தமிழ் அரங்கம்

Saturday, March 11, 2006

அண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர்

அண்ணை கோவியாதைங்கோ! அண்ணை! அண்ணை மன்னிச்சுடுங்கோ! அண்ணை!

பி.இரயாகரன்
11.03.2006

ண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர். இதைத் தான் எனக்கு பிரஞ்சு ஏகாதிபத்தியம் உத்தியோகபூர்வமற்ற வகையில் கூறுகின்றது. அவர்கள் கூறியதற்கு பின்னால் எதிர்வினையின்றி, நிலைமை அமைதியாகவே உள்ளது. ஆனால் புலியெதிர்ப்பு கும்பல் ஜனநாயகத்தின் பெயரில் எச்சரிக்கை விடுகின்றது.

புலிகள், தமது சொந்த மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத போது, நபர்களை அவதூறு செய்யவென நிதர்சனம் டொட் கொம் என்ற இணையம் ஒன்றை வைத்துள்ளனர். இதேபோல் புலியெதிர்ப்பு கும்பல் தங்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலமாகும் போது, அவதூறு புரியவென நெருப்புக் டொட் கொம் என்ற இணையத்தை வைத்துள்ளனர். அறிவு, நேர்மை எதுவுமற்ற வகையில் தூற்றுவது மூலம், தமது சொந்த பாசிச அரசியலை தக்கவைக்க முனைகின்றனர். இது சாத்தியமில்லாத போது கொலைகளை செய்கின்றனர். உண்மையில் இரு பிரதான போக்கைக் கொண்ட புலிசார்பு, புலியெதிர்ப்பு இணையங்கள் மற்றும் ஊடகங்கள், தமது மையங்களுக்கு இடையில் பரஸ்பர தொடர்பையும் இணைப்பையும் அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன. இதற்கு வெளியில் இவை மாற்றுக் கருத்தை அங்கீகரிப்பதில்லை. மாறாக அவதூறையையே அரசியல் ஆயுதமாக கொள்கின்றனர்.

இந்த வகையில் நெருப்பு கொம் 05.03.2006 அன்று எனக்கு எதிராக அவதூறு ஒன்றைக் கட்டமைத்தது. மாற்றுக் கருத்துக்காக புலம்பியழும் புலியெதிர்ப்பு நடிகர்கள், நியத்தில் எனது கருத்தை மாற்றுக் கருத்தாக ஆய்வு செய்ய முடியாது போகின்றது. எழுதுவதை நிறுத்தக் கோரும் இவர்கள், ~~ஜனநாயக வேஷம் வேறு போடுகின்றனர்.

"ஜனநாயக" (நாய்) வேஷம் போட்டு வெளியிடும் தமது சொந்த அவதூறில்

"அண்ணன் றஜாகரனுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்! (முன்னாள் NLFT உறுப்பினர், சமர்; மற்றும் தமிழ்சுற்று இணையத்தள ஆசிரியர்.)


அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவாகள், ஐரோப்பாவில் மிகச்சிலரே. நீங்கள் ஒரு சுத்தமான மார்க்சியர் என்பதனடிப்படையில், உங்களைப் பொறுத்தளவில் உங்களுக்கத்தெரிந்த மார்க்சியத்திற்கப்பால்
வேறெந்த மனுதர்மமோ, நியாயமே, தத்துவங்களே இருக்க முடியாதுதான். அண்ணா!

உங்களைப்போல் சாதி, மத, இன, தத்துவ, அரசியற் சுத்தம் கடைப்பிடித்தோர் அனைவரும் மனிதகுலத்தின் அழிவிற்கே வழி வகுத்தனர்.


கிட்லர், பொல்பொட், பிரபாகரன், என மனித குல அழிவிற்கு இட்டுச்சென்றோர் பட்டியல், வரலாற்ரில் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இன்று பிரபாகரனின் இடத்தில் நீங்கள் இருந்தால், அவர் செய்வது போல்தான் நீங்களும் நடந்து கொண்டிருப்பீர்கள். ஓர் வித்தியாசம், அவர் தமிழ்தேசியமென்ற பெயரால் கொடூமையிழைக்கிறார், நீங்கள் தமிழ்தேசியத்துடன் மார்க்சியத்தையும் பயன்படுத்தி உங்கள் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப்படுத்துவீர்கள் நியாயப்படுதினீர்கள். (உங்களுக்கு இது ஒன்றும் புதிதல்லவே)
இதை நான் ஏன் சொல்லுகிறொனென்றால், அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக்கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள். இத் தீர்ப்புகளுக்கு எந்த விதமான ஆதாரங்களையும் நீங்கள் முன் வைப்பதில்லை. உங்களுக்கு இம் மனிதர்கள் மீது, உங்கள் தீர்ப்பை செயற்படுத்தும் வாய்ப்பு மட்டும் இருக்குமானால், இவர்களில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.
ஏந்த வித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், உடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடயவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்}சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது. ஏனெனில் உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச்சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே.. இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது, நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகிPனீர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே.


இன்று வரையும் இதைப்பற்றி ஒருவருக்கும் நாம் பகிரங்கப்படுத்தியது கிடையாது. (உங்கள் உறவினர் காலம் சென்ற நண்பன் கலைச்செல்வனைத் தவிர. அவர் பகிரங்கமாக உங்களை கொலைகாரன் என அழைத்தர்; நாம் பலர் கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்துள்ளோம், அதனால் இன்று எல்லாம் இழந்து மன அழுத்தத்துடன் அகதிகளாயுள்ளேம். ஏம்மைப் போன்று தான் நீங்களும் எனும் புரிந்துணுர்வில் தான் நம்மிற் பலர் உங்களை பகிரங்கப்படுத்தியது கிடையாது. அது மட்டுமல்ல எங்களைப்போன்று, உங்களுக்கும் குழந்தைகளும் குடும்பமும் உண்டு என்ற மனிதாபிமானத்தில்தான்.

ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவனத்தில் கொண்டது கிடையாது. இனியாவது மனிதவிழுமியங்களையும், மனிதாபிமானத்தையும் கருத்திற் கொண்டு உங்கள் விமர்சனத்தை நாகரீகமான மொழியில் முன்வைக்குமாறு வேண்டுகிறேன். அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளது அண்ணே.


புரிந்துணுர்வையும் மனிதாபிமானத்தையும் எதிர்பாற்கும் தம்பி சுந்தரமூர்த்தி சகாதேவன்(சின்னத்தேவா-ஒட்டி)"

அண்ணை! நாங்கள் உங்களை அண்ணை என்று அழைப்பதே பொருத்தமண்ணை. அவதூறுகளைக் கட்டமைப்பதில் நீங்கள் அண்ணை தான், அண்ணை!

அண்ணை மன்னித்துக் கொள்ளுங்கோ. உங்கட புலியெதிர்ப்பு கும்பலின் பாசிசத்தை அம்பலப்படுத்துவதற்காக, மன்னித்துக் கொள்ளுங்கோ அண்ணை. மிரண்டுவிடாதையுங்கோ அண்ணை,
ஊரெல்லாம் கொலைக்களமாக்கிவிடாதையுங்கோ அண்ணை.


ஊர்பெயர் தெரியாத அனாதை அண்ணையே! கொலைகார அண்ணைமார்களே கையெடுத்து கும்பிடுறம் அண்ணை. அண்ணை! எப்படி அண்ணை! உங்களை நாங்கள் எப்படி அண்ணை எழுதோணும். அதையும் சொல்லுங்கள் அண்ணை. அண்ணை! உங்கடை ஜனநாயகம், எப்படி அண்ணை, எழுதச் சொல்லுதண்ணை!

உங்கடை புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கத்திடம் கேளுங்கண்ணை. சிறை மீண்ட செம்மல் ஜெயதேவனிடமும் கேட்டுச் சொல்லுங்க அண்ணை. முடிந்தால் சுவிஸ்சில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிற அந்த அண்ணையிட்டையும் கேட்டுச் சொல்லுங்கோ அண்ணை! கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் கொலை செய்து திரிகின்ற கருணா அண்ணையிட்டையும் கேட்டுச் சொல்லுங்கோ அண்ணை!

