தமிழ் அரங்கம்

Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Saturday, May 16, 2009

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் : வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?

ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் பலமுனைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. அப்போர் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அல் காய்தா தலைவர் ஓசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. அல் காய்தா, தாலிபான் ஆகிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவால் முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்கானின் அண்டை நாடான பாகிஸ்தானையும் ஆட்டங்காணச் செய்துவிடும் அளவிற்கு அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

அமெரிக்கா, ஆப்கானில் கர்சாய் என்பவர் தலைமையில் நிறுவியுள்ள பொம்மை அரசாங்கத்தின் அதிகாரம், அந்நாட்டின் தலைநகர் காபூலைத் தாண்டினால் செல்லாக்காசுதான் எனுமளவிற்கு முடங்கிப் போய்க் கடக்கிறது. இன்னொரு புறமோ, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற கதையாக, ஆப்கானிலும், ஆப்கான் எல்லையையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் தாலிபான் என்ற பெயரை வைத்துக்கொண்டு இயங்கி வரும் பல்வேறு இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் ஆங்காங்கே குட்டி சமஸ்தானங்களை நடத்தி வருகின்றன. இந்த யுத்தப் பிரபுக்களை அழிப்பதற்காக அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தும் வான்வழித் தாக்குதல்களிலும், தரைவழித் தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர்.

தனது தேர்தல் பிர
...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 1, 2009

தமிழ்மக்களின்; விடுதலைக்கு, மூன்றாவது பாதைபற்றியே சிந்திக்கவேண்டும்!

வன்னிநில மக்களின் பேரவலம் பற்றி எழுத்தில் எழுதவோ, ஓவியத்தில் வடிக்கவோ முடியாது. அம்மக்களின் வாழ்வு நீண்ட துயராகவே உள்ளது.

வன்னிநில மக்களின் பேரவலத்திற்கு உலகில் குரல் கொடுக்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். மகிந்தா-கோத்தபாயா முதல் சர்வதேச சமூகம் வரை மனித அவலம் பற்றி நாளாந்தம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஓபாமாவின் அமெரிக்கா கூட 'தாங்கொனாத் துயரில்" போர்ப் பொறிக்குள் அகப்பட்ட மக்களை வான் ஊர்திகள் கொண்டு அழைத்துச் செல்லலாமா என சிந்தித்தது!

தமிழகத்தில் திராவிடக் கழகங்கள், - ஏனைய அரசியல்; தலைவர்கள் 'தம் உயிரினும் மேலான உடன்பிறப்பபுக்களை இரத்தத்தின் இரத்தங்களை" தொப்புள் கொடி உறவுகளுக்காக (தேர்தல்) போர்க்கோலம் பூண வைத்துள்ளனர்! nஐயலலிதா கூட உண்ணாவிரதம் முதல், (தீக்குளிக்க முற்படாத குறை) உண்டியல் குலுக்கல் வரை போயுள்ளார்! தமிழ்மக்களைக் கொன்றொழிக்கும் மத்திய அரசும் தன்னால் காயப்பட்டவர்களுக்கு, அங்கவீனமானவர்களுக்கும்; மருத்துவத்திற்காக வைத்தியர் குழுவையும் அனுப்பியுள்ளது. பாரதிய ஐனதாக்கட்சியின் தலைவர் அத்வானி எல்லோரையும்விட மே.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, October 13, 2008

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள்.

அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.

Saturday, October 4, 2008

உலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி!

