தமிழ் அரங்கம்

Saturday, January 10, 2009

புலிகள் படுகொலை செய்த யாழ்பல்கலைகழக மாணவன் விமலேஸ்வரின் உரை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)

ஊடக சுதந்திரத்தையே நக்கித் தின்னும், தமிழ் ஊடகவியல்

மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு செரிக்கிறவர்கள் இவர்கள்.

இந்த மானக்கேட்டை தொழிலாக செய்வதைவிட, மனிதனாக உழைத்து வாழலாம். மக்களை ஏமாற்றி அதை நக்கித் தின்பதையே தொழிலாக கொண்டு, நீங்கள் செய்யும் ஊடகவியல் 'சுதந்திரம்" மொத்தத்தில் மோசடி நிறைந்தது. செய்திகளை மூடிமுறைத்தும், திரித்தும், கற்பனையில் புனைந்தும், மக்களை ஏமாற்றுகின்ற மோசடியை செய்வதில் தமிழ் ஊடகவியல் கைதேர்ந்தது.

இதற்கு மாறானது சிங்கள ஊடகவியல். இலங்கையில் சிங்கள ஊடகவியல் வெளிப்படுத்தும் சுதந்திர உணர்வோ, தமிழ் ஊடகவியலிடம் கிடையாது. பொதுவாக சிங்கள பாசிச அரச இயந்திரத்தை குற்றம்சாட்டி பேசும் 'சுதந்திர" தமிழ் ஊடகவியல், உண்மையில் தமிழ் பாசிசத்தை சீவி முடித்து சிங்காரித்து விடுகின்றது. இப்படி புலிகளைச் சுற்றி கூடாரம் அடித்து, அவர்களுக்கு ஏற்ப குலைப்பதையே தம் ஊடாக தர்மமாக கொண்டிருந்தனர். இதைத் தாண்டி யாரும், உண்மைகளை மக்களுக்கு சொன்னதில்லை.

தேசியம் என்ற கொப்பை பிடித்துக்கொண்டு தொங்கிய இவர்கள், பாசிசத்துடன் சேர்ந்து அடிமரத்தையே வெட்டிக் கொண்டிருந்தனர். இதையே ஊடகவியல் என்றனர். தேசியத்தின் பெயரில் மனித அறநெறிகளை எல்லாம் மறுத்து நின்ற எம்மண்ணில், தமிழ் ஊடகவியல் மனித...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம்!

ஓசூர்சிப்காட் பகுதியில், பேடர்பள்ளி அருகே டி.வி.எஸ். நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ராஜ்சிரியா என்ற ஆலை உள்ளது. இவ்வாலையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு கூட வேலை நிரந்தரமோ, அடையாள அட்டையோ, சட்டரீதியான சலுகைகள்உரிமைகளோ கிடையாது. எவ்வித உரிமைகளுமின்றி தொழிலாளிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டி, இவ்வாலை இன்று 4 பிரிவுகளைக் கொண்ட பெரிய ஆலையாக வளர்ந்துள்ளது.

இவ்வாலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று கொதிகலனில்(பாய்லர்) தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் பேரொலியுடன் கொதிகலன் வெடித்துச் சிதறி, அருகே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளிகளின் உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. நாகவேணி என்ற பெண் தொழிலாளி அலறியபடியே, உடலெங்கும் தீப்பற்றியெரிய ஆலைக்கு வெளியே ஓடிவந்து விழுந்து துடித்தார். இந்த விபத்தினால் ஆலையின் மேற்கூரையே பிய்த்தெறியப்பட்டுள்ளதால், இங்கு வேலை செய்த தமிழ் தெரியாத அசாமிய, கன்னட கூலித் தொழிலாளிகளின் நிலைமை என்னவானது என்றே தெரியவில்லை.

இவ்விபத்தையே மூடிமறைக்க எத்தணித்த நிர்வாகம், தீயணைப்பு வண்டி வந்தபோது, குற்றுயிராகக் கிடந்த தொழிலாளிகளை கழிவறைக்குள் அடைத்து வைத்தது. பின்னர், தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து, வேறெந்த மருத்துவநிவாரண உதவியுமின்றி வேலையிலிருந்து விரட்டியடித்தது. படுகாயமடைந்த நாகவேணி, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் ஆலை நிர்வாகத்துடன் சண்டையிட்ட பின்னர், அவரை பெங்களூ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 9, 2009

1986 இல் புலிக்கு எதிராக போராடிய யாழ்பல்கலைகழகம் (உரை) பாகம் : 1

இதில் பேசியவர்கள் சிலர் பின் கொல்லப்பட்டனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)

கோயபல்ஸ்சின் சீடன்தான், பேரினவாத அரசின் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய

பேரினவாத பாசிசமோ புலிப் பாசிசத்தை உச்சிக் காட்டுகின்றது. தனது இனவெறி பாசிச குற்றங்களை எல்லாம் புலியின் மேல் போட்டுத் தப்பிக்க முனைகின்றது. புலிப் பாசிசம் இழைக்க கூடிய குற்றங்களை எல்லாம், தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாத பாசிசம் இயங்குகின்றது. தனது குற்றங்களை மூடிமறைத்தும், தமது குற்றங்களை புலியின் செயலாக திரித்தும் அல்லது ஒப்பீட்டளவில் தமது குற்றம் குற்றத்தன்மை குறைந்ததாக காட்டவும் முனைகின்றது.

இதைச் செய்ய கைதேர்ந்த பாசிச பேச்சாளர்களை முன்னிறுத்துகின்றது. இதன் மூலம் அனைத்தையும் தமக்கு சாதகமாக திரித்து புரட்டுகின்ற, அரசியல் சகுனிகளைக் கொண்டு பேரினவாதப் பிரச்சாரம் இயங்குகின்றது.

எங்கும் பாசிச பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. இனப்பிரச்சனையைத் தீர்க்க போவதாக காட்ட, ஒரு குழு. பத்திரிகைத்துறையை அடித்து நொருக்கியபடி, அதற்;கும் கண்டனம். இனத்தின் மேலான வெற்றியல்ல இது என்று கூறியபடி, வெடியை வாங்கிக் கொடுத்து வெற்றியைக் கொண்டாடும் போக்கிரித்தனம். கொலை, கப்பம், கடத்தல் இதை புலியெழிப்பாக நடத்தியபடி, அதற்கு கண்டனம். கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மக்களின் கையில் சிங்கக்கொடியைக் கொடுத்து ஊர்வலம் விடும் ஜனநாயகம். பாசிசத்தை மூடிமறைக்க, அரசியலே கோமாளித்தனமாகின்றது. இப்படி இந்தப் பேரினவாத பாசிசம் செயலூக்கமுள்ளதாக, அனைத்தையும் திரித்துப் புரட்டுவதாக உள்ளது. மக்களை அடக்கியொடுக்குவதில் கூட, அது தனித்திறன் பெறுகின்றது. இதன் முன் புலிகள் நிலைதடுமாறி வீழ்கின்றனர்.

உண்மையில் புலிகளின் தவறுகள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு

"நாங்கள் தினந்தோறும் இறக்கிறோம்'' — மும்பய் தாஜ் விடுதியில் பதுங்கியிருந்த முசுலீம் தீவிரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியா டி.வி., இம்ரான் பாபர் என்ற தீவிரவாதியிடம் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியபொழுது, "நீ சுற்றி வளைக்கப்பட்டு விட்டாய்; சரணடையவில்லை என்றால் கண்டிப்பாக இறந்து விடுவாய்'' எனக் கூறியதற்கு நாங்கள் தினந்தோறும் இறப்பதாகப் பதில் அளித்தாராம்.

இந்தத் தொலைபேசி உரையாடல் அந்தத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலி/ஒளிபரப்பப்பட்டது. இந்த உரையாடல் உண்மையிலேயே நடந்ததா, அல்லது அந்த டி.வி., தனது வர்த்தக நோக்கங்களுக்காக "செட்டப்'' செய்ததா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஆயினும், காசுமீரில், ஆப்கானில், ஈராக்கில் முசுலீம்கள் அன்றாடம் கொசுக்களைப் போல, இந்தியாவால், அமெரிக்காவால், பாகிஸ்தானால், "நேடோ'' படைகளால் கொல்லப்படுவதை யாரும் சந்தேகிக்க முடியாது.

