தமிழ் அரங்கம்

Saturday, May 2, 2009

தமிழ்மக்களைக் கொல்வதையே நியாயப்படுத்துகின்றான் ஒரு ஜனாதிபதி

நீ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களை கொல்லலாம் என்றால், நான் ஏன் என் மக்களை கொல்;லக் கூடாது. நீ அதைக் கேட்கக் கூடாது. அதைக் கேட்கும் உரிமை உனக்கு இல்லை என்கின்றான், மாண்புமிகு கொலைகார ஜனாதிபதி. கொல்வது என்பது, ஜனாதிபதியின் உரிமை. இந்தக் கொல்லும் உரிமையை எப்படி செய்வது என்பதில், 'எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்" என்கின்றான்.

இப்படி நாங்கள் வரைமுறையின்றி தமிழ் மக்களை கொல்கின்றோம், இதைக் கேட்கும் உரிமை உனக்கில்லை. இது தான் ஏகாதிபத்திய நாட்டுத் தலைவர்களுக்கு, எமது அதி உத்தம பாசிச ஜனாதிபதி வழங்கிய பதில். தம்பி கோத்தாபாய மட்டுமல்ல அண்ணன் ராஜபக்சவும் தன் வேஷத்தைக் களைந்து கர்ச்சிக்கின்றான். கையெடுத்து கும்பிட்டு, இரந்து வாக்கு பிச்சை கேட்டு நடித்த நடிகன், இன்று ஒரு பாசிட்டாகவே கொக்கரிக்கின்றான்.

கொலைகார ஜனாதிபதி உலகுக்கு கூறும் தத்துவம் என்ன, நீங்கள் கொல்லலாம் என்றால் நாங்களும் கொல்லலாம். இது தான் ஒரு நாட்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 1, 2009

தமிழினப் படுகொலைக்கு எதிராக மேதின அறைகூவல்: சிறப்பு ஆவணம்

புலிகள் வன்னி மக்கள் அனைவருக்கும் பயிற்சியை வழங்கியவர்கள். அப்படியிருக்க ஏன் அந்த மக்களுக்கு புலிகள் துப்பாக்கிகளை வழங்கவில்லை? இந்தக் கேள்வி, பல விடைகளுக்கு பதில் தருகின்றது.

புலிகள் மக்களை என்றும் நம்பவில்லை. தாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதுதான், வலதுசாரிய புலிகளின் பாசிசச் சித்தாந்தமாக இருந்தது. இனவழிப்பு உச்சத்தில் இருந்த காலத்திலும், மக்கள் நடைப்பிணமாக ஓடிக்கொண்டிருந்தனர். மக்களை தம் யுத்த எடுபிடிகளாகவே பயன்படுத்தத்தான், புலிகள் விரும்பியிருந்தனர். தாம் பயிற்சி வழங்கிய மக்கள், தமது சொந்த யுத்த நெருக்கடி காலத்தில் கூட அவர்கள் ஆயுதமேந்துவதை புலிகள் விரும்பவில்லை. அது அந்த வர்க்கத்தின் அரசியல். புலிகளின் மிக நெருக்கடியான அரசியல் காலகட்டத்தில், இதை நாம் ஒரு அரசியல் கோரிக்கையாக கூட வைக்கத் தவறியிருந்தோம்.

இந்த நிலையில், இன்று கொல்லப்படும் மக்கள் யார்? இன்று முட்கம்பிக்கு பின் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் யார்? இவர்கள் புலிகள் அல்ல, மாறாக எம் மக்கள்.

இவர்களை யார் கொன்றனர்? யார் அடைத்து வைத்திருக்கின்றனர்? எம் மக்களினதும், இலங்கை மக்களினதும் பொது எதிரிதான்.

இப்படி எம் மக்களின் எதிரி அவர்கள் மேல் நடத்திய இனவொடுக்குமுறையினை, நாம் ஆவணமாக்கிக் தொகுத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் கீழ் உள்ள இருபகுதிக்கு ஊடாக, பேரினவாதத்தின் சில பக்கத்தை நீங்கள் தெளிவாக இனம் காணமுடியும்..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 30, 2009

மக்கள் மேல் மீளவும் கொலுவேறியுள்ள எதிர்புரட்சி

தமிழ் மக்கள் மீண்டும் ஒரு துயர வாழ்வுக்குள் வீழ்ந்துள்ளனர். தமிழ்மக்களின் சொந்த விடுதலைக்கு எதிராக புலிகளின் எதிர்ப்புரட்சி கடந்த 30 ஆண்டுகள் ஆற்றிய நடவடிக்கைகளால், இன்று இது தன் சொந்த அந்திமத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விடத்தை நிரப்புவது, புலியை விட மோசமான மற்றொரு எதிர்ப்புரட்சி கும்பலாகும். தமிழ் மக்களின் எதிரியும், எதிரியுடன் 30 ஆண்டு காலம் பயணித்து வந்த கூலிக் குழுக்களின் எதிர்ப்புரட்சி அரங்கேறியுள்ளது.

