தமிழ் அரங்கம்

Saturday, March 1, 2008

புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்

பி.இரயாகரன்
15.10.2006

லங்கையில் அன்றாடம் என்னதான் நடைபெறுகின்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புலிகள் அன்றாடம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். தாமே வலிந்து தேர்ந்த தமது சொந்த அழிவில், அவர்களே அரசியல் அனாதையாக மிதக்கின்றனர். மார்க்சியவாதிகளைத் தவிர இந்த அரசியல் நிலையை யாரும் எதிர்வுகூறவில்லை. இதற்கு வெளியில் யாரும் இப்படி நடக்கும் என்று, கற்பனை பண்ணியது கூட கிடையாது. புலியின் சொந்த அழிவில் பிற்போக்கு புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலிக்கு நிகராகவே அதே அரசியலுடன் பவனிவருகின்றனர். இந்த புலியெதிர்ப்பு பிற்போக்கு கும்பல்கள், ஏகாதிபத்திய கால் தூசுகளை நக்குவதாலே வயிறுமுட்டி வீங்கிநிற்கின்றன. இந்தக் கும்பலுக்கு துணையான பேரினவாத சக்திகள், ஏதோ தம்மால் தான், தமது அரசியல் போராட்டத்தால் தான் புலியின் அழிவு நடப்பதாக காட்டமுனைகின்றனர். மொத்தத்தில் புலியின் அழிவு, புலியல்லாத தரப்பின் பிற்போக்கு அரசியலால் தான் நிகழ்வதாகவே காட்டுகின்ற போக்கு எங்கும் எதிலும் தலைகாட்டுகின்றது. ஆனால் புலியின் அழிவு புலியின் சொந்த பிற்போக்கு அரசியலால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதுவே உண்மை.

இந்த புலி அழிவு நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பல மாறுதலுக்கு உள்ளாகுகின்றது. புலியின் அழிவை வேகப்படுத்தக்கூடிய வகையில், திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை மறுபுறம் சண்டை. இதில் எந்தக் தேர்வும் புலியின் அழிவை மையப்படுத்தி நிற்கின்றது. இதற்கப்பால் மூச்சுவிடவே முடியாத வகையில் அன்றாடம் தொடர் கொலைகள். புலிகள் ஒன்று இரண்டு என்று தொடங்கியதை, ஏன் அதை நான்கு ஐந்தாகவே புலிகளின் பெயரில் நடத்துவோம் என்று பேரினவாதமும் சேர்ந்து நடத்துகின்றது. கடத்தல்கள் காணாமல் போதல் என்று மனித அவலம் தொடருகின்றது. எல்லாம் இனம் தெரியாத நபர்களின் கொலைகள், கடத்தல்கள் என்றாகி விட்டது. மக்கள்படை முதல் எல்லாளன படை வரை காணாமல் போய்விட்டது. ரயர் எரிப்பு முதல் தடி பொல்லுகளுடன் திரிந்த காடையர்களின் அடாவடித்தனங்கள் எல்லாம் நின்று போய்விட்டது. கலாச்சாரம் பேசி பொல்லுகளுடன் திருத்தித் திரிந்த அராஜகக் கும்பல், எங்கு போனார்கள் என்று தெரியாது போய்விட்டனர். இப்படி மொத்தத்தில் அரசியல் அனாதைகளான புலியின் செயல்பாடு, எங்கும் எதிலும் சாவடிக்கப்படுகின்ற நிலை தொடருகின்றது.

இந்த நிலையில் மனிதவுரிமை என்றால் என்னவென்று எதுவும் தெரியாத பிழைப்புவாத துரோகக் கும்பல்கள், இதை தீர்ப்பதாக கூறிக்கொண்டு பலர் உலகமெங்கும் அடிக்கடி விமானம் ஏறிப் பறக்கின்றனர். ஏகாதிபத்தியம் கூறுவதுதான், இவர்களின் மனிதவுரிமை பற்றிய எல்லைக்கோடு. ஏகாதிபத்திய அகராதியை புரட்டிக்கொண்டும், தலைமாட்டுக்குள் அதை செருகி வைத்தபடி, விமானங்களில் உயரப் பறக்கின்றனர். உலகின் பல பாகத்தில் தமது மக்கள் விரோத நிலையை தக்கவைக்க கூட்டங்கள், சதிகள், இரகசிய சூழ்ச்சித் திட்டங்கள், ஏகாதிபத்திய மக்கள் விரோத நாசகாரர்களுடன் சேர்ந்து சதியாலோசனைகள். இப்படி எங்கும், எல்லாவிதத்திலும் அமர்க்களமான சதிகள், காய் நகர்த்தல்கள், சுத்துமாத்துக்கள். அனைத்துமே புலிகளின் பெயரில் எப்படி மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையிடுவது, சூறையாடுவது, சுரண்டுவது என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நின்று விசுவாசமாக குலைக்கின்றனர். இதற்கு வெளியில் புலியெதிர்ப்பு பேசும் எந்த நாய்களும், சுயமாக குலைக்கவில்லை. ஏகாதிபத்திய காலை நக்கியபடி தான், விசுவாசமாகவே வாலையாட்டிக் கொண்டு குலைக்கின்றனர்.

அன்றாடம் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?

வழமையான நிலைமைக்கு தலைகீழாகவே இன்று நிலைமை காணப்படுகின்றது. புலிகளுக்கு பதில் பேரினவாத அரசே, கடந்த இரண்டு மாதமாக வலிந்த ஒருதலைப்பட்சமாக முன்னேறிய ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். இது கடந்தகால நிலைமைகள் எல்லாவற்றையும் விட, புதியதொரு நிலைமையாகும். வழமையாக புலிகள் தான் ஒருதலைபட்சமாக இப்படி செய்பவர்கள்.

ஆனால் புலிகளுக்கு எதிரான கடும் கண்டனங்கள் விமர்சனங்கள் போல் அல்லாது அரசின் இந்த தாக்குதல்கள் அங்கீகாரம் பெற்று நிற்பதும், மறைமுகமாக அவைகளை ஊக்கப்படுத்தி நிற்பதும் பொதுவான போக்காகவுள்ளது. புலிகள் தனிமைப்பட்ட நிலையில், இந்த நிலைமையைச் சொன்னாலே நம்ப மறுக்கின்ற நிலைமைக்குள், அவர்கள் எல்லாத் தளத்திலும் சீரழிந்து நம்பகத்தன்மையற்றவராக காணப்படுகின்றனர். உண்மையையும் பொய்யையும் திரித்து, அதை ஊடகவியல் விபச்சாரம் மூலம் விபச்சாரம் செய்வதன் மூலம், தம்மைத்தாம் அம்மணமாக்கி நிற்கின்றனர்.

பேரினவாத சிங்கள அரசு புலிக்கு எதிராக முன்னேறிய வலிந்த தாக்குதலை இன்று அதிகப்படுத்தியுள்ளது. இது அம்பலமாகாது, எதிர்மறையில் புலிகள் மீதே இது குற்றம் சாட்டுவதாக அமைந்துவிட்டது. இதற்கான முழுப் பொறுப்பும் புலிகளையே சாரும். இது நரி வருது நரி வருது என்ற கதை போல், உண்மையில் நரி வந்த போது அதை யாரும் நம்புவதில்லை. நரி துணிவாக அடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைiயை தான் இன்று புலிகள் சந்திக்கின்றனர்.

கடந்தகாலத்தில் எல்லா அமைதி முயற்சியையும் யுத்த முனைப்பு மூலம் சிதைப்பதிலும், எல்லாவிதமான குழப்பதையும் புலிகளே முன்முயற்சியெடுத்து நடத்தினர். ஆனால் அதை அரசின் மீது, ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டினர். இதை உலகம் ஏற்றுக்கொண்டது கிடையாது. புலிகளின் வால்களும், அதன் பின் தின்று கொழுக்கும் நக்கித் தின்னும் கும்பலும் மட்டுமே, அதை தமது பிழைப்புக்காக மட்டும் ஓப்புவித்தனர். ஆனால் அவர்களுக்கும் தெரியும் அதுவும் பொய்யென்று. உண்மையான விசுவாசத்துடனோ, உண்மையான கோட்பாட்டு அடிப்படையோ இன்றி வீம்புக்கே ஒருதலைபட்சமாக ஊளையிட்டனர்.

இப்படி புலிகளின் கடந்தகாலம் அம்பலமாகி நிற்கின்ற ஒரு நிலையில், வழமை போல் இம்முறையும் புலிகளே ஒருதலைப்பட்சமாக வலிந்து தாக்கத் தொடங்கினார். அரசியல் பேச்சுவார்த்தையில் தோற்ற புலிகள், அதை ஒருதலைப்பட்சமான வலிந்த இராணுவ அரங்கில் வெல்ல நினைத்தனர். கடந்த புலிகளின் 'மாவீரர்"தின உரையைத் தொடர்ந்து, புலிகள் ஒரு தலைப்பட்சமாக இராணுவத்தை தாக்கத் தொடங்கினர். மக்கள் படை என்ற பெயரிலும், மக்களே அதைச் செய்கின்றனர் என்றும் கூறினர். புலிகள் கூற்றை உலகம் மீண்டும் நம்பியது கிடையாது. ஏன் அவர்களே அதை நம்பியது கிடையாது. உலகில் யார் நம்பினார்கள் என்றால் ஒருவருமில்லை.

இதன் விளைவு என்ன? மாவீரர் தின உரையின் பின்பாக அண்ணளவாக இராணுவத் தரப்பில் 1000 பேர் கொலலப்பட்டனர். இதேயளவு எண்ணிக்கையில் புலிகளும் கொல்லப்பட்டனர். இதே அளவுக்கு மக்களின் அவலமும், காணாமல் போதல் என்று மற்றொரு பக்க அழிவும் நிகழ்ந்த வண்ணமுள்ளது. மாவீரர்தின உரையும், அதைத் தொடர்ந்து அதிகளவில் இராணுவம் இறந்தனர். ஆனால் இன்று அதிகளவில் புலிகள் இறக்கின்ற எதிர்மறை போக்கு, நிலமையை தலைகீழாக்கியது. இரண்டு இராணுவங்கள் என்ற வகையில், ஒன்று மற்றொன்றின் மீதான தாக்குதலை நடத்துவது அல்லது அழிவுகளை ஏற்படுத்து என்பது ஒருதலைப்பட்சமாக ஒரு பகுதியினருக்கு சொந்தமானதாக மட்டும் அமையாது. ஆனால் பொதுவான மொத்த அரசியல் இராணுவ நோக்கில் புலிகளின் தோல்வி என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

புலிகளின் அரசியல் தோல்வியைத் தொடர்ந்து இராணுவ தோல்விகள், இதில் இருந்து மீள மீண்டும் பேச்சுவார்த்தையை நோக்கி ஒடுகின்றனர். எங்கே என்று தெரியாத புள்ளியை நோக்கி அங்குமிங்குமாக அலைபாய்கின்றனர். என்னசெய்வது என்று தெரியாது, நோக்கே அற்ற நோக்கை கனவாக விதைக்கின்றனர். பிரச்சாரத்துக்காக சிலதை செய்து, அதை வெற்றியாக காட்டுகின்றனர். (உதாரணத்துக்கு 11.10.2006 முகமாலை தாக்குதல். இது புலிகளின் இராணுவ ரீதியான தொடாச்சியான தோல்வியையும், அதன் அரசியல் உள்ளடகத்தையும் மறுதலித்துவிடாது.)

மாவீரர் தின உரையைத் தொடர்ந்து ஒரு வலிந்த தாக்குதலைத் தொடுத்தவர்கள், எல்லை மோதலை வலிந்து திணித்தனர். மாவிலாறு அணைக்கட்டை மூடியதும், பின்னால் முதூர் மீதான தாக்குதல் மூலம் வலிந்து ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்தினர். இந்தப் பின்னணியைத் தான் பேரினவாதம் பயன்படுத்திக்கொண்டு, புலிகளை அழிக்கத் தொடங்கினர். புலிகள் வலிந்து தாக்குகின்றார்கள் என்று கூறிக் கொண்டு, தானே தான் விரும்பிய இடத்தில் தாக்குகின்ற நிலைக்கு முன்னேறியது. புலிகளின் வழமையான செயல் வடிவத்தை தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். வலிந்து புலிகளின் எல்லைகளை தாக்கி, புலிப் பகுதிகளை பிடிக்கின்றனர் அல்லது பெருமளவில் புலிகளை அழிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தக் கூடிய உளவியல் பலத்தை புலிகள் இழந்துவிட்ட நிலையில், திடீர் அதிரடித் தாக்குதல் மூலம் மிதக்க முனைகின்றனர்.

இந்த நிலையில் புலிகளினுள் சல்லரித்துப் போன உணர்வுகள், போராட்டத்தின் நின்று பிடிக்கும் அனைத்து மனவாற்றலையும் இழந்து நிற்கின்றனர். நான் முன்பு குறிப்பிட்டது போல் ('அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?") உளவியல் ரீதியாக, போராடும் தார்மிக பலத்தை புலி உறுப்பினர்கள் இழந்து இழிந்து விட்டனர்.

இவைகள் புலிகளின் தொடர்ச்சியான இராணுவ தோல்விகளுக்கு வழிகாட்டுகின்றது. பெருமளவில் விட்டில் ப+ச்சியாக பலியாகின்றனர். வடக்குகிழக்கின் இராணுவ எல்லைகளில் புலிகளின் தோல்விகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. இதிலிருந்து மீள்வதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு சில வெற்றிகள் எப்போதும் மாற்று அல்ல. தோல்வி என்பது புலி உறுப்பினர்களின் மக்கள் விரோத உளவியலில், அவர்களின் இந்த இருப்பில் இருந்தே தோன்றுகின்றது.

இந்த தோல்வி மனப்பான்மையை பேரினவாதம் பயன்படுத்தி, வலிந்த ஒரு முன்னேறிய ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்துகின்றனர். இன்றைய 90 சதவீதமான தாக்குதல்களை பேரினவாதமே நடத்துகின்றது. மணலாறு சம்பவத்துக்கு முன்னம் 90 சதவீதமான தாக்குதலை புலிகளே நடாத்தினர். ஆனால் இன்று புலிகள் வலிந்து தாக்குவதாக கூறிக்கொண்டு, இதை இராணுவம் செய்கின்றனர். புலிகள் தான் இன்றும் வலிந்து தாக்குவதாகவும், இதை உண்மையானதாகவும் உலகுக்கு காட்டிவிடுகின்றனர். புலிகளின் கடந்த செயல்பாடுகளும், அதை மறுத்துவந்த ஒருதலைப்பட்சமான பொய், இன்று அதுவே அவர்களுக்கு எதிராகவே மாறி நிற்கின்றது.

அரசியல் தோவ்வியும் அதைத் தொடர்ந்த இராணுவ தோல்வியும், புலிகளை மீண்டும் பேச்சவார்த்தைக்கு செல்ல வைக்கின்றது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வதன் மூலம், இதில் இருந்து ஏதோ ஒருவகையில் தப்பிப்பிழைக்க முடியும் என்று நம்புகின்றனர். இதனால் பேச்சுவார்த்தையை நோக்கி வலிந்து ஒடுகின்றனர். பேரினவாதம் இதை மேலும் நுட்பமாகவே கையாள முனைகின்றது. ஒருபுறம் பேச்சுவார்த்தை மறுபுறம் தாக்குதல் என்ற உத்தியை பேரினவாதம் கையாளுகின்றது. இதையே முன்பு புலிகள் கையாண்டனர். இன்று இதை அரசு கையாளுகின்றது.

குறிப்பாக பேரினவாதிகளின் உடனடி நோக்கம் கிழக்கை முழுமையாக புலிகளிடமிருந்து விடுவிப்பதே. இதை தடுக்கத் தான் புலிகள் வடக்கில் வலிந்து மோத முனைகின்றனர். புலிகள் கிழக்கில் நிலைகொள்ள பேச முனைகின்றனர். கிழக்கை மீட்கும் பேரினவாத முயற்சி முழுமையாக உடனடியாக சாத்திமில்லை என்றால், புலிகளை அழித்தொழித்து ஒரு பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லும் வகையில் தாக்குதலை நடத்துகின்றனர். இதன் மூலம் கருணா தரப்பை புலிகளின் பிரதேசத்தில் ஆழ ஊடுருவி, புலிகளின் செயல்பாட்டை முடக்கிவிட முனைகின்றது. இதில் படிப்படியாக பேரினவாதம் வெற்றி பெற்று வருகின்றது.

கிழக்கில் புலிகளின் பலத்தை சிதைக்கும் வகையில், புலிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் பயன்படுத்தியது. தமிழ் மக்களின் வாழ்விடங்களை அழித்தொழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதியாக்கி, அவர்களை தமிழ் மக்கள் வாழும் மற்றொரு செறிந்த பிரதேசத்துக்குள் அனாதைகளாக தள்ளிவிடுவதை செய்கின்றது. இதன் மூலம் மூன்று இனவாத இலாபத்தை பேரினவாதம் அறுவடை செய்கின்றது.

1. குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் இருந்து நிரந்தரமாகவே தமிழ் மக்களின் குடியிருப்பை அகற்றி, அதை துப்பரவு செய்கின்றது. அதாவது அப் பிரதேசத்தை தமிழ் மக்களின் வாழ்விடம் அற்ற ஒரு சூனிய பிரதேசமாக்கி அதை பேரினவாதம் திட்டமிட்டு அபகரிக்கின்றது.

2. இரண்டாவதாக இதன் மூலம் புலிகளின் இருப்புக்கான சமூக கட்டுமானத்தை இல்லாததாக்கி, அப்பிரதேசத்தை புலியிடமிருந்து விடுவிக்கின்றது.

3. அகதியாகிய மக்கள் நாளை மீளவும் குடியேறாத வண்ணம், அவ் அகதிகளை பராமரிப்பதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளது. மக்களைப் பஞ்சை பரதேசிகளாக வீதி வீதியாக அலையவிட்டு, ஒரு சமூகமாக கூடி வாழும் சமூக அடிப்படையையே திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. அகதியாகக் கூட கூடி ஒரு சமூகமாக வாழக் கூடாது என்ற நாசிய உத்தி கையாளப்படுகின்றது. இதன் மூலம் அவ் அகதிகள் எதிர்காலத்தில் சொந்த மண்ணுக்கு மீளத் திரும்புவதை இல்லாததாக்குகின்றது.

அனைத்தும் புலிகளின் வக்கிரமான இராணுவ அரசியல் வக்கிரத்தின் மூலம் பேரினவாதம் வெற்றிகரமாக இலாபம் சாதிக்கின்றது. அகதியாகும் மக்களுக்கு கோடிகோடியாக சேர்த்த பணத்திலிருந்து ஒரு துளிதன்னும் போய் சேர்ந்துவிடுவதில்லை. அதுவும் கிழக்கு என்றால், நாம் அதைச் சொல்லத் தேவையில்லை. தமிழ் மக்கள் தமது சமூக இருப்பையே இழந்து, நாயிலும் கீழாக கேவலமாக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். இதைத் தடுத்து நிறுத்தும் உணர்வு எம் சமூகத்திடம் கிடையவே கிடையாது. இதுவே கிழக்கின் இன்றைய நிலை.

பேரினவாதத்துடன் கூடிக்குலாவி விபச்சாரம் செய்யும் கருணா என்ற பாசிச புலிக் கும்பல்

இந்த நிலையில் தனிமனித முரண்பாட்டுக்குள், தமது மக்கள் விரோத அரசியலுக்குள் புலிகள், கருணா என இரண்டு தரப்பும், பாய் விரித்து விபச்சாரம் செய்கின்றனர். இரண்டுக்கும் அதன் செயல்பாட்டுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. மக்களை இழிவாக கருதும் இரு கும்பலும், மக்களை தமது சொந்த தேவைக்கு பயன்படுத்தும் மக்கள் விரோத ஓட்டுண்ணிகள் தான்.

