தமிழ் அரங்கம்

Saturday, September 12, 2009

புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்


ஆனால் தமிழீழ மக்களின் தேசிய பொருளாதாரம் பற்றி அவர்களால் பேசமுடிவதில்லை. பேரினவாத பொருளாதார தடையை, தாம் வெற்றிகரமாக வென்றுவிடுவோம் என்று, ஊரையே ஏமாற்றும் ஒரு பரப்புரையை சுடுகாட்டில் நடத்துகின்றனர்.

ரி.ரி.என் தொலைக்காட்சியில் 'நிலவரம்" என்ற நிகழ்ச்சியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் இதைச் செய்தனர். உப்புச்சப்பற்ற, நடைமுறைக்கு உதவாத, சுடுகாட்டில் எரிந்து சிதைந்து கிடக்கும் பிணங்களை நோக்கி ஒரு பரப்புரை நடத்தினர். புலித் தேசிய பொருளாதாரத்தை கட்டி, நாம் மக்களை மீட்டுவிடுவோம் என்கின்றனர். உலக பொருளாதாரம் பற்றி கரிகாலனும்,.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 11, 2009

புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் .. த ஜெயபாலன்


பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மத்தியில் தீவிர நிதி வசூழில் ஈடுபட்ட இன்னமும் ஈடுபட்டு வருகின்ற வெண்புறா வின் கணக்குப் புத்தகம் சில பலமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றது. பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வெண்புறாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகளில் பின்வரும் விடயங்களில் சந்தேகங்கள் எழுந்தள்ளது.

ஜெர்மனி நீதிமன்றத்தில் வெள்ளை நிறவெறியனால் கொல்லப்பட்ட முசுலீம் பெண்


16 கத்திக்குத்துகளை வாங்கி ஸ்தலத்திலேயே மரணமடைந்த மார்வா என்ற எகிப்தியப் பெண்ணும், கொலையாளியான அலெக்ஸ் என்ற ஜெர்மன் நபரும் அயலவர்கள். வெளி நாட்டவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அலெக்ஸ், பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டி ருந்த 4 மாத கர்ப்பிணியான முக்காடு போட்டிருந்த மார்வாவைப் பார்த்து "பயங்கரவாதி' என தூற்றியுள்ளார்.

மார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார். நீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்தக் கொடூ.....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, September 10, 2009

தமிழ் மக்களை கொன்று, அதை மூடிமறைப்பது தமிழ் தேசியமா? பாசிசமா?

தமிழனைக் கொன்றாலும், ஒடுக்கினாலும் அதுவே தமிழ் தேசியமென்கின்றனர் பாசிட்டுகள். அவை எதுவும் நடவாதது போல், தம்மை மூடிமறைத்துத் கொண்டு சில பாசிட்டுகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கமைய சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய, தன் முனைப்புடன் கூடிய புலிப் பாசிச அரசியலை பாதுகாக்க தம்மை மூடிமறைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இதை செய்வது தமிழ் மக்கள் என்கின்றனர். இதுவே தமிழ் மக்களின் அப்பாவித்தனமான நிலை என்கின்றனர். இதுவோ மூடிமறைக்கப்பட்ட பாசிட்டுகளின் தந்திரமல்ல என்கின்றனர். இவர்களை மறுப்பது மார்க்சியமல்ல என்கின்றனர். இதை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றுவது, மார்க்சியத்துக்கே எதிரானது என்கின்றனர். இந்த நிலைக்கு ஏற்ப, நான் (நாங்கள்) உங்களின் வர்க்கப் போராட்டத்துக்கும், அதன் அரசியல் வழிக்கும் தடையாக இருந்தால், அதற்கு வழிவிடத் தயாராகவிருக்கின்றோம். ஈழத்து வர்க்கப் போராட்டத்துக்கு தடையாக, நாங்கள் என்றும் அரசியல் ரீதியாக இருக்கவிரும்பவில்லை. அதை செய்யுங்கள் என்றுதான் கூறுகின்றோம். நாங்கள் ஒதுங்குகின்றோம்.

இதை நீங்கள் செய்யும் வரை, நாம் எம் நிலையில் நின்று நாம் போராடுவோம். மூடிமறைக்கப்பட்ட பாசிசத்தை பாதுகாக்க தத்து......
... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சங்கரமடத்தை சட்டத்தால் தண்டிக்க முடியுமா?


புதிராகவும் இருந்தது. இரு மையங்களுக்கும் இடையிலான கட்டைப் பஞ்சாயத்து, பொருளாதார முரண்பாடுகள் மற்றும் பாசிச ஜெயாவின் தனிப்பட்ட குணாதிசயங்கள் காரணமாக இந்த "வரலாற்றுப் புகழ்' வாய்ந்த கைது அன்று நிகழ்ந்தது.

எல்லா ஊடகங்களும் பெரியவாள், பால பெரியவாளின் லீலைகளை விலாவாரியாக எழுதியதும், சங்கரராமனைக் கொன்றதை ஜெயேந்திரன் பெருமையாக ஒத்துக்கொண் டதும் நக்கீரன் இதழில் வெளியான போது, சங்கர மடத்தின் அதிகாரம் சரிந்து விடும் போலத் தெரிந்தது. ஆனால் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், இந்து மதவெறி அமைப்புகள் ஆகியவற்றின் தரகு, கட்டைப் பஞ்சாயத்து மையமாகத் திகழும் சங்கரமடம் தனது அதிகாரத்தைச் சற்றே இழந்திருந்தாலும், அது தற்காலிகமானதே என்பதை இவ்வழக்கின் தற்போதைய நிலைமைகள் எடுத்துக் கூறுகின்றன.

