பார்ப்பனிய மன்னர் ஆட்சியை, தூக்கியெறிவது என்ற குறைந்தபட்ச அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தினர் மாவோயிஸ்ட்டுகள். எதிரிகளுக்கு இடையில் உள்ள இந்த அரசியல் முரண்பாட்டையும், அரசியல் அதிகாரம் சார்ந்த இழுபறியையும், ஒரு மக்கள் போராட்டமாக மாற்றியதன் மூலம், எதிரிகளையும் எதிரிக்கு எதிராக திருப்பினர். மொத்த மக்களையும் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு மாவோயிஸ்ட்டுகள் இட்டுச் சென்றனர். வழிபாட்டுக்குரிய புனிதமாக போற்றப்பட்ட மன்னனை எதிர்த்து, மக்களை வீதியில் அரசியல் உணர்வுடன் இறங்க வைத்தனர். மேற்கு அல்லாத நாடுகளில், இது புதியதொரு அத்தியாயமாகும்;


மிகக் கடுமையான அடக்குமுறையை மீறி ஏழை எளிய மக்கள் நடாத்திய போராட்டம் நேபாள எதிரியை மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் இந்திய வல்லரசையுமே பீதிக்குள்ளாக்கியுள்ளது. அவசரமான இந்தியாவின் தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை; வேறுவழியின்றி ஏற்ற மன்னன் தான் பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவதாக கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பிளவை ஏற்படுத்த முனைந்தார். ஆனால் மன்னர் ஆட்சி ஒழிக, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் பதிலடியாக உறுதியாக வைத்ததன் மூலம், எதிரியின் மோசடியை தகர்த்தனர், தகர்த்து வருகின்றனர். இதன் மூலம் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றது. மன்னர் ஆட்சியை இல்லாது ஒழித்தல், புதிய அரசியல் சட்டவமைப்பை உருவாக்குதல் என்ற அடிப்படையிலான மாவோயிஸ்ட்டுகளின் யுத்ததந்திரம், எதிரி வர்க்கத்தின் அனைத்து சமரசப்பாதைகளையும்; தவுடுபொடியாக்கி வருகின்றது.


ஆளும் அதிகார வர்க்கங்களும், சுரண்டு வர்க்கங்களும் செய்யும் மக்கள் விரோத சூழச்சிகளே இந்த ஜனநாயக அமைப்பின் அரசியல் உள்ளடக்கம் என்பதை, மக்கள் சொந்தமாக புரிந்து கொள்ளும் வகையில் மாவோயிஸ்ட்டுகள் போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த ஜனநாயக அமைப்பின் ஊடாக மக்களின் நலனைப் பேணமுடியும் என்ற மாயையை, மாவோயிஸ்ட்டுகள் அவர்கள் விரும்பும் அரசியல் வழியில் நகர்த்தி தகர்க்க முற்படுகின்றனர். யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை என போலி ஜனநாயகத்தின் அனைத்து வகையான மூகமுடியையும் சந்திக்கு இழுத்து, மக்களின் சொந்த ஆட்சியை நிறுவும் வாக்கப் போராட்டத்தை நடைமுறையில் நகர்த்துகின்றனர்.

நோர்வே தன்னை நடுநிலையாளனாக காட்டி, கட்டிவிடும் கோவணமும் சாக்கடையில் இருந்து பெறப்பட்டதே

இந்த நிலையில் தான் நோர்வே பேச்சுவார்த்தையின் மதியஸ்த்தராக ஈடுபடவுள்ளதாக அறிக்கைள் வெளிவந்துள்ளது. உலகமயமாதலில் நோர்வேயின் பாத்திரம் என்பது சமாதான வேஷம் போட்டு, கறைபடியாத நடுநிலையாளனாக நடிப்பதே. இங்கு நோர்வேயின் உலகமயமாதல் வேஷம், அரசுக்கு எதிரான குழுக்களை ஆதரிப்பது போன்ற பொதுநிலை எடுத்து அவர்களை கருவறுப்பதேயாகும்;. அரசுக்கு எதிரான ஆயுமேந்திய ஒரு குழுவாக இருப்பதை இல்லாதாக்குவதாகும்;. இதற்கு ஏற்ப சலுகைளை வாரிவழங்கி, அரசியல் ரீதியாக சிதைந்து போவதை பலவழிகளில் கையாள்வதையே அடிப்படையாக கொண்டது. புதிதாக தனது கோவணத்தில் ஒன்றை, அவர்களுக்கு கட்டிவிடுவது தான்.


இன்று உலகமயமாதலின் சர்வதேச நிகழ்ச்சி போக்குகள் இயல்பிலேயே ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாக மாறி வருகின்றது. மோதல்கள் படிப்படியாக ஏகாதிபத்திய எதிர்ப்பாக உள்ளடகத்தில் மாறுவதினால் அல்லது ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு இடைஞ்சலாக இருப்பதால், ஏகாதிபத்தியங்களின் மத்தியஸ்தம் என்ற பெயரில் அரசை ஆதரித்தபடி தலையிட முடியாதுள்ளது. இந்த நிலையில் தான் நோர்வேயின் அரசியல் பாத்திரம் ஏகாதிபத்தியத்தால் திடட்மிட்டு உருவாக்கப்பட்டது.


இது ஒப்பீட்டளவில் தன்னார்வக் குழுக்களின் அரசியல் பாத்திரத்தையே, ஒரு அரசாக வகிக்கின்றது. அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் திட்டமிட்டு ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, அதற்கு தாராளமாக பணம் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு, அதன் மூலம் மக்களின் சொந்தமான சுயாதீனமான போராட்டங்களை சிதைக்கின்றனர். இதையொத்த அரசியல் பாத்திரத்தையே, சமாதான வேஷம் போட்டு சிதைக்க, ஏகாதிபத்தியத்தால் நோர்வே உருவாக்கப்பட்டுள்ளது. தன்னார்வக் குழுக்களை எடு;த்தால் ஏகாதிபத்தியம் வழங்கும் பணத்தில், அரசுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் போராடுவதாக கூறி, மக்களின் சொந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் அழிவின்றி போராட வழிகாட்டுவது இதன் யுத்த தந்திரம் தான் ஏகாதிபத்தியத்துக்கு தேவையானது.


இதையும் மீறி போராட்டம் வளரும் போது தான், நோர்வேயின் தலையீடு ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்படுகின்றது. உலகளாவிய மோதல்களில் நோர்வேயின் தலையீடு என்பது, போராடுபவர் பக்கத்தில் தான் இருப்பதாக காட்டி அதை சீரழிப்பது தான்;. தலையீடு முதல் அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் திட்டமிடல் மற்றும் ஆலோசனையின்றி நோர்வே சுயாதீனமாக செயற்படுவதில்லை. நோர்வே செய்ய வேண்டியது போராடும் குழுவுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டி, சலுகையை வாரிவழங்கி, அரசுக்கு எதிராக நியாயமாக தான் நடப்பதாக காட்டி, போராட்ட குழுவையும் அதன் அரசியல் நோக்கையும் சீரழிப்பது தான்;.


இவர்கள் போராட்டம் தொடங்க முன் உள்ள சமூக நெருக்கடிகளில் தலையிடுவதில்லை. அங்கு தன்னார்வக் குழுக்களே நோர்வேயின் பிந்திய அரசியல் பாத்திரத்தை செய்கின்றன. ஏகாதிபத்தியம் செய்ய விரும்புவது, அரசு எப்படி தனது உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயற்படுகின்றதோ, அதேபோல் அரசை எதிர்க்கும் குழுக்களையும் தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான்.


நோர்வே மத்தியஸ்தம் பல வகைப்பட்டது. போராட்டத்தை சிதைக்கும் வகையில் இழுபறியான பேச்சுவார்த்தைகளை நீடிக்க வைப்பது, போராட்ட குழுவில் உடைவையும் சிதைவையும் உண்டாக்குவது, நிலவும் சமூக அமைப்பில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அரசியல் ரீதியான மக்கள் நோக்கங்களை இல்லாதாக்குவதாகும். நீண்ட இழுபறியான அரசியல் சீரழிவை உண்டாக்குவதற்கு பலவழி யுத்த தந்திரத்தை கையாளுகின்றனர். மக்கள் விரோத போக்கை இதற்காகவே ஊக்குவிக்கின்றனர். இதற்கு தேவையான பணம் மற்றும் பொருள் வகை உதவிகளை வாரிவழங்குவது அதன் குறிப்பான பாத்திரமாக உள்ளது. இது ஏகாதிபத்திய வழிகாட்டலினால் திட்டமிட்டு கையாளப்படுகின்றது. இதன் போது அரசு தரப்பு மற்றும் இந்த ஜனநாயக அமைப்பில் அரசியல் பிழைப்பு நடத்தும் எதிர்தரப்பின் எதிர்ப்புகள், அதிருப்த்திகள், அவர்கள் தமது சொந்த அதிகாரத்தை நிறுவும் உள்ளடகத்தில் உருவாகின்றன. ஆனால் இதை அரசு மீறமுடியாத வகையில், ஏகாதிபத்தியம் தாம் செய்வதை அரசுக்கு தெளிவுபடுத்திவிடுகின்றது. நடக்கப் போவது நீண்டகால ஏகாதிபத்திய அரசியல் திட்டம் என்பதையும், அரசுக்கு எதிரான குழுவின் சீரழிவு நோர்வேயால் உறுதி செய்யப்படுகின்றது.


இலங்கையில் புலிக்கும் அரசுக்குமிடையிலான நோர்வேயின் முயற்சசிகள் இதற்கு உட்பட்டது தான். நோர்வே புலிக்கு அதிக சலுகை வழங்குவதாக காட்டுவது, அதை நோர்வே தனது கொள்கை வழியாக உறுதி செய்வது, அனைத்தும் இதற்கு உட்பட்டது தான். நோர்வேயின் அணுகுமுறை, இந்தியா உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்தியத்தினதும் வழிகாட்டலின் கீழ், புலிக்குள் அரசியல் ரீதியாக ஊடுருவி சிதைப்பது தான்;. புலிக்கும் அரசுக்குமிடையில் ஏற்படும் கடும் நெருக்கடியின் போது, நோர்வே தனது அரசியல் வழிகாட்டிகளான ஏகாதிபத்தியங்களுடன் கூடி வழிகாட்டலை தொடருகின்றது. இலங்கையில் நோர்வே பலமுறை அப்பட்டமாகவே ஏகாதிபத்திய சதித்திட்டங்களுக்காக கூடி கதைத்ததும் அனைவரும் அறிய பகிரங்கமானதே. நோர்வே எந்தவிதத்திலும் சுயாதீனமாக தானாக முடிவெடுத்து செயற்படவில்லை.


நோர்வே சுயாதீனமாகவும் தனித்துவமாகவும் மனித நலனை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் அரசியல் நோக்கத்தை, உலகின் ஒவ்வொரு மோதலிலும் செய்வதே நோர்வேயின் உலகமயமாதல் பணியாகவுள்ளது.


