தமிழ் அரங்கம்

Saturday, September 26, 2009

வறட்சியின் பிடியில் விவசாயிகள்! கொண்டாட்டத்தில் முதலாளிகள்!!


அக்கிராமத்தைச் சேர்ந்த ராதா என்ற கர்ப்பிணிப் பெண் தினமும் அந்த மரத்தின் அருகே சென்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். அந்த மரத்தில்தான் 25 வயதான இளைஞரும் ராதாவின் கணவருமான கோவர்த்தன நேனாவத், கடந்தஆகஸ்ட் 6ஆம் நாளன்று தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

லம்பாடி பழங்குடியினத்தைச் சேர்ந்த கோவர்த்தன், கந்துவட்டிக்குக் கடன் வாங்கி மழையை நம்பி பயிர் வைத்தார். ஆனால், இம்முறை தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போய் வறட்சி தாக்கி, நீரின்றி நிலங்கள் வெடித்து, பயிர்கள் கருகிப் போயின. ஏற்கெனவே அவரது
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 25, 2009

பஞ்சாப்: பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்டோரின் கலகம்!


சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் நடத்திவரும் இப்போராட்டங்களைக் கண்டு, சீக்கிய ஜாட் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களும், அவர்களை நத்திப் பிழைக்கும் அகாலிதள், காங்கிரசு, பா.ஜ.க. ஓட்டுப் பொறுக்கிக் கும்பலும் கொஞ்சம் அரண்டுதான் போயுள்ளன.

பஞ்சாப் மாநில அரசும், நிலப்பிரபுக்களும் தாழ்த்தப்பட்டகூலி விவசாயிகளின் இக்கோரிக்கையை, தீவிரவாதமாகச் சித்தரிக்க முயன்று...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, September 24, 2009

இப்படியோர் இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச்சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபாய். எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபாய் கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

"பருவ மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்'' எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்த போதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச்சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின்...
.முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, September 23, 2009

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் "பொற்கால' ஆட்சியின் சாதனையாக ""உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ""நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை'' என்றும் ""சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது'' என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் ..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 22, 2009

கோஷ்டிச் சண்டை முற்றுகிறது! பா.ஜ.க. கனவு நொறுங்குகிறது!

ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும்,பொய்யான நம்பிக்கைகளை ஊட்டினாலும் தீவிரமாகிவிட்ட கோஷ்டிச் சண்டைகளால் அக்கட்சி பலவீனமடைவதைத் தடுக்கவே முடியாது என்கிற நிலைமை நெருங்கிவிட்டது.

பா.ஜ.க.வின் தேர்தல் தோல்விக்குப் பழிபோடப்பட்டு உத்தர்கண்ட் முதல்வர் கந்தூரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அருண் ஜேட்லிக்கு நாடாளுமன்ற மேலவையின் பா.ஜ.க. தலைவர் பதவியும், சுஷ்மா சுவராஜுக்கு நாடாளுமன்ற பா.ஜ.க...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, September 21, 2009

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.

இக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற "சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், "மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்?'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுக.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, September 20, 2009

உங்கள் ஓட்டு அம்பானிகள் ஆட்சி

அம்பானி சகோதரர்களிடையே மீண்டும் சொத்துத்தகராறு வெடித்து, உலகமே பார்க்க நடந்து வருகிறது. ஆனால்,அந்தச் சொத்தோ அவர்களுக்குச் சொந்தமானது கிடையாது என்பதுதான் இந்த இரண்டாம் கட்டத் தகராறில் சுவராசியமான விசயம். அந்தச் சொத்து — கிருஷ்ணா — கோதாவரி நதிப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு — இந்தியமக்களுக்குச் சொந்தமானது.

ஊரான் சொத்தை எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்பதையொட்டி அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், தம்பி அனில் அம்பானிக்கும் இடையே நடந்துவரும் இந்தச் சண்டை, பேராசை பிடித்தவர்களின் கீழ்த்தரமான கிரிமினல் குற்றமாக இந்திய மக்களின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக, பாகப்பிரிவினை சட்டச் சிக்கலைப் போல இந்திய நீதிமன்றங்களால்கையாளப்படுகிறது. இந்தப் பொதுச் சொத்தைக் காக்கவேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய அரசோ, இந்தச்சொத்துத் தகராறில் அண்ணன் முகேஷ் அம்பானிக்கு எந்தவிதமான பாதகமும் நேர்ந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு காய்களை நகர்த்தி வருகிறது.

பிரதம மந்திரி அலுவலகம், நிதி அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகம், சட்ட அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் இயக்குநர் அலுவலகம் என...
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்