தமிழ் அரங்கம்

Saturday, December 12, 2009

மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்

ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை

வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது……

ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து

திணிக்கப்பட்ட துப்பாக்கியும்

கூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்றிப் பிளந்து

மோதிமடியவைத்த நாசக்கொடியும்

சிக்கிச் சிறகொடிந்து சிறைப்பட்ட புறாவுமாய்

ஜயகோ யாருக்காய் மடிந்தேன் எனக்கேட்கிறான்…

எத்தனைஆயிரம் மடிந்தனரென்பதே

மொத்தமாய் கல்லடுக்கி மூடிக்கிடக்கிறது

தேசத்திற்காய் மோதுங்களென கட்டளையி..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

கடந்தகாலத்தில் எம்மக்களுக்கு எதிரான வரலாற்றை இருட்டில் வைத்திருப்பதே, இன்று பலரின் "இடதுசாரிய" பம்மாத்து அரசியலாக உள்ளது. மக்களை அவர்களின் சொந்த விடுதலைக்கு முன்னின்று வழி நடத்த முனையாது செயல்பட்டவர்கள், அதை மூடிமறைப்பதே இன்றைய புரட்சிகர அரசியல் என்கின்றனர். இதை நாகரிகமான பண்பான அரசியல் நடைமுறையுடன் கூடிய தோழமை என்கின்றனர்.


மக்களுக்கு எதிரான கடந்த வரலாற்றைப் பற்றியும், அதற்கு எதிரான போராட்டம் பற்றியும், எந்த அபிப்பிராயமுமற்ற சிலர் "மார்க்சிய" ஆய்வாளர்களாக நீடிக்கின்றனர். பொதுவில் இறுகக் கண்ணை மூடிக்கொண்டு இருக்க பலர் முனைகின்றனர். மறுபக்கத்தில் "இடதுசாரியம";, "மார்க்சியம்" என்று, அரசியல் வித்தை காட்ட முனைகின்றனர்.

சமூகத்தை இருட்டில் நிறுத்தி வைத்து, மார்க்சிய போதனை பற்றி ஆருடம் கூறுகின்றனர். இதற்கமைய மார்க்சிய வித்தை காட்ட கோஸ்;டி சேருகின்றனர். கடந்தகாலத்தில் நாம் எதை செய்தோம், அதை எப்படிச் செய்தோம் என்பதை கேள்விக்குள்ளாக்காத "மார்க்சியம்" பற்றி மட்டும், எம்மையும் பேசக் கோருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், இதை அம்பலப்படுத்துவது அவசியமானது. மக்களை வரலாற்று அறிவற்றவராக வைத்திருக்கவே திடீர் மார்க்சிய.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, December 11, 2009

”இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பம். என்ன நடக்கிறது எண்டு.”: நேர்காணல் தொகுப்பு : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

கச்சாய் எங்கள் சொந்த இடம். எனக்கு ஆறு சகோதரர்கள். மூன்றாவது சகோதரன் சாவகச்சேரி புலிகளின் பொறுப்பாளராக இருந்த கேடியால் சுட்டுக் கொல்லப்பட்டவர். எங்களுடைய குடும்பம் ரெலோக் குடும்பம் என்ற காரணத்திற்காக 1985ம் ஆண்டு இந்தக் கொலை நடந்தது. மற்றைய சகோரதங்கள் சாவகச்சேரியிலும் பளையிலும் இருந்தவர்கள். அவர்களுடனும் சிலகாலங்கள் தங்கி வாழ்ந்துள்ளோம், இது புலிகளுக்கு பயந்து வாழ்ந்தகாலம். இதன் பின்னர் நாங்கள் சாவகச்சேரியை சொந்த இடமாக ஆக்கிக் கொண்டோம். புலிகளின் காலத்தில் எல்லாம் நாங்கள் சாவகச்சேரி ஆட்கள் ஆகிவிட்டோம். எமக்கு படிப்பதற்கு காசு இல்லை. தொழில் இல்லை. அப்பா தோட்டம் அல்லது கூலி வேலைதான் செய்து பிழைப்பு நடக்கும். என் தம்பி ஜந்தாம் வகுப்பு படிக்கிற காலத்தில் புலிகளின் முகாம்களுக்கு போய் வேலை செய்வார். அந்த நேரத்தில் நல்ல காசு, நல்ல சாப்பாடு கிடைக்கும். எங்கள் குடும்பத்திற்கும் சாப்பாடு கொண்டு வருவார்.

