தமிழ் அரங்கம்

Saturday, January 9, 2010

பிரபாகரனின் தந்தையின் உடல் மூலம், மகிந்தா முன்னெடுக்கும் பிண அரசியல்

செத்த பிணத்தில் இருந்து உண்ணி விலகிச் செல்வது போல், தமிழ் தேசிய அரசியல் இன்று புதிய உடலைத் தேடுகின்றது. பிரபாகரனின் மரணம் மூலம் புலி மடிந்தபோது, அதை அண்டிப் பிழைத்து வாழ்ந்த தமிழ் தேசிய உண்ணிக் கூட்டம் தன் வக்கிரமான சொந்த பிழைப்புவாதக் குணத்தைக் காட்டுகின்றது. அது தொடர்ந்து தமிழன் இரத்தத்தைக் குடிக்க, புதிய உடல்களைத் தேடியோடுகின்றது.


இப்படி தமிழ் தேசியம் வெட்கப்படத்தக்க வகையில், பேரினவாதத்தின் நுகத்தடியை முத்தமிடுவதுதான் தமிழனின் ஓரே தீர்வு என்கின்றனர். ஒரு இனத்தை கொன்று குவித்தவர்கள், இனவழிப்பை ஒரு யுத்தமாக நடத்தியவர்களை, நம்பக் கோருகின்றனர். இதன் மூலம் சர்வதேச ரீதியாக யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்களைக், காப்பபாற்றும் முயற்சியில், தமிழ்தேசிய உண்ணிக் கூட்டம் இன்று தன் வர்க்க வக்கிரங்களுடன் களத்தில் குதித்துள்ளது. யார் எங்கு எப்படி இரத்தம் குடிக்கலாம் என்று, கணக்குப் பிசகாத அரசியல் மூலம், தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிகாட்டுவதாக பீற்றிக்கொள்கின்றது.

நடைபெறும் பேரினவாத தேர்தல் மூலம் சர்வதேச பேரினவாத குற்றவாளிகளை பாதுகாக்கும், வக்கிரமான முயற்சியில் பலர்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, January 8, 2010

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம் !

இலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை.

எண்ணற்ற பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மேற்குறித்த அனைத்து வரையறைகளுக்குள்ளும் நான் உட்படுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியாக நான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறேன்.

நீண்ட நெடுங்காலமாகவே பத்திரிகைத்துறையில் நான் செயற்பட்டு வருகிறேன். ‘சண்டே லீடர்” பத்திரிகை 2009 ஆம் ஆண்டு தனது 15 வருட நிறைவினைப் பூர்த்தி செய்கிறது. இந்தப் 15 வருட பயணத்தில் இலங்கையில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, January 7, 2010

றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)

1984-1985 யில் புளாட் இயக்கம் அரசியல் ரீதியாக சிதைந்து, உட்படுகொலைகள் மூலம் அது உளுத்து வந்தது. அசோக் போன்றவர்கள் உமாமகேஸ்வரன் என்ற கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து முதுகில் குத்த, தீப்பொறி குழு உயிர் தப்பியோடியது. அவர்களைக் கொல்ல அசோக் உள்ளிட்ட மத்திய குழு, நாயாக அலைந்தது.


இந்த விடையங்கள் பற்றி அசோக் வாய் திறந்தது கிடையாது. இப்படிப்பட்ட அரசியல் நடத்தைகளால் தான், முன்னாள் அந்த கொலை இயக்கம் முதல் டக்ளஸ் வரைக்கும் இவர் புறோக்கராக இருக்க முடிகின்றது. இதைப்பற்றி பேசாத, நேர்மையற்ற பொறுக்கித்தனமே எதிர்ப்புரட்சி கும்பலுடனான குழையடிப்பு அரசியலாகும்.

