தன்னெழுச்சியான பிரஞ்சு மாணவர் எழுச்சி, மனித குலத்துக்கே போராடக் கற்றுக் கொடுக்கின்றது.
பி.இரயாகரன்
13.04.2006
(இக்கட்டுரை எழுதி முடித்து வெளியிட இருந்த அன்று, பிரஞ்சு அரசு தான் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தை மீளப் பெற்று இருந்தது. இதனால் இதன் ஒரு பகுதி நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு திருத்தப்பட்டுள்ளது.)
'அடிமக்களுக்கான ஒப்பந்தம்" ( Contrat Pour Esclaves) என்று மாணவர்களால் சரியாகவே வருணிக்கப்பட்டு, இதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பிரஞ்சு சமூகத்தையே விழிப்புற வைத்தது. பிராஞ்சு மாணவர்களின் இந்த போராட்டம் அரசியல் மயப்படுத்தப்படாத போதும் கூட, அது உக்கிரமான அரசியல் கோரிக்கைகளுடன் கொழுந்துவிட்டு எரிந்தது. 30 லட்சம் மாணவர்களும் மக்களும் வீதியில் இறங்கி மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம், தமது போராட்டத்தின் உறுதியை வெளிப்படுத்தினர். அமைதியான ஆர்ப்பாட்டம் என்ற அரசியல் நடைமுறை படிப்படியாக, இயல்பான போர்குணாம்சம் பெறத் தொடங்கியது. அரச இயந்திரத்தை முடக்கும் வகையில் திடீர் நடவடிக்கைகளாகவே அவை வளர்ச்சி பெற்றன. போராட்டம் போர்க்குணாம்சம் பெற்ற நிலையில், ஒரு சில ஆயிரம் பேர் (அண்ணளவாக 3000 மேற்பட்டோர்) கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில், பொலிசாரை வன்முறைக்கு தயாரான தயாரிப்புடன் போராட்ட களங்களில் குவித்தனர். மறுபக்கத்திலோ பல்கலைக்கழகங்களை மாணவர்கள் தமது சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு சிலவற்றை பொலிசார் வன்முறைகள் மூலம், ஒரு மோதலின் பின்பே கைப்பற்றினர். பொலிசார் நுழைந்து கைப்பற்றுவார்கள் எனக் கருதிய இடங்களில், அதை தடுத்த நிறுத்த தடுப்பு அரண்கள் நிறுவப்பட்டன. இவை போராட்டத்தின் சட்டபூர்வ உரிமைக்குள், போர்க்குணாம்சம் மிக்க நடவடிக்கையாகவே மாற்றம் பெற்றன.
போராட்டம் நீடித்து சென்ற நிலையில், உற்சாகம் குன்றாத நிலையில் போராட்ட வடிவங்களும் மாற்றம் அடைந்தன. அரசை முடக்கும் திடீர் நடவடிக்கைகள், எந்த அறிவுப்புமின்றி ஆங்காங்கே தொடங்கியது. சர்வதேச போக்குவரத்துகளை தடை செய்யும் வகையில், விமானநிலையத்தின் ஒடுபாதையில் புகுந்து குறுகிய நேரத்துக்கு அதை முடக்குகினர். சர்வதேச புகையிரத சேவைகளை முடக்கும் வகையில் பெருமளவு மாணவர்கள் புகையிரத வீதிகளில் திரன புகுந்து, குறுகிய நேரம் போரட்டங்களை நடத்தினர். அரசின் முக்கிய தலைவர்கள் இது தொடர்பான முக்கிய அறிவிப்பை தொலைக்காட்சியல் நிகழ்த்தும் போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீடிர் ஆர்ப்பாட்டங்களையும், திடீர் கூட்டங்கள் மூலமும் கூட்டாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். திடீர் போராட்டங்கள் மூலம் வீதிப் போக்குவரத்துகளை முடக்கத் தொடங்கினர். உதாரணமாக ஜனாதிபதி இது தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி இதில் சில திருத்தத்துடன் அமுல் செய்வதாக கூறிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரின் உரை முடிந்தவுடன் பிரான்சின் பல பாகத்தில் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்தி மாணவர்கள், உடனடியாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாரிசில் நடந்த ஊர்வலம் ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர்ந்தது. இது இரவு 4 மணிவரை ஒரு மோதலூடாகவே, சில மைல் தூரம் நகர்ந்து சென்றது. இதன் போது ஆளும் கட்சி அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன.
இப்படியான போராட்டங்கள் ஜரோப்பிய நாடுகளுக்கான பாதைகளை முடக்குவது முதல் மூலதனச் செயல்பாட்டுக்கான விநியோகங்கங்களை (supply) குறுகிய நேரம் அதிரடியாக முடக்குவது என்று பல போராட்டங்கள் தொடர்ச்சியாக திடீர் தீடிரென நடத்தப்பட்டன. ஒரு பலமான ஒன்றிணைந்த திகதியிடப்பட்ட போராட்டத்துக்கு, இடைப்பட்ட காலத்தில் குறுகிய பல போராட்டங்கள் அங்காங்கே திடீரென்று திட்டமிட்டு நடத்தப்பட்டது. போராட்ட வடிவம் மாறுகின்ற நிலைமைகளில் பொலிஸ் தலையீடு, மோதல்கள், கைதுகளின்றி அவை தானாக நிறுத்தப்படவில்லை.
இதன் மறுபக்கத்தில் மாணவர்கள் சமூகம், புதியதொரு கல்வியை தமது வாழ்வில் முதல முறையாகவே கற்கத் தொடங்கினர். மாணவர்கள் தமது போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்ட தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினர். மக்கள் பற்றியும், கடந்தகாலத்தில் மூலதனத்தினால் ஏற்பட்டுவரும் சமூக அவலங்களைப் பற்றியும் கூட, கருசனையுடன் தமது சொந்தக் கவனத்தை திருப்பினர். பல உரையாடல்களை, விவாதங்கள், கூட்டு நடவடிக்கைளை நடைமுறைப்படுத்தினர். பொது வேலை நிறுத்ததை தொடங்கத் தடையாக உள்ள, கடந்தகால காட்டிக்கொடுப்புகள் ஏற்படுத்திய மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மாற்ற, மாணவர்கள் தீவிரமாக முனைந்தனர். இதன் ஒரு அம்சமாகவே தொழிற்சாலைகளை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கினர். இந்தளவுக்கும் மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்று இதில் ஈடுபடவில்லை. எதார்த்த நிலைமை வலுக்கட்டாயமாக அவர்களை அதற்கு இட்டுச் சென்றது. தொழிலாளர்களின் கடந்தகால நிகழ்கால பிரச்சனைகள் மீது, ஒரு கரிசனைமிக்க இயல்பான ஒரு அரசியல் உரையாடலை நடத்தினர். இதன் முதற்படியாகவே மாணவர்கள் தொழிலாளர்கள் இணைந்த திடீர் நடவடிக்கைகள் படிப்படியாக வளர்ச்சி காணத் தொடங்கியது.
இதன் போது வீதிகளை மறித்து வாகனத்தில் செல்வோருக்கு தமது நிலை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவை கோரினர். மாணவ தலைவர்கள் தொழிற்சங்க தலைமை முதல், தொழிலாளர்களின் அடிமட்டம் வரை அடிக்கடி கூடிக் கதைத்தனர். பொதுப்போராட்டங்களை நடத்துவதிலும், ஒருகிணைந்த உணர்வை வெளிப்படுத்துவதிலும்; கருசனை எடுத்தனர். வேலையில்லாத அலுவலகங்களைக் கைப்பற்றி, வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்த கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தினர்.
பொதுவாக சமூகத்தை கீழ் இருந்து மேலே பார்க்கும் அணுகுமுறையைத் தொடங்கினர். வாழ்க்கை என்றால் என்ன? உழைப்பு என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? என்று அனைத்து சமூக மதிப்பீடுகள் மீதுமான சுயபரிசீலனை, கூட்டு விவாதங்கள், கூட்டு முடிவுகள் என பலதளத்தில் நடத்தினர். இது தன்னியல்பாகவும், ஏன் திட்டமிட்டும் கூட நடத்தப்பட்டன. தன்னியல்பாக தொடங்கிய இந்தப் போராட்டம், படிப்படியாகவே அரசியல் மயமாகத் தொடங்கியது. இதன் விளைவாக அரசு சட்டத்தை மீளப் பெற்ற பின்பும் கூட, போராட்டத்தைக் கைவிட ஒரு பகுதி மாணவர்கள் தீவிரமாக மறுத்தனர். பல்கலைக்கழக செயற்பாட்டை முடக்கியதுடன், வீதி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். கடந்தகாலத்தில் மாணவர்களுக்கு எதிராக கொண்டுவந்த அனைத்து சட்டங்களையும் மீளப் பெறும் வகையில், போராட்டம் அரசியல் கோரிக்கையாக மாறி நிற்கின்றது.
உண்மையில் இந்த போராட்டம் தொடங்கிய போது மிகவும் பலவீனமான ஒரு நிலையில் தொடங்கியது. இதுவே படிப்படியாக பலம்பொருந்திய ஒன்றாக மாறியது. போராட்டம் தொடங்கிய போது அரசியல் எதுவுமற்ற ஒன்றாக, தன்னியல்பான ஒன்றாகவே இருந்தது. இது படிப்படியாக அரசியல் மயமாகும் முதல் படியைத் தொட்டது. சமூகம் பற்றி ஒரு அரசியல் கல்வியை இது முன்னிலைப்படுத்தி, எதிர்கால சமூதாயத்தின் ஒரு அரசியல் மயமாக்கலை நோக்கி நகர்வதற்கான படிமுறையில் இது தன்னை வெளிப்படுத்தியது. பிரான்சில் நடப்பனவற்றைக் கண்டு, உலகிலுள்ள மக்களும் மாணவர்கள் புதுமையானதாகவும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மாணவர்கள் என்ன கோருகின்றனர் என்று தெரியாது மூக்கை சொறிகின்றனர்.
மறுபக்கம் சமூக ரீதியாகவே, சமூகத்துகாக போராடுபவர்கள் மகிழ்ச்சியால் உந்தப்படுகின்றனர். போராட்டமின்றி மனித வாழ்வில்லை. ஆம் மனித போராட்ட வரலாறு என்பது மக்களின் சொந்த அதிகாரத்தை நோக்கிப் போராடுதல் என்பதையே, பிரஞ்சு மாணவர்கள் அவர்கள் தாமே அறியாது மீண்டும் உலகுக்கு உணர்த்திவிட்டனர். இதை தடுத்து நிறுத்த மூலதனத்தால் முடியாது என்பதையே, மாணவர் போராட்டம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.
மாணவர்களின் போர்க்குணாம்சமான இந்த நிலைமையையிட்டு யார் கவலைப்படுகின்றனர். பிரஞ்சு முதலாளிகளும் அவர்களின் அரசியல் பொருளாதார எடுபிடிகளுமே. உலக முதலாளிகளும் அவர்களின் தொங்கு சதைகளும் மிரண்டு போய் நிற்கின்றனர். எலும்புகளை கவ்வும் ஒரு கூட்டம், இதையிட்டு தனக்குள் தானே நெழிகின்றது. நாசியக் கட்சிகள் பாசிச வெறியுடன் மாணவர்கள் வீதியில் இறங்குவதை தடுக்கும்படி கூக்கூரல் இடுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஜயோ ஜனநாயகத்துக்காக இந்தக் கேடா என்று புலம்பினர். வன்முறை மூலம் இதை அடக்கும்படி கோரினர். இதற்கு எதிரான சிறுபான்மையினரின் ஜனநாயகத்தை, பெரும்பான்மை வீதியில் இறங்கி தடுப்பதாகக் கூறினர். மூலதனம் உருவாக்கிய தனது ஜனநாயக சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தியே, இதை தடைசெய்யக் கோரினர்.
சமூக விரோத முதலாளித்துவ ஆதரவு சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமையே முதன்மையானது என்கின்றனர். இதற்கு எதிரான மாணவர்களின் ஜனநாயகம், வன்முறை கொண்டது என்றனர். ஜனநாயக பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை திரும்ப பெறக் கோருவது, ஜனநாயக விரோதம் என்;றனர். பெரும்பான்மை மக்கள் தமக்கு வாக்களித்துவிட்டதாக கூறி, மக்களுக்கு எதிராகவே சட்டம் கொண்டுவர தமக்கு உரிமை உண்டு என்று கூறி கூக்குரல் இட்டனர். இதைத்தான் ஜனநாயகம் என்று கூறி, ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தம்மையறியாமலேயே தோலுரிக்கவும் கூட அவர்கள் தயங்கவில்லை.
ஜனநாயகம் பற்றிய கேள்விகள் மாணவர்களிடையே ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. இதில் அவர்கள் அரசியல் கல்வி கற்று பட்டம் பெற்றுவருகின்றனர். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மீறிய, பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகம் பற்றிய கேள்வி, வீதியில் மாணவர்களால் நிறுத்தி வைத்தே கேட்கப்பட்டது. மக்களுக்கு எதிரான அரசையே ராஜினாமாச் செய்யக் கோரினர்.
முதலாளிகளுக்காகவே உள்ள ஜனநாயகம், முதலாளிகளுக்காகவே சேவை செய்யும் பொலிஸ் என்ற வன்முறை கொண்ட அடக்குமுறை இயந்திரத்தை, மாணவர்கள் தமது சொந்தப் போராட்டத்தின் மூலமே இனம் கண்டனர். இதை பாதுகாக்கும் அரசு இயந்திரங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக ஏன் செயல்படுகின்றன என்ற கேள்வி, ஜனநாயகம் பற்றிய பிரமை கொண்ட மாணவர்களிடையே மக்களிடையே ஒரு தெளிவை உருவாக்கி வருகின்றது. ஜனநாயகம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதனத்துக்கு சார்பானது. சட்டம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதன பெருக்கத்துக்கு சார்பானது. அரசு என்பது மூலதனத்தை வைத்துள்ளவர்களை பாதுகாக்க உருவானதே. இது ஒரு வன்முறை கொண்ட சர்வாதிகார அமைப்பாகும்.
இந்த ஜனநாயகத்தை நம்பி அரசியல் செய்யும் கட்சிகளும், அதை சொல்லி தொழிற்சங்கம் நடத்திப் பிழைக்கும் கும்பலும் கூட, ஜனநாயகத்தை பாதுகாக்க களத்தில் மாணவர் சார்பு நிலையை எடுத்தனர். இந்த விசித்திரமான அடிப்படையான உண்மை மட்டும், இதில் அம்பலமாகாது பொயத்;துவிடுகின்றது. மாணவர்கள் இந்த ஜனநாயக அமைப்பில் நம்பிக்கையை இழந்துவிடாது தடுக்கவும், ஒரு புரட்சிகரமான மக்கள் அதிகாரத்தை கோரும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாது தடுக்கவும், இந்த ஜனநாயகவாதிகள் விரும்பினர். அவர்கள் மாணவர்களின் பக்கத்தில் தாம் நிற்பது போல் நின்று, மாணவர்களின் விருப்பத்தை தமது கோரிக்கைக்குள் சரணடைய வைக்க முனைந்தனர்.
பேசித் தீர்த்தல், முன் கூட்டியே சட்டத்தை விவாதிக்க கோருதல், தாம் ஆட்சிக்கு வந்தால் இதை நீக்குவதாக கூறுதல், இது போன்ற சட்டங்களை உங்களுடன் பேசி முடிவு எடுப்பதாக கூறுதல், போராட்டம் சிதையும் வண்ணம் காலத்தை நீட்டியடித்தல், போராட்டத்தை சிதைக்கும் வண்ணம் சீர்திருத்தத்தை புகுத்துதல், பொது வேலை நிறுத்ததை இழுத்தடித்து பிற் போடுதல், தனித்தனியாக அரசுடன் பேசுதல், கூட்டுத் தலைமைக்கு புறம்பாக பேச முற்பட்டு போராட்டத்தை உடைத்தல், தொழிற் சங்கத்தை மாணவர்களில் இருந்து பிரித்து செயல்படுத்தல் போன்ற எண்ணற்ற இழிந்த வடிவங்களை இவர்கள் கையாண்டனர். உண்மையில் மாணவர்களின் கோரிக்கையை மழுங்கடிக்க, அதை சிதைக்க பலர் குறுக்குவழியில் இதற்குள் புகுந்து செயல்படுத்த முனைந்தனர்.
ஒரு அரசியல் மயப்படாத சமூகத்தில், இது போன்ற குறுக்குவழி அரசியல் நடைமுறைகள் பல சறுக்கல்களையும் தோல்விகளையும் வழிகாட்டத்தான் செய்தன. ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கையை, இவர்களால் மறுதலிக்க முடியாமையால் ஜனநாயகத்தின் குறுக்குவழி அரசியலால் திசைதிருப்ப முடியவில்லை. இதனால் போராட்டம் தொடர்ச்சியாகவும் சோர்வின்றியும் சவால்விட்டு நிமிர்ந்து நின்றது.