ஆனையிறவு சண்டையுடன் தம்பி புலிகளோடதான். அதற்குப் பிறகு தம்பியுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவர் எங்கேயெனத் தெரியாது. இந்தக்காலம் எங்களுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை. நாங்கள் கச்சாய் அங்க இங்க என்று அலைந்து திரிந்தோம். எங்கேயாவது ஏதாவது தொழில் துறை கிடைக்குமா அல்லது தோட்டம் செய்ய இடம் கிடைக்குமா என்பதுதான் எங்கட ஏக்கம். அப்பா சாவகச்சேரியில் சந்தை வேலைகளில் கொஞ்சம் காசு உழைப்பார். வேலையில் சாப்பாட்டு சாமான்கள், சந்தை சாமான்கள் வரும். இப்படியே காலம் போய்விட்டது. 1994 களில் சாவகச்சேரியில் இராணுவம் புகுந்து சுடவும் குண்டுபோடவும் தொடங்கி விட்டது. ஒருநாள் அப்பா வீட்டுக்கு வரவில்லை. எங்களுக்கும் அப்பாவிற்கு என்ன நடந்ததென தெரியாது. இந்தக்காலத்தில சாவகச்சேரியில கடைகளுக்குள் சில உடல்களைப்போட்டு எரித்தவர்கள். அதிலதான் எங்கட அப்பாவும் என்று.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொல்ல வைத்தது, அசோக்கும் குமரனும் தலைமையிலான புளட் (பகுதி 2)

சுழிபுரம் படுகொலை நிகழ்த்தப்பட்டது 25 ம் திகதி கார்த்திகை மாதம் 1984 ம் ஆண்டு.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. ஆனால் அதனை மறுத்து துண்டுப்பிரசுரம் வெளிவருகின்றது.


புளட்டின் கொலைகளையும் அதன் மக்கள் விரோத அரசியலையும் கொலைகளுக்கும் அராஜகங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் பொறுப்பான நபர்களையும் அம்பலப்படுத்தி உமாமகேஸ்வரனின் தலைமையையும் நிராகரித்து 15 ம் திகதி மாசி மாதம் 1985 ம் ஆண்டு தளத்திலும் பின்தளத்திலும் இருந்த போராட்ட சக்திகள் தமது போராட்டத்தின் இறுதி நடவடிக்கையாக தம்மை "தீப்பொறி" என அடையாளப்படுத்திக் கொண்டு தமது வெளியேற்றத்தையும், தமது அரசியல் நிலைப்பாடுகளையும், தமது தற்காலிக தலைமறைவு வாழ்வையும் தமது வெளியீடான "தீப்பொறி" பத்திரிகை மூலமாக அறிவிக்கின்றனர்.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.


தள அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்த முன்னணி தோழர்களின் போராட்டம் இவர்களை நோக்கி மேலும் உத்வேகப்பட்டது. இவர்களின் மவுனங்களும் தட்டிக்கழிப்புகளும் கலைந்ததாயில்லை.


தீப்பொறி தனது வெளியேற்றத்தை அறிவித்து (15.02.1985) ஏறக்குறைய இரண்டரை மாதத்தின் பின்னால் புதியதோர் உலகம் (தளத்தில் அரசியலுக்கு ...
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, December 10, 2009

நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்…? நண்பர்கள் யார்…?

