தமிழ் அரங்கம்

Thursday, October 5, 2006

பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்- பகுதி ஐந்து

பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்- பகுதி ஐந்து

பகுதி ஒன்று பகுதி இரண்டு

பகுதி மூன்று பகுதி நான்கு


ரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க வேண்டும் என்பதே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும். இதுவே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியாக வழிநடத்தியிருக்கும். தரப்படுத்தலை எந்தவகையில் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


1. இனவாத இனப்பிளவை கொண்டுவரும் தரப்படுத்தும் முறையை எதிர்த்து, பல்கலைக்கழக தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கு என்ற கோரியிருக்க வேண்டும்.


2. பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை உயர்த்தக் கோரியிருக்க வேண்டும்.


3. இலங்கை தேசிய வளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கு ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை கோரியிருக்க வேண்டும்.


4. உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துக்கான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இணைந்த அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் கல்வியை முன்வைத்து இருக்கவேண்டும்.


5. முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில் பின் தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில் சமூக பொருளாதார சூழலை உருவாக்க போராடியிருக்க வேண்டும்.


இந்த கோரிக்கை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் கூட இதுவே பொது கோசமாயிருக்க வேண்டும்.


1. இனம் சார்ந்த இனவாத அடிப்படையிலான தரப்படுத்தல் முறையை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


2. பிரித்தாளும் குறுகிய இன அரசியலை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


3. இன ஐக்கியத்தை இனம் கடந்து முன் வைத்திருக்க வேண்டும்.


4. இன அடிப்படையிலான சமுதாயத்தின் திட்டமிட்ட பிளவுகளை வரலாற்று ரீதியாக அடையாளம் காட்டி, அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


5. ஆதிக்க வர்க்கங்களின் இன வர்க்க நலன்களையும் நோக்கத்தையும், தெளிவுபடவே இனம் காட்டி அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


ஆனால் இதை தமிழ் மக்களும் சரி, சிங்கள மக்களும் சரி செய்யவில்லை. இலங்கையில் எந்தக் கட்சியும் இதை முழுமையாக கொண்ட போராட்டத்தை நடத்தவில்லை. கட்சிகள் இந்த பிளவில் குளிர்காய்பவர்களாக இருந்ததால், இந்த பிளவை வீங்கவைத்தனர். இதன் எதிர்நிலைத் தன்மையில் ஒருபுறம் சிங்கள மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. மறு தளத்தில் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இன அடிப்படைவாதம் சமூகங்களை இனங்களாகப் பிளந்து படிப்படியாக ஒரு யுத்த தன்மைக்குள் நகர்த்தின. இதனால் தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் முந்திய சிங்கள இன நிலைக்கு தாழ்ந்து மறுக்கப்பட்டதுடன், தமிழரின் வாழ்வு மறுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த காலகட்டம் என்பது, ஒரு வரலாற்று நீட்சியாக இருந்துள்ளது. ஆனால் இதை மறுத்த தமிழ் தேசியம் தமிழர்கள் தமது ஒடுக்குமுறையை பல்கலைக்கழக அனுமதியில் இருந்து விளக்கியதில் இருந்தே, போராட்டத்தில் பிற்போக்கான கூறு வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தது. சிங்கள இனவாத அரசு தரப்படுத்தலை கொண்டு வந்த போது, இனவாதமே அதன் அடிப்படையாக இருந்தது. இதை தமிழர்கள் அதே இனவாதத்துடன் உள்வாங்கி எதிர்த்தது என்பது, எமது போராட்டத்தின் ஒரு திசைவிலகல்தான். உண்மையில் ஜனநாயகபூர்வமாக சிந்திப்பவன் ஒட்டு மொத்தமாக சகல மாணவர்களையும் இனம் கடந்து பார்த்திருக்க வேண்டும். அதை குறுந் தமிழ் தேசியம் ஒருநாளும் செய்யவில்லை.


உண்மையில் பல்கலைக்கழக அனுமதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை எல்லையற்றது. 1942 இல் பல்கலைக்கழகத்தில் ஒட்டு மொத்தமாக கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கை 904யாக இருந்தது. இது 1988-89 இல் 29781 யாக மாறியது. 1998 இல் இது 32000 மாக மாறியது. ஆனால் பல்கலைகழக அனுமதி கோரி 1960 இல் 5277 பேர் விண்ணப்பித்தனர். 1969-70 இல் 30445 பேர் விண்ணப்பித்தனர். இது 1995 இல் 70 000 மாக மாறியது. ஆனால் பல்கலைக்கழக அனுமதி 1960 இல் 1812 பேருக்கும், 1969-70 இல் 3451 பேருக்குமே, 1995 இல் 8000 பேருக்கே கிடைத்தது. பல்கலைக்கழக தகுதியுடைவர்களில் கிடைக்கும் எண்ணிக்கை ஆழமாக குறைந்து வருகின்றது. பல்கலைக்கழகம் செல்லும் தகுதி உடையவர்களில் பல்கலைக்கழகம் செல்வது 1970 இல் 34 சதவீதமும், 1975 இல் 26 சதவீதமும், 1980 இல்12 சதவீதமும், 1991 இல் 15.5 சதவீதமும், 1993 இல் 14.6 சதவீதமாகவும், 1995 இல் 11.4 சதவீதமாகவும் குறைந்து செல்லுகின்றது. பல்கலைக்கழகம் செல்ல தகுதி உடையவர்கள் கல்வி மறுக்கப்பட்டு, கற்ற கல்விமுறைக்கு சம்பந்தம் இல்லாத சமூக உழைப்புடன் தொடர்பற்ற வகையில் சமுகத்தில் வீசப்படுகின்றார்கள்.


பல்கலைக்கழகம் செல்லத் தகுதியுடையோரில் பல்கலைக்கழகம் செல்வோர்.


1948

22.4

1958

28.0

1970

10.9

1949

24.0

1959

30.0

1971

-

1950

30.3

1960

34.3

1972

10.8

1951

28.1

1961

37.0

1974

11.2

1952

25.6

1962

21.4

1975

8.4

1953

24.1

1963

22.4

1976

7.8

1954

29.5

1964

20.6

1977

5.9

1955

31.3

1965

20.3

1978

6.7

1956

35.1

1966

11.6

1979

6.4


உண்மையில் பல்கலைக்கழக தகுதியுடைய அனைத்து மாணவருக்கும் பல்கலைக்கழகம் அனுமதி மறுக்கப்படுகின்றது. தகுதியுடைய மிகக் குறைந்த சிலருக்கே அனுமதி என்ற நிலையில், இதில் இனவாதம் புகுத்தப்பட்டது. தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்குமாயின், தரப்படுத்தல் என்ற முறையே அர்த்தமற்றதாகிவிடும். அண்ணளவாக 9 முதல் 10 மடங்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுப்புக்குள்ளாகிய நிலையில், இதை திசை திருப்பவே இனவாத மோதலை திட்டமிட்டு உருவாக்கியதை, இலங்கை வரலாறு மீண்டும் ஒருமுறை காட்டுகின்றது. தகுதியுடைய பல்கலைக்கழக கல்வி மறுக்கப்பட்ட மாணவர் நலனுக்காக யாரும் போராடத் தயாராக இல்லை. இது தமிழ் சிங்கள இனம் கடந்து ஒரே நிலையில், ஒரேவிதமான முடிவுகளையே கொண்டிருப்பது இதன் சாரமாகும். உண்மையில் பல்கலைக்கழக தகுதி உடையவர்களில் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கில் தமிழரும் இருந்தனர் சிங்களவரும் இருந்தனர். ஆனால் தேசியவாதிகள் தத்தம் தரப்பில் இதையிட்டு மூச்சுக் கூட விடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இந்த தேசியம் உண்மையில் போராடத் தயாராக இருக்கவில்லை.


இது ஒருபுறம் மறுக்கப்பட மறு தளத்தில் பொதுவாகவே கல்வி மறுக்கப்படுகின்றது. இலங்கையில் 1995 இல் உயர்கல்வி 2 முதல் 5 சதவீதமானவருக்கே கிடைத்தது. மிகுதி மாணவர்களுக்கு அது திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றது. அண்ணளவாக 14 சதவீதமான குழந்தைகள் பாடசாலை செல்லும் வயதில் சேரிகளிலும் தொழில் நிலையங்களிலும் அடிமைகளாக வாழ்கின்றனர். அடிப்படையான தேவையை நிறைவு செய்யும் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழல் இன்மையால், கல்வி கற்போரும் தமது கல்வியை தொடரமுடியாத சூழலில் சிதிலமடைகின்றனர். 1987 இல் 389 577 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை. அவர்களை எந்த விதமான கல்வி தொடர்ச்சியுமின்றி வீதியில் வீசியெறியப்பட்டனர். இதே ஆண்டில் 112 577 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றிய போது 6143 மாணவருக்கு மட்டுமே பல்கலைக்கழக அனுமதிகிடைத்தது. மிகுதியானவர்கள் சமூக வெற்றிடத்தில் தள்ளப்பட்டனர்.


இலங்கையின் சமூகப் பொருளாதார பண்பாட்டு நிலமை மக்களிடையில் பிளவுபட்டு இருப்பதால், ஒட்டு மொத்த மாணவர் சமூகமே பாதிக்கப்படுகின்றது. 1991, 1992, 1993 இல் இல் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையை ஆராயின் 10 முதல் 17 சதவீதமானோர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 23 முதல் 42 சதவீதமானவர்கள் 20க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர் 53 முதல் 73 சதவீதமான மாணவர்கள் 40 க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர். அதாவது 1991 இல் 38000 பேர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 86000 பேர் 100 க்கு 20 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 150 000 பேர் 100 க்கு 40 குறைவான புள்ளிகளையே பெற்றனர். முரண்பாடு கொண்ட சமூகப் பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் மாணவர்களின் கல்வித் தரத்தை மிக மோசமாக பாதிப்பதை இது காட்டுகின்றது.