பிரங்சுப் பிரதமரோ தனது கருத்தில் போராட்டத்துக்கு பயந்து மூலதனத்துக்கு சார்பான இச் 'சட்டம் திரும்பப் பெற்றுக் கொண்டால், நாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சீர்திருத்தம் என்பதை மறந்துவிட வேண்டும். இது ஆபத்தான அடையாளமாகும்." என்றார். எனவே 'அரசாங்கம் விவாதத்திற்கிடமின்றி கஷ்டத்தில் இருக்கின்றது. நாம் ஒன்றுபடவேண்டும்," என்று அரசு, தனது வலதுசாரிய அதிர்ப்;தியாளர்களிடம் கூறினர். மறுபக்கத்தில் மாணவர்களின் உறுதியான நிலையை முறியடிக்க சட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்தனர். இரண்டு வருட காலத்தை ஒரு வருடமாக குறைப்பதாக் கூறி, ஒரு பகுதி மாணவர்களை உடைத்துவிட முனைந்தனர். மாணவர்களின் உறுதியான எதிர்ப்பால் இது தோல்வி பெற்ற போது, புதிதாக மீண்டும் இதை நடைமுறைப்படுத்தும் காலத்தை ஆறு அல்லது ஒரு வருடத்துக்கு பிற் போடுவதாக அறிவித்தனர். இதுவும் தோல்வி பெற்றது. மாணவர்களின் பரீட்சை நெருங்கி வருவதைக்காட்டி, ஒரு உளவியல் விவாதத்தையே நடத்தி, மாணவர்களின் உணர்வுகளை சிதைக்க முனைந்தனர். இப்படிப் போராட்டத்தை நீந்து போகச் செய்யும் சதிகளையே அரசு ஜனநாயகமாக்கினர். ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள், இதை முறியடித்து தனது பலத்தை நிறுவிக்காட்டியதுடன், சமூக விரோதச் சட்டத்தை மீளப் பெற வைத்தனர்.
மூலதனத்தை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தைக் கண்டு, எதிர்கட்சிகள் பீதியில் உறைந்து நின்றனர். இந்த சட்டத்தை ஒட்டி 'இது எதில் போய் முடியுமோ என்ற கவலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம்" என்று சோசலிஸ்ட் கட்சியினர் கூறினர். அரசின் கடும்போக்கை கண்டு, ஐயோ ஜனநாயகத்துக்கு ஆபத்து அதிகரிப்பதாக கீச்சிட்டனர். புதிய அரசியல் மாற்று வழிகளை இது உருவாக்குவதாகவும், இது ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க இச்சட்டம் வழிவகுப்பதாக கூறியே, இந்த சட்டத்தை வாபஸ் வாங்கும்படி கோரினரேயொழிய மாறாக மாணவர்களின் நியாயமான கோரிக்கையின் மீதல்ல.
இந்த நிலையில் இருந்து தப்பிப்பிழைக்கவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்ல விரும்புகின்ற, இனவாதியும் நாசியுமான உள்துறை அமைச்சர் சாக்கோசி, அரசின் சார்பாக இதைக் கையாளத் தொடங்கினார். அவர் தான் இந்தச் சட்டத்தின் அமுலாக்கத்தை 6 முதல் 12 மாதம் பிற் போடுதல் என்ற புதிய அரசியல் சூதாட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் தான் தேர்தலில் வெல்லும்வரை இதைப் பிற்போடுதல், இல்லையென்றால் இந்த நெருக்கடியை புதிய ஆட்சியிடம் தள்ளிவிடுதல் என்ற அரசியல் ஜனநாயக சூழ்ச்சியை முன்னிறுத்தினார். இந்த அரசியல் சூழ்ச்சியையும் மாணவர்கள் தெளிவாக நிராகித்தனர். உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் வாங்கக் கோரினர்.
அவர்கள் இதற்கு எதிராக 'இளைஞர்களை தூக்கியெறிவதை நிறுத்து", 'கசக்கப்பட்ட எலுமிச்சம் காய்களாக எத்தனை காலம் இருப்பது?", 'க்ளீனெக்ஸ் ஒப்பந்தம் வேண்டாம்", 'பின்புற வழியாக அடிமை உழைப்பு", 'ஒப்பந்த வேலையை தூக்கி எறியுங்கள்;" 'உங்கள் இளமையை தூக்கி எறியாதீர்கள்!" இது 'அடிமக்களுக்கான ஒப்பந்தம்" என்று பல பத்து கோசங்களுடன் மாணவர்கள், அரசை எதிர்த்து வீதியில் மீண்டும் மீண்டும் இறங்கினர்.
இப்படித் தான் ஜனநாயகம் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியது என்றால், அந்த மாணவர் போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியம்;. இந்த சட்டம் இரண்டு விடையங்களை உள்ளாக்கியது. முதல் வேலை ஒப்பந்தம்(CPE என்பது Contrat première embauche ) என்ற சட்டம், 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு எதிராக சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவது சட்டம் முதியவர்களுக்கானது. குறுகிய கால ஒப்பந்தம் (Short-tem Contract for Seniors) என்பது, 57 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம். இதுவும் மாணவர்களுக்கு எதிரானது.
முதல் வேலை ஒப்பந்தம் 26 வயதுக்கு உட்பட்டவர்களை ஒரு முதலாளி விரும்பிய நேரத்தில், விரும்பியவாறு இரண்டு வருடத்துக்குள் வேலை நீக்கம் செய்யும் சட்டமாகும். இதற்கு எதிராக சட்டப்படி வழக்கு தொடுக்க முடியாது. இதுவரை இருந்த உழைக்கும் அனைத்து தொழிலாளியையும் நீக்க வகை செய்யும் பொதுச்சட்டத்தை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக 26 வயதுக்குட்பட்டவர்களை ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம், அவர்களை விரும்பியவாறு முதலாளி கையாள அனுமதிக்கின்றது.
முதியர்களுக்கான குறுகியகால ஒப்பந்தம், தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு, உழைப்பில் தொடர்ந்து இருக்க வழிவகை செய்யும் சட்டம். இதன் மூலம் முதிய உழைப்பாளிகளின் சம்பளத்தைக் குறைக்க சட்டம் இயல்பாக வழிவகுக்கின்றது. முதுமைக்கு ஒய்வூதியம் என்பதை இது மறுக்கின்றது. மறுபக்கத்தில் ஒய்வூதியத்தை குறைத்த கடந்தகாலச் சட்டங்கள், இயல்பாக ஒய்வூதியத்தை விட சற்று அதிகமான கூலியை பெற்று தொடர்ந்தும் உழைக்க கோருகின்றது. ஒய்வூதியம் பெறாது தொழிலில் நீடிக்க சட்டம் கோருகின்றது. குறைந்த ஒய்வூதியத்தில் வாழமுடியாத நிலையில், வலுக்கட்டாயமாக அதை விட சற்று அதிகமான ஒரு எழும்பை போடுவதன் மூலம் ஒய்வூதிய வயதை அதிகரிக்கவைக்கின்றனர். இதன் மூலம் முதலாளி ஒய்வ+திய நிதியை கொடுக்க வேண்டியதில்லை. மிகச் சிறந்த அனுபவமுள்ள உழைப்பாளியின் உழைப்பை, மிக மலிவாக சுரண்ட இச் சட்டம் வழிவகுத்தது. இதன் எதிர்வினையில் இதுவே இளைஞர்களின் புதிய வேலை வாய்ப்பைத் தடுக்கின்றது. இதை உறுதி செய்யவே மற்றய சட்டம் உதவுகின்றது.
உண்மையில் 26 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மையை நிரந்தரமாக உருவாக்குகின்ற திட்டமிட்ட சதியாகும். ஒரு சேமிப்படையாக வைத்துக் கொண்டு பயன்படுத்திவிட்டு, துப்பிவிடும் மூலதனத்தின் முயற்சியாகும்;. 26 வயதுக்கு உட்பட்டவர்களை பெற்றோரில் தங்கிவாழ வைப்பதன் மூலம், முதலாளிகளின் மூலதனத்தை அதிகரிக்க வைக்கும் சட்டமாகும். 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு பிரான்சில் எந்த சமூக உதவியும் வழங்கப்படுவதில்லை. அதாவது 18 வயதுக்கு கூடிய ஒருவன் சமூகத்தின் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்ட பொதுவான சட்ட நடைமுறைகள் இருந்தபோதும் கூட, அவன் உழைத்துத்தான் வாழ வேண்டிய ஒரு நிலையிலும் கூட, அவன் 26 வயது வரை எந்த சமூக உதவியும் பெறமுடியாது. அதாவது பிரான்சில் 26 வயதுக்கு கூடிய ஒருவன் வேலையில்லை என்றால், அதிகுறைந்த சமூக உதவியைப் பெறமுடியும். அது 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு கிடையாது. இது இயல்பில் பெற்றோரில் தங்கிவாழ வைக்கின்றது அல்லது சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழக் கோருகின்றது. இது முலதனத்துக்கு சார்பான ஒரு சட்டமாகவுள்ளது.
அதேநேரம் கல்வி கற்போருக்கென கட்டாயமான இலவசமான உழைப்பு முறை ஒன்று அமுலில் உள்ளது. 15 வயதுக்கு மேல் கல்வி கற்போர் கற்கும் காலத்தில், முதலாளிக்காக இலவசமாக உழைக்க வேண்டும். இதற்கு கூலி கிடையாது. இப்படி பல கோடி மணித்தியாலங்களை முதலாளிகள் கூலியின்றி பெறுகின்றனர். பல 100 கோடி ஈரோக்களை ஒவ்வொரு வருடமும் இலவசமாக கூலியின்றி முதலாளி பெறுகின்றான். இப்படி கூலியின்றி உழைக்கும் நேரத்தை, மாணவர்களின் ஒழுக்கத்தின் பெயரில் படிப்படியாக அரசு அதிகரித்து வருகின்றது. இப்படி ஒரு அப்பட்டமான சட்டப+ர்வமான கொள்ளையே, இந்த ஜனநாயக சட்டவாக்கத்தின் பின் ஆழச் செறிந்து காணப்படுகின்றது.
முதல் வேலை ஒப்பந்தம் நடைமுறையில் வந்து இருந்தால், குறிப்பாக வெளிநாட்டு இளைஞர்கள் அதிகளவில் நேரடியாக பாதிக்கப்படுவர். இன்று அதிகளவில் உள்ள வெளிநாட்டவர் வேலையின்மை (குறிப்பாக இது பிரதேசத்துக்கு பிரதேசம் 25 சதவீகிதம் முதல் 50 சதவீகிதமாக காணப்படுகின்றது.) இயல்பாகவே அதிகரிக்கும். இருக்கும் சட்டங்களே கணிசமாக வேலையைவிட்டு துரத்துபவர்களைக் கட்டுப்படுத்துகின்றது. இதை இல்லாதாக்கும் போது, வெளிநாட்டு இளைஞர்களை விரைவாகவே, வேலையில் இருந்து துரத்திவிடுவது அதிகரித்திருக்கும்.
பொதுவாக இச்சட்டம் 26 வயதுக்குட்பட்டவர்களை உளவியல் ரீதியாக அடிமைப்படுத்துவதையே கோருகின்றது. இதில் பெண்களை பாலியல் ரீதியாக, அதிகாரம் கொண்ட மூலதனம் நுகர்வதை கேள்விக்குள்ளாக்காத வகையில், பெண் இணங்கிப் போவதையே கோரியது. 26 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகத்தின் அனைத்துவிதமான சமூகக் கொடூமைக்கும் தானாக இணங்கிப் போவதை வரைமுறையின்றி இச்சட்டம் இணங்கவைக்க முனைந்தது. ஒரு தொழிற்சங்க செயல்பாட்டில் இருந்து, சமூக செயற்பாட்டில் இருந்த இளைஞர்களுக்கேயுரிய தீவிர உணர்வை இது கட்டுப்படுத்தி, மூலதனத்துக்கு அடங்கி இணங்கி இருக்கக் கோரியது. இளைஞர் சமூதாயம் அடங்கியொடுங்கி ஒழுக்கமாக, அதையே பண்பாக கொண்டு மூலதனத்துக்கு சேவை செய்வதை இது கோரியது. மக்கள் நலன், சமூக நலன் என எதையும் முன்னிறுத்தாத, மூலதன நலனுக்கு இணங்கிப் போகும் ஒரு வாழ்க்கை முறையையே, இச்சட்டத்தின் மூலம் நடைமுறையில் கோரியது. 26 வயதின் பின் இதுவே ஒரு வாழ்க்கை முறையாக தன்னைத் தான் மாற்றக் கோரும் ஒரு பயிற்சி காலமாக, 26 வயதுக்குட்பட்ட இளைஞர் இளையிகளின் வாழ்வு மீதான பயத்தை தனக்கு சார்பாக மாற்ற முனைந்தது. இதன் மூலம் மூலதனம் இளைஞர் யுவதிகளின்; உழைப்பின் திறனை, அதிகளவில் உயர்ந்தபட்சம் உறுஞ்சுவதையே இச்சட்டம் உறுதி செய்ய முனைந்தது. அதாவது 26 வயதுக்கு உட்பட்டவர்கள் கடுமையாக உழைப்பதன் மூலம், நாயாக வாழ்வதன் மூலம், தனது தொழிலைப் பாதுகாக்க முடியும் என்ற நப்பாசையையே இச்சட்டம் ஒரு பண்பாகவும் நடைமுறையாகவும் கோரியது.
மூலதனத்தின் அனைத்து அசைவுக்கும் இணங்கி அடிமைப்பட்டு அடங்கியொடுங்கி வாழ்வதையே இச்சட்டம், ஒவ்வொரு 26 வயதுக்குட்பட்டவனிடமும் கோரியது. இல்லையென்றால் அவர்கள் வலதுகுறைந்தவர்களாக மாறி, வாழ்வதற்காக பெற்றோரை தங்கியிருக்க கோரியது. இதுவுமில்லை என்றால் சமூகவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழும் லும்பன்களாகவே இருக்கக் கோரியது. இந்தவகையில் இச் சட்டம் மேலும் ஒரு சமூக இழிவைப் புகுத்தவே முனைந்தது. மூலதனத்தின் அடிமையாக, சுதந்திரமான உணர்வுகளை இழந்து இழிந்து இருத்தலைத் தான் ஜனநாயகம் என்றது. உளவியல் ரீதியாகவே அனைத்தையும் இழந்து சிதைந்து போன, சுயலாற்றல் அற்ற நிலையில் வாழ்வதே நாகரிகம் என்று இச்சட்டம் மூலம் புகட்ட முனைந்தனர்.
இன்று பிரான்சில் அண்ணளவாக 10 சதவீகிதம் பேர் வேலையின்றி இருப்பதாக அரசு அறிவிக்கின்றது. இதில் 26 வயதுக்குட்பட்டோரின் வேலையின்மை அண்ணளவாக 23 சதவீதமாகவுள்ளது. இந்த நிலைமை என்பது, 26 க்கு குறைந்த, உழைப்பில் அதிதிறன் ஆற்றல் உள்ள உழைக்கும் மனிதர்களின் இழிநிலையே இது. இதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், இச் சட்டம் வக்கிரமாகவே அவர்கள் மேல் ஈவிரக்கமின்றி பாய்ந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டவர்களில் வேலை செய்தவர்களில் 58 சதவீகிதம் பேர் மட்டும் தான், நிரந்தரமான ஒரு வேலையைப் பெற்றனர். மிகுதிப் பேர் நிரந்தரமற்ற ஒரு நிலையில் காணப்பட்டனர். இச்சட்டம் இதை மேலும் அதிகரிக்க கோரியது. முதலாளிகள் தாம் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டிய தேவையை மறுக்கின்ற ஒரு சட்டத்தைத்தான் கோரினர். மாணவர்கள் இதன் எதிர் நிலையில் நின்று போராடினர்.
உண்மையில் இந்த சட்டத்தின் முன்பே நிலைமை மோசமானதாகவே இருந்தது. 2003 இல்; 21 சதவீகிதத்தினர் தங்கள் படிப்பு முடித்து ஒன்பது மாதங்களுக்கு பின்னரும் கூட, வேலை தேடிக் கொண்டிருந்தனர். இன்றைய ஒரு நிலையில் ஒரு இளைஞன் நிரந்தரமான ஒரு வேலை கிடைக்க 8 முதல் 11 ஆண்டுகள் செல்லுகின்றது. புதிய சட்டம் இதை மேலும் பல ஆண்டாக அதிகரிப்பதையே முன்வைத்தது. 70 சதவீகிதமான இளைஞர்கள் குறுகிய கால ஒப்பந்தம் மற்றும் தற்காலிகமான வேலைக்கே செல்லுகின்ற இன்றைய மனித அவலத்தை, இச் சட்டம் முழுமையான வாழ்க்கை முறையாக்க முனைந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டோரில் வேலை செய்தவர்களில் 40 சதவீதம் பேர், அடுத்த வருடம் தமது வேலையை இழந்து இருந்தனர். இதை இச்சட்டம் இதை 100 சதவீகிதமாக்க முனைந்தது.
இதை ஆநுனுநுகு என்ற பிரெஞ்சு முதலாளிகளின் சங்கம் 'ஒழுங்குபடுத்தப்படாத குப்பைக்கூழம்" என்று கூறி, ஒழுங்குபடுத்தும் இச்சட்டம் தேவை என்றனர். தனது தேவைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்த இந்தச் சட்டம் உதவுகின்றது என்றனர். குப்பைகளான இளைஞர்களை வடிகட்டி, தூக்கியெறிய இச்சட்டம் உதவும் என்றனர்.
