தமிழ் அரங்கம்

Showing posts with label முரண்பாடு. Show all posts
Showing posts with label முரண்பாடு. Show all posts

Friday, May 15, 2009

ஏன் இன்னமும் இனவழிப்பு யுத்தம் முடியவில்லை!?

காலக்கெடு பல விதிக்கப்பட்டது. நாட்கள் பல குறிக்கப்பட்டது. சில மணி நேரங்கள் கூட அறிவிக்கப்பட்டது. இருந்தும் பேரினவாத இனவழிப்பு யுத்தம், இன்னமும் முடிவுக்கு வரவில்லை. காரணம் என்ன!?

அரசின் 'மீட்பா!?" அரசின் 'மனிதாபிமானமா!?" இல்லை. இவை எல்லாம் அரசின், அரசியல் நோக்கமாக இருப்பதில்லை. இனவழிப்பே பாசிட்டுகளின் அரசியல். 'மீட்பு", 'மனிதாபிமானம்" என்பன இனவழிப்புத் திட்டத்தின் முன், தவிர்க்க முடியாத வண்ணம் வந்த புதிய விடையங்கள். அப்படியாயின் காரணம் என்ன!?

புலிகள் பலமா!? இல்லை, அதுவுமில்லை. புலிகளின் பலத்தின் முன், அவர்களின் யுத்த தந்திரத்தின் முன், அவர்கள் என்றோ அழிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படியாயின் எது!?

உண்மையில் இந்த இனவழிப்பை தான் விரும்பியவாறு செய்யமுடியாது தடுப்பது, சர்வதேச முரண்பாடுகள்தான். இனவழிப்பின் ஊடாகத்தான், புலியை அழிக்க அரசு விரும்பியது. பாரிய இனப்படுகொலைகள் மூலம், இதைச் செய்யவே விரும்பியது.

இதைத் தடுத்தது, நிலவும் சர்வதேச................
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, July 11, 2008

ஜனநாயக கோசத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியத்தை எப்படி இயக்கங்கள் திரித்தன?

தமிழ் தேசியத்தையே தமிழ் மக்களுக்கு எதிராக திரித்த வரலாறு தான், எமது தேசிய வரலாறு. ஏன் ஜனநாயக வரலாறும் கூட. வெறும் புலிகளல்ல, அனைத்து பெரிய இயக்கங்களும் இதைத்தான் செய்தன. மக்களை தமது எதிரியாகவே நிறுத்தின.

அனைத்து பெரிய இயக்கங்களும், அன்னிய சக்திகளின் அரசியல் ஏஜண்டுகளாக இருந்தனர், இருக்க முனைந்தனர். அவர்களையே தமது நண்பனாக, தோழனாக கருதினர். மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், மக்கள் இடையே இருந்த முரண்பாடுளை களைந்த ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டத்துக்கு பதில், அதற்கு வேட்டுவைத்தனர். இதில் தியாகியானோர் வரலாறு போற்றப்படுவதில்லை. அவர்களை தூற்றியபடி, மக்களிடையேயான முரண்பாடுகளை பாதுகாத்து, அதை மேலும் ஆழ அகலமாகிப் பிளந்தனர்.