தமிழ் அரங்கம்

Saturday, November 24, 2007

மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுப்பவர்கள் யார்?

பி.இரயாகரன்
24.11.2007

க்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைத் தெரியாமல், தெரியவிடாமலே அரசியல் செய்கின்றனர். யாரும் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் என்ன என்ற கேள்வியையும், அது எப்படி இந்த அமைப்பில் மறுக்கப்படுகின்றது என்பதையும் உரையாடுவது கூட கிடையாது. தனது உரிமை, தான் என்ற சுயநல எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது. சுற்றிவளைத்துப் பார்த்தால், இவர்களிடம் பொது உலக கண்ணோட்டம் கிடையாது. புலித் 'தேசியம்" புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" இதற்குள் அனைத்து சிந்தனை முறையும் வடிகட்டப்படுகின்றது. 'தமிழ் தேசியம்" முதல் 'தமிழ் ஜனநாயகம்" வரை இப்படித் தான், இதற்குள் தான் இயங்குகின்றது.


இதை உருவாக்கத்தான் உள்ளியக்க படுகொலைகள் முதல் இனம் காணப்பட்ட அரசியல் படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டன. ஒன்று இரண்டல்ல. ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். மக்களின் விடுதலைக்காக போராட முனைந்த அரசியல் முன்னணிப் படை இப்படி அழிக்கப்பட்டது. இன்று இதை அரசியல் ரீதியாக யார் தான் நினைவு கூருகின்றனர். நாம் மட்டும் தான். அவர்கள் எதைக் கோரி தம்மை தியாகம் செய்தனரோ, அதை நாம் மட்டும் தான் அரசியல் ரீதியாக இன்றும் முன்னிறுத்துகின்றோம்.


இந்த அரசியல் படுகொலைகளை செய்தவர்கள் எங்கே? அவர்கள் வேறு யாருமல்ல, இன்றும் ஆதிகக் அரசியலில் உள்ளவர்கள் தான் அவர்கள். ஜனநாயகம் பேசுகின்ற புலியெதிர்ப்புவாதிகள். தேசியம் பேசுகின்ற புலிகள். இவர்கள் தான், மக்களுக்காக போராடியவர்களை கொன்று போட்டவர்கள்.


இவர்கள் யாரும் இன்று வரை, மக்களின் அரசியல் அடிப்படை உரிமைகளை ஏற்றுக்கொள்வது கிடையாது. அதற்காக போராடியதுமில்லை, போராடுவதும் கிடையாது. இவர்களின் 'தேசியம்", 'ஜனநாயகம்" எதுவாக இருந்தாலும், இதைத்தான் செய்கின்றனர். இரண்டையும் ஒன்றுக்கு ஒன்று, எதிராக நிறுத்தி மக்கள் விரோத அரசியல் செய்கின்றனர்.


அன்று கொல்லப்பட்டவன் யார்? அவன் எதைக் கோரினான். அவன் தனது அமைப்பினுள் ஜனநாயக உரிமையைக் கோரினான். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைக் கோரினான். இப்படி அவன் சகல சுரண்டலையும் எதிர்த்தான். சகல ஒடுக்குமுறையையும் எதிர்த்தான். தனது இயக்கம் அதை ஆதரிப்பதை எதிர்த்தான். உள்ளியக்க மத்தியிலும், வெளியிலும் பிரச்சாரம் செய்தான். இயக்க தலைமைகள் இந்தக் கோசத்தை வைத்து மக்களை ஏமாற்றியது இப்படி அம்பலமாகத் தொடங்கியது. இதனால் உள்ளியக்க படுகொலைகளை வீச்சாக நடத்தினர். பின் வெளியியக்க படுகொலைகள் நடத்தினர். ஆரம்ப இயக்கப் படுகொலைகள் இவை தான்.


மக்களைச் சார்ந்து நின்று, மக்களின் அரசியல் உரிமைகளுக்கு தலைமை தாங்கியவர்கள், தாங்கக் கோரியவர்கள் கொல்லப்பட்டனர், சிதைக்கப்பட்டனர். இப்படி மக்களின் அடிப்படை உரிமைகளை முன்னிறுத்தியவன் வேட்டையாடப்பட்டான். இதை இன்று புலிகள் மட்டும் செய்வதாக காட்டுவது, புலியெதிர்ப்பு புல்லுருவிகளின் நவீன கொலைகார அரசியற் பிழைப்பாகின்றது. புலிகளைப் போல் மிக அதிக படுகொலைகளை இதற்காக நடத்தியவர்கள் இவர்கள் தான்.


இப்படி தமிழ்ச் சமூகத்தின் முன்னணிச் சிந்தனைமுறையை, அறிவியல் முறையையும் வெட்டியெறிந்தனர். தமிழ் மக்களின் உண்மையான தியாக மனப்பான்மை கொண்ட தலைவர்களை அழித்தனர். இதன் மூலமே மக்களை தமது கொலைத்தனத்துக்கு ஏற்ற மந்தைக் கூட்டமாக்கினர். கவர்ச்சி வாதம், இயக்க வாதம், கோசவாதம், நம்பிக்கைவாதம், தனிமனித வழிபாட்டு வாதம் என்று குறுகிய வரட்டு எல்லைக்குள், சமூகத்தின் அறிவை அதன் கருத்தை, அதன் மனிதத்தை வெட்டிச் சிதைத்தனர். பின் இதற்குள் இன்று வரை வம்பளந்து, அவர்கள் அரசியல் செய்கின்றனர்.


மக்கள் தனக்காக, தனது உரிமைக்காக போராடக் கூடாது என்பது இவர்களின் அடிப்படையான அரசியல் சித்தாந்தம். மக்கள் சுய உணர்வை பெறுவதையும், அது சார்ந்த எந்த அறிவுத் தேடலையும் தடுப்பதே, இவர்களின் மைய அரசியல் நீரோட்டம். இதை இன்று வெறும் புலிகள் மட்டும் செய்யவில்லை. புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பும் கூடிச் செய்கின்றது. தனித்தும் கூடியும் செய்ய கூட்டுத் தளங்களும் உண்டு.


இதைத் தான் அன்று புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத அனைத்து மிகப்பெரிய ஆயுதமேந்திய இயக்கங்களும் செய்தன. 1983 -1984 களில் அரசியல் ரீதியாக உட்படுகொலைகளை பெருமெடுப்பில் செய்யத் தொடங்கினர். இதன் தொடச்சியில் தான், இன்றுவரை தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையைப் பற்றிப் பேச முடியாத நிலை. அதை இன்று சிந்தனை முறையிலும் கூட வெளிப்படுத்த முடியாதளவுக்கு அரசியல் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது.


மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எதிரானதா? அதாவது இது தேசியத்துக்கு எதிரானதா? ஜனநாயகத்துக்கு எதிரானதா? அறிவியல் பூர்வமாகவும் சரியான மனிதத் தன்மை உள்ள ஒவ்வொருவரும் அரசியல் ரீதியாக பதிலளித்தேயாக வேண்டும். இன்று அரசியல் செய்கின்றவர்கள் இதை ஏற்று, மக்களின் உரிமைகளுக்காக செயற்படுகின்றனரா? சமூகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் சுயமாக அரசியல் ரீதியாக பதிலளித்தாக வேண்டும். ஒவ்வொன்றையும் இதனடிப்படையில் பரிசீலித்தாக வேண்டும்.


மக்களின் உரிமையை மறுக்கின்றவர்கள், சமூதாயப் பிரச்சனைக்கு தீர்வை எங்கிருந்து எப்படித் தேடுகின்றனர். யார் மக்களின் அரசியல் உரிமையை மறுக்கின்றனரோ அந்த அரசியலை, மாற்று வழியில் வைப்பதை மாற்று அரசியல் என்கின்றனர். மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை முன்வைத்து, மக்கள் தமது பிரச்சனையைத் தீர்க்கும் வழியை பிரச்சாரம் செய்வது கிடையாது. அதனடிப்படையில் மக்களை அணிதிரட்டுவது கிடையாது. புலி மற்றும் புலியெதிர்ப்பு இரண்டும், இப்படித்தான் ஒருங்கிணைந்தும் பிரிந்தும் இயங்குகின்றது. மக்களின் அரசியல் சுபீட்சத்துக்கு இவர்கள் வைக்கும் அரசியல் தீர்வு தான் என்ன? யாராலும் இதை விளக்க, எந்த அடிப்படை அரசியலும் கிடையாது.


இப்படி மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று, புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பு கூறுகின்றது. இதனால் மக்களின் அடிப்படை உரிமையைப் பேச முனையும் எம்மை, கடுமையாக எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியாக இதை மறுக்க முடியாது என்பதால் அரசியல் மௌனமும், சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்தில் தனிநபர் அவதூறு தாக்குதலையும் கண்மூடித்தனமாக நடத்துகின்றனர். இதனால் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற, அவர்களின் அரசியலை கனவை பாதுகாக்க கனவு காண்கின்றனர்.


நாம் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எப்படி எதிரானது என்றால், வரட்டுத்தனமாக விரட்டிப் பதிலளிக்கின்றனர். புலித் தேசியமே அனைத்துக்கும் முதல் என்கின்றனர். இல்லை புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" அனைத்துக்கும் முதல் என்கின்றனர். இப்படி வரட்டுத்தனமான வரட்டு வாதங்கள். உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள், இந்த இருபோக்குகளையும் பின்பற்றுகின்ற அரசியலுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இப்படி இவர்கள் அரசியல் பார்வையிலே, மக்கள் விரோத அரசியல் உணர்வு வறட்டுத்தனமாகி மிதப்பாகிக் கிடக்கின்றது. அது மக்களுக்கு எதிராகவே, பலதளத்தில் தொடர்ந்து இயங்குகின்றது.


மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுப்பதே, சுரண்டும் வர்க்கத்தின் ஒரேயொரு ஆயுதம். இது மட்டும் போதும், அவர்கள் யார் எந்த வேஷத்தில் வந்தாலும் புரிந்து கொள்ள. இதை எதிர்த்துப் போராடுவது தானே, மனித வரலாறு.


ஸ்ராலின் மீதான அவதூறுகளிற்கான பதிலாக கட்டுரைகளின் தொகுப்பு

பாமினி எழுத்துருவில் கட்டுரைகள் உள்ளன எழுத்துருவை தரமிறக்குக

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்

 1. முன்னுரை - தூற்றுவதலோ, திரிப்பதலோ, திருத்துவதலோ வர்க்கப் போராட்டங்கள் நின்று விடுவதில்லை
 2. ஸ்ராலின் ஏன் மறுக்கப்பட்டார்?, ஏன் தூற்றப்பட்டார்?, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்?
 3. யூகோஸ்லாவிய பற்றி ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிரொட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும்
 4. யூகோஸ்லாவியா பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி
 5. மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது
 6. இன்று வரையான ஸ்ராலின் அவதூற்றின் அரசியல் எது?
 7. சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி
 8. முதலாளித்துவ மீட்சியும், ஸ்ராலின் வர்க்கப் போராட்டமும்
 9. 1917 இல் போஸ்விக் கட்சியில் ஒரு தனிக்குழுவாக இனைந்தது முதலே, ட்ராட்ஸ்க்கிய சதி அக்கபக்கமாகவே இயங்கியது.
 10. ட்ராட்ஸ்கிய சதியில் வெளிநாட்டு உளவாளிகளின் தொடர்புகள் குறித்து
 11. ட்ராட்ஸ்கியம் என்பது, சதிகளை மூலமாக கொண்டது.
 12. "தனி நாட்டில் சோசலிசம்" என்பது ட்ராட்ஸ்கியமாகும்
 13. ஸ்ராலினை நிராகரிக்கும் கோட்பாடு, மார்க்சிய உள்ளடக்கம் எதுவுமற்ற வெற்றுப் பிதற்றுதலே.
 14. கம்னிசத்தை நோக்கி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதே, ஸ்டாலின் பற்றி, மார்க்சியம் முன்னிறுத்தும் ஆய்வுரையாகும்.
 15. ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்க போராடிய ஒரு வர்க்கத்தின் தலைவர்
 16. யார் இந்த ஸ்டாலின்
 17. பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன?, ஏன்?, எப்படி? இழைக்கப்பட்டது
 18. ஸ்டாலின் பற்றிய அவதூறுகளின் தோற்றமும், அதன் உள்ளடக்கமும்
 19. வர்க்கப் போராட்டம் மூலம் எதிரி ஒழிக்கப்பட்ட போது...
 20. வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட்
 21. ராபர்ட் கான்குவஸ்ட
 22. அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின்
 23. அவதூறு மூலம் சோவியத் மக்களை கொன்று, அவர்களின் முதுகில் எறி மார்க்சியத்தை கழுவில் எற்றினர்
 24. சோவியத் மக்கள் தொகை புள்ளிவிபரம் அவதுறை நிர்வாணமாக்கின்றது

 25. மார்க்சியத்தின் பெயரில் ஏகாதிபத்திய கைக்கூலிகள்
 26. இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - முழுவதும்

Friday, November 23, 2007

யாழ் மக்கள் சுபீட்சமோ, பேரினவாத 'ஜனநாயக'த்தில் கிடைக்கின்றதாம்!

பி.இரயாகரன்
23.11.2007

னநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை முறை எதுவும் கிடையாது. நாம் இதில் இருந்து வேறுபட்டுப் பார்க்கின்றோம். மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்து இதை நோக்குவதால், புலி மற்றும் புலியெதிர்ப்பு பிரிவுகளிடம் இருந்து கடுமையான எதிர்த்தாக்குதலை ஒரே நேரத்தில் சந்திக்கின்றோம். அவர்கள் இதைக் கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள முடியாது என்பதால் தான், தனிமனித அவதூறுகளாக சந்திக்கின்றோம். அரசியல் ரீதியாக இதைப் புறந்தள்ளிக்கொண்டு தான், மக்களின் உரிமைகளை நோக்கி முன்னிறுத்தி முன்னேற முடியும். இதை எமது அனுபவம் மட்டுமின்றி, விமர்சனமும் சுயவிமர்சனமும் கூட எடுத்துக் காட்டுகின்றது.

பேரினவாத 'ஜனநாயக"த்தில் மக்களுக்கு 'ஜனநாயகம்" கிடைக்கின்றதா? ஆம் என்று சொல்லுகின்ற, அதை ஆதரிக்கின்ற, கண்டும் காணாமல் விடுகின்ற வகையில் புலியல்லாத 'ஜனநாயக" தளங்கள் இயங்குகின்றது. இதற்குள் தான், இப்படித்தான் புலியல்லாத தளங்கள் அரசியல் பேசுகின்றது. ஜயா 'ஜனநாயக" வாதிகளே, இது எப்படி? என்று கேட்டால், நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். நீ ஒருவன் தானே என்று நக்கலும் நையாண்டியும் அடித்து குலைக்கிறார்கள், கடிக்கின்றார்கள் கடித்துவிட்டு மனநோய் மருத்துவமனைக்கு அனுப்புகின்றார்களாம். இதை மீறி எதையும் அவர்களால் புதிதாக சொல்ல முடிவதில்லை.

இப்படித்தான் புலிப் பாசிசத்திலும் இருந்து, யாழ் மக்களை பேரினவாத அரசு காப்பாற்றியுள்ளதாக கூறுகின்றனர். யாழ் மக்களின் வாழ்விலோ, 'ஜனநாயகம்" பூத்துக் குலுங்குகின்றதாம். இந்தக் கண்கொள்ளாக் காட்சி தான், புலியெதிர்ப்பு 'ஜனநாயக" அரசியலாகின்றது.