சரி இந்த ஜனநாயக சட்டத்தை அரசு கொண்டு வந்த விதமே நரித்தனமானது. மாணவர்களின் விடுமுறையின் போது தான் இச்சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தனர். நாள் பார்த்தும், சூனியம் செய்தும், மாணவர்கள் போராடாது இருக்கவும், தமது எதிhப்பை தெரிவிக்காத ஒரு நாளாக பார்த்தே நாட்களை தெரிவு செய்து இந்த சட்டத்தைக் கொண்டு வந்தனர். தை 28 ம் திகதி இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. மாசி 4 முதல் இரண்டு கிழமை தொடரும் விடுமுறைக்குள் எதிர்ப்புகள் விவாதங்கள் நீந்து போகச் செய்யும் வகையில், சமூகத்துக்கு எதிரான சட்டம் நயவஞ்சகமாகவே புகுத்தப்பட்டது.
பங்குனி 8 திகதி அதாவது பெண்கள் தினத்தன்று இச்சட்டம் சட்டவாக்கம் பெற்றது. பெண்களுக்கு எதிரான ஒரு புதிய சட்டம் தான். மனித உரிமையை கோரிப் போராடும் ஒரு நாளில் தான், இந்த மனித இழிவு சமூகத்தில் சட்டபூர்வமாக புகுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது என்பது, எம்முன்னுள்ள சரியான வரலாற்றுப் பணியை உற்சாகத்துடன் வழிகாட்டுகின்றது. வரலாறு மக்களுக்கானது. போராடினால் தான் மனித வாழ்வு உண்டு. இதின்றி மனித உரிமை என எதுவுமில்லை.
தமிழ் அரங்கம்
Friday, April 14, 2006
Thursday, April 13, 2006
விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!
''விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!" தாராளமயத்தின் கோரம்
இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?
""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'', ""எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்!'' என மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் பல கிராமங்களில் அறிவிப்புப் பதாகையுடன் விவசாயிகள் தமது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் புதுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமது உடல் உறுப்புகளையும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் பகிரங்கமாக விற்பனை செய்யத் துணிந்து விட்ட விவசாயிகளின் இச்செயல், வழக்கம் போலவே செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இப்போது மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது.
""சிறுநீரக விற்பனை மையம்'' என்ற விளம்பரப் பதாகையுடன் ஒரு மூங்கில் கொட்டகை அந்தக் கிராமத்தின் நுழைவாயிலில் காணப்படுகிறது. ""ஆம்! இது உண்மைதான்! நாங்கள் எங்கள் சிறுநீரகங்களை விற்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மன்மோகன் சிங்கையும் அரசுத் தலைவர் அப்துல் கலாமையும் இந்தக் கடையைத் திறப்பு விழா செய்து விற்பனையைத் தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்'' என்கிறார்கள் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்திலுள்ள ஷிங்னாபூர் கிராமத்து விவசாயிகள்.
""இதில் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை. நாங்கள் எங்கள் கிராமத்தை எங்களின் சிறுநீரகங்களை விற்கத் தடைவிதிக்காமல் ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கடனில் மூழ்கி ஓட்டாண்டிகளாகி விட்டோம். எங்களிடம் விற்பதற்கு எதுவுமில்லை சிறுநீரகத்தைத் தவிர!'' என்கிறார் சம்பத்கிரி என்ற விவசாயி.
ஷிங்னாபூர் மட்டுமல்ல; டோர்லி, லெஹேகான், ஷிவ்னி ரசுலாபூர் முதலான மகாராஷ்டிராவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பல கிராமங்களில் சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரப் பதாகைகள் தொங்குகின்றன. ""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'' என்ற அறிவிப்புப் பலகைகள் கிராமங்களின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. ""கடந்த 10 மாதங்களில் எங்கள் வட்டாரத்தில் 309 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர். முன்பு எனது நிலத்தில் கிணறு தோண்டி மின்சார மோட்டார் போட்டு விவசாயம் செய்து வந்த நான், இப்போது கடன்சுமையால் நிலத்தை இழந்து நிற்கிறேன். கூலி வேலையும் இப்பகுதியில் கிடைப்பதில்லை. எனது வீட்டில் உணவு இல்லை; துணி இல்லை; மின்சாரமில்லை. தெரு நாய்களைப் போல நாங்கள் பசியால் அலைந்து திரிகிறோம். வெறும் தண்ணீரைக் குடித்து எத்தனை நாட்கள் நாங்கள் உயிர் வாழ முடியும் என்று தெரியவில்லை. எங்களது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்க இப்படி விற்பனை அறிவிப்பு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை'' என்று குமுறுகிறார் அந்த விவசாயி.
ஒரு காலத்தில் ""வெள்ளைத் தங்கம்'' என்று பெருமையாகக் குறிப்பிடப்பட்ட பருத்தி விளையும் கரிசல் காட்டு சொர்க்க பூமியாக விளங்கிய மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம், இப்போது சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயம் தோற்றுவித்த பயங்கரம் அப்பிராந்தியம் எங்கும் மரணஓலமாக எதிரொலிக்கிறது.
""எங்கள் வட்டாரத்திலிருந்து வண்டி வண்டியாக ஒரு காலத்தில் பருத்தியை ஏற்றிச் செல்வோம். இப்போது ஒரு வண்டி அளவுக்குக் கூட பருத்தி இல்லை. மாடுகளை விற்றுவிட்டோம்; இற்றுப் போன வண்டிகளை விறகாக்கினோம். பருத்தி விலை அடிமாட்டு விலைக்கு வீழ்ந்து விட்டது. உற்பத்திச் செலவோ 5 மடங்கு அதிகரித்து விட்டது. விலை வீழ்ச்சியால் இதர பயிர் சாகுபடிகளும் கட்டுபடியாகவில்லை. வங்கியில் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால், புதிதாக அங்கு கடன் தர மறுக்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் 10 வட்டி 12 வட்டிக்குக் கடன் வாங்கி போண்டியாகி நிற்கிறோம்'' என்று விம்முகிறார் சவாண் எனும் விவசாயி.
தாராளமயமாக்கலுக்குப் பிறகு சந்தையின் மீதான கட்டுப்பாட்டை அரசு தளர்த்தியது. பருத்தி கொள்முதல் நிலையங்களை அரசு படிப்படியாக மூடியது. அமெரிக்க, ஐரோப்பிய பருத்தி விவசாயிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுமாறு விவசாயிகளுக்கு உபதேசித்தது. ஆனால், அந்நாடுகளின் விவசாயிகளுக்கு அரசாங்கம் பல்லாயிரம் கோடி மானியம் கொடுத்து ஆதரிக்கிறது. இந்திய விவசாயிகளுக்கோ உலகவங்கி உத்தரவுப்படி ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மானியமும் வெட்டப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் எப்படி போட்டி போட முடியும்?
மேலும், இந்திய ஆட்சியாளர்கள் தாராளமயமாக்கலின் கீழ், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு 10% தான் இறக்குமதி தீர்வை விதிக்கப்படுகிறது. இதனால் கப்பல் கப்பலாக வெளிநாட்டுப் பருத்தி குவிகிறது. அதன் காரணமாக, உள்நாட்டுப் பருத்தி கடும் விலை வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு கச்சா பருத்தியின் விலை ஒரு கிலோ ரூ. 100 என்று இருந்தது. இன்று அதன் விலை பாதியாகச் சரிந்துவிட்டது.
ஒருபுறம், அன்னிய இறக்குமதியால் விலை வீழ்ச்சி; மறுபுறம் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மானியக் குறைப்பு, மின்கட்டண உயர்வு என இரட்டைத் தாக்குதலின் கீழ் சிக்கிப் பருத்தி விவசாயிகள் கடனாளியாகி போண்டியாகிப் போனார்கள். இந்த நச்சுச் சூழலிலிருந்து மீள வழிதெரியாமல் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.
விதர்பா பிராந்தியமே வாழ்விழந்து பரிதவித்த நிலையில், வேலையில்லா விவசாய இளைஞர்கள் சிலர், மும்பைக்கு வேலைத் தேடிச் சென்று அங்கு கட்டுமானப் பணிகளில் கூலி வேலை செய்தனர். ஆனால் அங்கு வாரத்திற்கு 2 நாட்கள்தான் வேலை கிடைத்தது. சாலையோர நடைபாதைகளில் இரவில் படுத்துறங்கி, வேலை தேடி அலைந்த அவர்களுக்குத் தொடர்ச்சியாக வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி திருட்டு ரயிலேறி அவர்கள் ஊருக்குத் திரும்பி விட்டனர். இப்படி பல கிராமத்து இளைஞர்கள் வேலை தேடி மும்பை, தானே, புனே, நாக்பூர் என பெருநகரங்களுக்கு ஓடுவதும், அங்கும் வேலை கிடைக்காமல் பட்டினியோடு ஊருக்குத் திரும்புவதும் அவலத் தொடர்கதையாக நீள்கிறது.
வங்கி அதிகாரிகளும் கந்துவட்டிக்காரர்களும் கடனைக் கட்டச் சொல்லி எச்சரித்ததால், அவமானம் தாளாமல் கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று ஜகதீஷ் தேஷ்முக் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார். கணவனைப் பறிகொடுத்த அவரது மனைவி, காய்கறி பயிரிட்டு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது 12 வயது மகன் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு ஊர்ஊராக காய்கறி விற்கிறான். ""மின் வாரிய அதிகாரிகளோ, மின்கட்டண பாக்கியை உடனே செலுத்த வேண்டுமென எச்சரிக்கிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் காய்கறிகூட பயிரிட முடியாமல் நாங்கள் பிச்சை எடுக்க நேரிடும்'' என்று கண்கள் குளமாகக் கதறுகிறார் தேஷ்முக்கின் மனைவி.
நாடெங்கும் தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரத்துக்கும் அவலத்துக்கும் இன்னுமொரு சாட்சிதான் மகாராஷ்டிரா விவசாயிகளின் ""சிறுநீரக விற்பனை மையங்கள்.'' தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் பணக்கார மாநிலமாகச் சித்தரிக்கப்படும் மகாராஷ்டிராவின் நிலைமையே இப்படி இருக்கும்போது, நாட்டின் பிற பகுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. விலை வீழ்ச்சியால் தக்காளியைத் தெருவில் கொட்டிவிட்டு கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், ஆலையிலிருந்து வெட்டுவதற்கான உத்தரவு வராமல் நட்டப்பட்டு, கரும்புக் காட்டையே கொளுத்தும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல் காய்கறிகளையும் பழங்களையும் தெருவிலே கொட்டி வேதனையை வெளிப்படுத்தும் விவசாயிகள், வேலை கிடைக்காமல் நாடோடிகளாக அலையும் விவசாயிகள் என நாடெங்கும் விவசாயிகள் படும் அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உயிர் மலிவாகி விட்டது; உடல் உறுப்புகள் மலிவாகி விட்டது. நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் அண்டப் புளுகை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது இந்த அவமானக் கறையைத் துடைத்தெறிய தாராளமயத்துக்கும் துரோக ஆட்சியாளர்களுக்கும் எதிராகப் போராடப் போகிறோமா?
மு குமார்

Wednesday, April 12, 2006
சித்திரையில், இப்புத்திரன் மரணமா?
சித்திரையில், இப்புத்திரன் மரணமா?
சுதேகு
12.04.06
இயேசுவின் பிறந்த நாளை மார்கழி 25 இலும் -தை 6 இலும் கொண்டாடுவது போல, இறந்த நாளான 'பெரிய வெள்ளியை' ஒரு நிலையான திகதியில் இவர்கள் கொண்டாடுவதில்லையே ஏன்? இயேசு இறக்கும் போது அவருடன் கூடவே இருந்த சீடர்கள் கூட இதைச்சொல்லவில்லை. தீர்க்கதரிசனங்களோ, வெளிப்படுத்தல்களோ கூட இதைச் சொல்லிவைக்கவில்லை. கத்தோலிக்கத்தின் ஞான உபதேச வகுப்புக்களில் இயேசு 30 வயதில் காணாமற்போய் பின்னர், 33 வயதில் சிலுவையில் அறையப்பட்டதாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் 'சூரிய ஒளியினர்' இயேசு சித்திரை மாதம் 7ம் திகதி 30ம் ஆண்டு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறுகின்றனர் (07April 30). அன்றைய தினம் கருப்பு மேகங்கள் சூரியனை மறைத்ததாகவும், சுமார் 36 மணித்தியாலங்களாக பூமி சூடாகவும் அதிர்வுடனும் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
இயேசுவின் இறப்பு-உயிர்ப்பு நாட்களை பாஸ்காவின் கடைசி நாட்களில் கொண்டாடுகின்றனர். யூத வருடத்தின் முதல் மாதமாகிய நிசான், (சித்திரை) முதல் பிறை நிலாவின் தோற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாட்காட்டியின்படி நிசான் 14ம் தேதி அன்று இயேசுவின் இராப்போசனம் கணக்கிடப்படுகிறது. அன்று யூதர்கள் பழைய கிரேக்க கலண்டரையே பயன்படுத்தினர். இவர்களின் நோன்புகள் பூரண சந்திரனை ஒட்டியே பின்பற்றப்பட்டன. முக்கியமான கடன் திருநாட்கள், பாஸ்கா என்பனவும் பின்னர் கிறிஸ்தவர்களால் இவ்வழிமுறையிலேயே கடைப்பிடிக்கப்பட்டன.
கலண்டர் ஒரு வருடத்திற்கான படிவமாக பனிக்காலம், இலை துளிர்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம் என நான்கு காலங்களைக் கொண்டிருந்தது. ஒரு வருடம் 12 மாதங்களையும் கொண்டிருந்தது. இது சூரிய, சந்திர குடும்பங்களில் இருந்து பெறப்பட்டது. கலண்டர் இதுகாலவரை 3 விதமாகக் கணிக்கப்பட்டது.
1.பூமி தனது சுழற்றியில், அதன் நேர்கோட்டுக்கு சூரியன் வருதல்.இக்கணிப்பு உரு வருடம் -365 நாட்கள் 5மணி 48 நிமிடங்கள்
2.சூரியனையும்-மற்றைய கிரகங்களையும் வைத்து கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 9 நிமிடம் 10 செக்கண்டுகள்.
3.பூமி தனது சுழற்சியில் சூரியனுக்கு மிக அண்மையாக வருவதை வைத்துக் கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 13 நிமிடங்கள் 53 செக்கண்டுகள்
உலகின் முதலாவது கலண்டர் கி.மு 3000 வருடங்களாக பபிலோனியர்களால் பாவிக்கப்பட்டு வந்தது. இது 'யுனி சூரியக் கலண்டர்' என அழைக்கப்பட்டது. இது ஒவ்வொரு பௌர்ணமிகளை மாதங்களாகக் கணக்கிட்டு, 12 நிலா மாதங்களைக் கொண்ட வருடமாகக் கணிக்கப்பட்டது (கூடுதலாக ஒரு மாதம் இடையே வருவதுண்டு) .இவ் நிலா வருடம் 345 நாட்களைக் கொண்டது. (ஒரு மாதம் 29.5 சராசரி நாட்களைக் கொண்ட 12 மாதங்களை உள்ளடக்கிய ஒரு வருடம்) எகிப்த்தின் பழங் குடியினர் பபிலோனியரின் கலண்டரைத் தெரிந்து கொண்டிருந்தாலும், இவர்கள் நைல் நதி நாகரீக விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் ஆகையால் இவர்கள் சூரிய வருடத்தையே கணக்கிட்டனர். வருடம் 365 நாட்களைக் கொண்டதாகவும், மாதம் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களாகவும் கணக்கிடப்பட்டது. கடைசி 5 நாட்களும் அவர்களின் ஐந்து தெய்வங்களின் பிறந்தநாட்களாகக் கணிக்கப்பட்டது.
1 Osiris
2 Horus
3 Sels
4.Nephthys
5. Isis
இக்கலண்டர் கி.மு 100-44 லூலிய சீசரால் மாற்றியமைக்கப்பட்டது. இவர் கிரேக்க வானிலை அறிஞர்களின் உதவியுடன் 355 நாட்களைக் கொண்ட குறுகிய வருடத்தை உருவாக்கினார். மேலதிக நாட்களும் மாதங்களும் சேர்க்கப்பட்டன. ரோமப் பேரரசின் அரசியல் பொருளாதார காரணங்களுக்காக குறைந்த நாட்களைக் கொண்ட வருடத்தை உருவாக்கி,மிக விரைவாக செல்வத்தைத் திரட்டி அரச கல்லாக்களை நிரப்புவதையே குறியாகக் கொண்டிருந்தனர். இதனூடாக உரோமப் பேரரசை விஸ்தரிக்கும் பேராசையையும் அது கொண்டிருந்தது.
கி.பி 325ம் ஆண்டளவில் கிறிஸ்தவ வானிலை ஆய்வாளர்களால் பாஸ்கா பவுர்ணமி அன்றைய தேவாலயங்களுக்காக கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தப் பவுர்ணமி - கிறிஸ்துசபைக்குரிய குருசங்கத்தாரின் பூரண சந்திரன் என்று அழைக்கப்பட்டது. அதாவது பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றிவரும் பாதையில், பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் ஏற்படும் முதலாவது பௌர்ணமி ஆகும். இந்நிகழ்வு வருடம் தோறும் மார்ச் மாதம் 21ம் திகதி பூமியின் நிலைக் கோட்டுக்கு எதிராக சூரியன் வருவதால், இதன் பின்னர் வரும் முதலாவது பூரண நிலவு 'விடுதலை உற்சவத்திக்குரிய பௌர்ணமி' -பாஸ்கா பௌர்ணமி- என்று அழைக்கப்படுகிறது. இப் பௌர்ணமி மார்ச் 22ம் திகதி முதல் ஏப்பிரல் 25ம் திகதிகளுக்கு இடையில் வருவதால், பாஸ்காவும் ஒரு நிலையான திகதியில் இவர்களால் கொண்டாட முடிவதில்லை. இப் பவுர்ணமிக்குப் பின்னர் வரும் முதலாவது ஞாயிறு இயேசுவின் 'உயிர்த்த ஞாயிறா'கக் கொண்டாடப்படுகிறது. இதிலிருந்தே பாஸ்கா கணிப்பிடப்படுகிறது.