இவை எல்லாமே வெட்டவெளிச்சமாகவே அம்பலமாகின்றது. திடீர் ஜனநாயகம் பேசிய கருணா, புலிகள் போன்ற மற்றொரு புலிக்கு நிகரான கொலைகாரக் கும்பல்தான். பேரினவாதத்தின் கைக்கூலிக் கும்பலாக, இந்தியாவின் எடுபிடிகளாகி அவர்களால் வளர்க்கப்படுகின்றனர். இதை அவர்களே தமது சொந்த உளறல்கள் மூலம் அம்பலமாக்கிவிடுகின்றனர். அண்மைய வாகரை மீதான தாக்குதலில் இரண்டு தரப்பும், நாம் தான் தாக்கினோம் என்று ஒரே பிணத்தை காட்டி இருவரும் தாக்குதலை உரிமை கோரிய போதும், அவர்கள் மீளவும் ஒருமுறை அம்பலமாகினார்கள். இரண்டு தரப்பும் தாங்களே அனைத்தும் என்ற போது, கடந்தகாலத்தில் நாம் சொன்னவை மீளவும் உறுதியாகியுள்ளது.

கிழக்கு மக்கள் என்று போலியாக நீலிக்கண்ணீர் வடித்து புலம்பும் புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்களும் சரி, கொலைகளுக்கு எதிராக தாம் குரல் கொடுப்பதாக கூறும் புலியெதிர்ப்புக் கும்பலும் சரி, கருணாவை தலைக்கு மேல் உயர்த்தி கிழக்கின் விடிவெள்ளியாக காட்டியவர்கள் எல்லோரும், கமுக்கமாகவே பதுங்கிக் கிடக்கின்றனர். நாங்கள் அன்று இந்த பாசிச மக்கள் விரோத கோமாளியை பற்றிச் சொன்னபோது, திமிரெடுத்தவர்கள், இன்று தமது பாசிச கையை பிசைந்தபடியே அதை ஒழிக்கின்றனர்.

புலிகளைப் போல் கிழக்கின் விடிவெள்ளியாக தம்மைத் தாம் மகுடம் சூட்டிய கருணா தரப்பும், அப்பட்டமான பாசிச கொலைக்காரக் கும்பல்தான். புலிகளைப் போல் சிறுவர்களை கடத்துவது முதல், கொலைகைள் செய்வது வரை, ஏன் மக்கள் வாழ்வை சூறையாடுவது வரை கைதேர்ந்த புலி வாரிசுகள் தான். கிழக்கில் நடக்கும் உதிரிக்கொலைகள் முதல் கொழும்பில் நடக்கும் கடத்தல்கள் கொலைகள் என எல்லாமே, கருணாதரப்பின் பங்கு எத்தனை சதவீதம் என்பதில் மட்டும் தான், அவர்கள் புலிகளுடன் முரண்படலாம். ஆனால் தொழில் ரீதியாக, அரசியல் ரீதியாக இருவருமே பாசிச மாபியாக் கும்பல்கள் தான்.

கிழக்கு மக்களுக்கு அவர்கள் காட்டும் விடிவு தான் என்ன? அவர்களின் வாழ்வுக்கு என்ன தீர்வைத்தான் வைக்கின்றனர். புலியைப் போன்று அதே அரசியல் மாபியாக் கும்பல் வாழ்வுக்கும், வழிக்கும் அப்பால் எதுவுமில்லை. இதை அவர்கள் அன்றாடம் நிறுவி வருகின்றனர். புலிகளை விட மேலதிக தகுதியாக, இலங்கை அரசின் கைக்கூலி கொலைகாரக் கும்பல் தான் தாங்கள் என்பதையும் நிறுவிவிட்டனர். இவர்களுக்கு ஓளிவட்டம் காட்டிய ரீ.பீ.சீ நரிக் கும்பல் முதல், புலியெதிர்ப்பு நாய்கள் வரை இதற்கு முழுப்பொறுப்பாகும். புலிக்கு மாற்று கருணா தரப்பு என்று எத்தனை ஆய்வுகள், அறிக்கைகள், கொள்கை விளக்கங்கள். அந்த கொலைகார நபர்களை முன்னிலைப்படுத்தி பேட்டிகளை ஒளிபரப்பியவர்கள், வெளியிட்டவர்கள், இந்த புலியெதிர்ப்பு பாசிச கும்பல்தான். இப்படி கேடுகெட்ட நாய்களாக குலைத்தவர்களின நாய் வேஷம் அம்பலமாகும் போது, வாலை சுருட்டி கமுக்கமாக குண்டிக்குள் செருகியபடி நரியாக ஊளையிடுகின்றனர்.

இப்படி கொலைகளும், கடத்தலும், கொள்ளையுமாக, ஒரு கூலிக் கும்பலாக இழிந்த மட்டக்களப்பு கருணா மைந்தர்கள், கிழக்குக்கு எப்படி எதை விடிவாக காட்டுவார்கள். புலிகளில் இருந்து எந்தவிதத்தில் எப்படி வேறுபடுகின்றனர். தம்மளவில் கூட வேறுபாடு எதையும் கொண்டிருக்கவில்லை. இதை நாங்கள் கடந்த காலத்தில் தெளிவாக கூறியவர்கள். இப்படி பல அரசியல் உண்மைகள் ஜனரஞ்சகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதவாழ்வு சார்ந்த உண்மை, அனத்தையும் நிர்வாணமாக்கிவிடுகின்றது. ஊடகவியலை புலிகளும், புலியெதிர்ப்புக் கும்பலும் கைப்பற்றி வைத்துக் கொண்டு நடத்துகின்ற ஊடக வக்கிரத்தில், தமது பாசிச மக்கள் விரோத உண்மையை மூடிமறைக்கலாம். ஆனால் வரலாறு அப்படி அல்ல! உண்மை நடைமுறை சார்ந்த எல்லா பொய்களையும் அம்பலப்படுத்திவிடுகின்றது.

புலிகள் அல்லாத மக்கள் விரோத மாற்றுக் குழுக்கள் மீதான ஏகாதிபத்திய திடீர் கருசனைகள்

இந்த நிலையில் மக்கள் விரோத பாசிச ஜனநாயகவாதிகள் மீதான ஏகாதிபத்திய அக்கறை அதிகரித்துள்ளது. இந்தியா இலங்கை அரசில் கைக்கூலிகளை தமிழ் மக்களின் மாற்றுக் கருத்தாக காட்டுகின்றதும், அவர்களுக்கு மகுடம் சூட்டுகின்றதுமான போக்கு அதிகரிக்கின்றது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள் என்று புலிகள் கூற, மறுபக்கத்தில் மாற்றுக்கருத்தின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று இந்த கைக்கூலிக் கும்பல் ஓலமிடுகின்றது. புலியெதிர்ப்புக் கும்பல் இதன் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஓடுகின்றது.

இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு கும்பலை தமது கைக்கூலிக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் சதி ஆலோசனைகளை பேச்சுவார்த்தையின் பெயரில் நடத்துகின்றனர். இந்த வகையில் பல சந்திப்புகள், அழைப்புகளையும், சர்வதேச கைக்கூலி விருதுகளையும் வழங்குகின்றனர். புலிகள் மீதான அழித்தொழிப்பை செய்கின்ற நிலை உருவாகும் பட்சத்தில், மாற்று புலியெதிர்ப்பு எடுபிடிகள் தயாராகவே உள்ளனர். அது டக்கிளஸ் தேவானந்தாவாகவும் இருக்கலாம், ஆனந்தசங்கரியாகவும் இருக்கலாம், கருணாவாகவும் இருக்கலாம், வரதராஜப்பெருமாளாகவும் இருக்கலாம் அல்லது ரீ.பீ.சீ கும்பலாகவும் இருக்கலாம். எல்லோரும் தயாராகவே பையித்தியம் பிடித்த நிலையில் விசர் நாய்கள் போல், நாக்கைத் தொங்கவிட்டபடி அலைகின்றனர். அந்த வகையில் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை தொடர்ச்சியாக பெரும் தொகை செலவில் கையாளுகின்றனர். அவர்களை தமது தீவிரமான விசுவாசமான கைக்கூலியாக மாற்றுகின்ற அரசியல் தயாரிப்புக்குள் உள்ளகப்படுகின்றனர்.

இதை ஊக்கப்படுத்திய பணமுடிப்புகள் முதல் பலவகையான பொருளாதார இராணுவ உதவிகள் இக் குழுக்களுக்கு வாரி வழங்கப்படுகின்றது. புலிகளை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அதையும் செய்தபடி, மறுபக்க சீரழிவையும் புகுத்துகின்றனர். அவர் அவர் சொந்த வர்க்க அரசியலைப் பயன்படுத்தி, இந்த சீரழிவுக்கு ஏற்ற வகையில் காய் நகர்த்துவது துல்லியமாக இன்று அரங்கேறுகின்றது. சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைவரையும், புலியெதிர்ப்பில் பண்படுத்தி அதை ஊக்கப்படுத்துகின்றனர்.

இப்படி சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைத்து அரசியலும் துரோகத்தனமானது. அதை மக்களுக்கு எதிராக முன்னெடுப்பவர்கள் அனைவரும், மக்களின் துரோகிகள் தான். இதற்கு மாற்று வழிகளை இந்த புலியெதிர்ப்பு பாசிச கைக்கூலிக் கும்பல் தரமுடியாது. புலியைச் சொல்லி ஒப்பாரி வைப்பதே, இவர்களின் பாசிச புலியெதிர்ப்பு அரசியலாகும்.

இம்மாதிரியான மக்கள் விரோத துரோகிகளையும், கைக்கூலிகளையும் ஒருங்கிணைத்த ஒரு புலியெதிர்ப்பு செயல்பாட்டை நோக்கி நகர்த்துவதில் ஏகாதிபத்தியம் முனைப்பாக உள்ளது. இதற்கான முன்முயற்சிக்கு இந்தியா தலைமை தாங்குகின்றது. புலியை ஒழிக்க இலங்கையின் பிரதான இரு பேரினவாத கட்சிகளை இணைத்தது போல், புலியெதிர்ப்புக் தமிழ் கும்பல்களை ஏகாதிபத்திய கைக் கூலி அரசியல் வரையறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இதற்கு நேரெதிராக புலிகள் சாரைப் பாம்பினைப் போல் அடிக்க அடிக்க வலுவிழந்து துடித்தபடி ஊர்ந்து தப்பிவிட முனைகின்றது.

பேரினவாதிகளுக்கு இடையிலான பாசிசக் கூட்டு

புலியழிப்பில் முகிழ்ந்த இந்த பாசிக் கூட்டு, அவர்கள் தாமாக தேர்ந்து செய்து கொள்ளப்பட்டவையல்ல. இதற்கு ஏகாதிபத்தியம் துணை நிற்க, இந்தியா முன்னின்று இதை உருவாக்கியது. இதன் அரசியல் மூலம் புலிஅழிப்பும், புலியெதிர்ப்புமாகும். இந்த அரசியல் போக்கு பலமாகி வருகின்றது. இதற்கு பின்னணியில் ஏகாதிபத்திய அனுசரணையும், ஆலோசனையும், ஊக்கப்படுத்தலும், பலமான வழிகாட்டலும் வழங்கப்படுகின்றது.

புலி அழிப்பு, புலியெதிர்ப்பு பலமான ஸ்தாபன வடிவமும், கோட்பாட்டு அடிப்படையையும் பெற்று வரும் நிலையில், புலிகள் தரப்பு பலவீனமாகி வருகின்றது. புலிகள் என்றுமில்லாத அளவில் அம்பலமாகி வருகின்றனர். தார்மிக ஆதரவுகளை இழந்து வருகின்றனர். தூசணம் மட்டும் பேசக் கூடிய ஒரு லும்பன் கும்பலின் ஆதரவுடன், பிழைப்புவாத பொறுக்கிகளின் அனுசரணையுடன், மக்களின் உழைப்பை தட்டிப்பறித்து வாழ்கின்ற சமூக விரோதிகளின் துணையுடன் தங்கி வாழும் ஒரு மாபியாக் குழுவாகவே புலிகள் மாறிவிட்டனர்.

இந்த நிலையில் பேரினவாத சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ய+.என்.பிக்கும் இடையிலான கூட்டு சதி முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. பேரினவாத அரசு இயந்திரமும், அதற்கு துணையான பேரினவாத பிரதான எதிர்கட்சியும் ஒன்றிணைந்து, தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களின் தலைவிதியை நசுக்கி ஏகாதிபத்தியத்துக்கு மேலும் சேவையாற்ற சங்கற்பம் பூண்டு நிற்கின்றனர்.

புலிகள் மீது என்றுமில்லாத ஒருமித்த தாக்குதலையும், அரசியல் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. புலிகளின் பாசிச மாபியாத்தனத்தின் மீது இந்த பாசிச பேரினவாத கூட்டணி செழிக்கவுள்ளது. தமிழ் மக்களுக்கு என்று தாம் விரும்பும் ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலம், புலியை தனிமைப்படுத்தும் உத்தியை வேகமாக முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ஆதரவை முழுமையாக பெற்றுவிடவும், புலியை மேலும் அரசியல் ரீதியாக பிளந்தும், புலியல்லாத மற்றொரு குழு மூலம் தீர்வை அமுல்படுத்தி, புலியை சின்னாபின்னமாக்கி அழிக்கும் உத்தி நடைமுறைக்கு வரவுள்ளது. இதை நோக்கி இந்தக் கூட்டு முயற்சி அமைந்துள்ளது. புலிகளை அழித்தொழித்தலையே தனது வேலைத் திட்டமாக கொண்டு, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதையே உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களின் தேசிய கோரிக்கை, அதன் உள்ளார்ந்த சாராம்சத்தை இல்லாதொழிக்கும் புலிகளின் பாசிச மாபியாத்தனத்துக்கு நிகராகவே, இந்தக் கூட்டும் நாட்டை ஏகாதிபத்தியத்திடமும் இந்தியாவிடமும் மறுகாலனியாக்கும் முயற்சியில் முக்கி முனைகின்றது. இந்த வகையில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ள மறுகாலனிய அரசியல், தமிழ்மக்கள் மீது தாம் விரும்பிய ஒரு இனவாத தீர்வை திணிப்பதாகும். இதன் மூலம் ஏகாதிபத்திய ஆதரவுடன், தமிழ் மக்களின் உரிமையை புலிகளின் பாசிச மாபியாத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்குவதே, இவர்களின் உள்ளாhந்த வேலைத்திட்டமாகவுள்ளது.

நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடல்

நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடலே, அமைதி சமாதானத்தின் மற்றொரு தடைக்கல்லாகியுள்ளது. இது மக்களுக்கு எதிரானதாக, மக்களின் அவலத்தை கோருவதாக அமைந்துள்ளது. சரி நோர்வேக்கு சமாதானத்தில் என்ன தான் அக்கறை?

உண்மையின் உண்மையான அக்கறை வடகிழக்கின் வளங்கள் மீதானதே. ஓப்பந்தம் கையெழுத்தானவுடன் நான் எழுதிய கட்டுரையில், இதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருந்தேன். மன்னார் கடல் படுக்கையில் உள்ள எண்ணெய், புத்தளம் 25000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கைக்கு நோர்வே 40 கோடி ரூபாவை முதலிட்டது. இப்படி நோர்வே இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தான், சமாதான நாடகத்தை இலங்கையில் அரங்கேற்றியது. மற்றும் வள்ளம் கட்டுதல், கடல் சார்ந்த நோர்வே கழிவுகளை வடக்கில் கொண்டு வந்து கொட்டுதல், மீன்பிடி, உல்லாசத்துறை என்று மிகப்பெரிய கனவுடன் நோர்வே பாசிச ஆட்டம் போட்டது.

இப்படி வடக்கிழக்கைச் சுரண்ட, வடகிழக்கில் அதிகாரத்தை தக்கவைக்க முனையும் புலிகளுடன் ஊடல் செய்யத் தொடங்கினர். ஏகாதிபத்திய சதி மரபுக்கு இணங்க நோர்வே செயற்பட்டது. பணத்தைக் கொடுத்தும், ஆசைகாட்டியும் புலிகளை சிதைத்த அதே நேரத்தில், இணக்கமான ஒரு ஏகாதிபத்திய பாசிச அக்கறையுடன் ஊடல் செய்து, வடகிழக்கை தனது சுரண்டலுக்கு சாதகமான ஒரு புனித ப+மியாக்க முனைந்தனர். இக்காலத்தில் வடகிழக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பெருமளவு நிதியை வாரிவழங்கினர்.

நோர்வேயின் சமாதான முயற்சி இலங்கையையும், வடக்குகிழக்கில் அதிகமாக சுரண்டுவதையும் அடிப்படையாக கொண்டது. இது உண்மையான சமாதானத்துக்கு பதில், நேர்மையற்ற உள்நோக்கம் கொண்ட சமாதான முயற்சியாக மாறியது. இதற்காக நோர்வே பிரதிநிதிகளும், சமாதான நடிகர்களும், அவர்கள் எடுபிடிகளும் அங்குமிங்குமாக பறந்து திரிந்த விமானச் செலவு மட்டும் பல நூறு கோடி பெறுமதியானது. உள்நோக்கம் கொண்ட சமாதான நடிகர்களின் நாடகங்கள், புலிகளுடன் இணக்கமான ஒரு பாசிச சமரசத்தை ஏற்படுத்தவே முனைந்தது. புலிகளின் துணையுடன் வடகிழக்கை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டு, எல்லாவிதமான மனித உரிமை மீறலுக்கும் செங்கம்பளம் விரித்தனர்.

புலிகளுக்கு அதிகளவிலான சலுகைகள், இலஞ்சங்கள் வழங்கியதுடன், மனித உரிமை மீறலுக்கு ஏற்ற ஓளியைப் பாய்ச்சினர். புலிகள் நோர்வேயின் துணையுடன் தொடர்ச்சியாக பெருமளவில் மனித உரிமை மீறலை செய்ததுடன் அதற்கு நோர்வேயின் வழித்துணையையும் பெற்றுக்கொண்டனர். புலிகளின் மனித உரிமை மீறலை திரித்து, அதை மூன்றாவது தரப்பே செய்வதாக வலிந்து கூறினர். இப்படி ஆயிரக்கணக்கான மனித உரிமை மீறலுக்கு, நோர்வே புலிகளுக்கு துணை நின்றனர். அமைதி சமாதான காலத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவர் கொல்லப்பட்டனர்.

இப்படியான படுகொலைகள் முதல் எத்தனையோ சம்பவங்கள் மீது கருத்து சொல்ல மறுத்தனர். நோர்வேயும் கண்காணிப்புக் குழுவும் சேர்ந்து நடத்திய அப்பட்டான மனித உரிமை மீறல்கள் தான் இவை. அதற்கான முழுப்பொறுப்பும் அவர்களைச் சாரும். தங்கள் கடமையையே செய்ய மறுத்த இவர்கள், எப்போதும் கருத்துக் கூறும் போது இரண்டு பக்கத்தின் இரண்டு சம்பவத்தையும் சமப்படுத்தி, இரண்டையும் ஒன்றாக குற்றம் சாட்டும் (புலி) யுத்தியைக் கையாண்டனர். இப்படி மனித உரிமை மீறலுக்கு துணைபோனார்கள். சம்பவங்கள் மீது காலம் கடந்த நிலையில், அவை நீர்ந்துபோன ஒரு சூழலில், தமது சொந்த இழுபறி ஊடாக மக்களின் காதுகளில் ப+வைப்பதையே நோர்வே திட்டமிட்டு செய்தது, செய்து வருகின்றது. இப்படி மனித உரிமை மீறல்கள் அங்கீகாரம் பெறுகின்றது.

உண்மையில் நோர்வே வடக்கு கிழக்கில் புலிகளுடன் சேர்ந்து, சுரண்டலுக்கு ஒரு சாதகமான சூழலுக்காக மொத்த மக்களின் அவல வாழ்வின் மீது நோர்வே மிதக்கின்றது. இந்த நிலையில் நோர்வேயின் போக்கை அம்பலப்படுத்த முடியாத நிலையில், பேரினவாத அரசும் கூட மனிதவுரிமை மீறல் ஊடாக மிதந்து கிடந்தனர். பேரினவாத ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் நோர்வேயின் சுரண்டும் நலனை விமர்சிக்காது, புலிக்கு சாதகமான பக்கத்தை மட்டும் எதிர்த்தனர். இதன் மீது தமது பேரினவாத கூச்சலையிட்டனர், இடுகின்றனர்.