சங்கரராமனைக்....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, September 9, 2009

சிறுகதை : மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!


படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாகச் சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்க மாட்டார் என்றாலும் அப்படித்தான் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட் ராமன் துயிலெழும் முகூர்த்தமும் சொல்லிவைத்தது போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.

பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வார நாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்து விடுபவர், விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்கு மூட்டையைக் கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியைப் பக்கத்து வீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு முடித்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் .. எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன்.

ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பது போல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன் சிந்தனையில் அவர் அறி....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 8, 2009

மே 17ம் திகதி முடிவை 20 வருடங்களுக்கு முன் சொன்னவர்கள் யார்?


அவர்கள் மே 17 நிகழ்வு தவிர்க்க முடியாது என்று சொன்னவர்கள். அதை மாற்றியமைக்க முனைநத்தால் கொல்லப்பட்டனர். புலியெதிர்ப்பு அரசியல் புரட்டுப் போல், புலிகள் மட்டும் அவர்களைக் கொல்லவில்லை. அனைத்து பெரிய இயக்கமும், அவர்களை தேடி படுகொலை செய்தனர். ஏன் புலிகள் அல்லாத மற்றவர்களும் கொன்றனர். அவர்களோ புலிகளல்ல, அப்படியிருக்க ஏன் கொன்றனர்? ஏன் இவர்களை கொன்றனர் என்பதை திரும்பிப் பார்ப்பதன் மூலம் தான், அடுத்தடுத்த எம் தோல்விகளையாவது தவிர்க்கமுடியும். உங்கள் அறிவுக்கு அவர்கள் கற்பித்தது போல், இவர்கள் இந்திய இலங்கை கைக்கூலிக் குழுக்களல்ல. மாறாக மக்களை அதிகளவில் நேசித்ததால், கொல்லப்பட்டனர். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை என்னவோ அதுதான். அதை சுயமாக நீ தெரிந்து கொள்ள முனைவதில் என்ன தவறு?

1980 களில் தொடங்கிய....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

போராளி என்பவன் யார்? – நன்றி விடுதலைப் புலிகள்

புலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் 7 இதழில் கூறினார்கள். எதைச் செய்தால் அது போராட்டமல்ல என்று அன்று சொன்னார்களோ, அதை தாமே கடைப்பிடிக்காமல் மரணித்துப் போனார்கள்.

அன்று மற்றவனை கொல்லவும், ஒடுக்கவும் இதைச் சொன்னார்கள். அதை அன்றிலிருந்து தாங்களே இன்றுவரை செய்து இறுதியில் தற்கொலை செய்து மரணித்துப் போனார்கள்.

- தமிழரங்கம் -

மூலம் விடுதலைப்புலிகள் இதழ் - 7 பக்கம் - 2

உண்மையில் ஒரு விடுதலைப் போராளி என்பவன் யார்?.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, September 7, 2009

தமிழனென்று சொல்லடா! வர்க்க உணாவு கொள்ளடா!!


சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.

புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.

இவர்கள் மீதெல்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, September 6, 2009

பிரபாகரனை பலிகொடுத்த அரசியல் எது?


இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கும் தம்மைச் சுற்றிய தன் இனத்துக்கும் நடக்கும் இனவொடுக்குமுறையை, சுயமாக எதிர் கொள்ளும் அனைத்து சுய சமூக ஆளுமையையும் இழந்து நிற்கின்றனர். கடந்த காலத்தில் அவர்களைச் சுற்றி பல்வேறு நிகழ்வுகள், அவர்களின் சுயாதீனமான கூறுகளை அழித்து இருந்தது.

இதனால் சமூகமோ வாழா வெட்டி நிலைக்குள், இன்று சிதைந்து கொண்டிருக்கின்றது. இதை நாம் எம் சொந்த தவறுகள் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தான், எதிர்காலத்திலாவது நாம் சரியாக எதிர்வினையாற்ற முடியும்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இனவொடுக்குமுறையோ..
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தொடரும் கொத்தடிமைக் கொடூரம் அரசின் பாராமுகம்!

ஓய்வின்றிக் கட்டாய வேலை; சம்பளம் கிடையாது; சம்பளம் கேட்டால் சவுக்கடி; நோய்வாய்ப்பட்டாலும் விடுப்போ, மருத்துவமோ கிடையாது; இக்கொடுமையிலிருந்து தப்பியோட முயற்சித்தால்,

பிடித்து வந்து கட்டி வைத்து பெல்ட்டாலும் கேபிள் ஒயராலும் நாள் முழுக்க அடித்து வதைக்கும் கொடூரம்; ரூ. 5,000 முன்பணம் பெற்றுக் கொண்டு பிழைப்புக்காக இங்கு வேலைக்கு வந்த கூலி ஏழைகள், இங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி வெளியில் முணுமுணுக்கக்கூட முடியாது. போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையோடும், குண்டர்களின் பாதுகாப்போடும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரத்தை கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி வட்டத்திலுள்ள தலைப்பட்டி கிராமத்தில் நடத்தி வந்தான், மணி என்ற கொடுங்கோல் முதலாளி. டாடா கிரஷர் என்ற......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்