தமிழ் அரங்கம்

Showing posts with label சி.பி.எம். Show all posts
Showing posts with label சி.பி.எம். Show all posts

Wednesday, May 20, 2009

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.

உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு; அக்காட்டின் நடுவே திடீரென ''டும், டும்'' என முரசொலிக்க, எங்கும் எதிரொலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் வில்அம்பு, கோடரி, அரிவாள், தடிகளுடன் பழங்குடியின மக்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அணிதிரள்கிறார்கள். ''கொலைகாரர்கள் வந்துவிட்டார்களா? சி.பி.எம். குண்டர்கள் எங்கே?'' என்று பதற்றத்தோடு நாற்புறமும் அவர்கள் தேடுகிறார்கள். முரசொலி கேட்டதும் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சி, அவர்கள் பின்வாங்கி ஓடி விட்டார்கள் என்று தெரிந்த பிறகு, அம்மக்கள் திரும்பிச் செல்கிறார்கள்.

"கடந்த நவம்பரிலிருந்து இப்படியொரு முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை நாங்கள் செய்துள்ளோம். உயரமான மரங்களில் ஏறி, எங்களில் ஒருவர் கண்காணிப்பார். சி.பி.எம். குண்டர்களோ, போலீசோ, அரசு அதிகாரிகளோ இப்பகுதிக்குள் நுழைந்தால், உடனே அவர் முரசொலிப்பார். உடனே நாங்கள் அணிதிரண்டு அவர்களை முற்றுகையிடுவோம்'' என்கிறார் சுபாஷ் மஹடோ என்ற பழங்குடியின விவசாயி.

Sunday, April 19, 2009

சி.பி.எம்.க்குள் ஒளிந்திருக்கும் மோடியின் ரசிகர்கள்

இந்துவெறி பாசிச பயங்கரவாத மோடிக்கு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார். தொழில் வளர்ச்சியைச் சாதிக்க, மோடியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உபதேசித்திருக்கிறார். இவர் இந்துவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்தவரல்ல; மோடியின் தாராள சலுகைகளால் ஆதாயமடைந்த தரகுப் பெருமுதலாளியுமல்ல.


மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிக்கும் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்தான் இவர். கேரளாவின் கண்ணனூர் தொகுதியிலிருந்து சி.பி.எம்.கட்சி சார்பில் தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் அப்துல்லா குட்டி என்பவர்தான், மோடிக்குக் கிடைத்துள்ள இப்புதிய ஆதரவாளர்.

கடந்த ஜனவரியில் துபாயில், இந்தியா ஊடக அரங்கம் என்ற அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய அப்துல்லா குட்டி, ""தொழில் வளர்ச்சியைச் சாதித்து வரும் குஜராத் முதல்வர் மோடிக்கு முழு மதிப்பெண் தரவேண்டும். தொழில் வளர்ச்சிக்குத் தலைமை தாங்குவதில் அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பகமான ந..............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, March 29, 2009

சி.பி.எம் -இன் உத்தமர் வேடம் கலைகிறது

முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளைப் போல சி.பி.எம் கட்சியும் ஊழலில் சிக்கிச் சீரழிந்து நிற்கிறது. கொள்கை சித்தாந்தம் அனைத்தையும் கை கழுவிவிட்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குக் காவடி தூக்கி, சிங்கூர் நந்திகிராமத்தில் போராடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, இப்போது லாவலின் ஊழல் விவகாரத்தால் எஞ்சியிருந்த ஒட்டுக் கோவணத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான பினாரயி விஜயன் மீது, ரூ. 390 கோடி லாவலின் ஊழல் வழக்கில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஊழல் கறை படியாத கட்சி என்ற மாயபிம்பத்தையும் அது தகர்த்தெறிந்து விட்டது.

ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குரிய வழக்குகள் வரும்போதெல்லாம், "மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேணடும்'' என்று கூப்பாடு போட்டு வந்த சி.பி.எம். கட்சி, இப்போது "தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக மைய அரசு பயன்படுத்தும் இன்னொரு ஆயுதம்தான் சி.பி.ஐ.'' என்று புதிய விளக்கம் கொடுக்கிறது. அக்கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மீது ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான், இந்தத் திடீர் ""பல்டி''க்குக் காரணம்.

"1996 முதல் 2001 வரை கேரளாவில் முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துடன் மூன்று நீர்மின் திட்டங்களுக்கான ஒப்பந்த...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, August 8, 2008

கழிசடை காங்கிரசு வழியில் சி.பி.எம் கட்சி

பட்டுப் போன நச்சு மரமானாலும், அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சியில் கோஷ்டிச் சண்டைகளுக்கு அளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவும், பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கவும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு என்று சாதிமத அடிப்படையில் கட்சிக்குள்ளேயே தனி அணிகளை உருவாக்கி ஓட்டுப் பொறுக்குகிறது, அக்கட்சி.

மதவாத சக்திகளை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால்பிடித்துச் செல்லும் சி.பி.எம். கட்சி, காங்கிரசின் எல்லா கழிசடைத்தனங்களையும் கொண்ட கட்சியாக நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. காங்கிரசைப் போலவே சி.பி.எம். கட்சியில் கோஷ்டி சண்டைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. வர்க்க அரசியல் அடிப்படையில் மக்களைத் திரட்டிப் போராடும் கம்யூனிச நடைமுறையைக் கைகழுவிவிட்டு, காங்கிரசு கட்சியைப் போலவே ஓட்டுக்காக சிறுபான்மை பிரிவையும் அக்கட்சி இப்போது கட்டத் தொடங்கிவிட்டது.

வேலூர் கோட்டையிலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஏற்கெனவே போராட்டம் நடத்தியுள்ளனர். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைக்கான இந்நியாயமான போராட்டத்தை ஆதரித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டிப் போராட முன்வராத சி.பி.எம். கட்சி,...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, June 21, 2008

தமிழ்நாடு சி.பி.எம் பாசிசக் குண்டர்கள் (ம.க.இ.க ஆதரவு அமைப்பு தோழரைக் கொன்றதுடன், வேறு சில தோழர்கள் உயிர் ஆபத்தான் நிலையில்) நடத்திய படுகொலை

"இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. .. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்