நோர்வே இந்தியாவை பின்தள்ளிவிட்டு ஒரு இணக்கப்பாட்டை நடத்துவதன் மூலம், அதிக சுரண்டலை நடத்தமுடியும் என்று கருதி செயற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் தலையீடு அதிகரித்துள்ள ஒரு நிலையில், நோர்வே சமாதானத்தின் பெயரில் நகர்த்தும் சுரண்டல் நலனை தகர்ப்பதில் இந்தியா குறிப்பாக காய்நகர்த்தி வருகின்றது. இந்த வகையில் மன்னார் எண்ணை வயல்களை சுரண்ட நோர்வே பெற இருந்த உரிமையை, இலங்கை ஊடாக இந்தியா அண்மையில் இரத்து செய்தது. இந்த சுரண்டல் ஒப்பந்தை கிழித்து எறிந்ததன் மூலம், இந்தியா நேரடியாகவே அந்த உரிமத்தைப் பெற்றுக்கொண்டது. அதேபோல் சீனாவும் அதன் மீதான உரிமத்தை பெற்றுக் கொண்டது. இந்த உரிமை மாற்றம் எந்தவிதமான வர்த்தக முறைகளுக்கும் ஊடாக நடைபெறவில்லை.

மாறாக நேரடியாகவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் எண்ணை படிமங்கள் மீது சீனா மற்றும் இந்தியாவும் பெற்றுக்கொண்ட உரிமை, படிப்படியாக நோர்வேயை அதன் சுரண்டல் நலனில் இருந்து வெளியேற்றி வருகின்றது. அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக புலிகளை கையாளும் நிலைக்குள், இந்தியா மற்றும் சீனாவினது தலையீடு அதிகரித்து வருகின்றது. நோர்வை இதன் மூலம் ஒரங்கட்டப்பட்டு, வடகிழக்கில் அதிக சுரண்டல் நலன் என்பது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தான் மறுபேச்சுவார்த்தை என்ற மீள் கூத்தை நோர்வே முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

மீள் பேச்சுவார்த்தையும் சர்வதேசமும்

முதன் முதலாக புலிகள் எதிர்பாராத ஒரு பேச்சுவார்த்iயை மேசையில் சந்திப்பார்கள். நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட, புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையாகவே இவை அமையும். புலி லூசுக் கூட்டம் பல்லைக்காட்டி, இதை எதிர் கொள்ளமுடியாது திணறும். இதை முன்கூட்டியே எடுத்துக் கூறக் கூடிய அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

இந்த வகையில் பேரினவாதம் இராணுவ ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலமடங்கு முன்னேறித் தாக்கும். அதை நோக்கி அரசு தயாரிப்புடன் கூடிய ஒரு அம்பலப்படுத்தலை செய்யவுள்ளது. புலிகளுக்கு சவால்விடும் வண்ணம் பேரினவாதம் களத்தில் செயற்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் வைக்கும் ஒரு தீர்வை புலிகள் ஏற்க மறுத்தால், அதை புலிகள் அல்லாதவர்கள் மூலம் அமுல் செய்யும் பிரகடனங்களைக் கூட விடுக்கும் நிலைக்கு பேரினவாத அரசு முதல் முறையாக முன்னேறுகின்றது. இந்த தீர்வை சர்வதேச ரீதியாக அரசு அங்கீகாரம் பெற்று அதை அமுல் செய்வதன் மூலம், புலிகளையே மூச்சுத் திணறடிக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ரீதியாக தமது நிலையை பேரினவாதம் மேலும் பலப்படுத்திவிடுகின்ற சூழல் நெருங்கிக் காணப்படுகின்றது. பேரினவாத அரசின் முடிவை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை அங்கீகரிக்க வைப்பதன் மூலம், புலிகளை அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக தனிமைப்படுத்தி விடுவதே, இந்தப் பேச்சுவார்த்தையில் நடக்கவுள்ள அரசியல் மூலவுபாயமாகும். புலிகளின் இறுதிக்காலம் இப்படி பல வழிகளில் அரங்கில் நுழைகின்றது. புலிகளின் சொந்த அரசியல் இராணுவ வழிகளில், தாமே வலிந்து தமக்குரிய அழிவை நிர்ணயித்து, அதை நோக்கி தாவிச் செல்லுகின்றனர். அதை யாரும் இனியும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் மக்கள் பெறப்போவது புலிகளின் அடிமைத்தனத்துக்கு பதில், மீளவும் பேரினவாத அடிமைத்தனத்தைத் தான்.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...21.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...21.

திகிலூட்டிய பாதுகாப்பான வீடு

குல்பர்க் பகுதியில் அச்சத்தால் உறைந்து போன முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்கு நிச்சயமுண்டு என்னும் நம்பிக்கையோடு முன்னாள்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாப்ரியின் வீட்டில் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் எதைக் கொண்டு அச்சப்பட்டார்களோ, அது அங்கே உயிர்பெற்றது.


குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றி 5 மாத காலமாக தெஹல்கா நடத்திய விசாரணைகளின் போது, வன்முறையாளர்கள் மற்றும் சதி திட்டங்களை வகுத்தச் சதிகாரர்களில் அதிகமானவர்கள் தங்களது பங்களிப்பைப் பற்றி மிக விளக்கமாகவே கூறினார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளப் படாத ஒரு இடம் உண்டு - அது தான் குல்பர்க். அஹ்மதாபாத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த சமூக குடியிருப்பானது, ஒரு சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாப்ரியின் இருப்பிடமாக இருந்தது. காவல்துறையின் படைகுழு ஒன்று அங்கே இருந்தும் கூட, பிப்ரவரி 28 அன்று வன்முறை வெறிபிடித்த ஹிந்துத்துவக் கும்பல் ஒன்று அந்த குடியிருப்பை முற்றுகையிட்டது. 5 மணி நேரத்துக்கும் மேலாக ஜாப்ரி பதட்டத்தோடு காவல் துறை ஆணையாளருக்கும், முதலமைச்சர் அலுவலகத்திற்கும், டெல்லியிலிருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் உதவி கோரி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார்.

கிட்டத்தட்ட 30 முஸ்லிம் குடும்பத்தினர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக பிராத்தனை செய்தவர்களாகத் தாங்கள் ஆபத்திலிருந்துக் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தனர். இவர்களோடுப் பக்கத்து சேரிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும் குல்பர்கிலே தஞ்சம் தேடியிருந்தனர். காரணம் காங்கிரஸ் தலைவர் தங்கியுள்ள சமூகக் குடியிருப்பு, பலமான பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். இறுதியில் மதியம் 2:30 மணியளவிலே காட்டுமிராண்டி வெறியர்கள் கூட்டம் சமூக குடியிருப்புக்குள்ளே நுழைந்து மூர்க்கத்தனமாகத் தாக்க ஆரம்பித்து, யாரெல்லாம் அவர்களின் கைகளில் அகப்பட்டார்களோ அவர்கள் அனைவரையும் கொன்றனர். அதிகாரப்பூர்வமாக 39 பேர் கொல்லப்பட்டதாக கூறினாலும், உயிர் பிழைத்தவர்களின் கூற்றுபடி மிக அதிக எண்ணிக்கையிலான பேர் கொல்லபட்டனர். ஜாப்ரியே உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். அவரது உடல் பாகங்கள் எதுவும் கண்டெடுக்கப் படவில்லை (முற்றிலுமாக அவர் கரித்துச் சாம்பலாக்கப்பட்டார்). குல்பர்க்கிலும், நரோடாவிலும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள், 6ம் தேதி மார்ச் 2002 அன்று அஹ்மதாபாத்திலுள்ள கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2007 செப்டம்பர் 1ம் தேதி கடைசியாக தெஹல்கா பஜ்ரங்கியைச் சந்தித்த போது, குல்பர்க் படுகொலைகளில் பங்கெடுத்த குற்றவாளிகளில் விஹெச்பியைச் சார்ந்த அதிகமானவர்களை தனக்குத் தெரியும் என்று கூறினான். விஹெச்பி அவர்களை முறையாக கவனிக்கவில்லை. எனவே அவசியப்பட்டால் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் வருத்தத்துடன் கூறினான். "குல்பர்க் குற்றாவாளிகளைச் சந்திப்பதற்காக 2007 செப்டம்பர் 8ம் தேதி அஹ்மதாபத்திற்கு பறந்து சென்றேன். பஜ்ரங்கியின் உதவியாளர்களில் ஒருவன் குல்பர்க் சங்கம் இருக்கும் பகுதியான மெகானின் நகருக்கு என்னை அழைத்து சென்றான். குல்பர்க் சங்கத்திற்கு எதிரேயுள்ள சாலையின் புறத்தில் சந்திப்பதற்கு முடிவு செய்தோம். பரபரப்பு மிகுந்த பார்ப்பதற்கு குளிர்ச்சியான பகுதியின் மையத்தில் அமைந்துள்ள குல்பர்க் சங்கம், மக்கள் யாருமில்லாமல் வெறிச்சோடி கிடப்பதைப் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு பயத்தை வரவழைக்கிறது. முன்னால் உள்ள இரும்பு கதவு, அதனுள் இருக்கும் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், மேல் கூரை என எல்லாம் ஒரே நிறத்தில் காட்சியளிக்கிறது -- அடுப்பு கரி கருப்பு நிறத்தில்.

கடைகாரர்கள், தெரு ஓர வியாபரிகள், பக்கத்தில் வசிப்போர், வழியாக செல்வோர் என எவரும் இந்த இடத்தை சற்று கூட ஏறிட்டும் பார்க்காமலேயே செல்கிறனர். இரண்டு உள்ளுர் விஹெச்பி தலைவர்கள் அங்கு வந்து சேரும் வரை 20 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்தோம். அதில் ஒருவன் பெயர் மஹேஷ் பட்டேல். இவனுக்கு பக்கத்திலேயே கடையும் உள்ளது. இவர்கள் இருவரும் காவல்துறையினரின் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் எவர்களுடைய பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கிறதோ அவர்களை இவ்விருவரும் அறிமுகம் செய்து வைத்தனர். மஹேஷ் பட்டேல் ஒரு வீட்டிற்கு என்னை அழைத்து சென்று, அவனுடைய இடத்திற்கு வந்து சேருமாறு குற்றவாளிகளுக்குத் தகவல் அனுப்பினான். குற்றவாளிகளுக்கு விஹெச்பி செய்தவற்றை பட்டேல் கூறும் போது- சிறையில் உணவு அளிப்பது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவது, சட்ட உதவிகள் வழங்குவது என விஹெச்பி செய்யும் உதவிகளை அடுக்கிக் கொண்டு சென்றான் (பட்டேலைப் பொருத்த வரை நான் ஒரு RSSகாரன், கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள் - குற்றவாளிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி மதிப்பீடு செய்ய டெல்லியிருந்து வந்திருப்பவன்)

சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு, பிரகலாத் ராஜு, மங்கிலால் ஜெயின் மற்றும் மதன் சாவல் ஆகிய மூன்று குற்றவாளிகள் வந்து சேர்ந்தனர் (39 ஹிந்துக்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தும் மூவரை மட்டுமே அன்றைய தினத்தில் சந்திக்க முடிந்தது). அவர்கள் தங்களது பேச்சைத் துவக்கும் போதே, விஹெச்பி குற்றவாளிகளை நன்றாகக் கவனித்து கொள்கிறது என்னும் பட்டேலுடைய கூற்றைத் தகர்த்தெறிந்தனர். (விஹெச்பி குறித்த) அவர்களுடைய குற்றச்சாட்டுகளின் பட்டியல் மிக நீளமானதும் கசப்பானதுமாகும். நான் அவர்களுடைய தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய எல்லா குற்றச்சாட்டுகளும் முறையாக சரியானவர்களிடம் எடுத்துச் சொல்லபடும், அவர்களுக்கு அதிகமான உதவிகள் விஹெச்பி மற்றும் RSSஆல் செய்து தரப்படும் என்ற உத்திரவாதத்தையும் அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். அவ்வாறு செல்லும் வழியில், மங்கிலாலை அவனது கைத்தொலைபேசி மூலமாக அழைத்து என்னை அஹ்மதாபாத் வானூர்தி நிலைத்திற்கு சமீபமாக நான் தங்கியுள்ள விடுதியில் வந்து சந்திக்குமாறு கூறி, அவனுடன் மற்ற இருவரையும் உடன் அழைத்து வரவும் கேட்டுக் கொண்டேன்".

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

Friday, February 29, 2008

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

பி.இரயாகரன்
23.09.2007

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,



தனது வானொலிப் பேட்டி ஒன்றில் 'தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் - தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?" என்று புலம்பியுள்ளார். புலிகள் சந்திக்கும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீளும் நப்பாசை, இதில் பிரதிபலிக்கின்றது. இதனால் அனைத்து புலி ஊடகங்களும், இதனை முதன்மை கொடுத்து பிரசுரித்துள்ளனர்.

ஆனால் நிலைமை என்ன? மக்களுக்கு எதிரானவர்களை, மக்களே தோற்கடிக்கின்றனர். இதுதான் நடக்கின்றது. இதனைக் கூட புலிகளால் உணர முடியாதளவுக்கு, புலியிசம் பிரபானிசமாகி எங்கும் எதிலும் புளுக்கின்றது.

இப்படி புலியிசம் தனக்குள்ளாகவே, அழுகி நாறுகின்றது. மறுபக்கத்தில் மக்களே தமது சொந்த வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கின்றார்கள். இந்த வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிணநாற்றத்துடன் கூடிய சொந்த மரணத்தை கண்டு, புலிகள் உளறத் தொடங்குகின்றனர். தனது புலியிசத்தை தாமே வலிந்து நடுச் சந்தியில் நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க அலம்புகின்றனர்.

புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய இந்த புலியிச நெருக்கடிகளை களைவதற்கு, புலியிசம் முனையவில்லை. மாறாக அதை பாதுகாக்க, புறநிலை மாற்றத்தைப் பற்றி கனவு காண்கின்றனர். தமது எதிர்கால மரணத்தை, புறநிலை மாற்றம் தடுக்கும் என்ற சுயநம்பிககையை கனவாக காண்கின்றனர். அதை நிகழ்காலத்தில் சொல்லி, ஒப்பாரியாகவே புலம்புகின்றனர்.

புலிகள் தொடர்ச்சியாக சந்திக்கின்ற அரசியல் இராணுவ நெருக்கடிகள், அகநிலை சார்ந்ததே ஒழிய புறநிலை சார்ந்ததல்ல. அகநிலையில் மாற்றமின்றி, புற நிலையில் எந்த மாற்றமும் நிகழாது. இந்த அரசியல் உண்மையை மறுக்கும் புலி யோகி, புறநிலை மீது அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஒடக் கோருகின்றார். அக நிலையை பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை தான், இதில் உள்ள வேடிக்கை. இப்படி வித்தை காட்டி, முக்கி முனங்கியாவது ஈன வேண்டும் என்கின்றார். தாய் மரணித்தாலும், முண்டத்தை ஈனுவது முக்கியம் என்கின்றார்.

போராட்டத்தின் பெயரில் ஆயிரம் ஆயிரம் மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு, புலியிசத்தை அனைத்தையும் தூக்கிவைத்து வேடிக்கை காட்டமுனைகின்றனர். பாவம் யோகி, தானே தனக்கு ஊதி, தானே ஆடும் நம்பிக்கை. அதை அவர் கூறும் விதம் தான் நகைச்சுவையானது. 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்கின்றார். அனைத்தையும் தலைவரின் மீது பொறுப்பாய்ப் போட்டுவிட்டு, மறுபடியும் தப்பி ஒடிவிடுகின்றார். ஒரு அரசியல் வழி, அரசியல் நம்பிக்கை என்று எதையும் முன்வைத்து, மக்களை அகவழி சார்ந்து வழிகாட்ட முடிவதில்லை.

சரி 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்று கூறும் இந்த யோகி, கடந்த காலத்தில் எப்படி புலிகளில் இருந்து காணமல் போனார்? அன்று அவரை வழிநடத்திய தலைவர் மாத்தையாவுக்கு அரசியல் எடுபிடியாகி திரிந்த, அந்த அன்றைய நம்பிக்கைகள் என்னவாயிற்று! மாத்தையாவின் கால்களைச் சுற்றியதால், புலிகளின் வதை முகாம்களைத் தரிசித்து, அதைத் தாண்டி புனர்ஜென்மம் பெற்று வந்த வேகத்தில் புலம்ப வைக்கின்றது.

எந்த நம்பிக்கையும், எந்த முன் முயற்சியும், புலிகளின் உள்ளான ஒரேயொரு அகமாற்றத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு மட்டும் தான் சாத்தியம். ஆனால் அது புலியிச வரலாற்றில் இனியும் எப்போதும் நிகழாது. புலியிசம் என்பது மக்களுக்கு எதிராக மட்டும் தான், நிலைபெற்று நீடிக்க முடியும் என்பதால், மாற்றம் என்பது இனியும் நிகழமுடியாது. புலியிசத்தின் முடிவுதான் அதன் வரலாறாக மாறும்.

இந்த நிலையில் எந்த மாற்றமும் புறத்தில் நிகழ்ந்தாலும், புற மாற்றங்கள் புலியிசத்துக்கு எதிரானதாகவே செயல்படுமே ஒழிய, சார்பாக மாறாது. சார்பாக மாற்ற, புலிகளுக்கும் மக்களுக்கும் எந்த அரசியல் பொருளாதார உறவும் கிடையாது. புலிகள் தமது எதிரியாக, மக்களை நிறுத்தி வைத்து, அதையே அரசியல் செய்வது தான் புலியிசமாகும்.

இந்த நிலையில் யோகி 'புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது என்னவெனில், நாங்கள் உதவுவோம், தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது. நாங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும். இந்நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களுக்குரிய பணி என்னவென்று சொன்னால் அங்கு போராடுகின்ற நோக்கம் இதுதான். எங்களுடைய குறிக்கோளில் தடம்புரண்டதில்லை." மக்களையே வெறுக்கின்ற, சதா வெறுப்பேற்றுகின்ற புலியிச குறிக்கோள் தான் என்ன? மக்களின் சமூக பொருளாதார வாழ்வாதாரங்களுக்கும், புலிகளுக்கும் என்ன அரசியல் பொருளாதார உறவு உண்டு. மக்களின் குறிக்கோள் வேறு. புலியின் குறிக்கோள் வேறு. இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டமுடியாதவை.

இப்படி தடம் புரண்டு வெகுதூரம் சென்றுவிட்ட வண்டியை, மீளவும் தண்டவாளத்தில் ஏற்றமுடியாது. ஏன், அதை மீள ஏற்றவே புலிகள் அனுமதிப்பதில்லை என்பதில் உள்ள குறிக்கோளில் மட்டும், அவர்கள் தடம் புரளாது ஒட முனைகின்றனர். இது அவர்களின் சொந்த அழிவு வரை என்பதில், அவர்கள் தடம் புரண்டது கிடையாது.

'தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது." என்கின்றனர். இப்படி மக்களா சொன்னார்கள். இல்லை. நீங்கள் தான் தோற்றவனுக்கு உதவக் கூடாது, என்று சொல்லி வந்தீர்கள். ஏன் இதை இப்போது மறந்து போனீர்கள்? தோற்றவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை என்று கூறியவர்கள் யார்? நீங்கள் தான். கிட்லர் பாணியில் கூறியவர்கள் நீங்கள். இப்படி வரலாற்றையே மாற்றி எழுதியவர்கள் நீங்கள். வெற்றி என்று கூறி, அனைத்தையும் துடைத்தெறிந்தீர்கள். உங்கள் தோல்விகளை, அழகாக பூசி மொழுகினீர்கள். பாட்டுப் பெட்டியை அலறவிட்டு, அதை மட்டும் கேள் கேள் என்றீர்கள். இன்று, வெடிச் சத்தமும் பிணமும் இன்றி, எந்த வீட்டுச் சோறும் அவியமாட்டேன் என்கின்றது. பிணத்தை அறுத்து, அதையே அவித்து அவித்து கொட்டி என்ன பயன். அதுவே வினையாகி உங்களுக்கு எதிராக எழுந்து நிற்கின்றது. அனைத்தும் பொய்யும் போலியுமாகி நிற்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் கூறுகின்றீர்கள் 'நாங்கள் எவ்வளவுக்களவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும்." என்கின்றீர்கள். சரி அந்த 'அவர்கள்" யார்? 'எங்களுடன்" என்ற நீங்கள் யார்? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன அரசியல் உறவு உண்டு? சரி, ஏன் அந்த 'அவர்கள்" உங்களுடன் 'உறுதியாக இருக்க வேண்டும்? சதா 'அவர்களுக்கு" எதிராக செயல்படும் நீங்கள், அவர்களை உறுதியாக எம்முடன் இருக்கவேண்டும் என்பது அரசியல் வேடிக்கை தான்.

