தமிழ் அரங்கம்

Saturday, June 20, 2009

சிங்கள மக்கள் மேலான உனது தாக்குதல்தான், தமிழன் மேலான அவர்களின் கண்காணிப்பாகியது

போராட்டத்துக்கு விரோதமான உனது செயல்கள் தான், தமிழருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்களமக்களின் எதிர்வினையாகியது. நீ அரசுக்கு எதிராக மட்டும் போராடி, சிங்களமக்களின் அவலங்களுக்கு நீ குரல் கொடுத்து இருந்தால், உன்னை அவர்கள் போற்றியிருப்பார்கள். உன்னை அவர்கள், தங்கள் எதிரியாக பார்த்திருக்கமாட்டார்கள்.

தமிழனை தெய்வமாக மதித்திருப்பார்கள். 1971, 1989-1990 தங்கள் குழந்தைகளை இந்த இராணுவத்திடம் பறிகொடுத்த மக்கள், அதை பழிவாங்க உன்னுடன் சேர்ந்து நின்றிருப்பார்கள். ஆனால் நீ இன்னமும் சிங்கள மக்களை தமிழனின் எதிரியாக காட்டுவது நிற்கவில்லை. உனது ஆட்டம் முடிந்து விட்டது, நிற்பாட்டு. நீயே தமிழனுக்கே எதிரானவன். அதையே உன் வரலாறாக நிறுவியிருக்கின்றாய். நீ வேறு, தமிழன் வேறு. அது போல் சிங்கள மக்கள் வேறு, சிங்கள அரசு வேறு. உன்னுடைய குறுந்தேசிய தமிழ் இனவெறியை, தமிழர்களின் உணர்வாக காட்ட முனைகின்றாய். தமிழ் தேசிய உணர்வுக்கும், உன்னுடைய இனவெறி உணர்வுக்கும் இடையில் உள்ள மெல்லிய இடைவெளியை கொண்டுதான், தமிழினத்தையே நீ அழித்தவன்.

இப்படிப்பட்ட நீ தான் சொல்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்!


இதில் பங்கேற்க சென்றிருந்த இந்தியாவின் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்தும் மற்ற பிற நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பாக தாய்லாந்து தலைநகர் பாங்காங் திரும்பினர். பல்வேறு உலகத் தலைவர்கள் சந்திக்கும் கூட்டங்களில் உலகமயத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவது வழக்கம்தான்; அதுவும், ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்று ஏற்றிருந்தார்கள். ஆனால், இங்கே ஒரு கூட்டமே ரத்து செய்யப்படும் அளவுக்கு நடந்ததை பல நாடுகளால் ஜீரணிகக்க முடியவில்லை. அப்படி தாய்லாந்தில் என்னதான் பிரச்சினை?

இதுவரை பதினாறுக்கும் மேற்பட்ட இராணுவப் புரட்சிகள் நடந்திருக்கும் தாய்லாந்தில் இன்னும் மன்னர் பரம்பரையினர் அங்கீகாரத்தோடு வாழ்கின்றனர். ஏழ்மையும், செல்வமும் கூரிய முரண்பாடுடன் பிரிந்திருக்கும் நாட்டில், ஏழைகளுக்கு எந்தக் காலத்திலும் பெயரளவு ஜனநாயகம்கூடக் கிடைத்ததில்லை.ஐந்து வருடங்களுக்கு முன்னர் தாக்சின் என்பவரது தலைமையில்.....................முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, June 19, 2009

தவைவர் மரணிக்கவில்லை : இது ஒருபுறம் மனநோய் மறுபுறம் தமிழனை ஏமாற்றும் மோசடி

இறந்த ஒருவரை இறக்கவில்லை என்று கூறுவது, ஒரு சமூகம் தன் பகுத்தறிவைக் கூட இழந்து நிற்கின்றது என்பதே அர்த்தமாகும். இப்படி இறக்கவில்லை என்பது ஆகப் பெரும்பான்மையிடம் உளவியல் சார்ந்த நோயாக இருப்பதைக் நாம் காணமுடியும். சிறுபான்மையிடம் இது பிழைப்பு சார்ந்தது. பினாமி சொத்துச் சார்ந்த அரசியல் மோசடி.

இப்படி பிழைப்பு சார்ந்த அரசியல் மோசடிக் கும்பல், இந்த உளவியல் நோயைக் கொண்டே வாழ முனைகின்றது. மக்கள் பெயரால் தான் சுரண்டியதை தனதாக்கி அதைக் காப்பாற்றவும், அதைக் கொண்டு அது வாழவும் முனைகின்றது. இதற்கு தலைவர் உயிருடன் இருப்பதாக காட்ட வேண்டியுள்ளது. அதாவது பூசாரி எப்படி இல்லாத கடவுளை இருப்பதாக கூறி, பக்தனை ஏமாற்றி பிழைப்பது போன்றதுதான் இதுவும்.

