தமிழ் அரங்கம்

Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Thursday, April 9, 2009

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் என்பது மட்டும், புலிகளின் போராட்டத்தை வெற்றியாக்கிவிடாது. புலிகளின் ஆயுதங்களும், ஆட்ப......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 2, 2008

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும் ஒன்று எப்போதும் முன்னிலை பெற்ற போதும், மக்கள் இயக்கம் என்பது அந்த ஒன்றுக்குள் மட்டும் குறுகிவிடுவதில்லை.

ஒரு முரண்பாடு சார்ந்து ஒரு குறுகிய எல்லையில் போராட்டம் குறுகும் போது, அது இயல்பாகவே வறட்டுத்தனமாக மாறிவிடுகின்றது. இதனால் மக்களிடையே நிலவும் அனைத்தும் தழுவிய பன்முக முரண்பாடுகளை எதிராக பார்க்கின்ற அதேநேரம், அதை ஒடுக்குகின்ற போக்கும் வளர்ச்சியுறுகின்றது. உண்மையில் இந்த குறுகிய வரட்டுத்தனமான தன்மை என்பது, பிரதான முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய வகையில் பார்ப்பதை படிப்படியாக மறுத்துவிடுகின்றது.

பிரதான முரண்பாட்டை சுரண்டுகின்ற வர்க்கம் தலைமை தாங்குகின்ற நிலை உருவாகும் போது, அதுவே முற்றாகவே மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் பிரதான முரண்பாடு சுயநலம் சார்ந்து, அது சுரண்டும் வர்க்கத்தின் அற்ப தேவைகளை ப+ர்த்திசெய்யும் ஒரு முரண்பாடாக சீரழிகின்றது.

இந்த மக்கள் விரோத அரசியலை விமர்சிக்க மறுப்பவர்கள், இதற்குள் வம்பளப்பதன் மூலம் அரசியல் இழிதனத்தை கொண்டு பிழைக்கின்ற சுரண்டும் வர்க்கத்தினராகி விடுகின்றனர்.

பாராளுமன்ற அரசியல் கட்சிகள் முதல் பாராளுமன்றம் செல்லாத இயக்கங்கள் வரை, சுரண்டும் வர்க்க நலனை பேணுவதில் உள்ள வர்க்க ஒற்றுமையை நாம் காணமுடியும். அவர்கள் மக்களின் வாழ்வியல் அவலத்தை உருவாக்கி, அதன் மூலம் தாம் மட்டும் பிழைத்துக் கொள்கின்றனர்.

இந்த வகையில் ஒரு இலட்சம் மக்களை பலியிட்ட தமிழீழப் போராட்டத்தை எடுப்போம். இப் போராட்டம் 25000 பேரை விடுதலையின் பெயரிலும், 10000 பேரை துரோகியின் பெயரிலும் கொன்று குவித்துள்ளது. பல பத்தாயிரம் விதைவைகளை உற்பத்தி செய்துள்ளது. சில... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 1, 2008

அரசின் முற்றுகை தூள்! தூள்!!

கனிம வளம் பொருந்திய, கடற்கரையோரம் உள்ள அந்த இடத்தில், தனது திட்டத்தை செயல்படுத்தினால், சுமார் 6 கோடி டன் இரும்புத் தாதை, தங்களது துறைமுகம் வழியாகவே மிக எளிதில் கொண்டு சென்று விடலாம்; உலகச் சந்தையில் ஒரு டன் இரும்புத் தாதின் விலை 7000 ரூபாய்க்கும் அதிகமென்றாலும், அதனை எடுப்பதற்கான செலவு வெறும் 400600 ரூபாய் மட்டுமே; இதற்கான உரிமைத் தொகையாக இந்திய அரசுக்கு டன்னுக்கு வெறும் 25 ரூபாய் தந்தால் போதும். மொத்தத்தில், வெறும் 48,000 கோடி ரூபாய் மூலதனத்தைப் போட்டுவிட்டு, 4.5 லட்சம் கோடி ரூபாய் பெறுமான இரும்புத் தாதை அள்ளிக் கொண்டு சென்றுவிடலாம் என்று போஸ்கோ நிறுவனத்தினர் கணக்குப் போட்டுக் காத்திருக்கின்றனர்.

