தமிழ் அரங்கம்

Saturday, January 31, 2009

தமிழினத்தை ஒடுக்கி வாழ்பவர்களிடமிருந்து, மக்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும்

தமிழினத்துகாக உணர்வுபூர்வமாக குரல்கொடுப்போர் கிடையாது. புலிக்காக தமிழினத்ததை உச்சரிக்கின்றவர்கள், தமிழினத்தின் மேல் அழிவுகளை ஏற்படுத்தி அதைக் காட்டியே அரசியல் செய்கின்றனர். இந்த புலியின் ஈனச் செயலைக்காட்டியே, பேரினவாதம் தமிழ் மக்களை மீட்கப்போவதாக கூறி குண்டுகளை தமிழ் மக்கள் மேல் சரமாரியாக பொழிகின்றது.

எப்படி தமிழினத்தை அழிப்பது என்பதில் மட்டும் தான், தமிழினத்ததை ஓடுக்கிவாழும் சிங்கள தமிழ் வலதுசாரி பாசிசக் கும்பல்களுக்குள் முரண்பாடு. அப்பாவி மக்கள் இவர்களுக்கு இடையில் சிக்கிகிடப்பதையும், அவர்கள் பலியாடுகளாக பலியிடப்படுவதையும் மூடிமறைக்கும் உணாச்சியூட்டல்கள். பாதிக்கப்படும் மக்களின் உண்மை நிலையை எதிர்கொண்டு போராட மறுப்பதன் மூலம், பலியிடல் என்பது அரசியல் நிகழ்ச்சியாகின்றது. உண்மையில் மக்களை பலியிடல் என்பது, போராட்டத்தின் உள்ளடகத்தில் ஊக்கம் பெறுகின்றது. அதுவோ அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெறுகின்றது. இதற்கு எதிராக, யுத்த முனையில் இருந்து மக்களை விடுவிக்க கோரி போராடுவது துரோகமாக முத்திரை குத்தப்படுகின்றது. மக்கள் கொல்லப்படுவதும், கொல்ல வைப்பதும் அரசியலாகிவிட்டது. இதைப்பற்றி இதற்குள் பேசுவதும் மனிதாபிமான விடையமாகிவிட்டது. இதை அலை அலையாக கட்டமைக்கும் பிரச்சாரங்கள், உணர்ச்சியூட்டல்கள் மூலம்........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்

இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான்.

புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது. இதேபோன்று, தமிழ்நாட்டு போலி தமிழ் தேசிய உணர்வாளர்களில் நம்பிக்கை இழந்து, தனிமனித தற்கொலை மூலம் தனிமனிதர்கள் தீர்வை நாடுகின்றனர். அது அனுதாப அலையாக மாறி வடிகின்றது. இப்படி இவை தனித்தனி அவலமாக வெடிக்கின்றது.

சமூகத்தை அணிதிரட்டி அவர்கள் போராடுவதன் மூலம் தான், எதையும் சாதிக்க முடியும் என்ற அடிப்படையான விடையத்தை நிராகரித்து, தனிமனிதன் தன்னைத்தா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 30, 2009

பிரச்சாரத்துக்காக தமிழ்மக்களை பலியெடுக்கும் புலியிசம்

மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம் மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.
மக்கள் கொல்லப்படுவதன் மூலம், அதைப் பிரச்சாரம் செய்து தம் பாசிச அரசியல் இராணுவ இருப்பை தக்கவைக்க முனைகின்றனர். இந்த எல்லைக்குள் தான், மனித அவலங்களை புலிகள் அரங்கேற்றுகின்றனர்.

இந்த வகையில் இரண்டு மக்கள் விரோத இராணுவங்களினால், பரஸ்பரம் தம் வக்கிர உணர்வுடன் மக்கள் பலியிடப்படுகின்றனர். மக்களையிட்ட எந்த அக்கறையும் கிடையாது. மக்கள் தம் மீதான இந்த யுத்தத்தை வெறுத்து வாழ்கின்றனர். மக்கள் இதன் மேல்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தயவு செய்து அவர்களைப் போக விடுங்கள். காலில் விழுந்து மன்றாடுகிறேன்....

"பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர கெடு!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 05:46.46 PM GMT +05:30 ]
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், 'இந்த கால அவகாசத்துக்குள் விடுதலைப்புலிகள், பொதுமக்களை தங்களது இடத்திற்கு திரும்பி அனுப்பிவிட வேண்டும். என்று ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த போர் நிறுத்தம் இலங்கை அரசின் போர் தந்திரம். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு திரும்ப கால அவகாசம் தருகிறோம் என்று உலகில் நல்ல மதிப்பைப் பெற்றுவிட்டு 48 மணி நேரத்திற்கு பிறகு கடும் தாக்குதல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
-தமிழ்வின்"
"புலியிச"த்தை அடிப்படையாகக்கொண்ட ஈழவிடுதலைப்போரின் படுதோல்வியின் இறுதிக்கட்டத்தில் புலியிசத்தின் பெயரால் கொள்ளை கொள்ளையாக தமது உயிர்களை மாய்த்து அழிந்துகொண்டிருக்கும் போராளி இளைஞர்களின் அவலம் ஒருபுறமாய்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 29, 2009

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…

இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில் - த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்


"வ‌ன்னியிலுள்ள‌ இலுப்பைக்க‌ட‌வையில் என‌து வீடு இருக்கிற‌து. தை இர‌ண்டாந்திக‌தி, 2007 காலை ஒன்ப‌து மணிக்கு கிபீர் (இல‌ங்கை விமான‌ப்ப‌டையின் ஜெட்ஸ்) வ‌ந்த‌ன‌. அவை எங்க‌ள் கிராம‌த்தில் குண்டுக‌ளை வீசின‌, நில‌ம் அதிர்ந்துகொண்டிருக்க‌, குண்டின் சித‌ற‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ற‌க்க‌த்தொட‌ங்கின‌. ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து போல‌வே நானும் காய‌ப்ப‌ட்டேன். இவ்வாறே நான் என‌து காலை இழ‌ந்தேன்."ஸ்ரெல்லா, செந்த‌ளிர்ப்பான‌ முக‌மும் வனப்புமுள்ள 13 வ‌ய‌துடைய‌வ‌ள். நான் அவ‌ளை ஆவ‌ணி 05, 2008ல் ம‌ணிய‌ங்குள‌த்தில் ச‌ந்தித்தேன்; இல‌ங்கை வ‌ட‌க்கிலுள்ள‌ வ‌ன்னியில் இருக்கும் ம‌ணிய‌ங்குள‌ம் கிராம‌ம், அவ்வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌ம் வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலிருந்த‌து. ஸ்ரெல்லா அவ‌ள‌து வாழ்வின் முக்கிய‌ க‌ட்ட‌த்திலிருந்தாள், அவ‌ள‌து ம‌ன‌மும்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

காந்தியின் அரிஜன ஏடு அம்பலப்படுத்தும் காங்கிரசின் கோகோ கோலா!


1950 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராட்டம் நடத்தி அடிமைத் தளையறுத்து, இந்தியக் குடிமக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கான அரசியல் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டதாகப் பெருமையுடன் நினைவு கூறப்படும் ஆண்டு. இதே ஆண்டில்தான் அமெரிக்க அடிமைத்தனத்தின் திரவ வடிவமான கோகோ கோலாவும் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1977இல் வெளியேற்றப்பட்டு 1993இல் நரசிம்மராவ் அரசியல் புத்தம்புது காப்பியாக மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட கோக், பெப்சி பானங்கள் இன்று இந்தியச் சந்தை முழுவதையும் அநேகமாகக் கைப்பற்றி விட்டன.
2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இக்குளிர்பானங்களின் ஆண்டு விற்பனை 400 கோடி லிட்டர்கள். அதாவது, 2000 கோடி பாட்டில்கள்.
எனினும் உலகத்தரத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாம். ஆண்டொன்றுக்கு ஒரு அமெரிக்க குடிமகன் சராசரியாக 800 கோலா பாட்டில்களைக் காலி செய்வதாகவும் இந்தியர்கள் இவ்விசயத்தில் மிகவும் தங்கியிருப்பதாகவும் வருந்துகிறார்கள் கோக் அதிகாரிகள்.
இந்த இலட்சியத்தை எட்டும் பொருட்டுத்தான் தாமிரவருணியை கோக்கிற்கு தாரை வார்த்திருப்பதுடன்,நெல்லை மாவட்டம் முழுவதிலும் கோக் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தடையும் விதித்திருக்கிறது போலீசு. இந்தியாவைக் கோலா குடியரசாக்கும் இந்த இலட்சியத்தில் அதிமுக., காங். உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இந்நிலை திடீரெனத் தோன்றவில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது.
1950இல் கோகோ கோலா இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவுடனேயே காந்தியால் தொடங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் அதற்கெதிரான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றின் சுருக்கத்தைக் கீழே தருகிறோம்.
அரிஜன் நவம்பர் 4, 1950 இதழில்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, January 28, 2009

இரத்த நிலமாகி வரும் , வன்னி

இன்று வன்னி மக்களின் சோகம் சொல்லி அடங்காது. புலிகள் தமது ஆயுதங்களையும், ஆயுதத் தள பாடங்களையும் பொன்னாக நம்பி பாதுகாத்து வருகிறார்களே தவிர, தமது இரத்த சொந்தங்களான வன்னி மக்களை ஒரு சுண்ணாம்புக் கட்டியிலும் கேவலமான பொருளாகவே கைவிட்டுள்ளனர்.