இந்த நிலையில் தான் நோர்வேயை நேபாளம் நோக்கி ஏகாதிபத்தியங்கள் நகர்த்துகின்றனர். அதுவும் புலிகளை கையாண்ட அனுபவமும் தேர்ச்சியும் கொண்டவரே, அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை கம்யூனிஸ்ட்டுகள், தமது சொந்த வர்க்க அணுகுமுறையில் அம்பலப்படுத்தும் சர்வதேச நிகழ்ச்சி போக்கை நோக்கி இது நகருகின்றது.


மக்கள் விரோத புலிகள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள்;. கம்ய+னிஸ்ட்டுகள் எதிரியை, எதிரியின் அரசியல் சூழ்ச்சியை மக்கள் பலத்தால் எதிர்கொண்டு, உலகமறிய அம்பலப்படுத்துவார்கள். மக்கள் சக்;தி அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு, நோர்வே உலகமயமாதல் திட்டத்தை அம்பலப்படுத்துவர். அவாகளின் கடந்தகாலத்திய முரணற்ற அணுகுமுறைகள், உலகக் கொள்ளைகாரர்களை தனிமைப்படுத்துவதில் தீர்க்கமான அரசியல் முன்முயற்சியை எடுத்து, அதையும் செய்து முடிப்பார்கள்.

புலிகளும் மாவோயிஸ்ட்டுகளும் ஒரு ஒப்பீடு

இந்தியாவின் மேலும் கீழுமாக இரண்டு நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் நடக்கின்றன. ஒன்று மக்களின் சமூக பொருளாதார நலன்களை உயர்த்தி நடக்கின்றது. மற்றது மக்களை சமூக பொருளாதார நலன்களை மறுத்து அதை வேட்டையாடி நடத்தப்படுகின்றது. இங்கும் இரண்டு தளத்திலும் பேச்சுவார்த்தைகள் முதல், அரசியல் இயக்கம் வரை நடத்தப்படுகின்றன. ஆனால் ஒன்றில் மக்கள் இல்லை, அரசியலில் மக்கள் விரோதப் போக்கு கையாளப்படுகின்றது.


மாவோயிஸ்ட்டுகள் மக்களின் நலனை உயர்த்தி, அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகள் மீது போராடுகின்றனர். சமூக முரண்பாடுகளை ஜனநாயக கோரிக்கைக்குள் உள்ளடக்கியபடி போராடுகின்றனர். இந்தியச் சமூகங்களுக்கேயுரிய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களையும், இந்து பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டங்களையும் கூட ஒருங்கே நடத்துகின்றனர். நேபாள மக்களின் தேசிய அபிலாஷைகளை, மக்களின் சனநாயக வழிகளில் அணிதிரட்டி, அவர்களை தமது சொந்த போராட்டத்தில் அழைத்துச் செல்லுகின்றனர். அந்த மக்களின் உழைப்பைச் சார்ந்து, நில சீர்த்திருத்தங்களையும் அவர்களைக் கொண்டே நடத்துகின்றனர். உண்மையில் இங்கு மக்கள் தமது சமூக பொருளாதார விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி நிற்கின்றனர். அதாவது தமது சொந்த வாழ்வு சார்ந்து, வாழ்வதற்காக மக்களே தமது வாழ்வை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கின்றனர்.


உலகையே சூறையாடி சுரண்டிக் குவிக்கும் ஏகாதிபத்தியத்தை நேபாள மக்களின் எதிரியாக காண்கின்றனர். சொந்த ஆளும் வர்க்கத்தை எதிரியாக காண்கின்றனர். அதாவது மக்களை சுரண்டி சூறையாடி சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி, சமூகத்தின் உழைப்பை சமூகத்துக்கு மறுத்து வாழ்வோருக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர். சுரண்டும் வர்க்கம் தமது சொந்த அதிகாரத்தை தக்கவைக்க கட்டமைத்த சாதியம், ஆணாதிக்கம், இந்துமதம் என சமூகத்தின் பிளவுகளை உருவாக்கும் அனைத்தையும் எதிரியாக காண்கின்றனர். சொந்த வாழ்வு சார்ந்த போராட்டத்தில், அனுபவத்தில் இதை தமது வாழ்வாக கற்றுக் கொள்கின்றனர். விமர்சனம், சுயவிமர்சனத்தை ஆதாரமாக கொள்கின்றனர். மக்கள் வேறு மாவோயிஸ்ட்டுகள் வேறு அல்ல என்ற ஒரு நிலையில், அப்போராட்டம நடக்கின்றது. இதைத் தலைமை தாங்கிச் செல்லும் கம்யூனிஸ்ட்டுகள் எதிரியைத் தனிமைப்படுத்துவதில், எதிரிக்கு எதிராக அனைத்து சக்திகளையும் தம் பின்னாலும், தமக்கு சமமாகவும் அங்கீகரித்து, அவர்களையும் வழிநடத்துகின்றனர். முரண்பாடுகளை பகை முரண்பாடாகா வகையில் நெழிவு சுழிவான வழியில், அரசியலை முன்னிறுத்தி முரண்பாடுகளை கையாள்வதில் மிகவும் நுட்பமாக செயற்படுகின்றனர். தமக்கு எதிர்காலத்தில் எதிரியாக, தம்மை எதிர்க்கும் ஆளும் வர்க்கமாக வரக் கூடியவர்களையும், வர்க்க ரீதியாக அடையாளம் கண்டவர்களைக் கூட, பிரதான எதிரிக்கு எதிராக திருப்பிவிடுவதில் வெற்றி பெற்றுள்ளனர். எதிரி அஞ்சி நடுங்கும் வகையில், இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியான வேட்டுகள் இன்றி பல வெற்றிகளை தொடாச்சியாக சந்திக்கின்றனர்.


சர்வதேச மட்டத்தில் சர்வதேச சமூகங்கள் கூட, நேபாள மாவோயிஸ்ட்டுகளை தாமாகவே முன்னிறுத்தி ஆதரித்து சென்றதை இந்த மே தினம் உணர்த்தியது. உலக மக்கள் நேபாள மக்களின் போராட்டத்தின் பக்கம் தமது உணர்வுபூர்வமான இணைவை வெளிப்படுத்தி வருகின்றனர். நேபாளத்தில் 90 சதவீதமான மக்களின் நன் மதிப்பை, சமூகங்கள்pன் பங்களிப்புடன் கூடிய ஆதரவை வென்றுள்ளனர். இதில் மேலும் முன்னேறிச் செல்லுகின்றனர்.


புலிகளை எடுத்தால் என்னதான் நடக்கின்றது. ஒரு போராட்ட இயக்கம் எதைச் செய்யக் கூடாதோ, அதையே தனது ஆணையில் வைத்துச் செய்கின்றனர். மக்களை தனது சொந்த எதிரியாக, அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் காண்கின்றனர். மக்களை தமக்கு தொல்லை தரும் மந்தைக் கூட்டமாக காண்கின்றனர். மக்களின் அறியாமையில், அவர்களின் அடிமைத்தனத்தில் தமது சுபீட்சம் உண்டு என்று காண்கின்றார்கள். மக்களை சதா பீதியுடன் அணுகி, அவர்களை கண்காணித்தபடி புலிகள் அசைகின்றனர். மக்களில் உள்ளவர்களை இனம் கண்டு, சதா வேட்டையாடுகின்றனர்.. முரண்பாடுகளை பகை முரண்பாடாகவே அணுகி, அதை வேட்டுகளால் மட்டுமே அணுகுகின்றனர். முரண்பாடுகளற்ற சமூகமாக காட்டி, தாம் மட்டுமே அனைத்தும் என்ற அடிப்படையில், ஒரு வன்முறையை கையாளுகின்றனர்.


விமர்சனம் சுயவிமர்சனமற்ற, தமது சொந்த மக்கள் விரோத வக்கிரத்தை கொண்ட தம்மைத் தாம் கவர்ச்சியாக பல்லைக்காட்டி அலங்காரம் செய்கின்றனர். எதிரிகளை புளுத்துப் போகும் வண்ணம், அன்றாடம் பெருக்கியபடி கொலைகள் மூலம் தமது இயக்கத்தை கட்டமைக்கினறனர். சமூகத்தை வெறுத்தொதுக்கி அவர்களை சதா வேட்டையாடுகின்றனர். லும்பன்களாக தாம் மட்டும் வாழ்ந்தபடி, தமக்காக மட்டும் போராடும் இவர்கள், மாபியாத்தனத்தை ஆதாரமாக கொள்கின்றனர். தமது இராணுவத்தையும் அது நடத்தும் தாக்குதலையுமே தேசிய விடுதலைப் போராட்டம் என்கின்றனர். கோடானுகோடி பணத்தைக் கையாளும் ஒரு பணக்கார இயக்கமாகவே புலிகள் உள்ளனர். இதற்கு கிட்ட ஏழை எளிய மக்கள் நெருங்கவே முடியாது. அந்த பணத்தில் இருந்து தமக்குத்தாமே சொகுசான வாழ்க்கை முறையையும், மேற்கத்தைய களவுகளையும், மேற்கத்தைய வாழ்க்கை முறைகளையும் அடிப்படையாக கொண்டு புலித்தலைமை சொகுசாக ஆடம்பரமாக வாழ்கின்றது. அன்னியனுக்கு சேவை செய்யும் பொருளாதாரக் கொள்கைகள், என்று அனைத்து சமூகக் கூறுகளிலும் மக்கள் விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றனர்.


சமூக முரண்பாடுகளின் ஏகப்பிரதிநிதிகளாக, அதை அமுல்படுத்தி பாதுகாப்பதில் வக்கிரம் கொண்டவராகவே அவர்கள் உள்ளனர். மனித விரோத சாதியத்தை பாதுகாப்பதில், அதை உருவாக்கிய இந்து மதத்தை பாதுகாப்பதில், ஆணாதிக்கத்தை பாதுகாத்து பேணுவதில், சுரண்டலை பாதுகாப்பதுடன் அதை தாமே செய்வதிலும் உள்ள அடங்கா வெறியையே தமிழ் தேசியம் என்கின்றனர். மற்றைய இனங்களை எதிரியாக காட்டி, அவர்களை இழிவாடி வேட்டையாடுகின்றனர். சிங்கள மக்களை எதிரியாக, முஸ்லீம் மக்களை அடிமைகளாக இழிவுபடுத்தி வேட்டையாடுவதே தமிழ் தேசியம் என்கின்றனர்.


முரண்பாட்டை கையாள வக்கற்றவர்கள்;. கொலை கொள்ளை மூலம் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆள நினைப்பவர்கள். சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுத்து, தீர்க்க முனைவதை தேசத்துரோகமாக காட்டி, அதன் ஏக பிரதிநிதிகளாக உள்ளவர்கள் புலிகள். ஏகாதிபத்திய விசுவாசிகளாக, அவர்களின் பொருளாதாரக் கொள்கையின் தரகர்களாக, அவர்களின் அரசியல் இராணுவ எடுபிடிகளாக உள்ளனர்.


நேபாள மாவோயிஸ்ட்டுகள் இதில் மாறுபட்ட வகையில் மக்களின் நலனை உயர்த்துபவர்கள். புலிகள் அதையே வேர் அறுத்து மறுப்பவர்கள். தேசியம் என்பது குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவ அடிப்படையிலானது என்றால், அது புதிய ஜனநாயகப் புரட்சியை அடிப்படையாக கொண்டது. இதையே மாவோயிஸ்ட்டுகள் தமது குறைந்தபட்ச திட்டமாக முன்வைத்து போராடுகின்றனர். புலிகள் அதை மறுத்து, முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையைக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக சர்வாதிகாரிகளாக மக்களை அடிமைப்படுத்தி பாசிட்டுகளாக மக்களின் விரோதிகளாகவே உள்ளனர்.