இந்த மரணங்கள் நமது நாட்டு மேன்மக்களின் மனசாட்சியை ஒருபோதும் உலுக்கியது கிடையாது. இந்த முசுலீம்களின் மரணங்களை விட்டு விடுங்கள். காங்கிரசு கூட்டணி பதவியேற்ற பிறகு, கடந்த நாலரை ஆண்டுகளில் இந்தியாவில் 25,000 குண்டு வெடிப்புகள் நடந்திருப்பதாகவும், அதில் 7,000 அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் நடந்த 36,259 குண்டுவெடிப்புகளில் 11,714 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Thursday, January 8, 2009

முறிந்த பனை என்ற நூலில் : விடுதலைப் புலிவதைமுகாமில் இருந்து தப்பி

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்னொரு அரசியல் வேலை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அம்பலமாயிற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆனால் சிறு தொகையினருக்கே தெரிந்த விவகாரம் என்னவெனில், பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டமையாகும். அந்த மாணவன் பொது நல விடயங்களில் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் 1986 நவம்பரில் காணாமற் போன விஜிதரனின் விவகாரத்தில் நடவடிக்கைக்குழு உறுப்பினராகப் பங்குபற்றினான். றயாகரன் சிறு மார்க்ஸியக் குழுவான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று, விடுதலைப்புலிகள் இயக்கம் அவர் மீது சந்தேகப்பட்டமையே அவரைக் கடத்திச் சென்றமைக்கு உண்மையான காரணமெனப் பின்னர் அம்பலமானது. பொறியலாளரான திரு. விஸ்வானந்ததேவனே அவ் மாhக்ஸியக் குழுவின் தலைவர் ஆவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். அவர் கடந்த இரண்டாண்டுகளாக காணமற் போய்விட்டார். .....றயாகரனைக் கடத்திச் சென்ற போது, நெல்லியடியில் விஸ்வானந்ததேவனின் 70 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார். அவரது வீட்டுக்காணி நிலமும் தோண்டப்பட்டது. விடுதலைப்புலிகள் றயாகரனை தடுத்து வைக்கப்பட்டிருந்ததை மறுதலித்தனர். இதனால் மிகமோசமான முடிவு ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. அதி உற்சாகமும், திறமையும் வாய்ந்த றயாகரன் யூலை ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறைவைப்பிலிருந்து தப்பிவிட்டார். 1987 ஜீலை 17ம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசி, தனக்கு எதுவி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகள் கெரில்லா அமைப்பாக கூட நீடிக்க முடியாது.

.........புலிகள் நீடிப்பார்கள், கெரில்லா அணியாக மாறுவார்கள். தொடர்ந்தும் சண்டை நடக்கும். அடர்காட்டில் இருந்து தப்பிப் பிழைப்பார்கள். இப்படி குருட்டு அனுமானங்களுடன் பல்வேறு முடிவுகளையும் அபிப்பிராயங்களையும் பிரகடனம் செய்கின்றனர். பிழைப்புவாதிகள் முதல் 'சுதந்திர" ஊடகவியல் பேசும் பச்சோந்திகள் வரை இதில் அடங்கும்;. உண்மைக்காக போராடுவது, மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது அருகிவிடும் போது, ஆய்வுகளும் அனுமானங்களும் கூட குறுகிவிடுகின்றது.

இப்படி இவர்கள் கூறும் காரணங்களாக அவர்கள் கண்டுபிடிப்பதில் முக்கிமானது, தமிழ் மக்களின் பிரச்சனையை இந்த அரசு தீர்க்காது என்ற அனுமானம் தான்.

இந்த பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காது என்பது உண்மைதான்;. இதனால் மட்டும் புலிகள் நீடித்து இருக்கமுடியும் என்று, எப்படி கூறமுடியும்!? புலிகள் நீடித்து இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றனரா? இந்தக் கேள்வியை யாரும் எழுப்புவது கிடையாது. புலிகளை ஏன் எதற்காக தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும்?

மறுபக்கத்தில் இன்றும் தான், தமிழ் மக்கள் பிரச்சனையை இந்த அரசு தீர்க்கவில்லை. இதை தீர்க்காது என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும். துரோகத்தையே இன்று தொழிலாக கொண்ட கும்பலுக்கும் கூட இது தெரியும். இப்படி இருந்தும், புலிகளை மக்கள் ஏன் தோற்கடிக்கின்றனர்? இதை விட புலிக்கு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, January 7, 2009

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர்.

இதை மூடிமறைக்க ஆர்ப்பாட்டமான பேச்சுகள், பொய்கள், நிச்சயமற்ற உளறல், தடுமாற்றம், குழப்பம், தெளிவற்ற பிதற்றல், இதுவே மனித அறிவாகியது. இவை கடமைகளுள்ள உரிமைகளையும், உரிமைகளுள்ள கடமைகளையும் இழந்த மக்கள் முன், (புலித்) தேசியமாகியது.

திட்டம் கிடையாது, நோக்கம் கிடையாது. மக்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. துவக்கெடுத்தவர்களும், சுட்டவர்களும், கடத்தல்காரர்களும், கொலைகாரர்களும் கதாநாயகர்களாகி, விடுதலையின் பெயரில் ஒரு இனத்தையே அழித்துவிட்டனர். புலிகள் மட்டுமல்ல, இன்று அரசின் பின் மண்டியிட்டு தொழும் தொழுநோய்க்காரர்கள் அனைவரும் இந்தப் பாதையில் தான் பவனிவந்தவர்கள்.

மக்களோ தம் வரலாற்றை தாங்கள் விரும்பியவாறு உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் விரும்பியவாறு எல்லா நேரமும், வரலாற்றை உருவாக்க முடிவதில்லை. மக்களின் அறியாமை, அவர்களின் விழிப்புணர்வற்ற தன்மை, செயலற்ற தன்மை, அவர்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் எல்லாம் கேலிக்கூத்தாகி, மனித வரலாறே துன்பவியலாக மாறிவிடுகின்றது. மக்களை மந்தைகளாக மாற்றி, அவர்களை தம் அதிகாரத்தின் கொலுசில் கட்டி விடமுனைகின்றனர்.

மக்களின் பெயரில் சில.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, January 6, 2009

ஈழப்போரட்டத்தை புரிந்துகொள்ள உதலும் 6 நூல்கள்

இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க (புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடூமைகளைளின் உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை.


ஈழத்தமிழரின் இன்றைய அவல நிலைமைக்கு சிங்கள பேரினவாதம் மட்டும் காரணமல்ல. மாறாக பேரினவாதத்தை எதிர்த்து போராடியதாக கூறிய குறந்தேசிய புலிகளும், எப்படி காரணமாக இருந்தனர் என்பதை இந்த நூல்கள் ஊடாக நாம் புரிந்து கொள்ளமுடியும்.


ஒரு போராட்டம் மக்கள் போராட்டமாக முன்னனெடுக்காத வரை, எந்தளவுக்குத்தான் ஈழத் தமிழருக்கு தர்மீக ஆதாரவை தமிழர்கள் வழங்கினாலும், அது ஈழத்தமிழருக்கு பயன்படுவதில்லை. இவைகள் ஏன் என்பதை; புரிந்துகொள்ளவும், இந்த நூலாசியரின் பல நூல்கள் உதவுகின்றது.
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 - 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும் பெற முடியும்.
கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை - 600 002.தொலைபேசி: 044 - ௨௮௪௧௨௩௬௭

௧. இரக்கமற்ற கோழைகளின் அரசியலும் மனித அவலாங்களும்
முன்னுரை


அவலமும் துயரமும் நிறைந்த ஒரு சமூகம்தான் தமிழ் இனம். இன்று எனது தமிழ் சமூகத்தின் இருப்பபே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம் ப pகையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றிசிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது.இந்தப் போக்கினை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் இது. பல்வேறு மனித அவலங்களை ஒருங்கே பேச முனைகின்ற இந்த நூல், உங்களுடன் இதைபற்றி உரையாடமுனைகின்றது.

சிங்களப் பேரினவாதிகளும், புலிகளும், புலியல்லாத அரசு சார்பு குழுக்களும், தமிழ் மக்களை இரக்கமற்ற வகையில் தமது அடிமைகளாகவே நடத்துக்கின்றனர். மக்கள் அந்த கொடூரத்தை எதிர்கொள்ள முடியாது, அடங்கி ஒடுங்கி கைகட்டி நிற்கின்றனர். இப்படி இருத்தல் தான், தமிழ் மக்களுக்கு அழகு என்று பரஸ்பரம்கூறிக்கொள்கின்றனர்.