இப்படி யாழ் மக்களுக்கு பேரினவாத அரசும், புலியெதிர்ப்புக் கும்பலும், எல்லா சமூக விரோத கழிசடைகளும் வழங்கியது என்ன? யாரும் இதற்குப் பதிலளிப்பது கிடையாது.

யாழ்குடாவில் மக்கள் வீட்டை விட்டுக் கூட வெளியில் வரமுடியாத அளவுக்கு 'ஜனநாயகம்". பெடி பெட்டைகளை வீட்டுக்குள் பூட்டிவைக்க வேண்டிய அளவுக்கு, பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது. நடமாடும் சுதந்திரத்தைப் பெற்ற எந்தப் பெண்ணும், பாலியல் அடிப்படையிலான சோதனையைத் கடந்து செல்ல முடிவதில்லை. இப்படி 'ஜனநாயக"த்துக்கோ அங்கும் இங்கும் பல பக்கங்கள் உண்டு. இந்த 'ஜனநாயக"த்தில், ஒரு 'ஜனநாயக" காட்டுத் தர்பாரே நடாத்தப்படுகின்றது. எங்கும் அச்சம் பீதி கலந்த உறை நிலைக்குள் சமூகத்தை திணித்து, 'ஜனநாயகம்" தழைத்தோங்குகின்றது.

எங்கும் கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள், பாலியல் வக்கிரங்கள் ஊடாக, யாழ் குடாநாடு அதிபயங்கரமான சமூக பீதிக்குள் திணிக்கப்பட்டுள்ளது. புலிகளிடம் இருந்து மீட்கும் 'ஜனநாயகம்" இப்படித்தான் உள்ளது.

இதைத்தான் தமிழ் மக்கள், தேசியத்துக்கு பதிலான 'ஜனநாயகம்" விருப்பம் என்கின்றனர். அந்த 'ஜனநாயக"த்தில் டக்கிளஸ் ஐஜயா பொறுக்கிப் போடுகின்றார். இப்படி பொறுக்கிப் போட்டும், போட்டுத் தள்ளியும், பலர் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். தமிழ் மக்கள் தம் பின்னால் நிற்பதாக, தமது அலுவலகங்களில் காத்து நிற்பதாக, அவர் செய்யும் புண்ணியங்களை பறைசாற்றுகின்றனர். இப்படித் தான் அங்கு இங்கும் 'ஜனநாயகம்" மிகச் செழிப்பாய் தழைத்தோங்குகின்றது. இந்த பொறுக்கிப் போடுவதையும், போட்டுத் தள்ளும் 'ஜனநாயக"த்தையும் ஊர் உலகத்திற்கு பறைசாற்ற ஒரு வானொலி. அந்த வானொலிக்கு பெயர், 'ஜனநாயக" வானொலியாம். இப்படித் தான் இலண்டனில் இருந்தும் ஒரு 'ஜனநாயக" வானொலி. யாழ் மக்கள் வரை சென்று ஜனநாயகம் பேசி, ஊரோடு உறவாடுகின்றனராம்.

யாழ் மக்கள் அனுபவிக்கும் இன்றைய கொடுமைகளையும், இராணுவ கொடூரங்களையுமா அந்த 'ஜனநாயகம்" பேசுகின்றது. 'ஜனநாயக"த்தின் பெயரில் பேசுவது, அந்த மக்களின் ஜனநாயகத்தையல்ல. இப்படி 'ஜனநாயகம்" பேசுபவன் யார்? டக்ளஸ் ஐஜயா இலங்கை அரசின் காசில் 'ஜனநாயகம்" பேச, வானொலி நடத்துகின்றார். ராஜன் ஐஜயா இந்திய அரசின் காசில் இலங்கை அரசின் அனுமதியுடன் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இப்படித்தான் பலர் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இப்படி வானொலிகளிலும், இணையங்களிலும் 'ஜனநாயக" ஆய்வாளர்கள், அபிமானிகள். அவர்கள் எல்லாம் அடித்துச் சொல்வது, இது தான் சுதந்திர விவாதம், கருத்து விவாதம் என்கின்றனர்.

தாம் பேசுவது 'ஜனநாயகம்", தாம் பேசும் உரிமை 'ஜனநாயகம்" என்றால் இது அனைத்து அடக்குமுறையாளருக்கும் பொருந்தும். என்ன பேசுகின்றோம் என்பதல்லவா முக்கியம். சமூகத்தை முன்னிறுத்தாத எதுவும், பரந்துபட்ட மக்களின் 'ஜனநாயக"மல்ல.

சமூகத்தை முன்னிறுத்தாது வழிபடும் ஜனநாயகம், மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்தல்ல. இதை எதிர்ப்பவர்கள் ஒன்று புலிகள் அல்லது அரசு அல்லது நடுநிலை வேஷம் கட்டி இரண்டையும் சார்ந்து இயங்குதல் தான், 'ஜனநாயகம்" என்கின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்து, யாரும் ஜனநாயகம் பேசுவது கிடையாது. இந்த விடையத்தில் அரசியல் ரீதியாக வேறுபாடு இவர்களிடையே கிடையாது.

இதைத்தான் பேரினவாத அரசு செய்கின்றது. தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து பாதுகாப்பதாக கூறும் பேரினவாத அரசோ, மக்கள் மூச்சுக் கூட விடாமல் வைத்திருப்பது தான் 'ஜனநாயகம்" என்கின்றது. இதற்கு ஆதரவான புலியெதிர்ப்போ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது இருத்தலே, 'ஜனநாயகம்" என்கின்றனர். 'ஜனநாயகம்" வேண்டும் என்பவர்கள், இப்படி ஒன்றுபட்டு இயங்குகின்றனர். இதைத்தான் இலங்கை வாழ் தமிழ்மக்கள் எங்கும் எதிலும் அனுபவிக்கின்றனர். இப்படித்தான் யாழ் மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் 'ஜனநாயகம்" என்பது, கொலை, கொள்ளை, கப்பம் முதல் வர்த்தக சூதாடிகள் ஆட்சி செய்யும் மயான சுதந்திரம். அங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் வீட்டை விட்டு வெளியேறினால், நாம் மீண்டும் வீடு திரும்பி வருவோமா என்ற சந்தேகத்துடன் வாழ்கின்றான் . இன்று இதுவே யாழ் மக்களின் உளவியல் நோயாகிவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் தனது குடும்ப ஆண்களை பாதுகாக்க எண்ணி, சதா புலம்புவதே வாழ்க்கையாகிவிட்டது. எங்கும் அச்சம் கலந்த மயானமான "சுதந்திர" பூமி. ஒவ்வொரு பெண்களும் 'ஜனநாயகம்" போட்டுள்ள பாலியல் சோதனைச் சாவடியூடாக தப்பி வாழ முயன்று, உளவியல் ரீதியாகவே அவள் சிதைந்து போகின்றாள்.

தமது உறவுகளைத் தேடி அலையும் மனிதம். விழும் பிணத்தை நோக்கி பதறி ஓடும் மனிதக் காட்சிகள். ஓவென்று எழும் மனித ஒலங்கள், ஒப்பாரிகள். உருட்டி மிரட்டி வாங்கும் கப்பம். அதிகாரத்தைக் கொண்டே, மக்களை விலைக்கு வாங்கும் அரசியல். இப்படி 'ஜனநாயகமாய்" பூத்துக் குலுங்கும் பூங்கா யாழ் குடா நாடு.

இப்படி 'ஜனநாயகம்" அனைத்தையும் விலை பேசும் பொருளாக்கியுள்ளது. மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம், இன்று எடைக்கு விலை போடப்படுகின்றது. பொறுக்கித்தனங்களும், கைக் கூலித்தனமும், காட்டிக்கொடுப்பும், பிழைப்புத்தனமும், அரசியலாகிவிட்டது. இதுவே சிலரின் வாழ்வுக்கான சுபிட்சத்துக்கான ஒன்றாக மாறிவிட்டது.

எதையும் எப்படியும் செய்யலாம். எப்படியும் கதைக்கலாம். எப்படியும் எழுதலாம் எப்படியும் மழுப்பலாம் என்ற நிலை. இதுவே இன்றைய அரசியல் நடைமுறையும், ஏன் அறிவும் கூட அது தான். மக்களின் வாழ்வியல் கூறுகள் மீதான வெறுப்பு, அனைத்திலும் ஆட்சி செய்கின்றது.

அதிகாரத்தின் முன் வாய் திறக்க முடியாது. இயங்க முடியாது. இதை மீறினால் மரணம் என்பது "ஜனநாயகம்". ஜனநாயகத்தின் முன் கருத்து முதல் நபர் வரை இழிவாடப்படுகின்றனர். இழிவாடுவதும், அதற்கான உரிமையுமே கருத்துச் சுதந்திரமாகிவிட்டது. இவர்களைக் கொல்வது தான் சரியானது என்பது, ஆதிக்க அரசியல் கோட்பாடாகிவிட்டது. ஆளைக் கொல் அல்லது கருத்தைக் கொல். எப்படியென்றாலும் பரவாயில்லை. உனது வழியில், உனது பாணியில் தாக்குதலை நடத்து என்கின்றது. எங்கும் அராஜகம். கொலை முதல் கருத்து வரை.

அறிவு என்பது இதைத் தாண்டவில்லை. பத்திரிகைத்துறை, அறிவுத் துறை, கோட்பாட்டுத்துறை என அனைத்தும், இதற்குள் மெத்தை போட்டுப் படுக்கின்றது. மனித அவலத்தின் எல்லைக்குள், அதையே அரசியலாக்குகின்றது. அதற்கு இசைவாக இயங்குகின்றது. அவர்களின் இந்த அறநெறியோ, அறிவு சார் அரசியல் ஒழுக்கமாகி விடுகின்றது. இதையே 'ஜனநாயகம்" என்கின்றனர்.

இந்த 'ஜனநாயகம்" யாழ்குடாவில் அம்மணமாகி நிற்கின்றது. இது கிழக்கிலோ மற்றைய பகுதியிலோ இல்லை என்பதல்ல. ஆனால் யாழ்குடாவில் 'ஜனநாயக"த்தின் பெயரில் திட்டமிட்ட அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது.

தொடருகின்ற கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், உயிருக்கு உத்தரவாதம் கேட்டு சரணடைதல் என்ற எல்லைக்குள், சமூகத்தின் உயிர்த்துடிப்பான வாழ்வின் கூறுகளை எல்லாம் வெட்டி எடுத்து விடுகின்றனர். நடைப்பிணமாக மனிதம், மனிதன் நடமாடும் அளவுக்கு யாழ் குடா நாடு மாறிவிட்டது.

சர்வதேச தன்னார்வ அறிக்கைகளுக்குள் மட்டும், இதை சடங்குக்காக பதிவு செய்கின்ற எல்லைக்குள் இது சுருங்கிவிட்டது. அதையும் பேரினவாத அரசு எதிர்த்து சண்டித்தனம் செய்கின்றது. ஏகாதிபத்திய மனித உரிமைமீறல்களைக் காட்டி, தனது பாசிச நடத்தைக்கு நியாயவாதம் பேசுகின்றது. அமெரிக்கா என்ற உலகப் பயங்கரவாதியின் வழியில், இதை பயங்கரவாதப் பிரச்சனையாகக் காட்டி அடாவடித்தனம் செய்கின்றது.

மக்களோ சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர். எந்த "ஜனநாயகமும்" இதைப் பற்றி கடுகளவு கூடப் பேசுவது கிடையாது. மக்களாகிய நாம் எம்மளவிலாவது பேசியாக வேண்டும். மக்களாகிய நாம் போராடாது, எமது ஜனநாயத்தை ஒருநாளும் மீட்க முடியாது. இதற்கு வெளியில் எந்த தீர்வும் கிடையாது.

Thursday, November 22, 2007

டாடாவின் டைட்டானியம் ஆலை:மண்ணைப் பறித்து முன்னேற்றமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 கோடி ரூபாயில் டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் டாடா நிறுவனம் 2007, ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டிலேயே அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகியிருந்தது. சாத்தான் குளம், திசையன் விளைப் பகுதிகளில் உள்ள செம்மண் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என சோதனைகளைச் செய்து முடித்த டாடா நிறுவனம், ஆலைக்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்து நின்றது.


அதற்குள் தேர்தல் நடந்து, ஆட்சி மாறிவிடவே இன்றைய அரசுடன் மீண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக சுமார் பத்தாயிரத்து ஜநூறு ஏக்கர் நிலங்களை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு வழங்கும்; நிலம் வழங்கியவர்களுக்கு டாடா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்; வீடு இழந்தவர்களுக்கு டாடா நிறுவனமே மாற்று வீடுகள் கட்டித் தரும் என்பது ஒப்பந்தத்தின் சாரம்சம்.


அன்று டாடாவுடன் ஒப்பந்தம் போட்ட "ஜெ' உட்பட ஏறக்குறைய எல்லாக் கட்சிகளும், இன்றைய டாடாவுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து அறிக்கைகள் விடத் தொடங்கினர். பா.ம.க., போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைவருமே மக்களிடம் கருத்தறிவது எனக் குதிக்கவே, கருணாநிதியும் மக்களின் கருத்தறிந்த பின்பே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனக் கூறி இப்போதைக்கு சிக்கலை ஆறப்போட்டுவிட்டார்.


அருகாமை நெல்லை மாவட்டத்தில் அமெரிக்க கோக்கிற்கு தாமிரவருணியையே விற்றபோது, அதை எதிர்த்து யாரும் போராடவில்லை. போலி கம்யூனிஸ்டுகள் பெயரளவுக்கு எதிர்ப்பு வேசம் கட்டி, சூட்கேசு வந்ததும் ஒதுங்கிக் கொண்டனர். ஏற்கெனவே மே.வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலையை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு நாடெங்கும் போலி கம்யூனிஸ்டுகளின் யோக்கியதை நாறுகிறது. கருணாநிதியோ, எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் பித்தலாட்டத்தை முறியடிக்க, கருத்துக் கணிப்பு என்று இன்னோரு மோசடியை அரங்கேற்றியுள்ளார்.


தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலை எடுத்து, அதை சுத்திகரித்து டைட்டேனியம் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து டைட்டேனியம் என்ற ஆற்றல்மிக்க உலோகம் தயாரிக்கப்படுகிறது. இது இரும்பை விட எடை குறைவும், பன்மடங்கு ஆற்றலும் கொண்டது என்பதால் விண்ணூர்திகள், விண்கலங்கள், ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகைகளில் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.


இதே தேரிக்காட்டுப் பகுதிகளில் வைகுண்டராஜன் என்பவர் அடாவடியாகவும், சட்டபூர்வசட்டவிரோத வழிகளிலும் இல்மனைட் மணலை சுத்திகரித்து மூலப்பொருளாகவே ஏற்றமதி செய்து வருகிறார். டாடா ஆலை வந்தால், தனது தொழில் பாதிப்படையும் என்பதால் இது வரை சில கோடிகள் செலவு செய்து சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்கள், நாளிதழ்களில் விளம்பரம் என பலவழிகளிலும் மக்களிடையே பயத்தையும் எதிர்ப்புணர்வையும் உருவாக்கி, அரசுக்கு எதிராகவே செயல்பட்டார்.