வாழ்க்கையோடு தொடர்பற்ற வகையில் திணிக்கப்படும் கல்வி மற்றும் உயர்ந்த அந்தஸ்தை நோக்கிய கனவுடன் திணிக்கப்படும் கல்வி முறை பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றது. 1990 இல் வந்த தொடர் பத்து ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் 10 சதவீதமானவர்கள் (1995 இல் 55000 பேர்) ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. 70 சதவீதமானவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் சித்தியடையவில்லை. 1995 இல் 15 சதவீதமானவர்கள் மட்டுமே க.பொ.த உயர்தர வகுப்புக்கு செல்லும் தகுதியை அடைந்தனர். 1995 இல் 12000 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. ஆண்டுக்கு 200 கோடி செலவில் வழங்கப்படும் இந்த ஏகாதிபத்தியக் கல்வியின் கதி இது. க.பொ.த பரீட்சைக்கு பங்கு கொள்ளும் 170 000 மாணவர்களில் 8 முதல் 9 ஆயிரம் பேர் வேலையற்றவராக மாறுகின்றனர். 1960 தொடங்கிய வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் எமது கல்வி அமைப்பு, இன்று 16 முதல் 17 ஆயிரம் பட்டதாரிகளை வேலையற்றவராக்கி விடுகின்றனர். இன்று 170 000 மாணவர்கள் பல்கலைக்கழக பரீட்சையில் பங்கு கொள்ளும் அதே நேரம், 70000 பேர் பல்கலைக்கழக தகுதியை பெற்ற போதும் அதில் 8000 பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.


இந்த தகுதி பெற்றோரில் பல்கலைக்கழகம் செல்வோர் குறைந்து வருகின்றனர். உயர் கல்வி வயது எல்லையான 19-23 வயதுடைய 2 சதவீதமானவர்களே உயர் கல்வியைப் பெறுகின்றனர். இது தென்னாசியாவில் 5 சதவீதமாகவும், தூரகிழக்கு நாடுகளில் 8 சதவீதமாகவும், மேற்கில் 20 முதல் 30 சதவீதமாகவும் உள்ளது. 40 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் 1.2 கோடி மாணவர்கள் பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்றனர். 2000ம் ஆண்டில் 30 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களிடையே 22 சதவீதமானவர்கள் உயர்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். லுக்சம்பேர்க்கை எடுத்தால் 80 சதவீதமானவர்கள் பட்டப்படிப்பை முடிக்கின்றனர்.


இலங்கையில் அடிப்படைக் கல்வியை பெறுவோரில் கல்வித்தரமும், அதன் தொடர்ச்சியும் மிக மோசமாக அடிபாதாளத்தில் காணப்படுகின்றது. எமது தேசிய போராட்டம் கல்வியை முன்னிலைப்படுத்தி தொடங்கியபோது, அனைத்து மாணவர்களின் கல்வி மீது தன்னை ஆயுதபாணியாக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் உயர் அந்தஸ்துகளை உடைய மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத் துறை சார்ந்து கிடைக்கும் 500 உயர் கல்வியை மையமாக வைத்தே, குறுந் தேசியத்தை உயர்த்தினர். இதற்கு சாதகமாக மருத்துவர், பொறியியல் கனவுகளுடன் கற்று வந்த மாணவர் சமூகத்தையும், ஒட்டு மொத்த சமூக கண்ணோட்டத்தையும் குறுந் தேசிய இனப் போராட்டத்தின் பால் இழுக்க முடிந்தது. பல்வேறு சமூகத்துறை சார்ந்த குறுகிய கண்ணோட்டம் குறுந்தேசிய இனப் போராட்டமாகியது.


ஒட்டு மொத்த மாணவர்களின் எதிர்காலம், சமூகத்தில் வடிகட்டப்பட்ட பின் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடங்கி இதன் சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் என்ன என்பதையிட்டு குறுந் தேசியப் போராட்டம் அக்கறைப்படவேயில்லை. இதற்கு எதிரான சமூக கண்ணோட்டத்தை கொண்டு கோசம் போட்டவர்கள், கல்வி தொடர முடியாத சமூகநிலமைகளை கவனத்தில் எடுத்து அதற்கு எதிராக போராட முன்வரவில்லை. கிரிக்கட் போட்டியில் சிறு எண்ணிக்கையானோர் விளையாட, வேலை வெட்டி இல்லாதவர்கள் நாள் கணக்காக சுற்றி நின்று வம்பளப்பது போல், மாணவர் சமூகத்தில் ஒரு சிலரை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வடிகட்டல் ஊடாக சிலரை மையப்படுத்தி சமூக கண்ணோட்டம் நீடிக்கும் போது, உண்மையில் கல்வி தரம் என்பது ஆதாள பாதாளத்தில் வீழ்ச்சி காண்பது தவிர்க்கமுடியாது. கல்வி என்பது சமூகத் தளத்தில் மனிதனின் வாழ்வியலுடன் எந்த விதத்திலும் தொடர்பற்றதாக உள்ளவரை, அறிவற்ற மூடர்களாக சமூகம் உருவாகின்றது. அதில் இருந்து உருவாகும் போராட்டம் முட்டாள் தனத்தையும் மக்கள் விரோதத்தையும் ஆதாரமாக அடிப்படையாகக் கொள்கின்றது.


இலங்கை ஒரு விவசாயநாடு. ஆனால் எத்தனை பேருக்கு அதில் பட்டத்தை பெற முடிகின்றது. இது போல் மீன் பிடி தொடங்கி தேசிய உற்பத்தி மேல் நாம் ஆராயின் எமது கல்வியின் கோமாளித் தனத்தையும், தேசியத்தின் ஏகாதிபத்திய தன்மையையும் புரிந்து கொள்ளமுடியும். இந்தத் தொழில்கள் இழிவாக்கப்பட்ட போது, அந்த பட்டங்கள் கூட இழிவாகவே தீட்டுப்படுகின்றது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு தேவையான மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கே இந்தக் கல்வி ஆதாரமாகின்றது. இலங்கையில் பல்கலைக்கழகம் சென்ற இந்த பிரிவுகள், நாட்டை விட்டுச் சென்று விடுவது வெட்டவெளிச்சமாகும். ஆனால் எமது தேசியம் இந்த வட்டத்துக்குள் நின்று இதை மையமாக வைத்தே சுழல்கின்றது.


இதை உயர் வர்க்கங்கள் தமது நலனில் இருந்து ஒட்டு மொத்த சமூகத்துக்கும் கட்டமைக்கின்றனர். தரப்படுத்தலுக்கு முன் இலங்கையில் மருத்துவம் பொறியியல் மற்றும் விஞ்ஞானத்தில் யாழ் குடா நாடு 50 சதவீதத்தை கைப்பற்றிய போது, கலைத்துறையில் 5 சதவீதத்துக்கு குறைவாகவே பல்கலைக்கழகம் சென்றனர். யாழ் சமூகத்தின் பூர்சுவா கண்ணோட்டம் கலைத்துறையை இழிவாக்கி அதைத் தீட்டாக்கியதன் விளைவே இது. இதைப் பார்ப்போம்.


69-7

70-71

71-72

73

74

75

76

77

78

சிங்களம்

89.1

89.7

92.7

91.8

86.0

85.6

86.3

85.8

83.3

தமிழ்

6.9

7.0

4.7

5.9

10.0

10.1

8.6

9.2

15.3

இந்த நிலையில் கல்வி தொடரமுடியாத குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலைமையை இட்டு, இந்த தமழ் தேசிய உயர் வர்க்கம்என்றுமே கவலைப்பட்டது கிடையாது. இதை வகுப்பு ரீதியாக பாடசாலையை விட்டு விலகியதை ஆராய்வோம்.


1

2

3

4

5

6

7

8

1972

-

5.3

5.3

6.4

7.3

9.3

4.7

8.4

1973

3.9

4.3

9.81

10.9

13.2

13.5

11.8

14.1

1975

2.2

5.2

11.2

11.2

12.4

12.4

12.0

12.0

1976

6.8

2.3

5.5

7.4

10.2

7.5

6.3

13.9


தமழ் தேசிய உயர் வர்க்கம் தனது நலனில் இருந்து தொடங்கிய தேசிய போராட்டம் கூட, அதன் எல்லைக்குள் தான் இன்று வரை தன்னை தகவமைத்துள்ளது. அனைத்து மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்க தவறிய எமது குறுந்தேசிய இனப் போராட்டம், குறுகிய சமூக நலன்களில் இருந்தே தனது கோரிக்கைகளை முன்வைக்கின்றது. தமிழ் தேசிய வாதிகள் மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களும் இதையே சிங்கள மக்கள் மேல் திணிக்கின்றனர். இவர்களுக்கு இடையில் இதில் கொள்கை வேறுபாடு கிடையாது. ஆக மக்களை கொள்ளையிட்டு பிரதேசங்களை யார் ஆள்வது என்பதே குறுந்தேசியத்தின் மையமான பிரச்சனை. தேசியத்தில் மக்களின் நலன் என்ன என்பது பற்றி அக்கறை கிடையாது. இதனால் மாணவர் சமூகத்தையிட்டு இந்த தேசியம் பழைய அதே கொள்கையையே கடைபிடிக்கின்றது. மறுதளத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கே இந்தக் கதியுள்ள போது, பாடசாலை செல்ல முடியாதவர்கள் நிலையை நாம் கற்பனை பண்ணத் தேவையில்லை. இலங்கையில் கல்வியை பெற முடியாதவர்கள் முதல் எத்தனை சதவிகிதம் மாணவர்கள் கல்வியை பெறுகின்றனர் என பார்ப்போம்கல்வி மட்டம்

1971

1971

1981

1981

ஆண்

பெண்

ஆண்

பெண்

பாடசாலை செல்லாதோர்

12.1

12.4

6.0

4.2

1 முதல் 5 வரை சித்தியடைந்தோர்

15.6

10.4

9.4

4.9

6 முதல் 10 வரை சித்தியடைந்தோர்.

61.4

58.0

72.7

67.6

க.பொ.த சாதாரண வரை சித்தியடைந்தோர்.

9.9

18.0

9.8

19.6

க.பொ.த உயர்தரம் வரை சித்தியடைந்தோர்.

