தமிழ் அரங்கம்

Saturday, January 23, 2010

தாமி

சிறார் கைதிகளின் அவலம் குறித்து HARD TIME என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தவர் கைலி கிரே என்னும் பெண்மணி. இப்படம் இருளில் தவிக்கும் சின்னஞ்சிறு பூக்களின் கருகல் வாசனையைப் பதிவு செய்திருக்கிறது. தாமி போன்ற பல்வேறு சிறுவர்களை முன்வைத்து இப்படம் எடுத்த சூழல் பற்றி அல்ஜசீரா இதழுக்கு விரிவாக விவரிக்கிறார்.

thami

தெற்கு “பிலிப்பைன்ஸ்ஸிலுள்ள செபு நகர சிறையில் அடைக்கப் பட்டிருந்த சிறுவர்களைக் கண்டு உரையாடி, அவர்களது அவலங்களை பற்றி ‘ஹார்டு டைம்’ என்ற படத்தை எடுத்தவர் இயக்குநர் கைலி கிரே. அப்படம் உருவான விதம் பற்றியும், சிறார் கைதிகளின் இதயத்தை நொறுக்கும் கதைகளுக்குப் பின்னாலுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதில் அவர் பேசுகிறார்

சர்வதேச வளர்ச்சி என்ற பாடத்தில் எம்.ஏ பட்டம் பெறநான் படித்துக்கொண்டிருந்த போது, பிலிப்பைன்ஸில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். செபு நகர சிறையில் வாடும் சிறுவர்களுக்காக இலவசமாக வாதாடும் சட்டநிபுணர் நினா வேலன்ஸோனாவை எனது விரிவுரையாளர் அப்போதுதான் சந்தித்திருந்தார். அக்குழந்தைகளின் கதை எனது மனதைவிட்டு அகற்றவே முடியவில்லை.

thami2

தெற்கு „பிலிப்பைன்ஸ்ஸிலுள்ள செபுநகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களைக் கண்டு உரையாடி, அவர்களது......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர்.

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை!

பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.

தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.

கோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன்னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


எது பயங்கரவாதம்?

"இனியும் இது நீடிக்க முடியாது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்'' என்று வானொளியில் தோன்றிய அமெரிக்காவின் தலைமைக் கொலை வெறியன் öரானால்டு ரீகன் முழங்கினான்.


அமெரிக்க தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டி ஒன்று இடுகாட்டுக்கு இராணுவ மரியாதையுடன் போகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் 40 அமெரிக்கப் பணயக் கைதிகளுடன் நிற்கும் கடத்தப்பட்ட விமானத்திலிருந்து வீசியெறியப்பட்ட கடற்படை சிப்பாய் ராபர்ட் டீன் ஸ்டேதமின் சவப்பெட்டி.

அது புதைக்கப்படும் முன்னரே எல்சால்வடாரின் தலைநகர் சான்சால்வடாரிலிருந்து ரீகனுக்கு அதிர்ச்சியூட்டும் மற்றொரு செய்தி. மேலும் ஆறு அமெரிக்கர்கள் நாலு கடற்படை வீரர்கள், இரண்டு வியாபாரிகள் உட்பட பதின்மூன்று பேர் தெருவோர உணவு விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே ஜெர்மனியின் பெரு நகரம் ஃப்ராங்க்பர்ட் விமானநிலையத்திலிருந்து இன்னுமொரு துயரச் செய்தி. பயணிகள் மண்டபத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பயணப் பெட்டி வெடித்துச் சிதறியது. இடிபாடுகளிடை÷ய ஒரு போர்த்துக்கீசியன், இரண்டு ஆஸ்திரேலியக் குழந்தைகளின் பிணம், ஓர் அமெரிக்கன் உட்பட ஒன்பது தேசத்தைச் சேர்ந்த 42 பேர் படுகாயமுற்றனர்.