டாடாவின் எடுபிடியாகச் செயல்படும் தமிழக அரசோ, நேற்று வரை வைகுண்டராஜனின் அடாவடிகளையும் சட்டவிரோத வழிகளையும் அனுமதித்துதான் வந்தது. இன்றோ, பல்வேறு வழக்குகள் போட்டது மட்டுமின்றி "தாதா' தொழிலதிபர் என பட்டமும் சூட்டி தேடுதல் வேட்டை நடத்துகிறது. பத்திரிக்கைகளோ வழக்கம் போல இவற்றையே லைகுண்டராஜனின் சாதனைகளாக்கி பரபரப்பூட்டுகின்றன. தலைமறைவாயுள்ள வைகுண்டராஜன், தற்போது ஒரு சரணாகதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


வைகுண்டராஜன் செய்து வந்த வேலையை அரசாங்கமே இப்போது, டாடா செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே வறண்டு பாலைவனம் போலுள்ள அந்த தேரிக்காட்டுப் பகுதி முற்றிலும் பாலைவனமாகி, மக்கள் வசிப்பதற்கும் கூட பயனற்றதாக மாறுகின்ற அபாயமே உள்ளது. டாடா நிறுவனம் கூறுவது போல வெறும் 7 மீட்டருடன் மண்ணள்ளுவது நிற்காது. அதற்கும் மேலாக 20, 25 மீட்டர் ஆழம் கூட மணல் அள்ளும் அபாயமுள்ளது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொத்த நிலத்தடி நீருமே காணாமற் போய், கிராமங்களையே மக்கள் காலி செய்ய வேண்டிய மிகப்பெரும் அபாயம் உள்ளது.


இதுதவிர, டாடாவின் டைட்டேனியம் ஆலைக் கழிவால் சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன், கடலும் மாசுபடுகின்ற அபாயமுள்ளது. மேலும், டைட்டேனியம்டைஆக்சைடு தயாரிப்புக்கு நாளொன்றுக்கு 4.5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. இதற்காக கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப் போவதாகவும், அந்த சுத்திகரிப்பு ஆலைக்கும் டாடா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. சுத்திகரிப்பு ஆலை எப்போது முடியும் என்பது பற்றிய காலம் தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு முன் உற்பத்தி தொடங்கப்பட்டால், நிச்சயம் தாமிரவருணி ஆற்றுநீரே உறிஞ்சப்படும் அபாயமும் இணைந்துள்ளது.


சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் டாடாவின் ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு கூறுகிறது. இவை மண்ணின் மைந்தர்க்கே கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாமுமில்லை. ஏனெனில், ஆலையிலுள்ள வேலைகளுக்கு தொழில்நுட்ப தேர்ச்சி தேவை என்பது ஒரு முன் நிபந்தனை.


40 ஆயிரம் குடும்பங்களை அகதிகளாக்கி, டைட்டேனியம் ஆலை தொடங்கப்பட்டால், டைட்டேனியம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடு என்ற பெருமை கிடைக்கலாம். ஆனால் மண்ணையும், வாழ்வுரிமையையும் இழந்து தேரிக்காடுகளையும் விட்டோடுகின்ற மக்களின் அவலம் டாடா எனும் தனியொரு முதலாளியை மட்டும் வாழவைப்பதற்குத்தான் என்பதை சொரணையுள்ள யாரும் ஏற்க முடியாது.


ஏற்கெனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக ஓட்டுக் கட்சிகள் சூரத்தனம் காட்டின. சூட்கேசும் அன்பளிப்பும் வந்தபின் முடங்கிப் போயின. மக்களுக்கு பாதிப்பு வராது, வந்தால் டாடா நிறுவனம் மாற்றீடு செய்யும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது. ஏற்கெனவே நெய்வேலி சுரங்கத்திற்கு நிலமளித்தவர்களும் கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்திற்கு நிலமளித்தவர்களும் இந்த அரசாலேயே புறக்கணிக்கப்படுள்ளனர். மக்களுக்கு பதில் கூற பொறுப்புள்ள அரசாங்கமே மக்களை நிர்கதியாக வீதிக்கு விரட்டும் போது, லாப வெறி பிடித்த டாடா நிறுவனம் உரிய மாற்றீடு செய்யும் என்பதற்கும் எவ்வித உத்திரவாதமுமில்லை.


டாடாவா, வைகுண்டராஜனா என்ற போட்டியில் அப்பகுதி மக்கள் மண்ணிலிருந்தே விரட்டப்படும் அபாயம் முதன்மையாக உள்ளது. மக்கள் தமது மண்ணையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க ஓட்டுக் கட்சிகளை நம்பினால் அது மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய கதையாகவே முடியும். மூலவளங்களையே சூறையாடும் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான போராட்டத்திற்கு அணிதிரள்வதே மண்ணையும் வாழ்வுரிமையையும் மீட்கும் பாதை! டாடாவை விரட்டும் பாதை!

· முத்து

ரிலையன்ஸ் எதிர்ப்பு:சி.பி.எம் - இன் பித்தலாட்டம்

சில்லறை வணிகத்தில் நுழைந்து நாடெங்கும் நாலு கோடிக்கும் மேலான உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. முதலான ஆளும் வர்க்கக் கட்சிகள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ரிலையன்சுக்கு எதிராக வீரவசனம் பேசிக் கொண்டே, ரிலையன்சு கடைகளுக்குக் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடத்துபவர்களைத் துரோகிகள் என்பதா, அல்லது மக்களின் எதிரிகள் என்பதா?

இவர்கள் வேறு யாருமல்ல, ரிலையன்சுக்கு எதிராக வீரதீரமாக வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சியினர்தான் கடந்த ஜூலை மாதத்தில், கேரளத்தில் இந்த அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கொச்சி நகரத் துணைமேயரும், சி.பி.எம். கட்சியின் எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி உறுப்பினருமான சி.கே. மணிசங்கர், லெமக்காரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிக் கடையைத் தொடங்கி வைத்து, தமது கட்சியின் துரோகத்தனத்தை அம்மாநிலமெங்கும் பறைசாற்றியுள்ளார். துணை மேயரே இந்த வேகத்தில் செல்லும்போது சி.பி.எம். கட்சியின் கொச்சி எம்.எல்.ஏ. சும்மாயிருப்பாரா? மாநிலக் கமிட்டி உறுப்பினரும் கொச்சியின் எம்.எல்.ஏ.வுமான தினேஷ் மணி, தேவாரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டைத் திறந்து வைத்து அசத்தியுள்ளார்.

சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக சி.பி.எம். கட்சி வீரவசனம் பேசி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி அரசு, ரிலையன்சை அனுமதிப்பது ஏன்? அதிலும் சி.பி.எம். பிரமுகர்களே கடையைத் திறந்து வைக்கிறார்கள் என்றால், சி.பி.எம். கட்சி ரிலையன்சை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று கேட்டு கேரள மாநிலமெங்கும் மக்கள் காறி உமிழத் தொடங்கியதும் சி.பி.எம். கட்சித் தலைமை பீதியடைந்தது. தனது துரோகத்தனத்தை மறைக்க, இப்பிரமுகர்களிடம் ரிலையன்ஸ் கடை திறப்பு பற்றி விளக்கம் கோரும் நாடகமாடியது.

இதைத் தொடர்ந்து இப்பிரமுகர்கள் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டனர். தங்களது நெருங்கிய நண்பர்களின் வற்புறுத்தலால் ரிலையன்ஸ் கடைகளைத் திறந்து வைத்ததாக விளக்கம் அளித்தனர்.

இப்"பாட்டாளி' வர்க்கப் பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் முதலாளித்துவவாதிகள்தான் என்பதையும், நாளை இந்த "நண்பர்கள்' வற்புறுத்தினால் உழைக்கும் மக்களுக்கு எதிராக எதையும் செய்யத் துணியும் துரோகிகள்தான் இப்பிரமுகர்கள் என்பதையும், இவர்களது தன்னிலை விளக்கமே நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் இப்பிரமுகர்கள்மீது கட்சித் தலைமை பாரதூரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு எடுத்த நடவடிக்கையிலும் இரட்டை அளவுகோல்களைப் பின்பற்றியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி மணிசங்கரின் விளக்கத்தைப் பரிசீலித்து, அவருக்கு "எச்சரிக்கை' விடுப்பதாக அறிவித்தது. இம்மாவட்டக் கமிட்டி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது.

மறுபுறம், தினேஷ்மணியின் விளக்கத்தை மாநிலக் கமிட்டி பரிசீலித்து, அவரை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. மாநிலக் கமிட்டியோ, மாநிலச் செயலாளர் பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது. அச்சுதானந்தன் கோஷ்டியிலிருந்து விலகி விஜயன் கோஷ்டிக்கு தினேஷ் மணி வந்துள்ளதால், அவருக்குச் சாதகமாக இந்த "நடவடிக்கையை' மாநிலக் கமிட்டி எடுத்துள்ளது.

ஒரே வகையிலான துரோகத்துக்கு, மாவட்டக் கமிட்டியில் எச்சரிக்கை; மாநிலக் கமிட்டியில் மன்னிப்பு என இரட்டை அளவுகோல்களுடன் சி.பி.எம். கட்சி எடுத்துள்ள இந்நடவடிக்கைகளைப் பார்த்து கேரள மக்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். கட்சியின் கொள்கைபடி தாங்கள் செயல்படுவதாகவும், ஆனால் விஜயன் கோஷ்டி சமரசப் பாதையில் செல்வதாகவும் புலம்பும் அச்சு கோஷ்டி, இந்த இரட்டை அளவுகோல் விவகாரத்தை வைத்து உட்கட்சித் தேர்தலில் ஆதாயமடைய முயற்சிக்கிறது. துரோகிகளுக்கிடையே கோஷ்டிச் சண்டை புழுத்து நாறும் அதேநேரத்தில், ரிலையன்ஸ் நிறுவனமோ புதிய பேரங்காடிகளைத் திறந்து, சில்லறை வியாபாரிகளின் வாழ்வைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

· அழகு

Wednesday, November 21, 2007

கனிவுமில்லைக் கருணையுமில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007


"கனிவுமில்லைக் கருணையுமில்லை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் கலாநிதி.சி.சிவசேகரம் அவர்கள் காலஞ்சென்ற தோழர் விஸ்வானந்ததேவனுக்கான நினைவுப் பேருரையொன்றை 1989ஆம் ஆண்டு செய்தார்.அதை, இலண்டனில் சிறு பதிப்பாகவும் அவரது நண்பர்கள் வெளியிட்டார்கள்.தென்னாசியப் பிராந்திய அரசியலில் இந்தியாவின் பங்கு-மேலாதிக்கம் பற்றிய மிக எளிமையான பார்வையை அதுள் முன்வைத்தார் திரு.சி.சிவசேகரம் அவர்கள்.இன்று, கிட்டத்தட்ட பதினெட்டாண்டுகளுக்குப் பின்பு, நமது தேசிய விடுதலைப் போராட்டத்தினதும்,அது சார்ந்தியங்குவதாகப் புலிகளால் முன் தள்ளப்பட்ட"தமிழர் தேசியக் கூட்டமைப்பு" மற்றும் மலையக மக்களின் இன்னல்களில் குளிர்காயும் அவர்களின் அரசியல் தலைவர்களும் இந்தியாவின் மூலமாகத் தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இலங்கையில் தீர்த்துவிடலாமென்கிறார்கள்.இத்தகைய கூற்றை-பேட்டிகளை,கருத்துக்களை புலிகளின் ஊடகங்களோ விழுந்தடித்துச் செய்தியாகத் தலையங்கம் தீட்டி, எம்மக்கள் முன் தள்ளுவதில் முன்னணியில் நிற்பவர்கள்.


இது ஒரு சாபக்கேடான சூழல் இல்லை!


இங்குதாம் நாம் வர்க்கம் சார்ந்து சிந்திக்க- இயங்கக் கோருகிறோம்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பது விஞ்ஞானத்தின் வழி உண்மையானதாகும்.ஒவ்வொருவரும் தாம் எந்தெந்த வர்க்கத்தின் உணர்வுகளைக் காவித்திரிவதென்பதை முதலில் கண்டடையவேண்டும்.தொழிலாளியாக இருந்தபடி முதலாளியாகக் கனவுகாண வைக்கிறது இன்றைய ஆதிக்க வர்க்கத்தின் ஊடகங்கள்-பண்பாட்டுப்படையெடுப்புகள்.


நாம் நமது வாழ்வைத் தொலைத்தபடி எவரெவருக்காகவோ எமது உயிரை விட்டுவிடுகிறோம்.இது தப்பானது.நமது பெற்றோர்கள் பட்டுணிகிடக்கும்போது நாம் நமது வாழ்வையே ஆளும் வர்க்கத்துக்குத் தாரை வார்த்துவிடுகிறோம்.இதை இலகுவாக விளங்கிக்கொள்ள,கட்சித் தலைவனுக்காகத் தீக்குளித்து உயிரைவிடும் தொண்டனை எண்ணிக்கொண்டோமானால் உலகம் புரியும்.


"தொண்டனின் பிணத்தைவைத்தே
அரசியல் நடத்தி முடிப்பவர்கள்
ஓட்டுக்கட்சி-பாராளுமன்ற அரசியல் சாக்கடைகள்!"


இந்த நிலையில்,இலங்கையில்(இலங்கையிலென்ன உலகம் பூராகவும்தாம்)தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அன்றாடம் உழைத்துண்ணும் கூலித் தொழிலாளர்களும்,விவசாயிகளும்,கைவினைத் தொழிலாளர்களுமே.இத்தகைய மக்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற அரசியலானது இந்த மக்களை அடக்கும்-ஒடுக்கும் அரசியலாகவே இருக்கிறது.இதை முன்னெடுப்பவர்கள் தமிழ் பேசும் மக்கள் சமுதாயத்துள் சிறு தொகையான உடமையாளர்களும்,அவர்களுக்குக் கூஜாத் தூக்கும் அரசாங்க ஊழியர்கள்-அதிகாரிகளுமே!இவர்களின் நலனுக்கான அரசியலாகவும்-அபிலாசையாகவும்"தமிழீழம்"கோசமாகியது.இதைப் பற்பல சந்தர்ப்பத்தில் நாம் கட்டுரைகளுடாகச் சொன்னோம்.எமது மக்களின் அனைத்து முன்னெடுப்புகளும் முடக்கப்பட்டுள்ளது.அன்றாடச் சமூகச் சீவியம் சிதறடிக்கப்பட்டு,வாழ்விடங்களிலிருந்தே முற்றாகத் துரத்தப்பட்டு,அவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களின் குழந்தைகளான நாமோ நமது வீடுவாசல்கள் அனைத்தையும் சிங்கள இராணுவத்திடம் பறி கொடுத்து, அகதியாகி ஐரோப்பிய மண்ணில் கூலித் தொழிலாளிகளாகி,ஐரோப்பியத் தெருக்களைச் சுத்தஞ் செய்கிறோம்.எமது வாழ்வு நிர்மூலமாகப்பட்டபின் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்-கொல்லப்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையிலும் நமது அரசியல்தலைமையிடம் கபடம் நிறைந்து, இந்தியாவோடு,ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களோடு,அமெரிக்க அழிவுவாதிகளோடு கைகுலுக்கியபடி நம்மை ஏமாற்றி வருகிறார்கள்.இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல,இந்தக் கபோதித்தனமான ஈனமிக்க அரசியல்-இயக்க வாதிகளை மக்கள் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும்.ஏனெனில்,நாம் இலட்சம் உயிர்களை இவர்களின் ஈனத்தனத்துக்காகப் பறிகொடுத்துள்ளோம்!


பேராசிரியர் சி.சிவசேகரம் பதினெட்டாண்டுகளுக்குமுன் சொன்ன அதே கருத்தை மீளவும் இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.