அண்ணைமார்களின் அரசியலற்ற புலியெதிர்ப்பு அவதூறுகளே இவை. புலி எதிர்ப்புக் கும்பலின் மக்கள் விரோதச் செயலை அம்பலப்படுத்தி எழுதுவதை நிறுத்தக் கோரும் எச்சரிக்கையே, இதன் உள்ளடக்கம். அரசியலற்ற கூலிக் கும்பலிடம் இப்படியான அவதூறுகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இது போன்ற அரசியலற்ற அனாதைகளின் புலம்பலுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்று சில நண்பர்கள கூறினார்கள். இதனால் இதை எழுதுவதில்லை என்று இருந்தேன். அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாத திடீர் ஜனநாயகவாதிகள் சிலர், இதை ஈமெயில் மூலம் உலகமெங்கும் அனுப்புகின்றனர். இந்த அரசியல் ஓடுகாலிகளுக்கும் பதிலளிக்கும் வகையில், அம்பலப்படுத்த வேண்டும் என சிலர் கோரினர். அத்துடன் இந்த ஊர்பெயர் தெரியாத இந்த அனாமதேய விபச்சார தரகர்களுக்கு அவர்களின் அரசியலை அம்பலப்படுத்தவும் இது உதவுகின்றது.

1. முதலில் என்மீதான எந்த அவதூறையையும் நீங்கள் கூறமுன்னர், நான் எழுப்பும் அரசியலுக்கு முதலில் நேர்மையாக பதிலளிக்க வேண்டியதே அறிவு மற்றும் நேர்மையாகும். இது உங்களின் புலியெதிர்ப்பு கும்பல் அரசியலில் கிடையவே கிடையாது. பதிலளிக்க முடியாத போது, அவதூறைச் சோடிப்பது தொடங்குகின்றது.

2.அரசியல் ரீதியாக எனது அரசியலுக்கு பதிலளித்த பின்புதான், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் என்மீது இருந்தால் அதை முன்வைக்க வேண்டும்.
இங்கு அரசியல் ரீதியாக பதிலளிக்கும் நேர்மையும், அந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. அரசியல் இல்லாதவரை, தனிப்பட்ட நேர்மையான குற்றச்சாட்டும் கிடையாது. இதனால் நேர்மையற்ற அவதூறுகள் பொழியப்படுகின்றது. இது புலி அரசியல் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அரசியலும் கூட.

அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாத ஒரு நிலையில், தம்மை இனம் காட்டமுடியாத நிலை உருவாகி, அரசியல் அனாதைகளாகி வாயில் வந்தபடி எல்லாம் தூற்றுவதால் எதுவும் நடந்துவிடாது. அரசியல் அவதூறுகளை நான் சந்திப்பது, இது முதலுமல்ல, இதுவே இறுதியுமாக இருக்காது. மக்கள் விரோத அரசியல், அரசியல் காழ்ப்புக் கொள்ளும் போது அவதூறுகள் தான் அவர்களின் தங்குமிடமாகிவிடுகின்றது.

என் மீதான இவை போன்ற அவதூறுகளுக்கு கடந்தகாலத்தில் தெளிவாக பதிலளிக்கப்பட்டது. இதைவிட நான் யார் என்று அனைத்து உலகமும் தெரிய எழுதுபவன். அதற்காக நடைமுறையில் வாழ்ந்து, அதற்காக போராடுபவன். எனவே உண்மைக்கும், நேர்மைக்கும் விளக்கு பிடித்துக்காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுடைய "ஜனநாயக" மூகமுடிக்கு பின்னால் உள்ள ஜனநாயக விரோத வக்கிர முகத்தை, உலகத்துக்கு இதன் மூலம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

உங்களுடைய இந்த "ஜனநாயகம்" எதைச் சொல்ல முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பலைப் பற்றி எழுதுவதை நிறுத்து என்பதையே எனக்கு உங்களுக்கும் சொல்ல முனைகின்றது. அப்படி யாராயினும் மீறி எழுதினால் அவதூறுகளை பொழிவோம் என்கின்றது. இதைத்தானே எமது கடந்தகால இயக்கங்கள் முதல் இன்று புலிகள் வரை கூறுகின்றனர். இதைத்தான் புலியெதிர்ப்பு அணியும் மீண்டும் கூறுகின்றது. இதற்கு அவர்கள் வழங்கிய பெயர் "ஜனநாயக" மாகும். நெருப்பு கொம் புலியெதிர்ப்பு கும்பலின் ஒரு அங்கம். பரஸ்பரம் புலியெதிர்புக் கும்பலின் ஒருங்கிணைவில் உள்ளது. இணையங்கள் பரஸ்பர தொடர்பில் இணைக்கப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாக எதுவுமற்ற லும்பன்களை அடிப்படையாக கொண்டு, வெறும் புலியெதிர்ப்பில் பாசிசத்தையே அரசியலாக கொண்டு இயங்குகின்றது. கருணா செய்யும் தொடரான பச்சைக் கொலைகளை, நியாயப்படுத்தும் மற்றொரு புலியெதிர்ப்பு பாசிட்டுக்கள் தான் இவர்கள்.
இந்த பாசிட்டுக்கள் கூறுகின்றனர் "அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக் கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள்." என்று புலம்புகின்றனர். ஐயோ பாவம்.

இப்படி கூறாமல் எப்படி, உங்களை எப்படி அண்ணை கூறுவது. இதில் என்ன தவறு உண்டு. அதையாவது சொல்லியிருக்கலாமே அண்ணை. நீங்கள் இப்படி இல்லை என்று நிறுவியிருக்கலாமே அண்ணை. அண்ணைமார்களே!
சரி நாங்கள் சில உதாரணங்கள் மூலம் நீங்கள் கோவிக்க மாட்டீர்கள் என்று நம்பி, நிறுவிக் காட்டுகின்றோம் அண்ணை.


அண்ணை! பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடம் ஜெயதேவன் குலாவுவது என்ன அண்ணை? அதற்கு என்னவென்று சொல்வது அண்ணை. சொல்லுங்க அண்ணை. சிவலிங்கம் ரி.பி.சியில் 02.03.2006 மிரட்டி கூறியபடி, பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடம் 07.03.2005 வழங்கிய மகஜருக்கு என்ன பெயரண்ணை? மேற்கின் சட்டங்கள் படி, இவர்கள் ஏன் அண்ணை போராட முடியவில்லை அண்ணை! விசேட சலுகைக்காக, ஏகாதிபத்தித்தின் மலத்தை ஏன் அண்ணை நக்குகினம்! தெரிந்தால் சொல்லுங்கோ அண்ணை!

உங்கடை ஜெர்மனி ரி.பி.சி ஆய்வாளர் ஜெகநாதன், ஜெர்மனி பொலிசாருக்கு நாங்கள் தகவல் கொடுப்பதாக கூறுகின்றரே, அதற்கு பெயர் என்ன அண்ணை? டென்மார்க் குமாரதுரை ஏகாதிபத்தியத்துக்கு தகவல் வழங்குவதாக அவரே கூறுகின்றாரே, அது என்ன அண்ணை.

ஏகாதிபத்தியத்துடன் உள்ள தொடர்புக்கு என்ன பெயர் அண்ணை? இந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கும், இந்த நாட்டு மக்களையும் சாராத அனைத்தும் மக்கள் விரோதமண்ணை. உங்களுக்கு உது எங்கே தெரியப்போகுது அண்ணை? கோவியாதையுங்கோ அண்ணை! மன்னித்துக் கொள்ளுங்கோ அண்ணை!

சரி புலிகளிடம் இருந்து பிரிந்த கருணா, எப்படி அண்ணை இந்திய கைக்கூலியாகவே உருவான ஈ.என்.டி.எல்.எப் வோடு ஒப்பந்தம் செய்ய முடிந்தது அண்ணை! உங்கடை கருணா அண்ணையும் இந்தியக் கைக் கூலியாகிவிட்டாரா அண்ணை? எப்படி அண்ணை இது சாத்தியம்? கோவிக்காமல் சொல்லுங்க அண்ணை! எப்படி இது ஏற்பட்டது அண்ணை! அவரின் இந்திய சார்பு அறிக்கைகள், மாவீரர் உரையெல்லாம் எப்படி அண்ணை சாத்தியம்! கோவிக்காமல் ஊருக்கு அதைச் சொல்லுங்கண்ணை.

இதையா நாம் எழுதக் கூடாது என்று அவதூறு பொழிந்து மிரட்டுகின்றீர்கள் அண்ணை? எப்படி அண்ணை! நாறுகின்ற இந்த விடையத்தை சொல்லாமல் விடமுடியும் அண்ணை. உங்களைப் போலே அண்ணை, மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்யமுடியாது அண்ணை. துரோகத்தை சொல்வதால் கோவியாதையுங்கொ அண்ணை!