சுயநலம் மனிதனோடு பிறந்தது. ஏதோ ஒருவகையில் எல்லோருடைய சிந்தனையிலும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. நான், எனது, என் குடும்பம், என் உறவுகள் என்ற எண்ணமும் செயற்பாடும் மனித சிந்தனையோடு மேலோங்கி நிற்கின்றது.

இன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.


தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் நேர்மையோடு தன் கடுமையான உழைப்பால் முன்னேறும் மனிதனால் தான் சமூகத்தையும் பாதுகாக்க முடியும். அவனால் தான் இன்னொரு மனிதனுடைய உழைப்பையும், அவன் வாழ்க்கைச் சிரமத்தினையும் புரிந்து கொள்ள முடியும். வேலையெதுவும் இன்றி தொலைபேசியிலும், கம்பியூட்டரிலும்,....... ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மக்கள் விடுதலை இராணுவமும், புதிய ஜனநாயக கட்சியும் வைக்கும் அரசியல்

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பெயரில், சமகாலத்தில் இரண்டு முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது.

1. திடீர் மார்க்சியம் பேசியபடி ஆயுதப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.

2. மார்க்சியம் பேசியபடி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி உருவாக்கம் பற்றி பேசுகின்றது.

சமகாலத்தில் எழுந்துள்ள இவ்விரண்டு அரசியல் போக்குகளும், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைக்கு முரணானது. பேரினவாத சுரண்டும் பாசிச அரசுக்கும், சுரண்டும் வர்க்கங்;களுக்கும் எதிராக மக்களை அரசியல் மயப்படுத்தும் அரசியல் கடமையை, இவ்விரண்டு வழிகளும் நிராகரிக்கின்றது. குறுக்கு வழியில் மக்களை சிந்திக்கவும், செயற்படவும் கோரும் அரசியலாகும்.

பாசிச அரசின் யுத்த குற்றங்களாகட்டும், இன்றைய இனவாத வடிவங்களாகட்டும், அதன் தேர்தல் நாடகங்களாகட்டும், மக்களை அதன்பால் அரசியல்மயப்படுத்துவதே மைய அரசியல் வடிவமாகும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான ஒரு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, December 9, 2009

மறைக்கபட்ட உண்மைகள்- 4

இலங்கையின் வட கிழக்கை மையமாக வைத்துக் காந்தீயம் என்ற ஒரு சமூக சேவை அமைப்பை1977 ம் ஆண்டு எஸ. எ. டேவிட் ஐயாவின் தலைமையில், வவுனியாவைத் தலைமையகமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பொதுச் செயலாளராக Dr. இராஜசுந்தரம் உப தலைவராக அப்புகாமி என்ற சிங்கள இனத்தைச் சார்ந்தவரும், உப செயலாளராக மன்னார் முஸ்லீம் இனத்தவர்;, மற்றும் எல்லா மாவட்டத்தைச் சாந்தவர்கள் இணைத்து நிர்வாகச் சபையையும் உருவாக்கினார்கள்.வட கிழக்கப் பகுதிகளில் அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வீயலை உருவாக்குவது. சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தையும்,பாட்டாளிவர்க்கப் போராட்டத்தையும் நடத்துவதற்கும் மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்குவது,பாலர் பாடசாலைகளை நடத்துவது போன்ற பல திட்டங்களை வைத்து காந்தீயம் உருவாக்கப்பட்டது. யாழ் மக்கள் மீது மலைய மக்கள் மத்தியில் உருவான தப்பு அபிப்பிராயத்தை போக்குவதற்கு அம் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும், அதுபோல் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா?

இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழியவேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம், என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.


தோழர்களே! இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா?அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும்.


ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மிக நல்ல அரசியல் ஜோக்கும், அரசியல் சேறடிப்பும்

"இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் (என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்களோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தகாலகட்டத்தில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள்."