உதாரணமாக பாருங்கள். செல்வன் அகிலன் ஏன் கொல்லப்பட்டனர்? இவர்கள் தீப்பொறி வெளியேற்றத்துக்கு முன்னம் கொல்லப்பட்டவர்கள். இதில் செல்வன் மத்திய குழு உறுப்பினர். ஏன் கொல்லப்பட்டான்? ஆச்சரியமான, ஆனால் வக்கிரமான பல விடையங்கள் இதில் உண்டு. சக மத்தியகுழு உறுப்பினர் கொல்லப்பட்டது ஏன் என்று இதுவரை காலமும் அசோக் பேசியது கிடையாது. இதை யாரும் கேட்டால் சிவசேகரம் வம்புப் பாட்டு பாடுவார். புதிய ஜனநாயகக் கட்சி சுயவிமர்சனம் என்றால் என்ன என்று வில்லங்குத்தனம் பண்ணுவர்.

செல்வன் ஏன் கொல்லப்பட்டான் என்பதை அசோக் சொல்லப் போவதில்லை. அவர் இது போன்று பல கொலைகள் பற்றி எதையும் சொன்னது கிடையாது, சொல்லப் போவதும் கிடையாது. இது தான் இவர்களின் அரசியல். செல்வன் மத்திய குழுவில் நடத்திய ஒரு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


கதறத்திருகிய கைகள்கூப்பி இரந்துவருக புள்ளடியிட்டால் பொறுக்கிப்போங்கள் …

சாணக்கியர்களின் வாக்குமுலங்கள்

அடுத்த ஆட்சியில் சுபீட்சமாகும் கனவுகட்குள்

மிதக்கவிடப்;பட்டபடியே கடந்துபோயின…….

இழந்தபடியே எண்ணிக்கை கண்ணைத்திறக்குமென

முன்னர் ஆண்டவெள்ளையர் தேசமெலாம்


முள்ளிவாய்க்கால்வரையும் இன்னமும் மடியென

சட்டப்புத்தகங்களில் எழுதப்பட்டவை நிகழவில்லையென்றன

நிழலைக்கொடுத்ததோ இல்லையோ

பெருமரம் தறிக்கப்படும்படியாய் உள்ளிடை…


ஓங்கிவீசிய கோடாரிகளின் பிடிகள்

அதேமரத்துக்கிளைகளாலேயே செருகப்பட்டதாயேயிருந்தது.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்



Wednesday, January 6, 2010

தேர்தல் திருவிழா : கூட்டமைப்பும், புலிகளும் வானத்தையே வில்லாக வளைத்துக் காட்டுகின்றனர்

கடந்த 60 வருடமாகவும், அதே நேரம் ஆயுதமேந்தி 30 வருடமாகவும், தமிழ் தேசியத்தின் பெயரில் அவர்கள் வழிகாட்டியது என்ன என்பதை, வரலாறு காட்டி நிற்கின்றது. ஒரு இனத்தையே தேசியத்தின் பெயரில் பலியிட்டதற்;கு அப்பால், இவர்கள் எதையும் வழிகாட்டவில்லை. மக்களுக்காக போராட முனைந்தவர்களை தங்கள் குறுகிய நலனுக்கு பலியிட்டதுடன், தாம் அல்லாத அனைவரையும் கொன்று குவித்தனர். இதுவே எம் கடந்தகால தமிழ் தேசிய வரலாறு.


தமிழ் தேசிய இனமே அழிந்து போகும் வண்ணம், அனைத்து செயல்பாடுகளும் அமைந்து இருந்தது. இன்று தேர்தல் கூத்தில் கூட்டமைப்பும், புலிகளும் தமிழினத்தை வழிகாட்ட புறப்பட்டுள்ளனர். மீண்டும் ஒரு புதைகுழியை வெட்டி வைத்துக்கொண்டு, அதற்குள் தள்ளிவிட முனைகின்றனர்.

சரத்பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், மகிந்தாவை தோற்கடிப்பதன் மூலம் தமிழினத்தின் நலன்களைப் பெறமுடியும் என்கின்றனர். இப்படி ஆயிரம் முடிவுகளை முன்பு கூறி எடுத்தவர்கள் தான் இவர்கள். இது தமிழினத்தின் அவலமாக இன்று.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, January 5, 2010

எம்மை புதிய ஜனநாயகக் கட்சியின் "முகவராக, கிளையாக" இருக்கட்டுமாம்!?

