தமிழ் அரங்கம்

Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Thursday, April 9, 2009

மக்களுக்காக போராட மறுக்கும் 'ஜனநாயகம்"

'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.

இந்த அரசியல் உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் புலியொழிப்பு என்பது, அரசை பாதுகாப்பது தான் என்றான பின்பாக, எப்படித் தான் மக்களின் அவலத்தை கண்டு கொள்வார்கள். மக்களுக்காக போராடாதவரை, மனித அவலமே அங்கு இல்லையென்பதும், அதை மூடிமறைப்பதும் தான் இவர்களின் 'மக்கள்" அரசியலாகின்றது.

புலியொழிப்புத் தான் அனைத்து அரசியல் நிகழ்ச்சியென்றான பின்பு, அதை ஒழிப்பதாக கூறிக்கொள்பவனின் குற்றங்களை பாதுகாக்கின்ற பாசிச அரசியலே இன்று 'ஜனநாயகத்தின்" பெயரில் கொக்கரிக்கின்றது.

இப்படி கிரிமினல்களின் நடத்தைகளை, புலியொழிப்பின் பெயரில் நியாயப்படுத்துவது அரசியலாகின்றது. இந்த கிரிமினல் அரசியலை 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று புகழ்ந்து எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்; தான், கிழக்கில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை என்கின்றார். இதை சொல்லும் அரசியல் அருகதை, பேரினவாத அரசுக்காவும் அரச கூலிக் ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 1, 2008

இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்


பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது. அர்விந் அப்பாத்துரை இணங்கி உறவு கொள்ள முயன்று தோற்றவர். இணங்க வைப்பதில் அவர் தொடர்ச்சியாக கையாண்ட வழியில் வெற்றி பெற்றதாக நம்பிய முயற்சியில் தோற்றபோதே, அதை தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள்.

இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான்;. இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில்............ அரசியல் கூறுகள் எதுவும், கிழக்கு என்ற மேலாதிக்க கூச்சலின் பின் கிடையாது. .......... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்