இயேசுநாதரின் 40 நாள் நோன்பையும் பாடுகளையும் நினைவுகூரும் வகையில் இன்று பாஸ்கா கொண்டாடப்படுகிறது. இது 46 நாட்களைக் கொண்ட பாஸ்கா நோன்பாகும். இவ் நோன்பு நாட்களில் வரும் 6 ஞாயிறு - ஓய்வுநாட்கள் இதிலிருந்து விலக்கப்பட்டதாக இருந்தது. பாஸ்காவின் கடைசி வாரம் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது. யூதர்களின் பாஸ்கா திருவிழாவுக்காக தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு பலரும் நாட்டுப்புறங்களிலிருந்து யேருசலேமில் கூடுவது வழக்கமாக இருந்தது. இவ்வாறு கூடிய மக்கள் மத்தியில் இயேசு யெருசலேமுக்குள் நுழைகிறார் என்று கேள்விப்பட்டு குருத்தோலைகளை ஏந்தியவண்ணம் அவரை வரவேற்றதாகக் கூறப்படும் பாஸ்காவின் கடைசி வாரம், இக் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது.
இக் குருத்தோலை ஞாயிறு உரோமப்பேரரசில் கி.பி 12ம் நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்திருக்கவில்லை. மேற்குலக நாடுகளில் முதன்முதலாக ஸ்பானியாவில் இது கொண்டாடப்பட்டதாக அறியமுடிகிறது. அதுவும் கி.பி நான்காம் , ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இது கொண்டாடப்பட்டது.
திங்கள்
யெருசலேமின் தேவாலயம் இந்நாளிலேயே தூய்மை செய்யப்பட்டதாக நம்பப்படுவதால், இந்நாளில் அதிக முக்கியமான விடயங்கள் எதுவும் இந்நாளில் நடைபெறுவதில்லை. மத்தேயு 21ம் அதிகாரம் 12ம்,13ம் வசனத்தை இதற்கு அறிக்கை இடுகின்றனர். அதாவது ''பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்: கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்'' ,''என் இல்லம் இறைவேண்டுதலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்'' என பரிசேயருக்கும் இயேசுவுக்கும் இடையில் நடைபெற்ற சம்பவமாக இதை நினைவு கூருகின்றனர்.
செவ்வாய்
இந்நாளில் இரண்டு சம்பவங்கள் நினைவு கூருவதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று -இயேசுநாதரை நாஸ்திகக் குறிப்பு ஒன்றை செய்ய ஆளாக்க முயன்றதாகவும் மற்றையது இயேசுநாதர் யெருசலேமின் அழிவுபற்றி ஒலிவமலைக் குன்றில் சமிக்ஞை தெரிவித்ததாகவும் இந்நாள் நினைவு கூரப்படுகிறதாம்.
முதாவது சம்பவம் அதிகாரப் போட்டியில் எழுந்த வினாக்களையே நாஸ்திகக் கருத்தாக இங்கு கூறப்படுகிறது. பரிசேயர்கள், தலைமைக்குருக்கள் மற்றும் மூப்பர்கள் ''எந்த அதிகாரத்தில் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்? என்ற தருக்கத்தில் இயேசுவை ஆளாக்கியதையே இங்கு கூறுகின்றர். இயேசு மறுமொழியாக ''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் விண்ணுலகத்திலிருந்தா? அல்லது மனிதரிடமிருந்தா வந்தது? என்று திருப்பிக்கேட்டு, தனது அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று நானும் கூறமாட்டேன் என்று இயேசு சொன்னதான சம்பவத்தையே இங்கு குறிக்கின்றனர். ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது, அவரது சீடர்கள் எருசலேம் அழிவு எப்பொழுது நிகழும் என்று கேட்டபோது அவர் பதிலளித்ததையே இங்கு நினைவுகூருகின்றனர்.
ஆனால் 70ம் ஆண்டே யெருசலேம் கோவில் அழிவுக்கு உள்ளானது. 63ம் வருடம் வரையும் எந்த எருசலேம் வாசிகளும் இவ் அழிவை அறிந்திருக்கவில்லை. 63ம் வருடம் எருசலேமில் இருந்த ஒரு தனிமனித விவசாயி முதன் முதலாக எருசலேம் அழிவுபற்றி இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பெரும் குரலெடுத்து அழுதார். ஊர்வாசிகளும், சில தலைவர்களும் அவரைத் தடுத்தும் அவர் இவ்வாறு தினமும் அழுதுகொண்டிருந்தார். அவரைப் 'பைத்தியக்காரன்' என்று நையாண்டி செய்து அவரைப் புறந்தள்ளி வைத்திருந்தனர். ஆனாலும் அவரின் இச்செயல் தொடரவே, அவர் தாக்கப்பட்டார். இருந்தும் இவர் சாகும்வரை இதைத் தொடர்ந்தார். இவர் இறந்து 7வருடங்களும் 5 மாதங்களும் முடிந்தவேளை எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது (70).
புதன்
இப்புதன் 'ஒற்றர் புதன்' என்றும் 'விபூதிப் புதன்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தான் இயேசுவை காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒத்துக்கொண்டு, திடடம் தீட்டப்பட்டதாகவும், விபூதிப் புதன் மனிதன் தன்னை புதிப்பித்துக் கொள்ளும் - தன்னை ஆன்ம மீட்புக்குப் தயார்ப்படுத்தும் நாளாகவும் நினைவு கூரப்படுகிறது
வியாழன்
இது 'பெரிய வியாழன்' என்று அழைக்கின்றனர். இயேசு தனது கடைசி இராப்போசனத்தை தம் சீடர்களுடன் நடத்தியதாக நினைவு கூரப்படுகிறது.
வெள்ளி
இது 'பெரிய வெள்ளி' என்றும் 'நல்ல வெள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது. அது இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக நினைவு கூரப்படுகிறது. கி.பி 4ம் நூற்றாண்டிலேயே இவ்வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை இயேசுவின் உயிர்ப்புடன் சேர்த்தே இது கொண்டாடப்பட்டது. இயேசுவின் மரணத்தைவிட உயிர்ப்பே பிரதானப்படுத்தப்பட்டது. உயிர்ப்பு ஓய்வுநாளில் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். மற்றும் இயேசுவின் உயிர்ப்பு பற்றி யாக்கோப் போன்றவருக்கு கருத்து முரண்பாடு இருந்ததால் பவுல் போன்றவர்கள் உயிர்ப்பை பிரதானப்படுத்தினர் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
சனி
இயேசுவின் திருப்பாடுகளின் 5 காயங்களைக் குறித்தும், அவர் உடலில் பூசப்பட்ட வாசனைத் தைலங்களைக் குறித்தும் இந்நாள் நினைவு கூரப்படுகிறது.
ஞாயிறு
இது 'உயிர்த்த ஞாயிறு' என்று அழைப்பர். இது இயேசுவின் உயிர்ப்பை நினைவுபடுத்தும் முகமாகவும், பாஸ்காவின் கடைசி நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இப்பாஸ்கா பண்டிகையுடன் பல மரபார்ந்த வடிவங்களும் இணைக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய சின்னமாக 'பாஸ்கா முட்டை' இன்றுவரை பிரபல்யமாகவுள்ளது. கிறிஸ்தவ உலகம் முழுவதும் பரந்த மதமாக தமது ஆக்கிரமிப்புக்களால் ஆக்கப்பட்டபோது, பண்டைய இந்தியா முதற் கொண்டு பொலிநீசியா வரைக்கும், மற்றும் ஈரான் உள்ளீடாக கிரீசில் இருந்து லற்வியா - எஸ்ரோனியா , பின்லாந்து வரையும், மத்திய அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரப் பகுதிகள் வரைக்கும் எல்லாப் பண்டைய பண்பாடுகளிலும் முட்டை மக்களின் வாழ்வின் சின்னமாகவே இருந்து வந்திருக்கிறது.
பழைய லத்தீன் பழமொழிகளில், சகல உயிர்ப்பும் முட்டையிலிருந்து உருவாவதாக எடுத்துரைக்கப்பட்டது. பண்டைய காலத்து பழங்குடியினரின் கருத்துப்படி, வசந்தகால மரபார்ந்த கிருகைகள் இந்த உலகம் முட்டையிலிருந்து உருவானதாக ஒருவகையில் உலகம் முழுவதும் நம்பப்பட்டது. முட்டை வடிவமான இந்த பூமியில் வசந்தகாலம் இம் முட்டையின் உயிர்ப்பாக பெரும்பகுதியான மக்கள் கூட்டத்தினர் நம்பினர். இவ் ஆரம்பகாலத்தில் இவ் வசந்தகாலத்தை பிரதிபலிக்கும் முகமாக முட்டைகள் வர்ணம் தீட்டப்பட்டு, ஒருவருக்கொருவர் பரிசளிக்கும் வழக்கமாக வளர்ந்த பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் பண்டைய பேஸியர் முட்டைகளை பரிசளிக்கும் இந் நம்பிக்கை கலாச்சார வடிவமாக பின்னர் பாஸ்காவுடன் இணைக்கப்பட்டது. கிறிஸ்தவம் பரப்பப்பட்ட காலத்தில், பெரிய வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்ட காலத்தில் - பெரிய வெள்ளியன்று இடப்படும் முட்டையை 100 வருடங்கள் வரை பாதுகாத்து வைத்திருப்பின், அதன் மஞ்சட் கரு வைரமாக மாறும் என்ற நம்பிக்கை இவர்களால் மதம் சார்ந்து மக்களிடம் பரப்பப்பட்டது. பெரிய வெள்ளியில் இடப்படும் முட்டையை, உயிர்த்த ஞாயிறன்று சாப்பிட்டால் சடுதியான மரணங்கள் நிகழாது பாதுகாக்கப்படுவதோடு, விவசாய பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் வளமாகச் செழிக்கும் என்றும் பரப்பப்பட்டது.
பண்டைய பேஸியர் முதற் கொண்டு எகிப்து, கிரீஸ், ரோம் நாடுகளில் முட்டைகளுக்கு நிறமூட்டுதல் ஊடாக வசந்தகாலத்தை நினைவூட்டுதல் வழக்கத்தில் இருந்து வந்தது. 15ம் நூற்றாண்டளவில் மேற்கு ஐரோப்பிய மிசனரிகளால் இவை பரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவில் புதுவருட மரங்களான வைகாசி வசந்த மரங்களிலும், சென்.ஜொன்ஸ் மரங்களிலும் நட்ட நடுக் கோடை காலத்திலும் முட்டைகள் வண்ணமிடப்பட்டு இதில் தொங்கவிடப்பட்டன.
இவ்வாறு வண்ணமிடப்படும் இம் முட்டைகள் வசந்தகால வரவை நினைவு கூருவதிலிருந்து விலக்கப்பட்டு, மதசார்பான வடிவங்களைப் பெறத்தொடங்கின. கிறிஸ்துவின் மரணப்பாடுகளை உணர்த்தும் முகமாக பெரிய வெள்ளியில் சிவப்பு நிற முட்டைகளும், பெரிய வியாழனில் இராப்போசனத்தை நினைவுபடுத்தும் முகமாக பச்சை நிறத்திலும் வண்ணம் தீட்டப்படது. பின்னர் இவை அதிகார வர்க்கத்தால் விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. முட்டை மட்டுமன்றி வசந்தகால பண்டைய தெய்வங்களுடன் தொடர்பிலிருந்த முயலும் கூட சின்னமாக இருந்தது. முயல்கள் அதிக இனப்பெருக்கத்தை உடையதாலும், நிலாத் தெய்வங்களில் நம்பிக்கை கொண்ட மரபினர், முயல் இமைப்பதற்குக் கூட கண்களை மூடுவதில்லை என்றும், பிறக்கும் போதும் கண்களைத் திறந்தபடியே தமது நிலவுத் தெய்வத்தைப் பார்ப்பதற்காகப் பிறப்பதாகவும் நம்பினர். பின்னர் இவையும் பாஸ்காவுடன் கலந்தது. இதைவிட வசந்தகால மலரான 'லில்லி' மலர்களும் இப்பாஸ்காவுடன் இணைக்கப்பட்டன. இருப்பினும் விற்பனையில் பாஸ்கா முட்டையே சந்தையில் பெரும் மூலதனத்தை ஈட்டிக் கொடுத்தது.
ரசியப் புரட்சிக்கு முன்னர் சென்.பெத்தர்பேர்கின் 'காரால் தொழிற்சாலை'யில் 600 நிரந்தர வேலையாட்களைக் கொண்டு பாஸ்கா முட்டை தயாரிக்கப்பட்டது. 1872ல் 140 விதங்களான வண்ணங்களில் இம்முட்டை தயாரிக்கப்பட்டது. இங்கே ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மிக விலையுயர்ந்த முட்டைகள் தயாரிக்கப்பட்டன. தங்கம், வைரம், இரத்தினம், பவளம், முத்து,....போன்ற நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட 6-36 சென்ரி மீற்றர் உயரம் கொண்ட ஒரு முட்டை தயாரிப்பதற்கு ஒரு வருடங்கள் கூட முடிந்திருக்கிறது. 1913ம் வருடம் 3,000 சிறிய வைரக்கற்களைக் கொண்ட முட்டை தயாரிக்கப்பட்டது. இது அந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளியின் வருட வருமானத்தை போல் 125 மடங்கு பெறுமதியானது. இது இன்று 97,500 மில்லியாடர் இலங்கை ரூபாவுக்குச் சமமாகும்.
மதங்களின் பொதுச் சங்கத்தின் காலத்திலிருந்து 16 நூற்றாண்டுக்கு முன்னர், எகிப்திலிருந்த யூதர்கள் பெரிய விடுதலையை அனுபவித்ததை நினைவூட்டுகின்ற ஒரு பண்டிகையாக இப் பாஸ்கா நாள் இருந்ததாம். அந்தச் சமயத்தில் தலை ஈற்றான வெள்ளாட்டுக் குட்டியொன்றை இதற்குப் பலியாகச் செலுத்தினார்களாம்.
10,000 வருடங்களுக்கு முன்பிருந்தே, மனிதன் நல்ல நிலம் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்ட போது அவர்களது வீட்டுப்பிராணியாகவும், நல்ல நண்பனாகவும் வெள்ளாடு இருந்து வந்திருக்கின்றது. வெள்ளாடு இனத்தைப்பற்றிய பரிசோதனை முடிபுகளில் இருந்து, மூன்று விதமான வௌ;வெறு இனம் கொண்ட ஏழு மில்லியன் வெள்ளாடுகள் மனிதர்களின் உற்ற நண்பனாக, அவர்களுடன் இணைந்து நீண்ட காலங்கள் வாழ்ந்து வந்ததாக விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. வெள்ளாட்டை இவர்கள் பலியிடும் போதோ, அல்லது உணவுக்காக வெட்டும் போதோ அதன் இதயம் மனித இதயத்தோடு ஒத்திருந்தது. மற்றும் இனவிருத்தியிலும் ஒத்திசைவைக் கண்டனர்.வெள்ளாட்டைப் பலி கொடுப்பது என்பது தமது உற்ற நண்பனை, தமது உறவுகளில் ஒன்றைப் பலி கொடுப்பதாகவே அவர்கள் அன்று கருதியிருக்க வேண்டும்.
யூத முதற்பேறானவற்றின் இரட்சிப்பில் விளைவடைந்தது: அதற்கு மாறாக, எகிப்தின் முதற்பேறு அனைத்தையும் யெகோவாவின் தூதர் கொன்று போட்டார்.
(யாத்திராகமம் 12:21 24:27)
இக்கருத்தின் வழித் தோன்றலே பிற்காலத்தில் கடவுளின் தலைப்பேறான இயேசு பலி கொடுக்கப்பட்டு, உலகம் இரட்சிக்கப்பட்டதாக பைபிளை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது.
சிலுவை மரணம், அன்று அதி உயர் தண்டனையாக இருந்தது. யூதர்கள் கல்லால் அடித்துக் கொல்வதையே நீண்டகாலமாக வழக்கத்தில் கொண்டிருந்தனர். விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதற்காக ஒரு பெண்ணை கல்லாலடித்து கொல்ல முற்பட்டபோது, உங்களில் பாவஞ் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லெறியட்டும் என்று இயேசு சொன்னதாக 'பைபிள்' சொல்கிறது. அப்படியானால் இயேசுவின் காலத்தில் கல்லால் அடித்துக் கொல்வது வழக்கத்தில் இருந்தது தெரியவருகிறது. உரோமரின் ஆட்சியதிகாரத்துக்குள் உட்பட்ட பிரதேசத்தில் சிலுவை மரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இவ் யூதப்பிரதேசங்கள் கி.மு 63 இலேயே இவ்வதிகாரத்தைப் பெற்றிருந்தது. ஆயினும் இப்பிரதேசங்களில் சிலுவை மரணங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் எல்லா மதக்குழுத் தலைவர்களினாலும் ஒருமித்த தீர்ப்பாகவே அவை இருக்கவேண்டும், அவ்வாறு ஒருவருக்கு வழங்கங்கப்படும் தண்டனையாகவே இவ்விடங்களில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒருமித்த கருத்தில்லாத எந்தவொரு வழக்குக்கும் சிலுவை மரணத்தை தண்டனையாக வழங்குவதற்கு இவர்களுக்கு உரிமை கிடையாது. அவ்வாறானால் ஏன் இயேசுவை யூதர்கள் கல்லாலடித்துக் கொல்லவில்லை?