Wednesday, May 3, 2006

இமயத்தில் போர்முரசு !

இமயத்தில் போர்முரசு !

சிறி
03.05.06

லகத்தின் சிகரம் நேபாள நாட்டின் தெருக்களில் தங்களின் சக்தியை தாமே உணர்ந்து கொண்டனர் மக்கள். மன்னராட்சியின் அடக்குமுறைக்கெதிராக வீதிப் போராட்டங்கள் கிளர்ச்சிகள் மறுப்பு இயக்கங்கள் நடாத்தியும் மாவோயிஸ்ட் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் எதேச்சதிகார முடியாட்சி மன்னர் ஞானேந்திராவின் அதிகாரத் திமிருக்கு ஆப்பு வைத்திருக்கின்றார்கள். முடியாட்சியினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் அணிதிரண்ட சக்திகளை அடக்க இராணுவம் ஏவிவிடப்பட்டது. இவ்விராணுவ அடக்குமுறைக்கெதிராக மாவோயிஸ்ட் போராளிகளின் தீரமிக்க மக்கள் படை எதிர்த்துக் களப்போராடியது. நேபாள நாட்டின் கிராமங்களில் செல்வாக்குப் பெற்று வளர்ந்து வரும் மாவோயிசப் போராளிகளின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான உள்ளுர் கிராமங்கள் இருக்கின்றன.


பெருகிவரும் மாவோயிசப் போராளிகளின் பலம் அதன் பின்னால் அணிதிரளும் மக்களினதும் சக்தி ஆகியவற்றைக்கண்டு நேபாளத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் கிலியும் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய அரசம் தங்கள் சகபாடி மன்னர் ஞானேந்திராவுக்கு வழங்கிய ஆலோசனைகளின் பேரில் ஜனநாயக முறைமையிலான பாராளுமன்ற ஆட்சிக்கு " நிறைவேற்று அதிகாரத்தை" தான் கையளிக்க முன்வருவதாக முடியாட்சி மன்னர் அறிவித்திருக்கின்றார். தன்னுடைய முடியைக் காப்பாற்றுவதற்காக சமரசம் என்ற இந்த வழிக்கு அவர் வந்திருப்பது நிச்சயம்.


அணிவகுத்தெழுந்த மக்கள் ஊரடங்கு உத்தரவுகளையும், கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ கெடுபிடி பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளையும் மீறி வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். எதிர் முழக்கமிட்டனர். வீறாப்பான விடாப்பிடியான தங்கள் நடவடிக்கைகள் மூலம் தடைகள் தாண்டியும் போராட்டத்தில் தங்கள் வீரியத்தைக் காட்டினர்.


மாபெரும் மக்கள் போராட்டத்துக்கும், மாவோயிஸ்ட் கெரில்லாக்களின் ஆயுதக் கிளர்ச்சிக்கும் பெருகி வரும் மக்கள் ஆதரவுக்கும் ஆப்பு வைக்கும் முகமாகவும் போராட்டத்தை சிதறடிக்கவென ஏழுகட்சிக் கூட்டணிகளை குறிவைத்தும் மன்னர் செய்த இந்த அறிவிப்பு கபடமானது. சூத்திரதாரிகளாக அமெரிக்காவும் அதன் வாலாக இந்திய அரசும் பின்னணியில் இருக்க இந்த அறிவிப்பு திட்டமிடப்பட்டிருக்கின்றது.


மாவோயிசப் போராளிகள் இந்த அறிவிப்பானது சதியெனவும் தாங்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றார்கள்.


மன்னரின் இவ்வறிவிப்பை வரவேற்ற ஏழு கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைமை இது அரசியல் நிர்ணய சபை நோக்கிய முதலாவது அடியெடுப்பாகும் எனவும் அதன் தொடர்ச்சியாய் அரசியல் யாப்பினை மாற்றியமைக்க வழிவகுக்கும் எனவும் வரவேற்றிருக்கும் அதேவேளை இந்தக் கூட்டணியில் மன்னராட்சி கலைக்கப்படும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்ற நிபந்தனையில் இணைந்திருக்கும் மாவோயிச போராளிகளின் மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசாந்தா இது மக்களை ஏமாற்றி பிளவுபட வைக்கும் சூழ்ச்சி என்றும் அதன் மூலம் முடிக்குரிய ஆட்சியைப் பாதுகாத்து தக்கவைக்கும் சதி எனவும் நேபாள மக்களை நோக்கி அறைகூவல் விடுத்திருக்கின்றார்.


கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஏழு கட்சிக் கூட்டணியில் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி என்ற நிபந்தனையுடன் இணைந்து கொண்ட மாவோயிசப் போராளிகள் மற்றைய கட்சிகளின் இந்த முடிவை ஓப்பந்தத்திற்கு செய்த துரோகம் என சாடியுள்ளார்கள்.


நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(UML) போன்ற கட்சிகளுடன் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 அம்ச கோரிக்கையுடன் இந்தக் கூட்டணிக்குள் நிபந்தனைகளுடன் இணைந்திருக்கின்ற கட்சிகளாகும். இந்த மாவோயிஸ்ட் கம்யூனிசக் கட்சியின் போராளிகள் தான் ஞானேந்திர மன்னரின் இராணுவத்தை கிராமங்களிலிருந்து விரட்டியடித்த மக்கள் விடுதலை இராணுவமாகும். 1996 ஆண்டிலிருந்து தீவிரமடைந்த மாவோயிச போராளிகளின் கெரில்லா ஆயுதப் போராட்டமானது மன்னரின் இந்த அறிவிப்பின் பின்னரும் தொடரும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.


ஏழு கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான நேபாள திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சியின்(UML) (இந்தக் கட்சியானது 1990 களில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தது) தலைவர் குமார் மன்னரின் அறிவிப்பானது ஒரு படி முன்னேற்றமென வரவேற்றிருப்பது இக் கூட்டணிக்குள் குழப்பங்கள் உருவாகுவதற்கான முதலாவது படி என்றும் கூறலாம்.


கூட்டணியிலுள்ள நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற ஆட்சி மீளப்பெறப்பட்டு முடியாட்சிக்குள் ஏகபோக ஆட்சி அதிகாரங்களை மன்னர் கையகப்படுத்துவதற்கு முன்னர் பிரதமர் பதவியில் இருந்தவருமான கிரிஜா பிரசாத் என்பவரை (வயது 83 ) புதிய அரசுக்கான தங்கள் தலைவராக நியமித்திருக்கிறார்கள்.



கிரிஜா பிரசாத் - ஞானேந்திரா


நேபாள தேசமானது தேசிய ஓருமைப்பாடு நிலையான சமாதானம் ஐனநாயகம் என்பனவற்றை நோக்கிய பாதையில் நகரும் என தான் திடமான நம்பிக்கை கொண்டிருப்பதான ஞானேந்திரரது இரவோடிரவான தொலைக்காட்சி அறிக்கைக்கு மாவோயிசக் கட்சியின் மற்றுமோர் தலைவர் பாபுராம் முடியாட்சிக்கலைப்பும் 12 அம்ச கோரிக்கைகளும் முற்றாக நடைமுறையாக்கப்படும் வரை காத்மண்டு மற்றும் ஏனைய நேபாள நாட்டின் பிரதான நகரங்கள் தொடர்ந்தும் முடக்கப்படும் என்றறிவித்திருப்பதானது போராட்டம் ஓயவில்லை என்பதை பறைசாற்றுகிறது.


நேபாள முடியாட்சியினது கொடுங்கோன்மைக்கும் அதன் இராணுவம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடுரமான படுகொலைகள் சித்திரவதைகளுக்கும் மற்றும் காணமற்போனோரின் நீண்ட பட்டியலுக்கும் நேபாள நாட்டிற்கு இராணுவ தளபாடங்களையும் உதவிகளையும் நேரடியாகவே வழங்கி வந்த அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, பெல்ஜியம் பிரான்சு நாடுகளின் ஆயுத தளபாட உதவியானது வலுச்சேர்த்திருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை நேரடியாகவே குற்றம் சாட்டும்(ஒப்புக்கொள்ளும்) அளவுக்கு இந்நாடுகளின் ஜனநாயகக் காவலர் வேசங்கள் அம்பலமாகிப் போய்விட்டிருக்கின்றன.


எலும்புக் குவியல்களின் மேலாவது தமது உலகமயமாதல் சுரண்டும் அதிகாரங்களை நிர்மாணிக்க முடிக்குரிய ஞானேந்திராவின் கொடுங்கோலாட்சியை தூக்கிநிறுத்தும் ஜனநாயகம் இங்கே அம்பலப்பட்டு நிற்கின்றது.


மன்னராட்சி ஆட்டம் கண்டு விழுந்தால் கூட மாவோயிச கொரில்லாக்களை முடக்கி பதிலாக நேபாள காங்கிரஸ் கட்சியையோ அல்லது திருத்தல்வாத நேபாள கம்யூனிசக் கட்சிகளின் கூட்டு அரசாங்கத்தையோ தங்கள் அடியாட்களாக அரசேற ஆவன செய்வதில் இந்தியா அதிக அக்கறை காட்டுகிறது. ஞானேந்திராவின் அம்பலப்பட்டுப் போன முகம் இனி அவர்களுக்கு அதிகம் உதவப் போவதில்லை.


அதனாலேயே தான் இந்திய அமெரிக்க அழுத்தங்கள் ஞானேந்திராவின் மீது செலுத்தப்பட்டன.


இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டையும் மன்னருக்கென இருக்கும் பிரத்தியேக உல்லாச சலுகைகளையும் அபகரித்த சொத்துக்கள் மீதான அதிகாரங்களையும் காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் தெளிவாக நடைபோடும் முடிக் கொடுங்கோன்மை நாளை இவற்றின் ஊடாக மீண்டும் சதிக்கவிழப்புக்கள் செய்வதன் மூலம் அரியாசனக் கதிரைக்கு வரும் திட்டங்களை திரைமறைவில் தீட்டிக் கொண்டிருக்கலாம்.


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் வறுமை நாடுகளில் இரண்டாவதாக வறுமைப்பிடிக்குள் இருக்கும் நேபாள நாடானது இந்தியாவினாலும் அமெரிக்காவினாலும் கேந்திர முக்கியத்துவமான நாடுகளிலொன்றாக கருதப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்திய உபகண்ட தெற்காசிய வியூகப்பார்வைக்குள் நேபாள நாட்டையும் உள்ளடக்குவது அவர்களின் நோக்காகும்.


இமயத்தின் சிகரத்தில் நேபாளம் மாவோயிஸ்டுக்களால் வெற்றி கொள்ளப்படுவதை இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் கொள்ளைக்கார சக்திகள் பார்த்து கைகட்டி நின்று வாழாதிருக்கப்போவதில்லை. சதியும் சமாதானமும் சலுகைகளும் என்று அள்ளி வீசத்தான் போகின்றார்கள். இவற்றைக் கவ்விப் பிடிக்கும் விசுவாச நாய்கள் எங்கும் உள்ளது போல் நேபாளத்திலும் இருக்கவே போகின்றார்கள்.


இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து தங்கள் போராட்டத்தை நிதானமாகவும் அவதானமாகவும் சுயவிமர்சனங்களினூடகவும் செழுமைப்படுத்தி முன்னேறும் இதுவரையான போராட்டத்தின் எதிர்காலம் உறுதி குலையாத அதன் தொடர்ச்சியிலேயே தங்கியிருக்கிருக்கிpன்றது.


இராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டதும் மேலும் 70 பேர் காயமடைந்ததுமான நிகழ்வொன்று தெற்கு நேபாளத்தின் சிற்வான் மாவட்டத்திலுள்ள “Madi” என்னுமிடத்தில் 2005 ம் ஆண்டு யூன் மாதம் ஏழாம் திகதி காலை நேரத்தில் நடந்தது. இதையிட்டு சர்வதேச மன்னிப்புச்சபை மாவோயிசக் கட்சித் தலைமையிடம் பொறுப்பானவர்களை உள்ளக விசாரணைக்குட்படுத்தி பகிரங்க அறிக்கை தருமாறு வலியுறுத்தியது.

இந்தக் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும் தயங்காது நேர்மையுடன் ஏற்றுக்கொண்டு, நடந்த இந்த நிகழ்வுக்கும் பொதுமக்கள் உயிரிழப்புக்கும் தனது ஆழ்ந்த மனவருத்தத்தை தலைமை தெரிவித்திருந்தது. அதற்கான தனது பொறுப்பிலிருந்து வழுவாமல் இத்தாக்குதலில் ஈடுபட்ட தனது அணி மீது முற்று முழுதான விசாரணைக்கும் கடும் நடவடிக்கைகளுக்கும் உத்தரவு இட்டது.



மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா - படம் நன்றி (பி.பி.சி)


மக்களை கவசமாக இராணுவம் பயன்படுத்துகின்ற வேளைகளில் இது போன்ற தவறுகளுக்கான நிலைமைகள் உருவாகுகின்றன என இராணுவத்தின் மீது மட்டும் பழிபோட்டு தப்பித்துக் கொள்வதிலிருந்து தனது தவறுகளை விமர்சனமாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறை சரியான தடவழியாகும்.


நேபாள நாட்டின் முதுகெலும்பாக உள்ள சிறுவிவசாயிகளின் உழைக்கும் மக்களின் வாழ்வின் வறுமைக்கு வகை சொல்லாத சொல்ல முடியாத முடியாட்சிக்கு முட்டுக் கொடுக்கும் ஏகாதிபத்தியத்துக்கான எதிர்ப்பும், தமது எதிர்காலத்தை தாமே சமைக்க ஆயுத பாணிகளாகும் ஏழைக் கிராமங்களின் வறிய விவசாயிகளினதும் உழைப்பாளிகளினதும் போர் முழக்கம் இவ்வளவு சீக்கிரமான வேகத்தில் உலகத்தின் செவிப்பறையை கிழிக்கும் என எதிர்பார்த்திராது மிரளும் அதிகாரவர்க்கங்கள் தங்கள் சதி வேலைகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.


வேறென்ன பாலஸ்தீனம் இலங்கை என்ற வரிசையில் இப்போது நேபாளத்தையும் சேர்த்துக் கொண்டு தனது சமாதான சதிவேலைகளுக்கு நோர்வே தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றது.


நோர்வே அம்பலப்படுமா அல்லது சதி வெற்றிகொள்ளுமா? இது நேபாள நாட்டு போரிடும் மக்கள் கைகளில் தான் தங்கியுள்ளது.


Monday, May 1, 2006

ஒரு பாசிட்டே 'மாமனிதன்" சிவத்தம்பி

சமகால அரசியலில் பச்சோந்தி வேஷம் போட்ட ஒரு பாசிட்டே 'மாமனிதன்" சிவத்தம்பி

பி.இரயாகரன்

01.05.2006


நாம் 'மாமனிதன்" என்று பட்டம் கொடுத்தமைக்காக மன்னிக்க வேண்டும். பட்டம் பதவிக்காகவே அன்றாடம் குலைத்து வாழும் அவரை, இதற்காக நாம் அவரை பெருமைப்பட சிறப்பிப்பது தவறானதல்ல. அவர் ஆசைப்பட்டு கடந்தகாலம் ழுழுக்க கட்டிப் பாதுகாத்து வந்த இந்த அரசியல் இலட்சியக் கனவை, அவர் வாழும் போது கொடுக்க மறுப்பது அவரையே அவதிப்பதாகும். இந்த 'மாமனித"னான பச்சோந்தி தனது சொந்த நிலைக்கு ஏற்ப, அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் வானொலியில், 21.04.2006 அன்று அவர் மக்கள் விரோத பாசிச பேட்டி ஒன்றை வழங்கினார். அதை வீரகேசரி (23.04.2006) மறுபிரசுரம் செய்திருந்தது. இதை முன்னிலைப்படுத்தி புலிகளும், அதை எதிர்த்து புலியெதிர்ப்புக் கும்பல் தேனீயும் ஒரு விமர்சனத்தை முன்னிலைப்படுத்தினர்.


'மாமனிதன்" சிவத்தம்பி "புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்" என்கின்றார். இதை சிவத்தம்பி கூற, அதை புலிகள் முன்னிலைப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிரான, தமது சொந்த அரசியல் நிலையை 'மாமனிதன்" சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிராகவே புலிகள் பயன்படுத்துகின்றனர். உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்களை முன்பு தம்முடன் முரண்பட்ட சில தனிநபர்கள் மேலானதாக காட்டி வந்த புலிகள் வரலாற்றில், முதன் முதலாக 'மாமனிதன்" சிவத்தம்பி அடியெடுத்துக் கொடுக்க, அதை மொத்த தமிழ் மக்கள் மேலானதான குற்றச்சாட்டாக மாற்றியுள்ளனர்.


புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் காரணம் என்பது 'மாமனிதன்" சிவத்தம்பியின் ஆய்வு முடிவு என்பதால், அதை புலிகள் முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துகின்றார்கள் என்பதால், உண்மையில் அவர்கள் கூறமுனைவது தமிழ் மக்களை எதுவுமற்ற வெறும் கேனப்பயல்கள் என்பதைத் தான்;. புலிகள் மீதான தடைக்கு புலிகளே காரணமாக இருக்கின்றனர். இது ஆய்வாளர் 'மாமனிதன்" சிவத்தம்பியின் அறிவுக்கு தெரியாமல் போய்விடுகின்றது. ஆனால் மக்களுக்கு இது மிக நன்றாக தெரிகின்றது. புலிகள் மீதான தடைக்கு, புலிகளின் மக்கள் விரோத செயல்களே குறிப்பான காரணமாக உள்ளது. ஏகாதிபத்தியம் தனது ஏகாதிபத்திய நோக்கில் தடை செய்யும் போது, மக்கள் நலனில் இருந்து அதைச் செய்யவதில்லை என்பது உண்மைதான். ஆனால் தடைக்கான காரணத்தை மக்கள் விரோத செய்லகள் மீது சுமத்துகின்றனர். அவர்கள் உலக மக்களுக்கு பயப்படுவதால், காரணத்தை தடைக்குரியவர்களின் சொந்த நடத்தையில் இருந்தே தேர்ந்தெடுக்கி;ன்றனர். இது பெரும்பாலான நேரங்களில் பொருந்திவிடுவதில்லை. இதனால் ஏகாதிபத்தியம் அம்பலமாகிவிடுகின்றது. ஆனால் புலிகள் விடையத்தில் அப்படி அல்லாது அது பொருந்திப் போய்விடுகின்றது.


இதற்கு மாறாக 'மாமனிதன்" சிவத்தம்பி கூற்றுக்கு கூட, பல்கலைக்கழகத்தில் பாசிட் என்று சிறப்பு பட்டம் கொடுக்கலாம். தமிழர் பரப்புரையை கைப்பற்றி வைத்திருப்பதே புலிகள். இதற்கு வெளியில் யாரும் மூச்சுக் கூட விடவே முடியாது. இதற்கு வெளியில் எல்லாவற்றையும் அழித்து, அவற்றுக்கு துரோக முத்திரை குத்தி அழிப்பது யார்? ஐயா சிவத்தம்பி இதன் மீதான உங்கள் ஆய்வு என்ன? 'என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?" என்று கூறி ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி நடித்து தப்பிவிடாதீர்கள். நீங்கள் அப்பாவிகள் அல்ல. மிக கைதேர்ந்த மக்களுக்கு எதிரான நயவஞ்சகர்கள். நீங்கள் எல்லாம் பாசிசத்தின் தூண்கள். நீங்கள் இல்லாமல் புலிகள் இல்லை. ஏன் கேள்வி கேட்டவர்களும், பதில் சொன்னவர்களும் இந்த அரசியலைத்தான் மறுபடியும் மறுபடியம் செய்கின்றனர். தடைக்குரிய பாசிச அரசியலை பாதுகாத்தபடி, தமிழ்மக்களின் நலன்களுக்கான அனைத்து பாதையையும் அடைத்து வைத்துள்ளனர். அன்று மாணவர்களாகிய நாம் உன்னை பல்கலைகழகத்தில் எதிர்கொண்டு பாசிசத்துடன் உனது கணக்கை நாம் தீர்த்த போது, புலிகள் ஒரு துண்டுப்பிரசுரம் மூலம் அதற்கு பதில் தந்தனர்.


அதில் அவர்கள் மாணவர்களின் கோரிக்கையை சுட்டிக்காட்டி அவர்கள் என்ன கூறுகின்றனர்


'1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்;.


2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்ற கோரிக்கை "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று தமது சொந்த துண்டறிக்கையில் பெருமையுடன் கூறினர். இந்தக் கோரிக்கையை மாணவர்களாகிய நாம் முன்வைத்த போது, நீ மத்தியஸ்தராக வேஷம் கட்டி ஆடியபோது, இந்தக் கோரிக்கையை புலிகளுக்காக நீ ஏற்றுக் கொள்ள மறுத்தாய். இதனால் உனது மத்தியஸ்தத்தை மாணவராகிய நாம் நிராகரித்த போதே, உனதுநிலைக்கு ஆதரவாக "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறி துண்டுப்பிரசுரத்தில் அடித்து அறிவித்தை நீ மறக்கலாம். ஆனால் உனது பாசிசத்தை நாங்கள் மறக்கவில்லை. அந்த பாசிசத்துக்கு பலரை தொடர்ச்சியாக நாம் இழந்தோம், இழக்கின்றோம். இதன் மீது உனக்கு எந்த சூடு சொறணையும் கிடையாது.


