சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
அரசியல், சமுதாயப் புரட்சியின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் சமூகப் பொருளாதார முன்னேற்றமும் சமத்துவமும் அடையவே முடியாது. மத்தியமாநில அரசுகள் கொண்டு வந்திருக்கும் பல்வேறு சட்டதிட்டங்கள், இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் தோல்விகளே இந்த உண்மையைப் பறைசாட்டுகின்றன. இந்த உண்மையை அரசே அங்கீகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) என்று பிரபலமாக அறியப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் (கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989.
இதற்கு முந்தைய பல்வேறு சட்டங்கள், தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் மீதான கிரிமினல்வன்கொடுமைக் குற்றங்களைத் தடுப்பதில்குறைப்பதில் தோல்வி கண்டுவிட்டதால், இன்னும் கறாரானதீவிரமான சட்டபூர்வ தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கென்று சொல்லிக் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம். ஆனால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, அமலாக்கப்பட்ட பிறகாவது தாழ்த்தப்பட்டபழங்குடி சாதி மக்களுக்கு எதிரான வன்öகாடுமைக் குற்றங்கள் அடியோடு நின்றுவிடவில்லை என்றாலும் குறைந்தாவது இருக்கிறதா?
இல்லை. அதற்கு மாறாக—சொல்லப்பட்ட நோக்கத்திற்கு மாறாக, இம்மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கு ஒரு குற்றம் வீதம் இழைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியக் குற்றப் பதிவேடுகளின் 2005ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டில் மட்டும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக 26,127 தாக்குதல் குற்றங்கள் நடந்துள்ளன. 2004ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக 26,887 குற்றங்கள் நடந்திருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
1,172 தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றங்கள் நடந்ததாகவும், 669 தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், 238 பேர் கடத்தி அடைக்கப்பட்டதாகவும், 3,847 தாழ்த்தப்பட்டவர்கள் காயப்படுத்தப்பட்டதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 291 வழக்குகள் சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் 8,497 வழக்குகள் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவரங்களோடு மிக முக்கியமான ஒரு உண்மை என்னவென்றால், இவையெல்லாம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்தாம், இதைத்தவிர பதிவு செய்ய முன்வராமலும், பதிவு செய்ய மறுத்தும் விடுபட்டுப் போனவை இன்னும் பல மடங்கு உள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் விசாரித்து, தண்டனை வழங்கப்பட்டவை மிகமிகக் குறைவானவையே. மொத்த வழக்குகளில் 94.1 சதவீதமானவற்றில் குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 29.8 சதவீதமானவற்றிலேயே தண்டனை வழங்கப்பட்டன. அதாவது 2005ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக மொத்தம் 57,804 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 46,936 பேர் மீது குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் முழுமையடைந்து 12,691 பேர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேசியக் குற்றப் பதிவுத் தலைமையக அறிக்கை கூறுகிறது.
தாழ்த்தப்பட்டபழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கிரிமினல் குற்றங்கள் அக்கிரமங்கள் என்பவை பல்வேறு விதமானவை, எண்ணிலடங்காதவை, பல சமயம் எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவு கொடூரமானவைவக்கிரங்கள் நிறைந்தவை. அவை அசிங்கமான ஆபாச சொற்களால் திட்டுவதில் தொடங்கி தாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலமாக பாலியல் வன்முறை செய்வது வரை நீள்கின்றன; மனித மலத்தைத் தின்ன வைப்பது, சிறுநீரைக் குடிக்க வைப்பது; உடலுறுப்புகளை வெட்டிச் சிதைப்பது; தாழ்த்தப்பட்ட பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்துவது; பொது இடத்தில் மேல்சாதியினர் பாலியல் வன்முறை செய்வது; அப்பெண்களின் சொந்த சகோதரர்களையும் மகன்களையும் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளச் செய்வது இவை போன்ற தாழ்த்தப்பட்டோரை உயிரோடு கொளுத்திக் கொல்வதைவிடக் கொடூரமான சித்திரவதைகள் தாழ்த்தப்பட்டபழங்குடிச் சாதிகள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகளே கிடையாது, வெறும் சமூகப் பழக்கவழக்கங்கள்தாம் என்று சொல்லிக் கொண்டு மேல்சாதியினர் கடைப்பிடிக்கும் தீண்டாமைக் கொடுமைகள் ஏராளமாக உள்ளன. குடிநீர், சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், சந்தைகள்கடைகள், கோவில்கள், பூங்காக்கள்விளையாட்டு மைதானங்கள், இடுகாடுகள் போன்ற பொது இடவசதிகளைப் பயன்படுத்துவதற்கான குடியுரிமைகள் மறுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட ஒருவர் மேல்துண்டு போட்டுக் கொள்வது, செருப்பு அணிந்து செல்வது, ஏன் நல்ல புது ஆடை அணிவது கூட அவர்மீது சாதீயத் தாக்குதலுக்குக் காரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட ஒரு இளைஞன் சாதி இந்துப் பெண்ணைக் காதலிப்பது, ஒரு பள்ளி விளையாட்டுப் போட்டியில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் வெற்றி பெறுவது, தாழ்த்தப்பட்ட ஒரு பேருந்து ஓட்டுநர் சாதி இந்து விரும்பும் இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் போவது, சாதி இந்துவின் முன்னிலையில் பேருந்தில் உட்கார்ந்து பயணம் செய்வது, சாதி இந்துவின் சாவுச் செய்தி சொல்லவும், பறையடிப்பது உட்பட சாவு வேலைகளைச் செய்ய மறுப்பதும் கூட குற்றமாக அறிவித்து தாக்கப்படுகிறார்கள்.
இவைதவிர தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் 15 குற்றங்கள் பட்டியலிடப்பட்டு அவை வன்கொடுமைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. கொலை, பாலியல் வன்முறை உட்பட நேரடி இந்தியத் தண்டனைச் சட்டங்களுக்குள் வராதவை, மறைமுகமானவை கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன.
1. உண்ணத் தகாத பொருளையோ, அருவருப்பான ஒன்றையோ குடிக்குமாறு அல்லது தின்னுமாறு தாழ்த்தப்பட்டபழங்குடியைச் சேர்ந்த ஒருவரைக் கட்டாயம் செய்வது;
2. அவரது வீட்டு வாசலிலோ, அண்டைப்புறத்திலோ மலசலம், கழிவுப் பொருள், விலங்குப் பிணங்கள் அல்லது வேறு அருவருப்பான பொருளைப் போட்டு அவருக்கு வேண்டுமென்றே தீங்கோ, அவமதிப்போ, எரிச்சலோ ஏற்படுத்துவது;
3. அவரது ஆடைகளை பலவந்தமாய் அவிழ்ப்பது அல்லது அவரை நிர்வாணப்படுத்தியோ, கரும்புள்ளி செம்புள்ளி குத்தியோ ஊர்வலம் விடுவது, மனித கண்ணியத்திற்கு இழுக்கான முறையில் இது போன்று வேறு ஏதேனும் செய்வது;
4. அவருக்குச் சொந்தமான நிலத்தையோ, அவருக்கு ஒதுக்கப்படும் தகுதி வாய்ந்த ஏதேனும் ஓர் அதிகார அமைப்பால் அறிவிப்புச் செய்யப்பட்ட நிலத்தையோ அடாவடித்தனமாய் கைப்பற்றுவது, அந்நிலத்தில் சாகுபடி செய்வது அல்லது அவருக்கு ஒதுக்கிய நிலத்தை வேறொருவருக்கு மாற்றம் செய்வது;
5. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அவரது நிலத்தையோ, வீடு வாசலையோ அடாவடித்தனமாய் பறிப்பது, அல்லது நிலம், வீடு, வாசல், நீர் இவற்றில் அவர் தமக்குள்ள உரிமைகளை அனுபவிப்பதில் குறுக்கிடுவது;
6. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவரைக் கட்டாயப்படுத்தியோ அல்லது மயக்கியோ "போகர்' எனப்படும் ஊதியமற்ற வேலையில் அல்லது பொது நோக்கங்களுக்காக அரசு விதிக்கும் கட்டாயச் சேவை அல்லாத இதேபோன்ற வேறு வகைக் கட்டாய உழைப்பு அல்லது கொத்தடிமை உழைப்பில் ஈடுபடுத்துவது;
7. வாக்களிக்காதிருக்கும் படியோ, குறிப்பிட்ட வேட்பாளருக்கே வாக்களிக்கும்படியோ, சட்டம் வகை செய்திராத முறையில் வாக்களிக்கும்படியோ தாழ்த்தப்பட்டபழங்குடிச் சாதியைச் சேர்ந்த ஒருவரை கட்டாயப்படுத்துவது அல்லது மிரட்டுவது;
8. அச்சாதிகளைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகப் பொய்யான கெடு நோக்கான அல்லது தொந்திரவு தரும்படியான உரிமையியல் வழக்கோ, குற்றவியல் வழக்கோ, வேறுவிதமான சட்டநடவடிக்கையோ தொடுப்பது;
9. அரசு ஊழியருக்குப் பொய்யான அல்லது அற்பமானவிளையாட்டுத்தனமான தகவல் கொடுத்து, அதனால் அந்த அரசு ஊழியர் தமது சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினர் ஒருவருக்கு தீங்கோ, எரிச்சலோ உண்டாகும்படி செய்வதற்கு காரணமாக அமைவது;
10. பொதுமக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியைச் சேர்ந்த ஒருவரை வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது கேவலப்படுத்தும் நோக்கத்தோடு மிரட்டுவது.
11. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவமதிக்கும் பொருட்டோ, மானபங்கம் செய்யும் பொருட்டோ தாக்குவது.
12. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தனது ஆளுகையில் வைத்திருக்கும்போது அவளைத் தமது பாலியல் விருப்பத்துக்குப் பணிய வைத்திட அந்த நிலையைப் பயன்படுத்துவது.
13. அம்மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஊற்று அல்லது நீர்நிலையை உரிய காரியத்துக்கு தகுதியற்றதாக்கும் நோக்கத்துடன் கேடு விளைவிப்பது அல்லது அசுத்தப்படுத்துவது.
14. அம்மக்களின் பொதுப் பயன்பாட்டுக்குரிய ஓர் இடத்துக்குச் செல்வதற்குள்ள வழக்கமான உரிமையை மறுப்பது அல்லது மற்ற சாதிசமூகத்தினரும் பயன்படுத்தும் ஓர் பொது இடத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களும் பயன்படுத்தும் உரிமையை மறுப்பது.
15. அம்மக்களைச் சேர்ந்த ஒருவரைத் தமது வீடு, ஊர் அல்லது வேறு வகை வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி நிர்பந்திப்பது அல்லது அப்படி வெளியேற்றுவது
— ஆகிய பதினைந்து வகை செய்கைகளையும் வன்கொடுமைகள் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 வரையறுத்துள்ளது. அச்சட்டத்தின்படி இவ்விதமான வன்கொடுமைகள் புரிபவர்கள் வழக்கமான இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவதோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆறுமாதத்துக்குக் குறையாத, ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
தாழ்த்தப்பட்டபழங்குடி இனமக்களுக்கு இழைக்கப்படும் சாதீய சமூகக் கொடுமைகளைஅக்கிரமங்களை நுட்பமாகவும் அனுபவபூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வரையறுக்கப்பட்டதைப் போன்று இச்சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
இவைதவிர, தாழ்த்தப்பட்டபழங்குடியின மக்களின் உயிருக்கும், உடமைக்கும், வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்படுவது, பொய்வழக்குபொய்சாட்சி மூலம் அவர்கள் தண்டனை பெறும்படி செய்வது போன்றவை வன்கொடுமைகளாகக் கருதி தண்டிக்கப்படுவது, குற்றவாளிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது, குற்றவாளிகளை ""நாடு'' கடத்துவது, நடமாட்டத்துக்குத் தடைவிதிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது போன்றவையும் நுட்பமாக ஆய்வு செய்து இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எவ்வாறு அமலாக்குவது; அதை அமலாக்குவதில் ஏற்படும் தவறுகளுக்குக் கூட தண்டனை என்ற ரீதியில் விவரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை அமலாக்குவதற்கான அதிகார அமைப்புகள், அதற்கென தனிசிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது என்று கூடுதலான அக்கறையும் செலுத்தப்பட்டிருக்கிறது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 18 ஆண்டுகளாகிறது. ஆனால், இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எந்த அளவு அமலாக்கப்பட்டிருக்கிறது? அது ஏற்படுத்தியுள்ள விளைவுகள் என்ன? — என்று தொகுத்துப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது!
தொடரும்
தமிழ் அரங்கம்
Saturday, July 14, 2007
Friday, July 13, 2007
ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுவன் யார்?

பி.இரயாகரன்
13.07.2007
மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான்;. மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்வர்கள். இவர்கள் தான்
1.ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.
2.மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும் இழிதனத்தைக் கொண்டவாகள்.
3.சாதியை பிறப்பில் வைத்தே சூதாடும் பார்ப்பனியத்துக்கு பாய் விரிபவர்கள்.
4.நிறம் குறித்த ஓடுக்குமுறையை செய்யும் ஓட்டுண்ணிகள்.
5.விபாச்சாரியின் குழந்தையை பிறப்பு சார்ந்த விபச்சாரம் செய்ய துண்டும் பொறுக்கிகளின் அற்பத்தனத்தை செப்பவர்கள்.
இப்படி அநேக ஒடுக்குமுறையை பிறப்பு அடையாளப்படுத்தி, செழிப்பவர்கள் இவர்கள். மக்களின் அப்பட்டமான விரோதிகள் இவர்கள்.
இப்படி மக்களை பிளந்து, அவர்களை குழிதோண்டி புதைக்க வெளிக்கிட்டும் கும்பல் சோந்தவர்கள். ஒரு விவாவதத்தில் அப்படி இப்படியுமாக புணர்ந்து, அவர்களே அறியாது பாசிசத்தை புலம்புபவர்கள்;. இப்படி பிறப்பு குறித்து ம.க.இ.க. வை தமது சொந்த முகந்தரத்துடன் புணர முனைகின்றனர். இப்படிக் காட்டுகின்ற பாசிச வன்மம் என்னென்றால், அவர்களின் போராட்டத்தை கண்ட அஞ்சும், மக்களை ஓடுக்கின்ற வர்க்க பிரதிநிதிகளின் நடத்தையாக வெளிப்படுகின்றது.
இவர்கள் ம.க.இ.க வின் கொள்கையை விவாதிக்க முடியாதவர்கள். அதில் உள்ள தனிநபர்களின் பிறப்பு குறித்து புலம்புகின்றனர். இதுவும் ஒரு அரசியலோ.
பாட்டாளி வர்க்க பிரதிதிகள், மனித இனத்தில் எந்த பாகுபாடு காட்டுவதில்லை.
1.ஆண்பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
2.சாதி பாகுபாடு பார்ப்பதில்லை.
3.நிறப் பாகுபாடு பார்ப்பதில்லை.
4.இனப் பாகுபாடு பார்பதில்லை.
5.மதப் பகுபாடு பார்ப்பதில்லை.
இப்படி எந்தப் பகுபாடும் மனிதர்களுக்கு இடையில் பாப்பதில்லை. இதனால் தான் இது சர்வதேசியமாக இருக்கின்றது. உலகெங்கும் அதனிடம் ஒருமித்த நிலைப்பாடு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த கொள்கையுடன், மனிதர்களை அனுகுகின்றது. அது பிறப்பில் பார்பானையும், பிறப்பில் முதலாளியையும், பிறப்பில் சக்கிலியனையும், பிறப்பில் பெண்ணையும், பிறப்பில் எதுவாக இருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் வேறுபாடு காட்டுவதில்லை. அது கொள்கை ரீதியாக மட்டும் தன்னை ஒழுங்கமைக்கின்றது. அதாவது மனித் தன்மையை மட்டும் அளவுகோலாக கொள்கின்றது. வேறுபாடு காட்டாத மனிதத் தன்மையை மட்டும் அது கோருகின்றது. வேறுபாடு காட்டும் அனைத்து ஒடுக்குமுறையை அது எதிர்க்கின்றது. நீ யார்? நான் யார் என்று பிறப்பில் அது பிரிவனை காட்டுவது கிடையாது.
இதற்கு மாறாக உண்மையில் பிறப்பு குறித்து அனுகுகின்ற கோட்பாடு பார்ப்பனியமாக இருக்கின்றது. அதாவது சாதியக் கோட்பாடாக உள்ள்து. ம.க.இ.க வில் உள்ள நபரின் பிறப்பு குறித்து ஆராய்வதே கடைந்தெத்த பார்பனியம் தான். அதை காவடியாக துக்கும் மனித விரோதிகளையே இது அம்பலமாக்கின்றது.
இப்படி பிறப்பில் இருந்த ஆராய்கின்ற மனிதம் எப்படிப்பட்டது என்றால், உள்ளடக்க ரீதியாக பாசிசமே. ஜெர்மனிய நாசிகள் பிறப்பு குறித்த ஆரியக் கோட்பாடு, யூதர்களின் பிறப்பு குறித்த அடையாளம் உடாகவே கொன்றது. இந்தியாவில் அதுவே பார்ப்பனியமாகி சாதியமாக உள்ளது. இதை துக்கும் தமிழினவாதிகள் பிறப்பில் இருந்து காண்பது மனித விரோதமேயன்றி அது வேறு எதுவுமல்ல. இதுவே இலங்கையில் புலிப் பாசிச படுகொலையாக நடக்கின்றது. மனித தன்மையற்ற கண்ணோட்டம் இதன் மூலவேராக உள்ளது.

ம.க.இ.கவின் நிலைப்பாடு என்பது சர்வாதேசியமே

பி;இரயாகரன்
13.07.2007
சர்வதேசியம் உலகளவிலானது. உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும்;. அவர்களின் விடுதலைப் போராட்டங்களை மட்டும் ஆதாரிக்கும். பிற்போக்கனதும், மக்களுக்கு எதிரான எதையும் ஆதாரிக்காது. இரண்டு முரண்பட்ட பிரிவில் ஒன்றை சார்ந்து நிற்க வேண்டிய அவசியம், கட்டாயம் அந்த வர்க்கத்துக்கு கிடையாது. அது தனக்கு என்ற சொந்த அரசியல் நிலைப்பாட்டை கொண்டது. இரண்டு மோதுகின்ற பிரிவுகள் பிற்போக்கான கூறாக இருந்தால், இரண்டையும் எதிர்க்கும். மாறாக மக்களைச் சார்ந்து நிற்கும். தேர்தலில் வாக்கு போடுவது போல் ஒன்றை தேர்வது கிடையாது.
ஆம் இல்லையென்று நீதிமன்ற மொழியில் பதிலிளிப்பதில்லை. அதாவது சமூக விளைவுகளை கருத்தில்கொள்ளாது, நீதிமன்ற தீர்ப்பு போல், மலட்டுத் தீர்ப்பு வழங்குவதில்லை. ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நலன்கள் தான், அந்த ஒடுக்கப்பட்ட அமைபினதும் நிலைப்பாடாகின்றது.