தற்போது, உலக மூலதனமானது தென்னாசியப் பிராந்தியமெங்கும் பாய்ந்து, கணிசமானளவு தென்னாசிய அரசியலைக் கட்டுப்படுத்தி வருகின்றபோதும்,இந்தியாவின் மேலாதிக்க அரசியல் வியூகம் காலாவதியாகிவிடவில்லை.இந்தியாவின் மிகக் கெடுதியான அரசியல் நலன் நமது மக்களின் கணிசமானவர்களைக் கொலை செய்து,இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவை இலங்கையில் நிலைப்படுத்தி வருகிறது.மிகக் கேணைத்தனமாக இந்தியக் கோமாளிகள்-தமிழ்நாட்டு விரோதிகள் இராஜீவ் என்ற பாசிஸ்ட்டின் கொலைக்கு வக்காலத்து வேண்டுகின்ற இன்றைய சூழலில்கூட நமது மக்களை வகை தொகையின்றிக் கொன்று குவிக்கும் இந்தியத் துரோகத்தை நமது அரசியல்வாதிகள் கேள்விக்குட்படுத்தவில்லை.புலிகளின் மிகக் கெடுதியான அரசியல் கூட்டுக்கள் இந்தியாவிடம்-உலக ஏகாதிபத்தியங்களிடம் தமது நாணயக் கயிற்றை வழங்கியபின்,அந்த எஜமானர்களின் இழுப்புக்கேற்றபடி "போராட்டம்"செய்கிறார்கள்!மக்களோ இத்தகைய கொடிய யுத்தங்களால்,அரசியல் ஏமாற்றால் தமது பொன்னான உயிர்களைப் பறிகொடுத்தும்,வாழ்விடங்களை இழந்தும் வதைபடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்க எவருமேயில்லை!புலிகளை எதிர்ப்பதாக நாடகமாடும் புலி எதிர்ப்புக் குழுக்களோ இந்தியாவின் இன்னொரு வடிவிலான கைக்கூலிகள்.இவர்களை இனம் காட்டும் பேராசிரியர் சி.சிவசேகரம் மிக இலாவகமாக இந்திய-தமிழ்நாட்டு அரசியல் சூழ்ச்சிக்காரர்களையும்,அவர்களது துரோகத்தையும் இனம் காட்டுகிறார்.


கடைந்தெடுத்த துரோகிகளானவர்கள் இந்தியக் கைக்கூலி ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,புலிகளின் தலைமைமட்டுமல்ல தமிழ்நாட்டின் வளங்களைச் சுருட்டி ஏப்பமிட்ட வடிகட்டிய துரோகி கருணாநிதியும்தாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.இதையும், சிவசேகரம் அவர்கள் குறித்துரைக்கிறார்.


வடிகட்டிய துரோகி கருணாநிதியின் போலிக்கண்ணீர் ஒப்பாரியைப் பாட்டாக்கிய கண்ணனின் இசையைக் கேட்டபோது, இந்த முயற்சியில் கண்ணனின் திறமை வெளிப்பட்டபோது, சயந்தனின் பதிவில் கண்ணனைப் பாராட்டியபடி கருணாநிதியின் ஓலத்தை அம்பலப்படுத்தியிருந்தேன். அதை அனானியாகச் சொன்னேன். பேராசிரியரோ அக் கவிதையையும் விடாமற் சாடியிருக்கிறார்.


இவையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம்?


நமது பிரச்சனையைத் தத்தமது இலாபத்துக்காக அரசியலாக்கி மக்களை அழித்துவரும் கொடிய சக்திகளை இனம் காட்டவே நாம் இதுவரை எழுதித் தள்ளுகிறோம்.நாமும், நமது பெருங் கல்வியாளர்கள்போல் வாய்மூடி மெளனித்திருக்க முடியும்.இப்படியிருந்தால் எமது மக்களின் அழிவை எங்ஙனம் தடுத்து நிறுத்துவது நண்பர்களே?


எல்லோரும் தத்தமது குடும்பம், பதவி, பட்டம் என்றிருந்தால் அப்பாவி மக்களின் வாழ்வோடு விளையாடும் அந்நிய-உள்நாட்டு யுத்தப் பேய்களை எங்ஙனம் அம்பலப்படுத்துவது-மக்களை அவர்களிடம் பலியாக்காது தடுப்பது?


இதுவோ பெரும் வரலாற்றுக்கடமை நண்பர்களே!


நாம் புரட்சி செய்கிறோமோ இல்லையோ நமது மக்களின் உரிமைகளை அந்நியர்களிடம் அடைவு வைத்துத் தமது வாழ்வையும், வளத்தையும் பெருக்கும் கயமைமிக்க அரசியல்-இயக்கவாதிகளை நாம் மக்களுக்கு இனம் காட்டியாகவேண்டும்!இதுவரை எமது மக்களின் உயிரோடு விளையாடிய இந்தப் போராட்ட முறைமை நம் இனத்தின் அனைத்து வளங்களையும் அந்நியர்களோடு பங்குபோட்டு அநுபவித்துவருகிறது.அதைத் தொடர்ந்து நிலைப்படுத்தவும்,மக்களைச் சட்ட ரீதியாக ஒடுக்கும் உரிமைக்குமாக இவர்கள் போடும் கூச்சல் யுத்தம்-ஜனநாயகம் என்றபடி.நமது மக்களின் எதிர்காலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.இந்த நிலையிலும் நாம் மெளனித்திருக்க முடியுமா?


தமிழ்த் தேசிய மாயையில் கட்டுண்டு கிடந்தபடி இயக்கவாத மாயைக்குள் மெளனித்திருந்தோ அல்லது வக்காலத்து வாங்கியோ எம்மை நாம் ஏமாற்றமுடியாது!நாம் இழந்திருப்பது வரலாற்றால் மீளக்கட்டியமைக்க முடியாத உயிர்கள்.அந்த உயிர்களின் தியாகத்தைப் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் கட்சி-இயக்க அரசியல் தலைமைகள் தத்தம் பதவிகளுக்கும்-இருப்புக்குமாக நம்மை இன்னும் படுகுழியில் தள்ளுவதை அநுமதிக்க முடியாது.


தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமும், பொறுக்கி அரசியல்வாதிகளும் தமிழ்ச் செல்வனின் கொலைக்கு நீலிக்கண்ணீர் வடித்தவுடன் ஈழத்துத் தமிழனுக்கு உச்சி குளிர்கிறது. ஆனால், அந்தக் கூட்டம் இதுவரை எமக்கு என்ன செய்தார்கள், எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்களை எதிர்க்கக்கூட முடியாத-முனையாத கழிசடைகளின் ஒப்பாரிகள், நமது மக்களின் குருதியை-கண்ணீரை நிறுத்திவிடாது. மாறாகத் தமிழகத்தின் அப்பாவிக் குடிகளின் பெரும் குரலே எமது மக்களின் கண்ணீருக்கு முடிவுகட்ட ஒத்திசைவாகும்.


தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளும்,சினிமாக் கூத்தாடிகளும் தமிழகத்து அப்பாவி மக்களின் குரல்வளைகளைத் திருகியே தமது அதிகாரத்தை, ஆதிக்கத்தை,செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். தமது சொந்த குடிகளையே அடியோடு மொட்டையடிக்கும் இந்தக் கூட்டத்தின் குரலா எமது மக்களின் துயர் துடைக்கும்?-இலங்கையில் இந்தியாவினது பங்கு என்ன?புலிகள் ஏன் இந்தியாவுக்குத் தூதுவிடுகிறார்கள்,எப்படி இந்தியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்?மிக இலகுவான கேள்விகள்.தொடர்ந்து தேடும்போது விடைகள் மிக இலகுவாகக் கிடைத்துவிடும்.


சிந்தியுங்கள்!


நாம் அவசியம் நமது நண்பர்களை-எதிரிகளை இனம் கண்டாக வேண்டும்.


அதற்குப் பேராசிரியரின் இக்கட்டுரை பலகோணத்தில் பார்வைகளைத் திறந்துவிடுகிறது.


"படிப்போம்,
பாருக்குள் நமது எதிரிகளை
நேரிய-சீரிய,செம்மையான போராட்டத்துடன்
எதிர்கொள்வோம்.அங்கே, நாம் வணங்கும்
இன்றைய தெய்வங்கள்கூட
எதிரிகள் என்பதை வரலாறு புகட்டும்."


அதுவரையும் விவாதிப்போம்-விழிப்படைவோம்!


நட்புடன்;,


ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007

மறுபக்கம் :"தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம்."


லங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்திய நிலைப்பாடென்ன என்றும் அதுபற்றிய இலங்கைவாழ் தமிழ்த் தலைமைகளின் மதிப்பீடென்ன என்றும் யாருங் கேட்டால், முதலாவது கேள்விக்கு விடை கூறுவது எளிது. மற்றக் கேள்விக்கான பதிலைத் தலைவர்களாற் கூடத் தெளிவாகக் கூற இயலுமா என்பது நிச்சயமற்றது.


அக்டோபர் பிற்பகுதில் ஒரு தமிழ் நாளேட்டின் முதலாவது பக்கத்தில் ஒரு கட்டமிடப்பட்ட செய்தி இருந்தது. அதற்குக் கீழாகக் கொட்டையெழுத்துத் தலைப்புடனான ஒரு செய்தி இருந்தது. முதலாவது செய்தி இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதை உறுதிப்படுத்துவது. மற்றது இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குப் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டது பற்றியது.


இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் சமகால நிலைமைகள் பற்றியும் இந்திய ஆட்சியாளர்கள் சரிவர அறியமாட்டார்கள் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துகிற தீர்வு பற்றி இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழருக்குச் சாதகமான திசையிற் திருப்ப வல்லவர்கள் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களுக்கு அந்தவிதமான அக்கறை உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு பகுதியை நம்புவதற்குக் கால் நூற்றாண்டுக் காலம் முன்பு பலருக்கு ஒரு நியாயம் இருந்தது. இருபது ஆண்டுகள் முன்பு வரை அந்த நியாயம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும் தமிழகத் தலைமைகள் பற்றிய ஒரு நம்பிக்கை இன்னொரு ஐந்து வருடங்கள் தொடர ஏதோ நியாயம் இருந்தது.ஆனாலும், இந்த நம்பிக்கைகள் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை என்றும் இந்திய மேலாதிக்கத்தின் நோக்கங்கள் பற்றியும் கவனமாயிருக்குமாறும் எச்சரித்து வந்தவர்கள் இருந்தார்கள். பங்களாதேஷின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு பற்றி எதிர்மாறான இரு மதிப்பீடுகள் இருந்தன. ஒன்று தமிழீழ விடுதலைக்கு இந்தியா கைகொடுக்கும் என்று சொன்னது. மற்றது தமிழர் பிரச்சினையைத் தனது மேலாதிக்க எண்ணங்கட்காக அல்லாமல் வேறெதற்கும் இந்தியா பயன்படுத்தாது என்றது. எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் ஏதோ வகையில் இந்தியாவை நம்பியவர்கள் தாம். அவர்கள் மட்டுமன்றிக் குழம்பிப்போன சில தமிழ் இடதுசாரிகளும் இந்தியாவை நம்பினார்கள். சிலரது நம்பிக்கைகள் ஏமாற்றத்துக்கு இட்டுச் சென்றன.வேறு சிலர் இந்தியாவின் துரோகத்தைத் தெரிந்து கொண்டே அதன் பங்காளிகளானார்கள். இவையெல்லாம் வரலாறு கூறும் உண்மைகள். எளிதில் மறக்கும் அளவுக்கு அவை அற்ப விடயங்களுமல்ல, எப்போதோ ஒரு யுகத்தில் நடந்துமுடிந்தவையுமல்ல.


கடந்த பன்னிரண்டு மாதங்கட்குள்ளேயே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய ஆட்சியாளர்களாலும் அவர்களது பிரசார முகவர்களாலும் எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதுகூடப் பலருக்கு நினைவில் இல்லை என்றால் அவர்கள் பாராளுமன்ற அரசியலால் முற்றாகவே சுரணை கெட்டுப் போனவர்கள் என்று தான் சொல்ல முடியும். இந்தியாவை வளைத்துப் போடச் சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டினவர்கள் கண்டதெல்லாம் எதிர்பார்த்ததற்கு நேரெதிரான விளைவுகள் தாம். இந்திய அமெரிக்கப் போட்டியை வைத்துப் போட்ட கணக்கும் பொய்யாகிவிட்டது "கொக்குப் பிடிக்கிறதற்கு வழி, அதிகாலையில் கொக்கின் தலையில் வெண்ணெய்யை வைத்து விட்டால், வெய்யில் ஏறும்போது வெண்ணெய் உருகிக் கொக்கின் கண்கள் தெரியாமற் போகும்; அப்போது பார்த்துக் கொக்கைப் பிடிக்கலாம்" என்று ஆலோசனை சொன்னவனுக்குக் கூட இந்த அரசியல் ஞானிகளை விட விவேகம் அதிகம் என்று நினைக்கிறேன்.


நான் இப்போது கேள்விக்கு உட்படுத்துவது அறியாமையாற் செய்கிற பிழைகளையல்ல. முழு அரசியல் அயோக்கியத் தனத்தையே கேள்விக்குட்படுத்துகிறேன்.


இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் விற்பதைப் பற்றி அரசியல்வசதி கருதியேனும் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுப்புகிற சிலர் இருக்கிறார்கள். நமது நாளேடுகளில் இந்திய அரசாங்கத்தைக் கண்டித்து அவர்கள் விடுகிற அறிக்கைகள் வெளிவருகின்றன. பலவாறான செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இந்தியாவின் வஞ்சகத்தைக் கண்டித்து இங்கே எந்தத் தமிழ்த் தேசியவாதத் தலைமையும் வாயே திறப்பதில்லை. செய்யாதீர்கள் என்று கெஞ்சுகிறவர்கள் இருக்கிறார்கள் செய்ததைக் கண்டிக்கவோ எவரும் இல்லை.


வரதராஜப் பெருமாள் முதலாக ஆனந்த சங்கரி வரையிலானவர்கள் வேண்டுகிற இந்தியக் குறுக்கீடு பற்றி அவர்களுக்குப் பூரணமான தெரிவுண்டு. இந்தியா தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு என்ன செய்தாலும் அதை அவர்கள் முழு மனதுடன் ஏற்பார்கள். இதில் அவர்களுக்கு தெரிவு, மாற்றுக் கருத்து என்ற விதமாக எதற்கும் இடமில்லை. எனவே தான் இந்தியா அவர்களைத் தமிழர் தலைவர்களாகக் கருதுகிறது.


ஆனால், வெளிவெளியாகவே யூ.என்.பி.யிடம் தமிழ் மக்களைச் சரணடையச் செய்ய முன்னிற்கின்ற மனோ கணேசன் போன்றவர்கள் முதல் திக்குத் தெரியாமல் தடுமாறுகிற தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர்கள் வரையிலானோர் எவ்வகையில் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்ப்பதில் இந்தியாவால் எவ்வளவை நிறைவேற்ற இயலும் என்று எதிர்பார்க்கிறார்கள்?


வெறுமனே இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாகக் குறிப்பாக எவ்வெவ் வகையிற் குறுக்கிட வேண்டும் என்று பட்டியலிடுவார்களா? அக் குறுக்கீட்டின் இலக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்று தெளிவுபடுத்துவார்களா? இந்தியாவின் போக்கு இன்று வரை எவ்வாறு இருந்துள்ளது என்றும் அதில் அவர்கட்கு உடன்பாடான பகுதி எது உடன்பாடற்றது எது என்று சொல்வார்களா? இந்தியா தனது போக்கை எந்த விடயங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்று விளக்குவார்களா?
அவை பற்றி இந்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்படி கேட்பார்களா?


இந்தியக் குறுக்கீடு பற்றி ஆழச் சிந்தித்தவர்கட்கு இந்தியக் குறுக்கீடு வேண்டிய ஒன்றாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. எனினும், திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுமாதிரி இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் தங்கள் மனதில் உள்ளது என்ன என்று சொல்ல வேண்டும். சொல்ல மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும், செய்தியை அனுப்புகிற நிருபருக்குத் தெரியும், அதைக் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு வெளியிடுகிற பத்திரிகை ஆசிரியருக்கும் தெரியும்.

