தமிழ் அரங்கம்

Saturday, January 3, 2009

கருத்தாக அனுமதிக்க முடியாதவையும், நிர்வாணப்படுத்தும் அரசியலும்


அமெரிக்கா முதல் இலங்கை வரை, பயங்கரவாத ஒழிப்பில் இவையின்றி மனிதம் அழிக்கப்படுவதில்லை. இப்படி அழிப்பில் ஈடுபட்டவர்கள், கொண்டாடி மகிழ்ந்ததை தான் அவர்கள் பதிவாக்கினர். இது தான் ஈராக்கில் நடந்தது. வக்கிரமான இந்தக் காட்சிகள் உள்ளடங்க இவை பயங்கரவாத ஒழிப்பின் ஒரு அம்சமாக, இதுவோ எமக்கு அதை அம்பலப்படுத்தும் ஆவணமாகியது.

இப்படி நாம் வெளியிட்ட வீடியோ ஆவணம், புலித்தேசியம் பேசியவர்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்துள்ள நிலையில், இதுவோ பேரினவாதத்துக்கு நிகராகவே மூடிமறைக்கப்படுகின்றது. அதேநேரம் புலித்தேசியம் பேசுவோரிடமிருந்து ஈமெயில்களும், பதிவுகளும் எம்மை நோக்கி வந்தன.

இதில் அறிவுப+ர்வமற்ற குதர்க்கங்கள் முதல் எம்மைத் தூசணத்தால் குதறியவை என்று பல அடங்கும். இவை எமக்கு அன்றாடம் வருபவை தான், ஆனால் தற்போது சற்று அதிகம். இறந்த அந்த பெண்கள் மேல் பேரினவாத இராணுவம் எதைச் செய்ததோ, இதற்கு சற்று மேலாக எனது தாயைக் கூட தாம் புணர்வோம் என்று மிரட்டுகின்றார்கள். இப்படி வந்த பதிவுகள் அனைத்தும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பேரினவாத கொண்டாட்டங்களும், தமிழினத்தின் பரிதவிப்பும்


பாலியல் வதை செய்யப்பட்ட பெண்ணின் உடலம் பற்றிய காட்சியை வெளியிட்டது தவறு என்று எமக்கு வந்த ஈமெயில்களை ஒட்டியும், பேரினவாத அரசு இந்தக் காட்சி மீது ஒரு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ள நாடகத்தை ஒட்டியும், நாம் எழுதிக் கொண்டிருந்ததை தற்காலிகமாக நிறுத்தியே இக்கட்டுரை.

கிளிநொச்சியை பேரினவாதம் கைப்பற்றிய நிகழ்வு, பேரினவாதம் பாட்டாசு வெடிக்கவைத்து கொண்டாடும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. மறுபக்கத்தில் தமிழினமோ கையறு நிலையில் ஏற்பட்டுள்ள பரிதவிப்போ, ஈடிணையற்ற சோகமாக மாறியுள்ளது. ஒரு நாட்டில் வாழும் மக்களின் இரண்டு விதமான எதிர்வினைகள். தமிழினம் தம்மைத்தாம் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழலில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.

இங்கு புலிகளிள் வெற்றி தோல்வி என்பதல்ல, தமிழ் மக்களின் பிரச்சனை. தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் கடந்த 60 வருடத்துக்கும் அதிகமான காலத்தில் எதைச் செய்ததோ, அதை மறுபடியும் கிளிநொச்சி வெற்றி மூலம் செய்துள்ளது. புலிகள் தோன்ற முன்னமே தமிழினம் இலங்கையில் தன் ஜனநாயக உரிமையை இழந்து, அதற்காக போராடியது. அதை இன்று ஏறிமிதித்துச் செல்வதே பேரினவாதத்தின்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இப்படிக் கூட சொரணையற்று இருக்க முடியுமா?

மக்கள் எப்படி எல்லாம் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி வேதனைப்படுகிறோமே,மக்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி எவ்வளவு சொரணையற்று இருக்கிறோம்?

நாகப்பட்டினம்: சுனாமியால் சேதப்பட்ட வீடுகள் 30,300. மும்பையில் காங்கிரசு தேசியவாத காங்கிரஸ் கூட்டரசால் தரைமட்டமாக்கி அழிக்கப்பட்ட வீடுகள் 84,000.
"எந்த ஒரு முதலமைச்சருமே தங்களுக்குப் பிறகு புகழ்மிக்க பாரம்பரியத்தை விட்டுவிட்டுச் செல்லவே விரும்புகிறார்கள்'' என்று சொல்கிறார் மகாராட்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்; அதாவது, மும்பையைச் சுத்தமாக்கி அழகுபடுத்தி வைத்திருப்பதையே தான் விரும்புவதாக அவர் சொல்கிறார். திருவாளர் தேஷ்முக் ஏதோ ஒரு விதத்தில்தான் மக்களால் நினைவு கூறப்படுவதை விரும்புகிறார்.

நிச்சயம் அவர் நினைவில் வைக்கப்படுவார். ஒரே நாளில் 6,300 வீடுகளை அவரது அரசாங்கம் துடைத்து அழித்திருக்கிறது. தாங்கள் அத்துமீறிக் கைப்பற்றி வைத்திருக்கும் எல்லைப்புற நகரங்களின் மீது, பரபரப்பான சந் தடி மிகுந்த ஒரு பிற்பகல் பொழுதில், இசுரேலிய இராணுவம் பெரிய சாதனையாக எண்ணி எடுக்கின்ற நடவடிக்கையை மட்டுமே இதனோடு ஒப்பிட முடியும்; டாங்கிகள் மற்றும் விமானப்படைத் தாக்குதலின் பின்பலத்தோடு அவர்களின் புல்டோசர்கள் இடித்துத் தள்ளக்................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 2, 2009

புலிகளின் அழிவு நெருங்க,நெருங்க...

"இலட்சம் மக்களை உயிர்ப்பலிகொண்டவொரு ஈழப்போராட்டம் இறுதியில்அந்த மக்களைப் பூண்டோடு அழித்து,அரசியல் அநாதைகளாக்கிச் சென்றுவிடப்போகிறது! பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும் வெளிநாட்டுப் புலிகளுக்குப் புலித் தலைமை அழிந்துஇலங்கையில் போர் முடிவுக்கு வருவது மிகவும் அவசியமானது.கையிலிருக்கும் பெருந்தொகை பணத்தை அங்கே,மூலதனமாக இடுவதற்கு அவசியாமான புலி அழிப்பு ஒரு வகையில் இவர்களும்எதிர்பார்ப்பதே."

அரச பயங்கரவாத வான் தாக்குதற் கொலைகளும்,அதைக்காரணமாக்கிய இராஜ தந்திரங்களும் ஈழத்தமிழ்பேசும் மக்களை உயிர்திருப்பதற்கான சாத்தியப்பாட்டிலிருந்து மெல்ல மெல்லப் பெயர்த்தெடுத்து கொலைக் களத்துக்குள் தள்ளி விடுகிறது.இதுவரையான அனைத்துக் கொலைகளும் தனிநபர் பயங்கரவாதத்திலிருந்தும்-இயக்கப் பயங்கரவாதத்திலிருந்தும் அரச பயங்கர வாதமாக வியாபித்துக் கொண்டு, நமது சமூகத்துள் வாழும் சாதரண மக்களின் வாழ்வாதராத்தைப் பறித் தெடுக்கிறது.வன்னி விடுவிப்பு யுத்தம்,பயங்கரவாதத்துக் எதிரான யுத்தம் எனும் பெயரில் ஆளும் மகிந்த அரசு செய்யும் இக் கொடூரமான யுத்தம் வெறுமனவே புலிகளை வேட்டையாடும் யுத்தமென்றும் கூடவே, அது தமிழ்பேசும் மக்களை விடுவிப்பதற்கான யுத்தமெனும் போர்வையில் இன்று தமிழர் குடிப்பரப்பெங்கும் வான் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.இவற்றை அரசியல் பகமையைக்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அன்னை' தெரசாவின் : 'தேவன் இல்லை - ஆன்மா இல்லை -இயேசுவே .... நீரும் இல்லை"

"பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''

""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''

""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின்............வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 1, 2009

கருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம்

கருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1

விவசாயத்தை நாசமாக்கும் சாராய ஆலை

காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல்,புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, ''போல்ட்நட்'' தயாரிக்கும் ஆலைத் தொடங்கப் போவதாக அறிவித்தது. பின்னர் பாட்டில் தண்ணீர் தயாரிக்கப் போவதாகக் கூறிப் பஞ்சாயத்து அனுமதி பெற்றது. இப்போது ''கால்ஸ்'' என்ற நிறுவனத்தின் பெயரில் சீமைச்சாராய வடிப்பு ஆலைக்கான எல்லா கட்டுமான வேலைகளையும் வேகமாகச் செய்து வருகின்றது. இரண்டு பெரிய ஆழ் குழாய் (சுமார் 480 அடி ஆழம்) கிணறுகளைத் தோண்டி அன்றாடம் 6 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை இப்போதே உறிஞ்ச ஆரம்பித்து விட்டது இந்த ''கால்ஸ்'' கும்பல். இது தவிர, இன்னும் பத்து ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டி ஆலையை இயக்கத் தீர்மானித்துள்ளது.

Wednesday, December 31, 2008

மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் பெண்ணியல்வாதிகள்

சிறிலங்கா பேரினவாத அரசின் ஆணாதிக்க படைகள், தாம் யுத்த முனையில் கைப்பற்றிய பெண் புலி உறுப்பினர்களின் உடலை நிர்வாணப்படுத்தி, அதை தம் பாலியல் வக்கிரத்துடன் கொத்தித் தின்ற ஒரு வீடியோ ஆவணத்தை நாம் வெளியிட்டிருந்தோம். இந்த நிகழ்வுக்கு எதிரான கண்டனங்கள், போராட்டங்கள் அரசியல் உள்நோக்குடன், குறுகிய தம் அரசியல் வக்கிரத்துடன் பொதுவாக தவிர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் தான் பெண்ணியல்வாதிகள் என்று தம்மைத் தாம் கூறித் திரிந்தவர்கள், இதற்கு எதிரான எந்த விதமான எதிர்ப்பும் எதிர்வினையுமின்றி உள்ளனர். இதை தம் அரசியல் வக்கிரத்துடன் கூடிய பெண்ணியத்தின் பின், மூடிமறைக்கின்றனர்.

 

இலங்கை பெண்ணியல்வாதிகள் முதல் புலம்பெயர் பெண்ணியல்வாதிகள் வரை, இந்த பேரினவாத வக்கிரத்தை கண்டுகொள்ளாதவர்களாக இருப்பதும், இதில் உள்ள அரசியல் சூக்குமமும் வெளிப்படையானது.

 

இவர்களின் பெண் அரசியல், மக்களைச் சார்ந்ததல்ல. குட்டிபூர்சுவா எல்லைக்குள் சொந்த மன வக்கிரங்களை கொட்டிப் புலம்பி ஓப்பாரி வைப்பதுதான், இவர்களின் உயர்ந்தபட்ச பெண்ணியமாக இருந்தது. மக்களுடன் சேர்ந்து இயங்கும் பெண்ணியத்தை நிராகரித்தவர்கள், அந்த மக்களின் சுமைகளுடன் சேர்ந்து குரல்கொடுத்தது கிடையாது. இதனால் பேரினவாத இராணுவத்தின் செயல், இவர்களின்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.


பொருளாதார நெருக்கடி : எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம்

"எதைத் தின்றால் பித்துத் தெளியும்?'' இந்தக் கேள்விதான் இப்பொழுத் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் குடைந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் இருந்து 2,60,000 கோடி ரூபாய் சந்தையில் கொட்டி விட்டோம்; முதலாளிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியையும் இயன்றவரைக் குறைத்து விட்டோம். ஆனாலும், பங்குச் சந்தை சரிந்து கொண்டே போகிறதே எனத் திகைத்துப் போய் நிற்கிறார்கள், அவர்கள்.

