தமிழ் அரங்கம்

Saturday, February 21, 2009

குண்டுகளுக்கு ஓடிக்கொடுக்கும் வன்னி மக்களும் குண்டுச்சட்டி அரசியலும் : ரவி (சுவிஸ்)

புலிகளின் இறுதிக் குறுகிடமாய்ப்போயுள்ள முல்லைத்தீவை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக இலங்கை இராணுவம் அறிவித்து பல வாரங்களாகிவிட்டது. இடமிடமாய்ப் பெயர்ந்த மக்களும் இடம்பெயர்ந்த மக்களும் இந்த வன்னிப் போர்ப் பொறியினுள் அகப்பட்டுப்போயுள்ளனர். விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் பாதுகாப்பு அரணாக பலியாகிப்போயிருக்கிறார்கள் அவர்கள். அவர்களின் வெளியேற்றத்தை புலிகள் தடுத்துவைத்துள்ளதாக எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனங்களும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

அதேநேரம் அரசு அவர்களின் வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் அல்லது உத்தரவாதப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர்களுடன் இருந்த சர்வதேச மற்றும் உள்ளுர் உதவிநிறுவனங்களை வன்னியிலிருந்து வெளியேற்றிய கொடுமை அந்த மக்களிடம் அச்சவுணர்வையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி பாதுகாப்பு வலயத்துள் வருபவர்களில் கொலைசெய்யப்படுபவர்கள்; போக மீதமானவர்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைபடுகிறார்கள். சுற்றிவர முட்கம்பிகள். உறவினர்களைப் பார்க்கமுடியாது. விசாரணைகள் வேறு. அவர்கள் தாம் விரும்பும் பகுதிக்கு சென்று தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகளுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்


உங்கள் இருப்பு நீடிக்க வேண்டுமென்றால், உங்கள் போராட்டத்தை தமிழ்மக்கள் போராட்டமாக மாற்றுங்கள். போராட்டத்தை உங்கள் நலனில் இருந்தல்ல, தமிழ் மக்கள் நலனில் இருந்து திரும்பிப் பாருங்கள்.

இதன் மூலம் நீங்கள் இழைத்த தவறுளை திருத்துங்கள். நீங்கள் எந்த மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றீர்களோ, அவர்களைப் பாதுகாக்க முனையுங்கள். அவர்களை சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மக்களின் உரிமைகளை, உங்கள் பெயரில் தோற்கடிக்க அனுமதிக்காதீர்கள். இந்தத் தவறை புரிந்து, அதைத் திருத்துங்கள்.

இன்று மரணிக்கும் மக்கள் எங்களுடையதும், உங்களுடையதும் இரத்த உறவுகள். சொந்தங்கள்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : நெல்லுக்குப் பாய்ந்தது தெரிகிறது புல்லுக்குப் பாய்ந்தது…?

இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணம் ரூ. 60,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

1991ஆம் ஆண்டிலேயே உலக வங்கி தொலைபேசித் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டுமென இந்தியாவிற்கு உத்தரவிட்டிருந்தது. அப்போதிருந்த நரசிம்ம ராவ் அரசும் இதைச் சிரமேற்கொண்டு அமல்படுத்தியது. எல்லா பகாசுரக் கம்பெனிகளும் களத்தில் குதித்து, அரசிடமிருந்த தொலைபேசித் துறையின் வளத்தை ஊழல் உதவியுடன் முழுங்க ஆரம்பித்தன. அப்பொது தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் சி.பி.ஐ கட்டுக்கட்டாய்ப் பல கோடி பணத்தைக் கைப்பற்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Friday, February 20, 2009

புலிப்பினாமியாகி வரலாற்றை திரிக்கும் கனடா தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்)


இப்படி மக்களுக்காக முன்பு குரல் கொடுத்த பலர் ஒன்றில் புலியாக அல்லது அரசு சார்பாக மாறி நிற்கின்றனர். இதைத்தான் முன்பு புலி கோரியது. துரோகி அல்லது தியாகி என்றது. இதையே நவீன பாசிட் கோத்தபாயவும் அண்மையில் கூறினான்;. ஒன்றில் நீங்கள் புலி அல்லது அரசு சார்பானவர்கள், இதற்கு வெளியில் எதுவுமில்லை என்றான். இதையே இன்று பலர் தம் சொந்த நடவடிக்கை மூலம் நிறுவி வருகின்றனர்.

