தமிழ் அரங்கம்

Saturday, November 28, 2009

ஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துகின்றது!?

இன்னும் இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?

இன்னும் இரண்டு வருடத்தின் பின்னான தேர்தலை, இந்த அரசு வெல்ல முடியாது. மக்களுக்கு எதிரான பாரிய அடக்குமுறையின்றி ஆள முடியாது. இந்த உண்மையால், தாங்கள் அதிகாரத்தை தக்கவைத்து தொடர்ந்தும் மக்களை அடக்கியாள தேர்தலை முன் கூட்டி நடத்துகின்றனர். இந்த அவசர தேர்தல், எதிர்காலத்தில் சமூக கொந்தளிப்பும், சமூக நெருக்கடியும் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பாரிய சமூக ஓடுக்குமுறையை ஏவி ஆளமுடியும் என்ற எதார்த்தம், எதிர்காலம் இலங்கையில் அமைதியற்ற கொந்தளிப்பான காலமாக இருக்கும் என்பதன் அடிப்படையல் ஆளும் வாக்கம் தன்னை தயார் செய்கின்றது.

இலங்கை மக்கள் என்றுமில்லாத வகையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் காலம், இனிவரும் ஆண்டுகள்தான். இலங்கைக்குள் ஏகாதிபத்திய ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, November 27, 2009

ஆயிரம் ஆயிரமாக தியாகம் செய்த தியாகிகளும், துரோகி பிரபாகரனும் (சரணடைந்த பின் கொல்லப்பட்டவர்கள் படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது.)

இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் அதன் தலைவர்களும் தாம் உயிர் தப்பிப் பிழைக்க மக்களை பணயம் வைத்தனர். அதற்கு உடன்பட மறுத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். இப்படிப்பட்ட கொலைகாரர்கள், இறுதியாக தாம் தப்பிப் பிழைக்க கோழைகளாக சரணடைந்தனர். மக்களுக்கு எதிராகவும், தம் அமைப்புக் கோட்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.

இப்படி எல்லாவிதத்திலும் துரோகத்தை செய்தவர்கள் தான், பிரபாகரன் தலைமையிலான புலித்தலைமை. ஆயிரம் ஆயிரம் இளைஞர்களும், யுவதிகளும் இந்த துரோகத்துக்காக, தங்கள் உயிரை தியாகம் செய்யவில்லை. ஆனால் இந்த மாபியாத் தலைமையோ தங்கள் சுயநலத்துடன், தியாகங்களையே காட்டிக் கொடுத்து. தன் சுயநலம் சார்ந்த முட்டாள் தனம் மூலம், தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச்சென்றது.

இப்படி சரணடைந்து மரணமான துரோகி பிரபாகரனை எப்படிக் காட்டி பிழைப்பது என்பதுவே புலத்து புலிக்குள்ளான முரண்பாடு. மாவீரராக்கி பிழைக்க முடியுமா அல்லது உயிருடன் இருப்பதாக சொல்லி நக்க முடியுமா என்பதே, புலத்து மாபியாக்களின் திரிசங்கு நிலை. இதற்குள் பினாமி சொத்தைப் பங்கு போட்டு அனுபவிக்கும் முரண்பாடுகள். இப்படி துரோகி பிரபாகரனை....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 26, 2009

போராளிகளிற்கு தலை சாய்ப்போம் துரோகிகளை இனம் காண்போம்

புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை உயிரோடு உள்ளது என்பது போன்ற மாஜயை ஏற்கனவே பரப்பியுள்ளனர் மேலும் கணிசமான அளவு தமிழ் மக்கள் தலைமை உயிரோடு உள்ளதாகவே இன்னமும் வீணான கற்பனையில் உள்ளனர் மக்கள் விழித்துக் கொள்ளும் முன் இன்றய நிலையை தமக்கு சாதகமாக்கி பணம் கறப்பதற்கு தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகளின் கூட்டுடன் புறப்படடுள்ளனர்

இந்த தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகள் எப்படி எமது 40 ஆண்டு கால போரட்டத்தினை தமது நலன்களிற்கு பயன்படுத்தினார்கள் என நீண்ட பட்டியலே வெளியிடலாம் இறுதியாக எமது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஓலமிட்ட போது இந்த கழிசடை அரசியல்வாதிகள் தமது பாரளுமன்ற நாற்காலிக்காக எந்த இந்திய மத்திய அரசின் முழு ஆதரவுடன் எம் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்டதோ அவர்களுடன் கைகோர்த்து கொஞ்சி குலாவியதுடன் எமது பிரச்சினை குறித்து வாய் ழூடி இருப்பதற்காக பெட்டி பெட்டியாக பணமும் கைமாறிக் கொண்டவர்கள்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 25, 2009

புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!