படிப்பறிவில்லாத மலைவாழ் மக்களை அங்கிருந்து எளிதில் துரத்திவிடலாம் என்று ஆரம்பத்தில் அரசும், போஸ்கோவும் நினைத்தன. ஆனால், மக்கள் தங்களது நிலங்களையும், காடுகளையும் அந்நியரிடமிருந்து காக்கத் தங்களது உயிரைக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு கலிங்கா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 ஆதிவாசிகள் கொல்லப்பட்ட பிறகும், தொய்வின்றி நடந்து வரும் போர்க்குணம் மிக்க போராட்டங்கள், பட்னா கிராம மக்களை, அவர்களது பூமியில் இருந்து அப்புறப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தியது.

அரசின் அடக்குமுறை ஒருபுறமி ருக்க, போஸ்கோவின் ஆலை வந்தால், உள்ளூரைச் சேர்ந்த 13,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அரசும், போஸ்கோவும் ஆசை வார்த்தை காட்டியதையெல்லாம் கேட்டு பட்னா கிராம மக்கள் மயங்கிப் போய்விடவில்லை. இதனால், போலீசின் அடக்குமுறை யைத் தீவிரப்படுத்தி, பட்னா கிராம மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போஸ்கோ நிர்வாகம், மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்தது.
இதனையடுத்து, எதிரி நாட்டை ஆக்கிரமிப்பது போல, ஒரிசா மாநில போலீசார் பட்னா கிராமத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். பட்னா .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, June 27, 2008

'தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பவாதம் : தில்லைப் போராட்டம்

தீட்சிதர்களால் பக்தர்களைத் தடுக்கவும் முடியவில்லை; ஆறுமுகசாமிக்கு பக்தர்கள் வழங்கும் இந்த மரியாதையைச் சகிக்கவும் முடியவில்லை. எனவே, புழுங்குகிறார்கள். தங்களது "ஏரியாவுக்குள்' அத்து மீறி நுழைந்த ஒருவன் தங்களுக்கு மட்டுமே உரித்தான திருநீறு வழங்கும் "அத்தாரிட்டி'யையும் பறித்துக் கொண்டுவிட்டதை எண்ணி வயிறு வெந்து துடிக்கிறார்கள்.

தமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் தம்மையே வாளும் கேடயமுமாக நியமித்துக் கொண்டுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும்கூட தீட்சிதர்களைப் போலவே தீராத சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏப்ரல் 2008 ""தமிழர் கண்ணோட்டம்'' இதழில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது.

"இந்திய தேசியர்களும், மறைமுகப் பார்ப்பனீயர்களும், துக்ளக் சோ வுக்கு இணையான சூழ்ச்சிக்காரர்களுமான ம.க.இ.க.வினர், தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்று விட்டார்களே, இந்த "விபரீதம்' நேர்ந்தது எப்படி?'' என்ற கேள்விக்கு விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்.

""சிதம்பரம் நகரில் தமது அமைப்பின் கிளை கூட இல்லாதவர்கள், "நம்ம ஏரியாவில்' (இரண்டு பொருளிலும்) நுழைந்து கொடி நாட்டியிருக்கிறார்களே, த.தே.பொ.க.வின் சிதம்பரம் நகரக்கிளை என்ன செய்து கொண்டிருந்தது?'' என்ற கேள்விக்குத் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம்.

இந்தக் கேள்விகளை அவர்களது வாசகர்கள் எழுப்பினார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு எழுப்பக்கூடுமென்று அஞ்சி, அத்தகைய கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்கு கட்டுரையாளர் செய்திருக்கும் தந்திரங்கள் மட்டும் அந்தக் கட்டுரை முழுவதும் துலக்கமாகத் தெரிகிறது.

"இது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல' என்று காட்டவேண்டும். ஆனால் வெளிப்படையாக அப்படி எழுதிவிடக்கூடாது. ம.க.இ.க.வின் பங்களிப்பை பெருந்தன்மையுடன் அங்கீகரிப்பது போலத் தெரிய வேண்டும். ஆனால் இதனை அவர்கள் மட்டும் சாதித்து விடவில்லை என்று வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும். "நாங்கள்தான் செய்தோம்' என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர்களைப் போல ஒரே வரியில் பச்சையாகப் போஸ்டர் அடித்து ஒட்டி மாட்டிக் கொள்ளக்கூடாது. அதே விசயத்தைக் கரைத்து நான்கு பக்கங்களாக்கி, வெளிர் பச்சையாக வெளிப்படுத்த வேண்டும். இப்படியொரு இலக்கணத்தை மனதில் வகுத்துக் கொண்டு, அது வெளித் தெரிந்துவிடாமல் இந்தச் சொல்லோவியத்தைத் ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்