ஆழ்ந்த உறக்கத்தில் போன தேடகம், திடீரென நித்திரையால் எழும்பி ஐயோ தமிழ் மக்களை கொல்லுகின்றனர் என்று புலம்புகின்றனர். தம் தேடக லேபலை பயன்படுத்தி, புலிப் பினாமியாகி அறிக்கை வெளியிடுகின்றனர். இதுவரை தமிழ் மக்கள் அழியவில்லiயா? இன்று மட்டும் தானா அழிகின்றனர். எம்மினத்தின் அழிவு வரலாற்றை திரிக்கின்றனர்.

இவர்கள் வெளியிட்ட அறிக்கை, இலங்கை இந்திய அரசின் இனவழிப்புக்; கொள்கையை கண்டித்திருந்தால் நாங்களும் உடன்படமுடியும். ஆனால் அது, இதன் மூலம், புலிக்கு வக்காலத்து வாங்குகின்றது. கடந்த வரலாற்றில் மக்களுக்காக போராடி மடிந்தவர்கள் எல்லார் மீதும் காறித் தூற்றி,...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சத்யம் மோசடி: தனியார்மயத்தின் மகிமை!

ஜனவரி 7, 2009 அன்று இந்தியாவை ஒரு பெரும் பூகம்பம் உலுக்கியதைப் போன்று சத்யம் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, தனது நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும், இந்தியப் பங்குச் சந்தை பரிமாற்ற வாரியத்திற்கும் எழுதிய கடிதத்தில், "கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுவனத்தின் ஆண்டு வரவுசெலவு கணக்குகளில் 7,106 கோடி ரூபாய் அளவிற்குத் தில்லுமுல்லுகள் செய்திருப்பதாக''த் தானே வலிய வந்து ஒத்துக் கொண்ட செய்தி அன்று வெளியாகியது.

"சத்யம் நிறுவனத்திற்குப் பல்வேறு வங்கிகளில் 5,040 கோடி ரூபாய் ரொக்கச் சேமிப்பாக இருப்பதாகவும், அதன் மூலம் 376 கோடி ரூபாய் வட்டி கிடைத்திருப்பதாகவும், 1,230 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், 490 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வர வேண்டிய கடனாகவும் காட்டப்பட்டிருப்பது அனைத்தும் பொய்க் கணக்கு'' என்ற உண்மையை அக்கடிதத்தில் போட்டு உடைத்து இருந்தார், ராஜு. அவர் இந்தப் பொய்க்கணக்குகளின் மூலம் தம்மாத்துண்டு சத்யத்தைப் பன்னாட்டு நிறுவனம் ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கினாரா அல்லது சத்யத்தின் இலாபத்தை உறிஞ்சித் திவாலாக்கினாரா என்பதுதான் இம்மோசடியின் பின் மறைந்துள்ள மர்மம்.

Thursday, February 19, 2009

கல்வியும் தமிழ் தேசியமும்


தரப்படுத்தல் என்ற ஒன்றை இலங்கை அரசு கொண்டு வந்த போது, இனவாத கண்ணோட்டமே அடிப்படையாக இருந்தது. இருந்த போதும் இதை எதிர்த்த தமிழ் பிரிவுகள் பிற்போக்கான மேல் தட்டு வர்க்க கனவுகளை மையமாக வைத்தும், யாழ் மேலாதிக்க மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டே இதை இன அரசியலாக்கினர்.