Tuesday, December 8, 2009

யாழ். விதவைகள்

யாழ். விதவைகள்: கவனிக்கப்படாமலே உருவாகிவரும் மற்றுமொரு சமூகம்
மதியம் தாண்டியும் அந்த வரிசை அசையாது நின்ற இடத்திலேயே நிற்கிறது. பெரும்பாலான பெண்களின் முகங்களில் இனி ஏதுமில்லையென்ற வெறுமை மட்டுமே பரவிக்கிடக்கிறது.


உள்ளூர் உபதபாலகத்தில் வழங்கப்படப்போகும் அரசின் உபகார உதவிக்கொடுப்பனவிற்காகவே அந்த விதவைகள் காத்திருக்கின்றனர். உள்ளூர் மக்களால் ‘பிச்சைக்காசு’ என்றழைக்கப்படும் அந்த உதவித்தொகை உண்மையிலேயே அரசாங்கம் போடும் பிச்சைதான் என்று சொன்னாலும் அது மிகைப்படுத்தல் அல்ல.


கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் "நேர்மை" (பகுதி 1)

தீப்பொறி தன்னுடைய உட்கட்சிப் போராட்டத்தின் இறுதியில் கொலைக்கரங்களிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னமேயே, தளத்தில் மத்திய குழுவிலிருந்த அசோக் குமரன் போன்றோர்களை நோக்கி தள அமைப்புக்களின் நிலைப்பாடுகள் கோபக்கனலாகியிருந்தது. தள அமைப்புக்களானது தளத்தில் தங்கள் முன்னால் நடமாடிய மத்தியகுழுவின் தளப் பிரதிநிதிகளை எல்லாவிதமான புளட்டின் அராஜகங்களுக்கும் பதில் தர வேண்டிய நிலையில் நிறுத்தி போராடிக் கொண்டிருந்தது.


பதில் சொல்லக் கடமைப்பட்ட மத்தியகுழு உறுப்பினர்களான அசோக், குமரன் போன்றோர்கள் தங்கள் சார்புத்தன்மையை தங்கள் அரசியல் முகங்களை மறைத்தபடியே தான் தொடர்ந்தும் இருந்தனர். அதுவா இதுவா என்று பிடிகொடுக்காத இரகசியப் போக்கில் இவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். தள அமைப்புகள் மத்தியிலோ தமது சக தோழர்களுடனோ அல்லது மக்கள் மத்தியிலோ வெளிப்படையான விவாதங்களை எதிர்கொள்ளாமல் அது ஒரு மத்தியகுழு விவகாரம் என்ற போக்கில் தமக்கிடையில் பொத்தி கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். வெளியில் தள அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களை நோக்கி மக்களின் ஆவேசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெருக்கடிகள் கேள்விகள் முறிவுகள் விட்டு வெளியேறுதல் மூலம் புளட் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருந்த அதேவேளை புளட்டின் ஆயுதககுழுவின் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, December 7, 2009

எனது இயக்க இலக்கம் 1825, வரலாற்றை திரிக்கும் அசோக்கிடம் சில கேள்விகள்

தற்போது இனியொருவில் வெளியான றயாகரன் மீதான சேறடிப்புக் கட்டுரை தொடர்பான எழுத்துக்களையும் அதற்கான பதில்களையும் அவதானமாகப் பார்த்துவருகின்றேன். இதில் என்ன வேடிக்கை என்றால் சமூகம் சார்ந்தவர்கள் யார் என்பது பற்றி இடையில் குறுக்கிட்டு எழுதும் நாவலனின் எழுத்துக்கள் தான்.

முதலில் விவாதத்தை நடத்துங்கள் அந்த விவாதத்தின் முடிவில் சமூகம் சார்ந்தவர்கள் யார் எனவும் சமூக அக்கறை கொண்டவர்கள் யார் எனவும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.