இப்படி உனது பாசிசம் மாணவர்களின் போராட்டங்களின் போதே தூக்கில் தொங்கியது. பல்கலைக்கழகத்தை ஏமாற்றி பணம் மோசடி செய்த ஊழல் அதைத் தொடர்ந்து அம்பலமானது. அந்த பணத்தை மீண்டும் பல்கலைகழகத்துக்கு நீ கட்டி பாவமன்னிப்பு பெற்றது மறந்திருக்காது என்று நம்புகின்றேன். மரவள்ளிகட்டை இழுத்தவனுக்கு மரணதண்டனை வழங்கிய ஊழல் ஒழிப்பு தேசியவாதிகள், உங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கவில்லை என்று பல்கலைக்கழக மேடையில் நான் கேட்டேன். (புலிகளின் வதைமுகாமில் இருந்த தப்பிய பின்னான எனது உரையில் இதை தெளிவாக கூறியுள்ளேன். கேட்க - புலிகளில் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைக்கழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை) நீயும் அவர்களும் ஒன்றாக இருந்தீர்கள். பாசிட்டாகவே சமூகத்தை புணர்ந்து அழித்தீர்கள். இன்று மக்களைப் பார்த்து கூட்டாகவே குற்றம் சாட்டுகின்றீர்கள்.


மானம் கெட்டவர்களே! யாழ் மேலாதிக்க வக்கிரத்தில் உங்கள் மேலாண்மை போற்றப்படுவதில் இருந்து நீங்கள் வரலாற்றில் தப்பிவிட முடியாது. வரலாற்றை தீர்மானிப்பவர்கள் லும்பன்கள் அல்ல, மக்களே அதை மறந்து விடாதீர்கள். சமூக இருப்பின் எல்லாக் கூறுகளையும் அழித்தொழித்த பின், உண்மை இது தான் என்று 'மாமனிதன்" சிவத்தம்பி மூலம் புலிகள் வேடிக்கையாகவே கருத்துரைக்கின்றனர். சமூக இருத்தல் எல்லாம் பாசிசமான பின், துணிவுடன் உன்னால் புலம்ப முடிகின்றது. உலகமக்களுக்கு தமிழ் மக்களின் நிலையை கூறுவதற்கும், விளக்குவதற்கும் உரிய அனைத்து சமூகக் கூறுகளையும் கிள்ளியெறிவதே தேசிய அரசியலாகவுள்ளது. சோழ மன்னனின் கொடுங்கோன்மைபற்றி ஆய்வு செய்யும் சிவத்தம்பிக்கு, நிகழ்கால சோழக் கரிகாலனைத் தெரிவதில்லை. யாருக்கு கதை சொல்ல முனைகின்றீர்கள். தனது வாழ்வின் முதிர்வில் கூட உண்மைகளை மக்களுக்கு சொல்ல முடியாத ஒரு பச்சோந்தி ஆய்வாளராக, பகட்டாக ஒரு 'மாமனித" பாசிட்டாக வாழ்வதில் நீங்கள் பெருமைப்படலாம். ஒரு 'மாமனிதன்" பட்டத்துக்காக மக்களின் முதுகிலும் குத்தி துரோகம் செய்வது தான் இவர்களின் அரசியல் பிழைப்புத்தனம்.


இவர் பற்றி விமர்சனம் செய்யும் தேனீ எழுத்தளார் 'அவசரப்பட்டு தனது அடையாளத்தினை தொலைத்த அந்த பேராசிரியர்." என்று அந்த புலியெதிர்ப்பு குஞ்சு அழுகின்றது. நாங்கள் எமது பச்சோந்தி தனத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாம் உங்களை உங்கள் வழியில் கனவு கண்டோம். இப்ப செய்தீட்டிங்களே என்று புலம்பகின்றனர். எதை 'அவசரப்பட்டு" இழந்தார்? எந்த அடையாளத்தை அவர் இழந்தார்? அவரிடம் நீங்கள் நம்பிய அந்த அடையாளம் தான் என்ன? அந்த மக்கள் நலம் தான் என்ன? இன்று, எப்படி ஐயா! அந்த அடையாளத்தை தொலைத்தார்? சிவத்தம்பிக்கு என்ன அடையாளம் உண்டு? விமர்சகரே! அர்ச்சுனனே! அவசரப்படாத அவரின் சமகால அரசியல் மீதான அவரின் ஆய்வு என்ன? உங்கள் ஆய்வு என்ன? ஒரு பச்சோந்திக்குரிய, ஒரு பாசிட்டுக்குரிய அவசரப்படாத புத்திஜீவித்தனம். நழுவி பிதற்றும் கருத்துகள். இது எல்லாம் பாசிசத்துக்கே உதவுகின்றது. அரசியலில் பச்சோந்தியான சிவத்தம்பியின் ஆய்வுகள், கருத்துகள் மனித இனத்தினை விபச்சாரத்துக்கே வழிகாட்டுகின்றது. சிவத்தம்பி செய்வது எல்லாம், தான் மரணமாகினால் 'மாமனித" பரிசை பிரபாகரன் வழங்கவேண்டும் என்ற அற்ப இழிந்து போன நப்பாசையும், புலியல்லாத தளத்தில் தனது கருத்துக்களை இடதுசாரிய வகைப்பட்டதாக காட்டுகின்ற ஒரு அங்கீகாரமே அவரின் கனவாகி வாழ்வாகவுள்ளது. இதை நோக்கி கருத்துக்களை சளையாது முன்வைத்து, அங்குமிங்குமாக வேஷம் காட்டுகின்றார்.


சிவராம் பற்றி எனது கட்டுரைக்கு

'.ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு 'மாமனிதர்" என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது " என்று நான் தலையங்கமிட்டேன். இதே கருத்துப்பட சிவத்தம்பிக்கும் கூறமுடியும்;. ஒரு பாசிச புத்தியீவியாக, புலிகளின் எல்லா மனிதவுரிமை மீறலுக்கும் இசைந்து இணங்கி வாழும் ஒரு புத்திஜீவியாக, சாரைப் பாம்பாக அங்குமிங்கும் நெளிந்து புரண்டு மனித இனத்தை அழிக்க துணைபோனவர் தான் இந்த 'மாமனிதன்" சிவத்தம்பி.


மனிதநேயமற்ற இவர், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கியொடுக்கும் ஒரு புத்திஜீவியாக சமகாலத்தில் வாழ்ந்தபடி, அதற்கு துணை போனவர். மக்களுக்காக வாழும் எந்த சமூக ஆய்வாளனும், உண்மையாக இப்படி வாழமுடியாது. அதைவிட மடிந்து போவது மேல். கடந்தகாலம் பற்றிய ஆய்வுகள் கூட, பல்கலைக்கழக மாணவர்களின் கல்விசார் ஆய்வுகளை சார்ந்து அங்குமிங்கும் திருடியவை தான். இதை சமகாலம் பற்றி அவரின் மதிப்பீடுகள் தெளிவாக அம்பலப்படுத்துகின்றன. அவரின் நூல்கள் ஒடுக்கப்பட்ட வர்க்க சார்பானவையல்ல. மாறாக யாழ் பூர்சுவா கண்ணோட்டம் கொண்டதும், அதிலும் இடது பிரிவைச் சோந்தவைதான்.


இந்த ஆய்வு ஐன்மங்கள் தாம் வாழும் காலத்திலான சமூக நெருக்கடிகள் மீது, படுபிற்போக்கான பாத்திரத்தை வகித்து வருகின்றார்கள். அன்றாடம் சாதாரணமாக நேர்மையாக கருத்துரைப்பவர்கள், என் சாதாரணமாக தமக்குள் உரையாடியவர்கள் கூட உண்மையை உரைத்ததாக கொல்லப்படுகின்றனர். ஆனால் 'மாமனிதன்" சிவத்தம்பி போன்றோர் இடதுசாரி குஞ்சம்கட்டியபடி, எந்த நெருக்கடியுமின்றி அரசியலில் விபச்சாரம் செய்தபடி வாழ்கின்றனர் என்றால், எப்படிப்பட்ட பொறுக்கிகளாக இருக்கமுடியும். மானம்கெட்டு, இழந்து போன தமது வாழ்க்கையில், தாம் நேர்மையாக வாழ்வதாக நடிக்க முனைகின்றனர். தமக்கு சில விமர்சனங்கள் உண்டு என்று குஞ்சம் கட்டி காட்டுவதன் மூலம், தமது பாசிச அரசியல் மூலங்களையே பாதுகாக்க முனைகின்றனர்.


இப்படி அரசியல் பொறுக்கிகளாக வாழ்ந்தபடி இந்த மனித ஐன்மங்கள் 'புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்" என்கின்றனர். எல்லாம் ஒய்ந்த பின்பு மக்களை பார்த்து குற்றம் சாட்டுகின்றனர். என்ன துணிச்சல். மக்களை வாய் பேசமுடியாத ஊமைகளாக்கிய நீங்கள், இன்று மக்களைப் பார்த்து குற்றம் சாட்டுகின்றீர்கள். உங்கள் பாசிச அரசியல் தான் இந்த நிலைமைக்கு காரணம்;. மக்கள் வேறு புலிகள் வேறு என்று உண்மையைக் கூட புரியாத அரை மக்கு, இப்படிக் கூறுகின்றது. உயர்சாதிய யாழ் பூர்சுவா சமூகத்தின் புத்திஜீவியாக, சமூக ஆய்வாளரான உங்கள் சமூக கவுரவங்களை பாதுகாத்துக் கொண்டு, அந்த சமூகத்தின் இழிந்து வாழ்கின்ற மக்களின் மேல் பாசிசத்தின் பாதுகாப்பில் துணிந்து குற்றஞ்சாட்ட முடிகின்றது. மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக நடத்தும் உங்கள் குறுந்தேசியம் தான், அனைத்துக்குமான சமூகக் காரணமாகும். காரணங்களை மக்கள் மீது குற்றம் சுமத்தும் துணிவு, பாசிசத்தின் மற்றொரு வடிவம். கெடுகெட்ட கயவாளிப்பயல்கள் மட்டும்தான் இப்படிக் கூறி குற்றம்சாட்ட முடியும். இந்தநிலைமைக்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அது சுயவிமர்சனம்.


நீங்கள் செய்யதெல்லாம் என்ன என்பதை, இன்று இருந்து கடந்தகாலம் முழுக்க திரும்பிப் பாருங்கள். மக்களுக்காக நீங்கள் குரல் கொடுத்தீர்களா? அதற்காக போராடினீர்களா? அப்படி போராடியது என்ன? என்னதான் இழப்பு உங்களுக்கு ஏற்பட்டது? யாழ் மேட்டுக்குடியாக ஒரு மயிர் கூட புடுங்கப்படாது வாழ்ந்த உங்கள் நரகல் வாழ்க்கை, தமிழ் மக்களின் இரத்தத்தின் மேலாகவே செழித்து வளர்ந்தது. பாரிய குற்றத்தை புலிகள் மட்டுமல்ல, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நீங்களும் அதற்கு பொறுப்பாளிகள் தான். குற்றவாளிகள் அவர்கள் மட்டுமல்ல நீங்களும் தான். நீங்கள் இல்லாமல் அவர்கள் இல்லை.


உங்களைப் போன்ற பாசிசக் கோட்பாட்டு ஆதரவின்றி, அவர்கள் எதையும் செய்யவில்லை. 1987 இல் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் போது நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு, நான்தான் முதலமைச்சார் என்று கனவு கண்டு நீங்கள் பலருக்கும் புலம்பிய போதே, உனது பாசிசத்தின் கோரமுகங்கள் அலங்கோலமாக நெளிந்ததை பலரும் அறிவர். இன்று நீங்கள் துணிந்து மக்களைப் பார்த்து குற்றம் சாட்ட முடிகின்றது என்றால் என்ன துணிச்சல்.


இதை புலிகள் தமது பாசிச செயலை நியாயப்படுத்த, முன்னிலைப்படுத்தி முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றனர். என்ன அரசியல் ஒருமை, ஒற்றுமை. குற்றவாளிகள் எல்லாம் ஒன்றாக கைகோர்த்து நின்று, மக்களை மீண்டும் மீண்டும் எட்டி உதைக்கவே கூட்டாக முனைகின்றனர்.


இப்படி ஒரு பாசிட்டாக தன்னை இனம் காட்டும் 'மாமனிதன்" சிவத்தம்பி 'புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்." என்ன புலிவாதம். அன்று பாசிச கவிஞர் புதுவை இரத்தினதுரை பண 'மதிப்பை" புரிந்து கொள்ளாது, போராட்ட 'மதிப்பை" புரிந்து கொண்ட போது பாடினார்


"..பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல


தாயகம் தீயல் எரிகையில் விட்டு


விமானத்தில் ஏறி பறந்தவர்


வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்


சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்


சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்


விட்டுப் பறந்த கோழைகள் நாளையே


வீடு திரும்பினால் காறியே துப்புவோம்


கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்


கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்


அப்பு ஆச்சியை கவணம் கவணம் என்று


அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்


தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென


தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்


துப்புக் கெட்டவர் அகதி லேபலில்


தூசு தட்டியே காசு பிழைத்தனர்


ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்


எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்


போகட்டும் பாய்விரித்தால் போதும்


படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி


நாய்சாதி ஓடி நக்கில் பிழைக்கட்டும்


தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி


கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும் .."


இப்படி எழுதிய பக்கத்தையே விமானமேறி மேற்கு வந்த போது கைவிட்ட கவிஞர் அதை எப்படிக் கவிழ்க்;கின்றார். "கவிதை எழுதுவதற்காக அந்த நேரத்தில் நான் பெற்றுக் பெற்றுக் கொண்ட மன உணர்வின் வெளிப்பாடு.... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தைத் தந்தது. அதே புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்." என்றார். அன்று 'நக்கி" 'பிழைத்த" 'நாய்சாதி", 'நக்கி"ப் 'பிழைக்க" 'பாய்விரி"த்த விபச்சார பணத்தின் 'மதிப்பு" தெரிந்த பின்னால் கவிதையின் தகட்டையே மாற்றிப் போடுகின்றார்.


இன்று 'மாமனிதன்" சிவத்தம்பியும் அப்படியே கவிஞர் வழியில் அசகுபிசகு பிரதிபலிக்கின்றார். புலம்பெயர் சமூகம் பற்றிய புலித் தலைமையின் இன்றைய 'மதிப்பு" எப்படி உருவானது. புலம்பெயர் தமிழனின் பணத்தில்தான், அவன் பற்றிய 'மதிப்பு" உருவானது. பணம் பல்லிளிக்கும் போது, பேய்களும் சாத்தான்களும் கூட கூடிநின்று விபச்சாரம் செய்கின்றது. என்ன 'மாமனிதன்" சிவத்தம்பி உனக்கு இது விதிவிலக்கல்லவே!


'மாமனிதன்" சிவத்தம்பி கூறுகின்றார் 'உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக - உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்." ஆகா என்ன அருமையான ஆய்வு. ஏழை எளிய குழந்தைகளின் இறப்புக்கு, புலம்பெயர்ந்தவனின் பணம் தான் காரணம் என்பது சொல்லாத மற்றொரு செய்தி. இதை எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டாக புலிகள் வைத்தாலும் ஆச்சரியமல்ல. பேராசிரியர் தகட்டை மாற்றி சொன்னாலும் சொல்வார். புலம்பெயர் தமிழன் புலம்பெயர் நாட்டில் வாழ்வதற்காக யுத்தத்தை பணம் கொடுத்து நடத்தினான் என்று சொன்னாலும் சொல்வார். போகிறபோக்கில் இது நடக்கும். தற்போதைக்கு தேசிய உணர்வு என்பது புலம்பெயர்ந்தவன் பணம் கொடுத்தல் தான் என்பது 'மாமனிதன்" சிவத்தம்பியின் முடிவு.


இந்த பாசிட் தனது ஆய்வில் கூறுகின்றார் 'இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கின்றார். முதிர்ச்சி அடைந்து நிற்கின்றது என்கின்றார் 'மாமனிதன்" சிவத்தம்பி. இறுதி போராட்டம்;, இந்தா தமிழீழம் வரப்போகின்றது, இறுதி யுத்தம்;. என்று காட்டுகின்ற அதே பூச்சாண்டியைத்தான் 'மாமனிதன்" சிவத்தம்பியும் பிரதிபலிக்கின்றார். 'மாமனித"னின் ஆய்வு 'முதிர்வடைந்து" நிற்கின்றது என்கின்றார். அதுவும் 'சர்வதேசத்தின்" முன் நிற்கின்றது என்கின்றார். 'அதைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கின்றார். புலியாகவே சிந்தித்து நுட்பமாக ஒவ்வொரு சொல்லிலும் பிரதிபலிக்கின்றார். அதுசரி யார் இதை புரிந்து கொள்ள வேண்டும்; என்கின்றார்கள்? முட்டாள் மக்களே! உங்களைப் பார்த்து தான் அவர் கூறுகின்றார். என்னைப் போல் புலிகளை நம்புங்கள், விசுவாசியுங்கள் என்கின்றார். இது கிறிஸ்து (கடவுள் பிறக்கவுள்ளார்) வரார், இந்தா வாரார் என்று கூறி, வயிறு வளர்க்க மதம் வளர்க்கும் பிரச்சாரத்தையே அடிப்படையாக கொண்டது. 'மாமனிதன்" சிவத்தம்பி அதையே செய்கின்றார்.


ஐயா 'மாமனித" ஆய்வாளரே, புலிகளும் கூட இப்படித்தானே கூறுகின்றனர். மக்களை மந்தைகளாக இருந்தபடி, இதை புரிந்து கொள்ளக் கூறுகின்றனர். வெறும் முட்டாள் கூட்டமாக, மரமண்டைகளாக இதை ஒப்புவிக்கும் வகையில் எங்கும் இதே புலம்பலே வைக்கப்படுகின்றது. நீங்களும் அதையே வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் குத்தி சொல்ல முனைவது ஏன்? உங்களையே நீங்கள் தேசியப் பற்றாளனாக காட்டி நடிக்கும் இந்த வேஷங்கள் எதற்கு? தமிழ் மக்களின் தேசியத்தை காயடித்துவிட்டு, வேள்விக்கு மக்களை வளர்க்கும் உங்கள் வக்கிரத்தை, மனித இனம் அங்கீகரிக்காது. தேசியம் என்று கூறுவதால், எதுவும் நடந்துவிடாது. 'முதிர்வடைந்து நிற்கின்றது" என்று கூறுவதால் 'சர்வதேசத்தின் முன்" நிற்கின்றது என்று கூறுவதன் மூலம், தமிழ் மக்களை முட்டாளாக்க 'மாமனிதன்" பேராசிரியரின் மண்டை தீவிரமாக முனைகின்றது.


இதை நிறுவமுடியாத அங்கலாய்ப்புடன் கூடிய அரிப்பு ஏற்படுகின்றது. 'தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது." என்றும் புலம்புகின்றார். ஐயா 'சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும்" உள்ளாகி உள்ளது என்கின்றிர்களே, உங்கள் நியாயக் கோட்பாடு என்ன? அதைச் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு ஏன் மூக்கை இழுத்து புலம்பிக் காட்டுகின்றீர்கள். மானம்கெட்ட அரசியல் பிழைப்பு நடத்தும் விபச்சாரம், உங்களுக்கு இந்த வயதிலும் தேவைதானோ? தமிழ் மக்களின் ஒரு துரோகியாக, மக்களையே காட்டிக் கொடுத்த ஒரு எட்டப்பனாக, பதவிக்கும் பட்டத்துக்கும் ஆசைப்பட்டு குலைப்பதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை.


சர்வதேச நியாயக் கோட்பாடுகளை இந்த மனித ஐன்மம் சர்வதேச மனித சமூகத்திடம் இருந்து கண்டு கொள்ளாத ஒரு வலது பாசிட்டாகவே பிரதிபலிக்கின்றார். சர்வதேச ஏகாதிபத்திய கண்ணோட்டம், சர்வதேச நியாயக்கோட்பாடு எதையும் வைப்பதில்லை. இதையே நியாயக் கோட்பாடாக காணும் கண்ணோட்டம், 'மாமனித"ரின் இடதுசாரி வேஷத்தையே நிர்வாணமாக்குகின்றது. புலிகள் என்ற வலதுசாரிய பாசிசத்ததை 'தமிழரின் தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து" என்று கூறி நியாயப்படுத்துகின்ற அரசியல் வக்கிரத்தை பிழைப்புவாதிகள் மட்டும் தான் இப்படி உரைக்கமுடியும்.


'மாமனிதன்" சிவத்தம்பி கூறுகின்றார் 'சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும்." என்கின்றார். வலதுசாரிய பாசிசத்தில் மக்களுக்கான வாழ்வு பற்றி தன்னைப் போல் பேசக் கூடாது என்பதையே, சிவத்தம்பியின் கூற்று கூற முனைகின்றது. சிங்களப் பேரினவாதம் எதை செய்கின்றதோ, அதையே செய்கின்ற அதே அரசியல் வக்கிரம். வலிமை என்கின்றீர்களே, அது என்ன ஐயா? உங்கள் நியாயக் கோட்பாட்டிலே சொல்லுங்களேன். குறைந்த பட்சம் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையைக் கூட, அந்த மக்களுக்கு எமது போராட்டம் அங்கீகரிக்கவில்லை. பின்பு எப்படி ஐயா, வலிமை எங்கிருந்து வரும்? தாயக மக்களிடம், சொந்த வாழ்வின் மீது எந்த வலிமையும் கிடையாது. அவர்களின் தேசிய பொருளாதாரம் அனுதினமும் தேசியம் பேசுபவர்களால் பேரினவாத்துக்கு இணையாகவே அழிக்கப்படுகின்றது.


அது சரி வலிமையுள்ள தாயகத்தில், அதாவது எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் தான் என்ன? அதையாவது அவர்கள் வலிமையுடன் சொல்லுகின்றார்களா? அது என்னவென்று கூட அவர்களுக்கு தெரியுமா? ஆய்வாளரே! 'மாமனித"னே! கூறுங்கள் அதை. 'தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை" என்று உரிமையுடன் அதுவாகி கூறும் நீங்கள், அந்த வலிமைதான் என்ன என்று சொல்லுங்கள். ஒரு தெருப்பொறுக்கியைப் போல் கூறாதீர்கள். ஒரு தெரு ரவுடியைப் போல், வெட்டியும் சுட்டும் போடும் வலிமையைத்தானே, நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.


மக்கள் வலிமையுடன் இருக்கின்றார்களா? பயந்து ஒரு கோழையாக ஊமையாக நசிந்து இழிந்து கிடக்கும் மக்களைப் பார்த்து, அந்த இழிநிலையைத் தான் வலிமை என்கின்றார் 'மாமனிதன்". சரி இந்த மக்கள் தமது போராட்டத்தின் தர்க்க நியாயத்தை புரிந்து இருக்கின்றார்களா? வெட்டியும் சுட்டும் போடுகின்றவர்கள், தேசியத்தை அதன் தர்க்க உள்ளடகத்தைப் புரிந்து இருக்கின்றார்களா? ஒரிரு சொற்களுக்குள் எல்லாவற்றையும் உள்ளடக்கி புணர்ந்து போடுபவர்களை வலிமையானவர்கள் என்கின்றீர்களே, எப்படி ஐயா உங்களாலே இப்படி புணர்ந்து சொல்லமுடிகின்றது! இங்கு வலிமை என்பது வக்கிரமான மக்கள் விரோதத்தில் மட்டும் பிறக்கின்றது. சமூகத்தைவிட்டு விலகிய லும்பன் தளத்தில் தான், இவை வலிமையாக மக்களின் அடிமைத்தனத்தின் மீது கட்டமைக்கப்படுகின்றது. இது கொலை கலாச்சாரத்தில் ஆளுமை பெறுகின்றதே ஒழிய, மக்களை வென்றெடுத்த மக்கள் வலிமையல்ல.


இந்த வலிமையை நியாயப்படுத்தும் 'மாமனிதன்" கூறுகின்றார் 'கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்." என்கின்றார். களை அகற்ற கோருகின்றார். எப்படி ஐயா அது சாத்தியம். 'புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை" என்பது படுகொலைகளால் முடியாது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கை மீது, சமூகத்தை வென்று எடுத்தலில் தங்கியுள்ளது. சமூகம் தானாக தனக்காக போராடுவதில் தங்கியுள்ளது. நீதியானதும் நியாயமானதுமான போராட்டத்தில் யாரும் கொச்சைப்படுத்த முடியாது. யாரும் தவறாக விளக்கிவிடவும் முடியாது. பரப்புரை என்பது நீதி நியாயங்கள் மீது மட்டும் தான் சாத்தியமானது. உண்மையற்ற நியாயமற்ற கொலைகார அரசியலால் சாத்தியமற்றது. எது சாத்தியம் என்றால், உங்களைப் போன்ற பச்சோந்திகளுக்கு பதவிகளும் பட்டங்களும் பரிசுகளும் காத்திருக்கின்றது.


இதற்காகவே அனுதினமும் முக்கால் உறுஞ்சி அலையும் உங்களைப் போன்றோர், நிலைமையை ஆய்வு செய்யும் போது, 'இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்." என்கின்றது. குற்றத்தை சிலரின் மீது போடுகின்ற புலி அரசியலாகவே இது பிரதிபலிக்கின்றது. நாங்கள் காரணமல்ல என்ற வக்கிரம், இங்கு பதவி பட்டங்களின் பின்னால் ஒட்டிக் கொள்ளுகின்றது. 'சில பரப்புரைகள் காரணம்" என்றால், அவை என்ன? அதை புலிகள் செய்யவில்லையா? நீங்கள் அதை ஆதரிக்கவில்லையா? ஐயா மானம் வெட்கத்தை விட்டு, அதையும் சொல்லுங்கள்? உங்கள் அரசியல் போக்கிரித்தனத்தையே இப்படி ஆய்வாக வெளியிடுவது அருவருக்கத்தக்கது. இதற்குள் ஆய்வாளர், பேராசிரியர், என்று மானம் கெட்ட பட்டங்கள் வேறு. இதனுடன் 'மாமனித" பட்டத்துக்கு விடாக்கண்டராக அலையும் துதிபாடித்தனம் வெட்கக்கேடானது.


'புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைப் பலவீனம் எனும் களை" அகற்றக் கோருதல் என்பது, அதாவது பாசிட்டுகளின் மொழியில் களை அகற்றல் என்பது, கொலைக்கலாச்சாரம் தான். காலாகாலமாக தேசத்தில் தமிழ் மண்ணில் களை அகற்ற செய்த பரப்புரை என்பது கொலைகள் தான். இதே போன்று கொலைகளைத்தான் புலம்பெயர் நாட்டில் நடத்தி, களை அகற்றக் கோருகின்றார் 'மாமனிதன்" சிவத்தம்பி. நடத்துங்கள். களை அகற்றல் பல ஆயிரம் உயிர்களை காவு கொண்ட வரலாற்றின் தொடர்ச்சியில் முடிவின்றி தொடருங்கள். அப்போது தமிழீழம் பிறக்கும் என்று சிவத்தம்பி போல் நம்புங்கள்.


இங்கு பரப்புரை செய்வது பற்றி, ஆய்வாளர் சிவத்தம்பி புலிகள் போல் சிந்தித்து தனது வலதுசாரித்தனத்தையே வெளிப்படுத்துகின்றார். 'தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம் - கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள் - பொறியியலாளர்கள் - வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை. தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு." என்கின்றார். அதாவது மக்கள் போராட்டம் பற்றி இழிவாக பார்க்கும் கண்ணோட்டம் இது. மக்கள் தான் போராட வேண்டும் என்பதை மறுக்கும் புலிகள் கோட்பாட்டாளராகவே தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றார். அதை நடைமுறைப்படுத்த புலிகளின் தனிநபர் பயங்கரவாத பாணியில் அதாவது ஒரு கொலைகாரக் கும்பல் போன்று ' எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து ..." செய்யலாம் என்கின்றார்.


படுபிற்போகான மக்கள் விரோத புலிக்கோட்பாடு இது. இங்கு மக்கள் பணம் கொடுத்தால் சரி. மக்கள் பற்றி இந்த 'மாமனித"னுக்கு எந்த அக்கறையும் கிடையாது. நாலு படித்தவர்கள், அதாவது தன்னைப் போன்றவர்கள் நன்கு மக்களை ஏமாற்றத் தெரிந்த அரசியல் பொறுக்கிகள், உலக அரசுகளை ஏமாற்ற முடியும் என்பதே இவரின் விளக்கமாகும். பேரினவாதிகள் அப்படி நாலு பொறுக்கிகளை வைத்திருப்பதாகவும், அதை போல் நாங்களும் பொறுக்க வேண்டும் என்கின்றார் பேராசிரியர். ஒரு நியாயமான போராட்டத்தை நியாயமாக சொல்ல நாலு நாய்கள் தேவையில்லை, மாறாக மக்கள் சொல்வார்கள். மக்களுக்கு எதிரான ஒரு குழுவாக புலிகள் இருப்பதால் இதை நியாயப்படுத்த முடியாது போகின்றது. பதவி வேட்டைகாரர்களும், பட்டத்துக்கு அலைபவர்களும், பொறுக்கித் தின்பவர்களும் புலிகளில் தூண்களாகி நிற்கின்ற ஒரு நிலையில், எப்படித் தான் எமது மக்களின் நியாயமான போராட்டத்தை உலகுக்கு சொல்லமுடியும். சொந்த மக்களுக்கு நியாயத்தை சொல்ல முடியாது மிரளுகின்ற இந்த பச்சோந்திகள், உலகுக்கு சொல்ல என எதுவுமிருப்பதில்லை.


நேர்மையாக மக்கள் நலனை முன்னிறுத்த முடியாது மிரளுகின்ற ஒரு நிலையில் அலட்டுவது தான் நிகழ்கின்றது. இதுவே 'என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?" என்று கூறி நன்றாக நடிக்கின்றீர்கள். ஐயா! புலியின் கீழ்மட்டத்தில் உள்ள ஒருவன் உண்மையிலே ஒரு அப்பாவி தான்;. அவன் விடுதலை என்ற நம்பிக்கையில் வாழ்பவன். ஆனால் உங்களைப் போன்ற படித்த போராசியர்கள், ஆய்வாளர்கள் அப்பாவிகள் அல்ல. கடைந்தெடுத்த சமூக விரோத பாசிச கும்பல்கள் தான் நீங்கள். உங்களுடன் வரலாறும் மக்களும் நிச்சயமாக கணக்குத் தீர்க்கும்.

சிவத்தம்பிக்கு எதிராக தேனீயில் வந்த விமர்சனம், அரசியலற்ற புலியெதிர்ப்பை அடிப்படையாக கொண்டது.

'அவசரப்பட்டு தனது அடையாளத்தினை தொலைத்த அந்த பேராசிரியர்." எனறு கூறும் போதே, சமூக விரோத பொறுக்கி பற்றி பிரமையூட்டப்பட்ட விம்பத்தை, மானசீகமாக வழிபடும் தன்மையே எதிரொலிக்கின்றது. புலியெதிhப்பின் உள்ளடகத்தில் மட்டும் இது எதிர்ப்பாக மாறுகின்றதே ஒழிய, மக்கள் நலனில் இருந்து அரசியல் ரீதியாக இது வெளிவரவில்லை. அவசரப்படமால் இருந்தால், புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் பேராசியருக்கு புலிக்கு நிகராக மற்றொரு பட்டத்தை கொடுத்தே இருப்பார்கள். அதை அவர்கள் எப்படி கொடுத்திருப்பார்கள் என்பதை அதே விமர்சகரே கூறுகின்றார்.


'தமிழ் மொழியின் வரலாறு, தமிழ் மன்னர்களின் வரலாறு, சமய வரலாறு, கலாச்சார தோற்றம், மொழி உருவாக்கம், மாக்ஸ்சிச லெனின்னிசம், மாவோவிசம், பொருளாதார பன்மைத்துவம், உலகமயமாக்கல், கணணியின் அவசியம் என இவைகளில் எதை எடுத்துக்கொண்டாலும் அதனை ஆழமாக அறிந்து கொண்டு அழகாக விரிவுரை நிகழ்த்தக்கூடிய புத்திஜீவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களில் முதன்மையாக உள்ளவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியாகும். எனது மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரியமனிதராக இருப்பவர்." என்கிறார். இப்படிக் கூறுபவர் எப்படி அரசியல் விமர்சனத்தை வைக்க முடியும்;. சிவத்தம்பியின் கருத்துக்கும் மக்களுக்கும் உள்ள உறவு என்ன என்று எப்படி இவர்களால் ஆராய முடியும். மாறாக புலியெதிhப்பில் குளிர்காய்கின்ற கூதல் விமர்சனத்தையே வைக்க முடிகின்றது.


சிவத்தம்பியின் கடந்த இருபது வருடமாக, அதாவது அவரின் சமகாலத்தில் ஆழமான அறிவார்ந்த அழகான அந்த விரிவுரைகள் தான்; என்ன? எதுவுமில்லை. அதற்கு முந்திய 20 ஆண்டுகளில் சாதியப் போராட்டம் முதல் நடந்த இடதுசாரிய போராட்டம் பற்றி அவரின் நிலைப்பாடு தான் என்ன? சமகாலத்தின் மீது வாழாத, வாழ முடியாத ஒட்டுண்ணி இவர்கள்.