ரோமப் பிரதிநியான பிலாத்துவுடன் அன்றைய மதத்தலைவர்கள் இணைந்து இத்தண்டனையை வழங்கியதாக 'பைபிள்' கூறுகிறது. இதுமட்டும் இல்லாமல் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லுங்கள் என மக்கள்கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் கூவியதாகவும் கூறுகின்றது. ஆனால் இக்காலத்தில் ரோமரின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்கள் அமைதியாகக் காணப்பட்டபோதிலும் கலிலேயாவும், யூதேயாவும் அமைதி குலைந்த நிலையிலேயே இருந்தது. ஏனைய பிரதேசங்கள் ரோமரின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருந்தபோதும், யூதேயாவும், கலிலேயாவும் பல மதக் கூட்டுத்தலைமை அதிகாரத்தின் கீழிருந்தது. இவ் அமைதி குலைந்த பிரதேசத்தில் 'செலோத்தேனா' ஆயுதக்கிளர்ச்சி இயக்கத்தினரின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகக் காணப்பட்டது என்பது இங்கு முக்கியமாகிறது. அதுமட்டுமல்லாது கிளர்ச்சி இயக்கத்தினரான செலோத்தினருக்கும் இயேசுவின் கருத்துகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக தெரிகிறது.
இது மட்டுமல்லாமல் அன்று பாஸ்கா ஜெருசலேமில் மிக விமர்சிகையாகக் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். ஜெருசலேம் 20,000 குடிமக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். ஆனால் இக் கொண்டாட்டத்தின் போது, சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை இக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், மற்றும் ஜெருசலேமைச் சூழவுள்ள குக்கிராமத்து மக்கள் அனைவரும் இங்கு கூடுவர். இயேசு பிறப்பதற்கு முன்பே அலெஸ்சாண்டிரியா போன்ற பிற நகரங்களில் நூற்றாண்டுகாலமாக இடம்பெயர்ந்து வாழும் யூதர்கள் அனைவரும் இங்கு வந்து கூடுவது வழக்கம். இந்த வருகையானது தாய்நாட்டு வருகைக்கான முக்கியத்துவமும், தமது கலாச்சார மற்றும் புனித மதக்கோவில் திருவிழாவாகவும், இது அவர்களின் ஒரு கடன் திருநாளாகவும் மிகவும் முக்கியம் பெற்றிருந்தது. அத்தோடு குக் கிராமவாசிகளுக்கும் இது ஒரு புதிய உலகமாக இருந்தது. யூதேயா, கலிலேயா பெற்ற உறவுகள் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் ஒரு பிணைப்பான தொடர்பாக இப் பாஸ்கா இருந்தது. இவர்கள் கோவில் வளவில் அல்லது அடிமைகளுக்கான சிலுவைத் தண்டனை கொடுக்கும் வெளியில் கூடுவர். இவ்வாறான ஒரு சம்பிரதாய நாளில் தமது மதத்தைச் சேர்ந்த பெறுமதியான ஒருவரை, தமது மீட்பரை, ஒரு குறைந்தளவு மக்கள் தீர்ப்பின் அடிப்படையில், எல்லா மதத் தலைவர்களின் கூட்டுச் சம்மதத்தில் இப் பெருந்தொகையான மக்கள் சன்னிதானத்தை மீறி இயேசுவை சுலபமாகச் சிலுவையில் அறைந்திருக்க முடியுமா?
அன்று சிலுவை மரணம் ஒரு நாளிகை என கணக்கிடப்பட்டது. ஒருவர் சிலுவையில் அறையப்பட்டு ஒருநாள் தொங்கவிடப்படுவார். மறுநாள் அவர் அகற்றப்படும் போது இறக்கவில்லையானால், அவரது கால்கள் முறிக்கப்பட்டு சாகடிக்கப்படுவர். இதுவே உரோம இராணுவத்தின் வழமையாக இருந்தது. இத்தண்டனை இரண்டு விதமாக வழங்கப்பட்டது. ஒன்று சிலுவையில் ஆணிகொண்டு அறைவது, மற்றது சிலுவையில் கயிற்றால் கட்டுவது. மரணத்துக்கு உரியவரை சிலுவையில் தொங்கவிடும் நிலையே இங்கு முக்கியமாகக் கணிக்கப்பட்டது. 'பைபிளின்' கருத்துப்படி இயேசுவோடு அன்று வேறு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. யேசு சிலுவையில் அறையப்பட்ட பின் அவர் தண்ணீர் கேட்டதாகவும் ஏரிக் என்பவன் காடியை கடற் காளானில் தோய்த்து அவருக்கு பருகக்கொடுத்தபின்னர், அவர் உயிர் துறந்தார் என்றும் இருக்கிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த 'காடி' என்ன திரவத்தினால் ஆனது என்பது இங்கு தெளிவுபடுத்தப் படவில்லை. ஒரு வேளை மயக்கமருந்துக் கலவையாகக் கூட அது இருந்திருக்கலாம். இக்காலத்தில் மருத்துவத்தில் மயக்க மருந்துக்கு அபின் கலந்த பழச்சாறே பயன்படுத்தப்பட்டதாக அறிவியல் கூறுகிறது. அபின் எனப்படும் ஒருவகை 'பொப்பி' மரம் அப்பொழுது தாராளமாக கலிலேயாவிலும், யூதேயாவில் இருந்தது. இருப்பினும் இயேசுவுக்கு இவ்வகையான போதைப்பொருள்தான் கொடுக்கப்பட்டதா என்பது தெரியாதபோதும், அவர் ஏதோ குடித்தார் என்பது தெளிவாகிறது.
இயேசுவைச் சிலுவையில் அறைந்த இராணுவ வீரர்கள், அவரின் உடையைச் சீட்டுப்போட்டுப் பங்கிட்டதாகவும், அவரை சிலுவையில் அறைந்து விட்டு , இவர் மீட்பரானால் இவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று இறுமாப்புடன் சொன்ன இவ் வீரர்கள் அவரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்தனர் என்பது உப்புப் சப்பற்ற ஒரு வாதமாகும். இது ஒரு புறமிருக்க, இவர்கள் (பைபிள்) இயேசுவை சிலுவையில் அறைவதற்கான காரணமாக சுட்டிக்காட்டும் குற்றம் அதைவிட இன்னும் வேடிக்கையானது. ''இயேசு யூதரின் அரசன்!, இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான். ஜெருசலேம் கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவானாம்'' இவைகளே பைபிள் காட்டும் இயேசுவின் தண்டனைக்கான குற்றம். இங்கே விசித்திரம் என்னவென்றால் இக்காலத்தில் அனைத்து யூதத்தலைவர்களும் ரோமர்களுடன் அன்னியோன்னியமாக இணைந்து கடமையாற்றினர். மதத் தலைவர்களின் ஆட்சிக்காலம் ஆகக் கூடியது ஒரு வருடமாகவே இருந்தது. வருடத்துக்கு வருடம் புதிப்பிப்பதே உரோமப்பேரரசின் இராஜதந்திரமாக இருந்தது. இந்த இலட்சணத்தில் யூதனின் அரசன் என்று சொல்லுவது எப்படிக் குற்றமாகும்? ரோமர்கள் யூதசட்டத்தை மதித்தனர். பாஸ்கா கடன் திருநாளில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் உடல்களை அகற்றுவதை அலட்சியம் செய்திருக்கவில்லை. சம்மதித்தார்கள். யோவான் 18ம் அதிகாரம் 28ம் வசனத்தைப் பாருங்கள். ''அதன் பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு (பிலாத்துவிடம் - பிலாத்து யூதனல்ல) இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணும்முன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை'' அவர்கள் பாஸ்காவை எப்படி மதித்தனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்ன கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவேன் என்றது ஒரு குற்றமாம். ஜெருசலேம் கோவில் உண்மையில் இடிந்தபோது, இந்த யூதச்சட்டம் யாருக்கு மரணதண்டனையை வழங்கியது?
(ஜெருசலேம் கோவில் எரிக்கப்பட்டதற்காக இயேசுவின் குழுவினர் எனக்கூறப்பட்ட ஒருவரே பழிவாங்கப்பட்டார். இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தின் பின், கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின்னர் இவர் பழிவாங்கப்பட்டார். இவர் எருசலேம் மக்களால் நகருக்கு வெளியே துரத்தி விரட்டப்பட்டு, இம்மக்களாலேயே யூதச்சட்டப்படி கல்லாலடித்துக் கொல்லப்பட்டார். இவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்ட இயேசு குழுவினர் ரோம் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். இது பற்றி மேலும் விபரமாக வேறு அத்தியாயத்தில் ஆராய்வோம்.)
அப்போஸ்தலர் பவுலின் கருத்துப்படி, இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றிய இராணுவக்குழுவுக்கு தலைமைதாங்கியது லொகின் (Longin) என்று கூறியுள்ளார். அப்படியெனின் இயேசு இறந்ததற்கான அத்தாட்சி வழங்கியவர் இவரே. இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றும் போது, இவரோடு அறையப்பட்ட ஏனைய இருவரும் உயிருடனேயே இருந்தனர். அவர்களின் கால்கள் முறிக்கப்பட்டு, சாகடிக்கப்பட்டனர். இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தி, இறந்துவிட்டதாக, அரிமத்தியா வாசியான ஜோசேப்பிடமும், நிக்கோதேமு என்பவனிடமும் அவரின் சடலத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. இயேசுவை விலாவில் குத்தும் போது இரத்தம் ஓடியதாகக் கூறப்பட்டது. இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டபின் இருக்கும் சில காட்சிப்படங்களில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலிருந்து மாறுபட்ட நிலையில் இருப்பதையும் காணலாம். இறந்தபின் ஒருவரின் உடலில் இரத்தம் பாய்வதும், இறந்த நிலையிலிருந்து மாறுபடுவதும் நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்கள். இங்கே இயேசு இறந்ததாக அத்தாட்சி வழங்கிய இராணுவ அதிகாரி லொகின், பின்னாளில் ஒரு கிறிஸ்துவ மேற்றாணியாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யோவான் அதிகாரம் 18, 38-39ம் வசனங்களின் படி, அரிமத்தியா வாசியான ஜோசேப் இயேசுவின் அந்தரங்க சீடர்களில் ஒருவன் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இயேசுவுக்கு 12 சீடர்கள் என்பது பொய்யாகிறது. அப்படியாயின் இயேசுக்கு இன்னொரு அந்தரங்க வரலாறும் இருக்கவேண்டும், அது என்ன? இந்த நிக்கோதேமு என்பவன் இயேசு பிடிபடுவதற்க முன்னர் ஒரு இரவு வேளையில் 100 இறாத்தல் நிறையுள்ள வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்த சுகந்தத்தை இயேசுவிடம் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இச்சுகந்தத்தை கலந்த துணியால் சுற்றியே, இவ்விருவரும் இயேசுவை அடக்கம் பண்ணியதாக பைபிள் கூறுகிறது. இத்துணியே இன்று கத்தோலிக்க திருச்சபையால், இயேசுவின் திருவுடல் அடையாளத்துணியாக மக்கள் காட்சிக்கு வைத்துள்ளது. இவ் அத்தசி நூல் ஆடையை திரளான மக்கள் புனிதப் பொருளாக இன்று தரிசித்து வருகின்றனர்.
இது ஒருவகை சணல் நூலால் நெய்யப்பட்ட ஆடை, அல்லது அத்தசி நூலால் நெய்யப்பட்ட ஆடை என்று சொல்லலாம். இவ் ஆடையானது இயேசுவை அடக்கம் செய்த கல்லறையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்து இறக்கப்பட்டதன் பின்னர், அவரது உடலைச் சுற்றி அடக்கம் பண்ணிய துணியாக இது கருதப்படுகிறது. இத்துணி 1990ல் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்;படுத்தப்பட்டது.
இந்த அத்தசி நூல் ஆடை கிட்டத்தட்ட 100 இறாத்தல் நிறையுள்ள (33.3 கில்லோக் கிராம்) ஒரு வகை தாழை இனத்தைச் சோந்த கரியபோளத்தாலும், வெள்ளைப்போளத்தாலும் கலவை செய்யப்பட்டிருந்தது. ஜெருசலேம் பல்கலைக்கழக மாணவர்களான இஸ்ரேல், அல்மேனியரின் கருத்துப்படி இத்துணியானது முதல் 100 வருடங்கள் எடேஸ்சால்வில் (இன்றைய துருக்கியா) கொண்டு சென்று வைத்ததாகக் கருதுகின்றனர். எடேஸ்சா முதல் 100 ஆண்டுகள் ரோமப் பேரரசின் கீழ் இருந்திருப்பினும், இங்கு உத்தியோகபூர்வ மதமாக கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது யூத யுத்தத்தின் போது, யூதர்கள் இங்கே புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள். இவர்கள் இங்கிருந்து வருடத்துக்கு ஒருமுறை ஜெருசலேம் கோவிலுக்கு வந்து போனார்கள். சத்தியம் தவறாத இந்த நினைவு நாளில், உலகில் இருந்து அனைத்து யூதர்களும் இந்தப் பெரிய நாளில் Yom Kippur ல் ஒன்று கூடுவர். இது அவர்களின் ஒரு வெளியேற்ற நாளாகவும், தண்டனைக்குரிய நாளாகவும், நோன்புக்குரிய நாளாகவும் கருதப்பட்டது.
யூத அகதிகள் தாம் வெளியேறிய போது, இத்துணியைத் தம்முடன் எடுத்துக் கொண்டு இன்றைய துருக்கியாவான எடேஸ்சாவுக்குச் சென்றனர். பின்னர் இத்துணி 1944 ல் கொன்சன்ரைன் ஒப்பிளில் வைக்கப்பட்டு, பயத்தின் காரணமாக இது பிரான்சுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1350 களிலே இத்துணி பற்றி உத்தியோகபூர்வமாக விபரிக்கப்பட்டது. நூறு வருடங்களின் பின்னர் இத்தாலிய Savoy மன்னர் குடும்பத்தினருக்கு பரிசில் பொருளாக இது வழங்கப்பட்டது. இவர்கள் தொடர்ந்தும் பிரான்சில் வசித்து வந்ததால், 1532 ல் சம்பெரி நகரம் எரிந்தபோது இதன் சில பகுதிகள் பழுதுக்குள்ளானது. பின்னர் முதன் முதலாக 1578 ல் இத்தாலிக்கு (Torino)-ரொர்ரினோவுக்கு - மாற்றப்பட்டது. கடைசியாக 1983 ல் கத்தோலிக்க பாப்பாண்டவருக்கு இத்தாலிய மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இம்மன்னன் இரண்டாம் உலகயுத்தத்தின் போது போத்துக்கல்லில் வாழ்ந்து வந்தார்.
1990 ல் கத்தோலிக்கக் கோவிலின் இரண்டாயிரமாம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இத்துணி 1.1 மீற்றர் அகலமும் 4.36 மீற்றர் நீளம் கொண்டதாகவும் காணப்பட்டது. ஒரு மனித உடலின் முன் பின் பாகங்கள் இதில் பதிந்து காணப்படுகிறது. இந்த மனிதனின் உருவம் 1.81மீற்றர் உயரங் கொண்டதாகவும், தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்ட கோலமாகக் காட்சி தந்தது. இந்த மனிதனின் முகம் வலதுபுறம் சாய்வாகவும் காட்சி தருகிறது.