மறுபக்கத்திலோ மக்கள் உங்களுடன் உறுதியாக நிற்கின்றனரா என்பதற்கு முன்னர், உங்களால் அப்படி நிற்க முடியுமா என்று அரசியல் ரீதியாக பாருங்கள். எங்கே உங்கள் கடந்தகால வீம்புகள் எல்லாம் ஓடி ஒளித்துவிட்டது. ஏன் சவக்களை அடிக்கின்றது? அரசியல் என்பதை அடிதடியாக்கினீர்கள். நாலு சொற்களில் அரசியல் செய்தீர்கள். இதைச்செய்த பலர் காணாமல் போகின்றனரே, ஏன்? கோட்டை கொத்தளங்களாக உருவான பிரமைகளும் நம்பிக்கைகளும், மணல் மேடாக சரிந்து வீழ்கின்றனவே ஏன்? உங்கள் உறுதியெல்லாம் இப்படிப் பொலபொலவென சிதைந்து போனது ஏன்?

இதை சிந்திக்கும் ஆறாவது மனித அறிவு புலியிசத்திடம் கிடையாதா? நீங்கள் ஆறறிவற்ற புலியாகத் தான் இருக்க விரும்புகின்ற வீம்புத்தனம் தான், உங்களையே இன்று ஓடவைக்கின்றது. வன்முறையை நம்பி, கொள்ளையை ஆதாரமாக கொண்ட, கோட்பாடற்ற வெறும் நம்பிக்கைகள் எதையும் பாதுகாக்காது. சொந்த அமைப்பே கண் மண் தெரியாது ஓடத் துவங்கி விடுகின்றது.

நம்பிக்கை என்றால், எதன் மீது நம்பிக்கை? எதன் மீது தான், மக்களை உறுதியாக நிற்கக் கோருகின்றீர்கள்? இன்று எப்படி கடந்தகால தியாகங்கள் தூற்றப்படுகின்றதோ, அப்படி எல்லாம் தியாகங்களும் தூற்றப்படும். இது இந்த புலி அரசியல் உள்ளடகத்தில், பொதிந்து காணப்படுகின்றது. உங்கள் முன்னாள் குரு மாத்தையா கதை, இப்படித் தான் இன்று உங்களால் தூற்றப்படுகின்றது. உங்களுடன் காலாற நடந்த கருணா கதியும் அது தான். போற்றுவதும், தூற்றுவதும் அக்கம்பக்கமாகி அரசியலாகிவிடுகின்றது. நாளை முழுப்புலிகளின் தியாகத்தையும் தூற்றுவது கூட, உங்களால் மட்டுமே சாத்தியமானது. அதுவே உங்கள் கடந்த காலம். இப்படியான அரசியல் வங்குரோத்து புலியின் உள்ளேயே, அனைத்தையும் செயலற்றதாக்கின்றது.

அதை பிரதிபலித்த யோகி கூறுகின்றார் 'பொதுவாக மனித இயல்பு எப்படிப்பட்டதென்றால், வெற்றிகளைக் கண்டு பூரிப்பதும், தோல்விகளைக் கண்டு துவளுவதும்தான். இந்த இயல்பு பொதுவானது. இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்ற மனிதர்கள், இதனையெல்லாம் பொதுவாகப் பார்க்கின்ற மனிதர்கள், தெளிவான பார்வை உடையவர்களுக்கு நம்பிக்கையூட்டி, தொடர்ச்சியாக அவர்களது பங்களிப்புக்கு உற்சாகமூட்டி, தொடர்ந்து செயற்பட வேண்டிய சூழல்தான் இருக்கிறது. அதாவது வெற்றியின்போது பலர் கூட இருப்பார்கள். தோல்வியின்போது ஒருவரும் உடன் இருக்கமாட்டார்கள் இதனைப் பலமுறை சந்தித்திருக்கிறோம்." ஏன் உடன் இருக்க மாட்டார்கள்? இந்த கேள்விக்கு புலியிசம் பதிலளிக்காது, பதிலளிக்க முடியாது. வெற்றியும் தோல்விகளும் அந்த மக்களுடையதாக இருக்காத வரை, அது தாம் அல்லாத அன்னியனுடையதாக பார்க்கப்படும். இதில் சம்பந்தப்படாத மக்கள், அதில் இருந்து ஒதுங்கிச் செல்வது இயல்பு. வெற்றியும் சரி, தோல்வியும் சரி, மக்களின் சொந்த வாழ்வுடன் தொடர்பற்ற ஒன்றாக இருப்பதன் மொத்த விளைவு இது.

இந்த நிலையில் வெற்றி பெறும் போது யார் குதூகலிக்கின்றனர்? இதன் மூலம் இலாபம் பெறுபவர்கள் தான். தோல்வி பெறும் போதோ, சுயநலத்துடன் அதைவிட்டுவிட்டு தப்பி ஒடுகின்றார்கள். புலியிசத்தின் பின் உள்ளவர்கள் சுயநலப் பேர்வழிகளே. ''உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்ததே" என்ற உங்கள் சொந்த விதிக்கமைய ஒடுகின்றனர். தப்பமுடியாது அகப்பட்டவன் மட்டும், தொடர்ந்து இப்படி உளறமுடிகின்றது. சுயநலத்தை அடிப்படையாக கொண்ட புலியிசம், மக்களின் இயக்கமல்ல. இதற்கேற்ற சுயநல இயக்கம் தான், புலியிசம். மக்கள் இதில் சம்பந்தப்படாத வகையில், இதையொட்டி வாழ்கின்றவர்களாகவும், ஒதுங்கி வாழ்கின்றவர்களாகவே உள்ளனர். கணிசமானவர்கள் பொழுதுபோக்க கொசிப்பதன் மூலம், இதையொட்டி வம்பளந்து காலத்தை கழிப்பவர்கள். தோல்வி ஏற்படும் போதும், அதையும் தூற்றி, பொழுது போக்குபவர்களும் இவர்கள் தான். இப்படித்தான் இந்த இயக்கம் உள்ளது.

இப்படிப்பட்ட இயக்கத்தில் நம்பிக்கையூட்ட, அகநிலையாக மக்களை அரசியல் ரீதியாக அணுகுவதில்லை. மாறாக புறநிலையை நம்பக் கோருகின்றனர். 'அதனால் அனைத்துலக ரீதியாக அரசு மட்டங்களிலும், மக்கள் மட்டங்களிலும் ஒரு விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இது தொடர்பான சில கருத்துருவாக்கங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால் அவையெல்லாம் செயல்வடிவம் பெற வேண்டும். முன்பைவிட அனைத்துலகம் என்பது தமிழ் மக்கள் விடயத்தில் ஆழமான ஒரு விழிப்புணர்வை இப்போது பெற்றுள்ளது என்பது உண்மை. அது ஒரு முழுமையான விழிப்புணர்வு பெற்ற நிலைமைக்கு அப்பாற்பட்டு செயற்படுமானால், நாங்கள் போராடத்தான் வேண்டும். அதற்குப் பக்கபலமாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களும் நிற்கத்தான் வேண்டியிருக்கும்." என்ன அறிவுசார் அரசியல்! புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் போதான மனித அழிவுகளையும் சிதைவுகளையும் காட்டி, ஏகாதிபத்தியம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. அதைத் தான் புறநிலை மாற்றமாக புலிகள் காண்கின்றனர். சொந்த மரணத்தைக் கூட, அரசியலாக காட்டி ரசிக்கின்ற மனவிகாரங்கள். ஏகாதிபத்தியம் வடிக்கும் முதலைக் கண்ணீரை, ஆறாக மாற்றிவிட முடியும் என்று புறநிலை மீது நம்பிக்கை ஊட்டுகின்ற விபச்சாரங்கள். புலிகள் இந்தக் கற்றுக்குட்டித்தனத்தையே அனைவரையும் நம்பக் கோருகின்றனர். ஏகாதிபத்தியம் என்பது ஏகாதிபத்தியம் தான் என்பதையே, இது மறுக்கின்றது.

ஏகாதிபத்தியத்தை ஏகாதிபத்தியமாக அறிவித்து, மக்களின் தேசியத்தை முன்னெடுக்க மறுக்கின்றவர்களின், வரட்டுத்தனமான குளறுபடிகள் இவை. ஏகாதிபத்தியத்துக்கு தொண்டூழியம் செய்து, தமிழ் தேசியத்தின் உண்மைத்தன்மையை அழிக்கின்ற வழியில் தமிழ் மக்களை விபச்சாரம் செய்யக் கோருகின்றனர். புலிகள் அழியும் போது ஏற்படும் மனித அழிவுகளையே, மூலதனமாக்கி புலிகள் பிழைக்க முடியுமா என்று பாருங்கள் என்பதை இது கோருகின்றது.

இப்படிப்பட்ட நிலையில் புலியிசத்தால் எதையும் தன்னளவில் நம்பிக்கையைக் கொடுக்க முடியவில்லை. அதை 'காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை" என்கின்றனர். தீர்க்கதரிசனமிக்க வழிகாட்டும் உங்கள் தலைவர் எங்கே? எல்லாவற்றையும், எல்லா நேரத்திலும் வழிகாட்டியதாக கூறிய தலைவருக்கே மொட்டை அடித்து, அதை 'காலமும் சூழலும்" என்று கூறும் காலகட்டத்தில் புலிகள் சரிந்து வீழ்ந்து நிற்கின்றனர். ஏன் இந்த நிலை? இதைவிட 'வேறு ஒரு வழியும் இல்லை" என்று புலியிசத்தால் ஒப்பாரிவைக்க முடிகின்றது.

இப்படி சிதைந்து சின்னபின்னமாக மாறும் புலிகள், தமது சொந்த சுயநலத்தையே உலக அரசியல் என்கின்றனர். 'உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்தே செயற்படும். தமிழர்களைப் பொறுத்தவரையில், எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் முழுமையான அர்ப்பணிப்போடு, அந்தப் போராட்டத்தினுடைய சரியான விடயங்களை தெளிவாகச் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும். அதில் இடையிடையே குழப்பம் இருக்கத் தேவையில்லை. இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" அரசியல் என்பதை சுயநலம் சார்ந்தது என்கின்றார். அரசு என்பது சுயநலம் சார்ந்தது என்கின்றார்.

இப்படி தியாகத்தையே கொச்சைத்தனமாக்குகின்றனர். அரசியலும், அரசும் சுயநலம் சார்ந்தது என்று கூறும் இவர்கள், தமிழ் மக்களுக்கும் இதைத் தான் சொன்னார்கள், செய்தார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான கொலைகள். தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வையே இதற்காக அழித்தனர். 'எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில்" என்று கூறுவது, புலியின் நலனைத்தானே ஒழிய, மக்களின் நலனையல்ல. இந்த சுயநலம் சார்ந்து 'நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம்". ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக் கூடாது என்கின்றனர். அதாவது 'அதனை ஒதுக்கி வைத்துவிட்டு" புலியின் சொந்த சுயநலத்துக்காக மக்கள் தியாகம் செய்து மாரடிக்கவேண்டும் என்றாகின்றது. மக்களாகிய நீங்கள் தியாகத்தை செய்யுங்கள், ஆனால் அதைக் குழப்பக் கூடாது என்கின்றனர். என்ன சுயநலம். புலியிசம் என்பது இதுதான் என்கின்றனர். 'இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை" என்கின்றனர். மக்களுக்காக பேசக்கூடாத புலியிசம், இதற்குள் இரண்டில் ஒன்று என்று எதுவுமில்லை. பின் நடுநிலையாவது மண்ணாங்கட்டியாவது.

'கொப்புத் தட்டுகின்ற வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டாம்" என்கின்றனர். கொப்புத்தட்டுவதல்ல மக்களின் வேலை. தமது வாழ்வுக்கு இடைஞ்சலாக உள்ள அந்த ஆலமரத்தையே அகற்றுவது தான். இந்த ஆலமரம் அமெரிக்காவாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி, மக்களுக்கு ஒன்று தான். 'கொப்புத் தட்டி" எதுவும் மக்களுக்கு சார்பாக மாறிவிடாது. 'கொப்புத் தட்டுகின்ற"தாக புலியிசம் எதை கருதுகின்றதோ, அதற்கு மாறாக கொப்புகள் தானாகவே உயிரற்றதாகி பட்டு ஒடிந்துகொண்டு இருக்கின்றன. இதனால் தான் 'காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை" என்று புலம்ப வேண்டியுள்ளது.

தமது இருப்பு சார்ந்த புலம்பலை 'தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரின் தொன்மையை, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினுடைய ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை கேள்விக்குறியின்றி வெளியிட வேண்டும். இந்த விடயத்தில் அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது" என்கின்றனர். யார் குழம்பியுள்ளனர் என்றால், அது புலிகள் தான். இதனால், அதென்ன எனத் தெரியாது பிரதிபலிக்கின்றது. 'தமிழ்த் தேசிய உணர்வு" தான் என்ன? 'தமிழரின் தொன்மை" என்ன? ' ஆழமான அர்ப்பணிப்பு உணர்வு " என்ன?

இதன் அரசியல் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? மக்களை அடக்கியொடுக்கி வாழும் புலியிசம், இதன் உணர்வை, உணர்ச்சியை நலமடிக்கும் பாசிட்டுகள் தானே. மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை மறுத்து, எந்த அரசியல் உரிமையையும் யாராலும் பெறமுடியாது. சுயநலம் தான் அரசியல், அரசு என்று விளம்பரம் செய்யும் புலியிசம், அந்தளவுக்கு மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். மக்கள் தான் தமது வரலாற்றை எழுதுபவர்களே ஒழிய, புலிகள் அல்ல. வரலாறு இதற்கு மாறாக தலைகீழாகி விடாது.


தோற்ற வழியும், தோற்காத வழியும்

தோற்ற வழியும், தோற்காத வழியும்

பி.இரயாகரன்
24.07.2004

ரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.

இப்படி இலங்கை மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு, எந்தத் தீர்வும் அந்த மக்களிடம் இருந்து இதுவரை கிடையாது. இப்படி சரியான தீர்வுகளின்றி, சரியான வழிகாட்டலின்றி, மனித அவலம், தொடர்ச்சியாக தீர்வாக மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்றது.

இந்த வகையில் பிரதான முரண்பாடாகி மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளோ இரண்டு. அவை பிரதேசத்துக்கு பிரதேசம் ஒன்று மற்றொன்றாகி முதன்மையாகின்றது. அவை எவை?

1. பேரினவாதம். இது தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து, தமிழனை பாசிச வழிகளில் அடக்கியொடுக்குகின்றது.

2. புலிகள். இது தமிழ் மக்களின் சுயாதீனமான அனைத்து செயல்பாட்டையும் ஒடுக்கி, தனது பாசிச வழிகளில் தமிழ் மக்கள் மூச்சுக் கூட விடமுடியாத வகையில் ஒடுக்குகின்றது.

இப்படி தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு பிரதான ஒடுக்குமுறை அம்சங்கள் காணப்படுகின்றது. இவ்விரண்டு தரப்பும் ஒன்றையொன்று எதிரியாக கருதியபடியே, தமிழ் மக்களை ஒடுக்குவதில் தமக்குள் ஒன்றுபடுகின்றது. ஏன் இப்படி மக்களை ஒடுக்குகின்றனர்? இந்தக் கேள்விக்கான விடையில் தான், இதைப் புரிந்து கொண்டு தீர்வுகளையும் காணமுடியும்.

ஆனால் இதை யாரும் உணர்வதுமில்லை, உணர்த்துவதுமில்லை. இதை உணராது இருக்க வேண்டும் என்பதிலும், இந்த இரண்டு போக்குக்கும் வெளியில் சிந்திக்காதவகையில் இருக்கும் அரசியலே, எங்கும் எதிலும் திணிக்கப்படுகின்றது. மக்களின் மேலான ஒடுக்குமுறைக்குரிய காரணங்களின் அடிப்படையில் யாரும் செயல்படுதுமில்லை. மாறாக தமிழ் மக்களை ஒடுக்குகின்ற அதே அரசியல் நோக்குடன் தான், அனைத்துத் தரப்பும் செயல்படுகின்றனர், செயல்பட முனைகின்றனர்.

உண்மையில் தமிழ் மக்களை வௌவேறு தளத்தில் ஒடுக்குகின்ற, இந்த இரண்டு பிரதான பிரிவுகளின் சமூக பொருளாதார நலன்கள் தான், ஓடுக்குமுறைக்கான அடிப்படைக் காரணமாகும். இதை யாரும் எந்த வகையிலும் மறுக்க முடியாது. இதுவல்லாத வெற்றிடத்தில், காரணமல்லாத எந்த நோக்கத்திலும், அரசியல் அல்லாத கற்பனையில், யாரையும் யாரும் ஒடுக்கமுடியாது. சமூகங்கள் கொண்டுள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பாதுகாக்கவே, இரண்டு தரப்பும் முனைப்புடன் முனைவதால் தான் மக்களை ஒடுக்குகின்றனர். மக்கள் எதரிகளின் அரசியல் தளம், இதற்குள் தான் செயல்படுகின்றது.

இப்படியாக பேரினவாத அரசு மற்றும் புலிகளின் செயல்பாடுகள் உள்ளது. இதையொட்டி இதற்குள் இயங்கும் இரண்டு பினாமி பிரிவுகளும், விதிவிலக்கின்றி மக்களை ஒடுக்கும் அரசியலைக் கொண்டே தமது அரசியலை உமிழ்கின்றனர். இவர்களின் ஜனநாயகம் என்பது, மக்களின் சமூக ஒடுக்குமுறையை பேணிப் பாதுகாப்பது தான். இவர்கள் மக்கள் என்று கூறுவது எல்லாம், சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கும் எல்லைக்கு உட்பட்டதே. இதைப் பேணி பாதுகாக்க முனைபவர்கள், சமூக முரணபாடுகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்று கூற முனைகின்றனர். புலிகளும் சரி, புலியல்லாத தரப்பும் சரி, இதைத்தான் சொல்லுகின்றது. புலிகள் அனைத்தையும் தமிழீழத்தின் பினனர் என்கின்றனர், புலியல்லாத தரப்பு அனைத்தையும் புலியொழிப்பின் பினனர் என்கின்றனர். இப்படி இருதரப்பும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி, பொய்யான போலியான படுபிற்போக்கான அரசியலை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு திணிக்கின்றனர்.

பிரதான அதிகாரப் பிரிவுகள் சமூக முரண்பாட்டை மூடிமறைக்க, சமூக முரண்பாட்டின் ஒன்றை தீவிரமாக்கி விடுகின்றனர். இதற்குள் ஒரு யுத்தத்தை இவர்களே வலிந்து சமூகங்கள் மீது திணித்துவிடுகின்றனர். பின் யுத்தத்தைக் காரணம் காட்டி, சமூகங்களின் உள்ளார்ந்த அனைத்து சமூக முரண்பாட்டையும், எதுவுமற்ற ஒன்றாக காட்டவிட முனைகின்றனர் அல்லது இப்போதைக்கு இவை பிரச்சனைகளல்ல என்கின்றனர். இப்படியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை திரித்து, தமது வர்க்க நோக்குக்கு ஏற்ப ஏதாவது ஒன்றை மக்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.

பின் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக இரண்டு வழியை வைக்கின்றனர்.

1. பேரினவாதத்தில் இருந்து விடுபட புலித் தமிழீழம்

2. புலிப் பாசிசத்தில் இருந்து விடுபட புலியொழிப்பு

இப்படி இதற்குள்ளாக இலங்கையின் முழு சமூகத்தையும் கட்டிப்போடுகின்றனர். இரண்டு தரப்பும் இதற்குள் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு, சமூகங்களை நார்நாராக பிளந்துபோடுகின்றனர். இதற்குள் தீர்வுகாணும் வழிகள் பற்றிய கற்பனையை விதைத்து, கடந்த இரண்டு பத்து வருடங்களாக பல பத்தாயிரம் உயிர்களை பலியிட்டனர். ஒருவரை ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லுகின்றனர்.