ஏகாதிபத்தியம், பிராந்திய வல்லரசு, இலங்கை பேரினவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடும், அவர்களுடன் கொண்டுள்ள உங்கள் காதல் உறவை என்னவென்று சொல்வது அண்ணை! தெரிந்தால் சொல்லுங்கண்ணை! இவை அனைத்தும் மக்கள் விரோத போக்கிலானதே என்பதையே தெளிவாக நிறுவுகின்றது. மக்களின் எதிரிகளுடன் நீங்கள் கொண்டுள்ள காதல், அரசியல் விபச்சாரத்தைத் தவிர வேறு எதையண்ணை நிறுவுவது. எம் மீதான அவதூறுகள் மூலம், இந்த நாற்றத்தை மூடிமறைக்க முடியாதண்ணை. எதார்த்தமும், உங்கள் சொந்த நடைமுறை சார்ந்த விபச்சாரத் தரகுத்தனமும், அதை அம்பலமாக்கிவிடுகின்றது.

1.புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் கொண்டவர்களை, புலியெதிர்ப்பு கும்பல் என்று அழையாமல் எப்படி அழைப்பது அண்ணை. புலியெதிர்ப்பை விட்டால் உங்களிடம் வேற என்ன அரசியல் தான் உண்டு? அதைச் சொல்லுங்க அண்ணை.

2.ஏகாதிபத்திய அடிவருடிகள் என்று நாம் சொல்வது உங்களுக்கு எந்த வகையில் பொருந்தாது அண்ணை?. அதைச் சொல்லுங்க அண்ணை. ரி.பி.சி வானொலியில், உங்கள் கும்பல் ஏகாதிபத்தித்துடன் செய்துவரும் விபச்சாரத்தை பெருமையாக அறிவிக்கின்றார்களே அண்ணை. இதை அடிவருடித்தனம் என்று தான் சொல்லாமல் வேறு எப்படித்தான் சொல்வது. புலியெதிர்ப்பு இணையங்கள் ஏகாதிபத்தியத்துடன் கொண்டுள்ள அரசியலைத்தானே பெருமையுடன் பிரசுரிக்கின்றது. அடிவருடித்தனத்தை அடிவருடித்தனம் என்று தானே சொல்வது.

3.மக்கள் விரோதிகள் என்று உங்களை நாங்கள் சொல்லுகின்றோம் என்றால் என்ன தவறு. நீங்கள் மக்கள் விரோதியில்லை என்றால் அதை நிறுவ முயலவேண்டும். மக்களுக்காக நாம் எப்படி, மக்கள் அரசியலை முன்னெடுக்கின்றோம் என்று நிறுவுங்கள். புலிகளும் தான் மக்கள் என்கின்றார்கள். நீங்களும் தான். எப்படி? அண்ணை!

4.மக்கள் விரோதத்தை வாழ்வாக கொண்ட அரசியல் பொறுக்கிகள் ஜனநாயகம் பேசினால், அவர்கள் ஜனநாயக விரோதிகள் தான். மக்களுக்காக எந்த அரசியலையும் முன்னெடுக்காத பொறுக்கிகள், ஜனநாயகத்தின் முதல்தரமான விரோதிகள் தான்.

5.கொலை கொள்ளை செய்தவர்கள் என்று நாம் கூறுகின்றோமே ஏன்? கடந்தகால இயக்க வரலாறு, அதைத் தான் சுமத்துகின்றது. செய்தவன் திருந்த முடியாதா எனின் முடியும். எப்படி திருந்த முடியும்? கடந்தகால இயக்க அரசியலை நிராகரிப்பதில் தொடங்கி, மக்கள் அரசியலை முன்னெடுத்தலாகும்.

கடந்தகால மக்களுக்காக உண்மையாக போராடியவர்களை முன்னிலைப்படுத்தி, தாம் இழைத்த குற்றங்களை ஏற்றுக் கொள்வதே அடிப்படையான சுயவிமர்சனம். அதாவது மக்களுக்காக வாழ்தல், போராடுதல், மக்களுக்கு எதிரான அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்து போராடுதல், இது தான் சுயவிமர்சனம். இது புலியெதிhப்புக் கும்பலிடம் கிடையாது.

6.பெண்ணியம், இலக்கியம், மனிதநேயம் என்று புலம்பும் உங்கள் அனாமதேய அவதூறுகளுக்கே எதிர்மாறானது. சரி அது என்ன சாமான் என்று சொல்லுங்கள். கிலோவுக்கு விலையா பேசுகின்றீர்கள்.


இப்படி வரிக்குவரி இந்த புலியெதிர்ப்பு கும்பலின் ஜனநாயக விரோத வக்கிரத்தை அம்பலப்படுத்த முடியும். இவை முன்பு எழுப்பி பதிலளிகப்பட்டவைதான். இந்த அரசியலுக்கு இவர்கள் பதிலளிப்பதில்லை. அவதூறுகளைத் தான் பதிலாக தருவது உங்கள் அரசியல் மரபு. மலிவான இழிவான அவதூறுகளை பொழிவதே நிகழ்கின்றது. நிதர்சனம் டொட் கொம் 100 சதவீகிதம் என்றால் நீங்கள் 99 சதவீகிதம். உங்களுக்கு அவர்கள் அண்ணைதான். அண்ணை கோவியாதையுங்கோ, அவர்களை விட உங்களை தம்பி என்ற சொன்மைக்காக. ஆனால் அண்ணைமார்கள் தான் நீங்களும். நீங்களே சொல்லுகின்றீர்கள்

1 "உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச் சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே."

என்ன அண்ணை இப்படி சொல்லிட்டீங்கள். பிரான்சில் அனைவருக்கும் இது அப்பட்டமான பொய் என்பது தெரியும் அண்ணை. அண்ணை! உங்கடை புலியெதிர்ப்பு பாரிஸ் குஞ்சுகளிடம் இதைக் கேட்டு நல்லாகத் தெரிந்து கொள்ளுங்கள் அண்ணை. சரி நீங்கள் சொல்லுகின்ற படி இருக்கின்றது என வைத்துக் கொள்வோம் அண்ணை. நாங்கள் கூலிக்கு வேலை செய்கின்றவர்கள் அண்ணை. தொழிற்சட்டத்துக்கு உட்பட்டு வேலை செய்பவர்கள் அண்ணை. உங்களைப் போலே ஏகாதிபத்தியத்துக்கு அடிவருடி தொழில் செய்பவர்கள் அல்ல அண்ணை. எதற்கு எடுத்தாலும் ஏகாதிபத்தியதிடம் ஒடிச் சென்று அழுபவர்கள் அல்ல அண்ணை. உங்கடை கருணா அண்ணை இன்று செய்வது போல், கூலிக்கு கொலை செய்கின்ற தொழில் இல்லை அண்ணை.

உங்கடை கருணா அண்ணை உழைத்தா வாழ்கின்றார்! அண்ணை! நாங்கள் ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூலிக்கு வேலை செய்யிறம் அண்ணை. உங்களைப் போல மற்றவனின் உழைப்பில் நாம் வாழ ஆசைப்படவில்லை அண்ணை. அண்ணை! நாம் கூலிக்கு உழைக்கும் போது, அது புலி பினாமியாக இருந்தால் என்ன அல்லது தனியார் முதலாளியாக இருந்தால் என்ன, எல்லாம் எமக்கு ஒன்று தான் அண்ணை. நாம் வேலை செய்வதற்கு கூலி வாங்கிறம் அண்ணை. இதற்கு முன்னமும் கட்டிடத் தொழிலாளியாகத் தான் அண்ணை வேலை செய்தோம். அண்ணை! அப்போதும் நாங்கள் உங்களுக்கு எதிராக போராடினோம் அண்ணை.

2. "இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது." என்று கேட்கின்றீர்கள். இதை உங்கடை கருணா அண்ணாச்சிட்டை கேளுங்கோ அண்ணை. கருணா புலியிலிருந்த போதே, எல்லாவற்றையும் மீண்டும் புலிகள் கொள்ளையிட்டவர்கள் அண்ணை. உங்கடை அண்ணை முன்பு ஓடிய பஜிரோ ஜீப்புகள் (ஒரு கோடி ரூபா) எல்லாம் இப்படியான காசிலேதான் வாங்கினவை அண்ணை. அங்கே கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ அண்ணை.

