தமிழ் அரங்கம்

Saturday, June 14, 2008

நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!

Anonymous said...
இரயாகரனுக்கு ஆதரவளிக்கும் நீ விடுதலைப்புலிகளுக்கு எதிராளி என்பதை நிருபித்துவிட்டாய். நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!
27 May, 2008 9:23 AM

தமிழச்சி said...
ஷட் அப் நாயே!எங்களை துரோகி என்று சொல்லும் உரிமையை உனக்கு யாரடா நாயே கொடுத்தது?
27 May, 2008 9:32 AM

ஏகலைவன் said...
மதிப்பிற்குரிய அனானி நண்பரே!
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நீர்தான் துரோகிகளின் பட்டியலில் இடம்பெறப் போகிறீர்கள்.

தமிழர்களை வேட்டையாடுவதில் சிங்கள இராணுவத்திற்குச் சளையாமல் துரோகத்தனம் புரியும் புலிகளை உயர்த்திப் பேசமுடியுமா?

இங்கே வந்து அங்கலாய்த்துக் கொள்ளும் நீங்கள், இரயாகரனின் தளத்தில் பதிவிடப்படும், புலிகளை விமர்சிக்கும் கருத்துக்களுக்கு எதிராகச் சென்று மறுமொழியிடலாமே, அதன் மூலமாக நல்லதொரு விவாதத்தைத் தொடங்கலாமே. உங்களை யார் தடுத்தது.
27 May, 2008 2:18 PM

தமிழச்சி said...
என்ன ஏகலைவன் இது?
காலையில் போட்ட இந்த பதிவுக்கு எவ்வளவு அனானி பின்னூட்டங்கள்? எவ்வளவு மிரட்டல்கள்? எனக்கு அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கிப் போனாலும் இவர்கள் விடுவதாயில்லை!

யார் இவர்கள் முகம் தெரியாத கபோதிகள் என்னை துரோகி என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. போய்த் தொலைகிறது என்று இருந்தால் தமிழ்மணத்தில் நான் ஆபாச எழுத்தாளரா? சிறந்த இலக்கியவாதியா? என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது. அந்த தளமும் அந்த பதிவரும் யாருக்கு ஆதரவாளரென்று படிப்பவர்களால் ஊகித்துக் கொள்ள முடியும். அதையும் போய் தொலைகிறது என்று விட்டால் ஓட்டெடுப்புக்கு விளம்பரப்படுத்தி இன்னொரு வலைதளம் விளம்பரம் செய்கிறது?

இங்கே பாருங்கள் தோழர்! தோழர் இரயாகரனைப்பற்றி எழுதிய பிறகே இவ்வளவு கூத்துக்களும் ....
.

Friday, June 13, 2008

நவீன் பிரசாத் கொலை : தமிழகப் போலீசின் நரபலி

நவீன் கொல்லப்பட்ட பின்பு, அது பற்றி சட்டசபையில் பேசிய கருணாநிதி, ""தி.மு.க.வின் இரண்டு வருட ஆட்சியில் 24 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களுள் எட்டு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கடந்த (ஐந்து வருட) அ.தி.மு.க. ஆட்சியில் 56 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுள் ஒருவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை'' என்ற புள்ளி விவரத்தை எடுத்துப் போட்டுள்ளார். எனவே "தீவிரவாதிகளை' ஒடுக்குவதில் தனது "சூத்திர' ஆட்சி எள்ளளவும் பார்ப்பனபாசிஸ்டுகளின் (ஜெயா) ஆட்சிக்குச் சளைத்ததில்லை எனக் காட்டுவதற்கு நவீனின் கொலையும் கருணாநிதிக்கு அமோகமாகப் பயன்படும்.

மாவோயிஸ்ட் கட்சியின் அனுதாபிகள் பலரும், "போலீசார் நவீனை எங்கோ வைத்து அடித்துக் கொன்றுவிட்டு, மோதலில் இறந்து போனதாக நாடகமாடுவதாக''ப் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். அவர் உடலின் பல இடங்களில் சித்திரவதைக்குள்ளான இரத்தக் காயங்கள் இருப்பதையும்; அதேசமயம், அவரது ஆடையில் குண்டு துளைத்துச் சென்றதற்கான அடையாளமோ, ஆடையில் இரத்தக் கறையோ இல்லாதிருப்பதையும் அத்தோழர்கள் பத்திரிகையாளர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

""பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாகப் பாடும் பிலாக்கணம்'' என்று இதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் மோகன்குமார்; மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோ.சுகுமாரன்; குடியுரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேரா.கோச்சடை; குடியுரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி; ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டி, மும்பய்ஐச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.கோபால்; தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மார்க்ஸ் இளவேனில் ஆகிய மனித உரிமை ஆர்வலர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையும் கூட, நவீன் பிரசாத் போலி மோதல் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயப்பாட்டை எழுப்பியிருக்கிறது.
.