0.7

1.0

1.7

3.3

பட்டப்படிப்பும் அதற்கு மேலும்

0.3

0.6

0.1

0.4இலங்கையில் கல்வி கற்க முடியாத சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகளை அடைப்படையாக் கொண்ட குழந்தைகளையிட்டு, தமிழ் தேசியம் சரி சிங்கள தேசியம் சரி அல்லது இலங்கையில் எந்தக் கட்சியும் கூட அக்கறைப்படவில்லை. பாடசாலை செல்பவர்கள் கூட உண்மையில் இயந்திரமாக செல்லுகின்றனரே ஒழிய, கல்வி மீதான சழூக ஆர்வம் அல்ல. சமுதாயத்தின் இழிந்துபோன சமூகக் கண்ணோட்டம் கல்வியில் பாரிய விளைவை ஏற்படுத்துகின்றது. இது கல்வி தரத்தை வீழ்த்துவதுடன், தொடர்ச்சியான கல்வி முடக்கப்படுகின்றது. இதனால் க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் சித்தி பெறுவதில்லை. 20 சதவீதமான மாணவர்களே அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றுகின்றனர். அனைத்து மாணவர்களில் 12 சதவீதமானவர்கள் மொத்தத்தில் அதே வகுப்பை மீண்டும் படிக்கின்றனர். உண்மையில் இலங்கையில் மாணவர்களின் கல்வி என்பது, 99 சதவீதம் மறுக்கப்படுகின்றது. சிலரை உருவாக்கும் கல்வி மூடிமறைக்கவே கல்வியில் இனவாதம் புகுத்தப்பட்டது. ஒட்டு மொத்த மாணவர் பிரச்சனையை குறுகிய இனவாத எல்லைக்குள் சிதைத்ததன் மூலம், மாணவர்களின் முதுகில் ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் சவாரி செய்ய முடிந்தது, முடிகின்றது. இதையே தமிழ் தேசியமும் மறு தளத்தில் செய்தது. அனைத்து மாணவர்களின் நலன்களில் இருந்து இந்த தேசிய பிரச்சனையை இரு பகுதியுமே அணுகவில்லை, அணுகப்போவதுமில்லை. இதனால் இந்த தேசியம் என்பது சிலரின் நலனையும், சில வர்க்கத்தின் நலனையும், சில பிரதேசத்தின் நலனையும், உயர் சாதியின் நலனையும் பிரதி பலிப்பதால், யாழ் நலன்கள் சார்ந்த குறுந்தேசிய இனப் போராட்டமாக சீரழிந்தது.


அனைத்து மாணவர்களின் நலனை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கோரிக்கையை முன்வைத்து போராடியிருக்க வேண்டும். இனவாத பிளவுக்கான தரப்படுத்தல் முயற்சியை இதனடிப்படையில் முறியடித்திருக்க வேண்டும். மற்றைய தமிழ் பிரதேச மணவர்களுடன் இணைந்து, பிரதேச வாதத்தை தகர்த்திருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லீம், மலையக மக்களுடன் நேசக்கரம் நீட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் எதிரிடையாக சென்றோம். யாழ் மேலாண்மையை நிறுவவும், அதிக பல்கலைக்கழக அனுமதியையே நாம் கோரினோம். நாம் இன்று தமிழ் ஈழத்தைப் பெற்றாலும் கூட, இன்று இருக்கும் பல்கலைகழக அனுமதியைக் கூட பெறமுடியாது. இன்று உள்ள தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பல்கலைக்கழகம் செல்வார். தேசிய தேவைக்கு ஏற்ற கல்விக்கு பதில், ஏகாதிபத்திய உற்பத்தி மற்றும் கைக்கூலிக்கு ஏற்ற கல்வியே எமது தேசிய கல்வியாக உள்ளது. இதுவே புலிகளின் தேசிய கொள்கையும் கூட. எமது ஆயுதப் போராட்டம் வித்திட்டு வளர்ந்த முறையே பிற்போக்கானதாகும். குறுந்தேசிய யாழ் மையவாத உயர் கைக்கூலிகளின் நலன்களை பிரதிபலிக்கும் போராட்டமாகவே பரிணமித்தது. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைகள் பல இருந்தது, இருக்கின்றது. அதில் கல்வியும் ஒன்று.


1969இல் போட்டி பரீட்சை மூலம் தெரிவான 27.5 சதவீதமான தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை 1974 இல் 7 சதவீதமாக குறைந்தது. இதை மாவட்ட ரீதியாக பங்கிடப்பட்டது. 1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் இது எந்த விதத்திலும் யாழ் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மாணவர்களின் சதவிகிதத்துக்கு மேலாகவே, பல்கலைக்கழக அனுமதியை யாழ் மாணவர்கள் பெற்றனர். இது எந்த பாதிப்பையும் இனவிகிதம் சார்ந்து யாழ்குடாநாட்டை பாதிக்கப்படவில்லை.


உண்மையில் யாழ் அல்லாத தமிழ் மாணவர்களே தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டனர். தரப்படுத்தல் அவர்களில் சிலருக்கு சலுகை வழங்கிய போதும், இனவிகிதாசாரம் சார்ந்து பாரிய இழப்பை தொடர்ந்தும் சந்தித்தனர். கல்விக்கான சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழல் அவர்களுக்கு எதிராக இருந்தது. இது யாழ் உயர் பிரிவுகளின் (இது வர்க்கம், சாதி, பிரதேசவாதம்) தொடர்ச்சியான ஒடுக்குமுறையாலும், சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறையாலும் ஏற்பட்டது. தமிழ் மக்களின் கல்வி சார்ந்த பிரச்சனை என்பது யாழ்குடா அல்லாத பிரதேசங்களிலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களினதும், முஸ்லீம் மாணவர்களினதும், மலையக மாணவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகளை, சிங்கள இனவாதிகள் முதல் தமிழ் குறுந்தேசியவாதிகளும் திட்டமிட்டு மறுத்து வந்தனர். இதற்கு யாழ் சமூகம் சார்ந்த தேசியம், தமிழ் மக்கள் என்ற பொதுமைப்படுத்தல் ஊடாக அந்த மக்களின் நலனை இனவாத அமைப்புக்குள்ளேயே சூறையாடியதும், அந்த மக்களை இழிவுபடுத்தி ஒடுக்கியதும் ஒரு முக்கியமான தேசிய இன அடிப்படையாகும். இனமாக தேசியமாக பொதுமைப்படுத்தும் போது அந்த மக்களின் நலன்களை கவனத்தில் எடுக்க வேண்டும். மாறாக பொதுமைப்படுத்திய இனக் குறுந்தேசிய அடிப்படையில் அந்த மக்களை சூறையாடும் யாழ் மையவாத நலன்கள், அந்த மக்களை இன எல்லைக்குள் ஒடுக்கி வைத்துள்ளது. இதை ஆதாரமாக ஆராய்வதன் மூலம் இதை தெளிவாக்கலாம.


தொடரும்

Wednesday, October 4, 2006

தரப்படுத்தலும் தமிழ் தேசியமும் - பகுதி நான்கு

தரப்படுத்தலும் தமிழ் தேசியமும் - பகுதி நான்கு

பகுதி ஒன்று

பகுதி இரண்டு

பகுதி மூன்று


1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும், 500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவருமாக பல்கலைக்கழக அனுமதி இருந்துள்ளது. உண்மையில் ஆதிக்க வர்க்கம் எதுவோ அது சார்ந்து, மதம், இனம், பிரதேசம், சாதி, வர்க்கம் என்ற பல்வேறு கூறுடன் தொடர்புடையதாகவே, இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி வரலாற்று ரீதியாக இருந்துள்ளது. இங்கு இதற்கு வழங்கப்பட்ட பெயர் "திறமை"என்ற கௌவரமாகும். பிரிட்டிஸ் காலனித்துவ வாதிகளின் பிரித்தாளும் கொள்கை இந்த "திறமைக்கு"கடிவாளமிட்டது. 1939 இல் பாடசாலைக்கான நிதி ஒதுக்கீட்டில் கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு 75.2 சதவீதமாகவும், பௌத்த பாடசாலைக்கு 19.3 சதவீதமாக இருந்தது. இங்கு தமிழ் பாடசாலைகள் பல கிறிஸ்தவ பாடசாலையாகவே இருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி ஏ, பி பாடசாலைகளாக உள்ள 40 உயர் பாடசாலைகளின் வரலாற்றை ஆராய்ந்தால் இது தெட்டத் தெளிவாக வெளிப்படுகின்றது.