"கம்யூனிசம் தோற்றுவிட்டது; தனியார்மயம் தாராளமயம் உலகமயம்தான் ஒரே தீர்வு!'' என்று எக்காளமிட்ட முதலாளித்துவம், அனைத்துலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவிலேயே முதுகெலும்பு முறிந்து மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டு விட்டது. அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; கட்டுப்பாடற்ற ஊகவணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகள் இவற்றால் விபரீத விளைவுகள் நேரிடும் என்று தெரிந்தே "அப்படியெல்லாம் நடக்காது; எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்ற ஆணவத்தோடு செயல்பட்ட தனியார் ஏகபோக நிதிக் கழகங்கள், "சப் பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்கு தரப்படும் கடன்களால் ஆதாயமடைந்த பின்னர், நெருக்கடி தீவிரமாகி அடுத்தடுத்து திவாலாகி குப்புறவிழுந்து கிடக்கின்றன.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மாக் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியதும் அமெரிக்க அரசு, அவற்றை அரசுடைமையாக்கி நிதிச் சந்தையை தூக்கி நிறுத்த 20,000 கோடி டாலரைக் கொட்டியது. அதைத் தொடர்ந்து, உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. அதற்கடுத்து, மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குருப் நிறுவனம் திவாலாகி, அமெரிக்க அரசு 8500 கோடி டாலரை இழப்பீடாகக் கொடுத்து அரசுடைமையாக்கியது. தற்போது............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, September 25, 2008

ஆந்திராக்ஸ் பீதி : அமெரிக்காவே குற்றவாளி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதையடுத்த சில தினங்களில், "ஆந்த்ராக்ஸ்'' என்ற நச்சுக் கிருமியின் உயிர் அணுக்கள் தடவப்பட்ட கடிதங்கள், சில அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களைக் குறி வைத்து அனுப்பப்பட்டன. மர்மமான முறையில் நடந்த புதிய வகையான இத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடம் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறிவந்த அமெரிக்கக் கூலிப் பிரச்சாரக் கும்பல், ஆந்த்ராக்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள் தொடங்கியிருக்கும் உயிரியல் யுத்தம் எனப் பீதியூட்டின. ஈராக் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க வேண்டும் எனத் திட்டம் போட்டுக் காத்திருந்த அமெரிக்க ஆளும் கும்பல், அமெரிக்க மக்களை மூளைச் சலவை செய்ய ஆந்த்ராக்ஸ் தாக்குதலையும் பயன்படுத்திக் கொண்டது.

ஆந்த்ராக்ஸ் கிருமி தடவப்பட்ட கடிதம் யார் வீட்டுக்கு வருமோ என்ற பீதி ஒருபுறமிருக்க, அமெரிக்க உளவு அமைப்பான "எஃப்.பி.ஐ.'' யார் வீட்டுக் கதவைத் தட்டுமோ என்ற அச்சத்திலும் அமெரிக்க மக்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், எஃப்.பி.ஐ., வெள்ளைத் தோல் அல்லாத அந்நியர்களை மட்டுமல்ல, அமெரிக்க விஞ்ஞானிகளைக் கூட விட்டு வைக்காமல், விசாரணை நடத்தியது. உயிரியல் விஞ்ஞானிகள் அனைவரும் சந்தேகப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

Friday, September 19, 2008

அமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி!

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவர், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் மேற்படிப்புப் படித்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் 2001இல் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் முசுலிம்கள் நிம்மதியாய் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் குடும்பத்துடன் கராச்சி திரும்பினார்.