இங்கு மனிதனின் சொந்த பகுத்தறிவுக்கு இடமில்லை. பிரபாகரனை இருப்பதாக கூறுபவர்கள், அவரை உலகறிய காட்டிவிடுவது தானே அறிவுபூர்வமானதாக இருக்கும். இதற்கு வெளியில் எந்த உண்மையும் கிடையாது. போலியான எந்த தர்க்கமும், உண்மையானதாக .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாக். இராணுவம் – தாலிபான் மோதல்: நிழலா? நிஜமா?


அந்நாட்டிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலுள்ள மாலாகண்ட் பகுதியில் “அமைதியை” ஏற்படுத்த, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இநிபாஸ் ஹரியத் இ முஹமதி என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்போடு பாகிஸ்தான் அரசு ஓர் உடன்பாடு செய்துகொண்டது. இதன்படி, மாலாகண்ட் பகுதியில் ஸ்வாட் சமவெளியையும் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நிஜாம் இ அத்ல் என்ற ஷரியத் நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்கு கைமாறாக, தெஹ்ரிக் இநிபாஸ் அமைப்பு தனது சகோதர அமைப்பான தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினை ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுமாறு செய்ய வேண்டும். ஆனால், நடந்த்தோ பாகிஸ்தான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது.

Thursday, June 18, 2009

'சிங்களவன் உடன் எப்படி நாங்கள் சேர்ந்து வாழ்வது?" அவன் …

அவன் உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

சிங்கள அரசு தான் உன் எதிரி. சிங்கள மக்கள் அல்ல. இந்த வேறுபாட்டை எப்போதாவது உன் வாழ்வில் நீ எண்ணிப்பார்த்ததுண்டா!? தமிழனை, முஸ்லீமைக் கூட, எதிரியாக்கியவன் அல்லவா நீ. ஏன் உன் சிந்தனை, நடைமுறை எல்லாம் அதுவாகவே இருந்தது. அதைத்தான் தேசியத்தின் பெயரில் புலித் தேசியம் உனக்கு, உன் சிந்தனையாக ஊட்டியது.

துரோகிகள், கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் மக்களின் எதிரியான சிங்கள அரசுடன் கூடி நிற்கின்றானே ஒழிய, உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் அல்ல. நீ ஏன் உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் நிற்க முடியாது!?

இதைப் புரிந்து கொள்ளாத மூடனாய்,.......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 17, 2009

உலகமயமாதல் விதைத்த ஏழ்மை அவலங்கள் : ஒளிப்பேழைகள்

உலகமயமாதல் விதைத்த ஏழ்மை அவலங்கள்

நாடு கடந்த தமிழீழம்: எஞ்சிய தமிழினத்தை அழிக்கமுனையும், புலத்துப் புலிகளின் புலுடாப் பிரகடனம்

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம்.
ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களையும், ஓடுக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களையும், ஒடுக்கப்பட்ட உலக மக்களையும் சார்ந்து நின்று போராட மறுக்கும் வலதுசாரிய புலிப் பாசிசம், நாடு கடந்த தமிழீழ புலுடாப் பிரகடனத்தைச் செய்கின்றது.

கடந்த காலத்தில் தமிழினத்தை அழித்த கும்பல், இன்று இதன் மூலம் தாம் வாழ நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

இதன் மூலம்

1. புலத்தில் பினாமிகளின் பெயரில் உள்ள பாரிய புலிச் சொத்துகளை, புலித் துரோகிகள் தமதாக்க புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

2. தொடர்ந்தும் புலத்து மக்களை.....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ரமாபாய் நகர் துப்பாக்கிச்சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை !


இந்து மதவெறிக் கும்பல் ஆட்சியிலிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு “யாரோ” சில சமூக விரோத சக்திகள் அக்காலனியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தினர். ஆதிக்க சாதி திமிர் பிடித்த அக்கிரிமினல்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ரமாபாய் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டத்தில் இறங்குவதை இந்து மதவெறிக் கும்பலால் சகித்துக் கொள்ள முடியுமா? சட்டம்ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்போராட்டத்தை ஒடுக்கியது, இந்து மதவெறிக் கூட்டணி அரசு.