இலங்கை பல்கலைக்கழக அனுமதியை ஆராய்ந்து பார்க்கின்ற போத

19501967
சிங்களவர்6684.1
தமிழர்24.514.1

மேலுள்ள வகையில் பல்கலைக்கழக அனுமதி இருந்தபோதும், தமிழர் என்ற அடையாளத்துக்குள் மலையக மக்களையோ, முஸ்லீம் மக்களையோ, யாழ்குடா அல்லாத மற்றைய பிரதேச மக்களையோ, யாழ்குடாவில் வாழ்ந்த அடிமட்ட சாதிகளையோ மற்றும் உழைக்கும் வர்க்கத்தையோ பிரதிபலிக்கவில்லை. இதை தொடர்ச்சியாக ஆதாரமாக புள்ளிவிபர ரீதியாக கட்டுரையின் தொடரில் பார்ப்போம். பல்கலைக்கழக அனுமதியில் தமிழரின் விகிதத்தில் கூட உயர்ந்த அந்தஸ்த்துகளை பிரதிபலித்த விஞ்ஞானக் கல்வியில் இனவிகிதங்களை, சில மடங்காக கடந்த நிலையில் தமிழரின் ஆதிக்கம் நிலவியது. பல்கலைக்கழக அனுமதி சதவீகிதத்தில்


1970197019711971197319731974197419751975
சிங்களவர்தமிழர்சிங்களவர்தமிழர்சிங்களவர்தமிழர்சிங்களவர்தமிழர்சிங்களவர்தமிழர்
பொறியியல்55.940.862.434.772.124.478.816.383.414.2
விஞ்ஞானம்6828.66731.273.125.975.120.97819.5
மருத்துவம்53.540.956.139.358.836.97025.978.917.4
கலை88.97.692.64.891.56.186.0---


1970 களில் இனவிகிதம் கடந்த நிலையில் தமிழரின் ஆதிக்கம் விஞ்ஞானம் சார்ந்த துறையில் காணப்படுவதை மேலே நாம் காணமுடிகின்றது. 1972 தரப்படுத்தலுக்கு முன் பின் என்ற இரு வரலாற்று காலத்திலும் கூட இனவிகிதம் கடந்த தமிழரின் ஆதிக்கமே தொடர்ந்தும் காணப்பட்டது. தரப்படுத்தல் முறையை 1970-1975 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு மாற்றியமைத்ததன் மூலமே தமிழரின் பங்கை குறைக்க முடிந்தது. இதன் பின்பு படிப்படியாக இனவிகிதத்தைத் தாண்டி சிங்களவரின் விகிதம் அதிகரித்து. இலங்கையின் எந்த பிரிவு அதிகாரத்தில் அதிகார வர்க்கமாக ஆதிக்கம் செலுத்தியதோ, அதற்கு இசைவாகவே பல்கலைக்கழக அனுமதி காணப்படுகின்றது. இதை நாம் மதரீதியாக ஆராயும் போது மேலும் துல்லியமாக நிறுவுகின்றது.1970ம் ஆண்டில் பல்கலைக்கழக அனுமதி மதம் சார்ந்து
கல்வித்துறைபௌத்தர்கள்இந்துக்கள்கிறிஸ்தவர்கள்முஸ்லீம்கள்ஏனையோர்
விஞ்ஞானம்(உயிரியல், பௌதிகம்)58.823.315.71.80.4
பொறியியல்43.432.921.72.0-
மருத்துவம்46.131.519.82.4-
பல்மருத்துவம்41.451.24.92.5-
விவசாயம்53.627.913.94.6-
விலங்கு மருத்துவம்66.623.84.84.8-
கலையியல்86.45.94.43.3-
சட்டம்37.427.122.910.42.1
1960 மாணவர் தொகை55.620.921.01.90.3
1965 மாணவர் தொகை71.015.011.92.00.1


இலங்கையின் போலிச் சுதந்திரத்துக்கு பின்பும் கூட பிரிட்டிஸ் காலனித்துவ கிறிஸ்தவ கல்வி சார்ந்த மாணவர்களின் ஆதிக்கமும், கைக்கூலி சமூகமாக இருந்த தமிழரின் கல்வி ஆதிக்கமும் 1970 களிலேயே தெளிவுபடவே மீண்டும் வெளிபடுகின்றது. சுதந்திரத்துக்கு பின்பு இனம் மற்றும் மதம் சார்ந்து உருவான அரைக்காலனி நிலப்பிரபுத்துவ தரகு அரசுகள், கல்வியில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தின. இதிலும் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ தொடர்புடைய பிரிட்டிஸ்சாரின் எச்ச சொச்ச காலனித்துவம், கல்வியில் ஆதிக்க பிரிவாகவே தொடர்ந்தும் இருந்து வருவதை பல்கலைக்கழக அனுமதி நிறுவுகின்றது. இன்று மற்றைய பெரும்பான்மை இன ஆதிக்க பிரிவுகள் அதிகாரத்துக்கு வந்ததன் மூலம், மத அடிப்படையில் கிறிஸ்தவத்தின் விகிதத்தை குறைத்து வருகின்றது.


கிறிஸ்தவ ஆதிக்கம், தமிழரின் ஆதிக்கம் கல்வி முதல் அனைத்திலும் நிலவிய நிலையில், அதை முறியடிக்கவே சிங்கள இனவாதிகள் தாய்மொழிக்கல்வி, மதக் கல்வியை அமுலாக்கினர். இதிலும் மதக் கல்வியை பாடசாலையில் புகுத்தியது, இந்தியாவுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறானது. இதற்கு இலங்கையில் அதிகார வர்க்கமாக திகழ்ந்த யாழ் மேட்டுக்குடிகளின் ஆதிக்கமும், காலனித்துவ ஆதிக்க மதமாக திகழ்ந்த கிறிஸ்தவத்தின் ஆதிக்கமுமே இதற்கு தூணாகியது. இந்த வகையில் கல்வியில் உயர்ந்த வசதிகளையும் வாய்ப்புக்களையும் யாழ்குடாநாடு தொடர்ச்சியாக இன்றுவரை பேணமுடிகின்றது.


1988ம் ஆண்டு விஞ்ஞானக் கல்வியை மாவட்ட ரீதியாக ஆராய்கின்ற போது இது தெளிவுபடவே நிறுவுகின்றது.
மாவட்டம்பாடசாலை செல்லும் விஞ்ஞான மாணவர்கள்விஞ்ஞான உயர் வகுப்பு உள்ள பாடசாலைகள்விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள்ஒரு விஞ்ஞான பட்டதாரிக்கு விஞ்ஞான மாணவர்கள்ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு மாணவர் எண்ணிக்கை
கொழும்பு234 455404314945861
யாழ்ப்பாணம்197 604403505274940
காலி220 8943319610006694
கண்டி288 133392799297388
மொனராகலை87 7660536250811 553
பதுளை172 7852313812257512
அம்பாறை53 7980420224213 450
புத்தளம்56 3680522281811 274
மட்டக்களப்பு83 584127510726965
கல்முனை72 279146011665163
மன்னார்26 21006

28

744368
திருகோணமலை65 957105511186596

மேலுள்ள விஞ்ஞான பாடசாலைகள் எண்ணிக்கையும், மாணவருக்கான வசதிகளும், ஆசிரியர் செறிவும் தெளிவுபடவே கல்வியில் யாழ் மேலாதிக்கத்தை நிறுவுகின்றது. இங்கு தொண்டர் ஆசிரியராக செயற்படுவோர் எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை. பிரிட்டிஸ் காலனித்துவம் தனது காலனித்துவ கைக்கூலி அதிகார வர்க்கத்தை உருவாக்க, கல்வியில் வழங்கிய சலுகை யாழ் மேலாதிக்கத்தை இன்றைய இன அழிப்புக்குள்ளும் பறைசாற்றுகின்றது. சிங்கள இனவாத அழித்தொழிப்பு ஒரு யுத்தமாக, அதுவே ஆக்கிரமிப்பாக மாறியுள்ள நிலையில், அரசு சேவையில் தமிழரின் எண்ணிக்கை இனவாத விகிதத்தை விட மிகவும் தாழ்ந்த நிலைக்குள் சரிந்துள்ளது. ஆசிரியர் தேவை நீண்ட காலமாக தமிழருக்கு வழங்கப்படுவது புறக்கணிக்கப்படும் இன்றைய நிலையிலும், யாழ்குடாநாட்டில் எந்தப் பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை. மற்றைய பிரதேசத்துடன் ஒப்பிடும் போது உயர்ந்த கல்வித்தரத்தை கொழும்புக்கு நிகராக பேணுகின்றது. உண்மையில் பாதிக்கப்பட்டது மற்றைய தமிழ் பிரதேசங்கள் தான். நடக்கும் போராட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் யாழ்குடாநாட்டுக்கே தொடர்ந்தும் கிடைக்கும் என்பது மற்றொரு உண்மையாகும்.


இதிலும் யாழ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மறுக்கப்பட்டது, இன்றும் மறைமுகமாக மறுக்கப்படுகின்றது. அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியை கோரியபோது தாக்கப்பட்டதுடன், பாடசாலைக்கான அவர்கள் செல்லும் வீதிகள் மூடப்பட்டது. அதையும் அவர்கள் மீறிய போது குடிநீர் கிணறுகள் நாசமாக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவங்கள் பல வரலாற்றில் பதிவாகியேயுள்ளது. ஏன் 1975களில் எனது ஊரில் உயர் சாதி மக்களும், தாழ்ந்த சாதி மக்களும் சம அளவில் இருந்த போதும், தாழ்ந்த சாதியில் இருந்து யாரும் மிகப்பெரிய பாடசாலையான யூனியன் கல்லூரியில் உயர் வகுப்பில் கற்க அனுமதிக்கப்படவில்லை. செல்வராசா என்ற மாணவனை கல்லூரியில் சேர்க்க எனது அப்பா கடுமையான போராட்டத்தை பாடசாலை நிர்வாகத்துடன் நடத்தினார். எனது வகுப்பிலேயே அந்த மாணவன் சேர்ந்த போது, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இழிவாடப்பட்டு கல்வியை தொடர முடியாதவனாக இருந்தான். இது தான் யாழ்குடா நாட்டின் அண்மைக்காலம் வரையான பொதுவான நிலை. ஏன் சாதிக்கு எதிரான பல போராட்டங்கள் நடந்த பின்பும், நிலைமை இதுதான். இப்படியிருக்க காலனித்துவ கல்வியின் ஆதிக்கம், உயர் சாதிகளின் கையில் மேட்டுக்குடிகள் சார்ந்தே காணப்பட்டது, காணப்படுகின்றது. இங்கு மற்றைய தமிழ் மாவட்டங்கள், முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்கள், மலையக பிரதேசங்களில் ஒரு விஞ்ஞான பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை மற்றும் வசதிகள் யாழ் குடா நாட்டுடன் ஒப்பிடும் போது, சில இடங்களில் அவை மடங்குகளாகவே காணப்படுகின்றது.