திடீரென "மார்க்சியத்தின்" பெயரால் சிலர் கூறுகின்றனர். ஆயிரம் தவறுகள் இருந்தாலும் களத்தில் நிற்கும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து நிற்க வேண்டுமாம்! இதைக் கடந்த 30 வருடமாக சொல்லாதவர்கள், இன்று திடீரென சொல்லுகின்றனர். ஆச்சரியமும், அதிர்ச்சியும் தான். கடந்த 5 வருடத்துக்கு முன், ஏன் ஒரு வருடத்தின் முன் கூட கோரியது கிடையாது. அன்று நாங்கள் மட்டும் போராடிக் கொண்டிருந்த காலம்.


அப்போது இதைக் கோரியிருந்தால், ஏன் இன்று இவர்கள் கோரியது போல் நாம் "முகவராக, கிளையாக" அன்று மாறியிருந்தால், புலிக்கு ஏற்ப நாம் வில்லுப்பாட்டுதான் அடித்து இருக்க வேண்டும். சர்வதேசியக் கடமையாக, இப்படிக் கோருவோரின் அமைப்புக்கு நாம் செய்த எதையும் செய்திருக்க முடியாது. இன்று புலி அழிந்தவுடன் எமக்கு எதிராக கடைவிரிக்கின்றனர். எம்முதுகில் சிலர் குத்துகின்றனர்.

எம்மை "முகவராக, கிளையாக" இருக்கக் கோரும் கட்சி கடந்த 35 வருடமாக புதிய ஜனநாயகக் கட்சயியாக இருந்துள்ளது. இலங்கையில் நடந்த கொந்தளிப்பான காலத்தில், அது என்னதான் செய்தது? மா.லெ.மாவோயிசத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கி செபம் செய்தது. இதற்கு வெளியில் தான் மார்க்சியம் சார்ந்த வர்க்கப் போராட்டங்களும், தி..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, January 4, 2010

நான் வெறி பிடித்தவன்

ஏனிந்த மாற்றம் என்னில்
எப்போதும் போல
இல்லை இன்று

அவ்வப்போது இப்படித்தான்
சில செய்திகள் என்னுள்
சந்தோசத்தில் மிதக்கின்றன
ஏனென்று தெரியவில்லை

ஆனாலும் இவற்றுக்காக

சந்தோசப்பட்டுக்கொண்டே

இருக்கிறேன், இருப்பேன்….

பல செய்திகளுக்கு நானே
வருந்துவது சில
செய்திகளுக்கு....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!

தில்லைக் கோயிலை அரசு மேற்கொண்டதற்கும், சிற்றம்பலத்தில் தமிழ் பாடுவதற்கும் எதிராகத் தடையாணை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. மேற்கூறிய இரு கோரிக்கைகளையும் போராடி வென்றவர்கள் என்ற முறையில், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்துள்ளோம்.


சட்டப்படி பார்த்தால், தற்போது நடைபெறும் வழக்கென்பது அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையிலானதுதான். மேலோட்டமாகப் பார்த்தால், தில்லைக் கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதை தி.மு.க. அரசின் சாதனையென்றும் சிலர் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், 2000ஆவது ஆண்டில், தமிழ் பாடிய குற்றத்துக்காக சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சிதர்களால் அடித்து வீசப்பட்டபோதும் தி.மு.க. ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது என்பதையும்; அப்போது, அடித்த தீட்சிதர்களுக்கு பிணை வழங்கி வழியனுப்பி வைத்தது போலீசு என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்

ம.க.இ.கவின் தமிழ் மக்கள் இசை விழாவில் ஆறுமுகசாமி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான், தில்லைக் கோயிலில் தமிழ் பாட முடியாது என்ற உண்மையையே தமிழகம் அறிந்தது. இப்போராட்டத்தை நாங்கள் தொடங்கியபோது, ""வள்ளலார் முதல் வ.சுப.மாணிக்கனார் வரை பலரும் பார்த்துவிட்டார்கள். இப்போது நீங்களா?'' என்று பலர் பரிதாபப் பார்வை பார்த்தார்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, January 3, 2010