அந்தப் புலுடாவுக்கு வழங்கப்படுகிற முக்கியத்தை ஏன் அதை அவிழ்த்து விடுவதற்கு தாம் வழங்க மறுக்கிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் எங்களால் உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப் பார்க்க இயலவில்லை?


தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம். அதை ஜெயலலிதா கண்டித்ததில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால், எனது காரணங்கள் வேறு. முதலாவதாக அது நேர்மையற்றது. இரண்டாவதாக அது மிகவும் மட்டரகமான கவிதை சொல்லப்போனால் அது கவிதையே அல்ல. தி.மு.க. சினிமா பாணியிலான சுத்தமான பேத்தல்; கருணாநிதி அரசியலின் பம்மாத்து.


தமிழகத்தையும் இலங்கையையும், குறிப்பாக வட, வடமேற்கு இலங்கையைப் பல்வேறு கெடுதல்கட்குள்ளாக்கி மீனவர்களது வயிற்றில் அடிக்கப்போகிற சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிக் கூட வாய் திறக்க வக்கில்லாத தமிழ்த் தலைவர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.


இந்தியா இலங்கைக்குக் குழி பறிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களிடையில் புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா குழிபறித்து வந்துள்ளது.


இந்தியக் குறுக்கீட்டைப் பேரினவாத வெறியர்கள் விரும்புகிறார்கள் என்றால், அமெரிக்கா மறைமுகமாக ஏற்கிறது என்றால், அதை தமிழர் விடுதலைக்கு ஆதரவான எவரும் ஆதரித்துப் பேசுகிற போது அவருடைய அரசியல் ஞானத்தைவிட அதிகம் ஐயத்துக்குரியது. அடிப்படையான நேர்மைதான்.


-பேராசிரியர் சி.சிவசேகரம்.


நன்றி தினக்குரலுக்கு.

தேரிக்காட்டில் ஒரு முகம் கேரளத்தில் வேறு முகம்

-சி.பி.எம். - இன் சதிராட்டம்

ழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ""தனியார்மயத்தை அனுமதியோம்; அரசுத்துறையைப் பாதுகாப்போம்!'' என்று சவடால் அடித்து அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது கேரளத்தில் இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனத்தை முடக்கி, வெளிப்படையாகவே தனியார்மயத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் கிளம்பிவிட்டது.

கேரளத்தின் கொல்லம் மாவட்டம், சாவரா எனுமிடத்திலுள்ளது, கேரள தாதுப் பொருள் மற்றும் உலோக நிறுவனம் (KMML). டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் இந்த அரசுத்துறை நிறுவனம், மாநிலத்தின் இலாபமீட்டும் இரண்டாவது பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். கடற்கரை மணலை அகழ்வு செய்தல், தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், டைட்டானியம் டை ஆக்சைடு இயற்கை நிறமிக் கூறுகளை உற்பத்திச் செய்தல் என அனைத்தையும் கொண்ட ஒருங்கிணைந்த இந்த நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

முந்தைய "இடதுசாரி' ஆட்சியில் சுசீலா கோபாலன் தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது, ரூ.782 கோடி செலவில் இந்த அரசுத்துறை நிறுவனத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு சட்டமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அக்குழுக்களும் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்குப் பரிந்துரைந்துள்ளன. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசும் தொழில்நுட்பக் கூட்டுக்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டு ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

இப்போது கேரளத்தில் மீண்டும் "இடதுசாரி' கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த அரசுத்துறை நிறுவனம் விரிவடைந்து வளர்ச்சி பெறும் என்று கேரள மக்கள் எதிர்பார்த்தார்கள். அதிலும், டைட்டானியம் டை ஆக்சைடுக்கு கிராக்கி அதிகரித்துள்ள நிலையில், இந்த அரசுத்துறை நிறுவனத்தை முன்னுதாரணமிக்கதாக வளர்த்தெடுப்பார்கள் என்று பெரிதும் நம்பினார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐகுகீO) இந்த அரசுத்துறை நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 10,000 டன் டைட்டானியம் உலோகக் கட்டிகளை (ஸ்பான்ஞ்)த் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததால், இடதுசாரி ஆட்சியாளர்கள் தமது கொள்கைப்படி இந்த அரசுத்துறை நிறுவனத்தைக் கட்டிக் காத்து வளர்க்க வாய்ப்புகளும் சாதகமாகவே அமைந்திருந்தது.

ஆனால் இந்த எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டு, சி.பி.எம். கட்சிப் பிரமுகரும் தொழில்துறை அமைச்சருமான லெமாரம் கரீம், அந்நியதனியார் முதலாளிகள் கேரளாவின் தாதுவளத்தைச் சூறையாட தாராள அனுமதி கொடுத்துள்ளார். கடந்த மே 17ஆம் தேதியன்று ரஷ்யாவின் ""ரோசோபாரன்'' என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தனியார்மயக் கொள்ளைக்கு கால்கோள் விழா நடத்தியுள்ளார். இந்த ஒப்பந்தபடி, கேரள தாதுப்பொருள் மற்றும் உலோக நிறுவனத்தின் வளாகத்துக்குள்ளேயே, ரஷ்ய நிறுவனம் டைட்டானியம் உலோக கட்டிகளைத் தயாரிக்கும் ஆலையை ஏறத்தாழ ரூ. 1400 கோடி செலவில் நிறுவும். அரசுத் துறை நிறுவனத்திடமிருந்து இந்த ரஷ்ய நிறுவனம் பகுதியளவுக்குக் கச்சாப் பொருளைப் பெற்றுக் கொள்ளும். மீதியை கேரள கடற்கரையிலுள்ள தாது மணலை அகழ்வு செய்து அள்ளிக் கொள்ளும்.

இதுவும் போதாதென ஏராளமான சலுகைகளுடன் டாடா நிறுவனத்தை அழைத்து வந்து, ஆலப்புழை மாவட்டத்திலுள்ள பள்ளிபுரத்தில் øட்டானியம் ஆலையைத் தொடங்கவைத்து, கேரளத்தின் தாதுவளத்தை டாடா நிறுவனம் சூறையாட சி.பி.எம். ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கடைசியில், டாடா, ரோசோபாரன் ஆகிய இரு தனியார் அந்நிய நிறுவனங்களுக்கு கச்சாப் பொருளையும் தொழில்நுட்பத்தையும் அளிக்கும் கறவை மாடாக கேரள அரசுத்துறை நிறுவனம் மாற்றப்பட்டு விட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு அதனடிப்படையில் இந்த ரஷ்ய நிறுவனம் தேர்வு செய்யப்படவுமில்லை. கேரள அரசுத்துறை நிறுவனமே டைட்டானியம் உலோக கட்டிகளை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள போது, அதைப் புறக்கணித்துவிட்டு ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது ஏன் என்ற கேள்விக்கு சி.பி.எம். தலைவர்கள் இன்றுவரை வாய்திறக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரோசோபாரன் நிறுவனமானது, ரஷ்ய கிரிமினல் மாஃபியா கும்பலின் ஆயுதபேர நிறுவனமாகும். உலகின் 30% டைட்டானிய பேரத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் மிகப் பெரிய ஏகபோக நிறுவனமான ""அவிஸ்மா'' சார்பாக இந்த ரோசோபாரன் நிறுவனம் கேரள அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யாமல், ஏகபோக ""அவிஸ்மா'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டால், எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி குடைச்சல் தரும் என்பதாலேயே, சி.பி.எம். ஆட்சியாளர்கள் தந்திரமாக ரோசோபாரன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக, இந்த மோசடித்தனம் அம்பலமாகி சந்திசிரிக்கத் தொடங்கி விட்டது.

இத்தனைக்கும் பிறகும் ""கேரள தாதுப் பொருள் மற்றும் உலோக நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது அந்த அரசுத்துறை நிறுவனத்தைப் பாதிக்கும். மாறாக, கேரள அரசுதான் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது. ஒருபுறம் அரசுதுறை நிறுவனமும், மறுபுறம் இரு தனியார் நிறுவனங்களும் ஒரே துறையில் இயங்கும். இதனால் அரசுத்துறை நிறுவனம் பாதிப்படையாது'' என்று நாக்கைச் சுழற்றி விளக்கமளிக்கிறார் கேரள தொழிற்துறை அமைச்சர். இவர் கேரள சி.பி.எம். கட்சியின் விஜயன் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளி. பதவிக்கவும் அதிகாரத்துக்காகவும் விஜயன் கோஷ்டியுடன் நாய்ச்சண்டை போடும் அச்சுதானந்தன் கோஷ்டியோ, இத்தனியார்மயமாக்கலுக்கு எதிராக வாய் திறக்காமல் பம்மிப் பதுங்குகிறது.

இலாபத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழிலில் அந்நிய தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது ஏன்? இந்த அரசுத்துறை நிறுவனத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த மறுப்பது ஏன்? தமிழகத்தின் டைட்டானியம் ஆலை குறித்து ஒரு நிலைப்பாடும், கேரளத்தில் வேறொரு நிலைப்பாடும் சி.பி.எம் கட்சி எடுப்பது ஏன்? இப்படிப் பல நூறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். அவற்றுக்கு சி.பி.எம். துரோகிகளிடமிருந்து பதில் கிடைக்கப் போவதில்லை. மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மே.வங்க வழியில் தனியார்அந்நிய முதலாளிகளின் அடியாளாகச் செயல்படக் கிளம்பிவிட்ட இப்பித்தலாட்டப் பேர்வழிகளிடமிருந்து அதை எதிர்பார்ப்பதில் நியாயமுமில்லை.

· தனபால்

Tuesday, November 20, 2007

'நாட்டாமை' யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை

""நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார். அவரது இரசிகர்களால் "பச்சைத் தமிழர்' என்று அழைக்கப்படும் சரத்குமாரை கழிசடை என்றும் சுயநலவாதி என்றும் மதிப்பீடு செய்வதற்குக் காரணம் நமது விருப்பமல்ல; இந்த "சுப்ரீம் ஸ்டாரி'ன் வரலாறே அப்படித்தான் உள்ளது.


தான் விஜயகாந்த் போல திடீரென்று அரசியலுக்கு வரவில்லை எனவும், பதினைந்து ஆண்டுகளாக இரண்டு கழகங்களிலும் தீவிரமாகப் பணியாற்றியவன் என்றும் தனது கட்சியைத் தொடங்கியதற்கான தகுதிகளை சரத்குமார் முன்வைக்கிறார். உண்மையில் இவரது தீவிரப் பணி என்னவாக இருந்தது?


இளைஞனாக இருந்த போது பெங்களூரு தினகரனில் பணியாற்றினார். பின்னர், பம்பாய் சென்று ஆணழகன் ஆனார். பிறகு, சென்னை வந்து வட்டித்தொழில் செய்தார். சினிமாவுக்கும் பைனானைஸ் செய்தார். சினிமாத் தொடர்பு வந்த பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்து, வில்லனாக அறிமுகம் ஆனவர், இறுதியில் கதாநாயகனானார். ""நாட்டாமை'' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு வந்த ஜெயலலிதா முன்பு இரட்டை இலை சட்டை போட்டு சேவகம் செய்தார்.


இந்த அடிமையிடம் அனுமதி பெறாமலேயே ஜெயா டி.வியில் ""நாட்டாமை'' படம் வெளியிடப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தி.மு.க.வில் இணைந்தார். இப்படி இவர் அரசியலில் இணைந்ததற்கும், பிரிந்ததற்கும் கொள்கையோ, மக்கள் நலனோ காரணமல்ல. பால்கனியிலிருந்து இரசிகர்களை மந்தைபோலப் பார்க்கும் ஒரு நட்சத்திர கதாநாயகனது திமிர்தான் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கி வைத்தது. இடையில், தங்களது பைனான்ஸ் தொழிலுக்காக கோடிக்கணக்கில் கடன் வாங்கி ராயப்பேட்டை நிதி நிறுவனத்தை திவாலாக்கிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவராக இருந்தார். சொத்துப் பிரச்சினையாலும், நக்மா பின் சுற்றியதாலும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ராதிகாவின் கம்பெனிக்காக டி.வியில் ""கோடீஸ்வரன்'' நிகழ்ச்சியை நடத்தியபோது, ராதிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. சரத்குமாரின் கடனை ராதிகா அடைப்பது எனவும், சரத்குமார், ராதிகா கம்பெனிக்காக திரைப்படத்தில் நடிப்பது என்றும் வர்த்தக ரீதியில் பேசிக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.


நடிகர் என்ற முறையிலும், ராதிகாவுக்கு கருணாநிதியுடன் உள்ள நெருக்கத்தாலும் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்து, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இதை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளாமல், தி.மு.க. தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் பின்புலமாக நாடார் சாதி பத்திரிகை அதிபர்களும், தொழிலதிபர்களும் சாதியை வைத்து சரத்குமாரை முன்நிறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தி.மு.க.விடமிருந்து இராஜ்ய சபா உறுப்பினர் பதவி சன்மானமாகக் கிடைக்கிறது.


ஆயினும் அவரது அதிகார வெறி அடங்கவில்லை. தனது இரசிகர்களை வைத்து மத்திய மந்திரி பதவி வேண்டும் என சுவரொட்டி ஒட்டச் செய்தார். நாடார்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என அச்சாதி பிரமுகர்களை வைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தார். ஏதோ ஒரு பொங்கல் விழாவில் தயாநிதி மாறன், நடிகர் விஜயை வைத்து அஞ்சல் தலை வெளியிட்டார். இதனால் தன்னைப் புறக்கணித்து விட்டதாகப் புரளி பேசினார். அறிவாலயத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவமரியாதை அடைந்ததால் தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகக் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பினார். எல்லாம் எலும்புத் துண்டு கிடைக்காதா என்ற நப்பாசைதான்.


ஆயினும் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் சாகும் வரை கலைஞரின் தலைமையில் செயல்படுவதாகவும், செத்தால்கூட தன் உடல் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப் படவேண்டும் என முழங்கினார். முழங்கிய எச்சில் உலருவதற்குள் 2006 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.கவில் இணைந்தார். இதற்காக சாராய மன்னன் விஜய மல்லையாவின் தனி விமானத்தில் பச்சைப்புடவை கட்டிய ராதிகாவுடன் மதுரை சென்று, பின்னர் ஆண்டிப்பட்டியில் பாசிச ஜெயாவிடம் போஸ் கொடுத்தவாறு சரணடைந்தார். இந்தச் சரணடைவு உண்மையில் ஒரு வர்த்தக பேரமாகும். இதன் வரவுசெலவு அம்சங்கள் சிங்கப்பூரில் சசிகலா நடராஜனுடன் பேசி முடிவு செய்யப்பட்டன. இதன்படி சரத்குமாருக்குக் கிடைக்க வேண்டிய கணிசமான தொகையும், ராடன் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் தொலைக்காட்சி நேரமும் உறுதி செய்யப்பட்டது.


ஆயினும் பேசியபடி எலும்புத் துண்டுகள் ஜெயலலிதாவால் தரப்படவில்லை. இதனால் கசமுசா ஏற்பட்டு ராதிகா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். சரத்குமாரும் தனக்கு அரசியல் செய்ய நேரமில்லை என்று யாரையும் குற்றம் சாட்டாமல் நாசூக்காக அ.தி.மு.கவிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதியில் நாடார் சாதி பிரபலங்கள், சரத்குமாரை வைத்து தனி ஆவர்த்தனம் தொடங்கினால் மற்ற கட்சிகளிடம் பேரம் நடத்த தோதாய் இருக்கும் என்று முடிவு செய்து தனிக்கட்சி ஆரம்பித்து விட்டனர். நாடார் சாதி மக்களை விற்றுக் காசு பார்ப்பதற்கென்றே "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தொடங்கப்பட்டிருக்கிறது. சரத்குமாரிடமிருந்து வரும் ஒவ்வொரு அரசியல் ரீதியான அறிக்கையிலும் அவரது வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும். தற்போது சன் டி.வி.யில் ராடன் டி.வி ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால், சன் டி.வி.யின் டி.டி.எச். ஒளிபரப்பை ஆதரித்தும் தி.மு.வைக் கண்டித்தும் சரத்குமார் அறிக்கை வெளியிடுகிறார்.