இந்த நிலையில் யாழ்குடாநாட்டு கல்வி வசதி மற்றும் சலுகையை நாம் 1950 முதல் 1970 என்ற தொடர்ச்சியான காலகட்டத்துடன் ஒப்பிடின் பிரமாண்டமான இடைவெளியில் காணப்பட்டிருக்கும. வசதியை அடிப்படையாக கொண்டு யாழ்குடாநாட்டு கல்விக்கு கிடைத்த சலுகையை, "திறமையாக காட்டுவது மற்றவனை ஏமாற்றுவதாகும். திறமை என்பது அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் ஒரே சூழலையும் உருவாக்கிய பின் நிறுவுவதே. இன்றைய உலகளாவிய ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா வகிக்கும் முதலிடம் கூட, இந்தியா, சீனா என்ற அதிகூடிய மக்கள் தொகை கொண்ட மக்களினத்துக்கு வாய்ப்பையும் வசதியையும் மறுத்த பின்பு அதன் மேல் நிறுவுவதே. உண்மையில் சொல்லப்போனால் இன்றைய உலகில் இடைவெளிகளை உருவாக்கியே, அதில் சிலர் தம்மைத் தாம் நிலை நிறுத்துகின்றனர். இந்த வகையில் யாழ்குடாநாட்டுக் கல்வி என்பது அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் தான் மட்டும் அனுபவித்த பின்பு, அதை விளைவாக கொண்ட அதிகாரத்தை நிறுவுவதே. இதற்கு பிரிட்டிஸ்காரனின் குண்டியை நக்கி பிழைக்க, உயர்சாதி யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் தயங்கவில்லை. உண்மையில் காலனித்துவத்துக்கு எதிராக போராடியவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற தன்மையால், அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு நிலையில் பின்தங்கிய சமூகமாக சிங்கள இனம் மாறியது. இந்த ஒடுக்குமுறையில் பிரிட்டிஸ்சாருக்கு தோளோடு தோள் நின்ற கைக்கூலி தமிழ் அதிகார வர்க்கம், தனது நிர்வாக அலகுகள் மூலம் மேலும் சிங்கள இனத்தை அடக்கி ஒடுங்க வைத்தது. இதை சிங்கள இனவாதம் தனக்கு சாதகமாக பயன்படுத்தியது.


காலனித்துவ சேவையும் அதற்கான காலனித்துவ கல்வி என்பன யாழ்குடா நாட்டை கல்வி தரத்தில் இன்று வரை உயர்தரத்தில் வைத்துள்ளது. விஞ்ஞான உயர் வகுப்பு கல்லூரிகளை இலங்கையில் ஆகக் கூடுதலாக கொண்ட நிலையில் (கொழும்பு சமமாக உள்ளது இது தலைநகருக்குரிய விதிவிலக்கு மட்டுமே. அத்துடன் இங்கும் யாழ் மேட்டுக்குடியின் கணிசமான ஆதிக்கம் உள்ளது), கொழும்புக்கு அடுத்ததாக 527 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில், ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு ஆகக் குறைந்த மாணவராக யாழ் மாவட்டம் 4940 மாணவர்களைக் கொண்ட சலுகைக்குரிய வசதியான கல்வியில் கொண்டு திகழ்கின்றது. இலங்கையில் வேறு சில மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, மாணவர் எண்ணிக்கை மூன்று மடங்கு குறைந்த நிலையில் யாழ் பாடசாலைகள் திகழ்கின்றது. இது உன்னதமான குடாநாட்டின் கல்வி வளங்களையும் வளர்ச்சியையும் வசதிகளையும் பறைசாற்றுகின்றது.


இலங்கையில் அதிகார வர்க்கத்தையும், கௌரவமான தொழிலையும், வசதியான வாழ்க்கையையும் வழங்கிய கல்வியும், அதைத் தொடர்ந்து கிடைத்த பல்கலைக்கழக அனுமதியில் தமிழரின் எண்ணிக்கையை இன விகிதம் கடந்த நிலையில் காணப்பட்டது. அதிலும் மருத்துவம், பொறியியல், விஞ்ஞான துறைகளில் தமிழரின் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தாரின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது.


இலங்கை வரலாற்றில் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக செயற்பட்ட யாழ் சமூகம், அந்த கைக்கூலி கல்வியில் முதன்மையிடத்தை பெற்றது. இதுபோன்று இலங்கை ஆட்சியை மையப்படுத்தி தலை நகரங்களிலும், யாழ்குடா நாட்டுக்கு சமச்சீராக கைக் கூலிகளின் சமூகம் உயர்ந்த கல்வித் தரத்தை பெற்றனர். இலங்கைக்கு தங்கத் தட்டில் வைத்து சுதந்திரத்தை பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் வழங்கிய போது, காலனித்துவ நலன்கள் என்றுமே சிதைவடையவில்லை. மாறாக காலனித்துவ நலன்களை முந்திய கைக்கூலிகள் கையேற்று நடைமுறைப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டனர். போலிச் சுதந்திரத்தின் பின்பும் ஏகாதிபத்திய கல்விக் கொள்கை, ஏகாதிபத்திய அரைநிலப்பிரபுத்துவ அரைகாலனிய நடைமுறையை பேணிய தொடர்ச்சியில், அந்த கல்வியில் கைக்கூலி சமூகங்கள் முதன்மை இடத்தை தொடர்ச்சியாக பேணமுடிந்தது. அத்துடன் அதற்கான வளங்களை ஆதாரமாக கொண்ட ஒரு கைக்கூலி சமூகமாக இவை மிளிர்ந்தன. இந்தக் கைக்கூலித்தனம் இன்று வரை தமிழ் தேசிய போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைக்கவில்லை. மாறாக ஏகாதிபத்திய தரகாக செயற்பட தயாராகவே இன்றைய இனத் தேசியவாதிகள் விதிவிலக்கின்றியுள்ளனர்.


இந்த வரலாற்றுப் போக்கில் அடிமட்ட சமூகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்புகள், ஒரு வர்க்க அடிப்படையில் தேசியத்தை புரிந்து கொள்வது தொடங்கியது. இதை தடுத்துவிட கைக்கூலி கல்வியில் உள்ள சொகுசுக்கான வளத்தை பிரித்தாளும் வகையில் இனப்பிளவுக்கு வித்திட்டனர். உயர் கல்வி மற்றும் சமூக அந்தஸ்தாக கருதப்பட்ட உயர் தொழில்களில் தமிழரின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி ஊடாக, பின்தங்கிய பெரும்பான்மை சிங்கள இளைஞர்களின் சிந்தனையை மளுங்கடிக்க முடியும் என்று ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டன. இதனடிப்படையில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தனர்.


இந்த தரப்படுத்தல் குறித்த வீதம் திறமை அடிப்படையிலும், மற்றவை பிரதேச அடிப்படையிலும் கொண்டு வரப்பட்டன. இது கொண்டு வந்த போது இதற்குப் பின்னால் பெரும் சிங்கள தேசிய இனவாத நோக்கம் இருந்தபோதும், இதை எதிர்த்த குழுக்களின் கண்ணோட்டமும் பிற்போக்கானதாகவே இருந்தது. கல்வி வளம் அற்ற பின்தங்கிய பிதேசங்களில் வாழும் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிராகவே இருந்தது. இது சிங்கள மாணவர்களை மட்டுமல்ல, பின் தங்கிய பிரதேசமான தமிழ் மாணவர்களுக்கும் எதிராக இருந்தது. வன்னி, கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவே யாழ்குடாநாட்டு தமிழ் தேசியவாதிகளின் கண்ணோட்டம் காணப்பட்டது. இலங்கையில் மொத்தமாக தமிழ்மொழி பேசுவோரில் யாழ்குடாநாட்டை சார்ந்தவர்கள் அண்ணளவாக 15 சதவீதமாகும். இவர்கள் தரப்படுத்தலை எதிர்த்து 85 சதவீதமான பின் தங்கிய பிரதேச தமிழ் மக்களுக்கு எதிராகவே தமது தேசியத்தை முன்வைத்தனர். ஒட்டு மொத்தமாக சிங்கள மக்களை மட்டுமல்ல, 85 சதவீதமான தமிழ் மக்களையும் கூட எதிர்த்தே இந்த தேசிய போராட்டம் எழுந்தது. இந்த யாழ்குடாநாட்டில் வாழும் 15 சதவீதத்துக்குள்ளும் ஏழு சதவீதமான தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்கல்வியை முத்தமிடாதவர்கள். ஆனால் அதிகாரத்தில் இருந்த சிறுபான்மை உயர் தமிழ் சமூகம், சொந்த பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு கிடைத்த சலுகைகளைக் கூட எதிர்த்தே நின்றனர். இதில் இருந்தே தமிழ் மக்களின் போராட்டம் வித்திடப்பட்டது. தமிழ் மக்கள் விகிதத்துக்கு அதிகமாகவே தரப்படுத்தலின் பின்பும் பல்கலைக்கழக அனுமதியிருந்த போதும், அதிகம் வேண்டும் என்ற ஜனநாயக விரோதக் கோரிக்கையை முன்வைத்தனர். தொடர்ச்சியான இனப் பிளவும், இனவாதமும், யுத்தத்தின் இன்றைய வளர்ச்சியில் இந்த விகிதம் சரிந்துள்ளது என்பது இதில் இருந்து முற்றிலும் வேறானது.


அரசு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இன அடிப்படையில் தரப்படுத்தலை கொண்டு வந்த பின்பு, 1975 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராய்வோம்.


மருத்துவம் பல் மருத்துவம்மருத்துவம் பல் மருத்துவம்பொறியியல் விஞ்ஞானம்பொறியியல் விஞ்ஞானம்
மாவட்டம்சனத்தொகை வீகிதத்தில்மாவட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்தரப்படுத்தல் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாக கிடைத்திருக்க கூடியவைமாவட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்தரப்படுத்தல் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாக கிடைத்திருக்க கூடியவை
கொழும்பு21.0311013270129
யாழ்ப்பாணம்5.5429612056
கண்டி9.3424<173111
களுத்துறை5.7615112016
மன்னார்0.61111-
வவுனியா0.75---
மட்டக்களப்பு2.03647-
அம்பாறை2.14--11
திருகோணமலை1.513151
காலி5.8029182024
மாத்தறை4.638051520
இலங்கை100275275290290


தரப்படுத்தலில் பிரதானமாக கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்கள் அதிகமாக பாதித்தது. இது போல் பொறியியல் துறையில் காலி மாத்தறையும் பாதித்தது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் மருத்துவத்துறையில் 4 அதிக இடங்களையும், பொறியியல் துறையில் 11 அதிக இடங்களையும் பெற்றனர். ஆனால் இந்த அதிக அனுமதியை மறுத்து அதை யாழ்ப்பாணத்துக்கு தாரைவார்க்க தமிழ் இனத் தேசியவாதிகள் கோரினர். ஒட்டுமொத்த தமிழர் என்ற கோசத்தின் கீழ், யாழ்ப்பாணத்தானின் நலன்கள் பொதுமைப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டன. இதற்கு மலையக, முஸ்லிம் சிறுபான்மையினங்களின் மொழியான தமிழ் என்ற அடிப்படையைக் கொண்டு, யாழ் நலன்களை தக்கவைக்க அந்த மக்கள் பலியிடப்பட்டனர். யாழ்ப்பாணம் அல்லாத பின் தங்கிய தமிழீழப் பகுதிகளில் தரப்படுத்தல் மருத்துவத்துறையில் 167 சதவீத அதிகரிப்பையும் பொறியியல்துறையில் 700 சதவீத அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. இதையிட்டு யாரும் கவலைப்படவில்லை. மாறாக மூடிமறைத்தனர்.


அதே நேரம் யாழ்ப்பாணம் மருத்துவதுறையில் 32 இடங்களையும், பொறியியல் துறையில் 36 இடங்களையும் இழந்ததை முதன்மை விடையமாக்கி அதை இனவாதமாக்கினர். மொத்தத்தில் தமிழ் பிரதேசங்களில் மருத்துவத்துறையில் 28 இடங்களையும், பொறியியல்துறையில் 25 இடங்களையும் இழந்தது. வடக்கு கிழக்கில் தெரிவான தமிழர்கள் விகிதம் மருத்துவத்துறையில் 14.18 யாகவும், பொறியியல் துறையில் 11.72 யாகவும் இருந்தது. இதை தவிர கொழும்பு போன்ற பகுதிகள் இதற்குள் உள்ளடக்கப்படவில்லை. அனைத்து தமிழ் பகுதியையும் உள்ளடக்கிய வகையில் பொறியியலில் 14.2 சதவீதமாகவும், மருத்துவத்துறையில் 17.4 சதவீதமாகவும், விஞ்ஞானத்தில் 19.4 சதவீதமாகவும் காணப்பட்டது. கலைத்துறையில் முன்பை விட தமிழர்கள் அதிக அளவில் பல்கலைக்கழகம் சென்றனர். 1971 இல் கலைத்துறையில் தமிழர் 4.8 சதவீதமானவர்களே பல்கலைக்கழகம் சென்றனர். இது 1973 இல் 6.1 யாகவும், 1975 இல் 10 சதவீதமாகவும் மாறியது. இது தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்றது. மொத்தத்தில் இனவிகிதத்திற்கு ஏற்ப தமிழரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இதற்கு அடிப்படையான காரணம் மலையக மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் மறுக்கப்படும் கல்வியே என்பது வெள்ளிடைமலை. இலங்கையின் மொத்த 12 பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்கும் 33000 மாணவர்களில் 20 பேர் மட்டுமே மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். இனவிகிதப்படி இது 1834 இருக்கவேண்டும். கிடைக்க வேண்டியதில் 100க்கு ஒரு பங்கே கிடைக்கின்றது.


1981-82 முஸ்லீம் மாணவர்களின் மருத்துவத்துறை அனுமதியை எடுத்தால் 2.3 க்கு குறைவாகவே கிடைக்கின்றது. இதுவும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் அல்லாத அனைத்து மாணவர்களாலும் பங்கிடப்பட்டது. தரப்படுத்தலுக்கு முன் அதாவது 1969-70 இல் 0.9 சதவீதமான முஸ்லீம் மாணவர்களே மருத்துவத்துறைக்கு செல்ல முடிந்தது. உண்மையில் பின்தங்கிய மற்றும் சிறுபான்மை இனங்களின் கல்வியை பறிப்பதில், அவர்களின் கல்வித் தரத்தை சிதைப்பதிலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் திட்டமிட்டே செயற்பட்டனர். ஏன் யாழ் கச்சேரியில் இருந்து கிராமப் பிறப்பு பதிவாளர்கள் வரை தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரை ஒருமைத் தன்மையில் அடையாளமாக்குவதில், வன்முறையாக தாங்களே பெயர்களை வைத்து சென்ற நூற்றாண்டின் பிற்பகுதிவரை கையாண்ட தமிழ் சமூகமல்லவா!


இந்த வகையில் தமிழர்கள் அதிகமாக ஆங்கிலேயர் காலத்திலும் பின்னர் நிர்வாகத்தில் இருந்த போது, சிறுபான்மை இனங்களின் அடிப்படைக் கல்வியுரிமையை மறுத்து, அதைக் கொள்ளையிட்டே உயர் அந்தஸ்துகளை நிறுவினர். இன்று வரை எமது போராட்டம் அதைத் தாண்டி ஒரு படி முன்னேறவில்லை. யாழ்ப்பாணத்தின் அற்ப பூர்சுவா கனவுகளையே இயக்கம் தலைமை தாங்குகின்றது. மலையக மக்களின் நலன்கள், முஸ்லீம் மக்களின் நலன்கள், பின்தங்கிய பிரதேச மக்களின் நலன்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் என எதையிட்டும் கவலைப்படாத போராட்டம், எப்படி அடிமட்ட மக்களின் சமூகக் கோரிக்கைகளை தீர்க்க போராடும். இதனால் தான் இந்தப் போராட்டம் குறுந்தேசிய இனப் போராட்டமாக சிதைந்துவிட்டது.


யாழ் நலன்கள் குறுந்தேசியமாகிய போது தரப்படுத்தல் எதிர்க்கப்பட்டு அவர்கள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்றன. 3.2.73 இல் யாழ்ப்பாணத்தில் கூடிய யாழ் உயர்வர்க்கங்கள் முன்வைத்த தீர்மானம் ஒன்றில் "பொறியியல், மருத்துவம், விஞ்ஞான பீடங்களுக்கு அனுமதி வழங்குகையில் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு வேறுபாடு காட்டப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம். மொழி அடிப்படையில் தெரிவு அமைவதால் பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் தமிழ் மாணவர்கள் தொகை கணிசமான அளவுக்கு குறைந்திருக்கின்றது."என்று கூறியது. இதன் மூலம் தரப்படுத்தலில் மற்றைய பிரிவுகளை இட்டு யாழ் சமூகம் அக்கறைப்படவில்லை. யாழ் உயர் வர்க்கங்களின் பூர்சுவா கனவுகளாக இருந்த பொறியியல், மருத்துவம், விஞ்ஞான துறையை மையமாக வைத்தே தேசியத்தை முன் தள்ளினர். மற்றைய தமிழ் பிரதேசங்களின் தரப்படுத்தல் மூலம் கிடைத்த சலுகைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த எதிர்ப்பு ஒரு ஆயுதப் போராட்டமாக வளர்ச்சி பெற்றது.


தொடரும்

Monday, October 2, 2006

கல்வியும் தமிழ் தேசியமும் - பகுதி மூன்று

கல்வியும் தமிழ் தேசியமும் - பகுதி மூன்று

  1. பகுதி ஒன்று

  2. பகுதி இரண்டு


ன அடிப்படையிலான தரப்படுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பாதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. தரப்படுத்தலை முதன்மைப்படுத்தி தொடங்கிய போராட்டம் என்பதால், இந்த தேசியம் பிற்போக்கான அரசியலால் ஆயுதபாணியாவது தவிர்க்கமுடியாததாகியது. தரப்படுத்தல் என்ற ஒன்றை இலங்கை அரசு கொண்டு வந்த போது, இனவாத கண்ணோட்டமே அடிப்படையாக இருந்தது. இருந்த போதும் இதை எதிர்த்த தமிழ் பிரிவுகள் பிற்போக்கான மேல் தட்டு வர்க்க கனவுகளை மையமாக வைத்தும், யாழ் மேலாதிக்க மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டே இதை இன அரசியலாக்கினர்.


இந்த மேல்தட்டு கனவுகள் குறுந் தேசியமாகிய போதும், இந்த மேல் தட்டு பிரிவுகள் போராட களம் புகவில்லை. யாழ் மையவாத "எஞ்சினியர், டாக்டர்" கனவுகளை நனவாக்க தொடங்கிய போராட்டத்தில், அவர்கள் பங்குபற்றவில்லை. குறுந்தேசியம் ஆயுதப் போராட்டமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் கூட, தமிழ் மக்களுக்கு இந்த "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" சேவை செய்வதில்லை. தமிழ் பிரதேசங்களின் மருத்துவத் துறையில் மருத்துவர்களின் வெற்றிடமும், தேவையும் தெளிவாகவே இதை நிர்வாணமாக்கி உணர்த்தி நிற்கின்றது. இலங்கையில் கல்வி கற்போரில் பல்கலைக்கழக அனுமதி பெறும் 0.82 சதவீதத்தினரிலும் "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" மிகச் சிறு பிரிவே. இவர்கள் எம் மக்களின் வரிப்பணத்தில் கற்று அந்த மக்களுக்கு சேவை செய்ய மறுத்து நிற்பது மட்டுமின்றி, மற்றைய தொழில்களையும் அது சார்ந்த கல்வி முறைகளையும் கேவலப்படுத்துவதில் தொடங்கி இனம் மற்றும் நாடு கடந்தும் எம்மக்களை எட்டி உதைப்பதில் பின்நிற்கவில்லை. இது "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" பொதுச் சாராம்சமாகும்.