1985 ஜூன் க..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, January 22, 2010

“நாமல் – எமில்காந்த புகைப்படத்தை வெளியிட்டது தான் என்ற சந்தேகத்தில் என்னைக் கொலை செய்ய ஜனாதிபதி முயற்சிக்கிறார்” – டிரான் அலஸ்

அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நாமல் ராஜபக்~ மற்றும் எமில் காந்தன் தோன்றும் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வழங்கியது தான் என்ற சந்தேகத்தில் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்ய முயற்சித்துவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு செயலாளர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தன் வீட்டின் மீது இன்று (22) அதிகாலை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி அறிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கோழைத்தனமானத் தாக்குதல் எனவும் அவர் கூறியுள்ளார். ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


போலி ஜனநாயக தேர்தலும் மக்கள் விரோத கட்சிகளும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் மரண ஓலங்கள் இன்னமும் ஒலித்து கொண்டேயிருக்கின்றது யுத்தத்தினால் அங்கவீனரானோர் மற்றும் காயமடைந்தோர்களின் ரணங்கள் இன்னமும் ஆறவில்லை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்தவர்களது மரண பயம் இன்னமும் அடங்கவில்லை முட்கம்பி வேலிகளின் முகாம்களுக்குள் லட்சக்கணக்கானோர் இன்னமும் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விக் குறியுடன்…

ஆனால் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களும் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளும் இந்த மக்களிற்கு நடந்து முடிந்த 21ம் நூற்றாண்டின் மிகப் பாரிய இன அழிப்பினை பற்றிய எத்தகைய பிரக்ஞையும் இன்றி இனப் படுகொலையை முன்னின்று நடத்திய போhக்; குற்றவாளிகளுக்கு தமிழர்களின் ; பொன்னான வாக்குகளை வழங்கும்படி தமது எஜமான விசுவாசத்தினை காட்டி நிற்கின்றனர்

எமது தமிழ் தலைமைகள் அன்று மலையக மக்களின் வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமையினை சிங்கள ஆட்சியாளர்கள் பறித்த போது அதற்கு ஆதரவாக வாக்களித்து தமது மந்திரி பதவிகளை பாதுகாத்துக் கொண்டனர்

1977 இல் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


அவசரமான தனது தேர்தலில் மகிந்தா தோற்றால், மகிந்தா குடும்பம் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்யுமா!?

இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?


மக்களுக்கு ஒரு சுபீட்சத்தை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்கவா!? இல்லை. இன்னும் ஏழு வருடங்கள், மக்களை ஓடுக்கி அவர்களை சுரண்டி தின்பதற்குத் தான் இந்த அவசரமான தேர்தல் கூத்;து. இன்னும் இரண்டு வருடத்தின் பின் தோதலை நடத்தினால், தாங்கள் வெல்ல முடியாது என்று உறுதியான ஒரு நிலையில் தான், இந்த அவசரமான திடீர் "ஜனநாயகத்" தேர்தல்.

ஆனால் விளைவு என்ன? இன்றே மண்ணை கவ்வி விடுவார் என்ற அச்சம், பீதி மகிந்த குடும்பத்தையே ஆட்டிப்படைக்கின்றது. தோற்றால் ஒரு இராணுவ ஆட்சி மூலம், தங்கள் சர்வாதிகார அதிகாரத்தை தக்க வைக்கும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.

அடுத்த இரண்டு வருடம் பின்னான தேர்தலுக்கான அவசியம் ஏன் இன்று எழுந்தது? எதிர்காலத்தில் மக்களுக்கு எதிரான அரசியல் விளைவுகள் எது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…

அரியணைக்கனவொடு ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, January 21, 2010

துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்

மே 2009இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகள் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப் போராட்டத்தைப் பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை பகையுணர்வு, மவுனம்.


புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை என்பது அவர்களுடைய கருத்து. பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய கருத்து உருவாவதற்குக் காரணமாக இருக்கின்றது.

ஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி என்பது எங்களுடைய பார்வை.

விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில் தான் துரோகிகள் பெருகுகின்றார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில்,........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிரபாகரன் துப்பாக்கி முனையில் உருவாக்கிய புலித்தேசியம், இன்று துரோகத்துக்காக தனக்குள் மோதுகின்றது

புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின் துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.


பிரபாகரன் தன் துப்பாக்கி மூலம் மேய்த்த புலித் "தேசியம்", படுகொலைகள் மூலம் கட்டமைக்கப்பட்டது. இது புலித்தேசியமாக மாற, துரோகம் தியாகம் என்ற வறையறையின் எல்லைக்குள் அரசியலை முடக்கியது. இதற்கு வெளியில் சிந்திப்;பது துரோகமாக காட்டி, பிரபாகரன் தன் வழியில் அனைத்தையும் போட்டுத் தள்ளினான்.

இதற்கு அப்பால் பிரபாகரனின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்வதே தேசியமாகியது. இப்படி துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள் தேசிய தியாகிகளாக, அதை மீறி மேய்ந்தவர்கள் துரோகிகளானார்கள். இன்று அதை மேய்க்க பிரபாகரனுமில்லை, அவனின் துப்பாக்கியுமில்லை. அவனின் துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள், இன்று பிரபாகரனை மேய்கின்றனர்.

அன்று பிரபாகரன் தன் துப்பாக்கி.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!

அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. ""அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

நேபாளத்தின் புதிய இராணுவத் தலைமைத் தளபதி சத்ரமான் சிங் குருங், கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லிக்கு வந்து இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூரையும் அரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் சந்தித்திருக்கிறார். அரசுமுறை மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், மாவோயிஸ்டுகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி விவாதிக்கவே அவர் வந்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் இராணுவப் படை நேபாள இராணுவத்துடன் இணைக்கப்பட்டு, புதிய நேபாள இராணுவம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியத் தலைமைத் தளபதியோ, அவ்வாறு........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, January 20, 2010

இன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.


சமூக முரண்பாடுகளை களையும் வண்ணம், சமூகத்தை வழிநடத்தக் கூடிய ஒரு முன்னேறிய சமூக முன்னோடிகள் பிரிவு இன்று இலங்கையில் கிடையாது. இதனால் சமூகமோ பல முனைகளில் ஒடுக்கப்படுகின்றது. ஓடுக்குபவன் முரண்பாட்டுகளுக்கு பின்னால், மக்களை பிரித்து வழிநடத்துகின்றான்.

விளைவு சமூகம் பல முனைகளில், பாரிய சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. மனிதனாக வாழ்வதற்குரிய எந்த அடிப்படையான வசதிகளும் இன்றி தத்தளிக்கின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. மக்களுக்கு இடையில் திணிக்கப்பட்ட பிளவுகளால், சமூகங்களுக்கு இடையில் பல பிளவுகள். பிளவுகள் கொண்ட சமூகமாக மொத்த நாடும் மாறியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் இடத்துக்கிடம் வேறுபட்டு நிற்கின்றது. பல முரண்கொண்ட முரண்பாடுகளுடன்,...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, January 19, 2010

ஏழைக்கு ஒரு நீதி; பணக்காரனுக்கு ஒரு நீதி. – இதுதான் சட்டத்தின் ஆட்சி!

இந்தியாவில், சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர்களது அறியாயை எள்ளி நகையாடும் சம்பவம் ஒன்று அண்மையில் நடந்துள்ளது. விடுதிப் பணிப்பெண் ஜெசிகா லாலை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறையில் உள்ள மனு சர்மா, நன்னம்பிக்கை விடுப்பில் (பரோல்) வெளிவந்து ஆட்டம் போட்ட விவகாரம், சட்டத்தின் ஆட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளது.


மூன்று முறை காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்தவரும், இந்திராகாந்தியின் நெருங்கிய நண்பரும், அரியானா மாநிலத்தின் முக்கிய காங்கிரசுத் தலைவருமான விநோத் சர்மாவின் கோடீசுவர மகன்தான் மனு சர்மா. இவனும் இவனது நண்பர்களும் சேர்ந்துகொண்டு 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று பின்னிரவில், தில்லியில் ஒரு மது விடுதியில் ஜெசிகா லால் என்ற பணிப் பெண்ணைச் சுட்டுக் கொன்றனர். அந்த வழக்கில் மனு சர்மாவின் குற்றம் நிரூபிக்கப்பட்ட தாலும், இக்குடிகார கொலைகாரனுக்கு எதிரான போராட்ட நிர்பந்தத்தாலும் தற்போது தில்லி திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான்.

இந்நிலையில், இவனது தாயின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


யாழ் சமூகம் 20 வருடத்துக்கு முந்தைய மாதிரி ஒரு சமூக அமைப்பல்ல!?

நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.


அவர்கள் யுத்த சிதைவுகளை வைத்துக் கூறவில்லை. சுற்றுவட்டாரத்தில் நடந்த மாற்றத்தை வைத்துக் கூறவில்லை. கால் இடறும் வண்ணம் உள்ள இராணுவ நடமாட்டத்தை வைத்துக் கூறவில்லை. அவர்கள் எதைக் வைத்துக் கூறுகின்றனர்.