Tuesday, June 16, 2009

மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்

நாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறது
மேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்
தமிழன் தலைவிதியை தள்ளியுள்ளார்-
மண்ணில் எந்த முற்போக்குமௌவண்ணம்
துடைத்தளித்து துரத்தி யதார்த்தவாதி ராஜபக்ச
காலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்

இனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்
பதின்முணாம் சட்டம் எழும்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நாம் உடனடியாக செய்ய வேண்டியதும், எமது அரசியல் திசைவழியும்


அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் தம் தப்பபிப்பிராயங்களைக் களைந்து, தம் பொதுஎதிரியை எதிர்க்க கூடிய ஒரு கூட்டு அரசியல் பலத்தைப் பெறுவதே, இன்றைய அரசியல் தெரிவாக எம் முன்னுள்ளது. இந்த வகையில், எமது அனைத்து அரசியல் செயல்களை இன்று ஒருங்கிணைத்தல் அவசியமாகும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைதல், அதற்கான அரசியல் முன்முயற்சியை எடுத்தல் அவசியமானது. அதற்காக அனைத்து தடைகளையும் கடத்தல் அவசியமாகும்.

இந்த செயல் சிங்கள இனவாத அரசுடனல்ல. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைவதாகும். பலர் இன்று கிடைப்பதைப் பெறுவது பற்றியும், சிங்கள அரசுடன் சேர்ந்து நிற்பது பற்றியும், புலியின் அழிவுடன் சேர்ந்து இதையே ஓப்பாரியாக முன் வைக்கின்றனர். இதற்கு மாறாக நாங்கள் இலங்கையில் வாழும் அனைத்து ஓடுக்கப்பட்ட .....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 15, 2009

நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு: இந்திய மேலாதிக்கச் சதி, ஓட்டுக்கட்சிகளின் துரோகம்!


மன்னராட்சி ஒழிக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான பாதையில் அந்நாடு அமைதியாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நிலவும் கருத்தைத் தகர்த்து, அந்நாடு மீண்டும் அரசியல் போராட்டங்களால் குலுங்குகிறது. இந்தியாவின் மேலாதிக்கச் சதிகளுக்கும் இந்தியக் கைக்கூலி அரசியல் சக்திகளுக்கும் எதிராக, “அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! நாட்டு விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கைக்கூலி இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்! சதிகார அதிபர் ஒழிக!” என்ற முழக்கங்களுடன் வீதியெங்கும் மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களாலும் சாலை மறியல் போராட்டங்களாலும் அந்நாடு அதிர்கிறது.

நேபாள மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக மாவோயிஸ்டுகள் பத்தாண்டு காலத்திற்கும் மேலாக நடத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக, 2006ஆம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் எழுச்சியில் மக்கள் இறங்கினர். “மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் நேபாள ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட வேண்டும்” என்ற மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை இம்மக்கள்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

முன்னணிக்கான அரசியல் திட்டமும், அதன் நோக்கமும்

மூன்று பத்தாண்டுகளாக நிலவிய ஆயுதப் போராட்டம், இன்று ஒரு தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு அரசியல் அடிப்படையாக இருந்த இன முரண்பாடு, அரசியல் ரீதியாக இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை. மாறாக மிக மோசமான ஒரு இனவழிப்பு, பாசிச வடிவத்தை எட்டியுள்ளது. இதை இன்று எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின்றி, தமிழினம் அனாதையாகியுள்ளனர்.

பொறுக்கிகளும், புறம்போக்குகளும், சந்தர்ப்பவாதிகளும், பாசிட்டுகளுமே, தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியல் நிலையை எட்டியுள்ளனர். இதற்கு ஏற்ப பேரினவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் உட்பட, அனைத்துவிதமான சுதந்திரங்களையும், உரிமைகளையும் தமிழ் மக்கள் மட்டுமின்றி, இலங்கை மக்கள் அனைவரும் இழந்து வருகின்றனர். ஒழுங்குபடுத்தப்பட்ட பாசிசம், நிறுவனமாகி வருகின்றது.

யுத்தத்தின் முடிவும், இலங்கை தழுவிய பாசிசமும், புதியதொரு சூழலை உருவாக்கியுள்ளது. நிலைமை மிகத் தீவிரமாக மாறியுள்ளது. இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப் போக்கில், ஒன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரச பாசிசம், மூர்க்கமாக மாறி நிற்கின்றது. அனைத்துவிதமான அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், அது தானே மறுத்து நிற்..........
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, June 14, 2009

இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்


1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

4.கல்வியும் தமிழ் தேசியமும்

5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்

6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்

9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்

11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்

15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.

16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு

17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்

19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்

20.இனவாதமும் சுயநிர்ணயமும்

21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்

22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது.