தமிழ் அரங்கம்

Saturday, August 1, 2009

ஈரான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது அகமதிநிஜாத் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து அங்கு நடந்து வரும் போராட்டங்கள், ஈரான் உள்நாட்டுப் போரில் விழுந்துவிடுமோ என்ற ஐயத்தை உலகெங்கும் தோற்றுவித்திருக்கிறது. அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் தோற்றுப் போய் விடுவார் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக, அவர் ஒரு கோடியே பத்து இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மிகப்பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

மேற்குலகாலும், ஈரானின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தாலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மிர் ஹுசைன் மௌசாவி, "இத்தேர்தலில் மோசடிகள் நடந்திருப்பதாகவும், அகமதிநிஜாதின் வெற்றி திருடப்பட்ட வெற்றி'' என்றும் குற்றஞ்சுமத்தி, தனது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்.

தேர்தல் .............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 31, 2009

நடைமுறைப் போராட்டம் எது?

சமகால நிகழ்வுகள் மீது, உடனுக்குடன் வழிகாட்டி எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதைச் செய்யாத, செய்ய முனையாத அனைவரும் சந்தர்ப்பவாதிகள். சமூகத்துடன் சேர்ந்து எதிர்வினையாற்றாதவர்கள், நிலவும் சூழலுக்குள் விலாங்கு மீன் போல், வழுக்கி தப்பித்து நெளிபவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மக்களை வழிகாட்ட முடியாதவர்கள்.

இன்று நாம் பேசும் விடையங்கள், அது சார்ந்த சூழலுக்கு வெளியில் இருந்தே அநேகமாக பேசப்படுகின்றது. அந்தளவுக்கு சமூகத்தினுள்ளான அசைவுகள் அனைத்தும் நலமடிக்கப்படுகின்றது. இன்று இலங்கையில் தமிழினம் சந்திக்கின்ற அவலங்கள், பெருமளவுக்கு புலத்தில் தான் பேசப்படுகின்றது.

குறித்த மக்கள் மத்தியில் செயல் சார்ந்த ஒரு அரசியல் வேலை முறை, அறவே இன்று அற்றுப்போயுள்ளது. முன்பு புலிப் பாசிசமும்,
.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 30, 2009

அரசியல் நகர்வெனும் அடிவருடித்தனம்

புலத்தென்னினத்து மானுடனே
பட்டினி போரெடுத்தாய்
பாதையெலாம் தடுத்தாய்
கையெழுத்துப்போர் கடையடைத்தாய்
பேருந்தில் நிறைத்து பெருநகரவீதிகளில்
ஜெனிவாவில் பெல்ஜியத்தில்
எழுச்சியெலாம் அடங்கி ஏன்படுத்தாய்
இனிக் கேபி சொல்கிறார.........
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாசிசத்தை இனம் காண்பது எப்படி? அது மறுபடியும் தன்னை மூடிமறைத்தபடி வேஷம் போடுகின்றது

மக்களுக்கும் பாசிசத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு, சமூகத்தின் சராசரி அரசியல் மட்டம் என்பது வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கமைய இடதுசாரிய சமூகக் கூறு, அரசியல் தலையீட்டை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த நிலைமையை அடைய முடியாத வண்ணம், சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறுகள் அழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாசிசம் மக்கள் வேஷம் போடுகின்றது.

அன்று பாசிசம் மக்களின் அரசியல் மட்டம் வளரவிடாது தடுக்க, இடதுசாரி புத்திஜீவிகளை குறிவைத்து கொன்றது. கடந்த காலத்தில், ஈழத்தில் இதுதான் நடந்தது. பாசிசம் தன்னை நிலைப்படுத்தவும், மக்களின் அறியாமையை ஏற்படுத்தவும், 1980 களில் தொடங்கி 1990 வரை பெருமளவில் இடதுசாரிய அரசியல் புத்திஜீவிகளையும் அதன் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. அந்தப் படுகொலை வரலாற்றை தனது பாசிச வரலாறு மூலம், இன்று இருட்டடிப்பு செய்ய முனைகின்றது. இதற்கு தமிழகத்து இடதுசாரிகளை அது பயன்படுத்துகின்றது.

கடந்தகால இடதுசாரிய படுகொலை வரலாற்றை மூடிமறைத்ததன் மூலம், வலதுசாரிய பாசிசமே சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறா.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 29, 2009

புலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி!

விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்திற்கு ஓர் சுனாமியே எற்பட்டது! புலிகளின் 30 ஆண்டு காலமாக வீங்கி வெம்பிய இராணுவ வளர்ச்சியும் வீழ்ச்சியும், மதிலில் எறிந்த பந்துபோல் ஆகியது! எதிலும் விரலுக்கேற்ற வீக்கம் இருக்கவில்லை! ஆயுதம், படைப்பலம், பணத்தில், பாசிச சரவாதிகாரத்தில், புலிகள் போன்ற ஓரு அமைப்பு உலகில் உருவாகவில்லை என்றே சொல்லலாம்! இவைகளின்; ஊடாக புலிகள் வடகிழக்கின் தம்மை ஓரு மாற்று அரசாக அமைந்தனர்! அதன் பரினாம வளர்ச்சி அவர்களை ஓர் பாசிச சர்வாதிகார அமைப்பாக கட்டமைத்தது!

Tuesday, July 28, 2009

பாசிட் மகிந்த தன் குடும்ப சர்வாதிகாரத்தை, இலங்கையின் "ஜனநாயக" ஆட்சியாக்கின்றனர்

மகிந்த குடும்பம், தன்னைச் சுற்றி ஒரு கூலிக்குழுவை உருவாக்கி வருகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை தனக்கு கீழ் மென்மேலும் அடிமைப்படுத்த முனைகின்றது. இந்த வகையில் இராணுவத்திற்குள் நடக்கும் குழிபறிப்புகள், கைதுகள், பதவி இறக்கங்கள், இட மாற்றங்கள் எல்லாம், தம் குடும்ப பாசிச அதிகாரத்தை தக்க வைக்கவும், அதை பலப்படுத்தவும் செய்கின்ற தில்லுமுல்லுகள் தான்.

பாசிசத்தின் முரண்பட்ட கூறுகள், தம் அதிகாரத்துக்கான மோதல்களில் ஈடுபடுகின்றது. இது இன்று இலங்கையில் உச்சத்தை எட்டியுள்ளது. இராணுவத் தளபதி முதல் அரசின் எடுபிடியாக நக்கிய டக்ளஸ் வரை, இந்த குடும்ப பாசிச மயமாக்கலில் சிதைந்து உருத்தெரியாமல் சிதைக்கப்படுகின்றனர்.

குடும்ப பாசிசமயமாக்கலில், பாசிட்டுகளிடையே ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. பல உயர் இராணுவத் தளபதிகளின் தலை உருட்டப்படு..............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, July 27, 2009

தன் தலைவரையே காட்டிக்கொடுத்த கே.பி என்ற மாபியா, புலிகளின் புதிய தலைவராம்!

போராட்டத்தின் பெயரில் மந்தையாக வளர்க்கப்பட்ட அடிமையினத்தின் மேல், மற்றொரு வெட்கக்கேடான அரசியல் திணிப்பு. தமிழ்மக்களை தொடர்ந்து மாபியாக்கள் வழிநடத்த முடியும் என்று நம்பும் அடி முட்டாள்தனத்தின் மேல், துரோகிகள் தமக்குத்தாமே செங்கம்பளம் விரிக்க முனைகின்றனர்.

இனத்தின் ஒரு பகுதியை துரோகிகள் என்று சொல்லி, ஒரு இனத்தை அழித்தான் புலித் தலைவன். அவரையே காட்டிக் கொடுத்த ஒரு துரோகி, இன்று அந்த இயக்கத்தின் புதிய தலைவராகிவிட்டார். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் பித்தலாட்டம். தன் தலைவரைக் காட்டிக் கொடுத்தவன், தன் சர்வதேச மாபியா வலைப்பின்னல் மூலம் தன்னைத்தான் தலைவராக்கிக் கொண்டான். போராட்டத்தின் பெயரில் கேடுகெட்ட அரசியல் வக்கிரம்.

திட்டமிட்.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 26, 2009

சிறப்பு வெளியீடு : 25ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்

மனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.
இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.

மௌனிக்கட்டும் துப்பாக்கிகள்

மக்கள் மரணத்தில் அவலத்தில்
உலகப்பிதாக்கள் கையைநம்பி
தேசம்காக்க கூவியழைத்த கொள்கையில்
நையப்புடைக்கப்பட்டு நடுத்தெருவில் தேசியம்
காட்டுக்குள் வீரரென கதையளப்பும்
பூட்;டியமுகாம் வாழ்வை நீட்டிப்போடும்
பாசிசநகர்வுக்கு பலம்சேர்க்கும்
........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்