இதை மீறி எதையும் ஆக்கப+ர்வமாகச் செய்யமுடியாது. அவை செய்யக்கூடாத ஒன்று. இப்படி எதையும் இவர்கள் அனுமதிப்ப தில்லை. இது மீறப்படும் போது, காணமல் போதல், கடத்தல், படுகொலை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. காலத்துக்கு காலம், இப்படி மாறி மாறி, தமிழ் இனத்தையே அழித்து சிதைத்து வந்தனர்,வருகின்றனர்.

இந்த மனித துயரத்தை மனதால் நினைத்துப் பார்க்க முடியாது. இதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு இந்த துயரம் கொடூமையானது, கொடூரமானது. அன்றாடம் இதை வாழ்வாகஅனுபவிப்பவன் படுகின்ற வேதனைகள், படு பயங்கரமானவை. உரிமையை கோரிய சமூகம், இன்று வாழ்வையே பறிகொடுத்து நிற்கின்ற பரிதாபம். சின்னச் சின்ன அற்ப உணர்வுகளைக் கூட, துயரம் நிறைந்த வாழ்வாக அனுபவிக்கின்ற ஒரு இனமாக தமிழினம் சிதைந்துவிட்டது. சாதாரணமான வாழ்வைக் கூட இயல்பாகவாழமுடியாத வகையில், மக்கள் விரோத சக்திகளின் கொடூரமான நடத்தைகள் செயல்கள் பதிலளிக்கின்றன.இதனால் குடும்ப உறுபினர்களை இழந்து புலம்பும் குழந்தை, மனைவி, தாய். இப்படி பல உறவு சார்ந்த சமூகச் சிதைவுகள். அவர்களின் சொந்த அன்றாட வாழ்கையில் தொடரும் பற்பல சோகங்கள். இதை அற்பத்தனமாகவே எடுத்து, கண்டும் காணமல் விட்டுவிடுகின்ற புறக்கணிப்புகள். மனித உணர்வுகள் மீது, உணர்ச்சியற்று கல்லாகிப் போன சமூகத் தன்மை. இதில் கணவனை இழக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும், மனித உணர்ச்சியும் உணர்வும் சார்ந்த பாலியல் நெருக்கடிகள். சமூகத்தில் இதை கண்டு கொள்ளாத அசாமந்தமான வக்கிரமானபோக்குகள். ஒழுக்கமென்ற பெயரில், சமூக அதிகாரம் கொண்ட அதிகார மையங்கள். இப்படி எண்ணற்ற உளவியல் சார்ந்த, மனம் சார்ந்த மனித துயரங்கள். கண்ணுக்கு புலனாகாத வகையில், சமூகத்தினுள் சீழ் பிடித்து நாறுகின்றது.

இதன் மேல்தான் ஜனநாயகம் தேசியம் என்று, ஒன்றையொன்று எதிராக நிறுத்தியபடி அரசியல் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் மூச்சுக்கு மூச்சு மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகின்றனர். இந்த நூல் இதை அம்பலப்படுத்துவதுடன், சாதாரண மனிதனின் உள்ளடத்துடன் உணர்வுடன் நின்று பேச முற்படுகின்றது.இப்படி மனித அவலங்களை பற்றி, மக்களுடன் பேச முற்படுகின்றது இந்த நூல். நாம் தீர்வாக ஒன்றை மட்டுமே கூற முற்படுகின்றோம்.

நாங்கள் வாழ்வில் உணர்கின்ற எங்களது பிரச்சனைக்கு, ஒரு தீர்வைத் தேடி நாங்கள் போராடாத வரை, மாற்று தீர்வு என எதுவும் எமக்கு கிடைக்கப்போவதில்லை. எப்படிப் போராடுவது என்பது கூட, நாம் எமது சொந்த சூழல் சார்ந்து கற்றுக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது. இதைவிட மாற்று எதையும், யாரும் தங்கத்தட்டில்ஏந்தி வந்து தரப்போவதில்லை.
2.மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!
முன்னுரை
சமகாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு மனிதவிரோதசெயல்கள் மீதான ஒரு தொகுப்பு நூல் இது. மனிதத்தை நோக்கியும், மனிதத்தை நேசித்தலை நோக்கி முன்னேறுதல் என்பது அன்றாடம் அடிசறுக்குகின்றது. அதுவென்னவென்று கேட்கின்ற அளவுக்கு, அது அர்த்தமிழந்த ஒன்றாக பல்லிளித்து நிற்கின்றது. நாள்தோறும் மனிதனுக்கு எதிரான புதிய சதிகள், திட்டங்கள். பாவம் தமிழ்பேசும் மக்கள். மனிதனுக்கு எதிரான நிலைகளில், நிலைமைகளில் அன்றாடம் நடக்கும் அதிரடி மாற்றங்கள், அதிர்வுகள். அவற்றில் சிலவற்றை இந்த நூல் மூலம் உங்களுடன் பேச முனைகின்றேன்.
சமாதானம், அமைதி தொடங்கிய பின், ஒன்று இரண்டு என்று தொடங்கிய தொடர் கொலைகள், இன்று அன்றாடம் இரட்டை இலக்கத்தை எட்டி நிற்கின்றது. பலர் திடீர் திடீரென காணாமல் போகின்றனர். ஏன், எதற்கு காணாமல் போகின்றனர், கடத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்று யாருமே புரிந்துகொள்ள முடியாத வகையில் அவை தொடருகின்றன. இதை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தபடி ஆதரிப்பதே, ஒவ்வொரு அரசியல் எதிர் தரப்பினரதும் அன்றாட அரசியலாக உள்ளது. இந்த மனித அவலங்களை இட்டு அக்கறைப்படுவது கூட கிடையாது. கொலை, கொள்ளை, கடத்தல், இதுவே தமிழ் மக்களின் உரிமையுடன்தொடர்பானதாக காட்ட முனைகின்றனர். இதற்குள் பிரிவுகளும், பிளவுகளும், கோட்பாடு சார்ந்து நிகழ்கின்றது.

மக்களின் நலனை எட்டி உதைத்து கொள்வது முதல், மக்களின் எதிரிகளுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதே அரசியலாகி, அதை நியாயப்படுத்துவதே அரசியலாகிவிட்டது என்ற நிலை. மக்கள் நலனைக் கோரினால், அது பலருக்கு ஆச்சரியமான விடயமாகிவிடுகின்றது. விசித்திரமான மனிதனைப் பார்ப்பது போல் பார்க்கின்றனர். இது புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத தரப்பு நிலையும் இதுதான். இப்படி இரண்டு தரப்பு பாசிஸ்ட்டுகளுக்கு இது ஆச்சரியமாக அல்லாமல் எப்படித்தான் இருக்கும் எங்கும் எதிலும் பாசிசம. அவர்களின் நடைமுறை முதல் கொள்கை கோட்பாடு அனைத்தும் பாசிசமாகிவிட்டது. பேரினவாதம் இதன் கீழ் தான் பலமடைகின்றது. தனது பாசிச நடத்தையை செங்கோலாக காட்டி, அதையே ஜனநாயகமென்கின்றது. சமாதானம், அமைதி, தீர்வு என்று போடும் அரசியல் வேஷங்கள் எல்லாம் அலங்கோலமாகி நிற்கின்றது.

இதில் உள்ள 28 கட்டுரைகள், இதன் ஒருபகுதியை உங்கள் முன் அம்பலமாக்குகின்றது. இவை http://www.blogger.com/undefined என்ற இணையத்தில் அன்றாடம் வெளியாகியவற்றில் ஒரு பகுதிதான்.சமூகத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், இக்கட்டுரைகள் வழிகாட்டும் என்று நம்புகின்றோம்.
பி. இரயாகரன்.25.02.௨௦௦௭
முன்னுரை

இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது, சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே, மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.