தற்போது சேது சமுத்திரத் திட்டத்தை ஒட்டி பா.ஜ.க எழுப்பிய இராமர் பாலம் பிரச்சினையில் இந்து மதவெறியர்களின் அணியில் இருந்து கொண்டு, ""இந்துக்களைப் புண்படுத்தியதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கொழுப்புடன் அறிக்கை விடுகிறார். "எதிர்காலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் மந்திரியாக மாட்டோமா' என்ற பேராசைதான்!


1966இல் காமராசரைக் கொலை செய்ய டெல்லியில் அவரது வீட்டுக்குத் தீ வைத்த இந்து மதவெறியர்களை ஆதரித்துக் கொண்டே, சாதி ஒட்டுக்களைக் கவர்வதற்காகவும், காசு வசூல் செய்து தின்னவும், காமராசருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக முழங்கும் இந்தப் பிழைப்புவாதி, தென்மாவட்ட மக்களுக்கும் நாடார் சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் அப்பட்டமான எதிரி என்பதே உண்மை.


தனது சாதி மக்களை வைத்து உயர் பதவி அடையவேண்டும் என்று அரசியலில் குதிக்கும் சரத்குமார், உண்மையில் நாடார் மக்களுக்குச் செய்தது என்ன? தாமிரபரணி நீரை கொக்கோ கோலா நிறுவனம் உறிஞ்சி எடுப்பது அப்பகுதி விவசாயிகளுக்கு — அதில் கணிசமானோர் நாடார்கள் — இழைக்கப்படும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராக சரத்குமார் வாய்திறக்கவில்லை என்பது மட்டுமல்ல; சமீபத்தில் கோக்கில் பூச்சி மருந்து கலந்திருப்பது சந்தி சிரித்து அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தபோது, சரத்குமாரின் மனைவி ராதிகா, ""கொக்கோ கோலா பாதுகாப்பானது''' என்று விளம்பரப் படத்தில் நடித்துச் சிபாரிசு செய்தார். நாடே காறி உமிழ்ந்தது. ஆனால், "நாட்டாமை'க்கு எச்சில் பிரச்சினை அல்ல; காசு மட்டும்தான் குறி.


சில்லறை வணிகர்களில் பெரும்பாலானோர் நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள். இவர்கள் வாழ்வை அழிக்க வந்துவிட்ட ரிலையன்ஸை எதிர்த்து வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தபோது, "நாட்டாமை' ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். தன் சொந்த சாதி மக்கள் மீது இந்த வேடதாரி வைத்திருக்கும் நேசத்தின் இலட்சணம் இதுதான். தற்போது டைட்டானியம் ஆலை விவகாரத்திலும் ""இந்தியாவின் தொழில் தந்தையான டாடாவை நான் எதிர்க்கவில்லை. உரிய விலை கொடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை'' என்று தரகு வேலை பார்த்தார் இந்த வியாபாரி.


இத்தகைய பச்சையான சுயநல, சந்தர்ப்பவாத, துரோகிகள் கட்சி ஆரம்பிப்பதும், முதல்வராகப் போவதாகப் பேசித் திரிவதும் மக்களுக்கு மாபெரும் அவமானம். இந்த அவமானத்தைத் தீர்க்கவேண்டுமெனில் இத்தகைய பேர்வழிகள் அரசியல் என்று பேசினாலே அடித்துத் துரத்தவேண்டும் அல்லது முளைக்கும் போதே "மணிமண்டபம்' கட்டி விடவேண்டும். அதையும் குறிப்பாக நாடார் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களே செய்து முடித்தால், சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.


பச்சையப்பன்விவசாயிகள் தற்கொலை :கந்துவட்டிக் கடன்தான் நிவாரணமா?

மெரிக்காவில், அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் மூலம் வீடு வாங்கக் கடன் கொடுப்பதை, துணைக் கடன் என அழைக்கிறார்கள். வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் பத்தாத அமெரிக்கர்களைக் கூட விட்டுவிடாமல், இந்தக் கடன் வலைக்குள் பிடித்துப் போடுவதை, அமெரிக்க வங்கிகளும், ""ஹெட்ஜ் ஃபண்டுகள்'' என அழைக்கப்படும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் துணைக் கடன் அதிக அளவில் வழங்கப்படுவதற்கு, வீடு இல்லாத அமெரிக்கக் குடிமகனே இருக்கக் கூடாது என்ற கொள்கைப் பற்றெல்லாம் காரணம் கிடையாது. இந்தத் துணைக் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி மிக அதிகம்; இந்தக் கடன் மூலம்தான் ""ரியல் எஸ்டேட்'' வியாபாரம் ""ஜாக்கி'' போட்டுத் தூக்கி நிறுத்தப்படுகிறது என்பவைதான் இதற்குப் பின்னுள்ள காரணங்கள்.

அமெரிக்க வங்கிகள், ஹெட்ஜ் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தி வந்த இந்தச் சூதாட்டத்தின் விளைவாக, வங்கிகளில் வாராக் கடன் அதிகமாகி, இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நிதிச் சந்தையில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்ததோடு, பல ""பிளேடு'' (மோசடி) கம்பெனிகளும் அமெரிக்க வங்கிகளும் திவாலாகி விடுமோ என்ற பீதி முதலாளித்துவ உலகத்தைப் பிடித்தாட்டியது.

இந்த நெருக்கடி அமெரிக்காவை மட்டும் பாதிக்கவில்லை; ஐரோப்பிய நாடுகள், இந்தியா எனத் தாராளமயத்தைத் தீவிரமாக அமல்படுத்தும் அனைத்து நாடுகளிலும் எதிரொலித்தது. ""சில்லறைக் கடன் வழங்குவதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய வங்கிகள், அமெரிக்க நெருடிக்கடியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்'' எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

கார், இரு சக்கர வாகனங்கள் போன்ற ஆடம்பர நுகர்பொருட்களை வாங்கத் தரப்படும் தனிநபர் கடன், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை வியாபாரம் ஆகியவற்றுக்காக இந்திய வங்கிகள் அளித்த கடன் 2005இல் 1,63,831 கோடி ரூபாயாகும்; இது, 2006இல் 2,86,691 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் சில்லறைக் கடனுக்காக அதிகபட்சம் 55 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதால், தனியார் வர்த்தக வங்கிகள் மட்டுமல்லாது, பொதுத்துறை வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு சில்லறைக் கடன் வழங்குவதில், தங்களின் சேமிப்பைக் கொட்டுகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. என்ற தனியார் வங்கி, 2006இல் வழங்கிய மொத்தக் கடனில் 65 சதவீதமும்; பஞ்சாப் செஞ்சூரியன் வங்கி 68 சதவீதமும்; பொதுத்துறை வங்கியான இந்திய அரசு வங்கி 21.2 சதவீதமும்; பஞ்சாப் தேசிய வங்கி 22.7 சதவீதமும் சில்லறைக் கடனாக வழங்கியுள்ளன.

""இந்தச் சில்லறைக் கடன் கடிவாளம் இல்லாமல் வீங்கிக் கொண்டே போனால், நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டு, வட்டி வீதம் உயர்ந்துவிடும்'' எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, அமெரிக்காவின் நெருக்கடிக்குப் பிறகு, சிறு தொழிலுக்கும், விவசாயத்திற்கும், உற்பத்தித் துறைக்கும் கடன் வழங்குவதை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என உபதேசிக்கத் தொடங்கியுள்ளனர்.

2006ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 1,90,000 கோடி ரூபாயும்; 2007ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 2,25,000 கோடி ரூபாயும் பொதுத்துறை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடனாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும், 87 சதவீத நடுத்தர விவசாயிகளுக்கும், 70 சதவீத சிறு விவசாயிகளுக்கும் கூட்டுறவுக் கடன் கிடைப்பதில்லை என உலக வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது.

1993க்குப் பிறகு நாடெங்கிலும் ஏறத்தாழ 1,12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அவலச் சாவுகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கமிட்டிகள் கூட, ""விவசாயிகளுக்கு அரசு கடன் கிடைக்காமல் போவதும் தற்கொலைக்கு ஒரு காரணம்'' என ஒப்புக் கொண்டுள்ளன.

எனினும், போலி கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு நடக்கும் காங்கிரசு கூட்டணி ஆட்சி, விவசாயிகளின் அவலம் பற்றி முதலைக் கண்ணீர் தான் வடிக்கிறது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மைய அரசு 3,750 கோடி ரூபாய் பெறுமான நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி, 200708இல் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும் (2,033 கோடி ரூபாய்) என்ற டாம்பீக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், நடைமுறையில் இது வெறும் காகிதத் திட்டம் என அம்பலமானது.

விதர்பா பகுதி விவசாயிகளுக்கு அரசு வங்கிகள் 200708 ஆம் ஆண்டிற்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ள கடன் அளவு, அவ்விவசாயிகள் 200607இல் அரசு வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தியிருந்த அசலையும் வட்டியையும் விடக் குறைவானதாகும். விதர்பா பகுதியிலேயே தற்கொலைச் சாவுகள் அதிகமாக நடந்துள்ள யாவட்மால் பகுதி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன், 200607ஆம் ஆண்டை ஒப்பிடும்பொழுது 30 சதவீதமும்; வாஷிம் பகுதிக்கு 41 சதவீதமும்; அகோலா பகுதிக்கு 36 சதவீதமும்; புல்தானா பகுதிக்கு 38 சதவீதமும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த 2,033 கோடி ரூபாய் கடன், இப்பொழுது 1,683 கோடி ரூபாயாகச் சுருங்கி விட்டது. விதர்பா பகுதி விவசாயிகள் கடனுக்காக வங்கிகளின் வாசல்படியை மிதிக்கும் பொழுது, இது இன்னும் கூடச் சுருக்கிப் போய்விடலாம்.

அரசு நிவாரணத் திட்டத்தை அறிவித்த பிறகு, கடந்த ஜூலை 2006 தொடங்கி ஜூலை 2007க்குள்ளாக மட்டும் விதர்பா பகுதியில் 1,600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார், விதர்பா ஜன் அந்தோலன் சமிதியின் தலைவர் திவாரி. இதிலிருந்தே பொருளாதாரப் புலிகள் மன்மோகன் சிங் மாண்டேக் சிங் அலுவாலியா ப.சிதம்பரம் போட்ட நிவாரணத் திட்டத்தின் இலட்சணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

விதர்பா பகுதி விவசாயிகள் வங்கிக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரியதை, மைய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், பருத்திக்குத் தரப்டும் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,700/ ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்து, ஓட்டுப் பொறுக்கியது காங்கிரசு கும்பல். ஆட்சியைப் பிடித்த பிறகோ, பருத்திக்குத் தரப்பட்டு வந்த ஆதார விலையை ரூ. 2,250/லிருந்து ரூ. 1,750/ ஆகக் குறைத்து, விவசாயிகளின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டது. தற்பொழுது, உள்ளூர் அளவில் தயாரிக்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளுக்குத் தடை விதித்திருப்பதன் மூலம், மான்சாண்டோ எவ்விதப் போட்டியும் இன்றி பருத்தி விவசாயிகளை மொட்டையடிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங்.

1993க்கும் 2002க்கும் இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில், கிராமப்புறங்களில் இயங்கி வந்த அரசு வங்கிக் கிளைகளுள், 3,500 கிளைகள் இழுத்து மூடப்பட்டன. இதற்கு இணையாக, 1991க்கும் 2001க்கும் இடைபட்ட பத்தாண்டுகளில் விவசாயிகள் தனியாரிடம் வாங்கிய கடன் அளவு, 17.5 சதவீதத்தில் இருந்து 29.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கிராமப்புறங்களில் கந்துவட்டிக் கும்பலின் ஆதிக்கம் அதிகரித்து வரும் வேளையில், அதை முறைப்படுத்துவது தொடர்பாக உலக வங்கியும், இந்திய ரிசர்வ் வங்கியும் இரண்டு அறிக்கைகளைக் கொடுத்துள்ளன.

உலக வங்கி அளித்துள்ள அறிக்கையில் கிராமப்புற ஏழைநடுத்தர விவசாயிகளுக்கு அரசு வங்கிக் கடன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றால், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் இலாபகரமாக இயங்கும்படி ""சீர்திருத்தங்களை'' மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, இச்சீர்திருத்தத்திற்காக 2,400 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. உலக வங்கியின் இந்த ஆலோசனை வெளிவந்தவுடனேயே, இக்கடனைப் பெறும் ஒப்பந்தத்தில், போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்டு 12 மாநில அரசுகள் கையெழுத்துப் போட்டுவிட்டன.

உலக வங்கியின் ஆலோசனைப்படி இந்தியப் பொருளாதாரம் சீர்திருத்தப்பட்டதால்தான், விவசாயத் துறை முன்னெப்பொழுதும் கண்டிராத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், உலக வங்கியின் இந்தப் புதிய ஆலோசனை, விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்த்துவிடும் என யாராவது நம்ப முடியுமா? கூட்டுறவு வங்கிகளை இலாபகரமாக இயக்க வேண்டும் என்ற உலக வங்கியின் ஆலோசனை இனிப்பு தடவிய கசப்பு மாத்திரை. விளைச்சல் வீழ்ந்தால்கூட கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது; கந்துவட்டிக்காரனைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் அசலையும், வட்டியையும் விவசாயிகளிடமிருந்து பறிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆலோசனையின் பின்னுள்ள நோக்கமாக இருக்க முடியும்.

கிராமப்புற விவசாயிகளின் கடன் சுமையை ஆராய இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட குப்தா கமிட்டி, ""அரசு வங்கிகளைவிட கிராமப்புறங்களில் வட்டிக் கடை நடத்தி வருபவர்கள்தான் விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள்; எனவே, இந்த வட்டிக் கடை அதிபர்களுள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை "அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக' அரசு நியமிக்க வேண்டும். இவர்கள் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கத் தேவைப்படும் மூலதனத்தை வங்கிகள் வழங்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து கடனை வசூலித்து, வங்கிக்குக் கட்ட வேண்டிய பொறுப்பையும், அங்கீகரிக்கப்பட்ட வட்டிக் கடைக்காரர்களிடம் விட்டு விட வேண்டும். இதனால், விவசாயிகள் கடன் கேட்டு வங்கிக்கு அலைய வேண்டியதில்லை. அதிகார வர்க்கத் தடைகள் இன்றி, விவசாயிகளுக்குக் கடன் கிடைப்பதோடு, வங்கிகளின் வாராக் கடன் சுமையும் குறையும்'' என்ற அரிய ஆலோசனையை வழங்கியிருக்கிறது.