இயேசுவின் திருமுகம் கிறிஸ்தவ காலத்தில் பலவிதமாக வரையப்பட்டது. இதன் பெரும் பகுதி ரோமப்பேரரசின் கிழக்குப்பகுதியிலிருந்து தொகையாக வெளியிடப்பட்டது. துணியில் காணப்படும் முகம், தலைமுடி சிறு சுருளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. 500களில் இயேசுவின் முக அச்சினைக் கொண்ட முத்திரைச் சின்னங்கள் பல காணப்பட்டன. சில வெள்ளி நாணய அச்சினை கூட இன்றைய துருக்கியாவில் அப்போது கண்டெடுக்கப்பட்டது. இவைகளை வைத்து இப்பொழுது பரிசிலுள்ள Louvre இயேசுவின் இராப்போசனப்படம் வரையப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இது சின்னையில் (Sinai) யில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். 600ம் ஆண்டுக்குரியது. இப்படத்தை, இத்துணியிலுள்ள முகத்துடன் ஒப்பிட முடியாத, நம்பகத் தன்மையற்றதாக இருப்பதாக கணிக்கப்படுகிறது. துணியில் இருக்கும் மனிதனின் முகம் ஒரு வாலிப இளைஞனுக்குரியதாக இருப்பதாகவும், ஆனால் படத்தில் தலைமயிரில் சுருள் அற்றதாகவும் இருப்பதாக ஒப்பீட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பாவுக்கு இத்துணி கொண்டுவரப்பட்டதும், இயேசுவின் முகம் இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. 1209 ல் இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம் வரையப்பட்டது. இது ஸ்டுடேனிக்காவில் இருந்து வெளிவந்தது. இதில் இயேசுவின் தலைமயிரின் சிறு சுருள், நீட்டு மூக்கும் வரையப்பட்டிருந்தது. 1100 ஆண்டுக்குரிய மற்றைய ஒரு படமான ஊயகயடல படமும் நம்பகத்தன்மை அற்றதாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இத்துணியின் இயல்பைப் பொறுத்தவரை இத்துணி மிகமிகத் தரம் வாய்ந்ததாகவும், மன்னர் பரம்பரையினர் பாவிக்கும் மிக விலையுயர்ந்த பொருளாகவும் இருக்கிறது. இத்துணியின் ஆயுட்காலம் 5000 வருடங்களையும் தாண்டக்கூடியதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது எகிப்தின் அகழ்வுகளில் இருந்து தெரிய வருகிறது. இத்துணி மருத்துவரீதியாக கரியபோளம், வெள்ளைப்போளம் கலக்கப்பட்ட துணியாகவும், மூச்செடுக்கக் கூடிய விதத்திலும், கடுங்காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருந்ததாகவும் நோக்கப்படுகிறது. இத்துணி பற்றி மத்தேயு, மார்க்கு, லூக்காஸ் போன்றோர் குறிப்பிடும் போது, இதற்கு கிரேக்க சொல்லான Sidon என்ற சொல்லை பாவித்துள்ளனர். ஆனால் யோவான் othonium என்ற சொல்லைப் பாவித்துள்ளார். Sidon என்ற சொல்லை லத்தினுக்கு மொழி பெயர்க்கும் போது மூடும் துணி எனப் பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் பழைய விவிலியமான எரேபிய மொழியிலுள்ள Sidon என்ற சொல்லுக்கு சாதாரண துணியான 'போர்வை' என்ற அர்த்தமே உள்ளதாக மொழி வல்லுனாகள் கூறுகின்றனர். போர்வை என்ற அர்த்தமானது உயிருள்ள மனிதர்களின் பாவனைக்குரிய சொல்லாகவே எழுதப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லாசரு பற்றிய எழுத்துக்களில் லாசரசுக்குப் பாவிக்கப்பட்ட துணியை குறிக்கும் போது keiriaj என்ற சொல்லே பாவிக்கப்பட்டடுள்ளது. இது இறந்தவர்களுக்குப் பாவிக்கப்படும் துணியாகவே அர்த்தம் கொள்கிறது. யோவான் அதிகாரம் 20 ல் பயன்படுத்தும் othonia என்ற சொல்லுக்கு 'உடுப்பு' என்றே பொருள் படும் என்று இவர்கள் கூறுகின்றனர். இது லத்தினில் Sidon என்ற சொல்லாக பேசவும், மொழிபெயர்க்கவும் பட்டிருக்கிறது. இது இறந்தவர்களின் மீது போடும் மிக அழகான துணியாகப் பொருள்படும். ஆயினும் இலத்தீனில் குறிப்பிட்ட காலம் வரை இச்சொல் வழக்கத்தில் இருக்கவில்லை என்றே மொழி ஆய்வாளர்கள் மறுத்து வருகின்றனர்.
புதிய ஏற்பாட்டில் யோவான் 11ம் அதிகாரத்தில் கூறப்படுவதைக் கவனித்தால்...... பெத்தானிய கிராமத்தவரான லாசரு வியாதியால் இறந்திருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவரின் சகோதரிகளான பெத்தானியா மரியாளும், மார்தாளும் இச்செய்தியை இயேசுவிடம் ஆளனுப்பித் தெரிவித்தனர். இயேசு இதைக் கேள்விப்பட்டு இரு தினங்களின் பின்னர் ,யூதேயாவுக்குச் செல்வோமென தம் சீடர்களிடம் சொன்னபோது: ''ரபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?'' என்றார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்ததாக் கூறப்படம் காலத்துக்கு மிகச்சமீபமாகவே இது கூறப்பட்டுள்ளது. அவ்வாறானால் ஏன் இயேசுவை சுலபமாகக் கல்லாலடித்துக் கொல்லவில்லை. பிலாத்துவிடம் இயேசுவைக் கொண்டு சென்றபோது கூட பிலாத்து, ''நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தீர்ப்பு வழங்குங்கள்'' என்ற வார்த்தை மட்மே போதுமானது, இயேசுவை கல்லாலடித்துக் கொல்வதற்கு.
இதே அதிகாரம் 43ம் 44ம் வசனங்களின் படி, லாசருசே வெளியே வா! இயேசு உரத்துச் சத்தமிட்டார். அப்போது மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. அவன் முகம் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. லாசரு யூதமுறைப்படியே அடக்கம் பண்ணப்படிருந்தார். இவ்வாறான யூதமுறைப்படியே இயேசுவும் அடக்கம் பண்ணப்பட்டதாக இதே யோவான் 19 ம் அதிகாரம், 40 வசனம் உறுதிப்படுத்துகின்றது. ஆனால் லாசருடைய அடக்கத்தில் 'பிரேதச்சீலை' எனவும், இயேசுவின் அடக்கத்தில் பிரேதச்சீலை என்ற சொல்லை இவர்கள் பாவிக்கவில்லை. வெறும் துணி என்ற அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது.
யோவான் 12ம் அதிகாரத்தில்,பாஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன், பெத்தானியாவிலுள்ள லாசருசின் வீட்டில் இயேசு இராப்போசனம் ஒன்றில் கலந்து கொள்கிறார் (கடைசி இராப்போசனம் அல்ல) அப்போது லாசரசின் சகோதரியான மரியாள், விலையேறப்பெற்ற கலங்கமில்லாத நளதம் என்னும் பரிமளதைலம் ஒரு இறாத்தலை இயேசுவின் பாதங்களில் பூசி,தனது கூந்தலால் துடைத்தாள். இதைப் பார்த்த யூதாஸ் கரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன்) இத்தைலத்தை 300 வெள்ளிக்கு விற்கலாம், இக்காசைத் தரித்திரியருக்குக் கொடுக்கலாம் என விசனப்படுகிறார். அதற்கு இயேசு இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள் என்று கூறுகிறார். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாசுக்குக் கிடைத்த பணமோ வெறும் 30 வெள்ளிக் காசுகள். யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசில், அவன் ஒரு நிலத்தை வாங்கியதாகவும், அவ் நிலம் பின்னர் 'இரத்த நிலமாக' அழைக்கப்பட்டதாகவும் பைபிள் சொல்கிறது. இயேசுவின் காலத்தில் ஒர் அடிமையின் விலை வெறும் 30 வெள்ளிக் காசுதான். அக்காலத்தில் ஒர் அடிமையின் விலைக்கு ஒரு நிலத்தை வாங்கக்கூடிய நிலைமை இருந்தது என்று சொல்லுவது வெறும் கற்பனைவாதமே! லாசரசின் சகோதரி இயேசுவின் கால்களில் பூசிய தைலத்தின் பெறுமதியோ இதைவிடப் பத்துமடங்கானது. யூதாசின் நிலத்தைப் போல் பத்துமடங்கு நிலம் வாங்கும் பெறுமதியை இயேசுவின் கால்களில் பூசுவதாக பைபிள் கூறினால், இயேசுவின் நண்பர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்! என்று நீங்கள் உணரலாம்.
இயேசு அறையப்பட்டு, ஞாயிறு அதிகாலை மரியாள் கல்லறைக்கு வருகிறாள். அதிகாலை இருட்டாக இருந்தும் மரியாள் கல்லறையைச் சுலபமாகக் கண்டுபிடிக்கிறாள். கல்லறை திறந்திருப்பதையும், இயேசுவின் உடலை அங்கு காணாமலும் பேதுருவிடத்திலும், யோவானிடத்திலும் இதை ஓடிவந்து சொல்லுகிறாள். இவர்களும் ஓடிப்போய்ப் பார்க்கிறார்கள். இறுதியாக வந்த பேதுருவானவர் கல்லறைக்குள் நுழைந்துபோய் பார்க்கிறார். இங்கு இயேசுவின் தலைக்கு மூடியதுணி தனியே பிறம்பாக சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார். உடலைப் போர்த்த துணி இன்னொரு பக்கமாகப் பிறம்பாக இருக்கிறது என்று சொல்கின்றனர். பிரேதச்சீலை என்று சொல்லவில்லை. ஆனால் மரியாள் இவர்களிடம் வந்து சொன்னபோது,''இயேசுவைக் கல்லறையில் காணவில்லை அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொன்னதாக சிறுபிள்ளைத்தனமாக எழுதியுள்ளனர். மரியாளுக்கு இயேசுவை அரிமத்தியா ஜேசேப்பும் மற்றவரும் அடக்கம் பண்ணியது அவர்களுக்கு நன்கு தெரிந்ததே. அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே என்று ஒரு வார்த்தை கூட இவர்கள் கூறவில்லை. பேதுருவும், யோவானும் அவர்களை விசாரிக்காமலே இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என வெளிப்படுத்திய சுவிசேசமென எழுதுகிறார்கள்.
அத்தசிச் துணியில் இருக்கும் படத்தின் கழுத்துப் பகுதி சலவை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. யூதர்களின் சவ அடக்க முறைப்படி, தண்டிக்கப்பட்டவர்களின் பிணம் கழுவப்படுவதில்லை. இதனால் இவர்கள் இயேசுவின் அடக்க முறை பற்றி இக்காரணத்தையே விளக்கமாகக் கூறுகின்றனர். வழக்கத்தில் பிணத்துக்கு மூடப்படும் துணியானது, இரண்டு நாட்களின் பின்னரே கல்லறையில் இருந்து அகற்றப்படும். ஆனால் ஞாயிறு காலையே யேசுவின் உடலைக் காணவில்லை. மரியாள் வந்து பார்த்தபோது, தலையில் சுற்றிய துணி பிறம்பாகவும் போர்வை பிறம்பாகவும் இருந்ததாகக் கூறுகிறார். அப்படியாயின் தலையைப் பிறிதொரு துணியால் சுற்றியிருப்பின் அத்துணி எங்கே? பிணத்துக்குச் சுற்றிய இயேசுவின் உருவம் பதிந்த அத்தசி துணியில் எவ்வாறு முகம், மற்றும் தலைமயிர்களின் தோற்றம் பதிந்துள்ளது?
இத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், பலதரப்பட்ட அபிப்பிராயங்களும் வெளிவரத் துவங்கின. பலதரப்பினரும் இதுபற்றிய தத்தமது அபிப்பிராயங்களை வெளியிட்டனர். 1900ல் தனது கடைசி ஆறுமாதகால பரிசோதனை முடிபுகளை இயற்கை விஞ்ஞானம் வெளியிட்டது. அதன் முக்கிய கேள்வியாக அத்தசித் துணியில் இருக்கும் முகம் உண்மையானதா? அல்லது அது பின்னர் சேர்க்கப்பட்டதா? என்பதேயாகும். ஆனால் இத்துணி 2000 வருடங்களுக்கான பழைமை வாய்ந்தது என்ற கருத்தை இயற்கை விஞ்ஞானம் மறுத்தது. நம்பமுடியாது என்று கூறியது. பின்னர் முதல் தடவையாக இத்துணி, 1988ல் சி14 பரிசோதனையான -றேடியோ நுண்ணிழைக் காபன் 14 - பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இது 1296 -98 இடைப்பட்ட காலத்துக்குரியது என முடிவு செய்யப்பட்டது. இம் முடிவு பைபிளையும் அது சார்ந்த இயேசுவின் முக சின்னங்கள், படங்கள், நாணயங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கின.
இத்துணியானது பருத்தியாலும், சணல் நூலினாலும் இணைத்து நெய்யப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது. இதில் நெய்யப்பட்டுள்ள சணல் நூலானது, பருத்தி நுண் இழைகளுடன் இணைப்புக் கொண்டுள்ளதா என்ற பரிசோதனை முயற்சி மேற்கொள்ள முற்பட்டபோது, கத்தோலிக்க திருச்சபை இவ்விவகாரத்தை இடைநிறுத்தியது. மேற்படி தொடரவும், பரிசோதனைக்கு உட்படுத்தவும் மறுத்தது. மேற்படி தொடரப்படும் பரிசோதனைகள், இரசாயனப் படங்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.
கி.மு 100ம் ஆண்டு தொடக்கம், கி.பி 200ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யூதேயா மற்றும் ஜெருசலேம் போன்ற பிரதேசங்களில் பங்கசு, பற்றிரியா போன்றவற்றை அடிமைகள் பயன்படுத்தி இருந்ததை இரண்டு அமெரிக்க மைக்கிரொ இரசாயன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கலிலேயா, யூதேயாவிலுள்ள பூஞ்செடிகளின் புந்தூள்-மகரந்தங்களையும், வசந்தகால மஞ்சள் பூவினத்தையும் கலந்து செய்யப்பட்ட சிலும்பலான ஒரு வகை காற்சட்டை ஜெருசலேமில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலும்பல்கள் 4 மில்லி மீற்றர் நீளமுள்ளதாகக் கண்டறியப்பட்டது. 1996ல் கண்டெடுக்கப்பட்ட நாணயம் மின்னிழைய நுண் பூதக்கண்ணாடியால் பரிசோதிக்கப்பட்டு, இது கி.பி 29ம் ஆண்டுச் சக்கரவத்தி Tiberi காலத்துக்குரியதென்றும் கண்டறியப்பட்டது. இக்காலத்தில் பிலாத்து யூதேயாவின் அரச ஆளுநராக இருந்தது குறிப்பிடத் தக்ககது.
அத்தசி துணியில் இருக்கும் இயேசுவின் முகமானது, வர்ணம் இடப்பட்டதாக இருக்கலாம் என முதன் முதலில் கருதப்பட்டது. பின்னர் இவை நவீன நுண்பரிசோதனைகள் மூலம் அழியாத ஒருவகை வர்ண நெசவுத்தன்மை, வர்ணப் பவுடர்கள் அல்லது ஊசி முனை கூரியமுள்ளால் குற்றுக்களால் ஆன வர்ணமுறையில் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உறுதியாக இது வர்ணம் கொண்டு தீட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
1532ல் இத்துணி தீவிபத்துக்கு உட்பட்டடிருந்ததை வைத்து இதை ஓர் வெப்ப உடையாகக் கணிக்கப்பட்டது. நீரை இதன் மீது தெளித்த போது, இது வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. இதனால் இம் முகம் இதில் பதியப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்பட்டது. வர்ணக்கலையில் ஆவிமுறை (Burn mark) பதிதலை இதில் ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. துணியில் கரியபோளமும், வெள்ளைப்போளமும் பூசப்பட்ட துணியாக இது இருப்பதால் உயர்ந்த சுடுநிலையில் முகம் பதியப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இத்துணி 1983 வரை ஒரு தனிமனிதருக்குச் சொந்தமாக இருந்தது. இத்தாலிய மன்னரான Um berto 2 ஆல் இரண்டாவது உலக யுத்தத்தின் போது பாதுகாக்கப்பட்டு, பாப்பாண்டவருக்குக் கொடுக்கப்பட்டது. பாப்பாண்டவர் இதை இயற்கை விஞ்ஞான பரிசோதனைக்குப் பயன்படுத்த பலதடவைகள் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆய்வுகளின் முடிவுகள், இத்துணியிலிருக்கும் இரத்தத்துளிகளில் இருந்து இப்போர்வைக்குரியவர் இறக்காத -உயிருடனிருந்த ஒரு மனிதனுக்குரியது என்பதை திட்டவட்டமாக நிரூபித்துள்ளது.
இந்த அத்தசி துணி ஒன்று மட்டும் தான் உலகில் காணப்பட்ட ஒரேயோரு இயேசுவின் போர்வையாக இருந்திருக்கவில்லை. 1353ம் ஆண்டு இத்துணியின் சொந்தக்காரரும் பெரும் பணக்கார வயோதிபருமான Geoffroy de Charny இத்துணியே உண்மையான இயேசுவின் துணியென பிரகடனப்படுத்தியபோது, சுமார் 40க்கு மேற்பட்ட போர்வைகள் உலகில் காணப்பட்டன. எனினும் இதுவே உண்மையான போர்வை என இவர் கூறியபோதும், இது எவ்வாறு தன் கைகளுக்கு வந்தடைந்தது என்பதைக் கூறமறுத்துவிட்டார். இக்காலத்தில் சிறிய கண்ணாடியில் அடைக்கப்பட்ட இயேசுவின் தலைமயிர், இயேசுவுக்கு ஊட்டியதாக மரியாளின் தாய்ப்பால், இயேசுவின் சிலுவையில் இருந்த மாபிள் வாசகத் துண்டு உட்பட இன்னும் பல காட்சிப் பொருட்களாக தேவாலயங்களில் வைக்கப்பட்டன. இவைகளைப் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டு பணமாக்கப்பட்டு வந்தது. இந்நேரத்தில் Troyes விசப்பாக இருந்த Peter D'Arcis இது உண்மையான துணி அல்ல எனவும், இது வரையப்பட்டதென்றும், இவைகளை காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டாமெனவும் பாப்பாண்டவரான Clemens க்கு எழுதியதால் இத்துணி தேவாலயத்தில் பார்வைக்கு வைப்பதற்கு விலக்கப்பட்டது.