இதற்கு நேர்மாறாக யாரும் கற்பனை செய்ய முடியாத, ஒரு பாரிய மாற்றம் ஒன்று நடந்து முடிந்து விட்டது. உண்மையில் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், அதன் விளைவுகளையும்; யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. உண்மையில் என்றைக்கும் இல்லாத ஒரு மாற்றம் நடந்து முடிந்துவிட்டது. இலங்கை அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் எந்த சக்தியாலும், மீண்டு வரமுடியாத ஒரு மாற்றம் நடந்துவிட்டது. உதாரணமாக நாட்டில் பொது கக்கூஸ் கட்டக் கூட ஏகாதிபத்தியங்களின் உதவி அவசியமாகிவிட்டது. யுத்த சிதைவில் இருந்தது மீள உலகவங்கியின் அனுமதி ஒவ்வொருத் துறைக்கும் கெஞ்சிக் கேட்க வேண்டிய நிலையுள்ளது. வடக்கு - கிழக்கில் யுத்தம் சிதைத்த வீடுகளைப் புனரமைக்க நஷ்டஈடு கொடுப்பதற்காக, ஒரு வீட்டுக்கு 75 ஆயிரம் ரூபாவை உலகவங்கி வழங்க அனுமதித்தது. இது போதாது என்று கூறி உலக வங்கியிடம் கெஞ்சிய நிலையில், அதை 1,10,000; ரூபாவாக உயர்த்த உலக வங்கி இணக்கம் தெரிவித்ததை பெருமையாக அறிவிக்கின்றனர். இந்த வகையில் வடக்கு - கிழக்கில் மூன்று லட்சம் வீடுகளைப் புனரமைக்கும் திட்டம் ஒன்று, உலக வங்கியின் நிதியுடன் அனுமதி பெறப்பட்டுள்ளது. மார்ச் 2004-ல் வெளியான மற்றொரு அறிக்கையில் 2500 ரூபாவுக்கு குறைவான வருமானம் உடைய, 1983-க்கு பின் யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு வீடுகளை அமைத்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவை ஒன்றும் கற்பனை அல்ல.

இதில் உலக வங்கிக்கு என்ன சமூக அக்கறை? கடந்த இரண்டு வருடமாக சாதாரண பத்திரிக்கைச் செய்தியில் இருந்து, மிகக் குறைந்தபட்ச தரவுகளை அடிப்படையாக கொண்டு, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக ஆதாரமாக இந்த நூலின் முதல் பாகம் விவாதிக்க முற்படுகின்றது. ஒரு நாடு எப்படி மறுகாலனியாக்கத்தின் உள் சென்று விட்டது என்பதை, மறுக்க முடியாத ஆதாரத்துடன் உங்களுக்கு முன்வைக்கின்றது. அமைதி, சமாதானம் என்ற விரிந்த தளத்தில், இந்நூல் உங்களை சுயமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றது.

இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் என்ன நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டது. முதல் பகுதி ஒரு வருடத்துக்கு முன்பு எழுதப்பட்டது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னான முதல் வருடத்திய நிலையை ஆராய்கின்றது. இரண்டாம் பகுதி பிந்தைய வருடத்தை அடிப்படையாக கொண்டு முழுமையை ஆராய்ந்து அம்பலப்படுத்துகின்றது. மூன்றாம் பகுதி சம காலத்தில் நடந்த முக்கிய விடயங்கள் மற்றும் முக்கியமான பல கட்டுரைகளை உள்ளடக்கியது.

2004 தேர்தல் யூ.என்.பி வேட்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு முதல் கண்டனத்தையும், மிரட்டலையும் அமெரிக்காவே புலிக்கு எதிராகவிடுத்தது. இந்தக் கொலையைச் சொந்தக் கட்சி (ய+.என்.பி) முதல் இலங்கையின் ஜனநாயகக் கட்சிகள் என்று சொல்லும் எந்தக் கட்சிகளும் கூட இதைக் கண்டிக்கவில்லை. ஏகாதிபத்தியமே இலங்கையை ஆட்சி செய்கின்றனர் என்பதையே இவை காட்டுகின்றன. இந்தக் கண்டனம் அமெரிக்கா வெளியுறவு அமைச்சில் வைத்து விடப்பட்டது. இது ஒவ்வொரு சிறிய சம்பவமும் அமெரிக்காவால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும், கண்காணிக்கப்படுகின்றது என்பதையும் உணர்த்தியது. புலிகளுக்கு எதிரான குறிப்பான மிரட்டல் என்பது, எதையும் அமெரிக்கா செய்யும் தயார் நிலையில் உள்ளது என்பதையும் கோடிட்டுக் காட்டியது.

பொதுவாக அமைதி, சமாதானம் நோக்கிய பயணங்கள், உலகெங்கும் அங்கும் இங்குமாக தொடர்கின்றது. இலங்கையை நோக்கி ஏகாதிபத்திய பிரதிநிதிகள் இடைவிடாத தொடர் பயணங்களை நடத்துகின்றனர். ஏகாதிபத்தியம் கடன், உதவி, முதலீடு என்ற பெயரில் நிதியை வெள்ளமாக இலங்கையை நோக்கி நகர்த்துகின்றனர். இலங்கையின் ஏற்றுமதி பெருக்கெடுத்துள்ளது. இறக்குமதி கட்டுக்கடங்காத வகையில் பெருகியுள்ளது. அன்னிய முதலீடுகள் பல மடங்காகியுள்ளது. தன்னார்வக் குழுக்களின் தங்குமிடமாக இலங்கை மாறிவிட்டது.

புலிகள் அன்னியப் பொருட்களை வாங்கி விற்கும் தரகு வர்த்தகத்தில் கால் பதித்துவிட்டனர். எதிர்கால முதலீட்டை நோக்கி அசையா சொத்துகள் வாங்கி குவிக்கப்படுகின்றது. உள்ளுர் உற்பத்திகள் மற்றும் சேவைத்துறையை புலிகள் படிப்படியாக தமது தனிப்பட்ட சொத்தாக்கி வருகின்றனர். புலிகள் புதிய முதலீட்டாளராக மாறிவிட்டனர். பல புதிய புலி முதலாளிகள் உருவாகி வருகின்றனர். அதற்கான நிதியை வரைமுறையற்ற வரி மூலம் திரட்டுகின்றனர். எங்கும் பணத்தை மையமாக வைத்த நடவடிக்கைகள், பெருகுகின்றது. பெரும் சொத்துக் குவிப்பின் ஊடாக, புதிய பணக்கார புலிகள் படிப்படியாக மிதக்கின்றனர். யாழ்குடா மேட்டுக்குடி சார்ந்த பிரான்ஸ் நகராகிவிட்டது. யாழ்நகரக் கடைகள் ஆடம்பரப் பொருட்களை விற்கும் தரகுச் சந்தையாகிவிட்டது. புலிகள் பல பத்து முதலீட்டை பல்வேறு வழிகளில் முதலீடு செய்துள்ளனர். பலவற்றை கட்டுப்படுத்தி பலாத்காரமாக அடிபணிய வைக்கின்றனர்.

மறு தளத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்கள் என்றுமில்லாத ஏழைகளாகியுள்ளனர். வாழ வழியற்ற நிலையில் மக்கள் வெளிநாடு செல்வது கடந்த இரண்டு வருடத்தில் பெருகி வருகின்றது. உள்ளுர் சிறு உற்பத்திகள் அழிக்கப்பட்டு நலிந்து போய்விட்டது. வேலை இழப்பும், வருமானம் இன்மையும் பெருகிவருகின்றது. மக்களின் நுகர்வுகள் ஏற்றுமதியாகின்றன. இறக்குமதிகள் பெரும் பணக்காரர்களின் நலன்கள் சார்ந்து மாறிவிட்டது. வறுமை ஊடாக கல்வி மறுப்பு தேசிய கொள்கையாகிவிட்டது. மக்களின் சொத்தான அரசுத்துறைகளை அன்னியருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தனியார் மயமாகிவிட்டது. தேசிய உற்பத்திகள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. சமுதாயப் பிளவு விரிந்து அகலமாகிவிட்டது.