கருணா அண்ணை எப்படி இண்டைக்கு சாப்பிடுகின்றார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ! அண்ணை! கருணா அண்ணை மாவீரர் உரையெல்லாம் எப்படி அண்ணை, யார்ரை காசிலே ஒளிபரப்புகின்றார் என்ற கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ அண்ணை. பச்சையாக கேட்டதற்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ அண்ணை.

3 "நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகீனிர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே.

நல்லது அண்ணை. புலியின் பிடியில் இருந்து விடுபடவில்லை அண்ணை. நாங்கள் சிறை உடைத்து தப்பி வந்தனாங்க அண்ணை. தெரியாதோ அண்ணை உங்களுக்கு!

அண்ணை! நீங்கள் சொல்லுவதே சரி என்று வைப்போம். காட்டிக் கொடுத்த அந்த நபாகள் எல்லாம் யார் அண்ணை. உங்களுக்குத் தானே அது தெரியும் அண்ணை. சொல்லுங்கோ அண்ணை! தனிப்பட்ட அந்த ஒப்பந்தம் என்னவென்று உங்களுக்குத் தானே தெரியும் அண்ணை. அது என்ன ஒப்பந்தம் அண்ணை.

கொலை என்கின்றீர்கள், நீங்கள் செய்த கொலைகளைச் சொல்லுறீங்களா!. அதை மற்றவன் மேல் போடும், உங்கடை அன்றாடச் செய்தியைச் சொல்லுறீங்களா! அண்ணை. உலகம் அதை நம்புவதில்லை அண்ணை. அன்றாடம் கொலைகளை புலியெதிர்ப்பு கும்பலும், புலியும் மாறிமாறி கூறுவது போல் சொல்ல நினைக்கின்றீர்களோ அண்ணை.
அது அவியாது அண்ணை. நாங்கள் ஊர் அறிய வாழ்பவர்கள் அண்ணை. உழைத்து போராடி வாழ்பவர்கள் அண்ணை. எமக்கு எதிரான அவதூறால் எதையும் நிறுவமுடியாது அண்ணை. உங்களைப் போல் ஒளித்து நின்று வாழ்பவர்கள் அல்ல அண்ணை. எமது வாழ்க்கை பகிரங்கமானது அண்;னை. நாம் வாழ்ந்து காட்டுபவர்கள் அண்ணை. உங்களைப் போல் திடீர் ஜனநாயகத்துக்கு வந்தவர்கள் அல்ல அண்ணை. கடந்த 25 வருடப் போராட்டம் பலரறிய உண்டு அண்ணை.

கல்வெட்டு முதல் கொலைகள் என பலவற்றை நாம் சந்தித்தவர்கள் அண்ணை. ரெலோ 1985 இல் கண்ட இடத்தில் சுட உத்தரவு இருந்தது அண்ணை. பிளாட் என்ன கொல்ல வாமதேவனையே அனுப்பியது அண்ணை. புலிகள் வதைமுகாமில் கொல்ல வைத்திருந்த போது தப்பியவன் அண்ணை. ஆதாரப+ர்வமாக அதற்கு எதிரான உரைகள் பத்திரிகை செய்திகள் எல்லாம் உண்டு அண்ணை. புலிகள் அதன் பின் கொல்லமுயன்று தோற்றவர்கள் அண்ணை. கல்வெட்டு முதல் பல அவதூறுகள் முன்பே பல உள்ளது அண்ணை. கவிஞர் ஜெயபாலன் சுவடுகளில் அவதூறுகள் பொழிந்தவர் அண்ணை. எனது நேர்மையான போராட்டத்தின் முன், வெற்றி பெறாது இவையெல்லாம் தோற்றுப் போனது அண்ணை.

4. "எந்தவித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், ஊடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடையவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்}சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது.


எப்ப அண்ணை நித்திரையாலே எழும்பி ஜனநாயகம் பேசகின்றீர்கள். அண்ணை இதற்கு ஒரு வரலாறு உண்டு அண்ணை. அதை தெரிந்துகொண்டு கதையுங்கோ அண்ணை. அண்ணை உங்களைப் போல் நாம் திடீர் ஜனநாயகவாதிகள் அல்ல. நீங்கள் எல்லாம் ஜனநாயகம் பேசாது, கொலை அரசியல் செய்த போதே உங்களை எதிர் கொண்டவர்கள் நாங்கள் அண்ணை.
நீங்களே அண்ணா! என்று விழித்து சொல்லுறீங்கள் "அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவர்கள், ஐரோப்பாவில் மிகச்சிலரே. என்கின்றீர்கள். பிறகு "மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? என்று கேட்கின்றீர்கள். என்ன சுத்துமாத்தா செய்றீங்க அண்ணை. என்ன இது உங்கள் தொழிலா அண்ணை.

நாங்கள் என்ன செய்தோம் என்பதற்கு எமது இணையத்தில் உள்ள, 1000 மேற்பட்ட கட்டுரைகள் சாட்சியாகவே உள்ளது. புலிகளின் அனைத்து மக்கள் விரோத விடையங்களையும், அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக யாரையும் விட அதிகமாக விமர்சித்தவன் இலங்கையில் நான் மட்டும் தான். மக்களுக்கு எதிரான அனைத்தையும் நான் விமர்சிக்கின்றேன். உங்களின் மக்கள் விரோத ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தையும் நாம் விமர்சிகின்றோம்;. எம்மீதான அவதூறுகள் மூலம் இதை மூடிமறைக்க முடியாது. இந்த அவதூறுகளைக் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை.

"அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளாது அண்ணே " என்று மிரட்டாதையுங்கோ அண்ணை. உங்கடை புலியெதிர்ப்பு மிரட்டலைக் கண்டு நாங்கள் ஒடுங்குபவர்கள் அல்ல. நீங்கள் மிரண்டு ஓடக்கே கவணம்; அண்ணை. மிரண்டு ஒடும் போது, அவதூறால் (தூசணத்தால்) புணர்ந்து போடதையுங்கோ அண்ணை. கண்ட மரங்களை (பெண்களை) கற்பழிச்சு போடதையுங்கோ அண்ணை. கவனம் அண்ணை! மிரண்டு தறிகெட்டு ஓடும் போது மிருங்களை கொன்று (மாற்றுக் கருத்துக்களை) போடாதையுங்கோ அண்ணை. கவனம் அண்ணை. மிரண்டு ஓடக்கே புலியெதிர்ப்பு பைத்தியம் பிடிச்சிடும் அண்ணை. கவனம் அண்ணை! கொஞ்சம் ஓடக்கே சிந்தியுங்க அண்ணை. நிதானமாக ஒடுங்கண்ணை.

எனக்கு எதிரான அவதூறுகளுக்கு முன்பு பதிலளிக்கப்பட்ட கட்டுரைகள்

1. கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்றவர்களின் நடைமுறை தொடர்பாக

2. மக்களின் நலன்களை முன்வைக்காத போராட்டங்கள் முதல் தியாகங்கள் வரை விதிவிலக்கு இன்றி (அரசியல்) அனாதைகளையே உருவாக்கின்றது

3. ஆயிரம் கல்வெட்டுகளை வெளியிட்டாலும் ஒடுக்கப்பட்டமக்களின் வர்க்கப் போரை யாராலும் சேறடிக்க முடியாது!Tuesday, March 7, 2006

மக்களின் எதிரிகளை பண்போடு நாகரிகமாக அணுக முடியுமா?

மக்களின் எதிரிகளை பண்போடு நாகரிகமாக அணுக முடியுமா?

பி.இரயாகரன்
07.03.2006


சிலர் எமது விமர்சன மொழி பற்றியும், விமர்சனப் பண்பாடு பற்றியும், விமர்சன நாகரிகம் பற்றியும் கூட எம்முடன் முரண்படுகின்றனர். நாம் ஒருமையிலும் அஃறிணையிலும் (சிலரைக் குறித்து) விவாதிப்பதையும், மிருகங்களுடன் ஒப்பிட்டு எழுதுவது சார்ந்து சிலர் தமது அதிருப்தியை வெளியிடுகின்றனர். இதை மொழியின் பெயரால், தத்தம் சார்புத் தன்மையாலும், விடையத்தின் மீதான கவனத்தை இது திசை திருப்புவதாகவும், இன்னும் பலவாறாக கூற முனைகின்றனர்.
குறிப்பாக அஃறிணையில் இனம்காட்டி அம்பலப்படுத்துவதை பலர் ஆட்சேபிக்கின்றனர். இப்படி எழுதலாமா என்று கேட்கின்றனர். மொழியில் இப்படி எழுதுவதே தவறு என்கின்றனர். இப்படி கூறுபவர்கள் சிலர் எழுத்தாளனுக்கு இப்படித் தான் எழுத வேண்டும் என்று கடிவாளம் போடக் கூடாது என்று கூறும் ஜனநாயகவாதிகள்.