இன அடிப்படையிலான தரப்படுத்தலுக்கு முன்பு இலங்கைப் பல்கலைக்கழக தெரிவு என்பது, அதி கூடிய மதிப்பை யார் பெறுகின்றனரோ அவர்களுக்கே வழங்கப்பட்டது. இந்த அதிகூடிய மதிப்புகளை பெறுவதில் யாழ் தமிழர்கள் கூடுதலானவர்களாக இருந்துள்ளனர். இதில் பாதிப்பு ஏற்பட்ட போதே, ஆயுதப் போராட்டத்தின் முதல் விதைகள் ஊன்றப்பட்டன. அதி கூடிய மதிப்பெண்ணை யாழ் சமூகம் எப்படி பெற முடிந்தது. இதை நாம் பிரிட்டிஸ் காலனித்துவ அமைப்பிலேயே தேடவேண்டும். காலனித்துவ காலத்தில் பிரித்தாளும் தந்திரத்துக்கு இசைவாக, இலங்கையில் முதல் கைக்கூலிகளாக பலியானவர்கள் யாழ்ப்பாணத்து தமிழர்களாவர். சிங்கள பகுதியில் பிரிட்டிசாருக்கு இருந்த எதிர்ப்புக்கு மாறாக யாழ் மேட்டுக்குடி தமிழர்கள், பிரிட்டிசாரின் கால்களை நக்கினர். இலங்கையை நிர்வாக ரீதியாகவும், அடக்கியாளவும், உள்ளுர் காலனித்துவ கைக்கூலிகளாக செயற்படவும் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி தமிழர்களே முன்வந்தனர்.


மற்றைய பகுதிகளில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம், எதிர்ப்பு, பகிஷ்காரம் என்ற ஒரு தொடர் போராட்ட மரபை பேணிய போது, யாழ் தமிழன் வெள்ளையனின் எடுபிடியானான். இந்த எடுபிடி கைக் கூலித்தன அடக்குமுறையை கையாள, அவனுக்கு காலனித்துவ கல்வி அளிப்பது அவசியமாகியது. இதனால் யாழ் பிரதேசத்தில் காலனித்துவ கல்விக்காக பாடசாலைகள் உருவாக்கப்பட்டது. இந்த கல்வி கிறிஸ்தவ மதத்தை விரிவாக்கவும் காலனித்துவ கைக்கூலிகளை உருவாக்கும் ஆங்கில கல்வியை அடிப்படையாகவும் கொண்டு இருந்தது. இதன் தொடர்ச்சியில் 1911ம் ஆண்டில் இலங்கையில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும், கரையோரச் சிங்களவர்கள் 3.5 சதவீதமாகவும், கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும் காணப்பட்டனர். ஆங்கிலேயருக்கு இணையாக ஆங்கிலம் பேசிய இந்த வர்க்கம் இலங்கையின் நிர்வாகத்தில் ஆங்கிலேயரின் கால்களை நக்கினர். இதனால் கைக்கூலிகளுக்கு கிடைத்த சுகபோக வாழ்க்கை சார்ந்து உறவான கல்வி மீதான மோகம், யாழ் மேட்டுக்குடியின் ஆதிக்கத்தை இலங்கையிலேயே கொடிகட்டி பறக்கும் அளவுக்கு வளர்ச்சியை பெற்றது.


மறு தளத்தில் மத அடிப்படைவாதிகள் காலனித்துவத்துக்கு எதிராக அல்லாது, சைவக் கல்வி சார்ந்த தமிழ் என்ற அடிப்படையில், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் கல்விக்கு மறுபக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்தனர். 1872 இல் வண்ணார்பண்ணையில் ஒரு பாடசாலை உருவாக்கப்பட்டது. 1890 இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இரண்டும் ஒன்றையொன்று வரைமுறைக்கு உட்பட்ட எதிர்ப்பை முன்வைத்த போதும், இரண்டும் அக்கம்பக்கமாக யாழ் மேலாதிக்க வர்க்கங்களின் நலன்கள் சார்ந்து இணைந்து ஒரே குடையின் கீழ் நின்றன. இதனால் இந்த இரு கல்விமுறையும் யாழ் சமூகத்தின் கல்வி தன்மைக்கான சூழலை இலங்கையில் தனித்துவமாக உயர்த்தின. இதனால் கல்வி வளங்கள் பெருகின. யாழ் உற்பத்திமுறை இதற்கு இசைவாக ஊக்கமளித்தன. பணப்பயிர் உற்பத்தி சார்ந்து உருவான யாழ் பூர்சுவா கண்ணோட்டம், இந்த கல்விக்கு ஊக்கமளித்தது. காலனித்துவ கைக்கூலிச் சேவைக்காக கிடைத்த ஊழியம், யாழ் பூர்சுவா சமூக அந்தஸ்தை முன்நிலைப்படுத்தியது. ஒட்டு மொத்த சமூக கண்ணோட்டமே இந்த கைக்கூலி பணம் சார்ந்து, மற்றைய இனங்களையும் பிரதேசங்களையும் மக்களை இழிவாக கருதியது. குறிப்பாக "வன்னியன், தோட்டக்காட்டான், கிழக்கான், தீவான் போன்று பல இழிவாடல்களும்" பிரதேசம் சார்ந்த அடக்குமுறைகளும், மற்றைய இனங்களான மோட்டுச் சிங்களவன், தொப்பிபிரட்டி, மாடுதின்னி, காக்கா என்று பல இழிவாடல்கள் மூலம் இலங்கை சமூகத்தையே கொச்சைப்படுத்த யாழ் மேட்டுக்குடி சமூகம் என்றும் பின்நிற்கவில்லை. இந்த யாழ்ப்பாணத்து மேட்டுக் குடிகள் இலங்கையிலேயே மிக மோசமான சாதிய ஒடுக்குமுறையை கட்டமைத்ததுடன், அவர்களின் அடிப்படை கல்வி உரிமையை மறுத்து இழிவாடியும் தனது உயர் அதிகாரத்தை அந்தஸ்தை தக்கவைத்து, இலங்கையில் உயர்ந்த ஒரு வர்க்கமாக நீடிக்க ஆங்கிலேயரின் கால்களை நக்கி வாழ்ந்த கைக்கூலி உயர் பதவிகளும், அதிகாரமும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருந்தன. இதை நாம் கடந்த கால நடைமுறையுடன் ஆராய்வோம்.


தொடரும்

இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் -இரண்டாவது பகுதி

இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

இது நூல் தொகுப்பின் இரண்டாவது பகுதி


பகுதி ஒன்று இங்கே


பி.இரயாகரன்


மிழ் மக்களின் தேசியமும் அவர்களின் பொருளாதார வாழ்வும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. இது ஒரு அரசியல் போக்காக வளர்ச்சி பெற்ற போதெல்லாம், தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அவை புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் தர விடையங்களாக மாறியது. இவை கோசம் போடும் ஒரு அரசியல் வடிவத்துக்கான ஒரு உத்தியாக, மேலெழுந்தவாரியாக கையாளப்பட்டது. இனவாத சிங்கள அரசு தரப்படுத்தலை இன அடிப்படையில் கல்வியில் கொண்டு வந்த போதே, தமிழ் தேசியவாதம் எழுந்தது தற் செயலானதல்ல. இதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டமும் ஒரு வடிவமாகியது. ஆனால் இந்த தரப்படுத்தல் மூலம் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக இன அடிப்படைவாதத்தை அரசியலாகக் கொண்ட தமிழரசு கட்சியில் இருந்த அடிமட்ட தொண்டர்களே, இந்த தீவிர தேசியவாத இன அலைக்குள் முதலில் பலியானார்கள். இதற்கு தமிழரசுக் கட்சி மறைமுகமாக ஆதரவு வழங்கியதுடன், தமது அரசியல் எதிரிகளை கொன்றுவிடவும் ஊக்கமும் ஆக்கமும் அளித்தனர். இந்த இளைஞர் அணிகள் ஆயுதம் ஏந்திய போதே, அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் முரண்பாட்டுடன் கூடிய பிளவும் வளர்ச்சி பெற்றது. ஆயுதம் ஏந்திய தனிநபர் பயங்கரவாத இளைஞர்களுக்கு எதிராக, பொலிஸ் நடவடிக்கை தீவிரமான போது தமிழரசுக் கட்சி அவர்களின் தலைமறைவு வாழ்க்கை மற்றும் வாழ்வுக்கான பொருளாதார போராட்டத்தில் கைவிட்டு காட்டிக் கொடுத்தது. மறுதளத்தில் அவர்களின் சிறை வாழ்க்கையில் இருந்து பாதுகாக்க போராடுவதாக நடித்துக் காட்டும் இரட்டை வேடத்தைக் கையாண்டது. இதனால் மக்கள் முன் தேசிய தலைவர்களாக தொடர்ந்தும் தமிழரசு கட்சியே உலா வந்தது. 1975க்கு பின் குறிப்பாக 1977 தமிழர் விடுதலைக் கூட்டணி உருவான போது ஏற்பட்ட தேசிய அலை, கவர்ச்சிகரமான கோச அரசியலாக மாறியது. இளைஞர்கள் இதன் கவர்ச்சியில் கரைந்தும் கரையாத முரண்பாடுகளுடன் குழுவான போது தனிநபர் பயங்கரவாத செயல்கள் கோலோச்சின.


ஆனால் திட்டமிட்டு சிங்கள அரசால் நடத்தப்பட்ட இனக் கலவரமே, கூட்டணிக்கும் இளைஞர்களுக்குமிடையிலான பிளவை நிரந்தரமாக்கியது. இந்த இனக் கலவரங்களின் போது மரபான தேசிய கட்சியான கூட்டணி இதை எதிர்கொள்ள திராணியற்ற நிலையில், தன்னியல்பான இளைஞர் அணிகள் இதற்கெதிரான செயல்களில் துணிச்சல் உள்ள பங்களிப்பை வழங்கினர். இந்த தன்னியல்பான செயலூக்கமுள்ள இளைஞர் அணிகளில் இருந்தே சில பத்து இயக்கங்கள் உருவாகின. இளைஞர் அணி முற்று முழுதான ஆயுதப் போராட்டத்தைக் கோரின. கூட்டணி என்ற அரசியல் கட்சியின் துரோகம் அரசியல் மீதான வெறுப்பாகவும், ஆயுதத்தை ஒரு தலைப்பட்சமாக வணங்குவதும் தனிநபர் பயங்கரவாதத்தை நேசிப்பதுமாக மாறியது. இதனால் அரசியலில் முரண்பாடற்ற தனிநபர் முரண்பாடுகளுடனும், ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலும் பல குழுக்கள் உருவாகின. ஆனால் இவை அனைத்தும் இனக்கலவரம் மற்றும் தரப்படுத்தலை முன்வைத்தே, தம்மை நிலைநிறுத்தத் தொடங்கினர். ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனையை முன்வைக்கவும், அதை அடையாளம் காணத் தவறிய சாபக்கேடான நிலையில், கூட்டணியின் ஒரு வாலாக உருவான வலது குழுக்களின் அரசியல், கூட்டணியின் வலது கண்ணோட்டத்தையே தனது அரசியலாக்கியது. இந்த வலது பிற்போக்கு அரசியல் இன்று வரை, இடது தன்மை கொண்ட அரசியலாக மாறிவிடவில்லை. அனைத்து ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுக்களும் தரப்படுத்தலை முதன்மைப்படுத்தியே தமது நிலையை நியாயப்படுத்தினர்.