விவாதத்தை ஆரோக்கியமாக நடத்தும்போது இடையில் சேறடிப்புகளை தவிருங்கள். நாவலன் உங்கள் மீது ஒரு வினா கடந்த பல வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்தியப் பிரயாணத்தின் பின்பான உங்கள் மாற்றம் தான் இவை.

நண்பர் றயாகரனும் நண்பர் அசோக்குக்கும் இடையிலான விவாதம் என்பது என்னைப் பொறுத்தவரையில் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும், கடந்தகால வரலாற்றின் மீதான விவாதமாகவே பார்க்கப்படவேண்டியது அவசியம். இந்த வரலாற்று விவாதத்தில் பங்குபற்றுவதற்கு ஈழ போராட்டத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு நபர்களுக்கும் உண்டான வரலாற்றுக் கடமை. அதன் அடிப்படையில் நானும் இதனுள் நுழைகின்றேன்.

முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்

நான் யாழ் மாவட்டத்தை ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சிந்தியகுருதியெலாம் செங்கம்பளமாய் விரித்துப்போட்டபடி.......

எழுந்திடுவோம் எனும் துணிவு இதயத்தே துளிர்த்தது
வெந்து புண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்தது
மனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியது
சாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்..தப்பிய
பிள்ளைகள் உடலெங்கும் ரவைகளாய்
ரணத்தின் பொழுதுகளிலும்
துரும்பைத்தன்னும் அசையென மனிதம் உறுத்தாதிருப்பது எப்படி......

கனத்துவெடித்து கதறும் முனகலிலும்

சினத்தை தூண்டும் சிறுமையில் எப்படிவாழ முடிகிறது......
இனத்தின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, December 6, 2009

சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


அந்த குற்றக் கும்பலுடன் தான் தொடர்ந்து கூடி அரசியல் செய்தவர். இது போன்று மற்றைய இயக்கங்களுடன் கூட, இதே அரசியல் தான். மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மக்கள் முன் கொண்டு வராது சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்து அவர்களுடன் கூடிக் குலாவியவர். இந்த நிலையில் தன்னை அரசியலில் நிலை நிறுத்த, வேறு சிலரின் துணையுடன் இடதுசாரிகளை இறக்குமதி செய்தவர். அப்படி இடதுசாரிகளை இறக்க உதவியவர்கள், இவரின் டக்ளஸ் வரையான இடதுசாரிய அரசியல் பம்மாத்துகளை உறவுகளையும் புரிந்து கொண்ட யாரும் அவரோடில்லை.

இப்படிப்பட்ட இவர், அன்று காடு மேடு எல்லாம் தேடி பிடித்துவந்தவர்களைக் கொன்று புதைத்த போது, அதை தட்டிக்கேட்க அக்கறையற்று அதற்கு துணை நின்றவர்தான் இந்த "இனியொரு" அசோக். சரி அந்த இயக்கத்தை விட்டு வெளிவந்த பின், அதை மக்கள் முன் சொன்னது கிடையாது. ஆனால் 20 வருடமாக "இடதுசாரி" அரசியல் வியாபாரம் மட்டும் செய்கின்றார்.

இப்படிப்பட்ட...
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈ.என்.டி.எல் எவ் --- பாசிசவாதிகளின் சித்திரவதைகள்


நான் அவர்களைக் கடந்து போகும்போது இந்திய இராணுவத்தினர் எனது தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு என்னிடம் திருப்பித் தந்தனர். சில நிமிடங்களின் பின் 2 இளைஞர்கள் என்னிடம் வந்து மறுபடி தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு திருப்பித் தராமல் தாங்களே வைத்துக் கொண்டனர். பின்னர் தங்களைத் தொடர்ந்து வரும்படி என்னைப் பணித்தனர்.

அவர்கள் உத்தரவிட்டபடி நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அவர்களுடன் இருந்த இந்திய இராணுவத்தினர் நான் அவர்களுடன் வருவது பற்றி எதுவும் கதைக்கவில்லை.

இருட்டும் நேர....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்