தமிழ்மணத்தில் தேசிய அரசியல் புரளி கிளப்பி நிற்பவர்கள், வழமைபோல் புலிகள் என்று அதற்குள் தமது புரட்சியை பற்றி சாவடல் அடிக்கின்றனார். அவர்கள் நீதிமன்ற மொழியில் பதில் கேட்கின்றனர்.
''1. தனி தமிழீழம் உருவாதை ஆதரிக்கின்றீர்களா? - ஆம், இல்லை என்று ஏதாவது ஒரு பதில், ஆம் என்றால் அடுத்த கேள்விக்கு போகவே வேண்டாம், இல்லை என்றால் அடுத்த கேள்விக்கு போங்கள்
2.இலங்கையின் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன? தமிழர்கள் கொல்லப்படுவதை எப்படி தடுப்பது? தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் எப்படி சிங்கள பேரினவாத அடக்கு முறையிலிருந்து உயிர் பிழைப்பது?" என்கினார். ஆகவே புலிகளை ஆதாரியுங்கள் என்கின்றனர். இது தான் இந்த புரட்சி பேசும், புரளிகளின் நிலைப்பாடு.
இதற்கு நாம் பதில் அளிக்க முன், தேசிய புரட்சி பேசும் நீங்கள் வசதியாக வசதி கருதி மறந்த விடையத்துக்கு பதிலளியுங்கள். கஸ்மீர் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? பஞ்சாப் முன்னைய போராட்டம், அசாம் போராட்டம் பற்றி நிலைபாடு என்ன? ஆதாரிக்கின்றிர்களா எதிர்கின்றீர்களா? இதே இலங்கை நிபந்தனை தான் அங்கேயும் இருந்தது, இருக்கின்றது. சிங்கள இராணுவம் போல், இந்தியா இராணுவம் அந்த மக்களைக் கொல்கின்றது.
பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு எப்படி கஸ்மீரைப் பார்க்கின்றதோ, அப்படித்தான் தமிமீழத்தையும் பார்க்கின்றது.
தமிழீழத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற கேள்வி, பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் விடை தெளிவானது. ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் அதன் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் ஆதரிப்பதும், அல்லாதபோது அதை எதிர்ப்பது என்பதே, பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கடமை. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, அதை நோக்கி திசையில் கருத்துரைப்பதே பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய நிலைப்பாடாகும்.
இதற்கு அப்பால் குறித்த நிலையில் அது சாத்தியமா இல்லையா என்பது இரண்டாவது விடையமாக உள்ளது. பாட்டாளி வர்க்கம் தரகு முதலாளிகளின் தலைமையிலான போராட்டத்தை ஆம் என்று சொல்லி ஆதரிப்பதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்தை மட்டும் தான் ஆதாரிக்கும். இல்லாதபோது அதற்காக, அது போராடும்.
ஆம் என்று கூறக் கோருவதே பாசிசம்;. இதை தான் புலி கூறுகின்றது. அனைவரும் தமது நிலைக்கு கீழ் வரக்கோருகின்றது, இல்லாத போது கொல்லுகின்றது. இதே பாசிசத்தைத் தான், இந்த தேசிய புரளிப் பேர்வழிகள், சுற்றி வளைத்து சர்வதேச இயக்கங்கள் மீது முன்வைக்கினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய நலனைக் கூட முன்னெடுக்காத யாரையும் நாம் ஆதரிப்பதில்லை. புலிகள் தமிழ் மக்களின், ஒடுக்கப்பட்ட நலனை பிரதிபலிப்பதில்லை. பேரினவாத தமிழ் தேசத்தின் சமூக பொருளாதார கூறை நசுக்குகின்றது. அதைப் புலிகள் எதிர்ப்பதில்லை. மாறாக புலிகள் சேர்ந்தே ஒடுக்குகின்றது.
சிங்களப் பேரினவாதம் எதை தமிழ் மக்களுக்கு மறுக்கின்றது என்ற கேள்வியை புலித் தமிழ் தேசியம் எழுப்புவதில்லை. புலிகள் தமது குறுகிய யாழ் மேலாதிக்கம் தனது சொந்த நலனை முன்வைக்கின்றது.
புலிகள் தரகு முதலாளிய எகாதிபத்திய நலனைப் பேனிக்கொள்ள, பாசிச மாபியக் கும்பலாகிவிட்டது. அதை மக்களின் விடுதலை முன்வைக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலை என்ன என்பதை புலிபாசிட்டுகள் போல், புரளி;ப் பேர்வளிகள் பேச மறுக்கின்றனர்.
தமிழ் மக்களின் ஒடுக்கு முறைக்குள்ளாக்கும் பேரினவாத அரசும் சரி, யாழ் மேலாதிக்க புலிப் பாசிசமும் சரி, தமிழ் மக்களுக்கு எதிரானது.
இந்த பேரினவாத அரசினதும், புலி இயக்கத்தின் மக்கள் விரோத ஒடுக்குமுறை எதிhப்பதே பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமை. இதற்கு மாறாக தமிழ் மக்கள் தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடும் அனைத்து முயற்சிகளையும், சர்வதேசியம் ஆதகரிக்கும். அது தனித் தமிழீழமாக இருந்தாலும் சரி, ஒன்றினைந்த புரட்சியாக இருந்தாலும் சரி. இதை அந்த மக்கள் தான், எந்த வழியில் என்று தீர்மானிக்க முடியும்.
மக்கள் தாம் தமது விடுதலைகாகான வழியில் தமிழீத்துக்காக போராடினால் அதை ஆதாரிக்கும். இல்லை என்றால், மக்களுக்கு எந்த விடுதலை கிடையாது என்றால், அதை எதிர்க்கும்;. மக்களின் அதிகாரம் தான் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு.
இன்று அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் குரல்கள் இல்லை என்பதும், அதைப் புலிப் பாசிட்டுகள் கொன்று அழித்து வருகின்றனர். ஏன் என்றால் அந்த மக்களின்; விடுதலைக்கான குரல்களை, அதற்காக போராடுவதால் தான்; கொல்லப்படுகின்றனார். ஒடுக்கப்பட்ட மக்களின் சிறு குரலைக் கூட கேட்க கூடாது என்ற, புலிப் பாசிசத்தின் நிலையை நாம் ஆதாரிப்பதில்லை. அது வைக்கும் தனது பாசிச தமழீழத்தை ஆதாரிப்பதில்லை.
சிங்கள பேரினவாத அரசு கொன்று போடும் தமிழ்; மக்களுக்கு தீர்வு என்ன? நல்ல கேள்வி. தமிழ் மக்களை அரச மட்டுமல்ல, புலியும் தான் கொல்லுகின்றது. இந்த ஒநாய்களை ஆதாரித்த வளர்ப்பதல்ல. தமிழ் மக்கள் தமது விடுதலைகாகவும், தம்மைப் பாதுகாக்கவும் புலியை எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டும் தான், சிங்கள் பேரினவாதிகளிமிருந்து தம்மை பாதுகாக்க முடியும். தமிழ் மக்கள பேரினவாதம் கொல்வது என்பது, புலிகள் இருப்புகான புலிகளின் அரசியல் உத்தியாகவும்; உள்ளது. பேரினவாதம் தமிழ் மக்களைக் கொன்றால் தான், புலிகளின் இருப்ப சாத்தியமானது. தமழ் மக்களை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக கொல்லப்படுகின்றனரோ, அதை புலிகள் விரும்பவதே அவாகளின் அரசியல்.
இந்த வகையிலும், இதுவல்லாத வகையிலும் புலிகளே தமிழ் மக்களை கொன்று போடுகின்றனர். மக்களின் எந்த சுய செயல்பாட்டையும் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழ் மக்கள், தாம் போராடாமல் தமது விடுதலையை அடையமுடியாது. தம் மீதான அரசு மற்றும் புலிப் படுகொலையை தடுத்து நிறுத்தமுடியாது. இந்த நிலைப்பாடு தான் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும்;. அதை மட்டும் தான் ஆதாரிக்கும்.

Thursday, July 12, 2007
மக்கள் தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல.

பி.இரயாகரன்18.02.2007
இந்த உண்மை புலியெதிர்ப்பு கும்பலுக்கு கசப்பான ஒன்று. இதனால் மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்று காட்டுவதே புலியெதிர்ப்பு எடுபிடி பேர்வழிகளின் சுத்துமாத்து அரசியலாகும். இந்த மோசடியை உண்மையானதாக காட்ட மக்களையும் கருணா கும்பலையும் ஒன்றாக காட்டுவதே இவர்களின் அரசியலாகும். அதை அவர்கள் 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும் அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்.." என்றவாறாக தமது பலியெதிர்ப்பு அரசியல் நிலைக்கு ஏற்ப கயிறு திரிப்பதே இவர்களின் அரசியல் சாரமாகும் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல என்பதை எப்படி புலிகளும் அதன் பினாமி எழுத்தாளர்களும் மறுக்க முனைகின்றனரோ அதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்ய முனைகின்றது.
இந்த வகையில் தேனீ இணையத்தில் எஸ்.மனோரஞ்சன் என்ற புலியெதிர்ப்பு பினாமி எழுதிய 'கருணா அம்மான் உடைத்ததால் மட்டும் அது மண்குடம் ஆகிவிடுமா என்ன? மக்களை நேசிக்கும் அரசியலும், ஆயுதமுமே புலிகளை தோற்கடிக்கும்!" என்ற கட்டுரை அதையே தான் செய்ய முனைகின்றது. கருணா கும்பல் மேல் கட்டிய ஓளிவட்டம் அனைத்தும் நிர்வாணமாகின்ற ஒரு நிலையில் தம்மையும் தமது மக்கள் விரோத பாசிச அரசியலையும் நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு மூடிமறைத்த பாசிச புலம்பலைத் தான் இக்கட்டுரை மூலம் செய்ய முனைகின்றது. புலிகளை விட எந்தவிதத்திலும் கருணா கும்பல் மக்களுக்கான ஒரு நடத்தையை கொண்டிருக்கப் போவதில்லை. இந்த உண்மையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW) சொல்லித் தெரிய வேண்டிய அவலம் ஒருபுறம். இதற்கு வெளியில் சொந்தமாக எந்த அரசியல் சரக்கும் கிடையாது. மறுபுறத்தில் மக்கள் விரோத இந்த அரசியல் மோசடிகள் மூடிமறைப்புகள் அம்பலமாகும் போது, விழுந்துகட்டி அதை விமர்சிப்பதாக ஆடிப்பாடிக் கொண்டே பாதுகாப்பது மற்றொரு சதியாகும்.
புலியெதிர்ப்பில் முகிழ்ந்து அதுவாகவே அனைத்தையும் சிந்தித்து, கருணா கும்பலின் நாய்களாக குலைத்தவர்கள், மீண்டும் வாலாட்டுவதைத் தான் இந்தக் கட்டுரை மீண்டும் செய்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு HRW) அறிக்கையை, தேனீ தவிர்ந்த மற்றைய புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்கள் பிரசுரிக்கவில்லை. இது முன்னைய காலத்திற்கும் முரணானது.
புலிக்கு எதிரான அனைத்தையும் வாந்தியெடுக்கும் இந்த புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்கள், இதை திட்டமிட்ட வகையில் இம்முறை தமிழ் மக்களுக்கு இருட்டடிப்பு செய்தனர். நாங்கள் புலிகள் வழியில் தான் செயல்படுவர்கள் என்பதையே இப்படியும் நிறுவினர். இந்த நிலையில் மூடிமறைக்கப்பட்ட கட்டுரையைக் கொண்டு, எஸ்.மனோரஞ்சன் கட்டுரை மயில் இறகு கொண்டு கருணாவை தடவி ஆசீர்வதிக்க முனைகின்றது. அந்த விசுவாசத்துடன் தான் 'கருணா அம்மான்" என்று அவருக்கு 'மேதகு" மரியாதை கொடுத்து புலம்புகின்றது.
ஒரு பாசிட்டு, கடைந்தெடுத்த ஒரு சமூக விரோதப் பொறுக்கி, இவருக்கு புலிகள் வழங்கிய முன்னைய 'அம்மான்" மதிப்பூடாகவே கூடி வக்கரிக்கின்றனர். இந்த கருணா என்ற பாசிட்டு, பேரினவாதிகளின் கூலிக் கும்பல், 'ஜனநாயக" சக்தியுடன் இணைத்துக்கொள்ள அழைக்கின்றனர். இவர்களின் 'ஜனநாயகம்" எப்படிப்பட்டது என்பது இதில் இருந்தே தெரிகின்றது. இந்த புலியெதிர்ப்பு தேனீக் கும்பல் 'ஜனநாயக" சக்தியுடன் இணைத்துக்கொள்ள வழங்கும் ஆலோசனை என்ன?
'ஆகவே கருணா இன்று கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சில உடனடிப் பிரச்சினைகள் இருக்கின்றன.
1.முதலாவது, சிறார்களை பலவந்தமாகப் பிடிப்பதை உடனடியாக நிறுத்துவது.
2.இரண்டாவது, கட்சிக்கு (பாசிச நடவடிக்கைக்கு இது நாம்) பணம் தேவை என்பதற்காக தமிழர்களைக் கடத்தி பணம் பறிப்பதை நிறுத்துவது.
3.மூன்றாவது, ரி.ஆர்.ஓ (வுசுழு) நபர்களைக் கடத்திய சம்பவத்தில் (இதைக் கருணா குழு செய்திருந்தால்) பிரதானமாக நடந்ததாக கூறப்படும் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் பற்றிய விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது." என்கின்றார். 'ஜனநாயக சக்திகளின் விமர்சனங்களை உள்வாங்குவது கருணா அணியினருக்கு நிட்சயம் பலம் சேர்ககும்" என்கின்றார்.
என்ன அரசியல்! இதை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். இதுவே இவர்களின் புலுடா. இது அம்பலமாவதை பின் போட்டு கணிசமாக குறைக்குமே ஓழிய, மக்கள் இயக்கமாகி விடாது. நன்கு தெரிந்த இந்த சம்பவங்கள், ஒரு அரசியலின் விளைவு. ஒரு பாசிச அரசியல் வழிமுறையில், இவை போன்றன உதிரியான சில்லறை விடையங்கள். ஏகாதிபத்தியத்துக்கும் அதன் எடுபிடிகளுக்கும் இவை பெரிய விடையங்கள். இதை நிறுத்துவதாக நடிப்பது, மோசடி செய்வது அனைத்தும் கடைந்தெடுத்த பாசிச வழிகாட்டலாகும்.
புலிகள் கூட இதே வழியை அடிக்கடி கையாண்டவர்கள். பேச்சுவார்த்தை, சிறுவர் விடுவிப்பு என்று பற்பல அரசியல் மோசடியைச் செய்தவர்கள். இவ்வாறே கருணாவையும் செய்யக் கோரும் ஆலோசனைகள் இவை. இவர்கள் கவனமாக திடட்மிட்டு தவிர்த்துக் கொள்வது, அவர்கள் கொண்டுள்ள பாசிச அரசியலை கேள்விக்குள்ளாக்குவதைத் தான். அதாவது மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியலுக்கு மாற்றான, மக்கள் விரோத அரசியலை ஆணையில் வைப்பதை இவர்கள் மறுப்பதில்லை. அது தான் இவர்களை ஒரு புள்ளியில் ஒன்றுபடுத்துகின்றது.
இந்த புலியெதிர்ப்பு எஸ்.மனோரஞ்சன் வகையறாக்கள், ஜனநாயகத்தின் பெயரில் பாலில் நஞ்சைக் கலந்து குழந்தைக்கு கொடுக்கும் இழிபிறவிகளாகவே ஒன்றுபட்டு நிற்கின்றனர். 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்." எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் என்பதையே இப்படி தெளிவுபடுத்துகின்றனர். இந்த கட்டுரையின் மொத்த சாரமும், இதற்குள் தான் புற்றெடுக்கின்றது.
கருணாவின் கையில் இருக்கும் ஆயுதம் தான் புலிகளின் அரசியலை தோற்கடிக்கும் என்பது கடைந்தெடுத்த கருணா கும்பலின் மோசடியுடன் கூடிய எடுபிடித்தனமாகும். புலிகளை மக்கள் எப்போதோ தோற்கடித்துவிட்டனர். அதில் கருணா கும்பலும், உங்களைப் போன்ற அரசியல் பினாமி பொறுக்கிகளும் சவாரி விடுகின்றனர்.
மக்கள் தான் புலியைத் தோற்கடித்தனரே ஒழிய, கருணா என்ற மற்றொரு பாசிட்டல்ல. கருணா என்ற பாசிட் புலிகளுடன் தொடர்ந்து இருந்து இருந்தாலும், புலியின் தோல்வி எப்போதோ நிகழ்ந்துவிட்டது. மக்கள் தான் அவர்களை தோற்கடித்தவர்கள். இந்த கருணா கிழக்கு மக்களின் நண்பன் அல்ல. புலியைப் போல், ஒரு மக்கள் விரோதி. கிழக்கு மக்களின் முதல் தரமான எதிரி. பேரினவாதத்துடன் சேர்ந்தியங்கும் ஒரு கூலிக் கும்பல். பேரினவாதத்தின் துணையில் ஒரு கூலிக் கும்பலாக அரசியல் செய்பவர். இப்படிப்பட்டவரை 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்," என்று கூறி, காதுக்கே துணிந்து பூவைக்கும் ஒரு மோசடி. இப்படி புலியெதிர்ப்பு சூழ்ச்சிகளால் சமூகத்தை காயடித்து மலடாக்குகின்றனர். இதை எந்த மக்கள் நலன் சார்ந்த ஒருவனாலும் செய்யமுடியாது.
சரி கருணா எடுபிடிகளே! எந்த வகையில்? எப்படி? மக்களை இந்த கருணா கும்பலை நேசிக்கின்றது.? உங்களால் அதை ஒருநாளும் எடுத்துக் காட்டமுடியாது. சரி மக்கள் கருணா கும்பலை எந்தக் காரணத்தில் எப்படி நேசிக்கின்றனர். எடுத்துக்காட்டுங்கள். அது உங்களால் ஒருநாளும் முடியாது. பேரினவாதத்தின் கூலிப்படையால், பாசிட்டுகளால் எப்படித் தான் மக்களை நேசிக்க முடியும்? மக்களை நேசிப்பதற்கு, இந்தக் கும்பல் கொண்டுள்ள அந்த மக்கள் அரசியலில் என்னதான் இருக்கின்றது?