இந்த மேல்தட்டு கனவுகள் குறுந் தேசியமாகிய போதும், இந்த மேல் தட்டு பிரிவுகள் போராட களம் புகவில்லை. யாழ் மையவாத "எஞ்சினியர், டாக்டர்" கனவுகளை நனவாக்க தொடங்கிய போராட்டத்தில், அவர்கள் பங்குபற்றவில்லை. குறுந்தேசியம் ஆயுதப் போராட்டமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் கூட, தமிழ் மக்களுக்கு இந்த "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" சேவை ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இன்றைய தமிழின அழிப்புக்கு எதிராக கூட, புலிகளுடன் சேர்ந்து போராட முடியாது போனது ஏன்?


எமது எதிரியான இலங்கை, இந்தியா, ஏகாதிபத்தியம் அனைத்தும், எம் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது. அவன் எப்படி, எந்த வழியில் எம் மக்களின் மேல் யுத்தம் செய்கின்றானோ, அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். எதிரியின் நுட்பமான ஓவ்வொரு செயலையும் நாம் முறியடிக்க வேண்டும். எதிரி எவற்றை தன் ஆயுதமாக தம் கையில் எடுக்கின்றானோ, அதை தவிடுபொடியாக்க வேண்டும். அதை புலிகள் செய்ய முடிவதில்லை. நாம் அதை செய்யக்கோருகின்றோம்.

ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை புலியிடம் என்ன சொல்கின்றது? ஆயுதத்தை கீழே வை என்கின்றது. மக்களை விடுவி என்கின்றது. இதையே சிங்கள பேரினவாதம் கொக்கரித்தபடி கூறுகின்றது. இதற்கு வெளியில் அவன் பிரச்சாரம் செய்யவில்லை.

இப்படி எதிரி தமிழ் மக்களின் நண்பனாக, மனிதவுரிமைவாதிகளாக தன்னை காட்ட முனைகின்றது. புலிகளை இதன் எதிரியாக காட்டுகின்றது. இதுதானே உண்மை.

இந்த பிரச்சாரம்,........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கந்தலானது அமெரிக்க மாயை!

அமெரிக்காவில் நேற்று வரை மிகவும் புகழ்பெற்ற நிதி நிறுவனமாக இருந்து வந்த பெர்னார்ட் எல். மடோஃப் இன்வெஸ்மென்ட் செக்யூரிட்டீஸ் என்ற "பிளேடு கம்பெனி' இன்று குப்புறக் கவிழ்ந்துவிட்டது. நேற்று வரை அமெரிக்காவின் மிகச் சிறந்த நிதி முதலீட்டு நிபுணராகக் கொண்டாடப்பட்ட அந்நிறுவனத்தின் அதிபர் பெர்னார்ட் மடோஃப், இன்று பண மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு "420'' குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிறுவனம் ஏறத்தாழ 5,000 கோடி அமெரிக்க டாலர் (இரண்டு முதல் இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீட்டாளர்களின் பணத்தை ஏப்பம் விட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை சூதாடி மடோஃபின் நிறுவனம் இத்துணை பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க அரசின் எந்தவொரு புலனாய்வு அமைப்பும் ஆராய்ந்து கண்டுபிடித்து விடவில்லை. மாறாக, நமது நாட்டின் சத்யம் நிறுவன அதிபர் போல, பெர்னார்ட் மடோஃபே தனது நிறுவனம் செய்துள்ள பண மோசடிகளை ஒத்துக் கொண்டுவிட்டார். இத்துணைக்கும் மடோஃப் "முதலீடு' என்ற பெயரில் நடத்தி வந்த மோசடிகள், கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிக்கலானதும் அல்ல.

Wednesday, February 18, 2009

இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

நிலச் சூறையாடலில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், பொருளாதார அடிப்படைகளையும் பரந்த தளத்தில் சிங்கள இனவாதிகள் அழித்தொழித்துள்ளனர். இதைத் தமிழ் தேசியம் இன்று வரை எதிர்த்துப் போராடவில்லை. குறுந் தேசியமல்லாத தேசிய போராட்டம் இந்த நிலம் சார்ந்தும், அந்த மக்களின் உழைப்பு சார்ந்தும் போராடியிருக்க வேண்டும். பிரதானமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அடிப்படையாக கொண்டு யாழ் தேசியமாகவே குறுந் தேசியம் வளர்ச்சி பெற்றது. சூறையாடப்பட்ட நிலத்தில் வாழ்ந்த மக்களையிட்டும், அவர்களின் அடிப்படை பொருளாதார வளங்கள் சார்ந்தும் தேசியத்தை முன்னெடுக்கத் தவறி, குறுந் தேசியத்தை தனது அரசியலாக்கியது.