நேரடியாக செயல்படுவர்கள் ஒருபுறம். மற்றவர்களும் இந்த இரண்டு பிரிவுக்குள்ளும் பினாமிகளாக செயல்படுவதால், சமூக வழிகாட்டல் இன்றி மனித அவலங்கள் தொடர்ந்து பெருகுகின்றது. இதனால் இதற்கு வெளியில் மூன்றாவது மாற்றுவழி பற்றி, எந்த சமூக முன்முயற்சியும் யாராலும் முன்வைக்கப்படுவதில்லை, முன்னெடுக்கப்படுவதுமில்லை. புலித் தமிழீழம் அல்லது புலி ஓழிப்பு இதற்குள் தமிழ் மக்கள் நலமடிக்கப்படுகின்றனர். இதற்கு மாறாக செயல்பட்டவர்கள் அழிக்கப்பட்டனர். அத்துடன் திட்டமிட்ட வகையில், சமூக ஆதிக்கம் பெற்ற பிற்போக்கு கூறுகளைக் கொண்டு புறக்கணிக்கப்படுகின்றது. இதுதான் இன்றைய நிலை.

புலித் தமிழீழம், புலியொழிப்பு என்ற இரண்டும், இரண்டு பத்து வருடமாக தோற்றுப் போன இரண்டு வழிகளாகும். மக்களின் தீர்வாக முன்வைப்பட்ட இந்த வழிகள், இதுவரை எதையும் சாதிக்கவில்லை. ஆனால் இதற்குள் தான், இன்னமும் அரசியல் விபச்சாரம் தொடருகின்றது.

இந்த இரண்டு வழிகளும் மேலும் மேலும் மனித அவலத்தைத் தவிர, எதையும் உருப்படியாக வைக்கவுமில்லை, சாதிக்கவுமில்லை, இனியும் சாதிக்கப் போவதுமில்லை. புலித் தமிழீழமாகட்டும், புலியொழிப்பாகட்டும், இரண்டு பத்து வருடங்களுக்கு மேலாகவே தோற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்த தோற்றுப் போன வழிக்கு பின்னால் தான், மீண்டும் மீண்டும் வேதாளமாக ஏற முயலுகின்றனர். இதற்குள் புலியல்லாத தரப்பும் சரி, அரசு அல்லாத தரப்பும் சரி, இந்த ஓட்டைச் சட்டியில் குதிரை ஓட்ட முனைகின்றனர்.

கடந்தகாலம் முழுக்கவே தோற்றுப்போன இந்த இரண்டு வழிக்கப்பால், தோற்காத வழியுண்டு. இதுவரை யாரும் முன்னெடுக்காத வழி. இது மட்டும் தான், மக்களின் பிரச்சனைகளை தீhர்ப்பதற்கான ஒரேயொரு வழி. அது சமூகங்கள் தமது முரண்பாடுகளை தீர்ப்பதற்கான அடிப்படையில், தீர்வுகளை காண்பதற்கான வழி.

மேலே குறிப்பிட்டது போல் இதுவரை முன்னெடுக்காத, வெறும் வார்த்தையாக அது சிதைக்கப்பட்டுள்ளது. இதை முன்னெடுக்க மறுப்பவனும், ஒடுக்குபவனும், இதை தோற்றுப் போனதாகவே சதா காட்டமுனைகின்றான். இது சாத்தியமற்றது என்கின்றான். தமிழீழத்தின் பின் அல்லது புலியொழிப்பின் பின் என்று, இருவரும் ஒரே ரெக்கோட்டை ஒரேவிதமாக போடுகின்றனர்.
இதைக் கோரியவனை, முன்னெடுத்தவனை கொன்று போட்டபடி, இது சாத்தியமற்றது என்று அவனே கூறுகின்றான். அத்துடன் இதை இன்றைய உலகத்துக்கு சாத்தியமற்றதாகவும், அதற்கு எதிரான அவதூறையும் கட்டமைக்கின்றான். இதற்கு எதிராக எல்லாம் அவனாகவே இருக்கின்றான். இந்த வழி மீது நம்பிக்கையீனத்தை பலவழிகளில் திணிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடும் வழி, கடுமையான அவதூறையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கின்றது.

ஆனால் இது தோற்காத, தோற்க முடியாத வழி. மக்கள் தமக்காக தாம் போராடுவது. இது எப்படி தோற்றுப் போகும்? இந்த வழியில் தோற்பவன் யார் என்றால், ஒடுக்குமுறையாளன் தான். மக்களின் சமூக அவலத்தை விதைப்பவன் தான் தோற்றுப்போவான். புலி மற்றும் புலியல்லாத தளத்தில், இதை தடுத்து நிறுத்தும் அரசியல், இந்த வழியை இழிவுபடுத்துகின்றது, கேவலப்படுத்துகின்றது. மக்கள் தமது விடுதலையை தாம் பெறும் நோக்கில், சமூக முரண்பாடுகளையும் தீர்க்கும் வழியில் போராடுவதையும், போராடக் கோருவதையும் எதிர்த்து, அதை சிதைகின்றவன் யார் என்றால் மனித குலத்தின் எதிரி தான். மக்கள் தாம் தமக்காக போராடாத வழியில், சிலர் அதை தீர்ப்பார்கள் என்ற அரசியல் படுபிற்போக்கானது. மக்கள் தாம் தமக்காக போராடுவது என்பது, உயர்ந்தபட்ச ஜனநாயகத்தை அப்படையாகக் கொண்டது.

இதைவிட உயர்ந்த ஜனநாயகத்தை யாராலும் முன்வைக்க முடியாது. இதைச் செய்ய மறுக்கின்ற புலி மற்றும் புலியல்லாத தரப்புகளில் இருந்து, இதற்கு கடும் எதிர்ப்புள்ளது. அதாவது மக்களின் எதிரிகளின் எதிர்ப்பு, இதற்கு இயல்பாகவுண்டு. இதை எதிர்த்து இதற்கு எதிராக செயல்படாது, தமிழ் மக்களின் பிரச்சனைக்கு வேறு எந்த தீர்வும் சாத்தியமற்றது.

Thursday, February 28, 2008

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?

பி.இரயாகரன்
03.07.2007

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.

இதனால் இதை சாதிப்பதில் பேதம் எதுவுமற்ற மனித விரோதிகள். இதனால் பேய்களுடனும் பிசாசுகளுடனும் கூடி இதை சாதிக்க முனைவதாக பிரகடனம் செய்கின்றனர். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த இரண்டு வழியில் பயணிக்கின்றனர். ஆயிரம் ஆயிரம் மக்களை இந்த வழியில் இவர்கள் கொன்று போட்டுள்ளனர்.

இந்த இரண்டு வழியை முன்வைப்பவர்கள், தெளிவாகவே மக்களை அணிதிரட்டுவதை நிராகரிக்கின்றனர். மக்களை அணிதிரட்டுது சாத்தியமற்றதொன்று என்று, தமது சொந்த சுத்துமாத்து வழிகளில் கூறியே, அனைத்து மக்கள் விரோத செயலையும் செய்கின்றனர்.

நாம் இந்த இரண்டு வழியையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நிராகரிக்கின்றோம். நாம் முன்மொழிவது இந்த இரண்டு வழிக்கும் முற்றிலும் நேர்மாறானது. நாம் முன்வைப்பது புலியொழிப்போ, புலித்தமிழீழமோ அல்ல. மாறாக மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, தாம் போராடுவதே தான். இதை இந்த இரண்டு தரப்பும் தெளிவாக நிராகரிக்கின்றனர். இந்த வழியை, இன்று வரை சாத்தியமற்றதே என்று இருதரப்பும் கூறுகின்றனர். குறுக்கு வழியில் குறுக்காக ஓடி இதைச் சாதிக்க முடியும் என்கின்றனர் அவர்கள். மக்கள் இதை சாதிக்க முடியாது என்பதால், அவர்கள் ஒதுங்கி வாழமுனைகின்றனர்.

இப்படித்தான் அன்று இந்தியா உதவியில்லாத தமிழீழமா என்றனர். இப்படி மக்களை நிராகரித்த படி, அன்னிய சக்திகளின் தயவில் இயங்கத் தொடங்கியவர்கள், படிப்படியாக மக்களையே எட்டி உதைக்கத் தொடங்கினர். மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் தமது இந்த இலட்சியத்துக்கு எதிரானதாகவும், துரோகத்தனமானதாகவும் சித்தரித்தனர். அதை முன்வைத்தவர்களை துரோகிகளாக காட்டிக் கொன்றனர். இப்படி உள்ளியக்க வெளியியக்க படுகொலைகள் மூலம், அன்னிய சக்திகளின் தயவில் நின்று தமிழீழம் என்றனர்.

இப்படித் தாம் மக்களுக்காக போராடி, மக்களின் விடுதலையை பெற்றுத் தரப்போவதாக கூறிக்கொண்டு, மக்களை ஒடுக்குவதன் மூலம் அரசியல் செய்தனர். இன்றும் அதைச் செய்கின்றனர். 1970 களிலும், 1980 களிலும் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இயங்கிய காலத்தில் கூட, இவர்கள் மக்கள் தாம் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும் என்பதை தெளிவாக நிராகரித்தவர்கள். இப்படி அன்று முதல் அந்த மக்களுக்கு எதிராக இயங்கத் தொடங்கியவர்கள். மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்றனர். மக்கள் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்றனர். இதை மீறிய போது, யார் சாத்தியமற்றது என்றனரோ, அவர்கள் மக்கள் போராட்டங்களையும் அக்கருத்துக்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்கினர். மக்கள் மத்தியில் தமது சொந்த விடுதலை சார்ந்து போராடிய போது அல்லது மக்கள் பிரச்சனை முன்னுக்கு வந்த போதெல்லாம் அதை ஒடுக்கத் தொடங்கினர்.

வெறும் இளைஞர்கள் போராட்டம், மக்களின் வாழும் உரிமையை மறுக்கத் தொடங்கினர். அதாவது மக்கள் உழைத்து வாழ்ந்த வாழ்வு சார்ந்த அன்றாட போராட்டம் ஒருபுறம், மறுபுறம் உழையாது பெற்றோரில் தங்கி வாழ்ந்த இளைஞர்களின் போராட்டம். இப்படி இரண்டு போராட்டம், இரண்டு திசையில் நேர் முரணாக விலகிச்சென்றது. உழைத்து வாழ்பவர்கள் மக்களாக தமது வாழ்வுக்காக போராடி வாழ, உழையாது வாழ்பவன் போராடுவதாக கூறிக்கொண்டு சுரண்டி வாழும் முரண்நிலை உருவானது. இதுவே இன்று வரை தொடருகின்றது. இரண்டு வர்க்க உள்ளடகத்தில் பிரிந்து, ஒட்டமுடியாத சமூக உறவுகளை கொண்டதாகிவிட்டது. இப்படி மக்கள் சார்ந்த கருத்தை, மக்கள் செயல்பாட்டை ஒடுக்கினர்.

இந்த அரசியலைக் கொண்டவர்கள், இன்று வரை அந்த அரசியலை சுயவிமர்சனம் செய்தது கிடையாது. ஏன் புலியொழிப்புவாதிகளான புலியெதிர்ப்பு அணி, புலியின் அரசியலை விமர்சித்து அரசியல் செய்ய விரும்பாத அரசியல் மர்மம், இந்த அரசியல் சூக்குமத்தில் அடங்கிக் கிடக்கின்றது.

மக்கள் பற்றிப் புலி என்ன கருத்து கொண்டு உள்ளதோ, அதே கருத்தைத் தான் புலியொழிப்புவாதிகளும் கொண்டுள்ளனர். மக்கள் போராடுவதற்கு உதவாதவர்கள் என்பதே, இவர்களின் அரசியல் வர்க்க நிலைப்பாடாகும். இவர்களின் பார்வையில் மக்கள் பணத்தைத் தமக்கு தரவும், தமது வர்க்க நோக்கத்துக்கு பின்னால் கைதட்டவும், தம் பின்னால் வால் பிடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி இவர்கள் சிந்திப்பதுமில்லை. உண்மையில் அதை அனுமதிப்பதுமில்லை. இதன் அடிப்படையில், மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக வைத்திருக்க முனைகின்றனர். இதைத் தான் புலியும் சரி, புலியொழிப்பும் சரி, தமது சொந்த அரசியலாக முன்வைக்கின்றது.

புலியை ஒழிப்பதன் மூலம் அல்லது தமிழீழம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா?

இல்லை. இந்த வகையில் புலியெதிர்ப்பு கும்பல் புலியொழிப்பை முன்வைக்கின்றது. இதற்கு புலியின் பாசிச நடத்தைகளைக் காட்டி, இந்தக் கேடுகெட்ட இழிவான அரசியலை முன்வைக்கின்றனர். புலியை ஒழித்தால், தமிழ் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றுவிடுவார்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.

புலிகள் என்ன சொல்லுகின்றார்கள். புலிக்கு எதிரானவர்களை அழித்தால், தமிழீழத்தை பெற்று தமிழ் மக்கள் சுபீட்சத்தை அடைவார்கள் என்றார்கள்.

இப்படி ஒரு அரசியல் மாயையை விதைப்பதன் மூலம், தமிழ் மக்களை ஏமாற்றுவதில் தான், இவர்களின் நாய்ப் பிழைப்பே நடக்கின்றது. தமிழ் மக்களை இந்த எல்லைக்குள் முடக்கி, தமக்குள் இதன் அடிப்படையில் எதிர்ரெதிர் முகாம்களாக பிரிந்து, வம்பளப்பதையே இரு தரப்பும் விரும்புகின்றனர்.

புலியெதிர்ப்புக் கும்பல் விரும்புவது போல் புலியை ஒழித்தால், தமிழ் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஓடுமா? எப்படி? புலியெதிர்ப்பு முன்வைக்கும் புலியொழிப்புக் கும்பல் இதற்கு பதிலளிக்காது. மக்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாத வகையில், ஒரு அரசியல் சூனியத்தில் இதை ஏற்க வைக்க முனைகின்றனர்.

ஆனால் மக்கள் இதற்கு எதிராக, தமது சொந்த வாழ்வுரிமைக்காக தனித்தனியாக தன்னளவில் போராடுவது அன்றாடம் நிகழ்கின்றது. இல்லையெனின் அவர்களுக்கு உயிர் வாழ்வில்லை. இதற்கு வெளியில் தான் புலித் தமிழீழமும், புலியொழிப்பும் மக்கள் விரோதமாக இயங்குகின்றது. மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கு வெளியில், இவை அன்றாடம் பூதாகரப்படுத்தப்படுகின்றது.

இந்த வகையில் புலியின் அரசியல் சரி, புலியொழிப்பு அரசியல் சரி, வர்க்க உள்ளடகத்தில் ஒன்றே. மக்களின் சமூக பொருளாதார பிரச்சனையை முன்னெடுப்பதற்கு எதிரானவர்கள். இப்படி மக்களின் சொந்த வாழ்வியல் பிரச்சனைகளில் இருந்து, இருதரப்புமே அன்னியமானவர்கள்.

அதாவது மக்கள் தாம் தமக்காக சொந்த சமூக பொருளாதார கோரிக்கையுடன் போராடுவதை எதிர்ப்பவர்கள் இவர்கள். இதை சாத்தியமற்ற ஒன்றாகவே எப்போதும் எங்கும் காட்டுகின்றனர், காட்ட முனைகின்றனர்.

நாம் இதை எதிர்ப்பதால், நாம் அவர்களின் முதன்மை எதிரியாக உள்ளோம். மக்கள் தாம் தமக்காக போராடுவதே உண்மையான விடுதலை என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டவர்கள் என்பதால், அவர்களில் இருந்து தெளிவாக அரசியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அதாவது இதற்கு வெளியில் எந்த நிலைப்பாட்டையும், அது சார்ந்த நடைமுறையையும் கடுமையாக எதிர்ப்பவர்களாக நாம் உள்ளோம். புலித் தமிழீழம் மற்றும் புலியொழிப்பு பேர் வழிகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்பதனால், அதனை எதிர்கொண்டு தனித்து போராட வேண்டியுள்ளது.

எப்படி மக்கள் அரசியல் அனாதைகளாக வாழ்கின்றனரோ, அப்படித் தான் எமது கருத்தும். மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகள் சமூகத்தில் கேட்பாரின்றி அனாதையாகி ஒடுக்குமுறைக்கு எப்படி உள்ளாகின்றதோ, அது சார்ந்த எமது கருத்தும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இப்படி மக்களின் சொந்த வாழ்க்கை எப்படி ஊடகவியலால் இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ, அப்படி மக்கள் கருத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.

புலித்தமிழீழம், புலியொழிப்பு என்ற இரண்டு கருத்தும் முதன்மைபெற்ற ஒன்றாக உள்ளது. அதாவது ஆதிக்கம் பெற்ற ஊடகவியல் மூலமும், பண ஆதிக்கம் மூலமும், பேரினவாத துணை கொண்டும், ஏகாதிபத்திய துணை கொண்டும் தமிழ் மக்களை இக்கருத்துக்கள் ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்த இரண்டு பிரதான மக்கள் விரோத நிலைக்கு எதிராக எமது போராட்டம் தனித்துவமானது. இதற்குள் மட்டும் உலகைப் பார்க்கும் சிலருக்கு, இவை அன்றாட கொசிப்பாக இருக்கின்றது. ஆனால் எமது போராட்டம் கடுமையானது. அநேகமாக தன்னம் தனியாகவே, கடுமையான பல நெருக்கடிகள் ஊடாகவே நகருகின்றது. ஆனால் எமது இந்தப் போராட்டம் மக்கள் உள்ள வரை, அரசியல ரீதியாக யாராலும் வெல்லப்பட முடியாதது.

தமிழீழமா! புலியொழிப்பா! அல்லது இரண்டுமா! என அனைத்தையும் தீர்மானிப்பது யார்? தமிழ் மக்கள் தாம் தம் மீதான சொந்த ஒடுக்குமுறையை இனம் கண்டு, தமது சொந்த விடுதலைக்கான தமது சொந்த போராட்டம் மூலம் தாமே போராட வேண்டும். இதைவிடுத்து புலித் தமிழீழம் என்று புலிகளோ அல்லது புலியொழிப்பு என்று புலியெதிர்ப்பு கும்பலோ, தான் தீர்மானித்த ஒன்றை தமிழ் மக்களுக்கு திணிப்பது மக்கள் போராட்டமல்ல. இது தமிழ் மக்கள் மீதான பாரிய ஒரு அரசியல் வன்முறையாகும்.

மக்கள் தாமே தமக்காக போராட வேண்டும் என்பதை மறுக்கின்றதும், அதை வழிகாட்ட முனையாத அனைத்துமே, மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்று கூறிக்கொண்டு, இப்படி மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கடைந்தெடுத்த மகா அயோக்கியர்கள். மக்களின் பிரச்சனைகளை விடுத்து, அதை பின்போட்டு, புலித்தமிழீழம் அல்லது புலியொழிப்பே இன்று முதன்மையானது என்று கூறுவர்கள் அனைவரும், மக்களின் முதுகில் குத்தும் முதன்மைத் துரோகிகளாவர்.

மக்கள் என்பவர்கள் யார்?

பி.இரயாகரன்
02.08.2007

ரசியல் ஈடுபடுபவர்கள் அனைவருமே, மக்கள் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துகின்றனர். இதே போல் சமூகம் சார்ந்து தன்னார்வமாக செயல்படுபவர்களும் கூட, தாமும் மக்களுக்காக செயல்படுவதாக கூறுகின்றனர். இப்படி மக்களுக்காக தாம் செயல்படுவதாக காட்டிக் கொள்வதன் மூலம், மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே இன்றைய அரசியலாகிவிட்டது.

இதற்காக சலுகைகள், ஆசைகாட்டுதல், மோதவிடுதல், எதிரிகளை கற்பித்தல், வன்முறைக்கு ஏவுதல் என்று பலவிதமான அற்பமான இழிவான உத்திகளை கையாளுகின்றனர். உள்ளொன்றும் புறமொன்றாகவும் செயல்படுவதே, நாகரிகமான மக்கள் செயல்பாடாகி விடுகின்றது. இதையே ஜனநாயகம் என்கின்றனர்.