அது தன் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அது சார்ந்த வாழ்வியல் முறையையும் இழந்து, நிற்கும் லும்பன் தனத்தை வைத்துக் கூறுகின்றனர். ஆம், இன்றைய யாழ் சமூகம் தன் வாழ்வுசார் சமூகப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கூட இழந்து நிற்கின்றது. இதுதான், இவர்கள் சொல்;லும் செய்தி. அது தன் நுகர்வு வெறியால் வெம்புகின்றது. லும்பன் குணாம்சம் கொண்ட சமூகமாக மாறி, தனிமனிதர்களைச் சுற்றிய ஒரு உலகம் கட்டமைக்கப்பட்டிருகின்றது. லும்பன் தனத்துடன் கூடிய சுயநலம், எல்லா சமூக விழுமியங்களையும் அழிக்கின்றது.

பணம் தான் வாழ்வின் விழுமியமாக, அதை உழையாது பெற்று வாழ்வதும், வரைமுறையின்றி நுகர்வதும் இலட்சியமாகின்றது. உலகமயமாதல் சந்தை முதல் நாடகத் (சீரியல்) தொடர்வரை இதற்கு அமைய, உழைப்பில் இருந்த யாழ் சமூகத்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்'!

சாங்குயிங் என்ற நகரம், சீனாவின் மேற்கேயுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தைச் சேர்ந்த லீ குயாங் என்பவர், சீன "கம்யூனிஸ்ட்' கட்சியின் செல்வாக்குமிக்க அதிகாரி. அவர் ஒரு பெரும் தொழிலதிபர்; கோடீசுவரர்.

வீட்டுமனைத் தொழிலிலும் நகரின் வாடகைக் கார் போக்குவரத்திலும் அவர்தான் ஏகபோக அதிபர். இது தவிர, ஏராளமான சூதாட்ட சாராய களிவெறியாட்ட விபச்சார விடுதிகளையும் போதைமருந்து வியாபாரத்தையும் சட்டவிரோதமாக அவர் நடத்தி வந்தார். நவீன ஆயுதங்களைக் கொண்ட குண்டர் படையையும் அவர் வைத்திருந்தார். எனவே, சாங்குயிங் நகரில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர்தான் இந்நகரின் ""ஞானத் தந்தை''!

நான்காண்டுகளுக்கு முன்பு, இந்நகரைச் சேர்ந்த ஹூவாங் கோபி என்ற 47 வயதான பெண்மணி, தன்னுடை ய வீட்டுமனையை இவருக்குத் தர மறுத்தார். விளைவு? அவரின் கண் முன்பாகவே அவரது கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது வீடு நாசமாக்கப் பட்டது. குற்றுயிராக அவர் தெருவில் வீசியெறிப்பட்டார். இக்கொடுஞ்செயலைப் பற்றி அவர் போலீசில் புகார் தெரிவித்தார். நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், லீயின் வானளாவிய அதிகாரத்தை எதிர்த்து அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ, போலீசோ எதுவும் செய்ய மறுத்தன. ஹூவாங் கோபியின் துயரமும் லீயின் கொட்டமும் ஏதோ விதிவிலக்கான சம்பவம் அல்ல. சீனா முழுவதும் நடந்துவரும் கம்யூனிசப் போர்வையணிந்த தனியார் முதலாளிகளின் அட்டூழியங்களுக்கும் பயங்கரத்துக்கும் ஒரு உதாரணம்தான் இந்தச் சம்பவம்.

சாங்குயிங்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, January 18, 2010

பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும்-எம்.ஏ. சுசீலா

பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்;அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக…மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.

இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான சோகக் கதையைச் சொல்லி நெக்குருக வைக்கிறது.......

இதன் உள்ளர்ந்த நோக்கம் அனுதாபத்தை மட்டும் கிளர்த்திவிட்டு ,அங்கலாய்ப்புக்களைச் சம்பாதித்துக் கொள்வதல்ல.
பாரதி சொல்வதைப் போன்ற வெற்றுப் புலம்பல்களும்,பரிதாபப் பெருமூச்சுக்களும், உச்சுக் கொட்டல்களும்,இரங்கல் தீர்மானங்களும் இவர்களுக்குத் தேவையில்லை.சமூக விலக்கம்,மனித ஜீவிகளாகவே மதிக்கக் கூசும் மனத்தடைகள் இவற்றிலிருந்து சமூகம் விடுபட்டாக வேண்டும் என்பதே இந்த உரைவழி சுனிதா கிருஷ்ணன் விடுக்கும் செய்தி.