இந்த நூல் எழுதி அச்சுக்கு அனுப்ப இருந்த நேரத்தில் கருணா-பிரபாகரனின் பிளவு அரங்குக்கு வந்தது. இந்த நிலையில் இந்த நூல் இரண்டு பக்கத்திற்கும்; விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வேறுபாடற்ற இவர்கள், பிரதேசவாதிகளாகவே இரண்டு பகுதியிலும் அரங்கில் புகுந்துள்ளார்கள். மக்களைப் பற்றி இருவருக்கும் சிறிதும் அக்கறை கிடையாது. ஏகாதிபத்தியத்தின் தொட்டில் தாலாட்டு பெறும்; உரிமையையே, தத்தம் தரப்பில் உரிமையாகக் கோருகின்றனர். இங்கு இரட்டைப்பிள்ளை தாலாட்டை கருணா கோர, பிரபாகரன் ஒரு குழந்தைதான் ஏகாதிபத்திய தாலாட்டில் வாழ முடியும் என்கின்றார். இதையொட்டி ஒரு கட்டுரை இந்த நூலில் இணைத்துள்ளேன்;. இக்கட்டுரை ஒரு சஞ்சிகையில் வெளிவருவதற்காக எழுதப்பட்டது. இக் கட்டுரையுடன் பின்னிணைப்பு அவசியம் கருதி இணைக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தில் மக்களை மந்தை நிலைக்கு தாழ்த்தி, அறியாமையைத் தமது மூலதனமாக்குகின்றனர்.

ஒட்டு மொத்தமாக இவை அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் மந்தை நிலைக்குள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ், சிங்களத் தலைவர்கள் விதிவிலக்கின்றி ஏகாதிபத்தியத்திடம் எப்படி நாட்டை விற்றுள்ளனர் என்பதை, இந்த நூல் ஆதாரத்துடன் நாட்டுப் பற்று உள்ளவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது. புலிகளும், துரோகக் கட்சிகளும்கூட தமது குறைந்தபட்ச அடையாளத்தை எப்படி தொலைத்து வருகின்றனர் என்பதை ஆராய்ந்தளிக்கின்றது. மேலும் சிங்களக் கட்சிக்கு இடையில் வேறுபாடுகள் மறைந்து விட்டதையும் ஆராய்ந்தளிக்கின்றது. நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்பதில், தமிழ் மற்றும் சிங்கள (முஸ்லீம், மலையக கட்சிகளும் கூட) கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்பதை இக்கட்டுரை துல்லியமாக அம்பலப்படுத்துகின்றது. துரோகக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக தம்மை அடையாளம் காட்டியவர்களும் எப்படி தம்மை அரசியல் ரீதியாக இனம் காட்ட முடியாது போயுள்ளனரோ, அது போல் புலிகளுக்கும் துரோகக் குழுக்களுக்கும் இடையில் அரசியல் வேறுபாடுகள் அற்றுப் போனதை இந்த நூல் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. மக்களுக்கு எதிரான இவர்களின் துரோகத்தை இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது.

இலங்கையில் நடக்கும் ஒட்டு மொத்த காட்டிக் கொடுப்பை, இலங்கையில் யாரும் அம்பலப்படுத்தி போராட முன்வரவில்லை. அந்தப் பணியின் அங்கமாகவே இந்த நூல் உங்களுக்கு பல்வேறு தடைகளைக் கடந்து கிடைக்கின்றது. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்த கொள்ள விரும்பும், சமூகத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் இந்த நூல் ஒன்றிணைய அறைகூவுகின்றது.
முன்னுரை

"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகி விடுகின்றான்.'' மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிஸ்ட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதைச் செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர். இது குறித்து கார்ல் மார்க்ஸ் "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்'' என்கிறார்.

சதி, சூழ்ச்சி, நேர்மையீனம், வக்கிரம், அராஜகம், சூறையாடல், தரகுத்தனம், வன்முறை என ஒட்டு மொத்தமும் ஒருங்கிணைந்து இலங்கை அரசியலில் குடிகொண்டுள்ளது. அடிப்படையான நேர்மை, மக்கள் பற்றிய அக்கறை, விமர்சனம், சுயவிமர்சனம் என எதையும் எமது மண்ணில் இனம் காண முடியாத ஒரு வறண்ட சூனியத்தில், விதைக்கப்படும் விதைகள் தான் இக்கட்டுரைகள். இந்த நிலையில் மனித இனம் சந்திக்கும் மனித அவலங்களை உள்ளடக்கிய வகையில், பல தலைப்புகளைக் கொண்டதே இந்த நூல். சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகுப்பே இந்த நூல். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை, மரணதண்டனைக்கு உரியவையாகவே உள்ளது. மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு தயார்நிலையில் தான், இந்தக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. இவை தீதீதீ.tச்ட்டிடூஞிடிணூஞிடூஞு.Nஞுtt என்ற எமது இணையத்தளத்தில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டு வந்தன.

இந்தநூல் இலங்கை முதல் சர்வதேச நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. இருந்தபோதும் இந்த நூல் இலங்கையை மையமாகக் கொண்டே உள்ளது. சுனாமி, இலங்கையில் தொடரும் படுகொலைகள், சில மரணங்கள், புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், இழுபறியான மக்கள் விரோதப் பேரங்கள் முதல் ஏகாதிபத்தியங்களின் சதிராட்டங்கள் வரை பலவற்றை இத்தொகுப்பு நூல் கொண்டுள்ளது.

உலகளவில் மனித இனம் சந்திக்கும் தொடர் அவலங்களின் ஒரு பகுதியாக இலங்கை மக்கள் அனுபவிக்கும் அவலங்களையிட்டு யாரும் வாய்திறப்பதில்லை. இது எமது சொந்தத் தலைவிதியாக உள்ளது. பினாமியமும், வாய் திறவாது சூழலுக்கு இசைந்து போகும் மௌனங்களும், மக்களின் அனைத்துவிதமான வாழ்வியல் சமூக ஆதாரங்களையும் அழித்து வருகின்றது. மறுபுறம் மிகக் கடும் எதிர்தரப்பாக மாறி நிற்போர் கூட, மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒரு கைக்கூலிக் கும்பலாகவே சீரழிந்து, அன்றாடம் சிதைந்து வருகின்றனர். ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், மறுகாலனியாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத்தரப்பும் ஏதோ ஒரு வகையில் தமக்குள் முரண்படுகின்றனர். இந்த முரண்பாடு பல படுகொலைகளைக் கூட நடத்தி முடிக்கின்றது. அவை அனைத்தும் மக்களின் நலன் என எதையும் முன்வைப்பதில்லை.

தமது கருத்துக்கள், உரைகள், திட்டங்கள், பேச்சு வார்த்தைகள், நிகழ்ச்சிகள், நடைமுறைகள் என்று அனைத்து விதமான நிகழ்வுகளிலும், மக்களின் சமூகப் பொருளõதார வாழ்வியல் உள்ளடக்கத்தைப் பேச மறுத்து நிற்கின்றனர். மக்களுக்கு எதிராகவே அனைத்தையும் திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் மக்கள் விரோதக் கும்பலின் அனைத்து விதமான பிரிவுகளையும் போக்குகளையும் இந்த நூல் அம்பலப்படுத்த முனைகின்றது. மக்களின் நலன் என்பது, என்ன என்பதை எடுத்துக் காட்ட முனைகின்றது. ஒரு புரட்சிகரமான விமர்சன அணுகுமுறை எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதை, இந்த நூல் புரட்சிகர உணர்வுடன் கற்றுத் தரமுனைகின்றது.
தோழமையுடன்பி. இரயாகரன்
5.இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

முன்னுரை

தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனை தேசிய போராட்டமாகத் தவறி, ஒரு இனவாத யுத்தமாக பரிணமித்த வரலாற்றுப் போக்கை இந்த நூல் அம்பலம் செய்கின்றது. இதன் மூலம் குறுந் தேசிய இனவாதப் போராட்டத்தை தேசிய போராட்டமாக மாற்றுவதன் தேவையை, மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இந்த சிறு நூலின் ஊடாக உங்கள் முன் வைக்கின்றேன்.

பெரும்பான்மை இனங்கள் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படையான தேசிய நலன்களை, சகல இனவாத தேசியவாதிகளும் எப்படி குறுகிய நலனில் வைக்கின்றனர் என்பதையும் இந்த நூல் தெளிவாக்குகின்றது. இதன் மூலம் இலங்கையின் தேசிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவாக்குகின்றது. பரஸ்பரம் இனங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதும், மக்களின் நலனை முதன்மைப்படுத்திய தேசியத்தை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அரசியல் ரீதியாக தெளிவாக வைப்பது நூலின் மைய நோக்கமாகும்.