எதையும் முன்வைக்க முடியாத கமுக்கப் பேர்வழிகள் மட்டுமின்றி சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள். உங்களைப் போன்றவர்களின் அதாவது நீங்கள் கூறுவது போல் 'மதம், கட்சிகளுக்கு அப்பால்பட்டு தமிழ்மீது ஆர்வம் உடைய இளையசமுதாயம் உங்களிடம் இருக்கும் அறிவாற்றலை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்க"ளின் ஆசானாகும். இங்கு உங்களுக்கும் அந்த கமுக்கப் பேர்வழிக்கும் இடையில் உள்ள முரண்பாடு புலியை ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்பதே ஒழிய அரசியலால் அல்ல. கோட்பாட்டு ரீதியாக அல்ல. உங்கள் அரசியல் பொழுது போக்குக்கு ஏற்ப, அவர் பற்றிய பிரமைகளே உங்களிடம் எஞ்சிக்கிடக்கின்றது. சமூகத்தை பற்றிய விடையங்கள் மக்களின் விடுதலைக்காக அல்ல என்பதை, எவ்வளவு தெளிவாக நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்களோ, அதையே அவரும் கடந்தகாலத்தில் மிக நேர்த்தியாக செய்தவர். சமகாலம் மீது மௌனம் சாதித்த படி ஒரு பாசிட்டாகவே அவர் செயல்பட்டவர்.


அவரின் சமகாலமல்லாத கடந்தகால நிகழ்வுகள் மீதான அவரின் விமர்சனம், பூர்சுவா வர்க்கத்தின் இடதுபிரிவின் அங்கலாய்ப்பை, எமது சமூகத்தின் பலவீனங்கள் மீது நிறுவியவர். உப்புச் சப்பற்ற ஆய்வில், பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் கிடையாது. மனித இனத்துக்கு தெரியாத விடையங்களை புரட்டிப் போட்டு பிரமிப்பை ஏற்படுத்தும் விற்பன்னர். ஒரு மாஐpக்காரன் போல், மக்களின் அறியாமையில் தனது குதிரையை ஒட்டுபவர்.


அதனால் தான் அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த சமூக கொந்தளிப்பான விடையங்கள் மீது மௌனம் சாதிக்கின்றார். பச்சோந்தி போலே மேய்ந்து புலம்புகின்றார். பிற்போக்குவாதிகளுடன் கூடிக் கொள்கின்றார். யாழ் மேட்டுக்குடிகளின் ஆதிக்கம் பெற்ற கருத்தின் பின், தனது சகவாழ்வை, சமகால வாழ்வின் மீது ஒட்டியவர், ஒட்டி வருபவர். மிகவும் அவலம் நிறைந்த சமகாலத்தில் கருத்துச் சொல்ல வக்கற்றவன், எப்படிபட்டவன் என்றால் ஒரு பொறுக்கிதான். அனைத்து விடையத்தின் மீதான அறிவு என்று உங்களைப் போன்றோர் சிபார்சு செய்யும் போது, அதன் விளைவு என்ன. சிவத்தம்பி புலியைப்பற்றி சொன்ன அதே பேட்டிக்கு, ஒத்த ஒரு வினைவுதான் இங்கு உள்ளது. இதையே சிவத்தம்பி பற்றி நீங்கள் சொல்வதன் மூலம் நிகழுகின்றது. பட்டத்தின் கயிறு இடைவெளியின்றி தொங்குவதால், அங்கிருந்து இங்குவரை ஒரு அரசியல் நீட்சியாகவுள்ளது.


உங்கள் அந்த அரசியல் எப்படி ஒருங்கிணைந்துள்ளது எனப் பார்ப்போம்; 'கனேடிய அரசு புலிகளை தடைசெய்வது என எடுத்த முடிவானது ஈழத்தமிழர்களுக்கு எதிராக எடுத்த முடிவல்ல. புலிகளின் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்த முடிவாகும். அவர்களின் அரசியல் படுகொலைகள், மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்காமை, மக்களின் அடிப்படை உரிமைகளில் முதன்மையான வாக்களிக்கும் உரிமையினை மறுத்தல், சிறுவர்களை படையணியில் சேர்ப்பதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுதல், புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டி பணம் சேர்த்தல் போன்ற புலிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக கனேடிய அரசு எடுத்த முடிவே புலிதடைச்சட்டமாகும். கனேடிய அரசின் இந்த முடிவானது ஒரு தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதும் ,உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் முதன்மையான ஜனநாயக போக்கினை கடைப்பிடிக்கும் நாடு கனடா என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல." புலிகளின் தடையை கனடா அரசாங்கம் இப்படி சொல்லி செய்தது என்பதற்கு அப்பால், கனடா ஒரு ஜனநாயக வேஷம் போட்ட ஏகாதிபத்தியம் என்பதையே இது மூடிமறைக்கின்றது. இந்த தடையில் ஏகாதிபத்திய தன்மை இருப்பதை இருவருமே கூட்டாக அரசியல் ரீதியாக மறைக்கின்றனர். சிவத்தம்பியைப் போல் கனடா பற்றிய மிகை மதிப்பீட்டை போலியாக முன்வைக்கின்றது. புலியின் தடைக்கு புலியின் நடத்தைகளை காரணமாக முன்வைக்கின்றது என்றால், அதில் ஏகாதிபத்திய அரசியல் தன்மையை இழப்பதில்லை. புலியின் நடவடிக்கை இதை தாண்டியது என்பதால் மட்டும் தான் உண்மை. புலிகள் மனிதவிரோத நடவடிக்கை இல்லாது, சுரண்டலுக்கு எதிராக ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைத்து, ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தியிருந்தால் கனடா தடை செய்யாதா? இது பற்றி கனடா என்ன நினைக்கும். ஏகாதிபத்திய விசுவாசிகளே! நீங்கள் சிவத்தம்பியை விமர்சிக்க முன், கனடாவின் ஏகாதிபத்திய தன்மைபற்றி தெளிவாக மக்களுக்கு கூறுங்கள்.


நீங்கள் ஏகாதிபத்திய விசுவாசிகள் என்பதால் தான் 'உண்மையில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த புலிகள் மீதான தடையாகும்" என்கின்றீர்கள். ஜனநாயக சக்திக்கு வெற்றி என்று நீங்கள் பீற்றும் புலித் தடை, உண்மையில் மக்களின் வெற்றியல்ல. மக்களின் அடிமைத்தனத்தின் மீதான மற்றொரு அடி. புலிகளின் அடிமைத்தனத்தில் இருந்து, மற்றொரு ஏகாதிபத்தியத்தின் அடிமைச் சின்னம் செதுக்கப்படுகின்றது அவ்வளவே. மக்கள் தமது வெற்றியை சொந்த அதிகாரத்தின் மூலம் மட்டும்தான் சாதிக்க முடியும். ஜனநாயகவாதியின் கடமை அதை எடுத்துச் சொல்வது தான். மாறாக வாலாட்டும் நாய்கள் போல் ஏகாதிபத்தியத்துக்காக புலியைப் பார்த்து குலைப்பதல்ல.


Sunday, April 30, 2006

மே தினம் சொல்லும் செய்தி என்ன?

மே தினம் சொல்லும் செய்தி என்ன?

பி.இரயாகரன்
01.05.2006

து ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய்வு நாள் அல்ல. இது பொழுது போக்கும் களியாட்ட நாள் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வாக்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள். இந்த நாளில் உலக தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள். வேலைநிறுத்தம் செய்த நாள். மூலதனத்தின் குவிப்பை ஒரு நாள் உழைப்பால் மறுத்து அதைக் குறைத்த நாள். மூலதனம் இந்த நாட்களை கண்டு அஞ்சி நடுங்கின நாள்.


மூலதனம் தனது அடக்குமுறை இயந்திரத்தையே தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஏவிவிட்ட நாள். சுதந்திரம், ஜனநாயகத்தை உழைக்கும் வர்க்கத்துக்கு மறுத்த நாள்.


எட்டுமணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோசத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது, அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் நினைவு நாள். அந்த தொழிலாளிகளின் நினைவாக இந்தக் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடத் தொடங்கிய நாள். இத்தினம் உலகெங்கும் உள்ள தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டெழுந்த நாள்.


அன்று போராடி மரணித்த தொழிலாளர்களை நினைத்து, அவர்களின் அரசியல் கோரிக்கையை உலகம் தழுவிய வகையில் போராடக் கற்றுக்கொண்ட போது, மூலதனம் அதை சீரழிக்கும் வகையில், இதை தமது மூலதன நோக்கில் மாற்ற முனைந்தனர். இதை வெறும் பொழுது போக்கு விடுமுறை நாளாக, ஒய்வு நாளாக, களியாட்ட நாளாக காட்டி சிதைக்க முனைந்தனர்.


இதன் மூலம் இந்த நாளை இரண்டாக பிளவுபடுத்திய மூலதனம், தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட உணர்வையே காயடிக்க முனைந்தனர், முனைகின்றனர். எட்டு மணி நேரம் உழைப்பு என்ற அரசியல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக கடந்துள்ள இன்றைய நிலையில், இந்தக் கோரிக்கைகள் பல நாடுகளில் இதுவரை அமுல் செய்யப்படவில்லை.


மறுபுறம் எட்டுமணி நேரம் உழைப்பு என்ற கோரிக்கை முன்வைத்து வென்ற நாடுகளில், இன்று தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து இது மீண்டும் பறிக்கப்படுகின்றது. அதிகரித்த வேலை நேரம் புகுத்தப்படுகின்றது.


இதைச் சட்டம் மூலம், தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத கூலியை வழங்குவதன் மூலம், மேலதிக வேலையை திணிப்பதன் மூலம், எட்டுமணி நேரம் உழைப்பு படிப்படியாக இல்லாது ஒழிக்கின்ற பணியையே, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக உலகமயமாதல் செய்கின்றது.


தொழிலாளி வர்க்கத்தின் மிக மோசமான வாழ்வை மேலும் சீரழித்து, உழைப்பின் திறன் பிழியப்பட்டு, வாழ்வின் சகல அடிப்படையையும் தகர்க்கின்ற வகையில் மூலதனம் மிகவும் கோர முகமெடுத்து நிற்கின்ற தனது உரிமையைத் தான் ஜனநாயகம் என்கின்றது. தனது சுதந்திரம் என்கின்றது. இதைத் தான் மக்கள் ஆட்சி என்கின்றது.


ஆனால் தொழிலாளி வர்க்கம் தனது கோரிக்கையையும், தான் பெற்றதைப் பாதுகாக்கும் போராட்டத்தையும், இழந்த உரிமைகளை மீளப் பெறவும் மே நாளில் மீண்டும் மீண்டும் அரசியல் உணர்வுடன் போராடுகின்றது. இந்த நாளில் நாம் எமது கைகளை உலகத்தொழிலாளி வர்க்கத்துடன் ஒருசேர உயர்த்தி, போராடக் கற்றுக் கொள்வோம். நாம் வர்க்க உணர்வு பெற்றுக் கொள்வோம்.


தொழிலாளர் வர்க்கம் தனது உழைப்பை, அது உருவாக்கும் அனைத்து செல்வத்தையும் தானே நுகர, தானே தனக்கு அதிபதியாக இருக்க, தனது சொந்த அதிகாரத்தை நிறுவும் நாளாக முன்னிறுத்தி, அதை நோக்கி நாம் போராடக் கற்றுக்கொள்வோம். இந்த அறைகூவலை உங்களுக்கு தோழமையுடன் விடுக்கின்றோம்.


எமது புரட்சிகர மேதின வாழ்த்துகள்