வன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.

பொதுநிதியத்தை இங்கு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாத வண்ணம், மண்ணில் வாழும் மக்களுக்கான ஒரு பொதுநிதியமாக மாற்றக் கோருவது தான், உண்மையான மக்கள் நலனாகும். அனைத்து புலிப்பினாமிச் சொத்தையும் அப்படி மாற்றக் கோருங்கள். அப்போது தெரியும் உங்கள் இந்த பினாமிகளின் நேர்மையும், தமிழ்மக்கள் பற்றிய அவர்களின் உண்மையான அக்கறையும்.

இன்று இதை புலத்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை.

ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.

மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன்,.... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிரபாகரனை பலிகொடுத்த அரசியல் எது?


இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கும் தம்மைச் சுற்றிய தன் இனத்துக்கும் நடக்கும் இனவொடுக்குமுறையை, சுயமாக எதிர் கொள்ளும் அனைத்து சுய சமூக ஆளுமையையும் இழந்து நிற்கின்றனர். கடந்த காலத்தில் அவர்களைச் சுற்றி பல்வேறு நிகழ்வுகள், அவர்களின் சுயாதீனமான கூறுகளை அழித்து இருந்தது.

இதனால் சமூகமோ வாழா வெட்டி நிலைக்குள், இன்று சிதைந்து கொண்டிருக்கின்றது. இதை நாம் எம் சொந்த தவறுகள் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தான், எதிர்காலத்திலாவது நாம் சரியாக எதிர்வினையாற்ற முடியும்.

இனவொடுக்குமுறையோ இன்று என்றுமில்லாத வடிவில், தட்டிக்கேட்பாரின்றி மக்கள் மேல் ஒரு ஒடுக்குமுறையாகவே ஏவப்படுகின்றது. ஆள் நடமாட முடியாத சூனியப் பிரதேசத்தில், ஆளையே போட்டுத் தள்ளும் சூழலில்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 24, 2009

மக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு, அஞ்சலி செலுத்த முனையும் மாபியாக்கள்!

புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.

இப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல இந்த பினாமி சொத்து எப்படி ஒரு காரணமாக இருந்ததுவோ அது போல், அதை தமக்குள் பங்கிட பிரபாகரனின் மரணத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கமைய மாபியா கேபி பிரபாகரனுக்கு பிரமாண்டமான அஞ்சலியை நடத்திவிட முனைகின்றார்.

மறுபக்கத்தில் இந்த
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

என்ன செய்வது? இது இன்று பலரும் எழுப்பும் கேள்வி கூட

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

தமிழ்மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். எம் மண்ணில் சுயாதீனமான எந்த செயல்தளமும் மக்களுக்காக கிடையாது. பெரும்பாலாவைகளை புலிகள் அழித்தனர். எஞ்சியதை அரசு அழித்துள்ளது. மக்களின் ஓப்பாரிக்கு வெளியில், அவர்களுக்கு வாழ்வில்லை. இது எதார்த்தம்.

இன்று அண்டை அயலவரின் சுகதுக்கத்தைக் கூட விசாரித்தால், அச்சமூட்டும் வண்ணம் கண்காணிப்பும், தண்டிக்கப்படும் அவலநிலையும். இன்று தமிழப்; பாசிசத்தின் இடத்தில், அரச பாசிசம் குடிகொண்டுள்ளது. இன்று கூலிக்குழுக்களுக்கு வெளியில், தமிழ் அரசியலுக்கு இடமில்லை. அங்கு எந்த சுதந்திரமுமில்லை.

புலம்பெயர்ந்த சமூகத்தி............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......

பற்ரிய துவக்கெலாம் வாரங்கள் மாதங்கள்
பகைகண்டு தரம்பிரிக்க வெட்டியமுடிகளாய்
விழவிழ மிதித்தேறி
விண்ணிலிருந்து வருவர் காக்கவென
எண்ணவைத்த புலத்தோனே--இன்னமுமா
ஆண்டொருக்காய் உரைகேட்கும் ஆவலொடு......