சுயநிர்ணயம் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு இலங்கையின் சுயநிர்ணயம் அவசியமானது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், அவர்கள் நடைமுறைப்படுத்தும் மறுகாலனியாக்க உலகமயமாதலுக்கு எதிராகவும் தேசியத்தை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, இந்த நூல் தெளிவுபடுத்துகின்றது. மக்களின்; இன ஐக்கியம் இதற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துன்றது. இனவாதிகள் பிரித்தாளும் இனவாதக் கோசங்களின் ஊடாக தேச விரோதிகளாக இருப்பதுடன், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருக்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்திய உலகமயமாதலின் உற்பத்தி கூறுகளையும், அதன் பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் எதிர்ப்பவர்கள் அல்ல. இது அவர்களின் தேசியம் பற்றி அளப்பதற்கு ஒரு அடிப்படையான அளவு கோல் மட்டுமின்றி, உலகமயமாதலை வரவேற்பவர்களாகவும் ஒரு தரகர்களாகவும் இருக்கின்றனர்.

இடைக்கால தீர்வு என்ற போர்வையில் முன்வைக்கின்ற அனைத்தும் வரலாற்று ரீதியாக இனவாதத்தையும், தொடர்ந்த நிரந்தரமான ஒரு அரசியல் பிழைப்புவாத வழியாகவே முன்வைக்கின்றனர். உலகமயமாதல் தேசியத்தை அழிப்பதற்குரிய தூண்களாக இனத் தேசியத்தை பயன்படுத்துகின்றனர். இனபிரச்சனைக்கு ஒரு ஜனநாயக பூர்வமான தீர்வை முன்வைப்பதற்குப் பதில், அதீதமான சலுகைகளை முன்வைப்பது அல்லது மற்றொன்றை மறுப்பது இலங்கையின் எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளினதும் இன்றைய நிலையாகும்;. இது சமாதானத்துக்கும், மக்களின் அடிப்படையான வாழ்வியலுக்கும் எதிரானது. ஒரு சமாதானத்துக்கு அவசியமானது, இனவாத யுத்தத்தின் மீதான அனைத்து ஜனநாயக விரோதமான கோரிக்கைகளையும் செயல்களையும் இவற்றுக்கிடையில் பக்கம் சாராது விமர்சிப்பதும் செயற்படுவதுமாகும்;. ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கை இனவாத அரசியல் களத்தில் உள்ளவர்கள், இதில் ஏதோ ஒன்றைச் சார்ந்து நின்று, மற்றையவற்றை அதீதமாக விமர்சிப்பதன் மூலமும், செயற்படுவதன் மூலமும் இனவாதம் ஆழமாக மேலும் புரையோடுகின்றது. சமாதானமும், மக்களின் வாழ்வியலும் மேலும் இனவாத யுத்த கொடூரங்களால் பலியிடப்படுகின்றது.

விமர்சனமும், மாற்று செயல்முறையும் மட்டுமே சமாதானத்துக்கும், அடிப்படையான மக்களின் விடுதலைக்கும், மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் அடிப்படையான செயல் முறையாகும்;. இது இனவாதம் மற்றும் குறுந்; தேசிய இனவாதம் என்று அனைத்தையும் எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி போராடி இனத்தேசியத்துக்கு பதில் தேசியத்தை உருவாக்க வேண்டும்.

இந்த சிறு நூலுக்குரிய கட்டுரைகளை சமர் கட்டுரைகளாகயாக எழுதத் தொடங்கினேன். சமூக முக்கியத்துவம் கருதி அவை சிறு நூலாகவே வெளிவருகின்றது. இந்த நூலில் பயன்படுத்திய புள்ளிவிபரங்கள், பத்திரிகைகள் மற்றும் வேறு நூல்களில் எடுக்கப்பெற்றன. இந்த புள்ளிவிபரங்கள் சில முழுமையற்றவையாக இருந்தாலும், இதன் பொதுத் தன்மைகளும் சமூக விளைவுகளும் சரியானவையாகும்;. நூலின் மையமான அரசியல் செய்தியை இவை எந்த விதத்திலும் பாதிக்கமாட்டாது. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையில் தொடங்கிய இந்த சிறு வெளியீடு, பல்வேறு விடையங்களை முழுமையாக இங்கு ஆய்வுக்கு எடுக்கவில்லை. ஆனால் குறிப்பான விடையத்தை முதன்மைப்படுத்தியே இதை எழுத நேர்ந்தது

6.தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.

முன்னுரை

அண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பை விட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்த பட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர்.

பெயர்கின்றனர். இந்தப் புலப் பெயர்வின் நீடித்த சமூக அக்கறை, அவர்களின் பொருளாதார வசதியுடன் சிதையத் தொடங்கியது. முன்னைய சமூக அக்கறைக் குரியவர்கள் பலர் இளம் வயது இளைஞர்களாக இருந்ததுடன், உழைப்பில் ஈடுபடாது கவர்ச்சிகரமான இராணுவ செயற் தளத்தில் புகுந்தவர்கள், முதன் முதல் பணத்தை தமதாகக் கண்டது முதல் அவர்கள் சமூக அடிப்படையுடன் தமது நிலைக்கு ஏற்ப ஒரு புதிய கோட்பாட்டுத் தளத்தைத் தேடத் தொடங்கினர், தொடங்கி உள்ளனர்.

இதே நேரம் இந்தியாவில் உள்ள புரட்சிகரப் பிரிவுகளுடன் நெருங்கிய பல முன்னைய தொடர்புகளை முன்பு பேணியவர்கள், தமது சமூக அடிப்படை மாற்றத்துடன் புதிய கோட்பாட்டுத் தளத்தை தேடி அலைந்தனர்.

இந்தியாவில் எழுந்து வரும் சமூக நெருக்கடிகளும் அதனால் எழும் போராட்டங்கள் அடிப்படை மார்க்சிய வரையறைக்குள் எழுவது தவிர்க்க முடியாத போக்காக இருந்தது. இந்தியாவில் ஏகாதிபத்தியமும் உள்ளுர் ஆளும் தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவுகளும் மார்க்சியத்திற்கு எதிரான பல வண்ண வகை கோட்பாடுகள், மனித உரிமை அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் ...... என பலவகைச் செயல் தளத்தை உருவாக்கி வறுமையில் வாழும் மக்களுக்குள்ளும், போராடும் மக்களுக்குள்ளும் அனுப்பி வைத்தன, வைக்கின்றன. இதில் கோட்பாட்டுத் தளத்தில் தன்னார்வக் குழுக்கள் மற்றம் மார்க்சியத்தின் பெயரில் பல வண்ண வகைக் கோட்டுபாடுகளை முன் தள்ளினர், தள்ளுகின்றனர். இதன் மூலம் முன்னணி சமூகப் புரட்சியாளர்களை வென்றெடுத்து சீர் அழித்தல், அல்லது குறைந்த பட்சம் மார்க்சியம் மீது ஐயசந்தேகத்தை எழுப்புவது, வர்க்கப் போராட்டத்திற்கு பதில் வேறு போராட்ட வடிவத்தை முன் தள்ளுவது என பல வகைக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர்.

இந்த வகையில் மார்க்சியத்திற்கு பதிலீடாக வர்க்கமற்ற போராட்ட அமைப்புகள், தனக்குள் சாதியடிப்படையைத் தக்கவைத்துக்கொண்ட தலித்திய அமைப்புகள், வர்க்கம் கடந்த பெண்ணிய அமைப்புகள், வர்க்க முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்க முன் தள்ளும் தேச விடுதலை அமைப்புகள் எனப் பலவகை உருவாக்கி வௌவேறு கோட்பாட்டு அடிப்படையை மார்க்சியத்துக்கு புறம்பாக முன்வைக்கப்படுகின்றது, முன்வைக்க முயல்கின்றனர்.