""லேவாதேவிக்காரர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடன் கொடுப்போர் சட்டம் 2007'' என்ற பெயரில் குப்தா கமிட்டி உருவாக்கியிருக்கும் மாதிரிச் சட்டத்தில், ""விவசாயத்திற்கு அளிக்கப்படும் கடனுக்கு வட்டி வரம்பு நிர்ணயிப்பது, சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிரானதாக அமையும்; ஐந்து ஏக்கர் அல்லது அதற்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கடன் கோரும்பொழுது, அவர்களின் நிலம் மற்றும் வீட்டை அடமானமாக வாங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்பொழுது சட்டவிரோதமானதாகக் கருதப்படும் கந்துவட்டிக் கும்பலின் சுரண்டலும், நிலப்பறிப்பும் சட்டப்பூர்வமானதாக மாறிவிடும். அரசு வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை நகர்ப்புறத்துத் தொழில் அதிபர்கள் ஏப்பம் விட்டதைப் போன்று, கிராமப்புற ஆதிக்க சக்திகளும் ஏப்பம் விடும் நிலைமை உருவாகும். விவசாயத்தைப் பிடித்தாட்டும் நோய்க்கு மருந்து கேட்டால், அதிகார வர்க்கமோ நோயாளியை விவசாயிகளைக் கொன்று விடுவதற்குத் தனது புத்தியைத் தீட்டுகிறது!

· ரஹீம்

Monday, November 19, 2007

சிங்கள, புலி அரசியலை மதிப்பிடும் போக்கு: 4

ப. வி. ஸ்ரீரங்கன்

17. 11. 2007


". . . சமயத்தில்

எதிரி கிடைக்காவிட்டால்

ஊரில் மனிதர்களும்,

மின்சாரக்கம்பங்களும் உண்டு

அதுவும் கிடையாத போது

நெறி பிறழாத ஒரு தோழனை. . .


துப்பாக்கி சூடாறக்கூடாது பாரும்

நியாயப்படுத்தத் தலைமைப் பீடமும்

பிரசுரம் அடிக்க வெளியீட்டுப் பிரிவும்

உள்ளன தோழரே

விடுதலைப் பாதையில் வீறு நடை போடும். "

-இளவாலை விஜயேந்திரன்.

நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம். நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை. நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை. மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது. அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை. புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.

இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும், அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.

"மக்களிடமிருந்து கற்று, அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து, கத்தென்று கத்தித் தொலைத்தான். கூடவே"கற்றறி, கற்றறி, இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான். -அவன் புரட்சிக்காரன், சோவியத்தை நிறுவிக்காட்டினான்.

அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும், தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம், தேசியம், தனிநாடு, தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.

மீளவும் ஈழத்துக்கான-பயங்கரவாதத்துக்கெதிரான போர்கள்:

இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!

கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது. முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது. இன்று அந்த இராணுவமானது "தமிழர்களின் ஜனநாயக அரசியல் முன்னெடுப்பாளர்கள்" பலாராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.

இலங்கை போன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும். ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது. இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது. எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி, அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது. இங்கே மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்படுகிறது. எந்தப் பக்கம் பார்த்தாலும்"போராடு, போராடு"என்பதாகவும், தற்கொலைக்காக மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயுதமாகவும் குறித்துரைக்கப்படுகிறது.

இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைப்பது நமது காலத்து ஊழ்வினை! இத்தகைய கொடுமையான மனிதவிரோத அரசியலைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை"சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும் , தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த புலிகளின் தோல்வியாகவும் நாம் கருத முடியாது. அமெரிக்காவானது ஒவ்வொரு படிமுறையாகப் புலிகளை முடக்குவதற்காகச் செய்யும் காரியங்களுக்குள் அப்பாவித் தமிழர்களிடம் தட்டிப்பறித்த பல்லாயிரக்கணக்கான பணங்கள்வேறு முடங்கிக் கொள்கிறது.

இலங்கையரசு புலிகளுக்கெதிராக-தமிழ் பேசும் மக்களுக்கெதிராகச் செய்யும் இனவொடுக்குமுறைப் போரை"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது ? மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி, அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.

புலிகள் தம்மளவில் கேடுகெட்ட அரசியல் போக்குகளை உள்வாங்கிய வலதுசாரி அமைப்பானாலும் அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுவது எப்படியென்பதே முக்கியமாக இனம்காணவேண்டிய இன்றைய அவசியத் தேவையாகும். புலிகளின் வர்க்க நிலை இவ்வளவுதூரம் மக்களை அழிவுப்பாதைக்கிட்டுச் செல்வது, அந்த அமைப்பின் இருப்பையும் அழித்துக்கொள்வதற்கான அரசியல் மதியூகத்தைச் சிங்களச் சியோனிசத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தபடி நகரும்போது, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புமற்றுக் கிடக்குமொரு சூழலில் புலிகள் போருக்குத் தயாராவது எந்தத் தளத்திலும் அதன் இருப்பைத் தக்கவைப்பதில் சாத்தியமிருக்காது. புலிகளின் இந்த வரம்புமீறிய மீள் போராட்டத் திசைவழிக்கு நிச்சியமான அவசியமொன்றிருப்தாக எந்தக் காரணமுமில்லை. இது உள்ளிருந்து புலித் தலைமையால் எடுக்கப்பட்ட நகர்வாக இருக்கமுடியாது. புலிகளைப் பலவீனப்படுத்தித் திசைவழியை எவரெவரோ தகவமைத்துக் கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தம் இன்றைக்குப் புதிதாக நடப்பதல்ல. ஆரம்பத்திலிருந்து இதுதான் கதை.

புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது, இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது-பயன்படுத்தி வருகிறது!

துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது. இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும். இன்றிவர்கள் மக்களுக்குத் தம்மைத் தவிர வேறெவரும் காப்பர்களாகமுடியதென்ற கதையாகப் பரப்புரையிட்டுக்கொள்கிறார்கள்!இவர்களே புலி எதிர்பார்களாகவும், இலங்கை-இந்திய ஆதரவர்களாகவும், இலங்கை-இந்தியாவே மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக் காட்டிவருகிறார்கள். இன்றிந்தச் சதியானது இலங்கை அரசின் அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் புலிகளின் பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது, இன்று!இதற்கு நல்ல உதாரணம்: ரீ. பீ. சீ. வானொலியின் அரசியல் கலந்துரையாடல் மற்றும் தேசம் நெற்றில் இடம்பெறும் வெற்று விவாதங்கள்-தனிநபர் வாதம் மற்றும் சேறடிப்புகள், கே. ரீ. இராஜசிங்கத்தினது கைக்கூலித்தனங்கள் மற்றும் கண்றாவிகள். இது குறித்துப் பின் தனியான கட்டுரையில் விவாதிப்போம்.

பொருளாதார ஊக்கம் விரிக்கும் யுத்தம்:

இந்த நூற்றாண்டின் பொருள் வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம், யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது. இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை. இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும், அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.

இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது. இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது. இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்துவந்தது. என்றபோதும் இத்தகைய இனஅழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது. இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது. இதற்கு இன்றைய யாழ்ப்பாணம் மற்றும் சமீபத்தில் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சாம்பூர், கிழக்கு மாகணம் போன்ற தமிழர் பிரதேசங்கள் நல்ல எடுத்துக்காட்டு!

இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும், பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள்(தமிழ்ச் செல்வன் போன்றவர்களின் படுகொலைகள்) நிகழ்த்தப்படுகின்றன. அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை, உடமையை, மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும். இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல, மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும். இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு. எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள்மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து, எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் வியூகத்தையுங் கொண்டிருக்கிறது.


இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும், புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி, அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது. காலம் கடந்த அரசியல் வியூகங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது. இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறியூடே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும். எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும், நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.

உண்மைகளைப் பகுத்தறிதலும், ஈழப் போரும் அது காணத்துடிக்கும் பொருளுலகமும்:

பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை. இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும். இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது. அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும். குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்ச்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும், பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும். இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம். எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது. இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம். புலிகள் கூறும் அல்லது அவர்களது கருவூலத்தில் அர்த்தங்கொண்ட பொருளாதார முன்னெடுப்புகள், கட்டுப்படுத்தித் தம்மால் இயக்கப்படும் இன்றைய பொருளாதார முன்னெடுப்பானது உள் மட்டத்தில் யுத்தத்துக்கு உந்துதலைக் கொடுக்கவும், அத்தகைய தரணத்தில் மக்களை பட்டுணிச் சாவிலிருந்து காக்கும் பொருளாதார முன்னெடுப்பல்ல. அவர்கள் சாரம்சத்தில் புதிய தரகு முதலாளிகளாகி வருவதற்கும், அதை நிலைப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் இனத்தில் ஆளும் வர்க்கமாக ஆதிக்கம் பெறுவதற்குமான ஒரு திட்டமிட்ட யுத்தத்தைச் செய்வதால் இனவாதச் சிங்கள அரசுக்கெதிரான மக்களின் உண்மையான எழிச்சி-மக்கள் திரள் போராட்டம் முடமாகியுள்ளது.

ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது. அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம். இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும், அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும். நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது. இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர். இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார். இங்கே புலிகள் கூறும் அல்லது செய்யும் அரசியல் தமிழ் மக்களுக்குள் அவற்றியாவதற்கான நிலைமைகள் இங்ஙனமே கட்டப்படுகின்றன. இதுவே யுத்தத்தைச் சொல்லியே முழுமொத்த மக்களையும் ஒட்ட மொட்டையடிக்கும் சூழலுக்கும் ஒரு வகையான உள ஒப்புதலை அவர்களுக்கு மறைமுகமாக அங்கீகரித்திருக்கிறது. இவையெல்லாம் ஈழத்தில் தமிழ் பேசும் மக்களுக்குச் சுதந்திரமான சமத்துவமான-ஒடுக்கு முறையற்ற, சாதிவேறுபாடுகளற்ற, பெண்ணடிமைத்தனமற்ற, சுரண்டலற்ற வாழ்வுண்டு என்ற நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட அதீத ஏமாற்று வித்தைகளாகவே இருக்கிறது!

இந்தச் சூழலில்-காலவர்த்தமானத்தில் மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும், அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி, இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது. இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. அது கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது, காப்பதென்பதைத்தாண்டி, இன்று விஞ்ஞானத்தையும், காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது. இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய விஞ்ஞானத் திருவிளையாடல் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு-உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது. இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற, செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது. இங்கே புலிகள் சொல்லும் அல்லது செய்யும் அரசியலில் உள்ளார்ந்து இருப்பது இத்தகைய உலகப் பொது நிலையின் பிரதிபலிப்பாகும். இவர்கள் நவீனவுலகத்தில் தமது வளங்களை மிக நன்றாக அறிந்து வைத்து அவற்றைக் கையகப்படுத்தி மக்களை அத்தோடிணைத்துச் சுரண்டுவதற்கானவொரு சட்டப்படியான அங்கீகாரத்துக்குக்காகச் செய்யும் இந்தப் பேர யுத்தத்தை நாம் வன்மையாக எதிர்ப்பதும் மட்டுமல்ல. இத்தகையவொரு போரினால் மக்களை ஏமாற்றிப் பலியிடுவது தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கானதல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லியே ஆக வேண்டும்!

புலிகளுக்கும், பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது. இங்கே நிறுவனப்பட்ட புலி அரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும், அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை. இதைத்தாம் அராஜகமென்கிறோம். இங்கோ கொலையும், பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது. இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள். இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது. இதனூடாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் ஒட்டச் சுரண்டித் தத்தமது கைகளுக்குள் போட்டுக்கொள்ள எடுக்கும் நடிவடிக்கைக்குப் பெயர் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போர் என்பதாக விரியப் போகிறது. இதுவே ஒவ்வொரு கட்டத்திலும் தமிழருக்கென்றொரு தாயகம் வேண்டுமென்றும், ஆண்ட பரம்பரை ஆளத்துடிக்கிறதென்றும் கோசமிடுகிறது. எமக்கென்றொரு நாடு வேண்டும் என்றும் பெரும் வீராப்புக் கோசம் போடுகிறது. இதற்குள் இருக்கும் சூட்சுமம் பொருள் குவிப்புத்தாம்.

மாதிரித் தமிழன், தமிழீழத்துப் போருக்கான ஊற்று:

இது மனித மனங்களின் தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது. இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம், பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது. அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை, மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம். இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது. இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!-இவனே ஈழத்துக்கான ஆதரவுச் சக்தி-உத்தமத் தமிழன்!

மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின், அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை, தனிநபர் துதிகளை, போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும். இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே. இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம் சார்ந்து உரையாடுவதும், எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது. உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது, அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே. இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது. கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.

நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை, மனிதத் தன்மை, தனிநபர் சுயநிர்ணயம், சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது. ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து, அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் புலிகள் அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை. கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும், அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும், வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது, எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு, அதன் நகலாகத்தாம் இருக்கிறது. இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது! ஆனால், இணையங்களில் புலிகளைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் சில முகமூடி மனிதர்களுக்கு இது மட்டும் புரிவதேயில்லை. இவர்கள் நியூட்டன் விதியையும் தொட்டுச் செல்கிறார்களென்றால் பாருங்களேன்!

மக்கள் தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆனால் அந்த மக்களைக் காவுகொண்ட நவீன விஞ்ஞானமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் வலுவாகச் செயற்படுகிறது எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும், அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு, அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே, அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன ? நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும். இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை. மாறாக அவர்களையின்னும் அந்நியப்படுத்தி, புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது. இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது. இங்கே தேசியத் தலைவர் எல்லாவற்றையுமே செய்து முடிப்பாரென்னும் மனதைக் கண்முன்னே கொணர்ந்து சிந்தியுங்கள்!

தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை. இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை. இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும். இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும். இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை நாம் அறிந்து ஒத்துக் கொண்டேயாகவேண்டும். இங்கே புலிகள் விடும் கயிற்றை நாம் கட்டிப் பிடித்திழுக்கும் ஈழத்தேர் இன்னும் இருப்பிடம் வந்த பாடில்லை. அது வருவதற்கான அறிகுறி கிடையவே கிடையாது.

சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது. இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே! சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது, கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு. இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது. இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம். தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது. அங்கே சதா ஊசாலாட்டமும், வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது. இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது. இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள்(புலிகள், சிங்கள-இந்திய அரசுகள்) மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை "பொருளாதார அபிவிருத்தி" என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது. இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழத்துக் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.

தொடரும்.

ப. வி. ஸ்ரீரங்கன்

17. 11. 2007

ரிலையன்ஸ் எதிர்ப்பு ஒட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!

மே. வங்கத்தில் ஏகபோக ""பெண்டலூன்'' சூப்பர் மார்க்கெட்டுகளைத் தொடங்கி வைத்து "புரட்சி' செய்து வரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், இப்போது ""ரிலையன்ஸ் பிரஷ்'' காய்கறி அங்காடிகள் மற்றும் ரிலையன்ஸ் பேரங்காடிகளைத் தொடங்க கதவை அகலத் திறந்து விட்டுள்ளனர். கொல்கத்தா நகரின் 76 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ""பார்க் சர்க்கஸ்'' காய்கறி அங்காடியை ரிலையன்சுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்குக் கையளித்துள்ளனர். இதுதவிர ""பஜார்கள்'' என்று குறிப்பிடப்படும் நகரின் பல்வேறு அங்காடிகளையும் ரிலையன்சுக்குத் தாரை வார்த்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு மாதத்தில் கொல்கத்தா நகரின் கிரிஷ்பார்க் போலீசு நிலையம் அருகே நந்தாமுல்லக் தெருவில், ரிலையன்ஸ் பிரஷ் காய்கறி அங்காடி தொடங்க ஏற்பாடுகள் வேகமாக நடந்து வந்தன. தங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக குமுறி எழுந்த சில்லறை வியாபாரிகள், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைமையில் திரண்டு கடந்த ஆகஸ்டு 18ஆம் நாளன்று முழக்கமிட்டபடியே ஊர்வலமாகச் சென்று அந்த ரிலையன்ஸ் கடையை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த "இடதுசாரி' போலீசு, சில்லறை வியாபாரிகள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து, ரிலையன்ஸ் கடையைப் பாதுகாக்க போலீசு பட்டாளத்தை குவித்துள்ளது.