சரி 'கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்கவல்லது." என்கின்றீர்களே, புலி அரசியலில் இருந்து கருணாவின் அரசியல் எந்த வகையில் வேறுபட்டது. ஒரு புள்ளியில் கூட வேறுபாட்டைக் காட்டமுடியாது. மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியாத இந்த கும்பலும், இதற்கு எடுபிடி வேலை செய்யும் உங்கள் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமானவை. உங்கள் 'ஜனநாயகம்" என்ன என்பதற்கு, விளக்கம் தரமுடியாத ஓட்டைச் சிரட்டைகள் தான். இது கருணா போன்ற பாசிசக் குண்டர்களின் பின்னால் நின்று, அதை வடிகட்டி தேடுவதும், விளக்குவதுமே உங்கள் 'ஜனநாயகம்". மக்கள் கருணாவின் பின் நிற்பதாக காண்பதுவும், கருணாவின் ஆயுதம் தான் புலிகளை தோற்கடித்தது, தோற்கடிக்கும் என்ற கூறுவதும் கடைந்தெடுத்த பாசிசமாகும். புலிகள் எல்லாவற்றையும் ஆயுதம் ஊடாக காண்பது போல், இந்த புலியெதிர்ப்பு எல்லாம் கருணாவின் ஆயுதம் மூலம் விளக்குவது நிகழ்கின்றது. மக்களே புலிகளை தோற்கடித்தனர் என்ற அரசியல் உண்மையை மறுப்பது இதன் சாரமாகும். மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர் என்ற அரசியல், கருணாவை நேரடியாகவே தூக்கியெறியும்.
இதை காணாது இழிந்து போன இந்தக் கூலிக் கும்பலால், நாய் வாலுக்கு மட்டை வைத்துக் கட்டி அதை ஒருநாளும் நிமிர்த்தமுடியாது. சுற்றிவளைத்து நிமிர்த்துவதாக குலைப்பதே இந்த புலியெதிர்ப்பு அரசியலின் பினாமித்தனமாகும். இந்த பாசிட்டுகள் புலியின் வாலாக, அதன் கோவணமாக இருப்பதுடன், எந்த விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் செய்தது கிடையாது. கருணா என்ற தனிமனிதன் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது சொந்த தனிப்பட்ட முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு புலிகளைப் பிளந்தவர். அதை மூடிமறைக்க பிரதேச ரீதியான முரண்பாட்டை காட்டிப் பிழைக்கும் ஒரு பொறுக்கி. இந்த பொறுக்கி அரசியலைக் கொண்டு, எதையும் மக்களுக்காக செய்யப் போவதில்லை.
முதலில் ஒரு பாசிச இயக்கத்தில் இருந்து உடைந்து வெளிவருபவர்கள் செய்து இருக்க வேணடியது என்ன?
1. கடந்த காலத்தை விமர்சன ரீதியாக அணுகுவது. அதாவது நாங்கள் என்ன செய்தோம்? அவை எப்படி மக்களுக்கு எதிராக இருந்தது? இதை நாங்கள் எப்படி களைய வேண்டும்? இவைகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்யவேண்டும் சாராம்சத்தில் இது விமர்சனம் சுயவிமர்சனம் கூட. இதை இந்தக் கும்பல் செய்தது கிடையாது. மாறாக அதை நியாயப்படுத்தி, அதே வழியில் தொடருகின்றது.
2. மக்கள் என்றால் என்ன? அதை நாங்கள் முன்னர் எப்படி பார்த்தோம், இப்போது எப்படி பார்க்கின்றோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
3. மக்களை நாங்கள் எப்படி அணுக வேண்டும்? எந்த வகையில் இணைந்து நிற்க வேண்டும்? இவைகளை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
4. மக்களுக்கான அரசியல் என்ன? மக்களின் பிரச்சனையாக எவற்றை இனம் காண்கின்றோம்? அதை எப்படி நாம் நடைமுறைப்படுத்த உள்ளோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக முன்னைய அரசியலில் இருந்து எப்படி வேறுபடுகின்றோம் என்பதை, தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
5. மக்களின் எதிரிகள் யார் யார்? அவர்களே எமது எதிரி என்று கூறியிருக்க வேண்டும்
6. மக்களின் எதிரி புலிகள் மட்டுமல்ல. பேரினவாத அரசு என்பதை பிரகடனம் செய்து இருக்க வேண்டும். அந்தவகையில் எதிரிக்கு எதிராக மக்களுடன் இணைந்து நிற்கவேண்டும். இப்படி மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை, நடைமுறையை வெளிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இதைவிடுத்து புலிகளைப் போல் பாசிச சதிகார சூழச்சிகர அரசியல் எடுபிடிகளாக வாழ்வதே, கருணா கும்பலின் அரசியலாகிவிட்டது.
இப்படி மக்கள் விரோத பாசிச அரசியலை ஆணையில் வைத்து குலைக்கும் யாழ் மேலாதிக்க கிழக்கு கோவணம் நாற்றத்தால் நாறுகின்றது. தேனீ கட்டுரையாளர் செய்த அரசியல் மோசடி, இந்த கிழக்கு கோவணத்தை கழுவிக்கொடுப்பது தான். உண்மையில் கருணா கும்பலை பாதுகாக்க முனையும் ஒரு சூழ்ச்சி தான் இந்தக்கட்டுரை. அந்த வகையில்
1. கருணா கும்பல் பேரினவாத இராணுவத்துடன் சேர்ந்து ஒரு கூலிக் கும்பலாக இயங்குவதை விமர்சிக்கவில்லை.
2. அந்த கூலி பாசிசக் குண்டர்களின் மக்கள் விரோத அரசியலைக் கண்டிக்கவில்லை.
3. மக்களின் சமூக பொருளாதார அரசியலின எதிரியான கருணா கும்பலின், அரசியல் தளத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை.
4 .கருணா மற்றும் புலிகளுக்கு இடையில் எந்த வேறுபாடுமற்ற அரசியலை கண்டிப்பதில்லை
இப்படி ஒரு மூடு மந்திரத்தை கொண்டுதான், கருணா கும்பலை பின்பக்கத்தால் பாதுகாக்க முனைகின்றனர்.
கருணா என்ற தனிமனித விருப்பங்கள் அல்ல, கருணா கும்பலின் நடத்தைகள். அது, அது கொண்டுள்ள அரசியலின் விளைவாகும். கருணா குழுவுக்கு எஸ்.மனோரஞ்சன் விடுக்கும் அதே வேண்டுகோள், புலிக்கும் பொருந்திவிடுமல்லவா! எப்படி புலிக்குள் வைத்து கருணா நடத்தைகளை நியாயப்படுத்த முடியுமோ, அதேபோன்று புலிகளை பேரினவாத தளத்தில் வைத்து நியாயப்படுத்த முடியும். வெளிப்படையான இந்த உண்மையை, ஒரு தலைப்பட்சமாக கருணாவுக்கு மட்டும் சாதகமாக முன்வைப்பது, அவர்களின் அரசியல் நேர்மையை சந்திக்கு இழுக்கின்றது.
இந்த புலியெதிர்ப்பு தேனீயில் எஸ்.மனோரஞ்சன் புலுடா விடுவது, பின் சுயபுராணமாக ஒப்பாரி வைப்பதமாக புலம்புகின்றார். 'புலி எதிர்ப்புவாதமும் ஒரு பிழைப்பு வாதம் என்று ஒரு குற்றச்சாட்டுண்டு. அக்குற்றச்சாட்டு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பதும் எமக்குத் தெரியும். புலிகள் தவறு, ஆகவே மற்றெல்லாம் சரி, என நாம் வாதிடுவதும் அவற்றை நியாயப்படுத்தவதும் ஒரு காரணம். புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்கள் எமது அரசியலில் மக்களின் நலனை மறந்து போய் நாங்களும் இன்னொரு விதத்தில் ‘குட்டிப் புலி’ அரசியலையே செய்ய முனைவது அடுத்த காரணம்." இப்படிக் கூறியபடி "குட்டிப் புலி" அரசியலையே இந்த கட்டுரையிலும் செய்கின்றனர். இதை விட வேறு என்ன தான், உங்கள் கும்பலிடம் மாற்றாக அரசியல் ரீதியாக உண்டு. இதைத்தான் சுற்றி வளைத்து, இந்தக் கட்டுரையிலும் முன்வைக்கபட்டுள்ளது. இதைத் தானே கருணா கும்பலுக்குமான ஆலோசனையாக வைக்கின்றீர்கள்.
உண்மையில் கருணாவின் அரசியலுக்கு ஏற்ற மூடிதான் நீங்கள்.
அற்பர்களின், அற்பத்தனங்கள் தான் இவை. கேடுகெட்ட மனித விரோதத்தின் முழு முகங்களும் வெளிப்படுகின்றது. இப்படி பாய் விரிப்பதால் தான், உங்கள் விபச்சாரமே அடங்கிக்கிடக்கின்றது. இப்படி பாயை விரித்துவிட்டு, ஏறி அமர்ந்து விபச்சாரம் செய்யும் போது 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்." என்கின்றனர்.
அதே புலியெதிர்ப்பு, அதே சவடால், சொந்தமாக மக்களுக்காக எதையும் சிந்திக்க முடியாத மலட்டுத்தனம், விபச்சாரமாக ஒப்புப்பாடுகின்றது. முன்னுக்கு பின் முரணாக உளறுவதன் மூலம், ஏதோ கருணாவை விமர்சித்ததாக காட்டிக் கொண்டு, கருணாவின் வாலில் பிடித்து ஊருகின்றனர்.
ஏதோ தாங்கள் நேர்மையாக இருப்பதாக நடிக்கின்றனர். 'சில கேள்விகளும் எம் நோக்கி எழுப்பப்படுகிறது. கருணா எதற்காக அரசியல் செய்கிறார்? அவரது கட்சியின் எதிர்காலம் என்ன? நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்? இன்று ஏன் கட்டாயம் அதை ஆதரிக்க வேண்டும்? இவை சில முக்கிய கேள்விகளாகும்." என்கின்றா. இப்படி முக்கிமுனங்கிய விடையம், ஐயோ புலி என்று பாடுவதைத் தாண்டியதல்ல.
மக்களைப் பற்றி பேச வக்கற்று, அந்த மக்களுக்காக குரல்கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம், ஜனநாயக வாதிகள் என்று கூறிக்கொள்வது ஒரு சொல் மேலான மோசடிதான். வடக்கு மேலாதிக்கத்தின் கிழக்கு கோவணங்களே!
புலியெதிர்ப்பு கோவணங்களே
'கருணா எதற்காக அரசியல் செய்கின்றார்?" சொல்லுங்களேன்? என்ன அரசியல் செய்கின்றார்? கூற முடியுமா? ஏன் புலுடா?
'அவரது கட்சியின் எதிர்காலம் என்ன?" என்று கவலைப்படும் நீங்கள், மக்களின் எதிர்கால அரசியல் என்ன என்று, கவலைப்பட்டது உண்டா?
'நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்?" என்று புலியெதிர்ப்பில் புலம்பும் நீங்கள், புலிகளை தோற்கடித்த அந்த மக்களை நீங்கள் எப்போதாவது ஆதரித்ததுண்டா?
கருணாவை 'ஏன் கட்டாயம் ..ஆதரிக்க வேண்டும்?"என்ற உங்கள் புலியெதிர்ப்பில் குலைக்கும் நீங்கள், மக்கள் ஏன் எந்த வகையில் எப்படி ஆதரிக்க வேண்டும் என்று ஏன் சொல்ல முடிவதில்லை?
எல்லாம் புலியெதிர்ப்பு மூட்டைக்குள் நின்று கொறித்தபடி, மக்களை எட்டி உதைக்க முனைகின்றனர். இந்த மோசடிகள் அசாதாரணமானது. 'கருணாவினால் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையிலேயே பிரபாகரனின் புலிகள் இருக்கின்றனர். கிழக்கைச் சேர்ந்த பல மூத்த புலி உறுப்பினர்கள் ஒத்தாசையாக இருந்தும் வடக்கைச் சேர்ந்த புலிகளின் எந்தத் தளபதியாலும், கருணாவின் மொழியில் சொன்னால், பிரபாகரனின் தொந்தி வளர்ந்த தளபதிகளால் கிழக்கில் தற்போது நின்றுபிடிக்க முடியவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது கருணா புலிகளை விட்டு ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களுடன் பிரிந்தது மட்டுமன்றி, இன்று தனியாக ஒரு படையணியாக நின்று புலிகளுடன் மோதுவது. இரண்டாவது கிழக்கு மக்களின் கணிசமானளவு ஆதரவை வன்னிப் புலிகள் இழந்தது." எப்படிப்பட்ட ஒரு மோசடி. மக்களை எட்டி உதைக்கும் ஒரு மோசடி. இராணுவ ரீதியான யுத்த தளத்தில், கருணா கும்பல் புலிகளை தோற்கடிக்கவில்லை. மாறாக பேரினவாதம் தான் அதை செய்கின்றது. அதன் எடுபிடிகள் தான் கருணா கும்பல். ஐந்தாம் படையாகத் தான, இந்த கும்பல் செயல்படுகின்றது. இந்த கும்பலுக்கு என்று, பேரினவாத அரசியல் வழிக்கு வெளியில், தனியான சுயமான அரசியல் இராணுவ வழிகள் கிடையாது. இந்தியாவினதும், இலங்கை அரசினதும் வளர்ப்பு வேட்டை நாய்களாக, களத்தில் மக்களை புலிகளின் பெயரில் வேட்டையாடுகின்றது. அவ்வளவு தான் இதன் அரசியல்.
கிழக்கில் புலிகள் தோற்றார்கள் என்றால், இதற்கு காரணம் வெறும் கருணா அல்ல. மாறாக மக்கள் புலிகளை தோற்கடித்துவிட்டார்கள். இது கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் தான். புலிகள் மக்கள் ஆதரவை முழுமையாக இழந்துவிட்டனர். எல்லாவிதமான நம்பிக்கைகளையும், அசாதாரணமான கற்பனைகளும் கூட, சிதைந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றது. புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் என்றுமில்லாத வகையில் சிதைந்து மீளமுடியாத நிலையை அடைந்துவிட்டது. இதை பயன்படுத்தி பேரினவாத இராணுவம் கிழக்கில் புலிகளை ஒழித்துக்கட்டுகின்றது. அடுத்து வடக்கு நோக்கி அது நகரும்.
புலிகள் அன்றாடம் ஒவ்வொரு விடையத்திலும் தோற்கின்றனர். இதுவே மேலும் மேலும் மக்களுக்கு எதிராக மூர்க்கமாக பாய்கின்றது. இதைப் பயன்படுத்தி புலிகளை தோற்கடித்தவராக காட்டிக்கொண்டு, சில வில்லன்கள் கதாநாயக வேஷத்தில் பொறுக்கித்தனமான வகையில் வெளிப்படுகின்றனர். இந்த வகையிலான ஒரு புலுடாப் பேர்வழிதான் கருணா. அவன் கும்லும் அதற்கு காவடி எடுத்தாடும் அரோகராப் பேர்வழிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். புலிகளை தோற்டித்த அந்த கருணாவின் இராணுவ வெற்றிகள் எங்கே எப்போது நடந்தது? ஐயா புண்ணியவான்களெ, யாருக்கு புலுடா விடுகின்றீர்கள்.
உண்மை வேறுவிதமானது. மக்கள் தோற்கடிக்காத ஒன்றை, யாரும் தோற்கடிக்கமுடியாது. மக்கள் விரோதியான கருணா கும்பலும் இதை செய்யமுடியாது. மக்கள் புலிகளை தோற்கடித்த நிலையில், அந்த வெற்றிடத்தில் ஒட்டைச் சட்டியை ஒட்டுவது பொறுக்கித்தனம். இப்படிப்பட்ட பொறுக்கி அரசியல் பேர்வழிகளின் பின்னால் நக்கித்திரிவது எடுபிடி அரசியலாகின்றது.
இந்த அரசியல் எடுபிடித்தனம் கருணாவை விமர்சிப்பதாக காட்டிக்கொண்டு, நடத்தும் அரசியல் பித்தாலாட்டமானது, மோசடித்தனமானது. 'கருணாவை அழித்துவிட்டு, அவரினதும் அவரது கட்சியையும் அதன் அரசியலையும் அழித்துவிடும் நோக்கில் நடத்தப்படும் சேறடிப்புக்களை கருணா கவனத்திற் கொள்ள தேவையில்லை. அவற்றின் உள்நோக்கம் யாவரும் அறிந்ததே. அவை பலமுகங்களுடன் வரும், சில வேளை தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களின கருத்து என பல வேஷங்களோடும் வரும்." எப்படிப்பட்ட பாசிட்டுகள் இந்த 'ஜனநாயகவாதிகள்" என்பதை இதன் மூலம் கூறிக்கொள்கின்றனர். மனித விரோதிகளால் தான், இதை இப்படிக் கூற முடிகின்றது?. '..தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களின கருத்து.." என்று கோரினால், அதை மறு என்று கூறுகின்ற புலியெதிர்ப்பு பாசிச போக்கிரிகள் தான் இவர்கள். மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் எதுவும் புலிக்கு சார்பானது என்பது இவர்கள் சுற்றி வளைத்து கூறும் அரசியலாக உள்ளது. இவைகளே புலிகளின் அரசியலை அனாதையாக்கும் என்று, அன்று புலிகள் கூறியவர்கள். இன்று இது கருணா கும்பலின் பாசிச அரசியலை அனாதையாக்கும் என்று புலியெதிர்ப்பு கும்பல் கூறி அதை மறுக்கின்றது. அதே புலி அரசியல்? ஆனால் அதை நாகரிகமாக மூடிமறைத்து செய்யக் கோருவதே, இவர்களின் 'ஜனநாயகமாக" உள்ளது. உள்ளடகத்தில் பாசிசம் இப்படி மூடிமறைத்து நிற்கின்றது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!
மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை தகுதி கொண்ட தனியார் கல்லூரிகள் தவிர்த்து, பிற சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை, இந்த 93ஆவது சட்டத்திருத்தம் செல்லாக்காசாக்கிவிட்டதாக ஓட்டுக்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும், இந்தந்த திருத்தத்திற்கு ஏற்ப மாநில அரசுகள் சட்டம் இயற்றாததால், இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அமலுக்கு வருமா என்பது இரண்டுங்கெட்டானாகத்தான் இருக்கிறது.
இந்த விவகாரம் அந்தரத்தில், ஊசலாடும் பொழுதே, ""இந்த 93 ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின்படியும், மண்டல் கமிசன் பரிந்துரையின்படியும் இந்திய தொழில் நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம், இந்திய அறிவியல் கழகம், 20 மையப் பல்கலைக்கழகங்கள், ஆறு மருத்துவக் கல்லூரிகள் அடங்கிய மைய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய மைய அரசு முடிவெடுத்திருப்பதாகவும்; இது பற்றிய அறிவிப்பு ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு வெளியிடப்படும்'' என்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் அறிவித்தார்.
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, வி.பி.சிங் தலைமையில் இருந்த தேசிய முன்னணி அரசு மண்டல் கமிசன் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அதன் ஒரு பகுதியை மைய அரசின் வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முயன்ற பொழுது, அதனை எதிர்த்து பார்ப்பன மேல்சாதி மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவரங்களை நடத்திய காங்கிரசு கட்சி, இப்பொழுது ""சமூக நீதி''க் காவலனாக மக்கள் முன் நிற்கிறது.
வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு அதனைக் கவிழ்த்ததோடு, மண்டலுக்கு எதிராக ராமர் கோயில் ரத யாத்திரைகளை நடத்தி, வடமாநிலங்களை ரத்தக்களறியாக்கிய பா.ஜ.க., இப்பொழுது, மைய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வதை ஆதரிப்பதாகக் கூறுகிறது. தங்களின் வாக்கு வங்கியை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம்தான் இந்த இரண்டு பாசிசக் கட்சிகளையும், மண்டலின் மீது திடீர் காதல் கொள்ளத் தூண்டியிருக்கிறது.