முன்பு பலதரம் நான் இது பற்றி விவாதித்துள்ளேன். நாயை நாயென்று தான் சொல்ல முடியும். நாயைப் போல் வாழ்பவனை எப்படித் தான் நாம் கூறமுடியும். பன்றியை பன்றியென்று தான் சொல்ல முடியும். மிருக குணத்தை கொண்டுள்ளதால் ஒரு மிருகத்தை மிருகம் என்று அழைக்க முடியுமென்றால், குறித்த மிருகத்தின் குணத்தை மனிதன் தனது குணமாக கொள்ளும் போது நாம் வேறு எப்படித்தான் அழைக்கமுடியும்.

தேசியம் என்றும், ஜனநாயகம் என்றும் மனிதர்களின் கழுத்தையே வெட்டி அனாதரவாக வீதியில் எறிவதை நாம் எப்படி பண்பாகவும் நாகரிகமாகவும் விளித்து எழுதமுடியும். எப்படித்தான் முடியும், நீங்களே கூறுங்கள். இதை ஆதரித்து கொள்கை விளக்கம் வழங்குபவனை எப்படி நாம் பண்பாக விளிக்க முடியும். வெட்டும், கொத்தும் மட்டுமல்ல, மனித அவலங்களால் சமூகத்தை நாறடிக்கும் இந்த போக்குடன், நாம் எப்படி எந்த முகத்துடன் அனுசரித்து இணங்கிப் போகமுடியும். இதையே விதியென்றும், இதுவே இலட்சியமென்று திணிப்பவனை எப்படி நாம் அங்கீகரித்துப் போகமுடியும். மனிதர்கள் குதறப்படுகின்ற நிலையில், இரத்தம் வடியும் வாயில் தொட்டு எழுதும் கரங்களை எப்படி நாம் பண்போடு நாகரீகமாக கைகுலுக்கி அணுகமுடியுமா?. நீங்களே சொல்லுங்கள். சகமனிதனை மனிதனாக மதிக்க மறுத்து, வக்கிரத்துடன் வன்மம் புரியும் ஒருவனை நாம் சக மனிதனாக கருதி பண்பாட்டுடன் அணுகமுடியுமா?

தேசியம் என்ற பெயரில் உலகெங்கும் போதைவஸ்துகளை காவித்திரிந்து பணம் பண்ணியவர்களையும், மேற்கில் உள்ள மக்களுக்கு போதைவஸ்து கொடுத்து சீரழித்தவர்களை எப்படி நாம் பண்பாட்டுடன் நெருங்கமுடியும். அவர்கள் இன்று புலித் தேசியத்துக்கு நிதி கொடுக்கும் தேசிய புரவலர்களாகவும், தேசியத்தை தலைமை தாங்கும் தலைவர்களாகவும், புலியின் எதிர்தரப்பில் ஜனநாயகவாதிகளாக மக்களின் முதுகில் ஏறி நிற்பதை நாம் எப்படித் தான் அணுக முடியும்? மக்களின் விரோதிகள் உலகையே சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு பாய் விரிப்பதை எப்படி அனுமதிக்க முடியும். விபச்சார தரகருக்குரிய, இந்த பண்புகெட்ட மக்கள் விரோதிகளை நாம் எப்படி பண்போடு அணுகமுடியும். சொல்லுங்கள்.
பண்புடன் நாங்கள் இவர்களை அணுக வேண்டுமென்றால், நாம் பண்பு கெட்டவர்களாக முதலில் மாறவேண்டும். புலிகள் மட்டுமல்ல இன்று ஜனநாயகம் பேசும் புலியெதிர்ப்பு அணியினர் பலருக்கும் இதுவே பொருந்துகின்றது. நாயிலும் கீழாக மக்களின் முதுகில் ஏறிநின்றி வம்பளந்து, சமூகத்தையே அசிங்கப்படுத்தி குரைப்போரை அனுசரித்து நாகரீகமாக அணுக முடியாது. உங்களால் அப்படி முடியும் என்றால் எப்படி முடியும்? அதைச் சொல்லுங்கள்.

கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மக்களின் உழைப்பைச் சூறையாடி ஒட்டுண்ணியாக உறுஞ்சி வாழும் ஒருவனை, இவர்கள் யாரும் மக்கள் நலன் சார்ந்து தண்டித்தார்களா எனின் இல்லை. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுக்கு எதிரான ஒருவன் மீதான தண்டனை என்பது, மக்கள் நலனின் அவசியமானது. ஆனால் நடப்பது மக்களை சூறையாடுபவர்கள், சுரண்டித் தின்பவர்கள் தான், இதற்கு எதிரானவர்களை தமது வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். உழைப்பில் ஈடுபடாது மற்றவன் உழைப்பில் வக்கரித்து இரத்தம் குடிக்கும் அட்டைகளை நாம் பண்போடு அழைக்க முடியாது. மக்களின் வாழ்வை உறுஞ்சும் எவரையும் நாம் தோழமையுடன் இணங்கி நின்று தோள்கொடுக்க முடியாது. அவர்களின் மிருக நிலையை, சமூக உயிரியாக இல்லாத அந்த மனிதனின் மிருகத் தன்மையை தோலுரித்து அப்படியே நிர்வாணமாக காட்ட வேண்டியுள்ளது. போலியாக அவர்களுக்கு நாம் மகுடம் சூட்டமுடியாது.

Monday, March 6, 2006

மெல்லெனக் கொல்லும் குளிர்பானங்கள்

தண்ணீரைப் பிடித்து புட்டியில் அடை
தாகமெடுத்தவர் உயிர் அதன் விலை.

சிறி
06.03.06

மெல்லெனக் கொல்லும் இரசாயனங்கள் "குளிர்பானக்" கலன்களுக்குள்.

இரத்தப் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனப் பதார்த்தத்தின் செறிவு எப்படி இந்த "அமிர்தபானங்" களுக்குள் அதிகரித்தன?

சாதாரண குடிநீரில் இருக்கக் கூடிய அனுமதிக்கக் கூடிய செறிவிலும் பார்க்க எட்டு மடங்கு செறிவில் பென்சீன் (Benzene) எனப்படும் ஆபத்தான இரசாயனப் பதார்த்தம் 230 குளிர்பானங்களுக்குள் இது இருந்ததை, அதிக தரக்கட்டுப்பாடு கொண்ட பிரான்சிலும் பிரிட்டனிலும் இம்மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது

இரத்தப் புற்றுநோய்க்கும் மற்றைய வகை புற்றுநோய்களுக்கும் இந்த இரசாயனப் பதார்த்தத்துக்கும் தொடர்பிருப்பது ஏற்கனவே அறியப்பட்டதொன்று. புற்றுநோயைத் தூண்டுவன இப் பதார்த்தங்கள் என்பது எப்போதோ நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளால் அறியப்பட்ட தொன்றாகும்.

இருந்தபோதும் இந்தப் பதார்த்தத்தின் செறிவு ஏன் அதிகரித்தது என்ற காரணம் வேறொன்றுமில்லை. ஊரை அடித்து உலையில் போடும் பண முதலாளிகளின் விற்பனைத் தந்திரங்களின் விளைவே இது.

அட சும்மா கிடைக்கின்ற தண்ணீரை சுவையூட்டி வண்ணவண்ணமாய் நிறமூட்டி விளம்பரங்கள் செய்து சூப்பர் மாக்கெற்றுக்களிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தானியங்கு குளிர்பான விற்பனைப் பெட்டிகளுக்குள்ளும் மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் அழகாய் கவர்ச்சியாய் அடுக்கி வைத்து வாங்கி ஐமாய்கும்படியும் "தாகம்"; தணிக்கும்படியும் விளம்பரமும் செய்யும் இந்தப் பணமுதலைகள் குறியாய் இருப்பது நுகர்பவனின் ஆரோக்கியத்தை பேணுவதற்குத்தான் என்றால் சொல்பவனைச் செருப்பால் அடி.

உன்னுடைய நுகர்வு தான் என்னுடைய பணப்பை. இதுவே தான் இலாபத்தின் மூலமந்திரம். இதைவிட வேறு அக்கறை பண முதலைகளுக்கேது.

இந்தப் பரிசோதனைகளும் கட்டுப்பாடுகளும் மேற்குலகத்தின் நுகர்வு மற்றும் விற்பனை விதிகளுக்கு அடங்கிப் போகலாம். ஆனால் மூன்றாமுலக வறிய நாடுகளில் விற்பனைக்கு வரும் "சுவை" மிகு "ஐமாய்" கோலாக்களும் குளிர்பானங்களும் தரும் அழிவுகள் விச விளைவுகள் பற்றி கேட்டாலே, எதிர்ப்போரை கேட்போரை அடக்கி வைக்க அந்தந்த நாடுகளின் அரசுகளே துணையாயிருக்கும் போது இவர்களுக்கென்ன தங்குதடை.

குளிர்பானக் கம்பனிகள் குழந்தைகளின் பெற்றோரைக் குறிவைக்கும் வியாபாரத் தந்திரத்தில் இந்தக் குளிர்பானங்களுக்குள் அதிகளவு வைற்றமின் சி யைச் சேர்த்து வருகின்றார்கள். குளிர்பானத்தில் சேர்க்கப்படும் இந்த வைற்றமின் சி யானது தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்ற பிரச்சாரத்தால், அவற்றை பெற்றோர் குழந்தைகளின் ஆரோக்கியத்திலுள்ள அக்கறையின் பால் இக்குளிர்பானங்களை வாங்கும் நிலைக்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

விளைவு யாதெனில் இக்குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சோடியம் பென்சேற் என்ற பதனிடும் இரசாயனப்பதார்த்தம் அதிகரித்த அளவில் சேர்க்கப்படும் வைற்றமின் சி யோடு தாக்கம் அடைகின்றபோது உருவாகும் பதார்த்தம் பென்சீன் என்ற மேற்சொன்ன இரத்தப்புற்றுநோயைத் உருவாக்கவல்ல பதார்த்தமாகும்.

எனவே விற்பனையை குறியாகக் கொண்டு அதிகரிக்கப்படும் வைற்றமின் சி யானது பென்சீனின் செறிவை குளிர்பானத்தில் அதிகரிக்கின்றது.

விளைவு வாங்கி ஐமாய்ப்பவன் வாழ்வில் துன்பமாய் விளைகிறது. யார் கெட்டால் நமக்கென்ன இலாபம் ஒன்றே குறியென்ற இந்த குளிர்பானக் கம்பனிகளுக்கு எந்தளவுக்கு இலாபமோ அதுவே தான் குறி.

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னமேயே இந்தக்கலவைகளின் ஆபத்துப்பற்றிய ஆராய்சி முடிபுகள் அறிவுறுத்திய எச்சரிக்கை பற்றி "ஏதுமறியா" குளிர்பானக்கம்பனிகள் மூக்கால் சிணுங்கியபடி நுகர்வோர் மேலுள்ள அக்கறைபற்றி அறிக்கைகள் விடுவார்கள். வேறென்ன தண்ணீரைப் பணமாக்க மறுத்தாவிடப் போகின்றார்கள்?

ஆதாரம் (The Times 02.03.06 - ராஐPவ் சியால்)

Sunday, March 5, 2006

கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு

நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு?

பி.இரயாகரன்
05.03.2006

து தான் அண்மையில் சுவிஸ்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாரம். இப்படிக் குறிப்பிடுவதை இட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவ்வளவுதானா பேச்சுவார்த்தை? இவ்வளவு தான். 2001 இல் நடந்த பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்த நடந்த நிகழ்வு இதைத்தான் எமக்கு கற்றுத் தந்துள்ளது. கருணா விவகாரத்துக்கு முன்னம் நடந்த தொடர் கொலைகள் அனைத்தும், யார் எதற்காக ஏன் செய்தார்கள்? இந்த தொடர் கொலைகள் மூலம் தமிழ் சமூகத்தையே அச்சுறுத்தி சாதித்தது என்ன? குழந்தையை பயமுறுத்தி உணவூட்டுவது போல், மக்களின் உழைப்பில் இருந்து சூறையாடப்படும் ஒரு கொள்ளைக்கார நிர்வாகம் தமிழ்மக்கள் மேல் திணிக்கப்பட்டது. எங்கும் வரி, எதிலும் வரி. அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. இதைத் தான் தமிழீழ நிர்வாகம் என கூறப்பட்டது. இதைத்தான் அவர்கள் தமது அரசியல் வேலை என்றனர். இதைத்தான் தமிழ் மக்கள் அமைதி சமாதானத்தின் பெயரில் அனுபவித்தனர். உண்மையில் புலிகள் "இயல்புவாழ்வு" என்ற கூறியது, தாம் சுதந்திரமாக நடமாடி மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவும், தாம் விரும்பியதை அனுபவிப்பதையும் தான். தமிழ் மக்களுக்கு இதைவிட வேறு எதையும் புலிகள் பெற்றுக் கொடுக்கவில்லை.

சுதந்திரமாக தமிழ்மக்களை அடக்கியொடுக்கவும், புலிகள் தமது சொந்த அதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் நிலைநாட்டவும், சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர். இதுதான் பேச்சுவார்த்தை உள்ளடக்கம். இதனால் யுத்தம் தவிர்க்கப்பட்டு, இராணுவ கெடுபிடி புலிகளின் நலன் சார்ந்து நிறுத்தப்பட்டது. புலிகளின் நலன் சார்ந்த இந்த நிலையால், மறைமுகமாக மக்கள் இராணுவ கெடுபிடியில் இருந்த தப்பி வாழமுடிந்தது. மாறாக இராணுவத்தின் இடத்தில் புலிகள் புதிய வடிவிலான அடக்குமுறையை கட்டவிழ்த்தனர். தமிழ் மக்கள் மேல் நன்கு இனம் காணப்பட்ட ஒரு நிர்வாக வன்முறையைத் திணித்தனர். புலிகள் அல்லாத பிரதேசத்தில் பதிவுக்கு வந்த நிகழ்ந்த யுத்த நிறுத்த மீறல்களின் மொத்தப் பதிவுகள், இதை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. இராணுவ வன்முறைக்கு பதில் புலியின் வன்முறை உருவானது. உண்மையில் வன்முறையின் தன்மை, வன்முறையின் வடிவம் மாறியதே ஒழிய, மக்கள் நிம்மதியாக யாரும் மூச்சுவிடவில்லை. இதுவே 2001 முதலான பேச்சுவார்த்தையின் மொத்த விளைவாகும்.

இடையில் வந்த கருணா விவகாரம் மக்களிடம் சூறையாடியதை எப்படி நுகர்வது என்பதே, புலிக்குள்ளான முரண்பாடாகி பிளவாகியது. இது தொழில் முறையாக மக்களை அடக்கியாளும் புலிகளின் இயல்பு நிலையை இயல்பாக இல்லாததாக்கியது. கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் சுதந்திரமாக சுரண்டும் ஆதிக்கத்தை புலிகளால் நிலைநாட்ட முடியாத புதியதொரு நிலையை, கருணாவின் பிளவு உருவாக்கியது. சூறையாடல்களை இயல்பாக நடத்த முடியாத வகையில், இரண்டு தரப்பு வன்முறையும் நிலைமை சிக்கலுக்குள்ளாக்கியது. கருணாதரப்பு வன்முறை புலிக்கு எதிராக நடந்ததால், புலிகள் பின்வாங்கும் நிலை உருவானது. மக்கள் இரண்டு பேருக்கும் கப்பம் கட்டும் புதிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இது வடக்கு அல்லாத கிழக்கு மக்கள் சந்திக்கும் புதிய துன்பகரமான ஒரு நெருக்கடியாகும்.

கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பதிலடியாக, புலிகள் ஒரு தலைப்பட்டசமான உரிமை கோராத தாக்குதல்களை நடத்தினர். இதன் போது இராணுவம் மீதான வன்முறைகள் அனைத்தும் இராணுவ வெற்றியாக இருந்தது. ஆனால் அவர்கள் சாதிக்க நினைத்ததில் படுதோல்வி பெற்றனர். கருணா விவகாரத்தை அரசே வலிந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே தாக்குதலின் மைய நோக்கம். இதனடிப்படையில் தமது சொந்த தேவை கருதி தாமே உருவாக்கிய தமது "இயல்பு நிலையைக்" குலைத்து, நிர்பந்தம் செய்யும் வகையில் இராணுவ மோதலுக்கு புலிகள் இட்டுச் சென்று வலிந்த தாக்குதலை நடத்தினர். ஆனால் இராணுவம் படிப்படியாக இனம் காணப்பட்டு பொறுக்கியெடுத்த அழித்தொழிப்பின் மூலம் நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனால் கிழக்கில் புலிகள் கொண்டிருந்த பகுதியளவு அதிகாரத்தைக் கூட இழக்கும் நிலை உருவானது. இதில் இருந்து மீள, மீண்டும் பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகம் புலிக்கு அவசியமாக இருந்தது. புலிகள் கிழக்கில் தப்பிப்பிழைக்கவே, அண்மைய சுவிஸ் பேச்சுவார்த்தையை நடத்தினர். அதாவது பேச்சுவார்த்தை மூலம் கருணா விவகாரத்தை இல்லாததாக்க முனைகின்றனர்.

எப்படி கருணா தரப்பை இல்லாததாக்குவது. நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே. ஆனால் கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு? எதை நீ தெரிவு செய்யப் போகின்றாய். இது தான் பேச்சுவார்த்தை. புலிகள் தேர்ந்தெடுத்த ஒரு பேச்சுவார்த்தை. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். மீண்டும் தாம் குலைத்த தமது "இயல்வாழ்வு" பற்றி கதையளக்கின்றனர். அரசியல் வேலை செய்வது பற்றி பினாற்றுகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது பற்றி புலிகள் கூறுகின்றனர். இதை திருத்தி செம்மைப்படுத்தியுள்ளதாக பேரினவாத அரசு கூறுகின்றது. மக்களுக்காக சேவை செய்வதில் போட்டியிட்டு பேசும் இருதரப்பு பேச்சுவார்த்தையை பார்த்தால், மக்கள் மேலான அக்கறையை இட்டு மூக்கில் தான் கைவைக்க வேண்டும். வெளியிடும் செய்திகள், அறிக்கைகள், போட்டி வாதங்கள் அனைத்தும் மக்களுக்கானதாக கூறி, மலிவானதும் இழிவானதுமான மக்கள் விரோத பிரச்சாரங்களைச் செய்கின்றனர்.

அமைதி சமாதானம் என்ற முந்தைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தினால், தாம் சுத்தமான சைவ ஜனநாயகவாதிகளாக மாறிவிடுவதாக கூறுகின்றனர். ஆகாகா வன்முறையா, அது என்ன? என்று கேட்டுவிடுவார்களோ என்ற திடீர் அச்சம் தான் மக்களுக்கு ஏற்படுகின்றது. பேச்சுவார்த்தையே கொல்வதற்குத் தான். மக்களை சூறையாடி வாழ்வதற்குத்தான். தமிழ் மக்களை சூறையாடுவதையே ரசிக்கும் பேரினவாதம், இதை செய்யுங்கள் என்று கூறி ஒப்புதல் அளிக்கின்றது. இதனால் பேச்சுவார்த்தை தமக்குத்தான் வெற்றி என்று இரண்டு தரப்பும் பிரகடனம் செய்கின்றனர்.

ஆனால் பேச்சுவார்த்தை முடிந்த பின், என்ன கதைத்தார்கள் என்றால் மக்களுக்கு எதுவும் தெரிய மறுக்கின்றது. மக்களாகிய எங்களுக்காக இரண்டு தரப்பும் என்ன கதைத்தார்கள் என்றால், அதை யாரும் சொல்லத் தயாராகவே இல்லை. மக்களுக்காக கதைத்தால் அல்லவா சொல்வதற்கு. கதைத்தது என்ன? அவர்களுக்குள்ளான கொலை கொள்ளை பற்றி சர்ச்சைகளையே, இரண்டு பகுதியும் சேர்ந்தும் முரண்பட்டும் பேசிக் கொண்டனர். இதனால் மக்களுக்காக நாம் எம் தரப்பு சார்பாக என்ன கதைத்தோம் என்று எதையும் சொல்ல முடிவதில்லை. மக்களுக்கு இவர்கள் வழங்கப் போவது, சொந்த சவக்குழிக்கு வழிகாட்டுவதைத் தாண்டி எதுவுமல்ல.

உண்மையில் பேச்சுவார்த்தையில் பேரினவாத அரசு தனது பேரினவாத நலன்களை முதன்மைப்படுத்த, குறுந்தேசியப் புலிகள் தமது சொந்த குழுவாத நலனகளை முதன்மைப்படுத்தி நடத்திய அரசியல் நாடகம் தான் ஜெனிவா பேச்சுவார்த்தை.

மக்களின் நலன்களை தமது கால்களால் உதைத்தபடி இந்தக் கோவேறு கழுதைகள் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தைகள் குழந்தைத்தனமானது. குழந்தைகள் தமக்கு இடையில் நீ அதைச் செய்தாய், இதைச் செய்தாய் என்று மறுத்து குற்றம் சாட்டி சிணுங்கி அழும் குழந்தைகளின் தன்மைக்கு ஒத்ததாகவே அமைந்தது. உண்மைக்கு எதார்த்தத்துக்கு புறம்பான சாரத்தை அடிப்படையாக கொண்டு, பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகம் அரங்கேறியது. எதார்த்த உண்மைகள் எல்லாவற்றையும், தமது சொந்தக் காலுக்கு கீழ் போட்டு மிதித்தபடி விதண்டாவாதம் செய்தனர். அறிவு நாணயம் எதுவுமற்ற வக்கிரத்தையும் பொய்யையும் புரட்டையுமே அரங்கேற்றினர். இந்த பேச்சுவார்த்தை தமிழ் மக்களின் நலன் சார்ந்து, ஒரு நாளும் நடக்கப் போவதில்லை.

தமது சொந்த குழு நலன் சார்ந்த வக்கிரத்தை அடைய, பேச்சுவார்த்தையை விட்டே போய்விடுவேன் என்ற மிரட்டி அடிபணியவைத்த வக்கிரமும் அங்கு அரங்கேறியது. குழந்தைத்தனமாக சண்டை, இறுதியில் நான் என்ன செய்தாலும் நீ இனி எனக்கு அடிக்காதே, நான் உனக்கு அடிக்க மாட்டேன் என்ற கூறி, மீண்டும் விளையாடச் செல்லும் குழந்தைகள் போல் கலைந்து செல்லுகின்றனர். முடிவு என்ன. நாம் கூடி கருணா தரப்பை கொல்லுவது அல்லது நான் கொல்லும் சுதந்திர உரிமையில் தலையிடாது இருக்கும் படி கூறி அரசியல் நாடகம் கலைகின்றது. அதாவது பிரேமதாச காலத்தில் எப்படி நாங்கள் ஒன்று கூடி வீதிவிதியாக பிணமாக்கி நாம் கொல்ல எண்ணியவர்களை அழித்தோமோ, அதையே இன்று நாம் மறுபடியும் செய்வதை அடிப்படையாக கொண்டே இப் பேச்சு வார்த்தை நடந்தது. பலியீடு இன்றி, இது வெற்றி பெற்றதாக இவர்கள் மார்பு தட்டமுடியாது.
நாடகம் முடிந்துவிட்டது. மக்கள் கண்களை கசக்கியபடி, நாம் என்ன பார்த்தோம் என்று நினைவுபடுத்த முனைகின்றனர். முடியவில்லை. வழமை போல் நாடகம் நினைவில்லாது மங்கி மறைந்து போகின்றது. இந்த நாடகத்துக்கு எதிராக, சுவிஸ்சில் "ஜனநாயகம்" என்று மற்றொரு நாடகம் போடப்பட்டது.

"ஜனநாயக" என்ற நாடகத்தின் கதாநாயகர்கள் படுபிற்போக்கான ஜனநாயக விரோதிகள். நுணுங்கிப் பார்த்தால் பலர் புலிகளைப் போல் சமூக விரோதிகள். கடந்தகால ஜனநாயக விரோதத்தையே செயலில் காட்டியவர்கள். முன்னாள் கொலையாளிகள் அல்லது அதை ஆதரித்தவர்கள். அதாவது இன்றைய புலிப்பினாமிகள் போல் தலையாட்டி வக்கரித்தவர்கள். இன்றும் அந்த ஜனநாயக விரோத அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லது தீவீர ஆதரவாளர்கள். இவர்களை நம்பி சில அப்பாவிகள், "ஜனநாயகவாதிகளின்" கொடிகளைப் பிடித்து பின்னால் செல்லுகின்றனர். நல்ல நாடகம். நாடகத்தின் மூலம் சொல்லும் செய்தி என்ன? தமிழ் மக்களை காப்பற்ற ஏகாதிபத்தியத்தை கூவி அழைக்கின்றனர். விபச்சார தரகுத் தொழிலின் மேன்மையே இதன் சாரம்.