தேசிய அழிப்பில் பாரம்பரிய நிலம், அதன் மேலான பொருளாதாரம், அது சார்ந்த பண்பாடுகள், அதை அடிப்படையாகக் கொண்ட மொழி அழிக்கப்பட்டது. தேசிய அழித்தொழிப்பு வரலாற்றில் முக்கியமான இரண்டில் இது ஒன்றாகும். மற்றையது மலையக மக்கள் மேல் நடத்தப்பட்ட ஒடுக்குமுறையாகும். இவை இரண்டிலும் தொடங்கிய இனவழிப்பு விரிவாகி பல்வேறு துறைகளிலும் மாறிச்சென்றது..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களின் எதிரிகளோ பலர்


இதை அண்டி வாழும் ஓட்டுண்ணிகளையும், தமிழ் சமூகம் பல்வேறு தளத்தில், வௌ;வேறு முகத்துடன் அடையாளம் காண்கின்றனர். ஆனால் இந்த எதிரிகள் பற்றி மயக்கம், தெளிவின்மை தமிழ் சமுகத்தில் சூழல் சார்ந்து, ஒரு முரண்பாடாக இருப்பதும் உண்மை. இது மக்களை மக்களுக்காக போராட வைப்பதை தடுத்து நிறுத்துகின்றது.

எம் அனைத்து விமர்சனமும், முயற்சிகளும், தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட வழிகாட்டுவது தான். தமிழ் மக்கள் வௌ;வேறு தளத்தில் சந்திக்கின்ற நெருக்கடிகளை பொதுமைப்படுத்தி, அதை நோக்கி மக்களின் செயலை கோருவதுதான். இதற்கு வெளியில் வேறு எந்த அரசியல் நோக்கமும் எம்மிடம் கிடையாது. எந்த குறுகிய அரசியலை நாம் ஆதரிக்கவும், இதன் பின்னால் செல்லவும் போவதில்லை. மக்களின் விடுதலைக்கு உதவாத, எந்த இடைக்கால வழிகாட்டலையும் தீர்வுகளையு.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிங்கள பேரினவாதம் மக்களை படுகொலை செய்வதில் இருந்து மீட்க மறுத்து, அதற்கு உதவியதால் எமது ராஜினாமா

இன்று சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களை கொத்துகொத்தாக கொல்லுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கவே தாம் போராடுவதாக கூறிய புலிகள், தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு பதில், அவர்களைப் பலியிட வைக்கின்றது. பின் அதை தம் சொந்த சுயநலத்துக்காக பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழ்மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை புலிகள் இன்று மறுத்து நிற்கின்றனர். இந்த வகையில் இன்று தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, தமிழ் மக்களுக்கும் பொது அமைப்புகளுக்குமே உண்டு. ஆனால் பொது அமைப்புகள் புலிகளின் வால்களாக மாறி, தமிழ்மக்களை கொல்வதை ஊக்குவித்து அதை வைத்து பிரச்சாரம் செய்கின்றது.

இதை மறுத்தால் புலியின் சர்வாதிகார வழியில் அணுகுகின்றது. இதுபோல் தான் 1985 களில் பின்னால் எம் மண்ணில் இருந்து சகல மாற்றுக் கருத்துக்களையும், மிக திட்டமிட்ட முறையில் புலிகள் அழித்தொழித்தனர். அத்துடன் எம் மண்ணில் இருந்த சகல பொது.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, February 17, 2009

புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்

தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது. இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.

புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது. மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள், அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.