எனினும், தண்ணீரை விட இரத்தம் அடர்த்தி மிக்கதல்லவா! அதனால்தான், இந்த இரண்டு கட்சிகளிலும் உள்ள பர்ப்பன மேல்சாதி தலைவர்கள், இந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் உள்ளடி வேலைகளில் உடனடியாக இறங்கினார்கள். இவர்களோடு பார்ப்பன மேல்சாதியைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகைகள் இணைந்து, பார்ப்பன மேல்சாதி மாணவர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் 1990 காலகட்டத்தை உருவாக்கி விடத் துடிக்கிறார்கள்.
இந்த இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக தில்லியில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வரும் ""போராட்டம்'', ஏதோ வடஇந்தியா முழுவதும் நடப்பது போல ஊதி பெருக்கப்படுகிறது. ஒரிசா பழங்குடி மக்களின் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை பத்தோடு பதினொன்றாகப் பதிவு செய்த பார்ப்பன ஊடகங்கள், மும்பய் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை ஜாலியன் வாலாபாக் படுகொலையோடு ஒப்பிட்டு உருவேற்றுகின்றன. மேல்சாதித் திமிரோடும், வக்கிரத்தோடும் அவர்கள் நடத்தும் ஆபாசக் கூத்துக்கள் (தரையைக் கூட்டுவது, ஷý பாலிஷ் போடுவது) நாட்டு நலன் கருதி நடைபெறும் போராட்டங்களாகத் திரிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்வினையாக இட ஒதுக்கீட்டை ஆதரித்து, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமின்றி, பல்வேறு சனநாயக அமைப்புகளும் போராடத் தொடங்கியுள்ளன.
""குடியரசு'' என டாம்பீகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த நாட்டில், பார்ப்பனமேல்சாதிக் கொழுப்பு தட்டிக் கேட்க ஆளின்றி பொங்கி வழிவதை இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களே நிரூபிக்கின்றன. இந்தக் கொழுப்பின் சகிக்க முடியாத வக்கிரத்திற்கு ""டெக்கான் கிரானிகல்'' என்ற ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரத்தை உதாரணமாகக் கூறலாம்.
""மண்டல் கமிசன்'' கல்வி இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தால், மாடு மேய்க்கும் பயலுகளெல்லாம், ஐ.ஐ.டி.க்குள்ளும், ஐ.ஐ.எம்.க்குள்ளும் நுழைந்து விடுவார்கள்'' என உழைக்கும் மக்களைப் பரிகாசம் செய்கிறது, அந்தக் கேலிச் சித்திரம். ""எப்படியாவது மீண்டும் குலக்கல்வி முறை வந்துவிடாதா?'' என்ற பார்ப்பனிய நப்பாசையின் பச்சையான வெளிப்பாடுதான் அந்தக் கேலிச் சித்திரம. ""உலகமய''க் காலக் கட்டத்தில் கூட, இப்படி காட்டுமிராண்டித்தனமாகச் சிந்திப்பதற்காக அந்த ""மேன்மக்கள்'' வெட்கப்படவில்லை.
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (அஐஐMகு) மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறதா என்பதே தற்பொழுது சந்தேகத்திற்கு இடமாகி விட்டது. அக்கழகத்தில் பயிலும் பார்ப்பன மேல்சாதி மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் நடத்தும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை அக்கழகத்தின் நிர்வாகமே ஆதரிக்கிறது. அக்கழகத்தின் நிர்வாகம், பார்ப்பனர் சங்கம் போலச் செயல்படுகிறது. அங்கு சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளை இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசவிட்டு, தங்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறது பார்ப்பன மேல்சாதி கும்பல்.
தனியார்மயத் தாக்குதலுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தபொழுது, அரசையும் பொதுமக்களையும் ஊழியர்கள் மிரட்டுவதாக (ஆடூச்ஞிடுட்ச்டிடூ) நீதிமன்றங்களும், ஆளும் வர்க்க அறிவுஜீவிகளும் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், இப்பொழுது ஏழை நோயாளிகளின் உயிரோடு விளையாடும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிர்வாகத்தின் மீது அப்படிப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அவர்கள் மீது அத்தியாவசிய பணி பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை. இந்த மென்மையான அணுகுமுறைக்கு, பார்ப்பன பாசம் தவிர, வேறென்ன காரணமாக இருக்க முடியும்?
""திறமையில் ஒப்புயர்வற்ற தனித் தீவுகள்'' என "தேசிய'ப் பத்திரிகைகளால் புகழப்படும் இந்த உயர்கல்வி நிறுவனங்கள், பார்ப்பனத் தீவுகளாக இருக்கின்றன என்பதே உண்மை. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐகூ) வேலை பார்க்கும் 400 பேராசிரியர்களுள், 282 பேர் (70 சதவீதம்) பார்ப்பனர்கள்; மற்ற உயர் சாதியினர் 40 பேர் (10 சதவீதம்); தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் 22.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தும் கூட, சென்னை ஐ.ஐ.டி.யில், மூன்று தாழ்த்தப்பட்டவர்கள்தான் (0.75 சதவீதம்) பேராசிரியர்களாக வேலை பார்க்கின்றனர்.
மேற்கு வங்கம் காரக்புரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ""நாங்கள் எப்படி மாணவர்களைச் சேர்க்கிறோம் என்பதை வைத்து ஐ.ஐ.டி.யின் தரம் நிர்ணயிக்கப்படவில்லை. எப்படிப்பட்ட மாணவர்களைத் தயாரித்து அனுப்புகிறோம் என்பதுதான் தரத்தை நிர்ணயிக்கிறது'' என்கிறார். ஆனால், பார்ப்பன உயர்சாதி கும்பலோ, இட ஒதுக்கீடு வழங்கினாலே, உயர்கல்வி நிறுவனங்களின் தரம் தரைமட்டமாகி விடும்; திறமைக்கு எதிரான இட ஒதுக்கீடு நாட்டிற்கே எதிரானது'' எனக் கூச்சல் போடுகுறது.
இட ஒதுக்கீடால் தரமும், திறமையும் போய்விடும் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்வதன் மூலம், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தகுதியே இல்லாத மாணவர்கள் இந்த நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் போலவும், அவர்கள் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்று பதவியில் அமர்ந்து விடுவதைப் போலவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள்.
இது அப்பட்டமான பொய். நுழைவுத் தேர்வில் பெற வேண்டிய மதிப்பெண்களில் வழங்கப்படும் சிறிய சலுகையைத் தவிர, வேறெந்த சலுகையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தரப்படுவதில்லை. அதன்பின் எல்லா மாணவர்களுக்குமான பொது அளவுகோலின்படிதான் இவர்களும் தேர்வெழுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார்கள்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற ""திறமையின் தீவுகள்'' எல்லாம் நிறுவப்பட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனாலும், இந்தியா இன்றும் வறிய நாடாகத்தான் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைச் சொந்தமாக உருவாக்க முடியாமல், ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்திப் பெற்று வருகிறது. அப்படியென்றால் இந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொறியாளர்களில், விஞ்ஞானிகளில், மேலாண்மை நிர்வாகிகளில், நூற்றுக்குப் பத்து பேர் கூட திறமைசாலிகளாக இல்லை எனச் சொல்லலாமா? இட ஒதுக்கீடு சலுகை பெறாதவர்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம்.
திறமைக்கு மட்டுமே மதிப்பளிக்க வேண்டும் என்பதால்தான், இராணுவத்தில் இட ஒதுக்கீடு கிடையாது எனப் பார்ப்பனக் கும்பல் வாதாடுகிறது. ஆனால், அந்த அரசு நிறுவனத்தில்தான், பீர் பாட்டிலுக்கும், பொம்பளைக்கும் மயங்கி, இராணுவ இரகசியங்கள் விற்கத் துணியும் தேசத்துரோகிகள் இருப்பதை தெகல்கா ஊழல் அம்பலப்படுத்தியது; பீரங்கி முதல் சவப்பெட்டி வாங்கியது வரை, பல்வேறு ஊழல்களில் ""திறமை'' வாய்ந்த உயர்சாதி அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்திய இராணுவம் சந்தி சிரித்தது.
பார்ப்பனக் கும்பல் கூறுவது போல இட ஒதுக்கீடு தேசத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் திறமைதான் மக்களுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்வதாக இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் மானியத்தில் நடக்கும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கும் மருத்துவர்கள் பொறியாளர்களில், எத்தனை பேர் கிராமப்புறங்களில் உள்ள அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகிறார்கள்? எத்தனைபேர் அரசின் பொதுப்பணித் துறையில் சேர்ந்திருக்கிறார்கள்? இங்கே படித்து முடித்தவுடன் அமெரிக்காவிற்கும், இலண்டனுக்கும் மூட்டை கட்டும் இந்த ஓடுகாலிதனத்தைதான் "திறமை' என்ற பெயரில் மூடிமறைக்கிறது, பார்ப்பனக் கும்பல்.
இந்தப் பார்ப்பன மேதாவிகள் ""சமூக நீதி''களின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல, ""நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? பிரதமர், முதல்வர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியதுதானே?'' என எதிர்வாதம் செய்கிறார்கள்.
நியாயமாகப் பார்த்தால், பார்ப்பன அறிவுஜீவிகள் இந்தக் கேள்வியை முதலில் சங்கர மடத்திடம் தான் கேட்க வேண்டும். சங்கர மடம் உள்ளிட்ட பல்வேறு பார்ப்பன மடங்களிலும், நல்ல வரும்படி வரும் கோயில்களிலும் பல நூறு ஆண்டுகாலமாக பார்ப்பனர்களே மடாதிபதிகளாகஅர்ச்சகர்களாக இருக்கும் சலுகையை ஏகபோகமாக வைத்திருப்பது மட்டும் நியாயமானதா?
கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதி பார்க்கக் கூடாது என தர்க்க நியாயம் பேசுபவர்கள், இதற்கோ பூணூலை மட்டுமே ஒரே தகுதியாக வைத்திருக்கிறார்கள். இந்த 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கைவிட விரும்பாத பார்ப்பனக் கும்பல், 2016க்குள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூப்பாடு போடுகிறது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் இவர்கள், இந்த நிறுவனங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதையோ, அந்த இடங்கள் அமெரிக்க டாலர்களுக்காக ஏலம் விடப்படுவதையோ எதிர்ப்பதில்லை. ஏனெனில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது, நடைமுறையில் அமெரிக்கா வாழ் ""அம்பி''களுக்கான இட ஒதுக்கீடுதான்.
மேலும், தனியார்சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 100 சதவீத இட ஒதுக்கீட்டையும் இவர்கள் எதிர்ப்பதில்லை. தரம், தகுதி, திறமையை முன்வைத்து இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனக் கும்பலின் வாதத்தில் சாதித் திமிரும், கபடத்தனமும்தான் பொங்கி வழிகிறது.
பார்ப்பன மேல்சாதி கும்பல் இட ஒதுக்கீடு எதிர்ப்பு என்ற பெயரில், இந்த நாட்டின் பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்ட சாதியினரை வெளிப்படையாகவே அவமானப்படுத்துகின்றது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலாவதைத் தடுப்பதன் மூலம், சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் தங்களின் சாதி ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலுகின்றது. அதேசமயம், ஒடுக்கப்பட்ட சாதியினரைத் தங்களின் வாக்கு வங்கியாகக் கொண்டிருக்கும் சமூக நீதிக் கட்சிகளோ, பார்ப்பனக் கும்பல் நடத்தும் இப்பிற்போக்குத்தனமான கலகத்திற்கு எதிராக உரிய விதத்தில் பதிலடி கொடுக்காமல் முடங்கிக் கிடக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டு, நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு மறியல் போராட்டங்களை நடத்திய பா.ம.க ராமதாசு, இப்பொழுது மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிடுகிறார். அடிக்கடி தன்னைப் பிற்படுத்தப்பட்டவன் எனக் கூறி அரசியல் அனுதாபம் தேடிக் கொள்ளும் கருணாநிதி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தன் கடமையை முடித்துக் கொண்டு விட்டார்.
இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக போலீசு கை காட்டும் இடத்தில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற வரம்பைத் தாண்ட இக்கட்சிகள் மறுக்கின்றன. மேலும், சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் நம்பும் கையறு நிலைக்குத்தான் இக்கட்சிகள் பிற்படுத்தப்பட்டோரைத் தள்ளிவிட்டுள்ளன.
தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., லல்லு யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஜனதா தளம், அஜீத் சிங்கின் லோக் ஜனதா தளம், முலயம் சிங்கின் சமஜ்வாதி ஆகிய சமூக நீதிக் கட்சிகள் அனைத்தும் பார்ப்பன பனியா கட்சிகளான காங்கிரசு பா.ஜ.க.வோடு மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டு தான் ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்து வருகின்றன. இந்தப் பார்ப்பனர் பிற்படுத்தப்பட்டோர் கூட்டணியின் காரணமாகத் தான், காங்கிரசு கூட்டணி ஆட்சி உயர் கல்வி நிறுவனங்களில் பொதுப் போட்டிக்கான இடங்களை அதிகரிப்பது என்ற சமரசத் தீர்வை முன்வைக்கிறது. இந்தச் சமரசத் தீர்வு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பதையே கேலிக் கூத்தாக்குவதோடு, மறைமுகமாக பார்ப்பனமேல்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாகும். பார்ப்பனமேல்சாதி கும்பல் இச்சமரசத் தீர்வை அடைவதில் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் அடுத்து தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும் காவு கேட்கத் தயங்கமாட்டார்கள்.
இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனக் கும்பல் எதிர்ப்பது ஒருபுறமிருக்க, இந்திய அரசு நடைமுறைப்படுத்தும் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கை, இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கே வேட்டு வைத்துவிட்டது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது என்ற அம்சத்தில் மட்டும் பார்ப்பனியமும் தனியார்மயமும் ஒன்றுபடவில்லை. அவை இரண்டுமே உடன்பிறவாச் சகோதரர்கள் போன்றவை.
உலகமயம், உலக நாடுகளை ஒடுக்கும் நாடுகள், ஒடுக்கப்படும் நாடுகள் எனக் கூறு போடுகிறுது. அதுபோலவே பார்ப்பனியமும், இந்திய மக்களை ஒடுக்கும் மேல்சாதி, ஒடுக்கப்படும் கீழ் சாதி எனக் கூறு போடுகிறது.
உலகமயம், உள்நாட்டுப் பொருள்கள் தரமற்றவை; பன்னாட்டு நிறுவனப் பொருட்கள்தான் தரமானவை என வகை பிரிக்கிறது. அதுபோலவே, பார்ப்பனியமும் சமூக அடித்தட்டில் கீழ்நிலையில் உள்ள உழைக்கும் மக்களைத் திறமையற்றவர்கள் என்றும்; பார்ப்பனமேல்சாதியினரைத திறமையாளர்கள் என்றும் வகை பிரிக்கிறது.
படைப்பிலேயே மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு உண்டு; மனிதர்கள் சமமானவர்கள் இல்லை என்பது பார்ப்பனிய இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை. நவீன தாராளமயமும் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு உண்டு எனக் கூறுகிறது. இந்த விதத்தில் பார்ப்பனியமும், தாராளமயமும் இயற்கையாக ஒன்றுபடுகின்றன.
கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன மேல்சாதிக் கும்பலுக்கு, டாடா, மிட்டல், நாராயணமூர்த்தி போன்ற தரகு முதலாளிகள் ஆதரவளிப்பதற்கு இந்த ""இயற்கை உறவு''தான் காரணம்.
தனியார் தொழில்களில் ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரினால், ""உலகச் சந்தையில் போட்டிபோட திறமை வேண்டும்; இட ஒதுக்கீடு அந்தத் திறமையை ஒழித்து விடும்'' எனப் பார்ப்பனக் கும்பல் போலவே இவர்களும் ஒப்பாரி வைக்கிறார்கள். புதுத் தரகு முதலாளியான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, ""ஒடுக்கப்பட்ட சாதியினர் போட்டிபோடும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' எனப் பச்சையாக பார்ப்பனிய விஷத்தைக் கக்குகிறார்.
இந்தியாவின் ஏதாவதொரு ""பின்தங்கிய'' மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கும் இந்தத் தரகு முதலாளிகள், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கக் கோரினால், ""தகுதி'', ""திறமை'' பற்றிப் பேசுவது, அப்பட்டமான பித்தலாட்டமாகும்.
அரசு அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள பார்ப்பனியத்தோடு கூட்டு வைத்துக் கொள்ளும் ""தலித்'' கட்சிகளும், பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகளும் இன்னொருபுறம் தனியார்மயத் தாசர்களாகவும் இருக்கிறார்கள். ""பன்னாட்டு நிறுவனங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததில் யாருக்கு முதலிடம்?'' என்ற போட்டி பார்ப்பன ஜெயாவுக்கும், சூத்திரர் கருணாநிதிக்கும் இடையே நடந்ததைத் தமிழக மக்கள் அதற்குள் மறந்திருக்க முடியுமா?
தன்னுடைய கொள்ளை இலாபத்திற்கு குறுக்கே நிற்கும் பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், தொழிற்சங்க உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள், சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் குரல் கொடுப்பது இரட்டை வேடமாகாதா? ஒரு வர்க்கத்திற்கு ஒரு நீதி என்று பேசும் தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள், ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் பார்ப்பனியத்தை எதிர்க்க முடியுமா?
பார்ப்பனியத்திற்கும், பிற்பட்ட சாதியினருக்கும் இடையே உள்ள கூட்டணி அரசியல் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கிராமப்புறங்களில், பார்ப்பன மனுநீதியைக் காக்கும் காவலர்களாக இப்""பிற்பட்ட சாதியினர்'' இருந்து வருகின்றனர் தேவர், வன்னியர், கவுண்டர், யாதவர், குர்மி, வோக்கலிகா போன்ற இடைநிலைச் சாதிகள் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தும் தாக்குதல்கள் இதை நிரூபிக்கின்றன.
சூத்திரன் யார் என்பதற்கு மண்டல் கமிசன் அறிக்கையில் தெளிவான விளக்கம் கிடையாது. மண்டல் அறிக்கையில் இந்தியா முழுவதும் 3,740 சாதிகள் பிற்பட்ட சாதிகளாக இனம் காணப்பட்டன. 1995க்குப் பின் இப்பட்டியலில் மேலும் 700 சாதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. (ஆதாரம், வல்லினம் பிப்.ஏப். 2006, பக்: 27) பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலையில் இருந்தாலும், சமூகப் பொருளாதார உரிமைகளைப் பெற்று முன்னேறியுள்ள இடைநிலைச் சாதிகள், தங்களைப் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்துக் கொண்டு, பார்ப்பனர்களோடு போட்டி போட்டு அரசுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு மண்டல் கமிசன் அறிக்கை அச்சாதிகளுக்கு உதவியாக இருக்கிறது.
உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்பொழுது, இந்த இடைநிலை ஆதிக்க சாதிகள்தான் அதன் பலனை அறுவடை செய்து கொள்வார்கள். பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவை சாதியினர், ஒரு சமூகம் என்ற வகையில் அதன் பலனை அனுபவிக்க முடியாது.
அதேசமயம், ""இட ஒதுக்கீடு என்பது இந்த சமூக அமைப்புக்குள்ளேயே எல்ல மக்களும் முன்னேறிவிட முடியும் என்ற மாயையைத் தோற்றுவிக்கும் சீர்திருத்தம்தான்'' என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. வறுமை, வேலைவாய்ப்பு இன்மையால் இன்று இந்திய நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தணிக்கும் வடிகாலாகத்தான் தனியார் தொழில்களில் இட ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு ஆகிய சீர்திருத்தங்கள் ஆளும் வர்க்கத்தாலேயே கொண்டு வரப்படுகின்றன.
பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட மக்களின் பாரம்பரியத் தொழில்களான விவசாயம், கைத்தறி, கைவினைத் தொழில்கள் தொடங்கி, சில்லரை வணிகம், பழங்குடி மக்களின் நிலம் ஆகிய அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் நாசமாக்கப்படுகிறது என்பதே உண்மை.
பன்னாட்டு நிறுவனங்கள் தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் நலன்களை முன்னிறுத்தி நடந்துவரும் இந்த ஆட்சியில் இட ஒதுக்கீட்டின் மூலம் உயர் பதவிகளுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும், மக்களுக்குச் சேவை செய்ய முடியாது. ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவச் சுரண்டலைத் தூக்கி எறியும் புதிய ஜனநாயகப் பரட்சியின் மூலம் உழைக்கும் மக்களின் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டுவது மட்டும்தான் உண்மையான சமூக நீதியைப் படைக்கும். தனியார்மயம் பார்ப்பனியம் இவை இரண்டுக்கும் எதிராகக் கலகத்தில் இறங்குவதன் மூலம்தான் சமூக நீதியை வென்றெடுக்க முடியும்!
மு செல்வம்

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

-இனவாதிகளின் அவதூறும் எமது நிலையும்
மாற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா? அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இடஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ""அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.
அதேசமயம், தமிழ்தேசிய இனத்தின், சமூக நீதியின், ஈழவிடுதலையின் எதிரிகளான பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜெயலலிதா கும்பல்களின் நெருங்கிய பங்காளிகளான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வைகோ, திருமா போன்றவர்களோ தமிழினவாதிகளின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளைப் பார்த்து ""தமிழ் தேசியத்துக்கு எதிரான அகில இந்திய பூணூலிஸ்டுகள்'', ""ஈழப் பிரச்சினையில் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடுகளும் பார்ப்பன "துக்ளக் சோ'வினுடையவையும் ஒன்றுதாம்'', ""இடஒதுக்கீடு பிரச்சினையில் ம.க.இ.க.வின் அணுகுமுறை மறைமுகப் பார்ப்பனியமாக உள்ளது'' இப்படியெல்லாம் தொடர்ந்து இட்டுகட்டி, முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள், தமிழினவாதிகள்.
இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் நமது நிலைப்பாடுகளை, அடிப்படை ஆதாரங்களை விளக்குவதோடு நாம் நிற்கவில்லை. இவற்றில் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகள் மீது பல முக்கியமான கேள்விகளை எழுப்பி, நிராகரித்திருக்கிறோம். அவை எதற்குமே பதிலளிக்கத் திராணியற்ற தமிழினவாதிகள், நமது எதிரிகளின் நிலைப்பாடுகளோடு ஒப்பிட்டு இணை வைப்பதோடு, அவதூறும் பொய்பிரச்சாரமும் செய்கிறார்கள். அவர்கள் இணை வைத்துக் காட்டும் எதிரிகளுடையவற்றில் இருந்து நம்முடைய நிலைப்பாடுகள் எவ்வாறு அடிப்படையிலேயே மாறுபடுகின்றன என்றும் பலமுறை விளக்கியிருக்கிறோம். எளிதில் யாரும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த விளக்கங்களுக்கே கூட மறுப்புரை ஏதும் முன்வைக்காமல், கோயாபல்சுகளாகி திரும்பத் திரும்ப அதே பொய்களைப் பேசி வருகிறார்கள்.
தற்போது, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்திருக்கிறது. இதை ஏற்கெனவே உயர்கல்வி பெற்று வேலையிலிருக்கும் மற்றும் உயர்கல்வி கற்றுவரும் முற்பட்ட சாதியினர் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதையொட்டி, ""உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகளின் போராட்டத்தை முறியடிப்போம்'' என்று ம.க.இ.க. மற்றும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் முழக்கம் முன்வைத்துப் போராடி வருகின்றன.
""உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு'' என்பதை பார்ப்பனர்கள் தவிர வேறு பிற ஆதிக்கசாதிகளும் எதிர்ப்பதையும் முறியடிக்க வேண்டியுள்ளது. அதோடு ஒருபுறம் இடஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டும் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ராமதாசு, முலயம் சிங், லல்லுபிரசாத், கருணாநிதி போன்ற பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் சக்திகள் அதிகாரத்தில் பங்கு பெற்று, தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் முற்படுத்தப்பட்ட சாதிகளுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, பொதுவில் எல்லா இட ஒதுக்கீட்டிலும் உள்ளதைப் போலவே, உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும் இடம் பெற எத்தணிக்கும் சாதிகள் எல்லாம் உண்மையில் அதற்குத் தகுதியானவை என்று கருத முடியாது.
அதாவது, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள சாதிகளில் பலவும் முற்பட்ட சாதிகளாக உள்ளன. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற சாதிகளை ஒடுக்கும் பல ஆதிக்க சாதிகள் பொய்யான அடிப்படையில் தாமும் பிற்படுத்தப்பட்டவை என்று உரிமை பாராட்டி இட ஒதுக்கீடு வாய்ப்பைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்த உண்மை விவரங்களைப் பரிசீலிக்காமலேயே, மறுத்துரைக்காமலேயே, தங்கள் நிலையை ஆதரிக்க வேண்டும்; இல்லையென்றால் நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள், பார்ப்பனர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும் முத்திரை குத்துகிறார்கள், தமிழினவாதிகள். அவர்களுடைய நிலையோ எந்த ஆய்வுபரிசீலனையும் இல்லாது, நீதிக் கட்சியின் சிற்றரசர்கள், மிட்டாமிராசுகள், ஜமீன்தாரர்கள், (அக்கட்சி அப்படிப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரம் 1945 சேலம் திராவிடர் கழக மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையேயாகும்) ஆகிய சாதி இந்துக்களின் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் என்ற பொதுவரையறையின் அடிப்படையிலான நிலையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும்.
""கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா'' என்று புத்திசாலித்தனமாக சிலர் கேட்பதுண்டு. இரண்டில் ஒன்று சொல்லமுடியாது, பரிணாம வளர்ச்சிப்படி தான் வந்தது என்று சொல்லப் புகுந்தால், பதிலைப் புரிந்து கொள்ள மறுத்து, ""அதெல்லாம் வேண்டாம் இரண்டில் ஒன்று சொல்லுங்கள்'' என்று முட்டாள்தனமாக அவர்கள் அடம்பிடிப்பதும் உண்டு. அப்படித்தான் அடம் பிடிக்கிறார்கள், தமிழினவாதிகள். தமது மூதாதையர்களின் சாதி இந்துக்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அப்படியே ஆதரிக்க வேண்டும். அதை எவ்விதப் பரிசீலனைக்கும் மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது. இல்லையென்றால் எதிர்க்கிறீர்கள் என்றுதான் பொருள் என்கிறார்கள். மொத்தத்தில் ""இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா? இரண்டில் ஒன்று சொல்லுங்கள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும். மூன்றாவது ஒன்று இருக்க முடியாது. இரண்டும் இல்லாத வேறொன்று இருக்க முடியாது, நடுநிலையும் இருக்க முடியாது'' என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்கள். பகுத்தறிவுக்கும் தர்க்கவியலுக்கும் விரோதமான இந்த அணுகுமுறையை அறிவியல்பூர்வமானது என்றும் கற்பித்துக் கொள்கிறார்கள்.
கேள்வியை அமைக்கும் முறை, மாற்றுக் கருத்துக்களைக் காமாலைக் கண் கொண்டு பார்க்கும் பார்வை, மாற்றாரும் எண்ணிப் பார்க்காத வகையில் அவர்களுடைய நிலைக்கு இவர்களே தரும் வியாக்கியானம் எல்லாவற்றிலும் பாசிசத்தனமான கருத்துத் திணிப்புத்தான் இருக்கிறது. காசுமீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விக்கு இல்லை எதிர்க்கிறோம் என்று பதில் சொன்னால், அப்படியென்றால் பாகிஸ்தான் நிலையை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்தால் அது என்ன தர்க்கமாகும் தெரிகிறதா? அதேபோல இந்தியாவின் நிலையையும் ஏற்கவில்லை, பாகிஸ்தானின் நிலையையும் ஏற்கவில்லை; இரண்டையும் எதிர்க்கிறோம் என்று சொன்னால் அது நடுநிலையும் ஆகிவிடாது. காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதுதான் சரியானது என்ற மூன்றாவது, மாற்று, வேறொரு நிலையை எடுக்கவும் முடியும். இப்படி நிலை எடுப்பதாலேயே இந்திய வெறியர்கள் நம்மைப் பார்த்து, தேசத்துரோகிகள், பாக் ஆதரவாளர்கள் என்று அவதூறும் செய்யக் கூடும்.
அதைப்போலத்தான், இந்தத் தமிழினவாதிகள் உட்பட சமூக (அ) நீதிக்காரர்கள்; நன்றாகக் கவனியுங்கள், இடஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை என்னவென்று கேட்கவில்லை. தமது நிலையை ஆதரிக்கிறீர்களா? இல் லையா? என்று கேட்கிறார்கள். நாம் நமது நிலையைச் சொன்னால் அவர்களாகவே ஒரு வியாக்கியானம் செய்து கொள்கிறார்கள்.
இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை குறித்து ஏற்கெனவே பின்வருமாறு எழுதியுள்ளோம்.
இட ஒதுக்கீடு குறித்துப் பார்ப்பன மற்றும் பிற உயர்சாதி இந்துக்கள் மூன்று விதமான நிலைப்பாடு எடுக்கின்றனர். ஒன்று; இட ஒதுக்கீடு என்பதே கூடாது; தகுதி, திறமை அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகள் தரவேண்டும் என்பது. இரண்டு; பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்து தரவேண்டும்; ஏனெனில் கல்வி மற்றும் சமூக உரிமை இப்போது கிடையாது என்பது. மூன்று: கல்வி மற்றும் சமூக ரீதியிலானவற்றோடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளதையும் அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது. இடஒதுக்கீடு மண்டல் அறிக்கையின் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் சில ""மார்க்சிய லெனினியக் குழுக்கள்'' கூட இந்த மூன்றாவது நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன. ஆனால் ""புதிய ஜனநாயகம்'' மேற்படி மூன்று நிலைப்பாடுகளையும் ஏற்கவில்லை; எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.
""சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது; இது தான் சரியானது; இவ்விரு அடிப்படைகளில் எது ஒன்றையும் புறக்கணிக்கக் கூடாது'' என்பதுதான் திராவிடக் கட்சிகள், அவற்றின் சார்புடையவர்களது நிலைப்பாடு இதை ""புதிய ஜனநாயகம்'' எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்தான் இட ஒதுக்கீடு கோரும் உரிமை உடையவர்கள் என்றே கூறிவந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திராவிடக் கட்சிகள் அவற்றின் சார்புடையவர்களுக்கும் ""புதிய ஜனநாயக''த்திற்கும் இடையிலான வேறுபாடு எந்தெந்த சாதிகள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்டவைகள் உரிமை மறுக்கப்பட்டவைகள், இதை எப்படித் தீர்மானிப்பது என்பதுதான்! அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், "புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும் பொய்யும்தான்! (புதிய ஜனநாயகம், 115, மார்ச்'92, கேள்விபதில்)
ஆகவே, இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது முழுமையான, சுருக்கமான நிலை இதுதான்:
நிலவும் சமுதாயப் பொருளாதார, அரசியல் அமைப்பின் மீது வெறுப்புறும் பல்வேறு பிரிவு மக்களும் தங்களுக்கு எதிரான கலகத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, ""இந்த ஆட்சியில் தாங்களும் பங்கு பெறுகிறோம்'' என்கிற மாயையை உருவாக்குவதற்காகவே, கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற ""நிறுவனமயமாக்கும் கொள்கை.'' இந்த அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களே இடஒதுக்கீடு ஏற்பாட்டைச் செய்கின்றனர். ஆங்கிலேயக் காலனியவாதிகள் முதல் ஆளும் காங்கிரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுவரை இப்படித்தான், இதற்காகத்தான் செய்கின்றனர். தமிழினவாதிகள் உட்பட சமூக அநீதிக்காரர்கள் கருதுவதைப் போல நீதிக்கட்சியினரோ, திராவிடர் கழகத்தினரோ முன்வைத்துப் போராடிப் பெற்ற உரிமையல்ல. ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட நிறுவனமயமாக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை சாதி இந்துக்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டதுதான் நீதிக் கட்சிக்காரர்களின் ""வகுப்புரிமைப் போர்.'' தங்களது ஏகபோகஆதிக்கம் ""பறிபோகிறதே'' என்று ஆத்திரமுற்று இடஒதுக்கீட்டுக் கொள்கையை பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, அதை முறியடிக்கத் திராவிடர் கழகத்தினர் நடத்தியதுதான் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டம். இடஒதுக்கீடு தவிர வேறு பிறவற்றில், பெரியார் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்புக்களை அவரது ""வாரிசுகள்'' கைவிட்டுவிட்டார்கள்; ""இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது'' என்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் இடஒதுக்கீட்டில் உள்ள புரட்சிக்கு பாதகமான அம்சங்களை மார்க்சிய லெனினியவாதிகள் பார்க்கிறார்கள். தங்களையும் பொதுவுடைமைவாதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த உண்மையைக் காண மறுக்கிறார்கள். இந்த உண்மையை வலியுறுத்தும் நமது நிலையை எடுத்துக் காட்டி, ""இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்'', ""மறைமுகப் பார்ப்பனியம்'' என்று அவதூறு செய்கிறார்கள்.
அதேசமயம், இடஒதுக்கீடு என்பது ஆட்சியாளர்களே புகுத்துவது என்றபோதும், நிலவும் சமூக அமைப்பில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தமாகவும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற முறையில் நாம் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல் அது ஒரு தற்காலிக ஏற்பாடு என்கிற முறையில் எதிர்மறையில் ஏற்கிறோம். ஆனால், இடஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வல்ல, ஒரு இடைக்காலத் தீர்வுதான், அதுவே சமூகப் புரட்சியாகாது என்பதைத் தாங்களும் ஏற்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் உட்பட சமூக(அ)நீதிக்காரர்கள் முரண்பாடாகவும் வாதிடுகிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பார்ப்பனியத்துக்கு எதிரான வகுப்புரிமைப் போர் என்றும் உலகிலேயே தனிச்சிறப்பான இந்திய சாதிய சமுதாயப் பிரச்சினைகளுக்கு வேறு யாராலும் எந்தத் தீர்வும் முன்வைக்கப்படாதபோது பெரியாரும் அம்பேத்கரும் கண்டுபிடித்த சரியான ஒரே தீர்வு இதுதான் என்றும் உயர்த்திப் பிடிக்கப்படுவது இட ஒதுக்கீடுதான்! ஆட்சியாளர்களாலேயே புகுத்தப்பட்டது, சமூகப்புரட்சியாகி விடாது, சமூக சீர்திருத்தம்தான் என்கிறபோது இந்த இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது என்று வாதிடுவது பெரியாரையே இழிவுபடுத்துவதாகாதா?
கருணாநிதி 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரை உலகவங்கி அதிகாரி மைக்கேல் கார்டர் சந்தித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழைகள் மற்றும் அபாயகரமான பிரிவு மக்களின் ஏழ்மைக் குறைப்புக்காக 750 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார். தேர்தலின்போது கருணாநிதி அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படப் போகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ஒப்புதலளிக்கப்பட்டது, உலக வங்கியின் இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டம். தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் ஆகிய மறுகாலனியாதிக்கம்தான் மக்களை ஏழ்மையில் தள்ளுகிறது என்றபோதும் பல்வேறு ""இலவசங்கள்'' அடங்கிய இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதேசமயம், இதை ஆதரித்து, இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் மேலும் பல ""இலவசங்கள்'' கோரிப் போராடவும் போவதில்லை. வறுமையிலும் பட்டினியிலும் செத்துமடியும் நம் மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாடு என்கிற எதிர்மறைநோக்கில் ஏற்கிறோம்.
ஏழ்மைக் குறைப்புத் திட்டங்களால் வறுமை ஒழிப்போ, மக்களின் பொருளாதா வாழ்வில் புரட்சிகர மாற்றங்களோ வந்துவிடப் போவதில்லை. மறுகாலனியாக்கத்தை முறியடிப்பதே வறுமை ஒழிப்புக்கான வழி என்பதை வலியுறுத்தி மக்களைத் திரட்டுகிறோம். மறுகாலனியாக்கத்தை எதிர்க்கிறீர்கள், ஆகவே அதன் ஒரு பகுதியாகிய ஏழ்மைக் குறைப்புக்கும் எதிரானவர்கள் என்று அதிமேதாவித்தனமாக வாதிட முடியாது. அதைப்போலத்தான், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் தெரிவிக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவாதங்களை, ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் தெரிவிக்கும் எதிர்மறையான ஆதரவை மறுப்பதற்குப் பயன்படுத்துவது அயோக்கியத்தனமானது.
இடஒதுக்கீடு கொள்கையை ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் ஏற்கும் அதேசமயம், தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைப் போலவே இதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டமாகட்டும், இட ஒதுக்கீட்டுச் சீர்திருத்தமாகட்டும், இரண்டையும் தொடர்ந்து வரம்பின்றி செயல்படுத்திக் கொண்டே இருந்தால் எதிர்விளைவுகள் அதாவது முந்தையதில் முதலாளித்துவக் கண்ணோட்டமும், பிந்தையதில் சாதியக் கண்ணோட்டமும்தான் வலுப்படுத்தப்படும் என்கிறோம். இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த சிலர் கருப்புப் பார்ப்பனர் களாக நடந்து கொள்வதையும் பார்க்கி றோம். இட ஒதுக்கீடு கொள்கை ஒரு சீர்திருத்தம்தான் என்றபோதும், அதைக்கூட சகித்துக் கொள்ளாது பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகள் காட்டும் எதிர்ப்பு கடுமையாகப் போராடி முறியடிக்க வேண்டியது என்கிறோம். அதேசமயம், முன்பு விளக்கியதைப் போன்று இடஒதுக்கீட்டின் பலன்களை அதற்குத் தகுதியற்ற ஆதிக்க சாதிகள் (சமூக ரீதியில் தொடர்ந்து ஒடுக்குமுறை செலுத்தி வரும் சாதிகள்) பெறுவதையும் எதிர்க்கவேண்டும். ஆனால், இத்தகைய ""சாதி இந்துக்களின்'' நலன்களுக்காகத்தான் தமிழினவாதிகள் உட்பட சமூக அநீதிக்காரர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியாளர்கள் மீது பாய்கின்றனர், அவதூறு செய்கின்றனர்.
—புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு

குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?
குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?
பி.இரயாகரன்
12.07.2007
அறிவுபூர்வமாகவே இணங்கி வாழத் தயாரான குழந்தைகளை, அறிவற்றதாக்குவது யார்? மாடு மாதிரி தின்னப் போடுவதோ, புண்ணாக்கு மாதிரி கல்வியை திணிப்பதா, பெற்றோரின் கடமை? இதை பூர்த்திசெய்வதே பெற்றோரின் பணி என்று நம்புவது, பெற்றோரின் அறிவீலித்தனமாகும். அதாவது குழந்தை பணம் சம்பாதிப்பதை வழிகாட்டுவதா, பெற்றோரின் கடமை? இப்படித்தான் பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆகவே ஆட்டுக் கிடையை வளர்க்கும் மனநிலையில் தான், குழந்தையை வளர்க்கின்றனர். மொழி மற்றும் உடல் வன்முறை மூலம் இதைச் செய்யமுனைகின்றனர். இப்படி இணக்கமற்ற குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.
குழந்தையை இணக்கமான வகையில், அறிவியல் பூர்வமாக இணங்கி நிற்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும், என்று பெற்றோர் கற்பனை கூட செய்வதில்லை. ஆனால் அதையே, குழந்தை தம்முடனான சமூக உறவில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். முரணிலையான அனுகுமுறையுடன் கூடிய பெற்றோரின் செயல்பாடுகள். அதாவது சமூகமாக குழந்தை தம்முடன் வாழவேண்டும் என்று விரும்பும் சுயநலம், தாம் அல்லாத மற்றவருடன் சமூகத்துக்கு எதிராக சுயநலத்துடன் வாழத்துண்டும் நடைமுறையைக் கையாளுகின்றனர்.
பெற்றோர் குழந்தை வளர்ப்பில் சரி, குழந்தை பெற்றோர் பாரமாரிப்பில் சரி, பரஸ்பரம் இணங்கிய அனுகுமுறை தான், சுயநலமல்லாத சரியான சமூக மனித உயிரியை உருவாக்கும். இதற்கு மாறாக சுயநலம் கொண்ட பெற்றோர், குழந்தையுடனான உரையாடல் என்பது, குழந்தைகளை விடப்பிடியாக நச்சரிப்பதாகவே உள்ளது. குழந்தை ஏன், எதற்கு என்ற கேள்விகளுடன் தான், தமது அறியாமையையும், அறிந்து கொள்ளும் நுனுகிய ஆர்வத்துடன் தான் பெற்றோரை அனுகுகின்றது. இது எல்லாக் குழந்தைகளிடமும் இயல்பில் உள்ளது. இந்தக் குழந்தைகளின் ஆர்வத்தை தெளிவுபடுத்தி வளர்க்கும் ஆற்றல், எந்தளவுக்கு எமது பெற்றோரின் சமூக மனப்பாங்கு சார்ந்து அறிவியல்பூர்வமாக உள்ளது.
குழந்தையின் கேள்வியை, அதன் ஆர்வத்தை, அதன் துடிப்பை எதிர்மனப்பாங்கில் தான் பெற்றோர்கள் அனுகுகின்றனர். பெற்றோர் தமது மனச்சிக்கலை, மனவுழைச்சலை குழந்தையின் ஆர்வம் மீது வெறுப்பூட்டும் வகையிலேயே காட்டுகின்றனர். மகிழ்;ச்சியாக, பொறுமையாக, விடப்பிடியாக எத்தனை பெற்றோர் குழந்தையுடன் உரையாடுகின்றனர்? இதற்கு மாறாக குழந்தை மேல் சினந்து விழும் ஒரு உரிமையை, அவர்களுக்கு கட்டளையிடும் அதிகாரத்தை யார் வழங்கியது?
தாய்மையும், பெற்றோரின் உரிமை என்பதும், இணங்கிய சமூக வழிநடத்தலுக்கு உட்பட்டதே ஒழிய, அவர்களை துன்பப்படுத்துவதற்குரிய பெற்றோரின் சொந்த அதிகாரமல்ல. மிகச் சிறிய இடைவெளியில் மிக நுட்பமாகவே இது உள்ளது. சுதந்திரம் உரிமை என்பதெல்லாம், பரஸ்பரம் சமூகமாக இருத்தல் சார்ந்தது. இதை பெற்றோரும் குழந்தையும் இணக்கப்பட்டுடன் பரஸ்பரம் புரிந்து கொள்வது அவசியம். இதை உருவாக்குவதே பெற்றோரின் சமூகக் கடமை.
ஆனால் இது மீறப்படுகின்றது. பெற்றோர் தமது அதிகாரத்தின் எல்லை உள்ளவரை, குழந்தை சாத திட்டுவது, அவர்கள் மீது எரிந்து வீழ்வதும், மொழி ரீதியான வன்முறை, உடல் ரீதியாக வன்முறை மூலம் குழந்தைகள் அன்னியமாக்கின்றனர். குழந்தையின் சுயமற்ற மழலை வயதில் கொஞ்சுவதும், கெஞ்சுவதும், குழந்தையின் சுயம் வளரவளர அதை எதிராக பார்க்கின்ற மனப்பாங்காக மாறுகின்றது. அவர்களை சாத திட்டுவதாக மாறுகின்றது அல்லது அவர்கள் பாட்டில் விட்டுவிடுவதாக மாறுகின்றது. இது உண்மையில் அவர்களால் உளப்பூர்வமாக புரிந்து திட்டமிட்டு செய்வதல்லை. மாறாக தனிச்சொத்துரிமை அமைப்பு கண்ணோட்டம், எந்த உயிரியலின் சுயத்தை எதிராகவே கற்பிக்கின்றது. சுயமற்ற மந்தைகளும், பொம்மைகளையும் கொண்ட உயிரிகளைத் தான், தனிச்சொத்துரிமை அமைப்பு சமூகமாக முன்வைக்கின்றது. சுயமாக சிந்திக்க, சுயமாக கேட்க, சுயமாக வாழ, தனிச்சொத்துரிமை அமைப்பு அனுமதிப்பதில்லை. தான் கீறி கோட்டை சமூகமாக வரைந்து, அதை மீற அனுமதிப்பதில்லை. இது சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இதற்கேற்ப பெற்றோர் குழந்தையிடம் எதிர்பார்ப்பது மந்தைதனத்தையும், பொம்மைத்தனத்தையும் தான். குழந்தைகள் இதை மீறும் போது உடல் மற்றும் மொழி வன்முறைக்குள்ளாகின்றனர். அன்றாட குழந்தையின் இயல்பான சுயம் என்பது, இதை மீறுவதாக உள்ளது. இதை நலமடிப்பது தான், பெற்றோரின் கடமையாக்கப்பட்டுள்ளது. அதாவது அன்பும் அதிகாரமுமாகின்றது. குழந்தை நடத்தைகள் மீது இப்படி பெற்றோரின் நச்சரிப்பும், உடன்பாடின்மை என்பது அன்றாட வாழ்வாகிவிடுகின்றது. சில பெற்றோர் இதானல் தாம் அன்னியமாகி, தறிகெட்ட வகையில் குழந்தைகளை விட்டுவிடுகின்றனர் அல்லது அவர்களின் விருப்புக்கு எற்ப தாம் தளம் போடுகின்றனர்.
பெற்றோர் வழிகாட்டுமாற்றலை உண்மையில் இழந்து விடுகின்றனர். இவையே இன்றைய குடும்பங்களாக இருக்கிறது. பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும் இயந்திரத்தின் சுயநலம் கொண்ட ஒரு உறுப்பாகவே பிள்ளையைக் காண்பதன் மூலம், குடும்பத்தின் உறுப்பாக குழந்தை நீடிக்கின்றது. குழந்தை பணத்தை சம்பதிக்க தொடங்க, குழந்தை பெற்றோரைக் கைவிட்டு பணத்தின் பின்னால் ஓடுகின்றது. அதைத் தான் சமூகமாக கற்றுக் கொடுக்கின்றது. இப்படித்தான் குழந்தை வளர்ப்பு உள்ளது. மிக எளிமையான ஒரு கேள்வி. குழந்தை ஏன் படிக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டால், அவர்கள் என்ன பதில் கூறுவார்கள்? குழந்தை பணம் சம்பதிக்கத் தான் படிக்க வேண்டும். இது புரிந்து கொள்ள மற்றொரு உதாரணம். ஏன் கடவுளைக் நாம் கும்பிட வேண்டும்? சரி, அந்த கடவுளிடம் கும்பிடுபவன் என்னத்தைக் கோருகின்றான்? இதற்கு பின்னால் இருப்தெல்லாம் சொந்த சுயநலம்;. இதைத் தான் தனிமனித சுயநல சமூக அமைப்பு மீண்டும் மீண்டும் கூறுகின்றது. பெற்றோரின் குழந்தை வளர்ப்பு இதற்கு உட்பட்ட அலங்கோலமாக இயங்குகின்றது. அதன் பக்கவிளைவுகள் பெற்றோர் குழந்தை என இருவரையும் பாதிக்கின்றது. இந்த வகையில் தான் பெற்றோர் குழந்தையைச் சுரண்டும் ஒருவராக இயங்குகின்றனர். சாத சுயநலத்துடன் குழந்தைக்கு, திணிக்க முனைகின்றனர். கல்வியே பணம் சம்பதிக்க உதவுவதாக காண்கின்றனா. இப்படி கொள்கை கொண்ட எமது மனப்பாங்கு, குழந்தையை கற்பிக்கும் போது வன்முறை வடிவில் அதைச் செய்கின்றது. குழந்தை அழாத, சினக்காத, விரும்புகின்ற வகையில் கல்வி போதிக்கும் முறை எம்பெற்றோர் மத்தியில் கிடையாது. குழந்தையுடன் இணங்கிப்போதல், எற்றுக்கொள்ள வைத்தால், கற்றலில் ஒரு ஆர்வத்தை உருவாக்குதல் ஊடாக கற்கும்முறையுடன் அவர்களை அனுகத் தெரிவதில்லை.
மாறாக வன்முறை மூலம் ஊட்டுதல், திணித்தல் என்ற கற்பிக்கும்முறையே பிரயோகிக்கப்படுகின்றது. குழந்தைக்கு பாலூட்டடி சோறு தித்துவதில் கூட இந்த வழிமுறை பின்பற்றப்படுகின்றது. ஆசைகாட்டுதல், லஞ்சம் கொடுத்தல் மூலம், உணவை பிள்ளையின் வாயில் அவர்கள் அறியாது திணிக்கப்படுகின்றது. குறிப்பாக தாய்மையின் அனுகுமுறையே இப்படி இழிவாகி சீராழிகின்றது. இதே உத்திதான் கல்வி போதிக்கும் முறையிலும் காணப்படுகின்றது. நீ கல்வியை கற்றால் என்ற வாக்குறுதி தரப்படுகின்றது. அதாவது லஞ்சம் தரும் வாக்குறுதி மூலம், கற்கக் கோரப்படுகின்றது. இதைத்தான் முதாலாளி செய்கின்றான்;. பொருட்கள் மூலம், பொருள் லஞ்சம் மூலம் கற்கும் உணர்வை குழந்தையிடம் ஊட்டமுனைகின்றனர்.
இந்த சமூக அமைப்பு வெளிப்படுத்தும் எண்ணங்களை, நிறைவேற்ற உள்ள வழிகளோ, குறுக்குவழி சார்ந்தது. வன்முறை, ஆசைகாட்டுதல், மோசடி செய்தல், லஞ்சம்கொடுத்தல் என்று எண்ணற்ற குறுக்கு வழிகளில் தான், குழந்தை வளர்ப்பு நடக்கின்றது. ஏன் பெற்றோர் குழந்தை உரையாடல் கூட இதற்குள் தான் நடக்கின்றது. அன்பை வெளிப்படுத்துவது கூட பொருள் சார்ந்த லஞ்சம் தான். அதையே எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படியாக குழந்தைகள் சமூகத்தின் உறுப்பு என்ற நிலையில் இருந்து மறுதலிக்கப்படுகின்றது. குழந்தையின் அனைத்துப் பிரச்சனைiயும் பரஸ்பரம் இணங்கி எற்க வைத்தல் என்ற, அறிவியல் ப+ர்வமான இணக்கமான வழி கையாளப்படுவதில்லை. மாறாக லஞ்சம் கொடுத்தல், ஆசை காட்டுதல், மோசடி செய்தல், இதுவே இணக்கமான வழியாக பார்க்கப்படுகின்றது. இதக்குள் சரிவரவில்லை என்றால் வன்முறை, தண்டனை என்று மாற்றுவழி. சரி, பிழை என்ற தர்க்கத்துக்கு அப்பால், பிள்ளையை இணங்க வைக்கும் பரஸ்பரமான அறிவியல் விவாதம் தவிர்க்கப்படுகின்றது. இது குழந்தை தான் செய்தையும், ஏன் பெற்றோர் தாம் செய்வதையும் கூட சுய விசாரனை செய்கினறது. விவாதமும், விவாதிக்கும் வடிவமும், எமது சமூகப் போக்கில் குருட்டுத்தமாகவே செயல்பட்டுள்ள நிலையில் இது மேலும் கடுமையான சிக்கலாகின்றது. ஒரு விவாதம், ஒரு விமர்சனம், சுய விமர்சனம் சமூகத்தில் மட்டுமல்ல, குடும்பலும் கூட அவசியமானது. அதை எமது சமூகம் அடியோடு இழந்துவிட்ட நிலையில், அதாவது இப்படிச் செய்வது சமூகத் துரோகமாக கற்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், எமது குடும்பங்கள் வன்முறை கொண்ட குடும்பங்களாகவே மாறிவிடுகின்றது. அனைத்தையும் வன்முறையூடாக அல்லது லஞ்ச வழிகள் மூலமாகவே அனுகின்றது. ஆண்கள் உடல் வன்முறையாளர்களாக, பெண்கள் மொழி வன்முறையாளராக செயல்படுகின்றனர்.
இப்படி குடும்பம் என்ற சமூக உறுப்பில் இருந்தும் குழந்தைகள் அன்னியமாகின்றனர். பல குடும்பங்களி;ல குழந்தை பெருமாளவில் தந்தைக்கு அன்னிமாக வாழ்கின்றனர். இதைத் துண்டும் வகையில் வாழ்க்கைச் சூழல். தாய் அதிக நேரம் வீட்டில் இருப்பதும், தந்தை வேலைக்காக அதிக நேரம் வெளியில் இருப்பதால், தந்தையின் அன்னியமான சூழலுக்குள் தான் குழந்தையுடனான உறவு களங்கப்படுகின்றது. இதற்கு மேலாக தந்தையின் குடி, மணைவி தந்தைக்கு எதிரான புறுபுறுப்பும் மொழி வன்முறையும், சாத தந்தை பற்றி தாய் குற்றம் காணுதலும் சுமத்தலும், குழந்தை தாயுடன் வாழ்வதை கட்டாயப்படு;த்துகின்றது. குடும்பத்தில் தந்தை அன்னியமான உறுப்பாக்கப்படுகின்றனர். குடும்பத்தில் தாய் தந்தைக்கு இடையில் சாத எற்படும் முரண்பாடு, மணைவி கணவனுக்கு எதிராக பிள்ளையிடமே குற்றம் சாட்டியும், குறை சொல்லி புலம்பும் போது, கணவன் குடும்பத்தில் இருந்து அன்னிமாவது மேலும் அதிகரிக்கின்றது.
மறுபக்கத்தில் மணைவிக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவில் உள்ள நெருக்கம் இணக்கமானதல்ல. மாறாக அதுவும் அன்னியமானதாகவேயுள்ளது. எப்படி கணவன் மேலான அதே மொழி வன்முறை உள்ளதோ, அதே வழியில் அதைவிட மோசமாக குழந்தை மேலான நச்சரிப்பே தாயின் சொந்த வாழ்க்கையாகிவிடுகின்து. குழந்தைக்கேயுரிய விளையாட்டுத்தனத்தை குற்றமாக காண்கின்ற போக்கும், விட்டுக்கொடுக்க மறுக்கின்ற போக்கும், கண்டு காணமல் விடப்பட வேண்டியதை சாத கண்டு கொள்வதும், தாய் குழந்தை உறவின் உள்ள எதிர்மறையான அம்சமாகவுள்ளது.
எப்படி தந்தை தாய் அனுகுகின்றளோ, அதைவிட மோசமாக குழந்தையை தாய் அனுகுகின்றாள். குழந்தையை சாத திட்டிக்கொண்டும், குற்றம் கண்டு கொண்டும், பேசிக்கொண்டு இருக்கின்ற சூழல்;. குழந்தைக்காவே வாழும் பல தாய்மார்கள், இதைக் காண்பது கிடையாது. உண்மையில் குழந்தைகள் தந்தையுடன் சோந்து நிற்க முடியாத சூழல், தாயுடன் நெருங்க முடியாத சூழல்.
குழந்தை வீட்டில் தனது நிம்மதியை இழக்கின்றது. இது மாற்று வழியை தேடத் துடிக்கின்றது. குடிக்கும் கணவன் வீட்டில் மனைவியால் நிம்மதியை பெறமுடியாத போது, மற்றொரு தவறுக்கு எப்படி துண்டப்படுகின்தோ, அப்படித்தான் குழந்தை உலகமும்;. குழந்தை மாற், வழியிலான அன்பையும், ஆதாரவையும், மாற்று வாழ்கை முறையையும் வெளி உலகில் தேடுகின்றது. நண்பர்கள் வட்டம் முதல் பாலியல் மோகம் கொண்டு அலையும் வக்கிரம் பிடித்த கும்பலின் ஆசைகளுக்கும் வலிந்து பலியிடப்படுகின்து.
இரகசியமான குறுக்கு வழிகளில், குழந்தை தனக்கென்ற ஒரு வழியை கண்டுபிடிக்கின்றது. தனக்கென்ற இரகசியமான ஆதாரவை வெளி உலகில் பெறுகின்து. அவை பெருமளவில் எப்போதும் சுயநலத்துடன் தவறாகவே வழிகாட்டப்படுகின்றது.
(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு
1.போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது
2.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம
3.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்
4.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்
5.கணவன் மணைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை
6. பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகி
தொடரும

Wednesday, July 11, 2007
கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்.