Thursday, June 12, 2008

புலி என்றும் அரச கைக்கூலிகள் என்று, நாம் தூற்றப்படுகின்றோமே! ஏன்?

மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.


புலியை ஆதரிக்காத அனைவரும் துரோகி என்று கூறி புலி நடத்தும் அரசியல் படுகொலை போல், அரச ஆதரவு அல்லாத அனைத்தையும் புலியாக காட்டி படுகொலை செய்வது போல், இன்று நாம் இருதரப்பாலும் தமக்கு எதிரானவராக அடையாளம் காணப்படுகின்றோம்.

நாங்களோ பெரிதாக ஒன்றும் கூறவில்லை. மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு, அரசும் புலிகளும் எப்படி காரணமாக இருக்கின்றனர் என்பதையே, நாம் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி விமர்சித்து வருகின்றோம்.

எமது இந்த அரசியலை எதிர்கொள்ள, இவ்விரண்டு மக்கள் விரோதப் பிரிவினராலும் முடிவதில்லை. இதனால் நாம் தொடர்ச்சியாக தூற்றப்படுகின்றோம். முன்பு இவர்கள் எமது இந்த விமர்சனத்தை தனிநபர் தாக்குதலாக தூற்றியவர்கள். இன்று எம்மை புலி என்றும், அரச கைக் கூலிகள் என்றும் தூற்றுகின்றனர்.

கடந்த காலத்தில் தனிநபர் முனைப்புகள் முதன்மை பெற்று, தனிநபர் ஊடாக அரசியல் வெளிப்பட்டது. அவர்கள் ஊடாக அவர்களின் அரசியல் இனம் காணப்பட்டு, அவை எம்மால் அமபலப்படுத்தப்பட்டது. இதையே அவர்கள் தனிநபர் தாக்குதல் என்றனர். இன்று அந்த நபர்களில் பெரும்பான்மையானோர் பேரினவாத அரசின் பின்நிற்கின்றனர். அரசு சார்பு குழுக்களின் அடிவருடிகளாகவும், அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், அவர்களுடன் சேர்ந்தே புலம்பெயர் அரசியல் விபச்சாரம் செய்பவராக அனைவரும் அம்பலமாகி கிடக்கின்றனர். புலி ஒழிப்பை அரசுடன் சேர்ந்து செய்யும் துரோகக் கும்பலாக அம்பலமாகி நிற்கின்றது. புலம்பெயர் புலியல்லாத நிகழ்ச்சி நிரல்கள், அரச வேலைத் திட்டத்துக்கு ஏற்புடையதாகவே அமைக்கின்றது. இதற்கு மாறாக இவர்கள் எதையும் மாற்றாக முன் வைப்பதில்லை. எதைக் கதைத்தாலும், அதை ஆதரிப்பதில் போய் முடிகின்றது.
.

Wednesday, June 11, 2008

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள்

"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது.

தமிழ் மக்களின் தேசிய உரிமையை மறுப்பதும், ஜனநாயக உரிமையை மறுப்பதும், இதற்குள் உள்ள அரசியல் சாரம். இது சாத்தியமல்ல என்கின்றனர். இவற்றை மறுத்து தீர்வு காணுதல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்கின்றனர். மக்களின் உரிமையை மறுப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள் என்கின்றனர்.

இப்படி இதற்குள் தான் அரசியல் வாதங்கள், தூற்றல்கள், படுகொலைகள் என அனைத்தும் அரங்கேறுகின்றது. இந்த 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகளின் பெயரில் தான், படுகொலைகள், கடத்தல்கள் முதல் யுத்தத்தில் பலியிடல் வரை அனைத்தும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இந்த அரசியலை ஆதரிக்கின்ற அனைவரும், இதன் மூலம் இழைக்கின்ற மொத்த குற்றங்களுக்கு உடந்தையானவர்கள் தான்.

இப்படி முடிவின்றி நீண்டகாலமாக இந்த அரசியல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தாக கூறிக்கொண்டு, மக்களுக்கு எதிரான 'தேசியத்தையும்" 'ஜனநாயகத்தையும்" ஆதரித்து அரங்கேற்றுகின்றனர். நாம் மட்டும்தான், இதற்கு வெளியில், இதற்கு எதிராக நீண்டகாலமாக, எதிர் வினையாற்றி வருகின்றோம்.
.

Tuesday, June 10, 2008

அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?