இதன் வரலாற்று வேர் ஆழமானது. பேரினவாதம் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்களை எதிர்கொள்ளவே இயக்கங்கள் தோன்றின. அவை படிப்படியாக சமூகவிரோத குண்டர் குழுக்களாக, கொலைகாரக் குண்டர்களாக, மாபியாக்களாக, அன்னிய கூலிக் குழுக்களாக சிதைந்து சின்னபின்னமாகினர். இதன் மூலம் மொத்த மக்களையும் தமக்கு எதிராக நிறுத்தினர். இவர்களிள் இந்த சொந்த நடத்தையைத்தான் தேசிய விடுதலை என்றனர். மக்களுக்கு எதிரான இந்த துரோகத்தையும், சமூக விரோதத்தையும் எதிர்த்தவர்களை, துரோகியாக காட்டிக் கொன்றனர்.

இந்த மக்கள் விரோத அரசியல்..................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பகுத்தறிவை இல்லாதாக்கும் பிரச்சாரங்கள்

ஒரு சமூகத்தின் அவலம், எதையும் சுயமாக சீர்தூக்கி பார்க்க முடியாது இருத்தல் தான். பகுத்தறியும் மனித உணர்வை இழந்து, மலடாகி வாழ்தல் தான். மற்றவர்களின் சுய தேவைக்கு ஏற்ப, என்னை நான் அறியாது இழத்தல் தான். என் உழைப்பு மற்றவனால் சுரண்டப்படுவது தெரியாது நாம் எப்படி இருக்கின்றோமோ, அப்படித்தான் இதுவும்.

இதற்கு அமைய நாம் மனிதத்தன்மை இழந்து விடுகின்றோம். உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் எந்த இடைவெளியும் இன்றி போகின்ற சமூகம், சமூகத்தில் நிலைத்து நீடித்து நிற்க முடியாது. மற்றவர்களின் தேவைக்குள் சிதைந்து போகின்றது.

இதைத்தான் புலிகளும் அரசும் செய்கின்றது. ஒருபக்கத்தில் மக்கள் அல்லலுற்று அவலப்படும் எத்தனையோ விதமான வாழ்க்கை. மறுபக்கத்தில் இதன் மேல், அரசும் புலிகளும் நடத்துகின்ற பிரச்சாரப் போர். இதில் எதை கேட்கின்றனரோ, அதை நம்புகின்ற நிலையில்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 16, 2009

இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்

தமிழ் மக்களின் தம்மை ஒரு தேசியமாக இனம் கண்டு போராடுமளவுக்கு, சிங்கள பெரும் தேசிய இனவாதிகளின் இனயொடுக்குமுறை காணப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் தொடங்கிய இனவாத ஒடுக்குமுறை, சுதந்திரத்தின் பின் வேகம் பெற்றது.
இது தமிழ் இனத்துக்கு எதிராக மட்டுமல்ல, மற்றைய சிறுபான்மை இனங்கள் மேலும் கையாளப்பட்டது. இந்த பெருந்தேசிய இன ஒடுக்குமறைக்கு தமிழ் இனவாதிகளும் காலத்துக்கு காலம் ஒத்துளைத்து, இனவாதத்தை புரையோட வைத்தனர். இந்த இனவாத அரசின் கட்டமைப்புக்கு காலத்துக்கு காலம் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் பல வழிகளில் தூணாகினர். இது இன்று வரை இது ஒரு அரசியலாகவுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் இனவாதம் வர்க்கப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஒரு அரசியலாக வளர்ச்சி பெற்ற போது, அதை இடதுசாரிகள் எதிர்த்து தொடர்ச்சியான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. பராளுமன்ற எல்லைக்குள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

யூத இனவெறி பயங்கரவாதப்பேயாட்டம்

பாலஸ்தீன மக்களின் மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரையும், முற்றுகையையும் கிறிஸ்துமஸுக்குப் பிறகு இசுரேல் மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இடையே கையெழுத்தான "ஆஸ்லோ'' சமாதான ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காசா முனையைத்தான் இப்பொழுது இசுரேல் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