இது இலங்கை முதல் உலகம் வரையிலான, பொதுவான ஒன்றாகிவிட்டது. மக்கள் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதுமே பொதுத் தொண்டாகவும், என் அதுவே ஜனநாயக அரசியலுமாகிவிட்டது. இது இயல்பான ஒன்றாகவும், இது இன்றி இவையில்லை என்ற நிலைக்குள், மனித உணர்வுகளை சிதைத்துவிட முனைகின்றனர்.

உண்மையில் இவர்கள் உருவாக்கும் சமூக விளைவுகளை பொறுப்பு ஏற்பது கிடையாது. அதற்காக மனம் வருந்துவதும் கிடையாது. மனித சிதைவுகளையும், மனித அவலங்களையும் உருவாக்குகின்ற ஒழுங்கில், மக்கள் பற்றிய பொய்மையான கபடத்தனமான ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் பின்னணியில் அவர்களுக்கு என்று சொந்த வர்க்க நலன்கள் உண்டு. இதை பாதுகாக்கவே, இதைப் பெறவே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். மக்களின் அடிமை நிலைதான், இவர்களிள் வாழ்வாகின்றது. இது இந்த அரசியல் அரங்கில் வெளிப்படையானது. மக்கள் எந்தளவுக்கு அடிமையாக்கப்படுகின்றனரோ, அந்தளவுக்கு சிலருக்கு மேலானதும் உயர்வானதுமான வாழ்வு கிடைக்கின்றது. இதுவே எதார்த்த உலக உண்மை.

ஆகவே இவர்களுக்கு மக்கள் தேவைப்படுகின்றனர். இதனால் மக்கள் என்ற பதத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில், இவர்கள் வெட்கப்படுவது கிடையாது. எந்த சுய கழிவிரக்கம் கூட கொள்வது கிடையாது.

மக்களை இனமாக, மதமாக, சாதியாக, மொழியாக, நிறமாக, பாலாக, பிரதேசமாக பற்பல விதத்தில் பிளப்பதில், மக்கள் என்ற பதத்தை குறுகிய எல்லையில் குறுக்காக பிளக்கின்றனர். இதற்கு அவர்கள் இயற்கை சார்ந்த பிளவுகளை, நீண்ட வாழ்வு சார்ந்த வாழ்வியல் பிளவுகளை, மனித முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, மனித குலத்தை பிளந்து ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்திவிடுகின்றனர். ஒரு கூட்ட மக்களை மற்றொரு கூட்டத்துக்கு எதிராக நிறுத்திவிடுகின்றனர். இதற்கு அமைவாகவே மக்கள் என்ற சொல்லை, மிக இழிவாக கேடுகெட்ட வகையில் பயன்படுத்துகின்றனர்.

ஒரு பகுதி மக்களுக்கு எதிராக, தன் தரப்பு மக்களை வெறி ஊட்டி விடுகின்றனர். இதன் மூலம் தமது வர்க்க நோக்கில், சுரண்டுவதே அன்றாட நிகழ்ச்சியாகிவிடுகின்றது. இந்த எல்லைக்குள் உணர்வுபூர்வமான தலையீட்டை, அணிதிரட்டலை உருவாக்குவதன் மூலமே, அரசியல் முதல் தன்னார்வ நிறுவனங்கள் வரை மக்களை பிளந்து இயங்குகின்றன.

மக்கள் இப்படி இதற்குள் பந்தாடப்படுகின்றனர். மக்கள் சாதியாக, மதமாக, இனமாக, மொழியாக, நிறமாக மோதவிடப்படுவதன் மூலம், தமக்குள் உள்ள வர்க்க ரீதியான மோதலை மறைக்க முனைகின்றனர். அதாவது மற்றொரு சமூகம் மீதான சமூக மோதலாக மாற்றிவிடுகின்றனர். இப்படி இரண்டு மக்கள் கூட்டத்தை மோதவிட்டு, மக்களின் பின் சுரண்டும் வர்க்கம் குளிர்காய்கின்றனர்.

மக்கள் கூடிவாழ்வதை மறுத்து, மக்களை பிளந்து அவர்கள் தமக்குள் முரண்பாடுகளுடன் வாழவைப்பதை பாதுகாக்கின்ற அரசியலைத் தான், ஜனநாயகம் என்கின்றனர். ஜனநாயகம் என்பது மக்கள் பிளவுக்குள்ளாக்கி வாழ்வதையும், அதைப் போற்றிப் பாதுகாப்பதுமே என்றாகிவிட்டது. மக்கள் என்ற பதத்தை இதற்குள் பயன்படுத்துவதில் உள்ள மோசடித்தனம் தான், பொதுவான வாழ்வியல் சமூக ஒழுங்காகிவிடுகின்றது.

சமூகத்தை தனிமனிதனுக்கு எதிராக நிறுத்தி தனிமனிதன் சமூகத்தை சுரண்டுவது போல், மக்கள் கூட்டத்தை மற்றொரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக நிறுத்தி சிலர் சுரண்டுகின்றனர். சமூகத்தையும், மக்கள் கூட்டத்தையும் எதிராக நிறுத்துவதில் தான், சுரண்டும் வர்க்கத்தின் வாழ்வும் அதன் ஜனநாயகமும் உள்ளது.

இதற்கு மாறாக மக்கள் என்பவர்கள் தாம் பரஸ்பரம் இணங்கி சமூகமாக வாழ்வதையே அடிப்படையாக கொண்டவர்கள். மக்கள் கூட்டம் என்பது, தமக்கு இடையில் உள்ள மனித முரண்பாடுகளை களைந்து, பிரிவுகளை கடந்து, பிளவுகளை நீக்கி வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. இப்படி சக மனிதனை சுரண்டுவது, இழிவுபடுத்துவது, அடக்குவது, ஒடுக்குவது என அனைத்தும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே மனிதத் தன்மை.

இதற்காக அவற்றை இனம் கண்டு போராடுவது, இந்த வகையில் மக்களை அணிதிரட்டுவதில் தான், மக்கள் என்ற பதம் உண்மையானது, நேர்மையானது. அதாவது மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, அவர்கள் தாமே போராட வேண்டும். இதை வழிகாட்டும் நடைமுறைகள், கோட்பாடுகளே உண்மையானது நேர்மையானது.

சமூகத்தில் நிலவும் எந்த சமூகப்போக்கிலும், எந்த சூழலிலும் இந்த முழுமையைக் கவனத்தில் கொண்டு போராட மறுக்கின்ற அனைத்தும், பிற்போக்கானது. உண்மையில் மக்களை பிளந்து மோதவிடுகின்ற சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. எந்த முரண்பாட்டையும் முழுமையில் காண மறுக்கின்ற முயற்சிகள் அனைத்தும், நிச்சயமாக அந்த மக்களுக்கே எதிரானது.

இப்படி மக்கள் கூட்டத்தை எதிரியாக பிரிக்கின்ற கோடு, எதிரியை மக்களுக்கு எதிராக பிரிப்பதில்லை. இப்படி எதிரியை மிகப் பாதுகாப்பாக வைக்கின்றது. மக்கள் வேறு, எதிரி வேறு என்று தெரிந்து கொள்ள முடியாத சூக்குமத்தில், மக்களின் எதிரி பாதுகாப்பாக இருக்க முனைகின்றான்.

சக மனிதனை சுரண்டுதை, அடக்குவதை, ஒடுக்குவதை, இழிவுபடுத்துவதை தமக்குள் உள்ளடக்கியபடி வாழ்வதும், அந்த மக்களை மக்கள் என்று விழிப்பது பொய்யானதும், போலியானதுமாகும். தனக்குள், தனது சொந்த மக்களுக்குள் சமூக ஒடுக்குமுறையை களைய மறுத்தபடி, மற்றவன் பற்றியும் மற்றைய மக்கள் கூட்டம் பற்றியும் பேசுவது என்பது, சொந்த மக்களை ஏமாற்றுகின்ற கபடத்தனமாகும்.

தான் செயல்படும் சொந்த அரசியல் தளத்தில், சொந்த நடைமுறை தளத்தில், அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைய மறுக்கின்றவர்கள், அதை முன்வைத்து போராடாதவர்கள் அனைவரும் மாபெரும் அரசியல் போக்கிரிகளாவர்.

சமூக ஒடுக்குமுறைகளை சொந்த அமைப்பில், சொந்த கோட்பாட்டில், சொந்த பிரச்சாரத்தில் முன்வைக்க மறுத்து, அதை பிரச்சாரம் செய்ய மறுப்வர்கள், அதை காலத்தால் பின்போடுபவர்கள் எல்லோரும் கடைந்தெடுத்த மக்கள் விரோதிகளாவர்.

இவர்களே இன்று மக்கள் என்று கூறிக்கொண்டு, மக்களின் முதுகில் குத்துகின்ற அரசியல் அரங்கில் ஆதிக்கம் வகிக்கின்றனர். இவர்களை மனித குலம் இனம் கண்டு போராடாத வரை, உலகில் எந்த சமூகத்திலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வுகளை அந்த மக்கள் கூட்டம் கண்டறிய முடியாது. மாறாக சமூகம் கையாலாகாத்தனம் கொண்ட, சுரண்டும் வர்க்கத்தின் அடிமைகளாகவே வாழ்வர்.

Wednesday, February 27, 2008

ஆணாதிக்கக் கொடுமையின் குரூரங்கள்

ஆணாதிக்கக் கொடுமையின் குரூரங்கள்

வெட்டி எடுக்கப்பட்ட யோனி - பெண்ணீயம் சார்ந்த பாலீயல் கொடுமைகளை பார்க்க விரும்பாதவர்கள் படிக்கத் தேவையில்லை!



ஆண் குழந்தைகளுக்கு சுன்னி வெட்டும் சடங்கு செய்வதும், பெண் குழந்தைகளுக்கு யோனியை வெட்டுவதும் அதை சுற்றி காட்டினால் ஏன் ஆண் குழந்தைகளுக்கும் தானே செய்கிறார்கள் என்பவர்களிடம் மனிதம் இருக்கிறதா? அல்லது அறியாமை பேசுகிறதா என்று தெரியவில்லை.

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலக்கட்டத்தில் எவ்வித அடக்குமுறையும் இல்லாமல் மனிதனாக வாழ்ந்திருக்கிறான். ஆனால் தனக்கென்று குடியிறுப்புக்களையும் கலப்படமற்ற வாரிசுக்களையும் உருவாக்க ஆரம்பித்த கட்டத்தில் பெண்ணீயம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அதற்கு மதம் கலாச்சாரம் புனிதம் கற்பு போன்றவை உருவாக்கியது.

மேலும் பெண்ணின் கலவி உச்சமும் பாலீயல் ஆற்றலும் ஆணைவிட பெண்ணுக்கு அதிகம் இருந்தது. ஆணுக்கு கலவியில் ஒரு பெண்ணை திருப்தி செய்ய முடியாத உணர்வு அவனுள் ஒருபயத்தையும், தாழ்வுமனப்பாண்மையும் உருவாக்கியது. அதனால் பாலீயல் ரீதியாகத்தான் பெண்ணை ஆணியம் ஒடுக்க ஆரம்பித்தது. இதில் மிகவும் முக்கியமானது பெண்உறுப்பில் அதிக உணர்வுகளை உருவாக்கும் பகுதியை வெட்டி எறிந்தது.

அரசன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும் தங்களுக்கு கலப்பிடமில்லாத சந்ததிகளை உற்பத்தி செய்ய பெண்ணின் உறுப்பை தைத்து வைத்தது. இந்த முறைகள் அய்ரோப்பியா மற்றும் இந்திய அரச குடும்பங்களிலும் இருந்து வந்துள்ளது. நாட்பட பல மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் இஸ்லாம் மதம் இன்னமும் விடாப்பிடியாக வைத்திருக்கிறது.

இஸ்லாமியர்கள் சுன்னத் என்னும் ஆண்குறியின் முன் தோல் நீக்கும் சடங்கு உண்டு. அது ஆண்குறியில் நோய்கள் தாக்காதவண்ணம் காத்துக் கொள்ள உடல் ஆரோக்கியத்திற்காக செய்யப்படுவது. ஆனால் இஸ்லாம் இதே முறை பெண்ணிடம் திணிக்கும் முறை இயற்கைக்கு விரோதமானது.

1:8 இல் இவை சுண்ணா 1 ஆம் அத்தியாயம் 8 ஆம் வசனத்தில் அத்தியாத் அல் - அன்சாரியா சொல்கிறது…

இஸ்லாம் ஷாரியாச் சட்டப்படி யோனி வெட்டும் முறையை 3 விதமாக பிரிக்கிறது.

1.யோனியின் மேட்டுப் பகுதியில் பருப்பு போன்று இருப்பதை நீக்குதல். (இது தான் பெண்ணிற்க்கு காம உணர்வுக்கு தூண்டுதலாக இருப்பது)

2.யோனியின் இருபுறமும் இதழ் போன்று இருப்பவைகளை நீக்குவது. (இந்த இதழ் போன்று இருப்பவைகளில் உணர்ச்சிகளை அதிகப்படுத்தக்கூடியது
இருக்கிறது)

३ ஒட்டுமொத்த யோனியின் வெளிப்புறத்தை எடுத்துவிட்டு துவாரத்தை தைத்துவிட்டு தீக்குச்சி அளவு மட்டும் உள்ளே போகும் அளவுக்கு பொத்தல் வைப்பது. (காரணம் பெண்களுக்கு மாதவிலக்கு வரும் காலங்களில் ரத்தப்போக்குகள் வெளியேறுவதற்கு)

இவை பெண்குழந்தைகளுக்கு 4 வயதில் இருந்து 12வயதிற்குள் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும் முடிந்தவரையில் சிறிய வயதிலேயே செய்யப்பட்டுவிடுகிறது. இப்படி செய்யப்படுவதால் பெண்களின் காமஉணர்ச்சி அடக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவளது உடல் உறுப்புகளுக்குள் குறுக்கி விட்டு உடலுறுப்புக்களை ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகலாகக் கூட பார்க்காமல் உடலைச் சிதைத்து பகுதி பகுதியாக பார்க்கிறது ஆணாதிக்கப் பார்வை.

பாக்கிஸ்தான், மலேசியா, ஆப்பிரிக்கா, அரபுநாடுகளில் 3வது வகையை கடைப்பிடிக்கின்றனர். 15 கோடி பெண்கள் மட்டும் ஆப்பிரிக்காவில் இப்படி இருப்பதாக சமுக அமைப்பு கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.

யோனி தைக்கப்பட்ட பெண்கள் திருமணம் முடிந்த அன்று முதல் இரவில் கணவனால் யோனியில் தைக்கப்பட்ட நூல்களை அறுக்கப்பட்டு பெண் கற்பாக இன்னும் இருக்கிறாள் என்பதை நிறுபிக்கப்படுகிறாள்.

இன்று பெண்பாலீயல் ஒடுக்கு முறைகள் பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது। பல சமூக அமைப்புகளும் இதற்காக போராடி வருகின்றன. அய்ரோப்பா அமெரிக்காவில் 1930 இல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

நன்றி தமிழச்சி


தந்தையெனும் ஆணாதிக்க மந்தை!!!

தந்தையெனும் ஆணாதிக்க மந்தை

யோனிக்குள் இன்னும் மிச்சமீதி உணர்ச்சிகள் இருக்கா? ஆராய்ச்சி செய்யும் தகப்பன்

மரண வலியில்
துடிக்கும் மகள்.

கொடுமையின்
உச்சம்.

சந்தேகம்
தீராத தகப்பன்.

காம உணர்ச்சிக்கு
மொத்தமாக தடா
போட்டாகி விட்டதா?

குருதிக்கு நடுவே
கதறும் மகளை
கவுத்துப் போட்டு
ஆராய்ச்சி செய்கிறான்...

நன்றி தமிழச்சி

Tuesday, February 26, 2008

சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...

"கையெழுத்திட்டென்ன, குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2008

லங்கையில் குழந்தைகளை இராணுவத்துக்காக-போராளிகளாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.அத்தகைய சட்டத்தை மீறுபவர்கள்மீது 20 ஆண்டு காலச் சிறைத் தண்டனையும் உண்டாம்!எனினும்,குழந்தைகளைக் குண்டுபோட்டுக் கொல்லும் அந்த அரசை எந்தவொரு அமைப்போ அல்லது அரசுகளோ இதுவரை கண்டும் காணாததாக இருக்கின்றன.ஒரு கண்டனத்தைக்கூட எவரும் செய்யவில்லை!தமிழ்பேசும் மக்கள்மீது பாரிய இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிடும் அரசபயங்கரவாதம் நீடிக்கும்வரை குழந்தைகளைப் போராட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடிவதில்லை!தமது கண்ணெதிரே குண்டுகள்வீழ்ந்து மரணிக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உள்வாங்கும் சிறார்கள், நிச்சியமாக அதை எதிர்ப்பதற்காக ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருப்பதற்கில்லை!இதை உலகம் நன்றாகவே அறியும்!




அதைவிட ஜேர்மனிய அரசின் கடந்தகாலச் சரித்திரம் இதை மிக அழகாகவே அறியும்.

"கிட்லர் யுங்க" என்ற வார்த்தையினூடே இன்று அர்த்தமறிய முனையும் நவ ஜேர்மனிக்கு இதன் தாத்பரியம் நன்றாகவே புரியும். எனினும், இன்றைய இனவாத அரசுகளைத் தட்டிக்கொடுத்தபடி குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்கு எதிராகக் குரல் கொடுப்பது மக்களையும்,குழந்தைகளையும் ஏமாற்றுவதாகவே இருக்கிறது.உலகத்தில் சிறார்பருவமானது மிக அழகாகக் காத்து அனுசரிக்கவேண்டிய பருவமாகும்.இந்த வயதில் குழந்தைகள் யுத்ததுக்கு இரையாகும் நிலை வெகுவாக வெறுக்கத் தக்கதாகும்.இத்தகையவொரு சூழலில் எமது சிறார்கள் வாழ நேரிட்டது எங்ஙனம் உருவாகியது?,அதைத் தடுப்பதற்கான மூலத் தீர்வு என்னவென்பதைக் குறித்து இதுவரை எந்தவொரு உலக அமைப்பும் சிந்திக்காது,தத்தம் போக்குக்கு இணங்கச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது மிக மிகக் கபடத்தனமானதாகும்.

"அச்சுறுத்தலுக்குள் இருக்கும் மக்களுக்கான அமைப்பு" எனும் ஜேர்மனிய அமைப்பானது இலங்கையில் சிறார்களைப் படையில் சேர்க்கும் புலிகளுக்கெதிராகப் போர்க் கொடி உயர்த்துகிறது.அது, ஜேர்மனிய வெளிநாட்டமைச்சருக்குப் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் படிவங்களை இதுவரை சேகரித்து அனுப்பியுள்ளது.கூடவே, இணையத்தின் வாயிலாகவும் அது இத்தகைய கையெழுத்து வேட்டையைச் செய்து வருகிறது.

இலங்கையில் போரை நிறுத்திக் குழந்தைகளைத் துஷ்பிரயோகஞ் செய்யும் நிலையைத் தடுக்கும்படியும் ஐரோப்பியக்கூட்டமைப்பையும், ஜேர்மனியையும் கோருகிறது.இன்றைய சூழலில் 4.000.வரையிலான சிறார்கள் புலிகளின் படையணியில் இருப்பதாகவும்,அவர்கள் இன்றும் 12 வயதே கடந்துவிடவில்லையெனவும் அது குற்றஞ் சுமத்துகிறது.



குழந்தைப் போராளிகள் உருவாகும் நாடுகளாக இன்னும் பல ஆபிரிக்க நாடுகளையும் அது பட்டியலிட்டபடி இலங்கையில் சிறார்கள் அகதி முகாங்களிலிருந்தே வலுகட்டாயமாகக் கடத்தப்படுவதாகும் ஆதார பூர்வமாகச் சொல்கிறது.புலிகளின் பிளவுக்குப் பின்பான நிகழ்வில் கருணா குழுவுருவாக்கத்தின் பின்பாக 200 தடவைகளுக்கு மேலாகக் குழந்தைகளைக் கருணா குழுவும் கடத்தியதாகவும் இந்த அமைப்புக் கூறுகிறது.