தனது கணவர் தன்னை விவாகரத்து செய்ததால், வேலை தேட மீண்டும் அமெரிக்கா சென்று வேலை கிடைக்காமல் 2003இல் நாடு திரும்பிய சித்திகி, அந்த ஆண்டே காணாமல் போய்விட்டார். 2004இல் இருந்து சித்திகி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க சித்திரவதைக் கூடமான பக்ராம் விமானதளத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக பிரிட்டன் பத்திரிக்கையாளர் ரிட்லீ அண்மையில் சொல்லி இருந்தார். கைதி எண் 650 எனும் பெயரில் அடைபட்டிருந்த சித்திகியை பக்ராம் சிறையில் இருக்கும் எவருமே கண்ணால் பார்க்கக்கூட அனுமதிக்கப்பட்டதில்லை. பெண் அழுகைக்குரல் ஒன்றால் மட்டுமே அவர் அக்கொட்டடியில் அடைபட்டிருந்தது பிற கைதிகளுக்குத் தெரிய வந்தது. பலமுறை அவர் அச்சிறையில் அமெரிக்க இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். 2004இல் அமெரிக்க உளவுத்துறையின் தேடப்படுவோர் பட்டியலில், அல்கொய்தாவிற்காக வைரம் கடத்தினார் என்று டாக்டர் சித்திகியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் சித்திரவதைக் கொடுமை அனுபவித்த டாக்டர் சித்திகியை 2008 ஜூலை 17இல் தான் ஆப்கன் போலீசார் கைது செய்ததாகக் கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நிறுத்தினர். அவர் மீதான அல்கொய்தா தொடர்பேதும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. வைரம் கடத்திய கதைக்கும் ஆதாரம் காட்ட முடியவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் சந்தேகப்படும்படியான வேதியல் திரவம் அடங்கிய பாட்டில், குண்டு தயாரிக்கும் செய்முறைப் புத்தகம் முதலானவற்றை வைத்திருந்ததாகக் கைது செய்ததாகவும்,...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 14, 2008

பெட்ரோல்-டீசல் விலையேற்றம் : குளிர் காயம் அமெரிக்கா

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகச் சூதாடிகள்தான் காரணமே ஒழிய, சந்தைக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமேயில்லை'' என்றார், ப.சிதம்பரம். அவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், திருட்டு வழக்கில் "அப்ரூவர்'' ஆகிவிட்ட குற்றவாளியின் சாட்சியத்திற்கு நிகரானது. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும்.

ப.சிதம்பரம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், "மேற்காசிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகளிடையே நடந்துவரும் போட்டியும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்'' எனக் கூறியிருக்கிறார். (பிசினஸ்லைன், ஜூலை 4).

Sunday, August 24, 2008

ஆப்கான்: அஞ்சி நடுங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் பலிகடாவாகும் இந்தியர்கள்

காரிருள் சூழ்ந்தாற்போல எங்கும் புகை மூட்டம்; இந்தியத் தூதரகக் கட்டிடம் சுக்கலாக நொறுங்கியது; தாலிபான்களின் மனிதவெடிகுண்டுத் தாக்குதலால் காபூல் நகரமே அதிர்ந்தது. தெருவெங்கும் சதைக் கோளங்களாக மனித உடல்கள் சிதறிக் கிடந்தன். வாகனங்கள் அப்பளமாக நொறுங்கிச் சிதறின. இதுவரை கண்டிராத மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் என்று அலறியது இந்திய அரசு. அமெரிக்காவில் செப்.11., 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று பத்திரிகைகள் வர்ணித்தன.

கடந்த ஜூலை 7ஆம் நாளன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டு 170 பேர் படுகாயமடைந்துள்ளனர். முதன்மைச் செயலர் உள்ளிட்டு நான்கு இந்தியத் தூதரக உயரதிகாரிகளும், 6 ஆப்கான் போலீசு உயரதிகாரிகளும், இந்தியாவுக்கு வருவதற்காகக் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த ஆப்கானியர்களும் இக்கோரத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கொடிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ள தாலிபான் தீவிரவாதிகள், இதற்குமுன் 2005ஆம் ஆண்டின் இறுதியில், ஆப்கானில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியரான, கேரளத்தைச் சேர்ந்த ராமன்குட்டி மணியப்பன் என்பவரைக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். அதன்பிறகு சில இந்தியப் பொறியாளர்களும் தொழிலாளிகளும் தாலிபான்களால் கடத்திச் செல்லப்பட்டு எச்சரித்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியத் தூதரகத்தின் மீதான தாலிபான்களின் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலுக்கும்...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, July 12, 2008

அறியப்படாத அமெரிக்கா

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது. .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.