மக்கள் இனி இந்த எதிர்ப்புரட்சி கும்பலின் வக்கிரத்தை, அதன் ஒடுக்குமுறையை புதிய வடிவில் தரிசிக்கவுள்ளனர். கடந்தகாலத்தில் புலியின் பெயரால் இவர்கள் நடத்திய கொடுமைகளை, இந்த மக்கள் அறிந்தவை தான்.

கடந்த காலத்தில் ஒரு இலட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த அரசு தான், மீண்டும் புலியின் இடத்தில் அமருகின்றது. இது தமிழ்மக்கள் மேல் தன் பேரினவாதத்தை திணிக்கவுள்ளது. இது முன்பை விடவும் பாசிச வடிவம் கொண்டு, திமிரோடு எழுந்து நிற்கின்ற...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 29, 2009

பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்துவது எப்படி?

தமிழ் மக்களாகிய எம் கையில் அது உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாக்கப் பட்டுள்ளோம். செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, நாம் நடைப்பிணமாகியுள்ளோம். தமிழ் மக்களையே அழித்தொழிக்கும் பேரினவாத யுத்தத்தை ஒட்டி, தமிழ் மக்களாகிய நாம் எந்தக் கருத்தையும் சுதந்திரமாக கூற முடியாத அவலம். தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்தத் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாத வகையில் எமக்கு எதிராக பல துப்பாக்கிகள்.

ஒன்றலல் இரண்டல்ல. பல. புலிகள், துரோகக் குழுக்கள் முதல் பேரினவாதம் வரை, தமிழ் மக்கள் மேல் தம் துப்பாக்கியை நீட்டி வைத்து, இது தான் உங்கள் தலைவிதி என்கின்றன. சாதாரணமான மனித உரிமை முதல் இனத்தின் சுயநிர்ணயவுரிமை வரை மறுத்து, இது தான் தீர்வுகள் என்கின்றனர். இதைத்தான் இன்று தமிழ் மக்களாகிய நாம் அனுபவிக்கின்றோம்.

தமிழ் மக்களாகிய நாம் எம் விடுலை...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 28, 2009

பேரினவாத பாசிசத் தலைமையின் திமிரும், இந்தியா, சீனா, மேற்கு முரண்பாடுகளும்

நாலு தரப்பு முரண்பாடு, புலியை அழிப்பதன் பெயரால் தமிழரை எப்படி கொல்லுவது என்பதில்; ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆட்சியை பாசிச சர்வாதிகாரமாக நிறுவ, பாசிட்டுகள் உலக 'நாகரிக" ஒழுங்கின் மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு மூசுகின்றனர். பல தரப்பு முரண்பாட்டுக்கு ஊடாக தமிழரைக் கொன்று, அதை இலங்கைக்கான ஜனநாயகமாக காட்ட முனைகின்றது.

இதுவே யுத்த நெருக்கடியாக மாறி நிற்கின்றது. இது ஏற்படுத்தும் மனித அவலத்தை வைத்து, ஏகாதிபத்தியங்கள் முதல் இந்தியா வரை தத்தம் அரசியல் பொருளாதார நலனை இலங்கையில் நிறுவ, தன் முனைப்பு கொண்டு தமக்குள் ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். இந்த எல்லையில் இந்த யுத்தத்துக்கு யார் அதிகம் தமிழனை கொல்ல உதவுதன் மூலம், இலங்கை அரசை தம் பக்கம் தக்கவைக்க முடியும் என்பதில் சீனா - இந்தியா முரண்பாடு கூர்மையாகியுள்ளது.

மறுபக்கத்தில் இந்த யுத்தத்தை ஆதரித்து நிற்கும் இந்தியா – சீனா நிலையை தனிமைப்படுத்தி, தன்னை நிலை நிறுத்த மேற்கு முனைப்பாக உள்ளது. அதற்கு இந்த யுத்தம் ஏற்படுத்தும் மனித அவலத்தைக் காட்டி, காய் நகர்த்துகின்றது. இந்தியா தன் பிடியை தக்கவைக்க யுத்தத்துக்கு உதவும் அதேநேரம், மேற்கு மனித அவலம் மூலம் ஏற்படுத்தும் தலையீட்டை தடுக்க, அதையும் தான் கவனித்துக் கொள்வதாக பாசாங்கு செய்கின்றது. இப்படித் தமிழர் புலியின் ...........
.முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அந்திய முதலீட்டுக்கு அபாரச் சலுகை

மக்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் கூத்துக்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டிருக்கும் நேரமாகப் பார்த்து, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மிகவும் கமுக்கமாக முடிவு செய்து அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தால்கூட, அதற்கு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் முட்டுக்கட்டை போட்டிருக்கமாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் என்ற முறையில் பா.ஜ.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் முணுமுணுத்திருப்பார்களேயொழிய, அந்நிய முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் மன்மோகன் சிங்குக்கு வேறு தலைவலி எதுவும் ஏற்பட்டிருக்காது. எனினும், மன்மோகன் சிங் கும்பலோ அந்த வாசூப்பைக்கூட நாடாளுமன்றத்திற்குத் தராமல், அமைச்சரவையை மட்டும் கூட்டி முடிவெடுத்து இம்மாற்றத்தை அறிவித்து விட்டது.