குழந்தைகள் ஒரே பொழுதில் அகதியுமாகியும்,போராளிகளுமாகும் நிலை இலங்கையில் இருப்பதாக அந்த அமைப்புக் கூறுகிறது!


இந்த அமைப்பின் குரல் மிகச் சரியானதாகவே இருக்கிறது.

குழந்தைப் போராளிகளை உருவாக்கும் அரசுகளே மிகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.இலங்கையில் போராடும் நிலை உருவாக்கப்பட்டத்தற்கு மேற்குலகுக்கும் பங்குண்டு.அத்தகைய தேசங்களே இன்று குழந்தைப் போராளிகளின் உருவாக்கத்துக்குத் துணைபோனபடி தத்தமது வர்க்க-தேச நலன்களை இலங்கையில் காத்துவரும்போது, அங்கே தவிர்க்க முடியாது இனவொடுக்குமுறை கூர்மையடைகிறது!இத்தகைய நடத்தைக்குத் தோதாக இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் தேசங்கள் முதலில் தண்டிக்கப்பட வேண்டிய தேசங்களாகும்.இவர்களின் குண்டுகள் தமிழ் பேசும் மழலைகளைக் கொன்று குவிக்கும்போது அதுகுறித்து எந்தவொரு செய்தியையும் போடாதிருக்கும் மேற்குலகப் பத்திரிகைகள் இந்தக் குழந்தைப் போராளிகளின் உண்மையான அவலத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது மிகவும் வேதனையானதாகும்.

சிறார்களைப் போராளிகளாக்கும் நிலைக்கு உந்தித் தள்ளப்படும் இனவாத அழிப்பானது ஒரு இனத்தின் இருப்போடு சம்பந்தப்பட்ட சிறார் போராளிகளைத் தயார்படுத்திவிடுகிறது.வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் வாழும் சின்னஞ்சிறார்களின் முன்னுள்ள தேர்வு போராடிச்சாவதென்பதே!இதைவிட அவர்கள் தம்மைக் காத்து வருவதற்கான எந்தச் சூழலை இலங்கைச் சிங்களப் பாசிச அரசு விட்டு வைத்திருக்கிறது?ஆறுமாதக் குழந்தையின் கைகள் ஒடித்து,குடல் சிதறி மரிக்கும்படி குண்டுத் தாக்குதல் செய்யும் சிங்கள அரசை எவ்வழியில் தடுத்து நிறுத்தமுடியும்?

இலங்கையின் கொடூரமான அரச பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியாத அரசுகள்"குழந்தைப் போராளிகள்"குறித்துக் கதைவிடுவது சாத்தான் வேதம் ஓதும் நிலைதாம்.

புலிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்த முறிவுக்குபின்பான இன்றைய சூழலில் சர்வதேசக் கண்காணிப்புக்குழுவுக்கு இலங்கையில் அனுமதியில்லாத சூழல் குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்குச் சாதகமான சூழலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.என்றபோதும், இலங்கைமீதான குற்றப்பத்திரிகைகளை அடக்கி வாசிப்பவர்கள் புலிகளின்மீதே குற்றத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்!

புலிகளால் சிறார்கள் போராட்டத் தூண்டும் நிலைமைகளின் உருவாக்கம் இலங்கையின் அரச முன்னெடுப்புகாளாலேயேதாம் தோற்றுவிக்கப்படுகிறது!இதைத் தடுத்து நிறுத்தாமல் சிறார்களைக் காத்தலென்பது இலங்கை இராணுவம் மக்கள் குடியிருப்புகள்மீது குண்டைப் போட்டுக் குழந்தைகளைப் பலியெடுத்துவிட்டு,அது புலிகளைத்தாம் அழித்தோம் என்பது போன்றதே.

இத்தகைய நிலையில் இவர்கள் "கையெழுத்திட்டென்ன,குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2008



KAMPAGNE

Aktion für Kindersoldaten in Sri Lanka zum Red Hand Day

Kinder sind keine Soldaten!

08. Februar 2008Mit der symbolischen "Roten Hand" protestieren Menschenrechtsorganisationen in aller Welt am 12. Februar gegen den Einsatz von Kindern als Soldaten. Mehr als 300.000 Kinder wurden nach Schätzungen der Vereinten Nationen im Jahr 2007 als Soldaten in Konflikten im Kongo, dem Sudan, Tschad, den Philippinen, in Sri Lanka, Afghanistan und Kolumbien sowie in vielen anderen Ländern eingesetzt.

Manche Kindersoldaten waren sogar noch nicht einmal zwölf Jahre alt. In Sri Lanka werden regelmäßig Kinder aus Flüchtlingslagern entführt und zum Dienst an der Waffe gezwungen. Seit 1983 starben in einem blutigen Bürgerkrieg in dem asiatischen Inselstaat mehr als 70.000 Menschen.

In den kommenden Monaten wird die Gewalt noch weiter eskalieren, da die Regierung Sri Lankas im Januar 2008 ein Waffenstillstandsabkommen mit der tamilischen Befreiungsbewegung "Liberation Tigers of Tamil Eelam" (LTTE) aufkündigte. Denn die Regierung wollte nicht länger neutrale internationale Waffenstillstandsbeobachter in der Region haben, die Menschenrechtsverletzungen der Konfliktparteien dokumentierten. Die LTTE kämpft für einen unabhängigen Staat der diskriminierten tamilischen Minderheit.

Sie schreckt dabei weder vor Terroranschlägen, noch vor dem Einsatz von Kindersoldaten zurück. Rund 4.000 Kindersoldaten sollen heute in den Rängen der LTTE kämpfen. Die Regierung Sri Lankas setzt nicht mehr auf Gespräche mit der LTTE, sondern auf ihre militärische Zerschlagung. Dabei setzt sie auch Milizen wie die Karuna Gruppe ein, die Kinder als Soldaten kämpfen lassen. So wurden zwischen November 2006 und August 2007 mehr als 200 Entführungen von Kindern durch die Karuna Gruppe registriert.

Weder Polizei, noch Militär verhindern diese Zwangsrekrutierungen, obwohl nach dem Recht Sri Lankas der Einsatz von Kindersoldaten mit bis zu 20 Jahren Haft bestraft werden kann.

Kinder sind nicht nur als Soldaten, sondern auch als Flüchtlinge die ersten Opfer des Bürgerkrieges in Sri Lanka. Bitte appellieren Sie an Bundesaußenminister Frank-Walter Steinmeier, sich gemeinsam mit der Europäischen Union für ein Ende des Bürgerkrieges und des Missbrauchs von Kindersoldaten in Sri Lanka einzusetzen Denn Sri Lankas Kinder brauchen ein Zeichen der Hoffnung.

http://www.gfbv.de/inhaltsDok.php?id=1220&PHPSESSID=27b7f0def8e4ed54144d51d96a2aa53b

வான் குண்டுகளும் வாளாதிருக்கும் உலகமும்.

போதுமடா சாமி இந்தப் பிஞ்சுகளைப் பலியெடுத்தல்

ப.வி.ஸ்ரீரங்கன்.
23.02.2008


வான் குண்டுகளும்
வாளாதிருக்கும் உலகமும்.

உலகத்துள் ஒடுக்குமுறையாளர்களெல்லாம் ஒரு பக்கத்தில் தத்தமது தேவைகளோடு அரசியல் நடாத்த, நாம் தினமும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம், அவர்களது ஒடுக்குமுறை வியூகம் நம்மைத் துண்டம் துண்டமாக்கி அழிக்கின்றது!சிங்கள வன்கொடுமை அரசின் வான் தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணில் குண்டுமழை பொழிய எனது மழலைகள் கைகள், கால்கள் துண்டமாகியும், குடல் சிதறக் கொலையுண்டு போகிறார்கள்!

நான் மெளனித்துக் கிடக்கிறேன்.

எனது தவறுகள் என்னை அழிப்பதில் முடிகிறது.

என்னைச் சுற்றி எதிரிகள் படை சூழ்ந்துபடி "தேசமொன்று உனக்குக் கிடையாது"என்று பூண்டோடு எனது காலடித் தடங்களை அழித்தபடி முன்னேறுகிறார்கள்.

இது எனது தேசத்தின் ஊழ்வினை!

முடியவில்லை-மெளனித்திருக்க முடியவில்லை!

மனதுக்குள் ஏதோவொரு வலி-வேதனை.

யாரேறெடுத்தெமைப் பார்ப்பார்?

எந்தவொரு தேசமும் எமது அழிவை குறைந்தபட்ச செய்தியாகக்கூடக் காண்பிப்பது கிடையாது!பாலஸ்தீனத்தில், ஈராக்கில் நடப்பவை செய்தியாகும் வேகம் எனது மண்ணின் அழிவில் இருப்பதில்லை.

இந்த நிலையில், தமிழர்களின் அழிவை உலகத்து இடதுசாரிய நாளிதழ்கள்தாம் ஒரளவாவது வெளிப்படுத்துகின்றன. ஆனால், ஈழத்துத் தமிழனுக்குக் கம்யூனிசத்தின்மீதான காச்சல் இன்னும் விட்டபாடில்லை! எங்கள் வலியை, எங்கள் பார்வையில் இதோ ஜேர்மனிய இடதுசாரிய யுங்க வெல்ற் எனும் சஞ்சிகை கூறுவதைப் பாருங்கள்.

இந்த நாளிதளின் பல கட்டுரைகளை ஜேர்மனிய நகரமான காசல் எனும் நகரத்திலிருக்கும் காசல் பல்கலைக்கழக சமாதான ஆய்வகப் பிரிவு அதிகமாகச் சேகரித்து வைத்திருக்கிறது. இது இடது சாரிகளால் மட்டுமே நிகழ்ந்து. ஜேர்மனிய அதிபர்களாலோ அல்லது முதலாளிய ஊடகங்களாலோ நிகழ்ந்தது அல்ல! எமது கண்ணீரை தொடைப்பதற்காக அவர்களது எல்லைவரைப் போராடுகிறார்கள். அப்படிப் போராடிய பேராசிரியர்கள் பலர் ஜேர்மனிய அரசால் பயங்கரவாதிகளாகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில், இவர்கள் இடதுசாரியப் பாரிம்பரியம்கொண்ட முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பதே காரணமாக அமைகின்றது.





ஈழத்தின் அழிவுக்கான வித்தை இட்டுவிட்டுச் சென்றவர்கள் வட ஈராக்கில் அத்துமீறித் தாக்குதலுக்குப் போகும் துருக்கிய இராணுவத்தை மீளத் துருக்கிக்குள் வருமாறு எச்சரிக்கை செய்கிறார்கள்! துருக்கி கொசொவோவை அங்கீகரக்கிறது! அதே தருணம் குர்தீஸ் மக்களை வேட்டையாடத் தனது வன் கொடுமை இராணுவத்தை அமெரிக்க ஒப்புதலோடு வட ஈராக்கை நோக்கி ஏவிடுகிறது!

அமெரிக்க அதிபரோ ஆபிரிக்கக் கண்டத்தில் தனது கைகளால் குழந்தைகளை அள்ளிக் கொஞ்சி மகிழ்கிறார்! அற்புதமான மனிதர் புஷ் அவர்கள்! என்னவொரு கரிசனை இந்த ஏழை மக்கள் தம் வாழ்வில்?

பெனின், தான்சானியா, றுவன்டா, கானா, லிபேரியாவென்று போகுமிடமெல்லாம் அவருக்குப் பொய்க்காத வரவேற்பு, வாழ்த்து! ஆடலும் பாடலும் நிறைந்த விருந்துபசாரத்தில் புஷ் தன்னையும் இணைத்து ஆபிரிக்க மக்களுக்கு பெருங் கெளரவத்தைக் கொடுத்து, அவர்களைக் கடைந்தேற்றக் காலம் கணிக்கிறார்! மலேரியாவையும், நுளம்பையும் எதிர்கொள்ள ஆபிரிக்க மக்களுக்கு நுளம்பு வலை வழங்கும் கொடை வள்ளல் அல்லவா அவர்!

ஆபிரிக்காவில் ஜனநாயகம் மலர ஐயா புஷ் தூதுவராகச் செல்கிறார், அவர் பின்னே அவரது இரணுவம் போகத் தேவையில்லை. அது, ஏலவே அங்கே இருப்புக் கொண்டுவிட்டது. ஐயாவின் வருகையில் அகமலரும் அற்ப ஆபிரிக்கத் தேசக் குடிகள்.

என் தேசத்துக்கு ஐயா புஷ் அவர்களின் ஜனநாயகம் அவசியமில்லைப் போலும்!

இல்லையேல், அவர்கள் என் தேசக் குழந்தையின் தறித்த கைகளை எடுத்து உலகுக்கு முன் நீதி கேட்பார்கள். மழலைகளைக் கொல்லும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தை-வான்படையை ஏவிவிட்ட இராஜபக்ஷவை பின்லாடனுக்கு நிகரான பயங்கரவாதியாக்குவார்.

என்ன செய்ய? 2007 ஆம் ஆண்டு எண்ணையூற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட கானா தேசமா எனது தேசம்?

அல்லது, பிளாட்டினம், தங்கம், வைரம், யுரேனியம், செம்பு, நிலக்கரி, ஈயம், எண்ணை என்று உலகத்தின் கனிவளத் தேவைகள் அனைத்தையும் ஒருங்கே வைத்த ஆபிரிக்கக் கண்டத்திலையா எனது தேசம் இருக்கிறது?

இலங்கைச் சிங்கள அரசின் அதீத இராணுவவாத ஆட்சியை இன்னும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு என்று என் தேசத்தவன் சொல்கிறான். பிறகென்ன அது அதை நிலைநாட்டப் பயங்கரவாதப் புலியைக் குண்டுபோட்டழித்தாக வேண்டும். இதோ, ஆறுமாதப் புலி செத்துக் கிடக்கிறது. மூன்று வயதுப் புலியின் கையை உடைத்துக் கொன்றிருக்கிறது இலங்கை அரசு!-இப்போது சந்தோஷமா?

இந்த உலகம் மிகக் கெடுதியாவும், சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக-நல்ல வேஷமிட்டு, மக்களைக் காப்பதாகவும், அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள். இதற்குள் மயங்காதவர்கள் எவர்கள்?மக்களின் நல் வாழ்வுக்காக, அவர்கள் வாழும் தேசங்களை அபிவிருத்தி செய்ய உலக ஜனாதிபதி ஊர்கோலம் பூணுகிறார்-ஊர்வலமாகப் பவனி வந்தபடி!

இதன் உள் நோக்கம் ஈழத்தில் இருக்குமென்றால் நிச்சியமொரு கொசோவோவாக ஈழம் மலர்ந்திருக்கும். குழந்தைகள் குண்டடிபட்டிறக்காமல் உழைத்து மாடாகச் சாவதற்காக இன்னும் சில காலம் உயிரோடிருந்து வளர வாய்ப்பு இருந்திருக்கும்.





2003 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆபிரிக்கச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட இதே புஷ் அவர்கள் செனகல், உகண்டா முதலாகப் பிராந்திய வல்லரசான தென்னாபிரிக்கா முதல் நைஜீரியா, போட்சுவான முதலாகப் பிரயாணித்துத் தனது தேசத்துத் தொழிற்சாலைகளின் பசியைப் போக்கப் பாடுபட்டுழைத்தார். இவரோ இப்போது மீளவும் ஜனநாயகம், அபிவிருத்தியென்று பஜனைபாடியபடி மேற் சொன்ன தேசங்களுக்குப் பிரயாணிக்கிறார்.

எதற்காக எனது தேசம் அநாதையாக விடப்பட்டு, யுத்தம் நடைபெறுவதற்கு ஆயுதங்கள் வழங்கப்படுகிறது?

ஆயுதக் கம்பனிகளின் பணப் பெட்டிகளை நிறைக்க எனது தேச மக்கள் அழிந்தாக வேண்டும். அதே போல ஐரோப்பிய-அமெரிக்க மற்றும் சீனாவினது, ஜப்பானினது பக்டரிகள் பணம் பண்ண ஆபிரிக்க-அரபு தேச மக்கள் செத்தாக வேண்டும்!அவர்களின் பிராந்திய மற்றும் வலயங்கள்-கண்டங்கள் குறித்த கணிதச் சமன்பாடுகள் சரியாகவே இருக்கிறது!

சீனாவினது போட்டா போட்டியான பொருளாதார வளர்ச்சியானது சீனாவை எண்ணை-எரிபொருளுக்காக ஆபிரிக்கா நோக்கிப் பேயாக அலையவிட, அமெரிக்க ஐயாவுக்குப் பசி எண்ணை ரூபத்தில் வந்து தொலைகிறது!பிறகென்ன போட்டிக்குப் போட்டி!ஆபிரிக்காவுக்குப் படையெடுத்துப் பசி போக்க வேண்டியதுதாம்!கிளம்பிட்டார் புஷ் அவர்கள்.

கானாவில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணையின் பெறுமதி 4. 500. கோடி டொலர்களாக இருக்கிறது. இது மேலும் எண்ணையிருப்புகள் கண்டுபிடிக்கும்போது விரிந்து போகும். இதை அமெரிக்கா விட்டுவிடுமா?ஒரு கணக்குப்படி பார்த்தால் இந்த அமெரிக்காவுக்கு-உலகுக்கு வரும் ஒவ்வொரு ஐந்தாவது பரல் எண்ணையும் ஆபிரிக்காவிலிருந்தே வரும் நிலையுண்டு. இன்றைய நிலைவரப்படி அமெரிக்கா நாளொன்றுக்கு 4 மில்லியன்கள் பரல் மசகு எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து எடுக்கிறது, அல்லது திருடுகிறது!சீனாவோ 2 மில்லியன்கள் பரல் எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது! கவனியுங்கள் இறக்கு "மதி" செய்கிறது சீனா.

2002 ஆம் ஆண்டுக்கான வொஷிங்டன் திட்டமிடல் மற்றும் கணிப்பீடானது ஆபிரிக்காவிலிருந்து எண்ணை எடுக்கும் பங்கு 10 வீதத்திலிருந்து 25 வீதமாக 2015 இல் உயருமெனக் கணிப்பிடப்பட்டது. இன்றைய பொழுதில் 18 வீதமாக இது இருக்கிறது. அன்றைக்கு நடு நிலையான இறக்குமதியென்ற முக மூடியோடு திருடப்பட்ட ஆபிரிக்க எண்ணை இருப்புகள் இப்போது மிக நேரடியாகப் பறிமுதல் செய்யப்படுவதற்காகவே புஷ் ஆபிரிக்காவை வலம் வருகிறார் என்பதை எவர் இல்லையென மறுக்க முடியும்?

ஆபிரிக்காவின் எண்ணைச் சுய தேவையும் ஒரு புறம் உயர்ந்தே செல்கின்றபோதும், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியத் தேவைகளோ அந்தக் கண்டத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது படைகளை அனுப்புவதென்ற போர்வையில் ஆபிரிக்க மக்களின் பல்வகை மூலவளச் சொத்தைத் திருடுவதற்குப் பெயர்: "ஜனநாயகம்-அபிவிருத்தி"எனக் கொள்க!

அமெரிக்காவின் ஆபிரிக்கக் கொமாண்டோஸ் என்ற அவ்றிக்கோம் நான்கு நட்சத்திர ஜெனரல் வில்லியம் வார்ட்டின் கீழ் 1. 10. 2007 பொறுப்பெடுத்த பொழுதிலிருந்து இன்றுவரையும் அமெரிக்காவின் கண்ணில் பற்பல கனவுகள் ஆபிரிக்க மூலவள ரூபத்தில் வந்தபடி. ஆபிரிக்காவின் 90 கோடி மக்கள் தொகையில் 30 கோடி மக்களின் நாளொன்றுக்கான வருமானம் ஒரு டொலருக்கும் கீழ்பட்டதாகும். ஆனால், அந்த மக்களின் பல இலட்சம் கோடி டொலர்கள் பெறுமதியான மூல வளச் சொத்தோ இத்தகைய ஓடுக்குமுறையாளர்களால் திருடப்பட்டு, அமெரிக்க-ஐரோப்பியத் தேசங்களின் சொத்தாக மாற்றப்பட்டபின் தொடர்ந்து திருட்டை நிலைப்படுத்த அதே பணத்தில் அற்பச் சில்லறைகளை அந்த ஆபிரிக்கக் குடிகளுக்கு மனிதாபிமான உதவியாகப் பிச்சை போடுகிறது அமெரிக்க அதிகாரம்.