சில்லறை வியாபாரிகளின் திடீர் போராட்டத்தைக் கண்டு பீதியடைந்த ரிலையன்ஸ் நிறுவனம், தற்காலிகமாக, காய்கறி அங்காடிகளைத் திறப்பதை நிறுத்தி வைத்துள்ளது. ""ஐயோ, அப்படிச் செய்யாதீர்கள்! ரிலையன்ஸ் கடைகளுக்கு இம்மாநில அரசு முழுப்பாதுகாப்பு அளிக்கும்'' என்று உறுதியளித்து அழைக்கிறார், மே.வங்க அரசுச் செயலரான அமித்கிரண்தேப். இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் பார்வர்டு பிளாக், புரட்சி சோசலிஸ்டு கட்சி, வலது கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ரிலையன்சுக்கு எதிராக சில்லறை வியாபாரிகளை அணிதிரட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரான பினாய் கோனார், ""இடது முன்னணியிலுள்ள கட்சிகளே இப்படிச் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்; பெண்டலூன் கடைகள் திறக்கப்பட்டபோது எதிர்ப்பு காட்டாக இக்கட்சிகள், ரிலையன்சை மட்டும் இப்போது எதிர்ப்பது சந்தர்ப்பவாதமாகும்'' என்று பொரிந்து தள்ளுகிறார்.

ரிலையன்ஸ், பெண்டலூன் முதலான பேரங்காடிகளுக்குத் தாராள அனுமதி அளிப்பது மட்டுமல்ல; 1972ஆம் ஆண்டின் சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி தாராளமயமாக்கலுக்கு விசுவாச சேவை செய்யவும் மே.வங்க போலி கம்யூனிச அரசு தீர்மானித்துள்ளது. இச்சட்டத் திருத்தம், உள்நாட்டுவெளிநாட்டு பெருந் தொழில் நிறுவனங்கள் சில்லறை வணிகத்திலும், விவசாய நேரடிக் கொள்முதலிலும் ஈடுபட தாராள அனுமதி அளிப்பதோடு, ஒப்பந்த விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகளையும் அளித்துள்ளது; ஒப்பந்த விவசாயம் என்பது மிகப் பெரிய மோசடி என்று அம்பலப்பட்டுப் போயுள்ளதால், இத னைக் ""கூட்டுப் பங்கு விவசாயம்'' என்று பெயரை மாற்றி பித்தலாட்டம் செய்கிறது. இச்சட்டத் திருத்தம் மே.வங்க சட்டப் பேரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

விவசாயத்தில் தாரளமயமாக்கலைத் திணித்து, விவசாய சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்த மே.வங்க அரசு முயற்சித்துவரும் வேளையில், ஏற்கெனவே இதனைச் செயல்படுத்தி வரும் 11 மாநிலங்களின் வரிசையில் 12வது மாநிலமாக உ.பி.யை இணைத்து, புதிய சந்தை சீர்திருத்தக் கொள்கையை கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று அறிவித்தார், அம்மாநில முதல்வரான மாயாவதி. தமது வாழ்வைச் சூறையாட வந்துள்ள இக்கேடுகெட்ட கொள்கையை எதிர்த்து உ.பி. விவசாயிகளும் சிறுவணிகர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தின் போதுதான் லக்னோ மற்றும் ராஞ்சி நகரங்களில் ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

இத்தருணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, மத்தியிலுள்ள காங்கிரசு கூட்டணி அரசு நெருக்கடிக்குள்ளாகி, ஆட்சி கவிழ்ந்து மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்ற ஊகமும் வதந்தியும் நிலவியது. அப்படி ஒருவேளை திடீரெனத் தேர்தல் வந்துவிட்டால், ஓட்டுப் பொறுக்குவதற்குத் தடையாக இக்கொள்கை அமைந்துவிடும் என்பதாலேயே திடீர் ""பல்டி''யடித்து இத்தாராளமயக் கொள்கையைச் செயல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்து, ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார்; சாதகமான சூழலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், போலி கம்யூனிஸ்டுகள் முதல் தலித்திய தலைவி மாயாவதி வரையிலான அனைத்து ஓட்டுக் கட்சி துரோகிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்காமல், விவசாயிகளும் சிறுவணிகர்களும் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது; தாராளமயமாக்கலை வீழ்த்தவும் முடியாது.

குமார்

அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்!

அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்!

அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழத்தெறிவொம்!!"

தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்

மெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. நமது அணு மின்நிலையங்களையும் ÷தாரியத்தைப் பயன்படுத்தி சுயசார்பாக நம் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் அணு தொழில்நுட்பத்தையும் முடக்கவும் திருடவும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழிசெய்து கொடுத்திருக்கிறது.

இது வெறும் அணுசக்தி ஒப்பந்தமல்ல; ஜூலை 2005இல் இந்திய அரசு அமெரிக்காவுடன் இரகசியமாகச் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஓர் அங்கம். அதன்படி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இந்திய இராணுவத்தை ஒரு காலாட்படையாக அனுப்பி வைக்க மன்மோகன் அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில்தான் ஈரானைத் தாக்குவதற்காக அனுப்பப்பட்ட நிமிட்ஸ் கப்பல் சென்னை துறைமுகத்தினுள் அனுமதிக்கப்பட்டது.

அமைச்சரவைக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, இனி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நிராகரித்தாலும் இதனை ரத்து செய்ய முடியாது என்று திமிராகப் பேசுகிறார், பிரதமர். இப்படித்தான் மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய ""காட்'' ஒப்பந்தமும் 1994இல் இதேபோல திருட்டுத்தனமாக நம்மீது திணிக்கப்பட்டது. அந்த மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தின் உச்சகட்டம்தான் இந்த அடிமை ஒப்பந்தங்கள்.

இந்த உண்மைகளை விளக்கியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகமெங்கும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. இவ்வமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கிலான துண்டுப் பிரசுரங்களும், ""அடிமைஅடியாள்அணுசக்தி!'' எனும் சிறுவெளியீடும் உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்று, இப்பிரச்சார இயக்கத்துக்கு வலுவூட்டின. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு, 29ஆம் தேதியன்று தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகளில் இத்துரோக ஒப்பந்தத்திற்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

செங்கொடிகள் உயர்ந்தோங்க, விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை, கோவை, ஓசூர், திருப்பத்தூர், சிவகங்கை, தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தின் காரைக்கால் ஆகிய நகரங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநா யக உணர்வும் கொண்ட பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், தொழில்நுட்பவாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டு இவ்வ மைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் இவ்வமைப்புகள் இப்பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.


பு.ஜ. செய்தியாளர்கள்.

Sunday, November 18, 2007

நாலாம்தர பொறுக்கிகளும் கற்றன் நாஷனல் வங்கியும்

பி.இரயாகரன்
18.11.2007

தேசம் நெற் தங்கியிருப்பது இந்த கற்றன் அரசியல் பேசும் பொறுக்கிகளில் தான். அவர்களின் கொசுறு வாசகர்கள் இவர்கள் தான்.

உங்கடை அரசியல் புலியிசமா? கைக்கூலி புலியெதிர்ப்பா? அல்லது ஏது? அதையாவது கருத்தாக வைத்துக் கொண்டு உங்களால் ஏன் நேர்மையாக அரசியல் ரீதியாக வர முடியவில்லை. அதைச் சொன்னால் உங்கள் வங்குரோத்து அம்பலமாகிவிடும் என்பதால், தேசம்நெற்றில் வந்து குசுவுகின்றீர்கள். வாழ்க உங்கள் தேசியம், உங்கள் ஜனநாயகம்.

கற்றன் நாஷனல் வங்கிக் கொள்ளை பற்றி பேசுகின்றீர்கள். அந்த வங்கியின் பெரும் தொகைப் பணத்தை, பலரைக் கொன்று கொள்ளையிட்டது புலிகள். நாம் வங்கியை விட்டுச் சென்ற பின், மிகுதியை கொள்ளை அடித்த ஈ.பிஆர்.எல்.எப். எல்லாம் உங்கள் ஆட்கள் தான்.

நாம் வங்கி கொள்ளை செய்தது என்பது, தற்செயலானது. இந்தியா எதிர்புரட்சிகர கும்பலை ஆயுதப்பயிற்சி ஊடாக வளர்க்க தொடங்கியவுடன், அதை நிராகரித்த நாம், அதை எதிர் கொள்ளவே அது செய்யப்பட்டது. அதை ஏன் சாதிக்க முடியவிலiல என்பது, அமைப்பு பற்றிய விமர்சனம். யாரும் பணத்தைக் கொண்டு உங்களைப் போல் ஓடிவிடவில்லை.

இந்தவிடையம் மீது, அதுவும் எனக்கு எதிராக இதில் அக்கறை கொள்பவன் யார்? எந்த நோக்கில்? இது அல்லவா இந்த பின்னணி அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றது. அவர்கள் அதைச் சொல்ல மாட்டார்கள், நீங்கள் யாராவது இதைச் சொல்ல முடியுமா? நாவலன் மட்டும் இதை பார்க்க முனைந்தார்.

மீண்டும், இதைச் சொல்லும் அந்த நபர்கள் யார்? ஏன் சொல்லுகின்றான்? அவனின் நோக்கம் என்ன? என்னைக் குற்றம் சாட்டும் போது, ஏன் குற்றம் சாட்டுகின்றான். எனது அரசியலை எதிர்ப்பதற்காக என்பது தெளிவானது. இது தான் அவனின், தேசம்நெற்றின் அரசியல் வழியா? இதுதான் மண்டையில் போடும் புலிகள் வழி கூட. என் அரசியலை எதிர்க்கும், அவனின் அரசியல் என்ன? இங்கு எந்த ஒரு சமூக நோக்கமும் கிடையாது. தெரிந்தால் சொல்லுங்கள். சமூக விரோதம், இதை தவிர வேறு எந்த அரசியல் நோக்கமும் அவர்களிடம் கிடையாது. தேசம் நெறறிடம் அது உண்டா என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

தேசம்நெற்றும் கற்றன் நாஷனல் வங்கியும்

தேசம் நெற் மொழி நாகரீகம் பேசிக் கொண்டு, அதை அவதூறு வடிவில் காவி வருகின்றது. இதற்கு ஆதாரம் எதையும் அவர்கள் வைத்தனரா? இல்லை. வைக்கமுடியாத ஒன்றை, எப்படித் தான் எங்கிருந்து தான் வைக்க முடியும்? ஆகவே தான் அவர்கள், அவதூறு வடிவில் காவி வருவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன், இதில் ஈடுபட்டு இருந்ததை நாவலனின் கூற்று காட்டுகின்றது. நாவலன் தனது குறிப்பில் 'என்னுடைய கணிப்புப்படி ரயாகரனிடம் இந்தப் பணம் இருப்பதாகத் தெரியவில்லை என்ற விடையத்தை 6 மாதங்களுக்கு முன்னரே தேசம் ஆசிரியருடனான தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்திருந்தேன். இது தேசம்நெட் வெளியாவதற்கு 5 மாதங்களுக்கு முற்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதாரங்களற்ற அரசியல் குற்றச்சாட்டுக்களையும், தனிமனிதக் குற்றச்சாட்டுக்களையும் கூட பீபீஸி போன்ற முதலாளித்துவ ஊடகங்களே புறக்கணிக்கின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" தேசம் நெற் ஆசிரியர் ஏன் இந்த தகவலை தேடித்திரிந்தார். எந்த அரசியல் அக்கறையுடன் தேடினார்? எந்த அரசியலைப் பாதுகாக்க? இதன் அரசியல் பின்னணி என்ன? அரசியல் நேர்மைக்கு பதில், இதில் உள்நோக்கம் இருந்துள்ளது தெளிவு.

நாவலன் கூறுவது போல் இதை நாம் கருதவில்லை. 'பல தடவைகள் பலர் ரயாகரனின் கற்றன் நாஷனல் பாங் கொள்ளை பற்றி அவர் எழுதுகின்ற போது மட்டும் குற்றம் சாட்டி மொட்டைக்கடிதம் வரைகின்றனர்" என்கின்றார். நாம் இதை மொட்டைக் கடிதமாக கருதவில்லை. மாறாக அரசியல் ரீதியாக இழிந்து போனவர்களின் கடைசி ஆயுதம். இப்படித்தான் இனி அவர்கள் எம்மை எதிர்கொள்ள முடியும் என்ற அரசியல் பரிதாபம்.

எமது கருத்தை எதிர்கொள்ள யாருக்கும் திராணி கிடையாது. ஆகவே என் வாழ்வை புகுந்து தேடுகின்றனர். இதுவே அவர்களின் அரசியலாகிவிட்டது. எப்படிப்பட்ட அவதூறு பேர்வழிகள் என்பதற்கு, அவர்கள் குசுவிட்ட பதிவொன்றைப் பாருங்கள். மனோவின் அச்சகத்தில் நான் வேலை செய்கின்றேனாம. மனோவுக்கு எதிரான அவதூறு. வேடிக்கை என்னவென்றால் தேசம் நெற் ஆசரியர் சேனன் எமது அச்சகத்தில் வேலை செய்தவர் என்பது தான். அவருக்கு நன்கு தெரியும், இவ்வச்சகம் மனோவினுடையதல்ல என்பது. ஆனால் அந்த அவதூறை குசுவி விடுகின்றார். எனக்கு எதிராக அவதூறு பொழிவது என்பது, அவர்களின் இணைய கொள்கையாகிவிட்டது. முன்பு நெருப்பு டொட் கொம் கூட, கருணாவுக்காக குலைத்த போது இந்த அச்சகத்தை, புலிகளின் அச்சகம் என்றது. இதைப் பாருங்கள். என்ன ஒற்றுமை என்பதை.

அண்ணை கோவியாதைங்கோ! அண்ணை! அண்ணை மன்னிச்சுடுங்கோ! அண்ணை!

என்னை அவதூறாக தாக்குவது தான் தேசம்நெற்றின் அரசியல் நோக்கம் என்பது தெரிந்தவுடன், நாங்கள் பின்வாங்கினோம். சமூகத்தைப் பற்றி எழுத வேறு விடையங்கள் எம்முன் உண்டு. எலும்பைக் கவ்விக்கொண்டு குலைக்கிற நாய்களுக்கு, நாம் கல் எறிய விரும்பவில்லை. ஒதுங்கிப்போவோம் என்றால் துரத்தி கடிக்கிறது. இதை துரத்தி விட்டு எம்வழியில் செல்ல வேண்டிய நிலை.

சேனன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்கள் தளத்தில் வாங்க கடிபடுவோம் என்றார். நீங்கள் கூப்பிட்டு வைத்து எம்மீது காறித் துப்புவதை விட, நீங்கள் தனியாக துப்புங்கள் என்றேன். அது தான் அங்கு நடக்கின்றது. இதை மூடிமறைக்க எனது பதிவுகளை நான் அனுப்பியதாக கூறி பின், காறித் துப்புகின்றனர். இப்படி எனக்கு எதிராக அவதூறுக்கு என்று ஒருதளம்.

நாளை ஒரு பெண் அல்லது பெண்ணின் பெயரில் ஒரு ஆண் றயாகரன் என்னைக் கற்பழித்தவர் அல்லது என்னை ஏமாற்றியவர் என்று எழுதி அவதூறு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவைதான் தேசத்துக் தேவையாக உள்ளது. வேறு எப்படித் தான் அவர்கள் அரசியல் செய்யமுடியும்.