இந்தியப் பாதுகாப்புத்துறை இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஊடாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அக்னி5 என்ற ஏவுகணையையும்; ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ""ஹைபர் சோனிக்'' ஏவுகணையையும்; விண்ணில் இருந்து செலுத்தக்கூடிய ""அஸ்த்ரா'' ஏவுகணையையும் பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இத்தகைய ஏவுகணைகள், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகளைச் சுமந்து கொண்டு சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கக்கூடிய திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

இதுவொருபுறமிருக்க, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணை; பூமியில் இருந்து விண்ணுக்குச் சென்று, அங்குள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை; நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே15 சாகரிகா ஏவுகணை எனப் பல்வேறு விதமான பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்தியப் பாதுகாப்புத் துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.

இந்தியா இப்படி முண்டா தட்டிக் கொண்டு நிற்பதற்கு எதிர்வினைகள் இல்லாமல் போகுமா? இந்தியா அக்னி3 ஏவுகணையைப் பரிசோதனை செய்த அதே சமயத்தில், பாகிஸ்தான், இந்தியாவின் உட்பகுதிகளைக் கூடத் தாக்கக் கூடிய திறன் கொண்ட ""ஷஹீன்2'' என்ற ஏவுகணையை, இரண்டு முறை ஏவிப் பரிசோதனை நடத்தியது. சீனாவோ, ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுண்டுகளை ஏந்திக் கொண்டு, 8,000 கி.மீ சுற்றளவில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும்; ஒரேயொரு அணுகுண்டை ஏந்திக் கொண்டு 12,000 கி.மீ முதல் 14,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் தனது இராணுவத்தில் சேர்க்கப் போவதாக அறிவித்த்திருக்கிறது.
.

Monday, June 9, 2008

நீதி கொன்ற மோடி

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக வழக்குகளை நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கே.ஜி.ஷாவின் இடத்தில் வேறொருவரை நியமிக்க, ஐந்து நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைத்து, அவர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு குஜராத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அந்த ஐந்து நீதிபதிகளின் பெயரையும் புறக்கணித்துவிட்டு, ஓய்வு பெற்ற குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியான அக்சய் மேத்தா என்பவரை, நானாவதி கமிசன் நீதிபதிகளுள் ஒருவராக நியமித்திருக்கிறார். நரேந்திர மோடி மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவிற்குப் பதிலாக, தனது கையாட்களுள் ஒருவரை நானாவதி கமிசன் "நீதிபதி'யாக நியமித்திருக்கலாம். ஏனென்றால், மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவின் பணிக்கால வரலாறு அப்படிப்பட்டது. குஜராத் முசுலீம் படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கில், முக்கிய, முதன்மைக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்குப் பிணை வழங்கியவர்தான் நீதிபதி அக்சய் மேத்தா. அவ்வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், மோடிக்கும் அக்சய் மேத்தாவுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பின்னணியை நாம் விவரிப்பதைவிட, பாபு பஜ்ரங்கியின் வார்த்தைகளில் கேட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தெகல்கா ஆங்கில வார இதழ் குஜராத் முசுலீம் படுகொலை பற்றி நடத்திய இரகசிய விசாரணையில், பாபு பஜ்ரங்கி தனக்குப் பிணை கிடைப்பதற்காக நரேந்திர மோடி பட்ட பாட்டை பெருமிதத்தோடு விளக்கியிருக்கிறான். இதோடு, நரோடா பாட்டியா படுகொலை பற்றியும்; அப்படுகொலை வழக்கை ஊத்தி மூடிவிட குஜராத் போலீசு செய்திருக்கும் சதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகமதாபாத் நகர போலீசின் தலைமை அலுவலகத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகுதிதான் நரோடா பாட்டியா. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் எரிந்து போன மறுநாளே, பாபு பஜ்ரங்கி தலைமை தாங்கி வந்த கும்பலால் நரோடா பாட்டியா தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 200 முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது பாபு பஜ்ரங்கியே தரும் கணக்கு. ஆனால், அரசோ 105 முசுலீம்கள்தான் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அத்தாக்குதல் நடந்தபொழுது அகமதாபாத் நகர போலீசு கமிசனராக இருந்த பி.சி. பாண்டே, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே, அப்பகுதியில் கொல்லப்பட்ட பல முசுலீம்களின் உடல்களை போலீசு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய், நகரத்தின் பல பகுதிகளில் வீசியெறியச் செய்தார். இதற்குப் பரிசாக, பி.சி. பாண்டே குஜராத் போலீசு துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
.