வலியின் கடுமை…அதன் வீரியம் இவற்றின் நிஜமான தாக்க........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, January 17, 2010

அடிப்படை நேர்மையற்ற இலக்கிய திருட்டில் ஈடுபடும் "மே18" என்ற சதிக் கும்பல் (வியூகம் : பகுதி 04)

மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள். தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.

இந்த வியூக அரசியல் எப்படிப்பட்டது? அதன் தார்மிக நேர்மை எப்படிப்பட்டது?

1. கடந்தகால மக்களுக்கான போராட்டங்களையும், தியாகங்களையும் மறுப்பதுடன், அந்த அரசியலையும் (மார்க்சிய லெனிய மாவோ சிந்தனையையும்) தூற்றுகின்றனர்.

2. கடந்தகால எமது விமர்சனங்களை திருடுகின்றனர். அதாவது இலக்கிய திருட்டில் ஈடுபடுகின்றனர். எமது விமர்சனம் முன்வைத்த வர்க்க கண்ணோட்டம் சார்ந்த அரசியல் சமூகக் கூறுகளை நீக்கி, தன்னியல்பு சார்ந்ததாக அதைத் திரித்து தமது கண்டுபிடிப்பாக வெளியிடுகின்றனர்.

3. மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைமுறையை "மார்க்சியத்தின்" பெயரில் மறுத்து சேறடிக்கின்றனர்.

"வியூகம்" இதழின் இறுதிக் கட்டுரையான "விடுதலைப் போராட்டமும் புலிகளும்" புலியை விமர்சிக்கின்றது. இந்த விமர்சனம் புலியை "........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் … செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்ஓ கெயிட்டியே!…..

ஓ கெயிட்டியே!…..

இவ்வருடத்திலாவது எம்மை நிம்மதியாக மனிதனாக வாழவிடு என புத்தாண்டை வேண்டுவோம். ஆனால் இப்புத்தாண்டு பிறந்ததிலிருந்து அரைமாதக் கலன்டர் கடதாசியைக் கூட கிழிப்பதற்கிடையில் இயற்கையின் சீற்றம் கெயிட்டியை (ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்களையும் பல பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்களையும்) காவு கொண்டுள்ளது. நான்கு லட்சம் மக்களை காயப்படுத்தியுள்ளது.

இவ்வுலகின் அதிகாரத திமிர் கொண்ட ஆளும் சுரண்டும் வர்க்கம் எம்பூமியின் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி இயற்கையை அழிப்பது ஒருபுறம். பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அதை போர்களாக்கி உலக மக்களை அழிப்பது இன்னொருபுறம். இயற்கை சீற்றம் கொண்டு மழையாய், வெள்ளப்; பெருக்காய், பெருங் காற்றாய், சூறாவளியாய், நிலநடுககமாய், சுனாமியாய், தொற்று நோய்களாய் எம்மானிடத்தை அழிப்பது மற்றொர்புறம். இவவுலகின் மக்கள் அதிகாரச் செருக்கு, இயற்கைச் சீற்றததிற்கும் ஏதிராகப் போராடுகின்றார்கள். போராடியே தீரவும் வேணடு;ம். மனிதகுலத்தின் வரலாறு அதிகாரத்திற்கும் – இயற்கைக்கும் எதிரான போராட்டமே. இன்றைய இவ்வுலகம் பற்பல லட்சம் வருடங்களாக மக்களின் போராட்டத் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டதே! அண்மையில் அமெரிக்கா கெயிட்டியை ஆக்கிரமித்த போது, அந்த மக்கள் சிந்திய இரத்தம் இன்னும் காயவில்லை, அதற்குள் இயற்கை அந்த மக்களை கொன்று குவித்துவிட்டது. கெய்ட்டி மக்களின் தியாகளுக்கும், மரணங்களுக்கும் தலைசாய்ப்போம்.

சத்தியவான்களின் குற்றச்சாட்டுக்கள்

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறு தமது நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் முஸம் மிலலுக்கு மூன்று கோடி ருபா லஞ்சம் கொடுத்து விலை பேசப்பட்டதாம். அதில் முப்பது லட்சம் வெள்ளவத்........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்