காசா முனை மூன்றுபுறம் இசுரேலையும், மற்றொருபுறம் எகிப்தையும், மத்தியத்தரைக் கடலையும் எல்லையாகக் கொண்ட, 270 சதுர கிலோமீட்டரே பரப்புடைய சிறிய நிலப்பரப்பாகும். காசா முனையில் இருந்து ஒரு பொருள் வெளியேற வேண்டும் என்றாலோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் காசா முனைக்கு உள்ளே வர வேண்டும் என்றாலோ, அதற்கு இசுரேலின் அனுமதி கிடைக்க வேண்டும். இவ்வளவு ஏன், காசா முனையைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனர், பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசமான மேற்குக் கரையில் வாழும் மற்றொரு பாலஸ்தீனரையோ, தனது உறவினரையோ சந்திக்க வேண்டும் என்றால்கூட, இசுரேலின் அனுமதியைப் பெற வேண்டும். அந்தளவிற்கு காசா முனை இசு ரேலின் முற்றுகையின் கீழ் இருந்து வருகிறது. அதனால்தான் காசா முனை உலகின் மிகப் பெரிய திறந்தவெளி சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது. இசுரேலின் இக்காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாகத்தான் 15 இலட்சம் பாலஸ்தீனர்கள் காசா முனையில் வாழ்ந்து வருகின்றனர்.

போர் என்றால்கூட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மட்டும்தான் தாக்க வேண்டும் என்கிறது, சர்வதேசச் சட்டம். ஆனால், வீடுகள், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகக் கட்டிடங்கள், மின் நிலையங்கள், குடிநீர் இறைக்கும் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிக்கும்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 15, 2009

உண்மைகளும்; கற்பனைகளும்

மிகவும் நெருக்கடிமிக்க வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்;. அதிரடியான அரசியல் நிகழ்வுகள் கூடிய ஒரு காலம். நாளை நாம் திட்டமிட்டபடி, வாழமுடியாது. இந்தியாவினால் அனைத்தும் இன்று தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்தியா உருவாக்கிய புலி மற்றும் புலி அரசியல் ஊடாகவும், இலங்கை அரசின் ஊடான இந்திய அழித்தொழிப்புக்கு ஊடாகவும், எம் வாழ்வில் இந்தியா தலையிடுகின்றது. எம் மக்களின் வாழ்வு முதல் மக்களின் சுயநிர்ணயஉரிமை வரை, இந்தியாவின் நோக்குக்கேற்ப அவை அழித்தொழிக்கப்படுகின்றது. இதை புரிந்து கொண்டவர்களை அன்று அழித்தனர். எஞ்சியவர்களை அரசியல் ரீதியாக சிதைந்தனர். ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

உறைபனி உணர்த்தும் உண்மைகள்

உறை பனியை நெருங்கிவிட்ட நடுநடுங்க வைக்கும் கடுங்குளிர்; நூறு அடிக்கு முன்னே இருப்பது கூடத் தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டம்; வாகனங்கள், ரயில்கள், விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன; குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் உறைந்து சில்லிட்டன என்று கடுங்குளிரின் தாக்கத்தை கொட்டை எழுத்துக்களில் நாளேடுகள் படம் பிடித்துக் காட்டின. வாட்டியெடுக்கும் கடுங்குளிரில் கிழிந்த சாக்குகளையே போர்வையாக்கிக் கொண்டு, கைய்யது கொண்டு மெய்யது பொத்தி நடுங்கிக் கொண்டிருந்த வீடற்றநடைபாதைவாசிகளான உழைக்கும் மக்கள் குளிரில் விறைத்து அடுத்தடுத்து மாண்டு கொண்டிருந்தனர். பீகாரில் 60 பேர்; உ.பி.யில் 50 பேர்; டெல்லியில் 20 பேர்; பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானில் 20 பேர் என குளிருக்குப் பலியான மக்களைப் பற்றிய செய்தியை இதே நாளேடுகள் துணுக்குச் செய்தியாக வெளியிட்டு அலட்சியப்படுத்தின.