Sunday, June 8, 2008

முன்னுரை : இந்து மதப் பார்ப்பனிய தத்துவ சாரம் தான் சாதியம்

எதுவெல்லாம் இந்துத்துவமோ, அதுவெல்லாம் சாதியாக இருக்கின்றது. எதுவெல்லாம் சாதியோ, அதுவெல்லாம் இந்துத்துவமாக இருக்கின்றது. எதுவெல்லாம் மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இருக்கின்றது. எவையெல்லாம் மனித விரோதத் தன்மை கொண்டதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இயங்குகின்றது.

இப்படி ஒரு இந்துத்துவ சமூக அமைப்பு என்பது, சாதிய சமூக அமைப்பாகவே உள்ளது. இது தனது சமூக அமைப்பின் அனைத்து மனித விரோதத் தன்மையையும், தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கின்றது. எதுவெல்லாம் சமூகத்துக்கு எதிரான கொடூரங்களாகவும், கொடுமைகளாகவும், சமூக விரோத செயலாகவும் உள்ளதோ, அவையெல்லாம் இந்துத்துவ சாதி வடிவில் நீடிக்கின்றது.

இப்படி சாதியமும், அதன் தத்துவமான இந்துத்துவமும் மனிதத் தன்மையற்றது. இது சகமனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இந்த இந்துத்துவ சாதிய சமூக அமைப்போ, காட்டுமிராண்டித்தனமானது. இதற்கு அடங்க மறுத்து மீறும் போது, அது கொல் என்கின்றது. அனைத்தையும் பார்ப்பான் என்ற ஒரு சாதியின் குறுகிய நலனில் இருந்து தான், இந்த இந்துத்துவக் கோட்பாடு பார்ப்பனியமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தான் சாதிய சமூகம்;அடிப்படையான வாழ்வுசார் ஓழுக்கமாக்கி, மனித வாழ்வை இந்துத்துவத்தின் சித்தாந்தமாக்கியுள்ளது.

இந்த வகையில் இது சக மனிதனை வெறு என்று, சாதிய இந்துத்துவம் கற்பிக்கின்றது. சக மனிதனை சாதி மூலம் இழிவாடக் கோருகின்றது. மனிதத் தன்மையற்ற நடத்தைகளையே, தனிமனித ஒழுக்கமாகக் கோருகின்றது. இப்படி சாதிய இந்துத்துவ வாழ்வியலை இயந்திரமயமாக்கி, அது பார்ப்பனியத்துக்கு இயல்பாக சேவை செய்ய வைக்கின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய சிந்தனைகளை, தனது சாதிய பார்ப்பனிய எல்லைக்குள் உள்வாங்கி அதை பாசிசமாக்குகின்றது. சாதியம் ஒரு இந்துவின் தனிப்பட்ட சுதந்திர தெரிவாக காட்டி விளக்குகின்றது. இதை இந்துவின் ஒரு உன்னதமான வாழ்வியல் ஒழுங்காக பண்பாடாக, இது காலகாலமாக நீடித்து மாறாது இருப்பதாக கூறிக்கொண்டு, மற்றவனை ஒடுக்கி அடிமைப்படுத்துகின்றது. இந்த சாதிய-தீண்டாமை என்ற சமூக ஒழுங்கு தான், இந்துத்துவம். இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏற்று நடப்பது தான், இந்தியாவின் ஜனநாயகம் என்கின்றனர். இதை சகிப்புத் தன்மை கொண்ட இந்திய சமூகத்தின், இயற்கையான இயல்பு என்கின்றனர்.
.

கொள்ளைக் கூட்டத்தின் ஒப்பாரி

இது அவரின் சொந்த கருத்து மட்டுமல்ல. விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த விமர்சனம் என்ற பெயரில் மேட்டுக்குடி கும்பலின் வர்க்க வெறுப்பும், பொச்சரிப்பும் இப்படித்தான் பொங்கி வழிகிறது.

ஒரு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி (இதுவே ஃபிராடு என்பது தனிக்கதை) குறித்து இப்படி அங்கலாய்த்துக் கொள்ளும் ""சோ'' வகையறாக்கள், ஒவ்வொரு ஆண்டும் வரிச் சலுகை என்ற பெயரில் பல பத்தாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், தரகு முதலாளிகள் மேல்தட்டு வர்க்கத்திற்காகத் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.

கடந்த (200708) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 58,655 கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.

பங்குதாரர் நிறுவனங்கள் உள்ளிட்ட பிற வர்த்தகத் தொழில் நிறுவனங்களுக்கு 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ, 4,000 கோடி.

தனிப்பட்ட நபர்களுக்கு, 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பு 38,000 கோடி ரூபாய்.

தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகையால், 200708இல் அரசுக்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 88,000 கோடி ரூபாய்.
.