இன்று இந்தியாவில் இப்படிப் பல மொழியில் பலர் உள்ள நிலையில், தமிழில் ரவிக்குமார் -அந்தோனிசாமி மார்க்சை குருவாகக் கொண்ட நிறப்பிரிகை குழு, எஸ், வி இராஜதுரையைக் கொண்ட குழு எனப் பலவாக பல உள்ளது. இதில் அ.மார்க்ஸ் - ரவிக்குமார் போன்றவர்கள் மிகத் தீவிரமாக மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டுத் தளத்தை உருவாக்குவதில் இயங்குகின்றனர். ஒரு புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்துக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அமைப்பு வடிவங்கள் இந்தியாவில் உள்ளன. அவர்களால் ஒரு பெரிய நிதியைச் செலவழித்து தமது அரசியல் கருத்து தளத்தை விரிவு படுத்த முடியாத புரட்சிகர நிலை உள்ள போது, அ. மார்க்ஸ் போன்றோர் மிகப் பெரிய நிதி ஆதரவுடன் தொடர் வெளியீடுகளை தனிநபர்களாக வெளியிடும் மர்மத்தை காலம் தான் அம்பலப்படுத்தும்.

இவர்களின் ஐரோப்பிய பயணங்கள், ஏகாதிபத்திய கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் என்பன உடனுக்குடன் இவர்களிடம் கிடைப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வெளியீடுகளை வெளியிடும் செயலின் மர்மமும், அதன் நிதிப்பலமும் மர்மமாகவே உள்ளன.

இங்கு (பிரான்ஸ்) கம்யூனியச எதிர்ப்பு கோட்பாடு தொலைக்காட்சியில் காட்டப்படவுடன் அல்லது வெளிவந்தவுடன், அதை சிறிது காலத்தில் அ.மார்க்ஸ் சார்ந்த கும்பல் தமிழில் எழுத்து வடிவம் கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் சர்வதேசமயமாகி உள்ள தொலைக்காட்சியில் இவர்கள் தோன்றி தமிழில் மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய நீண்ட காலம் செல்லாது என்பதை நாம் முன்கூட்டியே கூறிவைக்க விரும்புகின்றோம்.

ஈழத்து முன்னாள் முன்னணி சமூக அக்கறைக்குரியவர்கள், தமது சமூக அடிப்படையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, தேடிய கோட்பாட்டு அடிப்படையை அ.மார்க்ஸ்சும் அவரது கும்பலும் இவர்களுக்கு வழங்கினர். இவர்கள் அ.மார்க்ஸ்-ரவிக்குமாரின் கோட்பாட்டை பல தளத்தில் முன்னெடுத்து "மனிதம்", உயிர்ப்பு, "சரிநிகர்" என பல தளத்தில் தமது சிலந்தி வலை விரித்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.

இதைவிட ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் தமது தன்னார்வக் குழுக்குள் பலரை இணைத்து பெரும் நிதித் தளத்துடன் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் அனுப்பி எடுக்கின்றனர். ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பில் ஈடுபட்ட பலர் இந்த சிலந்தி வலையில் சிக்கி உள்ளதுடன், மேலும் பலர் இதில் சிக்கிவிடும் நிலையில் உள்ளனர். மறுபுறம் மார்க்சியத்திற்கு எதிரான கோடுபாட்டுத் தளத்தை ஏதோ ஒரு வகையில் பெறுகின்றனர். இன்னுமொரு பிரிவினர் ரொக்சியக் கோட்பாடுகளுக்குள் சென்று வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, தீவிரமாக வர்க்கப் போராட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் கொழும்பு தப்பி வந்த பலர் இன்று ஏகாதிபத்திய நிதித்தளத்துக்குள் விழுந்து தாளம் போடத்தொடங்கியுள்ளனர். இன்று மார்க்சிய விரோத மற்றும் மார்க்சியத்தை திரித்தும், புதிய கோடுபாடுகளை முன்தள்ளுவதை எதிர்த்தும் இந்த சிறிய பிரசுரத்தை எழுதுகின்றோம்.

இது அவர்கள் முன்வைக்கும் சில எல்லா வண்ண மார்க்சிய விரோதக் கோட்பாட்டையும் எடுத்து கேள்விக்கு உள்ளாக்கின்றது. குறிப்பாக குரு அ. மார்க்ஸின் கோட்பாட்டையும், மற்றவர்களின் கோட்பாட்டுத் திரிபுகளையும், கேள்விக்கு உள்ளாக்கி அம்பலமாக்கும் வகையில் இச்சிறு பிரசுரம் முயல்கிறது.

முதலில் அந்தோனிசாமி மார்க்ஸ் -ரவிக்குமார் உட்பட நிறப்பிரிகை குழு சார்பாக வெளியிட்ட "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற புத்தகத்தில் உள்ள மார்க்சிய விரோதக் கோட்பாட்டை இப்பிரசுரம் கேள்விக்கு உள்ளாக்கி அம்பலப்படுத்துகின்றது.

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.

நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நல்ல வேடிக்கை. காற்றின் தூய்மையும், தண்ணீரின் ஒளியும், எங்களுடைய தனிச்சொத்துகளல்ல் பிறகு அவற்றை எப்படி நீ வாங்க முடியும்?

பூமியின் ஒவ்வொரு துகளும் எங்களின் மக்களுக்குப் புனிதமானது.

பளபளக்கும் ஊசி இலைகளும்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, January 5, 2009

மக்கள் எப்படி புலிகளை தோற்கடித்தனர் என்பது தான் புலியின் வரலாறு

மக்களுக்கு வெளியில் இயற்கை மட்டும்தான் உண்டு. இதற்கு வெளியில் வேறு எதுவும் கிடையாது. ஏன் எந்த புனிதமும், எந்த அவதார புருஷர்களும் கூடக் கிடையாது. மக்கள் தான், தம் வரலாற்றையும் தனக்கு எதிரான சக மனிதன் கொடுமைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். இதற்குள்ளேயே தான் மனித வரலாறுகள் போராட்டங்கள் என அனைத்தும்.

அதிகாரத்தின் மொழியை நிர்வாணமாக்குவது என்றால், அதை வைத்து போராடுவதே மக்களின் மொழி. தன் சக மனிதனுக்கு நடக்கும் அவலத்தைக் கண்டு கொதிக்காத மனிதம், மனிதமல்ல. சிங்கள பேரினவாத இராணுவம் தமிழ் பெண் என்பதாலும், தனக்கு எதிராக போராடியது என்பதாலும், ஒரு பெண் என்பதாலும், பெண்களையே நிர்வாணப்படுத்தி நடத்துகின்ற இழிவான மலிவான பாலியல் வக்கிரத்தையும் அது வெளிப்படுத்தும் அதிகார மொழியையும், மக்களுக்கு தெரியாத வகையில் மூடிமறைக்க முடியுமா!? இந்தக் கேடுகெட்ட நடத்தையை மக்கள் பார்க்காமல், யார் தான் பார்க்க முடியும்? அதையாவது சொல்லுங்கள்! சரி, ஏன் மக்கள் பார்க்கக் கூடாது! அதையாவது சொல்லுங்கள்.

நிர்வாணமான உடல் என்றால், அது ஆபாசமா!? எம் உடல் எமக்கு ஆபாசமானதா? அதை ஆபாசமாக்கி ரசிப்பவனும், மக்களும் ஒன்றா? ஆபாசமாக காண்பதும், காட்டுவதும், இந்த ஆணாதிக்க சமூக அமைப்பின் சிந்தனை முறையாகும். இப்படி உடலைப் பார்ப்பவன் சிந்திப்பவன்தான், ஒ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கறுப்பின ஒபாமாவும் காசாக் கொலைகளும்

ஒபாமா அமெரிக்காவின் ஆரம்பம் களைகட்டத் தொடங்கியுள்ளது காசாவில். கசாப்புக்கடையாய் விரிகிறது காசா நகரம். குழந்தைகள், கர்ப்பிணிகள் வெற்றுடலாய் வீழ தெருவெங்கும் மரண ஓலம். இஸ்ரேலின் காசா மீதான ஆக்கிரமிப்புக்கு பின்னாலும் இத்தனை கொடுமையான படுகொலைகளுக்குப் பின்னாலும் அமெரிக்க ஆசீர்வாதம் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு கொடுக்கு கட்டி விடுகிறது.

கிளர்ந்தெழும் மக்களின் ஊர்வலங்கள் எதிர்ப்பு பேரணிகள் எல்லாவற்றையும் துச்சமாக மதித்து காசாவை துவம்சம் செய்யும் இஸ்ரேலுக்கு முன்னால் எதுவும் செய்ய திராணியற்று கறுப்பின அமெரிக்க அதிபர் ஒபாமா கைகட்டி மவுனம் சாதிக்கிறார் என்று நம்புபவர்களும், உலகமே இனி அமைதிப் பூங்கா தான் அமெரிக்க கறுப்பின அதிபரின் வருகை நன்மைகளாக விளையப் போகின்றது என்பவர்களும் இதோ காசாவுக்கு செல்லுங்கள். இஸ்ரேல் செய்யும் அறுவடைகளில் உங்களுக்கும் பங்குண்டல்லவா?