ஈ.என்.டி.எல்.எவ் இன் திட்டத்திற்கு நீங்கள் தளத்தில் இரகசிய ஏஜென்டுகளை உருவாக்கினீர்கள் - (பகுதி 3)

மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் ஒரு பரந்தளவான சந்திப்பை யாழ்ப்பாணத்தில் ஒழுங்குபடுத்துகிறார்கள். மகளிர் அமைப்பின் முன்னணிப் பிரதிநிதிகள் சிலர் ஆவலோடு சந்திக்க காத்திருக்கிறார்கள்.

இந்தப் பின்தள விஜயம் குறித்த மாணவர் அமைப்பின் விசேட சந்திப்பில் மத்தியகுழு அங்கத்தவர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மாணவர் அமைப்பின் இக்கூட்டத்தில் புளட் அமைப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு சுயாதீனமாக அவரவர்கள் தங்கள் நிலைப்பாடுகளுடன் தங்களது அரசியல் நடவடிக்கைகளை தாங்களே தீர்மானிக்கலாம் என்று நான் பரிந்துரை செய்தேன். மக்களிடமிருந்து வரவேற்கப்பட்ட கொள்கைகளிலிருந்து, பிரச்சாரம் செய்யப்பட்ட கொள்கைகளிலிருந்து, ஏற்றுக் கொண்ட அரசியல் பாதையிலிருந்து புளட், அதன் தலைமை எப்போதே விலத்திச் சென்றுவிட்டது எனவே புளட்டின் மாணவர் அமைப்பாக இனியும் தொடர்ந்து இயங்குவது என்பது புளட்டின் அராஜகங்களுடன் இணைந்திருப்பதாகவே முடியும். எனவே நீங்கள் ஒருமுறை சிந்திப்பதற்கான கால அவகாசத்துடன் புளட்டினை நிராகரித்து போர்க்கொடி தூக்கும் அதேவேளை புளட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் தளத்திலுள்ள மத்தியகுழு நபர்கள் இராணுவக் கட்டமைப்பினை பிரதிநிதிப்படுத்துவோர் மேல் நெருக்கடிகளை உருவாக்கினால் மட்டுமே தளத்திலுள்ள அமைப்புக்கள் விழித்துக் கொள்ளும். இந்த மத்தியகுழு உறுப்பினர்களையும் இராணுவப் பொறுப்பாளர்களையும் அவர்களால் மூடிமறைத்து முண்டு கொடுக்கப்படும் அனைத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தியே ஆ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


'இரத்தம்' என்பதும் ஒர் அரசியல் தான்!

நட்புடன் நண்பருக்கு,

'புதியபாதை சுந்தரத்தின்' கொலை தொடர்பாக,
அன்று மதில்களில் பேசும் செய்திகளுக்கு ஐயாவினதும், விசுவினதும் உழைப்புக்கள் மகத்தனவை!
இதை உதாசீனம் செய்யும் வரலாறு, மீண்டும் கேள்விக்கு உட்படுத்தப்படும்!!

'புதிய பாதை சுந்தரத்தின் மரணம்' அன்றைய சூழலில், இராணுவ அரசியல் மார்க்கத்தில் புதிய உந்துசக்தி என்றே சொல்லவேண்டும்.

........


இவைபற்றி வரலாறு விபரமாகப் பேசும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உண்டு! இதனால்,
(சுந்தரத்தின் கருத்துக்கள் அன்று கிட்டத்தட்ட 6 ஆயிரம் வசகரால் உணரப்பட்டவை)
இது 'சுதந்திரனின்' வரலாற்றில் சுந்தரத்தால் விளாசப்பட்ட முதலாவது 'சவுக்கடி' என்றே சொல்ல வேண்டும்.

புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் (அரச, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்) பெரும்பாலும், புலிகளால் கொல்லப்பட்டவர்களாலும், அரச எதிர்பாளர்களாலுமே பட்டியலிடப்பட்டுள்ளது என்பதே உண்மை! ஆனால், ஜே.வி.பி மற்றும்.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்