1453ல் Geoffroy de Charny ன் பேத்தியான மாக்கிரட் இத்துணியை பல இடங்களுக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்தினார். இவருக்கான தேவாலயம் இல்லாததால் இவர் இதை விற்பனை செய்யமுற்பட்டார். இவர் Savoy குடும்பத்தினருக்கு இதை விற்கமுற்பட்டபோதும், இது பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்டதாவே கூறப்பட்டது. ஆயினும் மாக்கிரட் பெரும் நிலத்தை இதற்கீடாகவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. மாக்கிரட் ஒரு தேவாலயத்தின் நிர்வாக அதிகாரத்தைப் பெற விருப்பம் கொண்டிருந்தபோதும், இத்துணியின் உரிமைப்பிரச்சனையில் குழப்பம் விழைவிக்காது 1460 ல் சமாதானமான மரணம் எய்தியதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், இதன் 'நெக்கட்டிவ்'வை 1930 இல் Pierre Barbet பரிசோதனைக்கு எடுத்தார். இவர் தனது 'ஸ்கனர்' முறையினூடாக நுணுக்கமாவும் விரிவாகவும் ஆராய முற்பட்டார். இத்துணியின் கைப்பகுதியை ஆராய்ந்த இவர் பெரும் தருக்கம் ஒன்றைக் கிளப்பினார். உள்ளங்கைகளில் ஆணி அடிக்கப்பட்டிருப்பதால் இச்சிலுவையில் தொங்கிய நபர் இளம் பிராயத்துக்குரிய 30 -33 வயதுக்குரிய வாலிபனாக இருக்கமுடியாது என வாதிட்டார். வாலிபரின் உடல்பாரத்தை உள்ளங்கை தாங்காது என வாதிட்டார். இவரின் வாதத்தை பல அறிஞர்கள் மறுத்துரைக்க முடியாமல் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் உள்ளங்கையில் அறையப்டும் போது விரல்களின் நிலை அத்தசி துணியில் இருப்பதைப் போல இருந்திருக்க விஞ்ஞான ரீதியான வாய்ப்புக்கள் எதுவுமில்லை எனவும் வாதிட்டார். இதனால் 1969ல் கத்தோலிக்கத் தேவாலயம் உத்தியோகபூர்வமான பரிசோதனைக்கு முதல்முதலாக விருப்பத்தை வெளியிட்டது. ஆயினும் விசேட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இச்சம்மதம் வெளியிடப்பட்டது. 1976ல் தேவாலயங்களுக்கு ஆன கமிட்டி தமது ஆய்வுகளை முடித்ததுடன், இத்துணி சந்தேகத்துக்கு இடமானதால் ஆய்வுகளை இடைநிறுத்தியது. 1978ல் மீண்டும் 4 குழுவினர் வௌவேறாக ஆய்வுகூடத்தில் ஆய்வுகளைத் தொடங்கினர். இக்குழு ஒன்றில் உலகப் பிரசித்திபெற்ற அமெரிக்க மைக்கிரொ ஆய்வாளரான Walter McCrone யும் இடபெற்றிருந்தார். ஆய்வுகளின் முடிவில் இவர் ஏனைய குழுவினர் பலரின் முடிவுகளுடன் முரண்பட்ட ஒரிருவரில் இவர் முதன்மையானவராகக் காணப்பட்டார். இவர் இத்துணியில் இரத்தத்துளிகளை கண்டறிய முடியவில்லை என்றும், இது சிவப்பு நிறத்தால் தீட்டப்பட்டதாகவும் முரண்பட்டார். இதனால் வத்திக்கான் தான் விதித்த விசேட உடன்படிக்கையின்படி இவர் தனது முடிவுகளை தன்னிச்சையாக வெளியிடமுடியாது எனத் தடைசெய்தது. எம்முடிவுகளும் உடன்படிக்கையின்படி தம்மூடாவே வெளியிட முடியுமென கடும் உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர் சில நாட்களின் பின்னர் இவரும் தாம் இரத்தத்துளிகளை கண்டறிந்ததாகவும், இத்துணி உண்மையான போர்வை எனவும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
எல்லாம் முடிந்தபின்னர், இன்று இத்துணிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2002ம் ஆண்டு , 62ம் ஆண்டுக்குரிய யாக்கோப்பின் கல்லறை வாசகக் கல்லு ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாசகத்தை பிரான்சைச் சேர்ந்த அராமிஸ்க் மொழியியல் ஆய்வாளரானAndr'e Lemaire வாசித்து ''ஜேசேப்பின் மகனும், இயேசுவின் சகோதரனுமான யாக்கோப்'' பின் கல்லறை இதுவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 50 செ.மீ நீளமும் , 30 செ.மீ அகலமும், 25 செ.மீ உயரமும் கொண்ட இக்கல்லறை வாசகக் கல்லும், யக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும்Royel Ontario Museum - Toronto வில் 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கப்பட்டுள்து. யாக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும், அத்தசித் துணியிலுள்ள இரத்தத்துகள்களும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதே இப்புதிய சிக்கலாகும். DNA பரிசோதனைகளின் முடிவுகள் அறிவியலின் நேர்மையான பாய்ச்சலை எட்டுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தொடரும்

Tuesday, April 11, 2006
தேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்

ஓட்டுக் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும், செய்தி ஊடகங்கள் வதந்திக் காற்றால் விசிறி விடுவதாலும் தமிழக மக்களுக்கு மண்டைக் காய்ச்சல் ஏற்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதானால், கடந்த ஆண்டு மத்தியிலேயே வாக்காளர் பட்டியல் திருத்த வேலையின் போதே தேர்தல் பரபரப்புகள் தொடங்கி விட்டன. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான கடைசி நாளன்று இலட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கத்தை கத்தையாக கொடுக்கப்பட்டன.
போலி வாக்காளர்களைச் சேர்க்க முயன்றிருப்பது உண்மைதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வாறு முயன்றவர்கள் மீது வழக்குப் போடும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியபோது பதறிப் போனது ஆளும் அ.தி.மு.க.தான். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலரும் இந்தக் குற்றம் புரிந்துள்ளனர்; பதறிப்போன ஆளுங்கட்சி உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு, அம்பலமாகியது. ஆனால், போலி வாக்காளர்களைச் சேர்க்கவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுவதை தாமதப்படுத்தவும் ஆளுங்கட்சி தொடர்ந்து முயலுகிறது. போலி புகைப்பட அடையாள அட்டைகள் தயாரிக்கும் வேலையிலும் கூட இறங்கியுள்ளனர். ஆளுங்கட்சியின் தேர்தல் அராஜகங்களை எதிர்கொள்ள முடியாது என்றஞ்சிய எதிர்க்கட்சிகள், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு கோரி, அதையே அடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த வேலை முடிவதற்குள்ளாகவே, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. உடனடியாகவே தேர்தல் விதிமுறை மீறல்கள் முறைகேடுகள் பற்றிய புகார்கள், குவியத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ஆளும் அ.தி.மு.க பல்வேறு முறைகேடுகளில் இறங்கி விட்டது. இலவச சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், வேட்டி சேலைகள், கடன்நிதி வழங்குதல்கள், இன்னும் பல இலவசங்கள், வழங்கி வருவதாக சரமாரியாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.
ஓட்டுக் கட்சி அரசியலில் ஜெயலலிதா, வைகோ, திருமாவளவன், இராமதாசு ஆகியோர் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கிறார்கள். தேர்தல் முறைகேடுள் அராஜகத்தை கிரிமினல்மயமாக்கி தொழில்முறை சுத்தமாகச் செய்வதிலும், அரசியல் இலஞ்ச ஊழலில் வாக்காளர்களைப் பங்கு பெறச் செய்வதிலும் அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவியும் முதல்வருமான ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். ஓட்டுக் கட்சிகளிடையே கூட்டணி அரசியல் ""பண்ணுவதற்கு'' கூடுதல் சீட்டுக்கள், பதவியில் பங்கு என்பதற்கு மேல் வேறு எந்த வகை நியாயமும் தேவையில்லை என்பதை இலக்கண விதியாக நிறுவுவதில் வைகோ, திருமா, இராமதாசு ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். பதவிக்காகவும் பணத்துக்காகவும் வெட்கங்கெட்டுப் போய் எதையும் செய்யக் கூடியவர் இராமதாசு என்பது மீண்டும் மீண்டும் அம்பலமாகி விட்டது. தனது கட்சி ""ஓ பாசிட்டிவ்'' இரத்தம் போன்று யாருடனும் கூட்டுச் சேரக்கூடியது என்று பெருமை பேசுகிறார் ""உறுமும் புலி'' வைகோ. தன் கட்சிக்கு எம்.எல்.ஏ. சீட்டுக் கிடைத்ததில், தலித் சமுதாயத்துக்கே அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்று புளுகித் திரிகிறார், செரித்த வாழைப்பழமான திருமா.
இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகள் மூலம் பல ஆயிரங்கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் குவிப்பது, அரசியல் எதிரிகளைக் கிரிமினல் முறைகளில் தாக்கிப் பழிவாங்குவது, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவது, ஆபாச ஆடம்பர உல்லாச உதாரித்தனங்களில் திளைப்பது போன்ற கேடுகளை 199196 ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாகவே செய்தது ஜெயலலிதா சசிகலா கும்பல். இதனால் தமிழக மக்களிடமும் ஓட்டுக் கட்சிகளிடமும் இருந்து முற்றிலும் தனிமைப்பட்டு 1996 சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வி கண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு, பல கிரிமினல் வழக்குகளிலும் சிக்கியது.
ஆனால், அது குவித்து வைத்திருந்த பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கள்ளப் பணத்தை இழந்துவிடவில்லை. அதை வைத்து நீதித்துறையிலும் அரசியலிலும் செல்வாக்குள்ள நபர்களை விலைக்கு வாங்கி வழக்குகளை சமாளித்ததோடு அரசியலிலும் புத்துயிர் பெற்றது.
பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி மத்திய கூட்டு மந்திரி சபையில் இடமும் பெற்றது ஜெயலலிதா சசிகலா கும்பல். தி.மு.க. அரசைக் கவிழ்ப்பது, குற்றவழக்குகளை இரத்து செய்வது ஆகிய தனது இரு கோரிக்கைகளை உடனடியாகவும், தான் விரும்பியவாறும் பா.ஜ.க. கூட்டணி அரசு நிறைவேற்ற மறுத்ததால் ஆத்திரமுற்ற ஜெயாசசி கும்பல் மத்திய அரசைக் கவிழ்த்தபோது, அதனிடத்தில் தி.மு.க. போய் உட்கார்ந்து கொண்டது.
தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, மத்திய அரசிலும் பங்கேற்றதைக் காட்டி இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும், காங்கிரசும் ஜெயா சசி கும்பலுடன் தேர்தல் கூட்டணி அமைத்தனர். அதுவரை பா.ஜ.க.தி.மு.க. கூட்டணியின் மத்திய அரசில் அதிகார சுகத்தை அனுபவித்து வந்த பா.ம.க. திடீரென்று ஜெயலலிதாவுடன் பேரம்பேசி, மத்திய அமைச்சர் பதவிகளைத் துறந்து கூட்டணி அமைத்தது. தனிமைப்பட்டுப் போன தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி 2001 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி கண்டது. அதோடு ஒட்டிக் கொண்டிருந்த வைகோ கட்சியும் படுதோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தல்கள் முடிந்த சில வாரங்களிலேயே பா.ம.க. மீண்டும் பா.ஜ.க.தி.மு.க. கூட்டணி அரசில் போய் சேர்ந்து கொண்டு நாடே நாறுமளவு பா.ம.க. இராமதாசின் பச்சோந்தித்தனம் அம்பலமானது.
1996-2001 ஆகிய ஐந்தாண்டுகளில் நடந்து முடிந்த ஓட்டுக் கட்சிகளின் இந்த சந்தர்ப்பவாத கேலிக் கூத்துக்களால் ஜெயாசசி கும்பல் வலுப்பெற்று ஜெயாசசி கும்பல் ஆட்சியைப் பிடித்தது; அசைக்க முடியாத சில நம்பிக்கைகளுக்கு வந்தது. ""எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் கவ்விக் கொண்டு வாலை ஆட்டாத நாய்களே கிடையாது''; அதேபோலத்தான் ஓட் டுக் கட்சிகளும் அவற்றின் தலைவர்க ளும், சில பதவிகளையும் பணப்பெட்டிகளையும் விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்று அக்கும்பல் உறுதியாக நம்பியது.
எனவே, வேறு எந்த ஓட்டுக் கட்சியின் தயவும், கூட்டும் தனக்குத் தேவையில்லை என கருதி, தனது தேர்தல் வெற்றிக்கும், ஆட்சி அமைவதற்கும் காரணமாக இருந்த கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்தி, எட்டி உதைப்பதைப்போல வெளியேற்றினர். ஜெயாசசி கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்த மூப்பனார் காங்கிரசு, இரு போலி கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ம.க. இராமதாசு ஆகியோர் கொஞ்சமும் வெட்கமின்றி ஜெயலலிதா மீது பழிபோட்டு விலகும்படியானது. நாட்டையும் ஆட்சியையும் வழிநடத்தும் தகுதி வாய்ந்தவை என்று கூறிக் கொள்ளும் இந்தக் கட்சிகள் ஜெயாசசி கும்பலைப் பற்றி என்ன மதிப்பீடு வைத்திருந்தன? ""ஜெயலலிதாவை நம்பி ஏமாந்தோம்; துரோகம் செய்துவிட்டார்'' என்று கூட சொல்லவில்லை; அவர் மாறிவிட்டார் என்று புலம்பினர்.
அடுத்து, 1996 தேர்தல்களில் தன்னைத் தோற்கடித்த மக்களைப் பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டது ஜெயாசசி கும்பல். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவு வரி, கட்டணங்களை சுமத்தி சுமையேற்றியது; நெசவாளர்களை கஞ்சித் தொட்டிக்கும், விவசாயிகளை எலிக்கறி தின்னவும், தொழிலாளர்கள் வேலை இழக்கவும், அதேசமயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்கவும் செய்தது; நெசவாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்களை அடக்கி ஒடுக்கியது. அன்னதானங்கள், குடமுழுக்குகள், ஆறுகால பூசைகள் நடத்தியது. மதமாற்றத் தடைச்சட்டம், ஆடுகோழி வெட்டத் தடைச் சட்டம், அரசு ஊழியர்களின் ஊதிய உரிமைகளைப் பறித்ததோடு, அவர்கள் போராடியபோது வேலை பறிப்புச் சட்டம், வீடு புகுந்து தாக்குவது, இலட்சக்கணக்கில் சிறை, வேலை பறிப்பு எனப் பாசிச அடக்குமுறையை ஏவியது.
இராமதாசு, வைகோவைப் போலவே, பா.ஜ.க. கும்பலோடு கூட்டணி அரசில் பங்கு வகித்து ஆதாயம் அடைந்திருந்த தி.மு.க., கடைசி நேரம் வரை அதை அனுபவித்துவிட்டு, ஜெயலலிதா பா.ஜ.க. எதிர்ப்பு அலைவீசுவதை சாதகமாக்கிக் கொண்டு இவ்விரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளின் கூட்டணி அமைத்து 2004 நாடாளுமன்ற தேர்தல்களில் ஏகபோக வெற்றி கண்டது.
தமிழக மக்களின் வெறுப்பும், பிற அரசியல் கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்டும், தேர்தல்களில் படுதோல்வியும் அடைந்த ஜெயாசசி கும்பல் தனது அரசியல் அணுகுமுறையை அடியோடு மாற்றிக் கொண்டது. முதலில் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிச அடக்குமுறை நடவடிக்கைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. அடுத்து, பல ஆயிரங்கோடி ரூபாய் இலவசத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அரசு சொத்துக்களைத் தானும் தனது கட்சியினரும் மட்டும் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை. அரசு ஆதாயங்களை வாக்காளர்களுக்கும் பங்கு வைப்பது என்ற புதிய உத்தியை அமலாக்கியது.
அன்னதானங்களுக்கும், கஞ்சித் தொட்டிக்கும், எலிக்கறிக்கும் தள்ளப்பட்ட ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவது என்ற வகையில் ஓட்டு வங்கிகளை உருவாக்குவதோடு, தனது கட்சியினர் பொறுக்கித் தின்ன வழிவகுக்கப்படுவதை அனுபவம் மூலம் உணர்ந்து கொண்ட ஜெயாசசி கும்பல், அந்த வழியிலேயே ஆட்சியை நடத்துவது என்று முடிவு செய்தது. சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரணம், ஏழை மாணமாணவிகளுக்கு சைக்கிள், விவசாயி வீட்டுப் பிள்ளைகளுக்கு நிதி உதவி, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் குடும்பப் பெண்களுக்கும் நிதி உதவி போன்றவை மூலம் ரொக்கத் தொகை, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டிசேலை, தையல் இயந்திரம் ""இஸ்திரி'' பெட்டி என்று பல ஆயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கத் தொடங்கியது.
அரசு சாரா நிறுவனங்கள் மூலம் உதவிகள், சுயவேலை வாய்ப்புகள், நுண்கடன்கள், எய்ட்ஸ் நிவாரணம், வறுமை ஒழிப்பு, சுனாமிவெள்ள நிவாரணம் என்று பல வழிகளில் மேல்நிலை வல்லரசுகள், உலகவங்கி ஐ.எம்.எஃப், ஐ.நா. சபை, பன்னாட்டு தொழில்நிதி நிறுவனங்கள் கொண்டு வரும் திட்டங்களையும் வழங்கீடுகளையும் தனது பொறுக்கி அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் ஜெயாசசி கும்பல் வெற்றி பெற்றுள்ளது.