அரசோ, தனது சிங்கள பெளத்த இன வெறி அடையாள யுத்தத்தை, அபிவிருத்தி என்னும் பேரில் மடைதிறந்து பாயப்போகும் முற்றுகைப் பொருளாதாரத்துக்கான- விளை நிலத்துக்கான- யுத்தத்தை வெறும் சிறிய கோடாக மூடி மறைத்து விட, புலிகளை அப்புறப் படுத்தும் யுத்தத்தை பெரிய கோடாக அதன் மீதே கீறிவிட்டு, மீட்பு யுத்தமென துார்த்து மெழுக நினைக்கிறது. இதற்கு புலிகளின் போசக்கற்ற அரசியல் துணை போவது அசப்பில் தெரிகிறது.

வன்னியின் வீதியில் வாழும் மக்களின் நிழலுக்குள்ளேயே வந்து குந்தியிருக்கும் சாவின் கொடுமையை, அவர்கள் சிந்தி வரும் இரத்தச் சகதியை இவர்கள் தத்தமது இருப்புக்கான மேச்சலாக்கி வரும் கொடுமையை ஜுரணிக்கவே முடியவில்லை.

சதுரங்க ஆட்டமாக ஆடப்படும் இவ் யுத்தத்தில் -பகடைக் காயாக உருட்டப்படும் இம்மக்களின் உயிர் மீதான விளையாட்டு, இந்தத்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, January 27, 2009

ராஜீவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது,..


1983 ஜூலைப் படுகொலைக்குப் பிறகிலிருந்து, குறிப்பாக பாசிச ராஜீவின் மரணத்தின் போது வீச்சான பிரச்சாரத்தில் இருந்தது எமது அமைப்புகள்.
ராஜீவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, “ராஜீவ் ஒரு முறையல்ல பல முறை கொல்லப்படவேண்டியவன்” என்று துணிவாகப் பிரச்சாரம் செய்தது எமது அமைப்புகள்தான். புலிகளுக்கு ஆதரவாக ‘நட்சத்திர’ அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகள், தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் எல்லாம் எலிகளைப் போல் பொந்துகளில் புகுந்து கொண்டிருந்ததுவும் நிகழ்ந்தது. வேண்டுமானால் உங்கள் அண்ணன் மார்களைக் கேட்டுப் பார்க்கவும். “ராஜீவின் கொலைக்குக் காரணம் தமிழகத்திலிருக்கும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் அமைப்புகளே….” என்று புலிகள் அமைப்பின் கிட்டு வாய்க்கூசாமல் பேசியதையும், அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் கடுமையான வழக்குப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு புலிகளை சாகசவாதிகளாகச் சித்தரித்துப் பேசுவதுதான் சீசனாக இருக்கிறது. அந்த சீசன் அரசியலில்தான் அனைத்து புலியாதரவு அமைப்புகளும் பேசிவருகின்றனர். மகஇக இதுபோன்ற சீசனுக்கு எதிராக இயங்குவதுதான் வழக்கம். புலியரசியலுக்கு துதிபாடாமல் சிங்கள பேரிணவாதத்தைக் கண்டித்தால் புலிகளே அதனை ஏற்றுக் கொள்வதில்லை, நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 25, 2009

ஒப்பனை கலையும் "தமிழீழம்"

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மிகவும் பலவீனமானது. காலனித்துவத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மத்திய தர வர்க்கத்தின் தலைமை எவ்வளவு பலவீனமானதோ, அதை விடவும் பல்மடங்கு பலவீனமானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம். இதை எவ்வளவு ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்தும்,கற்பனைக்கு எட்ட முடியாத தீர வீரச் செயல்களைக் கொண்டும் இப் பலவீனங்களை மூடி மறைத்து விடவோ அல்லது சரிக்கட்டி விடவோ யாராலும் முடியாது. இவை எல்லாம் மத்தியதர அறிவுஜீவித்தனத்துக்கு புரியாதது ஒன்றும் உலக அதிசயமான விசயங்கள் அல்ல.

உலகமயமாக்கலும், இலங்கையில் பாசிசமயமாகலும்

இலங்கை கொந்தளிப்பான யுத்த சூழலுக்குள் சிக்கி பாசிசமாக சிதைகின்ற போதும், உலகமயமாதல் அதனூடாகத்தான் அமுலுக்கு வருகின்றது. பயங்கரவாதம் என்ற போர்வையில், ஏகாதிபத்திய அனுசரணையுடன் இலங்கையில் யுத்தம் திணிக்கப்படுகின்றது. இதை பேரினவாதம் புலி ஒழிப்புக் கோசத்தின் கீழ், தமிழின அழிப்பாக நடத்துகின்றது. இதன் மூலம் இலங்கை தழுவிய பாசிசத்தை நிறுவிவருகின்றது. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.