மறுகாலனியாதிக்கச் சூழலில் நாடாளுமன்றத்திற்கு ""ரப்பர் ஸ்டாம்ப்'' என்ற மதிப்புமிக்க தகுதியைத் தருவதற்குக்கூட ஆளும் கும்பல் தயாராக இல்லை என்பதை மன்மோகன் சிங் மீண்டும் எடுத்துக் காட்டிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில், 15ஆவது.........
.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 27, 2009

மக்களுக்கான நிவாரணம் மூலம், பேரினவாத பாசிச இராணுவ இயந்திரத்துக்கு உதவக்கோருகின்றனர்

மக்களை கொலைவெறியுடன் கொன்றுகுவித்து அவர்களை எதுவுமற்ற பரதேசியாக்கிவர்கள், அதை காட்டி இன்று நிவாரணம் கோருகின்றனர். புலியெதிர்ப்பு பேசிய அரச கைக்கூலிகள், இதை காட்டி தமிழ் மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். அரசு சார்ந்து நின்று மதம் பரம்பும் கும்பல்கள், இதை பயன்படுத்தி மதத்தை பரப்பி மக்களுக்கு உதவுவதாக காட்ட முனைகின்றது.

அரச கூலிக்குழுக்கள் முதல் மதங்கள் வரை, இலங்கை பாசிச இயந்திரத்தின் ஒரு உறுப்பாக நின்று அதற்கு உதவுகின்றது. இதே போல் சர்வதேச அரசுகள், நிறுவனங்கள் கூட இதைத்தான் செய்கின்றது. பேரினவாதம் தமிழ்மக்களை கொன்று ஒரு இனத்தை அடக்கியொடுக்க, இராணுவமல்லாத சிவில் உறுப்புகளுக்கு பலமாக உதவுவது தான் இந்த உதவி.

இன்று இலங்கையில் பாசிச பேரினவாத இயந்திரமே, அனைத்தையும் கண்காணிக்கின்றது. இதைத் தாண்டி இதற்கு வெளியில் எந்த உதவியும் மக்களுக்கானதல்ல. அனைத்தும் இந்த எல்லைக்குள் தான் நிர்வகிக்கப்படுகின்றது.

மனிதாபிமானத்துடன் உதவ விரும்புபவர்கள், உங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊடாக உங்கள் சமூகத்துக்கு நேரடியாக உதவுங்கள். அந்த .........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இராணுவ தீர்வு மூலம் தமிழினத்தை பேரினவாதம் அடிமை கொள்ளமுடியாது

தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.

அதே போல் ஒடுக்குமுறையிலான இராணுவத் தீர்வை மூடிமறைக்க முனைகின்றது. புலிகளின் கொடுமையான, கொடூரமான நடத்தைகளை முன்னிறுத்தி, தன் கொடுமைகளையும், கொடூரங்களையும், தமிழ்மக்களை வகைதொகையின்றி கொல்வதையும் மூடிமறைக்க முனைகின்றது. இதன் மூலம் மிக இலகுவாக ஒரு இனவழிப்பை, இனக்களையெடுப்பை, இனச்சுத்திகரிப்பை செய்கின்றது. மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றும், காயப்படுத்தியும், அங்கவீனராக்கியும், ஒரு தமிழ் சமூகத்தை உற்பத்தி செய்கின்றது. நாலு முட்கம்பிக்கு வேலிகளுக்கு பின்னால், முழு மக்களையும் பலாத்காரமாக சிறை வைத்திருக்கின்றது.

புலியிடம் 'மீட்டவர்கள்" களை, இன்று நாலு முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் அப்பாவி மக்களை அடைத்து வைத்துள்ளது. புலியை விட கேவலமாக, அடிமையாக இந்த மக்களை நடத்துகின்றது. புலிகள் தமக்காக சண்டைசெய்ய இழுத்துச் .
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 26, 2009

அரச கைக்கூலிகள் கூறுகின்றனர், தமிழ்மக்கள் இனி தம் உரிமைக்காக போராட மாட்டார்களாம்!?

இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,

மக்களுக்காக போராடாதே அடிமையாக மக்களை இருக்க விடு என்கின்றான். இதை அவன் தன் அறிவு மூலம் நிலைநாட்ட முனைகின்றான். பொய், பித்தலாட்டம், மோசடி, மூலம், மக்களின் வாழ்வு சார்ந்த எதார்த்தத்தை திரித்துக்காட்டி இதை நிறுவ முனைகின்றான்.

இதற்கு புலிகள் தான் உதவினர். தமிழ்மக்கள் அரசியல் அனாதைகளாகி நிற்கின்றனர். பொறுக்கிகளும், துரோகிகளும், சமூக விரோதிகளும், கைக்கூலிகளும் தமிழ்மக்கள் சார்பாக கொக்கரிக்கும் அவலநிலை.

தமிழரின் உரிமையின் பெயரால் புலிகள் ஆடிய பாசிசக் கூத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேரின
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்