பி.இரயாகரன்16.01.2007
தமிழ் தேசிய யாழ் மையவாதம் மட்டுமல்ல, கிழக்கு மையவாதமும் பேரினவாதத்தினால் அழிக்கப்படும். பேரினவாதம் மட்டும் தான், மீண்டும் வெற்றி பெறும் எதார்த்தம். இதை நோக்கிய அரசியல் எல்லைக்குள் தான், அனைத்தும் மையப்பட்டு செயல்படுகின்றது. தமிழ் மக்களின் அழிவும் சீரழிவும், புலிகளால் மட்டுமல்ல கருணா தரப்பாலும், அதற்கு அப்பால் புலியெதிர்ப்பு கும்பலாலும், கிழக்கு மையவாதிகளாலும் கூட நடக்கின்றது.
கிழக்கு வாழ் தமிழ் மொழி பேசும் மக்களின் தனித்துவமே திட்டமிட்ட வகையில் ஒழித்துக்கட்டப்படும். இதை நோக்கி ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. இதில் தமிழ், முஸ்லீம் என்று வேறுபாடுகள் எதுவும் இருக்கப் போவதில்லை. இந்த நிலைமையை குறைந்தபட்சம் புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் கூட, எந்த தரப்பிடமும் இன்று கிடையாது.
வரலாற்றில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை எம்மால் முன்கூட்டியே நிச்சயமாக எதிர்வு கூறமுடிகின்றது. புலிகள் இந்த நிழல் யுத்தத்தை ஒருதரப்பாக வலிந்து தொடங்க முன், இந்த யுத்தத்தின் விளைவை நாம் முன் கூட்டியே கூறியிருந்தோம். மக்கள் பெயரில் யுத்தத்தை புலிகள் கோரிய போது, அந்த யுத்தம் தொடங்கினால் முதலில் கிழக்கில் இருந்து புலிகள் ஒழித்துக்கட்டப்படுவார்கள் என்பதை நாம் முன் கூட்டியே பலமுறை எழுதியிருந்தோம். எமது இந்த அரசியல் ரீதியான சரியான எதிர்வு கூறல் மீது, சிலர் அது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதினர். இப்படி பல சரியான அரசியல் அவதானங்கள், அதன் விளைவுகள் நாங்கள் வெளியிட்டது போன்று நிகழ்கின்றது. இதை நாம் இங்கு கூறுவதன் நோக்கம், எதிர்கால நிலைமைகள் மீதான எமது அரசியல் எதிர்வினையை, எமது சரியான அரசியல் பார்வையை உட்கிரகிக்க வேண்டிய வரலாற்றின் தேவையை இடித்துரைக்கவே.
எமது அரசியல் அனுமானங்கள், முடிவுகள் சரியாகவே நாம் விளக்கியபடி நிகழ்ந்து வருகின்றது. புலிகள் கிழக்கில் இருந்து கிட்டத்தட்ட முடக்கப்பட்ட ஒருநிலையில், கூனிக் குறுகி நிற்கின்றனர். இதில் இருந்து அவர்களால் மீளவே முடியாது. புலிகள் ஒரு தற்கொலைக்கு ஒப்பான பாரிய தாக்குதலை நடத்த முயன்றாலும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக மாறாது. மக்கள் மத்தியில் இருந்து புலிகள் அன்னியமாதல் என்பது, வரலாற்றில் அவர்கள் காணாத அளவில் நிகழ்ந்துள்ளது.
மறுபுறத்தில் பேரினவாதம் விரைவில் கிழக்கில் இருந்து புலிகள் முற்றாக ஒழித்துக்கட்டப்படுவர் என்கின்றது. புலிகளோ எந்த வீர சாகச சலசலப்புமின்றி நரிகளாக ஒடுங்கி மௌனமாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு முகமாக சந்தடியின்றி பேரினவாதத்தின் சூழ்ச்சியில் வீழ்ச்சியுறுகின்றது. தமிழ் மக்களின் தற்கொலைக்கு ஒப்பான குறுந்தேசிய இன வரலாறு, சொந்த பாசிசத்தால் தானாகவே மரணித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சிகள் புலிகளின் வரலாற்றில் தற்செயலானவையல்ல. புலிப் பாசிசம் தானாகவே வெம்பி வீங்கி, தானாகவே பொலபொலவென்று உதிர்கின்றது. இது கிழக்கில் தொடங்கிவிட்டது. வெம்பல் எந்த கறிக்கும் கூட உதவுவதில்லை என்பது போல், இந்தப் போராட்டம் எதையும் மக்களுக்காக சாதித்தது கிடையாது. மனித அழிவுகளையும் அவலங்களையும் தவிர, தமிழ் மக்கள் கண்டது இன்று எதுவுமில்லை.
தமது சீரழிவையே, தேசிய வீரமாக முன்கூட்டியே புலிகள் பிரகடனம் செய்தனர். ஆனால் இதன் விளைவை நாம் முன்பே சுட்டிக்காட்டி வந்தோம். கருணா விவகாரம் ஒரு அதிகாரப் போட்டியாக வந்தபோது, நாம் எழுதிய கட்டுரையில் மிகத் தெளிவாக இதன் விளைவை வலியுறுத்தினோம். தமக்கு இடையிலான அதிகார மோதலை, ஒரு பிரதேச மோதலாக புலிகள் பாணியில் கருணா தரப்பு காட்டியபோது, புலிகள் தமிழ் மக்கள் பெயரால் எதிர்வினையாற்றும் அதே பண்பு, இதற்கு இருக்கும் என்பதையும், இதை புலிப்பாசிசம் உணர மறுப்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.
அதன் விளைவாக ஒரு சமூகத்தை இராணுவ வன்முறைக்குள் அடக்கிவிடலாம் என்று நம்பிய யாழ் மையவாதம், நடுச்சந்தியில் நிர்வாணமாகி நிற்கின்றது. அன்று கருணா தரப்பை வெறும் கருணாவாக, அதை வெறும் குறியீடாக காட்டியதன் விளைவு, தமிழ் மக்களை ஈடுசெய்ய முடியாத வரலாற்று முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் இறுதி ஆணிகள் அடிக்கப்படுகின்றது.
இப்படி அதிகார போட்டியில் தனிக் குழுவான கருணா ஒன்றும் புலிகளின் நடத்தைகளில் இருந்து, அவர்களின் அரசியலில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர் அல்ல. புலிகள் தமிழ் மக்கள் மீது எதிர்வினையாற்றுவது போல், கருணா கிழக்கு மக்களின் மீது எதிர்வினையாற்றுகின்றார். மக்கள் பிரச்சனைகள் மீது புலிகள் போல் கருணா தரப்பும் செயல்படுவதுடன், இதற்கு மாறாக எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.
மக்களுக்கு எதிராக புலிகளைப் போல் செயல்பட்டபடி, தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள, இந்தியா இலங்கை அரசின் அரசியல் நோக்களுக்கு ஏற்ப ஒரு விசுவாசமுள்ள நாயாக சீரழிந்தார். இப்படி ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை உரிமைகள் மறுத்து, மக்களை சார்ந்து நிற்கத் தவறினார்.
ஒட்டுமொத்தத்தில் அரசியல் களம் என்பது மக்களில் இருந்து அன்னியமான குழு நடவடிக்கையாகி, அக் குழுக்கள் இன்னமொரு கூலி இராணுவத்தினால் அழிக்கப்படுகின்றது. புலிகள் அழிக்கப்படும் வரை தான், கிழக்கில் கருணா குழுவின் ஆட்டமும் கூத்தும் நடக்கும். புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக துடைத்தொழிக்கப்படும் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், கருணா குழுவின் அட்டகாசங்கள் ஓங்குகின்றது. உண்மையில் சொல்லப் போனால் பேரினவாதம் கருணா குழுவின் வடிவில் இயங்குகின்றது. உண்மையில் இந்த சூதாட்டம் புலியை ஒழித்துக்கட்டப்படும் வரையிலான, பேரினவாத சலுகையும் சூழ்ச்சியுமாகும்.
கிழக்கில் புலிகள் முடிவு தெளிவானவுடன், கருணா குழுவின் ஆட்டத்தை பேரினவாதம் முடிவுக்கு கொண்டு வரும். புலிகளை அழிக்கும் வெறும் கூலிக் குழுவாக இருக்க மட்டும் அனுமதிக்கும் எல்லைக்குள் தான், கருணா குழுவின் அரசியலை பேரினவாதம் அனுமதிக்கின்றது. இதை மீறும் போது கருணா குழுவும் அழிக்கப்படும். இந்த உண்மையை யாரும் நிராகரிக்க முடியாது. இதை கருணா குழு புலியை ஒழித்த பின் மீறமுடியும் என்று நம்புவது, புலிகள் தம்மைத்தாம் நம்பக் கோருவது போன்ற ஒரு கற்பனையான வெற்று நம்பிக்கை தான்.
பலரும் கண்ணை மூடிக்கொண்டு கனவு காணுகின்றனர். புலிகள் கிழக்கில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்ட பின், கருணா என்ற கூலிக் குழு சொர்க்கத்தின் வழியை காட்டுவார்கள் என்று நம்ப முனைகின்றனர். கிழக்கைச் சேர்ந்த, புலியெதிர்ப்பை அரசியலாக கொண்ட மக்கள் விரோத புல்லுருவிகள் இப்படி கொக்கரிக்கின்றனர். பேரினவாதம் கிழக்கு மக்களின் ஜனநாயகத்தை மீட்டு, அதன் தனித்துவத்தை உறுதி செய்யும் என்று இவர்களின் அற்ப அரசியல் புலம்பவைக்கின்றது. ஆனால் நடக்கப் போவது அந்த மக்களின் சுடுகாடுதான். மக்களின் பிரதான எதிரியான பேரினவாதம் தன் நோக்கில் எந்த எதிர்ப்புமின்றி, சலசலப்பின்றி செயல்படுகின்றது.
யாழ் மையவாதம், அதை பிரதிநித்துவம் செய்யும் புலிகள், புலிகள் அல்லாத தரப்பு மீது காட்டுகின்ற எந்தவிதமான கோட்பாடற்ற கிழக்கு மையவாத புலம்பல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. மக்கள் என்ற கோணத்தில், மக்கள் நலன்கள் என்ற அடிப்படையில், இவர்களிடம் எந்த அரசியல் முன்முயற்சியும் கிடையாது. மாறாக அகதி முகாம் நடத்த கிழக்கின் பெயரில் புலியைப் போல பணம் சேகரிப்பதில் மட்டும் தான் இவர்களின் அற்பத்தனமான அரசியல் உள்ளது.
உண்மையில் மக்களை பிளந்து அரசியல் செய்ய நினைப்பது, புலியின் அதே வலதுசாரிய அரசியல் தான். ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கத் தவறுகின்ற கருத்துகள், செயல்பாடுகள், குறுகிய கிழக்கு மையவாதமாகின்றது. உண்மையில் சொன்னால் அதே யாழ் மையவாதம். இந்த குறுகிய போக்கின் பின், சில சமூக விரோத புல்லுருவிகளின் வாழ்க்கையில் மட்டும் மிதக்கின்றது. பிரதேசம், இனம், சாதி என்று எந்த சமூக ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ளும் போது, ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கவும், அவர்களின் சமூக பொருளாதார கோரிக்கையுடன் இணைந்து நிற்கவும், மற்றய ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றுபட்டு நிற்கவும் தவறுகின்ற அரசியல் இழிவானது, கேவலமானது. இதை மீண்டும் எம் வரலாற்றில் அனுமதிக்க முடியாது. மனித விரோதத்தில் வக்கிரம் கொண்டது. குறுகிய எல்லைக்குள் இனம், பிரதேசம், சாதி என்று ஒன்றை முன்னிலைப்படுத்தி, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்கள் சார்ந்த சமூக பொருளாதார கோரிக்கை சார்ந்து நிற்க தவறுகின்ற அற்பத்தனம் தான், கடந்த எமது 30 வருட போராட்டத்தில் நடந்தது, அது தான் கிழக்கின் பெயரிலும் இன்றும் நடக்கின்றது. இன்று கிழக்கு மையவாதம் அதே பாதையில் தன்னை முன்னிலைப்படுத்தி, சில பொறுக்கிகள் குலைக்க முனைகின்றனர். யாழ் மையவாதம் இல்லாத கிழக்கு மக்களுக்கு, நீங்கள் எதைத்தான் மாற்றாக கொடுக்கப்போகின்றீர்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தி சிலர் கொழுத்தது போல், கிழக்கை மையப்படுத்தி சிலர் கொழுப்பர்.
மறுபக்கதில் பேரினவாதம் இதைப் பயன்படுத்தி, கிழக்கை பல முரண்பாட்டின் எல்லைக்குள் வதைத்தபடி, தனது பேரினவாத நலனை அடைகின்றது. அறுவடையை அவன் செய்யத் தொடங்கிவிட்டான். கிழக்கில் பேரினவாதம் கட்டமைத்துள்ள சிங்கள மயமாக்கல் என்ற அரசியல் சூழ்ச்சிக்குள், அந்த நிலம் விழுங்கப்படுகின்றது. அதை நோக்கி இட்டுச் செல்வதில் புலிகள் முதல் கருணா தரப்பு வரையும் உடந்தையாக இருக்கின்றது. இதற்கு அப்பால் கிழக்கு மையவாதத்தை உச்சரிக்கும் பலரின் அரசியல் வங்குரோத்தின் மீது ஏறி பேரினவாதம் சவாரி செய்கின்றது.
இதனடிப்படையில் சர்வதேச அழுத்தங்களுக்கு இடையில் முன்வைக்க முனைந்த, முனைகின்ற ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை இழுத்தடித்து வருகின்றது. கிழக்கில் தமிழர் தரப்பின் வலுவற்ற ஒரு நிலையை உருவாக்கவும், தமிழர் முஸ்லீம் தரப்பை மோதலின் உச்சத்துக்கு இட்டுச் சென்று, கிழக்கில் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சிதைக்கும் ஒரு கால அவகாசத்தை எடுத்து வருகின்றது. கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களை எதிரெதிரான முகாமில் பிளந்து, அதில் பேரினவாதம் குளிர் காய்கின்றது.
பல முரண்பட்ட பிரிவுகளுக்கு இடையில், ஒரு வெற்றிடத்தில், கிழக்கு மக்களுக்கு ஒரு தீர்வை வைப்பதன் மூலம், பேரினவாத நலன்களை கிழக்கில் வெற்றிகரமாக பூர்த்தி செய்யமுடியும். இந்த வெற்றிடத்தில் அவர்களை மோத வைப்பதன் மூலம், கிழக்கு மக்களின் அபிலாசைகளை பிளந்து, பிரித்து அரசியல் இலாபத்தை அடைய பேரினவாதம் செய்யும் சதிதான், இன்று கிழக்கில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கிழக்கு மக்களை சார்ந்து நிற்க தவறுகின்ற கிழக்கு மையவாதிகள், அந்த மக்களின் முதுகுகளில் சவாரி செய்தபடி, பேரினவாதத்தின் செருப்பாகி நிற்கின்றனர்.

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் : சர்வகட்சி பித்ததலாட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களையடுத்து, 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது, மைய அரசு. இதன் மூலம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு எதிரானவையல்ல எனக் காட்டிக் கொள்வதோடு, அதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கவும் முயலுகிறது.
""குறைந்தபட்சம் 1,000 ஹெக்டேர் (2,500 ஏக்கர்) நிலப்பரப்பில் தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும்; அதிகபட்ச நில உச்ச வரம்பு எதுவும் கிடையாது'' என்ற 2005ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில், தற்பொழுது, ""சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 5,000 ஹெக்டேருக்கு மேல் நிலம் ஒதுக்கக் கூடாது'' என உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
""மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களே நேரடியாக விவசாயிகளிடம் பேரம் பேசி, நிலங்களை வாங்கிக் கொள்ளலாம்.''
""சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்களை விற்கும் விவசாயிகளுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசு நிர்ணயிக்கும் வரையறைபடி, மறுவாழ்வுக்கான நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது. மேலும், நிலத்தை விற்கும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்'' என மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான வரிச் சலுகைகள் மீது கை வைக்க விரும்பாத மைய அரசு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கட்டிடங்களைக் கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த வரிச் சலுகைகளை அளிக்கும் மாற்றத்தை தற்பொழுது கொண்டு வந்துள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி அளிக்கும் காலக் கெடுவை மூன்று ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைப்பதனைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதென்றும் மைய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களையும், சலுகைகளையும் அறிவித்த கையோடு, மேலும் 83 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்குவதற்கான அறிவிக்கையினை வெளியிடும் அனுமதியையும் வழங்கி விட்டது. இந்த 83ஐயும், சேர்த்து இதுவரை 162 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது; 325 விண்ணப்பங்கள் அனுமதி வழங்கப்படுவதற்கான பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
···
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் கதையாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகள், இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதென அறிவித்துள்ளன.
""சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்குக் குறைந்தபட்சம் 400 ஹெக்டேர் (1,000 ஏக்கர்) நிலமும், அதிகபட்சமாக 2,000 ஹெக்டேர் (5,000 ஏக்கர்) நிலமும் போதுமானது; மாநில அரசுகளை ஒதுக்கிவிட்டு, முதலாளிகளே விவசாயிகளிடம் பேரம் பேசி நிலத்தை வாங்குவதை அனுமதிக்கக் கூடாது; நிலங்களைக் குத்தகைக்குத்தான் விட வேண்டுமெயொழிய, நிலத்தை முதலாளிகளுக்குச் சொந்தமாகக் கிரையம் செய்து கொடுக்கக் கூடாது; வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும்; எல்லாவிதமான தொழில்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்க அனுமதிக்கக் கூடாது; நிலத்தை விற்கும் விவசாயிகளைச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதோடு, தொழிலாளர்களுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளேயே குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்'' என இடதுசாரிகள் மாற்று ஆலோசனைகளை மாற்றங்களை முன் வைத்துள்ளனர்.
இடதுசாரிக் கூட்டணியால் முன் வைக்கப்படும் இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால்கூட, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சொக்கத் தங்கமாகி விடாது என்பது ஒருபுறமிருக்க, இந்த ஆலோசனைகளைப் போலி கம்யூனிஸ்டுகளே கடைப்பிடிப்பதில்லை என்பதே உண்மை.
சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அதிகபட்ச நில உச்சவரம்பு (2,000 ஹெக்டேர்) 5,000 ஏக்கர் என நிர்ணயிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் 14,500 ஏக்கர் நிலத்தை சலீம் குழுமத்திற்குத் தூக்கிக் கொடுக்கத் திட்டம் போட்டனர்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும் என ஆலோசனை கூறும் இடதுசாரிக் கூட்டணி, சிங்குரில் 140 கோடி ரூபாய் பெறுமான 1,000 ஏக்கர் நிலத்தை வெறும் 20 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் விற்றுள்ளனர். இந்த 20 கோடி ரூபாயையும் டாடா 20 ஆண்டுகளில் செலுத்தலாம் எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்பொழுது கொண்டு வரப்பட்ட 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்ற வேண்டும் எனக் கோரும் இவர்கள், சிங்குரில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி டாடாவிற்காக நிலங்களைப் பிடுங்கினார்கள்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகப் பறிக்கப்படும் நிலங்களை முதலாளிகளுக்குக் கிரையம் செய்து கொடுக்கலாம் என்கிறது, மைய அரசு; கூடாது, நிலங்களைக் குத்தகைக்குத் தான்விட வேண்டும் என அடித்துப் பேசுகிறது சி.பி.எம். நிலத்தைப் பறி கொடுத்து விட்டு நிற்கும் விவசாயியைப் பொருத்தவரை, இந்த இரண்டுமே ஒன்றுதான்.