1986க்கு முன்னம் அதிக கொலைகளைச் செய்த ஒரு இயக்கத்தின் (புளாட்) சார்பில் இந்த நாடகம் நடந்தது. இதில் நடித்தோரில் கணிசமானோர் அவர்களே. அவர்கள் தான் தமிழ் மக்களின் "ஜனநாயகத்தைக்" கோருகின்றனர். நம்புகள் மக்களுக்கு ஜனநாயகம் இவர்களால் கிடைக்கும் என்று! இதற்கு ரி.பி;.சி ராம்ராஜ் காதநாயகனாக பத்திரமேற்ற நிலையில், "ஜனநாயக" நாடகம் மேடையேற்றப்பட்டது. ஆனால் இந்த நாடகத்தின் இடையில், ஜனநாயகத்தின் எதிரியாக கருதி சுவிஸ் பொலிஸ் கதாநாயகனையே கைது செய்தது. கைது பற்றி மௌனங்கள், புலி சதி பற்றி புலம்பல்கள், மேற்கு நாடுகளின் ஜனநாயகம் பற்றிய மௌனவிரதங்கள் எல்லாம் இந்த நாடகத்தின் முடிவில் "ஜனநாயகவாதிகளால்" அரங்கேற்றப்படுகின்றது. புலி அரசு பேச்சு வார்த்தை எப்படி மக்கள் முன் சூக்குமமாக உள்ளதோ, அதேநிலை தான் இந்த "ஜனநாயக" முகமுடிகளின் பின்பாக நிகழ்ந்துள்ளது. மக்கள் மந்தைகள் தான். இதைத்தான் இவர்கள் எல்லோரும் சேர்ந்தாற் போல் சொல்லுகின்றனர். தாம் மக்களுக்கு எதிராக இருப்பதால், அனைத்தும் தமிழ் மக்களுக்கு இருட்டடிப்பு.

இப்படி சுவிஸ் சிறையில் கம்பி எண்ணும் ஜனநாயகத்தின் கதாநாயகனின் முன்னாள் தொழில் என்ன? ஈ.என்.டி.எல்.எவ் க்கு முன்னம் என்ன செய்தான்? இதை மர்மமாக விட்டுவிடவே "ஜனநாயகவாதிகள்" விரும்புகின்றனர்.
புலிக்கு நிகராகவே கொலை, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் வியாபாரிகள் தியாகிகள் எல்லோரும் சேர்ந்து, இன்று "ஜனநாயகத்தின்" பெயரில் கூத்து நடத்துகின்றனர். மக்கள் என்கின்றனர். புலி அரசு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தில் புலியை அம்பலப்படுத்த, ஜனநாயகத்தின் பெயரில் நடத்திய கூத்தின் போதே ரி.பி;.சி ராம்ராஜ் கைது செய்யப்பட்டார். இந்த தீடிர் "ஜனநாயகவாதியின்" குற்றம் என்ன என்பது மக்களுக்கு இருட்டடிப்பு செய்யும் நிலையில், இந்த அன்னக் காவடி முன்பும் பாரிசில் "ஜனநாயகத்தை" பேசியதை பலர் வசதியாக மறந்துவிட்டனர். முன்பும் பாரிசில் "ஜனநாயகத்தை" நாடகமாக போட்டவன் தான் இவன். கொலை கொள்ளைக்காகவே இந்தியக் கைக்கூலியாகி புளாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஈ.என்.டி.எல்.எப் இயக்கம், புளாட் "உட்கொலை" பற்றியும் ~~ஜனநாயகம்" பற்றியும் பேசியது. அன்று அந்த ஜனநாயகத்தை பற்றி பேசியபோது, இந்த ரி.பி.சி ராம்ராஜ் முக்கியமானவர்களில் ஒருவர்.
அன்று இந்த ஜனநாயகத்தைப் பேச இந்தியாவில் இருந்த டேவிற் ஜயாவைக் கூட இறக்குமதி செய்தனர். புளாட்டுக்கு எதிராக அவரைக் கொண்டு பாரிசில் "ஜனநாயக" பிரச்சாரம் செய்தனர். இந்த "ஜனநாயகம்" எவ்வளவு மோசடியானது என்பதை, பின்பு இவர்கள் இந்தியக் கைக்கூலியாக தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய மிலேச்சத்தனத்தில் அம்பலமானது. இந்த டேவிற் ஐயா "ஜனநாயகம்" பேச வந்தபோது கூட, அவரை சும்மா இவர்கள் இறக்கவில்லை. அவருக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி அவரூடாகவே போதைவஸ்துகளை கடத்தி வந்தவர்கள் தான், அன்றைய "ஜனநாயகவாதிகள்".

பிராஞ்சுப் பொலிசார் இவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போதும் கூட, பொலிஸ் நாய்கள் போதைவஸ்து இருந்த இடத்தை கண்டு பிடிக்காததால் தான் இவர்கள் தப்பினார்கள். இதனால் இன்று ஜனநாயகவாதிகளாக முடிந்தது. அத்துடன் அன்று பொலிஸ் சோதனையிட்ட போது ராம்ராஜ் அங்கு இருக்கவில்லை என்பதால், அன்றே கம்பி எண்ணவில்லை. இன்று சொல்லுகின்றார்கள் புலியின் சதியில் கைதாம். நம்புங்கள் முட்டாள்களே.

இவர்கள் இன்று தாம் கற்பிக்கும் ஒரு மக்கள் விரோத "ஜனநாயகத்துக்கு" தலைமை தாங்குகின்றனர். அதை மக்களுக்கானது என்கின்றனர். "ஜனநாயகத்தின்" பெயரில் நம்பி வந்தவர்களுக்கே தெரியாது முதுகில் குத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் தான் இவர்கள். இவர்கள் மக்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், இன்று புலிகளிடம் இருந்து மட்டும், தாம் விரும்பும் "ஜனநாயகத்தை" மீட்க போவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மிக நுணுங்கி கிட்டச் சென்று பார்த்தால், இவர்கள் கடந்த காலத்தில் ஜனநாயகத்துக்காக போராட்டம் நடத்தியவர்களை கொன்றவர்கள் அல்லது கொன்றதை நியாயப்படுத்தியவர்கள். அவர்களை சித்திரவதை முகாங்களில் இட்டுச் சிதைத்தவர்கள். புதியதோர் உலகம் என்ற கேசவனின் நாவல், இவர்களைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு ஆவணம்.

பெரும்பாலானவர்கள் அந்த கொலைகார இயக்கத்தில் கடைசி வரை இருந்தவர்கள் தான். இன்றும் சில ஜனநாயக வேஷதாரிகள், அந்த மக்கள் விரோத கொலைகார இயக்கத்தின் உறுப்பினர்கள் கூட. இவர்களா மக்களின் மீட்பாளர்கள்!. இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், புலிகளின் மனிதவிரோதச் செயலை தமக்கு சார்பாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.

புலிகள் அரச நடத்திய பேச்சுவார்த்தை மக்களுக்கே விரோதமானது. அது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாக இருக்கின்றது. இதைச் சொல்லிக் கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் "ஜனநாயகத்தை" கோசம் போட்டு கோருகின்றனர். ஏகாதிபத்திய தலையீட்டை விட்டால், இவர்களின் "ஜனநாயகத்துக்கு" அதோ கதிதான். பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் நக்கித் திரிவதைத் தவிர வேறு "ஜனநாயகம்" இவர்களிடம் கிடையாது.
பேச்சுவார்த்தை மேடையிலும் சரி, அதைச்சுற்றி நடந்த "ஜனநாயக" போராட்டத்திலும் சரி, மக்களின் நலன்கள் புதைக்கப்பட்டன. சில்லறைத்தனமான வாதப் பிரதிவாதங்கள் மூலமும், ஏகாதிபத்திய நிபந்தனைகளையே கோசமாக்கி, முழு சமூகத்தையும் குதர்க்கமான வக்கிரத்துக்குள் புதைத்துவிடுகின்றனர். இதுதான் அண்மையில் ஜெனிவாவில் நடந்து முடிந்தது.