ஆயிரமாயிரமாய் இழந்தோம்

ஆத்தனையும் மாத்தளனில்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, November 23, 2009

புலிகளின் தோல்விக்கான காரணமும், அரசியல் எதார்த்தமும்

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

அரசு தாம் வென்றதுக்கு இந்தியா சீனா, பாக்கிஸ்தான்.. உதவிகள் தான் காரணம் எண்கின்றது. தமது உறுதியான தலைமை தான் காரணம் என்கின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் பேரினவாத மேலாதிக்கத்தை வாழ்த்தி, கொலைகாரர்(கலாநிதி) பட்டத்தைக் கூட வழங்க முன்வந்;துள்ளது. இப்படி வெற்றி தோல்வி பற்றிய காரணங்கள், நியாயப்படுத்தல்கள், அங்கீகாரங்கள், விளக்கங்கள்.

இந்தத் தோல்வி பற்றி, தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் சொல்லும் விதம், எந்த சுயவிமர்சனமுமற்றது. இதன் மூலம் சமூகத்தை மந்தைகளாகவே தொடர்ந்தும் வைத்திருக்க முனைகின்றனர்.

இதற்காக இவர்கள்
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சுருட்டுவதே சுகம்.

இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் போல இம்முறை மாவீரர் நாளும் பெரும் எதிர்பார்ப்புகளோடு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வளமை போல மாவீரர் உறவுகள் கௌரவிப்பு முதல் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

னாலும் இம்முறை மாவீரர் நாள் கொண்டாடுவதற்காக யேர்மனியில் மக்களைத் தேடிப்புறப்பட்டுள்ளனர் வசூல்ராஜாக்கள். மாவீரரை நினைவுகூர மக்களிடம் பணம் வசூலிபபில் மும்முரமாக யேர்மனியில் பல பாகங்களிலும் ரிக்கெற்றுடன் புறப்பட்டுள்ளனர் .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, November 22, 2009

"இனியொரு" இணையம் தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை திரித்து, கலையரசன் மேல் நடத்தும் இழிவரசியல்


இந்தக் கும்பல் தம்மை தூய்மையானவராக காட்ட, கலையரசன் மேலான ஒரு தாக்குதலை நடத்தியது. கடந்த காலத்தில் புலியல்லாத மாற்றுத்தரப்பின் பெயரில் நடத்திய இலக்கியச் சந்திப்புகள் முதல் புலம்பெயர் அரசியல் கூத்துகள் மக்கள் அரசியலை துறந்து நின்றதுடன், அதை கேவலப்படுத்தியது. குறிப்பாக மார்க்சியத்தை மறுத்தனர், திரித்தனர். இதன் மூலம் அனைத்து எதிர்ப்புரட்சிக் கூத்தையும் நடத்தினர். முன்னாள் இயக்க கொலைகாரர்கள், வலதுசாரிகள், தன்னார்வ கைக்கூலிகள், அரச எடுபிடிகள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்தே, புலியல்லாத ஒரு மாற்றை முன்னிறுத்தினர். இதைத்தான் புலிக்கு மாற்று என்றனர். மக்கள் விடுதலைக்கான அரசியல் பாதை என்றனர்.

இப்படி கூடிக் கும்மி அடித்து எதிர்ப்புரட்சி அரசியல் எல்லைக்குள் இயங்குவது தான் சரியானது என்று, முன்னின்று வழிகாட்டியவர்களில் இனியொரு ஆசிரியரான அசோக் முதன்மையானவர். மார்க்சியத்தை மறுத்து, மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைத்த புலியல்லாத கும்பலுடன் கூடி, மக்கள் அரசியலை நிராகரித்தவர் தான் இந்த இனியொரு அசோக். இப்படி
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர்.

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டும்தான், இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கள் எழ முனைகின்றது. அவையும் மக்களுக்காக அல்ல, புலத்து புலி தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைக்கும் அதே துரோக அரசியலுக்காக. தமது கடந்தகால தவறுகளை திரும்பிப் பார்க்காத, அதே மக்கள்விரோத அரசியல். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டு நடத்திய அதே பாசிச அரசியல்.

இன்று பேரினவாதத்தின் திறந்தவெளிச் சிறைகளில் சிக்கியுள்ள மக்களை, இந்த அவலமான நிலைக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளே. புலிகள் இந்த மக்களை வதைத்து, அவர்களை படுகேவலமாக கொல்ல உதவியும், கொன்றும், இறுதியாக இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் புலிகள்தான். இதைப்பற்றி எந்த சுயவிமர்சனமுமற்ற நிலையில், மீளவும்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்