நிலத்தைப் பறி கொடுத்த பிறகு, விவசாயி கூலித் தொழிலாளியாகி விடுகிறான். ஆனால், சி.பி.எம்.மோ, அவனைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பங்குதாரராக மாற்றப் போவதாகப் பொறி வைக்கிறது. எத்தனை சிங்குர் விவசாயிகளை டாடா கார் தொழிற்சாலையின் பங்குதாரர்களாக மாற்றியிருக்கிறது சி.பி.எம்.?
நர்மதா அணை போன்ற பெரிய திட்டங்களுக்காக விரட்டியடிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுக்காமல் அரசே ஏய்க்கும்பொழுது, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் தனியார் முதலாளிகள் மறுவாழ்வு கொடுப்பதில் சட்டப்படியும், நியாயப்படியும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?
பொதுத்துறை நிறுவனங்களுக்காக நிலத்தைக் கொடுத்த விவசாயக் குடும்பங்களில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு வேலை கொடுக்காமல் அந்த நிறுவனங்களே ஏய்த்து வரும்பொழுது, நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலை கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?
···
நிலச் சீர்திருத்தம் ஓரளவிற்கு வெற்றிகரமான முறையில் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்க மாநிலத்திலேயே, மொத்த விளைநிலத்தில் 15 சதவீத விளைநிலங்கள்தான் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்; நிலச் சீர்திருத்தம் மூலம் நிலம் பெற்றவர்களில் 13 சதவீதம் பேர் தங்களது நிலத்தைப் பல்வேறு காரணங்களால் இழந்து விட்டதாகவும்; மேற்கு வங்க மாநிலத்தில் நிலமற்ற கிராம மக்கள் எண்ணிக்கை 39.6 சதவீதத்தில் இருந்து (1987-88) 49.8 சதவீதமாக அதிகரித்து விட்டதாகவும் (2000-01) அம்மாநில அரசு வெளியிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
இப்புள்ளி விவரம், நாடெங்கும் நிலச்சீர்திருத்தம் தீவிரமாக, புரட்சிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் நேரத்தில், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில், அரசே நிலப்பறி இயக்கம் நடத்துவதைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன.
இந்த நிலப்பறி இயக்கம் நடுத்தர ஏழை கூலி விவசாயிகளைப் போண்டியாக்கி, உயிர் வாழ்வதற்கு உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெதுவும் இல்லாத கூலித் தொழிலாளிகளாக உழைப்புச் சந்தைக்குள் தள்ளி விடுகிறது. வேலைக்குப் போட்டி போடும் பெரும் கூலிப் பட்டாளத்தைக் காட்டி, குறைந்தபட்ச கூலியை மேலும் மேலும் குறைப்பதற்கான வாய்ப்பை முதலாளிகளுக்குத் தருகிறது. விவசாயம் ஏற்கெனவே நெருக்கடியில் சிக்க வைக்கப்பட்டு, உணவுப் பொருள் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைகின்றன.
மேலும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது மறுகாலனி ஆதிக்கத்தின் துலக்கமான வடிவம். அம்மண்டலங்களில் இந்தியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்பதும்; இந்திய நாட்டவர் அம்மண்டலங்களுக்குள் நுழையத் தனி அடையாள அட்டைகள் வேண்டும் என்பதும்; அம்மண்டலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் / தரகு முதலாளிகளின் தனி சமஸ்தானங்களாக விளங்கும் என்பதும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி புதிய வடிவத்தில் மக்கள் மீது திணிக்கப்படுவதை நிரூபிக்கின்றன.
எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிரான போராட்டம் என்பது சாராம்சத்தில் மறுகாலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ இப்போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகச் சித்தரிக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அவசியமானவை என்ற ஓட்டுக் கட்சிகளின் வாதத்தை, அவைகளின் குருபீடமான உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கூட ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளோ இந்த விசயத்தில் அரசனை விஞ்சிய விசுவாசிகளாக நடந்து கொள்கின்றன.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற இந்த நிலப்பறி இயக்கத்தை, மறுகாலனி ஆதிக்கத் தாக்குதலை சில சில்லறை சீர்திருத்தங்களால் தடுத்து விட முடியாது. அப்படிச் சொல்வது, கத்தியின்றி, ரத்தமின்றி இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதாகக் கூறப்படும் மோசடிக்கு ஈடானது.·
குப்பன்

Tuesday, July 10, 2007
தில்லை போராட்டம் : வெற்றியை நோக்கி ஒரு படி!

தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகவும் வடலூரில் வள்ளலார் வழிபாட்டு முறையைப் பார்ப்பனமயமாக்கிய சதிக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருக்கின்றன. தில்லைக் கோயில் கருவறையின் எதிரில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தேவாரம்திருவாசகம் பாடலாம் என்று இந்து அறநிலையத்துறையின் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல, மதங்களையும் உருவ வழிபாட்டையும் எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் மறுத்து வள்ளலார் ஏற்படுத்திய வடலூர் சத்திய ஞான சபையில், சிவலிங்க வழிபாடும் பார்ப்பனச் சடங்குகளும் தடை செய்யப்பட வேண்டுமென்றும் வள்ளலார் உருவாக்கிய சோதி வழிபாடு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
""தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடக்கூடாது'' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் விதித்திருக்கும் தடைக்கு எதிராக சிவனடியார் ஆறுமுகசாமி மேற்கொண்டு வரும் போராட்டம் நெடியது. ஆதீனங்கள், மடங்கள், சைவப் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள் என்று பல பேரையும் பல ஆண்டுகளாகச் சந்தித்து இந்த அநீதியைத் தட்டிக் கேட்குமாறு மன்றாடியிருக்கிறார் ஆறுமுகசாமி. தனியொரு மனிதனாக கையில் துண்டறிக்கைகளை அச்சிட்டு வைத்துக் கொண்டு, சிதம்பரம் மக்கள் மத்தியிலெல்லாம் விநியோகித்திருக்கிறார். கோரிக்கையின் நியாயத்தை மக்கள் ஆதரித்தனரெனினும், "எல்லாம் வல்ல' தீட்சிதர்களை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த அமைப்பும் முன்வரவில்லை.
எனினும், மனம் தளராமல் 8.5.2000 அன்று தனியொரு மனிதனாகச் சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி. அந்தக் கணமே தீட்சிதக் காலிகளால் அடித்து தூக்கியெறியப்பட்டார். கையொடிந்த நிலையிலும் அந்தக் காலிகளுக்கு எதிராகக் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். ஆனால், தீட்சிதர்களின் கூலிப்படையாகவே இயங்கும் போலீசு, திட்டமிட்டே வழக்கை பலவீனமாக்கி தீட்சிதக் காலிகளின் விடுதலைக்கு உதவியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜு மூலம், தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. ""தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம். தில்லைக் கோயிலில் தமிழில் பாட வைப்போம்'' என்று விழா மேடையிலேயே அறிவித்தோம்.
2004இல் இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று போராட்டத்தையும் தொடங்கியவுடன் தங்களுடைய நிலையை நியாயப்படுத்திக் கொள்ள இந்து அறநிலையத் துறையையே பயன்படுத்திக் கொண்டது தீட்சிதர் கும்பல். இணை ஆணையர் மூலம் ""தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடுவது மரபுக்கு விரோதமானது'' என்று ஒரு உத்தரவைப் பெற்றது. பிறகு, ""தமிழில் பாடினால் கோயிலின் புனிதம் கெட்டு விடும். சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்'' என்று முன்சீப் கோர்ட்டில் ஒரு தடையாணையையும் வாங்கி வைத்துக் கொண்டது.
இந்தத் தடையாணைகளைத் தகர்ப்பதற்காக, கடந்த 4 ஆண்டுகளாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து எமது தோழர்கள் பல்வேறு முனைகளிலும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிதம்பரம் நகரெங்கும் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாகத் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம், தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றங்களில் வழக்குகள், கோயிலுக்குள் நடந்த கொலைகள், திருட்டுகள் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசுக்கு எதிரான வழக்குகள், இப்பிரச்சினையை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்... இறுதியாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு மேல்முறையீட்டு மனு! இம்முயற்சிகளில் பா.ம.க.வைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.எம்.எஸ்., முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.எஸ்., திரு.சக்திவேல் முருகனார் போன்றவர்கள் துணை நின்றிருக்கின்றனர். இந்த நீண்ட போராட்டத்தின் இறுதியில்தான் அறநிலையத்துறை ஆணையரின் தற்போதைய உத்தரவு வெளி வந்துள்ளது.
""தில்லைக் கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல; திருச்சிற்றம்பல மேடையிலிருந்து தமிழ்த் திருமுறைகளை தீட்சிதர்கள் மட்டுமே "தொன்று தொட்டு' ஓதி வருகின்றனர் என்பது உண்மையல்ல; பக்தர்கள் வழிபடலாம், ஆனால் தமிழை உச்சரிக்கக் கூடாது என்பதும் அது கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் என்பதும் தமிழுக்கு இழைக்கப்படும் பேரிழுக்காகும். கோயில் நிர்வாகத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் தீட்சிதர்களே உருவாக்கிய கட்டுப்பாடாகத்தான் இது தோன்றுகிறது'' என்று கூறுகிறது ஆணையரின் உத்தரவு.
எனினும், ""கால பூசைகளின்போது திருக்கோயிலால் நியமிக்கப்படும் ஓதுவார்களைத் தவிர வேறு யாரும் திருமுறைகளைப் பாடக்கூடாது; பக்தர்கள் பூசை முடிந்தபிறகுதான் பாடலாம்'' என்று கூறுகிறது இந்த உத்தரவு. "பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்' தி.மு.க. அரசின் மழுங்கத்தனத்துக்குப் பொருத்தமான வகையிலும், தீட்சிதர்களின் சாதி உரிமையில் தலையிடாத வகையிலும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதிலும், தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இதை ஏற்பதற்குக் கூடத் தயாராக இல்லை.
இந்த உத்தரவு கையில் கிடைத்தவுடனே, ""மே 17ஆம் தேதியன்று சிற்றம்பல மேடையேறி ஆறுமுகசாமி தேவாரம் பாடுவார்'' என்ற அறிவிப்பை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டது. ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள் செங்கொடிகளுடன் திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள், தி.க. ஆகியோருடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் பலரும் அணிதிரண்டனர். பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டவுடன் அங்கேயே வழிமறித்தது போலீசு. ""அறநிலையத்துறையின் ஆணை இருக்கிறது, வழிபாட்டு உரிமையை மறுக்க போலீசுக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்ற வாதங்கள் எதையும் போலீசு காதில் வாங்கவில்லை. தீட்சிதர்கள் முன்சீப்பு கோர்ட்டில் ஏற்கெனவே தடை வாங்கியிருப்பதாகவும், எனவே எல்லோரும் கலைந்து செல்லவேண்டும் என்றும் கூறியது போலீசு. கலைந்து செல்ல மறுத்து கொளுத்தும் வெயிலில் 4 மணிநேரம் சாலையை மறித்தனர் தோழர்கள். அனைவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தது போலீசு.
பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடை செய்வது சட்டவிரோதமானது என்று வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்கள் எதுவும் போலீசின் காதுகளில் ஏறவில்லை. ஏறாததில் வியப்புமில்லை. ஏனென்றால், தீட்சிதர்களின் கேவலமான எடுபிடிகளாகவே உடம்பை வளர்த்திருப்பவர்கள் சிதம்பரம் காவல்துறை அதிகாரிகள். கோயிலுக்குள்ளேயே நடைபெற்ற 3 கொலைகள், நகைத்திருட்டுகள், இரவு நேரத்தில் கோயிலே விபச்சார விடுதியாகவும் மதுபான கேளிக்கை விடுதியாகவும் மாற்றப்படுவது ஆகியவை பற்றிக் கொடுக்கப்பட்ட எந்தப் புகார் மீதும் எந்தக் காலத்திலும் சிதம்பரம் போலீசு வழக்கு பதிவு செய்ததில்லை. இவை பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீசு அனுப்பியிருக்கிறது. இதுதான் போலீசின் யோக்கியதை.
தங்களுக்கு அரணாக போலீசு நிற்கிறது என்ற போதிலும், இந்தப் போராட்டம் தீட்சிதர் கும்பலுக்குப் பீதியை ஏற்படுத்திவிட்டது. ""நாங்களே ஆறுமுகசாமியை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்று பாட வைக்கிறோம். பிரச்சினையை இத்தோடு விட்டுவிடச் சொல்லுங்கள்'' என்று தூது விட்டது தீட்சிதர் கும்பல். "நந்தனை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்ற' இந்தக் கிரிமினல் கும்பல், அடுத்த சதிக்கு அவகாசம் வாங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். ஆணையரின் உத்தரவுக்கு எதிராக காதும் காதும் வைத்தாற்போல உயர்நீதி மன்றத்தில் தடையுத்தரவு வாங்கி விடுவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதால் விழிப்புடன் இருந்தோம். எதிர்பார்த்தபடியே தமிழுக்கு இடைக்காலத் தடை கேட்டு உயர்நீதி மன்றம் வந்தார்கள். அதனையும் கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். இறுதியாக ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் ஆறுமுகசாமியை மிரட்டியிருக்கிறார்கள் தீட்சிதக் காலிகள். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகார் மீது இந்தக் கணம் வரை போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை.
எத்தனை தடைகள் வந்தாலும் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலித்தே தீரும். அதனை எந்த தீட்சிதனாலும் தடுக்க முடியாது. திருவரங்கம் கருவறைக்குள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டு சென்ற எமது தோழர்கள் இதையும் செய்தே தீருவார்கள். ஆனால், வெறும் 250 தீட்சிதர்கள் ஒரு லட்சம் மக்கட் தொகை கொண்ட சிதம்பரத்தை எப்படி ஆட்டி வைக்க முடிகிறது? ஆறு கோடித் தமிழ் மக்களை எப்படி இழிவுபடுத்த முடிகிறது? இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலாக நீடிக்க இன்னமும் அரசு ஏன் அனுமதித்திருக்கிறது? — என்ற கேள்விகளுக்குத்தான் நமக்கு விடை வேண்டும்.
···
ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு, ஆதீனங்கள், மடங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பன எடுபிடிகளான "சூத்திரர்களின்' ஆதரவும், பார்ப்பனரல்லாத பக்தர்களின் சொரணையற்ற நிலையும்தான் தீட்சிதர்களின் திமிரைச் சாத்தியமாக்கியிருக்கிறது. சைவத்தையும் தமிழையும் சொல்லி சொத்து சேர்த்திருக்கும் கோடீசுவரர்களான ஆதீனங்கள் ஆறுமுகசாமியைத் தம் பக்கம் அண்டவிடுவதேயில்லை. தமிழில் பாடத் தடை விதிக்கும் தீட்சிதர்களுக்கெதிராக ஒரு இலட்சம் சிதம்பரம் மக்களிடமும் கையெழுத்து வாங்கியிருக்கிறோம். ஆனால், அந்த மனுவை வாங்கிக் கொள்வதற்குக் கூட அறிவாலயம் என்ற அரசியல் ஆதீனத்துக்கு நேரமில்லை.
சிதம்பரம் நகர தி.மு.க.வினர் தீட்சிதர் குடும்பங்கள் நடத்தும் பால்ய விவாகத்துக்குத் துணை நிற்கிறார்கள். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சித் தலைவர்களின் மனைவிமார்கள் தீட்சிதர்களிடம் பிரசாதம் வாங்கக் கையேந்தி நிற்கிறார்கள். தீட்சிதர்களைப் "பார்ப்பான்' என்று நாங்கள் கூறுவதைக் கண்டிக்கிறது "மார்க்சிஸ்டு' கட்சி. அதன் நகரத் தலைவரான மூசாவைக் (பிறப்பால் இசுலாமியர்) கோயிலுக்குள் வரவேற்று பரிவட்டம் கட்டி மரியாதை செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள் என்பது அப்புறம் நமக்குத் தெரியவந்த சேதி.
ஆறுமுகசாமி எனும் தனி மனிதர் சிற்றம்பல மேடையேறிப் பாடியிருக்கிறார். தாக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் தளராமல் போராடுகிறார். ஆனால், மேடைதோறும் தமிழ் கூறி வயிறு வளர்க்கும் அறிஞர்களோ, தொலைக்காட்சி மேடைகளில் தம்முடைய தமிழ்ப்பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ளும் சான்றோர்களோ இந்தச் சிற்றம்பல மேடையேறும் கவுரவத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்து விடுகிறார்கள்.
இந்திய தேசியம் என்றாலே பார்ப்பனியம், ம.க.இ.க. மறைமுகப் பார்ப்பனியம் என்று எழுதித் தள்ளும் தமிழ்ப் "போராளி'கள் இந்த நேரடிப் பார்ப்பனியத்தின் சிண்டைப் பிடித்து உலுக்கியிருக்கலாம். தமிழகத்துக்குள்ளேயே தமிழனை மிரட்டும் இந்த ஆபத்தை அடித்து நொறுக்கியிருக்கலாம்.
எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்சி தடையின்றி நடக்கிறது. "நாங்கள்தான் செய்தோம்' என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்காக இவற்றையெல்லாம் கூறவில்லை. இந்தப் "பெருமை வேண்டாமென்று ஒதுங்கியிருக்கும் கட்சிகளின் "பெருந்தன்மையையும்', எமது அமைப்புகளின் முயற்சியைக் கவனமாக இருட்டடிப்பு செய்யும் அவர்களுடைய கீழ்மையையும் வாசகர்களுக்குப் புரிய வைப்பதற்காகக் கூறுகிறோம். அவ்வளவே.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்பவர்கள். தில்லையில் தீட்சிதர்கள் ஆக்கிரமிப்பாகட்டும், வடலூரில் பார்ப்பனமயமாகட்டும், தமிழிசையில் பார்ப்பனத் திருட்டாகட்டும், சிறுவணிகத்தை ரிலையன்ஸ் ஆக்கிரமிப்பதாகட்டும் — இவை ஒவ்வொன்றுக்கும் எதிராக எம்மைப் பேச வைப்பது வர்க்கப் பார்வை. போராடத் தூண்டுவது வர்க்க உணர்வு.
""பல்வேறு அமைப்புகள் இருக்க, தேவாரம்திருவாசகத்துக்காக நாத்திகர்களாகிய நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோமே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா?'' என்று ஆறுமுகசாமியிடம் கேட்டார் ஒரு தோழர். ""அந்தச் சிவபெருமான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறான்'' என்று பதிலளித்தார் அந்தச் சிவனடியார்.
எங்களை "உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சிவபெருமான்', பாட்டாளி வர்க்க உணர்வுதான் என்ற உண்மையை அந்தப் பெரியவர் ஒருநாள் புரிந்து கொள்வார். சிவபெருமானும் விரைவில் புரிந்து கொள்வார்.
— ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.

Subscribe to:
Posts (Atom)