பாலஸ்தீன மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்க முனையும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டு சதிக்கு இன்று தலைமை தருவது வேறு யார் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 4, 2009

கிளிநொச்சியின் வீழ்ச்சி எதன் எழுச்சி? - -ரவி

1985 நடுப்பகுதி. இராணுவம் கவசவாகனங்களுடன் அதிகாலை 4 மணிக்கே ஊரைச் சற்றிவளைத்திருந்தது. ஒலிபெருக்கி அறிவிப்பின் பின்னர் பொது இடத்துக்குப் போக வேண்டும். இளைஞர்கள் யுவதிகள் பிரித்து நிறுத்தப்படுவார்கள். முழந்தாளில் வெயிலுக்குள் மணிக்கணக்கில் நிற்கவேண்டும். சந்தேகத்துக்கு உரியவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு அடிஉதை... பெரிசாக இப்போதையளவுக்கு போர் என்று ஒன்று இருக்கவில்லை. இயக்கங்கள் பல இருந்தன. இராணுவ வாகனங்கள் பெருவீதிகளை சூழ்ந்தபோது செய்தி வேகமாகப் பரவியது. நித்திரையால் எழுந்து ஓடிக்கொண்டிருந்தோம். அருகில் சக இயக்கத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் கையில் பிஸ்ரல்களுடன் எங்களுடன் சேர்ந்து ஓடினார்கள். "என்னடா நாங்கள்தான் ஒண்டுமில்லாமல் ஓடுறம். நீங்கள் ஆயுதத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறியள்" என்றேன் நக்கலாக. பலமாகச் சிரித்த அவன் "ஒரு பேச்சுக்கு தமிழீழம் கேட்டால் அதுக்கு இப்பிடியா (ஜே.ஆர் ஜெயவர்த்தனா) அடிக்கிறது??" என்றபடி ஓடிக்கொண்டிருந்தான்.

சுற்றிவளைப்பு படிப்படியாக வியூகம் கொண்டு இப்போ போராக இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறுவது போன்று கனத்திருக்கிறது. கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி ஏற்படுத்தியுள்ள உணர்வுகள் அதிர்ச்சி ஏமாற்றம் மகிழ்ச்சி கவலை உற்சாகம் என இலங்கை மக்கள் புலம்பெயர் தமிழர்கள் தமிழகம்... என தாக்கம் செலுத்தியுள்ள நேரம் இது. இரு நாடுகளுக்கு இடையிலான போரொன்றில் வெற்றிபெற்றது போன்ற உணர்வலைகள் ஆட்சியதிகார நிறுவனங்கள் தொடக்கம் ஆட்டோ வரையில் தேசியக்கொடியை உயர்த்தியிருக்கிறது. போரை எதிர்த்து குரல் கொடுத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தாம் செய்த கேக்கின் மேல் தற்போதைய அரசு ஐசிங் செய்திருக்கிறது அவ்வளவுதான் என தனது உண்மை முகத்தை திறந்து காட்டியிருக்கிறது. கருணாவை புலியிலிருந்து பிரித்தெடுத்தது தமது ராஐதந்திரம் எனவும் அதனாலேயே புலிகளின் வீழ்ச்சி நிகழ்ந்தது என்பதும் அவர்களது வாதம். ஆக ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியினதும் இனப்பிரச்சினைத் தீர்வு அல்லது வழிமுறை அல்லது எதுவென்பது மீண்டும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

புலிகளின் அழிவு என்பது தமிழ்மக்களை அரசு வென்றெடுப்பது. ராஐபக்ச சிங்களத்தில் உச்சரிப்பை எழுதி தமிழ்பேசும் விளையாட்டு தமிழர்களை வென்றெடுக்காது. அவர்களு ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பெண்ணை நிர்வாணமாக்கும் பேரினவாதக் கொடுமையை, தமிழ்மக்களுக்கு மூடிமறைக்க கோருகின்றனர்?

இன்று இதையே அனைத்து தமிழ் ஊடகவியலும் செய்கின்றது. மறுபக்கத்தில் இதை நாம் தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்வதையே தவறு என்கின்றனர். நிர்வாணக் காட்சியை மூடிமறைக்கும் புனிதத்தின் பெயரில், இந்த கொடுமையை மறைப்பதன் மூலம் இதற்கு துணை போகின்றவர்கள், எம்மையும் இதைச் செய்யக் கோருகின்றனர். பேரினவாதம் காலாகாலமாக எம் பெண்களுக்கு செய்துவந்த பாலியல் கொடுமைகளை, பத்தோடு பதினொன்றாக்க முனைகின்றனர்.

எம் செயல் இதற்கு எதிரானது. நாம் இதை தமிழ் மக்களின் முன் வைத்து, உன்னைப்போன்ற பெண்ணுக்கு அல்லது உன் இனத்துப் பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைப் பார் என்கின்றோம். இப்படி நாம் செய்வது தவறு என்கின்றனர் புலித்தேசியம் பேசுபவர்கள். மக்களிடம் இதை எப்படி சொல்லமுடியும் என்பது, அவர்கள் பாணியிலான ஆட்சேபனை. அவர்கள் கூறும் காரணம் நிர்வாணமான உடல், இங்கு காட்சிக்கு வருகின்றது என்பது தான். அப்படியாயின் இதை யார் தான் பார்க்க முடியும்!? மக்களின் பெயரில் போராட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அதி புனிதர்களா!? மக்கள் என்ன, இதைப் பார்த்து ரசிக்கும் காம வெறியர்களா!? இதற்கு எதிராக போராட முடியாத மந்தைகளா!?

நாங்கள் மக்களை நம்புகின்றோம். அவர்கள் தான் இதற்காகவும் போராட முடியுமென்று கருதுகின்றோம். இதற்கு வெளியில் நாம் யாரையம் நம்புவது கிடையாது. மக்களை ஆபாசம் பிடித்த காம வெறியர்களாக, இதைப் பார்க்க முடியாதவர்களாக, நீங்கள் கருதுவது போல் நாங்கள் கருதவில்லை. இதை மக்கள் தான் நிச்சயமாகப் பார்க்கவேண்டும். இதை ரசித்து செய்த காம வெறியன் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்கள் பார்க்காவிட்டால், இந்த அநியாயத்தை யார் தான் பார்ப்பது

........நிர்வாணமான உடல் என்பது, காட்சிப்படுத்தப்படக் கூடாத ஒரு பொருளல்ல. எந்த நோக்கில், எந்த அடிப்படையில் என்பதில் தான், அது தங்கியுள்ளது. இதை ஆயிரக்கணக்கில் பார்வையிட்டவர்கள், இதை வக்கிர உணர்வுடன் பார்ப்பதில்லை. அதை அப்படி அவர்கள் பார்ப்பதாக நம்பும் நீங்கள் தான், அந்த உணர்வுடன் பார்ப்பது வெளிப்படுகின்றது. மக்கள் அப்படிப் பார்ப்பதாகக் கூறி மக்களை ஏமாற்ற முனைகின்றீர்கள். மக்கள் பார்க்காவிட்டால், இந்த அநியாயத்தை யார் தான் பார்ப்பது. அதைச் சொல்லுங்கள். சில புனிதர்களா!? அதற்கு என்ன அடையாளம்!? நாம் மக்களை நம்பிப் போராடுபவர்கள். இதனால் மக்கள் முன் வைக்கின்றோம். இது எம் போராட்ட மரபில் கிடையாது என்பதால் தவறாகாது.

இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், எம்மை மீறி நடக்கும் எமக்கு எதிரான எதார்த்தத்தைக் கண்டு சினந்து வெடிக்கும் கோப உணர்வுடன் தான் பார்க்கின்றனர். புலித்தேசியத்தால் ஏற்பட்டுள்ள, சொந்த கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கப்படுகின்றனர். ஏன் இந்த நிலைமை என்று, சொந்தமாகவும் சுயமாகவும் சிந்திக்கின்றனர். இதனால் இதை மூடிமறைக்க கோருவது, அருவருக்கத்தக்கது. ........