ஆனால், நமது தேசத்துக்கான கர்மவினை இந்த அமெரிக்க-ஐரோப்பிய வியூகத்தில் ஆயுத விற்பனை-இந்திய மேலாதிக்கத்தைக் கண்காணித்தல்-இராணுவக் கேந்திர ஊக்கம் என்றிருக்கும்போது, அதுவே ஒரு கட்டத்தில் இலங்கைச் சிங்கள இனவாதமாகக் குண்டு காவி வரும் வான்படை நமக்குள் குண்டுகளைக் கவிழ்க்கும்போது நமது மழலைகள் குடல் தெறிக்கக் கொலையாகிப் போகின்றார்!

இதைத் தடுப்பார் எவர்?

தேசத்தை விடுவிப்போர் எவர்?

அனைத்தும் நமது மக்களின் கைகளிலேதாம் தங்கியிருக்கிறது!

எங்கள் மக்கள் சுயமாகத் தமது கால்களில் நிற்கும் போராட்டத்தை முன்னெடுக்காதவரையும் புலிகள் செய்யும் எந்தப் போரும் நம்மை விடுவிக்காது என்பதற்கு இந்தக் கால் நூற்றாண்டான புலிகளின் போராட்ட வரலாறே போதும் படிப்பனை சொல்ல.

போதுமடா சாமி, இந்தப் பிஞ்சுகளைப் பலியெடுத்தல்!-நிறுத்துங்கோடா இந்தச் சிங்கள வான் படையை.

Monday, February 25, 2008

சாதி ஒடுக்குமுறை இருப்பதாக சித்தரிக்கிறார்கள் பார்ப்பனமணி சொல்கிறார்...

சம்பூகன்
24.02.2008

சாதிய‌ வ‌ர்ணாசிர‌ம‌ அடுக்கில் ம‌க்க‌ளை ஒருவர் மேல் ஒருவராக‌ க‌ட்ட‌மைத்து ஆக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுக்கக் கூடிய‌து 'பார்ப்ப‌னீயம்' என்னும் அருவெறுப்பான ஜனநாயக விரோத கொடுங்கோண்மை த‌த்துவ‌ம்.

இப்ப‌டிப்ப‌ட்ட ஜனநாயக விரோத‌ பார்ப்ப‌னீய‌ இந்துத்துவ‌ க‌ருத்துக்க‌ள் த‌மிழ்ம‌ணியின் த‌ள‌த்தில் விர‌விக் கிட‌ப்ப‌தைதான் சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பாக‌ எடுத்துக்காட்டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி வாய்கிழிய‌ பேசும் தமிழ்மணியின் இல‌ட்ச‌ண‌த்தை நாம் திரைகிழித்துக்காட்டினோம், அதை ப‌ற்றி இதுவரை எதுவும் பேசாமல‌ க‌முக்க‌மாக‌ இருந்து வரும் த‌மிழ்மணி த‌ற்பொழுது ஒரு ப‌திவை போட்டிருக்கிறார். அதில், தலித் மக்களும் வன்னியர் சாதியினரும் மோதிக் கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் விரும்புவதாகவும் அதற்கு எதிராக தான் "த‌லித் வ‌ன்னிய‌ர்" ஒற்றுமையை வ‌லியுறுத்துவதாகவும் ஒரு ச‌மாதான‌ தூதுவ‌ன் போல‌ புது 'கெட்டெப்'பை போட்டிருக்கிறார் தமிழ்மணி.,

"சிதம்பரம், ஸ்டாலின், மருத்துவர் அய்யா, தொல் திருமாவளவன், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரும் சிறந்த மக்கள் தலைவர்களே". என்ப‌தான‌ காமெடியும் வ‌க்கிர‌மும் க‌ல‌ந்த‌ ந‌ம் காதில் பூ சுற்றும் க‌ருத்துக்க‌ள‌ட‌ங்கிய‌ அப்ப‌திவு, எப்போதும் போல த‌மிழ்ம‌ணியின் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ முக‌த்தை தெளிவாக‌வே வெளிக்காட்டுகிற‌து.

//கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் ஒரே வளங்களுக்கு போராடுபவர்கள் என்பதாலும், வன்னியர்களது பொருளாதார நிலைமைக்கும் தாழ்த்தப்பட்டவர்களது பொருளாதார நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லையென்றாலும், வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று பரவாயில்லை என்ற நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.//

இப்ப‌டி எழுதியிருக்கிறார் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் வ‌ன்னிய‌ர்க‌ளும் ஒரே வ‌ள‌ங்க‌ளுக்காக‌ 'போராடுகிறார்க‌ளாம்', இருவருமே 'போராடுகிறார்கள்', அதுவும் எத‌ற்காக? ஊரில் இருக்கும் ஒரே வ‌ள‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்காக‌, த‌லித் சாதியை சேர்ந்த‌ இளைஞனான‌ முருகேச‌ன், க‌ண்ண‌கி என்ற‌ வ‌ன்னிய‌ர் சாதி பெண்ணை காத‌லித்த‌ குற்ற‌த்திற்காக‌ இருவ‌ரையும் எரித்து கொன்ற‌தோடு முருகேச‌னின் வீடு வாச‌லை அடித்து நொறுக்கி சூறையாடினார்க‌ளே, அதுதான் ஒரே வளத்தை பகிர்ந்து கொள்வதற்கான 'போராட்டமா'?, இதோ இப்போது சால‌ர‌ப்ப‌ட்டியில், த‌லித்துக‌ளுக்கு த‌னிக்குவ‌ளையில் தேநீர் த‌ருவ‌தை எதிர்த்து போராடிய‌த‌ற்காக ஆதிக்க‌ தேவர் சாதி வெறிய‌ர்க‌ளால் தாக்க‌ப்ப‌ட்டு உயிருக்கும் உடைமைக்கும் உத்திர‌வாத‌ம் இல்லாம‌ல் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார்க‌ளே "அது ஒரே வ‌ளத்துக்கான 'போராட்ட‌மா'".

த‌ங்க‌ளுக்கு த‌னிக்குவ‌ளை வைக்க‌க்கூடாது என்று த‌லித் ம‌க்க‌ள் போராடுவதும், அவ‌னுக்கு த‌னிக்குவ‌ளையில்தான் தேநீர் த‌ர‌வேண்டும் என்று ஆதிக்க‌ சாதியினரும் சண்டித்தனம் செய்வதும் "ஓரே வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான 'போராட்டம்'" என்கிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி, "ஈன‌ ஜாதி ப‌ற‌ப்ப‌ய‌லுக்கு ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் ப‌த‌வியா" என்று ஆறு பேரின் க‌ழுத்தை அறுத்து கூறு போட்ட‌ன‌ரே ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் அது "வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌ 'போராட்டம்' என்கிறார் இந்த தமிழ்மணி ஆதிக்க சாதியினரான வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவதும் 'போராட்ட‌மாம்', அதற்கு எதிராக‌ தாழ்த்த‌ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்துவ‌தும் 'போராட்ட‌மாம்' கூறுகிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி.

இந்த மோசடித்தனமான கருத்தை வைத்துக்கொண்டுதான் ஜனநாயக பஜனை பாடக் கிளம்பியிருக்கிறது தமிழ்மணி கும்பல். ஒருவேளை இப்படி உரிமைக்காக போராடுவதையும், உரிமையை மறுத்து ஒடுக்குவதையும் ஒன்றாக 'ஒரே' செயல் போன்று பார்ப்பதுதான் ஜனநாயகம் என்று சொல்லவருகிறாரா தமிழ்மணி.

//பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குபவர்களாக வன்னியர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

ஆனால், திருமாவளவனும் பாமகவும் கொண்ட ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி, அப்படிப்பட்ட போட்டிகளை குறைத்து அதன்மூலம் வரும் வன்முறையை குறைத்து ஒரு கூட்டணியை கிராம அளவில் ஏற்படுத்த முயன்று வருகிறது.//

அதே ச‌ம‌ய‌த்தில் வ‌ன்னிய‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஒடுக்கிறார்க‌ள் என்ப‌தும் உண்மையாம், வ‌ரலாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ "திருமா இராம‌தாசின்" கூட்ட‌னிக்கு பிறகு வ‌ன்முறையை குறைக்க‌ முய‌ல்கிறார்க‌ளாம்.

இந்த "வ‌ர‌லாற்று முக்கியத்துவமான‌ கூட்ட‌னி" வ‌ன்முறையை எப்ப‌டி குறைக்கிறார்க‌ள் என்ப‌தற்கு மிக‌ச் சிற‌ந்த‌ உதார‌ண‌ம்தான் "க‌ண்ணகி-முருகேச‌ன் காத‌ல் ச‌ம்ப‌வம்", க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம் புதுக்கூரைப்பேட்டை கிராம‌த்தை சேர்ந்த‌வ‌ர் முருகேச‌ன், பொறியிய‌ல் ப‌ட்ட‌ ப‌டிப்பு முடித்த‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட சாதியைச் சேர்ந்த‌ இளைஞ‌ர், அதே ஊரின் ஊராட்சி ம‌ன்ற‌ த‌லைவ‌ரின் ம‌க‌ள் க‌ண்ணகி வன்னிய சாதியை சேர்ந்தவர், இவ‌ர்க‌ள் இருவ‌ரும் சாதி மீறி காத‌லித்த‌ கார‌ண‌த்தால் க‌ண்ண‌கியின் த‌ந்தையான‌ துரைசாமியும், அவ‌ர‌து அண்ண‌ன் மருதுபாண்டியனும் ம‌ற்றும் சில‌ரும் முருகேச‌னையும் அவ‌ர‌து த‌ந்தையையும், சித்த‌ப்பாவையும் ஊருக்கு வெளியே இருக்கும் முந்திரிக்காட்டுக்கு க‌ட‌த்திச் சென்ற‌ன‌ர் அங்கே கைக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தையின் க‌ண் முன்னாலேயே முருகேசன் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ விஷ‌ம் கொடுத்து ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார், அத‌னை பார்த்து க‌த‌றிய‌ழுத‌ க‌ண்ணகிக்கும் சாதி பெருமையை குலைத்த‌ குற்றத்திற்காக க‌ட்டாய‌மாக‌ விஷ‌மூற்ற‌ முய‌ன்ற‌ன‌ர் சாதிவெறிய‌ர்க‌ள் அவ‌ர் ம‌றுக்க‌வே அவ‌ர் காதிலும் மூக்கிலும் விஷ‌த்தை‌ ஊற்றி சாக‌டித்துவிட்டு, இறுதியாக‌ இருவ‌ரையும் எரித்து சாம்ப‌லாக்கிவிட்ட‌ன‌ர்.

இது ந‌ட‌ந்த‌து, 8.7.2003ல், சாதி வெறிபிடித்த‌ ம‌னித‌த‌ன்மைய‌ற்ற‌ இந்த‌ ப‌டுகொலையை கேள்விப்ப‌ட்ட‌ திருமாவள‌வ‌ன் முருகேச‌ன் த‌ந்தை சாமிக்கண்ணுவை தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டு ஆறுத‌ல் தெரிவித்த‌தோடு, அவ‌ரை சென்னைக்கு அழைத்து வ‌ந்து ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பை ந‌ட‌த்தி இந்த‌ கொடும் நிக‌ழ்வை வெளி உல‌குக்கு தெரிய‌ச் செய்தார்.

இருப்பினும் கூட‌ இந்த‌ 'ஜ‌ன‌நாய‌க‌' நாட்டின் காவ‌ல்துறை வ‌ன்னிய‌ர் சாதி வெறிய‌ர்க‌ளுக்கு ஆதரவாகவே‌ செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌து, முருகேச‌னை த‌லித்துக‌ளே கொலை செய்துவிட்ட‌தாக‌ வ‌ழ‌க்கு ப‌திந்த‌ காவ‌ல்துறை, பிள்ளையை பறிகொடுத்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தைக்கு கொலைகார‌ ப‌ட்ட‌த்தையும் கொடுத்த‌து. இத‌னை அறிந்த‌ சென்னை உய‌ர்நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் இரத்தின‌ம்(மேல‌வ‌ள‌வு வ‌ழ‌க்கை ந‌ட‌த்திய‌வ‌ர்) இந்த‌ வ‌ழ‌க்கை சி.பி.ஐ விசாரிக்க‌ வேண்டும் என்று ம‌னுதாக்க‌ல் செய்தார்.

இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளினிடையேதான் "த‌மிழ் பாதுகாப்பு இய‌க்க‌ம்" என்ற‌ பெய‌ரில் திருமாவும் இராம‌தாசும் இணைந்த 'வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' 2005ல் அமைந்த‌து. இத‌ன் பிற‌கு திருமாவின் போக்கில் மாற்ற‌மேற்ப‌ட்ட‌து.

முருகேச‌னின் சித்தாப்பாவிற்கு தொலைபேசி செய்த‌ திருமா "கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்" என்று ச‌மாதான‌ம் பேசினார். மேலும் "அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்" என்று கூறி 'வரலாற்று சிறப்புமிக்க கூட்டனியின்' இரகசியத்தையும் விளங்கவைத்தார் திருமாவளவன்.

ஆனால் இராம‌தாசு எப்ப‌டி ந‌ட‌ந்து கொண்டார்? இதோ கூறுகிற‌து த‌லித் முர‌சு..

//பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் தலைவர் மருத்துவர் ராமதாசும் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். மறுபுறம் சாதி மறுத்து காதலித்த தலித் இளைஞரை கொலை செய்த வன்னியர்களுக்கு அடைக்கலமும் அரவணைப்பும் தருகின்றனர்.//

எவ்வ‌ள‌வு 'வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' இந்த‌ வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னிக்குத்தான் வ‌க்கால‌த்து வாங்குகிறார் த‌மிழ்மணி.

அதுவும் எதற்காக‌? சாதி ஒழிய‌ வேண்டும் என்கிற‌ அக்க‌றையினாலா? நிச்சயமாக இல்லை ஒரு பார்ப்பன வெறியன் சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பானா என்ன? நமது அம்பலப்படுத்தல்களுக்கு பிறகு சரிந்து போன தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி, முற்போக்காளர்களை மோதவிடும் தனது திட்டத்தில் தொடர்ந்து ஈடுபடத்தான் இப்படியொரு பதிவே தவிர வேறு எந்த சிறப்புக்காரணமும் இல்லை."அய்யங்கார் என்று சொல்லிக்கொள்வ‌த‌ற்கு என‌க்கு உரிமையில்லையா?" என்று இணைய‌த்தில் அங்க‌லாய்க்கிறார்க‌ளே ந‌ங்க‌ந‌ல்லூர் நாம‌க‌ட்டிக‌ள், அது போன்ற பார்ப்பன கொழுப்பை வடிய வடிய காய்ச்சுவதற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து கைகோர்த்து நிற்கிறார்களே பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அவர்களை உடைத்து மோத‌விட்டு த‌ன‌து ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்காகத்தான் இப்படி அதிர்வேட்டுக்களை கொளுத்திக் கொண்டிருக்கிறார் பார்ப்பனமணி. அத‌ற்கென‌தான் பார்ப்ப‌ன‌ வெறி பிடித்த பாசிஸ்ட் ஜெய‌லலிதாவை கூட‌ ம‌க்க‌ள் த‌லைவ‌ர் என்று சொல்லி ஒரு க‌த‌ம்ப‌க்கூட்ட‌னியை க‌ட்டிய‌மைக்க‌ முய‌ல்கிறார் த‌மிழ்ம‌ணி.

மேலும் எழுதுகிறார் த‌மிழ்ம‌ணி..

//ஏன் ஒருவரை ஒடுக்குபவனாகவும் மற்றவரை ஒடுக்கப்படுகின்றனவராகவும் சித்தரிக்கின்றனர்?//

மேலே வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவ‌து உண்மைதான் என்று எழுதிய‌ த‌மிழ்ம‌ணி நாம் அச‌ந்துவிடும் நேர‌மாக‌ பார்த்து "ஒடுக்குப‌வ‌னாக‌வும், ஒடுக்கப்ப‌டுகிற‌வ‌னாக‌வும் சித்த‌ரிக்கின்ற‌னர்" என்று எழுதுகிறார், அதாவது தலித் ம‌க்க‌ள் உண்மையில் ஒடுக்கப்படவில்லை கம்யூனிஸ்ட்கள்தான் அவர்கள் ஒடுக்கப்படுவதாக சித்த‌ரிக்கிறார்கள் என்று கூறுகிறார் பார்ப்பனமணி. எவ்வ‌ள‌வு வ‌க்கிர‌ம் பிடித்த‌ க‌ருத்து இது என்று நான் உங்க‌ளுக்கு சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. இந்த பார்ப்பனமணிக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் 'பார்ப்பன ஆதிக்கம்' இருப்பதாக சித்தரிக்கின்றனர் என்று கூட சொல்வார். இதனை அவருக்கு நாம் கேள்வியாக கூட எழுப்பலாம், தமிழ்மணி கூறட்டுமே இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கிறதா இல்லையா, அதனை எப்படி எதிர்கொள்வது என்று, அவரை புரிந்து கொள்வதற்கு நமக்கு அது ஏதுவாக இருக்கும்.

இப்ப‌டி நீண்டு கொண்டு போகும் க‌ட்டுரையில் இந்த‌ நாட்டில் அமைதி த‌வ‌ழுவ‌தாக‌வும் ஜ‌ன‌நாய‌க‌ம் பூத்துக் குலுங்குவ‌தாக‌வும், அத‌னை குலைக்க‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஆயுத‌ம் ஏந்த‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் தூண்டுவ‌தாக‌வும் "அமைதி குலைந்து விடுமென்று" பார்ப்ப‌ன‌ம‌ணி துடித்துப்போகிறார்.

உண்மைதான் இன்று சால‌ர‌ப்ப‌ட்டி கிராம‌த்தில் கூட‌ அமைதிதான் நில‌விக்கொண்டிருக்கிற‌து, தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்களை அடித்துவிர‌ட்டிவிட்டு ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் தான் ம‌ட்டும் த‌னியே அனுப‌விக்கும் அமைதி... இந்த‌ அமைதியைத்தான் விரும்புகிறார் போலும் த‌மிழ்ம‌ணி, எம‌து ம‌க்க‌ளை ஊருக்கு வெளியில் விர‌ட்டி சேரியில் அடைத்த‌ பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறிய‌ன் வேறு எதை விரும்புவான்.

இந்த பதிவின் பின்னிணைப்பாக, அமைதி, அஹிம்சை தவழும் இந்த ஜனநாயக நாட்டின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் மேலவளவு கொலை பற்றிய, தலித் முரசுவின் நீண்ட செய்தி கட்டுரையை கீழே இணைத்திருக்கிறேன்.

அதன் முன்னுரை மட்டும் கீழே இருக்கிறது, கட்டுரையை இணைப்பில் சென்று படிக்கவும்!!

ஜாதி இந்துக்கள் எறும்புக்குக்கூட தீங்கிழைக்காதவர்கள்; தாங்கள் போடும் கோலங்கள்கூட எறும்புகளுக்குத் தீனியாக வேண்டும் என்று நினைப்பவர்கள்; தாங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் காகத்திற்கு சோறு ஊட்டிவிட்டே சாப்பிடுவார்கள்'' "இந்து இந்தியா'வின் புகழ் இவ்வாறு வெளியுலகில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், "காந்தி தேச'த்தில் தீண்டத்தகாத மக்களின் உண்மை நிலை என்ன என்பதற்கு ஒரு சான்றுதான் மேலவளவு படுகொலை.

ஆம், இனவெறி இந்தியாவின் "அகிம்சை' முகம் இது!படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரையும் எந்தளவுக்கு சாதி இந்துக்கள் மூர்க்கத்தனமாக வெட்டிக் கொன்றனர் என்பதை, இச்சமூகத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் நீதிமன்றத் தீர்ப்புரைகளை (முருகேசன் வெட்டப்பட்டதை மட்டும்) அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.



நன்றி சம்பூகன்