தான் கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம் கருப்புப் பணத்தை வாரி இறைத்து வைகோ திருமாவளவன் இன்னும் பிற கீழ்நிலைப் பிழைப்புவாத, பொறுக்கி அரசியல் பிரமுகர்களையும் பதவிகளையும்பணப்பெட்டிகளையும் கொடுத்து தன் பக்கம் இழுத்து விடுவதிலும் வெற்றி பெற்றுவிட்டது. இதற்கும் இன்னும் பல பொறுக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கும் மிக மிக அவசியமான போலீசுஅரசு அதிகாரிகளையும் குறிப்பாக, ஜெயாசசி கும்பலின் செல்லப் பிராணிகளான போலீசு உளவுத்துறையையும் செய்தி ஊடகங்களையும் கைப்பாவைகளாக்கிக் கொண்டது.
தி.மு.க., காங்கிரசு உட்பட மற்ற பிற அரசியல் கட்சிகள் ஜெயாசசி கும்பலின் இத்தகைய பிழைப்புவாத கிரிமினல் பொறுக்கி அரசியலுக்கு எதிரானவர்கள் கிடையாது. ஜெயலலிதாசசிகலா கும்பல் இத்தகைய அணுகுமுறையில் முந்திக் கொண்டு விட்டதே என்று ஆத்திரமடைபவர்கள் தாம். நிவாரணநிதி, சுய உதவிக்குழு, நுண்கடன் போன்ற பல திட்டங்கள் தமது அரசு கொண்டு வந்தவை என்று உரிமை பாராட்டிக் கொள்கிறது, தி.மு.க. காங்கிரசு கூட்டணி. வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிப்பதில் ஜெயாசசி கும்பலையும் விஞ்சிவிட இறுதி நேரத்தில் எத்தணிக்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான அரிசி, வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச ""கேஸ்'' அடுப்பு, இலவச மின்சாரம், வேலையற்றோருக்கு மானியம், திருமண உதவித் தொகை, நிலமற்ற விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இப்படி அடுக்கிக் கொண்டே போகிறது. அதேசமயம் தேர்தல் ஆணையம் மூலம் ஜெயலலிதாவின் இலவச வழங்கீடுகளைத் தடுக்க முயல்கிறது. ஜெயா கும்பல் இலவசமாக வழங்குவதைத் தடுப்பது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். போலீசுஅரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக ஒரு சார்பாக நடக்கக் கூடாது என்று புலம்பிக் கொண்டே, அரசு ஊழியருக்குப் பறிக்கப்பட்ட உரிமைகளைத் திருப்பித் தருவதாகவும் போலீசுக்கு மூன்றாவது ஊதியக் கமிசன் போடுவதாகவும் வாக்களித்துள்ளது.
அரசு அமைப்பின் ஆதாயங்களை இலஞ்ச ஊழல் கொள்ளைகளை கட்சித் தலைவர்கள் மட்டுமே சுருட்டிக் கொள்வது என்பதோடு காங்கிரசு ஆட்சி காலத்தில் நிறுத்திக் கொண்டார்கள். அவற்றைத் தலைவர்கள் மட்டுமல்ல, கட்சிப் பிரமுகர்கள் அணிகள் வரை பங்கு போட்டுக் கொள்வது என்பது தி.மு.க. மற்றும் பிற மாநிலக் கட்சிகளில் இருந்தது. ஜெயாசசி கும்பலோ அந்தக் கொள்ளையில் குவிக்கப்பட்டதை ஒரு பிரிவு மக்களை நிரந்தரக் கையேந்திகளாக மாற்றி தனது விசுவாச ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்துகிறது. மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமல்ல, பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் வகுப்பதிலும் இத்தகைய உள்நோக்கங்களோடுதான் இந்த அரசு செயல்படுகிறது.
தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்ற காலகட்டத்தில் ஓட்டுக் கட்சி அரசியல் என்பதே இவ்வாறான பிழைப்புவாத கிரிமினல் பொறுக்கி அரசியலாக பரிணாம வளர்ச்சி அடைவது இயல்பானதுதான். நாடாளுமன்ற சட்டமன்ற அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் ஏகாதிபத்தியபன்னாட்டு தொழில் நிதி நிறுவனங்களுக்கும், மேல்நிலை வல்லரசுகளுக்கும் ஒரு பொருட்டே கிடையாது. இவற்றுக்கு வெளியேதான், அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடுதான் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி ஐ.எம்.எஃப், புஷ் நிர்வாகம் ஆகியவற்றுடன் நாட்டை மறுகாலனியாக்கும் பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. அவை நேரடியாக அரசு எந்திரத்துடன் உறவு வைத்துக் கொண்டு, மேற்பார்வையிட்டு தமது நோக்கில் இயக்குகின்றன. அரசியல் கட்சிகளை நம்ப முடியாமல்தான் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும் தனது காரியங்களை நோக்கங்களை சாதித்துக் கொள்கின்றன.
நாட்டை ஏகாதிபத்திய பன்னாட்டு தொழில் நிதி நிறுவனங்களுக்கு விற்று மறுகாலனியாக்குவதில் எவ்விதக் கொள்கை வேறுபாடும் இல்லாத ஓட்டுக் கட்சிகள் வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று பதவிக்கும் கொள்ளைக்கும்தான் போராடுகின்றன. அதனால் கொள்கைகள் பேசுவதையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு, தனிநபர் தாக்குதல்கள், ஆபாச வசவுகள், "ரெக்கார்டு டான்சுகள்', கவர்ச்சிப் பிம்பங்களைக் கொண்ட தலைவர்களின் வழிபாடு, தனக்கும் தனது சமுதாயத்துக்கும் தொகுதிப் பங்கீட்டில் அநீதி இழைத்துவிட்டதாக நீலிக் கண்ணீர் வடிப்பது, காயடிக்கப்பட்ட பிராணியைப் போலக் கதறுவது என்று அரசியலற்ற பல வடிவங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய அரசியல் சூழல் காரணமாக சினிமா புகழ், கதாநாயகன் பிம்பங்கள் ஆகியவற்றை வைத்து அரசியலில் தானும் பதவியை பிடித்து விடலாம் என்று விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்கள் கருதுகின்றனர்.
ஆனõல் மக்களோ, குறிப்பாக இளைஞர்களோ, இவை எல்லாவற்றுக்கும் வெளியே யாராவது புதிய சக்தி எழவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்ற சட்டமன்ற ஓட்டுக்கட்சி அரசியல் என்ற அமைப்புக்குள்ளாகவே அத்தகைய புதிய சத்தியின் எழுச்சியை எதிர்பார்ப்பது, புதைசேற்றில் வீழ்ந்தவன் தனது கால்களை மேலும் அழுத்தி உந்தி வெளியே வர எத்தணிப்பது போன்றதுதான். முதலில் ஓட்டுக்கட்சி அரசியல் அமைப்புக்கு வெளியே வருவதற்கான முயற்சியும் உறுதியும்தான் இப்போதைய உடனடி தேவை.
நன்றி புதிய ஜனநாயகம்

Sunday, April 9, 2006
தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆர்ப்பாட்டம்
'போர்க் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷே, திரும்பிப் போ!"
-தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
ஜார்ஜ் புஷ் கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்து சென்றபொழுது, எந்தவொரு அமெரிக்க அதிபரும் சந்தித்திராத எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி, புஷ் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்லும் வரை, புஷ் எதிர்ப்பு இயக்கத்தைத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் நடத்தின. ""உலக மேலாதிக்கப் போர் வெறியன் புஷ்ஷே திரும்பிப் போ! சர்வதேச பயங்கரவாதி போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கங்களை முன் வைத்து சுவரொட்டிகள், பிரசுரங்கள், விளம்பரத் தட்டிகள், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பேருந்துப் பிரச்சாரம் எனப் பல்வேறு வடிவங்களில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்பட்டது.
கண்டன ஊர்வலங்களிலும், பேருந்து பிரச்சாரத்தின் பொழுதும், பொது மக்கள் கூடும் இடங்களிலும் புஷ்ஷைப் போல முகமூடி அணிந்த ஒருவரை, நாய்ச் சங்கிலியால் கட்டி, செருப்பில் அடிப்பது போன்ற காட்சி விளக்கத்துடன் இவ்வியக்கம் நடந்தது.
புஷ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த மறுநிமிடமே, புஷ்ஷின் உருவ பொம்மையை, பொதுமக்கள் கூடும் இடங்களில் தூக்கில் கட்டித் தொங்கவிட்டு, அதன் கீழே, ""சர்வதேச பயங்கரவாதி போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு இயக்கம், நமது நாட்டை அமெரிக்க அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய இன்னுமொரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.
சென்னையில் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள வெங்காயமண்டியில் இருந்து ஊர்வலம் தொடங்குவதற்கு பு.ஜ.தொ.மு. அனுமதி கோரியிருந்தது. இதற்கு முதலில் அனுமதி அளித்த போலீசார், ஊர்வலம் நடைபெறவிருந்த பிப்.28 காலையில் அனுமதி மறுத்து விட்டனர். இதுபற்றி மாநகர ஆணையரிடம் முறையிட்டதற்கு, ""இது அரசு உத்தரவு, நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது'' எனக் கைவிரித்து விட்டார். இத்தடையை மீறி கண்டன ஊர்வலம் நடத்துவதற்கு தோழர்கள் வெங்காயமண்டியில் கூடியவுடனேயே, அதைத் தடுப்பதற்கு மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பறந்து வந்தார். அந்த அதிகாரியிடம் பு.ஜ.தொ.மு. தோழர்கள், ""இது எங்களின் ஜனநாயக உரிமை'' என விடாப்பிடியாகப் போராடி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.
கோவையில் 01.03.06 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனினும், அப்பகுதி தோழர்கள் புஷ் வருகையை எதிர்த்து வெளியிடப்பட்ட 2,000 துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்கள் மத்தியில் கொடுத்து பிரச்சாரம் செய்தனர். அன்றே, நகரின் முக்கியமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் புஷ்ஷின் உருவ பொம்மையைத் தூக்கிலிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
ம.க.இ.க.வும் தோழமை அமைப்புகளும் இணைந்து திருச்சியில், பிப்ரவரி 27ஆம் தொடங்கி 3.3.06 முடிய புஷ் எதிர்ப்பு இயக்கம் மேற்கொண்டன. புஷ் முகமூடி அணிந்த ஒருவரைச் சங்கிலியால் கட்டிப் பிணைத்து, ஒவ்வொரு பேருந்திலும் ஏற்றி, ""இவன்தான் கொலைகாரன்; இவனை இந்தியாவிற்குள் நுழையவிடக் கூடாது'' என்ற வகையில் பேருந்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி அண்ணாசிலை அருகேயும், மார்ச் 1 அன்று புத்தூர் நாலு ரோட்டிலும், 3.3.06 அன்று திருவரம்பூர் பேருந்து நிலையத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பிப். 28 அன்று ஆழ்வார் தோப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தின் பொழுது புஷ் முகமூடி அணிந்திருந்த தோழரைச் சூழ்ந்து கொண்ட 50 சிறுவர்கள், ""புஷ்ஷை எங்களிடம் விட்டுவிடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என ஆவேசமாகக் கூறினர். அத்தெருமுனைக் கூட்டம் முடியும் வரை அச்சிறுவர்கள் தோழர்களுடன் இணைந்து முழக்கமிட்டனர்.
திருச்சியின் புறநகர் பகுதியான இலால்குடி, புள்ளம்பாடி ஆகிய ஊர்களில் விவசாயிகள் விடுதலை முன்னணி, ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், ஓட்டல் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 13 இடங்களில் புஷ்ஷின் உருவபொம்மையைத் தூக்கிலிட்டன.
முஓசூரில் பு.ஜ.தொ.மு., வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து பிப். 28 அன்று நடத்திய கண்டன ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்படி சிறப்பாக நடந்தது. ""இந்த ஊர்வலம் பொதுமக்கள் விழிப்படையும் வகையில் நடந்ததாக'' பலரும் பாராட்டினர். ஊர்வலத்தின் பொழுது ரூ. 1,350/ நிதி வசூலானது. இது ஒன்றே, புஷ்ஷை எவ்வளவு தூரம் உழைக்கும் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பை எவ்வளவு தூரம் ஆதரிக்கிறார்கள் என்பதற்கும் சான்றாக உள்ளது. ஊர்வலத்தின் முடிவில் காந்தி சிலை அருகே, ஏறத்தாழ 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் நகரில் நான்கு இடங்களில் தூக்கில் தொங்கவிடப்பட்ட புஷ் உருவ பொம்மைகளுள், ஒன்றினை மட்டும் போலீசார் எடுத்துச் சென்றுத் தங்களின் அமெரிக்க விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர். ஓசூர் தொழிற்பேட்டையில், ""புஷ்ஷே திரும்பிப் போ'' என்ற முழக்கத்தை முன்வைத்து, தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கம் முடிந்து, மார்ச் மாத பு.ஜ. இதழை விற்பனைக்கு எடுத்துச் சென்றபொழுது, ""புஷ்ஷைக் கட்டி இழுத்து வந்தது நீங்க தானே; புஷ்ஷைத் தூக்கில் தொங்கவிட்டது நீங்க தானே'' எனப் பலரும் குறிப்பிட்டுச் சொன்னது, இந்த இயக்கத்தின் வெற்றிக்குச் சான்றாக அமைந்தது.
பென்னாகரத்தில் புஷ் வருகையை எதிர்த்து பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தருமபுரியில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இரண்டு தோழர்களைக் கைது செய்து, ஒருநாள் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்து, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தது, தருமபுரி போலீசு.
புஷ் முகமூடி அணிந்து கொண்டு நடத்தப்பட்ட பேருந்து பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக முனைந்த போலீசார், ""இம்முகமூடியைப் பார்த்துக் குழந்தைகள் பயப்படுவதாக'' ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டது. ஈராக்கில் ஐந்து இலட்சம் குழந்தைகள் சாவுக்கு காரணமான இவனை அம்பலப்படுத்தவில்லை என்றால், இன்னும் பல இலட்சம் குழந்தைகள் இறந்து போக நேரிடும் எனத் தோழர்கள் பதிலடி கொடுத்தவுடன் மறு பேச்சில்லாமல் வாயை மூடிக் கொண்டனர்.
புஷ் உருவ பொம்மை தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்ததைப் புரியாமல் பார்த்தவர்களுக்கு பொதுமக்களில் சிலரே, ""இன்று ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வருகிறான்; அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.வி.மு. தோழர்கள் தூக்கில் இட்டுள்ளனர்'' என விளக்கம் அளித்தனர்.
புஷ் தூக்கில் தொங்கவிடப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே, தோழர்களைக் கைது செய்ய போலீசு நாயாய் அலைந்தது. தூக்கில் தொங்கவிடப்பட்ட புஷ் உருவ பொம்மைகளைப் போலீசார் அவிழ்க்க முயன்றதைப் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடியது, இவ்வியக்கத்திற்கு நல்ல பிரச்சாரமாகவும் அமைந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், மையப் பேருந்து நிலையத்திலேயே புஷ் உருவ பொம்மை தூக்கில் இடப்பட்டதோடு, ""புஷ் ஒரு சர்வதேச பயங்கரவாதி; போர்க் குற்றவாளி'' என அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையத்தைச் சேர்ந்த முசுலீம் வியாபாரிகள், ""இவனை இப்படித்தான் தூக்கில் போட வேண்டும்'' எனக் கருத்துக் கூறினார்கள். புஷ் வருகையை எதிர்த்துப் பகுதியெங்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
தஞ்சையில் ம.க.இ.க. பு.மா.இ.மு. சார்பாக 28.2.06 அன்று நடத்தப்பட்ட பேரணியின் பொழுது, ஜார்ஜ் புஷ் வேடமிட்ட ஒருவர், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வேடமிட்ட இருவரை நாய்ச் சங்கிலியால் கட்டிக் கொண்டு நடந்து வருவது போலவும்; ஓட்டுக் கட்சிகளின் சின்னம் அணிந்தவர்கள் அதற்குப் பாதுகாப்பாகச் சுற்றி இருப்பது போலவும் செய்து காட்டப்பட்ட காட்சி விளக்கம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஊர்வலத்தின் இறுதியில் பனகல் கட்டிடம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சைக்கு ஆளுநர் பர்னாலா வந்திருந்ததையொட்டி பலத்த போலீசு பாதுகாப்பு இருந்த போதிலும், நகரில் மூன்று இடங்களில் புஷ் உருவ பொம்மைகள் தூக்கில் இடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த புஷ் உருவ பொம்மை ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பேருந்து நிலையம் அருகே தொங்கவிடப்பட்டிருந்த புஷ் உருவ பொம்மையை, போலீசார் படாதபாடுபட்டு அறுத்துப் போட்டதை உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பியது.
இந்த நகரங்கள் தவிர்த்து, சேலம், கரூர், இராணிப்பேட்டை, மதுரை, கடலூர், உசிலம்பட்டி உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், பேருந்து பிரச்சாரம், புஷ் உருவ பொம்மையைத் தூக்கில் தொங்கவிடுதல் ஆகிய வடிவங்களில் புஷ் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
— ம.க.இ.க. வி.வி.மு.
பு.ஜ.தொ.மு. பு.மா.இ.மு., தமிழ்நாடு.

Subscribe to:
Posts (Atom)