தமிழ் அரங்கம்
Saturday, December 5, 2009
பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)
Friday, December 4, 2009
நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)
அசோக் தீப்பொறியின் போராட்டத்தையும், தளக்கமிட்டியின் போராட்டத்தையும், பல சிறு குழுக்களின் போராட்டத்தையும், மறுத்தும் திரித்தும், அனைத்தையும் ஒன்றாக இட்டுக் கட்டியதுடன், "எங்களோடும்" என்று கூறி றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ்யுடன் சேர்ந்து நின்றதை மூடிமறைத்ததைப் பார்த்தோம். இந்த வரலாறு தான் இப்படி என்றால், அசோக் நாவலனுடன் சேர்ந்து கடந்தகால மற்றொரு வரலாற்றை திரித்து மறுக்கும் அரசியல் அசிங்கமோ இங்கு இயல்பில் எதிர்ப்புரட்சி அரசியலாகும்.
இங்கு நாவலன் துணையுடன் அசோக் கூறுகின்றார்
அந்த வரலாற்றை இன்று ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
புலிஆண்ட புலத்து மனங்கள்
நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறு
வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்
போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்
நாட்டைக் காட்டிக்கொடுக்கோமென
இரத்தம் தோய்ந்த கரங்களா
ல்புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்…
பழைய எல்லாத்தீர்மானங்கட்கும் மேலானதாய்
வழங்கப்போவதாய் விஞ்ஞாபனங்கள் தயாராகிறது
புலிகளை வைத்து அரசியல் நடத்தியவர்கள்
யாரை ஆ+ரத்தழுவுவதென குழம்பிப்போய்..நாளை
காலமோட்டும் கனவுகள் மட்டுமாய்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, December 3, 2009
வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)
கடந்தகால மனித விரோதங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டதே எம் வரலாறு. படுபிற்போக்கான அரசியல் கூறுகள், தம் வன்முறைகள் மூலம் உண்மைகளை குழி தோண்டி புதைத்தது. சமூகம் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போனது. இதற்குள் சகல பிற்போக்கு சக்திகளும், தம்மை மூடிமறைத்துக் கொண்டே நீச்சலடித்தனர். (வரலாற்று ஆவணங்கள் இணைப்பு)
சென்ற பகுதியில் குறித்த ஒரு ஆவணம் மூலம், வரலாற்றை திரித்துப் புரட்டும் அசோக்கிசத்தை மட்டுமல்ல, "இனியொரு" வின் சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தையும் சேர்த்துப் பார்த்தோம். அதைச் சுற்றி வெளிவந்த 10 ஆவணங்களை, வரலாற்றை திரிப்பவர்களுக்கு எதிராக முதன் முதலாக இந்த கட்டுரை மூலம் உங்கள் முன் வெளிக்கொண்டு வருகின்றோம்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, December 2, 2009
தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத "நேர்மை" அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)
"மக்களை அரசியல் மயப்படுத்த” காடு மேடுகள் எல்லாம் திரிந்து, அடுத்த புத்தாண்டில் (சித்திரையில்) தமிழீழம் என்றவர்கள் இவர்கள். இப்படி "அரசியல் மயப்படுத்த"ப்பட்டவர்களை ஏமாற்றி பிடித்துச் சென்றவர்கள், அதில் ஒரு பகுதி இளைஞர்களை கொன்றார்கள். இது வரலாறு.
இதையா அசோக் புளாட் வரலாறாக சொல்லுகின்றார். இந்த கொலைகாரப் புளட்டை எதிர்த்து புளாட்டில் இருந்த வெளியேறி வாழ வழியற்று வாழும் டேவிட் ஐயா எழுதிய "கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும்" என்ற நூலில் 286 படுகொலைகள் பின்தளத்தில் நடந்ததாக எழுதியுள்ளார்.
இப்படி உட்படுகொலையை புளாட் செய்தது. அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தான் அசோக்.
கொலைகார முகுந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவர் தான் இன்று ஈ.என்.டி.எல்.எவ் ஏஜண்டாக இருக்கும் ஜென்னி.
டேவிட் ஐயாவுக்கு இருந்த நேர்மை ஒரு துளிதன்னும் இவர்களுக்கு கிடையாது.
யார் இந்த........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, December 1, 2009
வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை ஜாரையும் விட்டு வைத்ததில்லை -ஜீவமுரளி
வரலாறு என்பது மக்களின் போராட்டங்களே என மாக்ஸ் எழுதிவைத்துப் போவதற்கு முன்னரும், அவர் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னரும், மக்கள் வாழ்ந்தார்கள். மன்னர்களும் வாழ்ந்தார்கள். மன்னர்கள் கொலைகளும், மக்கள் போராட்டங்களும் செய்தார்கள். மக்களின் வரலாற்றை மாக்ஸ் மன்னர்களுக்காகவன்றி மக்களுக்காகவே தொகுத்து தந்தார். மாக்ஸின் உழைப்பிலே மனிதர்கள் குறைந்தபட்சம் கற்றுக்கொள்ள........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)
இன்று ஒரு அரசியல் இயக்கம் முதல் தனி மனிதன் வரை கொண்டுள்ள அரசியல் நேர்மையானது என்பதை, நாம் எப்படி இனம் காண்பது? கடந்த காலத்தை எப்படி அவர்கள் காட்டுகின்றனர் என்பதுடன் தொடர்புடையது. தாங்களும், மற்றவர்களும் அதில் என்ன அரசியல் பாத்திரத்தை வகித்தனர் என்பதுடன் தொடர்புடையது. அதை விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு எப்படி உள்ளாக்கினர் என்பதுடன் தொடர்புடையது.
மக்களுக்கு எதை அவர்கள் முன்வைத்தனர். எதை தீர்வாக வழிகாட்டினர். இப்படி அரசியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யாத அனைத்தும்,.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவு
Monday, November 30, 2009
புலத்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு நடந்ததென்ன? நடப்பது என்ன?
புலம்பெயர் சமூகம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாடு கடந்த தமிழ் ஈழத்தை பொறுப்பேற்க வேண்டும்! இதுவே தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்கின்றனர் புலம்பெயர் புலிச் «சிந்தனையாளர்கள்.»
தமிழ் மக்கள் புலிகளின் தமிழ் ஈழப்போரின மூலம் பலவறறைப்பட்டறிந்துள்ளனர். அதிலிருந்து பிழையான பலவற்றை மௌனமாக, அமைதியாக நிராகரிக்கின்றார்கள். தற்போது அவர்கள் போராடும் வல்மையை இழந்துள்ள நிலையில், அவர்களின் அண்மைக்கால போரும்-ஆயுதமும் மௌனமும் நிராகரிப்புமே. இவ் ஆயுதம்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்