தொடரும்

Sunday, October 1, 2006

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

பி.இரயாகரன்

ருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு அகவயமாக உணர்கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமூக நடைமுறையில் புறவயமான அதன் விளைவு என்ன என்பதிலேயே தங்கியிருக்க வேண்டும். நடைமுறை ரீதியான கண்ணோட்டம் தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தின் முதன்மையானதும் அடிப்படையானதுமான கண்ணோட்டமாகும்"


லெனின் எடுத்துக் காட்டும் இந்த உண்மை, எல்லா சமூக நடைமுறைக்கும் விதிவிலக்கற்று இணைந்து போகின்றது. நமது சமூகக் கண்ணோட்டம் சார்ந்த எண்ணப்பாடுகளை எப்போதும் தர்க்கரீதியான நடைமுறை வாழ்வியலுடன் பொருத்திப் பார்க்கத் தவறுகின்ற போது, உண்மையில் நாம் மிக மோசமாக ஏமாற்றப்படுகின்றோம். இங்கு சமூக அறியாமையே அடித்தளமாகின்றது. இது எல்லாத் துறையிலும் விதிவிலக்கின்றி புரையோடிப்போயுள்ளது. விமர்சனமற்ற மந்தைக் குணமும், சுயவிமர்சனமற்ற வரட்டுத்தனமும் சமுதாயங்களையே அடியோடு புதைக்கின்றன. நிகழ்வுகள் ஏன், எப்படி, எதன் ஊடாக எம் முன் தோன்றுகின்றது என்ற கேள்விகளையும் தர்க்கவியல் வாதங்களையும் விமர்சன, சுயவிமர்சன போக்கில் முன்வைக்க சமுதாயம் தவறுகின்ற போது, அந்த சமுதாயம் தனது சுய அடையாளத்தை இழந்துவிடுவதுடன், அழிந்து போகின்றது. இது தமிழ் சமூகத்துக்கும் சிறப்பாக பொருந்துகின்றது. தமிழ் சமூகம் சிங்கள இனவாதத்தை எதிர்த்து நடத்தும் போராட்டம், இந்த எல்லைக்குள் தன்னை தற்காத்துக் கொள்ளமுடியாது.


தமிழ் மக்களின் சொந்த தேசியத்தை சிங்கள இனவாத அடிப்படை மட்டும் இன்று அழித்துக் கொண்டிருக்கவில்லை என்ற சமூக உண்மையை கிரகிக்க முடியாதவர்களும், அதேநேரம் அதை எதிர்த்துப் போராட முடியாத வரலாற்றுத் தலைமைகள், வரலாற்று ரீதியாக தூக்கி எறியப்படுவார்கள். இதற்கு வெளியில் இந்தக் குறுந்தேசிய அலையில் சிக்கி அதன் பின்னால் வாலை முறுக்கிக் கொண்டு ஓடுபவர்களின் வரலாற்றுப் பிழைப்பு வாதம், இந்த எல்லையைத் தாண்டி குதித்து விடாதபடி சகதியில் சிக்கிவிடுகின்றது. இன்று எம் மண்ணில் குறுந்தேசிய தமிழ் எழுச்சிகள் எல்லாம், மக்களின் அடிப்படையான தேசிய கோரிக்கைக்கு எதிராகவே இருப்பது, தமிழ் மக்களுக்கு வெட்டப்படும் மரணக்குழி தான். இன்று நடத்தப்படும் தமிழ் குறுந்தேசிய எழுச்சி இறுதியானதும் கடைசியானதுமாகும். இன்றைய சமகாலகட்டத்துக்கு பின், இது போன்ற குறுந் தமிழ் தேசிய எழுச்சி என்பது இன்றைய உலகமயமாதல் நிபந்தனையின் கீழ், ஒருக்காலும் சாத்தியமில்லை. இலங்கைத் தேசிய எழுச்சி மட்டுமே இனி வரலாற்றால் சாத்தியமானது. இன்று நடை பெறும் பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சரி, இல்லாமல் போய் யுத்தம் தொடர்ந்தாலும் சரி, சர்வதேச நிலமையும் புலிகளின் அரசியல் நிலமையும் இதைத் தாண்ட அனுமதிக்காது.


ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொள்வது, இன்றைய சமகால நிகழ்ச்சிப் போக்கில் முக்கியமான அடிப்படையான விடையமாகும். தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்ற கேள்விக்கு, போராடும் புலிகள் உட்பட யாரும் பதிலளிக்க முடியாத வகையில் அரசியலில் சூனியம் நிலவுகின்றது. தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று உணர்பவர்கள், அவை என்ன என்று விளக்க முடியாத அவலம் நிலவுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையை, யுத்தத்தின் பின்னான நடைமுறை விளைவுகளில் இருந்து புரிந்து கொள்வதும் விளக்குவதும் நிகழ்கின்றது. புலிகள் வன்முறை மூலம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி, ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாம் தமிழ் மக்களின் தலைமையாக நிலைநிறுத்திய தனிமனித வழிபாட்டுடன் கூடிய கோரிக்கையில் இருந்தும், தமிழ் மக்களின் பிரச்சனையை விளக்கும் அளவுக்கு தமிழ் மக்களின் தேசிய போராட்டம் பலவீனமடைந்து காணப்படுகின்றது.


புலிகள் தமது அதிகாரத்தை பலாத்காரமாக தமிழ் மக்கள் மேல் நிறுவ முன்பே, இனவாத ஆக்கிரமிப்பு ஒரு இனஅழிப்பு யுத்தமாக வளர்ச்சியுற முன்பே, தமிழ் மக்களின் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருந்துள்ளது. குறைந்தபட்சம் அது என்ன என்ற அடிப்படை விடையம் கூட தெரியாத ஒரு தமிழ் சமூகத்தை, தமிழ் குறுந் தேசியத்தை இன்று நாம் காண்கின்றோம். தமிழ் மக்களின் அடிப்படையான தேசியத்தை கோராத தேசியம் தான் குறுந்தேசியமாகின்றது. ஆயுத கலாச்சாரமே குறுந்தேசியமாகி அரசியல் வடிவத்தையே ஒழித்துக் கட்டியதன் மூலம், இராணுவ வாதம் சார்ந்த கோரிக்கை தமிழர் கோரிக்கையாகியது மட்டுமின்றி, அதுவே தமிழ் மக்களின் கோரிக்கையாகிவிடுகின்றது. இதனால் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகக் கோரிக்கை முற்றாக மழுங்கடிக்கப்பட்ட நிலையில், இன்று அதை மீளவும் அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தி முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிவிடுகின்றது.


தமிழ் தேசிய பிரச்சனையை தமிழ் மக்கள் ஒருவிதமாகவும், சிறுபான்மை தேசிய இனப்பிரிவுகள் வேறுவிதமாகவும் புரிந்து கொண்டனர், புரிந்து கொள்கின்றனர். இதுபோல் சிங்கள மக்களும் புரிந்து கொண்டனர், புரிந்து கொள்கின்றனர். இது போன்று வர்க்கம், சாதி, பால் என்ற பிளவுகளில் கூட வெவ்வேறு தளத்திலும் வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டனர், புரிந்து கொள்கின்றனர். ஆனால் ஆதிக்க தமிழ் பிரிவுகள் தேசியப் பிரச்சனையை தமது நலனில் நின்று அதை பொதுமைப்படுத்தி திரித்து விடுவதன் ஊடாக, தமது நலன்களை தக்க வைக்கின்றனர். இதற்கு இன்றைய தமிழ் மீடியாக்கள் அனைத்தும் ஒரேவிதமாக ஒத்தூதும் பினாமியாகி வக்காலத்து வாங்குகின்றனர். தமிழ் தேசிய மற்றும் அதற்கு வெளியிலும் எங்கும் விமர்சன தன்மையற்ற மந்தைக் குணம் ஒரு நோயாகி, அதுவே ஒரு சமூகத்தை அழிக்கும் அளவுக்கு இன்று தமிழ் பரப்பு காணப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி இவை நிகழ்கின்றன என்று கேள்விகளை கேட்பதை விடுத்து, அரோகரா போடுவதில் தேசியம் மலட்டுத்தனத்தை பண்பாடாக்கியுள்ளது. இதற்கு இன்றைய புத்திஜீவிகள் நடைமுறை ரீதியாக சமூகத்தை மாற்றியமைக்க போராட வேண்டும் என்ற சமூகக் கடமையை கைவிட்டு, மந்தைகளாகி நாய் போல் வாலாட்ட தொடங்கியதில் இருந்து, தேசியத்தை கற்பழிப்பது ஒரு முற்போக்கான செயல் என்ற நடைமுறையை பொதுமைப்படுத்தியுள்ளனர். இந் நிலையில் நாம் பொதுவான தளத்திலும், அதற்கு வெளியில் குறிப்பாகவும் தமிழ் மக்களின் பிரச்சனையை ஆராய்வோம்.

தொடரும்

இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும் என்னும் நூலின் கட்டுரைகளின் தொகுப்பு தொடர்ச்சியாக பகுதியாக பகுதியாக பிரசுரிக்கப்படும்.