பங்குச் சந்தைக் சரியச் சரிய, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் (நவ. 22 நிலவரப்படி ரூ. 50.20) சரிந்து கொண்டே போகிறது. தரகு முதலாளிகளோ சந்தையில் பணத்தை இன்னும் கொட்ட வேண்டும்; வட்டியை இன்னும் குறைக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதற்கு மேலும் பணம் வேண்டும் என்றால், அரசு வங்கிகளின் சாவிகளை அம்பானிடாடாவிடம் ஒப்படைத்துவிடுவது தவிர வேறு வழியில்லை.

Tuesday, December 30, 2008

பேரினவாத பாலியல் இழிசெயலுக்கு எதிராக எழுந்துள்ள குரல்கள்

பேரினவாதம் இராணுவம் அண்மையில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என் கருதப்படும், குறைந்து இரு பெண்களை இழவுபடுத்தி அலங்கோலப்படுத்தி ஒளி (வீடியோ) ஆவணத்தை நாம் வெளியிட்டு இருந்தோம். நாம் வெளியீட்டதை விட
எமக்கு கிடைத்த மூலம் மேலும் துலக்கமானவை, துல்லியமானவை. எந்த விசாரனைக்கு அவை வழங்கப்;படும். அதற்கு எமது பூரணமான ஓத்துலைப்பு உண்டு.

தற்போது இதற்கு எதிரான போராட்டம்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மோதல் கொலையா? கட்டுக்கதையா?

தில்லியில் கடந்த செப்டம்பர் 13 அன்று குண்டு வெடித்த ஆறாவது நாள் செப்டம்பர் 19 அன்று, அந்நகரின் தென்பகுதியில் உள்ள ஜாமியா நகரில், ''பாட்லா ஹவுஸ்'' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில், ''இரண்டு முசுலீம் தீவிரவாதிகள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்; இருவர் தப்பியோடிவிட்டதாகவும்; ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பதாகவும்'' அறிவிக்கப்பட்டது.

''கொல்லப்பட்ட தீவிரவாதிகளான முகம்மது பஷீர் என்ற அடிஃப் மற்றும் முகம்மது பக்ருதீன் என்ற சஜித் ஆகிய இருவரும் தில்லி குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அடிஃப்தான் அந்த அமைப்பின் தளபதி; ஜெய்ப்பூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் இவர்கள்தான் காரணம்'' என்று தில்லி போலீசு அறிவித்தது.
இந்த மோதல் நடந்த அடுத்த சில தினங்களிலேயே சாகிப் நிஸார், ஷீஷன் உள்ளிட்ட பல முசுலீம் இளைஞர்கள் ஜாமியா நகரிலிருந்து கைது செய்யப்பட்டனர். ''இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையை அழித்தொழித்து விட்டதாக'' அறிவித்தார், தில்லி போலீசின் இணை கமிசனர். இம்மோதலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தில்லி போலீசின் மோதல் கொலை நாயகன் எனப் புகழப்படும் போலீசு ஆய்வாளர் மோகன் சாந்சர்மா மோதலின்பொழுது சுடப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

Monday, December 29, 2008

கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்

.......... குடிசைக்குள் புகுந்த ஆதிக்க சாதிவெறியர்கள், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தி, கையோடு கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டு வந்து பையாலாலின் மனைவியையும், மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறிப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்து நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களுள் ஒருவரும் இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை.

பிறகு, ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண்குறிகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு அவர்களை அரைகுறை உயிரோடு வானத்துக்கும் பூமிக்குமாகத் தூக்கியெறிந்து பந்தாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை இந்த "விளையாட்டு' நடந்தது.

குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, December 28, 2008

முக்கிய அறிவித்தல் : பேரினவாத கயவர்கள் எம் பெண்கள் மேல் கூத்தாடும் ஓளிநாடாவை பெறுவது பற்றிய விபரம்

பேரினவாதம் கையாண்ட கொடூரமானதும், பாலியல் ரீதியான செயல் அடங்கியதுமான 90 செக்கன் ஓளிநாடாவை பொறுப்புள்ள அமைப்புகள், தம்மை உறுதி செய்து எம்மிடம் பெறமுடியும். எம் இணைய ஈமெயில் மூலம் தம்மை உறுதி செய்து, ஈமெயில் மூலம் இதை பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தனிப்பட்ட துஸ்பிரயோகத்தை தடுப்பதும் அவசியமானது. சிங்கள பேரினவாதத்தை சேர்ந்த ஆணாதிக்கவாதிகள் இதை எந்த நோக்கில் கையாண்டனரோ, அந்த நோக்கில் இதை பயன்படுத்தும் தனிநபர்கள் எங்கும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

நேர்மையாக தம்மை அடையாளப்படுத்தி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்

90 செக்கனே கொண்ட இந்த ஒளிநாடாவை, புலித்தேசியம் ஏன் மூடிமறைக்கின்றது? மகிந்த சிந்தனையும் புலியிசமும் ஏன் இதில் ஒன்றாக கூடி நிற்கின்றது. இதை அவர்கள் மூடிமறைக்க, ஒரேயொரு காரணம் தான் உண்டு. இதை நாமே முதலில் வெளியிட்டோம் என்பதும், மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இணையத்தில் இது வெளியாகியதுதான் காரணம்.

இந்த இணையம் மக்களுக்கு தெரியக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும், இதை மூடிமறைக்கவும் மகிந்தவுடன் இதில் கூடி நிற்கவும் தயாராக உள்ளதையே இது அம்பலமாக்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு ஆதாரபூர்வமான விடையத்தை மறைக்கவும், அந்தக் குற்றத்தை மூடிமறைக்கவும் புலியிசம் பின் நிற்கவில்லை.

இந்தக் காட்சி வெளிப்படுத்துவது, சர்வதேச குற்றங்களுக்கு நிகரான போர் குற்றத்தை, இறந்த பெண்களை மேலும் பாலியல் ரீதியாக குதறும் காட்டுமிராண்டித்தனத்தை. ஆனால் இதை மூடிமறைக்க முனைவதன் பின்னுள்ள அரசியல்தான், தமிழ் இனத்தின் தோல்விக்கான சமூக அடிப்படையாகும்.

மகிந்த சிந்தனை தமிழ் இனத்தை எப்படி
வேட்டையாடினாலும்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகளை மீறிப் போராடும் மக்களும் புலி உறுப்பினர்களும்

மகிந்த சிந்தனையும் பிரபாயிசமும், மனிதத் தன்மையற்ற கெடுபிடியான இரக்கமற்ற ஒரு மக்கள் விரோத யுத்தத்தையே நடத்திவருகின்றது. இதில் சிக்கி தவிக்கும் மக்களையிட்டு எந்த அக்கறையற்ற சுயநலமே, இன்று எங்கும் புரையோடிக்கிடக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களையி;ட்ட எமது அக்கறை தான், இதை செய்பவர்கள் இவர்கள் மேலான எமது கடும் விமர்சனமாக மாறுகின்றது.

இதனால் எமக்கு மகிந்த சிந்தனை மேலும், பிரபாயிசம் மேலும் எந்தவிதமான கருசனையும் அக்கறையும் கிடையாது. அதுவோ வெறுக்கத்தக்கது. வெந்த புண் மேல் வேல் பாய்ச்சும் வகையில், வரண்டு போன பாசிசத்தால் வக்கிரமடைந்து கிடக்கின்றது.

இதுவோ, மக்கள் மேல் ஈவிரக்கமற்ற வகையில் இயங்குகின்றது. மற்றவன் அழிவில், தான் வாழ நினைக்கின்றது. இது குறுகிய தன்னல நோக்கம் கொண்டது. அப்பாவி தமிழ் மக்கள் மேல், பலாத்காரமாகவே இந்த யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தம் ஏன், எதற்கு என்று தெரியாது, மக்கள் அதில் பலியாகின்றனர்.

தப்பிச் செல்ல முனையும் முயல்கள் போல், மக்கள் அங்குமிங்கும் நெளிந்தோட முனைகின்றனர். அவர்கள் அனுபவிப்பதோ சொல்லொணாத் துயரங்கள். தம்...................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.